Wednesday, December 26, 2012

கலைஞருக்கு சசிகலா வைத்த செக் , கலைஞரின் டிஃபன்ஸ் ஆட்டம்

http://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/SASI_1.jpg 


ப்பாடி...’ என்று பெங்களூரு கோர்ட் வளாகத்தில் எல்லோரு​மே பெரு​​மூச்சு​​விட்டனர். ஏனென்​றால், 1,032 கேள்விகளுக்கும் சசிகலா பதில் சொல்லி​விட்டார்.



 ஜெட் வேக வெள்ளி!


வியாழக்கிழமை மாலை வரை 825 கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருந்த சசிகலா, வெள்ளிக்கிழமை காலை இஸ்கான் கோயிலுக்குப் போகத் திட்டமிட்டு இருந்தாராம். ஆனால், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்​கொண்டால் வரத் தாமதமாக 

வாய்ப்பு உண்டு என்று சொல்லப்பட்டதால், ஆசையைத் தவிர்த்து​விட்டு புதிய உதவியாளர் சுரேஷ் சகிதம் கோர்ட்டுக்கு சீக்கிரமே வந்து காத்திருந்​தார். நீதிபதி பாலகிருஷ்ணா 11.20 மணிக்குத்தான் கோர்ட் ஹாலுக்கு வந்தார்.


ஜெ.ஜெ. பிரின்​டர்ஸ், ஜெயா பப்ளி​கேஷன்ஸ், ஜெயா ஃபார்ம் ஹவுஸ், நமது எம்.ஜி.ஆர்., உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் நடந்த பங்குப் பரிவர்த்தனை, கணக்கு வழக்குகள், வங்கிக் கணக்குகள், வரி தொடர்பாகவே கேள்விகள் மீண்டும் கேட்கப்பட்டன. அத்தனை கேள்விகளுக்கும்  மிகவும் தெளிவாக அழுத்தம்திருத்தமாக, 'தெரியாது’ என்றார்.


ஆஞ்சநேயா என்டர்பிரைசஸ் நிறுவனக் கட்டடம் கட்டியது, பராமரித்தது, நாதெள்ளா நகைக் கடையில் வைர நகைகள் வாங்கியது தொடர்பான நீண்ட நெடிய கேள்விகளை நீதிபதி மூச்சுவாங்க வாசித்து, அதனை ஹாரீஸ் கஷ்டப்பட்டு நான்கு பக்க அளவுக்கு மொழிபெயர்த்து விளக்கியதும், 'எழுத்துப்பூர்வமாகப் பதில் தருகிறேன்’ என்று ஒற்றை வரியில் சொன்னார் சசிகலா. அதனால், வெள்ளிக்கிழமை வழக்கத்தைவிட கேள்விகள் ஜெட் வேகத்தில் பறந்தன.


'பங்களா’ பதில்கள்?


வெள்ளிக்கிழமை மாலை வரை வங்கிக் கணக்குப் புள்ளிவிவரங்களாகப் பயணித்த கேள்விகளின் திசையை நீதிபதி பாலகிருஷ்ணா திடீரென மாற்ற ஆரம்பித்தார். சிறுதாவூர் பங்களா, பையனூர் பங்களா, கொடநாடு எஸ்டேட், அரசுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தது, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் அதிகாரி தொடர்பான கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். 



ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்வதற்கு முன், சசிகலாவின் வக்கீல்கள் மணி​சங்கரும் செந்திலும் கைகளை அசைப்பதும், துண்டுச் சீட்டைக் காட்டுவதுமாக உதவி செய்தனர். அதேபோல ஏற்கெனவே கொண்டு வந்திருந்த ஃபைலைப் பார்த்தும் பதில் சொன்னார். பங்களாக்​களைக் கட்டியது, பராமரித்தது, வரி செலுத்தி​யதுபோன்ற அத்தனை கேள்வி​களுக்கும் தெரியாது என்றே பதில் சொன்னார்.



 ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லி​விட்டு சரியாகச்சொன்​​னேனா என்று வக்கீல்களைப் பார்த்து தலையசைத்து உறுதி செய்துகொண்டார்.  



விசாரணை அதிகாரிகளை விளாசிய சசி!


சனிக்கிழமை காலை உண​வை சீக்கிரமாக முடித்துக்​கொண்டு, கோர்ட் பக்கத்​திலே இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போய் பிரார்த்தனை செய்த சசி, 11 மணிக்கு கோர்ட்டுக்குள் நுழைந்தார். கோர்ட் நடவடிக்கை தொடங்கியதும், சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தார் நீதிபதி. 'நல்லம நாயுடு தலைமையிலான அதிகாரிகள் சசி என்டர்பிரைசஸ் அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது, 81 முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி இருக்கிறார்களே?’ என்று கேட்டார்.



'விசாரணை அதிகாரிகள் சில பொருட்களைக் கைப்பற்றி இருந்தாலும், எங்களுடைய சொத்துக் கணக்கை அதிகமாகக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக வீட்டில் இருந்த பரிசுப் பொருட்களை எல்லாம் திட்டமிட்டு கணக்கில் சேர்த்தனர்’ என்றார். 'அப்படியென்றால் ஜெயலலிதா, நீங்கள், சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த​தாக விசாரணை அதிகாரி நல்லம நாயுடு கூறி இருப்பது பற்றி என்ன சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார்.



 'நான், சுதாகரன், இளவரசி மூவரும் தனித்தனியாக தொழில்  நடத்துகிறோம். அதில் ஜெயலலிதாவுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்மீது கொண்டுள்ள அரசியல் காழ்ப்பு உணர்ச்சியிலே வழக்கை ஜோடித்து உள்ளனர். அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த என்னிடம் விசாரிக்க வந்த அதிகாரிகள், விசாரணை நடத்தாமல் ஹாயாக டி.வி-தான் பார்த்தனர். ஆனால் அப்போது சொத்துக்குவிப்பு வழக்குத் தொடர்பாக என்னிடம் விசாரணை நடைபெறுவதாக டி.வி-யில் தலைப்புச் செய்தி ஓடியதைப் பார்த்து அதிர்ந்தேன். 



அதன்பிறகுதான் இதெல்லாம் விசாரணை அதிகாரியின் நாடகம் என்பது தெரிந்தது. பல்வேறு காலகட்​டங்களில் விசாரணை அதிகாரிகள் வரம்பை மீறி சோதனை நடத்தியது, எங்களுடைய வீட்டில் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்​படும் கைக்கடிகாரங்கள், நகைகள், பொருட்கள் தொடர் பாகச் சொன்ன அத்தனையுமே பொய்யானவை. வேண்டும் என்றே அவற்​றின் மதிப்பை அதிகமாகக் காட்டி இருக்கின்றனர்’ என்று விளாசினார்.


http://mmimages.maalaimalar.com/Articles/2012/Feb/858bc757-3919-4ab5-868f-b52d04f91e86_S_secvpf.gif


சுதாகரன் திருமணச் செலவு!


சுதாகரனின் திருமணச் செலவுகள் தொடர்பான கேள்விகளுக்கு, ஜெய​லலிதா என்ன பதில் சொன்னா​ரோ, அதே பதிலையே சசிகலாவும் சொன்​னார்.


'சுதாகரனின் திருமணத்துக்கு நானோ, ஜெயலலிதாவோ, ஒரு ரூபாய்​கூட பணம் செலவழிக்கவில்லை. தமிழகப் பண்பாட்டின்​படி திருமணச் செலவை மணப்பெண் வீட்டாரே முழுவதுமாக ஏற்றுக்​கொண்டனர். அதுதான் வழக்கம். இதுதொடர்பாக பெண்ணின் தாய்மாமன் ராம்குமார் சாட்சியம் அளித்து இருக்கிறார்’ என்று உறுதியான குரலில் சொன்னார் சசிகலா.


இது பொய் வழக்குதான்!


'ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்​களின் விவரங்கள் தர முடியுமா?’ என நீதிபதி கேட்ட போது நீண்ட நேரம் யோசித்துவிட்டு, 'எழுத்து மூலமாகப் பதில் சொல்​கிறேன்’ என்றார் சசிகலா. அவரிடம், 'வழக்கின் முதல் குற்ற​வாளியான ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக 62.27 கோடி ரூபாய் சொத்துச் சேர்த்ததாகக் கூறப்படுவது குறித்து என்ன சொல்கிறீர்கள்?’ என்று நீதிபதி கேட்டார்.


'ஜெயலலிதாவின் சொத்து வேறு. எங்களுடைய சொத்து வேறு. அவர் மீது பொய் வழக்குத் தொடர வேண்டும் என்பதற்காகவே 'எங்களுடைய சொத்துக்களை எல்லாம் அவருடைய சொத்தாகக் கணக்கில் சேர்த்துள்ளனர். எங்களு​டைய சொத்துகள் அனைத்துக்கும் முறைப்படி வரி செலுத்தி இருக்கிறோம். அதே போல வங்கியில் கடன் வாங்கியே எங்களுடைய நிறுவனங்களை ஆரம்பித்துப் பராமரித்தோம். அதற்கான ஆதாரங்​களை எல்லாம் கோர்ட்டில் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறோம். ஜெய​லலிதாவை அரசியல் ரீதியாகப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகப் போடப்பட்ட பொய் வழக்கு’ என்ற சசிகலாவின் முகத்தில் புன்னகை வழிந்தது.


கருணாநிதி என்னை மிரட்டினார்!





கடைசியாக, 'இந்த வழக்கு குறித்து ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?’ என்று கேட்கத் தொடங்கிய‌ நீதிபதி, 'போன கேள்விக்கு நீங்கள் சொன்ன பதிலையே உங்கள் கருத்தாகஎடுத்துக்​கொள்கிறேன்’ என முடிக்க முயற்சிக்க, 'இல்லை... இல்லை... ஒரு சில வார்த்தைகள் மட்டும்’ என்று இழுத்தார் சசிகலா.


இதுவரை 1,031 கேள்விகளுக்கும் சசிகலா சொன்ன பதில், அவர் பக்கத்தில் இருக்கும் மொழிபெயர்ப்பாளருக்குக்கூட தெளிவாகக் கேட்காத வகையில் மெள்ளப் பேசினார். ஆனால், கடைசிக் கேள்விக்கு மட்டும் அனல் தெறிக்கும் வகையில் அரசியல் வசனம் பேசி அனைவரையும் மிரள வைத்தார்.



'தமிழ்நாட்டில் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் அரசியல் பகை இருக்கிறது. அதனால், அரசியலில் இருந்து ஜெய லலிதாவை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்பதற்காக, வரு மானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்துச் சேர்த்ததாகப் பொய்யாக இந்த வழக்கைத் தொடர்ந்தார். இந்த வழக்கு ஆரம்பிக்கப்பட்டபோது அவரால் 66 கோடி ரூபாய்க்கான கணக்கைக் காட்ட முடியாததால், வழக்கு ஆரம்பித்து இரண்டு மாதங்கள் கழித்து என்னையும், சுதாகரன், இளவரசியையும் இதில் சேர்த்தார். 



எங்களுடைய சொத்துகளை எல்லாம் ஜெய லலிதாவின் சொத்தாகக் கணக்குக் காட்டியுள்ளார். இந்த வழக்குத் தொடர்ந்த இரண்டு மாதங்களில், ஜெயலலிதாவுக்கு எதிராகச் சாட்சியம் சொல்லும்படி கருணாநிதி என்னை மிரட்டினார். மறுத்து விட்டேன். அதனாலே, என்னை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்த்தனர். அது மட்டுமில்லாமல் ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் விசாரணையை நேர்மையாக நடத்தவில்லை. 



எங்களை அவமானப்படுத்தும் நோக்கிலும், ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் எங்கள் வீட்டில் சோதனை நடத்திய வீடியோ காட்சிகளை கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சியான சன் டி.வி-யில் அடிக்கடி போட்டுக்காட்டினர். ஜெயலலிதாவை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்ற கருணாநிதியின் பேச்சை விசாரணை செய்த அதிகாரிகளும் கடைப்பிடித்தனர். என்னுடைய விரிவான விளக்கத்தை எழுத்து மூலமாகவும் சொல்கிறேன்’ என்றபோது சசிகலாவின் முகத்தில் கோபம் கொப்பளித்தது.


அடுத்து சுதாகரன் வருகை!



ஜெயலலிதா 1,384 கேள்விகளுக்கும், சசிகலா 1,032 கேள்விகளுக்கும் பதில் சொல்லி இருப்பதால், அடுத்து சுதாகரன் பதில் சொல்ல இருக்கிறார். சுதாகரன் வக்கீல் அன்புக்கரசு, 'நாடு முழுவதும் ஒரு வாரம் கோர்ட் விடுமுறை என்பதால், ஜனவரி 3-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைக்க வேண்டும்’ என்று கேட்டார்.


உடனே குறுக்கிட்ட நீதிபதி, 'இது ஸ்பெஷல் கோர்ட். ஸ்பெஷல் கேஸ். அதனால் அந்த விடுமுறை நமக்குப் பொருந்​தாது. அதனால் 26-ம் தேதி சுதாகரனிடம் கேள்விகள் கேட்கப்படும்’ என்று கறாராகச் சொல்லி, வழக்கை ஒத்திவைத்தார். இப்போது சுதாகரனுக்கு வக்கீல்கள் கோச்சிங் கிளாஸ் நடத்திவருகிறார்களாம்.
ஆக, தீர்ப்பு நெருங்குகிறது!



நன்றி - ஜூ வி 

http://viruvirupu.com/wp-content/uploads/2012/02/Sasikala-Court-20120218-1.jpg


சென்னை "ஜெயலலிதாவுக்கு, எதிராக, என்னை கருணாநிதி தூண்டிவிட்டார் என, பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா கூறியுள்ளது, அப்பட்டமான பொய்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:ஜெயலலிதாவுக்கு எதிராக, பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்து வரும், சொத்துக் குவிப்பு வழங்கில், நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு, பதில் அளித்த சசிகலா, "ஜெயலலிதாவுக்கு, எதிராக, கருணாநிதி என்னை தூண்டிவிட்டார்' என, கூறியுள்ளது கலப்படமற்ற, அப்பட்டமான பொய். சசிகலா கூறுவதற்கு, எவ்வித ஆதாரமும் இல்லை. நீதிமன்றத்திலேயே, தவறான, தகவலை அவர் கூறியுள்ளார். சுதாகரன் திருமணத்தை ஜெயலலிதா நடத்தவில்லை; பெண் வீட்டார் தான் செலவழித்து நடத்தினர் என, சசிகலா சொல்லியிருப்பது, எந்தளவுக்கு பொய்யான தகவலோ, அதுபோல தான், என் மீது, சொல்லியிருக்கும் குற்றச்சாட்டும். 


நன்றி - தினமலர் 


http://tamil.oneindia.in/img/2012/06/07-sasikala8-300.jpg

5 comments:

”தளிர் சுரேஷ்” said...

என்ன நாடகமோ?

Seeni said...

pakirvukku nantri!

'பரிவை' சே.குமார் said...

பகிர்வுக்கு நன்றி.

gandhi said...

பகிர்வுக்கு நன்றி .....
அப்படின்னா வெறும் வீடியோ கடை நடத்திட்டு இருந்த
இவருக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவும் ......
அதுவும் அப்போது முதல்வரின் சம்பளம் வெறும் 1ரூபாய் ,
இவர் அவரது உதவியாளர் போல் இருந்தார்.......
கேக்குறவன் கேனையா இருந்தா ........ கதையால்ல இருக்கு ....

gandhi said...

நான் சொல்லவில்லை ,அவரே சொல்கிறார் ,
எங்களுடைய சொத்துகளை எல்லாம், அம்மாவின்
சொத்தாக காட்டி உள்ளார்கள் என்று.......