Sunday, July 30, 2023

நீலகிரி எக்ஸ்பிரஸ் (1968) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @ யூ ட்யூப்

  


1967ல்  ரிலீஸ்  ஆன  கொச்சின்  எக்ஸ்பிரஸ்  என்னும்  மலையாளப்படத்தின்  அஃபிஷியல்  ரீமேக்  இது .இரு  மொழிகளிலும்  இது  வெற்றி  பெற்றதும்  கன்னடம், தெலுங்கு ,   என  தென்னிந்திய  மொழிகள்  எல்லாவற்றிலும்  ரீமேக்  செய்யப்பட்டு  வெற்றி  பெற்றது .ஹிந்தி யிலும்  ரீமேக்கப்பட்டு  ஹிட்  ஆனது 


  துக்ளக்  ஆசிரியர்  சோ  திரைக்கதை  , வசனம்  எழுதி  முக்கியப்பாத்திரத்தில்  நடித்திருந்தார் . கதாநாயகன்  ஜெய்  சங்கர் படம்  ஆரம்பித்து  32  நிமிடங்கள்  கழித்துத்தான்  எண்ட்ரி ஆவார். ஆனால்  காமெடியன்  சோ  படம்  முழுக்க  அதாவது  கதாநாயகனை  விட  அதிக  காட்சிகளீல்  தோன்றுவார். அதே  போல்  பெண்  வேடம், துபாய்  ஷேக்  வேடம், அப்பாவி  வேடம்  என  மூன்று  கெட்டப்களில்  அசத்தி  இருப்பார்  

ஸ்பாய்லர்  அலெர்ட்


ஒரு  தொழில்  அதிபர்  தன்  மகளின்  திருமணத்துக்காக  நகைகள்  பர்ச்சேஸ்  செய்து  விட்டு  ரயிலில்  பயணிக்கிறார். அதே  கம்ப்பார்ட்மெண்ட்டில்  காமெடியன்  பயணிக்கிறார். அப்போது  ஒரு  பெண்  அந்த  கம்ப்பார்ட்மெண்ட்டில்  ஏறி  காமெடியனுடன்  பேச்சுக்கொடுக்கிறார். தன்னை  டைவர்ட்  பண்ணி  அந்த  இடத்தைக்காலி  செய்ய  வைப்பதற்காக போடப்படும்  டிராமா  என்பதை  அறியாமல்  காமெடியன்  அந்தப்பெண்ணின்  சதிக்கு  பலியாகி   ஹோட்டலில்  சாப்பிடப்போக  ரயிலை  மிஸ்  செய்கிறார்


கம்பார்ட்மெண்ட்  காலி  ஆனதும்  கொள்ளை  அடிக்கும்  ஆள் அந்த  தொழில்  அதிபரைக்கொலை  செய்து  விட்டு  நகைகளூடன்  எஸ்  ஆகிறான் . இந்தக்கேசில்  காமெடியன்  தான்  முக்கியமான  சாட்சி , எனவே  இந்தக்கேசை  துப்பு  துலக்க  வரும்  நாயகன்  ஆன  சிஐடி  ஆஃபீசர்  காமெடியன்  உதவியுடன்  அந்தப்பெண்ணை  முதலில்  கண்டுபிடிக்க  முயாற்சி  செய்கிறார், அதற்குப்பின்  அந்தக்கொள்ளைக்கும்பலை  பிடிக்க  முயற்சி  செய்கிறார் , அவர்  முயற்சி  வெற்றி  அடைந்ததா? என்பதுதான்  பின்  பாதி  திரைக்கதை 


  காமெடியன்  ஆக  துக்ளக்  சோ  கலக்கலான  பாடி  லேங்க்வேஜ் , பக்காவான  காமெடி  ஸ்க்ரிப்ட்  உடன்  களம்  இறங்கி  இருக்கிறார். சரக்கே  இல்லாமல்  காமெடி  பண்ண  முயற்சி  செய்து  மொக்கை  போடும்   யோகிபாபு  போன்றவர்கள்  இதில்  பாடம்  கற்கலாம் .


நாயகன்  ஆக  ஜெய் சங்கர் . ஸ்டைலிஷ்  ஆன  லுக் , ஃபிட்  ஆன  ஜிம்  பாடி , அபாரமான  டிரஸ்சிங்  சென்ஸ்   உடன் ஒரு  ஆக்சன்  ஹீரோவுக்கான சகல  லட்சணங்களுடனும்  கலக்கி  இருக்கிறார். தன்  பழைய  காதலியை  ஹோட்டல்  ரிசப்ஷனிஸ்ட்  ஆக பார்க்கும்போது  அவர்  துள்ளிக்குதிப்பது  இளமை . ஆக்சன் சீக்வன்ஸ்களில்  தான்  தென்னக  ஜேம்ஸ்பாண்ட்  என்பதை  நிரூபிக்கிறார்


வில்லன்  ஆக  மொட்டை  பாஸ்  எஸ்  ஏ  அசோகன்  கச்சிதம் . மலை  மாடு  மாதிரி  அவர்  நாயகனுடன்  மோதும்  காட்சிகளில்  பயங்கரம் 


நாயகனின்  முன்னாள்  காதலியாக  விஜய நிர்மலா  நடித்திருக்கிறார்.   விஜய  லலிதா  ஒரு  முக்கியக்கேரக்டரில்  வருகிறார் . திருத்தணி  முருகா  என்ற  பாடல்  காட்சியில்  கெஸ்ட்  ரோலில்  ஸ்ரீ வித்யா , எம்  பானுமதி  வருகிறார்கள் .


பால்  துரை சிங்கம்  அவர்களின்  எடிட்டிங்கில்  பக்காவாக  2  மணி  நேரத்தில்  ஷார்ப்  ஆக  கட்  செய்து  இருக்கிறார்கள் , டிகே  ராமமூர்த்தியின்  இசையில்  ஐந்து  பாடல்கள் ,  விட்டல்  ராவின்  ஒளிப்பதிவில்  சண்டைக்காட்சிகளில்  கேமரா  புகுந்து  விளையாடி  இருக்கிறது 


சபாஷ்  டைரக்டர்  (  திருமலை  மகாலிங்கம் ) 


1   காமெடியனுக்கு முக்கியத்துவம்  வாய்ந்த  கதையில்  ஆக்சன்  ஹீரோவை  சாமார்த்தியமாக  புக்  செய்தது 


2 காமெடியன் சோ  வை  கமர்ஷியலாக  சுதந்தரமாக   திரைக்கதையை  ஆக்ரமிக்க சம்மதித்தது 


3  நாயகனின்  பழைய  காதலியை வைத்து  கிளைமாக்சில்  வைக்கப்படும் ஒரு  ட்விஸ்ட்  குட் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1   வாலிபம்  ஒரு  வெள்ளித்தட்டு , வருவாயா  நீ  என்னை  அள்ளிக்கிட்டு 

2   நான்  கலைஞன்  அல்ல 

3   திருத்தணி  முருகா , தென்னவா  தலைவா 

4  கல்யாணப்பெண்னைக்கொஞ்சம் 

5   கடவுள்  மதுவாய்  கண்களீல் ஆட 


  ரசித்த  வசனங்கள்   ( துக்ளக்  சோ) 


1   உங்க  பேர்  என்ன ?

 ராவணன் 

 வேடிக்கையா  இருக்கு , 

சரி, உங்க  பேரு  என்ன ?

கலாவதி 

  வாடிக்கையா  இருக்கு , ஐ  மீன்  நிறைய  பேரு  இதே  மாதிரி  பேரு  வைத்துக்கறாங்க 


2   நீங்க  ரெண்டு  பேரும்  அஞ்சு  நிமிசம்  பேசாம  இருந்தா   நான்  தூங்கிடுவேன் 

 சார் , லேடீஸ்  பாவம், பேசாம  ஒரு  நிமிசம்  கூட  இருக்க  முடியாது 


3  அட, உங்களூக்கு  வெட்கப்படத்தெரியுது . நீங்க  காலேஜ் கேர்ளா? 

