Monday, July 10, 2023

AYISHA (2023) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( பயோ கிராஃபிக்கல் மூவி ) @ அமேசான் பிரைம்

 


இது  மலையாளம், அரபி  ஆகிய  இரு  மொழிகளில்  ஒரே  சமயத்தில்  எடுக்கப்பட்ட  படம், நீலாம்பூர்  ஆயிஷா  என்பவர்  வாழ்க்கையில்   சவுதி  அரேபியா  ரியாத்தில்  , 1988 ல்  நடந்த  சம்பவத்தை  அடிப்படையாகக்கொண்டு  எடுக்கப்பட்டது இந்தப்படம்  பார்க்கும்போது  முன்னாள்  முதல்வர்  ஜெ , சசிகலா  நட்பு  நினைவுக்கு  வந்தது . இண்டர்வெல்  பிளாக்  பார்க்கும்போது  ரஜினி யின்  பாட்ஷா  கூஸ்பம்ப்  மொமெண்ட்  நினைவுக்கு வந்தது . ஆனால்  இது  லேடி  டாண்  கதை  அல்ல , இது  தியேட்டர்க்ளில்   ரிலீஸ் ஆன  போது  கமர்ஷியலாக  செம  ஹிட்  ஆனது , விமர்சகர்களிடையே  மிகுந்த  பாராட்டைப்பெற்றது , இப்போது  அமேசான்  பிரைம் ஓடி டி  யில்  காணக்கிடைக்கிறது


 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  இந்தியாவில்  இருந்து  அரபு  நாட்டுக்கு  பணிப்பெண்ணாக  ஒரு  அரனமனையில்  பணிபுரிய   செல்கிறார். சமையல்  வேலை , தோட்ட  வேலை  தான்  அரண்மனையில்  இவரது  பணி .ஏராளமான பணிப்பெண்கள்  அங்கே  வேலை  செய்கிறார்கள் .:அந்த  அரண்மனையின்  எஜமானி  ஒரு  கோடீஸ்வரி , ஆனால்  நோய்வாய்ப்பட்டு  இருக்கிறார். அடிக்கடி கிட்னி  டயாலிசிஸ்  செய்ய  வேண்டிய  நிலையில்  இருக்கிறார்


வழக்கமாக  காரில்  எஜமானி யுடன்  செல்ல  வேண்டிய  பணிப்பெண்கள்  இருவர்  எஜமானி  காரில்  ஏறியும்  வராமல்  பேசிக்கொண்டு  இருப்பதைப்பார்த்துக்கடுப்பான  எஜமானி  புதிதாக சேர்ந்திருக்கும்  நாயகியை  அழைத்துக்கொண்டு  ஹாஸ்பிடல்  செல்கிறார். அவருக்கும் , நாயகிக்கும்  செட்  ஆகவே  இல்லை . எதற்கெடுத்தாலும்  எரிந்து  விழுகிறார். 


ஹாஸ்பிடலில்  இருந்து  திரும்பி  வந்ததும்  சீனியர்  பணிப்பெண்கள்  இருவரும்  நாயகி  மீது  கோபத்தில்  எரிந்து  விழுகின்றனர் தங்கள்  இடம்   பறிபோய்  விடுமோ  என்ற  கவலை  + பயம்  அவர்களுக்கு, ஆனால்  படிப்படியாக  நாயகி  எஜமானியின்  மனதில்  இடம்  பிடிக்கிறார். இருவ்ருக்கும்  இடையே  அம்மா  - மகள் , பாட்டி -பேத்தி   உறவு  போல  ஒரு  நட்பு  பூக்கிறது


ஒருமுறை  ஷாப்பிங்  போக  முதல்  முறையாக  நாயகி  சக  பணிப்பெண்கள்  இருவருடன்  அவுட்டிங்  போகிறார். அங்கே  ஆச்சரியம்  காத்திருக்கிறது .  மொத்த  பஜாரே  கதவுகளை  அடைத்து  விட்டு  வீதியில்  வந்து  நாயகிக்கு  மரியாதை செய்கிறார்கள் . நாயகி  யார்? அவரது  ஃபிளாஸ்பேக்  என்ன? இதற்குப்பின்  நாயகியின் செல்வாக்கு  அறிந்து  எஜமானியின் போக்கில்  மாற்றம்  ஏற்பட்டதா? நாயகி  தன்  பழைய  புகழ்  பெற்ற  வாழ்க்கைக்குத்திரும்பினாரா?  இதை  எல்லாம்  மீதி  பின் பாதி  திரைக்கதையில்  காணலாம் 


நாயகியாக  மஞ்சு  வாரியர்  அந்த  கேரக்டராகவே  மாறி  விட்டார் ,   பணிப்பெண்னாக  பவ்யம்  காட்டும்போதும் சரி ,எஜமானியின்  மனதில்  இடம்  பிடித்த  பின்  கெத்து  காட்டும்போதும்  சரி . புகழ் பெற்ற  நபராக  இருக்கும்போதும்  சரி  அடி பொலி ஆன  நடிப்பு 


எஜமானி  மாம்மாவாக  மோனா  அற்புதமான  நடிப்பு. அதிகாரம் , வெறுப்பு  உணர்வுகளுக்குப்பின்னால்  மறைந்திருக்கும்  குழந்தைத்தனத்தை  வெளிப்படுத்தும்  காட்சியில்  அசத்தி  விட்டார் 


விஷ்ணு  சர்மாவின்  ஒளிப்பதிவில்  அரபு  நாட்டின்  அழகெல்லாம் கண்  முன்,  விரிகிறது ஜெயச்சந்திரன்  இசையில்  பாடல்கள்  அனைத்தும்  ஆல்ரெடி  ஹிட் 

அப்பு பட்டாத்ரியின்  எடிட்டிங்கில்  142  நிமிடம்  ஓடுமாறு  ட்ரிம் பண்ணி  இருக்கிறார்.

ஆஷிஃப்  கக்கோடி யின்  திரைக்கதைக்கு   உயிர்  கொடுத்து  ஆமீர்  பள்ளிக்கல்  இயக்கி  இருக்கிறார் .   ஒரு  அருமையான  ஃபீல்  குட்  முவியைப்பார்த்த  திருப்தி 


சபாஷ்  டைரக்டர்


1  ஓப்பனிங்  சீனில்  நாயகி  பணிப்பெண்ணாக  அரபு  நாட்டிற்குப்போகிறார்  என்றதும்  எந்த  மாதிரி  கதையை  ஆடியன்ஸ்  எதிர்பார்த்தார்களொ  அந்த  மாதிரி  கதை  சொல்லாமல் மாறுபட்ட  கதை  சொன்ன  விதம் 


2   சீனியர்  பணிப்பெண்களின்  வெறுப்புபொறாமைக்கு  ஆளான  நாயகி  எஜமானின்  மனதில்  இடம்  பிடித்த  பின்  அந்த  சீனியர்களைப்பார்த்து  ஒரு  கெத்து  லுக்  விடும்  காட்சி 


3   பாட்ஷா  படத்தில்  வருவது   போன்ற  அமர்க்களமான  இண்டர்வெல்  பிளாக்  சீன் 


4  இடைவேளைக்குப்பின்  வரும்  செண்ட்டிமெண்ட்  காட்சிகள் 

செம  ஹிட்  சாங்க்ஸ்


1    கண்ணிலூ  கண்ணிலூ  மை  எழுதனும்  கண்ணிலூ

2 ஆயிஷா  ஆயிஷா 

3  வடக்குத் திக்குல 

4   ஒரே  ஒரு  தூரம் 


  ரசித்த  வசனங்கள் 


1  திரும்பி  வரக்கூடாது  என்ற  எண்ணத்தில் யாருமே  ஒரு  இடத்துக்கு  செல்வதில்லை 

2  இப்பவே  நல்லா  தூங்கிக்க , அடுத்த  நல்ல  தூக்கம்  உனக்கு  உன்  வீட்டுக்குப்போன  பின் தான் 

3  மூத்தோர்  சொல்  முது நெல்லிக்கா , முதலில்  கசக்கும்,  பின்  இனிக்கும்


4  ஒரு  மோசமான  நோய் வந்தால்  ஒரு  மனிதனின்  இயல்பான  சுபாவமே  மாறி விடும்  


5  மூப்பும்  நோயும்  சேர்ந்துதான்  வரும்


6  கிணத்துல  குதிக்கறது  எந்த  அளவுக்கு  சுலபமோ  அந்த  அளவு  சுலபம்  இல்லை  விழுந்த  கிணத்தில்  இருந்து  எழுந்து  வருவது 


7  வாழ்க்கைல  எல்லாருமே  ஒரு  காலத்தில்  தங்கள்  இளமைக்காலத்துக்குத்திரும்பப்போகத்தான்  விரும்புவாங்க 


8  எல்லோரின்  வாழ்க்கையிலும்  ஒரே  ஒருவர்  ஸ்பெஷல்  ஆள்  ஆக  இருப்பார் 


9  என்னைப்பொறுத்தவரை  இந்த  வயோதிக  வாழ்க்கை தான்  நோய் . இறப்பு  மட்டும்  தான்  எனக்கு  விடுதலை 


10  கடைல  விலை  கேட்டு  பின்  தயங்கி  நீ பின் வாங்கிப்போனப்பவே  நினைச்சேன்  நீ மலையாளியாத்தான்  இருக்கனும்னு


11  மனித வாழ்க்கையும்  நாடக  மேடையும்  ஒண்ணுதான்னு  எனக்குத்தோணுது . மேடையை  விட்டு இரங்குனதும்  லைம்  லைட்டை  விட்டு  விலகி  வந்தது  போல  நம்  வாழ்க்கை  முடிந்த  பின்  நம்மைப்பற்றிப்பேச  யாரும்  இருக்க  மாட்டாங்க , ஐ  மீன்   யாரும்  நம்மைக்கண்டுக்க  மாட்டாங்க 


12  கடந்த  கால  வாழ்க்கையின்  அடிமை  அல்ல  நான், அதே  சமயம் எதிர்கால  வாழ்க்கையின்  எஜமானியும்  அல்ல


13  இந்த  உலகத்தில்  எந்த  வேலையில்  இருப்பவரும்  சரி , எந்த  உறவில்  இருப்பவரும்  சரி , ஒரு  நாள்  ரீ ப்ளேஸ்  ஆக்கப்படுபவரே


14  இவ்வளவு  கடுமையா  அவ  கிட்டே  நீங்க  நடந்து  கொண்டிருக்கத்தேவை  இல்லை 


 வேற  வழி  இல்லை . விலகி  இருக்கனும்னா  இந்த  வலியைத்தாங்கிதான்  ஆகனும் 

15  வாய்ப்புகள்  எப்போதும்  நமக்காகக்காத்திராது


16  ஒரு  குடும்பத்தில்  உள்ள  உறவுகள்சர்க்கஸ்  கூடாரம்  மாதிரி . ஒரு    உறவு  அறுந்தால்  அந்த  கூடாரத்துக்கே  [பாதிப்பு


17  எவரெஸ்ட்  உயரத்தை  அடைவதை  விட  சிரமமானது  மனித  மனத்தை  வெல்வது 


18  திரும்பி   வரவே  மாட்டேன்னு  சொல்லிட்டுப்போனவங்க  எல்லாரும்  திரும்பி  இங்கேயே  வந்துட்டாங்க , ஆனா  நிச்சயம்  திரும்பி  வருவேன்னு  சொன்ன  யாருமே  வரலை 


19  முதல்  இடத்துல  இருந்து இரண்டாவது  இடத்துக்கு  வந்தது  விதி , ஆனா  இரண்டாம்  இடத்துல இருந்து  முதல்  இடத்துக்கு மீண்டும்  வந்தது  என்  மதி 


20  முதல்  இடத்துக்கு  வர  ஆசைப்பட்டு  இரண்டாம் இடம்  கிடைச்சதோட  திருப்தி  அடைவது  விதி , ஆனா  முதலாம்  இடத்தைப்பிடிக்க  கடைசி  வரை  போராடுவதுதான்  என்  வாழ்க்கை 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  கோடீஸ்வர  மாம்மா  என்னும்  பெண்ணின்  ஃபிளாஸ்பேக்  காட்சியில்  மணப்பெண்  மாப்பிள்ளையிடம்  தனிமையில்;  பேசும்  காட்சியில்   மாம்மாவின்  இளவயது  பெண்  ஆக  நடித்த  பெண்ணின்  உடல் மொழி  நெருடுகிறது . ஒரு மணப்பெண்ணுக்குரிய  வெட்கமோ , தயக்கமோ  இல்லை . இன்வெஸ்டிகேஷன்  ஆஃபீசர்  தோரணை  தான்  தெரிகிறது 


2   நாயகி  அந்த  கடல்  கதை  மன்னன்  ஓவர்  பில்டப்   உலகநாதனின்  காதலை  ஏற்றுகொண்டாரா? இல்லையா? என்பதற்கான  காட்சிகளே  இல்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்   யூசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பூவே  பூச்சூடவா , மாதிரி  தரமான  ஃபீல்  குட்  மூவி  டோண்ட்  மிஸ்  இட்  ரேட்டிங் 3.5 / 5 
Ayisha
Ayisha Poster.jpg
Theatrical release poster
Directed byAamir Pallikkal
Written byAashif Kakkodi
Produced byZakariya Mohammed
Starring
CinematographyVishnu Sharma
Edited byAppu N. Battathiri
Music byM. Jayachandran
Production
company
Cross Border Cinema
Release date
  • 20 January 2023
Running time
142 minutes
CountryIndia
LanguagesMalayalam
Arabic[1]

0 comments: