Saturday, July 08, 2023

தனிப்பிறவி (1966) -தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா) @ யூ ட்யூப்

 


 சேகுவாரா  கெட்டப்பில்  நடிக்க  ஆசைப்பட்ட  எம் ஜி ஆர்  இப்படத்தில்  கதைக்கு  சம்பந்தமே    இல்லாமல்  குறுந்தாடி  கெட்டப்பில்  வருவார்.ரசிகர்கள்  சந்தேகப்படக்கூடாது  என  படத்திலேயே  அதற்கு  தன்னிலை விளக்கம்  கொடுத்து  சமாளித்திருப்பார் . இது  கமர்ஷியலாக  பெரிய  சக்சஸ்  ஆகாத  படம்,  70  நாட்கள்  ஓடிய  படம் . ,முருகன் -வள்ளி  கெட்டப்பில்  எம்ஜிஆர் - ஜெ  தோன்றும்  பாடல்  காட்சி  அதிமுக  தொண்டர்கள்  வீட்டில்  போஸ்டர்  ஆக  காலண்டர்  ஆக  இருக்கும் 


    ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  அம்மா, அப்பா , தங்கை  என  சராசரி  வாழ்க்கை  நடத்தி  வருபவர் அந்த  ஊர்  போலீஸ்  சப் இன்ஸ்பெக்டரின்  மகள்  ஒரு  ஆபத்தில்  சிக்கும்போது  நாயகன்  அவரைக்காப்பாற்றி  நாயகிக்கு  அறிமுகம்  ஆகிறார். இருவரும்  காதலிக்கின்றனர் . நாயகனின்  தங்கை ஒரு  ஆபத்தில்  சிக்கும்போது  போலீஸ்  இன்ஸ்பெக்டரின்  தம்பி  அவரைக்காப்பாற்றுகிறார். இருவருக்கும்  காதல்  மலர்கிறது . இப்படி  ஒரு பக்கம்  ரொமாண்டிக்  ட்ராக்  ஓடிக்கொண்டிருக்கிறது 


பல  கடத்தல்  வழக்குகளில்  சிக்கிய   பெரிய  கடத்தல்  பாஸ் ஒருவரை  போலீஸ்  வலை  வீசி  தேடிக்கொண்டிருக்கிறது. அந்த  பாஸை  அந்த  கடத்தல்  கூட்டத்தைச்சேர்ந்தவர்களே  நேரில்  பார்த்ததில்லை . எல்லாம்  குரல்  மூலம்  ஆணை  பெற்று  நிறைவேற்றல்  தான்  நடந்து  வருகிறது .ஒரு  கடத்தல்  நடக்கும்போது  அதில்  வரும்  பணத்தை  ஆட்டையைப்போட  ஒருவன்  திட்டம்  இடுகிறான். ஆனால்  அவன்  கூடவே  இருக்கும்  அடியாள்  தான்  உண்மையான  பாஸ்  என்பது அவனுக்குத்தெரியாது 


 தன்  முகமூடியைக்கழட்டி  தான் யார்  என்பதை  பாஸ்  அறீவிக்கும்போது  அனைவருக்கும்  அதிர்ச்சி . இதற்குப்பின் திரைக்கதையில்  நிக்ழும்  திருப்பங்கள்  தான்  க்ளைமாக்ஸ் 


நாயகன்  ஆக  எம்  ஜி  ஆர் .  என்  தங்கையின்  திருமணம்  நடக்கும்  வரை  இந்த  தாடி  கெட்டபில் தான்  இருப்பேன்  என  அவர்  அம்மாவிடம்  விளக்கம்  கூறும்போது  சிரிப்பு  வருகிறது . டி  ராஜேந்தருக்கே  முன்னோடியா  இருந்திருக்கார் 


பெண்களுக்கு  எங்கே  எந்த  வடிவத்தில்  ஆபத்து  வந்தாலும்  ஆல  மரத்தின்  விழுதுகளைப்பிடித்து  வந்தாவது  கரெக்ட் ஆக ஆஜர் ஆவது  எப்படி ? என  இவர்  படத்தைப்பார்த்துத்தான்  கற்றுக்கொள்ள  வேண்டும் . சுறு சுறுப்பான  நடிப்பு . வழக்கமாக அவரது  பாணி  தத்துவப்பாடல்கள் ,  துதி  பாடும்  வசனங்கள்  உண்டு 

 நாயகியாக   ஜெ .  டூயட்  பாட  மட்டுமே  வாய்ப்பு .போலீஸ்  சப் இன்ஸ்பெக்டர்  ஆக  எம் என்  ந்ம்பியார் . வில்லனிச  நடிப்பு  கச்சிதம் .  அசோகன் ,சாண்டோ  சின்னப்ப  தேவர்  போன்றோரின்  நடிப்பும்  கனக்ச்சிதம் 

வி   கே  ராமசாமி , நாகேஷ் , மனோரமா  காமெடி  டிராக்  சுமார்  ரகம் தான் 


கே  வி  மகாதேவன் இசையில்  7  பாடல்களில்  5  பாடல்கள்  சூப்பர்  ஹிட் . மீதி  இரண்டும்  மோசம்  இல்;லை 


145  நிமிட்ங்கள்  ஓடும்படி  இயக்குநரே   எம் ஜி  பாலுராவ்  உடன்  இணைந்து  எடிட்டிங்  செய்திருக்கிறார். இன்னும்  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம் 


மதுரை  திருமாறன்  கதைக்கு  ஆரூர்  தாஸ்  திரைக்கதை  அமைத்திருக்கிறார். வர்மா வின்  ஒளிப்பதிவில்  க்ளோசப்  காட்சிகள்  அழகு 



சபாஷ்  டைரக்டர்  ( எம் ஏ  திருமுகம் ) 


 பாடல்  காட்சிகளை  படம்  ஆக்கி  விட்டு  அதற்கு  இடை  இடையே  மேட்ச்  ஆகற  மாதிரி  காட்சிகளை  வடிவமைத்தாரோ  என  ச்ந்தேகிக்க  வைக்கும்  அளவுக்கு  மாமூல்  கமர்ஷியல்  மசாலா  டெம்ப்ளேட்டில்  திரைக்கதை  அமைத்த  விதம் 

2  அசோகன் , நம்பியார்  என  இரு  வில்லன் நடிகர்களை  புக்  செய்து  விட்டு இருவரையுமே  நெகடிவ் ரோலில்  காட்டிய  விதம் 


3   பாஸ்   யார்  என்பதை அவிழ்க்கும்  மர்ம  முடிச்சு  கச்சிதம்.,படத்தில்  சுவராஸ்யமான  ஒரே  அம்சம்  அதுதான் 

செம  ஹிட்  சாங்க்ஸ்


1  உழைக்கும்  கைகளே! உருவாக்கும்  கைகளே


2  ஒரே முறைதான்  உன்னோடு  பேசிப்பார்த்தேன், நீ ஒரு  தனிப்பிறவி 


3  கன்னத்தில்  என்னடி  காயம் ? அது வண்ணக்கிளி  செய்த  மாயம்


4  எதிர்பாராமல்  நடந்தடி..

5  நேரம்  நல்ல  நேரம்

6  சிரிப்பென்ன    சிரிப்பென்ன 

7 என்றும்  பதினாறு 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   ஆயிரத்தெட்டு  வியாக்யானம்  பேசும்  நாயகன்  திருட்டுப்பொருள்  தான்  அடமானத்துக்கு  வரும்  என்ற  உண்மை  தெரியாமலா  இருப்பார் ? 


2  ஒரு  போலீஸ்  ஆஃபீசருக்குஎந்நேரமும்  ஸ்டேஷனில்  பணி  இருக்கும், வீட்டில்  குடும்பத்துக்காக  நேரம் செலவளிக்க  வேண்டி  வரும் ., அவர்  எப்படி  இன்னொரு  சைடு  பிஸ்னெஸ் ஆக  கடத்தல்  காரணாக  அடியாட்களுடன்  உலா  வர  முடியும் ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பாடல்களுக்காக  பார்க்கலாம் ,படம் சுமார்  ரகம்  தான் . ரேட்டிங் 2.25 / 5 


Thanippiravi
Thanippiravi poster.jpg
Theatrical release poster
Directed byM. A. Thirumugam
Screenplay byAaroor Dass
Story byMadurai Thirumaran
Produced bySandow M. M. A. Chinnappa Thevar
StarringM. G. Ramachandran
Jayalalithaa
CinematographyN. S. Varma
Edited byM. A. Thirumugam
M. G. Balu Rao
Music byK. V. Mahadevan
Production
company
Release date
  • 16 September 1966
Running time
145 minutes
CountryIndia
LanguageTamil

0 comments: