Wednesday, July 05, 2023

குடிமகான் (2023) -தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா) @ அமேசான் பிரைம்

 


 டைட்டிலைப்பார்த்ததும்  இது  மதுபானக்கடை  படம்  போல  குடிகாரர்கள்  சம்பந்தப்பட்ட  படம்  என  அசால்ட்டாக  பார்க்காமல்  விட்டு  விட்டேன். இப்போது ஓடி டி  ரிலீசுக்குப்பின்  தான்  இது  கலக்கலான  காமெடிப்படம்  என்பதை  அறிந்து  பார்த்தேன். மலையாளப்படங்களில்  மட்டுமே  பார்க்க  முடிகிற  வித்தியாசமான சப்ஜெக்ட்டில்  ஒரு  காமெடிப்படம்  தந்திருக்கிறார்  இயக்குநர் பிரகாஷ் ., அதிகம்  அறிமுகம் இல்லாத  நடிகர் நடிகைகளை  வைத்தே  நல்ல  படம்  தந்திருக்கிறார் 


     ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  எந்த  கெட்ட  பழக்கமும்  இல்லாத  டீ டோட்டலர் . அவன்  தனியார்  வங்கி  ஏ  டி எம்  களில்  பணம்  நிரப்பும்  பணியில்  இருக்கிறார். ஆட்டோ  பிரேவரி  சிண்ட்ரோம்  என்னும்  வித்தியாசமான  நோய்  இவ்ருக்கு  இருக்கிறது . சாதா  ஜூஸ்  குடித்தாலோ , ஸ்வீட்  சாப்பிட்டாலோ   சரக்கு  அடித்தது  போல  போதையில்  மிதப்பார் 


 இது  இவரது  குடும்பத்துக்குத்தெரியாது , ஏன் ? நாயகனுக்கே  இந்த  விஷயம்  முதலில்  தெரியாது , சில  சம்பவங்கள்  நடந்த  பின்  தான்  தெரிய  வருகிறது . ஒரு  நாள்  ஏடிஎம்  மில்  பணம்  நிரப்பும்போது  100  ரூபாய்  ட்ரேயில்  500  ரூபாய் அடுக்கி  விடுகிறார். இதனால்  கஸ்டமர்கள்  1000  ரூபாய்   எடுக்க  வந்தால் ( 10*100)  அது  5000  ரூபாய்  தருகிறது ( 10*500) . இதனால்  வங்கிக்கு  8  லட்சம்  ருபாய்  நட்டம் . நாயகனுக்கு  வேலை போய்  விடுகிறது 


 திரும்ப  வேலை  கிடைக்க  வேண்டும்  எனில்   இழந்த  பணத்தை  எடுத்த  கஸ்டமர்களிடம்  பெற்று  வங்கியில்  அடைக்க  வேண்டும்


 நாயகனின் அப்பா  ஒரு  குடிகாரர் ., அவரிடம்  குடிப்பழக்கத்தைக்கற்றுக்கொண்ட  ஒரு  டம்மி  பீஸ்  காமெடியன்  கம்  அரசியல்வாதி  நன்றிக்கடனாக  நாயகனுக்கு  உதவ  முன் வருகிறார்


  அந்த  டம்மி  பீஸ்  அரசியல்வாதியிடம் ரெண்டு  காமெடி  எடுபுடிகள்  இருக்கிறார்கள் , இவர்கள் நால்வரும்  சேர்ந்து  எப்படி  பணத்தை  மீட்டார்கள் என்பதுதான்  இக்காமெடிப்படத்தின்  மீதி  திரைகக்தை 


நாயகன்  ஆக விஜய்  சிவன் . ஆரம்பத்தில்  தாடியோடு  தடியான  உடம்போடு  அவரைப்பார்க்கும்போது இவரா  நாயகன்  என்ற  கேள்வி  வருகிறது . போகப்போக  திரைக்கதையின்  காமெடி  சம்பவஙகளால் நமக்குப்பழகி  விடுகிறது .


நாயகியாக  சாந்தினி  தமிழரசன்  மிடில்  கிளாஸ்  மனைவியைக்கண்  முன் நிறுத்துகிறார். கணவன்  குடிகாரனோ  என  சந்தேகப்பட்டு   விளாசும் இடங்கள்  கச்சிதம் , பின் பாதியில்  ஆளைக்காணோம். இவர்  ஆல்ரெடி கே பாக்யராஜின்  சித்து  +2 , நான்  ராஜாவாகப்போகிறேன், காளிச்சரண்  படங்களில்  நடித்தவர் 


நாடோடிகள்  படத்தில் கட்  அவுட்  காமெடி  மூலம்  நமக்கு  அறிமுகம்  ஆன  நமோ  நாராயணன் இதில்  கலக்கலான  காமெடி  மொமெண்ட்களில்  நடித்திருக்கிறார். அவரது  எடுபிடிகளாக  வருபவர்கள்  செம  டைமிங் நாயகனின்  அப்பாவாக  வரும்  சுரேஷ்  சக்கரவர்த்தி  காமெடி  டயலாக்  டெலிவரியில்  அசத்தி  இருக்கிறார்


தனுஜ்  மேனன் இசையில்  பாடல்கள்  செம  ஹிட் 


சபாஷ்  டைரக்டர்


1  நாயகனின்  நண்பன்  தன்  வீட்டில்  சாப்பிடும்போது  தன்  அம்மாவிடம், தண்ணி  கொடு , சோறு  போடு  என  கேட்கும்போதெல்லாம்  அம்மாவிடம் கிடைக்கும்  மரியாதை  வித்தியாசமான  காமெடி  மொமெண்ட் 


2  லெஹரு  ஊத்து  மைல்டா  மைல்டா 

மைல்டா  ஏறும்  மால்டா  மால்டா   பாடல்  வ்ரிகள் , கொரியோகிராஃபி , அந்த  பையன்  நடன்ம்  ஆடிய  விதம்  எல்லாமே  கலக்கல்  ரகம் 


3   பணம்  தர  வேண்டிய  ஆள்  டாஸ்க்1 - ஒரு  மேரேஜ்  கோ  ஆர்டினெட்டர். பணம் தர  மறுக்க  நாயகன் அண்ட்  கோ போட்ட  ;பிளான்  படி  திருமண  மணடபத்தில்  அனைவருக்கும் குளிர்  பானத்தில்  பேதி  மருந்து  கலந்து  கொடுக்க  மண்டபமே  பாத்ரூமில்  குடி  இருக்க  கேன்சல்  ஆகும்  மேரேஜ் .  காமெடி  கலாட்டா 


4  நாள்  முழுக்க  காரில்  சுற்றி  விட்டு  நல்ல  ஐடியா  எல்லாம் ஒரு  நாளில்  வருமா? ரெண்டு  நாளில்  வருமா? என  உதார்  விடும்  காமெடி 


5  டாஸ்க்  2 -  பனை  மரம்  மாதிரி  வளர்ந்திருக்கும்  க்ந்து  வட்டிக்காரனிடம்  2  லட்சம்  வசூல்  செய்யும்  காட்சி  


6  நமோ நாராயணா , கதிரவன்  , ஹானஸ்ட்  ராஜ்  மூவரின்  காமெடி  கூட்டணி  அருமை 


7   அடியாட்களில்  ஒருவன்  என்ன  சம்பவம் நடந்தாலும்  உடனுக்குடன் நோட்ஸ்  எடுப்பது பாக்கெட்  டைரியில்  குறிப்பது  அதகளம்


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  லெஹரு  ஊத்து  மைல்டா  மைல்டா 

மைல்டா  ஏறும்  மால்டா  மால்டா 


2  பைசா  வசூலு பைசா  வசூலு   சைசா  சிரிப்போம், கொஞ்சம் நைசா   ரசித்த  வசனங்கள் 


1   என்னால  ஒரு  பொண்டாட்டியைக்கட்டிட்டே  சமாளிக்க  முடியலை , உன்னால  எப்படிடா  ரெண்டு  மூணு  கட்ட  முடியுது ?


 சில  பேரு  ஒரே  ஃபோன்ல  ரெண்டு  சிம் கார்டு  போட்டுக்கறாங்க , சிலர்  செல்  ஃபோனே  ரெண்டு  வெச்சுக்கறாங்க , அது  மாதிரி தான் 


2  குடிகாரர்கள்  சங்கம்  சார்பாக....


குடிக்கறதே  தப்பு , இது;ல  சங்கம்  வேற 


3  சாராயம்  குடிச்ச  வாய்  நாராசா  போகும்னு  சொல்வாங்க 


4  குடிக்காம  இருக்க  கவுன்சிலிங்க்  போகலாம் , வர்றீங்களா?


கவுன்  சிலிங் , பாவடை லிங்  எதுவும்  வர  முடியாது 


5 அண்ணே  , எனக்கு  50,000  ரூபாய்  கடன்  இருக்கு , வழிவிட்டீங்கன்னா  ஏ டிஎம் ல  இருந்து  எடுத்துட்டுப்போயிடுவேன் 


 எனக்கு  அஞ்சு  லட்சம்  ரூபாய்  கடன்  இருக்கு , பின்னால  வரிசைல  வா 


6  இந்த  வியாதியை  குணமாக்க  மருந்தே  இல்லை , உங்க  லைஃப்  ஸ்டைலை  மாத்திக்கனும்


 டாக்டர் , எனக்கு  லைஃப்  தான்  இருக்கு , ஸ்டைல் எல்லாம்  இல்லை 


7  உடம்பு  நல்லாருக்கும்  வரை  நாம  சொல்றதை  உடம்பு  கேட்கும்,  கோளாறு  ஆகிட்டா  உடம்பு  சொல்றதை  நாம  கேட்கனும் 


8  டாக்டர் , மொடாக்குடிகாரன்  எல்லாம்  70  வயசு  80  வயசு  வரை  உயிரோட  இருக்காங்க . எனக்கு  எந்த  கெட்ட  பழக்கமும்  இல்லை . இப்டி  ஒரு  வியாதி . நினைச்சதை  சாப்பிடறது  ஒண்ணுதான்  எனக்கு  கிடைச்ச  வரம், இப்போது  அதுக்கும்  ஆப்பா? 


9  இது  பேங்க், பணம் மட்டும்தான்  நாங்க  பேசும்  மொழி 


10  அப்பா    அப்பா  அப்டினு  என்னைக்கூப்பிட்டா  மண்டையை  உடைச்சிடுவேன் , எனக்கே  இப்போதான்  55  வய்சுல  ஒரு கல்யாணம்  ஆகி  இருக்கு , என்  புது  சம்சாரம்   இதைக்கேட்டா  என்னை  தப்பா  நினைக்க  மாட்டாளா? 


11  வாழ்க்கை  என்பது  ஐஸ்க்ரீம்  மாதிரி , டேஸ்ட்  பண்ணாலும்  கரைஞ்சிடும் ,  டைம்  வேஸ்ட்  பண்ணாலும்  கரைஞ்சிடும் 


12  பகவானை நம்பினோர்  கை  விடப்படார் , மனசை தளர  விடாதீங்க , இந்தாங்க  என்  விசிட்டிங்  கார்டு, பிரச்சனைன்னா  கூப்பிடுங்க 


 ஓஹோ , டாக்டர் , உங்க  பேருதான்  பகவானா? நான்  கூட  கடவுளைச்சொல்றீங்கனு  நினைச்சேன்


13  யோவ் , உனக்கு  எவ்ளோ  தடவை  சொல்றது ? உனக்கு  வேற  வேலை  இல்லையா?


 ஆமா  சார், இப்போதான்  எனக்கு  வேலை போச்சு , டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க 


14  சார்  , குடிக்கறதுக்குக்கூட  நாங்க  லோன்  தர்றோம்


 அய்யோ , டாஸ்மாக்ல  இருக்கற  எல்லாக்குடிகாரன்களும்  லைன்  கட்டி நிக்கப்போறானுங்க 


15  சார்  என்  பிரச்சனையே  இதுதான் , கூல்டிரிங்க்ஸ்  குடிச்சாக்கூட  சரக்கு  அடிச்ச  மாதிரி  போதை  ஏறிடுது 


 இது பிரச்சனை  இல்லை , வரம் . அவனவன்  போதை  ஏற  எவ்ளோ  செலவு  பண்றான் ? 


16   பாட்டில்  குனியலாம், ஆனா  குடிக்கறவன்  குனியக்கூடாது 


 பேனா  கீழே  விழுந்துடுச்சு  தலைவரே!


