Showing posts with label VICHITRAM (2022) - மலையாளம் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label VICHITRAM (2022) - மலையாளம் - சினிமா விமர்சனம். Show all posts

Wednesday, July 26, 2023

VICHITRAM (2022) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( ஹாரர் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்


 மலையளத்தில்  விசித்திரம்  என்பதற்கு  வழக்கத்திற்கு மாறான  என்று  அர்த்தம் .   ஃபேமிலி  மெலோ  டிராமா  மாதிரி  படம்  ஆரம்பித்து  ஹார்ர்  திரில்லர்  மாதிரி  திரைக்கதை  பயணித்து  கடைசியில்  ரொமா்ண்டிக்  த்ரில்லர்  ஆக  முடியும் .  மாறுபட்ட  படம்  பார்க்கும்  ஆர்வலர்களுக்கு  இது ஒரு  வரப்பிரசாதம்


  ஸ்பாய்லர்  அலெர்ட்


 ஒரு  அம்மா  அவருக்கு  ஐந்து  மகன்கள் , ஐவரும்  வெட்டாஃபீஸ்கள் . அவங்களால  எந்தப்பிரயோஜனமும்  இல்லை , வீட்டு  வாடகை  உட்பட  எல்லா  செலவுகளையும்  அம்மாதான்  கவனிக்கறார். அம்மாவுக்கு  பர்த்டே  பார்ட்டிக்கு கேக்  வாங்கனும்னாக்கூட  அம்மா  கிட்டே  தான்  காசு  வாங்கறாங்க . 


 பனை மரம்  மாதிரி  வளர்ந்திருந்தாலும்  யாருக்கும்  பொறுப்புக்கிடையாது. அவங்க  குடி  இருக்கும்  வீட்டின்  ஓனர்  வாடகை  பெண்டிங் ஆகுது ,  வீட்டைக்காலி  பண்ணிடுங்க  என  கறாராகக்கூறுகிறார்.


 இந்த  சமயத்தில்  அந்த  அம்மாவின்   சகோதரன்   இறந்து  விடுகிறான் . அவன்  குடி  இருக்கும்  பங்களா  இப்போது  வெறுமையா  இருக்கு . அப்படியே  விட்டு  விட்டால்  பாழடைந்த  பங்களாவாகப்போய்  விடும்,  யாராவது  குடி இருந்தால்  புழக்காட்டம்  உள்ள  வீடாக  இருக்கும் என  சொந்தக்காரர்கள்  கருதுகிறார்கள் 


 வேறு  யாரும்  குடி  வராததற்குக்காரணம்  அந்த  வீட்டில்  பேய்  குடி  இருப்பதாக  வதந்தி  இருப்பதால் தான் . அம்மாவின்  சகோதரன்  உயிருடன்  இருந்த  போது  அவனது  மகள்   அந்த  வீட்டில்  தற்கொலை  செய்து  கொண்டார்  என  சிலரும்  , மகள்  யாரையோ  காதலித்ததால்  அது  பிடிக்காமல்  அப்பாவே  மகளைக்கொலை  செய்து  விட்டார்  என  சிலரும்  சொல்கிறார்கள் 


 ஆக  மொத்தம் அந்த  மகள்  அங்கே  ஆவியாக  நடமாடுவதாக   வதந்தி  பரவி  யாரும் அங்கே  குடி  வர  பயப்படுகிறார்கள் 


 இந்த  தருணத்தில்;  அந்த  அம்மாவும், ஐந்து  மகன்களும்  அந்த  பங்களாவில்  குடி  ஏறுகிறார்கள் . இதற்குப்பின்  அவர்களுக்கு  நிகழ்ந்த  திகிலான  அனுபவம் , அந்த  மகளின்  ஃபிளாஸ்பேக்  எல்லாம்  சொல்வதுதான்  படத்தின்  மீதிக்கதை 


 படத்தின்  நாயகி யாக  மகள்  மார்த்தாவாக  கனி  குஸ்ருதி  மாறுபட்ட  நடிப்பைத்தந்திருக்கிறார். அவரது  லிவ்விங்  பார்ட்னருடன்  காதல்  பார்வை  பார்க்கும்  இடங்கள்  எல்லாம்  கண்களே  நடித்து  முடித்து  விடுகின்றன . கொலை  செய்ய முயற்சிக்கும்  காட்சிகளில்  கண்களில்  வெறி  தாண்டவம்  ஆடுகிறது 


 அம்மாவின்  முதல்  மகனாக   ஷைன்  டாம்  சாக்கோ  நடித்திருக்கிறார் . ஆர்ப்பாட்டமான  நடிப்பு . இவர்தான்  வில்லனோ  என  கேட்கும்  அளவு  சில  இடங்களில்  முத்திரை  பதித்திருக்கிறார் 


 நாயகியின்  அப்பாவாக  அலெக்சாண்டர்  எனும்  கேரக்டரில்  லால்  சிறப்பான  நடிப்பு  சங்கமித்ரா  என்னும்  முக்கியமான  ரோலில்  கேடகி  நாராயணன்  நடித்திருக்கிறார் , அவர்  வரும்  காட்சிகள்  கவிதை 


அர்ஜூன்  பாலகிருஷ்ணனின்   ஒளிப்பதிவு  படத்துக்கு  மிக்க  உறுதுணையாக  இருக்கிறது  ஜூபைர்  மொகமத் , ஸ்ட்ரீட்  அகாடமிக்ஸ்  இருவரின்  பின்னணி  இசையும்  திகில்  ஊட்டுகின்றன 


நிகில்  ரவீந்திரனின் திரைக்கதையை   திறம்  பட  அச்சு  விஜயன்  இயக்கி இருக்கிறார்   


சபாஷ்  டைரக்டர்   ( அச்சு விஜயன் )

1`  அந்த  ஜோடி  முயல்களைக்காட்டும்போது  வரும்  திகில்  இசை  அதன்  பின்னணியில்  ஒரு சஸ்பென்ஸ்  இருப்பதைப்பறை  சாற்றி  விடுகிறது 


2   ஐவரில்  ஒருவரின்  கேர்ள்  ஃபிரண்ட்  வீட்டுக்கு  வந்து   செயின் பறிகொடுத்து  இந்த  வீட்டில்  ஒரு  பேய்  இருக்கு  என  பயந்தபடி  ஓடும்  காட்சி  கலக்கல்  ரகம் 


3   நாயகியின்  காதல்  காட்சிகள்  ஒரு  கவிதை  போல  சொல்லப்பட்ட  விதம் 

4   இது  பேய்க்கதை  இல்லை  என  க்ளைமாக்ஸில்  அழுத்தமாகப்பதித்த  விதம் 


 ரசித்த  வசனங்கள் 


1  எனக்கு  அஞ்சு பசங்க  இருந்து  என்ன  பிரயோஜனம், எல்லாம்  தண்டச்சோறுங்க , ஒரு  பொண்ணு  இருந்தா  எனக்கு  உறுதுணையா  இருந்திருக்கும் 


2  நமக்கு  வேண்டியவர்கள்  இறந்தாலும்  அவர்கள்  ஆன்மா  நம்மைச்சுற்றி  சில  காலம்  இருக்கும் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகி  தான்  உயிருக்கு  உயிராக  காதலித்த  நபரைத்தன்   கண்  எதிரே  கொலை  செய்தவரைப்பார்த்து  கோபமே  கொள்ளாமல்  இருப்பது  எப்படி |  பழி  வாங்க  நினைக்காமல்  இருப்பது  ஏன் ? 


2  வீட்டில்  ஆட்கள்  யாரும்  இல்லாதபோது  தன்  கேர்ள்    ஃபிரண்டை  வீட்டுக்கு  அழைப்பதுதான்  உலக  வழக்கம்,  வீட்டில்  நான்கு  சகோதரர்கள்  இருக்கும்போது , அம்மாவுக்கும்  தெரியாமல் ஏன்  காதலியை  அழைத்து  வருகிறார் ? 


3  நாயகியின்  அப்பா  இறந்து  விட்டார்  என்ற  தகவல்  தான்  சொல்லபப்டுகிறது . அது  கொலையாக  இருக்கலாமோ என  நாம்  யூகிக்கக்கூட  இடம்  அளிக்க  வில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  கிளாமர்  காட்சிகள்  இல்லை , ஆனால்  மைனர்கள்  பார்க்கத்தேவை  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  வித்தியாசமான  படம் , ஹாரர்  த்ரில்லர்  ரசிகர்கள் , க்ரைம்  த்ரில்லர்  ரசிகர்கள்  என  இரு  தரப்பையும்  திருப்திப்படுத்தும்  படம்  இது , ரேட்டிங்  3 / 5 


Vichithram
Vichithram movie first look poster.jpg
First look poster
Directed byAchu Vijayan
Written byNikhil Ravindran
StarringShine Tom Chacko
Balu Varghese
CinematographyArjun Balakrishnan
Edited byAchu Vijayan
Music byJubair Muhammed[1]
Street Academics
Production
company
Joy Movie Productions
Release date
  • 14 October 2022[2]
CountryIndia
LanguageMalayalam