Showing posts with label சசிகலா. Show all posts
Showing posts with label சசிகலா. Show all posts

Monday, September 29, 2014

ஜெயலலிதா - சசிகலா - கூடா நட்பு



நட்புக்கு மிகப்பெரிய விலை கொடுத்தாரா ஜெயலலிதா?

மன்னார்குடியில் வந்த குடும்பத்தினருடனான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நட்பு ஒரு நாள் அவரது அரசியல் வாழ்வை முடக்கும் என்ற அவரது அரசியல் விசுவாசிகள் பலரது கணிப்பை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது சனிக்கிழமை வெளியான தீர்ப்பு. 
 
1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது நடந்த சம்பங்கள் குறித்து நன்கு அறிந்தவர்களின் குற்றச்சாட்டு சசிகலா அந்தக் காலகட்டத்தில் அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்டு அதிகாரங்களை கையில் வைத்திருத்தார் என்பதாகவே இருக்கும். சசிகலாவும் அவரது சகாக்களும் தமிழகம் முழுவதும் இடங்களை வாங்கிக் குவிப்பதில் மும்முரமாக இருந்தனர். 


1980-களில் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தார் ஜெயலலிதா. அப்போது இருந்தே ஜெயலலிதாவும்-சசிகலாவும் நல்ல நட்புறவில் இருக்கின்றனர். கட்சிக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்கள் என ஜெயலலிதா எங்கு சென்றாலும் அவருடன் சசிகலாவும் இருப்பார். 


ஜெயலலிதாவின் வீட்டிலேயே சசிகலா தங்க ஆரம்பித்தார். சசிகலா தவிர அவரது குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரும் அவருடன் ஜெயலலிதாவின் வீட்டில் தங்கினர். சசிகலாவின் உறவினர்களில் ஒருவரான பாஸ்கரன் தொலைக்காட்சி ஒன்றை நிர்வகித்து வந்தார். மற்றொரு உறவினர் வி.என்.சுதாகரன் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் ஆனார். 


1995 செப்டம்பரில் நடைபெற்ற சுதாகரனின் பிரம்மாண்ட திருமண நிகழ்ச்சி ஊடகங்களில் வெளியானதே, பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தியது. அந்த எதிர்ப்பின் பலன் தேர்தலில் எதிரொலித்தது. மக்களவைத் தேர்தலில் அதிமுக 39 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. 1996 பொதுத் தேர்தலில் 4 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி கண்டது. 


சிறிய பிரிவு:

 
தேர்தல் பின்னடைவுக்குப் பின்னர், சசிகலா, மற்றும் அவரது குடும்பத்தினருடனான நட்புறவை துண்டித்துக் கொள்வதாக ஜெயலலிதா அறிவித்தார். வளர்ப்பு மகனையும் கைவிட்டார். வாழ்நாள் முழுவது நகைகள் அணியப்போவதில்லை என சூளுரைத்தார்.



சசிகலாவின் நடவடிக்கைகளுக்கு அமலாக்கப் பிரிவு முதலில் செக் வைத்தது. தொலைக்காட்சி சேனலுக்கு டிரான்ஸ்பாண்டர்கள் வாங்கியதில் அந்நிய செலாவணி விதிமுறைகளை மீறியதாக பாஸ்கரன் கைது செய்யப்பட்டார். 1996 ஜூன் மாதம் சசிகலாவும் அந்நியச் செலவாணி சட்ட விரோத பயன்பாடு, கடத்தல் தடுப்புச் (COFEPOSA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து டி.டி.வி.தினகரனும் கைதானார். 


ஆனால், சசிகலா விடுதலையான பின்னர், மீண்டும் மலர்ந்தது ஜெயலலிதா - சசிகலா நட்பு. ஆனால், அரசு பி.ஆர்.ஓ.வாக இருந்த சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் எப்போதுமே ஜெயலலிதாவின் நல் அபிப்ராயத்தைப் பெறவில்லை. அவர் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிப்பதாக ஜெயலலிதா சந்தேகித்தார். 



இதனால், டிசம்பர் 2011-ல் சசிகலா குடும்பத்தினர் சசிகலா குடும்பத்தினரை நட்வு வளையத்தில் இருந்து மீண்டும் வெளியேற்றினார் ஜெயலலிதா. அதிமுகவை கையகப்படுத்த நடராஜனும், மற்றவர்களும் கூட்டுச் சதியில் ஈடுபடுவதாகக் கருதி ஜெயலலிதா இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். 



ஜெயலலிதாவின் நடவடிக்கை கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மன்னார்குடி குடும்பத்தினருடனான நட்பே ஜெயலலிதாவுக்கு கேடு விளைவித்ததாக கட்சியினர் நம்பினர். ஆனால், அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி 100 நாட்கள் மட்டுமே நீடித்தது. சசிகலா, தன்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளுமாறு விடுத்த கோரிக்கைக்கு பணிந்தார் ஜெயலலிதா. 


1990-களில் சசிகலாவும் அவரது கூட்டாளிகளும் துவங்கிய தொழில்நிறுவனங்கள் மூலம் கிடைத்த சொத்தே பின்னாளில் ஜெயலலிதாவை நீதிமன்றங்களில் நிறுத்தியது. சட்ட விரோதமாக சம்பாதிக்கப்பட்ட பணத்தை இந்த நிறுவனங்களே வருவாய் என திரித்துக் கூறின என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
தமிழில்: பாரதி ஆனந்த்  




thanx -the hindu


1 இளவேனில், முதுவேனில், கோடை, முன்பனி, பின்பனி, மாரிக்காலம் என்று உலகமே 6 பருவங்களால் இயங்கும்போது, ஜெயலலிதா போன்ற கற்றவர்கள் நிச்சயம் தங்கள் மனதை எப்போதும் பழியுணர்வு என்ற ஒரே முதுவேனில் பருவ வெப்பத்தில் வைத்திருப்பது மிகவும் தீது. மனம் ஆறும். அதில் பெருகும் காம, குரோத, பொய்மை முதலான குணங்கள் மழை வர குடைவிரித்து வெயில்வர மறையும் குப்பைக் காளான்கள் போல் மறையவேண்டும். அறுதிப் பெரும்பான்மையில் சட்டமன்றத்தை மட்டுமல்ல, பாராளுமன்றத் தேர்தலிலும் 40 க்கு 37 இடங்களைப் பிடித்து திமுகவை மண்ணைக்கவ்வ வைத்தும், ஜெயலலிதா அதை மைனாரிட்டி திமுக என்று தொடர்ந்து குறிப்பிட்டுப் பேசிமகிழ முற்பட்டவர். 90 வயதாகும் கருணாநிதியை குறைந்த பட்சக் கண்ணியமும் இல்லாமல் "அந்தக் கருணாநிதி" என்று அவர், இவர் வீட்டு தோட்டவேலை செய்பவர்போல் மக்களிடையே பேச முற்பட்ட ஜெயலலிதா, தன்னை அவ்விதம் பேசுவோரின் சொற்களைத் தாங்கும் இதயமில்லாமல் அவர்கள்மீது வழக்குகளை அள்ளிப் போடுபவர். இன்று அவர் சிறையில் இருக்கிறார் என்பது அன்று அவருடைய தூய தமிழ் உச்சரிப்பில் சொக்கிய எம்போன்றோருக்கு மிகவும் வருத்தமாய் உள்ளது. இனிமேலாகிலும் அவர் மாறுவாரா?



ஊடகங்கள் என்னவேண்டுமானாலும் எழுதட்டும். இன்று 23 வயதுடைய எவருக்கும் 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டுவரை தமிழகத்தில் நடந்த ஊழல் தெரியாது. அதன்பின் இவர் 2001 ம் ஆண்டுதான் மீண்டும் முதல்வரானார். அப்படியானால் 1991 முதல் 2014 வரை ஜெயலலிதா இந்தத் தமிழ் நாட்டை எவ்வாறெல்லாம் தனதாக்கினார் என்பதை இன்று 23 வயதாகும் எவராலும் புரியவே முடியாது. அதனால்தான் இவரால் இடையிட்டு ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. தான் தாக்குவதற்கும் வெறுப்பதற்கும் ஏற்கனவே எம்ஜிஆர் தனக்கு எதிரியாகக் கருதிய கருணாநிதியை இவர் தனக்கும் எதிரியாக சித்தரித்துக்கொண்டார். தமிழ் நாடு அறிந்தவரை ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் தனிப்பட்ட வகையிலோ, அரசியல் வகையிலோ யாதொரு பிணக்கும் இருந்ததில்லை. எம்ஜிஆருக்கும் கருணாவுக்கும் இடையே இருந்த பிணக்கை இவர் சாதுரியமாகப் பயன்படுத்திக் கொண்டார். இன்று இவர் சிறையில் இருப்பதை கருணாநிதி ஒரு சொல்லால் கூட விமரிசனம் செய்யாதது ஒன்றே, அப்படி ஒன்றும் ஜெயலலிதா பழிப்பதுபோல் கருணா பிறர் போல கெட்டவர் அல்ல என்பதைக் காட்டும். இந்த அரசியல் நயன்மை அவரிடம் உண்டு. இவரிடம் உள்ளது அவரை "அரை வேக்காடு" என்று அர்ச்சிப்பதே!

Wednesday, December 26, 2012

கலைஞருக்கு சசிகலா வைத்த செக் , கலைஞரின் டிஃபன்ஸ் ஆட்டம்

http://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/SASI_1.jpg 


ப்பாடி...’ என்று பெங்களூரு கோர்ட் வளாகத்தில் எல்லோரு​மே பெரு​​மூச்சு​​விட்டனர். ஏனென்​றால், 1,032 கேள்விகளுக்கும் சசிகலா பதில் சொல்லி​விட்டார்.



 ஜெட் வேக வெள்ளி!


வியாழக்கிழமை மாலை வரை 825 கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருந்த சசிகலா, வெள்ளிக்கிழமை காலை இஸ்கான் கோயிலுக்குப் போகத் திட்டமிட்டு இருந்தாராம். ஆனால், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்​கொண்டால் வரத் தாமதமாக 

வாய்ப்பு உண்டு என்று சொல்லப்பட்டதால், ஆசையைத் தவிர்த்து​விட்டு புதிய உதவியாளர் சுரேஷ் சகிதம் கோர்ட்டுக்கு சீக்கிரமே வந்து காத்திருந்​தார். நீதிபதி பாலகிருஷ்ணா 11.20 மணிக்குத்தான் கோர்ட் ஹாலுக்கு வந்தார்.


ஜெ.ஜெ. பிரின்​டர்ஸ், ஜெயா பப்ளி​கேஷன்ஸ், ஜெயா ஃபார்ம் ஹவுஸ், நமது எம்.ஜி.ஆர்., உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் நடந்த பங்குப் பரிவர்த்தனை, கணக்கு வழக்குகள், வங்கிக் கணக்குகள், வரி தொடர்பாகவே கேள்விகள் மீண்டும் கேட்கப்பட்டன. அத்தனை கேள்விகளுக்கும்  மிகவும் தெளிவாக அழுத்தம்திருத்தமாக, 'தெரியாது’ என்றார்.


ஆஞ்சநேயா என்டர்பிரைசஸ் நிறுவனக் கட்டடம் கட்டியது, பராமரித்தது, நாதெள்ளா நகைக் கடையில் வைர நகைகள் வாங்கியது தொடர்பான நீண்ட நெடிய கேள்விகளை நீதிபதி மூச்சுவாங்க வாசித்து, அதனை ஹாரீஸ் கஷ்டப்பட்டு நான்கு பக்க அளவுக்கு மொழிபெயர்த்து விளக்கியதும், 'எழுத்துப்பூர்வமாகப் பதில் தருகிறேன்’ என்று ஒற்றை வரியில் சொன்னார் சசிகலா. அதனால், வெள்ளிக்கிழமை வழக்கத்தைவிட கேள்விகள் ஜெட் வேகத்தில் பறந்தன.


'பங்களா’ பதில்கள்?


வெள்ளிக்கிழமை மாலை வரை வங்கிக் கணக்குப் புள்ளிவிவரங்களாகப் பயணித்த கேள்விகளின் திசையை நீதிபதி பாலகிருஷ்ணா திடீரென மாற்ற ஆரம்பித்தார். சிறுதாவூர் பங்களா, பையனூர் பங்களா, கொடநாடு எஸ்டேட், அரசுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தது, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் அதிகாரி தொடர்பான கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். 



ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்வதற்கு முன், சசிகலாவின் வக்கீல்கள் மணி​சங்கரும் செந்திலும் கைகளை அசைப்பதும், துண்டுச் சீட்டைக் காட்டுவதுமாக உதவி செய்தனர். அதேபோல ஏற்கெனவே கொண்டு வந்திருந்த ஃபைலைப் பார்த்தும் பதில் சொன்னார். பங்களாக்​களைக் கட்டியது, பராமரித்தது, வரி செலுத்தி​யதுபோன்ற அத்தனை கேள்வி​களுக்கும் தெரியாது என்றே பதில் சொன்னார்.



 ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லி​விட்டு சரியாகச்சொன்​​னேனா என்று வக்கீல்களைப் பார்த்து தலையசைத்து உறுதி செய்துகொண்டார்.  



விசாரணை அதிகாரிகளை விளாசிய சசி!


சனிக்கிழமை காலை உண​வை சீக்கிரமாக முடித்துக்​கொண்டு, கோர்ட் பக்கத்​திலே இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போய் பிரார்த்தனை செய்த சசி, 11 மணிக்கு கோர்ட்டுக்குள் நுழைந்தார். கோர்ட் நடவடிக்கை தொடங்கியதும், சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தார் நீதிபதி. 'நல்லம நாயுடு தலைமையிலான அதிகாரிகள் சசி என்டர்பிரைசஸ் அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது, 81 முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி இருக்கிறார்களே?’ என்று கேட்டார்.



'விசாரணை அதிகாரிகள் சில பொருட்களைக் கைப்பற்றி இருந்தாலும், எங்களுடைய சொத்துக் கணக்கை அதிகமாகக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக வீட்டில் இருந்த பரிசுப் பொருட்களை எல்லாம் திட்டமிட்டு கணக்கில் சேர்த்தனர்’ என்றார். 'அப்படியென்றால் ஜெயலலிதா, நீங்கள், சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த​தாக விசாரணை அதிகாரி நல்லம நாயுடு கூறி இருப்பது பற்றி என்ன சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார்.



 'நான், சுதாகரன், இளவரசி மூவரும் தனித்தனியாக தொழில்  நடத்துகிறோம். அதில் ஜெயலலிதாவுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்மீது கொண்டுள்ள அரசியல் காழ்ப்பு உணர்ச்சியிலே வழக்கை ஜோடித்து உள்ளனர். அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த என்னிடம் விசாரிக்க வந்த அதிகாரிகள், விசாரணை நடத்தாமல் ஹாயாக டி.வி-தான் பார்த்தனர். ஆனால் அப்போது சொத்துக்குவிப்பு வழக்குத் தொடர்பாக என்னிடம் விசாரணை நடைபெறுவதாக டி.வி-யில் தலைப்புச் செய்தி ஓடியதைப் பார்த்து அதிர்ந்தேன். 



அதன்பிறகுதான் இதெல்லாம் விசாரணை அதிகாரியின் நாடகம் என்பது தெரிந்தது. பல்வேறு காலகட்​டங்களில் விசாரணை அதிகாரிகள் வரம்பை மீறி சோதனை நடத்தியது, எங்களுடைய வீட்டில் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்​படும் கைக்கடிகாரங்கள், நகைகள், பொருட்கள் தொடர் பாகச் சொன்ன அத்தனையுமே பொய்யானவை. வேண்டும் என்றே அவற்​றின் மதிப்பை அதிகமாகக் காட்டி இருக்கின்றனர்’ என்று விளாசினார்.


http://mmimages.maalaimalar.com/Articles/2012/Feb/858bc757-3919-4ab5-868f-b52d04f91e86_S_secvpf.gif


சுதாகரன் திருமணச் செலவு!


சுதாகரனின் திருமணச் செலவுகள் தொடர்பான கேள்விகளுக்கு, ஜெய​லலிதா என்ன பதில் சொன்னா​ரோ, அதே பதிலையே சசிகலாவும் சொன்​னார்.


'சுதாகரனின் திருமணத்துக்கு நானோ, ஜெயலலிதாவோ, ஒரு ரூபாய்​கூட பணம் செலவழிக்கவில்லை. தமிழகப் பண்பாட்டின்​படி திருமணச் செலவை மணப்பெண் வீட்டாரே முழுவதுமாக ஏற்றுக்​கொண்டனர். அதுதான் வழக்கம். இதுதொடர்பாக பெண்ணின் தாய்மாமன் ராம்குமார் சாட்சியம் அளித்து இருக்கிறார்’ என்று உறுதியான குரலில் சொன்னார் சசிகலா.


இது பொய் வழக்குதான்!


'ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்​களின் விவரங்கள் தர முடியுமா?’ என நீதிபதி கேட்ட போது நீண்ட நேரம் யோசித்துவிட்டு, 'எழுத்து மூலமாகப் பதில் சொல்​கிறேன்’ என்றார் சசிகலா. அவரிடம், 'வழக்கின் முதல் குற்ற​வாளியான ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக 62.27 கோடி ரூபாய் சொத்துச் சேர்த்ததாகக் கூறப்படுவது குறித்து என்ன சொல்கிறீர்கள்?’ என்று நீதிபதி கேட்டார்.


'ஜெயலலிதாவின் சொத்து வேறு. எங்களுடைய சொத்து வேறு. அவர் மீது பொய் வழக்குத் தொடர வேண்டும் என்பதற்காகவே 'எங்களுடைய சொத்துக்களை எல்லாம் அவருடைய சொத்தாகக் கணக்கில் சேர்த்துள்ளனர். எங்களு​டைய சொத்துகள் அனைத்துக்கும் முறைப்படி வரி செலுத்தி இருக்கிறோம். அதே போல வங்கியில் கடன் வாங்கியே எங்களுடைய நிறுவனங்களை ஆரம்பித்துப் பராமரித்தோம். அதற்கான ஆதாரங்​களை எல்லாம் கோர்ட்டில் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறோம். ஜெய​லலிதாவை அரசியல் ரீதியாகப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகப் போடப்பட்ட பொய் வழக்கு’ என்ற சசிகலாவின் முகத்தில் புன்னகை வழிந்தது.


கருணாநிதி என்னை மிரட்டினார்!





கடைசியாக, 'இந்த வழக்கு குறித்து ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?’ என்று கேட்கத் தொடங்கிய‌ நீதிபதி, 'போன கேள்விக்கு நீங்கள் சொன்ன பதிலையே உங்கள் கருத்தாகஎடுத்துக்​கொள்கிறேன்’ என முடிக்க முயற்சிக்க, 'இல்லை... இல்லை... ஒரு சில வார்த்தைகள் மட்டும்’ என்று இழுத்தார் சசிகலா.


இதுவரை 1,031 கேள்விகளுக்கும் சசிகலா சொன்ன பதில், அவர் பக்கத்தில் இருக்கும் மொழிபெயர்ப்பாளருக்குக்கூட தெளிவாகக் கேட்காத வகையில் மெள்ளப் பேசினார். ஆனால், கடைசிக் கேள்விக்கு மட்டும் அனல் தெறிக்கும் வகையில் அரசியல் வசனம் பேசி அனைவரையும் மிரள வைத்தார்.



'தமிழ்நாட்டில் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் அரசியல் பகை இருக்கிறது. அதனால், அரசியலில் இருந்து ஜெய லலிதாவை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்பதற்காக, வரு மானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்துச் சேர்த்ததாகப் பொய்யாக இந்த வழக்கைத் தொடர்ந்தார். இந்த வழக்கு ஆரம்பிக்கப்பட்டபோது அவரால் 66 கோடி ரூபாய்க்கான கணக்கைக் காட்ட முடியாததால், வழக்கு ஆரம்பித்து இரண்டு மாதங்கள் கழித்து என்னையும், சுதாகரன், இளவரசியையும் இதில் சேர்த்தார். 



எங்களுடைய சொத்துகளை எல்லாம் ஜெய லலிதாவின் சொத்தாகக் கணக்குக் காட்டியுள்ளார். இந்த வழக்குத் தொடர்ந்த இரண்டு மாதங்களில், ஜெயலலிதாவுக்கு எதிராகச் சாட்சியம் சொல்லும்படி கருணாநிதி என்னை மிரட்டினார். மறுத்து விட்டேன். அதனாலே, என்னை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்த்தனர். அது மட்டுமில்லாமல் ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் விசாரணையை நேர்மையாக நடத்தவில்லை. 



எங்களை அவமானப்படுத்தும் நோக்கிலும், ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் எங்கள் வீட்டில் சோதனை நடத்திய வீடியோ காட்சிகளை கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சியான சன் டி.வி-யில் அடிக்கடி போட்டுக்காட்டினர். ஜெயலலிதாவை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்ற கருணாநிதியின் பேச்சை விசாரணை செய்த அதிகாரிகளும் கடைப்பிடித்தனர். என்னுடைய விரிவான விளக்கத்தை எழுத்து மூலமாகவும் சொல்கிறேன்’ என்றபோது சசிகலாவின் முகத்தில் கோபம் கொப்பளித்தது.


அடுத்து சுதாகரன் வருகை!



ஜெயலலிதா 1,384 கேள்விகளுக்கும், சசிகலா 1,032 கேள்விகளுக்கும் பதில் சொல்லி இருப்பதால், அடுத்து சுதாகரன் பதில் சொல்ல இருக்கிறார். சுதாகரன் வக்கீல் அன்புக்கரசு, 'நாடு முழுவதும் ஒரு வாரம் கோர்ட் விடுமுறை என்பதால், ஜனவரி 3-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைக்க வேண்டும்’ என்று கேட்டார்.


உடனே குறுக்கிட்ட நீதிபதி, 'இது ஸ்பெஷல் கோர்ட். ஸ்பெஷல் கேஸ். அதனால் அந்த விடுமுறை நமக்குப் பொருந்​தாது. அதனால் 26-ம் தேதி சுதாகரனிடம் கேள்விகள் கேட்கப்படும்’ என்று கறாராகச் சொல்லி, வழக்கை ஒத்திவைத்தார். இப்போது சுதாகரனுக்கு வக்கீல்கள் கோச்சிங் கிளாஸ் நடத்திவருகிறார்களாம்.
ஆக, தீர்ப்பு நெருங்குகிறது!



நன்றி - ஜூ வி 

http://viruvirupu.com/wp-content/uploads/2012/02/Sasikala-Court-20120218-1.jpg


சென்னை "ஜெயலலிதாவுக்கு, எதிராக, என்னை கருணாநிதி தூண்டிவிட்டார் என, பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா கூறியுள்ளது, அப்பட்டமான பொய்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:ஜெயலலிதாவுக்கு எதிராக, பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்து வரும், சொத்துக் குவிப்பு வழங்கில், நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு, பதில் அளித்த சசிகலா, "ஜெயலலிதாவுக்கு, எதிராக, கருணாநிதி என்னை தூண்டிவிட்டார்' என, கூறியுள்ளது கலப்படமற்ற, அப்பட்டமான பொய். சசிகலா கூறுவதற்கு, எவ்வித ஆதாரமும் இல்லை. நீதிமன்றத்திலேயே, தவறான, தகவலை அவர் கூறியுள்ளார். சுதாகரன் திருமணத்தை ஜெயலலிதா நடத்தவில்லை; பெண் வீட்டார் தான் செலவழித்து நடத்தினர் என, சசிகலா சொல்லியிருப்பது, எந்தளவுக்கு பொய்யான தகவலோ, அதுபோல தான், என் மீது, சொல்லியிருக்கும் குற்றச்சாட்டும். 


நன்றி - தினமலர் 


http://tamil.oneindia.in/img/2012/06/07-sasikala8-300.jpg

Saturday, August 18, 2012

என்னை டார்ச்சர் பண்ணாங்க -ஜெ வழக்கு புகழ் வக்கீல் ஆச்சார்யா பேட்டி


a

நான் சந்தித்த சதிகள்! - ஆச்சார்யா ஸ்பெஷல் பேட்டி



ஆச்சார்யா... தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிம்ம சொப்பனம். ஒரு வழக்கறிஞர் எப்படி தயவுதாட்சண்யம் பார்க்காமல் செயல்பட வேண்டும் என்பதன் உதாரண மனிதர்.



14 ஆண்டுகளாக கோர்ட் படி மிதிக்காமல் இருந்த ஜெயலலிதாவை, 'சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு வர முடியும். கோர்ட்டுக்கு வர முடியாதா?’ என்று யதார்த்தமான கேள்வி கேட்டு மடக்கியவர். நொண்டி அடித்துக்கொண்டே இருந்த சொத்துக்குவிப்பு வழக்கின் குடுமியைப் பிடித்து, இறுதிக்கட்டம் வரை இழுத்து வந்தவர்.


அப்படிப்பட்ட ஆச்சார்யா, திடீரெனக் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணிக்கு, தனது அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்தார். பெங்களூரு நீதிமன்றத்தின் அடுத்த நீதிபதி யார் என்ற குழப்பம் நிலவும் நேரத்தில் ஆச்சார்யா ராஜினாமா செய்திருப்பது யாருமே எதிர்பார்க்காத திடீர் திருப்பம். ராஜினாமா செய்த ஒரு மணி நேரத்தில், பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்தோம். கோர்ட்டில் இருப்பது போலவே, அனல் தெறித்தார்!

http://www.envazhi.com/wp-content/uploads/2012/06/Sasikala-DC.jpg.crop_display.jpg


1.''நீங்கள் ராஜினாமா செய்துள்ளீர்கள் என்பதை நம்பவே முடியவில்லை. நீங்கள் முழுமனதோடு எடுத்த முடிவுதானா?''




''தீர்க்கமாக யோசித்த பிறகு நான் முழுமனதோடு எடுத்த முடிவுதான். தாராளமாக நீங்கள் நம்பலாம்!'' (சத்தமாகச் சிரிக்கிறார்).



2. ''கடந்த பிப்ரவரியில், அதிகாரம் பொருந்திய கர்நாடகாவின் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிடிவாதமாக ஜெயலலிதா வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாகத் தொடர்ந்தீர்கள். இப்போது, அந்தப் பதவியையும் ராஜினாமா செய்யும் அளவுக்கு அப்படி என்ன திடீர் நெருக்கடி?''




''ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்குக்கு 2005-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி என்னை, அரசு சிறப்பு வக்கீலாக நியமித்தார்கள். ஆறே மாதங்களில் வழக்கு முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் ஆஜரானேன். ஆனால், இந்த ஏழு வருடங்களில் அவர்கள் தரப்பில் இருந்து ஸ்பெஷல் கோர்ட்டிலும், ஹை கோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் எத்தனை மனுக்கள் போட்டிருக்கிறார்கள் தெரியுமா?


எத்தனை முறை அப்பீலுக்குப் போய் இருக்கிறார்கள் தெரியுமா? இப்போதுகூட சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா போட்ட இரண்டு மனுக்கள் விசாரணையில் இருக்கின்றன. எல்லா மனுக்களையும் போட்டுவிட்டு கடைசியாக‌ நீதிபதியின் நியமனமே செல்லாது என்றும் மனுப் போட்டு இருக்கிறார்கள். அந்த மனு கர்நாடகா ஹைகோர்ட்டில் இருக்கிறது. இப்படி, சொத்துக்குவிப்பு வழக்கு கொஞ்சம்கூட நகராமல் அதே இடத்தில் இருந்தால், என்னால் என்ன செய்ய முடியும்? கடந்த ஓர் ஆண்டாகவே என்னை இந்த வழக்கில் இருந்து வெளியேற்ற பலவித சதி முயற்சிகளை மேற்கொண்டனர்!''





3. ''என்ன மாதிரியான சதி முயற்சிகள்?'



''என்னைப் பற்றி அவதூறாக, கவர்னருக்கும் ஹை கோர்ட் நீதிபதிக்கும் பெட்டிஷன் போடுவது, ஸ்பெஷல் கோர்ட்டிலும் ஹை கோர்ட்டிலும் துண்டு அறிக்கை கொடுப்பது, போஸ்டர் ஒட்டுவது, மீடியாக்களில் புகார் பரப்புவது என்றெல்லாம் செய்தனர். ஒரு கட் டத்தில் நான் அட்வகேட் ஜெனரல் பதவி, அரசு சிறப்பு வக்கீல் என இரண்டு பொறுப்புகளையும் வகிக்கக் கூடாது என்றனர். அப்போது அவர்கள், நான் சிறப்பு வக்கீல் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று நினைத்தனர்.


ஆனால், நான் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இறுதியாக‌ச் சிலரைத் தூண்டிவிட்டு கர்நாடக லோக் ஆயுக்தா நீதிமன்றத்திலும், ஹை கோர்ட்டிலும் என் மீது அவதூறு வழக்குப் போட வைத்தனர். லோக் ஆயுக்தாவில் போட்ட வழக்கு அடிப்படை ஆதாரம் இல்லாதது என்று, ஆரம்பத்திலேயே வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது கோர்ட்.


 இரண்டாவதாக, 'கல்வி நிறுவன மோசடியில்’ ஈடுபட்டதாகப் போடப்பட்ட வழக்கை விசாரித்த ஹை கோர்ட், 'நேர்மையானவர் மீது அவதூறு பரப்பாதீர்கள்’ என்று  கண்டித்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து இருக்கிறது. ஹை கோர்ட்டின் தீர்ப்பு எனக்குச் சாதகமாக வந்திருந்தாலும், தொடர்ச்சியாக இதுபோன்ற பிரச்னைகளால் தேவை இல்லாத நெருக்கடிகளுக்கும் தீவிர மன உளைச்சலுக்கும் உள்ளானேன். மென்டல் டார்ச்சர் இந்த வயதில் எனக்குத் தேவையா? என் உடம்பைக் கவனிக்க வேண்டாமா?''



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeI8ja3ptOV5Bo2F9g-XeQAA-qDQP_ZQGm-_mv5I6OWQKHaP4tzv5Tm9YN2M48TNrGMniAfwMAvddGFQwEKKmN-08OmbHORL-Hivhiec_NgNvxFgdDqdQDF6L9IVTC0-c1hIY05tnxqrE/s640/jj-cartoon.jpg

4. ''உங்கள் உடம்புக்கு என்ன? உடல் ரீதியாக நீங்கள் பாதிப்பு அடைந்துள்ளீர்​களா?''



(கேள்வியை முடிக்கும் முன்பே) ''நோ நோ... எனக்கு எந்தக் குறிப்பிட்ட நோயும் இல்லை. ஐ ம் ஆல்ரைட். நான் நன்றாகவே இருக்கிறேன். மனு மேல் மனு போட்டு என்னை வெறுப்படைய​வைத்து விட்டனர். மென்டல் டார்ச்சரால் வயதான காலத்தில் எனக்கு அதிகத் தலைவலி ஏற்பட்டதைச் சொல்கிறேன்!'' 



'5. 'அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தபோது, 'ஜெயல​லிதாவின் வழக்கில் இருந்து என்னை விலகச் சொல்லி பி.ஜே.பி. மேலிடம் அழுத்தம் கொடுத்தது. அதனால்தான் ராஜி​னாமா செய்தேன்’ என்றீர்கள். இப்போது,அரசுத் தரப்பு வக்கீல் பதவி​யை ராஜினாமா செய்ததன் பின்னணி​யிலும் அரசியல் இருக்கிறது என்று சொல்கிறார்களே?''



''எனது இந்த ராஜினாமா முடிவுக்குப் பின்னால் எந்த அரசியல் கட்சியும் இல்லை. எந்த அரசியவாதியாலும் என்னைப் பணியவைக்க முடியாது. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்பது என்னோடு மோதியவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனக்கு இப்போது 78 வயது ஆகிறது. தொடர்ந்து இந்த வழக்கில் ஆஜராகி நெருக்கடிகளைச் சந்திக்க விருப்பம் இல்லை. நான் கையறு நிலையில் இருக்கிறேன். அதுதான் உண்மை!''



6. ''உங்கள் மன உளைச்சலுக்கு, வழக்கில் சம்பந்தப்​பட்டவர்கள்தான் காரணம் என்று நினைக்​கிறீர்​களா?''