17  என்னைப்பற்றி  நானே  சொன்னா  நல்லாருக்காது. அகில  உலக  நிரந்த  குடிகாரர்கள்  சங்கத்தலைவன் 


18  கட்சிக்கொடி  இல்லாத  கிராமங்கள்  கூட   உண்டு , ஆனா  கட்டிங்  போடாத  கிராமமே  இல்லை 


19  பணத்தை  எடுத்த  எல்லாரையும்  அவங்க தான்  பணத்தை  எடுத்ததா  ஒத்துக்க  வைக்கனும்


 எல்லாருக்கும்  சரக்கு ஊத்திகொடுத்தா  ஒத்துக்கறாங்க , அவ்ளோ  தான்  முடிஞ்சு  போச்சு , மேட்டர்  ரொம்ப  சிம்ப்பிள் 


20  இந்த  வேலையைச்செய்ய  நீங்க சரிப்பட்டு  வருவீங்களா?னு  தெரில, ஏன்னா  காரியம்  முடியும் வரை  எல்லாரும்   தெளிவா  இருக்கனும்’’


அதுக்கென்ன? சரக்கு  போட்டா  தெளிவா  இருந்துட்டுப்போறோம் 


21  பேருக்குத்தான்  இது  காரு , உள்ளே  வந்து  பார்த்தா  சரக்கு  அடிக்கற  பாரு (BAR)


22  செ,மயா  வண்டி  ஓட்டறானே? ரேசரா  இருப்பானோ?


 போதைல  ஓட்றான். வண்டி தான்  அவனை  ஓட்டிட்டு இருக்கு   


23  குடிகாரனுக  நாமளே  60 வயசு 80 வயசு    வரை  இருக்கோம், ஆனா  எந்தப்பழக்கமுமே  இல்லாதவங்க  நாற்பதுலயே  நாக்கு அவுட் ( நாக்  அவுட்)  ஆகிடறாங்களே? ஏன் ?


 24 நான்  அந்த  விதவைப்பெண்ணுக்கு  வாழ்க்கை  கொடுக்கலாம்னு  இருக்கேன் 


 இந்த  விஷயம்  உனக்குள்ளேயே  இருக்கட்டும், அந்தப்புள்ள  கிட்டே  சொல்லிடாதே , தற்கொலை  பண்ணிக்கப்போகுது 


25 நான்  பணத்தைத்திருப்பித்தரனும்னா  ஒரு  டாஸ்க் , என்  டிரஸ்  எல்லாத்தையும்  துவைச்சு  கஞ்சி  போட்டு  அயர்ன்  பண்ணித்தானும், சும்மா  புதுசு  மாதிரி இருக்கனும்


 அதுக்குப்பேசாம  புதுசாவே  வாங்கிக்கலாமில்ல?

26  இவன்  ஒரு  ஆம்பளை , ஏன்  பொம்ப்ளை  மாதிரி  பாவாடை  கட்டிக்கரான்? இவன்  சாதா  ராஜா  இல்லை , பாவாடை  ராஜா 


27   லாஸ்ட்  டிரைவ்  போக  வேண்டிய  வயசுல  பெருசுக்கு  லொள்ளு  பார்த்தியா ? லாங்க்  டிரைவ்  போகுது  பொண்ணோட லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பணம்  எடுத்து  ஏமாற்றிய  ஒரு  கடைக்காரர்  கடையில் ஸ்கேனிங் ஜி பே  கார்டை  மாற்றி  வைத்து  சில  கஸ்டமர்கள்  காசை  நாயகன்  வாங்கிக்கொள்கிறான்.  ஜி பே  க்ளிக்  ஆனதும்  வாய்ஸ்  மெசேஜ்  வந்த  பின்  தானே  க்ளியர்  பண்ண முடியும் ? அப்படியா  ஏமாறுவாங்க ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   புதுமுகங்கள்  படம்  என்றாலும் பரவாயில்லை , திரைக்கதை  நன்றாக  இருந்தால்  போதும்  என  நினைப்பவர்கள்  தாராளமாகப்பார்க்கலாம் , தரமான  காமெடிப்படம்   ரேட்டிங்  3 / 5 


குடிமஹான்
குடிமஹான் படத்தின் போஸ்டர்.jpg
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்பிரகாஷ் என்
எழுதியவர்ஸ்ரீ குமார்
உற்பத்திஎஸ்.சிவகுமார்
எஸ்.சுகந்தி
எஸ்.பிரபஞ்ச்
நடித்துள்ளார்
ஒளிப்பதிவுமெய்யேந்திரன்
திருத்தியவர்ஷிபு நீல் சகோ
இசைதனுஜ் மேனன்
தயாரிப்பு
நிறுவனம்
காட்சி ஊடக பணிகள்
வெளிவரும் தேதி
  • 17 மார்ச் 2023
நாடுஇந்தியா
மொழிதமிழ்

0 comments: