Showing posts with label சினிமா ஜிவி பிரகாஷ். Show all posts
Showing posts with label சினிமா ஜிவி பிரகாஷ். Show all posts

Friday, February 16, 2018

நாச்சியார் - சினிமா விமர்சனம்

Image result for naachiyaar movie stills

17 வயசு பொண்ணு , அதே வயசு மைனர் பையன் இவங்களுக்குள்ள நிகழும் காதல் மாதிரி ஏதோ 1 , ஒரு கட்டத்துல கட்டில்ல 2 பேரும்  ஒரு கேம் விளையாடிடறாங்க , பிரியறாங்க . பொண்ணு மாசமா இருக்கு , டி என் ஏ டெஸ்ட் பார்த்தா அப்பா அந்தப்பையன் இல்லை , யார் கெடுத்திருப்பாங்க என்ற அரிய தகவலை கண்டு பிடிப்பது தான் பின் பாதிக்கதை 


 படத்தோட ஹீரோவா  அசால்ட் ஜோதிகா . இவரு ஆக்டிங்க்கு மெனக்கடலை , தன் கணவர் சூர்யாவோட சிங்கம் 1,2,3 பாகங்களைப்பார்த்து அசால்ட்டா முடிச்ட்டாங்க , இவரோட பாடி லேங்குவேஜ் பிரமாதம் , சூர்யா இவர் கிட்டே கத்துக்க வேண்டியது அடக்கி வாசிக்கும் வசன உச்சரிப்பு , ஜோ சம்பந்தப்பட்ட காட்சிகள் ஹரி தான் இயக்கி இருப்பாரோனு டவுட் கிளப்பற மாதிரி  காமரா பறக்குது , செம ஸ்பீடு காட்சிகள் , எடிட்டிங் 


படத்தோட அடுத்த ஹீரோ ஜிவி பி . இவரும் குறை சொல்ல முடியாத நடிப்பு , ஆரம்பக்கட்ட்சிகளில் பாலா படங்களுக்கே உரிய மட்டமான முக ஒப்பனை ஹீரோவா வந்தாலும் போகப்போக கருணை மனசுடன் அவரை அழகா காட்டி இருக்காரு 

 இன்னொரு நாயகியா அந்த புதுமுகம், தமிழுக்கு நல் வரவு , காதல் காட்சிகளீல் சில இடங்களீல் யதார்த்தம் , பல இடங்களில் நாடகத்தனம்.

இளையராஜாவின் பிஜிஎம் பற்றி சொல் வது  மயில் தோகையை வர்ணிப்பது போல 


வில்லனாக வருபவர் கச்சித நடிப்பு , ஜோ வின் கணவரா வர்றவர் தம்பி மாதிரி இருக்கார் 

ஜோ வின் மகள் அவரை எடுத்தெறிந்து பேசுவது செயற்கை திணிப்பு 


இடை வேளை ட்விஸ்ட் , க்ளைமாக்ஸ் அதிரடி வழக்கம் போல்.


Image result for naachiyaar movie stills


நச் டயலாக்ஸ்


முறைக்காத.நீ சாதாரணமாப்பாத்தாலே முறைக்கற மாதிரிதான் இருக்கு


நான் அந்த மாதிரி ஆள் இல்ல சார்

எல்லா பொறம்போக்குகளும் அப்டிதான் சொல்றாங்க


என்னடா ,இப்பதான் பொண்ணைப்பாத்த ,அதுக்குள்ள இருமுடி கட்டீட்ட போல


என் லவ்வர் தாங்க எனக்கு
அம்மா
என்னை மாதிரி பசங்களுக்கு காதலி தாங்க அம்மா
என்னடா சொல்ற?புரியல


எதுக்கு என் கிட்ட இருந்து ரத்தம் எடுக்கறீங்க?
உனக்கு பொம்பள வியாதி இருக்கா?னு பாக்க
நான் ஆம்பளைங்க,எனக்கு எப்டீ பொம்பள வியாதி வரும்?


நீ தென் கலையா?வட கலையா?
தோப்பனார் தென்கல ,அம்மா வடகல
நினச்சேன்


பணம் கறது மீத்தேன் மாதிரி,அதல பாதாளம் வரை போய் நாசம் பண்ணீடும்

ட்விட்டரு ,FB , வாட்சப் னு நெட்ல குடி இருக்கற பொண்ணுங்களைக்கூட நம்பிடலாம் ,ஆனா ஊமக்கோட்டான் மாதிரி இருக்கற பொண்ணுங்களை மட்டும் நம்பவே கூடாது


முதல்ல விசாரிச்ட்டு அப்றமா அடிக்கலாமில்ல?
;சாரி,நான் அடிச்ட்டுதான் விசாரிக்கற பழக்கம்

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


மைனர் பையன் ,மைனர் பொண்ணு லவ் பண்ற கதைதான் ,அதனால இயக்குனர் திரைக்கதைல மேஜரா எதுவும் யோசிக்கல போல.இடைவேளை வரை சுமார் , ஸ்லோ


Image result for naachiyaar movie stills


சபாஷ் டைரக்டர்


1  வழக்கமா பட ஹீரோவை  ரொம்ப கேவலமான மேக்கப்ல காட்றவர் இதுல கொஞ்சம் திருந்தி இருக்கார்

2  வழக்கமா வன்முறை ல கொடிகட்டிப்பறக்கும் இவரது சை க்கோத்தன இயக்கம் இதில் குறை வு


3 ஒரு ஆச்சரியமான மாற்றம் படத்தில் யாரும் கஞ்சா அடிக்கலை, 

4 பின் பாதி திரைக்கதை இயக்கம்  கனக்ச்சிதம்


5   பாலாவுக்கு பொதுவா காமெடி அவ்வளவா வராது , ஆக்சன் காட்சிகளீல் கூட இயல்பான காமெடியை கொண்டு வர முயற்சி  செய்தது அழகு லாஜிக் மிஸ்டேக்ஸ்  & திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1  ஒரு கோடீஸ்வர வீட்டில் வேலை பார்க்கும் நாயகி செலவுக்கு 200 ரூபா கேட்பதை அந்த வீட்டு ஓனர் 10 நிமிசம் டைம் எடுத்து தன் மனைவியிடம் வியாக்கியானம் பேசுவது செம செயற்கை


2 பொதுவா அழகான பொண்ணுங்க எதுனா உதவி கேட்டா பிற்கால நலன் கருதி ஆம்பளைங்க டக்னு செய்வதுதான் வழக்கம். பிசாத்து 200 ரூ பாய்க்கு அவர் ப்ம்முவது  காமெடி

3   பா ரஞ்சித் , பாலா போன்ற இயக்குநர்கள் கதைக்கு சம்பந்தம் இருக்கோ இல்லையோ பிராமணர்களை போகிற போக்கில் திட்டுவது போல வோ நக்கல் அடிப்பது போலவோ காட்சிகள் , வசனங்கள் வைப்பது ஏனோ? 


4  முந்தைய படமான தாரை தப்பட்டை  கொடுத்த அடியின் காரணமா இதில் வன்முறைக்கு கடிவாளம் போட்டிருப்பது ஓக்கே , போலீஸ் ஆஃபீசராக வரும் ஜோதிகா  தன் கார் டிரைவரை வாடா போடா என பேசுவது  ஓவர்


5 அதே போல் க்ளைமாக்ஸ் காட்சியில் தன் உயர் அதிகாரி லேடியிடம் பஞ்ச் டயலாக் பேசுவதும் செயற்கைசி.பி கமெண்ட் -நாச்சியார் − பாலா தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி சராசரி மசாலா்.முன் பாதி சராசரி விடலை லவ் ,சுமார் ,பின் பாதி அதிரடி ஸ்பீடு.பாலா ரசிகர்களுக்கு பிடிக்காது,சராசரி ரசிகர்களுக்கு Ok.ஜோதிகா,BGM குட்.விகடன் 41 , ரேட்டிங் 2.75 / 5


பெண்களும் பார்க்கலாம்,. அதிகம் வன்முறை , கச்சடா காட்சிகள் இல்லை,

மீடியமா எல்லா செண்ட்டர்களிலும் ஓரளவு ஓடிடும்


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு)  - 41


குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்) - 3/5


c @ erode aanoor