Showing posts with label சமூக வலைதளம். Show all posts
Showing posts with label சமூக வலைதளம். Show all posts

Tuesday, February 17, 2015

ட்விட்டரில் வியப்பு:சாதனை!! இந்திய அளவில் #தமிழ்வாழ்க முதலிடம்

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் தமிழிலேயே ஒரு ஹேஷ்டேக், இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் (போக்கு) முதல் முறையாக முன்னிலை வகித்துள்ளது.
பொதுவாக, அதிகம் பேசப்படும், விவாதிக்கப்படும் கருப்பொருளையொட்டிய சொற்களால் உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக்குகள் (#) ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவிலோ, உலக அளவிலோ முதல் 10 இடங்களை வகிப்பது வழக்கம்.
அதாவது, ஒரு குறிப்பிட்டை ஹேஷ்டேக் சொற்கள் தொடர்பாக நொடிக்கு 20-க்கும் மேற்பட்ட குறும்பதிவுகள் இடப்படும்போது, அந்தச் சொற்கள் ட்ரெண்டிங்கில் வலம் வரும்.
கடந்த சில ஆண்டுகளாக, ட்விட்டர் ஹேஷ்டேக்குகள் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அவை அனைத்துமே ஆங்கில மொழியில்தான் அரங்கேற்றப்படும். ஆனால், சில தினங்களாக இந்திய மொழிகளுக்கும் ட்ரெண்டிங்கில் முக்கியத்துவம் தரத் தொடங்கியிருக்கிறது ட்விட்டர்.
அந்த வகையில், முதலில் இந்தி மொழி சொல் ட்ரெண்டிங்கில் வலம் வந்தன. அதைக் கண்ட தமிழ் இணையவாசிகள், தமிழில் உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக் ஒன்றை ட்ரெண்டிங்கில் வரச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அதை ட்விட்டரும் ஏற்றுக்கொண்டு தமிழில் 'போக்கு' காண்பிக்க ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில், முதலில் உருவாக்கப்பட்ட தமிழ் ஹேஷ்டேக் சொல் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது #தமிழ்வாழ்க எனும் ஹேஷ்டேக்.
இந்த ஹேஷ்டேக்கை பிரபலப்படுத்துவதில் காரணமானவர்களில் ஒருவர், தமிழ் இணையப் பிரபலம் பிரசாந்த். இவர், சினிமா விமர்சனங்களை வீடியோ வடிவில் யூடியூபில் பதிவேற்றம் செய்து இணையத்தில் பிரபலமானவர்.
#தமிழ்வாழ்க ஹேஷ்டேக்கை பிரபலப்படுத்தியது பற்றி அவரிடம் கேட்டபோது, "இந்திய மொழிகளில் உருவாக்கப்படும் ஹேஷ்டேக் சொற்களுக்கு ட்விட்டர் முக்கியத்துவம் கொடுப்பதை அறிந்தேன். அந்த வகையில் முதலில் ட்ரெண்டிங்கில் இடம்பெறும் தமிழ் ஹேஷ்டேக், ஒரு நேர்மறை சிந்தனை கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதினேன்.
எனவே, #தமிழ்வாழ்க என்ற சொல்லைப் பிரபலப்படுத்தும் முயற்சியில் இறங்கினேன். இந்தச் சொல் ஏற்கெனவே ட்விட்டரில் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டதுதான். அதைப் பிரபலப்படுத்தும் வகையில் மட்டும் என்னைப் போன்ற ஆர்வலர்கள் இன்று ஈடுபட்டனர். அதற்குப் பலன் கிடைத்திருக்கிறது. இது உண்மையிலேயே நெகிழவைக்கும் தருணம்" என்றார் பிரசாந்த்.
இதனிடையே, திமுக தலைவர் கருணாநிதி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "உயிரையே குடிக்க வந்த எதிரியே ஆயினும் உரிய மரியாதை அளிப்பதுதான் இந்த (தமிழ்) மண்ணுக்கே சொந்தமான பண்பாடு. #தமிழ்வாழ்க" என்று குறும்பதிவிட்டு, தமிழ் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தார்.
இந்திய நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணியளவில் #தமிழ்வாழ்க என்ற சொல், ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது கவனிக்கத்தக்கது.


நன்றி - த இந்து

Wednesday, September 10, 2014

ஃபேஸ்புக் அடிமையானால் தனிமை உணர்வுக்கு ஆளாகும் அபாயம்!

கோப்புப் படம்
நீங்கள் எவ்வித நோக்கமும் இல்லாமல் ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுகிறீர்களா?
உங்களது விழிகள் திரையை விட்டு நீங்காமல் இருக்கின்றதா? 



இவ்விரண்டு கேள்விகளுக்குமான பதில் 'ஆம்' எனில், மன அழுத்தத்தை உள்ளாகும் அபாயத்துக்கான அறிகுறிகள் உங்களிடம் இருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு.
அதிக நேரம் ஃபேஸ்புக்கில் செலவழிப்பவர்கள் பலர் மன அழுத்தத்தில் மூழ்கும் அபாயத்தில் இருக்கிறார்கள் என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. 


மேலும், ஃபேஸ்புக் தளத்துக்கு அடிமையாவோர், தனிமை உணர்வால் வாடும் நிலைக்குத் தள்ளப்படும் சூழலுக்கு ஆளாவார்கள் என்றும் அந்த ஆய்வு எச்சரிக்கிறது.
என்னதான் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் நம் அனைவரையும் இணைக்கும் வண்ணம் காட்சியளித்தாலும், அதிக நேரம் இவற்றை பயன்படுத்துவது ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும். 



"ஒருவர் மனதில் தங்கும் சோகத்துக்கும், ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவழிப்பதற்கும் உளவியல் ரீதியான தொடர்பு இருக்கிறது" என்கின்றனர் ஆஸ்டிரியன் உளவியலாளர்களான கிறிஸ்டீனா சஜொய்கலோவும் டோபியாஸ் கிரிட்மேயரும். 



மூன்று கட்டமாக நடந்த இந்த ஆய்வில், முதல் கட்டமாக 123 ஜெர்மன் பேசும் ஃபேஸ்புக் வாசகர்களைக் கொண்டு ஆராய்ந்தனர். பெரும்பாலானவர்கள் ஃபேஸ்புக்கில் சிறிது நேரம் செலவிட்டவுடன் அவர்களின் மனநிலையில் மாற்றம் காணப்பட்டது. 'அமேசான் மெகேனிகல் டர்க்' என்ற திட்டத்தின் மூலம் இதன் இரண்டாம் கட்ட ஆராய்ச்சியில் 263 பேர் பங்கேற்றனர். அதில் பங்கு பெற்றவர்களின் மனநிலையிலும் மாற்றம் காணப்பட்டது. 


இந்த ஆராய்ச்சியின் கடைசி கட்டமாக 101 ஃபேஸ்புக் வாசகர்களிடம் "ஃபேஸ்புக் பக்கங்களைப் பார்ப்பது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்குமா அல்லது சோகத்தை உண்டாக்குமா?" என்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்த கட்டத்திலும்,ஃபேஸ்புக்கிலிருந்து வெளிவரும்போது தங்கள் வாழ்க்கையில் தனிமை ஏற்படுகிறது என்று பதிலளித்தார்கள் என வைரல் க்ளோபல் நியூஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.



இது தொடர்பான ஆராய்ச்சி தகவல்கள் 'கம்பியூடர்ஸ் இன் ஹுயூமன் பிஹேவியர்'என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே, கூச்ச சுபாவம் உள்ளவர்கள், பிறரிடம் அதிகம் பேசாத உள்முக சிந்தனையாளர்கள் ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவழிப்பதால் தம் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் பகிர்வது சிறிதே என்றும் அலபாமா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.



thanx - the hindu