Showing posts with label கோர்ட். Show all posts
Showing posts with label கோர்ட். Show all posts

Wednesday, November 18, 2015

ஆஸ்கருக்குச் செல்லும் புரட்சிப் பாடகர்!

கோர்ட்
கோர்ட்

எப்போதாவது ஒருமுறைதான் இப்படி அதிசயம் நடக்கிறது. ‘காக்காமுட்டை’, ‘குற்றம் கடிதல்’, ‘விசாரணை’என மூன்று தமிழ்ப் படங்கள் தற்போது ஒரே சமயத்தில் உலகம் முழுக்கச் சுற்றுகின்றன. புகழ்பெற்ற திரைப்பட விழாக்களை உலகின் பல நாடுகளிலிருந்து செல்லும் அற்புதமான பல படைப்புகள் முற்றுகையிடுகின்றன. விருதுகளும் வாங்குகின்றன. ஆனால், இந்தியாவிலிருந்து திரைவிழாக்களுக்குப் போகும் படங்கள் மிகக் குறைவு. தமிழிலிருந்து செல்லக்கூடிய படங்களோ மிக மிக அரிது.


மலையாளத்தில் பலப்பல வருடங்களாகவே கலைப் படங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. கன்னடத்திலும் அப்படியே. இவற்றுக்குப் பின்னர்தான் தமிழ் வருகிறது. இதை அப்படியே இந்தியாவுக்குப் பொருத்திப் பார்த்தால், வங்காளப் படங்களே தரமான கலைப் படங்களைப் பல்லாண்டு காலமாக அளித்துக்கொண்டிருக்கின்றன. இவற்றுக்குப் பின்னரே மராத்தி போன்ற இதர வட இந்திய மொழித் திரைப்படங்கள் வருகின்றன.


சத்யஜித் ராய்க்கு முன்னரே

இந்தியாவில் கலைப் படங்கள் வரிசையாக வெளியாக ஆரம்பித்தது வங்காள மொழியில்தான். சத்யஜித் ராய் அப்படிப்பட்ட வங்காளக் கலைப்படங்களின் பிதாமகராக உலகெங்கும் கருதப்படுகிறார். அவரது படங்களால் தாக்கம் பெற்றுத் தங்களின் திரை வாழ்க்கையைச் செப்பனிட்டுக்கொண்ட இயக்குநர்கள் உலகெங்கும் பலர் உண்டு. ஆனாலும், சத்யஜித் ராய்க்கு முன்னரே தனது முதல் படத்தை எடுத்தும், அந்தப் படம் வெளிவராமல் போய் அதன் பின் பல அருமையான, தரமான கலைப் படங்கள் எடுத்து, இப்போது உலகெங்கும் பெரும்புகழ் பெற்றிருக்கும் ரித்விக் கட்டக்கும் இந்தியாவின் கலைப் படங்கள் உலகெங்கும் சுற்ற ஒரு முக்கியமான காரணம்.

ஆனால், சத்யஜித் ராயைத் தெரிந்தவர்கள் பலருக்கு ரித்விக் கட்டக்கைத் தெரியாது. காரணம், ராயைப் போல் கட்டக் ஒரு கனவான் அல்ல. மிகுந்த பிடிவாதத்தோடு, தான் நினைத்ததைச் செய்துகொண்டு ஒரு போராளியைப் போல வாழ்ந்தவர் கட்டக். இதனாலேயே அவரது ஒவ்வொரு படத்துக்கும் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. அவரது முதல் படமான ‘நகோரிக்’, சத்யஜித் ராயின் ‘பதேர் பாஞ்சாலி’ வெளிவருவதற்கு மூன்று வருடங்கள் முன்னரே, 1952-லேயே முடிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், அப்படம் 1976-ல்தான் வெளிவர முடிந்தது. அதற்குள் ரித்விக் கட்டக் இறந்திருந்தார்.

கட்டக் இயக்கிய படங்கள் மொத்தமே எட்டுதான். சில படங்களுக்குக் கதை, திரைக்கதை ஆகியவையும் எழுதியுள்ளார். புனே திரைப்படக் கல்லூரியிலும் கட்டக் பணிபுரிந்திருக்கிறார். அங்கே இவரிடம் படித்தவர்தான் ஜான் ஆப்ரஹாம். ‘அக்ரஹாரத்தில் கழுதை’ என்ற படத்தை தமிழில் எடுத்தவர்.


கலைப் படங்களின் பொற்காலம்!

இந்தியாவின் திரைப்படங்களில் இப்படியாக ரித்விக் கட்டக், சத்யஜித் ராய் ஆகியோர் தொடங்கிய பயணம்தான் தரமான கலைப் படங்கள் உலகம் முழுக்க அனுப்பப்படக் காரணமாக இருந்தன. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் மிருணாள் சென்னும் கலைப் படங்கள் எடுக்கத் தொடங்கியிருந்தார். இந்த மூவருடனும் சேர்ந்து தபன் சின்ஹாவும் வங்காள மொழியில் கலைப் படங்கள் எடுக்கத் தொடங்கிய அறுபதுகளே கலைப் படங்களில் வங்காளம் மற்றும் இந்தியாவின் பொற்காலம்.

இக்காலத்துக்கும் முன்னரே, 1925-லேயே பாபுராவ் பெயிண்டர் எடுத்த சவ்காரி பாஷ் (Savkari Pash) என்ற மவுனப் படம், ஒரு நல்ல கலைமுயற்சியாக இப்போதும் கருதப்படுகிறது என்றாலும் அக்காலகட்டத்தில் வரிசையாக இப்படிப்பட்ட கலைப் படங்கள் வரத் தொடங்கியிருக்கவில்லை. இதில் நடித்திருந்தவர் சாந்தாராம். இதுபோலவே, கான் திரைப்பட விழா தொடங்கிய 1946-ல், சேத்தன் ஆனந்தின் ‘நீச்சா நகர்’ Neecha Nagar திரைப்படம், சிறந்த திரைப்பட விருது வாங்கியிருக்கிறது.

இவர்களுக்குப் பின்னர் ஷ்யாம் பெனகல், அடூர் கோபாலகிருஷ்ணன், கிரீஷ் காசரவள்ளி, மணி கௌல், கோவிந்த் நிஹலானி போன்றோர் மிகத் தரமான கலைப் படங்கள் எடுத்த இந்திய இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.


ஓர் அழகான பிரிவு

இப்படிப்பட்ட கலைப் படங்கள் ஒருபுறம் எடுக்கப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே, ஆஃப்-பீட் (Off-beat cinema) படங்கள் என்ற குறிப்பிட்ட வகைப் படங்களும் பிரபலமாகிக்கொண்டிருந்தன. வணிகப் படங்களுக்கும் கலைப் படங்களுக்கும் இடையே வளர்ந்த ஒர் அழகான பிரிவு இது. வணிகப் படங்களின் கூறுகளான பாடல்கள், நகைச்சுவை ஆகியன இவற்றில் இருக்கும். அதே சமயத்தில் ஒரு குறிப்பிட்ட கருவை எடுத்துக்கொண்டு, அந்தக் கதையை மிக இயல்பாக ஆடியன்ஸுக்கு அளித்த படங்களே ஆஃப்-பீட் படங்கள். இவற்றை இந்தியாவில் பிரபலப்படுத்தியவர்கள் ரிஷிகேஷ் முகர்ஜி, குரு தத், பாஸு சட்டர்ஜி, பாஸு பட்டாச்சார்யா ஆகியோர்.

இவர்களில் குரு தத் தவிர மீதி மூவரும் வங்காளிகள் என்பதைக் கவனித்துப் பாருங்கள். வங்காளத்தின் தன்மை அப்படிப்பட்டது. இவர்களைப் பற்றி விரிவாக இனி வரும் வாரங்களில் கவனிக்கப்போகிறோம். தற்காலத்திலும் இப்படிப்பட்ட ஆஃப்-பீட் படங்களும் கலைப்படங்களும் இந்தியாவில் வரத்தான் செய்கின்றன. அவை பெரும்பாலும் இந்தி, மராத்தி, வங்காளம், மலையாளம் ஆகிய மொழிகளிலேயே எடுக்கப்படுகின்றன. ‘ஷிப் ஆஃப் தீஸியஸ்’ (Ship of Theseus) ஒரு மிகச் சிறந்த உதாரணம். ஃபன்றி (Fandry) இன்னொரு அற்புதமான படம்.

வரும் வருடத்தின் ஆஸ்கர் விருதுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கும் ‘கோர்ட்’ (Court), உண்மையில் மிக முக்கியமான பிரச்சினையொன்றை, நகைச்சுவையாகச் சொல்லியிருக்கும் படம். ஒரு சமூகப் போராளி, புரட்சிப் பாடகர், அரசினால் கைதுசெய்யப்பட்டுவிடுவார். காரணம் என்னவென்றால், மலம் அள்ளுபவர்களைப் பற்றிய இவரது பாடல் ஒன்றைக் கேட்ட மலம் அள்ளும் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுவிட்டார் என்றும், இதனால் அவரது தற்கொலைக்குக் காரணமாக இருந்த இந்தப் புரட்சிப் பாடகரைக் கைது செய்திருப்பதாகவும் அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்தப் போராளியின் சார்பில் ஒரு வழக்கறிஞர் ஆஜராகிறார். ஒவ்வொரு முறையும் இவரை பெயிலில் அனுப்ப வேண்டும் என்று அவர் வாதாடும்போதும் வழக்கு ஒத்திவைக்கப் பட்டுக்கொண்டே வருகிறது.

அரசுத் தரப்பின் வழக்கறிஞர், இந்தப் புரட்சிப் பாடகர் மிக ஆபத்தானவர் என்றும், இவரை வெளியில் விட்டால் இந்தியாவின் இறையாண்மைக்கே ஆபத்து என்றும் வாதிடுகிறார். அந்தப் பாடகருக்கோ வயது அறுபதுக்கும் மேல். பல உடல் உபாதைகளால் அவதியுறுகிறார். இறுதியில் என்ன ஆனது என்பதே படம். இந்தியாவின் நீதித் துறையை இத்தனை கடுமையாக விமர்சனம் செய்திருக்கும் ஒரு படம் இயல்பாக வெளிவந்து, ஆஸ்கருக்கும் அனுப்பப்படுகிறது என்பதே முதலில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்னர்தான், இந்தப் படத்தில் பல விஷயங்களும் பகடியாகவே சொல்லப்பட்டிருப்பதால் ஆட்சியாளர்களுக்கு அது புரிந்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. சமகாலத்தில் நம்மைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும் பிரச்சினை ஒன்றை ஒரு வருடம் முன்பே இப்படத்தில் எடுத்துக் காட்டிவிட்டனர்.

தற்சமயத்தில் சமுதாய அக்கறை என்பது அருகிவருகிறது. இந்தக் காலகட்டத்தில், எங்கோ யாரோ இன்னமும் சமுதாய அக்கறையோடு சிந்திக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடே கோர்ட், ஃபன்றி போன்ற படங்கள். இதுபோலத் தமிழகத்திலும் சமூக அக்கறையுடைய படைப்பாளிகள், நேர்மையான, வெளிப்படையான, எந்த வித சமரசமும் இல்லாத உண்மையான படங்களைத் தர முன்வர வேண்டும். ஆனால் இது இன்னமும் கனவாகவே இருக்கிறது. அது மட்டும் நடந்துவிட்டால், உலகப் பட வரிசையில் தமிழ் சினிமாவுக்குத் தனியிடம் கிடைக்கும். அந்தக் காலம் விரைவில் வருமா

thanks the hindu

Wednesday, December 26, 2012

கலைஞருக்கு சசிகலா வைத்த செக் , கலைஞரின் டிஃபன்ஸ் ஆட்டம்

http://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/SASI_1.jpg 


ப்பாடி...’ என்று பெங்களூரு கோர்ட் வளாகத்தில் எல்லோரு​மே பெரு​​மூச்சு​​விட்டனர். ஏனென்​றால், 1,032 கேள்விகளுக்கும் சசிகலா பதில் சொல்லி​விட்டார். ஜெட் வேக வெள்ளி!


வியாழக்கிழமை மாலை வரை 825 கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருந்த சசிகலா, வெள்ளிக்கிழமை காலை இஸ்கான் கோயிலுக்குப் போகத் திட்டமிட்டு இருந்தாராம். ஆனால், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்​கொண்டால் வரத் தாமதமாக 

வாய்ப்பு உண்டு என்று சொல்லப்பட்டதால், ஆசையைத் தவிர்த்து​விட்டு புதிய உதவியாளர் சுரேஷ் சகிதம் கோர்ட்டுக்கு சீக்கிரமே வந்து காத்திருந்​தார். நீதிபதி பாலகிருஷ்ணா 11.20 மணிக்குத்தான் கோர்ட் ஹாலுக்கு வந்தார்.


ஜெ.ஜெ. பிரின்​டர்ஸ், ஜெயா பப்ளி​கேஷன்ஸ், ஜெயா ஃபார்ம் ஹவுஸ், நமது எம்.ஜி.ஆர்., உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் நடந்த பங்குப் பரிவர்த்தனை, கணக்கு வழக்குகள், வங்கிக் கணக்குகள், வரி தொடர்பாகவே கேள்விகள் மீண்டும் கேட்கப்பட்டன. அத்தனை கேள்விகளுக்கும்  மிகவும் தெளிவாக அழுத்தம்திருத்தமாக, 'தெரியாது’ என்றார்.


ஆஞ்சநேயா என்டர்பிரைசஸ் நிறுவனக் கட்டடம் கட்டியது, பராமரித்தது, நாதெள்ளா நகைக் கடையில் வைர நகைகள் வாங்கியது தொடர்பான நீண்ட நெடிய கேள்விகளை நீதிபதி மூச்சுவாங்க வாசித்து, அதனை ஹாரீஸ் கஷ்டப்பட்டு நான்கு பக்க அளவுக்கு மொழிபெயர்த்து விளக்கியதும், 'எழுத்துப்பூர்வமாகப் பதில் தருகிறேன்’ என்று ஒற்றை வரியில் சொன்னார் சசிகலா. அதனால், வெள்ளிக்கிழமை வழக்கத்தைவிட கேள்விகள் ஜெட் வேகத்தில் பறந்தன.


'பங்களா’ பதில்கள்?


வெள்ளிக்கிழமை மாலை வரை வங்கிக் கணக்குப் புள்ளிவிவரங்களாகப் பயணித்த கேள்விகளின் திசையை நீதிபதி பாலகிருஷ்ணா திடீரென மாற்ற ஆரம்பித்தார். சிறுதாவூர் பங்களா, பையனூர் பங்களா, கொடநாடு எஸ்டேட், அரசுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தது, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் அதிகாரி தொடர்பான கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்வதற்கு முன், சசிகலாவின் வக்கீல்கள் மணி​சங்கரும் செந்திலும் கைகளை அசைப்பதும், துண்டுச் சீட்டைக் காட்டுவதுமாக உதவி செய்தனர். அதேபோல ஏற்கெனவே கொண்டு வந்திருந்த ஃபைலைப் பார்த்தும் பதில் சொன்னார். பங்களாக்​களைக் கட்டியது, பராமரித்தது, வரி செலுத்தி​யதுபோன்ற அத்தனை கேள்வி​களுக்கும் தெரியாது என்றே பதில் சொன்னார். ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லி​விட்டு சரியாகச்சொன்​​னேனா என்று வக்கீல்களைப் பார்த்து தலையசைத்து உறுதி செய்துகொண்டார்.  விசாரணை அதிகாரிகளை விளாசிய சசி!


சனிக்கிழமை காலை உண​வை சீக்கிரமாக முடித்துக்​கொண்டு, கோர்ட் பக்கத்​திலே இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போய் பிரார்த்தனை செய்த சசி, 11 மணிக்கு கோர்ட்டுக்குள் நுழைந்தார். கோர்ட் நடவடிக்கை தொடங்கியதும், சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தார் நீதிபதி. 'நல்லம நாயுடு தலைமையிலான அதிகாரிகள் சசி என்டர்பிரைசஸ் அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது, 81 முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி இருக்கிறார்களே?’ என்று கேட்டார்.'விசாரணை அதிகாரிகள் சில பொருட்களைக் கைப்பற்றி இருந்தாலும், எங்களுடைய சொத்துக் கணக்கை அதிகமாகக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக வீட்டில் இருந்த பரிசுப் பொருட்களை எல்லாம் திட்டமிட்டு கணக்கில் சேர்த்தனர்’ என்றார். 'அப்படியென்றால் ஜெயலலிதா, நீங்கள், சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த​தாக விசாரணை அதிகாரி நல்லம நாயுடு கூறி இருப்பது பற்றி என்ன சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார். 'நான், சுதாகரன், இளவரசி மூவரும் தனித்தனியாக தொழில்  நடத்துகிறோம். அதில் ஜெயலலிதாவுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்மீது கொண்டுள்ள அரசியல் காழ்ப்பு உணர்ச்சியிலே வழக்கை ஜோடித்து உள்ளனர். அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த என்னிடம் விசாரிக்க வந்த அதிகாரிகள், விசாரணை நடத்தாமல் ஹாயாக டி.வி-தான் பார்த்தனர். ஆனால் அப்போது சொத்துக்குவிப்பு வழக்குத் தொடர்பாக என்னிடம் விசாரணை நடைபெறுவதாக டி.வி-யில் தலைப்புச் செய்தி ஓடியதைப் பார்த்து அதிர்ந்தேன். அதன்பிறகுதான் இதெல்லாம் விசாரணை அதிகாரியின் நாடகம் என்பது தெரிந்தது. பல்வேறு காலகட்​டங்களில் விசாரணை அதிகாரிகள் வரம்பை மீறி சோதனை நடத்தியது, எங்களுடைய வீட்டில் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்​படும் கைக்கடிகாரங்கள், நகைகள், பொருட்கள் தொடர் பாகச் சொன்ன அத்தனையுமே பொய்யானவை. வேண்டும் என்றே அவற்​றின் மதிப்பை அதிகமாகக் காட்டி இருக்கின்றனர்’ என்று விளாசினார்.


http://mmimages.maalaimalar.com/Articles/2012/Feb/858bc757-3919-4ab5-868f-b52d04f91e86_S_secvpf.gif


சுதாகரன் திருமணச் செலவு!


சுதாகரனின் திருமணச் செலவுகள் தொடர்பான கேள்விகளுக்கு, ஜெய​லலிதா என்ன பதில் சொன்னா​ரோ, அதே பதிலையே சசிகலாவும் சொன்​னார்.


'சுதாகரனின் திருமணத்துக்கு நானோ, ஜெயலலிதாவோ, ஒரு ரூபாய்​கூட பணம் செலவழிக்கவில்லை. தமிழகப் பண்பாட்டின்​படி திருமணச் செலவை மணப்பெண் வீட்டாரே முழுவதுமாக ஏற்றுக்​கொண்டனர். அதுதான் வழக்கம். இதுதொடர்பாக பெண்ணின் தாய்மாமன் ராம்குமார் சாட்சியம் அளித்து இருக்கிறார்’ என்று உறுதியான குரலில் சொன்னார் சசிகலா.


இது பொய் வழக்குதான்!


'ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்​களின் விவரங்கள் தர முடியுமா?’ என நீதிபதி கேட்ட போது நீண்ட நேரம் யோசித்துவிட்டு, 'எழுத்து மூலமாகப் பதில் சொல்​கிறேன்’ என்றார் சசிகலா. அவரிடம், 'வழக்கின் முதல் குற்ற​வாளியான ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக 62.27 கோடி ரூபாய் சொத்துச் சேர்த்ததாகக் கூறப்படுவது குறித்து என்ன சொல்கிறீர்கள்?’ என்று நீதிபதி கேட்டார்.


'ஜெயலலிதாவின் சொத்து வேறு. எங்களுடைய சொத்து வேறு. அவர் மீது பொய் வழக்குத் தொடர வேண்டும் என்பதற்காகவே 'எங்களுடைய சொத்துக்களை எல்லாம் அவருடைய சொத்தாகக் கணக்கில் சேர்த்துள்ளனர். எங்களு​டைய சொத்துகள் அனைத்துக்கும் முறைப்படி வரி செலுத்தி இருக்கிறோம். அதே போல வங்கியில் கடன் வாங்கியே எங்களுடைய நிறுவனங்களை ஆரம்பித்துப் பராமரித்தோம். அதற்கான ஆதாரங்​களை எல்லாம் கோர்ட்டில் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறோம். ஜெய​லலிதாவை அரசியல் ரீதியாகப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகப் போடப்பட்ட பொய் வழக்கு’ என்ற சசிகலாவின் முகத்தில் புன்னகை வழிந்தது.


கருணாநிதி என்னை மிரட்டினார்!

கடைசியாக, 'இந்த வழக்கு குறித்து ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?’ என்று கேட்கத் தொடங்கிய‌ நீதிபதி, 'போன கேள்விக்கு நீங்கள் சொன்ன பதிலையே உங்கள் கருத்தாகஎடுத்துக்​கொள்கிறேன்’ என முடிக்க முயற்சிக்க, 'இல்லை... இல்லை... ஒரு சில வார்த்தைகள் மட்டும்’ என்று இழுத்தார் சசிகலா.


இதுவரை 1,031 கேள்விகளுக்கும் சசிகலா சொன்ன பதில், அவர் பக்கத்தில் இருக்கும் மொழிபெயர்ப்பாளருக்குக்கூட தெளிவாகக் கேட்காத வகையில் மெள்ளப் பேசினார். ஆனால், கடைசிக் கேள்விக்கு மட்டும் அனல் தெறிக்கும் வகையில் அரசியல் வசனம் பேசி அனைவரையும் மிரள வைத்தார்.'தமிழ்நாட்டில் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் அரசியல் பகை இருக்கிறது. அதனால், அரசியலில் இருந்து ஜெய லலிதாவை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்பதற்காக, வரு மானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்துச் சேர்த்ததாகப் பொய்யாக இந்த வழக்கைத் தொடர்ந்தார். இந்த வழக்கு ஆரம்பிக்கப்பட்டபோது அவரால் 66 கோடி ரூபாய்க்கான கணக்கைக் காட்ட முடியாததால், வழக்கு ஆரம்பித்து இரண்டு மாதங்கள் கழித்து என்னையும், சுதாகரன், இளவரசியையும் இதில் சேர்த்தார். எங்களுடைய சொத்துகளை எல்லாம் ஜெய லலிதாவின் சொத்தாகக் கணக்குக் காட்டியுள்ளார். இந்த வழக்குத் தொடர்ந்த இரண்டு மாதங்களில், ஜெயலலிதாவுக்கு எதிராகச் சாட்சியம் சொல்லும்படி கருணாநிதி என்னை மிரட்டினார். மறுத்து விட்டேன். அதனாலே, என்னை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்த்தனர். அது மட்டுமில்லாமல் ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் விசாரணையை நேர்மையாக நடத்தவில்லை. எங்களை அவமானப்படுத்தும் நோக்கிலும், ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் எங்கள் வீட்டில் சோதனை நடத்திய வீடியோ காட்சிகளை கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சியான சன் டி.வி-யில் அடிக்கடி போட்டுக்காட்டினர். ஜெயலலிதாவை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்ற கருணாநிதியின் பேச்சை விசாரணை செய்த அதிகாரிகளும் கடைப்பிடித்தனர். என்னுடைய விரிவான விளக்கத்தை எழுத்து மூலமாகவும் சொல்கிறேன்’ என்றபோது சசிகலாவின் முகத்தில் கோபம் கொப்பளித்தது.


அடுத்து சுதாகரன் வருகை!ஜெயலலிதா 1,384 கேள்விகளுக்கும், சசிகலா 1,032 கேள்விகளுக்கும் பதில் சொல்லி இருப்பதால், அடுத்து சுதாகரன் பதில் சொல்ல இருக்கிறார். சுதாகரன் வக்கீல் அன்புக்கரசு, 'நாடு முழுவதும் ஒரு வாரம் கோர்ட் விடுமுறை என்பதால், ஜனவரி 3-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைக்க வேண்டும்’ என்று கேட்டார்.


உடனே குறுக்கிட்ட நீதிபதி, 'இது ஸ்பெஷல் கோர்ட். ஸ்பெஷல் கேஸ். அதனால் அந்த விடுமுறை நமக்குப் பொருந்​தாது. அதனால் 26-ம் தேதி சுதாகரனிடம் கேள்விகள் கேட்கப்படும்’ என்று கறாராகச் சொல்லி, வழக்கை ஒத்திவைத்தார். இப்போது சுதாகரனுக்கு வக்கீல்கள் கோச்சிங் கிளாஸ் நடத்திவருகிறார்களாம்.
ஆக, தீர்ப்பு நெருங்குகிறது!நன்றி - ஜூ வி 

http://viruvirupu.com/wp-content/uploads/2012/02/Sasikala-Court-20120218-1.jpg


சென்னை "ஜெயலலிதாவுக்கு, எதிராக, என்னை கருணாநிதி தூண்டிவிட்டார் என, பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா கூறியுள்ளது, அப்பட்டமான பொய்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:ஜெயலலிதாவுக்கு எதிராக, பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்து வரும், சொத்துக் குவிப்பு வழங்கில், நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு, பதில் அளித்த சசிகலா, "ஜெயலலிதாவுக்கு, எதிராக, கருணாநிதி என்னை தூண்டிவிட்டார்' என, கூறியுள்ளது கலப்படமற்ற, அப்பட்டமான பொய். சசிகலா கூறுவதற்கு, எவ்வித ஆதாரமும் இல்லை. நீதிமன்றத்திலேயே, தவறான, தகவலை அவர் கூறியுள்ளார். சுதாகரன் திருமணத்தை ஜெயலலிதா நடத்தவில்லை; பெண் வீட்டார் தான் செலவழித்து நடத்தினர் என, சசிகலா சொல்லியிருப்பது, எந்தளவுக்கு பொய்யான தகவலோ, அதுபோல தான், என் மீது, சொல்லியிருக்கும் குற்றச்சாட்டும். 


நன்றி - தினமலர் 


http://tamil.oneindia.in/img/2012/06/07-sasikala8-300.jpg

Thursday, November 22, 2012

மங்கையர் திலகம் சோனாவும் , ஆண்கள் பாதுகாப்பு சங்கமும்

நடிகை சோனா மீது ராணிப்பேட்டை கோர்ட்டில் வழக்கு

 
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடையை சேர்ந்தவர் வக்கீல் ஜானகிராமன். இவர் பா.ம.க.வின் சமூக நீதி பேரவை மாநில துணை செயலாளராக உள்ளார்.

இந்த நிலையில் வக்கீல் ஜானகிராமன், ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆண்களை இழிவாக பேசியதாக திரைப்பட நடிகை சோனா மீது வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள குற்ற முறையீட்டில் கூறியிருப்பதாவது:- 

ஆம்பளைங்க எனக்கு டிஷ்யூ பேப்பர்தான் எனும் தலைப்பில் வந்துள்ள நடிகை சோனா பேட்டியானது ஆண் இனத்தை இழிவுபடுத்தும் விதமாகவும், கேவலப்படுத்தும் விதமாகவும், ஆபாசமாக, அருவருக்கதக்கதாகவும் அமைந்துள்ளது. 

ஆண்களுடன் சேர்ந்து வாழ்வதும், திருமணம் செய்து கொள்வதும் முட்டாள்தனம் என புனிதமான திருமண பந்தத்தை கொச்சைப்படுத்தி பேட்டியளித்துள்ளார்.

தமிழ் பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும், நாகரீகத்திற்கும் முன் உதாரணமாக திகழும் தமிழ்நாட்டில் இதுபோன்ற கருத்துகளால் பண்பாடு, கலாசாரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆண்கள் மீது பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் குறைய வாய்ப்புள்ளது. ஒட்டு மொத்த ஆண் இனத்திற்கும் உள்நோக்கம் கொண்டு அவதூறாக பேசியுள்ளார். 


நடிகை சோனா சினிமா துறையில் பிரபலமானவர் என்பதால் இந்த கருத்துகள் பெண்கள் மத்தியில் எளிதில் செல்ல வாய்ப்புள்ளது. பின் விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளளது.  நடிகை சோனா மீது குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 200-ன்கீழ் கோப்பில் எடுத்துக்கொண்டு நடிகை சோனாவிற்கு அழைப்பாணை அனுப்பி இந்திய தண்டனை சட்டப்பிரிவு 292 (1) (2), 293, 294, 499, 500, -ன்கீழ் வழக்கை விசாரித்து தகுந்த நீதி வழங்க கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு அந்த குற்ற முறையீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
 
 
 
நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்!

சண்டைக்கு தயார்!

ஆண்கள் சங்கத்தினர் மீது நடிகை சோனா புகார்!
நடிகை சோனா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 21.11.2012 புதன்கிழமை புகார் மனு ஒன்றை கொடுத்தார். ஆண்கள் சங்கத்தினரிடம் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்றும், ஆண்கள் சங்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்துள்ளேன் என்றும் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.நடிகை சோனா, வாரப்பத்திரிகை ஒன்றில், ஆண்களை இழிவுபடுத்தும் வகையில் பேட்டி கொடுத்ததாக செய்தி ஒன்று வெளியானது. ஆண்கள் செக்சுக்கு மட்டுமே பயன்படுவார்கள் என்றும், கையை துடைத்துவிட்டு, தூக்கி எறியப்படும் டிஷ்யூ பேப்பரை போன்றவர்கள் என்றும் சோனா தனது பேட்டியில் கூறியதாக, பத்திரிகை செய்தியில் கூறப்பட்டிருந்தது. மேலும் நான் திருமணம் செய்துகொள்ளவே மாட்டேன் என்றும் தனது பேட்டியில் சோனா மேலும் கூறி இருந்தார்.நடிகை சோனாவின் இந்த பேட்டி பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர், சோனாவின் பத்திரிகை பேட்டியை கண்டித்து போர்க்கொடி தூக்கினார்கள். சோனாவை கண்டித்து, சென்னை தேனாம்பேட்டை, கே.பி.தாசன் சாலையில் உள்ள அவரது அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சோனா தனது பேட்டிக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்கும் வரை, போராட்டம் தொடரும் என்றும் ஆண்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.இந்த நிலையில் நடிகை சோனா 21.11.2012 புதன்கிழமை மாலை 5 மணி அளவில் திடீரென்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். கூடுதல் கமிஷனர் ராஜேஷ்தாசை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் ஆண்களைப்பற்றி இழிவான கருத்து எதையும் சொல்லி பேட்டி கொடுக்கவில்லை என்று மறுத்திருந்தேன். குறிப்பிட்ட பத்திரிகை நிருபர் செய்தியை தவறாக கொடுத்துவிட்டார் என்றும் கூறி இருந்தேன்.


செய்தி வெளியிட்ட பத்திரிகை மீதும், செய்தியை கொடுத்த நிருபர் மீதும் கோர்ட்டில் மானநஷ்ட வழக்கும் போட்டுள்ளேன். 


ஆண்களை இழிவுபடுத்தி பேட்டி அளித்ததாக நடிகை சோனாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் சோனா வீட்டில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர் மீது கோர்ட்டில் வழக்க தொடரவும் தயாராகி வருகிறார்கள்.
 
தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக சோனா கூறினார். 

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, 
 
நான் ஆண்களை கேவலமாக பேசவில்லை. சொல்லாததை பத்திரிக்கையில் பேட்டியாக வந்துள்ளன. எனக்கு எதிராக ஆண்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அச்சங்கத்தை சேர்ந்த 120 பேர் என் வீட்டில் முற்றுகையிட்டு கோஷம் போட்டார்கள். நான் அப்படி பேட்டி அளிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துவிட்டேன். 

சம்பந்தப்பட்டவர்களுக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பி உள்ளேன். அதன் பிறகும் கண்டிக்கிறார்கள். போராட்டம் நடத்துகிறார்கள். தொடர்ந்து மிரட்டல்களும் வருகிறது.
 

நான் எங்கு போகிறேனோ அங்கெல்லாம் போராட்டம் நடத்துவோம் என்றும் கூறி உள்ளனர். இதனால் படப்பிடிப்புக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. நடிகர் சங்கத்தினர் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினர். இப்பிரச்சினையில் எனக்கு உதவுவதாக உறுதி அளித்தார்கள். சில பெண்கள் சங்கத்தினரும், மனித உரிமை அமைப்பினரும் என்னிடம் பேசினார்கள். என்னை தொடர்ந்து மிரட்டி வரும் ஆண்கள் சங்கத்தினர் மீது போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளனர்.
 
இவ்வாறு சோனா கூறினார்.
=

இவ்வளவு நடவடிக்கை எடுத்தபிறகும், ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் எனது அலுவலகம் மற்றும் எனது நகை ஷோரூம் கடை முன்பு போராட்டம் நடத்தினார்கள். ராணிப்பேட்டை கோர்ட்டில் என்மீது வழக்கும் போட்டுள்ளனர்.


மேலும் செல்போனில் பேசி என்னை மறைமுகமாக மிரட்டுகிறார்கள். வெளியில் நடமாடவிடமாட்டோம் என்கிறார்கள். வெளியில் வந்தால், என்மீது கற்களை வீசுவோம் என்று பயமுறுத்துகிறார்கள். இதனால் கடந்த 8 நாட்களாக நான் வெளியில் போகமுடியவில்லை. எனது அலுவலகமும், கடையும் மூடியே கிடக்கிறது.


எனவே எனக்கு பாதுகாப்பு கேட்டும், எனது அலுவலகம் மற்றும் கடைக்கும் போலீஸ் பாதுகாப்பு போடும் படியும், என்னை செல்போனில் மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை கோரியும், கூடுதல் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன்.


என்னை மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். செய்யாத தவறுக்காக நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. சட்டரீதியான சண்டைக்கு நான் தயார். இவ்வாறு சோனா தெரிவித்தார்.

 நன்றி - நக்கீரன்

Friday, February 24, 2012

டாக்டர் ஜெ ஜெ -சில குறிப்புகள், பல சிரிப்புகள் - பிறந்த நாள் காமெடி கும்மி

தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட நான்கு பேர் மீதும், விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடுவும், தமிழக போலீசாரும் பொய் வழக்கு தொடர்ந்துள்ளனர்,'' என்று பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் சசிகலா தெரிவித்தார்.


முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், இரண்டாவது குற்றவாளியான சசிகலாவிடம் நேற்று இரண்டாவது நாளாக கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விகள் கேட்பது துவங்கியது,


"ஜெயா பப்ளிகேஷனுக்கு, ஜப்பானிலிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மிஷின் வாங்கியது உண்மையா. அதற்கு பணம் எங்கிருந்து வந்தது' என்று நீதிபதி மல்லிகார்ஜுனையா கேள்வி கேட்டார்.


 அதற்கு சசிகலா, "மிஷின் வாங்கியது உண்மை தான். அது புது மிஷின் அல்ல; பழைய மிஷின். ஜெயா பப்ளிகேஷன் வருமானத்தில் தான் வாங்கப்பட்டது' என, நீண்ட விளக்கம் அளித்தார். (சசிகலாவின் "வாய்ஸ்' மிகவும் குறைவாக இருந்தது. ஏற்கனவே எழுதிக் கொண்டு வந்திருந்ததை பார்த்து, பார்த்து பதிலளித்தார்.)

 சி.பி - பாவம், ரொம்ப ஏழைங்க , புதுசு வாங்கக்கூட காசில்லாத ஏழைங்க.. ( மை டியர் மார்த்தண்டன் கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்)

 அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, "நான் சென்னையில் படித்தவன். தமிழில் பேசினால், என்னால் புரிந்து கொள்ள முடியும். சசிகலா கூறும் பதில் எனக்கு கேட்கவில்லை. அவரது பேச்சு சத்தம் குறைவாக உள்ளது. முன்வரிசையில் இருப்பவர்களுக்கு மட்டுமாவது அவரது பதில் கேட்க வேண்டும். அவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு தேவையற்ற நீண்ட விளக்கம் அளிக்கிறார். நீண்ட விளக்கங்களை எழுத்து மூலம் கொடுக்கலாம். ஜெயலலிதா அப்படித்தான் செய்தார். சசிகலா எழுதி வைத்து பதிலளிக்கிறார். குற்றவாளிகள் அவ்வாறு செய்யக்கூடாது' என்றார்.


சி.பி - அக்கா சொந்தமா சொன்னா அப்படியே சொல்லலாம், பொய் சாட்சின்னா எழுதிக்கொடுத்ததைத்தான் படிச்சு ஒப்பிக்க முடியும்..சசிகலா வழக்கறிஞர் மணிசங்கர் கூறுகையில், ""உடல் நலக்குறைவால் சசிகலாவால், அதிக சத்தமாக பேச முடிவதில்லை. சில கேள்விகளுக்கு நீண்ட விளக்கம் தேவைப்படுகிறது. சில நம்பர்களை குறித்து வைத்து பார்த்து கூறுகிறார்,'' என்றார்.

சி.பி - அதென்னமோ எல்லா அரசியல்வாதிகளும் பொதி எருது மாதிரிதான் இருக்காங்க, ஆனா போலீஸ் , கேஸ்னு வந்துட்டா ஹாஸ்பிடல்ல போய் படுத்துக்கறாங்க..
இதைத் தொடர்ந்து, ""சென்னை ஈக்காடுதாங்களில் நீங்கள் வாங்கிய இடம், கட்டடத்துக்கு நீங்கள் பணம் கொடுத்தீர்களா, பணம் எங்கிருந்து வந்தது,'' என, நீதிபதி கேள்வி கேட்டார். இதற்கு சசிகலா கூறுகையில், ""ஆஞ்சனேயா எண்டர்பிரைசஸ் கம்பெனி மூலம் அந்த இடம் வாங்கப்பட்டது. அதற்கு கணக்கு உள்ளது,'' என்றார். சசிகலா மெதுவாக பேசியதால், அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா எழுந்து வெளியே சென்று விட்டார். ""சென்னையில், கிரீன் பார்ம் ஹவுசுக்கு, 600 சதுர அடியிலான, 20, 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடத்தை, 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கினீர்களா,'' என, நீதிபதி கேட்டார். சசிகலா பதிலளிக்கையில், "அந்த இடத்தின் உரிமையாளர்களின் ஒருவரான ஜெகதீஷ்ராஜு குறுக்கு விசாரணையின் போது, விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு மிரட்டி எங்களுக்கு எதிராக கூறச் சொன்னார் என, வாக்குமூலம் அளித்துள்ளார். "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பது போல், இந்த வழக்கில் அனைத்து சாட்சிகளையும், விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு மற்றும் விசாரணை போலீசார் மிரட்டி எங்களுக்கு எதிராக கூற வைத்துள்ளனர். இந்த வழக்கு ஒரு பொய் வழக்கு. போலீசாரால் ஜோடனை செய்யப்பட்டுள்ளது' என்றார்.

 சி.பி - அக்கா, ஜட்ஜ் அய்யா கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லாம பானை, சோறு, சாம்பார்னு ஏன் மழுப்பறீங்க? 

மொழிபெயர்ப்பாளருக்கு சசிகலா கூறிய பழமொழியின் அர்த்தம் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார்.

 சி.பி -  FOR ONE POT RICE, SINGLE MEAL IS QUALITY  -இப்போ புரியுதுங்களா?

 வழக்கறிஞர் மணிசங்கர் எழுந்து அர்த்தம் கூறினார். பின்னர் நீதிபதி, அந்த பழமொழி எல்லாம் தேவையற்றது, என்றார். மதியம், 3 மணியிலிருந்து மாலை 5.15 மணி வரை, சசிகலாவிடம் மொத்தம், எட்டு கேள்விகள் கேட்கப்பட்டன. நேற்று காலையில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் தொடர்ச்சியாகவே, மீண்டும் கேள்விகள் கேட்கப்பட்டன.

 சி.பி - அக்காவிடம் கேட்ட கேள்விகள் எட்டு, அஷ்டமத்துல சனி...


 ஒவ்வொரு கேள்விக்கும் அவர் பதிலளிக்க, அதிக நேரம் எடுத்துக் கொண்டார்; நீண்ட விளக்கம் அளித்தார். இதனால், அரசு வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா, ""கேள்விகளுக்கு, "ஆம், இல்லை' என்று பதிலளித்தால் போதுமானது. நீண்ட விளக்கம் தேவையில்லை. அவ்வாறு விளக்கம் அளிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டால், அறிக்கையாக தாக்கல் செய்யலாம். இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது,'


 சி.பி- அக்கா, நடக்கறது அப்ஜெக்டிவ் டைப் கொஸ்டின் பேப்பர் எக்ஸாம், எஸ் ஆர் நோ சொல்லனும், சும்மா கதை விடக்கூடாதுங்கக்கோவ்

' என்றார். இதையடுத்து, இந்த வழக்கை இன்றைக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். சசிகலாவிடம் இதுவரை மொத்தம், 63 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. வழக்கு விசாரணை இன்று தொடருவதால், சசிகலாவும், இளவரசியும் பெங்களூரிலேயே தங்கியுள்ளனர்.

நன்றி - தினமலர்சி.பி - மொத்தம் 63 கேள்விகளா? கூட்டுத்தொகை 9 , ஐ ஜாலி ஜெ எஸ் ஆகிடுவாங்க


1.மேடம், பிறந்த நாள் பரிசா மக்களுக்கு ஏதாவது பரிசு கொடுங்க .


 ஜெ- ”ஷாக்”சர்ப்பரைஸா  ஆல்ரெடி கொடுத்தாச்சே,இன்னுமா?


--------------------------------------


2. 64 நாயன்மார்கள் வாழ்த்த ஜெ வின் 64 வது பிறந்த நாள் கொண்டாடுகிறார்.ஸ்கொயர் ரூட் ஆஃப் 64 = 8 மணிநேர மின் தடை


-----------------------------------

 3. புரட்சித்தலைவி புதிய சாதனை- தினத்தந்தியில் 18 தனி பக்கங்கள் பிறந்த நாள் விளம்பரங்கள்


-------------------------------


4. ஓ பி எஸ் - மேடம், உங்க பர்த்டேவை கொண்டாட பிரம்மாண்டமான கேக் கட் பண்ணிடலாமா? 


ஜெ- வேணாம், கரண்ட் கட் பண்ணிடலாம்

------------------------------------

5. அதிமுக தொண்டர்கள் ஜெ பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.. சாமான்யர்கள் மின் வெட்டால் திண்டாட்டம்.மின்துறை கள்ளாட்டம்

-----------------------------------


6.ops- ஏன் கோபமா இருக்கீங்க?

 ஜெ-சுப்ரீம் கோர்ட் ஜட்ஜூம், கலைஞரும் பிறந்த நாள் வாழ்த்து சொல்லவே இல்லையே?

-------------------------------------

7. கோட்டையில் புரட்சித்தலைவி, பெங்களூர் கோர்ட்டில் புரட்டுத்தலைவி, தமிழகம் வந்தால் இருட்டு, தலைவி!!


--------------------------------------

8. ஜெ- எதுக்காக கொள்ளையர்களை சுட்டீங்க?

கமிஷ்னர் - கேள்வி கேட்டோம், அவங்க பாஷை எனக்கு புரியலை,வெளில தெரிஞ்சா கேவலம்னு சூட்டட்,ஹி ஹி

-------------------------------------

9. துப்பாக்கியில் விஜய் என்'கவுண்டர்' ஸ்பெசலிஸ்ட்  # அப்போ கதையும் சுட்டதாத்தான் இருக்கும்

-----------------------------------
Tuesday, December 13, 2011

முல்லை பெரியாறு பிரச்சனை - கோர்ட் வெச்ச ஆப்பு, கேரளா திகைப்பு , தமிழகம் களிப்பு


 கேரளாவில் கலவரம் கிளப்பும் சகோதரர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.. தமிழ் நாட்டில் பஞ்சம் பிழைக்க வந்த மலையாளிகளின் எண்ணிக்கை  30 லட்சம் பேர்.. அவர்களுக்குத்தேவையான தண்ணீரைக்கொடுப்பதாக நினைத்துக்கொண்டாலே போதும்..

திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களீல் கார்மெண்ட்ஸ் பணீக்கு இருக்கும் டெய்லர்கள் பெரும்பாலும்  கேரளாவை சேர்ந்த பெண்களே.. இப்போது முல்லை பெரியாறு பிரச்சனைக்காக  தமிழர்களை தாக்குபவர்கள் அதே போல் தமிழ்நாட்டில் இருக்கும் கேரள மக்கள் நலன் பற்றி நினைத்துப்பார்க்க வேண்டும். தமிழகம் முழுவதும் இருக்கும் நர்ஸ்களீல் 68 % பேர் கேரளா பெண்களே..

 முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரும் கேரள அரசின் மனுவை,  உச்ச நீதிமன்ற 'அரசியல் சாசன பெஞ்ச்' இன்று தள்ளுபடி செய்தது.

அதேவேளையில்,  முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் மனு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு அந்த பெஞ்ச் உத்தரவிட்டது.
ஆனால், அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக, கேரள அரசும், அரசியல்வாதிகளும் பீதி கிளப்புவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இரு தரப்புக்கும் அறிவுரை...

இதில் குறிப்பிடத்தக்க அமசமாக, முல்லைப் பெரியாறு விவகாரத்தில், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல் கருத்துகளை வெளியிடாமல், மக்களிடையே நிலவும் பதற்றத்தைத் தணிக்க, பொறுப்புடன் செயல்படுமாறு,  தமிழக, கேரள தரப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை கேரள அரசு இதுவரை அமல்படுத்தவில்லை.

அதேவேளையில், முல்லைப் பெரியாறு அணையின் தற்போதைய நீர் மட்டமான 136 அடியை 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும், அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதால், புதிய அணை கட்ட வேண்டும் என்றும் கேரள அரசு வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக, அம்மாநில பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

கேரளாவில் நடந்த போராட்டங்களின்போது அணையை உடைக்க முயற்சிகள் நடந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில்,  உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும் என்றும், அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக, கேரள அரசும், அரசியல்வாதிகளும் பீதி கிளப்புவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக்கொண்டது.

அதேபோல், கேரள அரசு சார்பிலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க உத்தரவிட வேண்டும் என்றும், அப்போதுதான் நில நடுக்கங்களில் இருந்து அணையை பாதுகாக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், திமுக சார்பில் நேற்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், அணையின் நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக அதிகரிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கேரள அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்றும் திமுகவின் மனுவில் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பான தமிழகம் மற்றும் கேரள அரசின் மனுக்கள், நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் ஆர்.எம்.லோக்தா, தீபக்வர்மா, அனில்தவே, சந்திரமவுலி பிரசாத் ஆகிய 5 நீதிபதிகளைக் கொண்ட 'அரசியல் சாசன பெஞ்ச்' முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.  


கேரள அரசுக்குக் கண்டிப்பு..


அப்போது, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிய கேரள அரசைக் கண்டித்த அரசியல் சாசன பெஞ்ச், அந்த மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

ஏ.எஸ். ஆனந்த் அறிக்கையின்படிதான், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

அந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை, அணையின் நீர்மட்டம் குறைப்பது தொடர்பாக எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்பட மாட்டாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசுக்கு நோட்டீஸ்..

அதேவேளையில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் மனு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, அந்த பெஞ்ச் உத்தரவிட்டது.

இதுதொடர்பான விசாரணை நாளை மறுதினம் நடைபெறும் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் அறிவித்தது.

ஜெயலலிதாவுக்கு கண்டிப்பு...

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக, கேரள அரசும், அரசியல்வாதிகளும் பீதி கிளப்புவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மற்றொரு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

அத்துடன், முல்லைப் பெரியாறு தொடர்பாக பத்திரிகைகளில் ஒருபக்கம் விளம்பரம் வெளியிட்டதற்காக, முதல்வர் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் கண்டனம் தெரிவித்தது.

முல்லைப் பெரியாறு தொடர்பான வழக்கு, விசாரணையில் இருக்கும்போது, அதுபற்றி விளம்பரம் செய்யக் கூடாது என்றும், நீதிமன்ற உத்தரவை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.


'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்’  என்பதுபோல, 'அணை பலமிழந்து உள்ளது. அதை உடைத்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும்’ என்று இத்தனைக் காலமாக புளுகி வந்த கேரளாவின் குட்டு, அந்த மாநில உயர் நீதிமன்றத்திலேயே உடைபட்டு விட்டது. இதனால் பிரச்னையை திசை திருப்புவதற்காக, அரசாங்கத்தின் ஆசிகளோடு வன்முறைகளில் இறங்கிவிட்டனர் கேரள சகோதரர்கள்!


இதுதொடர்பாக தமிழகப் பொதுப்பணித் துறை முன்னாள் பொறியாளர் விஜயகுமார் ''முல்லை-பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தருவதற்காக 999 வருடங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இதை காலி செய்யவும், இடுக்கி அணைக்கு மொத்த தண்ணீரையும் கொண்டு செல்வதன் மூலம், கேரளத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்கவும்தான் 'அணை பலமாக இல்லை' என்கிற வதந்தியை கேரளா தொடர்ந்து கிளப்பி வருகிறது. இதற்கு ஆதரவாக சினிமா மூலமாகவும் பீதியைக் கிளப்புகிறது.


அணை மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது என்பதே உண்மை. அனுமதிக்கப்பட்ட அளவைவிட குறைவான நீர்க்கசிவுதான் இருக்கிறது. இதையெல்லாம் விளக்கி, அணையின் பாதுகாப்புத் தன்மை குறித்த தொழில்நுட்ப விளக்கங்களுடன் 'பெரியாறு அணையின் உண்மை நிலை’ என்கிற குறும்படத்தை தமிழக மூத்த பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் தயாரித்து வெளியிட்டுள்ளோம். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய பிரதமரை சந்தித்து இந்த குறும்பட சி.டி-யைக் கொடுத்துள்ளதுடன், ஒரு லட்சம் குறுந்தகடுகளைத் தயாரித்து இலவசமாக விநியோகம் செய்யத் தொடங்கியுள்ளார்.


நாம் சொல்வதுதான் உண்மை என்பது... தற்போது கேரள மாநில உயர் நீதிமன்றத்தில், கேரள அரசின் வாக்குமூலத்திலேயே உறுதிப்பட்டுவிட்டது. 'அணை உடைந்தால், கேரளாவில் உள்ள ஐந்து மாவட்டத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் இறந்து போவார்கள்' என்கிற பொய்யைத் திரும்பத் திரும்ப சொல்லி வந்தது கேரளா.


'ஒருவேளை அணை உடைந்தால், மக்கள் பாதுகாப்புக்காக என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.?’ என கேரள உயர் நீதிமன்றம் ஒரு கேள்வியை எழுப்ப... 'அணை உடைந்தால் பாதிக்கப்படப் போவது 500 பேர்கள் மட்டுமே. அத்துடன் அணை உடைந்தால், அந்த நீர் இடுக்கி அணைக்குத்தான் செல்லும்’ என அம்மாநில அட்வகேட் ஜெனரல் தண்டபாணி நீதிமன்றத்திலேயே உண்மையை உடைத்து விட்டார். இதனால், கேரளத்தின் பொய் முகம்... உலகுக்கே உரித்து வைக்கப்பட்டுவிட்டது''


''தற்போது அட்வகேட் ஜெனரலை உண்டு இல்லை என்று மிரட்டி வரும் கேரளத்தவர்கள், தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் எதிராக மிகமோசமாக வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு உள்ளனர். இந்த நிலையில் தமிழக விவசாயிகள் மற்றும் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் வாழும் தமிழர்களின் கோரிக்கை... 'மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டபோது கேரளாவுடன் இணைக்கப்பட்ட தேவிக்குளம், பீர்மேடு ஆகிய தமிழகப் பகுதிகளை மீண்டும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும்’ என்பதுதான். மக்கள் எழுச்சியின் மூலமாக இதை சாத்தியமாக்கும் முயற்சியில் பல்வேறு தமிழ் அமைப்புகள் இறங்கி விட்டன'' என்றும் சொன்னார்.


மத்திய பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்க வேண்டும்!

இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த வன்முறைவாதிகள் அணைப்பகுதியில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளதால்... அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதுதொடர்பாக  முல்லை-பெரியாறு மீட்புக்குழுவின் செயலாளர் தன்ராசு, ''வன்முறை மூலமாக அணையை உடைத்து, தனது திட்டத்தை நிறைவேற்றப் பார்க்கிறது கேரளா. டிசம்பர் 3-ம் தேதி கேரள இளைஞர் காங்கிரசைச் சேர்ந்தவர்கள், தமிழகத்துக்கு தண்ணீர் வரும் மதகுப் பகுதியில் நுழைந்து கண்ணில் பட்டதையெல்லாம் அடித்து நொறுக்கியுள்ளனர். அடுத்த நாள், கேரள பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்கள் பெரியாறு அணைப்பகுதியில் நுழைந்து பேபி அணையை இடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள போலீஸ் கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளது. இதுபோன்ற முயற்சிகள் காரணமாக எப்போது வேண்டுமானாலும், அணை உடைக்கப்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது. எனவே தமிழக முதல்வரும் மற்ற அரசியல்தலைவர்களும் கேட்டுக் கொண்டபடி உடனடியாக மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் பெரியாறு அணை ஒப்படைக்கப்பட வேண்டும். இதையும் மீறி அணைக்கு ஏதாவது பாதிப்பு வந்தால்... உடைபடுவது அணை மட்டுமல்ல... இந்திய ஒருமைப்பாடும்தான்'' என்று எச்சரிக்கைக் குரலில் சொன்னார்.

கேரளாவில் ஆளும் காங்கிரஸ் 70 எம்.எல்.ஏ-க்களையும், எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் 69 எம்.எல்.ஏ-க்களையும் வைத்துள்ளன. தற்போது, பெரியாறு பாசனப் பகுதியில் அமைந்துள்ள ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த பிரவம் தொகுதியில்  இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றால்... ஆட்சியே பறிபோய்விடும். அதனால்,   இந்தப் பிரச்னையை ஊதி பெரிதாக்கி வெற்றி பெற நினைக்கிறது காங்கிரஸ் என்றொரு குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.
'கூடன்குளம் பிரச்னைதான் தென்னக மீடியாக்களில் பிரதான பிரச்னையாக உருவெடுத்து உலகின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தது. இதை திசை திருப்புவதற்காகவே, கேரளாவை ஆளும் காங்கிரஸ் அரசின் உதவியோடு, முல்லை-பெரியாறு பிரச்னையை பெரிதாக ஊதிவிட்டிருக்கிறது மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு'' என்று குற்றம் சாட்டியுள்ளனர் கூடன்குளம் அணு உலைக்கு எதிராக உண்ணாவிரதம் நடத்திவரும் போராட்டக் குழுவினர்

Thursday, October 20, 2011

பெங்களூர் கோர்ட்டில் ஜெ - காமெடி கும்மி கலாட்டா

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கில், பெங்களூரு சிறப்புக் கோர்ட்டில் நேரில் ஆஜராவதற்கு, விலக்கு அளிக்க வேண்டும் என, தமிழக முதல்வர் ஜெயலலிதா, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு, நிராகரிக்கப்பட்டது. "இன்று ஆஜராக வேண்டும்' எனவும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதை கேள்விப்பட்டதும் ஜெ முகாமில் என்ன நடந்திருக்கும் என ஒரு ஜாலி கற்பனை.. இது சும்மா காமெடிக்கு மட்டும் தான் ரத்தத்தின் ரத்தங்கள் பொங்காமல் ஜாலியாக சிரித்துக்கொண்டே படிக்கவும்.. 

 http://www.dinamani.com/Images/article/2010/3/19/jaya.jpg
போயஸ் தோட்டத்தில் 

பெங்களூரு கோர்ட்டில் ஜெ., ஆஜராக வேண்டும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு # நான் தமிழ் நாட்டின் முதல்வர்,தமிழ் நாட்டை விட்டு வர முடியாது- ஜெ


----------------------------


. போயஸ் தோட்டத்தை தாண்டக்கூடாது என MGR சத்தியம் வாங்கி இருக்கிறார்-ஜெ ---------------------------------------------------------------------நான் பெங்களூர் போகும் சைக்கிள் கேப்பில் தீயசக்தியான கருணாநிதி ஆட்சியைப்பிடிக்க முயலமாட்டார் என்பதற்கு உத்தரவாதம் இருக்கிறதா? - ஜெ ஆவேசம்
-------------------------------------

http://inthiya.in/ta/wp-content/uploads/2011/03/jayalalitha_vaiko_alliance-cartoon.jpg
பெங்களூர் கோர்ட்டில் ஜெ - காமெடி கும்மி கலாட்டா

டவாலி - ஜெயலலிதா ஜெயலலிதா ஜெயலலிதா

ஜெ- புரட்சித்தலைவி என அழைத்தால்தான் வருவேன், என்னை யாரும் இது வரை பெயர் சொல்லி அழைத்ததில்லை..

ஓ.பி. பன்னீர் செல்வம் -
அம்மா,இது தமிழ்நாடில்லை..கர்நாடகா... எல்லாரும் படிச்சவங்க,தமிழர்கள் போல் துதி பாடிகளை இங்கே பார்க்க முடியாது.. அதுவும் இல்லாம இது கோர்ட்.. கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்குங்கம்மா..

ஜெ- சரி சரி.. முதல்வருக்கான அரியாசனத்தை கோர்ட் கூண்டில் கொண்டு வந்து போடுங்க.. நான் நின்னுட்டெல்லாம் பேச மாட்டேன்.. எம் ஜி ஆர் முன்னாலயே நான் உட்கார்ந்துதான் பேசுவேன்..

ஓ.பி. பன்னீர் செல்வம்
- ஓக்கே அம்மா, அப்புறம் இன்னொரு விஷயம்.. (அப்படியே குனிந்து பம்முகிறார்)

ஜெ- ம் ம் சொல்லுங்க


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeI8ja3ptOV5Bo2F9g-XeQAA-qDQP_ZQGm-_mv5I6OWQKHaP4tzv5Tm9YN2M48TNrGMniAfwMAvddGFQwEKKmN-08OmbHORL-Hivhiec_NgNvxFgdDqdQDF6L9IVTC0-c1hIY05tnxqrE/s1600/jj-cartoon.jpg

ஓ.பி. பன்னீர் செல்வம் -
இப்போ ஜட்ஜ் வருவாரு, அவர் வர்றப்ப நீங்க எழுந்து நிக்கனும்.. வணக்கம் சொல்லனும்..

ஜெ- யாரைப்பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டீங்க?நான் ஒரு நாட்டின் முதல் அமைச்சர்.. நான் எதுக்காக ஒரு சாதாரண ஜட்ஜைபார்த்ததும் எழுந்து நிக்கனும்? வணக்கம் வைக்கனும்? அதெல்லாம் நடக்காது.. நான் கவர்னரையே மதிக்க மாட்டேன்.. பிரதமரே எதிரில் வந்தாலும் துதிக்க மாட்டேன்..

ஓ.பி. பன்னீர் செல்வம் -
( எப்படியோ இந்த கேஸ்ல அம்மா மாட்டி உள்ளே போய்ட்டாங்கன்னா நாம தான் சி எம்.. அதுவரை பம்மிக்கிட்டே நடிக்க வேண்டியதுதான்.. )

ஜட்ஜ் வருகிறார், எல்லோரும் எழுந்து நிற்க ஜெ மட்டும் அமர்ந்த நிலையில் அந்த பக்கமாக முகத்தை திருப்பிக்கொள்கிறார்.. ஜட்ஜ் தலையில் அடித்துக்கொண்டே எல்லாம் என் தலை எழுத்து என மனசில் நினைத்த படியே அமர்கிறார்..

ஜட்ஜ் - வாதி என்ன சொல்ல நினைக்கிறாரோ அதை இப்போ சொல்லலாம்...

ஜெ - சாதா வாதி இல்லை. தமிழ்நாட்டையே கதி கலங்க வைக்கும் அரசியல்வாதி..  (சாதா வாதி இல்லைன்னா சரியான சந்தர்ப்பவாதியா?)போயஸ் தோட்டத்தின் தாதாதி தாதி.. நீங்க உடனடியா நான் குற்றமற்றவள்னு தீர்ப்பு சொல்லிட்டு கிளம்புங்க, அண்ணா நாமம் வாழ்க, புரட்சித்தலைவர் நாமம் வாழ்க..

ஜட்ஜ் - :வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பா உங்க கிட்டே விசாரணை பண்னனும்.. உங்க மாத வருமானம் என்ன?

ஜெ- ஒரு ரூபாய்.. 

http://www.dinamani.com/Images/New_Gallery/2010/1/10/10adade1.jpg

ஜட்ஜ் - என்னது ஒரு ரூபாயா? ( ஹார்ட் அட்டாக் வந்து நெஞ்சை பிடித்துக்கொள்கிறார்.. )

ஜெ - ஆமா.. முதல்வர் சம்பளத்துல ஏழைகளுக்கே தானம் பண்ணிடுவேன்.. எனக்குன்னு எதையும் வெச்சுக்க மாட்டேன்.. ( மைண்ட் வாய்ஸ் - ஊழல்ல சம்பாதிச்சது மட்டும் எனக்கு )

ஜட்ஜ் - அப்புறம் இத்தனை சொத்துக்கள், நிலங்கள், பணங்கள், தங்கங்கள் எல்லாம் எப்படி வந்தது?

ஜெ- எல்லாம் என் பிறந்த நாளுக்கு அமைச்சர்கள் நன்கொடையாக கொடுத்தது..

ஜட்ஜ் - ஓஹோ, அந்த சொத்து மதிப்பு நிலவரத்தை தர முடியுமா?

ஜெ - வழக்கு நடக்குதுன்னு தெரிஞ்சதும் எல்லாத்தையும் ஏழைகளுக்கும், பினாமிகளுக்கும் தானம் பண்ணிட்டேன்.. இப்போ என்ன பண்ணுவீங்க?

ஜட்ஜ் - இது கோர்ட்டை அவமதிக்கும் செயல்... 

ஜெ - சாரி யுவர் ஆனர்.. எனக்கு யாரையும் மதிச்சி பழக்கம் இல்லை, ஆனானப்பட்ட எம்ஜியாரையே நான் மதிச்சதில்லை.. ஏதோ ஜட்ஜ் என்பதல் பதிலாவது சொல்றேன்.. 

ஜட்ஜ் - உங்க மேல சுமத்தப்பட்ட குறச்சாட்டை நீங்க ஒத்துக்கறீங்களா?

ஜெ - இதுக்கு முன்னால ஆண்ட கருணாநிதி ஆட்சில பண்ணுன ஊழலை விட நான் கம்மியாதான் பண்ணி இருக்கேன்..

ஜட்ஜ் - அது இந்த கேஸ்க்கு அப்பாற்பட்டது.. நீங்க ஊழல் பண்ணுனது உண்மையா? இல்லையா? அதை மட்டும் சொல்லுங்க.. 

ஜெ - வழக்கை திசை திருப்பாதீங்க? நீங்க பிராமணர்களுக்கு எதிரானவரா? சூத்திர வம்சத்தில் பிறந்தவரா?அதனால்தான் இப்படி கேள்வி எல்லாம் கேட்கறீங்க.. 

ஜட்ஜ் - நீங்க சொன்னதை என்னால ஜீரணிக்க முடியலை..

ஜெ - காரணம் நீங்க தமிழர் இல்லை.. இதை விட பல அந்தர் பல்டிகளை எல்லாம் இஞ்சி மொரப்பான் சாப்பிடாமலேயே தமிழன் சகிச்சுட்டு இருக்கான்.. இதெல்லாம் ஜுஜுபி.. 

ஜட்ஜ் - உங்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது, இதுக்கு என்ன சொல்றீங்க?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkjHUVRc5hMlb9uHOYBKsB2ecMoZpm2jQrY7NJl8llKoCCv-kbyHRlYzLATDd3zGppMarVIMmDwZ3EUwP-uQoaNQ7mI4bguIhLSIEchfLbd1FUsHHDXYCyQ3YjossaIMv_j7YzsNuNne6J/s1600/8-2.jpg

ஜெ- இருக்கலாம், அந்த சாட்சிகள் இப்போ இருக்காங்களா? கூப்பிடுங்க பார்ப்போம்.. ஒரு பய வர முடியாது.. அண்ணாவின் ஆவி அவரை சும்மா விட்டிருக்காது.. அதிமுக தொண்டர்கள் அல்ப சொல்பமானவர்கள் கிடையாது.. 

ஜட்ஜ் - என்னம்மா, மிரட்றீங்களா?

ஜெ - இப்போ உங்க செல் ஃபோனுக்கு ஒரு  வீடியோ க்ளிப்பிங்க் வந்திருக்கும் பாருங்க.. அதை பார்த்துட்டு தீர்ப்பு சொல்லுங்க.. 

ஜட்ஜ் ( நடுங்கும் கைகளுடன் செல் ஃபோனை எடுத்துப்பார்க்கிறார்.. அவரது முகம் மாறுகிறது.. )

ஜெ மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சாட்சிகளுடன் நிரூபிக்கப்படிருந்தாலும் அந்த சாட்சிகள் யாரும் இப்போது உயிருடன் இல்லை.. மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபரே தான் குற்றமற்றவர் என ஆணித்தரமாக கூறுவதால் அவரது நேர்மையை சந்தேகிக்க முடியாது.. அவர் அது போல் ஊழல் செய்திருந்தால் புரட்சித்தலைவி ஆகி இருக்க முடியாது.. எல்லாவற்றையும் சீர் தூக்கிப்பார்க்கையில் அவர் குற்றமற்றவர் என தீர்ப்பு சொல்லி அவரை விடுதலை செய்கிறேன்... ஜெ- வெற்றி வெற்றி , இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி.. தமிழ் நாட்டின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய வெற்றி..  பன்னீர் செல்வம்.. ஜட்ஜோட ஃபேமிலியை ரிலீஸ் பண்ணிடுங்க.. நமது எம் ஜி ஆர் பத்திருக்கைல ஸ்கூப் நியூஸா இந்த வெற்றி செய்தி வரனும்.. கேன்சல் ஆல் புரோகிராம்ஸ் ஆஃப் ஜெயா டி வி.. 

வெற்றி வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும், அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் மக்களீன் அறியாமையையே சாரும்.. 


Wednesday, May 18, 2011

ஆட்சிக்கு வந்ததும் அம்மா சந்திக்கும் முதல் வழக்கு.. அதிமுக அதிர்ச்சி

http://mmimages.mmnews.in/Articles/2010/Nov/4115d304-e7a7-48b8-9e64-6ff0154e2a57_S_secvpf.gif 

தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தமிழக அரசுக்கு  நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. 

http://www.chikubuku.com/news_images/1268657988jayalaliitha%20AIADMK%20chief.jpg
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவில், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் இருந்து தலைமைச் செயலகத்தை மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

அதற்கான பணிகள் நடந்து வருவது பற்றிய புகைப்படங்களும் பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன.

அரசினர் தோட்டத்தில் ரூ.1000 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து தலைமைச் செயலகத்தை மீண்டும் கோட்டைக்கு மாற்றுவது சட்ட விரோதம்.

அதுமட்டுமல்ல. மீண்டும் கோட்டைக்கு மாற்றுவதால் மக்களின் வரிப்பணம் வீணாகும் நிலை ஏற்படும். கோட்டைக்கு மீண்டும் தலைமைச் செயலகத்தை மாற்றுவதற்கு புதிய அரசு சரியான காரணங்களை தெரிவிக்க வேண்டும்.


தனிப்பட்ட நபர்களின் விருப்பு, வெறுப்புகளுக்காக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. எனவே தலைமைச் செயலகத்தை அரசினர் தோட்டத்திலிருந்து கோட்டைக்கு மாற்றுவதற்கு தடை விதித்து, முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலர், பொதுப் பணித் துறைச் செயலர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.
 http://mmimages.mmnews.in/Articles/2011/Mar/1ac6b751-0864-4b9d-a1d8-b6bcab0fc787_S_secvpf.gif
இம்மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜேஷ்வரன், வாசுகி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச், அடுத்த மாதம் 15-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசின் தலைமை செயலாளர், பொதுப்பணித்துறைச் செயலாளர், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும், இந்த இட மாற்றத்துக்கு உத்தரவு பிறப்பித்தது யார்? ஆளுனரா? அல்லது வேறு யார் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

முன்னதாக, தலைமைச் செயலக இடமாற்ற பணிக்கு தடை விதிக்கும்படி வழக்கறிஞர்  கிருஷ்ணமூர்த்தி விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.


கலைஞர் இட்ட சட்டங்கள் , அவர் அமைத்த திட்டங்கள் எதுவும் உபயோகிக்கக்கூடாது என்பது ஜெவின் நினைப்பு. ஆனால் பொது மக்களின் வரிப்பணம் வீணாகும்போது அவர் தன் பிடிவாதத்தை தளர்த்தத்தான் வேண்டும்.

அதே போல் 108 ஆம்புலன்ஸ் திட்டம் கைவிடப்படும் என தெரிகிறது. வேண்டுமானால் பெயரை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டம் அது . தொடர வேண்டும் என்பதே நடு நிலையாளர்கள் அவா.. செய்வாரா? ஜெ?