''ஜெயலலிதா செய்திருக்கலாம். சசிகலா செய்திருக்​கலாம். சுதாகரன் செய்திருக்கலாம். ஏன் இளவரசிகூட செய்திருக்கலாம். குற்றம்சாட்டப்​பட்டவர்​களுக்கு நெருக்கமானவர்கள் யாராவது அந்தக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ செய்திருக்கலாம். அ.தி.மு.க. தொண்​டர்களில் யாராவது செய்திருக்கலாம். நான் உறுதியாக நம்புவது என்னவென்றால், என் மீது சுமத்தப்படும் அத்தனை அவதூறுகளுக்கும் வழக்குகளுக்கும், நான் இந்த வழக்கில் இருந்து விலக வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கம் மட்டும்தான் இருந்திருக்க முடியும்!''


http://www.envazhi.com/wp-content/uploads/2012/01/j-sasi.jpg




7. ''தொடர் அச்சுறுத்தல்களுக்குப் பயந்தே, குடும்பத்​தினர் உங்களை ராஜினாமா செய்யச் சொன்ன​தாகவும் பேச்சு அடிபடுகிறதே?''

''அதெல்லாம் இல்லை. 56 ஆண்டு கால வக்கீல் தொழிலில் எத்தனையோ எதிர்ப்புகளைச் சந்தித்து விட்டேன். இதெல்லாம் சும்மா. இது நானே எடுத்த முடிவு. எனக்கு மட்டும் இன்னும் 10 வயது குறைவாக இருந்திருந்தால், நானா... அவர்களா என்று ஒரு கை பார்த்திருப்பேன். என்ன செய்வது, எனக்கு வயதாகி விட்டது. மனைவியும் பிள்ளைகளும் என்னுடைய வழக்கைப் பற்றியும், தொழிலைப் பற்றியும்கூட பேச மாட்டார்கள். ஏனென்றால் மகளும் மகனும் என்னைப் போலவே வழக்கறிஞர்கள்!''



8. ''உங்களுடைய ராஜினாமா எதிர்த் தரப்பை குஷிப்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?''




''ஓ! நன்றாகத்‌ தெரியும். 'என்னுடைய ராஜினாமா ஜெயலலிதா தரப்புக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்!’ என்று கர்நாடக உள்துறைச் செயலருக்கு அனுப்பி உள்ள கடிதத்திலும் குறிப்பிட்டு இருக்கிறேன். என்ன செய்வது..? என்னதான் போரில் ஒரு வீரன் ஜெயித்துக்கொண்டே போனாலும், ஒரு கட்டத்தில் விரக்தியும், வெறுப்பும் ஏற்படும் இல்லையா? அத்தகைய கட்டத்தில் நான் இருக்கிறேன்.''




9. ''15 ஆண்டுகளாக இந்த வழக்கு இழுத்துக்கொண்டே போகிறது. இதற்​கெல்​​லாம் என்ன காரணம்?''



''வழக்கை இழுத்தடிக்கத் தேவையான எல்லாமும் அவர்களிடத்தில் இருக்கிறது. நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா இன்னும் கூடுதல் கண்டிப்புடன் இருந்திருந்தால், வழக்கை எப்போதோ முடித்து இருக்கலாம். மனு மேல் மனு, அப்பீலுக்கு மேல் அப்பீல், வாய்தாவுக்கு மேல் வாய்தா என ஹை கோர்ட்டுக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கும் போய் இழுத்தடித்திருக்க மாட்டார்கள்!''



10. ''நீதிபதி மல்லிகார்ஜுனைய்யாவின் செயல்பாடு எப்படி இருந்திருக்க வேண்டும் என்கிறீர்கள்?''






''ஜெயலலிதாவும் சசிகலாவும் பதில் சொல்ல இழுத்தடிக்​கிறார்கள் என்பது தெரிந்த பிறகு அதிக கண்டிப்புடன் வழக்கை அணுகி இருக்க வேண்டும்.  அரசு சிறப்பு வக்கீலாக இதைச்சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது நீதிபதியும் வரும் 31-ம் தேதியோடு ஓய்வு பெறு கிறார்!''





http://www.envazhi.com/wp-content/uploads/2012/03/JAYA-WORTHLESS-RULE.jpg
11. ''நீதிபதிக்கு பதவி நீட்டிப்பு கொடுக்க வாய்ப்பு இருக்கிறதா?''



''பொதுவாக,‌ நீதிபதிகளுக்கு பதவி நீட்டிப்பு கொடுப்பது இல்லை. செப்டம்பர் 1-ம் தேதி புதிய நீதிபதியை அறிவிப்​பார்கள். எனக்குச் சரியாகத் தெரியவில்லை. இந்த வழக்கின் தன்மையைக் கருதி பதவி நீட்டிப்பை மல்லிகார்ஜுனைய்யாவுக்குக் கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது!''



12. ''இனி, சொத்துக் குவிப்பு வழக்கு எந்தத் திசையில் பயணிக்கும்?''

''எனக்குத் தெரியாது. இன்னும் எத்தனை ஆண்டு காலம் இழுக்கப்போகிறார்களோ?''



13. ''ஏழு ஆண்டுகள் இந்த வழக்கில் வாதாடி இருக்கிறீர்கள். வழக்கின் அத்தனை சாதக பாதகங்களும் உங்களுக்குத் தெரியும். அதனால் உங்​களுடைய பார்வையில் எப்படிப்பட்ட தீர்ப்பு வரும்?''




''தெரியாது. தெரிந்தாலும் அதை நான் சொல்ல மாட்டேன்!'' என்றவர் ஏதோ சொல்ல முயன்றார். பின் அவரே அமைதியாகி... அடுத்த சில நிமிடங்களில் சிரித்தபடி விடை கொடுக்கிறார்.



'பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் அரசியலும் அமானுஷ்யமும் கூட்டுச் சேர்ந்து இருப்பதால் மர்மங்கள் மட்டுமே நீடிக்கிறது!’ என்பதை ஆச்சார்யாவின் மௌனமும் மர்மமும் கலந்த சிரிப்பு சொல்கிறது!

நன்றி - ஜூ வி



http://www.envazhi.com/wp-content/uploads/2012/06/jaya-marriage.jpg

Wednesday, March 14, 2012

ஜெ-வின் ஆஸ்தான முன்னாள் ஜோதிடர் சசிகலா மீது பரபரப்பு குற்றச்சாட்டு

ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்களில் ஒருவராக இருந்தவர் என்று சொல்லப்பட்டவர் வெற்றிவேல்.

 சி.பி - ஆஹா VETRIVAEL கூட்டுத்தொகை 9 வருது.. அம்மாவோட செண்ட்டிமெண்ட்டே  செண்ட்டிமெண்ட் அவ்வ்வ்வ்

 இவர் கடந்த தி.மு.க. ஆட்சியிலேயே ராவணன் மீது ஒரு புகார் கொடுத்தார். அந்த வழக்கு இப்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் இருக்கிறது. இதுகுறித்து, 20.2.2008 தேதியிட்ட ஜூ.வி. இதழில், 'கோடிகளுக்காக என்னைக் கடத்தினார்கள்! உயிர் பயத்தில் ஜெ. ஜோதிடர்!’ என்ற தலைப்பில் செய்தி வந்தது. அந்தப் புகார் என்ன ஆனது என்றே தெரியாத நிலையில், இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளார் வெற்றிவேல்.


 ''எனது புகார் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று தனது வழக்கறிஞர் குமாரதேவனுடன் கடந்த 12-ம் தேதி வந்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் வெற்றிவேல் மனு கொடுத்துள்ளார்.


வெற்றிவேலை சந்தித்துப் பேசியதில்


 ''எனக்கு சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி. 98-ம் வருஷம் பெரியம்மாகிட்ட (ஜெயலலிதா) அறிமுகம் ஆனேன். பெரியம்மா அப்போது வழக்கு விவகாரங்களுக்காக அலைஞ்சுட்டு இருந்த நேரம். நான் அவரோட அரசியல் எதிர்காலம், வழக்குகளின் நிலை சம்பந்தமாகத் தெளிவா கணிச்சுச் சொன்னேன். அதனால, அவங்களோட நம்பிக்கைக்கு உரிய ஆஸ்தான ஜோதிடர்களில் நான் முன்னணியில் இருந்தேன்.

சி.பி - அண்ணே, சாரி ஃபார் த குறுக்கீடு , அமைதிப்படை அமாவாசை மாதிரி ஒரு கேள்வி, யார் யாருக்கோ ஜாதகம் கணிச்ச நீங்க உங்க ஜாதகத்துல போலீஸ் கேஸ் வரும், சின்னம்மாவை பகைச்சுக்குவோம் அதெல்லாம் கணீக்கலையா? அப்படி இல்லைன்னா நீங்க என்ன ஜோசியர்? ஹி ஹி 




 பெரியம்மா, சின்னம்மா (சசிகலா) மற்றும் அவரோட குடும்பத்தினர் அத்தனை பேருக்கும் நான்தான் ஜோதிடம் பார்த்தேன். 2004-ம் வருஷம், சின்னம்மா என்கிட்ட, 'பெரியம்மாவுக்கு அடுத்து அ.தி.மு.க-வில் முதல்வர் ஆகும் யோகம் யாருக்கு இருக்கு?’னு கணிச்சுத் தரச் சொன்னாங்க. அதுக்காக அவங்க குடும்பத்துல இருக்கிற அத்தனை பேர் ஜாதகமும் கொடுத்தாங்க.
அத்தனை பேர் ஜாதகத்தையும் பார்த்த நான், 'உங்க குடும்பத்துல ஒருத்தருக்குக்கூட கட்சியில் பொதுச்செயலாளர் ஆகும் யோகமோ, தமிழகத்தின் முதல்வர் ஆகும் யோகமோ கிடையாது. இது மாற்ற முடியாத உண்மை’னு கணிச்சு சொன்னேன்.


 சி.பி - உடனே பெரியம்மா டென்சன் ஆகி “ முதல்ல எதுக்காக அத்தனை பேர் ஜாதகத்தையும் பார்த்தீங்க, என் கிட்டே அதுக்கு அனுமதி வாங்குனீங்களா?ன்னு கேட்கலை?” ஹி ஹி

 இந்த விஷயத்தை நான் பெரியம்மாகிட்டேயும் அப்படி​யே சொல்லிட்டேன். இதுதான் கார்டனுக்கும் எனக்கும் விரிசல் விழக் காரணமான சம்பவம். அன்றுமுதல், சின்னம்மா என்னை எதிரியா நினைச்சிட்டார். உண்மையைச் சொல்லப்போனால், சின்னம்மாவை என் அம்மா மாதிரி நினைச்சு இருந்தேன்.


சி.பி - அண்ணே, எகெயின்  ஒரு ஸ்மால் டவுட்டு, சின்னம்மாவை  உங்கம்மா மாதிரி நினைச்சா உங்கம்மாவை என்னவா நினைச்சீங்க? ஜெ அம்மாவை என்னவா நினைச்சீங்க?  உபயம் - வெற்றிக்கொடு கட்டு ஆர் பார்த்திபன் - வடிவேல் காமெடி


 எங்க அம்மா இறந்தப்​பகூட நான் அழுதது இல்லை. ஆனா, சின்னம்மா கஷ்டப்பட்டப்ப எல்லாம் அழுதேன். கிராமத்துல செம்மறி ஆடு மேய்ச்சுக்கிட்டு இருந்த என்னை கார்டனுக்குக் கூட்டிவந்து பெரிய ஆள் ஆக்கினதே சின்னம்மாதான். ஆனா, அவங்களே எனக்கு எதிரியா மாறிட்டாங்க.

சி.பி - நாடு ஏன் நாசமாப்போய்ட்டிருக்குன்னு இப்போ தெரியுது. செம்மறி ஆடு மேய்ச்சுட்டு இருந்தவங்க எல்லாம் அரசியல் ஆலோசகரா ஆனா நாடு எப்படிய்யா உருப்படும்?படிச்சவன் வேலை இல்லாம அலைஞ்சுட்டு இருக்கான்

அப்ப இருந்து என்னை விரட்ட ஆரம்பிச்சவங்க... இப்ப வரைக்கும் விடாம விரட்டிக்கிட்டு இருக்காங்க. உண்மையில் நான் சாதாரண ஆளுங்க. கார்டன்ல ஜோதிடத்தைத் தாண்டி எதையும் எப்பவும் பேசியது இல்லை. அரசியல்னா என்னன்னு எனக்கு எதுவுமே தெரியாது. நான் சொன்ன ஜோதிடக் கணிப்புகளை வைச்சு, சின்னம்மாவும் ராவணனும் என்னை அவங்களுக்குப் போட்டியா, எதிரியா நினைச்சுப் பழிவாங்க ஆரம்பிச்சிட்டாங்க.

சி.பி - நீங்க ஒரு தப்பு பண்ணீட்டிங்க, சசிகலாட்ட எதுவும் சொல்லாம ஆமாம் சாமி போட்டு நைசா ஜெ கிட்டே அவங்களை பற்றி போட்டுக்குடுத்திருக்கனும்.. 

2007-ம் வருஷம் ராவணன் என்கிட்ட என் சொத்து விவரங்களை கேட்டு, ஈரோட்டில் இருந்து கோவைக்கு கார்லயும் கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்துலயும் கடத்​திட்டுப் போனார்.

 சி.பி - ஆமா, ஈரோட்ல உங்களுக்கு என்ன வேலை? பர்சனல் மேட்டர்ஸா? ஹி ஹி

அங்கே தகாத வார்த் தைகளில் பேசி வெற்றுப் பேப்பர் களிலும் பத்திரங்களிலும் கையெழுத்து வாங்கினார். அதுதொடர்பா தேனாம்பேட்டை போலீஸில் புகார் கொடுத்து, பிறகு அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. ஆனால், கடந்த தி.மு.க. ஆட்சியிலேயே அளவுக்கு அதிகமான செல்வாக்குடன் இருந்தார் ராவணன். அதனால், அந்த வழக்கில் ஒரு துரும்பைக்கூட போலீஸார் கிள்ளிப் போடலை.



கடந்த தி.மு.க. ஆட்சியில் ராவணன் எனக்குக் கொடுத்த துன்பங்களுக்கு அளவே இல்லை. 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி என் அம்மாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளுக்காக வீட்டில் ஹோமம் வளர்த்துட்டு இருந்தேன். அப்போது ராவணனுக்கு நெருக்கமான வருமானவரித்துறை அதிகாரியை வைச்சு என் வீட்டில் ரெய்டு நடத்தினார். அதே வருஷம் திருப்பூர் செங்கப்பள்ளியில் ஒரு சொத்தை வாங்க, 1 கோடியே 1 லட்சம் ரூபாய் முன் பணத்தை செங்கப்பள்ளி தி.மு.க. ஒன்றியச் செயலாளராக இருந்த ராவணனின் நண்பர் சண்முகத்திடம் கொடுத்து, அவரது மனைவி ஈஸ்வரி பெயரில் ஒப்பந்தம் போட்டேன்.


ராவணன்கூட பிரச்னை ஏற்பட்ட பிறகு, அந்த இடத்தை அவங்க தரலை. கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டா, 'ராவணன்கிட்ட போய் வாங்கிக்​கோ’னு மிரட்டுறாங்க. இதுசம்பந்தமா, கடந்த தி.மு.க. ஆட்சியில் முக்கியமான நான்கு அமைச்சர்களை நேரில் சந்தித்து உதவி செய்யும்​படி கேட்டேன். ஆனா, அமைச்சர்கிட்ட போன ரெண்டு மணி நேரத்துல எனக்கு போன் வரும். 'அமைச்சர்கிட்ட போனா உன் பணம் கிடைச் சிடுமா? டேய், நீ எங்க போனாலும் என்னை ஒண்ணும் செய்ய முடி யாது’னு ராவணனும் அவரோட ஆட்களும் மிரட்டுவாங்க.


சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் எனக்கு இடம் இருந்துச்சு. 2009-ம் வருஷம் அந்த இடத்தை வைச்சு, ஒரு தேசிய வங்கியில் 35 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். அந்தக் கடனைக் கட்ட முடியாம வட்டியோடு சேர்த்து 65 லட்சம் ரூபாய் பாக்கி இருந்தது. ஆனா, எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்​காமல் சுமார் மூணு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்தச் சொத்தை, ஒரு கோடி ரூபாய்க்கு வங்கி ஏலம் விட்டுருச்சு. இது எப்படி சாத்தியம்?


 சி.பி - ஆடு மேய்ச்சிட்டு இருந்தவருக்கு எப்படி இந்த மாதிரி கோடிக்கணக்குல சொத்து வந்துச்சு.. ஜாதகம் பார்க்க அம்புட்டு வருமா? நல்ல நேரம் சதீஷ்.. நோட் பண்ணப்பா..


 முதல் தவறு எனக்குத் தகவல் தெரிவிக்காமல் ஏலம்விட்டது. அடுத்தது, மூணு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை ஒரு கோடிக்கு விற்று வங்கிக்கு நஷ்டம் ஏற்படுத்தியது. எனக்குத் தகவல் தெரிவிச்சதுக்கு ஆதாரம், அந்த சொத்தை யாருக்கு வித்தாங்க? அந்த ஏலத்தில் யார் எல்லாம் கலந்துக்கிட்டாங்க?ன்னு பல கேள்விகளைக் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு போட்டேன். இப்ப வரை சரியான தகவல் கொடுக்கலை. இதன் பின்னணியிலும் ராவணன்தான் இருக்கார்.


சி.பி - அடடா.. ஒரு வங்கிக்கு நஷ்டம்னு சொன்னதும் அண்ணன் கண்ணு கலங்குதே.. நாட்டுப்பற்று!!!

இதுமாதிரி ஒண்ணு, ரெண்டு இல்லை. இப்படி சுமார் எட்டு கோடி ரூபாய் அளவுக்கு என் பணம், சொத்துகளை ராவணன் மோசடி செய்து இருக்கார். 2007-ம் ஆண்டு என்னைக் கடத்திட்டுப் போன சம்பவத்துக்குப் பிறகு ராவணனுக்குப் பயந்து, டெல்லிக்குப் போய் செட்டில் ஆகிட்டேன். அங்கேயும் ராவணன் என்னை விடலை. டெல்லியில் ஒரு அ.தி.மு.க. வக்கீல் என் மீது பொய்ப் புகார் கொடுத்து, ஒரு உதவி கமிஷனர்கிட்டேயே, 'சார், இது தமிழ்நாடு டெபுடி சி.எம். ராவணனின் ஆர்டர். உடனே அரெஸ்ட் பண்ணுங்க’னு டார்ச்சர் பண்ணினார். நான் அந்த போலீஸ் அதிகாரிகிட்ட, 'தமிழ்நாட்டுல டெபுடி சி.எம்-னு போஸ்ட்டிங்கே இல்லை’ன்னு ஆதாரபூர்வமாப் புரிய வைச்சுத்தான் தப்பிச்சேன்.
இப்ப ராவணன் மீது படிப்படியா நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னாலதான், சென்னை வந்து இருக்கேன். ஜோதிடர்களைக் கடவுளின் தூதர்கள்னு சொல்லுவாங்க. நான் கடவுள்கிட்ட கேட்டு, அங்க இருந்து எனக்கு என்ன தகவல் கிடைச்சதோ, அதைத்தான் ஜோதிடக் கணிப்புகளாகச் சொல்லிட்டு இருக்கேன்.

 சி.பி - அப்படியே கடவுளுக்கு ஒரு ஐ எஸ் டி கால் போட்டு உங்களுக்கு ஒரு விடிவு காலம் எப்போ வரும்னு கேட்டு சொல்லுங்கோ..

 2011-ம் வருஷத்துக்குப் பிறகு ராவணன் அரசியல்ல இருக்க மாட்டார். அவரோட அழிவுகாலம் தொடங்கிடும்னு நாலு வருஷத்துக்கு முன்னாடியே கட்சிக்காரங்க, என் நண்பர்கள், ராவணன் நண்பர்கள்னு சுமார் 100 பேர்கிட்ட சொல்லி இருக்கேன்.


 சி.பி - ஓஹோ, அந்த 100 பேர்ட்டயும் ஃபீஸ் வாங்கியாச்சா?

இப்பவும் சொல்றேன். ராவணனுக்கு அழிவு நிச்சயம். இத்தனை நாள் அவர் மீது கொடுக்கப் பட்ட புகார்களைவிட, ஆணித்தரமான ஆதாரங்கள் கொண்ட புகார்கள் நிறைய என்கிட்ட இருக்கு. ஒவ்வொரு புகாரா போலீஸில் கொடுத்து, ராவணன் அழியறதை என் கண்ணால பார்க்கப்போறேன். இது என் ஆசை எல்லாம் கிடையாது. இதுதான் ராவணனின் ஜாதகம்!'' - ஆவேசமாக முடிக்கிறார் ஜோதிடர் வெற்றிவேல்!


சி.பி - அட போங்கண்ணே, இப்படித்தான் குணச்சித்திர நடிகை சோனா கூட சொன்னாங்க. என் கிட்டே வீடியோ ஆதாரம் இருக்கு, எஸ் பி பி சரணை கூண்டில் ஏத்துவேன், சட்டத்தின் பிடியில் சிக்க வைப்பேன்னு சபதம் போட்டாங்க.. ஆனா அப்புறம் டகார்னு பல்டி அடிச்சு இப்போ சரண் ஹீரோவா நடிக்க சோனா கவுரவ கதாநாயகியா  “ ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்” அப்படின்னு ஒரு படம் நடிக்கராங்களாம்.. அவ்வ்வ்வ்
வெற்றிவேல் பணம் கொடுத்ததாகக் கூறும் செங்கப்பள்ளியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சண்முகத்திடம் பேசினோம். ''வெற்றிவேலிடம் சொத்தை விற்க முன் பணம் வாங்கியது உண்மைதான். ஆனால், அதன் பிறகு சொத்தைக் கிரையம் செய்ய பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை. அவர் மீதான வருமான வரித்துறை நடவடிக்கைக்குப் பிறகு, அவர் வருமான வரித்துறைக்கு கட்ட வேண்டிய பாக்கித் தொகைக்காக இந்த நிலத்தையும் பணத்தையும் வழக்கில் சேர்த்து விட்டார்கள். ராவணன் என் நண்பர் இல்லை. அவரை நான் பார்த்ததுகூட கிடையாது...'' என்றார்.


 சி.பி - பார்க்காமயே நட்பா? விட்டா எனக்கு ராமர், ராவணன், ராமாயணம் எதுவுமே தெரியாது, கேள்விப்பட்டதே இல்லைன்னு சொல்லிடுவார் போல..
ராவணன் மீதான பிடி இறுகுவதற்கு வெற்றிவேல் புகார் கூடுதல் வலையாக மாறிக்கொண்டு இருக்கிறது!

Friday, February 24, 2012

டாக்டர் ஜெ ஜெ -சில குறிப்புகள், பல சிரிப்புகள் - பிறந்த நாள் காமெடி கும்மி

தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட நான்கு பேர் மீதும், விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடுவும், தமிழக போலீசாரும் பொய் வழக்கு தொடர்ந்துள்ளனர்,'' என்று பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் சசிகலா தெரிவித்தார்.


முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், இரண்டாவது குற்றவாளியான சசிகலாவிடம் நேற்று இரண்டாவது நாளாக கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விகள் கேட்பது துவங்கியது,


"ஜெயா பப்ளிகேஷனுக்கு, ஜப்பானிலிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மிஷின் வாங்கியது உண்மையா. அதற்கு பணம் எங்கிருந்து வந்தது' என்று நீதிபதி மல்லிகார்ஜுனையா கேள்வி கேட்டார்.


 அதற்கு சசிகலா, "மிஷின் வாங்கியது உண்மை தான். அது புது மிஷின் அல்ல; பழைய மிஷின். ஜெயா பப்ளிகேஷன் வருமானத்தில் தான் வாங்கப்பட்டது' என, நீண்ட விளக்கம் அளித்தார். (சசிகலாவின் "வாய்ஸ்' மிகவும் குறைவாக இருந்தது. ஏற்கனவே எழுதிக் கொண்டு வந்திருந்ததை பார்த்து, பார்த்து பதிலளித்தார்.)

 சி.பி - பாவம், ரொம்ப ஏழைங்க , புதுசு வாங்கக்கூட காசில்லாத ஏழைங்க.. ( மை டியர் மார்த்தண்டன் கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்)

 அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, "நான் சென்னையில் படித்தவன். தமிழில் பேசினால், என்னால் புரிந்து கொள்ள முடியும். சசிகலா கூறும் பதில் எனக்கு கேட்கவில்லை. அவரது பேச்சு சத்தம் குறைவாக உள்ளது. முன்வரிசையில் இருப்பவர்களுக்கு மட்டுமாவது அவரது பதில் கேட்க வேண்டும். அவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு தேவையற்ற நீண்ட விளக்கம் அளிக்கிறார். நீண்ட விளக்கங்களை எழுத்து மூலம் கொடுக்கலாம். ஜெயலலிதா அப்படித்தான் செய்தார். சசிகலா எழுதி வைத்து பதிலளிக்கிறார். குற்றவாளிகள் அவ்வாறு செய்யக்கூடாது' என்றார்.


சி.பி - அக்கா சொந்தமா சொன்னா அப்படியே சொல்லலாம், பொய் சாட்சின்னா எழுதிக்கொடுத்ததைத்தான் படிச்சு ஒப்பிக்க முடியும்..



சசிகலா வழக்கறிஞர் மணிசங்கர் கூறுகையில், ""உடல் நலக்குறைவால் சசிகலாவால், அதிக சத்தமாக பேச முடிவதில்லை. சில கேள்விகளுக்கு நீண்ட விளக்கம் தேவைப்படுகிறது. சில நம்பர்களை குறித்து வைத்து பார்த்து கூறுகிறார்,'' என்றார்.

சி.பி - அதென்னமோ எல்லா அரசியல்வாதிகளும் பொதி எருது மாதிரிதான் இருக்காங்க, ஆனா போலீஸ் , கேஸ்னு வந்துட்டா ஹாஸ்பிடல்ல போய் படுத்துக்கறாங்க..




இதைத் தொடர்ந்து, ""சென்னை ஈக்காடுதாங்களில் நீங்கள் வாங்கிய இடம், கட்டடத்துக்கு நீங்கள் பணம் கொடுத்தீர்களா, பணம் எங்கிருந்து வந்தது,'' என, நீதிபதி கேள்வி கேட்டார். இதற்கு சசிகலா கூறுகையில், ""ஆஞ்சனேயா எண்டர்பிரைசஸ் கம்பெனி மூலம் அந்த இடம் வாங்கப்பட்டது. அதற்கு கணக்கு உள்ளது,'' என்றார். சசிகலா மெதுவாக பேசியதால், அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா எழுந்து வெளியே சென்று விட்டார். ""சென்னையில், கிரீன் பார்ம் ஹவுசுக்கு, 600 சதுர அடியிலான, 20, 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடத்தை, 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கினீர்களா,'' என, நீதிபதி கேட்டார். சசிகலா பதிலளிக்கையில், "அந்த இடத்தின் உரிமையாளர்களின் ஒருவரான ஜெகதீஷ்ராஜு குறுக்கு விசாரணையின் போது, விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு மிரட்டி எங்களுக்கு எதிராக கூறச் சொன்னார் என, வாக்குமூலம் அளித்துள்ளார். "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பது போல், இந்த வழக்கில் அனைத்து சாட்சிகளையும், விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு மற்றும் விசாரணை போலீசார் மிரட்டி எங்களுக்கு எதிராக கூற வைத்துள்ளனர். இந்த வழக்கு ஒரு பொய் வழக்கு. போலீசாரால் ஜோடனை செய்யப்பட்டுள்ளது' என்றார்.

 சி.பி - அக்கா, ஜட்ஜ் அய்யா கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லாம பானை, சோறு, சாம்பார்னு ஏன் மழுப்பறீங்க? 

மொழிபெயர்ப்பாளருக்கு சசிகலா கூறிய பழமொழியின் அர்த்தம் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார்.

 சி.பி -  FOR ONE POT RICE, SINGLE MEAL IS QUALITY  -இப்போ புரியுதுங்களா?





 வழக்கறிஞர் மணிசங்கர் எழுந்து அர்த்தம் கூறினார். பின்னர் நீதிபதி, அந்த பழமொழி எல்லாம் தேவையற்றது, என்றார். மதியம், 3 மணியிலிருந்து மாலை 5.15 மணி வரை, சசிகலாவிடம் மொத்தம், எட்டு கேள்விகள் கேட்கப்பட்டன. நேற்று காலையில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் தொடர்ச்சியாகவே, மீண்டும் கேள்விகள் கேட்கப்பட்டன.

 சி.பி - அக்காவிடம் கேட்ட கேள்விகள் எட்டு, அஷ்டமத்துல சனி...


 ஒவ்வொரு கேள்விக்கும் அவர் பதிலளிக்க, அதிக நேரம் எடுத்துக் கொண்டார்; நீண்ட விளக்கம் அளித்தார். இதனால், அரசு வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா, ""கேள்விகளுக்கு, "ஆம், இல்லை' என்று பதிலளித்தால் போதுமானது. நீண்ட விளக்கம் தேவையில்லை. அவ்வாறு விளக்கம் அளிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டால், அறிக்கையாக தாக்கல் செய்யலாம். இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது,'


 சி.பி- அக்கா, நடக்கறது அப்ஜெக்டிவ் டைப் கொஸ்டின் பேப்பர் எக்ஸாம், எஸ் ஆர் நோ சொல்லனும், சும்மா கதை விடக்கூடாதுங்கக்கோவ்

' என்றார். இதையடுத்து, இந்த வழக்கை இன்றைக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். சசிகலாவிடம் இதுவரை மொத்தம், 63 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. வழக்கு விசாரணை இன்று தொடருவதால், சசிகலாவும், இளவரசியும் பெங்களூரிலேயே தங்கியுள்ளனர்.

நன்றி - தினமலர்



சி.பி - மொத்தம் 63 கேள்விகளா? கூட்டுத்தொகை 9 , ஐ ஜாலி ஜெ எஸ் ஆகிடுவாங்க


1.மேடம், பிறந்த நாள் பரிசா மக்களுக்கு ஏதாவது பரிசு கொடுங்க .


 ஜெ- ”ஷாக்”சர்ப்பரைஸா  ஆல்ரெடி கொடுத்தாச்சே,இன்னுமா?


--------------------------------------


2. 64 நாயன்மார்கள் வாழ்த்த ஜெ வின் 64 வது பிறந்த நாள் கொண்டாடுகிறார்.ஸ்கொயர் ரூட் ஆஃப் 64 = 8 மணிநேர மின் தடை


-----------------------------------

 3. புரட்சித்தலைவி புதிய சாதனை- தினத்தந்தியில் 18 தனி பக்கங்கள் பிறந்த நாள் விளம்பரங்கள்


-------------------------------


4. ஓ பி எஸ் - மேடம், உங்க பர்த்டேவை கொண்டாட பிரம்மாண்டமான கேக் கட் பண்ணிடலாமா? 


ஜெ- வேணாம், கரண்ட் கட் பண்ணிடலாம்

------------------------------------

5. அதிமுக தொண்டர்கள் ஜெ பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.. சாமான்யர்கள் மின் வெட்டால் திண்டாட்டம்.மின்துறை கள்ளாட்டம்

-----------------------------------


6.ops- ஏன் கோபமா இருக்கீங்க?

 ஜெ-சுப்ரீம் கோர்ட் ஜட்ஜூம், கலைஞரும் பிறந்த நாள் வாழ்த்து சொல்லவே இல்லையே?

-------------------------------------

7. கோட்டையில் புரட்சித்தலைவி, பெங்களூர் கோர்ட்டில் புரட்டுத்தலைவி, தமிழகம் வந்தால் இருட்டு, தலைவி!!


--------------------------------------

8. ஜெ- எதுக்காக கொள்ளையர்களை சுட்டீங்க?

கமிஷ்னர் - கேள்வி கேட்டோம், அவங்க பாஷை எனக்கு புரியலை,வெளில தெரிஞ்சா கேவலம்னு சூட்டட்,ஹி ஹி

-------------------------------------

9. துப்பாக்கியில் விஜய் என்'கவுண்டர்' ஸ்பெசலிஸ்ட்  # அப்போ கதையும் சுட்டதாத்தான் இருக்கும்

-----------------------------------




Wednesday, December 28, 2011

சசிகலா - வாழும் (!!) வரலாறு?? - காமெடி கும்மி

http://tamil.oneindia.in/images25/jaya-sasi-450.jpg 

திருத்துறைப்பூண்டியில் 'இங்கிலீஷ் மருந்துக் கடைக்காரர் வீடு’ - பிரபலம்! 
சில பல பத்து ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலீஷ் மருந்துக் கடைகள் சொற்பமாகவே இருக்கும் என்பதால், இந்த அடைமொழி சந்திரசேகரன் பிள்ளைக்கு அடையாளம் ஆனது. இந்த மன்னார்குடி பாரதத்தின் பிரதான பாத்திரமான சசிகலாவின் தாத்தா அவர்!


சி.பி -   விகடன் தாத்தா என்பதால் சசிகலா கதையை தாத்தா-ல இருந்து  ஆரம்பிக்கறாங்க போல.. ஹா ஹா நடக்கட்டும்

சந்திரசேகரன் பிள்ளையின் மகன் விவேகானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதிக்கு, சுந்தரவதனன் ,விநோதகன், ஜெயராமன், வனிதாமணி, சசிகலா, திவாகரன் என்று வந்த வாரிசுகளும், அவர்களது வாரிசுகளும்தான் கடந்த 30 ஆண்டு கால அ.தி.மு.க.வின்... அதன் மூலமாக தமிழக அரசியலை ஆட்டிப்படைக்கும் சக்திகளாக வலம் வந்தார்கள். பெரும் நெடுங்கதையின் முன்கதைச் சுருக்கம் இது!
 
 
சி.பி - இந்தக்கதை, நெடுங்கதையை ஜெ சசியை நீக்கறதுக்கு முன்பே போட்டிருந்தா நீங்க தில்லான ஆள் தான், ஆனா......



மூன்று பாசக்கார அண்ணன்களின் செல்லத் தங்கச்சியாக திருத்துறைப்​பூண்டி வடக்குச் செட்டித் தெருவில் வலம் வந்த சசிகலா, பங்குனி மாச மகா மாரியம்மன் கோயில் உற்சவத்தில் முழு உற்சாகத்தோடு வலம் வருவார். அங்கிருந்த போர்டு ஹை ஸ்கூலில் சேர்த்தார்கள். படிப்போடு சேர்ந்து ஓட்டப் பந்தயத்திலும் பரிசுகள் வாங்கினார். 

 சி.பி - எல்லா அரசியல்வாதிகளும் ரன்னிங்க்ல பெஸ்ட்டா இருக்காங்கப்பா, அப்போதானே நாளைக்கு போலீஸ் அல்லது சி பி ஐ துரத்தறப்ப ஓட முடியும்?

பள்ளி மாணவர் மன்றத்திலும் அவரது பங்களிப்பு இருந்துள்ளது. பத்தாம் வகுப்பு வரைக்கும் படித்த அவர்... மேற்கொண்டு ஏனோ படிக்கவில்லை. ''பொம்பளப் பிள்ளை இவ்வளவு படிச்சா போதும்'' என்று கட்டுப்பாடு வீட்டுக்குள் விதிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.


சி.பி - என்னது? சசிகலா டென்த் மட்டும்தான் படிச்சிருக்காங்களா? ஐ ஏ எஸ் ஆஃபீசரையே பயங்கரமா மிரட்டுவாராமே? தில்லுதான்.. 


இதற்கிடையே விவேகானந்தனின் குடும்பமும் திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடிக்கு இடம் பெயர்கிறது. ஆனாலும் அந்த மகா மாரியம்மன் கோயிலை சசிகலா மறக்கவில்லை. எல்லா விழாக்களிலும் பங்கேற்பார். அந்த நாட்களை உறவினர்களோடு கழிப்பார். அன்றைய தினம் உள்ளூர்க்காரர்கள் அனைவருடனும் பழைய கதைகளைச் சொல்லிப் பேசிக்கொண்டு இருப்பார். ஜெயலலிதாவே இந்தக் கோயிலுக்கு வந்திருக்கிறார். வெள்ளிக் கவசமும் சாத்தி இருக்கிறார். அந்த அளவுக்கு திருத்துறைப்பூண்டி சசிகலாவால் மறக்க முடியாத ஊர்.

சி.பி - பண்ற அட்டூழியங்களை எல்லாம் பண்ணிட வேண்டியது..அப்புறம் அய்யோ சாமி காப்பாத்துன்னு கோயில்ல போய் விழ வேண்டியது.. 

இதைஅடுத்து, சசிகலா வாழ்க்கையில் முக்கியமான ஊர்... விளார். தஞ்சாவூரில் இருந்து 7 கி.மீ தூரத்தில் இருக்கிறது இது. இங்கு வாழ்ந்த மருதப்பன் என்பவரின் மகன்தான் நடராஜன். இயல்பிலேயே தமிழ் ஆர்வமும், அரசியல் ஈடுபாடும்கொண்ட இவர், தி.மு.க. மாணவர் இயக்கங்களில் தன்னை இணைத்துக்கொண்டவர். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுத்தவர். எல்.கணேசனின் முக்கிய சிஷ்யராக வலம் வந்தார். கருணாநிதி தமிழக முதல்வராக முதல் முறை ஆனபோது, செய்தி மக்கள் தொடர்புத் துறையில் ஏ.பி.ஆர்.ஓ-வாக நடராஜனை நியமித்தார். (அவரோடு ஏ.பி.ஆர்.ஓ-வாக நியமிக்கப்பட்டவர்தான் சமீபத்தில் திட்ட அமலாக்கத் துறை சிறப்பு அலுவலர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர் செல்வம்.) தஞ்சை மாவட்ட தி.மு.க.வின் அன்றைய தளகர்த்தரான மன்னை நாராயணசாமி தலைமை ஏற்க, நடராஜன் - சசிகலா திருமணத்தையும் நடத்தி வைத்தார் கருணாநிதி.

 சி.பி - கலைஞர் தலைமைல தான் கேப்டன் மேரேஜ் கூட நடந்தது, நல்ல ராசி.. அவர் நடத்தற மேரேஜ்;ல மாப்பு கடைசில இவருக்கே ஆப்பு வைக்கறாங்க.. 


கருணாநிதி, சசிகலா இருவரது வரலாற்றிலும் இருக்கும் முக்கியமான விநோதங்களில் இதுவும் ஒன்று!



நடராஜன் - சசிகலா தம்பதி சென்னையில் தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள். செய்தித் துறைக்காரர் என்பதால் தனக்கு ஆர்வமான தொழில் ஒன்றைத் தொடங்க நினைத்த நடராஜன், வீடியோ கடை ஆரம்பித்தார். 'வினோத் வீடியோ விஷன்’ என்று அதற்குப் பெயர் சூட்டினார் சசிகலா. தனது அண்ணன் விநோதகன் ஞாபகமாக இது இருக்கலாம். இதன் நிர்வாகத்தையும் சசிகலா கவனித்து வந்தார்.


சி.பி - வீடியோ கடையா? ஐ ஜாலி.. இண்டர் நெட் இல்லாத காலத்துல வீடியோ செண்ட்டர் சேவை மக்களுக்கு நிறைய தேவைப்பட்டு இருக்குமே?

http://tamil.oneindia.in/img/2008/12/sasikala-jayalalitha-250.jpg
1982 - அ.தி.மு.க.வுக்குள் ஜெயலலிதா அதிகாரப்பூர்வ​மாக உள்ளே நுழையும் காலம். கொள்கை பரப்புச் செயலாளர் பதவியையும் கொடுத்து, தினமும் தலைமைக் கழகம் வரலாம், 10 நாளைக்கு ஒரு முறை வெளியூர் டூர் போகலாம் என்று எம்.ஜி.ஆர். கிரீன் சிக்னல் காட்டிய நேரம் அது. ஜெயலலிதா தனது சுற்றுப்பயணம் அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்ய விரும்பினார். இதற்காகவே ஒரு படை அவர் பின்னால் செல்ல ஆரம்பித்தது. இந்தப் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நடராஜன் நினைத்திருக்கிறார்.


சி.பி -  ஓஹோ, அப்போவே ஸ்டார்ட் ஆகிடுச்சா? எந்த நேரம் எம் ஜி ஆர் க்ரீன் சிக்னல் காட்னாரோ , அந்த நேரத்துல இருந்து ஜெக்கு பச்சை தான் ராசியான கலர் ஆச்சு


அந்தக் காலகட்டத்தில் எம்.ஜி.ஆருடன் நிழலாக இருந்தவர் பத்திரிகையாளர் சோலை. அவருக்கு அறிமுகமான ரங்கராஜன் என்ற பொறியாளர் மூலமாக நடராஜன் தொடர்புகொண்டார். 'வினோத் வீடியோ விஷனு’க்கும் சில கூட்டங்களைப் பதிவு செய்து தர வாய்ப்புகள் தரப்பட்டன. இப்படித் தயாரான கேசட்டுக்களைக் கொடுப்பதற்காக, வேதா இல்லத்துக்குள் நுழைகிறார் சசிகலா. ''ஜெயலலிதாவுடன் சுற்றுப்பயணம் போய்விட்டு நாங்கள் வந்த அன்றுதான் முதன் முதலாக சசிகலாவும் அந்த வீட்டுக்குள் வந்தார். நாங்கள் நான்கைந்து பேர் இருந்தோம். எங்கள் அனைவருக்கும் ஆளுக்கு ஒரு பேனா பரிசளித்தார் சசிகலா'' என்கிறார் ஒரு பத்திரிகையாளர். 


 சி.பி - நம்மாளுங்க எது குடுத்தாலும் வாங்கிக்கறாங்க, கத்தி முனையை விட பேனா முனை கூர்மையானதுதான், ஆனா அரசியல்வாதி கிட்டே இருந்தோ அவங்க அடியாள் கிட்டே இருந்தோ பேனா பரிசா வாங்கிக்கிட்டா எப்படி நியாயமான நடு நிலைமையான எழுத்து பிறக்கும்?

வேதா இல்லத்துக்குள் அடிக்கடி போய்வருவது ஒரு பெண் என்பதால், வசதியாய் இருந்தது சசிகலாவுக்கு. அப்போது ஜெயலலிதாவைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்தவர் பிரேமா என்ற பெண். அவருக்கு இரண்டு வாரிசுகள். ஒரு மகனுக்கு பொறியியல் கல்லூரியில் இடம் வாங்கித் தர பிரேமா கேட்டதாகவும், அது ஜெயலலிதாவால் முடியவில்லை என்றும், பிரேமா கோபித்துக்கொண்டு கார்டனைவிட்டு வெளியேறியதாகவும் சொல்கிறார்கள்.


பிரேமா வெளியேறிய சில மாதங்களில் மருத்துவ சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் ஜிண்டால் மருத்துவமனைக்கு ஜெயலலிதா சென்றுள்ளார். ஒரு நட்பு அடிப்படையில் மரியாதை நிமித்தமாக ஜெயலலிதாவைப் பார்க்க... பெங்களூரு செல்கிறார் சசிகலா. ''என்னைப் பார்க்கிறதுக்காக இவ்வளவு தூரம் வந்தீங்களா?'' என்று ஜெயலலிதா உருகுகிறார். ஒரு நட்புக்கான அடித்தளம் பெங்களூருவில் போடப்படுகிறது. இன்றைய பிளவுக்கு அடித்தளம் இட்டதும் அதே ஊர்தான்.


ஜெயலலிதா, சசிகலா இருவருக்குமே பெங்களூரு மறக்க முடியாது!

 சி.பி - ஆதாயமில்லாம அரசியல்வாதி ஆத்தோட போக மாட்டான்.. 

'அம்முவுக்குத் துணையாக யாரை இருக்க வைப்பது?’ என்று தனக்கு அருகில் இருந்த சோலையிடம் எம்.ஜி.ஆர். கேட்டார். சசிகலாவின் பெயர் அப்போதுதான் முதன்முதலாக எம்.ஜி.ஆரிடம் சொல்லப்படுகிறது. இந்த ஆலோசனை நடக்கும்போது டி.ஜி.பி. மோகன்தாஸ் உடன் இருந்துள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தனுஷ் என்பவரை நடராஜனிடம் அனுப்பிக் கேட்டுள்ளார்கள். 'இது எதுக்கு சார் பெரிய இடத்து விவகாரம்?’ என்று நடராஜன் முதலில் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. 'சசிகலா என்றால் ஓகே’ என்று ஜெயலலிதாவும் சொன்னது... சசிகலா மனதையும் மாற்றியது.


''எம்.ஜி.ஆரின் ஆற்காடு தெரு வீட்டில் ஓரிரு முறை சசிகலாவையும் நான் பார்த்திருக்​கிறேன்'' என்று வலம்புரிஜான் எழுதி இருக்கிறார். 'எம்.ஜி.ஆரின் ஸ்பையாக போயஸ் கார்டனுக்குள் அனுப்பி​ வைக்கப்​பட்டவர்தான் சசிகலா’ என்று சொல்பவர்களும் உண்டு. எது காரணமாக இருந்தாலும் அடைக்கலப் படலம் அப்போதுதான் ஆரம்பம் ஆனது.


அடிக்கடி வந்து போன சசிகலா, ஒரு வாரம்... பத்து நாட்கள் எனத் தங்க ஆரம்பித்தார். 1984 தேர்தல் நேரத்​தில் எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் இருந்த​தால், பிரசாரம் முழுமையாக ஜெயலலிதாவை நம்பியே இருந்தது. 'எம்.ஜி.ஆரின் கதாநாயகி’ என்பதால் எல்லா இடங்களிலும் கூட்டம் கட்டி ஏற ஆரம்பித்தது. தனியாக பாதுகாப்புப் படை உருவாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதும்... மன்னார்குடியில் இருந்து தனது தம்பி திவாகரனை அழைத்து வந்தார் சசிகலா. ஜெ. செல்லும் இடத்துக்கு எல்லாம் திவாகரன் போனார்.

 சி.பி - நல்ல வேளை, நடிகர் கரண் சசிகலா குரூப்ல இல்ல.. 


அரசியல் ஆலோசனைகளுக்கு நடராஜன், பாதுகாப்​புக்கு திவாகரன், தனி உதவிக்கு சசிகலா... என்ற மூவர் அணி போயஸ் கார்டனை மறைக்க ஆரம்பித்தது!



போயஸ் கார்டனில் இருக்கும்போது மட்டும் அல்ல... டெல்லி ராஜ்ய சபாவுக்குச் செல்லும்போதும் கூடவே சசிகலாவை அழைத்துச் செல்லும் அளவுக்கு இருவரும் நட்பு ஆனார்கள். ஜெயலலிதாவிடம் சொல்ல வேண்டியதை சசிகலா மூலமாகத்தான் சொல்லியாக வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். இறந்து உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும்போது வலதுகை அருகில் ஜானகி இருப்பார். தலை அருகே ஜெயலலிதா சோகமே உருவாக உட்கார்ந்திருப்பார். அவருக்குப் பின்னால் அந்த இடத்திலும் சசிகலா நிற்பார். அந்த அளவுக்கு நிழலாகத் தொடர ஆரம்பித்தார். 


