Saturday, November 24, 2012

கோக்கோகோலா பற்றி சாருநிவேதிதா கேரள முதல்வர் அச்சுதானந்தன் அவர்களுக்கு, எழுதிய கடிதம்


*
 அன்புக்குரிய கேரள முதல்வர் அச்சுதானந்தன் அவர்களுக்கு,


 கேரளம் சுவீகரித்துக்கொண்டிருக்கும் தமிழ் சாகித்யக்காரனான சாரு நிவேதிதா எழுதுகிறேன். மிகவும் reclusive-ஆன இயல்பு கொண்ட நான் மே இரண்டாவது வாரம் வெளிச்சிக்காலா, செங்கரா, பிளாச்சிமடா, ஆதிரப்பிள்ளி போன்ற இடங்களுக்குச் சென்று, அங்கே தங்கள் வாழ்வுரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மக்களை நேரில் சந்தித்துவிட்டு வந்தேன்.


 நான் எழுதிக்கொண்டிருக்கும் பட்டறையை விட்டு வெளியே வருவது எனக்கு அத்தனையன்றும் உவப்பானதல்ல. ஆனால், மக்களால் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள முதல் மந்திரி வேலையை ஒழுங்காகச் செய்யாமல் நீங்கள் பணக்காரத் தொழிலதிபர்களுக்கு சாமரம் வீசிக்கொண்டிருப்பதாகத் தெரிவதால், ஒரு சாகித்யக்காரனாகிய நான் என்னுடைய பட்டறையை விட்டு வெளியே வந்து நீங்கள் செய்ய வேண்டிய வேலையைச் செய்ய வேண்டியதாகியது

 அதாவது, பல மாதங்களாக சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களை நேரில் சந்தித்தேன். அவர்களின் பிரச்சினையைக் கேட்டறிந்தேன். அவர்களோடு உரையாடினேன். இப்போது அவர்களிடமிருந்து கொண்டுவந்த செய்தியை உங்களுக்கு இந்தப் பத்திரிகையின் வாயிலாகத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறேன். 




 சாலக்குடி நதி கேரளத்தின் ஐந்தாவது பெரிய நதி; மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக அடர்த்தியான வனங்களினூடே ஓடும் இந்நதியைச் சுற்றியுள்ள பகுதிகளை எண்ணிறந்த வன மிருகங்கள் தங்கள் உறைவிடமாகக் கொண்டுள்ளன; நூற்றுக்கும் மேற்பட்ட மீன் வகைகள் வசிக்கும் இந்திய நதிகளில் சாலக்குடி நதியும் ஒன்று (அப்படிப்பட்ட நதிகள் இமய மலையின் பள்ளத்தாக்குகளிலேயே உண்டு; அதற்கு அடுத்தபடியாகக் கேரளம்தான்). 

 இந்த விபரங்கள் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். அதே போல், ஏலம், காப்பி, தேயிலைத் தோட்டங்களுக்காகச் சோலையார், கரப்பாரா போன்ற நதிப்படுகைகளின் வனங்கள் 19ஆம் நூற்றாண்டிலிருந்தே அழிக்கப்பட்டுவிட்டன. பரம்பிக்குளம் சமவெளியின் பசுமைக்காடுகள் 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தேக்கு மர உற்பத்திக்காக அழிக்கப்பட்டன. ஆங்கிலேயர்கள் தொடங்கி வைத்த அந்தக் காரியத்தை இன்றும் நாம் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.


சாலக்குடி நதியிலும், பரம்பிக்குளம், சோலையார், துணக்கடவு, பெருவாரிப்பள்ளம் என்ற அதன் உபநதிகளிலும் நதிநீர் மின்சாரத்துக்காக ஏற்கனவே கட்டப்பட்ட ஆறு அணைகளால் அந்த உபநதிகள் அனைத்தும் வற்றிப் போய்விட்டன. சாலக்குடியின் புழையோரக் காடுகளில் வசிக்கும் காடர் என்ற பூர்வகுடியினம் இன்று எண்ணிக்கையில் வெறும் 1500ஆகச் சுருங்கிவிட்டது. உலகிலேயே காடர் இனத்தினர் வசிப்பது இந்தக் காடுகளில்தான். இந்திய அரசு புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது பற்றிக் கவலைப்படுகிறது.


ஆனால் ஒரு பூர்வகுடி இனம் இந்தப் பூமியில் தாங்கள் வாழ்ந்த சுவடே இல்லாமல் அழிந்து போவது பற்றி உங்களுக்கு ஏதும் அக்கறையில்லை. 144 கி.மீ. நீளமே உள்ள இந்தச் சிறிய நதியில் தொடர்ந்து அணைகளைக் கட்டிக் கொண்டிருந்த காரணத்தினாலேயே வனங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட காடர்கள் இன்று முற்றாக அழிந்து போகும் (extinct) நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். அப்படியானால் இதுவும் ஒருவகையான இனப்படுகொலை தானே?


சாலக்குடி நதியை ஒட்டியிருக்கும் 25 பஞ்சாயத்துகளிலும், 2 நகரசபைகளிலும் வாழும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்களது குடிநீர், விவசாயம் போன்றவற்றுக்காக இந்த நதியையே நம்பியிருக்கின்றனர். இவர்களைத் தவிர, இந்நதியை நம்பி வாழும் தமிழ் நாட்டு விவசாயிகளும் அநேகம் பேர் உண்டு.


இந்த நிலையில்தான் உங்கள் அரசு மின்சார உற்பத்திக்காக சாலக்குடி நதியில் ஏழாவது அணையைக் கட்ட முன்வந்துள்ளது. இதனால் என்ன ஆகும் என்றால், சாலக்குடியின் புழையோரக் காடுகளும், அக்காடுகளில் வசிக்கும் காடர், முதுவன் போன்ற பூர்வ குடிகளும், நான்கு வகையான மலமொழக்கி (தமிழில் இது இருவாட்சி என்று அழைக்கப்படுகிறது) பறவையினங்களும், புலி, யானை போன்ற விலங்குகளும், 104 வகை மீன் இனங்களும் அழிந்து போகும். காரணம், சாலக்குடி நதியும் தனது உபநதிகளைப் போலவே அழிந்து போகும். சாலக்குடி மட்டும் அல்ல; கேரளத்து நதிகள் அனைத்துமே அரபிக் கடலில் கலப்பதை நிறுத்திவிட்டன



 கேரள அரசும், அதிகார வர்க்கமும் அந்நதிகளைக் கடலில் கலக்க விடாமல் இடையிலேயே கொன்றுவிடுகின்றன. ஒரே ஒரு மானைக் கொன்றதற்கே ஒரு நடிகருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது என்றால், இப்படி நதிகளையும், நதியோர வனங்களையும், அதில் வாழும் சகல ஜீவராசிகளையும் அழித்துப் போடும் உங்களுக்கு என்ன தண்டனை



சாலக்குடியில் வாழச்சால் மற்றும் ஆதிரப்பிள்ளி நீர்வீழ்ச்சிகளின் அருகே அமர்ந்து, கடந்த பிப்ரவரி 25ஆம் தேதியிலிருந்து சத்தியாகிரகம் செய்து வருகிறார்கள் சாலக்குடி புழா ஸம்ரக்ஷண ஸமிதியினர். அவர்களை ஆதிரப்பிள்ளியில் சந்தித்து உரையாடி விட்டு, வனப்பாதையின் வழியே கீழே இறங்கி வந்து சாலக்குடியில் சாம்பவா இன மக்களின் மாநில மாநாட்டில் கலந்து கொண்டேன். அவர்களுடையது மற்றொரு சோகக் கதை. மூங்கில், நாணல் இரண்டையும் கொண்டு பாய், முறம், கூடை போன்றவற்றைமுடைந்து, அதன் மூலம் கிடைக்கும் குறைந்தபட்ச வருமானத்தைக் கொண்டு வாழ்ந்துகொண்டிருந்த அவர்களின் நிலைமை இன்று கற்பனை செய்ய இயலாதபடி அவலமாகிக் கிடக்கிறது.



வனத்தை அடிப்படையாகக் கொண்ட மற்றொரு பெரும் தொழில் தேக்கு. அதில் ஈடுபடுபவர்கள் தனவந்தர்கள். ஆனால் அதைத் தவிர்த்து மூங்கில், நாணல் போன்றவற்றை எடுத்து, அதிலிருந்து அன்றாட வாழ்வுக்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்கும் சிறு தொழிலில் ஈடுபடுபவர்களான சாம்பவா இன தலித் மக்களின் வாழ்வு இன்று கேள்விக்குறி ஆகியிருக்கிறது. காரணங்கள் பல. ஒன்று, நவீன வாழ்வில் செயற்கைப் பொருட்களின் மீதான ஆர்வம்.


உதாரணமாக, மூங்கில், நாணல் போன்றவற்றின் இடத்தை இன்று பிளாஸ்டிக் பிடித்துக் கொண்டுள்ளது. இது குறித்து சிறிய அளவில் விளம்பரம் செய்தாலே போதும், சாம்பவர்களின் வாழ்க்கை நிலை மேம்பாடு அடையும்; தமிழ்நாடு முழுவதற்குமான கூடைத் தேவையைப் பூர்த்தி செய்யவே ஒரு கேரளம் போதாது. இந்தத் துறையில் உள்ள மற்றொரு பிரச்சினை, தமிழ்நாட்டிலிருந்து கொண்டு வரப்படும் கூலிகள். பிழைப்புக்கு எந்தவித ஆதாரமும் இல்லாத இவர்களிடம் இந்தத் துறையில் இருக்கும் இடைத் தரகர்கள் முன் பணமாகக் கடன் கொடுத்து, அந்தக் கடனை அடைக்க இவர்களை மிகக் குறைந்த கூலிக்கு இந்த மூங்கில், நாணல் தொழிலில் அமர்த்துகிறார்கள். இந்தத் தமிழர்கள் மீது குற்றமில்லை. இடைத் தரகர்களே ஒழிக்கப்பட வேண்டும்.



 அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கியமான துறை இது. ஏனென்றால், 1930களில் பிரிட்டிஷ் அரசாங்கம் தனது ராணுவத்துக்கு இந்த சாம்பவர்கள் தயாரித்துக் கொடுத்த பாய்களைத்தான் கூடாரங்களாகப் பயன்படுத்திக் கொண்டது. இப்போதும் நீங்கள் இந்திய ராணுவத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி பிளாஸ்டிக், தார்ப்பாலின் போன்றவற்றுக்குப் பதிலாக பிரிட்டிஷ் ராணுவம் பயன்படுத்தியதைப் போல் இந்த மூங்கில், நாணல் பாய்களைப் பயன்படுத்தச் செய்தால் சாம்பவர் என்ற இந்த தலித் இனம் மட்டுமல்ல, கேரளத்துக்கே அது மிகப் பெரும் பயனையளிப்பதாக இருக்கும்.



சாம்பவர் மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு இரவு முழுவதும் மாறி மாறி பஸ் பிடித்து (மேலே சாலக்குடியிலிருந்து கீழே இருக்கும் பத்தனம்திட்டா மாவட்டத்துக்கு வர வேண்டும்; அதிலும் கோடைக்காலம் பாருங்கள், கூட்டம் அதிகம் . . .) செங்கரா வந்து சேர்ந்தேன். குளிப்பதற்கு மட்டும் ஒரு மணி நேர இடைவெளி கிடைத்தது. செங்கரா வந்தால் அங்கேயும் பழைய கதைதான். கடந்த பத்து மாதங்களாக செங்கராவின் ஆதிவாசிகளும், தலித் மக்களும் தாங்கள் நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த நிலத்திலிருந்து விரட்டியடிக்கப்படுவதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 'இந்த நிலமும், மலைகளும் எங்களுடையவை' என்கிறது ஹாரிஸன் கம்பெனி. குத்தகைப் பத்திரமும் அவர்களிடம் இருக்கிறது



முதலமைச்சர் அவர்களே! உங்களை நினைத்தால் எனக்கு இந்த இந்தியாவை கிழக்கிந்தியக் கம்பெனிக்காரர்களிடம் குத்தகைக்கு விட்ட குறுநில மன்னர்களின் நினைவுதான் வருகிறது. பத்து மாதங்களாக ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள் இந்த மலைப் பிரதேசத்தில் அமர்ந்து போராடிக்கொண்டிருக்கும்போது இவர்களின் கோரிக்கையைச் செவி மடுக்காமல் உங்களுக்கு வேறு என்ன வேலை? யாரோ ஒரு பணக்காரர் மும்பையில் 4000 கோடி ரூபாய்க்கு ஒரு வீடு கட்டிக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அவரைப் போன்ற பணக்காரர்களின் வீடுகளைச் சுத்தம் செய்யும் பணியாளாகப் போய் விட்டீர்களா நீங்கள்?



 4000 கோடி ரூபாய் வீட்டைச் சுத்தம் செய்ய ஒரு முதலமைச்சர் போன்ற கனவான்தான் தேவை என்று நினைத்து அந்தப் பணக்காரர்கள் உங்கள் கையில் ஒரு தங்கத்தால் ஆன விளக்குமாற்றைக் கொடுத்திருக்கலாம். 4000 கோடி வீடு என்பதால் அதற்கான பணியாள் கூலியும் உங்களுக்கு அதிகமாகவே கிடைக்கலாம்; ஆனால், 'அந்த' வேலைக்காக மக்கள் உங்களை முதல் மந்திரியாகத் தேர்ந்தெடுக்கவில்லையே?


அது சரி, ஜனங்களுக்கு வேண்டி ராஷ்ட்ரமா? அல்லது, ராஷ்ட்ரத்தினு வேண்டி ஜனங்களா? எப்போதோ ஒரு பணக்காரர் இந்த நிலத்தை ஹாரிஸன் நிறுவனத்திடம் குத்தகையாகக் கொடுத்திருக்கிறார். அந்தப் பணக்காரருக்கும் இந்தச் செங்கரா நிலத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஏனென்றால், இங்கே நூற்றாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இந்த ஆதிவாசிகள்தான். அதுவும் தவிர, ஹாரிஸன் கம்பெனியின் குத்தகை உரிமையும் 1996இலேயே முடிவடைந்துவிட்டது


 ஆனால் முன்பு ஹாரிஸன் & க்ராஸ்ஃபீல்ட் என்று இருந்த திருநாமத்தை இப்போது ஹாரிஸன் மலையாளம் என்று மாற்றிக் கொண்டு இந்த நிலத்தைக் கொள்ளையடிக்க வந்திருக்கிறது அந்தக் கம்பெனி. நூற்றாண்டுகளாக இங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் ஆதிவாசிகளிடமிருந்து இந்த நிலத்தையும், வனங்களையும், மலைகளையும் ஒரு வெளி நாட்டுக் கம்பெனி பிடுங்கிக்கொண்டு அந்த ஆதிவாசிகளை இங்கிருந்து விரட்டுவதை நியாய உணர்வுள்ள யாரும் ஒப்புக்கொள்ள முடியுமா


 ஆனால் அப்படிப்பட்ட கம்பெனிக்கு உங்களுடைய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாக இருந்து வருகிறது. அதனால்தான் நான் செங்கரா ஆதிவாசிகளிடம் உரையாற்றிய போது உங்களுடைய போராட்டம் ஒரு சுதந்திரப் போராட்டம்' என்று வர்ணித்தேன். செங்கரா ஆதிவாசிகள் புத்தரையும், அய்யன் காளியையும், அம்பேத்கரையும் கடவுளாக வழிபட்டு, அந்த பலத்தில்தான் இப்படி 10 மாதங்களாக ஒரே இடத்தில் அமர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். எங்களை இந்தக் காடுகளிலிருந்து விரட்டினால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என்று சொல்லி ரப்பர் மரங்களின் மீது ஏறி நின்றுகொண்டதும், தங்களை எரியூட்டிக் கொள்வோம் என்று சொல்லி மண்ணெண்ணெயும் மெழுகுவர்த்தியுமாக ஆயிரக்கணக்கான பேர் முன் வந்து போராடியதும் உங்களுக்குத் தெரியாதா?


 4000 கோடிக்கு வீடு கட்டும் பணக்காரர்களின் புரோக்கராகிவிட்ட நீங்கள் உங்களுக்குக் கிடைக்கும் கொஞ்சம் ஓய்வு நேரத்தில் இங்கே செங்கராவுக்கு வந்து இந்த ஆதிவாசிகளின் உரிமைக் குரலைக் கேட்க முடியாதா? அப்படிச் செய்வதை விட்டுவிட்டு, உங்களுடைய போலீஸை விட்டு இந்த ஆதிவாசிகளின் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்துபவர்களைத் தீவிரவாதிகள் என்று கைது செய்கிறீர்கள் . . . உங்களுடைய வங்காளத் தோழர்கள் நந்தி கிராமத்தில் செய்ததையே நீங்கள் கேரளத்தில் நடத்திக் காட்டுகிறீர்கள்.


செங்கராவிலிருந்து கிளம்பி பாலக்காடு மாவட்டம் பிளாச்சிமடைக்கு வந்து சேர்ந்தேன். அங்கே பார்த்தால் கொக்கோ கோலா கம்பெனி. கோலா தயாரிப்பதற்காக அந்தக் கம்பெனி அங்கேயுள்ள நிலத்தடி நீர் முழுவதையும் உறிஞ்சியெடுத்துவிட்டதால் சுற்றுப்புறக் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்குக் குடிநீர் கிடைக்கவில்லை. அது மட்டுமல்லாமல், கோலா தயாரிப்பினால் வெளியேறும் ரசாயனக் கழிவினால் (sludge) அந்தப் பகுதி நிலமே விஷமாகிறது. ஏனென்றால், கோலா தயாரிப்பின் போது வெளியேற்றப்படும் கழிவில் காட்மியம் (Cadmium), க்ரோமியம், பாஸ்பரஸ், ஸிங்க், அலுமினியம் என்ற ரசாயனக் கலவைகள் உள்ளன என்று Greenpeace நிறுவனத்தின் ஆராய்ச்சி கூறுகிறது


 இது பற்றி பி.பி.சி. போன்ற செய்தி நிறுவனங்களிலும் செய்தி வந்து கேரளத்தின் 'புகழ்' பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த ரசாயனக் கலவை நிலத்துக்கு உரம் என்று பொய் கூறித் திரிகிறது கொக்கோ கோலா நிறுவனம். நீங்களோ எதிர்க்கட்சியாக இருக்கும் போது கோலாவை எதிர்க்கிறீர்கள். ஆட்சிக்கு வந்தால் கோலாவை ஆதரிக்கிறீர்கள். இதில் அடங்கியிருக்கும் மர்மம் என்ன என்று மக்களிடம் கொஞ்சம் விளக்குவீர்களா?



கடந்த ஆறு ஆண்டுகளாக பிளாச்சிமடை மக்கள் கொக்கோ கோலா நிறுவனத்தின் எதிரே பந்தல் போட்டு அமர்ந்து தொடர் உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பகுதி மக்கள் அனைவரும் தமிழர்கள். அவர்களிடம் உங்கள் முதலமைச்சர் யார் என்று கேட்டேன். தெரியவில்லை. அவ்வளவு அப்பாவி மக்கள். கூலித் தொழிலாளிகள். மிக வறிய நிலையில் வாழ்பவர்கள். ஆனால் கோலாவினால் தங்கள் நிலம் விஷமாகிவிட்டது என்பதையும், கோலாவினால் தங்களுக்குக் குடிப்பதற்குக்கூடத் தண்ணீர் இல்லாமல் போய்விட்டது என்பதையும் புரிந்து வைத்திருக்கிறார்கள். யாரும் போய் அவர்களுக்கு இதைச் சொல்லிக் கொடுக்கவில்லை.


 கோலா கம்பெனியால் அவர்களின் நிலம் விஷமானதையும், குடிநீர் பறி போனதையும் யாரும் போய்ச் சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்ன? அது அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் வாழ்வாதாரப் பிரச்சினை. ஒரு பெண்மணி என்னிடம் சொன்னார்: "பல மாதங்களாக, பல ஆண்டுகளாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்; நகரங்களிலிருந்து வரும் உங்களைப் போன்றவர்கள் எங்களுக்குப் புடவையும் ஜாக்கெட்டும் கொண்டுவந்து கொடுங்கள்; சுனாமி வந்தபோது அப்படிக் கொடுத்தீர்களாமே? அது போல . . ." புரிகிறதா முதலமைச்சர் அவர்களே; இந்த மக்கள் எவ்வளவு கொடுமையான நிலையில் இந்தப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று?


மேதா பட்கர் வந்து இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துவிட்டுச் சென்றிருக்கிறார். இப்போது தமிழ் நாட்டிலிருந்து நான். கேரள எழுத்தாளர்கள் அரசாங்க விருது வாங்குவது எப்படி என்பதை யோசிப்பதிலும், தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதிலும் ரொம்ப பிஸியாக இருக்கிறார்கள் போலிருக்கிறது. அவர்களை விட்டுவிடுவோம் . . . 


பிளாச்சிமடையிலிருந்து கிளம்பி கொல்லம் மாவட்டம் வெளிச்சிக்காலா வந்தேன். அங்கேயும் அதே பிரச்சினை. அந்த மண்ணில் கிடைக்கும் ரசாயனத்துக்காக சுரங்கம் தோண்டி அந்த மக்களுக்கு இப்போது குடிநீர் பறிபோய்விட்டது. சற்றே வசதியான நிலையில் வாழும் அந்த முஸ்லீம் மக்கள் இப்போது ரோட்டுக்கு வந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் போராட்டம் 10.5.2005இலிருந்து தொடங்கி இன்று வரை நடந்துகொண்டிருக்கிறது.


 என்னுடன் முத்தங்கா போராளியான சி.கே. ஜானுவும் பேசினார். நானும் ஜானுவும் என்ன பேசினோம் என்று உங்களுடைய போலீஸார் இந்நேரம் உங்களுக்குத் தெரிவித்து இருப்பார்கள். அங்கே நான் ஒரே ஒரு விஷயத்தைத்தான் சொன்னேன். கடவுளின் தேசம் என்று உலகம் பூராவிலும் உள்ள மக்கள் ப்ரஸீலைச் சொல்லவில்லை. கேரளத்தைத்தான் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட கேரளத்தை, இந்தக் கடவுளின் தேசத்தை சைத்தான்களின் தேசமாக மாற்றப் பார்க்கிறார் கேரள முதலமைச்சர் என்று என்னுடைய பேச்சில் குறிப்பிட்டேன்.


கேயாஸ் தியரி என்பது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? புகழ் பெற்ற ஜுராஸிக் பார்க் படம்கூட அந்தத் தியரியின் அடிப்படையில் எடுக்கப்பட்டது தான். அந்தத் தியரியின்படி ஆப்பிரிக்கக் காடு ஒன்றில் இருக்கும் வண்ணத்துப்பூச்சி தன் றெக்கையை அளவுக்கு அதிகமாகப் படபடத்தால் கேரளத்துக் கடலின் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும். அப்படி அதிகமாகும் போது அந்தப் பேரலைகளுக்கு அச்சுதானந்தன் யார், சாரு நிவேதிதா யார் என்று வித்தியாசம் தெரியாது. எனவே நிலத்தையும், நீரையும், காற்றையும், கடலையும் மாசு படுத்தாதீர்கள். விழித்துக் கொள்ளுங்கள் இப்போதாவது . .

 .
அன்புடன்,

சாரு நிவேதிதா


எதிர்காலத்தை மாற்ற விரும்பவில்லை. இந்த உலகின் கடந்த காலமும் நமக்குச் சொந்தமில்லை. நாம் இங்கிருப்பதை அரசாங்கம் விரும்பவில்லை. நமது தொழிலைத் தொடர அதிக லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. கால எந்திரம் மிக நுணுக்கமாக கையாள வேண்டிய விஷயமாகும். நமக்குத் தெரியாமலே ஒரு விலங்கை, ஒரு பறவையை, ஒரு மீனை . . . ஏன் ஒரு மலரை நாம் கொன்றுவிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் வளர்ந்து வரும் ஓர் உயிரினத்தின் வம்சாவளியை அழித்து விடுவதற்கான வாய்ப்பும் உள்ளது
'எனக்குப் புரியவில்லை' என்றான் எக்கல்ஸ். 





 'இதோ பார், தவறுதலாக ஒரு எலியைக் கொன்று விடுகிறோம் என்று வைத்துக்கொள். அப்படியென்றால் அந்த ஒரு எலியின் எதிர்கால சந்ததிகள் அனைத்தையும் நாம் அழித்துவிட்டதாகத்தானே அர்த்தம்.

'ஆமாம்.


'அந்த ஒரு எலியின் எதிர்கால சந்ததியினரின் எதிர்கால சந்ததியினர் அனைவரும் அழிந்து போவர். உன்னுடைய ஒரு தவறால் முதலில் ஒரு எலி, பின்னர் ஒரு டஜன், பிறகு ஆயிரம், ஒரு மில்லியன், ஒரு பில்லியன் எலிகள் அழியும் வாய்ப்பு உள்ளது.


'எலிகள் செத்தால் என்ன?' என்றான் எக்கல்ஸ்.



  'எலிகள் செத்தால் என்னவா? எலிகளை நம்பியிருக்கும் நரிகளின் கதி என்ன? 10 எலிகள் இறந்தால் அதை நம்பியிருக்கும் ஒரு நரியின் பிழைப்பு என்னாவது? 10 நரிகள் இறந்தால் ஒரு சிங்கம் பசியால் வாடாதா? ஒரு சிங்கத்தை நம்பியிருக்கும் புழுப் பூச்சிகள், கழுகுகள், கோடிக்கணக்கான உயிரினங்கள் அழிந்து போகாதா? 59 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு வேட்டைக்குப் புறப்படும் குகை மனிதனை பற்றி நினைத்துப் பார். உன்னுடைய சிறு தவறால் இந்தப் பகுதியில் எந்த விலங்கும் இருக்காது.


 குகை மனிதனுக்கு உணவு கிடைக்காது. அவன் இறந்தால் என்னவென்று அலட்சியமாக இருந்துவிட முடியாது. அவனிடமிருந்துதான் எதிர்கால தேசமே தோன்றவுள்ளது. அவனிடமிருந்து 10 பிள்ளைகள் தோன்றுவர். அவர்களிடமிருந்து 100 பிள்ளைகள் தோன்றுவர். ஒரு சமுதாயமே உருவாகும். இந்த ஒரு மனிதனை அழிப்பது ஓர் இனத்தையே, ஒரு வரலாற்றையே அழிப்பதற்கு சமம். இவனைக் கொல்வது ஆதாமின் பேரப் பிள்ளைகளில் ஒருவனைக் கொல்வதற்கு சமமாகும்.


 ஒரு எலியைக் கொல்வதன் மூலம் இந்த பூமியையும் அதன் எதிர்காலத்தையும் அசைத்துப் பார்க்கும் ஒரு பூகம்பத்தையே நீ தொடங்கி வைக்கிறாய். ஒரு குகைமனிதனின் இறப்பின் மூலம் கோடிக்கணக்கான அவனது சந்ததிகள் கருவிலே கொலகொல்லப்படுகிறார்கள். ரோமப் பேரரசு தோன்றாமல் போகலாம். ஐரோப்பா ஒரு இருண்ட காடாகவே நிலைத்திருக்கும். ஆசியக் கண்டம் மட்டுமே நாகரீகமடைந்திருக்கும். ஒரு எலியின் மீது நீ வைக்கும் சிறு காலடி, பிரமிடுகளை நசுக்கிவிடும். ஒரு எலியின் மீது நீ வைக்கும் காலடி கிராண்ட் கேன்ய்ன் போல் கால ஓட்டத்தில் அழியாத மாபெரும் வடுவாக நிலைத்து விடும். குயின் எலிசபெத் எப்போதும் பிறந்திருக்க மாட்டார். டெலாவர் நதியை வாஷிங்டன் கடந்திருக்காது; அமெரிக்கா தோன்றியிருக்காது. எனவே எச்சரிக்கையாயிரு. பாதையோடு ஒட்டி நில; விலகி விடாதே.








ரே பிராட்பரியின் 'எ சவுண்ட் ஆப் தண்டர்' சிறுகதையின் ஒரு பகுதி


நன்றி - உயிரோசை

வலுவிழக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம் - உள்ளடி வேலைகள் - குற்றம் நடந்தது என்ன?

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிஏஜி வினோத் ராய் கூறிய தகவல்கள் முழுக்க முழுக்க அவரது சொந்த கற்பனை என்ற விவரம் மெல்ல மெல்ல வெளியே வந்து கொண்டுள்ளது.


இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே வினோத் ராயின் செயல்பாடுகள் கேள்விக்குறியாகவே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட்டிருந்தால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி கிடைத்திருக்கும் என்றார் வினோத் ராய். ஆனால், சமீபத்தில் இதை ஏலம் விட்டபோது வாங்கக் கூட ஆள் இல்லாமல் வெறும் ரூ. 9,407 கோடிக்கே அது விற்பனையானது. இதிலிருந்தே ஸ்பெக்ட்ரத்தின் விலை தொடர்பாக வினோத் ராய் கூறிய 'மனக் கணக்கு' எந்த அளவுக்கு ஏற்றிச் சொல்லப்பட்ட ஒன்று என்பது நிரூபணமாகிவிட்டது.


இந் நிலையில் வினோத் ராய் மற்றும் அவரது துணை அதிகாரியான ரேகா குப்தாவின் அடுத்த தகிடுதித்தம் வெளியே வந்துள்ளது.


2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை குறித்து உண்மையிலேயே ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க வேண்டியது, மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகத்தில் பணியாற்றிய டைரக்டர் ஜெனராலான ஆர்.பி.சிங் தான். இவர் தான் தொலைத் தொடர்பு மற்றும் தபால் துறைக்கான சிஏஜியின் தணிக்கை அதிகாரி ஆவார்.


ஆனால், வினோத் ராய் அண்ட் கோ ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக தாங்களே ஒரு அறிக்கையை தயார் செய்து அதில் ஆர்.பி.சிங்கிடம் கட்டாயப்படுத்தி வாங்கியுள்ளது. இந்த நஷ்டக் கணக்கு சரியானதல்ல என்று ஆர்.பி.சிங் கூறியும் கூட அவரது உயர் அதிகாரியான வினோத் ராய் அதில் கையெழுத்து போட வைத்துள்ளார். இதை ஆர்.பி. சிங் இப்போது வெளியே கூறியுள்ளார்.


முரளி மனோகர் ஜோஷி...:


2ஜி விவகாரம் குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு 2008ம் ஆண்டு முதலே விசாரித்து வந்தது. இந் நிலையில் இதன் தலைவராக பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி 2010ம் ஆண்டு பதவியேற்றார்.



அதே நேரத்தில் மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகமான சிஏஜியின் அலுவலகமும் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை குறித்து ஆய்வு செய்து வந்தது. அப்போது, சிஏஜி அலுவலகத்தை முரளி மனோகர் ஜோஷி பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சிஏஜி தயாரித்து வந்த ரகசிய 2ஜி அறிக்கை குறித்து விவாதித்துள்ளார். இதை சிஏஜி அலுவலகத்தின் தலைமையக டைரக்டர் ஜெனரல் ஆர்.பி.சின்ஹா தனது அலுவலகக் குறிப்புகளில் எழுதியுள்ளார்.


இதன் பின்னர் தான் சிஏஜியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. அதில், ஸ்பெக்ட்ரம் விற்பனையால் மத்திய அரசுக்கு ரூ. 57,666 கோடி முதல் ரூ. 1.76 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டிருந்தது.


சிஏஜி ஒரு விஷயத்தை ஆய்வு செய்து வந்தபோது முரளி மனோகர் ஜோஷி ஏன் அந்த விவரங்களைப் பெறவும், அது குறித்து அதிகாரிகளுடன் விவாதிக்கவும் ஆர்வம் காட்டினார் என்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது

.
முரளி மனோகர் ஜோஷியின் வீட்டுக்கே போய் உதவிய சிஏஜி அதிகாரிகள்:



மேலும் முரளி மனோகர் ஜோஷி இந்த விவகாரத்தில் அறிக்கை தயாரிக்க உதவுவதற்காக சிஏஜி அலுவலக அதிகாரிகள் அவரது வீட்டுக்கே நேரில் சென்று, அதுவும் விடுமுறை நாட்களில், உதவி செய்துள்ள விவரத்தையும் ஆர்.பி.சிங் இப்போது வெளியே கூறியுள்ளார்.



கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற ஆர்.பி.சிங் 2ஜி விவகாரத்தில் சிஏஜி வினோத் ராயின் செயல்பாடுகள் குறித்து பத்திரிக்கைகளுக்கு அளித்துள்ள பேட்டியில்,


கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் தேதி, குட் பிரைடே விடுமுறை தினத்தில், சிஏஜி அலுவலக அதிகாரிகள் முரளி மனோகர் ஜோஷியின் வீட்டுக்குச் சென்றனர். பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரையும் குற்றம் சாட்டி ஜோஷி தயாரித்த 2ஜி அறிக்கையை தயாரிக்க உதவினர்.



ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்று தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அலுவலக அறிக்கை என்னுடையதே அல்ல. தனக்கு இப்படித்தான் (ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் நஷ்டம் என்று கூறி) அறிக்கை வேண்டும் என்று எனது அதிகாரியான சிஏஜி (வினோத் ராய்) எழுத்துப்பூர்வமாகவே உத்தரவு போட்டுவிட்டால் நான் என்ன செய்ய முடியும்?.



நான் செய்த கணக்குத் தணிக்கையின்படி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் எந்த நஷ்டமும் இல்லை என்றே எழுதியிருந்தேன். அதே நேரத்தில் கூடுதல் ஸ்பெக்ட்ரம் வைத்திருக்கும் நிறுவனங்களிடம் இருந்து இன்னும் ரூ. 37,000 கோடியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று தான் எழுதியிருந்தேன். இதைக் கூட நஷ்டமாகக் கூற முடியாது. காரணத்தைச் சொல்லி, அதை நிச்சயம் தொலைத் தொடர்பு நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க முடியும்.


இது நடந்தது 2010ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி. இதையடுத்து எனது தலைமையிலான குழுவை சிஏஜி தலைமையகத்தில் உள்ள துணை சிஏஜியான ரேகா குப்தாவின் கீழ் இணைத்துவிட்டனர். மேலும் மத்திய நிதித்துறையின் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்யும் பணியையும் என்னிடம் தரவில்லை.



2010ம் ஆண்டு ஜூலை மாதம் நான் கொடுத்த அறிக்கையை முழுவதுமாகவே திருத்தி (ரூ. 1.76 லட்சம் கோடி வரை நஷ்டம் என்று எழுதி) அதை மத்திய நிதித்துறைக்கும், தொலைத் தொடர்புத்துறைக்கும் அனுப்புமாறு உத்தரவு போட்டனர். இந்த உத்தரவு மேலதிகாரிகளிடம் இருந்து வந்ததால் என்னால் ஏதும் செய்ய முடியவில்லை.


மேலும் எந்தவித ஆடிட் வழிகாட்டுதல்களும் இல்லாமல் இந்த அறிக்கையை தயார் செய்திருந்தனர். எதை வைத்து இந்த நஷ்டக் கணக்குக்கு வந்தீர்கள், அந்த வழிகாட்டு விதிமுறைகள் என்ன என்று கேட்டு ரேகா குப்தாவுக்கு பலமுறை கடிதங்கள் அனுப்பியும் பதிலே வரவில்லை.


அதே போல இந்த நஷ்டக் கணக்கை நான் ஏற்கவில்லை என்பதையும், சரியான வழிகாட்டுதல்கள்- ஆவணங்கள் இல்லாமல் இந்த ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் காட்டுப்படுவதையும் எதிர்த்து வினோத் ராய்க்கும் ரேகா குப்தாவுக்கும் அலுவலகரீதியாக பலமுறை எனது எதிர்ப்பைக் காட்டினேன்.



ஸ்பெக்ட்ரத்துக்கு இது தான் விலை என்று டிராய் அமைப்போ, மத்திய அரசோ எந்த கட்டணத்தையும் நிர்ணயித்திருக்கவில்லை. இதனால் எதை வைத்து ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்று சொல்ல முடியும். நம்மிடம் இதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லையே என்று சுட்டிக் காட்டினேன். ஆனால், சிஏஜி தலைமையகம் (வினோத் ராய்) சொன்னதை வைத்து இது தான் நஷ்டம் (ரூ. 1.76 லட்சம் கோடி) என்று எழுதி அனுப்ப வேண்டிய நிலைக்கு எனது அலுவலகம் தள்ளப்பட்டது.


முன்னதாக ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்று எழுதி அவர்கள் அனுப்பிய ரிப்போர்ட்டில் நஷ்டக் கணக்கை நீக்கினேன். ஆனால், மீண்டும் அதையே சேர்த்து எழுதி திருப்பி அனுப்பி வைத்து கையெழுத்து போட வைத்தனர். எதை வைத்து இந்தத் தொகையை சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, ஒரு யூகம் தான் என்று பதில் தந்தனர். ஆடிட்டிங்கில் யூகங்களுக்கு எப்படி இடம் தர முடியும் என்று கேட்டதற்கு பதிலே வரவில்லை.


மேலும் 2ஜி விவகாரத்தில் சிஏஜி அலுவலகத்தில் இருந்து பல தகவல்கள் வெளியே கசிந்தபடியே இருந்தன. அதை யார் லீக் செய்தது என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.


2ஜி ஸ்பெக்ட்ரம் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள் கூட சிஏஜி அலுவலக அதிகாரிகளுடன் முரளி மனோகர் ஜோஷி தொலைபேசியில் விவாதித்தார்.


சி.பி - ஆனால் துக்ளக் கில் ; இதெல்லாம் நாடகம், கேசை திசை திருப்ப , ஒன்று மில்லாமல் ஆக்க அனைவரும் சேர்ந்து நடத்தும் நாடகம் என கட்டுரை வந்துள்ளது 


இவ்வாறு போட்டு உடைத்துள்ளார் ஆர்.பி.சிங்.


நஷ்டம் குறித்து வினோத் ராய் கூறிய தகவல்களை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் ஏற்கனவே பலமுறை ஆஜராகி ஆர்.பி.சிங் மறுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இப்போது தான் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் தலையீடுகளையும் வினோத் ராயின் 'வேலைகளையும்' வெளியே விளக்கமாகப் பேசியுள்ளார் சிங்.


இப்போது சொல்லுங்கள் ராசா குற்றவாளியா?: கருணாநிதி


சென்னை: 2ஜி ஏலம் விடப்பட்டதில் எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் கிடைக்காததில் இருந்தே, இது தொடர்பாக சிஏஜி கூறிய கணக்குத் தவறு என்பது உறுதியாவிட்டதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


மேலும் இந்த விவகாரத்தில் ஆ.ராசா குற்றவாளியா என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்கட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


''வீரமணி முழக்கியுள்ள விவேக மணி!'' என்ற தலைப்பில் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:


வேடிக்கை! விநோதம் - சரியான தமாஷ்!:


கேள்வி: சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகத்தில் நாடார்கள் பற்றிய தவறான பகுதியை நீக்க வேண்டுமென்று நீங்கள் கடிதம் எழுதிய பிறகு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறாரே?



கருணாநிதி: கடந்த மாதம் 27-10-2012 அன்றே இந்தப் பிரச்சனை பற்றி நான் முரசொலி கேள்வி-பதில் பகுதியிலே விரிவாக நாடார் சமுதாயத்தினை இழிவுபடுத்தும் வகையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒன்பதாம் வகுப்புக்கான புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டித்ததோடு, சம்பந்தப்பட்டவர்கள் இதிலே தக்க கவனம் செலுத்தி, பிழையினை நீக்குவதற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்தினேன். 


 தமிழகத்திலே உள்ள மற்றக் கட்சிகளின் சார்பிலும், இதனைக் கண்டித்து அறிக்கைகள் விடுத்தார்கள். உரியவர்களிடமிருந்து தக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியாததால், 15-11-2012 அன்று பிரதமருக்கும், மத்திய அரசின் மனித வளத் துறை அமைச்சருக்கும் நான் கடிதம் எழுதியதும்; அது பல ஏடுகளில் செய்தியாக வெளிவந்திருந்தது.



மேலும் 16-11-2012 அன்று டெல்லியில் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றபோது, நாடாளுமன்றக் கழகக் குழுத்தலைவர் தம்பி டி.ஆர். பாலு, அந்தக் கூட்டத்தில் நாடார்களின் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பிட, அப்போது அதற்கு பதிலளித்துப் பேசிய பிரதமர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியோடு தெரிவித்திருக்கிறார்.

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் அவர்களும், மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பல்லம் ராஜு அவர்களை நேரில் சந்தித்து, நாடார்கள் பிரச்சனை பற்றி கூறியவுடன், மத்திய மனிதவளத் துறை அமைச்சரும், நாடார்கள் பற்றிய அவதூறு வரிகளை நீக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார். 


இந்த நிலையில்தான் நம்முடைய தமிழக அரசு திடீரென்று விழித்துக் கொண்டு, 16-11-2012 அன்று அவசர அவசரமாக பிரதமருக்கு இந்தப்பிரச்சனை குறித்து கடிதம் எழுதி, 17ம் தேதி பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் பல்லாயிரம், பல லட்சம் ரூபாய்ச் செலவில், முதல் பக்க விளம்பரச் செய்தியாக அது இடம் பெற்றுள்ளது. நல்ல சுறுசுறுப்பு?.


ஆனால் இதற்கே மிகப்பெரிய விளம்பரங்கள்! நாடார்களுக்கு வந்த ஆபத்து ஏதோ முதல்வர் கடிதத்தால் தான் விலகியது என்பதைப்போல நன்றி தெரிவித்து- பெரிய விளம்பரங்களைக் கொடுத்திருப்பதுதான் வேடிக்கை! விநோதம் - சரியான தமாஷ்!.


அதிர்ச்சிக் கடலில் ஆளாக்கினார்கள்.. என்ன சொல்லப் போகிறார்கள்?:


கேள்வி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டினை ஏலத்தின் மூலமாக கொடுத்திருந்தால் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத் திருக்கும் என்ற தணிக்கைக் குழுவின் அறிக்கை; தவறு என்று தற்போது நடைபெற்ற ஏலத்தின் மூலமாக நிரூபணம் ஆகியுள்ளதே?



கருணாநிதி: இதைப்பற்றி மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மனீஷ் திவாரி அவர்களே விளக்கமாகச் சொல்லியிருக்கிறார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து இரண்டாண்டுகளுக்கு முன்பு தணிக்கைக் குழு அறிக்கையினை தாக்கல் செய்தது. அதில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. அந்த 1.76 லட்சம் கோடி எங்கே? தற்போது ஏலத்தில் கிடைத்த தொகை, சுமார் 9,000 கோடி ரூபாய் தான். எனவே தணிக்கை அதிகாரி தனது மதிப்பீடு குறித்து சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இதுவாகும் என்று அவர் கூறியிருக்கிறார்.



இதை வைத்து இரண்டாண்டுகளாக அரசியல் நடத்திய பா.ஜ.கவும், இதர எதிர்க்கட்சிகளும் மன்னிப்பு கேட்க வேண்டிய நேரமும் இதுவாகும் என்று மனீஷ் திவாரி சொல்லியிருக்கிறார். மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி அவர்கள், 2ஜி ஸ்பெக்ட்ரத்தை முன்பே ஏலத்தில் விட்டிருந்தால், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்குமென தணிக்கை அதிகாரி அளித்த அறிக்கை தவறானது என்று மத்திய அரசு, பிரதமர் அலுவலகம், மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் ஆகியோர் ஏற்கனவே கூறி வந்ததைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.



தற்போது இந்த அலைக்கற்றைகளை ஏலம் விட்டதில் சுமார் 9,000 கோடி ரூபாய் அளவுக்கே வருவாய் கிடைத்துள்ளதன் மூலம், தவறான அறிக்கை அளித்த தலைமைத் தணிக்கை அதிகாரிதான் விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.


எப்படியோ தணிக்கைத் துறை அறிக்கையில் ஒரு பெரும் தொகையைக் குறிப்பிட்டு, அதை ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ப; அந்தத் தொகை இழப்பு என்பதற்குப் பதிலாக, அவ்வளவு தொகையையும் ஏதோ கொள்ளை அடித்துக் கொண்டுபோய் விட்டதைப்போல குற்றஞ்சாட்டி, அதை ஏடுகளும் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து நாட்டையே அதிர்ச்சிக் கடலில் ஆளாக்கினார்கள். அவர்கள் எல்லாம் இதற்குப் பிறகு என்ன சொல்லப் போகிறார்கள்?.


தமிழர் தலைவர், இளவல் வீரமணி:


தமிழர் தலைவர், இளவல் வீரமணி அவர்கள் "விடுதலை"யில் "1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அலைக்கற்றை ஊழல் என்று ஊரெல்லாம் கூச்சலிட்டவர்களே, ஏலம் விடப்பட்டதால் இப்போது கிடைத்த லாபம் என்ன? ஆ. ராசா குற்றவாளியா? நடுநிலையாளர்கள் சிந்திக்கட்டும்" என்று அருமையானதொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். பலரை சில நாள் ஏமாற்றலாம்; சிலரை பல நாள் ஏமாற்றலாம்; ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாதல்லவா?



அதிமுகவினரை போலீசில் நுழைக்க ஜெ. முயற்சி:


கேள்வி: தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கென 50,000 பேரைத் தேர்ந்தெடுக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதைபற்றி தாங்கள் ஏற்கனவே எழுதியிருந்தீர்கள். அதிமுகவைச் சேர்ந்தவர்களை காவல் துறையிலே நுழைப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிதான் அது என்று பரவலாகப் பேசப்படுகிறதே?


கருணாநிதி: அதைத்தான் நான் முன்பே எழுதியிருந்தேன். அங்கன்வாடிக்கும், சத்துணவுக்கும் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் எந்த அளவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் பரிந்துரைகளைத் தந்தார்கள் என்பதையும், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அதன் காரணமாக அந்தப் பணியாளர்களைத் தேர்ந்தெடுத்ததில் எந்த அளவுக்குச் சிரமப்பட்டார்கள் என்பதையும், பரிந்துரை செய்தவர்கள் மீது அதிமுக அரசு எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காததையும் தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். ஏடுகளிலேயே அந்தச் செய்திகள் ஏற்கனவே விரிவாக வந்தன.



அதே வழியில் சிறப்புக் காவல் இளைஞர் படை என்ற பெயரில் மேலும் கட்சிக்காரர்களை பணியிலே சேர்ப்பதற்கான முயற்சியிலே அதிமுக அரசு ஈடுபட்டுள்ளது. சிறப்புக் காவல் இளைஞர் படையினரை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்களும், சென்னையில் போலீஸ் கமிஷனரும் தேர்ந்தெடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 



முதலமைச்சர் 110வது விதியின் கீழ் இதற்கான அறிக்கையைப் படித்த போதே, சிறப்புக் காவல் இளைஞர் படையில் ஓராண்டு காலம் பணி நிறைவேற்றினால், காவல்துறையில் காலியாகும் காவலர் பணியிடங்களில் ஈர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று சொல்லியிருப்பதில் இருந்தே, காவல் துறையினரை முறைப்படித் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக தங்கள் கட்சியினரை முதலில் சிறப்புக் காவல் இளைஞர் படையிலே நுழைத்து, ஓராண்டிற்குப் பிறகு அவர்களைக் காவல் துறையிலே சேருவதற்கு வழிவகுத்து விட்டால், காவல்துறையிலே கட்சிக்காரர்களைச் சேர்த்து விடலாம் என்ற எண்ணத்தோடு செய்யப்படும் இந்தக் காரியத்தை கட்சிப் பாகுபாடு பாராமல் அனைத்துக் கட்சியினரும் எதிர்க்க முன் வரவேண்டும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.



நன்றி - தட்ஸ் தமிழ்

கலைஞர் உருக்கம் ,வீரபாண்டி ஆறுமுகம் மறைவு

'வீரபாண்டி ஆறுமுகம் என்ற தூணை இழந்துவிட்டோம்'': கண்ணீர் விட்டு அழுத கருணாநிதி



சென்னை: உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமான முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது கருணாநிதி கண்ணீர் விட்டு அழுதார்.


 former minister veerapandi arumugam dead
வீரபாண்டி ஆறுமுகம் மறைவுச் செய்தி கேட்டதும் கருணாநிதி உடனடியாக போரூர் மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த வீரபாண்டி ஆறுமுகம் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் வீரபாண்டி ஆறுமுகம் உடல் மீது மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், திமுக மிகப் பெரிய தூணை இழந்து விட்டது. ஒரு போர்ப் படை தளபதியை திமுக இழந்துள்ளது. அவருடன் பழகிய நாட்களை மறக்க முடியாது. என்னில் பாதி அவர். மாறன் மறைந்த அதே நாளில் தம்பி வீரபாண்டி ஆறுமுகம் மறைந்து எங்களை மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டார் என்றார்.


3 நாள் துக்கம்.. கொடிகள் அரை கம்பத்தில்:


அவரது மரணத்தையடுத்து 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க திமுக முடிவு செய்துள்ளது. இந்த 3 நாட்களும் கட்சிக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும், கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்யுமாறும் திமுக தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேலம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கழக உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான வீரபாண்டி ஆறுமுகம் இன்று காலை மறைந்தார்.


அவரது மறைவினையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு கழக அமைப்புகள் அனைத்தும் கழகக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறும், கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.


ராமதாஸ் இரங்கல்:


வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி, திமுகவின் மூன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தியை கேட்டு வேதனை அடைந்தேன்.
வீரபாண்டியாரின் மறைவு திமுகவுக்கு பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் திமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


தா.பாண்டியன் இரங்கல்:


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
திமுக சேலம் மாவட்டச் செயலாளராகவும், மாநிலத் தலைமைக்குழுவின் முக்கிய பொறுப்புக்களிலும், திமுக அமைச்சரவையிலும் தொடர்ந்து அமைச்சராகப் பொறுப்பேற்றுப் பணிபுரிந்து வந்த மூத்த அரசியல்வாதி வீரபாண்டி ஆறுமுகம் மறைவுச் செய்தி கேட்டு, ஆழ்ந்த கவலையைத் தெரிவிப்பதோடு, அவரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தார்க்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.



திருமாவளவன்...


விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
வீரபாண்டியார் 6 முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும் சட்டமேலவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுத் திறம்பட மக்கள் பணியாற்றியவர். பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்து சாதனைகள் பல புரிந்தவர். அவரை இழந்து வாடும் திராவிட இயக்கத்துக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

 
 

வீரபாண்டியார் மரணம்: சேலத்தில் அறிவிக்கப்படாத 'பந்த்'; வன்முறை-3 பஸ்கள் உடைப்பு: திமுக தொண்டர் சாவு

 
 
 
சேலம்: மூத்த திமுக தலைவர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவையடுத்து சேலத்தில் வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள், பெட்ரோல் பங்குகள், மருத்துவமனைகள் கூட மூடப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கும்ம் விடுமுறை விடப்பட்டது.




சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் வன்முறையிலும் ஈடுபட்டனர். 3 அரசுப் பஸ்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கண்ணாடிகள் உடைந்தன. சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை, சூரமங்கலம் ஆகிய இடங்களில் 3 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.




சேலம் மாநகரத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள், பெட்ரோல் பங்குகள், மருத்துவமனைகள் கூட மூடப்பட்டுவிட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. இதனால் சேலம் நகரமே வெறிச்சோடிப் போனது.




இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக திருப்பூர் எஸ்.பி, நாமக்கல் எஸ்.பி ஆகியோரும் சேலம் வந்துள்ளனர். இவர்களுடன் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான போலீஸார் சேலத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.


இன்று மாலை 6 மணி முதல் சேலம் மாவட்டத்தில் கிராமப் புறங்களுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்படுகின்றன. மேலும் சேலத்தில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கள் அனைத்தும் இன்று மாலை 6 மணி முதல் நாலைந்து பேருந்துகளாக சேர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படவுள்ளன.




வீரபாண்டியார் மறைவை கேள்விப்பட்ட திமுக தொண்டர் மரணம்:




இதற்கிடையே வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவைக் கேள்விப்பட்ட சேலத்தைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் மாரடைப்பால் இறந்தார்.




எடப்பாடி அருகே உள்ள கவுண்டம்பட்டியைச் சேர்ந்த காமராஜ் (45) டீக்கடை வைத்து நடத்தி வந்தார். தீவிர திமுககாரரான இவர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தீவிர ஆதரவாளர்.


வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவைக் கேள்விப்பட்டதும் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மயங்கி விழுந்த அவர் அங்கேயே உயிரிழந்தார்.


  நன்றி - தட்ஸ் தமிழ்

Friday, November 23, 2012

Life of Pi (2012) - சினிமா விமர்சனம்

http://7tab.in/wp-content/gallery/life-of-pi-wallpapers/life-of-pi-wallpapers-1.jpgபடத்தை எடுக்க முடிவு பண்ணும்போதே ஆஸ்கார் அவார்டை அள்ளிடனும்னு  ஒரு முடிவோடதான் இயக்குநர் களம் இறங்கி இருக்கார். அவார்டு வாங்குவது உறுதி. ஆனா  அனைத்துத்தரப்பு மக்கள் ரசிக்கும் ஜனரஞ்சகப்படமா  உருவாக்கும் வாய்ப்பு இருந்தும் எப்படி அதை ஹேர் இழையில் தவற விட்டார்னு பார்ப்போம் . 


ஹீரோவோட குடும்பம் பாண்டிச்சேரில இருக்கு.அப்பா கிட்டத்தட்ட  ஜூ மாதிரி விலங்குகள் கொண்ட ஒரு கண்காட்சி ஹால் ( உயிரியல் பூங்கா )  நடத்தறவர்.அந்த இடம் அரசாங்கத்துக்கு சொந்தமானது, காலி பண்ணச்சொல்றாங்க. கனடா நாட்டில் வேலை கிடைச்சிருப்பதால் அங்கே போய் செட்டில் ஆகிடலாம்னு விலங்குகளுடன் கப்பல் பயணம் பண்றாங்க... 



வழில கடல்ல புயல். ஹீரோவோட பெற்றோர் அவுட். தப்பிப்பிழைச்சது  ஒரு வரிக்குதிரை   , உர்ராங்குட்டான், புலி , எலி , ஹீரோ. இவங்க ஒரு படகுல பயணம் பண்றாங்க. அந்த சாகசப்பயணம் தான்  கதை.. 


சும்மா சொல்லக்கூடாது. துணிச்சலான கதை . ஒரே மாதிரி மசாலாப்படங்களை பார்த்து சலித்த கண்களுக்கு வித்தியாசம்.கேமராமேனுக்கு பூப்போட்டு கும்பிடனும். அவ்வளவு செய் நேர்த்தி , உழைப்பு


ஹீரோ சுராஜ் ஷர்மா  அந்த கதாப்பாத்திரமாவே மாறிட்டார். தமிழில் கமல் போல் அந்த கேரக்டருக்காக இரு விதமான தோற்றம், நிறத்தில் , உடல் மொழியில் அருமை 


ஹீரோயின் ஸ்ரவந்தி பரத நாடியக்கலைஞராக வருகிறார். மாநிறம் என்றாலும் கொள்ளை அழகு நந்திதா தாஸ் தங்கை மாதிரி , மனதை சுண்டும் தோற்றம் .. 


 தபு ஹீரோவுக்கு அம்மாவா வர்றார்.. அதிக காட்சிகள் இல்லை. வந்தவரை ஓக்கே . 


 யன்  மார்டெல் என்கிற நாவலாசியரின் புகழ்பெற்ற நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம்.இயக்குனர் ஆங் லீ..இவர்   HULK  படத்தின் இயக்குநர் .

http://www.moviedeskback.com/wp-content/uploads/2012/07/Life_of_Pi_movie_wallpapers-1920x1080.png-004.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 



1.  புயல் வந்து கப்பலை புரட்டிப்போடும் இடத்தில் ஒளிப்பதிவு , பின்னணி இசை செம 




2. புலி மற்றும் ஹீரோ இருவரும் தனிமைப்படுத்தப்பட்ட பின் தன்னந்தனிக்கடலில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் காட்சிகள் நேஷனல் ஜியாக்ரஃபி பார்த்தது போல் அத்தனை தத்ரூபம்.


3. இரண்டாவது புயல் தாக்கும்போது முதல் புயலுக்கும் இதற்கும் நல்ல வித்தியாசம் காட்டியது . அந்த காட்சியில் கிராஃபிக்ஸ் எது?  ரியல் புயல் எது? என்றே கண்டறிய முடியவில்லை 



4. கடலில்  இரவில் , நிலா வெளிச்சத்தில் திமிங்கலம் வரும் காட்சி. அந்த பிரம்மாண்டம் இன்னும் கண் முன்.. 


5. மீன்கள் பறந்து பறந்து வந்து காற்றில் படகில் விழுவதும் புலி சாப்பிடுவதும் முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் காட்சி 



6. மிதக்கும் தீவில் ஹீரோ போனதும் சுற்றிலும்  ஒரே விதமான 1000க்கணக்கான விநோத பிராணிகள் சூழ ஹீரோ அந்த ஓடையில் ஆனந்தக்குளியல் போடும் காட்சி  


7, நான் சாதா தியேட்டரில் தான் படம் பார்த்தேன், 3 டி எஃப்ஃபக்ட்ல இன்னும் கலக்கலா இருந்திருக்கும் சாத்தியம் இருக்கு 

http://www.apnatimepass.com/life-of-pi-movie-wallpaper-17.jpg

 இயக்குநர் திரைக்கதையில் சறுக்கிய இடங்கள்



1. கடல் பயணம் பண்ணும் ஆள் கடலின் உப்புக்காற்றில் கருத்துடுவாங்க. அதை படிப்படியாய் காட்டி இருக்கனும். ஹீரோ செக்கச்செவேல் என இருக்கார். க்ளைமாக்ஸ்க்கு கொஞ்சம் முன்னே அட்டக்கறுப்பா ஆகிடறார். அப்படி காட்டக்கூடாது . ஸ்டெப் பை ஸ்டெப் கறுப்பாக்கி காட்டி இருக்கனும் 



2. ஆனந்த விகடனில் கடல் கதைகள் பல எழுதிய நரசய்யா வின் கடற்பயணக்குறிபுகள்  பல இடங்களில் விரவி இருந்தும் டைட்டிலில் அவருக்கு க்ரெடிட் தரவே இல்லை 


3. நாம வீட்டில் படுத்துத்தூங்கிட்டு இருக்கும்போது லேசா மழைச்சாரல் நம்ம மேல பட்டா ஆழ்ந்த தூக்கமா இருந்தாலும் டக்னு விழிச்சுடுவோம், உள்ளுணர்வு எழுப்பி விட்டுடும். ஆனா ஹீரோவோட குடும்பம் கப்பல்ல அறையில் படுத்து தூங்கும்போது புயலில் கடல் நீர் உட்புகுந்து நீரில் மூழ்கி சாவது அவ்வளவு சாதாரணமா காட்டியது தப்பு. போராடி பின் மூழ்கி செத்திருக்கனும், ஐ மீன் அப்படி எடுத்திருக்கனும். 


4. பரத நாட்டியக்கலைஞர்கள் பயிற்சியின் போது மல்லிகைப்பூ போன்ற வாசனைப்பூக்கள் சூட அனுமதி இல்லை. தலை வலி தரும், மனதை திசை திருப்பும்  என்பதால். ஆனா பரத நாட்டிய பள்ளியில் ஹீரோயின் உட்பட ஆளாளுக்கு வித விதமா  பூச்சரம் சூடி இருக்காங்க 


5. புயல் வரும்போது பெரும்பாலான காட்சிகள் க்ளோசப் காட்சிகளே. லாங்க் ஷாட்ஸ் தான் நம்பகத்தன்மை கொடுக்கும் . த அபிஸ் படத்துலயும் சரி, டைட்டானிக்லயும் சரி லாங்க் ஷாட்ஸ் நிறைய இருந்தது


6. படகுல வரிக்குதிரை  செத்துக்கிடக்கு. பசித்த புலி அதை சாப்பிடாம  எலியை கவ்வுமா? அதாவது மசாலா ரோஸ்ட் கண் முன் இருக்கும்போது யாராவது இட்லிக்கு ஆசைப்படுவாங்களா? அனுஷ்கா , ஹன்சிகா மாதிரி கொழுக் மொழுக் ஃபிகர் பக்கத்துல இருக்கும்போது யாராவது வர லட்சுமியை தேடிப்போவாங்களா? 


7. க்ளைமாக்ஸ்ல ஹீரோ இன்னொருவர் கிட்டே  தன் கதையை சொல்லி முடிச்சுட்டு இன்சூரன்ஸ் ஆஃபீசர்ங்க நம்பாததால நான் வேற ஒரு கதை சொன்னேன்னு ஆரம்பிச்சு சொல்றது எதுக்கு? தேவை இல்லை.. அட்லீஸ்ட் 2 விதமான விருமாண்டி டைப் கண்ணோட்டக்கதைகளை சொல்லிட்டு இதில் எது உண்மை? என சஸ்பென்சாக முடிச்சிருக்கலாம். 


8. . புலி , ஹீரோ இருவர் மட்டுமே வரும் காட்சிகள் ரொம்ப நீளம். சுவராஸ்யம் போயிடுது. இதே ஹீரோயின் ஹீரோ கூட இருந்திருந்தா இன்னும் ஜாலியா திரைக்கதை இருந்திருக்கும் 


9. படம் மொத்தம் 2 மணி நேரம் ஓடுது. அந்த மிதக்கும் தீவில் ஹீரோ இருப்பது ஜஸ்ட் 8 நிமிஷம் தான் வருது. குழந்தைகளை கவரும் அந்தக்காட்சியை 20 நிமிடம் பண்ணி ஹீரோ - புலி வரும் அந்த நீண்ட காட்சியை நீளத்தை ட்ரிம் பண்ணி இருக்கலாம் 



10  ஓப்பனிங்க்ல ஹீரோ இந்து, முஸ்லீம் , கிறிஸ்டியன் 3 மதங்களையும் விரும்பினார் , பின் பற்றினார் என்பதெல்லாம் கதைக்கு தேவை இல்லாதது . அனைத்து தரப்பினைரையும் கவரும் மலின யுத்தின்னும், செயற்கைன்னு சர்வ சாதாரணமா சொல்லிடுவாங்க


11. கிராமங்களில் ஒரு சொல வடை உண்டு  சுண்டைக்கா கால் பணம் , சுமைக்கூலி முக்காப்பணம்னு . ஹீரோவின் அப்பாவுக்கு விலங்குகள் மீது பாசம் ஏதும் இல்லை, சேல்ஸ் தான் பண்ணப்போறார், அதை பாண்டிச்சேரிலயே பண்ணி இருக்கலாமே? எதுக்கு லக்கேஜ் சார்ஜ் எல்லாம் கட்டி கடல்ல  ஃபாரீன் கூட்டிட்டுப்போய் சேல்ஸ் பண்ணனும்? கட்டுபடி ஆகுமா? அதனால் அந்த இடத்தில் கண்டாவில் போய் இதே ஜூவை நடத்தறேன், அந்த விலங்குகளை என்னால் பிரிய முடியலைன்னு சீன் வெச்சிருக்கலாம்


12. ஹீரோவோட குடும்பம் என்ன ஆகறாங்கன்னு விஷுவலா காட்டவே இல்லை. படத்துக்கு ரொம்ப முக்கியமான  காட்சி ஆச்சே?


13. திமிங்கலம் ஹீரோவை கிராஸ் பண்ணி அது பாட்டுக்கு போகுது, எதுவுமே பண்ணலையே?  கிராஃபிக்ஸ் திமிங்கலமா?


14. படத்துல காதலுக்கு இடம் இல்லைன்னு முடிவு பண்ணிட்டா ஹீரோயினை காட்டி இருக்கவே தேவை இல்லை. சும்மா 8 நிமிடங்களே வரும் காட்சிக்கு எதுக்கு இவ்லவ் பில்டப்? ஆசை காட்டி மோசம் செஞ்ச மாதிரி ஆகிடுச்சே?


15. நாவலா படிக்கும்போது அப்பப்ப போர் அடிச்சா வெச்சுட்டு அப்புறம் படிக்கலாம், ஆனா படமா எடுக்கும்போது அந்த சலிப்பை மறக்கடிக்க திரைக்கதைல ஜிம்மிக்ஸ் சேத்தனும், சுவராஸ்யமான சம்பவங்கள் வேணும், சும்மா ஒரு போட் , ஒரு புலி , ஹீரொன்னு  படத்தை ஓட்டிட முடியாது


16. குடிக்க தண்ணி கொஞ்சமா தான் இருக்கு, கடல் பயணி ஃபாலோ பண்ண வேண்டிய முக்கிய விதி தொண்டை காயாம பார்த்துக்கறது , ஹீரோ அடிக்கடி  வானத்தை பார்த்து அய்யோ கடவுளே  காப்பாத்துனு காட்டுக்கத்தலா கத்தறாரே? ஏன்?


17 .  புயல் தாக்கியதும்  கப்பலில் அபாயச்சங்கு ஒலிக்குது, அபாய விளக்கு எரியுது ஆனா பதட்டமான சூழலை , மனிதர்கள் இங்கும் அங்கும் அலை பாய்வதை விஷுவலா காட்டவே இல்லை..
http://media.glamsham.com/download/wallpaper/movies/images/l/life-of-pi-wallpaper-10-s.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்




1. பொதுவா எல்லாரும் பயணம் செய்யும்போது அந்தந்த ஏரியா ஸ்டாம்ப் கலெக்‌ஷன்ல  ஈடுபடுவாங்க , ஆனா  என் மாமா நீச்சல் குளம் எங்கே பார்த்தாலும் அதில் நீந்திடுவார்


2. பாண்டிச்சேரி தெற்கு ஃபிரான்ஸ் போல இருக்கு 



3. இந்துக்களிடம் உள்ள பிரச்சனையே அவன் 1000க்கணக்கான கடவுள்களை வழி பட்டான் , வணங்குவான் என்பதே 


4. சின்னப்பசங்க வளரும்போது அவங்க கண்ணுக்கு எல்லா கடவுள்களூம் சூப்பர் ஹீரோவா  தெரிவாங்க லைக் அனுமார், விஷ்ணு 



5. கடவுள் அவரை காப்பாத்தலை , மருந்து மாத்திரை தான் காப்பாத்துச்சு 



6. கடந்த காலத்தோட இருக்கும் ஒரே இணைப்பு எங்கம்மாவுக்கு கடவுள் & கடவுள் நம்பிக்கை 


7. குற்றவாளிகள் செய்யும் குற்றத்துக்கு , பாவத்துக்கு அப்பாவியை ஏன் பலியிடனும்? அவன் கிட்டே ஏன் அன்பு செலுத்தனும்? அப்படிப்பட்ட பாவியை கடவுள் ஏன் படைக்கனும்? 



8. இந்து மதம் எனக்கு நம்பிக்கையை கொடுத்துது, கிறிஸ்துவ மதம்  கடவுளோட அன்பை அறிமுகம் செஞ்சுது 


9. மூன்று மதத்தையும் ஒருத்தன்  கத்துக்கிட்டான்னா அவன் ஒண்ணையும் உருப்படியா ஃபாலோ பண்னலைன்னு அர்த்தம் 


10. நம்பிக்கை என்ற வீட்டில் ஏகப்பட்ட அறைகள் உண்டு 


11. மிருகங்களுக்கும் ஆன்மா உண்டு, அதை நான் அதனோட கண்களில் பார்த்திருக்கேன் 


12. வெஜிட்டபிள்  ஃபுட் ஏதாவது குடு 

 பசுவோட ஈரல் தரவா? பசு வெஜ் தானே? 


13.  மனித வாழ்வில் பிரிவை விட பெரிய வலி எது தெரியுமா? ஒரு நிமிஷம் நின்னு நாம பிரியப்போறோம், போய்ட்டு வர்றேன் அப்டினு சொல்லிக்க முடியாதது தான்



14,. கொலம்பஸ் மாதிரி நாம அமெரிக்கா போகப்போறோம்

 அப்பா, ஆனா கொலம்பஸ்  இந்தியாவுக்குத்தானே வந்தார்? நாம ஏன் இந்தியாவை விட்டு போறோம் ? 

http://img.india-forums.com/wallpapers/1280x1024/236001-press-meet-of-film-life-of-pi.jpg

 சி.பி கமெண்ட் -  அழகிய ரசனை உடையவர்கள் , ஒளிப்பதிவுக்காகவே படம் பார்க்கலாம் என நினைப்பவர்கள் , ,மாறுபட்ட படம் பார்க்க நினைப்பவர்கள், சாண்டில்யனின் கடல் புறா டைப் நாவல் ரசித்தவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஆர்ட் ஃபிலிம் . ஆஸ்கார் அவார்ட் கன்ஃபர்ம் ஈரோடு வி எஸ் பி யில் படம் பார்த்தேன். ஒளிப்பதிவு  , 3டி எஃபக்ட் , கிராஃபிக்ஸ் காட்சிகள் இந்த 3 பிரிவில் ஏதாவது 2 ஆஸ்கார் அவார்டு நிச்சயம்

வீரபாண்டி ஆறுமுகம் இறந்தார், சேலம் ரண களம்

http://www.koodal.com/news/2011/july/7-27-2011-9-veerapandi-arumugams-bail-plea.jpgசென்னை: உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டிருந்த திமுக முன்னாள் அமைச்சரும் திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான வீரபாண்டி ஆறுமுகம் இன்று காலை 11 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.


சேலம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். அவர் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.



கடந்த 1937ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி சேலம் மாவட்டம் பூலாவாரியில் பிறந்தவர் வீரபாண்டி ஆறுமுகம். அவர் கடந்த 1957ம் ஆண்டு திமுகவில் சேர்ந்தார். 1958ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரை பூலாவாரி ஊராட்சி தலைவராக இருந்தார். அதன் பிறகு அவர் 1970-76ல் பஞ்சாய்தது யூனியன் தலைவராக இருந்தார். பின்னர் 1973ம் ஆண்டு முதல் 1976ம் ஆண்டு வரை சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக இருந்தார்.



1962 முதல் 2011 வரை 6 முறை எம்.எல்.ஏவாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978 முதல் 84 வரை மேல்சபை உறுப்பினராகவும் இருந்தார். 4 முறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.


சேலம் திமுக வட்டாரத்தில் பெரிய சக்தியாக இருந்த அவர் 1989ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார். பிறகு 1990-91, 96-2001, 2006-2011 ஆகிய காலகட்டகங்களில் வேளாண் அமைச்சராக இருந்தார். கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சங்ககிரியில் அதிமுக வேட்பாளர் விஜயலக்ஷ்மியிடம் தோற்றார்.


அதிமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு நில அபகரிப்பு வழக்குகளில் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. அதை நீதிமன்றம் ரத்து செய்தது. வழக்குகளில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.


அவரது மரணத்தையடுத்து 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க திமுக முடிவு செய்துள்ளது. இந்த 3 நாட்களும் கட்சி கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும், கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்யுமாறும் திமுக தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.


இதே தினத்தில் தான் திமுக மூத்த தலைவரான முரசொலி மாறனும் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



சென்னை: திமுகவின் சேலம் 'தூணாக' விளங்கிய மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் அரசியல் பயணம் சலசலப்புகளோடும் சர்ச்சைகளோடும் பயணித்த ஒன்று...


திமுகவில் பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து பணியாற்றக் கூடிய திமுக தலைவர்கள் சிலர்தான்.. அந்த வகையில் பேராசிரியர் அன்பழகன், கருணாநிதி ஆகியோருக்கு அடுத்த நிலை தலைவராக இருந்தவர் வீரபாண்டி ஆறுமுகம். 1957ம் ஆண்டு திமுகவில் உறுப்பினராக இருந்தாலும் 1958ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஏதேனும் ஒரு பதவியில் இருந்து வந்திருக்கிறார்.



http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/dmk/Aug-20-salamcm1.jpg

பறவைக்காய்ச்சல் காரணமா?

இதனிடையே வீரபாண்டி ஆறுமுகம் பறவைக்காய்ச்சல் காரணமாக மரணடைந்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 1957ம் ஆண்டு தி.மு.க.,வில் உறுப்பினரான வீரபாண்டி ஆறுமுகம், 1957 முதல் 70 வரை பூலாவரி ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 1970 ஊராட்சி ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் கடந்த 1962,67,71,89,96 மற்றும் 2006ம் ஆண்டில் சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டார். 1978 முதல் 84ம் ஆண்டு வரை சட்டமேலவை உறுப்பினராக பணியாற்றினார். கடந்த தி.மு.க., ஆட்சியில் வேளாண் துறை அமைச்சராக பணியாற்றினார்.


3 நாள் துக்கம்:

வீரபாண்டி ஆறுமுகம் மரணமடைந்ததைத் தொடர்ந்து, தி.மு.க., சார்பில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது. மேலும் கட்சிக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் 3 நாட்கள் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.






சேலத்தில் கடையடைப்பு

: வீரபாண்டி ஆறுமுகம் காலமானதையடுத்து, சேலத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.



ஸ்டாலின் இரங்கல்:

வீரபாண்டி ஆறுமுகம் மரணடைந்ததை தொடர்ந்து, தி.மு.க, பொருளாளர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வீரபாண்டி ஆறுமுகம் மரணம் தி.மு.க.,விற்கு இழப்பு என கூறியுள்ளார்.




குண்டர் சட்டம்

அதிமுகவின் தற்போதைய ஆட்சிக் காலத்தில் சிறைவாசத்தில் சிக்கிய திமுக பெருந்தலைகளில் வீரபாண்டி ஆறுமுகமும் முக்கியமானவர். இவர் மீது குண்டர் சட்டம் போட்டும் ஒரு கை பார்த்தார் முதல்வர் ஜெயலலிதா.




54 ஆண்டு கால பொதுவாழ்வு

சுமார் 54 ஆண்டுகால பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரரான வீரபாண்டி ஆறுமுகம் சேலம் மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக வைத்திருந்தவர் என்பது மிகையல்ல.. அதே நேரத்தில் சேலத்தில் அவருக்கு போட்டியாக எவரையும் வளரவிட்டதும் இல்லை. சேலத்தில் திமுக என்றால் தானும் தனது மகன்களும் மட்டுமே என்ற நிலையையும் உருவாக்கி வைத்திருந்தார்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyVyM7-uoJqmWv5JfVI2QkgZ1qyZwpFUgOfvdKL4ZCyhXPMu16pmzS5EaTZ0A2BI1uPlBl-3jvhSssCx9Q5XsZ1eUmSRoLWMQa4UpAVIFZ4uKzo6rx9t1pBO_a22VXpqKaacj1WwyTe6c/s1600/A1.jpg



இறுதிக்கால சர்ச்சைகள்

வீரபாண்டி ஆறுமுகத்தைப் பொறுத்தவரை கட்சியில் சீனியர் என்பதால் கருணாநிதியுடன் மல்லுக் கட்டக் கூடியவர். இந்த சீனியாரிட்டியை மனதில் வைத்துக் கொண்டு கருணாநிதியும் கண்டு கொள்ளாமல்தான் இருந்து வந்தார். அதேபோல் திமுகவில் கருணாநிதி கோஷ்டியில்தான் தொடர்ந்தும் இருந்து வந்தார் அவர்.



அண்ணன்' அழகிரி கோஷ்டி...

பேரறிஞர் அண்ணா தலைமை ஏற்று திமுகவில் சேர்ந்த வீரபாண்டி ஆறுமுகம் தனது கடைசிகாலத்தில் அண்ணன் 'அ' என்றழைக்கப்படும் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி கோஷ்டியில் ஐக்கியமானது ஒரு சோகம் என்றுதான் சொல்ல வேண்டும். மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை அழகிரி நேரில் சந்தித்து தம் பக்கம் சாய்த்துக் கொண்டு போனார்.



6 பேர் கொலை வழக்கு

அதிரடி அரசியல்வாதியாக பெயரெடுத்த வீரபாண்டி ஆறுமுகம் 'அடாவடி' அரசியல்வாதியாகவும் இருந்தார். கடந்த திமுக ஆட்சியில் சேலத்தில் 6 பேர் கொல்லப்பட்ட வழகில் அவரது தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் தம்பி மகன் என்பதற்காகவே பாரப்பட்டி சுரேஷை ரொம்பவே ஆதரித்தவரும் வீரபாண்டி ஆறுமுகம்தான்! இந்த 6 பேர் 




ஸ்டாலினை எதிர்த்து...

மு.க.ஸ்டாலினைத்தான் அடுத்த திமுக தலைவராக முன்னிலைப் படுத்தப்படும்போதெல்லாம், வீரபாண்டி ஆறுமுகம் போன்றவர்கள் எப்படி ஏற்பார்கள்? என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது. இந்நிலையில் மதுரையில் அழகிரி தனது படை பரிவாரங்களுடன் தனி கோஷ்டியாக செயல்பட சேலத்தில் வீரபாண்டியும் அழகிரி கோஷ்டியாகவே செயல்பட்டு வந்தார்.




நீக்கும் நிலை...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி நிர்வாகிகளை தேர்வு செய்ய மு.க.ஸ்டாலின் முனைப்பு காட்டிய போது அவருடன் மல்லுக்கட்டிய இரண்டு மாவட்டங்கள் மதுரையும் சேலமும்தான்! சேலத்தில் திமுக இளைஞரணிக்கான விண்ணப்பங்களை தமது மகன் வீரபாண்டி ராஜாதான் வாங்குவார் என்று அறிக்கை வெளியிட உச்சகட்ட கோஷ்டிப் பூசலில் கடுப்பாகிப் போன கருணாநிதி, வேறுவழியில்லாமல் கட்சிப் பத்திரிகையான முரசொலியில் எச்சரிக்கைவிட வேண்டிய நிலைக்குப் போனது.



இந்த விவகாரத்தில் திமுகவை விட்டே வீரபாண்டி ஆறுமுகம் நீக்கப்படக் கூடும் என்ற நிலையே வந்தது. தமது கடைசி காலத்தில் தான் நேசித்த தலைவர் கருணாநிதியிடம் 'சங்கடங்களையும்' எரிச்சலையும் சந்தித்தவர் என்பது மறைக்க முடியாத ஒன்று.



 http://www.tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_73952448369.jpg






 நன்றி - தினமலர் ,  தட்ஸ் தமிழ்


டிஸ்கி - ஈரோடு டூ சேலம் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாற்றுப்பாதையில் அந்த ஏரியா மக்கள் பயணிக்கவும்

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 23.11.2012 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

1.LIFE OF PI

இந்திய திரையுலக நட்சத்திரங்களை வைத்து, பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஆங் லீ இயக்கியிருக்கும் படம் 'LIFE OF PI'. படத்தின் பெரும்பாலான காட்சிகள் புதுச்சேரியில் படமாக்கப்பட்டுள்ளது.

Brokeback Mountain, Crouching Tiger Hidden Dragon உள்ளிட்ட பிரம்மாண்ட ஹாலிவுட் படங்களை இயக்கி ஆஸ்கர் விருதினை வென்றவர் ஆங் லீ.  தற்போது FOX STAR நிறுவனம் தயாரிப்பில் LIFE OF PI படத்தினை இயக்கி இருக்கிறார். Yann Martel எழுதிய LIFE OF PI என்ற நாவலை அதே பெயரில் படமாக்கி இருக்கிறார் ஆங் லீ.

இப்படத்தின் டிரைலர் மற்றும் படத்தின் சில காட்சிகள் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குனர் ஆங் லீ, படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் கலந்து கொண்டார்கள்.

அப்போது ஆங் லீ  "Yaan Martel என்ற கனடா எழுத்தாளரின் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. கதை முழுக்க புதுச்சேரியில் நடப்பது போல் அமைந்துள்ளது. அதனால் படத்தின் பெரும்பகுதி காட்சிகளை புதுச்சேரியிலேயே படமாக்கினேன். சில காட்சிகளை மூணாறில் படமாக்கியிருக்கிறேன்.

கடந்த மூன்றரை வருடங்களாக இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி வந்தேன். 3 ஆயிரம் பேர் வேலை செய்தார்கள். புதுச்சேரியில் தங்கியிருந்தபோது தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்தை பார்த்து வியந்தேன். தமிழர்கள், வெளிநாட்டவர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுக்கிறார்கள்.

இப்படத்துக்காக, தைவான் நாட்டில் பயன்படுத்தப்படாத ஒரு விமான நிலையத்தை வாடகைக்கு எடுத்து, அதில் பசிபிக் கடல் போன்ற அரங்கை அமைத்தேன். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்சில் ஒரு புலி உருவாக்கப்பட்டது. அது, கிராபிக்ஸ் புலி என்றால் நம்ப முடியாத அளவுக்கு தத்ரூபமாக படத்தில் வருகிறது.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ஒரு சிறுவனுக்காக 3 ஆயிரம் பேர்களை பார்த்து, சூரஜ் சர்மா என்ற இந்திய சிறுவனை தேர்வு செய்தேன். இவனுக்கு தாயாக தபு நடித்து இருக்கிறார். கதாநாயகனாக இர்ஃபான்கான் நடித்து இருக்கிறார்.

‘லைப் ஆப் பை' படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில் தயாராகியிருக்கிறது,'' என்றார்.

இந்நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட காட்சிகள் மற்றும் டிரைலரைப் பார்த்தவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். 2012, டைட்டானிக், அவதார் போன்ற கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த படங்களின் வசூலை LIFE OF PI முறியடிக்கும் என்று தெரிவித்தார்கள். இப்படம் நவம்பர் 23ம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.ஈரோட்டில் வி எஸ் பி யில்


Life of Pi (2012) - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2012/11/life-of-pi-2012.html

http://1.bp.blogspot.com/-1Ktaf9SOfVI/Tw6H9LP7d3I/AAAAAAAAE7k/soaPD4pdXug/s640/Best+Of+Luck+11.jpg


2.செல்லத்தம்பி' -  வண்ணத்தமிழ் பாட்டு', "சின்ன வாத்தியார்' உள்ளிட்ட படங்களில் இரட்டை வேடங்களில் நடித்தார் பிரபு. நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் இப்போது "செல்லத்தம்பி' படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இரட்டை வேடங்களில் நடிப்பது குறித்து பிரபுவிடம் பேசினால், ""நான் இரட்டை வேடம் ஏற்று நடித்த எல்லா படங்களுமே பரவலான வெற்றியை பெற்றுள்ளது. அந்த வரிசையில் இந்தப் படமும் சேரும். இதில் அப்பா - மகன் என இரட்டை வேடம் ஏற்கிறேன். ஊர்வசி, சுவாசிகா இருவரும் நடிக்கின்றனர். தந்தை - மகனின் பாசப் போராட்டத்தை மையமாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. 


விளம்பரப் படங்கள், கௌரவ வேடங்கள் என நடித்த பிரபு, நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மலையாளத்தில் பிரபு நடித்த 'பெஸ்ட் ஆப் லக்' என்ற படத்தை ‘செல்லத்தம்பி’ என்ற பெயரில் டப்பிங் செய்கிறார்கள்.. இந்தப் படத்தில் தந்தை மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் பிரபு. அப்பா பிரபுவுக்கு ஜோடியாக ஊர்வசியும், மகன் பிரபுவுக்கு ஜோடியாக சுவாசிகாவும் நடித்திருக்கின்றனர்.


http://www.metromatinee.com/movies/images/m3186/large/Best%20Of%20Luck6929.jpg




படம் முழுக்க தந்தை-மகன் போராட்டம், அண்ணன்-தம்பி பாசம் என காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். எனினும் நகைச்சுவை கலந்து சொல்லி இருப்பதால் ரசிக்கும் படி இருக்கும் என்று நம்பலாம். இந்தப் படத்தின் இயக்குனர் நிஷாந்த் கூறும் பொழுது,"பிரபுவுக்கு அறிமுகத்திலேயே பெயர் வாங்கிக் கொடுத்த ‘சின்னத் தம்பி’ படத்தைப் போலவே இந்த செல்லத்தம்பியும் இருக்கும்" என்றார்.

http://cdn3.supergoodmovies.com/FilesFive/kai-movie-hot-stills-07407ebd.jpg



3.  கை - A Kollywood movie titled Kai is being produced by Kollur Ravi under the banner Kumudha Movies. The movie starrs newbies Vijith and Joshima in the lead roles. On the other hand veteran actors like Ganja Karuppu, Vadivukkarasi, Bose Venkat, Charanraj and others are portraying the other prominent roles of the movie.

Interesting feature of the film is that the filming of the movie took place in several locations in Chennai, where no film has been shot until now. Well the unit has plans to shoot the songs in northern part of India and Kerala.


http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/sujithabanu/uploads/Kollywood/2012/Jun/22/Kai_Movie_Stills/Kai_Movie_Stillsbc009d3be35eb0f927992d5040e55a11.jpg

Veteran lyricists Snehan and Pulamaipithan have penned the lyrics while music is composed by Shan. Vinoth is the director and also penned story, screenplay and dialogues too. Sujith is the cinematographer of the movie.@ ஈரோடு ஸ்டார்

 http://www.teluguportals.com/wp-content/gallery/daruvu-wallpapers/Daruvu%20wallpapers.jpg

4.  புல்லட் ராஜா -

குரு பிரம்மா ஆர்ட்ஸ் வழங்கும் புல்லட் ராஜா



குரு பிரம்மா ஆர்ட்ஸ் தயாரிப்பில் வெளியாகும் புதிய திரைப்படம் புல்லட் ராஜர்.
இத்திரைப்படம் தெலுங்கில் வசூல் சாதனை படைத்த, விஜய் ஆண்டனி இசையில் வெளியான ரவி தேஜா - டாப்சி நடித்த 'தருவு'  தெலுங்கு படத்தின் தமிழக்கம்.


