Showing posts with label பிரசாந்த். Show all posts
Showing posts with label பிரசாந்த். Show all posts

Friday, November 06, 2015

என்னுடைய மனைவியாகப் போற கெளதமி/அஜித் ரசிகை/-விஜய்ரசிகர்/இணைய விமர்சகர் பிரசாந்த் பேட்டி

படம்: எல். சீனிவாசன்
படம்: எல். சீனிவாசன்
“என்ன பிரதர்... உங்க தியேட்டர்ல எந்தப் படத்தையும் ஓட்ட முடியாது போலயே" என்று சும்மானாச்சுக்கும் சொன்னால் "அய்ய்யோ... ஜி. அப்படியெல்லாம் எதுவும் இல்லை. ஏதோ நல்ல சினிமாக்களை சாதாரண ரசிகனிடம் கொண்டுசெல்லும் ஒரு சாதாரண விமர்சகன் நான்!" என்று பதறி கைகுலுக்குகிறார் பிரசாந்த்.
இன்றைய தேதியில், நெட்டிசன்கள் மத்தியில் 'மோஸ்ட் வான்டட்' சினிமா விமர்சகர். யூடியூப்பில் இவரின் விமர்சனங்களைப் பார்த்துவிட்டுத்தான் இளைஞர்கள் பலர் சினிமாவுக்கு டிக்கெட்டைக் ‘க்ளிக்'குகிறார்கள் என்றால் அதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் இவர் விமர்சனங்களின் வீரியத்தை!
"யூடியூப்ல‌ இருந்து முதல்ல கிடைச்ச‌ வருமானம் சினிமா டிக்கெட் எடுப்பதற்கே பத்தாது. இன்னைக்கு டிக்கெட் எடுத்தது எல்லாம் போக, என்னுடைய தினசரி செலவுகளைக் கவனிச்சுக்குற அளவுக்கு வருமானம் வருது.
2010-ல் ‘ஈரம்' படத்துக்கு விமர்சனம் பண்ணினேன். அந்த விமர்சனத்தை நானே பார்க்குறதுக்குக் கேவலமா இருந்துச்சு. அதனால‌ உடனே அழிச்சுட்டேன். அப்புறம் கொஞ்ச காலம் விட்டு, முறையா விமர்சனம் பண்ண ஆரம்பிச்ச படம் ‘ஆயிரத்தில் ஒருவன்'.
ரெண்டு தடவை அந்தப் படத்தைப் பார்த்துட்டு, வெப் கேமிரா, ஹெட் போன் மட்டும் வைச்சிக்கிட்டுப் பேசினேன். அப்போது விமர்சனமாக இல்லாமல் படத்தைப் பற்றிப் பேசுவோம்னு பேசியதுதான். 4000 பேர் பார்த்திருந்தாங்க. அப்போ எல்லாம் 100 பேர் பார்த்தாலே பெரிய விஷயம்.
படங்கள் மட்டும்தான் வெள்ளிக்கிழமை வெளியாகணும்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன. நான் வெள்ளிக்கிழமைதோறும் விமர்சனம் பண்ணலாம்னு முடிவெடுத்தேன்.
முதல்ல 3 வருஷங்களுக்கு எனக்கு எந்த ஒரு வருமானமும் கிடையாது. வீடியோ விமர்சனத்துக்கு வரும் வரவேற்பைப் பார்த்து ஒரு போதை மாதிரி ஆகிடுச்சு. இனிமேல் விடக் கூடாதுன்னு முடிவு பண்ணி, தொடர்ச்சியா விமர்சனம் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.
ஒரு படத்தை விமர்சிக்கிற அளவுக்கு உன்கிட்ட என்ன தகுதி இருக்குன்னு நீங்க கேட்கலாம். நானும் ஒரு ரசிகன்தானே! அது போதாதா? ஒரு சாதாரண ரசிகனா நானும் பல‌ விமர்சனங்களைப் படிச்சிருக்கேன். சினிமாவுக்கும் ஒரு ரசிகனுக்கும் பாலமாக இருக்கணும்னு விரும்புறேன். பேச்சு வழக்குத் தமிழ்ல‌ பேசி ஒரு படத்தைப் பற்றி மக்களுக்குப் புரிய வைக்கணும்கிறதுதான் என் எண்ணம். திரைப்பட விமர்சனம் பத்தி எனக்கு நானே வகுத்து வெச்சிருக்கிற ஒரே ஒரு விதி இது மட்டும்தான்!
யூடியூப்பில் வரும் ரசிகர்களின் கருத்துகள் மூலமாவே, நான் என்னுடைய விமர்சனம் செய்யும் திறனை மெருகேத்திக்கிறேன். அவர்கள் சொன்னதை எல்லாம் எடுத்துக்கொண்டு, அதற்குள் என்னுடைய பாணியையும் கொண்டு வந்து ஒரு வடிவத்துக்குக் கொண்டு வந்திருக்கேன்.
விமர்சனம் பண்ண ஆரம்பிச்ச காலத்துல‌, ட்விட்டர்ல‌ அந்தப் படம் சம்பந்தப்பட்டவங்களுக்கு ‘ப்ளீஸ் வாட்ச் மை ரெவ்யூ'ன்னு போஸ்ட் பண்ணுவேன். அப்படித்தான் செல்வராகவன் சாருக்கும் போஸ்ட் பண்ணினேன். "கீப் அப் யுவர் குட் வொர்க்"ன்னு ரிப்ளை பண்ணார். நம்முடைய விமர்சனத்துக்கு திரையுலகில் ஜெயித்த ஒருவர் ஊக்குவிக்கிறார்னு சந்தோஷப்பட்டேன். அதுக்குப் பிறகு நிறைய பேர் பாராட்டிட்டாங்க.
இதுவரைக்கும் பிரபலங்கள் என்னைப் பாராட்டத்தான் போன் பண்ணியிருக்காங்க. யாருமே திட்டுறதுக்கு போன் பண்ணலை. எனக்குப் பிரபலங்கள் தரும் கருத்துகளை விட, என்னை ஃபாலோ பண்றவங்க‌ தரும் கருத்துகள்தான் மிகவும் உதவியா இருக்கு.
ஆனா இப்பல்லாம் என்னை யாராவது பாராட்டுனா எனக்கு கொஞ்சம் கேராத்தான் இருக்கு. ஆரம்பத்துல விமர்சனம் பண்றதுங்கறது ஒரு ஜாலி. இன்னைக்கு ஏதோ பொறுப்பு வந்தது மாதிரி ஒரு ஃபீல்!
பெரிய பட்ஜெட் படங்களைக் கொஞ்சம் தைரியாமா இறங்கி அடிக்கலாம். என்னுடைய விமர்சனத்தால அந்தப் படங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வந்துடப் போறதில்லை.
என்னுடைய விமர்சனங்களை வைச்சுத்தான் படங்கள் ஓடுதுங்கிற‌ மனநிலை எப்ப எனக்கு வருதோ, அன்னைக்கு நான் காணாமல் போய்டுவேன். சின்ன படத்தைப் பாராட்டுறதுக்கும், பெரிய படங்கள்ல‌ இருக்கும் குறையைச் சொல்றதுக்கும் இங்கு ஆளில்லைங்கிறது தான் உண்மை.
எனக்கு ஒரு படத்தைப் பத்திப் பேச எந்த அளவுக்கு உரிமை இருக்கோ, அதே போல மத்தவங்களுக்கும் என் விமர்சனத்தைப் பதில் விமர்சனம் பண்ண‌ உரிமை இருக்குங்கிறதை நான் எப்பவும் உணர்ந்தே இருக்கேன்.
‘இவ்வளவு படங்களுக்கு விமர்சனம் பண்ணிட்டீங்க. நீங்களே ஏன் ஒரு படம் பண்ணக் கூடாது'ன்னு பலரும் கேட்கிறாங்க.
சும்மா ஒரு படம் பண்ணலாம்னா அதை என்னோட‌ பணத்துலதான் பண்ணுவேன். ஒரு குறும்படம் எடுத்து, அது எனக்கே பிடிச்சிருந்தா மட்டும்தான் சினிமாவுல கால வைப்பேன்.
மல்லுவுட்ல‌ ஏன் இந்த அளவுக்கு நல்ல படங்கள் வருதுன்னா அங்க அவங்க தங்களோட‌ வாழ்க்கையில‌ இருந்து கதையை எடுக்கிறாங்க‌. ‘ப்ரேமம்' ஒரு சின்ன கதையை வைச்சுக்கிட்டு எவ்வளவு அழகா திரைக்கதை பண்ணியிருந்தாங்க. கடந்த 3 வருஷத்துல‌ மலையாளப் படங்களோட‌ வெற்றியைக் கணக்கிட்டா, தமிழ்ப் படங்களைவிட அதிகம். ஆனா அவங்க‌ வியாபாரம் நம்மை விட சின்ன‌து. நம்ம‌ தமிழ்ப் படம் இங்கு 150 நாள் ஓடுறதில்லை. ஆனா, ‘ப்ரேமம்' படம் சப்-டைட்டில் போட்டு 150 நாள் ஓடுது.
அப்படின்னா என்ன பிரச்சினை இங்க? நாம‌ வியாபாரத்துல‌ மட்டுமே கவனம் செலுத்தி, சினிமாவை மறந்துட்டோம். நான் படம் பண்ணினா நிச்சயமா ‘வெற்றிநடை போடுகிறது'னுல்லாம் போலியா விளம்பரம் செய்ய மாட்டேன்.
நான் நல்ல சினிமாவின் ரசிகன். எந்த நடிகருக்கும் அல்ல! ஆனா, என் பேர்ல நிறைய மீம்ஸ், போலியான செய்திகள் எல்லாம் வருது. ஆரம்பத்துல நான் இதுக்கெல்லாம் கவலைப்பட்டேன். அப்புறம் போகப் போகத்தான் புரிஞ்சுது. ‘மாப்ள.. நாமளும் பிரபலம் ஆகிட்டோம்ல!ன்னு மனச தேத்திக்கிட்டேன்" என்று சொல்லி நிறுத்தினார் பிரசாந்த்.
அதற்குப் பிறகு அவர் வைத்ததுதான் ட்விஸ்ட்.
"என்னுடைய மனைவியாகப் போற கெளதமி முதன்முதலில் பார்த்ததே என்னுடைய ‘என்னை அறிந்தால்' விமர்சனம்தான். அவங்க அஜித் ரசிகை. நான் அந்தப் படத்தின் விமர்சனத்தில் படம் சரியில்லைன்னு சொல்லியிருந்தேன். உடனே ‘என்னை வேண்டாம்'னு சொல்லிட்டாங்க‌. அப்புறம் 2 நாள் கழிச்சு, என்னோட விமர்சனத்தை தீர ஆராய்ஞ்சு, எனக்கு ஓ.கே. சொல்லிட்டாங்க.
நான் இப்போ எப்படி இருக்கிறனோ அப்படியே ஏத்துக்குற பொண்ணா இருந்தா கல்யாணம் பண்ணிக்கிடலாம்னு இருந்தேன். ஏன்னா... நம்ம வாழ்க்கையும் குறைகளோடும் நிறைகளோடும் நகர்ற ஒரு சினிமாதானே!"
வெல்டன் மா..!


-தஇந்து

Tuesday, February 17, 2015

ட்விட்டரில் வியப்பு:சாதனை!! இந்திய அளவில் #தமிழ்வாழ்க முதலிடம்

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் தமிழிலேயே ஒரு ஹேஷ்டேக், இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் (போக்கு) முதல் முறையாக முன்னிலை வகித்துள்ளது.
பொதுவாக, அதிகம் பேசப்படும், விவாதிக்கப்படும் கருப்பொருளையொட்டிய சொற்களால் உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக்குகள் (#) ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவிலோ, உலக அளவிலோ முதல் 10 இடங்களை வகிப்பது வழக்கம்.
அதாவது, ஒரு குறிப்பிட்டை ஹேஷ்டேக் சொற்கள் தொடர்பாக நொடிக்கு 20-க்கும் மேற்பட்ட குறும்பதிவுகள் இடப்படும்போது, அந்தச் சொற்கள் ட்ரெண்டிங்கில் வலம் வரும்.
கடந்த சில ஆண்டுகளாக, ட்விட்டர் ஹேஷ்டேக்குகள் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அவை அனைத்துமே ஆங்கில மொழியில்தான் அரங்கேற்றப்படும். ஆனால், சில தினங்களாக இந்திய மொழிகளுக்கும் ட்ரெண்டிங்கில் முக்கியத்துவம் தரத் தொடங்கியிருக்கிறது ட்விட்டர்.
அந்த வகையில், முதலில் இந்தி மொழி சொல் ட்ரெண்டிங்கில் வலம் வந்தன. அதைக் கண்ட தமிழ் இணையவாசிகள், தமிழில் உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக் ஒன்றை ட்ரெண்டிங்கில் வரச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அதை ட்விட்டரும் ஏற்றுக்கொண்டு தமிழில் 'போக்கு' காண்பிக்க ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில், முதலில் உருவாக்கப்பட்ட தமிழ் ஹேஷ்டேக் சொல் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது #தமிழ்வாழ்க எனும் ஹேஷ்டேக்.
இந்த ஹேஷ்டேக்கை பிரபலப்படுத்துவதில் காரணமானவர்களில் ஒருவர், தமிழ் இணையப் பிரபலம் பிரசாந்த். இவர், சினிமா விமர்சனங்களை வீடியோ வடிவில் யூடியூபில் பதிவேற்றம் செய்து இணையத்தில் பிரபலமானவர்.
#தமிழ்வாழ்க ஹேஷ்டேக்கை பிரபலப்படுத்தியது பற்றி அவரிடம் கேட்டபோது, "இந்திய மொழிகளில் உருவாக்கப்படும் ஹேஷ்டேக் சொற்களுக்கு ட்விட்டர் முக்கியத்துவம் கொடுப்பதை அறிந்தேன். அந்த வகையில் முதலில் ட்ரெண்டிங்கில் இடம்பெறும் தமிழ் ஹேஷ்டேக், ஒரு நேர்மறை சிந்தனை கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதினேன்.
எனவே, #தமிழ்வாழ்க என்ற சொல்லைப் பிரபலப்படுத்தும் முயற்சியில் இறங்கினேன். இந்தச் சொல் ஏற்கெனவே ட்விட்டரில் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டதுதான். அதைப் பிரபலப்படுத்தும் வகையில் மட்டும் என்னைப் போன்ற ஆர்வலர்கள் இன்று ஈடுபட்டனர். அதற்குப் பலன் கிடைத்திருக்கிறது. இது உண்மையிலேயே நெகிழவைக்கும் தருணம்" என்றார் பிரசாந்த்.
இதனிடையே, திமுக தலைவர் கருணாநிதி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "உயிரையே குடிக்க வந்த எதிரியே ஆயினும் உரிய மரியாதை அளிப்பதுதான் இந்த (தமிழ்) மண்ணுக்கே சொந்தமான பண்பாடு. #தமிழ்வாழ்க" என்று குறும்பதிவிட்டு, தமிழ் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தார்.
இந்திய நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணியளவில் #தமிழ்வாழ்க என்ற சொல், ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது கவனிக்கத்தக்கது.


நன்றி - த இந்து

Saturday, April 09, 2011

கலைஞரின் பொன்னர் சங்கர் - பிரம்மாண்டத்தின் உச்சம்..ஆனா.... - சினிமா விமர்சனம்

http://mimg.sulekha.com/tamil/ponnar-shankar/stills/ponnar-shankar-02.jpg

சரித்திரப்படத்துக்கு இந்தக்கால ரசிகர்களிடையே வரவேற்பு இருக்குமா? என்பது ஊர்ஜிதம் செய்யப்படாமல் இருந்தாலும் அது போல ஒரு கதையை படமாக்கத்துணிந்த இயக்குநர் கம் புரொடியூசர் தியாகராஜனுக்கு ஒரு பூச்செண்டு...

படத்தோட கதை என்ன? என்பதை நான் திரையில் கண்ட அளவு சொல்றேன்... குங்குமம் வார இதழ்ல தொடர் கதையை படிச்சவங்க,பொன்னர் சங்கர்-ன் உண்மைக்கதையை ஏற்கனவே அறிஞ்சவங்க என்னை திட்டக்கூடாது... ஏன்னா படத்துல எடிட் பண்ணுனது போக என்ன சொல்லி இருக்கோ அதைத்தான் நான் சொல்ல முடியும்..

ஒரு மன்னரோட பெண் வாரிசு விடிஞ்சா கல்யாணம்கற சூழல்ல தன்னோட முறைப்பையனைத்தான் கட்டிக்குவேன்னு அடம் பிடிக்கறா... வேற வழி இல்லாம சம்மதிக்கறப்ப பொண்ணோட அண்ணன் இனி இந்த வீட்டு வாசப்படியை மிதிக்கக்கூடாது அப்படின்னு கேவலமா  பேசறான்.. உடனே தங்கை அண்ணன் கிட்டே சவால் விடறா.. உன் 2 பொண்ணுங்களையும் எனக்குப்பொறக்கப்போற 2 சிங்கக்குட்டிகள்(!!!!!!!!!!!!???????????) கல்யாணம் பண்ணிக்குவாங்க... இது சபதம் அப்படின்னு வீராவேசமா சொல்றா... அந்த சபதம் நிறைவேற்றப்படுது...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzDdfDqzPX7UqAH7gD_Y3NzN5fdrifZZt1fKXDCY1hyphenhyphenxwrHfR_swXSnpTjAXkNkH18QC12Wp44hexe_kcNfDDhlRfMH-PPsZmdnFJ734188D4wHqvuefQtq_IoT1N4a8aUrARGTwqmqqE/s1600/ponnar_shankar_movie_stills_photo_gallery_02.jpg

ஹி ஹி .. யாரப்பா அது கல்லோட வர்றது......அது வேற ஒண்ணுமில்லை... கதையை சுருக்கறப்ப அப்படி ஆகிடுச்சு போல..படத்தை மறுபடி போட்டுப்பார்த்த டைரக்டருக்கே மனசாட்சி உறுத்தி இருக்கும் போல.. கடைசி 2 ரீல்.. போர்க்களம், சுதந்திர நாடு.. என என்னமோ ஒப்பேத்தி இருக்காங்க...

படத்தின் ஆர்ட் டைரக்டருக்கு முதல்ல ஒரு ராயல் சல்யூட்... செமயான உழைப்பு.. காட்சிகளில் பிரம்மாண்டம்.. அதே போல் ஒளிப்பதிவாளர்... கேமரா கோணங்கள் பிரமாதம்.. பாடல் காட்சிகளில் டி ராஜேந்தரும் ஷங்கரும் இணைந்து பணியாற்றியது போல் ஒரு அவுட் புட்...
http://searchandhra.com/english/wp-content/uploads/2011/03/Ponnar-Shankar-Movie-Working-Stills-3.jpg
கலைஞரின் பேனா முனை விளையாடிய இடங்கள்.

1.  ஒருத்தனோட அழிவுலதான் இன்னொருத்தனோட  செல்வாக்கு வளருதுங்கறதுக்கு என்னோட வாழ்க்கையே ஒரு பாடமா இருக்கட்டும்...


2. வாழ்க்கைப்பாடம் படிக்க பள்ளிப்பாடம் எதற்கு? பள்ளியறைப்பாடம் போதாதா?

3.  நியாயத்தை மிதிச்சிட்டு நரகத்துக்கு போகச்சொல்றீங்களா?ஹூம்.. ராஜ தந்திரத்துல நியாய தர்மம் பார்க்கக்கூடாது... என் தலை விதி...

4. குழந்தை வரம் வேண்டும்னு ஆண்டவன் சந்நிதானத்தை தேடி போகும் மக்களே.. ஆண் பெண் உறவுலதான் அந்த பாக்கியம் கூடி வரும் என்பதை ஏன் மறந்தீர்கள்?

5. நீங்க வெற்றி பெற வேண்டும் என நான் தவம் இருப்பேன்.....

ஏன்? உன் தவத்தால தான் நான் வெற்றி பெறனுமா? என் வீரத்தால் அல்லவா?

6.  நீங்க சொல்ற யோசனைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனா அதர்மத்தின் சிகரத்துக்கே போகச்சொல்றீங்களே..... அதான் யோசனையா இருக்கு..?

7. ஆண்டவனுக்கு கொண்டு வந்த அமுதத்தை அர்ச்சகரை  சுவைக்க சொன்னது யார்?

8. பிறப்பாலயும், வளர்ப்பாலயும் உயர்ந்த வம்சத்துல பிறந்த நீங்க எப்படி இந்த மாதிரி சதிக்கு துணை போனீங்க?


9.. உண்டுகாட்டி என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருக்கீங்களா? தலைவன் சாப்பிடும் முன் நல்ல உணவா என சோதனை செய்ய சாப்பிட்டுப்பார்க்கும் ஆள்.. அது நான் தான்.. பெண்ணே.. உன்னை அடைய என் தலைவன் தூக்கீட்டு வரச்சொன்னான்.. நான் முதல்ல உன்னை........ 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfpKMz_AxxOMo0Ph2tR3h6ziAQQ6DTNIRAXLLMpm9HbfgihNTJD17lRxEPXLUmJiOSJenbENlOfHde8QFGVevj5cdaaSHeL5bxWv2aNYBusUr8B1wWmaGCcIY1GcWFtw8_TcrW3jMHZRGL/s400/ponnar-shankar-tamil-movie-wallpapers-002.jpg
அடுத்து நடிப்பில் யார் யார் கலக்குனாங்கன்னு பார்க்கலாம்..

படத்தில் முதல் பாராட்டு பிரகாஷ்ராஜ்க்கு... வில்லனா வந்தாலும் அவரது கம்பீரம் அருமை... ராஜ நடை நடந்து வர்றாரே.. ஆஹா..

அடுத்து ராஜ்கிரண்.. அவருக்கான கெட்டப் சுமார் என்றாலும் நடிப்பு கனகச்சிதம்.. மூன்றாவதாக நெப்போலியன்.. அவரது ஆகிருதியான தோற்றமும் , கம்பீரமான குரலும் மறக்க முடியாது... குற்ற உணர்ச்சியில் குமுறும்போதும், கோபத்தில் பொங்கும்போதும் வெல்டன் சொல்ல வைக்கிறார்..

குஷ்பூ.. படத்தில் பல இடங்களில் இவருக்குத்தான் நடிக்க ஸ்கோப்... முகத்தால் 70%  முதுகால் 30% ( ஹி ஹி )

நாயகன் அதுவும் இரட்டை வேடங்கள் என்றாலும் பிரசாந்த்  இவர்கள் 4 பேரைத்தாண்டித்தான் ஸ்கோர் பண்றார்..

பொதுவாகவே பிரசாந்த்க்கு ஒரு ராசி உண்டு.. ஜீன்ஸ் படத்தில் இரு வேடங்களில் நடித்தாலும்  ஐஸ்வர்யாராயின் அழகும், பாடல் காட்சிகளின் ஆர்ப்பாட்டமும் அவரது நடிப்பை அமுக்கி விட்டது போல்.. இந்தப்படத்தில் காட்சி அமைப்பின் பிரம்மாண்டமும், மற்ற சில பாத்திரங்களின் வார்ப்பும் இவரது டாமினேஷனை குறைத்து விட்டது.




http://tkada.com/wp-content/uploads/2011/03/Sneha-Play-Role-of-Prashanth-sister-In-Ponnar-Sankar.jpg
இசை இளையராஜா.. சொல்லவே வேணாம்.. சரித்திரப்பின்னணி என்றதுமே அவரது திறமை எப்படி இருக்கும் என.. பாடல் காட்சிகளில், பின்னணி இசையில், போர்க்காட்சிகளில் என மனிதர் கலக்கி விட்டார்... 

 சண்டைக்காட்சி வடிவமைப்பும் ஓக்கே தான்.. ஓப்பனிங்க் ஃபைட் சீனில் ஜாக்கி சானின் ஸ்பானிஸ் கனெக்‌ஷன் படத்தில் பைக்கில் வரும் ஆளை ஓடி வந்து ஃபிளையிங்க் கிக் ஷாட் அடிப்பாரே.. அதே போல் ஒரு சீன் கலக்கலான முறையில் எடுக்கப்பட்டுள்ளது.. வெல்டன் ஸ்டண்ட் மாஸ்டர் & பிரசாந்த்..


 அதே போல் சினேகா பாடும் ஓப்பனிங்க் பாடல் காட்சியில் நடன தாரகைகளுக்கான ஆடை வடிவமைப்பும்,அவர்களுக்கான நடன அசைவுகளும் அருமை...அந்தக்கால மூவ்மெண்ட்ஸ்...அசத்தல்..

ஆனால் பிரசாந்துக்கு அவர் தங்கை என்பதால் ரசிகர்கள் மனசுக்கு கொஞ்சம் கஷ்டம் தான்..ஆனால் வந்தவரை அவரது பாத்திரத்துக்கான பங்களிப்பு ஓக்கே தான்..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHewE0w1pxrpmg6q0lrOmsdPS-tPye4KO7mlAahJaO5BCUhcShn3Sfm4RZXeSbdCO8fYKLIsit4BoR76t0WLc2_SxsB-__R9XhaJZzp66SMDE29iuhCdjdwHXX4WKe9SBvQNBsH4Qvz4Lm/s1600/Divya%252BParameshwar%252BWallpapers%252Bgallery%252B(3).jpg
ஹீரோயின்கள் 2 பேர்.. அவர்களுக்கு 2 பாடல் காட்சிகளுக்கு மட்டுமே வேலை..

அவர்கள் முக அழகு ஆவரேஜ் தான்.. ஆனால் இடை அழகு...... வாழை மரத்தை ஆசாரியிடம் கொடுத்து வகிர்ந்தெடுத்து செய்யப்பட்ட சறுக்கு மரம் போலே தொட்டணைத்தூறும் நீர் ஊற்று போலே ஜில் என்ற காற்று போலே.....

இயக்குநருக்கு சில கேள்விகள். 


1. சாண்டில்யன், கல்கி, விக்ரமன் போன்ற எழுத்தாளர்களின் சரித்திர நாவலில் கதை ஆரம்பத்திலிருந்தே நாயகனின் பார்வையிலேயே போகும்.. அப்போதுதான் படிக்கும் வாசகர்கள் கதையில் ஒன்றி ஆர்வமாக படிப்பார்கள்.. இந்த அடிப்படை உண்மையை நீங்கள் மறந்து கதையை அதன் போக்கில் சொல்லி விட்டது பெரிய குறை..

2. நாயகனாக இரட்டை சகோதரர்கள் இருந்தும் அவர்கள் கேரக்டர் என்ன? அவர்கள் விருப்ப வெறுப்பு என்ன? என்ற எந்த தகவலும் சொல்லப்படவில்லை.. எப்படி பாத்திரத்தோடு ஆடியன்ஸ் ஒன்ற முடியும்?

3. போர்க்காட்சிகளில் கேடயத்தில் அம்பு தைத்து நிற்பது போலேஇருக்கே.. அம்பு இரும்பு... கேடயமும் இரும்பு.. எப்படி? கேடயத்தில் பட்டு அம்பு கீழே விழும் அவ்வளவுதான்...

4. ஊழிக்காற்றில் ஊரே அலறி அடித்து ஓடும்போது இரு நாயகர்களும் மற்றவர்களைப்பற்றிக்கவலைப்படாமல் நாயகிகள் இருவரை காப்பாற்றுபது அவர்கள் பாத்திரப்படைப்பை கேவலப்படுத்துகிறதே...( ரியல் கதையில் அவர்கள் பலரை காப்பாற்றினார்கள்)

5.  குஷ்பூ தம்பதியினர் குழந்தை பாக்கியத்துக்காக தேர் இழுக்கறாங்க.. அப்போ வில்லனோட ஆள் வேணும்னே தேரை ஓட விடாம பண்றான்.. ஏதோ தோஷம்.. சுமங்கலிப்பொண்ணை பலி கொடுத்தாதான் தேரை இழுக்க முடியும்கறான்.. அப்போ குஷ்பூ பலி ஆக முன் வர்றாங்க.. இது லாஜிக்கே இல்லையே.. ஏன் பலி ஆக ஓக்கே சொல்லனும்..?

6. இரட்டைக்குழந்தைகளை முன் பின் அறிமுகம் இல்லாத இரண்டு தாதிப்பெண்கள் சர்வ சாதாரணமாக தூக்கி செல்வது நம்பும்படி இல்லை...

7. மன்னர் வம்ச குழந்தைகளை கொன்று விடுவார்கள் என்பதற்காக ராஜ்கிரண் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மாதிரி தன் குழ்ந்தைகளை கொல்லத்துணிவது எப்படி? ராஜ விசுவாசம் என்றால் அதற்கேற்ற காட்சிகள் இல்லை..?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvR-iG5lIXjsi-e_vGNicgaZ17_FKr3H3m5x5iC1hQn38-BtM7eJHQaFr2BJCuOBmELODiIEnSktbLk3EpGc-QMfUD9UKfrjEX8Iqne1NG1Hg0rZFPilbWVk8A707VRXS6HPjEU_8LaZA/s1600/divya_parameshwar_wet_bikini_wet_saree_pantie_bra_tamil_actress_hot_ass_plidd+%2525284%252529.jpg
8. போர்க்களத்தில் 20 அடி தூரத்தில் இருந்து கொண்டு நீண்ட வாளை எறிந்து கொல்வது போல் ஒரு சீன் உள்ளது.. சரித்திரக்குறிப்பில் வேலால் கொனறதாக வருது.. மேலும் குறுவாள் எனப்படும் கத்தியைக்கொண்டோ, வேல் அல்லது அம்பினால் மட்டுமே அவ்வளவு தொலைவில் இருந்து ஒருவரை கொல்ல முடியும்.. 

9.  நெப்போலியன் தற்கொலை செய்யும் சீனில் ஒரு லாஜிக் ஓட்டை.. வாளைமேலே வீசி எறிந்து அது கீழே வரும்போது தன் நெஞ்சைக்காட்டிக்கொண்டு நிற்கிறார்.. அது குத்தி உயிர் துறக்கிறார்.. அது சாத்தியமே இல்லை...அது அதிக பட்சம் 3 அங்குல அளவில் தான் காயத்தை ஏற்படுத்தும்.. உயிர் போகும்  அளவு ஃபோர்ஸ் வராது... 

10. பொன்னர் சங்கர் இரண்டு பேரும் ஒரு சீனில் கூட தன் தங்கை சினேகாவிடம் பேசுவது போல் காட்சியே வைக்கவில்லை.. அப்புறம் என்ன அண்ணன்மார் கதை..?

11.  நாயகர்கள் இருவரும் நாயகிகளை திருமணம் செய்து பிரம்மச்சரியம் விரதம் கடைப்பிடிப்பதை பெரிய தியாகம் போல் காட்டி இருப்பது தேவை இல்லாதது.. 

12.  ராஜ்கிரண் ஒரு சீனில் லேடியைப்போல மஞ்சள் பூசியது போல் அதீத மேக்கப்பில்  வர்றார்.. அது ஏன்?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGv18HSijdpkBbri15oWiWLxK5Y6wT1IpnPQY6vIP94CxDT8hd-Iit0Yqs7owTF9lv1JdK3GBZ5qkRl4_9V8ok7lD_-KzlgkhJzswcs_c7M0NfQuvAPIu7rPkaGIoFR1_aBwmnkOrXzFGe/s1600/divya%252Bparameshwar%252Bcleavage.JPG
13. குஷ்பூவை ஒரு காட்சியில் கொல்லும் வீரன் ஜெயராமை லேசா ஒரு கீறு கீறுகிறார்.. அதுக்கே அவர் சடன் டெத் ஆவது எப்படி?


படம் பிரம்மாண்டமாய் இருந்தால் மட்டும் போதாது.. திரைக்கதையில் அழுத்தம் இல்லை  என்றால் படம் தேறாது என்பதை மீண்டும் ஒரு முறை உணர்த்த வந்த படம்.. 

எல்லா செண்ட்டர்களிலும் சராசரியாக 25 நாட்கள் ஓடும்.. 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் 41

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் ஓக்கே

ஈரோடு ராயல், ஸ்ரீ லட்சுமி  2 தியேட்டர்ல ஓடுது

விகடன் VS கலைஞரின் பொன்னர் சங்கர் - காமெடி கும்மி


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgf5H-TejWwHRqU4TxHF4NPLdZDzwWmH9yO7eKQFOPBHZOzNltg796Tadn-xQbl4WbH9m6Y_cC-p7iAMGTl1uYfRtbTZUWUFsSn_IH2eeHf5Ww8iGmm_zDtzEdbzKeJrsbgwgjw8cBQdA/s400/Banu-actress-photos-004.jpg_600
''முக்கியமான ஒரு போர்க் காட்சியை எடுக்கணும்.ராஜஸ்தான், சிக்கிம், ஜம்முகாஷ்மீர், ஆந்திரா, கேரளானு எல்லா மாநிலக் கோட்டைகளையும் பார்த் தோம். எதுவுமே செட் ஆகலை. கலைஞர் அய்யாவைப் பார்த்து விஷயத்தைச் சொன்னோம்.
 உடனே செட் ஆகிடுச்சாக்கும்?
'பெரம்பலூர் பக்கம் ரஞ்சன் குடியில் ஒரு கோட்டை இருக்கு. அங்கே போய்ப் பாருங்களேன்’னு சொன்னாரு.
 அந்த கோட்டைக்கு வழி காட்டி இந்த கோட்டையை  கோட்டை விடப்போறார்..
போய்ப் பார்த்தா, பக்காவா இருந்தது. அதுதான் கலைஞர்!''- 
 ஆமா.. எதா இருந்தாலும் பக்காவா ப்ளான் பண்ணி  செய்வார்.. பாவம் ஸ்பெக்ட்ரம்  விஷயத்துலதான் கோட்டை விட்டுட்டார்..
ஒவ்வொரு பதிலிலும் கலைஞ ரைக் கவனமாகக் கொண்டு வந்து முடிக்கிறார் நடிகர் பிரசாந்த். 'பொன்னர்-சங்கர்’ பிரமாண்டமாக வந்திருப்பது பிரசாந்த்தின் முகத்தில் பிரகாசத்தைக் கூட்டியிருக்கிறது.   

படம் பிரம்மாண்டமா வந்திருக்கு  ஓக்கே.. ரிசல்ட்...? இன்னொரு இளைஞனா.?உளியின் ஓசையா?அப்படின்னு இனிதான் தெரியும்... 

1. ''எப்படி வந்திருக்கு 'பொன்னர்-சங்கர்’?'' 


'' 'படம் எடுத்த தியாகராஜன் கைகளுக்கு முத்தம் கொடுக்கணும்’னு கலைஞர் அய்யாவே சொல்லிட்டார். இனிமே நான் என்ன சொல்ல? 'ஒரு வரலாற்றுப் படம் பண்ணணும். அதை கலைஞர்தான் எழுதணும்’ங்கிறது என்னோட ரொம்ப நாள்ஆசை.

வேண்டாத ஆசை.. ஹி ஹி 

நானும் அப்பாவும் கலைஞரிடம் விருப்பத்தைச் சொன்னோம். அவர் உடனே 'பொன்னர்-சங்கர்’ புத்தகத்தை எடுத்துக் கொடுத்தார். கதை, களம், சூழல் தொடர்பான ஆராய்ச்சிக்கே ஒன்றரை வருஷம் எடுத்துக்கிட்டோம். 2009-ல் ஆரம்பிச்ச ஷூட்டிங், போன மாசம்தான் முடிஞ்சுது. 'பொன்னர்-சங்கர்’ கண்டிப்பா உங்களுக்குப் புது அனுபவமா இருக்கும்!''

 கொலையா கொன்னெடுக்கப்போறாரோ....

http://www.tamilactresspics.com/gallery/images/tamil-actress/bhanu/banu120807_05.jpg

2. '' 'பொன்னர்-சங்கர்’ சீரியஸான முயற்சியா? இல்லை, கலைஞரைத் திருப்திப்படுத்த எடுத்த படமா?'' 

''படம் பார்க்காமல் நீங்கள் கேட்ட இந்தக் கேள்வி என்னை வருத்தப்பட வைக்கிறது. 'என் படைப்புகளைப் படமாக எடுங்க’ன்னு கலைஞர் யாரிடமும் கேட்டது கிடையாது.

அவர் என்ன அழகிரியா? நேரடியா மிரட்ட?


இந்தப் படம் முழுக்க முழுக்க எங்களோட ஆசையால் உருவானது. ஷூட்டிங்கிலேயே பிஸியா இருந்ததால் இன்டர்வியூ, விளம்பரம் எதுவும் நாங்க கொடுக்கலை. அதனால எங்களோட உழைப்பு உங்களுக்குத் தெரியலை. படம் பார்த்துட்டு சொல்லுங்க!''

பார்த்தா சொல்றோம்


3. ''இந்தப் படம் எந்த வகையில் பிரமாண்டமா வந்திருக்கு?''

''30 ஆயிரம் வீரர்கள், 3 ஆயிரம் குதிரைகளை வெச்சு ஒரு போர்க் காட்சியை எடுத்திருக்கோம். அவ்வளவு பேருக்கும் தேவையான பழமையான உடை, ஆயுதங்கள் உருவாக்கி இருக்கோம். அதற்கு எவ்வளவு பெரிய உழைப்பு தேவைப்படும்னு யோசிச்சுப் பாருங்க.

 30,000 பேரெல்லாம் இருக்காது.. 300 பேர் ரெடி பண்ணி கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பண்ணி இருப்பீங்க..

ஒரிஜினல் கோட்டை மாதிரியே அச்சு பிசகாம செட்டு கள் போட்டிருக்கோம். இசையமைப்பாளர் இளையராஜா, கேமராமேன் ஷாஜிகுமார், ஆர்ட் டைரக்டர் முத்துராஜ், ஜோதா அக்பர் படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் அர்ச்சனா கோச்சார்னு பெரிய டீம் ஒண்ணா சேர்ந்து பெரிய உழைப்பைக் கொடுத்திருக்கோம்!''

அர்ச்சனா கோச்சார் நல்ல ஃபிகராமே?
 http://icdn1.indiaglitz.com/hindi/gallery/Events/tour060211_1/tourde_37.jpg
4. ''நல்ல விஷயம்... பிஸியான பிரசாந்த்தைத் திரும்பப் பார்க்க முடியுமா?'' 

''சினிமா, ஃபேமிலி லைஃப் இரண்டிலும் சின்னச் சின்ன சறுக்கல்கள்.

ஓஹோ... 8 டப்பா படம் கொடுத்ததே சிறுஞ்சறுக்கலா? விளங்கிடும்...


அதான் இடைவெளிக்குக் காரணம்.  பிரச்னைகள் எல்லாம் முடிஞ்சு, இப்போ ஃப்ரீயா இருக்குறேன்.

ஆனா நாங்க பிஸியா இருக்கோமே.. சாரி.. ஹி ஹி 


'பொன்னர்-சங்கர்’ படத்தில் ஓர் அறிமுக நடிகரைப்போல் என் உழைப்பைக் கொட்டி நடிச்சிருக்கேன். இந்தப் படம் என்னை அடுத்தடுத்த லெவலுக்குக் கூட்டிச் செல்லும் என்று நம்புகிறேன். அப்பாவுக்கும் கலைஞர் அய்யாவுக்கும் நன்றி!''

அடுத்த லெவெல்னா...? இப்ப ஏதோ ஒரு லெவெல்ல இருக்கறதா நினப்பு? 



டிஸ்கி - பொன்னர் சங்கர் படம் பார்த்துட்டேன்.. விமர்சனம் டைப்பிங்க்.. 4 மணி டூ 4.30 மணிக்கு போஸ்ட் போடறேன்