எம்.ஜி.ஆரின் உடல் கொண்டு செல்லப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏறிய ஜெயலலிதா இறக்கிவிடப்​பட்டார். அவமானப்படுத்தப்பட்ட தனி மனுஷியாக வேதா இல்லத்தைப் பூட்டிக்கொண்டு அழுத ஜெயலலிதாவுக்கு அன்று சசிகலாவும் நடராஜனும்​தான் அனுசரணையாக இருந்தார்கள். 'உங்களோட பொலிடிக்கல் லைஃப் இனிமேல்தான் ஆரம்பமாகப்​போகிறது’ என்று உற்சாகம் கொடுத்தார்கள். புதிய பொதுச்செயலாளர் தேர்வு, ஜானகி அணி - ஜெயலலிதா அணி எனக் கட்சி உடைவது, தலை​மைக் கழக முற்றுகை, 1989 சட்டமன்றத் தேர்தல்... என ஜெயலலிதா பரபரப்பாகும் காலகட்டத்தில் இவர்கள் இருவரும் தொடர்ச்சியாக இருக்கிறார்கள்.


http://suriyantv.com/wp-content/uploads/2011/12/Jayalalitha-and-Sasikala-10-x.jpg

பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்து வந்த திவாகரனின் நடவடிக்கைகளில் ஒருவிதமான கோபம் ஜெயலலிதாவுக்கு வருகிறது. எனவே, அவரை விலக்க உத்தரவு இடுகிறார் ஜெயலலிதா. அதை ஏற்றுக்கொண்ட சசிகலா, தனது அக்காள் வனிதா மணியின் மூத்த மகனான தினகரனை அழைத்து வருகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகளை தினகரன் கவனிக்கத் தொடங்குகிறார். இதே காலகட்டத்தில் ஜெயலலிதாவுக்கும் - நடராஜனுக்குமான முரண்​பாடுகள் துளிர்க்கின்றன. திருப்பூர் பிரமுகர் ஒருவரை கட்சியைவிட்டு ஜெயலலிதா நீக்கியதாகவும், 'அது தவறு’ என்று நடராஜன் வாதிட்டதாகவும் 'இது என்னோட அதிகாரம்’ என்று ஜெயலலிதா கூறியதாகவும் இதுவே இவர்கள் பிரிவுக்கு காரணம் என்று ஒரு தரப்பினரும்...


'ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆலோசனை அனைத்துமே நான்தான் செய்கிறேன். அவர் நான் சொன்னபடிதான் நடப்பார்’ என்று நடராஜன் எங்கோ சொன்னதாகவும் அது பிடிக்காமல் ஜெயல​லிதா கோபித்​ததாகவும் இன்னொரு தரப்பினர் சொல்கிறார்கள்.


'தம்பியை போகச் சொல்’ என்றபோதும் ஏற்றுக்​கொண்டார் சசி. 'கணவன் வரக் கூடாது’ என்றதற்கும் தலையை ஆட்டினார் அவர். தன் குடும்பத்தினரைக்கூட புறந்தள்ளும் அளவுக்கு அழுத்தமானவரா அல்லது அரசியல் உள்நோக்கமா... சசிகலாவுக்கு எது தூக்கலாக இருந்தது?

சி.பி - இதுல என்ன டவுட்? பதவி ஆசை, பணத்தாசைக்கு முன்னால கட்டுன கணவனாவது, உடன் பிறந்த தம்பியாவது? 


சசிகலாவுக்குள் ஒரு பக்கா அரசியல்வாதி நாற்காலி போட்டு உட்கார்ந்து இருப்பதை 1991-96 காலகட்டம் நிரூபித்தது. சட்டமன்றத்துக்குள் முதல்வராக உள்ளே நுழைந்த ஜெயலலிதா தன்னுடன் சசிகலாவையும் அழைத்து வந்ததன் மூலம், 'அவரே எனக்கு எல்லாம்’ எனக் காட்டினார். வேதா இல்லத்தின் சுற்றுச்சுவர் உயர்த்திக் கட்டப்பட்டது மட்டும் அல்ல... உள்ளே நுழைய மந்திரிகள்கூட மணிக்கணக்காய் காத்திருக்க வேண்டிய காலம் தொடங்கியது. முக்கியமானவர்கள்கூட வீடுவரை வந்தும்  இன்டர்காமில் பேசிவிட்டுச் செல்ல நிர்பந்திக்கப்பட்டார்கள். 'மேடம்’, 'சின்ன மேடம்’... பட்டப் பெயர்கள் முளைத்தன... சசிகலா சொல்வது, ஜெயலலிதாவின் கட்டளையாகக் கவனிக்கப்பட்டது. ஜெயலலிதாவிடம் சொல்ல சசிகலா மட்டுமே ஒரு வழிப் பாதையாக மாறியது. எனவே, வெளியே நடந்த நல்லதும் கெட்டதும் தெரியாமல் இருட்டறையில் ஜெயலலிதா வைக்கப்பட்டுள்ளார் என்பது... சென்னை தியாகராய நகர் தெற்கு போக் சாலையில் ஒரு நாள் காலையில்... சிவாஜி வீட்டுக்குள் ஜெயலலிதா போனபோது வெளிச்சத்துக்கு வந்தது.

சி.பி - சின்ன மேடம்கற பேர்ல நதியா நடிச்சு ஒரு டப்பா படம் ரிலீஸ் ஆச்சு.. அதுல லைட்டா சசிகலாவை தாக்கி இருப்பாங்க.. 


''சிவாஜியின் மகள் வயிற்றுப் பேத்தி சத்தியலட்சுமியை சசிகலாவின் அக்காள் மகன் சுதாகரனுக்கு நிச்சயம் செய்திருக்கிறார்கள்'' என்று அறிக்கை வெளியாகி இருந்தால், சிவாஜி - சசிகலா என்ற இரண்டு குடும்பங் களின் பந்தமாக முடிந்திருக்கும். சுதாகரன் என்ற பெயருக்கு முன்னால் 'முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன்’ என்ற அடைமொழி தமிழ்நாட்டை அதிர்ச்சி அடையச் செய்தது. ஜெயலலிதாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் மனுஷியாக இல்லாமல்... சசிகலாவின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் ஆளாக ஜெயலலிதா மாறிப்போனதை அது காட்டியது. அதற்குச் சில மாதங்களுக்கு முன்னர்தான் சுதாகரனின் அண்ணன் பாஸ்கரனின் திருமணம் தஞ்சையில் நடந்தது. '

 சி.பி - இதுல ஏதாவது நிர்ப்பந்தம் இருந்திருக்கும், சசிகலா சொல்றதுக்கெல்லாம் ஆமாம் சாமி போடற தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை அல்ல ஜெ.. அப்போ ஜெவின் பிடி ஏதோ ஒரு ரூபத்துல சசி கிட்டே இருந்திருக்கும், இப்போ அந்த ரகசியம் அல்லது பிடியை ஜெ சாமார்த்தியமா பிலான் போட்டு சரி பண்ணிட்டாங்க போல.. அதான் கழட்டி விட்டுட்டாங்க.. 


என் உடன்பிறவா சகோதரி சசிகலா’ என்று குறிப்பிட்டு ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டதுகூட நட்பின் வெளிப்பாடாக ஏற்றுக்கொள்ளலாம். கும்பகோணம் மகாமகத்தில் இருவரும் மாறி மாறி நீர் ஊற்றிக்கொண்டதும், வளர்ப்பு மகன் தத்தெடுப்பும், 1995 செப்டம்பர் 7-ம் தேதி நடந்த 100 கோடி மதிப்பிலான திருமணமும், தஞ்சாவூரில் நடந்த உலகத் தமிழ் மாநாடும், முன் வரிசையில் ஜெயலலிதாவுக்கு சமமாக சசிகலா உட்கார்ந்து இருந்ததும், அரசாங்கச் செலவில் நடத்தப்பட்ட மாநாட்டுக்கு மந்திரிகள் வசூல் செய்து மன்னார்குடி உறவுகளுக்கு கப்பம் கட்டியதையும் பட்டியல் இட்டுப்பார்த்தால், சசிகலா குடும்ப முன்னேற்றக் கழகமாக அ.தி.மு.க. மாறிப்போனதை அப்பட்டமாக உணர்த்தியது.


சி.பி - அதிமுக= அயல் சக்திகள் திமிருடன் முன்னேறும் கழகம்??

வெளியில் இது பச்சையாக படமெடுத்து ஆடிக்கொண்டு இருந்தபோது ஜெயலலிதா இதை உணரவில்லை. அதுவரை தலையாட்டிப் பொம்மைகளாக வலம் வந்த எஸ்.டி. சோமசுந்தரம் போன்றவர்கள் மெள்ளப் புலம்ப ஆரம்பித்தார்கள். முக்கிய இலாகாக்களை வைத்திருந்த கண்ணப்பன், வேட்பாளர் தேர்வுகளில் புறக்கணிக்கப்பட்டார். 'அடுத்தும் நம்முடைய ஆட்சிதான். சொந்த செல்வாக்கு உள்ள நபர்களைத் தட்டிவைக்க வேண்டும்’ என்று சசிகலாவின் உள்வட்டாரம் முடிவெடுத்தது.


1996 தேர்தல் நெருக்கத்தில் அரசல்புரசலாக சில விஷயங்கள் ஜெயலலிதா கவனத்துக்கு போக ஆரம்பித்தன. அதற்குள் தேர்தல் முடிந்து, தோற்றுப்போனார். தனித்து நின்ற ஜெயலலிதாவுக்கு தனது சொந்தங்களை அழைத்து வந்து தைரியம் கூட்டி... வெற்றி பெறவைத்த சசிகலாவின் முயற்சிகள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடந்த பலத்த தோல்விக்கும் காரணமாக அமைந்தது. இதில் இருந்து ஜெயலலிதா பாடம் கற்றுக்கொண்டாரா?

http://s1-02.twitpicproxy.com/photos/large/475967820.jpg


மரண அடிக்கு என்ன காரணம் என்றே தெரியாத ஜெயலலிதா, அப்பாவி அ.தி.மு.க. தொண்டனிடம் ஒரு கோரிக்கை வைத்தார். 'தேர்தல் தோல்விக்கான காரணத்தைக் குறிப்பிட்டு எனக்கு எழுதுங்கள்’ என்று கட்டளை இட்டார். மளமளவென்று குவிந்த கடிதங்கள் அனைத்துமே 'சசிகலாதான் காரணம்’ என்று சொன்னது. ஜெயலலிதாவுக்கு வேறு வழி இல்லை. நான்கு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 'கட்சியா... சசிகலாவா... என்பதை நான் முடிவு செய்ய வேண்டும் என்று தொண்டர்கள் விரும்பினார்கள். கஷ்டமான காலகட்டங்களிலும் சோதனையான சூழ்நிலைகளிலும் உற்ற தோழியாக, உடன்பிறவா சகோதரியாக சசிகலா எனக்கு உறுதுணையாக இருந்தார் என்ற நன்றி உணர்வு எனக்கு இருந்தாலும், ஒரு சில தனிநபர்களைவிட கட்சியின் நலனும் எதிர்காலமுமே மிகமுக்கியம் என நான் கருதுகிறேன்’ என்பது அவரது அறிக்கையின் சாராம்சம். இந்த அறிக்கை வெளியிடும்போது சசிகலா சிறையில் இருந்தார். அவரை சிறைக்குச் சென்று சந்தித்துவிட்டு வந்துதான் இந்த அறிக்கை வெளியிட்டார். 'இது ஒரு நாடகம்’ என்று சிலர் பேசினார்கள். 'அரசன் பதவியையும் புகழையும் இழக்கும்போது, தளபதியைக் கைவிடுவது தவிர்க்க முடியாதது’ என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி சொன்னதை பலரும் வழிமொழிந்தார்கள். 'சுதாகரனும் என்னுடைய வளர்ப்பு மகன் அல்ல’ என்று அறிவித்தார்.


சி.பி - அப்போ இருந்த கால கட்டத்தில் அந்த நாடகம் ஜெ வுக்கு தவிர்க்க முடியாததாக இருந்தது.. பொதுவாவே பெரிய பெரிய ராஜாக்கள் எல்லாம் இந்த மாதிரி தர்ம சங்கடமான சூழல்ல யாரையாவது பலி கொடுத்து தன் பேரை நிலை நாட்டிக்குவாங்க.. அப்போ ஜெ வுக்கு பலி கடா ஆனவர் தான் சசி
தோல்விக்கு என்ன காரணம் என்று எழுதச் சொன்ன ஜெயலலிதா, நான் எடுத்த நடவடிக்கை சரியா எனத் தொண்டனிடம் கேட்கவில்லை. ஏனென்றால், இந்த நடவடிக்கையை அவரே மனப்பூர்வமாக எடுக்கவில்லை என்பது 10-வது மாதமே  தெரிந்தது!

1996 - செப்டம்பரில் சசிகலாவை நீக்கி அறிக்கைவிட்ட ஜெயலலிதா, 1997 ஜூலை யில் அறிக்கை விடாமலேயே சசிகலாவை சேர்த்துக்​ கொண்டார்.

சி.பி - டைவர்ஸ் பண்றப்ப ஊர் உலகம் கோர்ட்க்கு மேட்டர் எப்படியோ தெரிஞ்சிடுது, மறுபடி சமாதானமா புருஷன் மனைவி கிட்டே போய் சேர்ந்தா  அதை விளம்பரமா பண்ன முடியும்?அந்த மாதிரிதான் இந்த மேட்டரும்..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgO1Nhv654mSu9OfwT9D7E_hCHsmAGg9dXSHqGFHmup6evc10m6Wps31HzYSTG_1xYncKwHpZkiBp5FC1roAwNym1IRyNIVsNSX9XyiEwtU9oxAVlxfaLpeyvvTn36CAKQK557LSXQyTTM/s1600/sasikala2.jpg

சசிகலா இந்தக் காலகட்டத்தில் நீதிமன்றக் காவலில் இருந்தார். உடல்நிலைக் கோளாறு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் இருந்தார். நீதிமன் றத்துக்கு ஆம்புலன்ஸில்தான் வந்தார். ஸ்ட்ரெக்சரில் கொண்டு வந்தார்கள். அதன் பிறகு, நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் கிடைத்தது. மருத்துவமனையில் இருந்து சசிகலா எங்கே போவார் என்று மீடியாக்கள் யோசித்தபோது... போயஸ் கார்டனில் வரவேற்க ஆரத்தித் தட்டு தயாராகிக்கொண்டு இருந்தது. வாசலுக்கு வந்து தன்னுடைய உடன்பிறவாத் தோழியை அழைத்துச் சென்றார் ஜெ. சசிகலாவை விமர்சித்தவர்கள் விக்கித்துப்போனார்கள்.

சி.பி - ஒண்ணுமே புரியல போயஸ் தோட்டத்துல, என்னமோ நடக்குது, மர்மமா இருக்குதுன்னு ஆளாளுக்கு புலம்புன காலம் ஆச்சே அது.. 

இந்த இடைவெளியில் கட்சி முக்கியஸ்தர்கள் வெளியேறி இருந்தார்கள்.... வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் சசிகலாவை விரும்பாதவர்களாக இருந்தது தற்செயலானது அல்ல.

''ஒவ்வொருவருக்கும் தாய், கணவர், குழந்தை, நண்பர் என்று ஏதாவது ஒரு வடிவத்தில் உணர்வுப்பூர்வ பந்தம் தேவைப்படுகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல'' என்று ஜெயலலிதா சொன்னார். 'வழக்குகள், கைதுகள், புகார்கள் ஆகியவையும் இதற்குள் இருந்தது’ என்று போட்டி அ.தி.மு.க. விமர்சித்தது. ஆனால், எதைப்பற்றியும் ஜெயலலிதா கவலைப்படவில்லை. சசிகலாவுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் நெருங்க ஆரம்பித்தார். சசிகலாவின் கைது, சிறைவாசம் என்ற சென்டிமென்ட் கூடுதல் நெருக்கத்துக்கு காரணம் ஆனது.


சி.பி - நான் நினைக்கறேன் ஜெயில்ல இருந்துட்டே இப்போ ஆ ராசா பிரதமரை பகிரங்கமா மிரட்ற மாதிரி ஏதாவது ஒரு மேட்டரை வெச்சு ஜெ வை சசி மிரட்டி இருப்பார்னு.. 
சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் - இளவரசி தம்பதியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் திருமணம் (2000 ஜூன்) கட்சிக்கு ஒரு விஷயத்தை மீண்டும் தெளிவுபடுத்தியது. ''எனக்கு வேண்டியவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக எந்தத் தவறும் செய்யாத திருமதி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த நான்கு ஆண்டுகளாக, சந்தித்து இருக்கும் அவமானங்கள், அவதூறுகள், துன்பங்கள், கொஞ்ச நஞ்சம் அல்ல. எனக்காகவும் இந்த இயக்கத்துக்காகவும் வாழ்கிற சசிகலாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் ஆதரவாக இருப்பதை என் கடமையாகக் கருதுகிறேன்!’ என்று அந்தத் திருமணத்தில்தான் பகிரங்கமாக அறிவித்தார். 


சி.பி - அதுதான் ஜெ வின் வாழ்வில் சனீஸ்வர பகவானை  ஏழரை ஆக்கியது..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGeuh8lTBuLomyGdHYrCZ1VyK5-7r-LTwfM751YGMvCQwAu-IshGp13XnPQ7k4ykfMXa89J3KicVpPiy51sEBRAL7kmSe3AA2IDWKDdzN_8ytQgTkfgtBdTtUKE5re2imItH2UWtXrQ7g/s1600/jayalalitha_mgr_20110321.jpg
அடுத்து நடந்தது சசிகலாவின் அண்ணன் சுந்தவதனனின் மகன் டாக்டர் வெங்கடேஷ் திருமணம். 'என்னோடு துணையாக இருந்து எல்லா வகையிலும் எனக்கு உதவியாக இருந்ததற்காகவே சசிகலாவுக்கு இப்படி ஒரு தண்டனை’ என்று ஜெயலலிதா சொன்னபோது, சசிகலா விக்கி விக்கி அழுதார். 


சி.பி - ஊழல்ல துணை புரிந்தது ஒரு வெட்கக்கேடான விஷயம்.. அதுக்கு அழறது நியாயம்தானே?
டாக்டர் வெங்கடேஷனுக்கு நான் இயக்கத்தில் எந்தப் பொறுப்பும் வழங்கவில்லை. ஆனாலும் ஏராளமான மாணவர்களை இயக்கத்தில் சேர்த்தார்’ என்பதையும் ஜெயலலிதா கண்டுபிடித்துச் சொன்னார்.


இதற்கு இடைப்பட்ட காலத்தில் தினகரன், பெரியகுளம் நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கப்பட்டு 'இவர்தான் அடுத்த வாரிசு’ என்று மகுடம் சூட்டப்பட்ட சம்பவங்களும் அரங்கேற ஆரம்பித்தன. மீண்டும் கார்டனுக்குள் குடும்பங்கள் சாரை சாரையாக உள்ளே வரத் தொடங்கின!

சி.பி - ஹூம், எம் ஜி ஆர் ஆன்மாவே அதிர்ச்சி ஆகற அளவுக்கு நான் தான் அடுத்த எம் ஜி ஆர்னு ஆளாளுக்கு அரற்ற ஆரம்பிச்சாங்களே?

இரண்டாம் முறை ஜெயலலிதா முதலமைச்சராக ஆனபோது நடந்த இரண்டு மூன்று விஷயங்களை சசிகலாவே எப்படி சகித்துக்கொண்டார் என்று தெரியவில்லை. 'சின்ன எம்.ஜி.ஆர்’ என்று அழைத்துக்கொண்ட வி.என்.சுதாகரன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள். 'ராஜகுரு’ என்று அழைக்கப்பட்ட நடராஜனைச் சுற்றி நடந்த விஷயங்கள்.


சி.பி - சின்ன எம் ஜி ஆர், மீடியம் எம் ஜி ஆர் , கறுப்பு எம் ஜி ஆர்னு எல்லாம் யாரும் கிடையாது, மக்கள் பார்வைல ஒரே எம் ஜி ஆர் தான்.. அவங்களா சொல்லிக்க வேண்டியதுதான்..
தத்து எடுத்திருக்கவும் வேண்டாம். தலையில் அடித்திருக்கவும் வேண்டாம். லட்சக்கணக்கான ஜோசியர்களைப் பார்த்து விட்டார் சுதாகரன். அவருடைய ஜாதகத்தை இன்னும் யாராலும் கணிக்க முடியவில்லை. கஞ்சா வைத்திருந்ததாக அவரைக் கைது செய்ததற்குக்கூட காரணம் இருந்தது. அவரது அப்பா விவேகானந்தனும் உள்ளே போனார். நடராஜனை போலீஸ் வேவு பார்ப்பதற்குக் காரணம் இருந்தது. அவருக்கு அறிமுகமான குடும்பம் என்பதற்காக, செரீனாவும் அவரது அம்மாவும் ஜெயிலுக்குப் போனார்கள். உண்மையில் செரீனா 'கஞ்சா விற்பனையில்’ கைதானது ஏன் என  போலீஸும் நடராஜனும் இதுவரைக்கும் காரணம் சொல்லவில்லை. ஆனால் 'கந்தசாமி’ என்ற பெயரில் ஆங்கில கேப்பிடல் லெட்டர்களில் கடிதம் எழுதிக்கொண்டே இருந்த ஆசாமிக்கு(!) மட்டும்   எல்லாம் தெரிந்தது. இன்று பல்வேறு  சிக்கல்களை வலிந்து போய் சப்பைக் கட்டும் கபில்சிபல்தான் அன்று வந்து, செரீனாவைக் காப்பாற்றினார். கபில்சிபலுக்கு 'கந்தசாமி’யும் உதவினார்.


சி.பி - இந்த கபில் சிபில் ஆள் பார்க்க காமெடியனா இருந்தாலும் படு பயங்கர வில்லங்க பார்ட்டி போல.. 
http://abedheen.files.wordpress.com/2010/09/mgr_2.jpg
இதன்பிறகு, சசிகலாவின் வளர்ச்சி ஏறுமுகம் ஆனது. என்.சசிகலா என்ற 'கணவர்’ இனிஷியலுடன் இருந்தவர் வி.கே.சசிகலா என்று தனது 'அப்பா’ இனிஷியலுக்கு மாறினார். நமது எம்.ஜி.ஆர். பத்திரிக்கையின் வெளியீட்டாளர் ஆனார். பொதுக் கூட்டங்களுக்கு மட்டும் வந்து முன்வரிசையை அலங்கரித்தவருக்கு செயற்குழு உறுப்பினர் பதவியும் தரப்பட்டது. அம்மாவுக்கு அடுத்து 'சின்னம்மா’ என்பது அ.தி.மு.க.வின் தலைவிதியாக மாறிப்போனது!


சி.பி- சின்னம்மா அதிமுக கட்சியின் சின்ன அம்மை நோய் ஆனார்.. 

சசிகலா குடும்பத்துக்காக கார்டனில் போட்ட மியூஸிக்கல் சேரில் டாக்டர் வெங்கடேஷ் உட்கார வைக்கப்பட்டார். அவருக்கு, மாநிலம் முழுக்க வலம் வரும் இளைஞர்கள் - இளம் பெண்கள் பாசறை பதவி கிடைத்தது. சென்னையின் தலைமை இடத்தில் உட்கார்ந்து கண்காணிப்பது போதாது என்று மாவட்ட எல்லைகளில் தனது ஆட்களை நியமிக்கத் திட்டமிட்டார் சசிகலா. கொங்கு மண்டலம் ராவணன் கைக்குப் போனது. திருச்சி மண்டலம் கலியபெருமாள் கைக்குத் தரப்பட்டது. ஏற்கெனவே டெல்டா மாவட்டங்களை திவாகரனே வைத்திருந்தார். தென் மாவட்டங்களால் தங்களது அதிகாரத்துக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்று இந்த வட்டாரம் நினைத்தது.


சி..பி - ஹூம், தமிழ் நாட்டை கூறு போட்டு விக்காதது ஒண்ணுதான் பாக்கி.. 
ஜெயலலிதாவுக்கு அருகில் யார் வர வேண்டும், அம்மாவை யார் யார் சந்திக்கலாம் என்பதை மட்டும் தீர்மானித்தவர்கள், 2005-2006க்குப் பிறகு கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள் வரைக்கும் இன்னார்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க ஆரம்பித்தார்கள். அ.தி.மு.க.வில் இருக்கும் முக்கியமான கெட்ட பழக்கம், மொட்டைக் கடிதங்கள். இந்தக் கடிதங்கள்தான் பணம் காய்க்கும் மரங்களாக மாறியது. தலைமைக் கழகமோ, கார்டனோ, இங்கு வரும் கடிதங்கள் அனைத்தையும் ஜெயலலிதா பார்க்க முடியாது. 


சி.பி - அல்லக்கைகள் கைக்குதான் எல்லா ஃபைலும் முதல்ல போகும் போல.. 
அவருடைய நம்பிக்கைக்கு உரியவர்கள் என்று சசிகலாவின் ஆசீர்வாதத்துடன் நியமிக்கப்பட்டவர்கள் திருகல் வேலை பார்த்தார்கள். ராவணன், திவாகரன், டாக்டர் வெங்கடேஷைப் பிடிக்காதவர்கள் கட்சியில் இருக்க முடியாது என்ற நிலை உருவானது. இதன் உச்சகட்டம்தான், ஜெயலலிதாவுக்கே தெரியாமல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட விநோதம். 'எங்க கடமைக்கு லிஸ்ட்டை விட்டாச்சு. அம்மா அப்புறம் மாத்திட்டாங்க’ என்று சப்பைக் கட்டு கட்டிக் கணக்குக் காட்டுவதற்காக ஜெயலலிதாவையே தலை குனியவைத்தார்கள்.



சி.பி - அப்போவாவது அம்மா உஷார் ஆகி இருக்க வேண்டாமா?
வெற்றிக்குப் பிறகும் செல்வாக்கானவர்கள், அமைச்சர்களாக இருந்த முன்அனுபவம் பெற்றவர்களை விட்டுவிட்டு... முதல் தடவை எம்.எல்.ஏ. ஆனவர்கள் தலையில் பெரிய பெரிய துறைகளைக் கொண்டு போய்வைத்து அமைச்சர் ஆக்கினார்கள்.


இது எதையும் ஜெயலலிதா தட்டிக்கேட்கவில்லை. தட்டிக்கேட்க முடியாத நிலையில் இருந்தார் என்றே சொல்ல வேண்டும்!

தி.மு.க. அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் சம்பாதித்த கெட்ட பெயரை, சிலர் ஐந்து மாதங்களிலேயே இப்போது வாங்கித் தந்ததை ஜெயலலிதாவின் காதில் கொண்டுபோய்ச் சேர்த்தவர் டி.ஜி.பி. ராமானுஜம். தி.மு.க.வின் சரிவுக்கு, ஸ்பெக்ட்ரமும், கமிஷனும், குடும்ப ஆதிக்கமும், கான்ட்ராக்டர் லாபியும்தான் காரணம். 'இது நெகடிவ் வாக்குகள் அல்ல. அ.தி.மு.க. மீதான பாசிட்டிவ் வாக்குகள்’ என்று ஜெயலலிதா வெளியில் சொன்னாலும் உள்ளே உண்மை தெரியும் அவருக்கு. இன்னொரு சரிவை நம் கண்முன் பார்க்கக் கூடாது என்று அவர் நினைத்து, தயங்காமல் எடுத்த அல்ட்டிமேட் அதிரடி ஆயுதத்தில் சசிகலாவே இப்போது வெளியேற்றப்பட்டு உள்ளார்.  


 சி.பி - அல்டிமேட் ஆக்‌ஷன் அல்ல,, கில்டிமேட் ஆக்‌ஷன்.. வேற வழி இல்லை.. 
http://www.writermugil.com/wp-content/uploads/2008/11/nambiyar.jpg
ஆனாலும் எல்லாருக்குள்ளும் ஒரு சந்தேகம் இன்னமும் இருக்கிறது.

'ஏம்ப்பா, சசிகலாவை உண்மையிலேயே நீக்கிட்டாங்களா என்ன? இல்லே, இதுவும் ஒரு நாடகமா?’ என்ற பேச்சு பிரபலமாகி வருகிறது.

 சி.பி - நாடகமோ, நிஜமோ ஒரு மாநில முதல்வர் இப்படி  தனது கட்டுப்பாடு இழந்து பல தீய சக்திகளை தன்னை அண்ட விட்டு தமிழக நலனுக்கு ஊறு விளைவித்தார் என கவர்னர் ஏன் கேள்வி கேட்கக்கூடாது? துறை ரீதியான நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது?

Tuesday, December 20, 2011

சசிகலா மாட்டியது எப்படி? சென்னையை விட்டே துரத்த ஜெ முடிவெடுத்தது ஏன்?

http://i51.tinypic.com/33e7m7q.jpg

சசிகலா, அவரது கணவர் நடராஜன், இவர்களது குடும்பத்தினர் என, 14 பேரை அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி, முதல்வர் ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.இதன் மூலம், ஆட்சி மற்றும் கட்சியில் சசிகலா குடும்பம் போட்ட ஆட்டம் குளோசானது. ஜெயலலிதாவின் இந்நடவடிக்கையை, அ.தி.மு.க., தொண்டர்கள் வரவேற்றுள்ளனர். 


 சி.பி - கலைஞர் தான் பாவம் கதி கலங்கி இருக்காராம், ஜெ மீது வைக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டே சசிகலா ஆதிக்கம் தான், அதுவும் உடைஞ்சுடுச்சேன்னு அய்யா கலக்கமாம்..
.

.

அரசு நிர்வாகத்திலும், கட்சி நிர்வாகத்திலும் சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து தலையிட்டு வந்தனர். இதன் மூலம், அரசுக்கும், கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி வந்தனர். இதையடுத்தே, இந்த அதிரடி நடவடிக்கையை முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ளார்.அ.தி.மு.க., அரசு பதவியேற்றதும், அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கப் பிரிவில், சிறப்பு அலுவலர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்ட, ஏ.பன்னீர்செல்வம், கடந்த வாரம், அப்பணியிலிருந்து ராஜினாமா செய்தார்;

சி.பி - ராஜினாமா செஞ்சாரா? செய்ய வைக்கப்பட்டாரா?நம்மாளுங்க உயிரை விட்டாலும் பதவியை விட மாட்டானுங்களே? 


இதிலிருந்து பிரச்னைகள் வெளிப்படத் துவங்கின. பன்னீர்செல்வம், நடராஜனுக்கு மிகவும் நெருக்கமாவனர். ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக ஓய்வு பெற்ற இவர், சிறப்பு அலுவலராகப் பணியில் அமர்த்தப்பட்டார்.கோட்டையில், அதிகார மையமாக விளங்கிய இவர், அதிகாரிகள் மாற்றம், அமைச்சர்கள் மாற்றம், அரசு டெண்டர்களை முடிவு செய்தல் என, அனைத்திலும் தலையிட்டு வந்தார் என குற்றச்சாட்டு எழுந்தது. அமைச்சர்களும், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும், கோட்டையில் உள்ள இவரது அறைக்கு வந்து, இவரை சந்தித்து விட்டு செல்லும் நிலையில் இவர் இருந்தார்.


சி.பி - அதாவது வர்ற வருமானத்துல 10% எடுத்துக்கிட்டு மீதி 90% ட்டை மேலிடத்துக்கு குடுத்திருந்தா பிரச்சனையே வந்திருக்காது, அண்ணன் 90 %ட்டை ஆட்டையை போட்டுட்டு `10%ட்டை மட்டும் தள்ளி விட பார்த்திருப்பார்.. உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா கதை ஆகிடுச்சு

http://itsmeena.files.wordpress.com/2011/03/cartoon.gif

இத்தகவல்கள் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதால், பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த திருமலைச்சாமி மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இது போன்ற நடவடிக்கைகள் நடந்து கொண்டு இருக்கையில், சசிகலா போயஸ் தோட்டத்தில் தங்குவதில்லை என்றும், இளவரசியின் வீட்டில் அவர் தங்குகிறார் என்றும் தகவல்கள் வெளியானது.இதனால், ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் அதிகமாகி, எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என பரபரப்பாகப் பேசப்பட்டது. 

சி.பி - பரபரப்பா பேசப்படுதோ இல்லையோ, இப்படி நியூஸ் போட்டே பர பரப்பு பண்ணிடுவாங்க, நம்மாளுங்க 


அதன் எதிரொலியாக, சசிகலா, நடராஜன் மற்றும் இவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என, 14 பேரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து நீக்கி, ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார்.முதல்வரின் நடவடிக்கை மூலம், இனி மன்னார்குடி கும்பலின் அட்டூழியம் முடிவுக்கு வந்ததாக, அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.

சி.பி - அதை காலம் தான் முடிவு செய்யும், எப்போ வேணாலும், எப்படி வேணாலும் ஜெ மனசு மாறிடும், அதுக்கு வரலாற்றில் சான்று இருக்கு.. 



கட்சியிலிருந்து, சசிகலா குடும்பத்தினர் நீக்கப்பட்டதை வரவேற்று, அ.தி.மு.க.,வினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அப்போது, அவர்களில் சிலர் கூறும் போது, "சசிகலா கும்பலை விரட்டியடித்து ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் மூலம், அவருக்கு ஏற்படவிருந்த அவப்பெயர் தடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.

சி.பி - ஒரு சின்ன கரெக்‌ஷன்,  ஏற்படவிருந்த அவப்பெயர் தடுக்கப்பட்டுள்ளது என்பது தவறு, ஏற்பட்ட அவப்பெயர் நீக்கப்பட்டுள்ளது என்பதே சரி.. ஆல்ரெடி அம்மா பேரு சசிகலாவால கெட்டுப்போச்சே..

24 மணி நேரம் கெடு?சசிகலா, நடராஜன் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் சென்னையிலிருந்து, 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என, ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ராவணன், மோகன் ஆகியோர் வீடுகளில் போலீசார் நடத்திய ரெய்டில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிகிறது.

சி.பி - சென்னைல இருந்து ஏன் வெளியேறனும்? மன்னர் காலத்துல நாடு கடத்தும் திட்டம் இருந்துச்சு, இப்போ மம்மி ரிட்டர்ன்?ஒரு வேளை ஜெ வே நாடகம் போட்டு இன்கம்டாக்ஸ் ரெயிடு, சொத்துகுவிப்பு வழக்குல இருந்து தப்பிக்க இப்படி ஒரு டிராமா போடராறோ என்னவோ?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3DWpkZa-2dRWUE4FZ-01LCEEPtJ0GGHtZmcfYz_jz4AUKaG4rl8SFWnfHby9ycqOCS2XyFXcTb05Re1OuBDrp7sBtZlGvNLf8nIjNQyrGtCW7982xg1QQSdrunhc0mHyKbLhXtD8lwZWw/s1600/jayalalitha-cartoon.jpg

கட்சியில் இருந்தாரா நடராஜன்? : ஜெயலலிதாவுக்கு, முதன் முதலில்மனைவி சசிகலாவை அறிமுகம் செய்த நடராஜன், பிற்காலத்தில் பின்புலத்தில்இருந்து சசிகலாவையும் கட்சியையும்இயக்க ஆரம்பித்தார்.இதனாலேயே 1992ல், நடராஜனுடன்கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என ஜெயலலிதா அறிவித்தார். 

 சி.பி - ஆமா, ஜெவைத்தவிர வேற யாரும் தொடர்பு வெச்சுக்கக்கூடாது ஹி ஹி

அப்போதே அவர் கட்சியில்உறுப்பினராக இருந்தாரா இல்லையா, எனகட்சியினருக்கே தெளிவாக தெரியவில்லை.1996ல் கருத்து வேற்றுமை ஏற்பட்டபோது, சசிகலாவையும் நடராஜனையும் கட்சியை நீக்குவதாக ஜெயலலிதா அறிவித்தார். மூன்று மாதங்களில் சசிகலா கட்சியில் சேர்க்கப்பட்டார். அப்போதும்நடராஜனின் நிலைமை தெரியவில்லை.பின், சசிகலாவுக்கு தலைமை செயற்குழுஉறுப்பினர் பதவி தரப்பட்டபோது கூட,நடராஜனுக்கு பதவி தரப்படவில்லை. இருப்பினும் அவர் கட்சியில், "நிழல்'மனிதராகவே வலம் வந்தார். 

 சி.பி - இதுல என்ன மர்மம் வேண்டிக்கிடக்கு? ஜெவுக்கு சசி பிடிக்கும், ஆனா நடராஜனை பிடிக்கலை, அவரை 100 % விரட்ட வழி இல்லை, அது சசிக்கு பிடிக்காது ஹி ஹி இதான் சிக்கலே..


சசிகலாவும்நடராஜனும் ரகசியமாக சந்தித்துக்கொள்வதாக அவ்வப்போது தகவல்கள் வந்தன.

சி.பி - அட விடுங்கப்பா பாவம் சொந்த சம்சாரத்தை சந்திச்சதை என்னவோ சீக்ரெட் ஏஜண்ட் ஜேம்ஸ்பாண்ட் வில்லியை ஹோட்டல்ல சந்திச்ச மாதிரி பில்டப் குடுக்கறீங்க?  

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKaT9PRyh4FvmTbG_ndqT2xeo9P_1PIqy1_B6T3Nvy2t-HIO9JsYQIYpp-vgR8W9Ot01MxDjn274NVs5iOxOzhqfcpPIJ1lQil42UB5lk4lrTScXuFlPRdFMJ-bEgh_auFVURhnJdYA4nN/s1600/jayalalitha.jpg

கட்சிக்காரர்கள் பலரும் நடராஜனுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்தனர். இந்நிலையில் சசிகலாவின் கூட்டத்துடன்சேர்த்து, நடராஜனும் கட்சியை விட்டு நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் வினோதம் என்னவென்றால், கட்சியில் இருக்கிறாரா இல்லையா என கட்சியினருக்கு தெரியாமலேயே,நடராஜன் நீக்கப்பட்டுள்ளார். 

சி.பி - தங்கமலை ரகசியம் கூட கண்டு பிடிச்சுடலாம், போயஸ் தோட்ட மர்மத்தை கண்டுபிடிக்கவே முடியாது.. 

டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து போயஸ் கார்டனுக்கு அனுப்பப்பட்ட ரகசிய பைல், முதல்வரின் கண்ணில் படாமல் மறைக்கப்பட்டது. அந்த பைலை, வெள்ளிக்கிழமை அன்று முதல்வர் ஜெயலலிதா எடுத்து படித்துள்ளார். அதன் பின்னர் தான் சசிகலாவின் ஆதரவர்களாக வலம் வந்த அதிகாரிகள், ஒவ்வொருவராக, "கழற்றி' விடப்பட்டுகின்றனர்.


சி.பி - அதென்ன ஃபைல்? கடைசி வரை ரகசிய ஃபைலாவே இருந்துடுமோ?

"எம்.ஜி.ஆர்., கூட இந்தளவிற்கு தனி மெஜாரிட்டியில் ஜெயிக்கலைங்க... இந்தம்மாவிடம் (ஜெயலலிதா) பொதுமக்கள் நிறைய எதிர்பார்க்கிறாங்க' என்ற பேச்சு, தமிழகத்தின் அடிமட்ட அரசியல் தொண்டனிடம் இருந்து, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் வரை பேசப்பட்டது.

சி.பி - ஜெ ஜெயிச்சதே எம் ஜி ஆர் செல்வாக்க்குலதான் என்பதை யாரும் மறந்துடக்கூடாது.. விதை விதைச்சவர் எம் ஜி ஆர் , அறுவடை பண்றது ஜெ

முதல்வரின் நிழலாக பின் தொடரும் சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள், "தமிழகத்தில் நடப்பது எங்கள் ஆட்சி' என்ற தோரணையில் தலைமைச் செயலகத்தில் வலம் வந்தனர்.தற்போது நீக்கப்பட்ட, 14 பேரில் ராகவன் என்பவர், தேர்தல் முடிவு வந்து கொண்டிருந்த நேரத்தில், சி.எம்.டி.ஏ., பிரின்சிபல் செக்ரடரி தயானந்த கட்காரியை போனில் அழைத்து, "நாங்கள் சொல்லும் பைலில் கையெழுத்து போடா விட்டால் நடப்பதே வேறு' என மிரட்டியுள்ளார்.


சி.பி - மிரட்டியவர்கள் விரட்டப்பட்டுள்ளனர் ம் ம் குட்

அந்த நபர், வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை என, தலையிட்டு, கடைசியாக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் துறையிலும் தலையை நீட்டினார். "2 ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சரின் ஆசியுடன், கடந்த ஆட்சியில் சென்னையில் பணியாற்றி வந்த, "ஜிம் பாடி பில்டர்' ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர், கார்டன் அதிகார நபரை பிடித்தார்.அடுத்த சில நாட்களில் அந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி, மேற்கு மண்டலத்தில் உள்ள வளமான மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டார். இது போன்ற ஏகப்பட்ட தலையீடுகள், போலீஸ் துறையில் அரங்கேறின.

சி.பி - என்னைக்கேட்டா கவர்னர் தலையிட்டு ஜெ மேல கேஸ் போட வைக்கனும். ஒரு அரசாங்கமே தனி நபர் பிடில சிக்கிட்டு இருந்ததை வேடிக்கை பார்த்துட்டு நிர்வாகத்தை  பலவீனம் ஆக்குனதே ஒரு குற்றம் தான்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXAqUa3AgLzKLSACm5ed3EBGF1_xn-WgHZDqyLlO8X-Bvu-MChJynz6XI1BwIaCwP22zkK928cwEPZkSry7jE8Z4RjORXw68spj4b-5aZ8wTPCjWD7k8M0ZYO8nK_s_jSyUF1xhZg7ycY/s640/82687605.preview.jpg

கார்டன் அதிகார மையத்தினரால் நடத்தப்படும் வசூல் வேட்டை குறித்து, டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து ரகசிய, "பைல்' முதல்வருக்கு அனுப்பப்பட்டது. அந்த பைலை முதல்வரின் பார்வையில் படாமல் கார்டனில் உள்ள சிலர் மறைத்து விட்டனர்.டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து கார்டனுக்கு அனுப்பப்பட்ட ரகசிய பைல், ஒரு மாதத்திற்கும் மேலாக கார்டனில் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டிருந்தது. இம்மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை, அந்த பைலை ஜெயலலிதா படித்துள்ளார்.அதில், சசிகலா மற்றும் அவரது வகையறாக்கள் ஒவ்வொருவரை பற்றியும், வசூல் வேட்டை பற்றியும் விலாவாரியாக, "புட்டு புட்டு' வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, கார்டன் அதிகார மையத்தினரால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் தகவல், நியாயமான, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளால் முதல்வரிடம் தயக்கத்துடன் தெரிவிக்கப்பட்டது.


சி.பி - எல்லாம் ஜெவுக்கு தெரிஞ்சே தான் நடந்திருக்கும், பங்கு பிரிக்கும்போது சண்டை வந்திருக்கும்

அதன் பின் தான், முதல்வர் சாட்டையை சுழற்றினார். தலைமைச் செயலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த, சிறப்பு திட்ட செயலரான பன்னீர்செல்வம் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

அவர், சசிகலாவின் கணவர் நடராஜனின் தீவிர விசுவாசி. பன்னீர்செல்வம், ஐ.ஏ.எஸ்., ஆனதற்கு, நடராஜன் உதவியதாக கூறப்படுகிறது. பன்னீர்செல்வத்திற்கு அடுத்து, முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரான, திருமலைச்சாமி, கார்டனில் இருந்து விரட்டப்பட்டார்.இவர், கார்டன் அதிகார மையத்திற்கு மிகவும் நெருக்கமானவர். கார்டனில் நடக்கும் விஷயங்களை கேட்டு முகம் சிவந்த ஜெயலலிதா, திருமலைச்சாமியிடம் நேரடியாக விசாரித்த போது, பல தகவல்கள் முதல்வரை அதிர்ச்சியடை செய்தன.

 சி.பி - கூட இருந்த ஜெவுக்கே அதிர்ச்சின்னா மக்கள்க்கு எப்படி இருக்கும்? அதெல்லாம் என்னா மேட்டர்னு கண்டு பிடிச்சு வெளீல விடுங்கப்பா. 


திருமலைச்சாமியின் வாக்கு மூலத்தை, அமைச்சர்களை நேரில் அழைத்து விசாரித்து, நூறு சதவீதம் உறுதி செய்தார் ஜெயலலிதா. இனிமேலும் தாமதித்தால் எல்லாம் வீணாகிப் போய்விடும் என்ற எண்ணத்தில், கழக தலைமைக் செயற்குழு குழு உறுப்பினர் சசிகலா, அவரது கணவர் நடராஜன், அவரது சகோதரர் ராமச்சந்திரன் உட்பட, 14 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும், மற்ற பொறுப்புகளில் இருந்து ஜெயலலிதா விடுவித்து உத்தரவிட்டார்.

 சி.பி - எலக்‌ஷனுக்குப்பிறகு ஜெ எடுத்த பல வெட்டி அதிரடி அறிவிப்புகளூக்கிடையே , இருப்படியான உத்தரவு இது ஒண்ணுதான்.. அவர் இமேஜ் இதனால மக்கள் மத்தியில் உயரும் என்பதில் ஐயம் இல்லை.. கீப் இட் அப்.. 

கார்டன் அதிகார மையத்திற்கு வேண்டப்பட்ட அதிகாரிகள் பலர், செய்தித் துறையில் பல இடங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அந்த அதிகாரிகள், "எம்.என்., - எம்.ஆர்.,' வீட்டில் எடுபிடி வேலைகளை செய்து வந்துள்ளனர். நேற்று, ஜெ., வின் அதிரடியால், செய்தித் துறையில் பணியாற்றி வந்த ஆதரவு அதிகாரிகள் சிலர், மொபைல் போனை, "ஆப்' செய்து விட்டு, "எஸ்கேப்' ஆகி விட்டனர். முதல்வரின், "ஹிட் லிஸ்டில்' உள்ளவர்களில் சிலர் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

சி.பி - மேடம், யாரையும் விடாதீங்க, அவங்க வெச்சிருந்த  பணத்தை எல்லாம் கைப்பற்றிடுங்க.. ஆனா அந்த விபரம் எல்லாம் ரகசியமா நடக்கட்டும் ஹி ஹி 




சொத்துக்குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதாவின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்றால், அடுத்த முதல்வரை யாரை நியமிப்பது என, சசிகலா உறவினர்கள் ஜோதிடம் பார்த்த தகவல் மற்றும் சசிகலா, இளவரசிக்காக சட்ட நிபுணரிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது, தி.மு.க., குடும்பத்தினரிடம் மறைமுக தொடர்பு வைத்த விவகாரம் போன்றவை தெரிய வந்ததால், மன்னார்குடி குடும்பத்தினருக்கு கூண்டோடு கல்தா கொடுக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

சி.பி - ஜெ கோர்ட் விசாரணைக்காக பெங்களூர் போனப்பவே சசி குரூப் செமயா குஷில இருந்திருப்பாங்க.. ஆல்டெர்நேட் சி எம் ஆகலாம்னு பிளான் பண்ணி இருப்பாங்க.. 


சசிகலா குடும்பத்தினர்முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலர்கள், கட்சி நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து, முதல்வரின், "குட்புக்'கிலிருந்து அவர்களை வெளியேற்றுவதில் சசிகலாவின் உறவினர்களின் முக்கிய பணியாக இருந்தது.முதல்வர் ஜெயலலிதாவை தினமும் யார் சந்திக்க வேண்டும், எந்தெந்த கடிதங்கள் அவரது பார்வைக்கு அனுப்ப வேண்டும், எந்தெந்த பைல்களை அனுப்பி கையெழுத்து பெற வேண்டும் போன்ற பணிகளை சசிகலா செய்து வந்தார்.

 சி.பி - எவ்வளவு சுருட்டுனாரோ யாருக்குத்தெரியும்? எல்லாம் மக்கள் பணம் தான் அவ்வ்வ்

அவரது கண் அசைவு இன்றி, போயஸ் கார்டன் வீட்டில் எந்த காரியமும் நடக்காது.சர்வ வல்லமையுடன் கோலோச்சி வந்த சசிகலாவை, கட்சியிலிருந்து நீக்குவதற்கு அவரது குடும்ப அதிகார மையமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சசிகலாவின் உறவினர் ஒருவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளார். அவருக்கும், தி.மு.க., குடும்பத்தினர் சிலருக்கும் மறைமுக நட்பு இருந்துள்ளது. தி.மு.க., குடும்பத்தினருக்கு வேண்டிய ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பதவிகளில் நியமிக்க வைப்பதில், அவரது கைங்கர்யம் உண்டு

 சி.பி - எப்படியோ நல்லது நடந்தா சரிதான் 

http://deco-01.slide.com/r/1/0043/dl/TtO0gTpF0z_n99lbQr_Tbkp62gm8slz3/watermarksm