Thursday, December 20, 2012

விகடன் விமர்சனம் - கும்கி ,நீஎபொவ

விமர்சனம் : கும்கி

விகடன் விமர்சனக் குழு
 
 
யானை மேல் செய்யும் காதல் சவாரியே 'கும்கி’!


 'காட்டு யானையை அடக்கும் கும்கி யானைக்குப் பதில் ஒரு கோயில் யானையை அனுப்பிவிட்டால் என்னாகும்?’ என்ற சுவாரஸ்ய ஒன் லைனில், ஆதி காடு, 200 வருடக் கட்டுப்பாடு, ஒரு வனக் காதல், காட்டு யானையின் மூர்க்கம், பழகிய யானையின் பாசம் என பிரியமும் பிளிறலும் புதைத்து அசத்தியிருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.


அறிமுகத்திலேயே அசத்தலாக ஃபர்ஸ்ட் க்ளாஸ் தாண்டுகிறார்


ஹீரோ விக்ரம் பிரபு. யானையை அடக்கும் பாகனாக செம ஃபிட். ஊறுகாய் திருடிய யானையிடம், 'உனக்கு எதுல குறைவெச்சேன்? எங்கேடா படிச்ச இந்தத் திருட்டுப் பழக்கத்த?’ என்று கோபம் காட்டுவதா கட்டும், 'அவளப் பார்த்ததுல இருந்து மனசுக்குள்ளே என்னென்னவோ பண்ணுதுடா’ என்று காதலில் உருகுவதாகட்டும்... ஆல் இஸ் வெல்.

படத்தின் செகண்ட் ஹீரோ யானை மாணிக்கம் தான். விக்ரம் பிரபுவுக்குப் பின்னே நாய்க்குட்டி போல் ஓடுவதும், தன் மேல் ஏறச் சொல்லி காலைத் தூக்கிப் பிளிறுவதும், அம்மாஞ்சி யானையாக கும்கி பயிற்சியில் திணறுவதும்... 'மாணிக்கமாகவே வாழ்ந்திருக்கிறது’ அந்த யானை.
வன தேவதையாக லட்சுமி மேனன். அத்தனை பெரிய விழிகளில் பயம், பிரமிப்பு, காதல், சோகம் என எல்லாமே ரம்மியம்!


சலம்பல் பாதி புலம்பல் மீதி என அப்ளாஸ் அள்ளுகிறார் தம்பி ராமையா. தன்னைப் பெரிய வீரன் என்று நினைத்துக் கொண்டாடும் கிராமவாசிகளிடம் மைண்ட் வாய்ஸில் மண்டிபோட்டு உருள்வது என மனிதருக்கு செம ஸ்பேஸ். ''உனக்கு எல்லாம் ஃபர்ஸ்ட் நைட் ஆரம்பிக்கிறப்ப பக்கவாதம் வந்துடும்டா'' என வசனங்களில் அதிரடித்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் இவரது மைண்ட் வாய்ஸ் ஓவர் டோஸ்! 'உண்டியல்’ அஸ்வின், கிராமத் தலைவர் ஜோமல்லூரி என்று ஒவ்வொருவரும் நிறைவான கேரக்டர்கள்.  


இசை, ஒளிப்பதிவு இரண்டும் கும்கியின் கம்பீரத் தந்தங்கள். கொம்பன் வரும் காட்சிகளில் பின்னணி இசையில் பதைபதைப்பூட்டும் இமானின் இசை, பாடல்களில் சொக்கவைக்கிறது. புற்களுக்கு இடை யில் பயணிக்கும்போதும், ஹோவெனக் கொட்டும் அருவியின் தலை மேல் ஏறி இறங்கிச் சுற்றிச் சுழன்று பரவசப்படுத்தும்போதும் மயக்குகிறது சுகுமாரின் ஒளிப்பதிவு. யுகபாரதியின் பாடல் வரிகள் கதைக்கு அழுத்தம் சேர்க்கின்றன.


கொம்பனும் மாணிக்கமும் சந்தித்துவிட்டால் படம் முடிந்துவிடும் என்பதாலேயே, இறுதிக் காட்சி வரை யானைத் தும்பிக்கையைவிட நீள மாக நீள்கிறது படம். ஊருக்குள் ஹீரோ வந்த பிறகு, நகர மாட்டேன் என அடம்பிடிக்கிறது கதை. ஆதி காடு என்றொரு மலைக் கிராமமும் அவர்களின் வாழ்வியலும் எப்படி இருந்திருக்க வேண்டும்... அது மிஸ்ஸிங். பரணில் உட்கார்ந்து எந்நேரமும் மலைக் கிராமத்தையே விக்ரம் பிரபு பார்த்துக் கொண்டு இருப்பது முதலில் ஜோராக இருந்தாலும், போகப் போக செம பேஜார். படத்தின் உயிர்நாடிக் காட்சியே கொம்பனும் மாணிக்கமும் மோதிக் கொள்ளும் சண்டைதான். ஆனால், அதன் கிராஃபிக்ஸ்... ப்ச்!  


இருந்தாலும், திரையில் யானையைப் பார்த்ததுமே குழந்தையாகிவிடுகிற மனசு, எல்லாவற்றையும் மறக்கடித்துவிட... கம்பீர நடை போடுகிறான் கும்கி!

விமர்சனம் : நீதானே என் பொன்வசந்தம்

விகடன் விமர்சனக் குழு


 விண்ணைத் தாண்டி வருவாயா’ காதலில் பள்ளிப் பருவத்தையும் முன்னாள் காதலனின் திருமணத்துக்கு முந்தைய இரவையும் சேர்த்தால்... 'நீதானே என் பொன்வசந்தம்’.


 குழந்தைப் பருவத்தில் ஜீவா, சமந்தா இடையே கன்றுக்குட்டிக் காதல். ஈகோ மோதல். பிரிகிறார்கள். கல்லூரிப் பருவத்தில் மீண்டும் சந்திக்கும்போது, விட்ட இடத்தில் இருந்து காதல். இப்போதும் ஈகோ மோதல். பிரிகிறார்கள். திருமணத்துக்கு முந்தைய பருவத்தில் சந்திக்கிறார்கள். காதலே இல்லாமல்


ஈகோ மோதல் மட்டுமே. பிரிகிறார்கள். முந்தைய இரண்டு தருணங்களிலும் ஜீவாவே சமந்தாவைச் சமாதானப்படுத்தியிருக்க, இப்போது சமந்தா சமாதானத்துக்கு வருகிறார். ஆனால், அப்போது ஜீவாவுக்குத் திருமணம் நிச்சயமாகி ரிசப்ஷனும் முடிந்திருக்கிறது. என்ன நடந்தது என்பது க்ளைமாக்ஸ்.


இன்ஜினீயரிங் கல்லூரி மாணவன், வசதியான வீட்டுப் பெண், காலேஜ் கல்ச்சுரல்ஸ், காபி ஷாப், ஈகோ, பிரிவு, காதலியைத் தேடிச் செல்லும் காதலன், கூடவே கௌதமின் கரகர குரல்... 'கௌதம் பட க்ளிஷே’க்கள் ஒன்றுகூட மிஸ் ஆகவில்லை. ஆனால், பழையன நிறையப் புகுந்ததில், புதியன எதுவும் இல்லாமல் போய்விட்டதே!


பிரிந்த காதலர்கள் காதலனின் திருமணத்துக்கு முந்தைய இரவில் சந்திக்கும் அத்தியாயத்தில் மட்டும் செம சிக்சர் அடிக்கிற கௌதம், மற்ற ஏரியாக்களில் சிங்கிள் ரன்தான் எடுக்கிறார்.


தன் காதலைத் தானே முறித்துக்கொண்டு பிறகு சமாதானம் தேடி அலையும் கொஞ்சம் நெகட்டிவ் பாத்திரத்தில்... ஜீவா! பள்ளி, கல்லூரிக் கட்டங்களில் க்யூட்டாகக் கவர்கிறார். இறுக்கம் இல்லாத திரைக்கதையிலும் நம்மை ஈர்த்துப் பிடிப்பது சமந்தாவின் குழந்தை முகமும் குறும்புக் கண் களும்தான். சாய்ந்து சாய்ந்து பார்த்து கன்னக் கதுப்புகளில் வெட்கம் புதைத்துப் புன்னகைக்கும்போது... ஸோ ஸ்வீட் சமந்தா!  


'சுடிதாருக்குச் சாயம் போனாத்தானே உங்களுக்கு பேன்ட், ஷர்ட்லாம் கண்ணுக்குத் தெரியும்!’, 'சில்-அவுட் மச்சான்’ - மாறி மாறி வரும் ஊடல் கூடல் வசனங்களுக்கு மத்தியில், சந்தானத்தின் ஒன் லைன் பஞ்ச்கள்தான் சின்ன ஆறுதல்.


ஸ்டேட்டஸ் வித்தியாசம் கருதி சமந்தாவிடம் இருந்து வம்படியாக விலகுவது ஜீவாதான். ஆனால், கடைசியில் ஏதோ சமந்தாதான் ஜீவாவை ஏமாற்றியதுபோல அவரைக் குறுகுறுக்க வைப்பது என்ன நியாயம்?


'நீ ஏற்காடு போனதில்லையா... செம இடம். நான் இந்த சம்மருக்குப் போறேன். ஆமா நீ எங்கே போற?’ 'ஆஸ்திரேலியா!’, 'எல்லா குட்டிக் குட்டி பாக்ஸையும் டிக் அடிச்சிட்டு, கடைசியா என் பாக்ஸுக்கு வந்தியா?’, 'உன் கல்யாணத்துக்கு மூணு மணி நேரத்துக்கு முன்னாடி இதைச் சொன்னேன்னு ஞாபகம் வெச்சுக்கோ’ என்பதுபோன்ற சில இடங்களில் மட்டுமே கௌதம் டச்.


ஃபீலிங் படத்தை செம ஜாலியாக எடுத்திருப்பார்கள்போல. 'வி.டி.வி.’ சிம்புவை சந்தானம் கலாய்க்கிறார். 'டேட்ஸ் இல்லை. அநேகமா நான் இல்லாமதான் அடுத்தடுத்த சீன்லாம் நடக்கும்’ என்று டயலாக் பேசுகிறார். என்ன சார் நடக்குது அங்கே!  


படத்தின் ஹீரோ, பலம்... இரண்டும் இளையராஜாதான். காதலர்கள் இணையும்போது வரும் காதல் கீதமாகட்டும், பிரியும்போது வரும் சோக கீதமாகட்டும்... ராஜா, ஏன் ராஜா என்பதை நிரூபிக்கிறார்.  


காதலர்கள் அடிக்கடி பிரியக் காரணமே 'ஸாரி’ என்ற வார்த்தையை அவர்கள் சொல்லத் தயங்கும் ஈகோதான். ஆனால், நாங்கள் சொல்கிறோம்.. ஸாரி கௌதம்!


