மாதுரி தீக்சித்,திரிப்தி டிம்ரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்தப்படம் ஒரு டார்க் ஹியூமர் க்ரைம் திரில்லர் மூவி.படத்தின் டைட்டிலுக்கு அம்மாவும் சகோதரியும் என்று அர்த்தம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு விதவை.ஒரு காலனியில் இருக்கும் வீட்டில் தனிமையில் வசித்து வருகிறார்.இவர் ஒரு டாஸ்மாக் பாரில் பணி செய்கிறார்.இவருக்கு இரண்டு மகள்கள்.மூத்த பெண்ணுக்குத்திருமணம் ஆகி விட்டது.இளைய பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
நாயகி வேலை செய்யும் பாரில் கேஷ் கவுண்ட்டரில் இருந்து ஒரு தொகையை வீட்டுக்கு எடுத்து வந்து விடுகிறார்.
நாயகி வீட்டுக்கு எதிர் வீட்டில் வசிக்கும் வில்லன் அந்த விஷயத்தைத்தெரிந்து கொண்டு நாயகியை மிரட்டுகிறான்.
வில்லனுக்கு மனைவி,மகள் உண்டு.மகளுக்கு இன்னமும் இரண்டு நாட்களில் திருமணம் நடக்க இருக்கிறது.
நாயகி வில்லனுக்கு மெசேஜ் அனுப்புகிறாள்.அதை நம்பி வில்லன் நாயகி வீட்டுக்கு வருகிறான்.ஒரு அசம்பாவிதம் நடக்கிறது.
உடனே நாயகி தன் இரு மகள்களுக்கும் போன் பண்ணி தன் வீட்டுக்கு வந்து தன்னைக்காப்பாற்றும்படி கூறுகிறாள்.மகள்களும் அங்கே வர இதற்குப்பின் நிகழும் காமெடி கலாட் டாக்கள் தான் மீதித்திரைக்கதை.
நாயகி ஆக தேசாப் படத்தின் மெகா ஹிட் பாட்டு ஏக் தோ தீன் புகழ் மாதுரி திக்சித் அழகாக நடித்திருக்கிறார்.59 வயது ஆனவர் மாதிரியே தெரியவில்லை.திரிஷாவின் அம்மா போல இன்னமும் இளமையாக இருக்கிறார்.நன்றாக நடித்தும் இருக்கிறார்.
நாயகியின் முதல் மகளாக திரிப்தி டிம்ரி வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.இளைய மகளாக தர்னா துர்கா துடுக்குத்தனமாக நடித்திருக்கிறார்.
இவர்கள் இருவரும் எலியும் ,பூனையுமாக அடித்துக்கொள்வது ஜாலியாக இருக்கிறது.
வில்லன் ஆக ரவி கிஷன் நடித்திருக்கிறார். பெரிய அளவில் கவரவில்லை.
வில்லனின் மனைவியாக கீதாஞ்சலி குல்கர்னி பிரமாதமாக நடித்திருக்கிறார்.
நாயகியின் முதல் மகளின் முன்னாள் காதலன் ஆக இப்போது இன்ஸ்பெக்டர் ஆக வரும் அருணோதயா சிங்க் சிரிக்க வைக்கிறார்.
நாயகியின் முதல் மகளின் கணவனாக வரும் ஜதின் சர்மா குறைவான நேரமே வந்தாலும் நிறைவான நடிப்பு.
நாயகியின் இளைய மகளின் அப்பாவாக அதாவது நாயகியின் இரண்டாவது கணவராக பாரேஷ் ரவால் பரிதாபத்தை வர வைக்கும் நடிப்பு.
மற்ற சின்ன சின்னக்கதாபாத்திரங்களின் நடிப்பும் ஓக்கே ரகம்.
பாடல்களுக்கான இசையை இருவரும் ,பின்னணி இசையை வேறு இருவரும் இசைத்திருக்கிறார்கள்.5 பாடல்களில் 2 தேவலாம் ரகம்.பின்னணி இசை கச்சிதம்.
ஒளிப்பதிவாளர்கள் இருவரும் தங்களுக்குக்கொடுக்கப்பட்ட பணியை செவ்வனே நிறைவேற்றி இருக்கிறார்கள்.
நாயகி,மகள்களின் க்ளோசப் ஷாட்ஸ் அழகு.
தீபிகா கல்ரா வின் எடிட்டிங் கில் படம் 127 நிமிடங்கள் ஓடுகிறது.பின் பாதியில் கடைசி 20 நிமிடங்கள் மிக மெதுவாக நகர்கிறது.
பூஜா டோலனி திரைக்கதை எழுத இயக்கி இருப்பவர் சுரேஷ் திரிவேணி
சபாஷ் டைரக்டர்
1 தனிமையில் வாழும் விதவையை சமூகம் எப்படிப்பேசும் என்பதை ஒரு ரிப்போர்ட்டர் பாணியில் அவ்வப்போது வர்ணிக்கும் ஐடியா குட்.
2 நாயகியை வில்லி மாதிரி முதல் பாதியில் சித்தரித்து பின் பாதியில் அவர் படும் கஷ்டங்களை விவரிக்கும் விதமும் அருமை.
3 நாயகியின் முதல் மகளது திருமண வாழ்க்கையில் வேலைக்காரியாக நடத்தப்பட்டதைக்கணவனிடம் சுட்டிக்காட்டிப் பொங்கும் காட்சியில் உனக்கும் ,உன் சகோதரர்கள் மூவருக்கும் இதுவரை 2 லட்சம் சப்பாத்திகள் சுட்டுப்போட்டிருக்கேன் எனப்பொங்குவதும் பிரமாதம்.
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 டார்லிங்க்ஸ்(2022) ,ஹசீன் தில்ருபா(2021) ஆகிய படஙகளின் திரைக்கதையை நினைவுபடுத்துகிறது
2 வில்லன் கொலையானதாக முதலில் காண்பித்து பின் அவன் உயிருடந்தான் இருக்கிறான் என ட்விஸ்ட் வைத்த பின் படத்தில் விறுவிறுப்பு இல்லை.
3 போலீஸ் ஆபீசர் இப்படி ஒரு மஞ்சள் மாக்கானாக இருப்பது சிரிப்பு
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - குடும்பத்துடன் பார்க்கத்தகுந்த காமெடி க்ரைம் ட்ராமா,பெண்களுக்குப்பிடிக்கும்