Monday, July 17, 2023

THAARAM THEERTHA KOODARAM (2023) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ அ,மேசான் பிரைம்


 தாரம் தீர்த்த  கூடாரம்  என்ற  டைட்டிலுக்கு   நட்சத்திரம்  கட்டப்பட்ட  விதானம் *(  THE STAR  BUILT  CANOPY )  என்று  பொருள் .இப்படம்  திரை  அரங்குகளில்  விஷூ  ரிலீஸ்  ஆக  தமிழ்ப்புத்தாண்டான  14/4/2023  அன்று  ரிலீஸ்  ஆனது , விமசகர்களின்  பாராட்டையும்  ஆடியன்சின்  வரவேற்பையும்  பெற்றது . இப்போது அமேசான்  பிரைம்  ஓடிடி  யில்  காணக்கிடைக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


18  வயது  ஆன  நாயகி தன்  ஐந்து  வயதே  ஆன  தங்கையுடன்  லாட்ஜில்  தங்கி  இருக்கிறார். அப்பா  குடும்பத்தை  விட்டு  விட்டு  போய்  விட்டார் , அம்மா  வேறு  ஒரு  வாழ்க்கையை  தேடிக்கொண்டார். அம்மாவின்  கணவன் இரு  வாரிசுகளையும்  ஏற்க முன்  வராததால் நாயகி  தன்  தங்கையுடன்  தனியே  வாழ்கிறார். நாயகியின் அப்பாவால்  ஏற்பட்ட  கடன்  நிறைய  இருக்கிறது , அதற்கு  நாயகி  தான்  பொறுப்பு , விரைவில்   கடனை  அடைத்து  விடுவதாக  நாயகி  டைம்  கேட்டு  இருக்கிறார்


நாயகன்  ஃபுட்  டெலிவரி  பாய்  ஆக  வேலை  செய்கிறார். இவருக்கு  பை போலார்  டிஸ்  ஆர்டர்  நோய்  தாக்கி  இருப்பதால் குடும்பத்தாரால்  கை  விடப்பட்டவர் . இவரும்  லாட்ஜில்  ரூம்  எடுத்து  வாழ்கிறார்


ஒரே  லாட்ஜில்  தங்கி  இருப்பதால்;  நாயகன் , நாயகி  இருவருக்கும் பரிச்சயம்  உண்டாகிறது . நாயகி  போலீஸ்  கான்ஸ்டபிள்  பணிக்கு  முயற்சி  செய்கிறார். நாயகன் , நாயகி, அவள்  தங்கை  மூவரும்  ஒரே  லாட்ஜ்  ரூமில் ஒன்றாக  வசிக்கிறார்கள் 


இதற்கிடையே  நாயகியின்  கடன்  தந்த  பார்ட்டி  விரட்டிகொண்டே  இருக்கிறார்., அவர்களிடம் இருந்து  நாயகி  தப்பித்தாரா? நாயகன் - நாயகி  காதல்  கை  கூடியதா? நாயகிக்கு  போலீஸ்  வேலை  கிடைத்ததா? இவை  எல்லாம் பின் பாதி  திரைக்கதை  சொல்லும்  சேதிகள் 


நாயகன்  ஆக  கார்த்திக்  ராமகிருஷ்ணன்  மிகை  நடிப்பு  இல்லாமல்  யதார்த்தமான  நடிப்பைத்தந்திருக்கிறார். நாயகியிடம், நாயகியின்  தங்கையிடம்  அவர்  கட்டும் பரிவு  அருமை .  வில்லனிடம்  அடிபடும்போது பரிதாப்பட வைக்கிறார்


நாயகி  ஆக   நைனிதா  மரியா  குடும்பப்பாங்கான  முகம். ஒப்பனை  இல்லாத  அழகிய  முகம், கண்களாலேயே  கதை  சொல்லும்  லாவகம் , சிறப்பாக  நடித்திருக்கிறார். போலீஸ்  யூனிஃபார்மில்  கெத்தாக  இல்லை  என்பது  மைனஸ் 


நாயகின்  ஐந்து  வயது  தங்கையாக  அயன் சஜித் அஞ்சலி  பட  பேபி  ஷாம்லி போல  அசத்துகிறார். சிரிக்கும்போது  கொள்ளை  அழகு 


கோகுல்  ராமகிருஷ்ணன்  திரைக்கதை  அமைத்து  இயக்கி  இருக்கிறார். நம்ம  ஊர்  செல்வராகவன் - தனுஷ்  போல  இப்படத்தின் இயக்குநர்  , நாயகன்  இருவரு ம்  சகோதரர்கள்  போல 

இரண்டு  மணி  நேரம் ஓடும்  அளவு  க்ரிஸ்ப்  ஆக  கட்  பண்ணி  இருக்கிறார்  எடிட்டர் .,  2  மெலோடி  பாடல்கள்  போட்டிருக்கிறார்  இசை  அமைப்பாளர்  மெஜோ  ஜோசப் , நிகில்  சுரேந்திரன்  ஒளிப்பதிவு  கண்களுக்கு  இதம் 


 மிக  மெதுவாக  நகரும்  திரைக்கதை   என்றாலும்  குடும்பத்துடன்  பார்க்கத்தக்க யதார்த்தமான   லவ்  ஸ்டோரி சபாஷ்  டைரக்டர்

1  முன்றே  மூன்று  முக்கிய  கேரக்டர்கள் . ஒரே  ஒரு  லாட்ஜ்  இவற்றை  வைத்து 75%  படத்தை  முடித்த  லாவகம்


2  நாயகன், நாயகி  இருவரும்  திருமணமும்  ஆகாமல் ., காதலர்க்ளாகவும்  இல்லாமல்  லாட்ஜில்  ஒரே  ரூமில்  தங்கியும்  கண்ணியம்  காத்த  விதம் 


3  நாயகி ,  குழந்தை  இருவரின் அற்புதமான  இயல்பான  நடிப்பு 


  ரசித்த  வசனங்கள் 


1   ஆர் யூ  ஓக்கே?  ( நீ  நலமா? )  என  என்னைக்கேட்ட  முதல்  ஆத்மா  அவள்  தான் 


2   என்னை  மாதிரி ஆதரவில்லாத  ஆட்களுக்கு ஒரு  வாழ்க்கை  தரனும்


 சரி  நீ  அவங்களைக்காப்பாத்து , உன்னை  நான்  காப்பாத்தறேன்


3   நான்  ஒரு  யூஸ்லெஸ்  ஃபெலோனு  டாக்டர்  சொல்லிட்டார், என்னை  யூஸ்ஃபுல்  பர்சனா  மாத்த  ஒரு  வாய்ப்பு  கொடு 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 பொதுவாக  லாட்ஜ்கள் , ஹோட்டல்களில் ரூம்  சாவி  2  செட்  இருக்கும்,  ஒரு  செட்  கஸ்டமரிடம், இன்னொரு  செட்  லாட்ஜ் மேனேஜர் வசம் , ரூம்  க்ளீனிங்க்கு  துப்புரவுப்பணியாளர்  மேனேஜரிடம்  உள்ள  சாவியை  வாங்கி  ரூம் திறந்து  க்ளீன்  பண்ணுவாங்க . அதை  எப்படி  நாயகன்  சமாளிப்பார் ? 


2  ஒவ்வொரு  முறை  காலை , மாலை  குழந்தையை  ஸ்கூலுக்கு  அனுப்பும்போதும், திரும்பக்கூட்டி  வரும்போதும்  லாட்ஜ் மெயின் ஸ்விட்ச்  பாக்சை  மெயின்  ஆஃப்  பண்ணி  மேனேஜரை  அங்கே  வர  வைத்து  அந்த  கேப்பில்  வெளியே  கூட்டிப்போவது  ஒரு  நாள் , இரு  நாட்கள்  எனில்  ஓக்கே , தினசரி  இதே  சம்பவம் தொடர்ந்தால்   டவுட்  வராதா? 


3   நாலைந்து  பேர்  ஆட்கள்  கொண்ட  கந்து  வட்டி  ஃபைனான்ஸ்  கும்பலிடம்தனி  ஆளாக  நாயகன்  போய்  அடி  வாங்கி  வருவது  மடத்தனம், சும்மா  இரக்கம்  ஏற்பட  செயற்கையாய்  அமைத்த  காட்சி  மாதிரி  இருக்கிறது 


4  கொடுத்த  கடனை  திருப்பிக்கேட்கும்  ஆள்  காரில்  நாயகியிடம்  தவறாக  நடக்க  முயல்வதும்  அதற்கு  நாயகி இணங்காமல்  எதிர்த்ததும்  நாயகியைத்தாக்கியதை  நாயகி  போலீசில்  ஏன்  புகார்  தரவில்லை ? 


5 வில்லன்  நாயகியை  பைக்கில்  துரத்தி  வரும்போது  நாயகி  தன்  பைக்கால்  வில்லனின்  பைக்கை  மோதி  வில்லனை  கீழே  விழச்செய்கிறாள் , வில்லன் ஸ்டாப்ட்  அவுட்  இது  கொலை  தான், ஆனால்  இது  எதிர் பாராத  விபத்து  என  நாயகன்  சமாதானப்படுத்துகிறான். 


6  பத்திரப்பதிவு  நேரத்தில்  தான்  வேண்டும்  என்றே  ஆதார்  கார்டை  கிழித்துப்போட்டு  விட்டேன்  என  நாயகன்  சொல்லநண்பன்  அடிக்கிறான். நெட்  செண்ட்டரில்  போய்  ஆதார்  நெம்பர்  தந்தால்  புது  கார்டு  அப்பவே  டவுன் லோடு  பண்ணி  வாங்கிக்கலாமே? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பொறுமை  குணம்  கொண்டவர்கள் காண  வேண்டிய  கண்ணியமான  ஃபேமிலி  மெலோ  டிராமா , ரேட்டிங் 2.75 / 5 

0 comments: