Saturday, May 02, 2026

கர (2026)-தமிழ் - சினிமா விமர்சனம் (ஹெய்ஸ்ட் திரில்லர்)

 

தனுஷ் நடித்து லேட்டஸ்ட் ஆக வந்த இரு படங்களும்       சரியாகப்போகவில்லை.இட்லிக்கடை ,தேரே இஸ்க் மே (ஹிந்திப்படம்   ) .அதனால் ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் போர்த்தொழில்  என்ற மெகா ஹிட் கொடுத்த இயக்குநர்  விக்னேஷ் ராஜாவுடன் கரம் கோர்த்து கர கொடுத்திருக்கிறார் தனுஷ்.   


ஸ்பாய்லர்  அலெர்ட்


கதை நடக்கும் கால கட்டம் 1991.கல்ப் வார் நடந்த சமயம்.கதைக்களம்  ராமநாதபுரம் மாவட்டம் திருவெறும்பூர்.


நாயகன் ஒரு திருடன் ,கொள்ளைக்காரன்.தன் மைத்துனருடன் சேர்ந்து ஒரு எம் எல் ஏ வீட்டில் திருட முயற்சிக்கிறான்..அதில் நாயகன் மாட்டிக்கொள்கிறான்.


வில்லன் ஒரு போலீஸ் ஆபீசர்.ரிட்டையர்மெண்ட்க்கு முன் பிரமாதமான ஒரு கேசை டீல் செய்து புகழ் பெற நினைப்பவர்.

அதனால் நாயகன் மீது பல கேஸ்களை எழுதி சிக்க வைக்க நினைக்கிறார்.

இது தெரிந்த நாயகன்  லாக்கப்புலிருந்து தப்பி  ரேணிகுண்டா போய் நாயகியுடன் திருமணம் செய்து ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார்.


ஒரு கட்டத்தில் நாயகன் சொந்தமாக ஒரு மெஸ் வைக்கலாம் என்று முடிவெடுக்கிறான்.அதற்குப்பணம் தேவை.சொந்த ஊருக்கு வந்து அப்பாவிடம் பணம் கேட்கிறான்.ஆனால் டிராக்டர் வாங்குவதற்காக நிலத்தை வங்கியில் அடமானம் வைத்திருப்பதாக அப்பா சொல்கிறார்.


வங்கியைக்கொள்ளை அடித்து அந்தப்பணத்தை வைத்து லோனை அடைத்து நிலத்தை மீட்க நினைக்கிறார்.இதற்குப்பின் நிகழும் பரபரப்பான சம்பவங்களே படம்

நாயகன் ஆக தனுஷ் நடித்திருக்கிறார்.படத்துக்குப்படம் அவர் நடிப்பில் மெருகு ஏறுகிறது.


நாயகி ஆக மமிதா பைஜூ.கிராமத்துபெண் ரோல் தான்.தாவணி போட்ட தீபாவளி ஆக வருகிறார்.முந்தைய படங்களில் இவரை கிளாமர் க்யூனாகப்பார்த்தவர்கள் இதை ,இந்தத்தோற்றத்தை ரசிப்பார்களா?தெரியவில்லை.


வில்லன் ஆக ,போலீஸ் ஆபீசர் ஆக சுராஜ் வெஞ்சாரமூடு கலக்கி இருக்கிறார்.நுணுக்கமான  நடிப்பு.

நாயகனின் அப்பா ஆக இயக்குநர்  கே எஸ் ரவிக்குமார் நடிப்பு ,கெட்டப் இரண்டும் அருமை.

 பேங்க் மேனேஜர் ஆக ஜெயராம்.வில்லத்தனமான ரோல்.நன்றாக நடித்திருக்கிறார்.

நாயகனின் தாய்மாமன் ஆக வரும் கருணாஸ் ,மைத்துனர் ஆக வரும் பிருத்வி பாண்டியராஜன்,ஆடுகளம் நரேன்,ஸ்ரீ ஜா ரவி  என மற்ற அனைவர் நடிப்பும் கச்சிதம்.


இசை ஜி வி பிரகாஷ் குமார்.2 பாடல்கள் அருமை.பின்னணி இசை ஓக்கே ரகம்.ஆனால் விக்ரம் நடித்த அருள் படத்தில் இருந்து சில பி ஜி எம் களை சுட்டிருக்கிறார்.

தேனி ஈஸ்வர் தான் ஒளிப்பதிவு.பிரமாதமான படப்பிடிப்பு.1991 கால கட்டத்தைக்கண் முன் நிறுத்துகிறது ஆர்ட் டைரக்சன்.

ஸ்ரீஜித் சுரங்கின் எடிட்டிஙகில் முதல் பாதியில் 45 நிமிடங்கள் செம போர்.பின் பாதி நல்ல விறுவிறுப்பு.படத்தின் ரன்னிங்க் டைம் 161 நிமிடங்கள்.


ஆல்பர்ட் பிரகாஷ் உடன் இணைந்து திரைக்கதை எழுதி தனியாக இயக்கி இருக்கிறார்  இயக்குநர் விக்னேஷ் ராஜா.


சபாஷ்  டைரக்டர்

1  படத்தின்  ஓப்பனிங்க் சீனில் எம் எல் ஏ வீட்டில் கொள்ளை அடிக்க முயலும் காட்சி நல்ல விறுவிறுப்பு


2  கருணாஸ் ,பிருத்வி இவர்களுடன் இணைந்து பேங்க் கொள்ளை அடிக்கும் காட்சி அதகளம்.தியேட்டரில் விசில் பறக்கிறது.

3 இயக்குனர் கமல் ரசிகர் என்பதால் கமல் ரெப்ரன்ஸ் சீன் அருமை.தேவர் மகன் ஷூட்டிங் சீன சாமார்த்தியமாக இணைத்திருப்பது புத்திசாலித்தனம்.


4 வங்கிக்கடனால் மாதத்தவணை கட்ட முடியாமல் மக்கள் படும் அவஸ்தைகளை சொன்ன விதம்

5 வயதான விவசாயி ஆக வரும் எம் எஸ் பாஸ்கரின் கெட்டப் அருமை.அதே போல் கே எஸ் ரவிக்குமாரின் உடல் மொழி பிரமாதம்.


  

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 துணிவு ,ஜெண்டில்மேன் ,இந்தியன் ,இட்லிக்கடை ஆகிய படங்களில் பார்த்த சில காட்சிகள் ரிப்பீட் ஆவது மைனஸ்


2  திருட்டு என்பது ஒரு தொழில் அல்ல.அதை நியாயப்படுத்த முடியாது.திருடனை நாயகனாகக்காட்டி அவன் பக்க நியாயத்தை சொன்னது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.

3 நாயகி வருவது நான்கே காட்சிகள்.அவர் இல்லை என்றாலும் திரைக்கதையில் எந்த பாதிப்பும் இல்லை.

4  நாயகன் கொள்ளை அடிப்பது. தனியார் வங்கியா?அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கியா?என்ற விபரங்கள் மிஸ்சிங்

5 கதை நடக்கும் காலகட்டம் 1990,களில் என காட்ட வேண்டிய அவசியமே இல்லை.சிசிடிவி கேமரா பயம் இல்லாமல் ஈசியாகக்கொள்ளை அடிக்கலாம் என்பதற்காகவே அப்படி 1990 எனக்காட்டுகிறார்கள்.


6 படம் சொல்லும் நீதி மோசம்.பேங்க்கில் லோன் வாங்கிக்கட்ட முடியவில்லை எனில் அதே பேங்க்கில் கொள்ளை அடி.இது தான் நீதி.என்ன கொடுமை சார் இது?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  தனுஷ் ரசிகர்களுக்குப்பிடிக்கும்.போர்த்தொழில் படத்துடன் ஒப்பிட்டால் இயக்குநருக்கு ஒரு சறுக்கல்.இட்லிக்கடையுடன் ஒப்பிட்டால் தனுஷ் க்கு இது ஓக்கே ரகப்படம். ரேட்டிங்க்  2.5/5


Kara
Theatrical release poster
Directed byVignesh Raja
Written by
  • Alfred Prakash
  • Vignesh Raja
Produced byIshari K. Ganesh
Starring
CinematographyTheni Eswar
Edited bySreejith Sarang
Music byG. V. Prakash Kumar
Production
companies
Vels Film International
Think Studios
Distributed byRed Giant Movies
Release date
  • 30 April 2026
Running time
161 minutes[1]
CountryIndia
LanguageTamil




முதல்வர் ஸ்டாலின் தேர்தல் தினத்தன்று விஜய்-ன் தவெக டிரஸ் கோடில் வந்தது சரியா?தவறா? ஒரு பார்வை


 வாக்கு செலுத்த  வாக்குச்சாவடி வரும் பிரபலங்களுக்கு டிரஸ் கோடு முக்கியமா?



மிக மிக முக்கியம்.பிரபல சினிமா ஹீரோவாக இருந்தாலும் சரி ,அரசியல் தலைவராக இருந்தாலும் சரி தங்கள் தலைவர் என்ன உடை உடுத்தி வருகிறார்.அதில் என்ன குறியீடு இருக்கிறது என்பதைப்பார்த்து ரசிகர்கள் பாலோ செய்வார்கள்.

2026 தேர்தலில் முதல்வர் மு க ஸ்டாலின் காக்கி பேண்ட் வெள்ளை சட்டை அணிந்து வந்து ஓட்டுப்போட வந்தது பெரிய சர்ச்சையைக்கிளப்பியது.காரணம் த வெ க தலைவர் விஜய் யின் பேவரைட் டிரஸ் மேட்ச் அது.தெரிந்தோ தெரியாமலோ ஸ்டாலின் அதே டிரஸ் கோடில் வந்ததால்  தொண்டர்கள் ,ரசிகர்கள் ஸ்டாலினே விஜயை ஆதரிக்கிறார் என்ற மீம்ஸ் சோசியல் மீடியாக்களில் பரவியது.ஸ்டாலின் இதைத்தவிர்த்திருக்கலாம்.வழக்கம் போல் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில்வந்திருக்கலாம்.

Friday, May 01, 2026

Prathichaya(2026)-மலையாளம்/தமிழ்- சினிமா விமர்சனம் (பொலிட்டிக்கல் க்ரைம் திரில்லர்)@ஜியோ ஹாட் ஸ்டார்

\


26/3/2026 முதல் திரை அரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற இந்தப்படம் இப்போது 24/4/2026 முதல் ஜியோ ஹாட் ஸ்டார் ஓ டி டி யில் தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது.


சர்வம் மாயா மெகா ஹிட்டுக்குப்பின் நிவின் பாலியின் அரசியல் சம்பந்தப்பட்ட படம் இது.நம்ம ஊர் ஜனநாயகன் போலவே கேரளாவில் பரபரப்பைக்கிளப்பிய படம்              


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின் அப்பா மாநில முதல்வர்.நாயகனுக்கு ஒரு அண்ணன் உண்டு.ஆனால் அவன் மேல் அப்பாவுக்கு நம்பிக்கை இல்லை.நாயகன் மீது தான் அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்.

நாயகனுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. ஐ டி பீல்டில் இருக்கிறார்.ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி ஆரம்பிக்கும் ஐடியாவில் இருக்கிறார்.


இந்த தருணத்தில்  நாயகனின் அப்பா முதல்வன் படத்தில் வருவது போல் ஒரு டி வி லைவ் ஷோவில் கலந்து கொண்டு  பேட்டி அளிக்கிறார்.


அப்போது திடீர் என்று திரையில் ஒரு க்ளிப்பிங்க் ஓடுகிறது.அதில் ஒரு இளம்பெண் தோன்றி முதல்வர் என்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டார் எனக்குற்றம் சுமத்துகிறாள் 


மொத்த மாநிலமும் பரபரப்பாகிறது.முதல்வர் ராஜினாமா செய்ய நேரிடுகிறது.அன்று இரவு முதல்வர் வீட்டில் மரணம் அடைகிறார்.


முதல்வரின் மகன் ஆன நாயகன் முதல்வர் ஆகிறான்.தன் அப்பாவின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின்  பின்னணியில் இருக்கும் சதியை உலகத்துக்கு அம்பலப்படுத்த முயற்சிகள் எடுக்கிறான்.நாயகனின் முயற்சி வெற்றி அடைந்ததா?என்பது மீதிக்கதை.


நாயகன் ஆக நிவின் பாலி கம்பீரமாக வருகிறார்.அப்பாவுடனான பாசம் வெளிப்படுத்தும்போது கண்களைக்கலங்க வைக்கிறார்.

அவர் தவிர ஆன் அகஸ்டின் ,பாலச்சந்திரமேனன்,சராப் யூ தீன்,நீத்து கிருஷ்ணா ,ஹரி ஸ்ரீ அசோகன் ஆகியோர் முக்கியக்கதாபாத்திரங்களில்  நடித்திருக்கிறார்கள்.


நாயகனின் அம்மாவாக சின்னப்பூவே மெல்லப்பேசு புகழ்  சபீதா ஆனந்த்  கச்சிதமாக நடித்திருக்கிறார்.

ஜஸ்டின் வர்கீஸ் தான் இசை.பின்னணி இசையில் வேகம் கூட்டுகிறார்.

திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் பி உன்னிகிருஷ்ணன்


சபாஷ்  டைரக்டர்

1 முதல்வரின் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு எழுந்த பின் வீட்டில் அவரிடம் நெருங்க 5 வயதுப்பேத்தியே பயப்படுவது கண்டு மனம் கலஙகிஅவர் இறக்கும் காட்சி

2 நாயகனின் சொந்த அண்ணனே முதல்வர் மீது குற்றம் சுமத்திய பெண்ணுடன் தொடர்பில் இருப்பது,அது மீடியாவில் எக்ஸ்போஸ் ஆவது


3.  முதல்வரை சதி வலையில் மாட்ட வைத்தது நாயகனா?நாயகனின் அண்ணனா?என்ற சந்தேகத்தை ஆடியன்ஸ் மனதில் மாறி மாறி வர வைத்த லாவகம்


  ரசித்த  வசனங்கள் 


1  எல்லா உண்மைகளையும் சத்தமா சொல்லக்கூடாது.

2  அன்பும் ,அரவணைப்பும் காட்ட வேண்டிய இடத்தில் காட்டனும்

3 தோத்தவங்களா நாம நினைச்ச நிறையப்பேரு  ஜெயிச்சவங்கதான்.

4 நம்ம வாழ்க்கையை மத்தவங்க வாழ்க்கையில் தொடரும்போதுதான்  நம் வாழ்க்கை வெற்றி பெறும்.

5 எத்தனை படிகள் ஏறினாலும் ஏற இன்னும் படிகள் மீதி இருக்கும் எல்லை இல்லா ஏணி தான்  வாழ்க்கை.

6 லஞ்சம் வாங்குவது ஒரு கலை.அதை சரியா செய்யனும்

7 சில விஷயங்கள் மாறாம இருப்பதுதான் நல்லது.

8 பத்திரிக்கை வேலையும் ,குற்ற உணர்வும் எப்பவும் ஒண்ணா சேராது.

9.ஒன் நேஷன் ,ஒன் இன்பர்மேஷன்- இதைவிட fastline உலகத்தில் வேறு இருக்கா என்ன?


10  லைப் பார்ட்னர் மனசுல என்ன இருக்கும்?யோசனைப்செய்வது பெரிய ட்ராஜடி


11 சென்ஸ் ஆப் லாஸ் சை  விட தாங்க முடியாத வலி எதுவும் இல்லை.

12 பிரேக்கிங்க் ஸ்டோரி மீன்ஸ் பிரேக்கிங்க் த ட்ரூத்.

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 இயக்குநர் அஜித்குமார் ரசிகர் போல.படத்தில் எல்லாக்கேரக்டர்களும் ஸ்லோ மோஷனில் ஸ்டைலிஷ் ஆக நடப்பதைக்காட்டுவதைக்கட் பண்ணி இருந்தால் படத்தின் நீளத்தில் அரை மணி நேரம் மிச்சம் ஆகும்.

2 நாயகனின் மனைவி பதவி ,அதிகாரத்துக்கு ஆசைப்படாதவர் என காண்பித்தது சரி.ஆனால் நாயகன் முதல்வர் பதவியை ஏற்றதும் அவரைப்பிரிவது நம்ப முடியவில்லை.முதல்வரின் மனைவி என்ற கவுரவத்தை யாராவது இழப்பார்களா?

3. முதல்வர் மீது குற்றம் சுமத்திய பெண்ணின் 5 வயது சிறுமியைப்பாதுகாக்க 25 ரவுடிகள் இருப்பது எதற்கு?

4 கதைக்கருவும் ,திரைக்கதையும்  அடுத்தடுத்து இன்ன காட்சிகள் தான் வரும் என யூகிக்க வைப்பவை தான்.புதிதாக எதுவும் இல்லை.

5 நாயகனின் அப்பா நேர்மையான முதல்வர் இல்லை. லஞ்சம்,ஊழல் செய்பவர்தான்.அவர் ஏன் கார்ப்பரேட் கம்பெனியின் டீலிங்க்கிற்கு ஒத்துக்கொள்ளவில்லை?வர்ற வருமானத்தை ஏன் விடுகிறார்?என்பதற்கு விளக்கம் இல்லை.


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -13+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  டூயட்,காமெடி ,பாட்டு இல்லாத பொலிடிக்கல் க்ரைம் திரில்லர் பார்க்க விரும்புகிறவர்கள் பார்க்கலாம்.ரேட்டிங்க் 2.5/5