Friday, December 07, 2012

சங்கவியை மறந்த சங்கதி என்ன?

1.டியர் .மேரேஜ்க்கு முன் என்னைத்தொடாதீங்க.


தீண்டாமைக்கு தடா .இன்று அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள்.



------------------


2. ஒரு இந்தியன் அடிக்கடி வடை சாப்பிட்டுக்கிட்டே இருந்தா அவன் வட இந்தியன் ஆகிடுவானா?


அப்ப நார்த்தங்கா சாப்ட்டுகிட்டே இருந்தா நார்த் இந்தியனா?



-----------------


3. டாக்டர்.வெறும் வயித்துல ஊறுகாய் சாப்பிட்டேன்.. அதுக்கே இப்படி எரியுது.



 தப்பு.சரக்குக்கு சைடு டிஷ் அது.



--------------------


4. வைகோவிடம் சரணாகதியாகும் நடிகர் வடிவேலு: நாளை திருச்சியில் ம.தி.மு.க.,வில் சேர திட்டம# வைகைப்புயல் வை கோ புயலுடன்்




-------------------


5. உப்பாத பூரியும் உண்டு .உப்பும் சப்பாத்தியும் உண்டு




-----------------------


6. என் மீது ராமதாஸூக்கு வன்மம்: கருணாநிதி: # ஹும் அவர் சொல்லிட்டாரு நாங்க சொல்லலை - அழகிரி & ஸ்டாலின்





-------------------


7. ஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா #நெம்பர் ஒன் ஆகும் வரை காங்கிரஸ் தொடர்ந்து போராடும் -சோனியாகாந்தி




--------------


8. நெஞ்சுல நிக்குற மாதிரி ஏதாவது சொல்லுங்க.


நெக்லஸ் .


 ஐ.வாங்கிக்குடுங்க


.ஸாரி,பாசிமாலை



----------------


9. காதலன் - நேர் படப் பேசு .


காதலி - ம்ஹூம்.படாமதான் பேசுவென்



------------------



10. அடுத்தவனுக்குரிய லட்டை சாப்பிட வேண்டும் என்கிற ஆசை எல்லா ஆண்களுக்கும் உண்டு -சாரு # கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா? புரமோவா?




-----------------


11. திரிஷாவுக்கும், எனக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது- விஷால்! # தம்பி , நான் இன்னும் உயிரோட தான் இருக்கேன் - ராணா


------------------



12. சர்க்கரை வியாதியின் தலைநகரம் சென்னை # அப்போ ஃபிகர் ஏரியா பெங்களூர் , சுகர் ஏரியா சென்னை?




---------------------



13. 74% இந்தியர்களுக்கு இதய நோய்: # மீதி 26 % அரேஞ்ஜ்டு மேரேஜா?




---------------


14. மது அருந்துபவர்கள் யாராக இருந்தாலும் கட்சியை விட்டு விலகி விடவும் -வைகோ # அவங்க எங்கேயும் போக வேணாம், இங்கே வாங்க - கேப்டன்




------------------------

15. கமல் - விஸ்வரூபத்தை அதிக விலை கொடுத்து வாங்க மாட்டேங்கறாங்க



 . ரஜினி - எனக்கும் அதே பிரச்சனைதான், கோச்சடையான் அனிமேஷன்கறாங்க ;((


---------------------- 


16. எம் டி - யூ ஆர் அப்பாயிண்ட்டட், இனி தீயா வேலை செய்யனும் . 


ஸ்டெனோ - இடியட்,ஐ ஆம் நாட் ஃபயர் பார்ட்டி 



-------------------------------- 


17. என்னைக் கண்டு பயப்படுகிறார் ஜெயலலிதா! - விஜயகாந்த்: # இனியாவது முகம் கழுவி பவுடர் போட்டு சமத்தா வெளில போங்க -பிரேமலதா 



---------------------


18. செய்திகள் வாசிப்பது செங் கமலம்.விஸ்வரூபம் நெடுந்தொடராக டி வியில் வரப்போகிறது.ரூ 250 கட்டினால் 250 நாளில் ஓடி முடியும். 



--------------------


19. ஜட்ஜ் - விஸ்வரூபத்தை டி வி ல ரிலீஸ் பண்ண முடியாது.லேடீஸ் இருக்கற இடம். பத்தாததுக்கு 2 ஜோடி வேற.ஸாரி 




-------------------------


20. ஸ்ரேயா கோசல் குரலுக்கு முன்னே வேற யாரும் நிக்க முடியாது.ஸ்ரேயா இடுப்புல எந்த சேலையையும் நிறுத்த முடியாது 




-----------------------


21. டிஸம்பர் 14 கும்கி ரிலீஸ் # நல்ல சேதி. கெட்ட சேதி - சென்சார் ல யு சர்ட்டிபிகேட்டாம் # போய்யாங் 




---------------------


22. விஸ்வரூபம் படத்தில் அழுகைக்காட்சியோ ,இழுவைகளோ இல்லாததால் டி வி யில் திரை இட முடியாது .கேபிள் சங்கம் கை விரிப்பு .கமல் அதிர்ச்சி் 




-------------------


23. ஜட்ஜ் - விசாரனைக்காக பெண் கைதியை ரகசிய இடத்துக்கு கூட்டிட்டுப்போனீங்ளே,என்னாச்சு? 



போலீஸ் - முடிச்சுட்டோம் யுவர் ஆனர் 



--------------------


24. விசாரணைக்காக புவனேஷ்வரியை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார்!- தொட    ரும் 




-----------------


25. உலகின் செல்வாக்கு மிக்கவர்கள் -் 12வது இடத்தில் சோனியா, 19வது இடத்தில் மன்மோகன # செல்லா வாக்குகள் க்கு எப்டி செல்வாக்கு கிடைச்சுது?் 




------------------------


26. விஸ்வரூபம் launch ப்ரிமீயர் ஷோ ஜனவரி 10 லாஸ் ஏஞ்சல்ஸிலாம் -் (ஜெயாடிவி செய்திகளில்) -# லாஸ் (loss) ஏஞ்சல்ஸ் சகுனமே சரி இல்லையே தலைவா 




-----------------------


27. உண்மை காதல் என்றால் உயிரை கொடுத்து சேர்த்துவைப்போம் - அன்புமணி# இது என் டயலாக் - டி ஆர் 



----------------


28. அறையிலிருந்து வெளியே போகும்போது 'கதவை சாத்திட்டு போடா' என்றொரு ஒரு குரல் கேட்டால் அதன் அர்த்தம் உள்ளே ஜிகிடி 



-----------------


29. ஹீரோவாகி 20 ஆண்டுகளானதை அமலா பாலுக்கு கேக் ஊட்டி கொண்டாடிய விஜய்! # சங்கவியை மறந்த சங்கதி என்ன? 



--------------------


30. கலைஞர் - நான் ஆந்திரா என்பதற்கு ஆதாரம் என்ன? 


 அன்பு மணி - 1,அதிக காரம் சேர்த்துக்கறீங்க 2 மஞ்சள் கலர் யூஸிங் 



--------------------


Thursday, December 06, 2012

இலங்கை யில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்? - வைரமுத்து பேட்டி

என்.கோமதிசங்கர், வீரவநல்லூர்.


 ''உண்மையைச் சொல்லுங்கள்... இலங்கை யில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்?''


''இறந்தவர்கள் வீர சொர்க்கத்தில் - இருப்பவர்கள் கோர நரகத்தில்.
பத்துத் தமிழர்கள் கூடி நின்று பேசினாலும் ராணுவத்திற்குச் செய்தி போகிறது; அடுத்த சில நிமிடங்களில் கூட்டம் அச்சுறுத்திக் கலைக்கப்படுகிறது.


கையில் வைத்து அழுத்தப்படும் பணமோ, கழுத்தில் வைத்து அழுத்தப்படும் கத்தியோ, சில தமிழர்களை உளவாளிகளாக மாற்றி வைத்திருக்கிறது.


ரகசியமாக விநியோகிக்கப்படும் போதைப் பொருள் பகிரங்கமாகப் பாதுகாக்கப்படுகிறது.


பதின்பருவத்துப் பிள்ளைகள் இன்னோர் ஆயுதம் ஏந்திவிடக் கூடாது என்பதற்காகச் சாராயத்திலும் போதைப் பொருளிலும் காயடிக்கப்படுகிறார்கள்.


எது நேரக் கூடாதோ - ஆனால், ஒரு போர்ச் சமூகத்தின் உடன் விளைவாக எது நேருமோ - அது நேர்ந்தேவிட்டது. நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சொல்கிறேன்; கொத்துக் கொத்தாய்ப் பாலியல் தொழில் நடக்கிறது.


அரசு ஊழியர்கள் தமிழர்களாயிருந்தால் சிங்களப் பகுதிக்கும், சிங்களவர்களாயிருந்தால் தமிழ்ப் பகுதிக்கும் திட்டமிட்டுப் பரிமாறப்படுகிறார்கள்.


இதனால், இனவாத அரசு எதை எதிர்பார்க்கிறதோ, அது நடந்துகொண்டே இருக்கிறது. அதாவது, சிங்கள - தமிழ் இல்லற இனக்கலப்பு தொடங்கித் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.



இது அதிகரிக்கும்பட்சத்தில் இன்னும் சில பத்தாண்டுகளில் நம்மவர்களின் இனமொழி அடையாளம் முதலில் கொஞ்சம் கொஞ்சமாகவும் முடிவில் முற்றிலுமாகவும் அழிக்கப்பட்டுவிடும். பிறகு, எவரை எதிர்த்து எவர் போராடுவது?


இந்தியாவும் ஐ.நா-வும் தமிழர்கள் கொல்லப்படுவதை ஏதோ உடல்தானம் செய்கிறார்கள் போலும் என்று ஒதுங்கிக்கொண்ட பிறகு எங்கே போய் முறையிடுவது?


இன உணர்வாளர்கள் கதறிக்கொண்டே இருக்கிறார்கள், கரையில் மாரடித்துக் கதறும் அலைகளைப் போல.


ஆனால் ஒன்று: விழுவது மட்டுமே அலையின் தொழிலன்று; மீண்டும் எழுவதும்தான்.''


சி.கார்த்திகேயன், சாத்தூர்.


 ''மறைந்த பேச்சாளர்களில் உங்களால் மறக்க முடியாதவர்?''


''கா.காளிமுத்து.
சொற்களின் சுந்தரன்; வாக்கியங்களின் வாத்தியக்காரன்; சங்கத் தமிழைத் தெருவெல்லாம் வீசிப்போன தென்பாண்டித் தென்றல்; 'அடாணா’வை உரைநடையில் வாசித்த கவிதைக் கச்சேரியாளன்.
இருதய அறுவைச் சிகிச்சை முடிந்து இரண்டாம் உயிர் பெற்று மதுரைக்குத் திரும்பிக்கொண்டுஇருந்தவரை பாண்டியன் ரயிலில் சந்தித்தேன்.
அவர் கையிலிருந்தது 'கள்ளிக்காட்டு இதிகாசம்’. கண்ணில் நீர் மிதக்கச் சொன்னார்:


'நான் உயிர் பிழைத்ததில் ஒரே ஒரு நன்மை கவிஞர். பிழைக்காதிருந்தால், 'கள்ளிக்காட்டு இதிகாசம்’ படிக்காமலே செத்துப் போயிருப்பேனே...’


ஒருவர் கரத்தை ஒருவர் பற்ற... இருவர் கரத்திலும் விழுந்தது கண்ணீர்.


எனக்கொரு கனவு இருந்தது.




கலைஞர் - வைகோ - காளிமுத்து என்ற முத்தமிழின் முக்கூட்டுச் சங்கமத்தை என் நூல் வெளியீட்டு விழா ஏதேனுமொன்றில் நிகழ்த்த வேண்டும் என்ற நெடுங்கனவு.


அரசியல் என் கனவின் ஒரு பக்கத்தைக் கிழித்துவிட்டது;


மரணம் மறு பக்கத்தை எரித்துவிட்டது.''


சி.கொ.தி.மு.விக்னேஷ்குமார், கோபி.


 ''அண்மையில் உங்களைக் கவர்ந்த பெண்கள்?''


''பெண்கள் அல்லர்; சிறுமிகள்.


பாகிஸ்தானின் புரட்சிப்பூ மலாலா, உலகத் தலைவரின் மகள் என்ற கர்வத்தைக் கண்ணில்கூடக் காட்டிக்கொள்ளாத கறுப்பு தேவதை மலியா ஒபாமா, இசையுலகின் பிஞ்சு நட்சத்திரம் பிரகதி.


இந்த மூன்று தேவதைகளை எந்த ஊடகத்தில் பார்த்தாலும் பாசமே மேலிடுகிறது.


உங்கள் மூவருக்கும் என் வளர்பிறை வாழ்த்துக்கள் மலர்களே.''


நா.வெங்கடேசன், மதுரை. 


 ''ரஜினிக்கும் உங்களுக்குமான மகிழ்வான தருணங்களைப் பகிர்ந்துகொள்ளலாமா?''



'' 'பாபா’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. அடுத்த பாடலுக் காக அவசரமாய் அழைக்கிறார் ரஜினி. பரபரப்பாகச் சென்றடைகிறேன்.
கதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே என் உடையையும் காலணிகளையுமே மாறிமாறிக் கவனிக்கின்றன அவரது காந்தக் கருவிழிகள். புறப்பட எத்தனித்தபோது 'சற்றே பொறுங்கள்’ என்றார். 'உங்கள் உடைக்கும் காலணிக்கும் பொருத்தமில்லை’ என்றவர், என் பதிலுக்குக் காத்திராமல் 'வெள்ளைத்தாள் கொண்டுவா’ என்று தன் உதவியாளருக்கு ஓசையோடு கட்டளையிட்டார். அந்த வெள்ளைத்தாளை விரித்து என் பாதம் பதிக்கச் சொன்னார். 


பேனா எடுத்து அதில் என் பாதத்தை வரையச் சொன்னார். 'இதே அளவுக்குக் காலணிகளை அனுப்பிவைக்கிறேன்’ என்றார்.


ஏ.ஆர்.ரஹ்மானைச் சந்தித்துவிட்டுச் சில மணி நேரங்கள் கழித்து வீடு திரும்பினேன். 'ரஜினி சார் கொடுத்தனுப்பினாராம்’ என்று ஒரு பெட்டியை நீட்டினார்கள் என் உதவியாளர்கள். பிரித்துப் பார்த்தால்,


என் காலுக்குப் பொருத்தமான காலணிகள்!


நான் எழுதியது பொய்யில்லை:

'பாசமுள்ள மனிதனப்பா
மீச வச்ச குழந்தையப்பா.’ ''


அ.குணசேகரன், புவனகிரி.


 ''மூன்றாம் உலகப் போரில் தகப்பனாகிய கருத்தமாயி மகனாகிய முத்துமணியை வெட்டிக் கொன்றது நியாயமாகத் தெரியவில்லையே?''


''குற்றம் புரிந்த மகன் வீதிவிடங்கனைத் தேரேற்றிக் கொன்ற சோழனை 'மனுநீதி காத்தவன்’ என்று கொண்டாடத் தெரிந்த நமக்கு, சமூக விரோதியாகிய மகனை வெட்டிக் கொன்ற கருத்தமாயியை 'மண்நீதி காத்தவன்’ என்று கொண்டாடத் தெரியவில்லையே?''


செ.அ.நெய்னா, சென்னை.


 ''மனிதன் எப்போது மகான் ஆகிறான்?''


''புலன்கள் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் தனித்தனியாகவோ மொத்தமாகவோ மனிதனைக் கைவிடுகின்றன. துய்ப்பு குறைந்துகொண்டே வருகிறது; கடைசியில் அற்றுப்போகிறது.


துய்ப்புக்கான வாசல்கள் மூடப்படும்போது, ஞானத்திற்கான ஜன்னல்கள் திறக்கின்றன.


பணம் என்பது தன் மதிப்பிழந்து அரசாங்கம் அச்சடித்த மற்றுமொரு தாள் என்று தோன்றுகிறது. தங்கம் தன் பெருமையிழந்து மஞ்சள் உலோகமாக மாறிவிடுகிறது. பெண்ணின் மார்பகம் கவர்ச்சி கழிந்து பாற்சுரப்பிகளின் உபரிச் சதை என்றாகிவிடுகிறது.


புலன்கள் கைவிட்ட பிறகு இந்த முடிவுக்கு வந்தால் அவன் மனிதன். புலன்கள் துடிக்கும் பருவத்திலேயே இந்த ஞானம் அடைந்தால் அவன் மகான்.''


கே.ரூபிணி, தில்லைஸ்தானம்.


''பாடல்களில் திருத்தம் கேட்டால் செய்வீர்களா? தவிர்ப்பீர்களா?''


''உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் 'நீர்ப்பறவை’ பாடல்களில் இயக்குநர் சீனுராமசாமி உரிமையோடு பல திருத்தங்கள் கேட்டார். மெட்டுக்கும் கதைக்கும் நியாயமென்று பட்ட திருத்தங்களையெல்லாம் செய்துகொடுத்தேன்; பாடல் வெளிவந்தது.



'என்னுயிரை அர்ப்பணம் செய்தேன்
உன் பெயரை ஸ்தோத்திரம் செய்தேன்
சத்தியமும் ஜீவனுமாய்  நிலைக்கிறாய்’
 


என்ற வரிகளை சில கிறித்துவ நண்பர்கள் வருத்தப்பட்டுத் திருத்தச் சொன்னார்கள்.


எவர் மனதும் புண்படக் கூடாது என்பதற்காக


'என்னுலகம் கைவசம் இல்லை
என் பெயரும் ஞாபகம் இல்லை
சத்தியமாய் என்னருகே நீ இருக்கிறாய்’
என்று மாற்றிக் கொடுத்தேன்.
ஊதியம் தராத என் கிறித்துவ நண்பர்களுக்கே திருத்தம் செய்து தருகிற நான், ஊதியம் தருகிற தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் திருத்தம் செய்து தர மாட்டேனா?''



லதா சீனுவாசன், சென்னை-40.


 ''உடம்பு எதுவரைக்கும் நன்றாக இருக்கும்?'' 



''கண்ணுக்குத் தூக்க மாத்திரையும் - கட்டிலுக்கு ஊக்க மாத்திரையும் தேவைப்படாத வரைக்கும்.''



- இன்னும் பேசுவோம்...




readers view


 1. Kalpana3 Days ago
கவிஞர் வைரமுத்து சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். கையில் வைத்து அழுத்தப்படும் பணமும், கத்தியில் வைத்து அழுத்தப்படும் கத்தியும் சில தமிழரை..அம்மையாரின் விஷயத்தில் தமிழ் தெரிந்தவராக என்று கொள்ளவேண்டும். அழுத்தப்படும் விஷயம் முதலானதாக இருக்க வேண்டும் என்பது என் யூகம்.

கவிஞர் சொன்னதற்கு ஏன் அம்மாவுக்கு உடனே பொத்துக்கொண்டு வந்துவிட்டது என்பதுதான் ஆச்சரியம். இருக்கும் கொஞ்ச நஞ்ச குற்றவுணர்ச்சி உதைத்திருக்கும் போல.

தனி மனித வாழும் உரிமையாக அம்மையார் போதிப்பது (இல்லையில்லை கருத்துப்பதிவு என்கிற பெயரில் கதாகாலேட்சபம் பதிவது) என்ன என்று விளங்கவில்லை. இதே விகடனின் சாதி கலவரங்கள் குறித்து வெளியான ஒரு கட்டுரைக்கு "சாதிகளை ஒழித்துவிட முடியாது; ஆனால் சாதி உணர்வோடு வாழ்வதை தனி மனிதரது நம்பிக்கை விஷயமாக விட்டு விட வேண்டும்" என்கிறார் இந்த முனைவர். எங்கு சென்று முட்டிக்கொள்வது?
இருக்கும் நாட்டின் கேவலமான கலாச்சார விழுமியங்களே வெளிப்படுகின்றன.

ஐ,நா அமைப்பின் சார்ட்டர்களை கரைத்து குடித்த ரீதியில் இந்த கனமாணிக்கம் கட்டவிழ்த்து விட்ட இன்னொரு கதை "ராணுவ ரீதியாக இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க முனைவதை எதிர்தரப்பு தீவிரவாதம் கொண்டு மோதியதை காணச்சகியாமல் ஐ.நா இலங்கையை விட்டு வெளியேறியது" என்பது. ஐ.நாவின் பொது செயலாளர் முதல் ஐ.நாவின் நடவடிக்கைகளை பரிசீலித்து வெளியிட்ட உள்தணிக்கை குழுவின் சமீபத்திய அறிக்கைகளோ வேறுவிதமாய் வெளிவந்துள்ளது. அம்மையார் என்ன இறுதி ஈழப்போரின்போது களப்பணியில் ஈடுபட்டிருந்த காரிய வீராங்கனையா? இல்லையே? தன் வீட்டில் அதுவும் லிவுங் ரூமில் கணினியில் முன்னால் நாள் முழுதும் அமர்ந்து ஆங்கில கலப்புடன் (அதுகூட அம்மையாரின் தத்துவப்படி பெரிய அறிவுஜீவிதம் என்ற நினைப்பு) தப்பும் தவறுமாக தமிழை குதறியபடி தட்டெழுதுவதுதானே இவர் செய்யும் செயல்.

கோனார் தமிழ் துணைவன் சுருக்கமென்று சொல்லும் இந்த முனைவரது கல்வித்தகுதி சந்தி சிரிக்கின்றது. நானும் என மாணவப்பருவங்களில் கோனார் தமிழ் துணைவனை படித்திருக்கிறேன். செய்யுள் பகுதிக்கான விளக்கவுரைகள் கோனாரின் உண்டு. கோனார் பதிப்பக மற்றும் எழுத்தாசிரியரின் மகள் மணிமேகலை எனக்கு தமிழாசிரியராக தமிழ் போத்திருக்கிறார். இருக்கும் உயர்கல்வித்துறை சந்தி சிரிப்பதை போலவே இருக்கிறது இந்த முனைவரது கருத்துப்பதிவுகள்.
2. Dr.Mrs.MeenakshiPrabhakar7 Days ago
கவிஞர் கொடுத்திருக்கும் இலங்கை தமிழரின் நிலையை பார்க்கும் போது இன உணர்வாளர்களின் கதறல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியதாக தெரியவில்லை.

வீணாவது மனித வளம்.ஒரு நாட்டின், உலகத்தின் உயர்வு.தனி மனித திறன் இன அடிப்படையில் தேக்கப்படுவது குற்றம்.சிறுவர்களும், இளைஞர்களும், பெண்களும் இன உணர்வு இல்லையெனில் அரசின் நேரடி சீரமைப்புக்கு வர முடியும்.தனி மனித வாழும் உரிமை கோரி, உரியதை பெற்று நல வாழ்வு வாழ முடியும்.

பத்து பேர் சாதாரண சூழலில் சேர்ந்து பேச போவதில்லையே.சாதாரண சூழல் நிறுவ முனையும் நிலையில் அரசு தரப்பில் குழு நிலைப்பாடு கண்காணிக்கப்படுவதில் தவறில்லை.

சந்தேகம் இடையூறு செய்யாத சூழல் வேண்டுமெனில் அரசுடன் ஒத்துழைத்து, தன் தனி மனித உரிமை நிறுவிக்கொள்ள வேண்டியது மக்கள்.

இரு தரப்பிலும் பணி நியமனம், சம உரிமை தரும் செயலை, பேரின வாத அரசு என சொல்வது எப்படி பொருந்தும்?.அப்படிப்பட்ட அரசு முன்பு எடுத்த நிலைப்பாடு போல், தமிழரை வெளியேற்ற அல்லவா பார்க்கும்?

இன உணர்வு தனி மனித நம்பிக்கையே.அந்த அடிப்படையில் தனி நாடு, பிரிவினை வாதம் எழுவது அரசு கொள்கைக்கு, மனித நேயம் அவசியமாகும் உலக அமைதிக்கு முரணானது.

இன உணர்வினடிப்படையில், ஏற்படும் ஒவ்வாமையை தனி மனித அளவில் அவரே நிகர் செய்ய முன் வர வேண்டும்.மனித நேயம் மலர வேண்டும்.தன் திறன் பயனாக்க வேண்டும்.அல்லது அச்சூழலிலிருந்து வெளியேற வேண்டும்.ஊறி விட்ட நிலைப்பாடு மாறுவது கடினமே.ஆனால், புலம் பெயர்ந்த நாடுகளில் தரும் தனி மனித திறனை தன் நாட்டுக்கு தந்தாலென்ன என்ற எண்ணம் மேலோங்க வேண்டும்.அலைகள் மாரடிப்பதில்லை.அலைகள் விடாமுயற்சியின் அடையாளம்.அலைகளின் நோக்கம் தனி மனித வாழும் உரிமையேயன்றி , தனி நாடு அல்ல.

மீண்டுமெழும் அலைகள் விடாமுயற்சியாய் கோருவதும், நல்லிணக்கம் ஏற்படுத்துவதும் தனி மனித உரிமை நிறுவுவதிலேயே நிலையாகும்.

கடல் வணிகத்தில் தனி முத்திரை பதித்திருக்கும் இலங்கை, இன்னும் உயர முடிவது தமிழர் ஒத்துழைப்பினால்.இலங்கையை உயர்த்துவதே இலங்கை மக்களின் கடமை.போர் , போராட்டம், கலவரம், ஒத்துழையாமை, பிணக்கு இவை இனி நிரந்தரமாக முடியாது.

கடல் வணிகம் , தமிழர் என்ற நிலையில் கடற்படையாகும் தனித்திறன், அரசுடன் ஒத்துழைக்கும் நிலையில், நாட்டை உயர்த்தும் பயனாகும்.

இலங்கையின் இயற்கை வளம் அபூர்வமானது.இன உணர்வு தேக்கம்.பிராந்திய ரீதியான பாதுகாப்பு அணுகுமுறை, உலக வளம் காப்பதாய், உயர்த்துவதாய் மாறும் நிலையில், இலங்கை இந்தியாவுடன் நில வழிப்பாதையில் இணைக்கப்படுவது ஒருங்கிணைந்த இந்தியா உருவாவது, சர்வ தேச நாடுகள், ஐ.னா.அமைப்பின் கீழ் அரசு முறையில் இனையும் சாத்தியம் தரும்.
thanx - vikatan



 பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி அமைவது விஷப்பரீட்சை - வைரமுத்து பேட்டி
diSki - part 1 - http://www.adrasaka.com/2012/11/blog-post_15.html



நான் ஓர் எழுத்து வியாபாரி - வைரமுத்து பேட்டி @ விகடன்

தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?'' - வைரமுத்து சாட்டையடி பேட்டி

http://www.adrasaka.com/2012/12/blog-post_9476.html

part 2  http://www.adrasaka.com/2012/11/blog-post_2188.html


என்னை யார் தாக்கினாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கனும் - வைரமுத்து நக்கல் பேட்டி

 

http://www.adrasaka.com/2012/12/blog-post_13.html

 

 

4

தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?'' - வைரமுத்து சாட்டையடி பேட்டி

http://www.adrasaka.com/2012/12/blog-post_9476.html

 

 

விகடன் விமர்சனக் குழு - நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நீர்ப்பறவை

ன்ன ஆச்சு?  படத்துக்குப் போனோம்... ஒரு டூயட் கூட இல்லை... ஹீரோயின் கிட்டத்தட்ட இல்லை... ஹீரோதான் வில்லன். நாலு பிட் வசனத்தைத்தான் படம் முழுக்கத் திரும்பத் திரும்பப் பேசுறாங்க. ஆனா, படம் முழுக்கக் குலுங்கிக் குலுங்கிச் சிரிச்சுட்டே இருந்தோமே... இது எப்படி?'' - 'நடுவுல கொஞ்சம்  பக்கத்த காணோம்’ படம் பார்த்து வெளியே வந்து நீண்ட நேரத்துக்குப் பிறகும் நமது 'மெடுலா ஆப்லங்கேட்டா’வில் அலைமோதிய சிந்தனை இதுதான். பாஸ்... பட்டையைக் கிளப்பிட்டீங்க.



நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடும்போது விஜய் சேதுபதிக்குத் தலையில் அடிபட்டு, கடந்த ஒரு வருட நினைவுகள் மறந்துவிடுகின்றன. அந்த மறதிப் பட்டியலில் அடுத்த இரண்டே நாட்களில் மணம் முடிக்க இருக்கும் காதலியும் இருந்தால்... நண்பர்களின் பி.பி. எப்படி எகிறும்? அதைச் சிந்தாமல் சிதறாமல் நமக்கும் அப்படியே கடத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பாலாஜி தரணீதரன். 'ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ்’ ஐடியாவில் இத்தனை ஜோக்கும் த்ரில்லும் புதைத்து அசர அடித்திருக்கிறது 'என்.கே.பி.கே.’ கூட்டணி!



'மறதி’ நாயகனாக விஜய் சேதுபதி. 'என்னாச்சி?’, 'ப்பா... பேய் மாதிரி இருக்காடா!’, 'யாருக்குடா கல்யாணம்?’, 'நீ சொன்னா இந்த பில்டிங் மாடில இருந்துகூடக் குதிப்பேன்டா!’ என அதே வசனம், அதே ரியாக்ஷன்தான் படம் முழுக்க. ஆனால், சின்னச் சின்ன சேட்டைகள் மூலம் கலக்குகிறார் விஜய்.



விஜய் சேதுபதியின் நண்பர்களாக அறிமுகமாகி இருக்கும் ராஜ்குமார், விக்னேஷ், பகவதி பெருமாள் ஆகிய மூவரும் அட்டகாசம்.


'காதல்ங்கிறது ஆழ்மனசுல அடிச்ச ஆணி மாதிரி. மெடுலா ஆப்லங்கேட்டால அடிபட்டாலும் மறக்காது!’ என்று அள்ளிவிட்டு பக்ஸ் வாங்கும் பல்பு, 'அவன்தான் மாப்பிள்ளை பேரை மறந்துடுறான்ல. இந்தத் தடவை பக்ஸ் பேரைச் சொல்லு!’ என்று கோத்து விடும் சரஸ்... நண்பர்களின் ஒவ்வொரு ஸ்டாப் ப்ளாக்குமே செம காமெடி மேளா!



தெரு கிரிக்கெட்டுக்கு ஐ.பி.எல். பாணி ஷாட்கள், நண்பர்களின் குளோசப் டென்ஷன் என நிலவரத்தின் கலவரத்தைப் பார்வையாளர்களுக்கு அப்படியே கடத்துகிறது பிரேம்குமாரின் ஒளிப்பதிவு. (நிஜத்தில் இவரேதான் அந்த மெமரி லாஸ் ஹீரோ!)


படம் முழுக்க ரிப்பீட் அடிக்கும் வசனங்களுக்கு, சோகம், டென்ஷன், நெகிழ்ச்சி, வருத்தம் என்று டோன் மாற்றியதில் டிஸ்டிங் ஷன் அடிக்கிறது சித்தார்த் விபினின் பின்னணி இசை. நிஜ சம்பவத்தில் தொடர்புஉடைய சிலரைப் படத்திலும் அப்படியே உலவவிட்டு இருப்பது... அடடே! 



முன்-பின் பாதிகளில் அலுப்புத் தட்டும் சில காட்சிகளில் பலமாகக் கத்திரி வைத்துஇருந்தால், இன்னும் தீப்பிடித்து ஓடியிருக்கும் இந்த காமெடி எக்ஸ்பிரஸ்.




'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ - படிக்க சுவாரஸ்யமான காமெடி நாவல்!



லங்கைப் பேரினவாத அரசின் கடற்படைத் துப்பாக்கிகளுக்குப் பலியாகி, வெறுமனே செய்தியாக மட்டுமே கடந்துபோன பல நூற்றுக் கணக்கான மீனவர்களில் ஒரு பறவை, இந்த 'நீர்ப்பறவை’!



 குடிநோய் என்னும் கொடுமை, சிறுபான்மை யினரின் மனத்துயர், மதநல்லிணக்கம், மீனவர் கள் வாழ்வியலில் தோய்ந்த சடங்குகள், விதிகள், 'இந்திய’ மீனவர் என்று குறிப்பிடப்படாத தமிழக மீனவர்கள் மீது ஏவிவிடப்படும் படுகொலைகள் எனப் பல மதிப்பீடுகளை ஒரே படத்தில் பேச முயன்றதற்காக இயக்குநர் சீனுராமசாமிக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்.



ஈழத்தில் இருந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்த சிறுவன் விஷ்ணு, தமிழக மீனவத் தம்பதிக்குத் தத்துப்பிள்ளை ஆகிறான். குடிநோய்க்கு அடிமையாகிப் பிச்சை கேட்டும் ஏமாற்றியும் காசு வாங்கிக் குடித்துத் திரியும் 'நீர்’ப்பறவையாக இருப்பவனை நெஞ்சுரம் கொண்ட மீனவனாக மாற்றுகிறது சுனைனாவின் காதல். ஆனால், அவன் வாழ்க்கை யின் மகிழ்ச்சி நீரோட்டத்தைச் சில தோட்டாக்களால் இலங்கைக் கடற்படை இல்லாமல் ஆக்கிவிடுகிற இனத் துயரம்தான் 'நீர்ப்பறவை’யின் சிறகுகள் உதிர்ந்த கதை.



ஓர் அசல் குடிகாரனாக மாறி சலம்பித் திரியும் கடற்புரத்து இளைஞனுக்கான முகவெட்டும் உருவமும் அட்டகாசமாகப் பொருந்துகிறது விஷ்ணுவுக்கு. சரக்கு மயக்கத்தில் சலம்புவதும் காதல் மயக்கத்தில் கிறங்குவதுமாக அசத்துகிறார். கிறிஸ்துவப் பழக்கங்களில் ஊறிப்போனவராக ஜெபிப்பது ஆகட்டும், குடிகார விஷ்ணுவைக் கண்டு 'சாத்தானே... அப்பாலே போ’ என்று விலகுவது ஆகட்டும்... எஸ்தராகவே மாறியிருக்கிறார் சுனைனா. வயதான எஸ்தராக வரும் நந்திதா தாஸ், ''விஷ்ணு இறந்ததை ஏன் அரசாங்கத்திடம் சொல்லவில்லை?'' என்று நீதிபதி கேட்கும்போது, ''சொன்னா மட்டும் என்ன பண்ணு வீங்க?'' என்று எழுப்புகிற கேள்வி, ஜீரணிக்க முடியாத நிதர்சனம்.



விஷ்ணுவின் அப்பா லூர்துசாமியாக வரும் 'பூ’ ராமு மகனைத் திருக்கைவால் கொண்டு வெளுப்பது, அதே மகன் திருந்தியதும் சமுத்திரக்கனியிடம் படகு செய்யச் சொல்லிச் சிபாரிசுக்காக நிற்பது, படகில் தன் பெயரைப் பார்த்துக் கண்ணீர்விடுவது என ஒரு பாசக்கார மீனவரின் பாத்திரத்தில் உப்பு நீராக நிறைகிறார்.




'நீங்க பெரிய கூட்டம் போட்டா, அது போராட்டம். ஆனா, நாங்க நாலு பேர் கூடினா, அதுக்குப் பேர் தீவிரவாதமா?’, 


'மீனவனுக்கு ஒரு முப்பது தொகுதி இருந்தா, அவன் குரலும் ஓங்கி ஒலிக்கும்யா’ 


என்று ஆங்காங்கே அரசியல் பேசுகிறார் சமுத்திரக்கனி. சாராயம் விற்கும் வடிவுக்கரசி, பங்குத் தந்தை அழகம்பெருமாள், 'உப்பளம்’ இமான் ஆகியோர் படத்தின் நல் மன மாந்தர்கள்.  



'மீனுக்கு சிறு மீனுக்கு’, 'பற பற பற பறவை ஒன்று’, 'தேவன் மகளே’ என்று வைரமுத்துவின் வரிகளை ஈர இசையுடன் இதயக் கரை சேர்க்கிறது ரகுநந்தனின் இசை. நெய்தல் நிலத்தை, கடலின் நிறங்களை, உயிர்களின் ரணங்களைப் பதிவு செய்திருக்கிறது பாலசுப்ரமணியெம்மின் ஒளிப் பதிவு.
படத்தின் முற்பாதியை நெடுக ஆக்கிரமிக்கும் குடிக் காட்சிகளின் சில சிறகுகளைத் தயக்கமின்றி வெட்டியிருந்தால் இன்னமும் அழகாக இருந்திருக்கும் பறவை.



இயற்கைச் சீற்றங்கள் உலகின் எல்லா மீனவர்களும் சந்திக்கும் பிரச்னை. ஆனால், இலங்கைக் கடற் படையின் தாக்குதல் நம் மீனவர்கள் மட்டுமே சந்திக்கும் பிரச்னை என்பதை அழுத்தமாகச் சொன்னதில்தான் உயரே உயரே பறக்கிறது 'நீர்ப் பறவை’!


thanx - vikatan


Krishnam Vande Jagadgurum - சினிமா விமர்சனம்

http://www.businessoftollywood.com/wp-content/uploads/2012/10/Krishnam-Vande-Jagadgurum-1.jpgநயன் தாரா தெலுங்குப்படத்துல  நடிச்சிருக்கார், சரி ஸ்ரீ ராம ராஜ்யத்துல காட்ட முடியாத பல திறமைகளை இதுலயாவது காட்டுவார்னு நினைச்சுப்போனா இனிமே தெலுங்கு குப்பை மசாலாப்படத்துக்கு வருவியா? வருவியா? என பிரம்பால் அடித்து துரத்துகிறார் , படு குப்பையான , அரதப்பழசான பாடாவதிக்கதை .

ஹீரோவோட தாத்தா எம் ஆர் ராதா, சோ  மாதிரி ஒரு நாடகக்கலைஞர்  .தன் பேரனை நடிக்க வெச்சு ஒரு நாடகம் போடுவதுதான் அவரோட கடைசி ஆசை.. ஆனா பாருங்க ஹீரோவுக்கு அதிலெல்லாம் ஆர்வம் இல்லை.நாடகத்துல எல்லாம் நடிச்சுட்டு இருந்தா சோத்துக்கு சிங்கி அடிக்கனும்கறார். சோகத்துல  தாத்தா அவுட். அவரோட கடைசி ஆசை அவரோட அஸ்தியை  துங்கபத்ரா நதிலதான் கரைக்கனுமாம். 


 ஹீரோ டூ இன் ஒன் வேலையா அஸ்தியையும் அங்கே கரைச்சு அந்த நாடகத்தையும் அரங்கேற்றம் பண்ணனும்னு முடிவு பண்றார்.அங்கே 2 கேனத்தனமான வில்லன்கள் . 1008 விஜய் , விஷால் படங்கள்ல பார்த்து சலித்த மோதல்கள் . ஹீரோவுக்கும் , வில்லனுக்கும் ஆல்ரெடி குடும்பப்பகைன்னு காட்டிக்க ஒரு கேவலமான ஃபிளாஸ்பேக்.சொல்ல மறந்துட்டனே , ஹீரோயின் மீடியாவுல கேமராவுமன் கம் ரிப்போர்ட்டர். ஆம்பளைங்களையே பார்க்காத ஆள் மாதிரி ஹீரோவைப்பார்த்ததும் பல் இளிக்குது.


ஹீரோ எப்படி அந்த கிறுக்கு ஹீரோயினை க்ரெக்ட் பண்றார்? மூளையே இல்லாத 2 வில்லன்களையும் எப்படி அதகளம் பண்றார் என்பதை படு கேவலமான திரைக்கதை மூலம் சொல்லி பாடாப்படுத்தி இருக்கார் இயக்குநர் . 


ஹீரோ ராணா. ஆள் அர்னால்டு மாதிரி ஜிம் பாடியாத்தான் இருக்கார். ஆனா அவர் முகம் பாறாங்கல்லு மாதிரி இருக்கு. ஒரு உணர்ச்சியும் வர மாட்டேங்குது. வில்லன்களைப்பார்த்து பஞ்ச் டயலாக் பேசும்போதும் , ஹீரோயினைப்பார்த்து கெக்கே பிக்கேன்னு சிரிக்கும்போதும் ஒரே மாதிரி முக பாவம் . சத்தியமா இங்கே தேற முடியாது,. ஆனா ஆந்திராவில் வருங்காலத்துல சூப்பர் ஸ்டார் ஆகிடலாம். 



ஹீரோயின் நயன் தாரா .ஐயா படத்துல கும்முன்னு கேரளா கொழாப்புட்டு மாதிரி இருந்தவர் இதுல 10 நாளா பட்டினி இருந்த பெருந்துறை ஈமுக்கோழி மாதிரி படு கேவலமா ஒல்லியா காய்ச்சல் வந்த  காயலான் கடை தட்டு முட்டுச்சாமான் மாதிரி இருக்கார். ( இந்த லட்சணத்துல ஒரு கோடி சம்பளமாம். பேராசை , ஆனா அதைக்கொடுக்கவும் ஆளுங்க இருக்காங்களே? ) 


 காமெடிக்கு பிரம்மானந்தம். ஆனா ஒரு சீன்ல கூட சிரிப்பு வர்லை. எரிச்சல் தான் வருது. அட்லீஸ்ட் காமெடி டிராக் எழுதக்கூடவா ஆள் இல்லை? வெரி பேடு .

 இசை மணிசர்மா . பின்னணி இசையில் பாஸ் மார்க். பாடல்களில் சிங்கிள் டிஜிட் மார்க் .


http://www.cafeandhra.com/webpreviews/iX96tDo21z.jpg



 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. போஸ்டர் டிசைன் சூப்பர் . மழையில் நனைந்து ஹீரோயின் சிரிப்பது போல் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருப்பது பார்ப்பவர்க்கு அது ஏதோ காதல் சப்ஜெக்ட் படம் என்றோ , கில்மாப்படம் என்றோ நினைக்க வைக்கும். தியேட்டரில் ஓப்பனிங்க் கிடைக்க நல்ல யுக்தி 



2. ஸ்டார் வேல்யூவுக்காக வெங்கடேஷை ஒரு குத்தாட்டத்தில் நடிக்க சாரி நடனமாட வைத்தது . இதுல என்ன காமெடின்னா  மகனை  விட அப்பா இளமையாத்தெரியறார். 



3. கிளாம்ருக்கு நயன் தாரா , காமெடிக்கு பிரம்மானந்தா என புக் பண்ணியது 



http://www.andhrareporter.com/images/gallery/Krishnam-Vande-Jagadgurum/Krishnam-Vande-Jagadgurum-12.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்



1. நயன் தாரா ஒரு வீடியோ கேமரா எடுத்துக்கிட்டு வில்லன் பிளேஸ்ல என்னமோ டூர் ஸ்பாட் வந்த மாதிரி அசால்ட்டா வீடியோ எடுத்துட்டு இருக்கார். அந்த தடியன்க எல்லாம் தேமேன்னு வேலை செஞ்சுட்டு இருக்காங்க. ஏன் ? 


2. காதல் வர்ற மாதிரி காட்டனும்னா ஹீரோயின் ஹீரோ கண்ணை அல்லது முகத்தைப்பார்க்கனும். ஹீரோயின் ஏன் ஹீரோ ஜிம் பாடியை ஆசையாப்பார்க்கறார்? மலையாள கொரில்லாப்படத்துல பிரமீளா ஹீரோவை ஏக்கமாப்பார்க்கற மாதிரி? அவர் ( கதைல ) முன்னே பின்னே ஆம்பளைங்களையே பார்க்காதவரா? 


3. நாடக்க்காட்சி ஒண்ணு கூட உருப்படியா வர்லை.. அண்ணனுக்குத்தான் நடிப்பு வர்லைங்கறது நல்லா தெரியுதுல்ல? அதுக்கு தக்க படி திரைக்கதையையோ, ஹீரோவோட கேரக்டரையோ மாற்றி இருக்கலாமே? 


4. படத்தோட பின் பாதி அதாவது இடைவேளைக்குப்பிறகு தட்டுத்தடுமாறுது. எப்படி கதையை கொண்டு போறதுன்னு தெரியாம தள்ளாடுது திரைக்கதை 



5. பாடல் காட்சிகள் சம்பந்தமில்லாத பிட்டு  அதாவது சீன் இல்லாத பிட்டா வருது . முடியல 



6. இந்த பாடி கெமிஸ்ட்ரி பாடி கெமிஸ்ட்ரின்னு சொல்வாங்களே அது மருந்துக்குக்கூட இல்லை 


7. க்ளைமாக்ஸ்ல ஹீரோ வில்லனை கொல்ல வர்றார்னு தெரிஞ்சும் வில்லன் ஏன் தேமேன்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கார்? ஓட வேண்டியதுதானே? 



http://www.breezemasti.com/gallery/data/media/51/nayanthara-hot-pics-in-krishnam-vande-jagadgurum-movie-1.jpg

மேக்கப் போட்ட ஈமு இதுதான் மாமு


 மனம் கவர்ந்த வசனங்கள்  ( மோசமானவங்கள்ல நாங்க முக்கியமானவங்க)


1. ஹீரோ - இன்னைக்கு நைட் நீ ஃபிரீயா? 


 ஹீரோயின் - இடியட்


 வாட்? ஃபிரீயா இருந்தா வெளில போலாம்னு கேட்டேன் 

 ( இந்த கேவலமான மொக்கைக்கு ஹீரோயின் கெக்கேபிக்கேன்னு 3 நிமிஷம் இளிக்குது )



2.  மீடியான்னா சர்க்கஸ்னும், ரிப்போர்ட்டர்னா கோமாளின்னும் நினைச்சுட்டியா? 



 சி.பி கமெண்ட் -  எனக்கு என்ன காமெடின்னா இவ்வளவு கேவலமான குப்பையை ஆங்கில வலைத்தளங்கள் 13 , ஆங்கில இதழ்கள் 3 , தெலுங்குப்பத்திரிக்கைகள்  6 எல்லாம் மனசாட்சியே இல்லாம ஆஹா , ஓஹோ , செம படம்  அப்டினு பாராட்டி இருக்கறதுதான் . கவர் கை மாறுச்சா? அல்லது அவங்க டேஸ்ட்டே அவ்ளவ் தானா? அப்டினு தெரியல. இந்தபப்ட்த்தை போன வாரம் வெள்ளிக்கிழமை  ரிலீஸ் அன்னைக்கு  நைட்  ஈரோடு அண்ணா வில் பார்த்தேன் , சனிக்கிழமை காலைல எடுத்துட்டாங்க. வெற்றிகரமா 4 காட்சிகள் ஓடி இருக்கு.. கி கி கி ;-))


டைட்டிலுக்கான விளக்கம் - ரொம்ப முக்கியம் , ஹீரோ நடிக்கும் படு கன்றாவியான அந்த நாடகத்தின் டைட்டில் தான் படம் டைட்டில் 



http://1.bp.blogspot.com/-Hd6vdM5NWAw/TjqAOUHqGRI/AAAAAAAABYA/jYLO42s66og/s1600/Hot-Actress-Nayanthara03.jpg
ஐயா  ஸ்டில் - எப்படி இருந்த நான் ....

குமுதம் இதழில் நிகழ்ந்த இலக்கியத்திருட்டு - அம்பலப்படுத்தினார் டாக்டர்

தமிழில் மட்டும் அல்ல அனைத்து மொழிகளிலும் சுடுதல் பிராசஸ் அப்பப்ப ஆங்காங்கே நடந்துட்டுதான் இருக்கு.குங்குமம் இதழில் அய்யம்பேட்டை வி விஜயலட்சுமி என்பவர் ( பெண் பெயரில் ஒரு ஃபேக் ஐ டி ) ஆனந்த விகடன்  இதழில் வந்த கவிதையை அப்படியே மகேஷ்-விஜய்  செய்து ஐ மீன் ஜெராக்ஸ் செய்து  மாட்டினார்.புகழ் பெற்ற இதழில் வந்த பிரபலமான படைப்பை திருடும்போது அவங்க என்ன தான் நினைப்பாங்கன்னு தெரியல . யாரும் கவனிக்க மாட்டாங்கன்னா? அல்லது மறந்துருவாங்கன்னா? 

ஏதாவது பிற மொழிப்படைப்பை மொழி பெயர்த்து பட்டி டிங்கரிங்க் பண்ணி அண்ணன் மிஷ்கின் மாதிரியோ, ஜெயம் ராஜா மாதிரியோ ஹோம் ஒர்க் பண்ணி இருந்திருக்கலாம். 


 அடுத்து தமிழ் நாடெங்கும் பிரபலமான திருச்சி அரவக்குறிச்சிப்பட்டி எம் அசோக் ராஜா  1980 களில் வந்த ஜோக்ஸ்களை 1995 டூ 2000 வரை ஜெராக்ஸ் எடுத்து பல பத்திரிக்கைகளில் மாட்டினார் . ஆனந்த விகடன் இதழில் இருந்து அவருக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டதாகத்தகவல்.



இப்போது மாட்டி இருப்பவர் போளூர் சி ரகுபதி . இவர் குமுதம் , குங்குமம் இதழ்களில் பல ஒரு பக்க  சிறுகதைகளை எழுதி இருக்கிறார். பல வருடங்களாகவே இவர் பெயரை அடிக்கடி புக்ஸில் பார்த்திருக்கிறேன்.


பாண்டிச்சேரியில் கல்லூரி லெக்சரராகப்பணி ஆற்றும் புதுவை சந்திரகிரி என்பவரின் சிறுகதை தினமணிக்கதிர் இதழில்  வெளீயானதை ஒரு வருடம் கழித்து குமுதம் இதழில் ரகுபதி பிரசுரமாக்கி இருக்கிறார். 



ட்விட்டர் நண்பர் டாக்டர்



சிறுகதை கதிர் 16-31 ஜனவரி  94-ல் புதுவை சந்திரஹரி எழுதிய 
இந்த கதை
Views 102
419 days ago
சிறுகதை கதிர் 16-31 ஜனவரி 94-ல் புதுவை சந்திரஹரி எழுதிய இந்த கதை






 இன்று வெளியான தீபாவளி மலர் குமுதத்தில்
 போளூர் சி.ரகுபதி நூறு சதம்
 காப்பியடித்து அதே கதை இங்கே:
Views 116
419 days ago
 வெளியான தீபாவளி மலர் குமுதத்தில் போளூர் சி.ரகுபதி நூறு சதம் காப்பியடித்து அதே கதை இங்கே:

நாஞ்சில் சம்பத் பல்டி - மக்கள் கருத்து

சென்னை: ம.தி.மு.க.,வின் பிரசார பீரங்கியாக இருந்து வந்த பிரபல நாஞ்சில் சம்பத் இன்று காலையில் முதல்வர் ஜெ.,வை சந்தித்து அ.தி.மு.க.,வில் தன்னை இணைத்து கொண்டார். இவர் தி.மு.க.,பக்கம் சாய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அ.தி.மு.க.,வில் இன்று சேர்ந்தார். இந்த செய்தி ம.தி.மு.க., தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

மனக்கசப்பில் இருந்தார்:




ம.தி.மு.க.,வில் வைகோவுக்கு இணையாக பெரும் திரளாக நாஞ்சில் சம்பத் பேச்சை கேட்க கூட்டம் சேரும். கட்சியில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக கட்சி பொதுச்செயலர் வைகோவுடன் மனக்கசப்பில் இருந்து வந்த சம்பத் கட்சிப்பணியில் இருந்து விலகி இருந்தார். பிரசாரத்திற்கு எங்குமே செல்லவில்லை.


இந்நிலையில் இவர் அ.தி.மு.க., பொதுசெயலரை நேரில் சந்தித்து தன்னை அ.தி.மு.க.,வில் இணைத்து கொண்டார். இவரது விலகல் ம.தி.மு.க.,வுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.


அ.தி.மு.க., வில் உயர்ந்த பதவி :


இன்று காலையில் அ.தி.மு.க.,வில் இணைந்ததும் சம்பத்துக்கு இந்த கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாநில அரசின் சாதனை விளக்க கூட்டங்களில் பங்கேற்க நாஞ்சில் சம்பத் தனது பிரசார பயணத்தை விரைவில் துவங்குவார் என கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.


1.  - Kovilpatti,இந்தியா
05-டிச-201211:35:52 IST Report Abuse
Mariappan Krishnasamy சம்பத் ஐ பொறுத்த வரை இது அவருக்கு மாபெரும் இழப்பு. ஏனென்றால் இனி அவர் வைகோ அவர்களிடம் பயின்ற தன்மானம், சுய கௌரவம், கொள்கை பிடிப்பு....போன்ற அனைத்தையும் இழக்க வேண்டிவரும். இப்பவே முதுகு வளைய ஆரம்பிச்சிருச்சு.ஆம்... வைகோ ஒரு தொண்டரை இழந்து விட்டார் ... பாவம் திரு.சம்பத் அவர்கள் தன் சுயமரியாதை இழந்து விட்டார்.. பல நாஞ்சில்களை உருவாக்குபவர் வைகோ. இதற்கெல்லாம் கவலை கொள்ள போவதில்லை. 
 
 
 
 
2.  - doha,கத்தார்
05-டிச-201208:59:06 IST Report Abuse
saravanakumar அண்ணன் வைகோ அவர்களே தங்கள் பார்க்காத சோதனைகளா இந்த மனிதர் போனதால் என்ன ஆகிவிடும் எப்பவும் போல நீங்கள் செயல்படுங்கள் நிச்சயம் நீங்கள் வெல்வீர்கள் தங்களின் வெற்றி தமிழனின் வெற்றி, தமிழின் வெற்றி ( தயவுசெய்து சகுனி படம் பாருங்கள் ) விவேகமாக செயல்படுங்கள் சாதனை படைக்க தன் பலத்தை தான் நம்பவேண்டும் நீங்கள் சாதிப்பீர்கள் 
 
 
 
 
3.  - nashville,tn ,யூ.எஸ்.ஏ
05-டிச-201201:41:04 IST Report Abuse
Matt 
pillai பேச்சு ஒன்றையே மூலதனமாக வைத்து அரசியல் வாழ்க்கை நடத்தி கொண்டிருக்கும் இவர போன்றவர்கள் இப்படி தான் இருக்க முடியும் என்று தெரிகிறது. பத்தொன்பது ஆண்டுகளாக ம தி மு கவில் ஒட்டி கொண்டிருந்திகிறார். 
 
 
 
 
4.  - chennai,இந்தியா
05-டிச-201200:24:23 IST Report Abuse
Raju 
Sutham Dear fris how many of us will vote for good people.if one person doing good things we will not vote for them. we will see party e, religion,etc.but we can write lot of comments. last election all chennai people supported for saidai duraisamy. now where is he? personally he is a good person. but he cannot work individually. if any one of you or your family members in politics then you will know how good politicians are suffering to do a people basic needs. if they are hundred percent honest next election peoples will not support for him or his party will not gove seat for him. this is a fact. so no one ready to loose his own property . he has to do something for his family also. 
 
 
 
5.  தாயகம் சுரேஷ், பக்ரைனிலிருந்து, 
 
 
நாஞ்சில் சம்பத் வெளியேறியதால் இவ்வியக்கம் பாதாளத்திற்க்கு சென்று விடும் என்கிற எழுத்திலும் பேச்சிலும் எனக்கு நம்பிக்கையில்லை. அதற்கான அவசியமுமில்லை. வெற்றிடத்தை நிரப்பும் தகுதி காற்றிற்க்கு உண்டு.., காற்று தானே சுவாசம்.., ஆம் மறுமலர்ச்சி கூட்டத்தின் சுவாசமே வை.கோ என்கிற மையப்புள்ளி என்றிருக்கும் போது அந்த "வெற்றிடத்தையும்" வை.கோ அவர்கள் நிரப்பிவிடுவார் என்பதில் நம்பிக்கை உண்டு. கருணாநிதியின் ஆட்சியின் போது அதிமுக_விலிருந்து, அனிதா ராதாகிருஷ்ணன், முத்துசாமி, சின்னசாமி, செல்வகணபதி,சேகர்பாபு என்று தொடர் தொடராக பலர் ஒடினார்களே அப்போது இத்தகைய "கிண்டலான" கட்டுரையை தினமல்ர் வெளியிடவில்லையே?
 
 
 
 
 அப்படி ஒடிய கூட்டத்தினால் அதிமுக_தான் அழிந்து போய்விட்டதா என்ன? அதே போல் தான் இந்த சம்பத் ஓட்டத்தால் நாங்கள் தொய்ந்து விடவில்லை. எங்கள் தாய்(வை.கோ) உழைத்து எங்கள் வீட்டிற்க்குள்(தாயகம்) உட்கார வைத்து ஊட்டி விடும் "பழங்கஞ்சியே" எங்களுக்கு போதும் என்ற எண்ணம் உள்ள தொண்டர்கள் வை.கோ_வோடு இருக்கிறோம். ஆனால் பக்கத்து வீட்டுக்காரனின் "பிரியாணி"க்கு ஆசைப்பட்டு எஞ்சில் ஊற நாக்கை தொங்கப் போட்டு கொண்டு ஓடுபவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை. 
 
 
 
எத்தனை சுவையான உணவெனினும் தாய் ஊட்டி விடும் "பழங்கஞ்சி"க்கு உள்ள சுவையை நேர்மையான மனிதன் மறக்கவே மாட்டான். வை.கோ_வின் தொண்டர்களாகிய நாங்கள் நேர்மையான மனிதர்கள். எவர் போயினும் யாம் வை.கோ_வோடிருப்போம்........, வை.கோ மேல் நாங்கள் கொண்டிருக்கும் இந்த நம்பிக்கை மட்டுமே எங்கள் "மூலதனம்"...., மறுமலர்ச்சி பயணத்தின் எல்லை வரை வர விழையும் இயக்க விசுவாசி. 
 
 
 
6.  - Chennai,இந்தியா
04-டிச-201222:51:16 IST Report Abuse
Panchu Mani இதை சம்பத் முன்னாலே செய்திருக்க வேண்டும். அ தி மு க க்கு சம்பத் போன்றவர்கள் வேண்டும். கருணாநிதி, புரட்சி தலைவி இவர்களுக்கு அப்புறம் கருத்து குவிவது தமிழ் தாயின் தலை மகன்களில் ஒருவனான சம்பத்துக்கு மட்டும்தான். நெஞ்சில் நிறைந்த நாஞ்சிலே, கம்பன் தந்த சம்பத்தே தமிழ் தாயின் தலைமகனே வாழிய நீ பல்லாண்டு. - முகம் அறியா தம்பி 
 
 
 
 
7.
Poompattinaththaan - KaveriPoompattinam,இந்தியா
04-டிச-201222:37:39 IST Report Abuse
Poompattinaththaan போயும் போயும்.. அடச் சே.. இது ஒரு மானங்கெட்ட ஜென்மம். பழ கருப்பையா பழசாகிப்போனதுபோல் நாஞ்சில் நாவடைத்துப்போகும் காலம் விரைவில் எதிர்பார்க்கலாம். என்ன ஒரு காமெடி? இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு வந்திருக்கிறாராம். மரை கழண்டுவிட்டதுபோலும். தமிழகமே இருண்டு கிடக்கும்போது இவருக்கு மட்டும் என்கிருந்து வெளிச்சம் வந்ததோ? ( ஒருவேளை பெட்டி மாறியதைத்தான் அப்படிச்சொல்கிறாரோ ) எது எப்படியோ.. முழ்கும் கப்பலில் புகுந்திருப்பதால் மூழ்கடிக்கப்படுவதென்னவோ உறுதி. 
 
 
8. - jeddah,சவுதி அரேபியா
04-டிச-201220:48:35 IST Report Abuse
Shaikh Miyakkhan ஏன்? நமக்கு தானே தூது விட்டு இருந்தார் பின்னே எப்படி அங்கே போய் சேர்ந்தார் ? என்று ஒரு பெரியவர் முக முக்கல் முனங்கள் சத்தம்கேட்கிறது. எங்கையோ தப்பு நடந்து இருக்கிறது ? வைர விழாவில் பெயரை தான் விட்டு விட்டார்கள் என்றால் கையில் கிடைக்க இருந்த பழத்தையும் தட்டி பறித்து விட்டார்களே அவருடைய முடிவு சரியானதே . திமுக வில் வாரிசு கோஷ்டியில் சிக்கி சின்ன பின்னமாவதை விட தன்னை மதிக்கின்ற கட்சில் சேருவது என்கின்ற அவரது முடிவு சரியானதே. 
 
 
9. - Chennai,இந்தியா
04-டிச-201217:29:01 IST Report Abuse
Suresh Rajagopal நாஞ்சில் சென்றதில் ம தி மு க எதையும் இழந்துவிடவில்லை. வைகோ இவர்மீது தி மு க ஆட்சில் போடப்பட்ட வழக்குகாக வைகோ இவருக்காக நீதிமன்றத்தில் வாதாடினார், வீடு, கார் என கட்சி தொண்டர் காசில் இவருக்கு கொடுக்கப்பட்டது. எந்த தொண்டனுக்கும் தலைவன் செய்யாததை வைகோ செய்தார். நன்றி மறந்துவிட்டார். இவர் சென்றதால் ம தி மு க விற்கு எந்த இழப்பும் இல்லை. இவரை போல் இன்னும் பல பேச்சாளர் உள்ளனர். நாட்டின் நலனை விரும்புவர்கள் வைகோ வின் உறுதியுடன். இப்பொழுது தான் மனிதர் வளைந்து இருக்கிறார். ஏன்டா சேர்ந்தோம் என்று எவர் நினைப்பர், ஏன்டா சேர்ந்தார் என்று ஜெயா நினைப்பர் இன்னும் சில மாதகலில். இது ம தி மு க விற்கு நன்மை. 
 
 
 
10.
saravanan tamil - chennai,இந்தியா
04-டிச-201215:09:15 IST Report Abuse
saravanan tamil சம்பத் அவர்கள் மதிமுக விலிருந்து விலகியது பெரும் தவறு, அதிமுக வில் இணைந்தது அதைவிட மாபெரும் தவறு. மதிமுக வை பொறுத்த வரை இது இழப்பு அல்ல. ஆனால் சம்பத் ஐ பொறுத்த வரை இது அவருக்கு மாபெரும் இழப்பு. ஏனென்றால் இனி அவர் வைகோ அவர்களிடம் பயின்ற தன்மானம், சுய கௌரவம், கொள்கை பிடிப்பு....போன்ற அனைத்தையும் இழக்க வேண்டிவரும். மாநில அரசின் சாதனைகளை விளக்கி பிரசாரம் செய்வார் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதிலிருந்தே மறைமுகமாக தெரிகிறது, அவருக்கு அங்கு எந்த வேலையும் இருக்காது என்று. சாதனை என்று ஏதாவது இருந்தால் தானே சொல்வதற்கு. தேவை எனில் ஜெயா டிவி நியூஸ் சேனல் கு நியூஸ் ரீடர் ஆகலாம். 
 
 
நன்றி - தினமலர்

காதலன் பரதேசி போல் இருந்தால் கவலைப்படேல்


Photo: எதற்காக இவ்வாழ்க்கையென

கேள்வியெழும்போதெல்லாம்

உனைக்காட்டி 

எனைக்கூட்டி வருகிறது

இந்நேசம்....





# நேசமினிது
1.நம்ம பொண்ணு எடுத்தோம் , கவுத்தோம்னு பேசுது 



விசாரி, லவ்வர் பேரு கவுதமாக்கூட இருக்கலாம் 



-----------------------


2. மனிதன் ல ரஜினிக்கு ஜோடியா நடிச்ச ரூபினி கமலுக்கு இப்போ ஜோடியா நடிச்சா விஸ்வரூபினி ? 




------------------------


3. ரயில்ல ,பஸ் ல ஸீட் புல் ஆனா ஸ்டேன்டிங்ல வரலாம் விமானத்துல மட்டும் ஏன் அது அனுமதி இல்லை? # கிறுக் சிந்தனை 




--------------------------


 4. முதல் மரியாதையில் எஸ் ஜே சூர்யா - அந்த நிலா வைத்தான் நான் (முதன் முதலா ) கையில பிடிச்சேன்.என் BF க்காக ( BESTFRIEND) 




------------------


5. லேடி டாக்டர் அழகா ஆப்பிள் மாதிரி இருந்தா நீ ஆப்பிளே சாப்பிடாதே! ( டெய்லி என் ஆப்பிள் கீப் அவே த டாக்டர் ) 




--------------------




Photo: வான்மழை பெற்ற 
முத்துச்சிப்பியின் ஒரு துளி போல்
உனக்குள் தொலைவேன்
ஒரு நாள்...

# நேசமினிது...


6. பாலா மெஸ்மரிஸம் செய்து விட்டார் : -சிலிர்த்த வேதிகா!:# சரி , அப்புறம்? 



---------------



7. மனைவி கோபமாக தயிர் மத்துடன் தாக்க வந்தால் செஸ் ப்ளேயர் போல் தடுப்பாட்டமாக அவர் இடையில் கிச்சு கிச்சு மூட்டவும் # கி கி கி 




------------------


8. திருமணவாழ்க்கை சுபிட்சமாக இருக்க கணவன் தன் மனைவி எது சொன்னாலும் ஆமோதித்தோ மவுனம் காத்தோ இருந்தா போதும் 




-------------------


9. வீம்புக்காக வாதிடும்போது விவாதத்தை தவிர்த்தல் இரு தரப்புக்கும் நல்லது ;-)) 



-----------------


10. மிஸ்டர் க்ளீன் அப்டினு உங்களுக்கு எப்படி பேரு வந்தது? ஆஃபீஸ்ல கறை படியாத கையா?



 ம்ஹூம் வீட்ல விளக்குமாறு பிடிச்ச கை



-------------------



Photo: என்னை மறைத்துக்கொண்ட
நாளொன்றில் தான்
வந்து விழுந்தது நேசத்தின் நிழல்



11.  தமிழகத்தில் நக்சலைட்ஸ்,மாவோயிஸ்டுகள் இல்லை-ஜெ# நக்ச”லைட்ஸ்” ஒழிக்கத்தான் கரண்ட் கட் பண்ணீங்களா? மேடம் அடடே!



--------------------


12. சத்ரியனாய் இரு... சாணக்யனாய் இரு... வீரனாய் இரு உனக்கு திருமணம் ஆகும் வரை


-----------------



13. கடவுளே!கருவூலம் ( மூலஸ்தானம் )எல்லாசன்னதிலயும் ஏன் இருட்டா இருக்கு?



 பக்தா! மின்வெட்டால் தமிழர்கள் கஷ்டப்படுவதை உலகத்துக்கு உணர்த்த


--------------------

14. இனி நான் காட்டப் போவது புதிய ஆட்டம் -ராமதாசு # ஆமா இவர் பெரிய காஜல் அகர்வால்




-------------------------


15. உங்க பட பட்ஜெட் 60 கோடியா? எப்டி?


 லாரி லாரியா ஆடியன்ஸ் கூட்டிட்டு வர வேணாம்? 



---------------



Photo: யாருக்கும் தெரியாமல்
வளர்த்து வைத்த ஆசைதான்
உன்னை கண்ட நாளில் 
கால்முளைத்து
காதலானது

16. பஸ்ஸில் ஒரு மிஸ்ஸிடம் - உங்களைப்பார்த்ததும் காதலில் விழுந்துட்டேன் .



 டேய் கஸ்மாலம், அதுக்கு ஏண்டா மேல வந்து விழறே? தள்ளி நில்டா பேமானி


---------------------


17. புருஷன் - பொண்டாட்டி 2 பேரும் சேர்ந்து நீயா? நானா? பார்க்கலாம், தப்பில்லை. ஆனா  அவங்களுக்குள்ள நீயா? நானா?  பார்க்கக்கூடாது




------------------



18. என்னடி? உன் லவ்வர் பரதேசி மாதிரி இருக்கான்.



 பொறுத்திருந்து பார்டி, என்ன ஓட்டம் ஓடப்போறான்னு



--------------------




19. நைட் டைம்ல பொண்டாட்டி “ என்னங்க” அப்டின்னு இழுத்தா ஆபத்து, நீங்க நைசா தூங்கிட்ட மாதிரி நடிச்சுட்டா எந்த செலவும் இருக்காது ;-)



-----------------------


20. ஹீரோ பேரு டைட் டைகர் , ஹீரோயின் ஒரு லூசு ஃபிகர் , படத்தோட பேரு என் கவிதை என் உரிமை




------------------------





21. அன்னிய முதலீட்டுக்கு ஆதரவு இல்லை- ஆனால் அரசுக்கு ஆதரவு- கருணாநிதி # அதாவது மனைவி பகை, மச்சினி உறவு? விளங்கிடுச்சு தலைவா!



-------------------


22. மிஸ்.டெய்லி 365 காதல் கவிதை எழுதறீங்க?


 யார் அந்தப்பையன் ? ச்சே ச்சே எல்லாம் டுபாக்கூர் கற்பனை டைம் பாஸ்க்கு




--------------------


23. சனத் ஜெயசூரியா ரகசியமாக 3-வது திருமணம் # விரைவில் சிக்சர் அடிக்க வாழ்த்துகள்




-----------------------


24. அரசு பஸ்கண்டக்டர்கள் சிலர் ஒரு ட்ரிப்க்கு இப்படி பிச்சை எடுத்து ரூ 160 சராசரி சைடு வருமானம் பார்த்துடறாங்க



--------------------


25. டியூட்டிக்கு வரும்போதே பெட்ரோல் பங்க்கில் சில்லரை மாற்றி வருவதை விட ஒரு டவுன் பஸ் கண்டக்டருக்கு வேறு என்ன வேலை?



----------------------
 
2 ரூபாய் சில்லறை தராமல் பிச்சைக்காரத்தனமாய் 60 வயது பெண்ணிடம்  பிச்சை எடுத்த கண்டக்டர்.சென்னிமலை டூ ஈரோடு ரூட் 11்

26. 2 ரூபாய் சில்லறை தராமல் பிச்சைக்காரத்தனமாய் 60 வயது பெண்ணிடம் பிச்சை எடுத்த கண்டக்டர்.சென்னிமலை டூ ஈரோடு ரூட் 1





-------------------


27.  குழந்தைகள் நலன் கருதியும் வெளியில் சொன்னால் கேவலம் என்பதாலும் மனைவிகளின் அடக்குவார்த்தனம் கணவர்களால் பொறுத்துக்கொள்ளப்படுகிறது



-----------------------


28. பால்தாக்கரே பற்றி பேஸ்புக்கில்விமர்சித்த பெண்ணை கைது செய்த் எஸ்.பி. சஸ்பெண்ட்- ்# ஊ(ழ)ழ் (ல்) வினை உறுத்து வந்து ஊட்டும்




-----------------------


29. திருமணத்துக்குப்பின்னும் நம் பெற்றோரை நல்ல முறையில் பராமரிக்கத்துணை புரிந்தால் அவரே நல்ல துணைவி.



------------------------


30. கார்த்திகை மகாதீபம் இன்று .இதை முன்னிட்டு அய்யங்"கார்" பிகர்களை மட்டும் சைட் அடிக்க முடிவெடுத்தால் நீயும் உருப்படாமல் போகும் தமிழனே ;-



----------------------------


31. சுயமரியாதை திருமணவிழாவை சென்னையில் நடத்தினார் வீரமணி-# சுய மரியாதை vs திருமணம் முரண்..




----------------


Photo