Saturday, December 17, 2011

மௌனகுரு - நேர்த்தியான சஸ்பென்ஸ் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

http://www.tamilkey.com/wp-content/uploads/2011/12/mouna_guru_movie_posters_27.jpg


திருட்டு பயலே,ஆரண்ய காண்டம், யுத்தம் செய் படங்களுக்குப்பின் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட திரைக்கதையோடு களம் இறங்கி இருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் மூவி இயக்குநர் சாந்தகுமாருக்கு அழகிய பூச்செண்டுடன் வரவேற்று வாழ்த்தலாம்..

சாலை விபத்தில் ஒரு கார் சிக்குது..டிரைவர் உயிருக்கு போராடறான்.. அந்த கார் டிக்கில கோடிக்கணக்குல பணம்.அந்த வழியா வந்த போலீஸ் ஜீப்ல ஒரு இன்ஸ்பெக்டர், 3 போலீஸ், அந்த பணத்தை ஆட்டையை போட்டுடறாங்க.இதுக்கு மாஸ்டர் பிளானாக இருக்கும் இன்ஸ்பெக்டர்  தன்னோட சின்ன வீட்டுல இருக்கறப்ப இந்த மேட்டர் சம்பந்தமா தன் கூட்டாளிகளோட ஃபோன்ல பேசறதை பாப்பா வீடியோ எடுத்துடுது..

அந்த வீடியோவை வெச்சு மிரட்டி பணம் முழுவதையும் தானே கறந்துடலாம்னு பாப்பா ஐடியா பண்றப்ப  காலேஜ் ஸ்டூடண்ட் ஒருத்தன் அந்த வீடியோ கேசட்டை ஆட்டையை போட்டுடறான்.. இது ஒரு டிராக்.. ஹீரோ எப்படி எண்ட்டர் ஆகறார்?

ஹீரோவோட கேரக்டரை நல்லா புரிய வெச்சுடறாங்க ஓப்பனிங்க் ஷாட்லயே.. ஆள் பார்க்க அமைதி டைப். ஆனா 2 ரூபா சில்லறையை ஏமாத்துனதுக்காக ஒன் ருப்பி காயின் பூத்தையே உடைக்கற ஆள்.அவர் தன் அண்ணன் வீட்டுக்கு வர்றார், காலேஜ்ல படிக்க , ஹாஸ்டல்ல தங்கறார். அண்ணிக்கு ஒரு தங்கை.. அதான் ஹீரோயின். 2 பேருக்கும் லவ் ஆகறதை அழகிய கவிதையா போற போக்குல சொல்லிடறாங்க..




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiijFWhNk-jHCPETBDuV_QuUeTaAokPpdPEhR_ZY6rVnMRmLlDk_QhIOyslNFlBBx_GU_kAriyLL5msifV6qLVx2G051C6loXlEz5UGgpFP0BOcSTWaD01rDMqQdxkRHzfJKtRmPhVMjaQ/s1600/iniya+Pair+With+Arulnidhi+in+Mouna+Guru+Movie+Stills+Photos+gallery+Pics+%252830%2529.jpg
இப்போ ஹீரோதான் அந்த வீடியோ கேசட்டை எடுத்த ஆள்னு தவறா புரிஞ்சுட்டு ஹீரோ & வேற 2 பசங்களை காட்டுக்குள்ள அந்த இன்ஸ்பெக்டர்  குரூப் கடத்திட்டு வந்து என்கவுண்ட்டர் டிராமால போட்டுத்தள்ளறப்ப  வீடியோ  வெச்சிருக்கற ஆள் வேறன்னு தெரிய வருது.. ஆனா மேட்டர் இவங்களுக்கு த்தெரிஞ்சதால  போட வேண்டிய சூழல்.. ஹீரோ எப்படியோ எஸ் ஆகிடறார். இங்கே இடைவேளை..

ஹீரோவை ஒரு மெண்டல் ஹாஸ்பிடல்ல சேர்த்து அவனை பைத்தியம்னு பட்டம் கட்டி விட்றாங்க..அவர் எப்படி அதுல இருந்து தப்பி  வர்றார்?ங்கறது மிச்ச கதை.. இந்த கேசை டீல் பண்ற இன்னொரு லேடி இன்ஸ்பெகடர் அந்த 4 போலீஸ்தான் குற்றவாளிகள்னு கண்டு பிடிக்கறார்.. இடைவேளை வரை செம விறு விறுப்பு.. பின் பாதியில் லேசான தொய்வு இருந்தாலும்  அவசியம் பார்க்க வேண்டிய படம் தான்.. 

ஹீரோ உதயன்க்கு நடிப்பு வர்லைன்னாலும் கேரக்டரே அமைதி டைப் என்பது மாதிரி காட்டி நல்லா சமாளிக்கிறார்.. இந்தப்படத்துக்கு ஒரு அஜித்தோ, விஜய்யோ ஹீரோ ஆகி இருந்தால் படம் எங்கேயோ போய் இருக்கும்.. 

ஹீரோயின் இனியா இதுல மாடர்ன் கேர்ளா வர்றார்.. வாகை சூடவா படத்துல செமயா இருந்தார், இதுல நெற்றில பொட்டு வைக்காததாலோ என்னவோ அவ்வளவா எடுபடலை.. ஓவர் மேக்கப் வேற. இப்ப வர்ற படங்கள்ல ஹீரோயினுக்கு பொட்டு வைக்க கூடாதுன்னு ஏதாவது சங்கல்பம் வெச்சிருப்பாங்க போல.. மகா ஜனங்களே.. பொண்ணுங்க பொட்டு வைக்கலைன்னா அது மாடர்ன் கேர்ள் ஆகிடாது. அது அழகு தரும்.. 

அண்ணிக்கு தெரியாமல் ஹீரோ , ஹீரோயின் இருவரும் காதல் கொள்ளூம் இடங்கள் கல கல.. ஹீரோயினை விட அண்ணி செம ஃபிகர்  ஹி ஹி ..வில்லனாக வரும் ஜான் விஜய் ( வ குவாட்டர் கட்டிங்க் காமெடி பார்ட்டி) அசத்தலான நடிப்பு, பாடி லாங்குவேஜ். அவர் கூடவே வரும் 3 போலீஸ்களும் நிஜமாவே நேரில் பார்ப்பது போன்ற சம்பவங்களை கண் முன் நிறுத்தும் நடிப்பு.. சபாஷ்.. 

லேடி இன்ஸ்பெக்டராக வரும் உமா ரியாஸ் அமைதியான நடிப்பு. அவர் இன்வெஸ்டிகேஷன் செய்வது மிக யதார்த்தம். ஆனால் அவர் ஏன் 6 மாத கர்ப்பிணியாக வர்றார்? படத்தின் க்தைக்கும், அதற்கும் என்ன சம்பந்தம்? ஏன்னா அவர் வயிற்றை தள்ளிட்டு அங்கேயும், இங்கேயும் அலைஞ்சு இன்வெஸ்டிகேஷன் பண்றது மனசுக்கு கஷ்டமா இருக்கு.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgayBBZz9B2mLVUwC_59K7YNBKUkgZ_2Wa-MqunI922Ge0UVCbpEQRbCQFSJKNqrpp2WxLyaaCGBj2XmNJyaBFTtvhec2DnH7rEL8x_V1wjOHPvYvD9fXvCS4PjQ48CVv5ocfx7IgkHgC0h/+Iniya+New+Stills+In+Mouna+Guru+Audio+Launch+%252810%2529.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஹீரோயிஸம் எதையும் காட்டாமல் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் காட்டியது பெரிய பிளஸ். ஏன்னா தயாரிப்பே ஹீரோவோட அப்பாதான், அதனால ஓப்பனிங்க், ஃபைட், ஹீரோ துதி பாடும் பாட்டு எதும் இல்லாம யதார்த்தமான ஹீரோவா காட்டுனது முதல் பிளஸ்

2. ஒரு நாவல் படிக்கிற மாதிரி  மிக தெளிவாக எழுதப்பட்ட திரைக்கதை.. சமீபத்தில் வந்த படங்களில் இவ்வளவு நேர்த்தியாக ஒரு திரைக்கதை தெளிவை நான் பார்க்கலை. வெல்டன் டைரக்டர்..

3.  யாரிவன் யாரிவன் பாட்டு, ஒரு டூயட் பாட்டு ரெண்டிலும் படமாக்கப்பட்ட அழகிய காட்சி அமைப்புகள் மனதை விட்டு  அகலாதவை

4. படத்தின் கதை அனுமதித்தும் ஒரு இடத்திக் கூட விரசமான காட்சியோ, கண்ணியக்குறைவான சம்பவமோ இல்லை. பெண்கள், குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும்படி ஒரு த்ரில்லர் மூவியை தருவது மிக கடினம்.. செம

5. படத்தில் வரும் சின்ன சின்ன கேரக்டர்கள் கூட மிக யதார்த்தமான நடிப்பை தந்தது, அவ்ர்களை வேலை வாங்கியது எல்லாமே செம

6. பின்னணி இசை கன கச்சிதம்.. டெம்ப்போ ஏற்ற வேண்டிய இடங்களில் ஏற்றி , பேக் கிரவுண்டில் சைலண்ட் மோடு தேவைப்படும் இடங்களில்  அமைதி என நீட் டெக்னீஷியன் ஒர்க்.. ஒளிப்பதிவும் சூப்பர்.. 


http://www.kollytalk.com/wp-content/gallery/mouna-guru-movie-stills/mouna-guru-9.jpg

 இயக்குநருக்கு சில கேள்விகள், சில சந்தேகங்கள், சில ஆலோசனைகள்

1.  படத்துல ஹீரோ மெண்டல் ஆவது , மெண்டல் ஹாஸ்பிடல் காட்சிகள் கொஞ்சம் போர் அடிக்குது.. அதை சரி செய்ய அமரர் சுஜாதா எழுதிய நில்லுங்கள் ராஜாவே கதை யுக்தியை பயன் படுத்தி இருக்கலாம்.அதாவது ஒப்பனிங்க்ல முதல்ல ஹீரோவை மெண்டலா காட்டி அப்புறம் ஃபிளாஸ்பேக் சீன்ல கதை சொல்லி இருக்கலாம்.. 

2. கார் ஆக்சிடெண்ட்ல உயிருக்கு போராடற ஆளை இன்ஸ்பெக்டர் அவனோட பின் மண்டைல தாக்கி கொல்றார். அதுக்குப்பிறகு அந்த கேஸ் இன்வெஸ்டிகேஷன் லேடி இன்ஸ்பெக்டர் உமா கிட்டே வருது.. ஓகே, ஆனா அவர் ஏன் அவசரப்பட்டு அவனை பின்னால தாக்கனும்?அவனே சீரியஸ்சா இருக்கான்.. ஈசியா முன்னால அடிச்சு கொன்னிருக்கலாமே..

3.  இன்ஸ்பெக்டரின் சின்ன வீடு ஒரு ஹோட்டல்ல தன் ஆளுங்களோட டிஸ்கஸ் பண்றாங்க, அங்கேதான் வீடியோ கேமரா பறி போகுது.. இந்த மாதிரி சீக்ரெட் மேட்டர் பேசறவங்க ஆள் நடமாட்டம் இல்லாத ஹை வேஸ் ரோட் ஒதுக்குப்புறத்துலயோ, ஆள் நடமாட்டம் இல்லாத பார்க்லயோதான் பேசுவாங்க.. ???

4. இன்ஸ்பெக்டர் தன் சின்ன வீட்டை அடிச்சு காயப்படுத்தி தள்ளி விடறப்ப எதிர்பாராத விதமா இறந்துடறாங்க.. ஆல்ரெடி முகம், உடம்புல காயம் உள்ள ஆளை எப்படி தூக்குல தொங்குற மாதிரி செட் பண்ணி வைக்க முடியும்?காயமே இல்லாம தலையணைல முகத்தை அமுக்கி கொலை செஞ்சாதானே அப்படி செய்ய முடியும்? முறைப்படி இந்த சிச்சுவேஷன்ல மொட்டை மாடில இருந்து கீழே குதிச்ச மாதிரி செட் பண்ணீனாத்தானே அந்த காயங்களுக்கு நியாயம் கற்பிக்க முடியும்?

5. ஏதாவது பிரச்சனைன்னா, அல்லது கொலையை நேர்ல பார்த்த சாட்சின்னா உடனே போட்டுத்தள்ளும் இன்ஸ்பெக்டர் ஹீரோவை மட்டும் ஏன் போடாம மெண்டல் ஆக்க தலையை சுத்தி மூக்கை தொடறார்? டப்னு சூட் செஞ்சா மேட்டர் ஓவர்..

6. விறுவிறுப்பா போகும் திரைக்கதைல அந்த சோகப்பாடல் எதுக்கு? இந்தப்படத்துல காதல் ஊறுகாய் மாதிரிதானே?



http://www.cenimaz.com/wp-content/uploads/2011/12/Mouna-Guru-Tamil-Movie.jpg

வித்தியாசமான கதையை ரசிப்பவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்

ஹீரோ வால்யூ இல்லாததால் எதிர்பார்த்த அளவு படம் ரீச் ஆகலைன்னாலும்  மவுத்டாக் மூலமா ஹிட் ஆக வாய்ப்பு உண்டு.

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 43

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - நன்று

சி.பி கமெண்ட் - திரில்லர் பட விரும்பிகள் குடும்பத்தோடு பார்க்கலாம்

Friday, December 16, 2011

மம்பட்டியான் - சினிமா விமர்சனம்

 http://www.mambattiyan.com/image01.jpg

ரீமேக் படத்தை பார்க்கறப்ப  ஒரிஜினல் பற்றி ஒப்பீடு செய்வது தவிர்க்க முடியாது, அதுவும் ஒரிஜினல்ல அப்பா, ரீமேக்ல பையன் ஹீரோ எனும்போது அது இன்னும் கூடுதல் கவனிப்பு பெறும்.. சும்மா சொல்லக்கூடாது. ஒளிப்பதிவு  , லொக்கேஷன் செலக்‌ஷன்ஸ் ரெண்டுலயும் ரீமேக் படம் ஒரிஜினலை தூக்கி சாப்பிட்டுடுச்சு.. சபாஷ்.. ஆனா......................

தியாகராஜன் மலையூர் மம்பட்டியானா நடிக்கறப்ப அவர் இறுகுன முகமும்,எதுக்கும் அசைஞ்சு கொடுக்காத அவர் பாடி லேங்குவேஜும் மாபெரும் பிளஸ் , ஆனா பிரசாந்த் என்னதான் அப்பாவை விட பாடியா இருந்தாலும் , எப்போ பாரு பஸ்கி எடுத்த ஜிம் பார்ட்டி மாதிரி உடம்பை விறைப்பா வெச்சிருந்தாலும் அவரோட முகம் அப்பா அளவுக்கு கேரக்டரை வெளிப்படுத்தலை..

ஓக்கே, படத்தோட கதை என்ன? மலையூர்ங்கற கிராமம்.. ஏழை மக்களை ஏமாற்றும்  வில்லன் ஹீரோவோட அம்மா, அப்பா சொந்தங்களை போட்டுத்தள்ளறார், ஹீரோ உடனே பழிக்குப்பழி வாங்கி காட்டுக்குள்ள போய்  பதுங்கறார். அவர் செல்வந்தர்களை கொள்ளையடிச்சு ஏழை மக்களுக்கு உதவறார்..காட்டுக்குள்ள மம்பட்டியான்கற பேரை மிஸ்யூஸ் பண்ணி இன்னொருத்தன் இருக்கான்.. 

போலீஸ் படையே காட்டுக்குள்ள மம்பட்டியானை தேடுது.. மம்பட்டியான் போலீஸ்க்கு டிமிக்கி கொடுத்துட்டே , சைடுல ஹீரோயின் கூட ரொமான்ஸும்,இன்னொரு சைடுல முமைத்கான் கூட சில்பான்சும் பண்ண ட்ரை பண்றார். ஆனா அவருக்கு ஓடறதுக்கே படம் பூரா நேரம் பத்தலை.. அப்பாதான் டைரக்டர் ,பாவம் என்ன செய்வார்.. ஹூம்.. 



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0RH6masb28d2gDzPvybQVci6X-whnun_6Gl8DsDdNAWBYA-v82gA4m4z-_c0za53V1-NIZe-_ifzPZRzre-yhhV9T-_sGFawHZis6l6nfjQ3a-bav0Nf9BdogIVDn0smulFILUrEXPYD0/s1600/Mambattiyan_releasing.jpeg

சரிதா கேரக்டர்ல மீரா ஜாஸ்மின் ஓக்கே .. அது ஒரு கிராமத்துக்கேரக்டர் என்பதால் ரஞ்சிதா மாதிரி மாநிறமான ஃபிகரை போட்டிருக்கலாம். அதாவது ஹீரோயினா.. மீரா கேரளா ஃபிகர் என்பதால் பாத்திரத்துக்கு பொருந்தினாலும் தனித்து தெரிகிறார்.. ஏன்னா படத்துல வர்ற எல்லாரும் மாநிறமா இருக்காங்க, பாப்பா மட்டும் சந்தன நிறத்துல ஜொலிக்குது.. 

பிரகாஷ்ராஜ் வழக்கம் போல் அசத்தல்ராஜ்.. ஐ ஜி யான அவர் மம்பட்டியானிடம்  அடிக்கடி ஏமாறுவது நம்பும்படி இல்லை.. வடிவேல் சீரியஸான கதையில்  நமது ரிலாக்ஸ்க்கு  காமெடி பண்றார். 320 நாட்களுக்குப்பிறகு அவர் காமெடி நடிப்பு வெல்கம் பேக்.. .

காட்டு வழி போற பெண்ணே கவலைப்படாதே, காட்டுப்புலி வழி மறிக்கும் கலங்கி நிக்காதே, சின்னப்பொண்ணு சேலை செண்பகப்பூ போல   போன்ற சூப்பர்ஹிட் பாடல்களை அப்படியே யூஸ் பண்ணி இருக்காங்க.. குட் திங்க்.. 



http://www.southdreamz.com/wp-content/uploads/2010/05/meera.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. லொகேஷன்கள் ஒக்கேனக்கல் , குற்றாலம்  மாதிரி அருவியும் அருவி சார்ந்த இடங்களும் கண்ணுக்குக்குளுமையா செலக்ட் பண்ணி  சீன் பை சீன்  அட்ராக்டிவ் ஷாட்டா எடுத்திருக்கறது செம.. காமிரா எப்பவும் அருவி, பசுமையான காடு, என ரவுண்டிங்க்லயே ஆக்டிவா இருப்பது சூப்பர்.. 


2. ஆர்ட்டிஸ்ட் செலக்‌ஷன்கள் எல்லாமே ஓக்கே , சண்டைப்பயிற்சி , பின்னணி இசை நல்லாருக்கு.. 


3.  ஹீரோவை போட்டுத்தள்ளும் அப்பாவி கேரக்டர், முமைத்கான், வடிவேல் கேரக்டர் எல்லாம் அவங்கவங்களுக்கு குடுத்த வேலையை சரியா செஞ்சிருக்காங்க.. சரியா வேலை  வாங்குன இயக்குநருக்கு பாராட்டுகள்


இயக்குநரிடம் சில கேள்விகள், பல சந்தேகங்கள், சில ஆலோசனைகள்

1.  பில்லா படம் ரீமேக்ல எப்படி ஒரிஜினலை விட ஸ்டைலிஸா இருந்ததோ அந்த மாதிரி இதை சொல்ல முடியலை, ஏன்னா சம்பவங்கள் எல்லாம் அப்படியே ஜெராக்ஸ் தான், புது ஐடியாக்கள் கம்மி. 

2. கதை நடந்த கால கட்டம் 1983.... ஆனா  இது ஒரு பீரியர்டு ஃபிலிம் மாதிரி கவனம் காட்டலை.. இந்தக்காலத்துல ஏது பண்னையார் எல்லாம்?

3. பிரகாஷ்ராஜ் கிட்டே மம்பட்டியான் கேஸ் பற்றி சொல்லும் போலீஸ் ஏன் செந்தமிழ்ல செய்தி வாசிக்கறார்? நார்மலா பேச்சுத்தமிழ்ல பேசமாட்டாரா?

4.  ஹீரோ ஒரு ஐ ஜி கிட்டே உங்க போலீஸ் ஆளுங்களை நான் பிடிச்சு வெச்சிருக்கேன்னு சொன்னதும் அவர் உடனே அவர் ஆளுங்களுக்கு ஃபோன் போட்டு செக் பண்ண மாட்டாரா? சொன்னதும் உடனே நம்பி ஹீரோ ஆளுங்களை ரிலீஸ் பண்ணிடுவாரா?

5. ஊருக்குள்ள போலீஸ் நடமாட்டம் இருந்தா வீட்ல சிவப்புக்கொடி, போலீஸ் நடமாட்டம் இல்லைன்னா பச்சைக்கொடியை தன் வீட்டு கம்பத்துல ஏத்தி சிக்னல் தர்றாரு முமைத்கான்,அது ஓக்கே, அவர் ஏன் எப்போ பாரு கரகாட்டத்துக்கு கிளம்பற கலக்கல் ஃபிகர் மாதிரி மேக்கப், டிரஸ் போட்டுட்டு ரெடியா இருக்காரு, வருஷத்துல 365 நாட்களும் திருவிழாவா?

http://tamilmovies.skynyxonline.com/myimages/actress/meerajasmine/Meera_Jasmine001.jpg

6.  போலீஸ் கேரக்டரா வர்ற பிரகாஷ் ராஜ், ஆர்த்தி புகழ் கணேஷ் 2 பேரும்  போலீஸ் மாதிரி க்ளோஸ் கட்டிங்க் பண்னாட்டி பரவால்ல, ஹிப்பி மாதிரி ஹேர் எதுக்கு?

7. ஒரு சீன்ல மீரா ஜாஸ்மின் பானைல தண்ணி எடுத்துட்டு வர்றார்.. அப்போ ஒரு பொண்ணு தற்கொலை முயற்சின்னு சொல்றாங்க, அவங்க வீட்டுக்கு போறப்ப காலி பானையை இறக்கி வைக்கறார். கண்டினியுட்டி மிஸ்ஸிங்க்.. 

8. பல இடங்கள்ல மம்பட்டியானை போலீஸ் நேருக்கு நேர் சேஸ் பண்ணீ ஓடுது, ஆனா சுட மாட்டெங்குது. துரத்திட்டே இருக்கு.. அட்லீஸ்ட் கால்லயாவது சுடலாமே?


9. மம்பட்டியான் மாதிரி ஒரு டஃப் கேரக்டர் முமைத்கான் மாதிரி ஒரு நடிகையோட குத்தாட்ட சாங்க் போடனுமா? என்னதான் கனவு சீனா இருக்கட்டும்.. அது கேரக்டரோட சீரியஸ்னெஸை குறைக்காதா? (ஒரிஜினல்ல தியாகராஜன் ஆட மாட்டார், சும்மா வேடிக்கை மட்டும் பார்த்திங்க், ஆனா இதுல அண்ணன் பிரசாந்த செம ஆட்டம்)

10. ஒரு சீன்ல காட்டுக்குள்ள ஒரு போலீஸ் படையே மம்பட்டியானை நேர்ல பார்த்துடுது, அடுத்த ஷாட்ல ஒரே ஒரு இன்ஸ்பெக்டர் மட்டும் துரத்தறார் .. ஏன்?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbtkM6jKgkW5QEPY7l4NdL2J7zSmmRB8VWn0zrV4lQz3Rpy-t0QHcj_MAf8EkAHYVJ7ozvTHqyMd_WfWcgdqQWwyX_LrLUs_Creqh_dW7J1pxgml24Pq_HCe5tIX3MtExCxHOLJKVfg-w/s1600/meera-jasmine-alladista-hot-005.jpg

பிரசாந்துக்கு கண்டிப்பா இது ஒரு ரீ எண்ட்ரி படம் தான்.. 

ஏ பி செண்டர்கள்ல 30 நாட்கள், சி செண்டர்கள்ல 10 நாட்கள் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் - ஒளிப்பதிவில், லொக்கேஷன்களில் ஆர்வம் உள்ளவர்கள் பார்க்கலாம்

பிரபல பதிவர்கள் சுயம்வரத்தில் செய்த சலம்பல்கள் காமெடி கலாட்டா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgELqxKulIY4VtpcbADf6Q13TMIc_sVVAku_60QkuVkFt5RCJRsPgk5qprDm9PTHTYLooxGEZ_WCvqKQmle7Xt20h1VFWZFxrQlW3GRSTJSXkaPLBd9ZYI-JQcUqHFMhg6SIq2bUAv7momg/s1600/Amala+Paul+%252813%2529.jpg 

நேத்து டிவில படம் பார்த்துக்கிட்டு இருக்கும்போது படத்துல ஒரு  சீன்(அட,எல்லாரும் ஏன்ப்பா டென்ஷன் ஆகுறீங்க. இது “அந்த சீன்இல்லை). மாட்டை அடக்குனாத்தான் பொண்ணு தருவேன் ன்னு மாமனாரா நடிச்சவர் வசனம் பேசிக்கிட்டு இருக்குற சீன்.


. எனக்கு அப்போதான் ஒரு ஐடியா ..நம்ம பதிவர்கள்லாம் பொண்ணு பார்க்க போகும்போது மாமனார் இப்படி ஒரு கண்டிஷன் போட்டிருந்தால் நம்ம பதிவர்களுக்கு கல்யாணம் நடந்திருக்குமா?ன்னு டவுட்டு வந்துடுச்சு..,
பொண்ணு ரெடி, மாடு ரெடி, வாங்க எல்லாரும் கிரவுண்டுக்கு போவோம்...

,
1. முதல்ல நம்ம தம்பி லேப்டாப் மனோ, 

ஒரு கையில லேப்டாப், இன்னொரு கையில கத்தி, பிளேடு, அரிவாளோடு மாட்டை அடக்க போறார்.

 பொண்ணு: ஹலோ! ஒரு நிமிஷம். மாடு பிடிக்குறதுக்கு  கையில லேப்டாப் எதுக்கு?

மனோ: லேப்டாப் இல்லைனா என்னை யாரும் மனோன்னு ஒத்துக்கமாட்டாங்கம்மா.

பொண்ணு: சரி, கத்தி, அறுவா, பிளேடுலாம் எதுக்கு? 


மனோ - இதை வச்சுதாம்மா பிளாக்குல இருக்குறவனுங்களை அடக்குறேன். அதேப்போல மாட்டையும் அடக்கிடுவேன்.

மாமனார்: தம்பி,கத்தி, பிளேடு, அரிவாள்லாம் இல்லாம வெறுங்கையால மாட்டை அடக்குங்க.

,மனோ: என்னாது, வெறுங்கையால மாட்டை அடக்குறதா? பிள்ளைப்பூச்சி போல இருக்கறானே சிபி, அவனையே நான் இதல்லாம் வச்சுதான் அடக்குவேன். இதெல்லாம் இல்லாட்டி எனக்கு வீரமே பொங்கி வராதே. எலேய், உன் பொண்ணை நீயே வச்சுக்க. இங்க வேஸ்ட்  பண்ண நேரத்துல எதாவது பிரபலத்தை பேட்டியோ இல்லை முல்லை பெரியாறு அணை பத்தி ஒரு போஸ்ட் ரெடி பண்ணி பிளாக்குல போட்டு நான் கும்மியடிச்சு பொழுதை போக்கியிருக்கலாம். 


2. அடுத்து பக்கி சாரி விக்கி தக்காளி கேமரா,மாடு, துப்பாக்கியோடு களத்துக்கு வரார்.

மாமனார்: தம்பி, தம்பி மாடுல்லாம் எதுக்கு? அதான் இங்கனயே ஒரு மாடு இருக்கே.

விக்கி: நான் என் சொந்த மாட்டைதான் அடக்குவேன். அடுத்தவன் மாட்டை அடக்குற அளவுக்கு நான் மானங்கெட்டவனில்லை. எனக்கு சூடு சுரணை இருக்கு.நான் மானஸ்தன்...

மாமனார்: ம்ஹூம் தம்பி ,இது ஆவறதுக்கில்லை 

பொண்ணு: மாடுக்கு சொன்ன ரீசன் ஓக்கே. துப்பாக்கி எதுக்கு?

விக்கி: நான் இந்திய ராணுவத்துல இருந்தவன் ,எல்லாரும் நினைக்கற மாதிரி நாட்டுப்பற்றுக்காக மிலிட்ரில சேரலை, மிலிட்ரி சரக்கு டெயிலி குடிக்கறதுக்ககவே ராணுவத்துல சேர்ந்தேன்,அதனால எனக்கு துப்பாக்கியில சண்டை போட்டுதான் பழக்கம். இப்ப கூட நான் ஆப்பிரிக்கா போய் வந்தேன். அங்கயும் மாட்டை அடக்க துப்பாக்கிதான் யூஸ் பண்றாங்க.

பொண்ணு: கேமரா எதுக்கு?

விக்கி: மாட்டை அடக்குறதை வீடியோ எடுத்துக்கிட்டால், இதை வச்சு கிச்சளிக்காஸ் போட்டு பதிவை தேத்துவேன். இப்படித்தான் இனி நான் எல்லாத்தையும் வீடியோ எடுத்து பதிவா தேத்த போறேன் ,இனி ஒரு பயலும் என்னை சொந்தமா வீடியோ போட்டியான்னு கேட்க முடியாது.

பொண்ணும் மாமனாரும்: என்னாது இனி நடக்க போறதெல்லாம் வீடியோ எடுத்து போடப்போறியா? கல்யாண முஹூர்த்தத்தை வீடியோ எடுத்தா பரவால்ல, சாந்தி முகூர்த்தத்தை வீடியோ எடுத்தா?  நீ ஆணியே புடுங்க வேணாம். கிளம்பு ராசா.


3. அடுத்து தமிழ்வாசி பிரகாஷ் கையில, பேடு நோட்டு, பென்னோடு வரார்

பொண்ணு: (வரவனுலாம் கையில எதாவது எடுத்து கிட்டு வரானே). 

 எதுக்கு இந்த பேடு, நோட்டு,பென்?
பிரகாஷ்: அதுவாம்மா, மாடு பிடிக்குறதுல எனக்கு கிடைக்கும் எக்ஸ்பீரியன்ஸ வச்சு  பதிவு போட்டேன்னா வருங்காலத்துல மாட்டை அடக்குறவங்களுக்கு யூஸ் ஆகுமே. அதான்.
பொண்ணு: நல்ல எண்ணம்தான்..
\
மாட்டுக்கிட்ட போய்.. 
பிரகாஷ்: எருதின் நோய் காக்கைக்கு தெரியுமா?
பொண்ணு: யோவ் மாட்டுக்கிட்ட போய் ஏன்யா பழமொழிலாம் சொல்லிக்கிட்டு இருக்கே.
பிரகாஷ்: எனக்கு பழமொழி சொன்னாதான் அந்த காரியம் ஜெயமாகும்னு நம்பிக்கை.
மாமனார்: நாசமா போச்சு.
பிரகாஷ்: நான் ஒரு விடுகதை சொல்றேன். அதுக்கு பதில் சொன்னா மாடு ஜெயிச்ச மாதிரி, பதில் சொல்லலைன்னா நான் ஜெயிச்ச மாதிரி எப்பிடி டீலிங்க.
மாமனார்: இப்படியே நீ விடுகதை போட்டுக்கிட்டிருந்தால் என் பொண்ணு வாழ்க்கை வெளங்குன மாதிரிதான். நீ ஆளை விடு ராசா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUhINJGAdrJGa5WEJUjRm2HCdmvD83h-VCyru6VP66BxeSmjwY7XBcn9M-9CRsVq3z3EbwX1Gabpcz-G_1ZoC_Zs3-ynRc9AXiTqzGgxT0G6PpkN5y3Yl75UReiIF7dKFCrErHp8LLo_3G/s1600/Anushka-12.jpg

4. அடுத்து சூர்ய ஜீவா வரார்..., வந்தவர் நேரா மாட்டை அடக்க போனவர், திரும்பி வந்துடுறார்
மாமனார்: என்னப்பா, மாட்டை அடக்காம திரும்ப வந்துட்டே.
சூர்ய ஜீவா: கூடங்குளத்துல அணு மின் நிலைய பிரச்சனையும், முல்லை பெரியார் அண பிரச்சனையும் தீராம இரண்டு தரப்பிலும் அடிச்சு குத்திக்குறானுங்க.
மாமனார்: அதுக்கு?
சூர்ய ஜீவா: கோர்ட்டு, கேசுன்னு போய் பிரச்சனையை இழுக்காம இதுப்போல ஒரு போட்டி வச்சால், ஈசியா முடிஞ்சு போயிடுமே. இந்த யோசனையை நான் பிரதமர், முதல்வர், கவர்னருக்குலாம் லெட்டர் அனுப்பிச்சுட்டு வரேன். இந்த பிரச்சனைலாம் ஓய்ஞ்சாதான் கல்யாணம்.
மாமனார்: கடல்ல அலை எப்போ ஓயுறது? நாம எப்போ தலை முழுகுறது? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

5. அடுத்து ஐ.ரா. ரமேஷ்பாபு
 
பொண்ணு: வேகமா வரானே இவனாவது மாட்டை அடக்குவானா?
மாமனார்: தெரியலியேம்மா.
ஐ.ரா ரமேஷ்பாபு மாட்டுக்கிட்ட போய்..

..,
ஒரு காட்டுல 4 மாடுங்க ஃப்ரெண்டா இருந்துச்சாம். அப்போ அந்த வழியா பசியோட வந்த சிங்கம் அதுங்களை வேட்டையாட அதுங்க மேல பாய்ஞ்சுச்சாம்.....
மாமனார்: ஐயையோ மாட்டுக்கிட்ட ஏம்பா கதை சொல்லிக்கிட்டு இருக்கே
.
ஐ.ரா ரமேஷ்பாபு: இல்ல நான் எப்பவுமே நீதிக்கதைகள் சொல்லுவேன். அதன் மூலமாதான் என் காரியத்தை நான் சாதிச்சுக்குவேன். அப்புறம் ஒரு லொள்ளு ஒண்ணு சொல்வேன்.
பொண்ணு: அப்பா, இவன் என்னை கதை சொல்லியே சாவடிப்பான் போல இவனை போகச்சொல்லுப்பா.

6. அடுத்து கோகுலத்தில் சூரியன் வெங்கட்:
வந்தவர் நேரா பொண்ணோட அப்பாக்கிட்ட போய்...,
வெங்கட்: இந்த மாட்டை இதுக்கு முன்னாடி யாருலாம் அடக்க வந்தாங்கன்னு எனக்கு லிஸ்ட் வேணும்.
மாமனார்: எதுக்கு தம்பி, 
வெங்கட் - இல்லை நான் ஒரு கவுரவமான , கண்ணியமான பதிவர். எனக்கு முன்னாடி இந்த மாட்டை அடக்க வந்தவங்க இந்த மாட்டை தொட்டிருப்பாங்க. அப்படி தொட்டவங்கள்ல கில்மா படம் பார்க்குறவங்க, தண்ணி அடிக்குறவன், பான்பராக் மெல்லுறவன் இருந்து அவன் அந்த மாட்டை தொட்டு நானும் அந்த மாட்டை தொட்டால் என் கவுரவம் என்னாகுறது.அதான் கேட்குறேன்.

பொண்ணு: அப்பா இவனை கட்டிக்கிட்டால், வீட்டுக்கு வரவன், கறிகாய் விக்குறவன், பால்காரன், சிலிண்டர்காரன் ஹிஸ்டரிலாம் கேட்டே என்னை கொண்ணுடுவான். அதனால இவனும் வேணாம்பா,

7.  அடுத்து நல்ல நேரம் சதீஷ்: 
மாட்டை அடக்க வந்தவர், மாட்டுக்கிட்ட போகாமல் நேரா பொண்ணோட அப்பாக்கிட்ட...,
நல்ல நேரம் சதீஷ்: சார், இந்த மாட்டோட ஜாதகம் தந்தால் நல்லா இருக்கும்..,
மாமனார்: என்னது மாட்டுக்கு ஜாதகமா?! அதெல்லாம் இல்லை தம்பி.
 நல்ல நேரம் சதீஷ்: சரிங்க, மாடு பொறந்த நேரம், இடம் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்..,
பொண்ணு கடுப்பாகி, யோவ் லூசாய்யா நீ? மாடு எங்க பொறாந்துச்சு, டைம் என்ன்ன்னு கேட்டுக்கிட்டு இருக்கே. விட்டா அதுக்கு யார் பிரசவம் பார்த்தாங்கன்னு கூட கேட்பே போல இருக்கே. ஆமாம், அதெல்லாம் உனக்கெதுக்கு  இப்போ?
நல்ல நேரம் சதீஷ்: அது மாட்டோட ராசியும், என் ராசியும் ஒத்து போகுதான்னு பார்க்க.
பொண்ணு: புரியலையே.
 நல்ல நேரம் சதீஷ்: மாட்டோட ராசியும், என் ராசியும் ஒத்துவந்துச்சுன்னா நான் ஜெயிச்சுடுவேன். இல்லாட்டி அது என் விலாவில் குத்தி அது ஜெயிச்சுடுமே அதுக்குதான் ஜாதகம் பார்க்கனும்ன்னு சொல்றேன்.
பொண்ணு: நீ ஜாதகத்தையே பார்த்துக்கிட்டு இருந்தால் எனக்கு கல்யாணம் ஆனமாதிரிதான். நீயும் கெளம்பு ராசா. 

8. சிரிப்பு போலீஸ் ரமேஷ்:
நீயும் ரொம்ப நாளா பொண்ணு பார்த்துக்கிட்டு இருக்கியே, எந்த பொண்ணும் செட்டாகலியே. பேசாம அந்த மாட்டை அடக்குனா அந்த பொண்ணை உனக்கு கல்யாணம் நடந்துடும்னு பேசி சரிக்கட்டி அவன் ஃப்ரெண்டுங்க கிரவுண்டுக்கு கூட்டிக்கிட்டு வராங்க. வந்ததும் மாட்டை பார்த்துட்டு ஓன்னு அழ ஆரம்பிச்சுடுறாரு
பொண்ணு: மாட்டை அடக்க போயிருந்தாலாவது அடிகிடி பட்டிருக்கும். அப்போ வலியில அழுவுறது சரி. இப்போ ஏன் அழுவுறீங்க.
ரமேஷ்: அந்த மாட்டை பாரு எம்மாம்பெருசாஇருக்கு. என்னையும் பாரு நான் எப்படி இருக்கேன். இந்த மாட்டை அடக்குறது. ஒட்டகத்தை புடிக்குறதுலாம் என்னால முடியுமா? அதான் அழறேன்.
பொண்ணு: அதுக்கா அழுவுறீங்க. சரி நான் வேணும்னா அப்பாக்கிட்ட பேசி 1 மாசம் அவகாசம் வாங்கி தரேன். அதுக்குள்ள நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்திக்கிட்டு. மாட்டை அடக்க வாங்க. என்ன நான் சொல்றது சரியா?
இதை கேட்டவுடன் மீண்டும் ஓன்னு அழ ஆரம்பிக்குறார்.


பொண்ணு ரொம்ப கடுப்பாகி- இப்போ ஏன்யா அழுகுறே.
ரமேஷ்: எனக்கு சொந்த காசுல சாப்பிட்டால் உடம்புல ஒட்டாதே. ஒரு மாசம் யார் ஓசி சாப்பாடு வாங்கி தருவா. எனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது போல
பொண்ணு????!!!!!!


- தொடரும் 


http://www.funrahi.com/photos/tollywood/rwx/iniya-tamil-actress-hot-photoshoot-july-25-2011-006.jpg

Thursday, December 15, 2011

சி.பி வழங்கும் கம்மாக்கரை ஓரம் ஃபிகர் பார்க்கும் நேரம் ( வெள்ளிக்கிழமை விருந்து)

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-3707.jpg 

1. மம்பட்டியான் - மலையூர் மம்பட்டியான் - ராஜசேகரின் இயக்கத்தில் தியாகராஜன், சரிதா முக்கிய வேடங்களில் நடித்து 1983 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம். இத்திரைப்படம் மலையூர் என்ற கிராமத்தில் வாழ்ந்த மம்பட்டியான் என்ற மனிதனின் கதையை தழுவி எடுக்கப்பட்டது. இசையமைப்பு இளையராஜா வழங்க பாடல்களை கங்கை அமரன், வாலி, வைரமுத்து ஆகியோர் எழுதியுள்ளனர். காட்டு வழி போற பொண்ணே கவலைப்படாதே , சின்னப்பொண்ணு சேலை செண்பகப்பூ போல போன்ற சூப்பர் ஹிட் பாட்டுக்கள் இருந்த படம்..  பட வெற்றிக்கு தியாகராஜனின் நடிப்பும், திரைக்கதையும் இளையராஜாவின் இசையும் முக்கிய காரணங்கள்..

இப்போ ரீமேக் படத்துல பிரசாந்த் ஹீரோ.. க்ளைமாக்ஸ்ல துரோகம் பண்ற கேரக்டர் யார்னு சஸ்பென்ஸ்..ஈரோடு அபிராமில ரிலீஸ் ஆகுது.. பார்ப்போம் எப்படி இருக்குன்னு.. 


http://mimg.sulekha.com/tamil/mouna-guru/stills/mouna-guru-film-047.jpg

2. மவுன குரு - டைரக்டர் தரனியிடம் தில்,தூல்,கில்லி படங்களில் உதவியாளராக இருந்த சாந்தகுமார்,அருள்நிதி நடிக்கும் மவுனகுரு படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். மாறுபட்ட குணாதிசயம் கொண்ட கல்லூரி மாணவன் எதிர்பாராமல் சந்திக்கும் பிரச்சினை தான் கதைக்களம்.


முதலில் இந்தக்கதையில் நடிக்க பயந்திருக்கிறார், நாயகன் அருள்நிதி.அதுபற்றி அவரே சொல்கிறார்; டைரக்டர் சாந்தகுமார் என்னிடம் மவுனகுரு படத்தின் கதையை சொன்னார்.பாதிக்தை கேட்டதும் ஒருவித பயம் வந்துவிட்டது. ( ஏன்? பேய்க்கதையா? )அதனால் மீதியை அப்புறம் கேட்கிறேன் என்று சொல்லி விட்டேன்.

அதற்குப் பிறகு 6 மாத காலம் டைரக்டரை நான் சந்திக்கவில்லை. ( நைட் பார்ட்டிகள்ல அண்ணன் பிசி போல)திடீரென ஒருவிழாவில் அவரை பார்த்தேன். மீதிக்கதையை சொல்லுங்கள் என்றேன்.கதையை கேட்டு நடிக்க அதிக ஸ்கோப் உள்ள இந்தக்கதைக்கு அதிகமாகவே உழைத்தேன்.நடிப்பிலும் என்னை பேசவைக்கிற படமாகவேக்கிற படமாகவே உழைத்தேன்.நடிப்பிலும் என்னை பேசவைக்கிற படமாக இது இருக்கும்.( படம் பூரா பேசிட்டே இருப்பீங்களோ?)

படத்தில் அருள்நிதியின் ஜோடியாகிஇருப்பவர்,வாகை சூடவா இனியா.( ஃபிகரு இதுலயாவது கிளாமர் காடுதான்னு பார்ப்போம்). ஈரோடு ஆனூர்ல ரிலீஸ்

http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/09/UCHITHANAI.jpg
3. உச்சிதனை முகர்ந்தால் - ஈழப்போரில் தமிழ்ப் பெண்கள், இளம் சிறுமிகளுக்கு எதிராக சிங்கள ராணுவம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை கொஞ்சமல்ல.

பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாமல் மடிந்த சோகங்கள் சொல்லி முடியாதவை.

அத்தகைய சோகக் கதைகளில் ஒன்றுதான் உச்சிதனை முகர்ந்தால் என்ற தலைப்பில் படமாக வருகிறது. தமிழ் உணர்வாளரும் காற்றுக்கென்ன வேலி போன்ற மாற்று சினிமா படைப்பாளியுமான புகழேந்தி தங்கராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

தமிழீழத்தில் சிங்கள ராணுவத்தால் சூறையாடப்பட்ட 13 வயது தமிழ்ச் சிறுமியின் கதைதான் இந்தப் படம். நீனிகா என்ற சிறுமி இந்த வேடத்தில் நடித்துள்ளார்.

இந்தப் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்த தம்பதியர்களாக சத்தியராஜும் சங்கீதாவும் நடித்துள்ளனர். சீமான், நாசர், லட்சுமி ராமகிருஷ்ணன் என தேர்ந்தெடுத்த நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களைச் செய்துள்ளனர்.

ஈழத்தின் துயரங்களுக்கு இந்தியாவும் ஒரு காரணம் என்பது படத்தில் மறைபொருளாக சுட்டிக்காட்டப்பட்டிருப்பதால், இந்தப் படம் சென்சாருக்குப்போனபோது, ஏகப்பட்ட பிரச்சினைகள், வெட்டுக்களைச் சந்திக்க நேர்ந்தது. இறுதியில் யு ஏ சான்றுடன் வெளியாக அனுமதிக்கப்பட்டது.

இதையெல்லாம் விட மிக முக்கியம், இந்தப் படத்துக்கு வணிக சினிமாவில் முன்னணியில் உள்ள ஜெமினி பிலிம் சர்க்யூட் ஆதரவளித்திருப்பது. படத்தை தங்கள் பேனரிலேயே ஜெமினி நிறுவனம் விநியோகிக்கிறது.



தன் இனத்துக்கு நேர்ந்து கொடுமைகளை திரும்ப நினைத்துப் பார்ப்பது, அந்த சோகத்தை நினைத்து கண்ணீர் விட மட்டுமல்ல, இனவிடுதலையின் அடுத்த நகர்வு குறித்த விழிப்புணர்வையும் கோபத்தையும் நீர்த்துப் போகாமல் இருக்கச் செய்யவுமே.

அந்த வகையில் உச்சிதனை முகர்ந்தால் தமிழர் வாழ்வில் முக்கிய சினிமாவாக அமையும் என்கின்றனர் தமிழ் உணர்வாளர்கள்!

http://larryfire.files.wordpress.com/2011/06/mission-impossible-ghost-protocol.jpg

 4. GHOST PROTOCALL ( MISSION IMPOSSIBLE)-  டாம் க்ரூஸ் நடிச்ச ஆக்‌ஷன் படம். ஈரோடு வி எஸ் பி ல ரிலீஸ். வழக்கமான ஜேம்ஸ் பாண்ட் பாணி கதைதான்.. வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் உளவு நிறுவனம் அதை வைத்தவர்களை  கண்டறிய தன் ஏஜண்ட்ஸை அனுப்புகிறது.. ஹீரோ அண்ட் வில்லன் மோதல்

http://www.flicksandbits.com/wp-content/uploads/2011/12/mi-ghost-protocol-still09.jpg


நாளைய இயக்குநர் -காமெடி , காதல் கதைகள் - விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbhj_dm6l6nCmX-G2LI9vKce7p0xM1hYD4f8hXJTd3D9AExTWDnczWLCVGYWKRxIQ1-4WFuo8sBy1c8vNsJknkhhyphenhyphencq97I7NiPs2JKctvGaXGWaEvwy4pKovVKIc9WeG9pHwZxAMoMEjm4/s320/keerthy+jewellery+model.jpg

கலைஞர் டி வி ல வாரா வாரம் ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு  வர்ற நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்கு நான் ஒரே ஒரு கரெக்‌ஷன் மட்டும் சொல்லிக்கறேன்.. ஜட்ஜா வர்ற கே பாக்கியராஜ், சுந்தர் சி 2 பேரும் கோட் சூட்லதான் ரெகுலரா வர்றாங்க, அது போர்.. இயல்பா பேண்ட் சர்ட்ல வரலாமே?அப்புறம் கீர்த்தி எப்பவும் நைட்டி அல்லது பெட்டிகோட் மாதிரி ஒரு டிரஸ் போட்டுட்டுதான் வர்றாங்க.. அது ஏன்? சேலை, சுடினு டீசண்ட்டா வரலாமே? இன்னைக்கு கீர்த்தி ஏதோ சி டி மாதிரி ஒரு டாலர் செயின் போட்டு வந்தாங்க, அய்யோ ஹய்யோ

கீர்த்தி - உங்களை பொருத்தவரை ஆக்‌ஷன் , காதல் , காமெடி எந்த மாதிரி படம் எடுக்கறது டஃப்?

கே பாக்யராஜ் - என்னை பொறுத்தவரை எல்லாத்துக்குமே மூளையை கசக்க வேண்டி இருக்கு. இன்று போய் நாளை வா மாதிரி காமெடி சப்ஜெக்ட்டுக்கும் சரி, ஒரு கைதியின் டைரி மாதிரி ஆக்‌ஷன் படங்களுக்கும் சரி சீன் ரெடி பண்ண ரொம்பவே மெனக்கெடறோம்..

1. இயக்குநர் பெயர் - பிரசாந்த் - குறும்படத்தின் பெயர் - வடுகப்பட்டி ராம்சாமி

ஒரு காலேஜ் ஹாஸ்டல் ரூம். அதுல 3 ஃபிரண்ட்ஸ் தங்கி இருக்காங்க.. அவங்க ரூம்க்கு புதுசா ஒரு ஃபிரண்ட் வர்றான்.. அவன் தான் வடுகப்பட்டி ராம்சாமி.. அண்ணன் செம ராசியான ஆளு.. அவர் முகத்துல விழிச்சுட்டு போனதால்  ஒருத்தன் சேற்றில் விழுந்துடறான்.. இன்னொருத்தன் தன் காதலியின் அண்ணனிடம் அடி வாங்கறான். 3 வது ஆளு தன் ஆள் கிட்டே லவ் பிரப்போஸ் பண்ணி அது ரிஜக்ட் ஆகுது.. 3 பேரும் சேர்ந்து அந்த ராம்சாமியை துரத்தி விட்டுடறாங்க.. 

நல்லா காமெடியாத்தான் இருக்கு.. ஆனா இது ஒரு சம்பவம் மாதிரிதான் இருக்கே ஒழிய  ஒரு கதையாவோ, குறும்படமாவோ பிரமோட் பண்ணாம இருக்கு.. ஃபினிஷிங்க் டச் இல்ல. முழு நிறைவு வர்ல. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..

2.  இயக்குநர் பெயர் - ஷஃபி  - குறும்படத்தின் பெயர் -தூவானம்

ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலி.. ஒரு அம்மா அப்பா.. 18 வயசு பையன்.. ஓப்பனிங்க்ல அம்மா தைரியமா சொல்லிடும்மா என்கிறான் பையன்.. ஏதோ அவனோட லவ் மேட்டரை அவனோட அப்பா கிட்டே சொல்ல சொல்றதா ஒரு பில்டப். அப்புறம் பார்த்தா அம்மாவோட ஃபிளாஸ்பேக் காதல் ...அவங்க லவ் பண்ற பையனை அடிச்சு மிரட்டி துரத்திடறாங்க. அவங்களால தைரியமா நின்னு காதலை கவுரவிக்க முடியலை.. காதலனுக்கு வேற பக்கமும், இவங்களூக்கு வேறொருவர் கூடவும் மேரேஜ் ஆகிடுது.. இப்போ தன் பையனின் க்ளாஸ்மேட்டின் அப்பா தான் தன் முன்னாள் காதலன்கரதை தெரிஞ்சுக்கிட்டு  அவனை சந்திக்க மன்னிப்பு கேட்க ஆசைப்படறா.. ஆனா முன்னாள் காதலன் இறந்துட்டதா தகவல் தெரிய வருது..

இந்த கதைல மேக்கிங்க் ஸ்டைல். வசனம், எல்லாத்தையும் விட பிரமாதமான விஷயம் என்னான்னா அம்மாவா நடிச்ச மேடம் , அவங்க ஃபிளாஸ்பேக்ல வர்ற பொண்ணோட முகச்சாயலுடன் 100% ஒஹ்த்டுப்போற மாதிரி ஆர்ட்டிஸ்ட்டை தேடி கண்டு பிடிச்சதுதான்.. ( ஒரு வேளை அம்மா, பொண்ணாகவும் இருக்கலாம்.. ) ஆர்ட்டிஸ்ட் செலக்‌ஷனுக்காகவே இந்த பட டைரக்டரை பாராட்டலாம் வெல்டன்..

3. இயக்குநர் பெயர் - பால மனோகர்  - குறும்படத்தின் பெயர் -காலேஜ் திருட்டு


ஒரு காலேஜ் ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பெண் மாடியிலிருந்து குதிச்சு
தற்கொலை பண்ணிக்குது. ஆனா,யாருக்கும் காரணம் தெரியலை. அது போலீசு கேசாகி எல்லா பசங்க கிட்டயும் விசாரிக்க இன்ஸ்பெக்டர் ஒருத்தர் வரார்.
எல்லா பசங்ககிட்டயும் விசாரிக்குறார். எல்லார்மே அந்த பொண்ணு ரொம்ப நல்லபொண்ணுன்னு சொல்லி குட் சர்டிஃபிகேட் குடுக்குறாங்க. மண்டைய பிச்சுக்குற போலீஸ்காரர், அந்த பொண்ணோட க்ளோஸ் ஃப்ரெண்டை கூட்டிக்கிட்டு போய் விசாரிக்குறார்.

அட, ஏம்பா எல்லாரும் ஆர்வமாகுறீங்க, அவர் அந்த மாதிரி போலீஸ்கார்ர் இல்லை. இவர் காக்க காக்க சூர்யா, வேட்டையாடு விளையாடு கமல், தங்க பதக்கம் சிவாஜி, மூன்றுமுகம் ரஜினி போல ரொம்ப நல்ல போலீஸ்காரர். பாப்பாவும் எல்லாரையும் போல நல்ல பொண்ணு, சொக்க தங்கம்னு சர்டிஃபிகேட் குடுக்குது. அவ ரூமுல தனக்கு ஒரு க்ளூ கிடைச்சிருக்குறதாகவும், அதன்படி பார்த்தால், நீதான் அவ சாவுக்கு காரணம்னு பிட்டை போடுறார்(இது அந்த பிட்டோ,  பரிட்சை பிட்டோ இல்லை).

உடனே பாப்பா அழுதுக்கிட்டே தான் காரணம் இல்லைன்னும் ----ன்ற பையந்தான் காரணம்னு கொசுவர்த்தி ஏத்துது. அட அதான்பா பிளாஸ்பேக் ஓட்டுது. ஃப்ரெண்டாகி கடலை வறுக்க ஆரம்பிச்சு இருக்கு. வறுத்த கடலை ரொம்ப தீய்ஞ்சு போய் அந்த பையனை மத்த பொண்ணுங்க கூட பேசாத, கடலை போடாதே, சைட்டிக்காதேன்னு சொல்லியிருக்கு. பெத்தவங்க சொல்லியே கேக்காத நாம ஃபிகர் சொல்லியா கேட்க போறோம். அதுல கோவமாகி அந்த பையன் பாப்பாக்கிட்ட என்னை ஏன் இப்படிலாம் இம்சை
பண்ணுறே. உன்கூட மட்டும்தான் ஃப்ரெண்டா இருக்கனும்னு ஏன் என்னை
நச்சரிக்குறே, நீ செத்தாதான் நான் நிம்மதியா இருப்பேன்னு சொல்லி கோவமா
போய்டுறான். அதனால மனம் வெறுத்து போய் அந்த பொண்ணு மாடியிலிருந்து தற்கொலை பண்ணிக்கிட்டான்னு அவ ஃப்ரெண்ட் சொல்ல கேஸ் ஃபைலை மூடிடுறாங்க.

 லாஜிக் மிஸ்ஸிங்க்.. இதுக்கெல்லாமா தற்கொலை செஞ்சுக்குவாங்க? ஆனா ஒரு இன்வெஸ்டிகேஷன் படத்தை டைரக்ட் பண்ற சாமார்த்தியம் அந்த இயக்குர்ட்ட இருக்கு.. நல்ல ப்ளாட் தான் அமையலை.. 


 4.  - குறும்படத்தின் பெயர் -அகலாது - இயக்குநர் பெயர்- சீனிவாசன்


ஓப்பனிங் சீனில் இன்னிக்கு நமக்கு கல்யாண நாள். கல்யாண நாளைக்கு இங்க வரனும்னு தோணுச்சுன்னு வயசான பெருசு ரெண்டுங்க பேசிக்கிட்டு இருக்காங்க. பேசிக்கிட்டு இருக்கும்போதே தங்கள் இளமைக்கால நாட்களுக்கு போகுது அவங்க நினைவு....,

சுதந்தர போராட்ட காலத்தில் அவங்களுக்கு டீனேஜ். அப்போ அந்த ஹீரோ காந்தியோடு சேர்ந்து ரொம்ப தீவிரமா போராடுறார். அவர் வீரத்தில் மயங்கி ஹீரோயின் காதலிக்குறாங்க.  ஆனால், ஹீரோவுக்கும் மனசுல காதல் இருந்தாலும், சுதந்திரத்திற்கு அப்புறம்தான் கல்யாணம்ன்னு சொல்லிடுறார்.

அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்குறதை ஹீரோயினோட அப்பா பார்த்துடுறார். வீட்டுக்கு வந்து  இனி நீ சுதந்தர போராட்டம் அது இதுன்னு சொல்லி வெளிய போக்க்கூடாது. உடனே மாப்பிள்ளை பார்த்து உனக்கு கல்யாணம்ன்னு சொல்லிடுறார்.

ஹீரோயின் ஹீரோக்கிட்ட இந்த விஷயத்தை சொல்லி, எனக்கு கல்யாணத்துல இஷ்டமில்லைன்னும், ஆனால், அதுக்காக, நீங்க, உங்க கொள்கையை விட்டு குடுக்க வேணாம், நான் கஸ்தூரிபாய் தலைமையில நடக்குற போராட்டத்துல கலந்துக்க நம்ம ஊரு பொண்ணுங்க போறாங்க. அவங்களோடு நான் போய்க்குறேன். அப்படி போகனும்னா எனக்கு பணம் வேணும். அதுக்கு மட்டும் ஏற்பாடு பண்ணி குடுங்கன்னு கேட்குறாங்க.


 ஹீரோவும் எங்கெங்கெல்லாமோ கேட்டு பார்க்குறார். ஆனால், பணம்தான் கிடைக்கலை. கடைசியா ஒருத்தர் சொல்றார், தன்கிட்டயும் பணமில்லை ஆனால், இந்த ஊர் பண்ணையார் பொண்ணு கல்யாணம் ஆகி கைக்குழந்தையோடு விதவையாயிருக்கு. அதை கட்டிக்கிட்டால், உனக்கு பணம் கிடைக்கும்னு வழிக்காட்டுறார். 

சரின்னு சொல்லி பணம் வாங்கி ஹீரோயின்கிட்ட குடுத்துட்டு, விதவை பொண்ணை கட்டிக்கிட்டு வண்டியில வரும்போது எதிர்க்க வண்டியில ஹீரோயினும் வேற ஒருத்தரை கல்யாணம் கட்டிக்கிட்டு வராங்க.
என்ன ஏதுன்னு விசாரிச்சால், போராட்டத்துக்கு கிளம்புகையில் அப்பாக்கிட்ட மாட்டிக்கிட்டதால்  கல்யாணம் கட்டிக்கிட வேண்டியதாகிடுச்சுன்னு சொல்லி பிளாஸ்பேக்கை முடிச்சு நிகழ்காலத்துக்கு வராங்க.


சரி அவர் காத்துக்கிட்டு இருப்பார்ன்னு பாட்டியும், அவளுக்கு மருந்து வாங்கனும்னு தாத்தாவும் எதிரெதிர் திசையில் பிரியுறதா காட்டுறாங்க.
கதையும் நல்ல கதை, டெக்னிக்கல் விஷயம்,  நடிகர்கள் தேர்வு, இசைன்னு பக்காவா இருந்ததால், இந்த படத்துக்கு பெஸ்ட் ஃபிலிம் அவார்டும், பெஸ்ட் டெக்னிஷியன்சுக்கான அவார்டும் கிடைச்சுது. 

டிஸ்கி - கீர்த்தி ஜ்வல்லரி விளம்பரத்துக்கு  எடுத்த மாடல் ஃபோட்டோவை கீர்த்திக்கு சம்பர்ப்பிக்கிறேன்

அய்யோ அப்பா ஐயப்பா, அடி விழுதே ஒதுங்கப்பா ( ஜோக்ஸ்)



1. உங்க பையன் சபரி மலை போக மாலை போட்டிருக்கானா?

ஆமா, ஏன்?

இந்தாங்க  ரூ 10,000 , கேரளா கவர்மெண்ட் வழங்கும் முன் கூட்டியே தரும் நிவாரண நிதி

--------------------------------------------------

2. அப்துல் கலாம் எதுக்காக கேரளா போறார்?

கேரளாவில் தமிழர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லைன்னு அறிக்கை தர.. 

----------------------------------------

3.சபரி மலைல ஏகப்பட்ட பக்தர்கள் இருக்காங்க.. இதுல தமிழர்களை எப்படி அடையாளம் காண்பது?


அடி வாங்கிட்டு இருக்கறது தமிழர்கள், அடி குடுக்கறது மலையாளிகள்

--------------------------------------

4. படு டப்பா படமான இதுக்கு ஏன் டேம்-னு டைட்டில் வெச்சீங்க?

படம் பார்க்கறவங்க டேமிட்-னு திட்ட வசதியா இருக்கட்டும்னு தான்

--------------------------------------------

5. பஸ் ஓனரா இருக்கற நீங்க  ஒரே மாசத்துல  எப்படி லட்சாதிபதி ஆனீங்க?

சபரி மலை டூ சிங்கிரி பாளையம் ஒரு பஸ் விட்டேன், செம வசூல்

----------------------------------------


6. சபரி மலைக்கு போனவங்களுக்கு செம அடியாமே?

ஆமா, பள்ளிக்கட்டு சபரி மலைக்கு, மாவுக்கட்டு சபரி மலைக்கு, சாமியே அய்யய்யோ-னு பாடறாங்களே?

------------------------------------\

7. விஜய்காந்த்  நடிச்சு சபரி மலை-னு ஒரு படம் ரிலீஸ் ஆகி இருக்கா? தகவலே வர்லை?

அது அவர் டாக்டரா நடிச்சு வந்த சபரி படம் தான், சீசனுக்கு ஏற்றபடி ரீ ரிலீஸ் பண்ணி இருக்காங்க..

-----------------------------------------

8.  பிரபு தேவா ஏன் ஜாலி மூடுல இருக்காரு?

கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை முன்னிட்டு கேரளா நடிகைகள் யாரையும் மேரேஜ் பண்ணக்கூடாதுன்னு  நடிகர் சங்கத்துல சொல்லீட்டாங்களாம்

---------------------------------------------

9. தலைவரே, சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீடு பற்றி என்ன நினைக்கறீங்க?

சில்லறைத்தனமா இருக்கு.. இதெல்லாம் ஒரு பிரச்சனையா?

----------------------------------------------

10. இங்கே ஏ சி ரூம் கிடைக்கும்.. 

ஓஹோ சில் அறை ?? அதான் சில்லரை வியாபாரியா?


---------------------------------------------



11. டாக்டர் ஏன் கடுப்பா இருக்காரு?

நோயும் ஜாயும்  பிறர் தர வாரா -னு க்ளினிக் ல யாரோ எழுதி வெச்சுட்டு போய் இருக்காங்களாம்.. 

---------------------------------------------

12. தலைவர் ஃபாரீன் பேங்க்ல ஏன் லோன் வாங்கனும்?

அந்நிய முதலீட்டுக்குத்தானே தடை? அந்நிய கடன் ஈட்டுக்குமா தடை?னு கேட்கறாரு.. 

------------------------------------------

13. நான் காந்தியையும் பின்பற்றுகிறேன், சாந்தியையும் பின்பற்றுகிறேன்-னு தலைவர் சொல்றாரே?

சாந்திங்கறது அவர் சம்சாரம். 

--------------------------------------------

14. தலைவர் பண்ற அலப்பறை தாங்கலை.. 

ஏன்?

முல்லை பெரியாறு பிரச்சனை தீரும் வரை மகளிர் அணித்தலைவிக்கு  முல்லைப்பூ கூட வாங்கித்தர மாட்டாராம்.. 

----------------------------------------------

15  டைரக்டர் சார்.. உங்க சம்சாரத்தை புரொடியூசர் ஆக்கி அவங்க நெற்றில நாமம் போட்டிருக்கீங்களே? ஏன்?

மேரேஜ் ஆன பொண்ணு வெறும் நெற்றில இருக்கக்கூடாதுன்னு சொல்வாங்க.. அதான்
-----------------------------------------------


16. யோவ், பிச்சை எடுக்கற நீ கைல 6 லட்சம் ரூபா வெச்சிருக்கியே?



ஆமாங்க எஜமான், மீதி வீட்ல பாதி, பேங்க்ல பாதி இருக்கு.. 

----------------------------------------

17. தலைவரே. உங்க பையனுக்கு  படிப்பு மண்டைல ஏறலையா?

ஆமா, எப்படி கண்டு பிடிச்சிங்க?

 இளைய தலை முறைக்கு வழி விடனும்னு அறிக்கை  விட்டீங்களே?

------------------------------------------
18. உங்க கட்சில கொ ப செ பதவி இல்லையே?



கொள்கையே இல்லை , கொ ப செ பதவி எதுக்கு?


-----------------------------------------

19. தலைவர் சமாளிப்புல கில்லாடி

ஏன்?

பால் விலை ஏறுனதால லோக்பால் சட்டம் அமலுக்கு கொண்டு வர முடியலைன்ட்டாரே?

-----------------------------------------------

20.  கறுப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு.. 

சாரி தலைவரே, கறுப்புப்பணம் எல்லாம் வெச்சிருக்க கூடாது

-------------------------------------

Wednesday, December 14, 2011

ஈரோடு - தமிழகம் தழுவிய பதிவர் சந்திப்பு ,ட்வீட்டர் , ஃபேஸ்புக் நண்பர்கள் சந்திப்பு

ஒரு சந்தோஷமான செய்தி.. ஈரோட்ல  பதிவர் சந்திப்பு நடக்கப்போகுது.. போன வருஷமே ரொம்ப பிரம்மாண்டமா செஞ்சாங்க.. ஆனா அப்போ நான் கலந்துக்க முடியாம போச்சு.. இந்த வருஷமும் கரெக்டா ஒரு தடங்கல் வந்தது.. சவால் சிறு கதை போட்டி பரிசளிப்பு விழா சென்னைல அதே நாள்.. இந்த முறையும் நான்  ஈரோடு பதிவர் சந்திப்பில் கலந்துக்கலைன்னா சொந்த ஊர்ல நடக்கற சந்திப்புல கலந்துக்காம அப்படி என்ன வேலை?ன்னு கேள்வி வரும் என்பதால் இந்த வருடம் கலந்து கொள்ள முடிவெடுத்தேன்.. 

ஈரோட்டில் கசியும் மவுனம் கதிர்  இந்த சந்திப்புக்கான அனைத்து ஏற்பாடுகளூம் செய்யறார்.. வர விருப்பம் உள்ளவங்க நாளை இரவுக்குள் பதிவு செஞ்சுக்குங்க.. ஏன்னா சாப்பாடு ஏற்பாடுகள் செய்ய லிஸ்ட் விபரம் தேவை.. எத்தனை பேர் வர்றாங்கன்னு தெரிஞ்சாத்தான்  சாப்பாடு ரெடி பண்ண முடியும்.. 

ஈரோட்டில் உள்ள பதிவர்கள் நண்டு நொரண்டு வக்கீல் சார் , சித்தோடு நல்ல நேரம் சதீஷ்,  சித்தார் சங்கவி சதீஷ்.. கோபி கோமாளி செல்வா , அது போக இன்னும் பல ட்வீட்டர்கள், ஃபேஸ் புக் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக கூடலாம்.. 

இது ஈரோடு மாவட்ட அளவிலான சந்திப்பு அல்ல.. தமிழகம் முழுவதும் இருந்து அனைத்து பிரபல பதிவர்கள், ஆரம்ப நிலை பதிவர்கள்,சீனியர், ஜூனியர் என்ற பாகுபாடு இல்லாமல் வருவாங்க.. வந்தா அனைவரையும் சந்திக்கலாம்.. 

 பதிவர்கள் இதையே அழைப்பாக கருதவும்.. தனித்தனியாக சொல்லவில்லையே என்ற எண்ணம் ஏதும் இன்றி நம் விழா போல் பாவித்து வந்து விழாவை சிறப்பிக்கவும்..  விழாவில் கலந்து கொள்ள எந்த கட்டணமும் இல்லை.. இலவசம்

இது குறித்து கதிர் வெளியிட்டிருக்கும் அறிக்கை

சங்கமம்-2011
இணையச் சிலந்திக்கூட்டில் பல தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் நம்மை ஒரு கோட்டில் மீண்டும் இருத்திப்பார்க்க, இந்த ஆண்டும் ஈரோடு தமிழ்வலைப்பதிவர்கள் குழுமம் அழகானதொரு சந்திப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.


வலைப்பக்கம்(blog), WordPress, Facebook, Twitter, BUZZ போன்ற பல தளங்களில் உறவாடும் இணைய உறவுகளை ஒன்று திரட்டி அகமகிழும் முகமாக ”சங்கமம் 2011” எனும் கூடல்த்திருவிழா ஈரோட்டில் நடைபெறவுள்ளது.

2009, 2010ஆம் ஆண்டுகளில் இது போன்ற கூடல்கள் மிகச் சிறப்பாக நடந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதே போன்று இந்த ஆண்டும் டிசம்பர் 18ம் தேதி ஈரோட்டில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆண்டுகளின் சங்கமம் குறித்த இடுகைகள்.

எங்கு, எப்போது, என்ன?
சங்கமம்-2011 நிகழ்வு 18.12.2011 ஞாயிறன்று, ஈரோடு, பெருந்துறை சாலை, பழையபாளையத்தில் உள்ள ரோட்டரி CD அரங்கில், மிகச்சரியாக காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் இரண்டு மணிக்கு நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்வில் மிக வித்தியாசமான அங்கீகாரங்கள், மிகச்சிறந்த ஆளுமைகளின் சிறப்புரை, அர்த்தமிகு கலந்துரையாடல், மதிய விருந்து என எங்கள் குழு வடிவமைத்துக் கொண்டிருக்கிறது.

ஏன் சங்கமம்?
ஏன் இப்படியான நிகழ்வை மிகுந்த பொருட்செலவோடு, கடினப் பணிக்கிடையிலும் நடத்த வேண்டும் என்ற கேள்விகள் எப்போதாவது எழுந்தாலும், இணைய உலகத்தில் இதயத்திற்கு நெருக்கமாகக் கண்டெடுத்த எம் தமிழ்சொந்தங்கள் அந்தக் கேள்விகளை அகற்றி ஆண்டுக்கொருமுறை கூடிப் பழகவேண்டும் என்று ஆவலை நிறையவே ஊட்டுகிறது.

எல்லாச் சன்னல்களையும் திறந்துவிட்டு, இந்த இணைய சமூக வலைத்தளம் நம் பசிக்குத் தீனி போட்டு, உள்ளே உருண்டு, புரண்டு கொண்டிருப்பதை நம்மிலிருந்து வெளியே எடுத்து, தனக்குள் தாங்கி, பலதரப்பட்ட வகையில் அங்கீகாரம் அளித்து, புதியதொரு உலகத்திற்கான சன்னல்களைத் திறந்து வைத்திருக்கிறது. வெறும் எழுத்துகளாலும், படங்களாலும் மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் எப்போதாவது நேரிலும் சந்தித்து மகிழலாமே என்ற ஆசையின் வெளிப்பாடுதான் இந்தக் கூடல்.

கலந்துகொள்ள:
முதன்முறையாக வலைப்பக்கம் (Blog / Wordpress) என்பதைத்தாண்டி FaceBook / Twitter / BUZZ போன்ற சமூக வலைத்தளங்களில் இருப்போர் என அழைப்பதில் பெருமகிழ்வு கொள்கின்றோம். அதே சமயம் அதில் எங்களுக்கு இருக்கும் சின்ன நெருக்கடி, அதிலிருந்து எத்தனைபேர் கலந்துகொள்வார்கள் எனும் சரியான எண்ணிக்கைதான். எனவே, சங்கமம்-2011  நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் அனைவரும், தங்கள் வருகையை 15.12.2011 வியாழக்கிழமைக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
 
தங்கள் பெயர்
தொடர்பு எண் (optional)
மின்மடல் முகவரி
வலைப்பக்க(blog-Facebook-Twitter ID) முகவரி / பெயர்
..... ஆகியவற்றுடன் மின் மடல் செய்யவேண்டுகிறோம். 

இது கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை எங்களுக்கு உறுதிப் படுத்தியதையொட்டியே நிகழ்வுக்கான இருக்கைகள், உணவு ஏற்பாடு செய்யமுடியும். இவ்வளவு வலியுறுத்திக் கேட்பதன் மிக முக்கியக்காரணம் மதியம் சைவ / அசைவ உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது. சரியான எண்ணிக்கை தெரியாத போது உணவு போதாமல் அமையவோ, கூடுதலாக அமைந்து வீணாகவோ வாய்ப்பிருப்பதை முற்றிலும் தவிர்க்கவே. நிகழ்ச்சியன்று அரங்கிற்குள் 9.30க்குள் தங்கள் வருகையை உறுதிசெய்யவும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கட்டணம் ஏதுமில்லை.
மேலதிக விபரங்களுக்கு:

தாமோதர் சந்துரு (தலைவர்) 93641-12303 ,
க.பாலாசி   (செயலர்) 90037-05598,
கார்த்திக்
  (பொருளர்)  97881-33555,
ஆரூரன்
- 98947-17185 ,
கதிர்
– 98427-86026,
வால்பையன் - 99945-00540,
ஜாபர்
- 98658-39393,
ராஜாஜெய்சிங்
- 95785-88925,
சங்கவி – 9843060707

நிகழ்வின் வெற்றியும் சிறப்பும் தங்கள் கைகளில் மட்டுமே அமைந்திருக்கின்றது என்ற நம்பிக்கையோடு வரவேற்கத் தயாராக இருக்கின்றோம்
 
 
 டிஸ்கி - ஈரோடு பஸ் ஸ்டேண்டில் இருந்து பெருந்துறை செல்லும் டவுன் பஸ் நெம்பர் 12, 18 போன்ற பஸ்ஸில் ஏறினால்  பழைய பாளையம் பஸ் ஸ்டாப்பில் இறங்கவும், இது கலெக்ட்டர் ஆஃபீஸ் ஸாப்புக்கு அடுத்த ஸ்டாப்

சென்னை உலகப்பட விழா - படங்கள் ஒரு பார்வை - பாகம் 1

சென்னையில் உள்ள நண்பர்களுக்கு இனி செம ஜாலி தான். ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஸ்டார்ட் ஆகிடுச்சு. டெயிலி வகை வகையா படங்கள் பார்க்கலாம்.. அவங்களுக்கான ஒரு கைடு.. 

காலை 11 மணி காட்சி  - சென்னை உட்லண்ட்ஸ் 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUb0XAyQL5CLPHkbcf0DXSPmLfsZFQuE1UWd9le83MCSq-nbjtWoirOIr8xHVfreoja4uNBqDpo1zf9w10QK-Cc08y6o_OYcE-AHcR-_euhdgVXpecyLwqOXeGgBDKqvMMN3d3Ib17LlAa/s1600/L-hero.jpg
1.PECHORIN -  இது ஒரு ரஷ்ய நாவலை தழுவியது . எ ஹீரோ  ஆஃப் அவர் டைம் - இதான் நாவல் பேரு.. நாவலோட ஓபனிங்க்லயே அபசகுனமா நான் இப்போ இறந்தாலும் இறந்து விடலாம்னு தொடங்குனாலும் ஹீரோ கடைசி வரை இறக்கவே இல்லை.. ஆனா படத்துல ஒரு சேஞ்ச்.. கதைப்படி ஹீரோ சந்தர்ப்ப சூழ்நிலையால தன் சுய நலத்துக்காக தன் ஃபிரண்டையே கொலை செய்யறாரு.. படம் ரொம்ப ஸ்லோ.. 95 நிமிஷம் ஓடற படம்,இயக்குனர் : Roman Khrushch

http://www.jonathanrosenbaum.com/wp-content/uploads/2011/10/thekidwithabike.jpg
 2. THE KID WITH A BIKE - இது ஒரு ஃபிரான்ஸ் படம்.. குழந்தைங்களுக்கான படம். குழந்தைகள் காப்பகத்தில் இருந்து வெளியேறும் 11 வயது சிறுவன் Cyril, தன்னைக் கைவிட்ட தந்தையைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகிறான். அவனுக்கு வெகுவாக உதவுகிறாள், Samantha என்ற பெண். அடுத்தடுத்து திருப்பங்கள் வியக்கவைப்பவை. மனிதத்தைச் சொல்லும் உணர்வுப்பூர்வமான படைப்பு என்று இப்படத்தை 'தி டெலிகிராப்' புகழாரம் சூட்டியிருக்கிறது. கேன்ஸ் பட விழாவில் வெளியிடப்பட்டு, Grand Prix விருதைத் தட்டிச் சென்ற படம்! இன்று மாலை 5.30 மணிக்கு அதே உட்லன்ட்ஸ்.இயக்குனர்கள் : Jean-Pierre and Luc Dardenne

http://i.fanpix.net/images/orig/h/f/hfpcycakcl1e1la.jpg

3.  THE THREE WAY WEDDING - படத்தோட ஹீரோ நம்ம ஊரு எஸ் வீ சேகர் மாதிரி ஒரு டிராமா டைரக்டர்.. செம இண்ட்ரஸ்ட்டிங்கா நாடகம் எல்லாம் போடுவார்.. அவர் எழுதுன புது நாடகம் அதுல அவரோட முன்னாள் மனைவியும் , முன்னாள் மனைவியோட இந்நாள் லவ்வரும்  நடிக்கறாங்க.. அதுக்கான ரிகர்சலுக்கு ஒரு இடத்துக்கு போறாங்க.. அங்கே நடக்கற சம்பவங்கள் தான் படம்.. இதுவும் ஒரு ஃபிரான்ஸ் படமே..  100 நிமிடங்கள் ஓடும் படம்.. இயக்குனர்: Jacques Doillon உட்லண்ட்ஸ் சிம்பொனி யில் காலை 10.30 மணி காட்சி

http://vthumb.ak.fbcdn.net/hvthumb-ak-ash2/51269_233780826675350_233780230008743_51261_1910_b.jpg

4.   THE SON  ( OGUL) - இது ஒரு துருக்கி படம்.. 18 வயசு பையன் தன் முத லவ்வரை சந்திக்கறதுக்காக சொந்த ஊரை விட்டு கிளம்பறான்..வழில அவன் சந்திக்கும் அட்வென்ச்சர்தான் படம்.. அவன் தன் ஆளை சந்திக்கறதுக்கான பயணத்துல தன் அப்பாவை சந்திக்கறான்..படம் செம ஸ்லோ.. 97 நிமிடங்கள் ஓடுது.. இயக்குனர் : Atilla Cengiz இன்று மதியம் 12.45 மணீக்குஉட்லண்ட்ஸ் சிம்பொனி யில்

http://www.filmafrique.com/sites/default/files/images/news/durban.jpg

5. OTELO BURNING -  நெல்சன் மண்டேலா ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆன கால கட்டத்துல இளைஞர்களிடையே ஏற்பட்ட  எழுச்சி, உணர்வுகளை சொல்லும் படம்.. நம்ம ஊர்ல எப்படி எம் ஜி ஆர் , அண்ணா போன்ற தலைவர்கள் வாழ்ந்தப்ப அவருக்காக உயிரையும் கொடுக்கும் தொண்டர்கள் இருந்தார்களோ அந்த மாதிரி  தென் ஆப்பிரிக்காவின் பார்வையில் கதை போகுது ,  டைரக்டர் SARA BLECHER, இது இன்று மாலை 3 மணிக்கு உட்லண்ட்ஸ் சிம்பொனி யில்
 http://29.media.tumblr.com/tumblr_lpxr8sRabR1qcb58yo1_400.gif
6. THE WEEPING WILLOW - 38 ஆண்டுகளாக பார்வையற்றவராக இருந்த கல்லூரிப் பேராசியருக்கு, சிகிச்சை ஒன்றில் திடீரென பார்வை கிடைக்கிறது. உலகை கண்களால் பார்க்கத் தொடங்கிய பிறகு அவருக்கு ஏற்படும் சிக்கல்கள், அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளை மையமாகக் கொண்டது, இப்படம். சுவாரசியமான கதைக் களம். ஈரானிய நடுத்தர மக்களின் வாழ்க்கையை அப்படியே பதிவு செய்திருக்கிறது. உலக அளவில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்ற படம். இயக்குனர் : Masjid Majidi , இது ஈரானிய படம், ஃபிலிம் சேம்பர்ல காலை 10 மணீக்கு 

7. 7. 7.THE DISPENSABLES - வறுமையில் வாடும் குடும்பத்தில் 11 வயது சிறுவன் படும் துயரமே படத்தின் மையம். குடிக்கு அடிமையான அம்மாவோ மனநல காப்பகத்தில். குழந்தைக்கு படிப்பைக் கூட தரமுடியாத அப்பா தற்கொலை செய்துகொள்கிறார். அப்பா இறந்தது வெளியில் தெரிந்தால், தன்னை குழந்தைகள் காப்பகத்துக்கு கொண்டு சென்றுவிடுவார்களோ என அந்தச் சிறுவனுக்கு அச்சம். அப்பாவின் மரணத்தை பற்றி வெளியில் தெரியாமல், சடலத்துடன் இரு வாரங்கள் கழிக்கிறான். பிறகு? இந்தக் கேள்விக்கு பதில் சொல்கிறது, திரைக்கதை.இயக்குனர் : Andreas Arnstedt, இன்று மதியம் 12,30 மணிக்கு, ஃபிலிம் சேம்பரில்

http://criterion-production.s3.amazonaws.com/stills/8505/shadowsinparadise_66.jpg

 8.SHADOWS IN PARADISE  -இந்த டைட்டில்ல 1986-ல் ஒரு படம் , 2010-ல் ஒரு படம் வந்திருந்தாலும் 2ம் வெவ்வேற ஸ்டோரி லைன், புது படம் ஆக்‌ஷன் மூவி.. பழைய படம் தான் இன்னைக்கு போடும் படம்.. ஹீரோயின் செம ஃபிகர்.. பார்ட்டி சூப்பர் மார்க்கெட்ல கிளர்க்.. ஹீரோ ஒரு துப்புரவுத்தொழிலாளி.. 2 பேருக்கும் செம லவ், ஆனா பாருங்க 2 பேரும் வெளீல சொல்லிக்கலை.. நம்ம ஊரு காதல் கோட்டை , முரளி படங்கள் டைப். போல இந்த ரொமான்டிக் படம். 1987-ல் சிறந்த படத்துக்கான Jussi Awards வென்றுள்ளது

http://ecx.images-amazon.com/images/I/514WD8ECPDL._SL500_AA300_.jpg

9. LENINGRAD COWBOYS GO AMERICA - பின்னிஷ் இசைக் கலைஞர்கள் குழு ஒன்று, உலகப் புகழ் பெறவும், பணம் சம்பாதிக்கவும் அமெரிக்கா பயணிக்கிறது. சுவாரசியம் திருப்பங்களும் நிறைந்த அந்தப் பயணம் தான் படம். Empire magazine's "The 100 Best Films Of World Cinema" in 2010 பட்டியலில் 88-வது இடத்தில் இடம்பெற்றது, இப்படத்தின் சிறப்புகளுள் ஒன்று!இயக்குனர் : Aki Kaurismäki

http://img.interia.pl/rozrywka/nimg/l/s/Kadr_filmu_Joanna_Joanny_4758573.jpg

10. JOANNA -போர்ச் சூழல். போருக்குச் சென்ற கணவன் திரும்பவில்லை. அவன் நிலை என்னவென்று தெரியாத இளம் மனைவி, ஒரு யூதச் சிறுமியை காப்பற்ற முயற்சிக்கிறாள். அதற்காக ஜெர்மானிய அதிகாரியை காதலிக்க வேண்டிய கட்டாயம். அரசியல், போர், அவலம்... இத்தகைய பின்புலத்தில் அன்பை அழுத்தமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்லும் படம்! இயக்குனர் Feliks Falk 

சம்மட்டி , மம்முட்டி கேரளா - ஜோக்ஸ்



1.தமிழகத்துக்கு ரூ.25 ஆயிரம் கோடி நிதியுதவி தேவை: ஜெ # அய்யய்யோ, அடுத்து என்னம்மா வரி போடப்போறீங்க?சுவாசிக்கற காத்துக்கும் வரி போடுங்க

--------------------------------------

2. ஸ்டோர்கீப்பர் வீ்ட்டில் ரூ12 கோடி பறிமுதல்  # ஸ்டோர்கீப்பரா? க்ரோர்கீப்பரா?

-------------------------------

3. சார்ஜரில் போட்டபடி மொபைல் ஃபோன் பேசிய உடற்கல்வி ஆசிரியர் பலி # எமன் சார்ஜ் பண்ணிட்டார் போல, உஷார் மக்களே!

----------------------

4. சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை குறைவு # அடி வாங்குனவங்க அருகில் உள்ள ஹாஸ்பிடல்ல தான் இருப்பாங்க, அதையும் கணக்கில் சேர்க்கவும்

---------------------------------

5. டிச. 9ல் திமுக அவசர கூட்டம்  # தலைவரே, நிதானமா கூட்டுங்க,கனி அக்காதான் ரிலீஸ் ஆகிட்டாங்களே?

-------------------------------


6. கேரள அரசியல்வாதிகளிடமே பலவீனம்: விஜயகாந்த் # அடடா? பழநி, சேலம் வைத்தியர்களை சிபாரிசு செய்யுங்க கேப்டன்

---------------------------------

7. ரூ 5 லட்சம் நஷ்டஈடு கொடுத்து விட்டால், இழந்த கற்பு திரும்பப் பெற முடியுமா- கோர்ட் # ரேப் கேஸ்க்கு 10 வருஷமாவது தீட்டனும்,இது ரேட் ஆகிடும்

-----------------------------------

8. எந்த அலையிலும் திமுக என்ற படகு கவிழ்ந்து விடாது : நெப்போலியன் # அடபோங்கண்ணே, ஆனானப்பட்ட டைட்டானிக்கே கவிழ்ந்தாச்சு, பேசறீங்க பேச்சு

--------------------------


9. தமிழக பக்தர்கள் மீது கேரளா தாக்குதல் # ஓ! தமிழர்களே! தமிழர்களே!உள்ளூர் கோயில் காத்து வாங்குது, வெளியூர் கோயில்ல ஏன் போய் உதை வாங்குது?

----------------------------------------


10. உபசரிப்புக்கலையில்  ஆண்களும் ,அனுசரிப்புக்கொள்கையில் பெண்களும் விற்பன்னர்களாகத்திகழ்கிறார்கள்

---------------------------------




11. நீ வந்து பார்த்த பின் டர்ட்டி பிக்சரும் பியூட்டி பிக்சர் ஆகி விட்டதே அடடே!

---------------------------------



12. ஹாய் காஞ்சனா!

ஃபிகரு- உங்களை எனக்கு ஞாபகம் இல்லையே? பாஸ்வோர்டு சொல்லுங்க..

ஈரோடு SKM பார்க் .. ஹாய், இப்போ ஞாபகம் வந்தாச்சு

-------------------------------------



13. நிச்சயதார்த்தம் கேன்சல்...

ஏனுங்க சம்பந்தி?

மாப்ளை சபரி மலை போயிருக்காரு, உயிரோட திரும்பி வந்தா பார்ப்போம்

-----------------------------------


14. பாம்புக்கு விஷம் போல், தேளுக்கு கொடுக்கு போல் உனக்கு உன் உதடுகள்

------------------------------------


15. மாயாவதியைப்பார்த்து தனுஷ் - ஒய் திஸ் சிலை வெறி சிலை வெறி..............

-----------------------------------





16.தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்திற்கு பாகிஸ்தானில் தடை!  # யோவ், தமிழனுக்கு போற பக்கம் எல்லாம் தடை விதிக்கறாங்க,இது ஒரு மேட்டரா?

-------------------------------



17. எனக்கு நாய் வளர்ப்பது பிடிக்கும்; எனது கணவருக்கும் நாயை பிடிக்க வேண்டும் - த்ரிஷா # வவ் வவ் வவ் வவ் லொள் லொள் (என் குரலே அப்டிங்கோ)

---------------------------------



18. யார் எவ்வளவு அடிச்சாலும் அழாமல் தம் பிடிச்சு தாங்கறான் தமிழன்

----------------------------


19. சம்மட்டியால் அடி வாங்கினாலும் மம்பட்டியான் போல் சொரணை அற்று இருக்கானே தமிழன்?

---------------------------


20. கலைஞரின் வழிகாட்டுதலின்படி தீவிர அரசியலில் ஈடுபடுவேன்-கனிமொழி # திகார்ல வலி எதும் காட்டலையா?


-----------------------------


 டிஸ்கி - முதல் ஃபோட்டோ சென்னிமலை ஈமு கோழிப்பண்ணையில் எடுத்தது, மற்றவை ஈரோட்டில்