நன்றி - விக்டன் 

Wednesday, December 19, 2012

ஜெயமோகன் -ன் நீர்ப்பறவை வசனங்கள் - ஆஹா 50 !

http://gallery.southdreamz.com/cache/movie-gallery/neerparavai/neer-paravai-tamil-movie-vishnu-sunaina-images-11_720_southdreamz.jpg 

1. மீனவன சுட்டுக் கொன்னுட்டா, பத்திரிக்கையில கூட இந்திய மீனவன்னு போடாம தமிழக மீனவன்னு தலைப்பப் போட்டு மேட்டரை முடிச்சுடறாங்க 


2. என் கணவர் உடம்பு மட்டும் தான் கரைக்கு வந்தது, உயிர் கடலுக்குள்ள தான் இருக்கு 


3. குடிப்பழக்கத்தை ஒருத்தன் நிறுத்திட்டான்னா, ஒன்னு அவனுக்கு அல்சர் வந்திருக்கும் இல்ல, காதல் வந்திருக்கும் 

4. மீனவனுக்குன்னு எங்காயாச்சும் தனி தொகுதியிருக்கா?  



5. முஸ்ஸிம் மக்கள் ஆதரிக்கவில்லைன்னா திட்டுறீங்க.. சரி கூட்டமா வந்தா தீவிரவாதம்னு சொல்றீங்க. அதுக்காக நாங்க வாராமய இருக்க முடியும் ?



6. இலங்கை ராணுவம் மீனவன் ஒருவனை சுட்டுக் கொன்றால், தமிழக மீனவன் சுட்டுக் கொல்லப்பட்டான் என்றுதான் சொல்கிறோம். அதனை ஏன் இந்திய மீனவன் என்று சொல்லக்கூடாது’ 


7. மனிதனின் உள்ளம் மட்டும்தான், அவன் தன் இனம் என்பதை மறந்து ரத்தவெறியோடு செயல்படுகிறது.


8.  உடனே தெருவுக்கு வந்திருவீங்களே..?

 நாங்க எங்க உரிமைக்காக போராடினா அது தீவிரவாதமா..?


9.  அம்மா, கை நடுங்குது , சரக்கு அடிக்க காசு குடு 


 கண்ட சரக்கை வாங்கிக்குடிச்சு உடம்பை கெடுத்துக்காம நல்ல சரக்கா வாங்கிக்குடிக்கோணும் 


 சரக்குக்கு பையனுக்கு காசு தரும் ஒரே அம்மா நீயாத்தான் இருக்க முடியும்  


10. கல்லா கட்றியோ இல்லையோ , நல்லா கள்ளா காட்றே? 



 http://cutmirchi.com/upimages/1350572629_sunaina-3ff1bd1c.jpg


11.  நான் சாதா கவிஞன் .ம் .என்ன எழுச்சிக்கவிஞனா மாத்திடாதே?



இந்தா இதை அடி , சரக்கு செம . எந்ந்திரிச்சு நின்னு ஆடுவே 



12. நமக்குள்ளே ஒத்துமை இல்லை,கவர்மெண்ட் பஸ்  டிரைவரை ஒருத்தன் அடிச்சுட்டா ஊர்ல எந்த பஸ்சும் ஓடாது, ஆனா கடல்ல ஒரு மீனவனை சுட்டுக்கொன்னாக்கூட நாம ஏன் நம்ம எதிர்ப்பை பதிவு பண்றதில்லை? 



13. முஸ்லீம் - நீங்க கூட்டம் போட்டா அது புரட்சி , அதுவே நாங்க கூட்டம் போட்டா அது தீவிரவாதம்? 


14. இதை அவன் பேசலை , அவனுக்குள்ளே இருக்கும் “அப்பா” பேசறார், பேச வைக்குது 



15. என்னப்பா? வீட்ல ஏதும் பிரச்சனையா? 


 நோ , பையன் கிட்டே சத்தமா கொஞ்சிட்டு இருந்தேன் .. போய்யாங்



16. மீனவர்கள் சார்பா 4 எம் எல் ஏ இருந்தா அவனவன் அலறி அடிச்சுட்டு பிரச்சனைன்னா வருவான்.



17. பாவ மன்னிப்பு கேட்க வந்தோம் ஃபாதர் 


என்ன பாவம்? 

 பிறந்ததே பாவம் 


 ஏன் தள்ளாடறீங்க..?

 ஹி ஹி பாவம் ஓவர் 



18. சுனைனா - தட்டுங்கள் திறக்கப்படும் , கேளுங்கள் கொடுக்கப்படும் , பைப்பிள்ல சொல்லி இருக்கு 


டொக் டொக் 

 எஸ் 


20 ரூபா கடன் வேணும் 



19. டைஃபாய்டு மாதிரி , காய்ச்சல் மாதிரி குடி ஒரு  வியாதி 



20. நாளைக்குத்தர்றேன்னு சொல்லி உங்க பையன் 50 ரூபா கடன் வாங்குனாரு 


நாளைக்கு - அவன்  அகராதில அடுத்த ஜென்மத்துல -ன்னு அர்த்தம் 


http://cine-talkies.com/movies/tamil-actress/sunaina/sunaina-104.jpg



21. யப்பா , அவனைத்திருத்தறேன்னு சொல்லி  ரொம்ப வலைச்சு ஒடிச்சறாதீங்க , பாவம், சரக்கு கேட்டா வாங்கிக்குடுங்க.. 







22 போதைலயும் ஒரு நிதானத்தை கடைப்பிடிப்பவர்கள் நாங்க, தெரியுமில்ல?

 யூ ஹேவ் குட் ஃபியூச்சர்

 சரி, இப்போ வெள்ளையா ஒரு உருவம் நம்மை கிராஸ் பண்ணிட்டுப்போச்சே, அதுதான் ஃபாதரா?



23. ஒழுக்கமா இருக்கறதுதான் நம்மளை மாதிரி ஏழைங்களோட மிகப்பெரிய சொத்து 



24. எழுச்சிக்கவிஞன் எழுச்சிக்கவிஞன்னு சொல்லிட்டு அடுத்தவன் பாட்டையே பாடிட்டு இருக்கியே, உன் சொந்தப்பாட்டை எப்போ பாடுவே?


25. உள் காய்ச்சல் இது. ஊசி போட்டா அந்த சுகம் போயிடும்



26. தம்பி, நீ ஏதோ சொல்ல வ்ர்றே, ஆனா எனக்குத்தான் எதுவும் விளங்க மாட்டேங்குது 



27. உன் பின்னாலயே நான் வர்றேனே, என்னை மதிக்கவே மாட்டியா? ஏன் என் கூட பேசறதே இல்ல?


எவ்ளவ் தூரம் பின்னாலயே வர்றே? னு பார்க்கத்தான்



28. ஒழுங்கா இருக்கியா?

 யா யா , ஆனா சண்டே வந்தா மட்டும் ஒழுக்கத்துக்கு லீவ் விட்டுடுவோமாக்கும், ஹி ஹி 




29. நீ தோற்ற இடத்துலயே ஜெயிக்கனும், பலவீனமானவர்க்ளை ஜெயிக்க விடனும், அதுதான் வீரம்



30. என்னை என்ன செய்யச்சோன்னாலும் செய்யறேன், ஆனா வேலைக்கு மட்டும் போகச்சொல்லக்கூடாது ,அதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு 







http://1.bp.blogspot.com/_QPkk0qlpQU8/TQwmzWK2GHI/AAAAAAAAAUk/WqMupzBi_BM/s1600/nandita+das.jpg

31 ஆல மர நிழல்ல புல் பூண்டு முளைக்காது


32.  எங்களை மாதிரி வயசான ஆள் சொன்னா எவன் கேட்கறான்? உன்னை மாதிரி இளசுங்க சொன்னாத்தான் வயசுப்பொண்ணுங்க சொன்னாத்தான்
 கேட்கறாங்க 


33. நான் கறுப்பா இருக்கும் வெள்ளைக்காரன், அளவாத்தான் குடிப்பேன் ,

34. இந்தியா முழுக்க ஒரு விதி இருக்கு, அது மீனவன் அல்லாதான் மீன் பிடிக்கக்கூடாது 


35.  இல்லாதவங்களுக்கு கடவுள் இரங்கி வருவான் ( இறங்கியும்) 



36. சுறா மீன் வெயிட் ஜாஸ்தி , எப்படி கடல்ல நீந்துது?


 தண்ணீர்ல அதனோட வெயிட் கம்மி 

 அப்போ இப்போ நாம தூக்கிட்டுப்போகும் மீன்களை ஒரு அண்டா தண்ணில கொண்டு போனா வெயிட் கம்மியா இருக்குமா?  



37. மாத்தறதே மாத்தறீங்க , நல்ல ஃபிகர் இருக்கற இடமா மாத்துனா நல்லாருக்கும் 

 உன் அவசரத்தைப்பார்த்தா பாலியல் புகார்ல உள்ளே போய்ட்டுத்தான் மறுவேலை போல 



38. இனிமே மீனவன் சாவு மழை பெய்யும் நியூஸ் மாதிரி சாதாரணமா ஆகிடும் :((


39. அமெரிக்கா , ஆஸ்திரிஏலியாவுல ஆறு மாசம்   பனி  நம்ம நாட்டுல மட்டும் தான் 12 மாசமும் மீன் பிடிக்க உகந்த சூழல் 


40. மீனைப்பிடிப்பவனை விட , மீனை தின்பவனை விட இடைல வாங்கி விக்கறானே, அவனுக்குத்தான் வருமானம் ஜாஸ்தி , அவன் தான் பணக்காரன்.


http://2.bp.blogspot.com/-JfwQnBa7GQg/TbvTwvH0UFI/AAAAAAAAB7E/yKAHVxDMU4E/s1600/I-AM-AFIA-nandita-das-6.JPG



41. கெட்டுப்போன பேரு பணம் வந்துட்டா காணாமப்போயிடும் 


 ஆமா, பணம் வந்த வழியை யாரும் பார்க்க மாட்டாங்க.. பணம் இருந்தா சரி




42. ஏய், காபி போடு 


 எனக்கு காபி குடிக்கும் பழக்கம் இல்லை.. 

 ஓய், காபி எனக்கு 



43. ரொம்ப நல்லவனா இருந்தா மறந்துடுவாங்க.அப்பப்ப கொஞ்சம் கெட்டவனாவும் இருக்கனும், அப்போதான் ஞாபகத்துல வெச்சுக்குவாங்க 



44. என்னை விரும்பற பொண்ணை நான் அவளை விரும்பலைங்கறதுக்காக எப்படி தங்கச்சின்னு சொல்ல முடியும்? அவ மனசு என்ன பாடு படும்?  பிடிக்கலைன்னா ஒதுங்கிடனும், படுத்தக்கூடாது



45. உன் கிட்டே எனக்குப்பிடிச்சதே உன் காதலிக்கு நீ உண்மையா இருப்பதுதான் 



46 , முதுகா இது? ராஜ நாகம் படம் எடுத்தது மாதிரி 



47. உனக்கு வெட்கமா இல்ல? 

 போடி, ஆரம்பிக்கும்போது இப்டித்தான் சொல்வே


48. சாரி, இருட்ல எதுவும் தெரியாது , மீ வாண்ட் லைட் .. யூ டியூப் லைட் 



49. நீ தான் என் கடல் . புரியுதா? 


 ம்ஹூம்


ம்க்கும்



50 யோவ்.. எப்பவும் “திங்கறதுலயே “ குறியா இருக்காதய்யா


http://www.bollywoodpicturesonline.com/new_jpg/nandita_das_002_dm.jpg




டிஸ்கி -1 படத்தில் இயக்குநர் சீனு ராமசாமியும் இணைந்து வசனம் எழுதி இருப்பதாக டைட்டில் சொல்லுது. ஆனா என் கெஸ்ஸிங்க் என்னான்னா அவர் வசன மேற்பார்வை மட்டும் பார்த்திருப்பார்.அங்கங்கே சில கரெக்‌ஷன் , எடிட்டிங்க் பண்ணி இருப்பார். சப்போஸ் அவர் எழுதி இருக்க வாய்ப்பு  உள்ள ஒரே வசனம்  சுனைனா பேசும் - சாத்தானே ! அப்பால போ! மட்டுமாத்தான் இருக்கும், மீதி எல்லாமே ஜெமோ தான் எழுதி இருக்கனும்  



டிஸ்கி 2 - முறைப்படி வசனகர்த்தா  ரைட்டர் ஜெயமோகன் சார் படம் தான் இதுல போடனும், ஆனா பாருங்க அப்புறம் எல்லாரும் என்னை ஆணாதிக்க வாதின்னு சொல்லிடுவாங்க. இந்த அட்ரா சக்க பெண்களுக்கு 100% இட ஒதுக்கீடு தரும்னு உலகத்துக்கே தெரியும் , ஹி ஹி




http://tamil.way2movies.com/wp-content/uploads/2012/11/neerparavai_movie_review.jpg





 

விஜய் டி வி 7 சி ஐஸ்வர்யா பேட்டி

http://www.cinespot.net/gallery/d/980328-1/Aishwarya+Tv+Serial+Actress+Photos+_7_.jpg 

 

நான் நடிகையான கதை! - ஐஸ்வர்யா

தொகுப்பாளியாக, தொடர்களின் நாயகியாக வெற்றி வலம் வந்துகொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா. விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக இருந்துகொண்டே "7சி'யில் நடிக்கிறார். சன் தொலைக்காட்சியில் "பைரவி'யாக கலக்கிக்கொண்டே, ஜெயா டி.வியில் பாலசந்தரின் இயக்கத்தில் "இலக்கணம் மாறுதோ' தொடங்கிவிட்டது. அவரிடம் தொடர் நடிப்பு இடைவேளையில் பேசியதிலிருந்து...  


தற்போது நடித்து வரும் தொடர்களைப் பற்றிச் சொல்லுங்கள்?


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "7சி', சன் டிவியில் "பைரவி', இப்போது ஜெயா டிவியில் "இலக்கணம் மாறுதோ' ஆகிய தொடர்களில் நடித்து வருகிறேன். எல்லா தொடர்களிலும் லீட் ரோல் நான் தான் செய்கிறேன்."7சி' தொடரில் எஸ்தராகவும், "பைரவி' தொடரில் மதுராவாகவும், "இலக்கணம் மாறுதோ' தொடரில் சுரபி என்கிற கதாபாத்திரத்திலும் நடிக்கிறேன். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "7சி' எனக்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது. அதற்குக் காரணம் அந்த கேரக்டர் துடுக்கான, அதே மற்ற ரோல்களைவிட வித்தியாசமாக இருக்கும். நானும் அந்த கேரக்டரில் ரொம்ப இன்வால்வாயி நடிக்கிறேன்."

இலக்கணம் மாறுதோ' உங்களை எந்த விதத்தில் மாறுபடுத்திக் காட்டும் தொடராக இருக்கும்?"


இலக்கணம் மாறுதோ' இப்போதுதான் புதிதாக ஆரம்பித்திருக்கிறது. கவிதாலயா பேனர்ல கே.பாலசந்தர் சாரோட தொடர் இது. பாலசந்தர் சார் தொடர் என்றாலே அதில் ஒரு வித்தியாசம் இருக்கும். அதுவே கேரண்டிதான். இதுவும் கண்டிப்பாக பல சுவரஸ்யங்கள் நிறைந்த தொடராக இருக்கும். அவர் இயக்கிய "சஹானா' தொடரில் நடித்த காவியாவும் இந்தத் தொடரில் நடிக்கிறாங்க. இரண்டு பெண்களின் மணவாழ்கை சம்பந்தப்பட்ட கதையாக "இலக்கணம் மாறுதோ' உருவாகி வருகிறது.கவிதாலயா பேனர்ல நான் ஒரு தொடராவது நடித்துவிட வேண்டும் என்பது என் அம்மாவோட நீண்ட நாள் கனவு. அந்தக் கனவு இப்போது நிஜமாகியிருப்பது மனதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது


. நீங்கள் நடிக்க வருவதற்கு முன்பு, வேடிக்கை பார்க்க போன இடத்தில் நடிகை ஆகிட்டீங்களாமே உண்மையா?


ஆமாம் உண்மைதான். என் அண்ணனுக்கு டிவியில் காம்பெய்ராக ஆக வேண்டும் என்று நிறைய ஆசையிருந்தது. அப்படிப்பட்ட ஒரு நேரத்தில் விஜய்டிவியில் அதற்கான ஆடிஷன் நடந்தது. அதில் கலந்து கொள்ள அண்ணன் போயிருந்தார். அவரோடு நானும் சும்மா வேடிக்கை பார்க்க போயிருந்தேன். ஆனால் அவர் தேர்வாகவில்லை. எதிர்பாராத விதமாக நான் தேர்தெடுக்கபட்டேன். வேடிக்கை பார்க்க போன இடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படித்தான் காம்பெய்ரிங் பண்ண வந்தேன். அதைத் தொடர்ந்து தொடரில் நடிக்கவும் வாய்ப்புகள் கிடைக்க இப்படியே என் பயணம் தொடர்கிறது.


தொடர்களில் நடிப்பதற்கு முன்பு நீங்கள் தொகுப்பாளினியாக இருந்தீர்கள். அந்த அனுபவம் பற்றி?


நான் தொடர்ச்சியாக மூன்று வருடமாக விஜய் டிவியில் வரும் "ஜோடி நம்பர் ஒன்' நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்தேன். அதே போல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் காம்பெய்ரிங் செய்துள்ளேன். அப்போதிலிருந்தே தொடர்களில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. அதில் விருப்பம்மில்லாமல் இருந்தேன். காரணம் தொகுப்பாளினியாக இருப்பது தொடரில் நடிப்பதைவிட ஈசியாக இருக்கும். ஜாலியாக வந்தோமா, ஹாயாக பண்ணோமா போய்க்கிட்டே இருக்கலாம். தினம் ஆபிஸ் வந்து போகிற பீல் தொடரில் நடிக்கும் போது ஏற்படும். ஆனால் காம்பெய்ரிங் செய்வது அப்படி அல்ல.

சரி இப்படி இருந்த நீங்கள் அப்புறம் ஏன் தொடரில் நடிக்க ஒத்துக்கிட்டீங்க?


எதுவும் ஒரு கட்டத்தில் போரடிக்கும்தானே? அதுமட்டுமில்லை இங்க நிலைக்கணும் என்றால் நம் திறமையை நிரூபிக்கணும். அதற்குத் தொடர்களில் நடிப்பது முக்கியம். அதற்காக காத்திருந்தேன். அப்போதுதான் "வந்தாளே மகராசி' தொடரின் கதையைக் கேட்டேன். மிகவும் பிடித்திருந்தது. அதனால் இத்தொடரில் நடிக்க சம்மதித்தேன். அந்த தொடரின் மூலமாகத்தான் நான் சின்னத்திரை நாயகி ஆனேன்.


நடிகையாகவும் இருக்கீங்க, தொகுப்பாளியாகவும் இருக்கீங்க எதை விரும்பி செய்கிறீர்கள்?


காம்பெய்ரிங்கிற்கும், நடிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. காம்பெய்ரிங் பொருத்தவரை நம்ம வீட்டிலோ நண்பர்களிடமோ பேசுவது போன்று இயல்பாக இருக்கும். அதே சமயம் சில நேரங்களில் சரியாக நிகழ்ச்சி கொடுக்கவில்லை என்றால் உடனே முகத்துக்கு நேரே சொல்லி ஓ வென்று கத்திவிடுவார்கள்.அதுவே நன்றாக இருந்தால் உடனே வாழ்த்துவார்கள், நேரடி நிகழ்ச்சிகள் வழங்குவது ஜாலியாக இருந்தாலும், ரொம்ப கடினமான விஷயம். ஆனால் நடிப்பு அப்படியில்லை, கஷ்டப்பட்டு நடித்து முடித்த பிறகு வெளி இடங்களுக்குப் போகும் போது, ரசிகர்களை சந்திக்கும் போதுதான் நாம் என்ன செய்திருக்கிறோம் என்று தெரியும். நடிக்கும் போது அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட வேண்டியிருக்கிறது. இது ஒரு வித்தியாசமான, புதுமையான நல்ல அனுபவமாக இருக்கிறது. இதில் எது பிடித்திருக்கிறது என்று என்னால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் தொகுப்பாளி ஆன பிறகுதான் நான் நடிகையானேன். அதனால் கம்பெய்ரிங்கும் விடாமல் தொடர்ந்து செய்து வருகிறேன். சமயம் கிடைக்கும்போது மேடை நிகழ்ச்சிகள், திரை விழாக்களையும்கூடத் தொகுத்து வழங்கி வருகிறேன். இதை தவிர விளம்பரப் படங்களிலும் நடிக்கிறேன்.


சினிமாவில் நடிக்க அழைப்புகள் வருகிறதா? அந்தப் பக்கம் போகும் எண்ணம் உண்டா?


ஐந்து வருடமாக பெரிய திரையில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இப்போதைக்குப் பெரியதிரைக்குப் போகிற எண்ணம் இல்லை. சின்னத்திரையே நிறைவாக இருக்கிறது. அதனால் கண்டிப்பாக பெரிய திரைக்குப் போகமாட்டேன்.


உங்களுடைய வருங்காலத் திட்டங்கள் என்ன?


பதினோராம் வகுப்பு படிக்கும் போதே நான் மீடியாவுக்குள் வந்துவிட்டேன். அதனால் பளஸ் டூ முடித்ததும் விஸ்காம் எடுத்து படித்தேன். ஆன் ஸ்கீரின் மட்டும் அல்லாமல் திரைக்கு பின்னும் இருக்க ஆசைப்படுகிறேன். எனக்கு போட்டோகிராபி ரொம்ப பிடிக்கும். கல்லூரியில் படிக்கும் போது பைனல் இயர்ல போட்டோகிராபியில் யூனிவர்ஸிட்டியில் டாப்பராகவும் வந்தேன். முதலில் எல்லா துறையைப் பற்றியும் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும், டெக்னிக்கலாக அதில் அனுபவம் பெற்ற பிறகு எனக்கு எது சரியாக வருகிறதோ அந்த துறையை தேர்ந்தெடுக்கலாம் என்றிருக்கிறேன் என்ன சரிதானே?


