Monday, July 24, 2023

வீரன் (2023) - தமிழ் - - சினிமா விமர்சனம் ( சூப்பர் நேச்சுரல் ஆக்சன் ) @ அமேசான் பிரைம்

 


தமிழ்  சினிமா  உலகில்  சத்ய  ஜோதி  ஃபிலிம்சுக்கு  என்றும்  மரியாதை  உண்டு .படம் ஹிட்  ஆவது  ஒரு  புறம். திரைக்கதை  வழக்கமான  மாமூல்  மசாலா  குப்பையாக  இருக்காது /. அந்த  நிறுவனமும்  “ மரகத  நாணயம்” இயக்குநர் சரவணனும் இணைந்த  படம்  இது . தமிழில்  ரிலீஸ்  ஆகி   பெரிய  ஹீரோக்கள்  நடித்தும்  ஓடாத  ஜீவாவின்  முகமூடி , சிவகார்த்திகேயனின்  ஹீரோ  ஆகிய  சூப்பர்  நேச்சுரல்  படங்களின்  வரிசையில்  ஓடும்  படமாக  இது  ரிலீஸ்  ஆகி  ஹிட்  அடித்திருக்கிறது . 2023  ஜூன்  2  ம் தேதி  திரை  அரங்குகளில்  ரிலீஸ்  ஆன  இப்படம்  இப்போது  அமேசான்  பிரைம்  ஓடிடி யில் காணகிடைக்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  சின்ன  வயசில்  நண்பர்களுடன்  ஊர்  சுற்றும்போது  அந்த  கிராமத்துக்காவல்  தெய்வம் வீரன்  என்னும்  எல்லைக்காவல்  கடவுளை  கிணடல்  செய்கிறான். அப்போது  அவனை  மின்னல்  தாக்குகிறது . பாதிக்கப்பட்ட  அவனை  ஹாஸ்பிடலில்  சேர்க்கிறார்கள் , குணம்  ஆகவில்லை .. ஆனால்  அவனுக்கு  எக்ஸ்ட்ராவாக  சில  சக்திகள்    வந்ததை  உணர்கிறான். எதிராளியின்  மனதை  ஆக்ரமித்து  தன்  வசப்படுத்தும்   ஹிப்னாடிசம்  மாதிரி  ஒரு  பவர்  (  ஏழாம்  அறிவு  நோக்கு  வர்மம்  மாதிரி ) . கைகளின்  வழியே மின்  காந்த  அலைகளை  அனுப்பி  எதிரியைத்தாக்குதல்


 இதனால் பயந்து  போன  நாயகனின்  தந்தை  அவனை  சிங்கப்பூருக்கு  அவன்  அக்கா வீட்டுக்கு  அனுப்பி  விடுகிறார். சிங்கப்பூரில்  15  வருடங்கள்  தங்கி  வாழும்  நாயகன்  ஒரு  நாள்  தன்  கிராமத்துக்கு  ஏதோ  அழிவு  வரப்போவதாக  கனவு  கண்டு  தன் சொந்த  ஊருக்கு  வருகிறான் 


வில்லன்  26  கிராமங்களை  வளைத்துப்போட்டு  குழாய்களை  மண்ணுக்கு  அடியில்  பதித்து  லேசர்  மின்  தடம்  அமைக்க  திட்டம்  போடுகிறான் . அதில்  அந்தப்பாதையில்  நாயகனின்  கிராமம்  தான்  கடைசி  ஊர் .அந்த லேசர்  மின்  தடம்  வெடித்தால்  கிராமமே  அழிந்து  விடும்  என  நாயகன்  ஊர்  மக்களை  எச்சரிக்கிறான் . ஆனால்  வில்லன்  நிலங்களை  டபுள்  மடங்கு  விலை  கொடுத்து  வாங்கி விட்டான் 

 இதற்குப்பின்  நாயகன்  வில்லனின்  சதித்திட்டத்தை  எப்படி  முறியடித்தான்  என்பதே  கதை 


நாயகனாக  ஹிப்  ஹோப்  தமிழா  ஆதி  அடக்கி  வாசித்து  இருக்கிறார் , இதற்கு  முந்தைய  சில  படங்களில்  கொஞ்சம்  ஓவராக  அலட்டல்  அவரது  உடல்  மொழியில்  இருந்தது. இதில்  இல்லை ., கச்சிதமான  நடிப்பு .  தாடியுடன்  இருக்கும்  கெட்டப்பில்  தான்  பாவம்  சோகமாக  காய்ச்சல்காரன்  போல்  இருக்கிறார் 


 நாயகியாக  அதிரா ராஜ் , சினேகாவின்  முகச்சாயல் , சுவலட்சுமியின்  கண்கள்  என  கலந்து  கட்டி  இருக்கும்  அவர்  கண்ணியமாக  ஆடை  விலகாமல்   நடித்திருக்கிறார். நாயகன் - நாயகி  காதல்  காட்சிகள்  மெயின்  கதையை  பாதிக்காமல்  லைட்டாக  வ்ந்து  போவது இயக்குநரின்  புத்திசாலித்தனம்


 வில்லனாக  வினய். கெட்டப்  நன்றாக  இருக்கிறது . நடிப்பு  வழக்கம்  போல , ஆனால்  அவருக்கு  அதிக  வாய்ப்பில்லை ., அவரை  விட  அவரது  தம்பியாக  வரும்  தாடிக்கார  வில்லன்  அதிக  காட்சிகளில்  வருகிறார்


 முனீஷ்காந்த் +  காளி வெங்கட்  கூட்டணி  காமெடி  பண்ணுகிறோம்  என்ற  பேரில்  மொக்கை   போடுகிறார்கள் . நாயகனின்  நண்பனாக  வரும் சசி  இயல்பான  நடிப்பு , இவர்  ஒரு  யூ  ட்யூபர்  பிரபலம் 


எதிர்பாராத  ஆச்சரியமாக  நாயகிக்கு  மாப்பிள்ளையாக  வரும்  முருகானந்தம்  மணிவண்ணன்  சாயலில்  ஒன் லைனர்  கமெண்ட்களால்  சிரிக்க  வைக்கிறார்.  இயல்பான  டயலாக்   டெலிவரிக்கு  சபாஷ் 


தீபக்  டி  மேனனின் ஒளிப்பதிவில்  கிராமத்து  அழகை  கண்  முன்  காட்டுகிறார், ஜி கே பிரசன்னா  வின்  எடிட்டிங்கில்  156  நிமிடங்கள்  ஓடி  நம்  பொறு,மையை  சோதிக்கிறது , இன்னும்  ஷார்ப்  ஆக  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம் , ஹிப் ஹோப்  தமிழா  வின்  இசையில்  3  பாடல்கள்  மூன்றுமே  தேவை  இல்லாத  ஆணி . படத்தின்  வேகத்துக்கு  தடை 


திரைக்கதை எழுதி  இயக்கி இருப்பவர்   ஏ ஆர்  கே  சரவன். , மரகத  நானயம்  படத்தை  விட  ஒரு  மாற்று  கம்மி  தான்


  சபாஷ்  டைரக்டர்( ஏ ஆர்  கே  சரவன்)


1  கிராமத்து  வீரன்  கோயில்  பெருமை பற்றி  ஒரு  கதை ரெடி  பண்ண  முயலும்நாயகன்  அண்ட்  கோ ஒவ்வொரு  கதை  அவுட்  ஆகும்போதும் இது  முண்டாசுப்பட்டி  கதை , இது  இன்று  நேற்று  நாளை  கதை , இது மரகத  நாணயம்  கதை  என  ஓட்டுவது  நல்ல  வாரல் 


2  காமெடியன்  முதுகில்  நெம்பர்  பிளேட்  பொறித்த  ஐடியா  குட்


3 வில்லன்  இது  சாமி  மேட்டர்  இல்லை  ஆசாமி  மேட்டர்  என்பதை  உணர்ந்து  ஆளைக்கண்டு  பிடிக்க  போலீஸ்  ஸ்டேஷனில் எலெக்ட்ரோ  மேகனடிக் மெஷர்மெண்ட்  மிஷினை  வைத்து  நாயகனை  ட்ராக்  பண்ண  ட்ரை  பண்ணும்  ஐடியா 


4    நாயகிக்கு  நிச்சயிக்கப்பட்ட  மாப்பிள்ளையை  தீர விசாரிக்கும்  பாட்டி   நீ  இன்னாருக்கு இன்ன  உறவு  தானே? என  ஒவ்வொரு  கேள்வியாகக்கேட்டு  பின்  கடைசியாக  நீ செல்விக்கு  சித்தப்பா  முறை  ஆகுதே., எப்படி  அவளைக்கட்டுவே? என  கேட்கும் இடம்  கலக்கல்  காமெடி . பின்  அதைத்தொடர்ந்து  சீமையிலே  ஒரு  சொந்தக்காரப்பெண் இருக்கு  என  ஆரம்பிக்கும்  காமெடியு,ம் அருமை 

5  நாயகியின்    மாப்பிள்ளை  முருகானந்தம் காமெடி  டிராக்


  ரசித்த  வசனங்கள் 


1   நான்  வீட்டு  வரியே  ஒழுங்கா  கட்ட  மாட்டேன் , என்  கிட்டே  போய் கோயிலுக்கு டொனேஷன்  வரி  கேட்டா ? 


2  டீ  க்கு காசு  குடுப்பா 


இந்த  டீயோட  சேர்த்து  என்  கணக்கு  1,37,420  ரூபா 


 கடைசில  வர்ற  420 எதுனா  குறியீடா?


3  சார்  இவ்ளோ பதட்டப்படறதைப்பார்த்தா  1  பொண்ணு  அழகா  இருக்கனும், 2  உங்களுக்கு  வயசாகி  இருக்கனும், எது  சரி ?


 ரெண்டும்தானப்பா. பொதுவா  நமக்கு  35  வயசு  ஆகிட்டா  பொண்ணு  கிடைக்காது  பொம்பளைதான்  கிடைக்கும்னு  சொல்வாங்க 


4  நீங்க  தானே  சிங்கப்பூர்  குமரன் ?


 இல்லை , திருப்பூர்  குமரன் 


5   நம்ம  ஊர்க்காரங்களை  மாத்தனும்’ 


 அவனுங்க  போட்டிருக்கற  சட்டையையே  தீபாவளிக்கு  தான்  மாத்துவானுங்க 


6  சும்மா  சாகப்போறவனை    ஹீரோ  ஆக்காதே!


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  சின்ன  வயசுல    ஊரில்  இருந்து  கிளம்பி  சிங்கப்பூர்  போயிடறார். 12   வருடங்கள்  கழித்துத்தான்  ஊருக்கு  வருகிறார். அதுவரை  ஊராருடன்  எந்தத்தொடர்பும்  இல்லை ( வாட்சப் , ஃபோன் )  ஆனால்  நாயகி  நாயகனை  அடையாளம்  கண்டு  கொள்வது  எப்படி ? ? 


2  நாயகன்  சூப்பர்  ஹீரோ  அவதாரம்  எடுக்கும்போது  அவர்  முகத்தில்  ஒரு  தேஜஸ்  இல்லை . எனர்ஜெடிக்கான  பாடி  லேங்க்வேஜ் இல்லை , செத்தவன்  கையில்  வெத்தலை  பாக்குக்கொடுத்த  மாதிரி  இருக்கிறார்


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   சின்னக்குழந்தைகள்  பார்த்து  ரசிக்கத்தக்க  ஒரு  அம்புலிமாமா  கதை . ரேட்டிங் 2.5 / 5 


Veeran
Veeran film poster.jpg
Release poster
Directed byARK Saravan
Written byARK Saravan
Produced by
StarringR.Badree
CinematographyDeepak D. Menon
Edited byPrasanna GK
Music byHiphop Tamizha
Production
company
Distributed bySakthi Film Factory
Release date
  • 2 June 2023
Running time
156 minutes
CountryIndia
LanguageTamil

0 comments: