Sunday, July 28, 2013

THE WOLVERINE - சினிமா விமர்சனம்


 
தமிழ் இனத்தின் தன்னிகரற்ற தானைத்தலைவர் டாக்டர் கலைஞரின் துணைவியார் தயாளு அம்மாள் எப்படி தன் பழைய நினைவுகள் எல்லாம் மறந்துடுச்சுன்னு அந்தர்பல்டி அடிச்சு கோர்ட் ல அடிச்சு விட்டாரோ அந்த மாதிரி தன்னோட பழைய ஞாபகங்கள் எல்லாம் மறந்துட்டா தேவலைன்னு நினைக்கறாரு ஹீரோ . இவருக்கு பல அற்புத  சக்திகள் இருக்கு . உயிர்  போனாலும் பரவாயில்லைன்னு எப்டி கலைஞர் பதவியை விடாம பிடிச்சுட்டு இருக்காரோ அந்த மாதிரி எது போனாலும் பரவாயில்லைன்னு ஹீரோ தன் உயிரை தன் கிட்டேயே வெச்சிருக்காரு .
இவரு ஒரு ரவுடி கேங்கோட மோத நேரிடும்போது எதார்த்தமா அங்கே வந்த பதார்த்தமா ஹீரோயினைப்பார்க்கறாரு .முன் பக்கமா? முதுகுப்பக்கமா? என்று ஒரு முடிவுக்கே வரமுடியாத சைனீஷ் ஃபிகர் தான் அது . ஆனாலும் ஹீரோ விடலையே? விடாம பின்னால போறாரு 


இதை தெரிஞ்சிக்கிட்ட ஹீரோயினோட தாத்தா ஹீரோக்கிட்ட இருக்கற சக்திய கேக்கறார்.ஹீரோ சம்மதிக்கல... இருவருக்கும் மோதல்... இதில் வென்றது யார் என்ற புளித்துப் போன கதையை எந்த அளவு சுவாரசியமா சொல்ல முடியுமோ அந்த அளவு சுவாரசியம சொல்லயிருக்காங்க.

Street Style Tao Okamoto Hot


ஹீரோ ஹியூ ஜாக்மேன்  வாரணம் 1000 சூர்யா மாதிரி, 555 பரத் மாதிரி 6 பேக் , 8 பேக் பாடியோட எப்பவும் கமல் மாதிரி பாடியை காட்டிட்டே விரைப்பா வர்றார. இவருக்கு 2 ஜோடி  ( லபோதிபோ  லபோதிபோ   )

ஆக்‌ஷன் காட்சிகளில் அப்ளாஷை அள்ளிக்கறார். இவருக்குன்னு ஒரு ஆடியன்ஸ் கைதட்ட ரெடியா இருக்காங்க  

ஹீரோயின் பேரை கவனமா படிங்க . தவறான உச்சரிப்பால் பப்ளிக்ல கெட்ட பேரு வாங்கிக்காதீங்க TAO OKAMOTO . 


 





இயக்குநர்  பாராட்டு பெறும் இடங்கள் 


1. படத்துல மொத்தமா  சாரி ஒல்லியா 12 பொண்ணுங்க . எல்லாமே வித விதமான பெயிண்ட் டப்பா மாதிரி புல் மேக்கப்போட வந்தாலும் ரசிக்கும்படி இருக்குங்க ( நாம எந்தக்காலத்துல யாரை ரசிக்காம விட்டிருக்கொம் ? ) 


2. ஓப்பனிங்க் ஷாட்டில் துரத்தும் பிரம்மாண்டமான வெடித்த மலைப்பகுதியை விட்டு விலகி ஓடும் ஹீரோவின் ஓட்டம் அபாரம் . கம்ப்யூட்டர் கிராஃபிகஸ் கலக்கல் 


3.  சாகா வரம் பெறத்துடிக்கும் தாத்தா அந்த முள் படுக்கைல எந்திரிக்கும்போது செம . ஆர்ட் டைரக்‌ஷன் அபாரம் 


4. படத்தின் 20 வது நிமிடத்தில் வரும் அந்த 18 நிமிட சேசிங்க் காட்சி அற்புதம் வெல்டன் ஸ்டண்ட் மாஸ்டர் 




5. செந்தூரப்பூவே வை எல்லாம் தூக்கி சாப்பிடும் ஒரு ரயில் ஃபைட் இருக்கு . அபாரமான வேகத்தில் செல்லும் புல்லட் ட்ரெயினில் நடக்கும் காட்சி அதி அற்புதம் ( இதே தமிழ்ப்படம்னா ரயில் ஃபைட் நடக்கும்போது மட்டும் மெதுவா அன்னக்கொடி மாதிரி சாரி அன்னப்பறவை மாதிரி போகும் ) 


6. வில்லி ஒரு காட்சியில் பேனாவில் தன் நாக்கை நீட்டி விஷத்தை அதில் தடவி பேனாவால் அடியாளை கொல்லும் காட்சி மிரட்டல் ( இதே நான் இந்த சீனை எடுத்திருந்தா டைரக்டா அடியாளுக்கு லிப் கிஸ் கொடுத்து அப்டியே நாக்கால் விஷத்தை செலுத்திடற மாதிரி எடுத்திருப்பேன் , சீனுக்கு சீன் திகிலுக்கு திகில் டூ இன் ஒன் _) 


7. இந்தப்படம் 3 டி யில் இன்னும் செமயா இருக்குன்னு சொல்லிக்கறாங்க . நான் சாதா டி யில் தான் பார்த்தேன். 100 மில்லியன்  டால்ர்கள் செலவாம் , அடேங்கப்பா  ( புரொடியூசருக்கு தெரியாம டைரக்டர் எத்தனை அடிச்சாரோ? ) 


8. ஹீரோ தன் உடம்பில் வயிற்றுப்பகுதியில் இருக்கும் பூச்சியை எடுக்கும் சீன் இன்னும் நல்லா எடுத்திருக்கலாம் என்றாலும் பதை பதைப்பை ஏற்படுத்ததவறவில்லை  








இயக்குநரிடம் சில கேள்விகள்  


1. எதிர்காலத்தை தன் கனவு மூலமா உணரும் தன்மை அல்லது சக்தி கொண்ட அந்த பவுடர் டப்பா தலை ஃபிகரு ஹீரோவை ஒரு மார்க்கமா அடிக்கடி பார்க்குது . ஹீரோ தன்னை லவ்வறாரா? இல்லையா?னு புரியாம பம்முது . ஏன் எதிர்காலத்துல அவன் தனக்கா? இல்லையா?ன்னு பார்க்கலை?


2. ஹீரோ அந்த ட்ரீம் கேர்ளை 100% நம்பறாரு . இதுதான் சாக்குன்னு அந்த பவுடர் டப்பா ஏன் ரீல் விடலை? இந்த மாதிரி இந்த மாதிரி நான் தான் வருங்கால சம்சாரம் அப்டினு? இந்தான் சாக்குன்னு மேட்டரை முடிச்சிருக்கலாமே? 


3.  ஹீரோ வுக்கு உடம்பெல்லாம் அம்பு துளைக்க தடுமாறி வர்ற சீன் நல்லாருக்கு .ஆனா லாஜிக்கலா ஒரு குழப்பம் . அவருக்கு அபூர்வ சக்தி இருந்தா அவருக்கு எதுவும் ஆகாது . சக்தி இல்லைன்னா ஆள் ஒரே அம்பில் பணால் . ரெண்டும் கெட்டானா  மைனாரிட்டி ஆட்சி மாதிரி மைனாரிட்டி பவர் வர்றது வந்துட்டு வந்துட்டு விட்டு விட்டு போக அது என்ன தமிழ் நாட்டு மின்சார வாரிய கண்ட்ரோல்ல  இருக்கும் கரண்ட்டா? இந்த சீனை மகாபாரதத்துல இருந்து சுட்டுட்டாரு போல


4. தாத்தா வில்லனுக்கு அறிவே இல்லையா? தன் பேத்தி மூலமா உயிர் சக்தியை ஹீரோ கிட்டே கேட்காம டைரக்டா தானே கேட்கறாரே? ஒரு பொண்ணு கேட்டா எந்த ஆம்பளை முடியாதுன்னு மறுக்க முடியும் ? 







மனம் கவர்ந்த வசனங்கள்


1.திறமைங்கறது எல்லாருக்கும் அமைஞ்சிடறதில்லை.அதனால அது அமைஞ்சவங்க அதை வளர்த்திக்கனும் 



2. நீ ஒரு டாக்டரா ?


 ம்.வெட்னரி டாக்டர்.     ஆகப்போறேன் 





3. சாகா வரம் கறது ஒருத்தனுக்கு சாகற கடைசி நொடில கூடக்கிடைக்கலாம்.காத்திருக்கனும்.பொறுத்திருக்கனும் # சபாஷ் டயலாக் w


4. நவீன அறிவியலை வளர்த்துவதில் எந்த அளவு தீவிரமா இருந்தாலும் நம்ம பாரம்பரியத்தை விட்டுத்தரக்கூடாது #! W






5. எவன் ஒருவனுக்கு தினமும் கெட்ட கனவு வருதோ அவன் வருத்தத்துல இருக்கான்னு அர்த்தம்


6. போர் வீரனின் கடமை எது தெரியுமா ? மரியாதைக்குரிய மரணம்


7. மேரேஜ் நிச்சயம் ஆன ஒருத்தன் இந்த ஊர்ல  மத்த பொண்ணுங்களோட கில்மா பண்ணக்கூடாதுன்னு சட்டம் இருக்கு தெரியுமில்ல? 

நான் ஒரு மினிஸ்டர்  ( எல்லா ஊர்லயும் இதே கதைதானா? அடேய் அரசியல்வாதீஸ்... ) 


8. இதை ரெசசிவ் ஜீன்ஸ்னு சொல்வாங்க . கண் , புருவம், இமை , சில நடத்தைகள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கும் 

 

ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்- இங்க்லீஷ் படத்துக்கு விக்டன்ல மார்க் போடறதில்லை , இருந்தாலும் ஒரு ஒப்பீட்டுக்காக 41



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்

ரேட்டிங் =  2.75  / 5


சி பி கமெண்ட் -படம் போர் அடிக்காம 2 மணி நேரம் போகுது . ஆனா ரொம்ப சுவராஸ்யமான காட்சிகள் மொத்தமே 20 நிமிஷம் தான் . அதனால டி வி ல பார்ப்பதே சாலச்சிறந்தத