 இல்லை , நான்  காலேஜ்  பக்கமே  போனதில்லை \


 அதான்  வெட்கப்படத்தெரிஞ்சிருக்கு 


4   சேலை  கட்டிய  மாதரை  நம்பாதேன்னு  சொல்வாங்க, அதனால  இங்கே  இருக்கும்  எல்லா ;லேடீசையும்,  நம்பறேன், ஏன்னா  எல்லாப்பெண்களும்  சுடி  மிடினு  மாடர்ன்  டிரசா போட்டிருக்காங்க , ஒரு பெண்  கூட  சேலைல  இல்லை 


5   சார் , ஐ  ஆம்  அன்  மேரீடு  மேன்  கழுத்துல  பார்த்தீங்களா  தாலி  இல்லை \


6   சார்  , உங்களைப்பார்த்ததும்  எனக்குப்பிடிச்சிடுச்சு 


நான்  இன்னும்  குளிக்கலை, அதுக்குள்ளே சோப்  போடாதே 


7   நாளை  உன்னைக்கொலை  பண்ணலாம்னு  இருக்கேன் 


 நாளை  வேணாம், நாளை  மறு நாள்  கொலை  பண்ணீக்கோ, ஏன்னா  சனிப்பொணம்  தனியாப்போகாதும்பா 


8   அவ  வீக்னெசை  குறை  சொல்றது , இந்த  சமூகத்தைக்குறை  சொலறது, எது  ஓக்கே ?


 இந்த  சமூகத்தைக்குறை  சொலறது, அதானே  உலக  வழக்கம் \\


 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   பொதுவாக  லாட்ஜ், ஹோட்டல்களில்  ரூம்  புக்  பண்ண  வரும்போதுதான்  அட்ரஸ் , அட்ரஸ்  ப்ரூஃப் , ஃபோன்  நெம்பர்  எல்லா  டீட்டெய்ல்சும்  கேட்பாங்க , ஆனா  நாயகன்  அண்ட்  காமெடியன்  ரூம்  கேட்கும்போது  கொடுத்து  விட்டு  சாவகாசமாக  ஒரு  லேடி  ரூமுக்கு  வந்து  டீட்டெய்ல்ஸ்  கேட்கறாங்களே? 


2   ரூம்  நெம்பர்  16  , 19  கன்ஃபியூசனில்  காமெடியன்  பண்ணும்  அலப்பறை  காமெடிக்கு  ஓக்கே , ஆனால்  அவர்  தன்  ரூம்  நெம்பரை  16  என்பதை  19  என  மாற்றுகிறாரே? வில்லனை  திசை  திருப்ப . அருகில்  இருக்கும்  ரூம்  நெம்பர்  18  அல்லது 20  என  இருந்தால்  தானே  இது  19 ? 


3   நாயகன்  திடீர்  என  காமெடியன்  சோ வை  கடத்தல்காரர்கள்  அடைத்து  வைத்திருக்கும்  இடத்துக்கு  எப்படி  கரெக்டாக  வருகிறார்? எப்படி  ஸ்பாட்டைக்கண்டு பிடித்தார் ? 


4   நாயகி  பாய்சன்  சாப்ட்டுட்டு  அரை  மணி  நேரம்  டயலாக்  பேசிட்டு  இருக்கே? அது  வெரி வெரி  ஸ்லோ  பாய்சனா  இருக்குமோ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பிரமாதமான  காமெடி  கலந்த  க்ரைம்  த்ரில்லர்  ஆக்சன்  படம், செம  ஜாலியாகப்போகிறது . கதையின் ஒரிஜினல்  மலையாளம்  என்பதாலும்  ஆறு  மொழிகளிலும்  ஹிட்  ஆன  சப்ஜெக்ட்  என்பதாலும்  நம்பிப்பார்க்கலாம், ரேட்டிங்  3 / 5 


Neelagiri Express
Theatrical release poster
Directed byThirumalai–Mahalingam
Screenplay byCho Ramaswamy
Produced byV. Arunachalam
StarringJaishankar
CinematographyG. Vittal Rao
Edited byA. Paulduraisingam
Music byT. K. Ramamoorthy
Production
company
A. L. S. Productions
Release date
  • 23 March 1968
Running time
120 minutes
CountryIndia
LanguageTamil

0 comments: