Sunday, July 09, 2023

தூக்குத்தூக்கி (1954) - சினிமா விமர்சனம் ( ஹிஸ்டாரிக்கல் மெலோ டிராமா ) @ யூ ட்யூப்


திரைப்பட விழாவில்  சிறந்த  படம் , சிறந்த  நடிகர் ஆகிய  இரு விருதுகளை ப்பெற்ற  இப்படம்  1935 ல் உடுமலை  நாராயண கவி  எழுதிய  இதே  டைட்டிலில்  ரிலீஸ்  ஆன  படத்தின்  ரீ மேக் தான். கூண்டுக்கிளி  ரிலீஸ்  ஆன  அதே  நாளில்  ரிலீஸ்  ஆன  இப்படம்  பிரம்மாண்டமான  வெற்றி  பெற்றது 


 ஸ்பாய்லர்  அலெர்ட்



சுந்தராபுரி  ராஜ்ஜியத்தின்  மன்னர்  தன்  மூன்று  மகன்களை  அழைத்து  நாட்டின் பொருளாதாரத்தை  பலப்படுத்த  சொல்கிறார். பொருளாதாரம்  பலவீனம்  அடைந்து  நாடு  மிக  மோசமான  நிலையில்  இருக்கிறது. ஏதாவது  வியாபரம்  செய்து  பொருள்  ஈட்டி  வர  வேண்டும்  என்பது  மன்னனின்  உத்தரவு .


 இதில்  நாயகன்  மட்டும்  தான்  உருப்படி, மற்ற  இருவரும்  டம்மி  பீஸ்கள் நாயகன்  ஒரு  ஆராய்ச்சி  நிலையம்  சென்றபோது  அங்கே  இருந்த  பண்டிதர்கள்  ஐந்து  முக்கியமான  வாழ்வியல்  உண்மைகளை  சொல்கிண்றனர்

1   அப்பா  எப்போதும்   மகன்  சம்பாதிக்கும்  செல்வத்தின்  மீது  தான்  கண்  வைப்பார்\

2  மகனின்  இன்ப  துன்பங்களில்  அம்மா  மட்டும்தான்  பங்கெடுப்பார்

3  சகோதரி  என்பவள்  சகோதரன்  கொண்டு  வரும்  சீர்  வரிசைகளில்  மட்டும்தான்  ஆர்வம்  உள்ளவளாக  இருப்பாள்

4   கணவனைக்கொலையும்  செய்வாள்  பத்தினி 

5   உயிர்  காப்பான்  தோழன் 


பணம்  ஈட்டும்  முன்  நாயகன்  பண்டிதர்கள்  சொன்ன  இந்த  ஐந்து  உண்மைகளைப்பற்றி  ஆராய  விரும்புகிறான். எனவே  அரண்மனைக்கு  திரும்ப  செல்கிறான், ஆனால்  அப்பாவுக்கு  மகன்  வெறும்  கையுடன்  வந்தது  பிடிக்கவில்லை , திருப்பி  அனுப்புகிறார்.


அம்மாவிடம்  செல்கிறார். நீ பணம்  ஏதும்  சம்பாதிக்க  வேண்டாம்,  என்னுடனேயே  அரண்மனையில்  இருந்து  விடு  என்கிறார்


சகோதரியின்  நாட்டுக்கு  விருந்தினராக  செல்கிறார்  நாயகன், முதலில்  நாயகனை  வரவேற்ற  சகோதரி  அவன்  ஏதும்  சீர்  கொண்டுவரவில்லை  என  அறிந்து  அவனை  விரட்டுகிறாள்


கடைசியாக  தன்  மனைவியின்  நாட்டுக்கு  செல்கிறான்  நாயகன், நாயகனின்  மனைவிக்கு  ஒரு கள்ளக்காதலன்  ஆக  ஒரு  சேட்டு  இருக்கிறான்  என  நாயகனின்  உயிர்  நண்பனும்  அந்நாட்டு  அமைச்சரும்  மகனும்  ஆகியவன்  சொல்கிறான் . நாயகன்  முதலில்  நம்பவில்லை

பிறகு  மாறு  வேடம்  தரித்து  அந்த  சேட்டு  கிட்டேயே   பணீயாளாக  வேலைக்கு  சேர்ந்து  தன்  மனைவியின்  கள்ளக்காதலை  அறிகிறான். கணவனுக்கு  உண்மை  தெரிந்து  விட்டதே  என  அவனைக்கொல்ல  முயல்கிறாள் 

 நாயகனின்  மனைவி  தன்  அப்பாவிடம்  கணவனைப்பற்றி  அபாண்டமாகப்பழி  சொல்கிறாள் . உங்களைக்கொல்ல  உங்கள்  மருமகன்  சதி  செய்கிறார். அவருக்கு  இந்த  ராஜ்ஜியம்  வேண்டுமாம்  என  பொய்  சொல்கிறார். இதனால்  நாயகன்  நாடு  கடத்தப்படுகிறான் 

  வேறு  ஒரு  நாட்டில்  மன  நலம்  குன்றியவனாக  நடிக்கிறான், அந்த  நாட்டு  இளவரசி  அவனை  விரும்புகிறாள் 


 இதற்குப்பின்  என்ன  நடந்தது  என்பதே  மீதி  பாதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  சிவாஜி .  சொல்வதை  சொல்லும்  கிளிப்பிள்ளையாக  அவர்  அப்பாவியாக  பெசுவது  தியேட்டரில்  கைதட்டலை  அள்ளியது .  மனைவியைப்பற்றிய  உண்மை  அறிந்து  அவர்  அதிர்ச்சி  அடைவது  அருமை 


மனைவியாக , காதலியாக  , இளவரசியாக  முறையே  லலிதா, பத்மினி , ராகிணி. டி எஸ்  பாலையா  சேட்டு  வில்லனாக  கலக்கி  இருக்கிறார் 


ஜி  ராமநாதன்  இசையில்  11  பாடல்கள் , அவற்றில்  நான்கு  பாடல்கள்  செம  ஹிட் , குறிப்பாக  பெண்களை  நம்பாதே கண்களே பெண்களை  நம்பாதே  வீண்  பெருமை  பேசி   பட்டி  தொட்டி  எல்லாம்  ஒலித்தது . இதன்  அப்டேட்டட்  வெர்சன் தான் பொம்பளைங்க  காதலைத்தான்  நம்பி  விடாதே  ( உன்னை  நினைத்து ) 


ஆர்  என்  வேணுகோபால்  எடிட்டிங்கில்  படத்தின்  நீளம்  3  மணி  நேரத்துக்கு  3  நிமிடங்கள்  தான்  குறைவு . ரொம்ப  இழுத்து  விட்டார்கள் , கடைசி  ஒரு  மணி  நேரம்  இழுவை 

ஆர் எம்  கிருஷ்ண  சாமியின்  ஒளிப்பதிவு  அழகு , அவரேதான் இயக்கமும்




சபாஷ்  டைரக்டர்  (ஆர் எம்  கிருஷ்ண  சாமி) 

1   நாயகனின்  உயிர்  நண்பனை  மனைவி  கோள்  மூட்டி  விடும்  காட்சி 


2  நாயகனின்  மனைவி  வில்லியாக  தன்  அப்பாவிடம்  கணவனைப்பற்றியே  அபாண்டமாகப்-பேசி   நம்ப  வைக்கும்  காட்சி \


3 நாயகன்  சேட்டுவிடம்  வேலையாளாக  சேர்வது 




செம  ஹிட்  சாங்க்ஸ்


1  பெண்களை  நம்பாதே கண்களே பெண்களை  நம்பாதே  வீண்  பெருமை  பேசி 


2   ஏறாத  மலை தனிலே 


3   சுந்தரி  சவுந்தரி  நிரந்தரியே 

4   இன்ப  நிலை  காண    இன்னும்  ஏன்

5  பியாரி  நிம்பள்  மேல  நமக்கு  மஜா 

6  அபாய  அறிவிப்பு  அய்யா  அபாய  அறிவிப்பு 

7   குரங்கில்  இருந்து  பிறந்தவன்  மனிதன் 

8  சட்டாம்  பிள்ளை 

9   கண்களில்  புகுந்து  கருத்தினில் கலந்த 

10  ஆணையும், பெண்ணையும்  அழகு  செய்வது  ஆடை 

11  வாரணம்  ஆயிரம்  சூழ 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  கள்ளக்காதலியின்  கணவன் யார்? என்பதை ஒருவன்  தெரிந்து  கொள்ளாமலா  இருப்பான்? பொதுவாக ஒரு  முன்  ஜாக்கிரதைக்காகவாவது  பார்த்து  வைத்துக்கொள்வார்கள் 


2 மகளின்  கள்ளக்காதல்  ஊரில்  இருக்கும்  பலருக்கும்  தெரிந்திருக்க   சொந்த  அப்பாவுக்குத்தெரியாதா? 


3 தனது  கள்ளக்காதல்  விஷயம்  தன்  நெருங்கிய  தோழிக்கு  தெரிந்து இருப்பது  பற்றி  அவள்  கவலைப்படவே  இல்லை , அவளால்  என்றைக்காவது  ஆபத்து  என  யூகிக்க  மாட்டாளா? 


  

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பின்  பாதி  போர்  அடித்தாலும்  பார்க்க  வேண்டிய  படம்  தான்  ரேட்டிங் 2.5 / 5 


தூக்கு தூக்கி
தூக்கு தூக்கி.jpg
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்ஆர்.எம்.கிருஷ்ணசாமி
மூலம் திரைக்கதைஏ.டி.கிருஷ்ணசாமி
வி.என்.சம்பந்தம்
அடிப்படையில்உடுமலை நாராயண கவி
எழுதிய தூக்கு தூக்கி
உற்பத்திஎம். ராதாகிருஷ்ணன்
நடித்துள்ளார்சிவாஜி கணேசன்
லலிதா
பத்மினி
ஒளிப்பதிவுஆர்.எம்.கிருஷ்ணசாமி
திருத்தியவர்ஆர்.எம்.வேணுகோபால்
இசைஜி.ராமநாதன்
தயாரிப்பு
நிறுவனம்
அருணா பிலிம்ஸ்
மூலம் விநியோகிக்கப்பட்டதுகேஎஸ் படங்கள் [1]
வெளிவரும் தேதி
  • 26 ஆகஸ்ட் 1954
நேரம் இயங்கும்
177 நிமிடங்கள் [2]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

0 comments: