Showing posts with label SANDHAANAM. Show all posts
Showing posts with label SANDHAANAM. Show all posts

Friday, April 27, 2012

லீலை - சினிமா விமர்சனம்


http://4.bp.blogspot.com/_J3eCu6V1pog/S-wFz-u7ZPI/AAAAAAAACB0/ncysOZoO77Q/s1600/LeelaiT_457.jpg
ஹீரோ காலேஜ் லைஃப்ல ஜாலியா ஃபிகர்ங்க கூட கடலை போட்ட கடலை மன்னன் கந்த சாமி.. கட்டதுர மாதிரி அவர் சும்மா கடலை தான் போட்டாரே தவிர சாகுபடி ஏதும் செய்யலை.. அதுல ஃபோன் மூலமா அறிமுகம் ஆகி சண்டைல பிரிஞ்ச ஒரு ஃபிகர் தான் ஹீரோயின்.. ஆளை நேர்ல பார்க்காமயே பிரிஞ்சாச்சு.. 

 இப்போ ஹீரோ கம்ப்யூட்டர் எஞ்சினியர்.. அவரோட கேர்ள் ஃபிரண்ட்க்கு ஃபோன் போடறப்ப அந்த கேர்ள் ஃபிரண்ட் ஆஃபீஸ்ல வேலை செய்யற மலர்ங்கற ஃபிகர்தான் தன் முன்னாள் ஃபோன் மேட்னு கண்டு பிடிக்கறார்.. ஒன் சைடு லவ்.. கார்த்திக்ங்கற தன் உண்மை பேரை மறைச்சு சுந்தர்ங்கர பேர்ல அறிமுகம் ஆகி மலரை மயங்க வைக்கிறார்.. இப்போ அந்த மலர் சுந்தரை லவ்விங்க்.. 

 ஹீரோ கார்த்திக்கா  மலருக்கு அப்பப்ப ஃபோனை போட்டு வெறுப்பேத்துறார். அப்போதான் சுந்தரை அவர் விரும்புவார்னு.. அந்த லூஸ் ஹீரோயின் கார்த்திக், சுந்தர் 2ம் ஒரே ஆள் தான்கறது தெரியாம லவ்வுது.. 

இவங்க 2 பேருக்கும் பப்ளிக் ஃபிரண்ட் அதாவது பொதுவான ஃபிரண்ட் ஒருத்தி இருக்கா.. அவ ஹீரோட்ட சொல்லிடறா.. ஹீரோயின் கிட்டே உண்மையை சொல்லிடு இல்லீன்னா நானே சொல்லிடுவேன்னு.. இவ எதுக்கு இந்த சுப்ரமணியம் சாமி வேலை செய்யனும்னு ஹீரோ எரிச்சல் ஆகி அப்படி எல்லாம் உடனே சொல்ல முடியாது டைம்  வேணும்னு கேட்கறான்.. 

திடீர்னு ஹீரோ ஹீரோயின் கிட்டே நான் உன் கிட்டே ஒரு உண்மையை மறைச்சுட்டேன்.. ஆனா அது என்ன?னு கேட்காதே.. நாம பிரிஞ்சுடலாம்கறான் ..அதுக்குப்பிறகு என்ன ஆச்சு? 2பேரும் சேர்ந்தாங்களா? ஆடியன்ஸ் சோர்ந்தாங்களா? என்பதே மீதிக்கதை.. 
http://3.bp.blogspot.com/_GaVBOHRwetA/SOJUuReNxlI/AAAAAAAAVsE/0Zfll1T_AyU/s400/Leelai-Stills-007.jpg
 எங்கியோ கேள்விப்பட்ட கதை மாதிரி இருக்கா? எண்ட மூரி வீரெந்திர நாத் எழுதுன காதல் சதுரங்கம் தெலுங்கு நாவல் தான் இது.. ஆல்ரெடி குள்ள நரிக்கூட்டம்னு ஒரு படம் வந்ததே அந்தப்படமும் கிட்டத்தட்ட இந்தக்கதை தான்.அதுல ஹீரோ போலீஸ் ட்ரெயினர்.. இதுல கம்ப்யூட்டர் எஞ்சினியர். ஆனா லீலை படம் 4  வருடங்களுக்கு முன்பே ரெடி ஆன படம்.. ஏன் போணி ஆகலை.. ஏன் ரிலீஸ் ஆகாம இழுத்தடிச்சுதுன்னு யாருக்கும் தெரியலை.. கம்ப்பெனி சீக்ரெட்..

ஹீரோ பேரு ஷிவ் பண்டித்.. கொஞ்சம் மாதவன் கொஞ்சம் ஷாம் .. மீசை இல்லாத ஹீரோக்கள் தமிழ் சினிமாவில் ஈசியா வரத்தொடங்கிட்டாங்க.. லவ் சப்ஜெக்ட் ஸ்டோரில  ஹீரோக்கள் அதிகமா மெனக்கெட தேவை இல்லை என்பதால் சமாளீக்கிறார்.. காமெடி காட்சிகளீல் கொஞ்சம் பம்முகிறார்.. ஹீரோயின் உடன் பாடி கெமிஸ்ட்ரி குட்.. அதானே பார்த்தேன்.. அதுல மட்டும் கரெக்ட்டா இருப்பாங்களே//,


 ஹீரோயின் பேரு மனசி பரேக் கோகில்.. என்னமோ கன்னட பட டைட்டில் மாதிரி இருக்கு.. பொட்டு வைக்காத நீள் வட்ட நிலா.. லிப்ஸ்டிக் கொஞ்சமா போட்ட மாநிற பலா .. க்ளிப்போ, ரப்பர் பேண்டோ போட்டு கட்டி வைக்காத கர்லிங்க் ஹேர் அழகி .. 50 மார்க் ஃபிகர் .. தேறிடுவார்னு தோணுது.. பாடல் காட்சிகளீல் தடுமாற்றம்.. காதல்  காட்சிகளீல் கனகச்சிதம்.. 

 ஹீரோயின் ஃபிரண்டா வர்றவர் பேரு சுஹாசினி ராஜு.. த்ரிஷா அம்மா சாயல் முக ஜாடைல மற்றபடி யூத்தான்.. ஹீரோயினை விட 4 இஞ் உயரம்.. எனக்குத்தெரிஞ்சு ஹீரோயினை விட ஹீரோயின் தோழி இவ்ளவ் உயரம் இருந்து இப்போ தான் பார்க்கறேன்.. உயரத்துல தான் ஹீரோயினை இவர் முந்தறார்.. மற்றபடி எல்லாத்துலயும் ஹீரோயின் தான் முன்னிலை.. 

சந்தானம் காமெடிக்கு தனி டிராக் போட்டது தெரியாத மாதிரி பார்த்துக்கொண்டது சாமார்த்தியம்.. இதில் சந்தானம் சொந்த வசனம் பேச வாய்ப்பு அதிகம் இல்லை.. ஸ்க்ரிப்டில் என்ன இருக்கோ அதைத்தான் பேசறார். ஆனாலும் ரசிக்கலாம்.. http://static.sify.com/cms/image/jdwmSBaaggg.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்.


1. ஹீரோ சந்தானம் வீட்டுக்கு வந்து நான் ஒருத்திக்கிட்டே இருந்து தப்பிக்கத்தான் இங்கே வந்திருக்கேன்.. ஒளிஞ்சுக்கறேன் என சொல்லும்போது யார் இடம் இருந்து தப்பிக்க நினைத்தாரோ அதே ஆள் ஆல்ரெடி அங்கே இருக்கும் போது செம காமெடி சிச்சுவெஷன்.. அந்த காட்சியில் மூவர் நடிப்பும் ஓக்கே

2. அதே போல் ஹோட்டலில் ஹீரோ, ஹீரோயின், ஃபிரண்ட் மூவரும் சந்திக்கும் காட்சி ரசிக்க வைக்கும் காமெடி


3.  படத்தில் கவர்ச்சிக்கு வாய்ப்பிருந்தும் மிக கண்ணியமாக காதலை, ஹீரோயினை காட்டிய விதம் ( நற நற வட போச்சே.. )

4.  சில்லென்ற ஒரு கனவு,  பொன் மாலைப்பொழுதே, உன்னைப்பார்த்த பின்பே என 3 பாடல்கள் தேறுது.. எல்லாமே மெலோடி தான்... 

5. சந்தானம் காமெடி படத்துக்கு எந்த அளவு தேவையோ கதையோடு வர்ற மாதிரி கனக்ச்சிதமா தேவையான அளவு மட்டும் யூஸ் பண்ணிய விதம். 


6. பட போஸ்டர் டிசைனும், பேப்பர் விளம்பரங்களும் நீட்..

7. ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டும் ஹீரோயின் பொட்டு வெச்சு அழகா வர்றார். படம் பூராவே அப்படி வந்திருக்கலாம்

http://www.filmglitz.com/tamil/wp-content/gallery/leelai/leelai-movie-stills13_01.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. தமிழ் அகராதியில்  லீலை என்பதற்கு 1000 அர்த்தங்கள் இருந்தாலும்  தமிழனின் அகராதியில் லீலை என்பதற்கு ஒரே அர்த்தம் கில்மா தான்.. ஒரு நல்ல காதல் கதைக்கு ஏன் லீலை என்ற நெகடிவ் டைட்டில்?


2. ஹீரோயின் ஹீரோவை லவ் பண்ணுன பிறகு அவன் ஃபேமிலி பேக் கிரவுண்ட், வீடு எது? அப்டி எதுவும்னே தெரியாம அல்லது தெரிஞ்சுக்க ஆர்வம் இல்லாமலா இருப்பாங்க?

3. ஹீரோ என்னமோ பெரிய தப்பு பண்ணிட்ட மாதிரி ஃபீல் ஓவரா விடறார். தன்  பேரை மட்டும் மாத்தி சொல்றார்.. அவ்லவ் தானே.. ஒரு முழுப்படத்தையும் உட்கார்ந்து பார்க்க வைக்க அந்த ஒரே ஒரு KNOT பத்தலையே.. இதெல்லாம் ஜூஜுபி மேட்டர் ஆச்சே?

4. ஹீரோ ஹீரோயின்  எப்படியும் சேர்வாங்க அப்டிங்கறது உள்ளங்கை  நெல்லிக்கனி போல , அல்லக்கை தாமரைக்கனி போல தெரிஞ்சுடுதே எப்படி ஆடியன்ஸ்க்கு சுவராஸ்யம் வரும் திரைக்கதைல?


5. ஹீரோயினோட அப்பா உன் காதலனை வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றேன்னியே? என்னாச்சு? என ஃபிரண்ட்லியாக அப்பா கேட்கரப்ப அப்பா எனக்கும் அவருக்கும் சின்ன ஊடல்... இப்போ வேணாம் கொஞ்ச நாள் போகட்டும்னு ஏன் ஹீரோயின் சொல்லலை? பூசி மெழுகறா..  தேங்காய் உடைச்ச மாதிரி சொல்றதுக்கென்ன?


மனதில் நின்ற வசனங்கள்
http://reviews.in.88db.com/images/leelai/shiva-pandit-santhanam-leelai.jpg

1.  என்னை விட்டுட்டு போனது கூட எனக்கு பெரிசா தெரியலைடி.. போறப்ப உனக்கு  மோனாவே பெட்டர்னு சொல்லிட்டு போய்ட்டான்.. அதைத்தான் என்னால தாங்கிக்க முடியலை

2. கலையாத முடி, காட்டன் சுடி,கைல பேக் இண்டர்வியூக்கு வராம காபரே டான்ஸ் ஆடவா வந்திருப்பீங்க?

3.  என்னா ஆச்சு? வேலை கிடைச்சுதா? 

 பேடு லக் 

 அடடா.. 

 அதாவது கம்ப்பெனிக்கு பேடு லக்.. ஹா ஹா எனகு வேலை கிடைச்சுச்சு

4.  அடடா.. பில்டப் பண்ண விடமாட்டெங்கறாங்களே..

5. மேனேஜர் இருக்காரா? நான் அவரை இண்டர்வியூ பண்னனும்./. 

 வாட்?

 சாரி  ?  அவர் என்னை  இண்டர்வியூ பண்ணனும்

6. மிஸ்.. அடிக்கடி நாம் மீட் பண்ணப்போறோம்.. ஒவ்வொரு முறையும் ஹலோன்னு சொன்னா நல்லாருக்காது.. அதனால பேரு சொல்லுங்க ஹி ஹி 


7.  ஆல் த பெஸ்ட்.. 

 எனக்கு ஏன் சொல்றீங்க.. 

 சாரி எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்

8.  நான் ஒரு ரஃப்ஃபான சாஃப்ட் வேர் இஞ்சினியர்

9.  டேய்.. நிஜமாவே கருணை மலர் அழகா இருப்பாளா?

 தேன் கூடு மாதிரி தலையை வெச்சிருக்காளே, இவ மேல சத்தியமா சொல்றேன் அவ செம அழகுடா.. 

 10.  இங்கே என்ன பண்ணிட்டு இருக்கே? 

 உண்மையை சொன்னா எப்படியும் நீ நம்ப மாட்டே.. சைட் அடிச்சுட்டு இருக்கறதா நினைச்சுக்கோ.

http://www.filmics.com/gallery/d/160094-1/Leelai-Movie-Stills-9.jpg

11.  நான் சொன்ன படி அவ அழகா இல்லைன்னா  இதோ இவளுக்கு மொட்டை  அடிச்சுடறேன்

12.  நீங்க கேட்கறதால இந்த சிடியை கொடுக்கறேன்.. ஆனா பொண்ணுங்கறதாலதான் கொடுத்ததா என்னை தப்பா நினைக்கக்கூடாது


13. ரொம்ப நல்லவனாவே இருக்கட்டும், ஆனா பேரைக்கூட கேட்காத தத்தியாவா இருப்பாங்க?

14.  அடுத்தவன் ஃபிகருக்கு ஏண்டா இப்படி அலையறீங்க?

15. கிஸ்னா வாய்ல தரனும் அவ வெச்சிருக்கறதுக்குப்பேரு வாயா? கோடாலி.. பல் பட்டு உதடு கிழிஞ்சிருச்சு..

16.  பார்ட்டி வெச்சே ஓக்கே யார் பாக்கெட்ல கையை வெச்சே?

17.  சார்.. கார் எடுக்கனும்

லோனா?.. ஏன் சார் பெட்ரோல்விக்கற விலைல கார் வாங்க ஆசை?

 நீங்க உங்க காரை எடுத்தா அதுக்குப்பின்னால நிக்க வெச்சிருக்கற என் சைக்கிளை நான் எடுத்துக்குவேன்

18.  இனிமே புரியாத மாதிரி எவனாவது மொட்டையா பேசுனா எவனுக்குமே கொ சாரி சட்டை இருக்காது..

19. அந்தக்கால பொண்ணுங்க புருஷன் பேரை சொல்லமாட்டாங்க, இந்தக்கால பொண்ணுங்க புருஷன் இருக்கறதையே சொல்றதில்லை.


20. நாங்க எல்லாம் பீச் காத்துலயே பீடி பத்தவைக்கறவங்க டா..


http://chennai365.com/wp-content/uploads/movies/Leelai/Leelai-Stills-1010010.jpg

21. உங்களை மாதிரி குடும்பத்து  குத்து விளக்கை ஏத்தத்தான் அவன் வெயிட்டிங்க் ஹி ஹி  ஐ மீன் உங்களுக்கு அவன் தான் ஏத்தவன்


22.  என்னது அந்தப்பொண்ணு சிலாய்க்கு மலாய்க்காவா? ( டிக்கெட்டா?)

 அப்புறம் ஏன் பாவாடை தாவணில வருது?

23.  ஏ டி எம் = ஏ டைம் மேட்டர்


24.   மிஸ் ,3 நைட், 2 பகல்..

 ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட் - 2500 ரூபா ஆகும்..

 ஹலோ, ஹோட்டல்ல தங்க..


 ஓ சாரி.. நான் என் கூட தங்கறதுக்குனு நினைச்சுக்கிட்டேன் ஹி ஹி 


25. ஆளாளுக்கு டேக் ஓவர் பண்ண அது அம்பாசிடர் காரா? அத்தை பொண்ணா?26. அங்கே சப்பி சப்பி சாப்பிடுதே அந்த சப்பிதாதான் உன் பப்பிதாவா?

27. அஸ் பர் ஆலமர பஞ்சாயத்து தீர்ப்பு அவனவன் அத்தை பொண்ணை அவனவனே தான் ஓட்டிட்டு போகனுமாம்

28.  ஏன்? ஹிந்தி ஃபிகரை லவ் பண்ணக்கூடாதா? ஹிந்திப்படத்தை டப் பண்ணா பார்க்கறீங்க? ஹிர்ந்தி ஆண்டியை ( சேட்டு பொண்ணை ) சைட் அடிக்கறீங்க.. லவ் பண்ணா ஒத்துக்கிட மாட்டீங்களே..

29.  என்ன மேடம் கண்டிஷன்? மேரேஜ்க்கு முன்னே ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடனுமா? ஐ ஆம் ரெடி ஹி ஹி

30.  இப்படிக்கு ரோஸ்..

 அவனா நீ..http://1.bp.blogspot.com/-dKc-xvPTOMM/TzpjfXNdpiI/AAAAAAAABp4/wtkmcnXaHMQ/s640/15177_17_leelai.jpg

31. .  தன் கண்ணுக்கு அழகா தெரியற பெண்ணை பசங்க காதலிக்க நினைப்பாங்க, அல்லது கை வைக்க நினைப்பாங்க . இந்த விஷயத்துல எல்லா பசங்களும் ஒண்ணுதான்
32.  மனசுக்குள்ள என்ன நினைக்கறானோ அதை வெளீல சொல்லாம பசங்களால இருக்கவே முடியாது

33.  நீ என் கிட்டே டீசன்சியா இருக்கே.. நல்ல ரிலேஷன்ஷிப் வெச்சிருக்கே.. ஆனா டிஸ்டென்ஸ் மெயிண்ட்டெயின் பண்றே.. அது ஏன்?

34.  பொண்ணுங்க லவ் பண்றாங்களா? இல்லையா?ங்கற மேட்டர் தெரியற வரை பசங்க ரிஸ்க் எடுக்க மாட்டாங்க 


35.  ஃபிகரு , கம்ப்யூட்டர் 2ம் ஒண்ணுதான்

1. இரண்டுக்கும் விரல் முக்கியம்

2. மடிச்சுதான் லேப்டாப்பை வெளில எடுத்துட்டு போக முடியும், ஃபிகரையும் மடிஞ்ச பின் தான் வெளில கூட்டிட்டு போக முடியும்.. 

3. அடிக்கடி 2ம் ஹேங்க் ஆகிடும்


36. கூகுள்ள என்ன தேடறே?

 எங்கே ஒரு பெக்குக்கு ஒரு ரூபா கம்மின்னு தேடறேன்

37.  சாரி.. நான் அங்கே வந்து தண்ணீ அடிக்க மாட்டேன்.. பேரு கெட்டுடும்.. 

 குடல், கெட்டாச்சு, பாடி கெட்டாச்சு ஈரல் கெட்டாச்சு ஏண்டா நாயே பேரு கெட்டா என்ன? கெடாட்டி என்ன?

38.  பிராப்ளம் இல்லாத லவ்வே இல்லை 

 39.  லவ்ல நாம விட்டுட்டு வர்றதை விட நம்மளை ஒருத்தர் விட்டுட்டு வர்றதுதான் ரொம்ப கொடுமையானது
40.  ரெண்டு பேருக்குள்ள ஒரு பிரச்சனைன்னா அதை 3 வதா ஒரு நபர் பேசித்தீர்ப்பது நல்லது

41. நீ எத்தனையோ  தப்பு பண்றே.. அதை நீ மன்னிச்சுடறே.. ஆனா அவன் ஒரு தப்பு பண்ணுனா  அதை தாங்கிக்க முடியலை, உன்னால மன்னிக்க முடியலை.http://www.virupu.com/Leelai/photos/leelai-movie-first-look-photo-gallery-1.jpg

 இந்தப்படம் பி ,சி செண்ட்டர்களில் சுமாராத்தான் போகும், ஏ செண்டர்களீல் 30 நாட்கள் ஓடும்
 


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் -40

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் -ஓக்கே


சி.பி கமெண்ட் - காதலர்கள், பெண்கள் பார்க்கலாம்

 ஈரோடு தேவி அபிராமியில் படம் பார்த்தேன்

 டிஸ்கி -
hotlinksin.com
சமீபத்தில் துவக்கப்பட்டுள்ளது. துவங்கிய வேகத்திலேயே ஏராளமான வாசகர்களை பெற்றுள்ளது. பதிவர்களே உங்கள் பதிவுகளை இணைத்துவிட்டீர்களா...

உங்கள் பதிவுகளை இங்கேயும் இணைக்கலாமே

மேலும் ஒரு திரட்டி உங்களுக்காக...

Wednesday, February 29, 2012

சந்தானம் காமெடி வசனங்கள் இன் முப்பொழுதும் உன் கற்பனைகள் வசனங்கள்

http://1.bp.blogspot.com/-wCD8F6w1qF4/Th8GGhMmN9I/AAAAAAAAADA/3_bawoGDqGA/s400/santhanam.jpg
1. எதுக்காக  கல்யாண மாப்ளையோட மோதிரத்தை எடுத்து ஒளிச்சு வைச்சே ?

சந்தானம் - அப்படி பண்ணாங்காட்டிதான்  இவ்ளவ் பெரிய இண்ட்ரோ கிடைச்சது எனக்கு.. ஆளாளுக்கு சந்த்ரு எங்கே சந்த்ரு எங்கேன்னு  கேட்டு தேடறாங்களே

-----------------------------------------------


2. லேடி -0 ஏய் என் டிரஸ் நல்லாருக்கா?

நத்திங்க் இண்ட்ரெஸ்ட்..     ஆஃப் இட்

அப்டின்னா?

க்ளோஸ் பண்ணு, எல்லாரும் பார்த்துடப்போறாங்க,எதுக்கு இப்படி லோ க்லட்  ஜாக்கெட் போட்டுட்டு ஆஃபீஸ் வர்றே?

---------------------------------------

3. உனக்கு யாரும் டெவலப் ஆகலையா? ஏன்?

டேக் ஓவர் பிராப்ளம்

வாட்?

பாஸ்வோர்டு... அவ்வ்வ்வ்வ்

--------------------------------------------------

4. லேடி பி - ப்ளீ ஸ் டேக் மீ ராம்..

சாரி. ஒன்லி காஃபி வாண்ட், நோ நான் வெஜ்


----------------------------------------------

5. உன் ஆளு அவ்ளவ் பெரிய ஃபிகரா?

நீ ஒரு பொண்ணுங்கறதை மறந்துட்டு  அவ கூட 10 நிமிஷம் பேசிபாரு யூ ஜஸ்ட்   ஃபால் இன் லவ்  வித் ஹெர்

-----------------------------------------------

6. ஏய், எதுக்கு டர்க்கி டவல் கட்டிட்டு ஷாப்பிங்க் வந்திருக்கே?

அடப்பாவி,இது ஃபேஷன்
ம்க்கும், இப்படியே வந்தா எவனும் வீட்டுக்கே போக மாட்டான், உன் பின்னாலயே வந்துடுவாங்க, முதல்ல நல்ல டிரஸ் போட்டுட்டு வா

-----------------------------------------------

7. சந்தானம் - XQS  மீ   மிஸ்  குட்டைப்பாவாடை,

வாட்?

மீ 25 இயர்ஸ் ஓல்டு  இங்க்லீஷ் நாட் நோன் யூ? ( ME 25 YEARS OLD, ENGLISH NOT KNOWN.. YOU?)

புரியலை

ஆஹா!செம்மொழியாகிய தமிழ்மொழியே....


-------------------------------------------------


8. ஹாய் சந்து..

சந்தானம் -சந்த்ருன்னு எவ்ளவ் அழகா பேரு இருக்கு, அதை இன்னும் சுருக்கி ஏன் சந்து ஆக்கறே?

-----------------------------------------


9. சந்தானம் - ஹாய் வாட் நேம் யா?

க்ளிங்
என்னமோ சைக்கிள் பெல் மாதிரி இருக்கு

------------------------------------

10.  ராம் பற்றி டீட்டெயில் எல்லாம் இப்போ எனக்கு வேணும்

சந்தானம் -ஜீவா நடிச்ச படம் தானே, அமீர் டைரக்ஷன்.. சரண்யா அம்மா

 
 யோவ்!!

-------------------------------------------------------- 
http://www.koodal.com/cinema/koodal_reel/2011/Santhanam.jpg

11,. சந்தானம் - இந்த பொண்ணுங்க எல்லாம் அம்மன் கோயில்ல பிச்சை எடுத்தவங்க மாதிரியே இருக்காளுங்களே ஏன்?

--------------------------------------

12. சந்தானம் -டேய், நாயே யாரோ உன் பாக்கெட்ல சாப்பிட்டு துப்பி இருக்காங்க பாரு

ஹி ஹி அது நான் சாப்பிட்டு சிந்துனது

சந்தானம்  - மிச்சம் மீதி கொஞ்சம் கூட வெச்சிடக்கூடாதே

-----------------------------------------------
13. சந்தானம் -தண்ணி லாரி வந்ததும் பொம்பளைங்க எல்லாம் ஓடற மாதிரி அவன் ஆஃபீஸ் வந்ததும் ஏன் தான் இப்படி மொய்க்கறாங்களோ?

--------------------------------------

 14. சந்தானம் -அடேய், நீ என்ன பார்ட் டைம் ஜாப்பா பொண்ணுங்களுக்கு பாவாடை தெச்சுத்தர்றியா ? இப்படி   வந்து விழறாஙக?


--------------------------------------------

15.சந்தானம் - டைவர்ஸ் பண்ணிட்டான்னு கேள்விப்பட்டேன்

 அது சும்மா வாஷ் ( EYE WASH)
------------------------------------------

16. சந்தானம் -பொண்ணுங்களே பொண்ணுங்களுக்கு ஆப்பு வெச்சுக்குதுங்க, அப்புறம் பசங்களை குத்தம் சொல்லிட்டு..

----------------------------------

17. அடடா.. மிக்சர் தீர்ந்துடுச்சு..

சந்தானம் -டேய் நாயே அதுக்கு ஏன் கொக்கு  மாதிரி குளத்தை பார்த்துட்டு நிக்கறே? குதி..


---------------------------------------

18. சாதாரணமா இவனை அடிக்கக்கூடாது, ரசிச்சு, ருசிச்சு, அனுபவிச்சு  அடிக்கனும்

சந்தானம் -டேய், நான் என்ன ஃபாரின் சரக்காடா?

----------------------------------

19.. லேடி - ஆக்சுவலி....

சந்தானம் -உனக்கு இங்கிலீஷ்  கூட தெரியுமா?

----------------------------

20.. சந்தானம் -டேய், நீங்களே இத்துப்போனவங்க, உங்களைப்பார்த்தே ஒருத்தன் பயந்து ஓடறான்னா அவன் எவ்ளவ் பெரிய டம்மி பீஸா இருக்கனும்?


-----------------------------------------

http://www.koodal.com/cinema/gallery/events/2010/229/aattanayagan-movie-press-meet-stills_8_011902123.jpg

21. முத முத உன்னை பார்த்தப்ப எனக்கு உன் வியர்வை வாசம் மனப்பாடம் ஆகிடுச்சு,., லைக் இட்..


--------------------------------------------------

22.. லைக் சூப்பர் ஸ்டார்.. யூ?

எனக்கு டி ஆர் தாங்க ஆல் டைம் ஃபேவரைட்.. அவரோட டேலண்ட், செல்ஃப் கான்ஃபிடண்ட் யாருக்கும் வராது


------------------------------------

23. டைரக்டாவோ,இண்டைரக்டாவோ அவ என் கிட்டே பேசறதை நான் விரும்பலை, நான் லவ் பண்றது அவளை இல்லையே..

-------------------------------------------

24.மண்ணையும்,மனுஷனையும் மாசுபடுத்துனவனை க்ளீன் பண்ண வைக்கனும் அவனை விட்டே..

-------------------------------------------
25. சந்தானம் - டேய்  டாக்டருங்களா.. என்னை அடிச்சதே 5 பேருதான் , எதுக்குடா  ட்ரீட்மெண்ட்க்கு 15 பேரு?

--------------------------------------

26. சில பேரு பைத்தியமா காதலிப்பாங்க, ராம் உன்னை பைத்தியமா மாறியே காதலிக்கறான்

------------------------------------------

27. சந்தானம் -நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களாகிய டி வாழ் மக்களே!!

------------------------------------

28. என் மீதும் பூக்கள் விழுந்தன, அவள் மீதும் பூக்கள் விழுந்தன

சந்தானம் - ஏன்? 2 பேரும் சாவு ஊர்வலத்துக்கு போனீங்களா?

--------------------------------------------

29. சந்தானம் - காதலுக்கு கண் இல்லையா? அவ என்னைக்கண்டுக்காம போறாளே?

இல்லை, நீ என் ஆஃபீசே இல்லை

----------------------------------------

30.  அவருக்கு வந்திருக்கற வியாதிக்குப்பேரு மோட்டிவேஷன் டெலீசியஸ் டிசீசஸ்,அதாவது இல்லாத ஒண்ணை இருக்கறதா நினைச்சுக்கற நோய்..

--------------------------------------

http://www.tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Celebreties-Gallery/Santhanam/Santhanam-0011.jpg

31.  டாடி, என்ன சொல்றீங்க? 2 பேரையும் மேரேஜ் பண்ணிக்கறதா?

ஆமாம்மா, இப்போ எல்லாம் 2 பேர் கூட குடும்பம் நடத்தறது சர்வ சாதாரணமா போச்சு.. டி வி சீரியல் எல்லாம் நீ பார்க்கறதே இல்லையா?

--------------------------------------

32.  டாக்டர்.. பயமா இருக்கு.. அவன் என்னை ஏதும் செஞ்சுடுவானா?

 டோண்ட் ஒர்ரி, தாயின் கருப்பைல இருப்பது போல் சேஃப்.. அவன் கூட நீ இருக்கறது

-------------------------------------

33. அதுக்கில்ல டாக்டர்..  அவன் என் மேல அளவுக்கதிகமா ஆசை, அன்பு , அட்டாச்மெண்ட் வெச்சிருக்கான், டோனி சிக்சர் அடிச்சா என்னை வந்து கட்டிப்பிடிக்கறான்

-------------------------------------------
34.   ஏய்.. ஹேட் யூ

குட்.. லவ்வரா இருந்த நீ இப்போதான் கொஞ்ச கொஞ்சமா ஒயிஃபா மாறிட்டு வர்றே..

-------------------------------

35. பிரியமா இருக்கறவங்க கிட்டே பிரியமா இருக்கற மாதிரி நடிக்கறது ரொம்ப கஷ்டம், என்னால முடியாது

-------------------------------------

36. இப்போ இருக்கற பொண்ணுங்களுக்கு தாலி எல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. ஜஸ்ட் இக்னோர் இட்.. பசங்க வாட் டூ?

----------------------------------

37. சந்தானம் -இந்தக்காலத்துல சின்சியர்  லவ்ங்க்றதை பார்க்கவே முடியறதில்லை.. அழகான பொண்ணு கிடைக்காறாங்களா.. பழகறாங்க, மேட்டரை முடிச்சுட்டு போய்ட்டே இருக்காங்க..

-----------------------------------------

38.   சந்தானம் -டேய்.. நீ  தான் டாக்டரா? நீ மட்டும் தாடியை ஷேவ் பண்ணிட்டா பிட்டுப்பட ஹீரோ மாதிரி இருப்பே..

-------------------------------------------

39. உலகத்துல 2 விஷயம் தான் எப்பவும் அழகு .. தோன்றும்போதும், மறையும்போதும்..  அது - 1. சூரியன் 2 நிலா

-----------------------------------------

40.  UNCONSIOUSLY I FALL IN LOVE WITH HIM

---------------------------------------

 http://www.tamilstar.com/english/cinema-images/news-images/santhanam-makes-advances-towards-samantha-in-reel-but-not-in-real-20-02-12.jpg

41. எங்க பாஸை பற்றி சாதாரணமா நினைச்சுடாதே.

சந்தானம் -டேய், நாயே நான் சாதாரணமாவும் நனைக்கலை, சர்ஃப் எக்செல் போட்டும் நனைக்கலை..

--------------------------------------

42. உன் எண்ணம் அவளை கடத்துவதா? காசை   கறப்பதா?

---------------------------------

43. மரணம் என்னை துரத்துது. என்னால எவ்ளவ் தூரம் ஓட முடியும்னு தெரில..

---------------------------------
Friday, December 09, 2011

டப்பா படமான ஒஸ்தியில் சந்தானம் பேசும் டாப்பான காமெடி வசனங்கள்

https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/s720x720/378998_2039552367172_1795183150_1330224_631698088_n.jpg

1. வில்லன் - நீ ரொம்ப நேர்மையா இருக்கே.. ஆனா நான் இருக்கற இடத்துல நீ இருக்கக்கூடாது

சி.பி - அதெல்லாம் சரி.. படம் பூரா நீ ஏன் ஆமையா இருக்கே?

2. ஹீரோ - நீ சிந்திச்சு செயல்படுவே.. நான் சிந்திக்கறதுக்கு முன்னாடியே செயல்படுவேன்.. 

சி.பி - லூசண்ணே லூசண்ணே.. பஞ்ச் டயலாக் பேசறப்ப பார்த்து பேசுங்கண்ணே,மூளை சிந்திக்கும், அப்புறம் தான் உடல் செயல்படும்ணே..

3. ஹீரோ- இதுவரை நீ பார்த்தது குஸ்தி ஃபைட், இனி பார்க்கப்போறது ஒஸ்தி ஃபைட்

சி.பி - பிரமாதம்ணே, இது வரை ஓப்பனிங்க் ஃபைட்ல யாரும் 84 பேரை அடிச்சதே இல்ல , நாஸ்தி பண்ணிட்டீங்க ஹி ஹி

4. சந்தானம் - வந்ததே லேட், இதுல ஸ்லோ மோஷன் வேற.. சீக்கிரம் வாடா நாயே

5.சந்தானம் - என்னாடா ஜீப் இது? 4 கிமீ போறதுக்குள்ள 4 டயரையும் மாத்தனும் போல..?

6. சந்தானம் - இந்தாளை எல்லாம் தோள்ல ஷூட் பண்ணி இருக்கக்கூடாது.. கொஞ்சம் கீழே இறக்கி...

 அவ்வ்வ்வ்வ்வ்

 கால்ல ஷூட் பண்ணி இருக்கனும்னு சொல்ல வந்தேன் , ஏன் பதர்றே?

 7. என் வலது கைல சுட்டுட்டாங்க.. திங்கற கைலயே கழுவறேன்.. கழுவற கைலயே சாப்பிடறேன்

 சந்தானம் - டேய் நாயே , ரெண்டும் ஒண்ணுதான்.. நீ வேணா ஒண்ணு செய். ஒரு தடவை கழுவாம சாப்பிட்டு பாரேன்.. 


8.  சந்தானம் - என்னது?உனக்கு ஒரு தங்கை வேற இருக்கா? நீ பிறந்தப்பவே உங்கப்பன் உன் மூஞ்சியை பார்த்து வாழ்க்கையை வெறுத்திருப்பானே?


9. சந்தானம் - பரபரப்பா வந்தோம், ஒரு பயலுகளையும் காணோம், இப்போ என்ன பண்றது?

**************

சரி மறுபடி பரபரப்பா உள்ளே போயிடுவோம் ஹி ஹி10. சந்தானம் - யார் இவங்க?

வேலன் வீட்டை கேட்டு வந்திருக்காங்க..

சந்தானம் -அவன் வீட்டை விக்கறதா சொல்லவே இல்லையே?

டேய்.. அட்ரஸ் கேட்டு வந்திருக்காங்க..


http://4.bp.blogspot.com/-eE_qK6XiKeM/Tp3EmrhKO4I/AAAAAAAADoE/J9bHeL4DvTQ/s1600/osthi_tamil_movie_stills_1810110407_0083.jpg

11.  ஹீரோயின் - மாட்டுச்சா?

ஹீரோ - உடனே மாட்ட அதென்னா ஜாக்கெட் ஹூக்கா? 

( அண்ணே வணக்கம்னே.. டைமிங்க் ஜோக் அடிக்கறீங்களாக்கும் நடத்துங்க)

12. ஹீரோ - உன்னை மாதிரி பப்பாளி சாரி பப்ளிக்கிற்கு ஒரு ஆபத்துன்னா உடனே ஒடி வந்துடும் காவல் துறை

சி.பி - ரொம்ப கேவலமா இருக்குண்ணே காவல் துறை


13. ஹீரோ - அப்பா?


ஹீரோயின் - தூங்கறார்

விழிச்சிருக்கறப்ப எப்பவாவது மாப்ளை பார்த்திருக்காரா?

நோ

அப்பாடா..


14. சந்தானம் - ஆக்ரோஷமா பேச வேண்டிய டயலாக்ஸை நீ ஏன் ஆட்டுக்குட்டியை தடவிக்குடுக்கற மாதிரி பேசறே?

15.  சிவாஜி த பாஸ் மாதிரி ஒஸ்தி த மாஸ் 


16. சந்தானம் - சார்.. டுடே பேட்டா?

தூ

தாங்க்ஸ்

17. சந்தானம் - நசுங்கிப்போன உன் வாயை வெச்சுக்கிட்டு நா. முத்துக்குமார் லைன்ஸ் ல ரைம் கேக்குதா?

18. அவ நோ தேவதை போதை போதை.. 

19. சந்தானம் - யார்றா அவன் பாறாங்கல்லுக்கு பனியன் போட்ட மாதிரி?

20.சந்தானம் - கோவைப்பழம் மாதிரி ஹீரோயின், கொளுத்திப்போட்ட கொட்டாங்குச்சி மாதிரி ஹீரோ , எப்படிடா மேட்ச் ஆகுது?

சி.பி - உண்மைலயே சந்தானத்துக்கு செம தில் தான் , சிம்புக்கு முன்னாலயே இப்படி டயலாக் பேசுனது கவுண்டமனிக்கு அப்புறம் இவர்தான், சபாஷ்


http://localmovies.in/wp-content/gallery/mirapakaya-04112010/deeksha-seth-and-richa-gangopadhyay-hot-stills-from-mirapakaya-002.jpg

21.  போதைல கிடக்குற பொண்ணுக்கு போதையை ஊட்டுறாங்கப்பா

22. சந்தானம் - கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.. 

சி.பி - இது செம ஹிட் ஆகிடுச்சு படத்துல

23. சந்தானம் - கலெக்டர்னா தளபதி பட அர்விந்த்சாமி மாதிரி இருப்பார்னு பார்த்தா  அரணாக்கயிறு விக்கறவன் மாதிரி இருக்கானே?

24. சந்தானம் -கவர்மெண்ட் காசை கைல வெச்சிருக்கறதும், ஜட்டி போடாம லுங்கி கட்டி இருக்கறப்ப அதுக்குள்ள பீர் பாட்டிலை ஒளிச்சு வைக்கறதும் ஒண்ணுதான், ரொம்ப சிரமம்

25.  என்னைப்பார்த்தா வழிப்பறி மாதிரி இருக்கா?

சந்தானம் - பின்னே? பிளாக் பெர்ரி மாதிரி இருக்கா?உன்  மேல எந்த கேஸ் போட்டாலும் 10 பொருத்தமும் ஒத்துப்போற மாதிரி மேட்சிங்கா இருக்குய்யா.. 

26. சந்தானம் - இந்தப்பொண்ணுங்களுக்கு காபி போடத்தெரியுதோ இல்லையோ நல்லா கண்ணீர் விடத்தெரியுது

27..சிரி சிரி சிரி

சந்தானம் -பெட்ரோல் ஊத்தி எரி எரி

28. செண்பகமே, செண்பகமெ.. தென் பொதிகை சந்தானமே

சந்தானம்- என்னை கலாய்ச்சுட்டாராம்...  ( செம கிளாப்ஸ் தியேட்டர்ல )

29.  ஹீரோ - ஐ , அவ சிரிச்சுட்டா

சந்தானம் - அய்யய்யோ , பாட்ட போட்டுட்டான் ( டூயட் சீன்க்கு வெளீல போறவங்க கூட இதை ரசிச்சாங்க)

30. ஹீரோ - உங்கப்பா சாகற வரை நீ மேரேஜ் பண்ணிக்க மாட்டே..?

ஹீரோயின் - ம்ஹூம், அவர் உயிரோட இருக்கறவரை மேரேஜ் பண்ணிக்க மாட்டேன்

 ஓக்கே, ஐ லைக் யூ, ஆனா அந்த பன்னாடையை மன்னிக்கவே மாட்டேன்

http://www.teluguone.com/tmdbuserfiles/richa-hot-6.jpg

31. அந்த கண்றாவியை  குடிக்காதே 

சந்தானம் - அப்படி எல்லாம் சொல்லாதீங்க.. தமிழ்நாடே கொந்தளிக்கும்

32.  சந்தானம் - போலீஸ்னா துருவி துருவி கேள்வி கேக்கனும், நீ ஏன் இப்படி உருவி உருவி பம்மறே அந்த ஃபிகர்ட்டே?

33,.  ஹீரோ - நான் கண்ணாடி மாதிரி, நீ எதை காட்டறியோ அதை நானும் திருப்பி காட்டுவேன். நீ அடிச்சா நானும் அடிப்பேன் நீ மிதிச்சா நான் உன்னை நசுக்கிடுவேன்

34. ஹீரோ - இந்த நெல்லை ஜில்லாவுல 1,43,479 கொசு இருக்கு, எல்லாத்தையும் நான் ஒருத்தனே எப்படி அடிக்க?

35.  எதுக்குய்யா என்னை அறைஞ்சே?

கொசு

36. ஹீரோ - உன்னை மாதிரி விளங்காதவனுக்கே பொண்ணு குடுக்கறப்ப எனக்கு தர மாட்டாங்களா?


சி.பி - இந்த டயலாக் படத்துல எதுக்கு? எனக்கு விளங்கல , தனுஷ்க்கு எதிர் பஞ்ச்சா?

37. ஹீரோ - குடியைத்தானே விடச்சொன்னேன்.. இப்படி உயிரை விட்டுட்டியே ஏன்?

சி.பி - யோவ், இப்படி படம் பூரா பஞ்ச் டயலாக் பேசி உயிரை எடுத்தா?

38.  தம்பி.. இது யாரு? செட்டப் சூபரா இருக்கு..?

எல்லாம் உங்க புண்ணியம் தான்..

ஆனா நீ செஞ்சது எல்லாம் பாவம் ஆச்சே?

39. கல்யாண மண்டபத்தில் யாகம் வளர்த்தும் புரோகிதரிடம்

சாமி.. ஏன் ஊட்டில குளிர் காய ற மாதிரி சுவா சுவா  சொல்றீங்க?


40. சந்தானம் - இது என்ன மேரேஜ் ஹாலா? எக்ஸாம் ஹாலா?

ஏன் சாமி பயப்படுது?
 http://3.bp.blogspot.com/-rqHgxEHIFjw/TaLVZZdlDwI/AAAAAAAAONM/Bn_W3OTtenY/a6318dac5eb8404198179d36b7f857f8.jpg41. சந்தானம்- யார்றா நீ? கோவா  படத்துல வர்ற பிரேம்ஜி மாதிரியே இருக்கே?

42-சந்தானம்  - டேய், நாயே, டிஃப்ரண்ட் டிஃப்ரண்ட் மியூசிக்ல கலக்கற ஏ ஆர் ரஹ்மானே கம்பொஸ் பண்ணீ முடிச்ச பிறகுதான் பேமண்ட் வாங்கிக்கறார்.. எப்பவும் ஒரே மியூசிக் போடற நீ அட்வான்ஸ் பேமண்ட் கேட்டா எப்படி?

43. சார்.. சார்.. என்னை விட்டுடுங்க, மேரேஜ் ஆகி ஒரு மாசம் தான் ஆச்சு..

44. ஹீரோ- என் வீட்டுலயே நான் தான் பெரியவன்.. எனக்கு நானே ஆசீர்வாதம்  பண்ணீக்கறேன்

45.  ஹீரோ- நீங்க கம்முனு இருங்க.. 20 வருஷமா இங்கே நீயா? நானா? போட்டி நடக்குது

சி.பி - இதுவும் தனுஷ்க்கு ஹி ஹி

46.  நான் வேலண்டா. ஒஸ்தி வேலன்

சி.பி - அண்ணே, வேலன் உங்க கேரக்டர் பேரு.. ஒஸ்திங்கறது நீங்க பிட் அடிச்சு வாங்குன பட்டமாண்ணே?

47. சந்தானம் - சரக்கு வேணும்னு கேட்டா சரஸ்வதி படத்துல வர்ற சாமி மாதிரி டபக்னு மறைஞ்சிடறாங்களே?

48. சந்தானம் - அடச்செ.. கைக்கு எட்டுனது லிவர்க்கு எட்டலை

49.  ஒவ்வொரு மனிஷனுக்கும் உரிமையா சண்டை போட ஒரு ஆள் வேணும்..

50.  பாசத்தை காட்டாம நீ இருக்கறது வேதனைன்னா அதை இப்போக்கூட சொல்லாம் இருக்கறது இன்னும் அதிக வேதனை

http://4.bp.blogspot.com/__dEUFNjN0FQ/THu5_kWMiGI/AAAAAAAAAdc/DFih6puR7pw/s400/s5.jpg

டிஸ்கி -

ஒஸ்தி - நாஸ்தி - காமெடி கும்மி கலாட்டா விமர்சனம்

 

Beauty and the Beast - ஹாலிவுட் பட விமர்சனம்