நன்றி - சினிமா எக்ஸ் பிரஸ்

ரீ ரெக்கார்டிங்கில் பட வெற்றியை கணிக்க முடியுமா? - இசை ஞானி பேட்டி @ குமுதம்

இளையராஜாவின் பதில்:ஒரு படத்துக்குக் Re-recording செய்யும்போதே, அந்தப் படத்தின் வெற்றி/தோல்வியை உங்களால் கணிக்க முடியுமா?

♫ ஒரு கதை தேறும்-தேறாது என்பது ஒருவர் வந்து கதை சொல்லும்போதே தெரிந்துவிடும். Just imagine.. நான் தொள்ளாயிரத்து சொச்சம் படம் பண்ணியிருக்கிறேன் என்பது பெரிய விஷயமில்லை. அதற்குப்பின் எவ்வளவு சகிப்புத்தன்மை இருக்கிறது என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்.

நீங்கள் ஒரே ஒருமுறை பார்த்துவிட்டு, “ச்ச.. படமா எடுத்திருக்கிறான்?” என்று எண்ணி, அதைப் பார்க்கமுடியாமல் பாதியில் எழுந்து போன படங்கள் எத்தனை இருக்கும்? அதுபோன்ற படங்களையும் நான் நான்குமுறை பார்த்தாகவேண்டும். முதல்முறை எனக்கு முழுவதும் போட்டுக்காட்டுவார்கள். அதன்பின்னர் Music Compose பண்ணுவதற்காக Theater’ல் வந்து ஒவ்வொரு ரீலாக பார்க்கவேண்டும். அதன்பின்னர் Music எழுதிமுடித்து, அத்துடன் Conduct செய்து காட்டும்போது ஒருமுறை பார்க்கவேண்டும். Take’ன் போது எத்தனை Takes ஆகும் என்று தெரியாது. அத்தனை முறை மறுபடி மறுபடி பார்க்கவேண்டும். 



ஆக, நீங்கள் ஒருமுறை பார்த்து ”பிடிக்கவில்லை” என்று கூறும் படத்...தை நான் இத்தனை முறை பார்த்தாகவேண்டும். அப்போதும்கூட, ‘இந்தப் படம் இப்படி இருக்கிறதே.. இதற்கு எப்படி Music போடுவது?’ என்று எனக்குத் தோன்றாது. மாறாக, ‘இந்தப் படத்தை எப்படிப் பிழைக்கவைப்பது?’ நம் இசை இதற்கு எப்படி உதவியாக இருக்கும்?” என்றே தோன்றும். இல்லையென்றால், நிறைய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஹீரோக்களை நீங்கள் பார்த்தேயிருக்கமாட்டீர்கள்.

பாடல்கள் நன்றாக இருந்தும் படம் ஓடவில்லை என்பது ரொம்ப Normal’ஆன விஷயம்தானே? பாடல்களுக்காக படம் என்று சொன்னால், ‘தென்றல் வந்து தீண்டும்போது’ என்ற பாடலுக்காகவே அந்தப் படத்தை நீங்கள் ஓட்டியிருக்கவேண்டும். அது உங்கள் தவறுதானே தவிர என் தவறு அல்ல. பாடலுக்காக அந்தப் படத்தில் இருந்த தவறை எல்லாம் நீங்கள் மன்னித்திருக்கலாம் அல்லவா? ‘காதல் ஓவியம்’ படத்தின் ஒவ்வொரு பாடலுக்காகவும் அந்தப் படம் Silver Jubilee’ஐ தாண்டியிருக்கலாம்.

ஆக, படம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், தவறு என்னிடத்திலில்லை. பாடல்கள் நன்றாயிருக்கிறது என்று இன்றைக்கும் சொல்கிறீர்களா இல்லையா?”







#ilayaraja இளையராஜா - பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம் கூட்டணியில் உருவான பாடல்களை விட இளையராஜா - பாலுமகேந்திரா கூட்டணி உருவாக்கிய பாடல்கள் மனத்திற்கு இதமாக இருக்கிறதே.. என்ன காரணம்?

- கருப்பையா பாலகிருஷ்ணன், மதுரை.

நான் என்ன கட்சி வைத்துக் கொண்டா இருக்கிறேன்? கூட்டணி சேர! யாருடனும் நான் இல்லை! இவர்கள் வருகிறார்கள்! போகிறார்கள்! - எல்லாப் பாடல்களும் அவர்களின் கதைக்காக நானாகிய நானே உருவாக்கியதுதான்!


இளையராஜாவை கேளுங்கள், குமுதம் (26.12.2012)  ,


நன்றி -

பகிர்வு நன்றி: திரு. ஜெகதீஷ் ஜெயராமன்., புது மாப்ளை பறவை,இளையராஜா ஃபேன்ஸ்

ஜஸ்ட் 7 ரூபாயில் கூரியர் சர்வீஸ் ,மத்திய அரசின் புதிய திட்டம்

செவன் டிகிரி செல்சியஸ்': 7 ரூபாயில் அரசு பேருந்து கூரியர் சேவை! 


Last updated : 11:25 (19/12/2012)
சென்னை:'  செவன் டிகிரி செல்சியஸ்'என்ற பெயரில் வெறும் 7 ரூபாய் கட்டணத்தில் தபால்களை அரசு பேருந்துகள் மூலம் அனுப்பும் கூரியர் சேவையை தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

அரசு போக்குவரத்து கழக பஸ்களில், கூரியர் மற்றும் பார்சல் சேவை அறிமுகம்  செய்யப்படும் என  தமிழக அரசு அறிவித்திருந்தது..இத்திட்டம் கோவை போக்குவரத்து  கழகத்தில் முன்னோட்டமாக கொண்டு வரப்பட்டது.

'செவன் டிகிரி செல்சியஸ்'

இதன் மூலம் கோவை போக்குவரத்துக் கழகம், 24 லட்சம் ரூபாய் வருவாயை,   ஈட்டியது. போக்குவரத்துக் கழகங்களுக்கு, இதன் மூலம், கூடுதல் வருவாய்  
பொதுமக்களிடம்  பிரபலபடுத்தும் நோக்கில்,'செவன் டிகிரி செல்சியஸ்' என்ற சிவப்பு வண்ண ஸ்டிக்கர்கள்  அனைத்து அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் ஒட்டப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"இச்சேவை  மூலம் தபால்களை, ஏழு ரூபாயில் அனுப்பலாம். இதை குறிக்கும் வகையில், '7  டிகிரி செல்சியஸ்' என்று பெயரிட்டுள்ளோம்.
அரசு பஸ்களில் அனுப்பும் தபால் மற்றும் பொருட்களை, பஸ் சேமிருடத்தில் உள்ள பஸ்  நிலையங்களில் பெற்று கொள்ளலாம்.தபால் மற்றும் பொருட்கள், வீடுகளுக்கு நேரடியாக  சென்றடையாது.பொதுமக்களே, பஸ் நிலையத்தில் நேரடியாக பெற்று கொள்ள  வேண்டும்.கட்டண விபரம், கி.மீட்டருக்கு ஏற்றாற்போல் வெளியிடப்படும்"என்றார்.

மிகக்குறைந்த கட்டணத்தில் அரசு அறிமுகப்படுத்தி உள்ள இந்த சேவை பொதுமக்களுக்கு  லாபகரமானதுதான் என்றாலும்,சில தனியார் கூரியர்களைப்போன்றல்லாமல், மக்கள்  அனுப்பும் தபால்கள் மற்றும் பார்சல்கள் பாதுகாப்பாக சென்றடைவதையும் அரசு  போக்குவரத்துக்கழகங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.



நன்றி - விகடன்

டெல்லி லேடி டாக்டர் ரேப்பிஸ்ட் வாக்குமூலம்

பாடம் கற்பிக்க விரும்பினோம்': டெல்லி சம்பவ குற்றவாளி 



Posted Date : 18:19 (18/12/2012)Last updated : 18:31 (18/12/2012)
புதுடெல்லி: டெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 23 வயது மாணவிக்கு  பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அக்குற்றத்தை புரிந்ததாக கைது  செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவன் விசாரணையின்போது தெரிவித்ததாக  காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.


டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக  4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவர் தேடப்பட்டு  வருகின்றனர்.


இதனை டெல்லியில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்த காவல்துறை  ஆணையர் நீரஜ் குமார்,இவ்வழக்கை விரைவு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும்  என்று நீதிமன்றத்தை டெல்லி காவல்துறை கேட்டுக்கொள்ளும் என்றும்,அப்படி  அமைத்தால்தான் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் என்றும் கூறினார்.

குற்றவாளிகள் மீது பாலியல் பலாதகார வழக்கு மட்டுமல்லாது, கொலை முயற்சி  வழக்கும் பதிவு செய்யப்படும் என தெரிவித்த நீரஜ் சிங், கைது செய்யப்பட்ட 4  பேர்களும் அப்பேருந்தின் டிரைவர் ராம் சிங், அவனது சகோதரன் முகேஷ், உடற்பயிற்சி  கூடத்தின் பயிற்சியாளர் வினய் ஷர்மா, பழ வியாபாரி பவன் குப்தா ஆகியோர் ஆவர்  என்றும், தப்பி ஓடிய இரண்டு பேரும் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

பாடம் கற்பிக்க விரும்பினோம்

இதனிடயே கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், அப்பெண்ணுடன் வந்த நண்பரை முதலில்  தாக்கியபோது,அப்பெண் அதனை தடுக்க முயற்சித்ததாகவும்,இதனால் அப்பெண்ணுக்கு  பாடம் கற்பிக்க வேண்டி தாங்கள் இச்செயலை செய்ததாகவும் விசாரணை நடத்திய  போலீஸ் அதிகாரிகளிடம் குற்றவாளி ஒருவன் கூறியதாக காவல்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி  டெல்லி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள்  என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே,நாடாளுமன்றத்தில்  தெரிவித்துள்ளார்.



கற்பழிப்பு தலைநகராகும் டெல்லி!
Posted Date : 15:18 (18/12/2012)Last updated : 18:05 (18/12/2012)
டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட  சம்பவம்,ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி உள்ள நிலையில் 'டெல்லி-கற்பழிப்புக்கு  தலைநகர்'என்ற நிலையை நோக்கி செல்வதாக சொல்லி அதிரவைக்கிறது தேசிய குற்றப் புலனாய்வு  அமைப்பின் புள்ளிவிவரம் ஒன்று!

டெல்லியில் கடந்த ஞாயிறன்று இரவில், 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவி  ஒருவர் திரைப்படம் பார்த்துவிட்டு, தனது ஆண் நண்பருடன் பேருந்தில் வீடு  திரும்பிக்கொண்டு இருந்தபோது, 7 பேர் கொண்ட கும்பல், அப்பெண்ணின் நண்பரை  தாக்கிவிட்டு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது.பின்னர் அவர்கள்  இருவரையும் ஓடும் பேருந்திலிருந்து தூக்கி வீசி எறிந்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் டெல்லிவாசிகளை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில்,மகளிர் தேசிய  ஆணையம் முதல் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் வரை இவ்விவகாரத்தில்  தலையிட்டதால், காவல்துறை முழு வீச்சில் குற்றவாளிகளை பிடிக்க களமிறங்கியது.

பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், அம்மாணவியின் நண்பர்  குற்றவாளிகளின் அடையாளம் குறித்து தெரிவித்த சில தகவலின் அடிப்படையில் 3 பேர்  கைது செய்யப்பட்டனர்.
24 மணி நேரத்தில் வ்ளைககப்பட்ட குற்றவாளிகள்

தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவின் உதவியோடு, அந்த  பேருந்தை அடையாளம் கண்ட காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள பேருந்துகள்  நிறுத்துமிடத்தில் சோதனை செய்ததில், அந்த பேருந்து கண்டறியப்பட்டது. அதன்  ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தியதில், பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்ல  அந்த பேருந்து பயன்படுத்தப்பட்டு வந்ததும், அதன் ஓட்டுநர் ராம்  சிங் என்ற விவரமும்  தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது ஆண் நண்பர்களின் செல்போன்களை  குற்றவாளிகளை பிடுங்கி வைததிருந்தனர். அந்த செல்போன்களுக்கு காவல்துறையினர்  எஸ்எம்எஸ் அனுப்பிய போது, அதில் ஒன்று செயல்பாட்டில் இருந்ததால், அந்த  இடத்தை தொலைத்தொடர்பு உதவியோடு கண்டறிந்த காவல்துறையினர், அதன் மூலம்  இரண்டாவது குற்றவாளியையும் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் அளித்த தகவலின்  அடிப்படையில் மேலும் 2 குற்றவாளி கள் கைது செய்யப்பட்டு, மேலும் 2 பேர் தேடப்பட்டு  வருகின்றனர்.
டெல்லியில்  செய்தியாளர்களிடம் இது தொடர்பான விவரங்களை தெரிவித்த
டெல்லி காவல்துறை ஆணையர்  நீரஜ் குமார்,  கைது செய்யப்பட்ட 4 பேர்களும் அப்பேருந்தின் டிரைவர் ராம் சிங், அவனது சகோதரன் முகேஷ், உடற்பயிற்சி கூடத்தின் பயிற்சியாளர் வினய் ஷர்மா, பழ வியாபாரி பவன் குப்தா ஆகியோர்  என்றும், தப்பி ஓடிய இரண்டு பேரும் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேற்று பல்வேறு அறுவை சிகிச்சைகள்  செய்யப்பட்டு, தற்போது ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள  மருத்துவர்கள், அவரது அடிவயிற்றுப் பகுதி சரி  செய்ய முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
மாணவ, மாணவிகள் போராட்டம்

இந்நிலையில் இந்த சம்பவம் டெல்லி மாணவ,மாணவியர்களிடையேயும் மிகுந்த  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர்கள் இன்று டெல்லியின் வீதியில் இறங்கி  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை  என்றும் மாணவிகள் கூறினர். 

அதிர்ந்த நாடாளுமன்றம்

இதுஒருபுறம் இருக்க டெல்லி மாணவி பலாதகார நிகழ்வு நாடாளுமன்றத்திலும் இன்று  எதிரொலித்தது.

மக்களவையில் இன்று இப்பிரச்னையை எழுப்பிய பா.ஜனதாவினர் கேள்வி நேரத்தை ரத்து  செய்துவிட்டு இந்த சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் வலியுறுத்தியதோடு,  உள்துளை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும்  என்றும் கோரினர்.

இப்பிரச்னை தொடர்பாக பேசிய மக்களவை எதிர்கட்சித்தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்,  பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணத் தண்டனை விதிக்க வேண்டும்  என்று கூறினார்.

நாட்டின் தலைநகரில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வெட்கக்கேடானது என்று கூறிய  அவர், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாகவும்  குற்றம்சாட்டினார்.மேலும் பல்வேறு கட்சி உறுப்பினர்களும் இப்பிரச்னை குறித்து தங்களது  கவலையை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில்,நாடாளுமன்றத்தின் முன்பாக புதன்கிழமையன்று தர்ணா போராட்டம்  நடத்தவும் பா.ஜனதா எம்.பி.க்கள் தீர்மானித்துள்ளனர்.

டெல்லிக்கு முதலிடம்

இதனிடையே பாலியல் பலாத்கார நிகழ்வில் டெல்லி முதலிடத்தில் இருப்பதாக தேசிய  குற்றப் புலனாய்வு அமைப்பின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

கடந்த வருடம் மட்டும் டெல்லியில் 572 பெண்கள், விஷமிகளால் பாலியல்  பலாத்காரத்திற்கு ஆளாகி உள்ளனர்.டெல்லிக்கு அடுத்தபடியாக மும்பையில் 239  பெண்களுக்கு இக்கொடுமை நிகழ்ந்துள்ளது.

இத்தனைக்கும் டெல்லியைவிட மும்பையில் சுமார் 2 மில்லியன் மக்கள் அதிகமாக  உள்ளபோதிலும்,பாதுகாப்பு அதிகம் உள்ளதாக கூறப்படும் டெல்லியை ஒப்பிடுகையில்  மும்பையில் பாதி அளவே இக்குற்றங்கள் நிகழ்வதாகவும் அது தெரிவிக்கிறது.

தவிர கடந்த ஆண்டு கொல்கத்தாவில் 47 கற்பழிப்பு குற்றங்களும், சென்னையில் 76  மற்றும் பெங்களூரில் 96 கற்பழிப்பு குற்றங்களும் நிகழ்ந்துள்ளதாகவும் அந்த தகவல்  கூறுகிறது.

அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கற்பழிப்பு குற்றங்களில் மிக மோசமாக  இருக்கும் மாநிலம் டெல்லிதான் என்கிறது அந்த அறிக்கை.

நாட்டின் தலைநகராக இருப்பதில்தான் டெல்லிக்கு பெருமையே தவிர,கற்பழிப்புக்கு  தலைநகராக இருப்பதில் அல்ல...!




டெல்லி மாணவியின் முக்கிய உடல் உறுப்புகள் சேதம்!
Posted Date : 12:16 (19/12/2012)Last updated : 12:22 (19/12/2012)
புதுடெல்லி: 6 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான டெல்லி  மாணவியின் சில முக்கிய உடல் உறுப்புகள் நிரந்தரமாக சேதமடைந்துள்ளதாக  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி சரப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி வரும்  அம்மாணவியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று இரவு நேரில் சென்று  பார்த்து, அம்மாணவியின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.

ஒருபுறம் குற்றவாளிகளை விரைவில் தண்டிக்க வேண்டும் என நாடு முழுவதும் குரல்கள்  பலமாக ஒலித்துவரும் நிலையில்,மறுபுறம் பாதிக்கப்பட்ட அம்மாணவி உயிருக்கு போராடி  வருகிறார்.

குறிப்பாக அம்மாணவியின் சில அதிமுக்கிய உடல் உறுப்புகள் நிரந்தரமாக  சேதமடைந்துவிட்டதாக, அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை அம்மாணவியின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்ட  நிலையில்,இரவில் மீண்டும் மோசமடைந்ததாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், இது  மிகவும் கடுமையான மற்றும் வழக்கத்தில் இல்லாத 'மருத்துவ கேஸ்' என்றும்  கூறியுள்ளனர்.  

ஒருவர் தொடர்ந்து 72 மணி நேரத்திற்கு மேல் 


இத்தகைய நிலையில் இருந்தால் அவரது  நுரையீரலில் தொற்று ஏற்பட்டுவிடும் என்றும், இந்நிலையில் அப்பெண்ணுக்கு  செயற்கை  சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு 65 மணி நேரத்திற்கும் அதிகமாகிவிட்டதாகவும்  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


நன்றி - விகடன் 


டில்லியில், ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்ட சம்பவம், நேற்று பார்லிமென்டின் இரு சபைகளிலும் எதிரொலித்து, கடும் அமளியை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்னைக்காக, ராஜ்யசபா அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.""இந்த கற்பழிப்பு சம்பவம், நாட்டையே வெட்கி தலை குனிய வைத்து விட்டது. இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க, குற்றவியல் சட்டத்தில், விரைவில், உரிய திருத்தங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர், சுசில் குமார் ஷிண்டே கூறினார்.

டில்லியில், கடந்த ஞாயிறன்று இரவு, நண்பருடன் பஸ்சில் பயணித்த, மருத்துவ மாணவி, ஏழு பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்டார். அவரது நண்பரும், கடுமையாகத் தாக்கப்பட்டு, தூக்கியெறியப்பட்டார். நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய, இந்த கொடூர சம்பவம், நேற்று பார்லிமென்டில் எதிரொலித்தது.காலையில், ராஜ்யசபா கூடியதும் கேள்வி நேரம் ஆரம்பமானது. அப்போது, பா.ஜ., மூத்த தலைவரான வெங்கையாநாயுடு எழுந்து, மருத்துவ மாணவி கற்பழிப்பு பிரச்னையை கிளப்பினார். அவருடன் சேர்ந்து, பா.ஜ., உள்ளிட்ட பிற கட்சிகளின் எம்.பி.,க்களும், குரல் கொடுத்தனர்.

உடன், சபைத் தலைவர் ஹமீது அன்சாரி, ""அரசியல் காரணங்களுக்காகவே, கேள்வி நேரம் இடையூறு செய்யப்படுகிறது. இது மனித உரிமை மற்றும் பலாத்கார விவகாரம். இதை அரசியலாக்க வேண்டாம்,'' என்றார்.

பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் ராஜிவ் சுக்லாவும், எதிர்க்கட்சி எம்.பி.,க்களை, சமாதானப்படுத்த முயன்றார். ஆனாலும், அமளி தொடர்ந்தது. இதனால், சபை அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் சபை கூடியபோதும், அமளி தொடர்ந்ததால், மறுபடியும் சபை ஒத்திவைக்கப்பட்டது.இதன்பின், பூஜ்ஜிய நேரம் துவங்கியதும், அனைத்து கட்சிகளின், எம்.பி.,க்களும், இந்தப் பிரச்னை குறித்துப் பேசினர்.

மைத்ரேயன் - அ.தி.மு.க.,: இந்த கொடூர காரியத்தை செய்தவர்களுக்கு, அதிகபட்ச தண்டனையான, மரண தண்டனை வழங்க வேண்டும்.
ராம் ஜெத்மலானி - பா.ஜ.,: டில்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமாரை, நீக்க வேண்டும்.
ஜெயா பச்சன் - சமாஜ்வாதி: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்; அதுவும் காலம்தாழ்த்தாது, நடவடிக்கை எடுக் வேண்டும்.
ரேணுகா சவுத்ரி - காங்.,: இளம் பெண்ணின் மீது நடத்தப்பட்டுள்ள, இந்த கொடூர அத்துமீறலுக்கு, எவ்வளவு பணத்தை இழப்பீடாக கொடுத்தாலும், அது ஈடாகாது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல், பொதுமக்கள் மத்தியில், நம்பிக்கையை ஏற்படுத்தும் பொறுப்பு போலீசுக்கு உள்ளது.
மாயாவதி - பகுஜன் சமாஜ்: இதுபோன்ற கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில், சட்ட விதிகளை திருத்த வேண்டியது அவசியம்.
வசந்தி ஸ்டான்லி ( தி.மு.க.),: இந்த கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு, மரண தண்டனை வழங்க வேண்டும். இந்த சம்பவம் மூலம், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகள் வரிசையில், இந்தியாவும் சேர்ந்துள்ளது.

இறுதியாக பேசிய, உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறியதாவது:இந்த கற்பழிப்பு சம்பவம், நாட்டையே வெட்கி தலைகுனிய வைத்துள்ளது. இனி, இது போன்ற கொடூர சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் என்பதில், அரசு உறுதியாக உள்ளது. கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, கடும் தண்டனை வழங்கும் வகையில், புதிய சட்டங்கள் இயற்றப்படும். இதற்காக, குற்றவியல் சட்டத்தில், திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பான மசோதா, விரைவில் பார்லிமென்டில் தாக்கலாகும்.இவ்வாறு சுஷில் குமார் ஷிண்டே கூறினார்.

லோக்சபாவிலும், டில்லி கற்பழிப்பு விவகாரம் குறித்து, பேச அனுமதிக்கப்பட்டது.
அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:இந்த கொடூர செயலில், மொத்தம், ஏழு பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களில், இன்னும் இரண்டு பேரை, போலீசார் கைது செய்யவில்லை. நாட்டின் தலைநகரான டில்லியில், பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை.டில்லி நகரின் சட்டம் - ஒழுங்கு என்பது, மாநில அரசின் கைகளில் இல்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, நடந்துள்ள சம்பவத்துக்கு, மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். பள்ளி பேருந்தில், இதுபோன்ற அநாகரிக சம்பவம், நடைபெற்றுள்ளது.இந்த சம்பவம் குறித்து, உள்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு, கடும் தண்டனை அளிக்க வேண்டும்.இவ்வாறு சுஷ்மா பேசினார்.

திருமாவளவன் பேச்சு -எம்.பி.,க்கள் எதிர்ப்பு:
லோக்சபாவில், நேற்று பூஜ்ஜிய நேரம் ஆரம்பித்ததும், தமிழகத்தைச் சேர்ந்த, சிதம்பரம் லோக்சபா தொகுதி, எம்.பி., திருமாவளவன் எழுந்து, தர்மபுரி விவகாரத்தை கிளப்பினார். அவர் பேசியதாவது:தர்மபுரி அருகே, நாய்க்கன் கோட்டையில் உள்ள நத்தம், "காலனி' அண்ணாநகர் போன்ற, தலித் கிராமங்களை, 3,000 பேர் கொண்ட கும்பல், சூறையாடியது. ஏறத்தாழ, 4 மணி நேரம், தொடர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. வன்முறையாளர்கள், நின்று நிதானமாக அனைத்து வீடுகளையும், தாக்கி விட்டு சென்றுள்ளனர். இருந்தும், போலீசார் அவர்களை தடுக்கவில்லை. வன்முறையாளர்களின் தாக்குதலின் போது, போலீசார் வேடிக்கை பார்த்துள்ளனர்.இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

உடன், தம்பித்துரை, செம்மலை, வேணுகோபால் உட்பட, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் பலரும் எழுந்து, "மாநில பிரச்னைகளை இங்கு பேசக் கூடாது' என எதிர்ப்புத் தெரிவித்ததால், அமளி ஏற்பட்டது. இதையடுத்து, சபை ஒத்திவைக்கப்பட்டது.

சபை மீண்டும் கூடிய போது, அ.தி.மு.க., - எம்.பி., தம்பித்துரை பேசியதாவது:தமிழகத்தில், பொது மக்களின் நன்மை கருதி, அரசு கேபிள் "டிவி' சேவை துவங்கி, நடைபெற்று வருகிறது. குறைந்த கட்டணத்தில், கேபிள் சேவை வழங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்திற்கு, டிஜிட்டல் தொழில் நுட்பம் அவசியம்.என்ன காரணத்தினாலோ, இதற்கான ஒப்புதலை வழங்க, மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது. மக்களுக்கு பயன் அளிக்கக் கூடிய, இது போன்ற திட்டங்களை, மத்திய அரசு ஊக்கப்படுத்த வேண்டும். அதனால், விரைவில் இந்த திட்டத்திற்கு, டிஜிட்டல் அனுமதி வழங்கிட வேண்டும்.இவ்வாறு தம்பித்துரை பேசினார்.

- நமது டில்லி நிருபர் -



டில்லியில் பஸ்சில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சட்டம் ஒழுங்கு மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டு பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சியினர் பார்லி.,யில் குரல் எழுப்பினர்.
டில்லியில் பஸ்சில் சென்ற மருத்துவ மாணவியை ஒரு கும்பல் கற்பழித்து தாக்கி பஸ்சில் இருந்து தூக்கி வெளியே வீசி சென்று விட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று லோக்சபா துவங்கியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து இந்த விவகாரம் குறித்து விவாதிக்க நோட்டீஸ் வழங்கியது. ஆனால் சபாநாயகர் நிராகரித்தார். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது.

ராஜ்யசபா ஒத்திவைப்பு :


ராஜ்யசபாவில் எழுந்த அமளி காரணாமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மாணவி கற்பழிப்பு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைதுக்கு பஸ்சில் இருந்த ரகசிய காமிரா உதவியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்,


மாணவருக்கு ஆபரேஷன்:


இதற்கிடையில் கற்பழிக்கப்பட்ட மாணவிக்கும், உடன் இருந்த அவரது நண்பருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவருக்கு ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். கற்பழிக்கப்பட்ட மாணவி இன்னும் மயக்கம் தெளியாமல் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார்.

சுஷ்மா சுவராஜ் பேட்டி:

இந்த கற்பழிப்பு சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. இது மிக முக்கிய விஷயமாக கருதுகிறோம். அனைத்து உறுப்பினர்களும் பார்லி.,யில் எழுப்புவோம் என்றார். இந்த விவகாரம் தொடர்பாக மதியம் உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே விளக்கம் அளிப்பார் என தெரிகிறது,


போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை:

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து டில்லி வசந்த்விகார் போலீஸ் ஸ்டேஷனை இப்பகுதி மாணவிகள் முற்றுகையிட்டனர். எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


நன்றி - தினமலர் 


மிஸ், உங்களுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சா?

1.நீதாஎபொவ பெண்களுக்கான படம் - கவுதம் # இதை ஏன் ரிலீஸ் அன்னைக்கே சொல்லல?


-------------------


2. புறங்கூறாமை = மனசுக்குள்ளே என்ன நினைக்கறாங்கனு கடைசி வரை பொண்ணுங்க வெளில சொல்லாம இருப்பது #சும்மா 



------------------


3. பெண்களிடம் பணக்காரன் என நடித்தால் தான் நல்லவன் என்று பெயர் எடுக்க முடிகிறது, இல்லைன்னா பிச்சைக்காரன் மாதிரி பார்க்கறாங்க 



---------------------



4. அணு உலையை அனுமதித்ததால் ஆளும்கட்சி படுதோல்வி : ஜப்பான் தேர்தலில் எதிர்க்கட்சி அமோக வெற்றி!: # காங்கிரஸ்க்கு கதிகலங்கி இருக்குமே 



-------------


5. 600 ரூபாய்ல உன்னால குடும்பத்தை நடத்த முடியாதா ? 


எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு நாள் ஓட்டிடுவேன்் 



---------------------



6. மாய்ந்து மாய்ந்து நீ பேட்டி ,ad தந்தாலும் அடடா 




-----------------


7. அன்பே! உன் ஜாக்கெட் ஜன்னல் மூடினாய்! தென்றல் உனக்குள் நின்றது! கோபப்புயல் எனக்குள் தோன்றியது 



-------------------


8. கேஸ் ட்ரபுள் ஸ்பெஷலிஸ்ட் டாக்டரின் ஹாஸ்பிடலில் - வாயு உள்ள புள்ள (ங்களால இந்த ஹாஸ்பிடல் ) பொழச்சுக்கும்


-----------------


9/ பிரபு சாலமன் - ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாதுங்கணே!


 கவுதம் - அங்கே மட்டும் என்ன வாழுது? என்னுது 10 நாள் , உன்னுது 20 நாள்



---------------------


10. சினிமா ஹீரோயின்கள் ஜாக்கிரதையா இருப்பவர்கள் கறுப்பு ஜாக்கெட்டும் , அசால்ட் பார்ட்டிகள் மஞ்சள் ஜாக்கெட்ட்டும் போடறாங்க




----------------------


11. கடல் படத்துல ஏன் அவ்ளவ் பெரிய மீசை?


அர்ஜூன் - டயலாக் இவ்ளவ் சின்னதா இருக்கேன்னு கேட்டேன்,சரி , மீசையயை பெருசா வெச்சுக்குங்கன்னுட்டார்



------------------


12. @ 20 12 2012 - டியர் , இதுதான் நமக்கு லாஸ்ட் நைட்டு ஹி ஹி , நாம பார்க்கும் கடைசி சந்த்ரோதயம் இதுதான் # தில்சே ரீமிக்ஸ்




----------------


13. எனக்கு இந்தப்படம் சுத்தமாப்பிடிக்கல .


ஹீரோயின் 7 டைம் குளிக்கறாங்க, சுத்தமாத்தானே இருக்காங்க?



--------------------


14. இது பெண்கள் பார்க்க வேண்டிய படம் தயவு செய்து பார்த்து விடுங்கள்," கவுதம்.# ஆமா, செகன்ட் ஆஃப் சீரியல் மாதிரி இழுக்குது சார்



---------------------

15. சாப்ட்டா ருசிக்காது ,குடிச்சா பசிக்காது நீங்கல்லாம் உங்க வீட்டில் வெச்ச ரசம் # சும்மா



------------------------


16. இயற்கை விவசாயம் = எந்த வித ரிகர்சலும் இல்லாம ஃபிகரைப்பார்த்த மத்திரத்தில் ஸ்பாண்ட்டேனியஸா பசங்க போடும் கடலை



---------------------


17. @ 22 12 2012  ஜெ - எனது ஆட்சியில்தான் எனது ஆணைப்படி மாயன் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது



-------------------------



18. மனிதனின் தலை எழுத்தை தீர்மானிப்பது பிரம்மா. தமிழகத்தின் தலை எழுத்தை தீர்மானிப்பது அம்மா - சம்பத்.# நீங்க பேசலை, ஓ சி கார் பேச வைக்குது



----


19. மிஸ், உங்களுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சா?



 நோ, ஏன்?



உங்க நெம்பருக்கு ஃபோன் பண்ணேன். எங்கேஜ்டுன்னு சொன்னாங்களே?



------------



20. பெண்களை கடத்திய கைதி போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடும்போது லாரி மோதி பலி! # போலீஸ்னா ஜீப் தானே ? இப்போ லாரியும் உண்டா?





------------



21. வைகோ விடம் இருந்த வரை நாஞ்சில் சம்பத் என மரியாதையாக அழைக்கப்பட்டவர் இப்போது சம்பத் தூ என தூற்றப்படுகிறார் # சேர்க்கை சரி இல்லை



-------


2.2ஜெ பிரதமரானால் இந்தியா வல்லரசாகும் - ஓபிஎஸ் #அப்போ வல்லரசு  நான் தமிழ்  நாட்டின் சி எம்மா ? -கேப்டன்



-----------------------


23. கே பாக்யராஜின் இன்றுபோய் நாளை வா வின் லேட்டஸ்ட் வெர்ஷன் தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா # காற்றில் வந்த தகவல்




-----------------------


24. மிஸ்டர் மேனேஜர்! எதுக்காக ஸ்டெனோ சோப்பு சுந்தரிக்கு சம்பளத்தை உயர்த்துனீங்க?


ஏன்?



பெண் என்றால் பேயும் இரங்கும் , பெண் என்றால் PAY யும் உயரும் ஹி ஹி



----------------------



25.  பூமி அழியும்போது பூமிகா என்ன ஆவாரோ? ;((



--------------------


26. 




மாயன் காலண்டர் டுபாக்கூர் - விஞ்ஞானிகள் விளக்கம்



மாயன் காலண்டர் அறிவியல் பூர்வமானது அல்ல: டிச.21-ந்தேதி ஆபத்து வருமா? - விஞ்ஞானி விளக்கம்
சேலம், டிச. 18-

மாயன் காலண்டர் 2012 டிசம்பர் 21-ந்தேதியுடன் முடிந்து விட்டதால் இனி உலகம் அவ்வளவு தானா? என்று பொதுமக்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை இதே பேச்சாக இருக்கிறது. இது தொடர்பாக விஞ்ஞானி கணபதி பொன்முடியை கேட்டபோது, அவர் கூறியதாவது:-

தென் அமெரிக்க பழங்குடியான மாயன்களின் நாட்காட்டியில் 21.12.2012 உடன் முடிந்து விடுகிறது என்று கூறி அதற்கு காரணம் மாயன்களின் உலகத்தின் அழிவு பற்றி தெரிந்து இருக்கிறது என்று விளக்கம் கூறப்படுகிறது.

மனிதன் விவசாயத்தில் ஈடுபட்ட பொழுதுதான் காலம் பருவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது. முழு நிலவு தேய்ந்து 30 நாளில் புது நிலவு தோன்றுவது அறியப்பட்டது. இது ஒரு மாதம் என்று காலக்கட்டமாக கணிக்கப்பட்டது. இதுபோன்று 12 முறை ஏற்பட்ட பொழுது ஒரு கால சுழற்சி இருப்பது தெரிய வந்தது. அதாவது கோடை காலம், குளிர்காலம் போன்று பருவங்கள் 12 மாத இடைவெளியில் தோன்றுவது அறியப்பட்டது. அதன் அடிப்படையில் 30x12=360 என்று கணக்கிட்டு ஒரு ஆண்டு என்று கணக்கிடப்பட்டது. இது ஒரு குத்து மதிப்பான காலக்கணிப்பு தான்.

இந்த முறையில் தான் கடந்த கால மனிதன் காலத்தை கணக்கிட்டான். மாயன்களின் நாள்காட்டி படி ஒரு ஆண்டுக்கு 360 நாட்கள். ஆனால் அறிவியல் வளர்ச்சியில் பூமியானது ஒரு முறை சூரியனை சுற்றி வருவதற்கு 365.24 நாட்கள் ஆகிறது என்பது தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையிலேயே நாம் தற்பொழுது பயன்படுத்தும் நாள்காட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே மாயன்களின் நாள்காட்டி அறிவியல் பூர்வமானது அல்ல.

முன்பு மனிதன் விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்தபோது காலத்தை கணிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. நாம் தற்போது கிரிகோரியன் காலண்டர் முறையை பின்பற்றி வருகிறோம். 13-ம் போப் கிரிதர் இந்த காலண்டரை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். சுனாமி, எரிமலை வெடித்தல், நிலநடுக்கம், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் இன்று நேற்றல்ல, பூமி தோன்றிய காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. நாம் இப்போது வாழ்வதால் இந்த காலகட்டத்தில் நடக்கும் இயற்கை சீற்றங்கள் குறித்து நமக்கு தெரிகிறது.

நிலநடுக்கம் மற்றும் இயற்கை குறிப்பிட்ட நாளில் அதாவது 21.12.2012ல் நடக்கும் என்பது உண்மையல்ல. உலகத்தின் ஒரு மூளையில் நாட்டில் இயற்கை சீற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பிட்ட நாளில் நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. பூமிக்கு அடியில் எரிமலை வெடிப்பதால் தான் நிலநடுக்கம் ஏற்படுகிறது. 21-ந்தேதி உலகம் அழியும் என்பது உண்மையல்ல. மாயன் காலண்டரை பொருட்படுத்த தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

 மக்கள் கருத்து




1. பிரபல ஜோதிடரான கே.பி.வித்தியாதரனைச் சந்தித்துக் கேட்டோம். சனி, ராகு இரண்டும் மக்களுக்குத் தொல்லையை உண்டாக்கக்கூடிய கிரகங்கள். இந்த இரண்டு கிரகங்களும் ஒன்று சேர்வது அபூர்வம். ஆனால் இப்போது சேர்ந்து இருக்கின்றன. இதனால் பேரழிவுகள் நிச்சயம் இருக்கும். விபத்துகள் அதிக எண்ணிக்கையில் நிகழும். மனசாட்​சிக்கு விரோதமான செயல்கள் நடக்கும். 


2. உலகம் அழியப் போகிறது என்பதை வெளிநாட்டு மக்கள் ஆணித்தரமாக நம்புகிறார்கள். அதனால்​தான் தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், 'என்னிடம் கடன் வாங்கியவர்கள் யாரும் பணத்தைத் திருப்பித்தர வேண்டாம். இருக்கும் வரை எல்லோரும் சந்தோஷமாக இருக்க​லாம்’ என்று அறிவித்திருக்கிறார். 



3. கிறிஸ்து பிறப்பதற்கு 2,000 ஆண்டுகளுக்கு முன், மாயா என்றோர் இனம் தென்னமெரிக்காவில் இருந்ததாம். மாயா இனத்தைச் சேர்ந்த​வர்கள் வானவியல் சாஸ்திரங்களிலும், கட்டடக் கலையிலும், கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருந்தனர் என்று ஆராய்ச்சி​யாளர்கள் சொல்கிறார்கள். அதற்கு ஒரே சாட்சிதான் மாயன் கலண்டர்.


4. கிறிஸ்து பிறப்பதற்கு 2,000 ஆண்டுகளுக்கு முன், மாயா என்றோர் இனம் தென்னமெரிக்காவில் இருந்ததாம். மாயா இனத்தைச் சேர்ந்த​வர்கள் வானவியல் சாஸ்திரங்களிலும், கட்டடக் கலையிலும், கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருந்தனர் என்று ஆராய்ச்சி​யாளர்கள் சொல்கிறார்கள். அதற்கு ஒரே சாட்சிதான் மாயன் கலண்டர். 





Tuesday, December 18, 2012

டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி ரேப் - கேஸ் விபரம்

டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பலாத்காரம்

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி, ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டாள்.


நேற்று இரவு வசந்த் விஹார் என்ற பகுதியில், நடந்த இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


நேற்று இரவு 11 மணியளவில், தெற்கு டெல்லி பகுதியில் முனிர்கா என்ற இடத்தில், ஒரு பெண்ணும், அவளது ஆண் நண்பரும் பேருந்தில் ஏறியுள்ளனர். பேருந்து பாதி தூரம் வந்ததும், பேருந்தில் இருந்த சிலர் நண்பரை தாக்கிவிட்டு, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அவர்களை தூக்கி வெளியே வீசியுள்ளனர். இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் பேருந்து ஊழியர்களா அல்லது பயணிகளா என்பது தெரிய வரவில்லை. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


டெல்லியில் மாணவி பலாத்காரம்: காவல்துறை துப்புத் துலக்கியது எவ்வாறு?

டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவத்தில் 24 மணி நேரத்தில் காவல்துறையினர் முக்கியக் குற்றவாளிகளை கண்டறிந்துள்ளனர்.
இதில், காவல்துறையினர் துப்புத்துலக்கியது எவ்வாறு என்ற தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 


அதாவது, தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவின் உதவியோடு, அந்த பேருந்தை அடையாளம் கண்ட காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள பேருந்துகள் நிறுத்துமிடத்தில் சோதனை செய்ததில், அந்த பேருந்து கண்டறியப்பட்டது. அதன் ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தியதில், பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்ல அந்த பேருந்து பயன்படுத்தப்பட்டு வந்ததும், அதன் ஓட்டுநர் விவரமும் தெரிய வந்தது. இதையடுத்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். 




மேலும், பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது ஆண் நண்பர்களின் செல்போன்களை குற்றவாளிகளை பிடுங்கி வைததிருந்தனர். அந்த செல்போன்களுக்கு காவல்துறையினர் எஸ்எம்எஸ் அனுப்பிய போது, அதில் ஒன்று செயல்பாட்டில் இருந்ததால், அந்த இடத்தை தொலைத்தொடர்பு உதவியோடு கண்டறிந்த காவல்துறையினர், அதன் மூலம் இரண்டாவது குற்றவாளியையும் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் அளித்த தகவலின் அடிப்படையில் மேலும் 1 குற்றவாளி கைது செய்ய்பட்டு, மேலும் 3 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.


இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேற்று பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, தற்போது அபாயகரமான நிலையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், அவரது அடிவயிற்றுப் பகுதி சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.


புது தில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை, நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாஜக எழுப்பியது.


இந்த சம்பவம் மிகவும் மோசமானதாகும். இது போல அடிக்கடி நிகழ்கிறது. நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை பாஜக கொண்டு வரும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.



இரு அவைகளிலுமே, கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு, மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டது.



நன்றி - தினமணி  



Delhi gangrape victim still
 critical, doctors say
Delhi Police team inspecting inside detained buses after a 23-year-old student was allegedly gangraped inside a private bus in Delhi.
Times of India
NEW DELHI: The 23-year-old woman who was gangraped and thrown off a moving bus in the capital is still critical and continues to be on ventilator support, authorities at the Safdarjung hospital said on Tuesday.

"The patient is still critical, she is on ventilator support. But since today (Tuesday) morning she has started to speak to the doctor," SN Makwana, press information officer at the hospital, told IANS.

A senior doctor at the hospital, who is attending to the victim, added that no further surgeries were being planned as of now.

"The patient is in critical condition and she is now trying to speak. As of now we are not planning for any surgery. We can say it is a grievous injury and her intestines are severely damaged," another doctor said on condition of anonymity.

The brutal rape and torture occurred Sunday night when the woman along with her male friend boarded a private bus at Munirka to go to Dwarka after watching a movie.

The woman was beaten up, stripped and raped by at least seven men who were inside the bus. Both the woman and her male friend, who was also beaten up when he resisted, were thrown off the bus near Mahipalpur.

The male friend was taken Safdarjung but discharged after treatment for his injuries Monday. 


நன்றி - த டைம்ஸ் ஆஃப் இண்டியா  

New DelhiThe horrific rape of a young medical student in a bus in South Delhi on Sunday night was raised by angry parliamentarians today in both houses.

Here are all the reactions in Parliament:

Sushma Swaraj, Leader of Opposition in Lok Sabha
What is the government doing to curb rape cases in the capital? The rapists should be hanged, we need tougher laws to stop rapes. There no words enough to condemn this issue. Home Minister should come to the house and explain what the government is doing. And the whole house should condemn this in one voice


Most Recent
  • Gwen Stefani admits to marriage being a struggle
  • Sajid Khan guarantees ticket crunch for Himmatwala
Also See
  • Delhi rape: Angry MPs ask government for tough action, more security
  • Gang-rape in Delhi bus: Police arrest three accused

Girija Vyas, Congress

There should be security all around. Fast track is very much needed. I want to say that everybody should together... There is a need of self-defence programme. Please wake up and save our girls.

Hamid Ansari, Rajya Sabha Chairman
The government will make a statement on the case later today.

Mayawati, BSP Chief
We need to improve our laws and make them stricter, so that it serves as a deterrent. Not enough to just arrest them, but action should be so strict that no one should dare to act in such a manner.

Meira Kumar, Speaker of Lok Sabha

The gang-rape case in Delhi is chilling. The government must take tough steps - this is what the House wants.

Kamal Nath, Parliamentary Affairs Minister
Tough and strict steps will be taken.

Jaya Bachchan, Samajwadi Party MP in the Rajya Sabha
We live in such a country where women are worshipped. But that faith is disrupted every day because in some city of India, especially in the capital there are atrocities against women. The way we are discussing this topic today it should have been done earlier.

Derek O' Brien: Trinamool MP in the Rajya Sabha
Delhi has become the rape capital of India. Rape is not a women's issue, it is much beyond. It is about men who stop behaving like human beings and started behaving like animals. This is even worse than animals.


Delhi gangrape: Nation outraged, demands justice






நான் திரைக்கதை அமைத்திருந்தால்? -கும்கி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-NHNLIgHCEPz_CJEn1lMPVJkFGfPvddamXO3iHdF1B5Zu1XQpRh5SLhrISMFjnaAPQ5E1k7aVgA_K7wmDL42SqGMF3b6iCNyaVSMDnP_7q5TAweaYld_PuDkbp9u63RZHxHJnAqjD9-90/s1600/kumki1.jpg

மைனா படத்தின் பிரம்மாண்டமான வெற்றி ,டி இமானின் இசையில் பாடல்களின் அதிரி புதிரி வெற்றி , ஹாலிவுட் தரத்தில் ஒளிப்பதிவு  இந்த மூன்று பிரமாதமான பிளஸ் இருந்தும்  கும்கி படம் அட்டகாசமான படமாக அமையாமல் ஏதோ ஓக்கே என்ற அளவில்தான் பேர் வாங்க முடிந்தது .பிரபு சாலமன் எங்கே சறுக்கினார்? இந்தப்படத்துக்கு எப்படி திரைக்கதை அமைத்திருந்தால் படம் இன்னும் ஹிட் ஆகி இருக்கும் ? ஒரு அலசல்



1. படத்தோட டைட்டில் கும்கி-ன்னு வெச்சாச்சு . முதல் வேலையா  முதுமலை 10 நாட்கள் கேம்ப் அடிச்சு அங்கே கூட்டம் கூட்டமா யானைகள் சுற்றுவதை  வீடியோ எடுத்துட்டு வந்து தேவையான இடத்துல அட்டாச் பண்ணி இருப்பேன்.கும்கி யானைக்கு எப்படி பயிற்சி தர்றாங்க? அதனோட ந்டவடிக்கைகள் என்ன? என்பதை படம் பிடிச்சுட்டு வரலாம்.ஏன்னா படத்துல மொத்தமே ஒரே ஒரு யானை தான் வருது . வில்லன் கம் கொம்பன் யானை கிராஃபிக்ஸ் , குட்டி யானை கிராஃபிக்ஸ்.இவ்வளவு செலவு பண்ணி படம் எடுத்துட்டு  பிரம்மாண்டமா யானைக்கூட்டத்தை காட்ட வேணாமா? 




2. படத்தோட ஓப்பனிங்க் சீன்ல யானை ஒரு பெண்ணை கொல்றது மாதிரி சீன் எடுத்தது க்ளோசப் ஷாட்ல நல்லாவே செட்டப் மாதிரி தெரியுது .3 வருடங்களுக்கு முன் யானைப்பாகனையே தூக்கி அடிச்ச மதம் பிடிச்ச யானையோட செய்லகளை சன் டி வி ல காட்டினாங்க . அதை எடுத்து டச்சப் பண்ணி இதுல அட்டாச் பண்ணி இருக்கலாம்.பொதுவா இந்த மாதிரி காட்சி எல்லாம் லாங்க் ஷாட்ல காட்டினாத்தான் நம்பகத்தன்மை வரும் . சும்மா யானையோட பாதம் மட்டும் காட்டி ஒப்பேத்த இது ராமநாராயனன் படம் அல்ல 



3. படத்தோட திரைக்கதை டிஸ்கஷனுக்கு படத்தில் பணிஆற்றும்   அதாவ்து படத்தில் நடிக்கும் ஆட்களை உட்கார விடக்கூடாது. இந்தப்படத்துல மைனா ஹிட்டின் காரணமா தம்பி ராமையாவை ஸ்டோரி டிஸ்கஷன்ல டைரக்டர் உட்கார வெச்சாராம். அதுதான் தப்பு . இந்தபப்டத்துல தம்பி ராமையாவின் காட்சிகள் நீளம் அதிகம் . மொக்கை காமெடி நிறைய இருக்கு,. அரதப்பழசான ஜோக், சென்சார் கட் பண்ற அளவு வச்னங்கள் பேசி இருக்காரு . அவர் சமப்ந்தப்பட்ட காட்சிகளை குறைக்கனும்



4. படம் போட்டு 2 மணி நேரம் கழிச்சு ஹீரோ ஹீரோயின் கிட்டே லவ்வை சொல்றாரு. அதுக்குப்பின் 40 நிமிஷம் தான் படம் , அதனால ஆடியன்ஸுக்கு ஹீரோ - ஹீரோயின் லவ் ல ஒரு பிடிப்பு வர்லை. அவங்க சேருவாங்களா? சேர மாட்டாங்களா? அப்டினு ஒரு துடிப்பு வர்லை. காதலுக்கு மரியாதை பட்த்துல  ஆடியன்சோட பரிதவிப்பு  நல்லாவே தெரியும் . அதுக்கு இருவரும் காதலிக்கும் காட்சிகள் , காதலின் ஆழம் , இதெல்லாம் படத்தோட 4 வது ரீலில் இருந்து காடிடனும் 



5. அந்த 2 போலீஸ் கேரக்டர்களும் என்ன பண்றாங்க? க்ளைமாக்ஸ்ல ஏதோ டர்னிங்க் பாயிண்ட் இருக்கு. அவங்க தான் வில்லன்களா வரப்போறாங்க என்பது மாதிரி பில்டப் எதுக்கு? அட்லீஸ்ட் அவங்க ஹீரோயினை அட்டெம்ப்ட் ரேப் கூட பண்ணலை. இந்த மாதிரி வெட்டி வில்லன்க இருந்து என்ன யூஸ் ? ஏமாற்றம்தான் மிச்சம் . அதனால அந்த 2 கேரக்டர்ஸ்க்கும் பை பை


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjea0jWxXOycMDTrSGrwAOtK_ovUimAb5bjZ4XC-6E-wspDStTZRgwRZDNCF1Cmsuh44FJjzsqrnMryDyRy-JJ7OJ8jodeMVip60TxNK_S10LKjmy-d_saAMbpRKlDGZBOtO1aGrHefn00/s320/1.jpg



6. ஹீரோயினோட அப்பா ஹீரோ கிட்டே உங்களூக்கு எங்களால வாழ்க்கையே போச்சு , உங்க யானையும் போச்சு அதனால நீங்க இங்கேயே இருந்துடுங்க. என் பொண்ணை உங்களூக்கே கட்டி வைக்கிறேன். உங்க லவ் எனக்குத்தெரியும். அப்பாவை மதிச்சு காதலை கை விட்ட பொண்ணுக்கு இது என் அன்புப்பரிசு அப்டிங்கற மாதிரி ஒரு டயலாக் அடிச்சு க்ளைமாசை காதலுக்கு மரியாதை மாதிரி சுபமா முடிச்சுடனும்



7. பருத்தி வீரன் ஹிட்டுக்குப்பின் எல்லாப்படங்களிலும் ஹீரோ கிராமத்தான் என்றால் அவன் ஷேவிங்க் செய்யாம  காட்டான் மாதிரிதான் தாடியோட காட்டறாங்க. ஹீரோவுக்கு எதுக்கு தாடி? நீட்டா காட்டலாமே? 



8. ஹீரோயினுக்கு படத்துல ஓப்பனிங்க் ஷாங்க் இல்லை. இவ்வளவு சூப்பர் ஹிட் பாடல்களை வெச்சுக்கிட்டு ஹீரோயின் அறிமுகக்காட்சி வைக்கலைன்னா எபடி? அந்த சொய்ங்க் சொய்ங்க் பாட்டை ஹீரோயின் ஓப்பனிங்க் ஷாட்டா வெச்சா குதூகலமான ஓப்பனிங்க் வரும்



9. ஹீரோ ஹீரோயின் கிட்டே  தன் லவ்வை சொன்னதும் ஹீரோயின் ஓடிடறார். நோ ரிப்ளை. அவர் லவ்வறாரா? இல்லையா?ன்னே தெரியலை ,. ஆனா அடுத்த சீன்லயே  ஹீரோ கிட்டே “ நீங்க போய்ட்டா நானும் உயிரை விட்டுடுவேன்கறார். ஒப்பிக்கற மாதிரி இருக்கு . ஆல்ரெடி சொன்ன மாதிரி 4 வது ரீல்லயே லவ் ஓப்பனிங்க் சீனை வெச்சு 12 வது ரீல்ல குடும்பத்துக்கு மேட்டர் தெரிய வர்ற மாதிரி எடுக்கனும்



10. க்ளைமாக்ஸ்ல ஹீரோவின் யானையும் , கொம்பன் காட்டு யானையும் மோதற சீனை நல்லா பிரம்மாணடமா ஃபாரஸ்ட்ல போய் நிஜ யானைங்க மோதும்போது காத்திருந்து ஷூட் பண்ணி அப்புறம் அங்கங்கே மானே தே பொன் மானே கும்கி யானே அட்டாச் பண்ணி சி ஜி ஒர்க்  பண்ணி பக்காவா ரெடி பண்ணி இருப்பேன். சும்மா நைட் இருட்டுல  ஏதோ சண்டை நடப்பது போல் பாவ்லா காட்டி இருக்க மாட்டேன்


11. தம்பி ராமையா உட்பட படத்தின் முக்கிய கேரக்டர்களை சாகடிக்கத்தேவை இல்லை . படம் பார்த்த பலரது கருத்து “ படத்துல எல்லாரும் செத்துடறாங்க , ஒரே சோகம் “ என்ற புலம்பல் தான்.



http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/11/director-PRABHU_SOLOMON1.jpg