இப்படத்தில் கதாநாயகனாக ரவி தேஜா கதாநாயகியாக டாப்சி மற்றும் பிரபு, பிரம்மாநந்தம், ஜெயசுதா, சுஷாந்த் சிங், ஷாயாஜி ஹிண்டே, அவினாஷ், ரகு பாபு மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கு பெறுகின்றனர்.


கதைசுருக்கம் -

புல்லட் ராஜா (ரவி தேஜா) நல்ல மனம் கொண்ட ஒரு சிறிய அளவு ரௌடி. ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது ஸ்வேதா (டாப்சி) மீது தெரியாமல் மோதி விடுகிறான். மோதலில் தானே காதல் பிறக்கும். ஸ்வேதா மீது புல்லட் ராஜாவுக்குக் காதல் ஏற்படுகிறது. ஆனால் ஸ்வேதாவுக்கு ஏற்கனவே ஹார்பர் பாபுவுடன் (சுஷாந்த் சிங்) திருமணம் நிச்சயதார்த்தம் நடந்து விட்டது. ஹார்பர் பாபுவோ மிகப்பெரிய கிரிமினல். புல்லட் ராஜாவைத் திட்டமிட்டுத் தீர்த்துக் கட்டுவிடுகிறான்.

 எமலோகம் போகும் புல்லட் ராஜா தனக்கு அநீதி வழங்கப்பட்டதாக உணர்கிறான். எமதர்ம ராஜாவிடம் (பிரபு) வாக்குவாதம் செய்கிறான். வேறு வழியில்லாமல் பூலோகம் வரும் எமன் சமீபத்தில் தனது கூட்டாளிகள் பல்ராம் (ஷாயாஜி ஹிண்டே), சாந்தாராம் (அவினாஷ்) மற்றும் பவித்ரானந்தா (ரகு பாபு) ஆகியோரால் கொல்லப்பட்ட உற்துறை அமைச்சர் ரவீந்தரா உடலில் புல்லடராஜாவின் உயிரைச் செலுத்தி விடுகிறார். ரவீந்தர் உடலில் புகுந்த புல்லட் ராஜா தனது எதிரிகளைக் கண்டறிந்து அவர்களை வீழ்த்தி தனது அம்மா பார்வதம்மாவின் (ஜெயசுதா) ஆசையையும் தனது தொண்டர்களின் ஆசையையும் நிறைவேற்றுகிறான்.



நட்சத்திரங்கள், ரவி தேஜா, டாப்சி, பிரம்மாநந்தம், பிரபு, ஜெயசுதா, சுஷாந்த் சிங், ஷாயாஜி ஹிண்டே, அவினாஷ், ரகு பாபு.
தொழில்நுட்ப கலைஞர்கள்
கதை, திரைக்கதை, இயக்கம் - சிவா
ஒளிப்பதிவு - வெற்றி
இசை - விஜய் ஆண்டனி
பாடல்கள் - கவிஞர் சொற்கே, கவிஞர் கார்கே
ஜெரால்டு,  ராஜராஜா
வசனம் - ராஜராஜா
மக்கள் தொடர்பு - S. செல்வரகு
இணைத்தயாரிப்பு - வெங்கட் ராவ்
தயாரிப்பு - பத்ரகாளி, பெத்த பாபு

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/4/49/The_Twilight_Saga_Breaking_Dawn_Part_2_poster.jpg/220px-The_Twilight_Saga_Breaking_Dawn_Part_2_poster.jpg

5. The Twilight Saga: Breaking Dawn - Part 2 is the fifth and final installment of the Twilight Saga film series, based on Stephenie Meyer's novel of the same name. 



After the birth of Renesmee, the Cullens gather other vampire clans in order to protect the child from a false allegation that puts the family in front of the Volturi.



Summit Entertainment (later bought by Lionsgate), the studio behind the film adaptations of novels in the Twilight series, announced in November 2008 that it had obtained the rights to the rest of Stephenie Meyer's series, including Breaking Dawn. Breaking Dawn was split in two parts due to the length of the book.
This movie picks up where the first half had left off (with Bella awakening from her vampire transformation), and was released on November 16, 2012. 




கல்யாணப்பத்திரிக்கைல மஞ்சள் தடவறதுக்குப்பதிலா ஐ டெக்ஸ் மை தடவி இருந்தா இன்னா அர்த்தம்?

பெர்னாட்ஷாவின் வீட்டின் மேஜைமேல் உள்ள பூங்கொத்துஜாடி காலியாகவே இருக்குமாம்.’மிஸ்டர் ஷா ,உங்களுக்கு பூக்கள் என்றால் பிடிக்காதா?உங்கள் வீட்டு பூங்கொத்து ஜாடி காலியாகவே உள்ளதே?ஷா அதற்கு சுடச் சுட பதில் சொன்னராம் ‘எனக்கு குழந்தகளைக்கூட மிகப்பிடிக்கும் ,அதற்காக அவர்களின் தலைகளைக் கிள்ளி மேசைமேல் வைக்க முடியுமா?குழந்தைகளை ரசிக்க மட்டும்தானே செய்கிறோம்.அப்படித்தான் செடிகளிடமே  பூக்கள் இருப்பதை ரசிக்கிறேன்!!
-அர்த்தமுள்ள வாழ்வு
இனிய இரவு வணக்கம்
1. சம்சாரத்தின் மேல் உள்ள கோபத்தை காட்ட சரியான தருணம் அவங்களை எழுப்பி விடும் சாக்கில் நறுக் என கிள்ளி வைப்பதே.தூக்கக்கலக்கத்துல தெரியாது. 




-----------------------


2. நாம சாப்பிட்ட மேட்டர் எப்டியோ ஏதோ சிக்னல் மூலம் தெரிஞ்சுடுது.மச்சினிங்க ,மாமியார் ஏதாவது ஸ்பெஷல் குழம்போ சட்னியோ கொண்டுவந்துடறாங்க 




-----------------------


3. வெளியே பனி கொட்டிகொண்டிருப்பதால் இனி மனைவி என்ன திட்டினாலும் உம் கொட்டி அமைதி காப்பது அடக்கமான புருஷனுக்கு அழகு




-----------------------


4. தோசைக்கல்லில் ஊற்றப்படும் முதல் தோசை எப்பவும் அப்பாவி புருஷனுக்குத்தான்.ஏன்னா அது டேஸ்ட் கம்மியா இருக்கும் ;-)) 




-------------------------

5 சமந்தா சமைச்சா சாப்ட முடியுமா?,# சும்மா 



-----------------------


திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டால், முதல் இரவையும் ஏன் அங்கே வைக்கவில்லை...?

விக்கி கேக்க சொன்னான்.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டால், முதல் இரவையும் ஏன் அங்கே வைக்கவில்லை...? 

விக்கி கேக்க சொன்னான்.


6. பாத்திரங்களை கணவர்கள் துலக்குகையில் உன்னிச்சாம்பல் தரும் மனைவிகள் தாங்கள் எப்போதாவது துலக்கும்போது மட்டும் சிறப்பு லெமன் டிராப் யூசிங் 




----------------------


7. புரட்சித்தலைவியின் விலை இல்லா லேப்டாப் பின் கள்ளமார்க்கெட் விலை கிருஷ்ணகிரி 8000 திருவண்ணாமலை =5000 மதுரை - 4000 



-------------------------



8. நாடார்கள் தென்னிந்தியாவை ஆட்சி செய்தவர்கள் -ஜெ # மேடம்.பதவியை ,அதிகாரத்தை நாடார் யாரோ அவரே உயர்ந்த ஜாதி 




---------------------------


9. தேவையற்ற லக்கேஜ்களை தலையில் சுமக்கமாட்டேன்: ஏ.ஆர்.ரஹ்மான் # இப்போதை ய ட்ரென்ட்படி மிலிட்ரிகட்டிங் அடிக்கப்போறீங்களா? 



----------------------


10. ஏகப்பட்ட லட்டு அக்கம் பக்கம் வீட்டில் இருந்து ஓ சி யில் கிடைத்தால் அதை ஸ்வீட் ஸ்டாலில் செகன்ட்ஸில் விற்கவும் 


--------------------


Photo


11.  புருஷனாய் இருப்பதின் பெரும் அஸௌகர்யம் சுயமரியாதையை சொந்த சம்சாரத்திடம் கேட்டும் பெற முடியாமல் போவதே!




-------------------------


12. அமைதியாக இருக்கும் ஒரு இடத்தை களேபரமாக்க , ரனகளமாக்க குறைந்த பட்சம் ஒரு பெண் இருந்தால் போதுமானது




--------------------------


13. டாக்டர்.ஆபீஸ்க்கு எப்போ வந்தாலும் தலைவலியும் கூடவே வந்துடுது.



அப்போ உங்க சம்சாரம் ஒர்க் பண்ற ஆபீஸ்ல நீங்க ஒர்க் பண்ணாதீஙக



---------------------------


14. காதலன் ஆக்ரா வா இருந்தா காதலி எழுதும் கவிதை வரி - என்னை ஆக்ரா மித்தவனே என இருக்கும்



-------------------------


15. பிசிக்ஸ் மிஸ் - பிக் பேங்க் தியரி என்ன?



லொள் மாணவன்.- அதை அந்த பேங்க் மேனேஜர் கிட்டேதான் கேட்கனும்.என்னை கேட்டா?


-------------------------



"........." ஒரு எளிய மார்க்கம்
மும்பையில் குண்டு வெடிப்பு...!

"......." ஒரு எளிய மார்க்கம்
மாலேகாவில் குண்டு வெடிப்பு...!

"........" ஒரு எளிய மார்க்கம்
கோவா'வில் குண்டு வெடிப்பு...!

முதல்ல மனுஷனுக்கு மனுஷன் அன்பு காட்டுங்கடா.....!



16. நடை பயிற்சிக்கு வரும் ஆண்களின் மனதை,கண்களை இடைப்பெயர்ச்சி க்கு இடப்பயிற்சி செய்வது சேலை கட்டிய சோலைகளின் பொறுப்பு



--------------------------


17. காதலிக்கு ரோஜாவும் ,கள்ளக்காதலிக்கு மல்லிகையும் கொடுக்கும் ,சூடும் கலையை தமிழன்தான் கற்றான்




--------------------------


18. நீச்சல் தெரியலைன்னா ஒரு பொண்ணு தண்ணில மூழ்கிடுவா.நாம நீச்சல் கத்துக்குடுத்துட்டா அவ முழுகாம இருப்பா # ஸ்விம்மிங் சிந்தனைகள்




------------------------


19,. இயற்கை அன்னை - உலகத்து உயிர்களை சந்தோஷப்படுத்துவதற்காகவே நீ உருவானாய் என உணர் #



நான் ரெடி.பொண்ணுங்க ஒத்துக்கனுமே




-----------------------------


20. ரைட்டர் நாயோன் - டான்ஸ் ஸ்டெப்பை மாத்தவே மாட்டீங்களா?



ஜம்பு - ஸ்டெப்னி மாத்துனா ஜாலி ,ஸ்டெப் மாத்துனா நான் காலி




-------------------------


பஹ்ரைனில் இலங்கை தமிழர்கள் அதிகமாக வருகை...!
பஹ்ரைனில் இலங்கை தமிழர்கள் அதிகமாக வருகை...!



21. சூரசம்ஹாரம் என்றதும் முருகர் நினைவு வந்தால் நீ சராசரி .கமல் -நிரோஷா கிஸ் சீன் நினைவு வந்தால் சாணக்யன் ்



--------------------------


22. உங்களுக்கு நல்ல பிரேக் குடுத்த படமா இதை சொல்லலாமா?



விஜய் -நோ பிரேக்.புல் எக்சிலெரேட்டர் ,ஐ ஆம் FLYING ;-))



--------------------



23. அழகானஇளம் பெண்கள் இல்லாத ஆபீஸில் வேலை செய்ய வேண்டாம்னா எல்லாரும் லேடீஸ் ஹாஸ்டல் வாட்ச்மேனாதான் போகனும்



-------------------------



24. ரொம்ப கஞ்சன் வீட்டுக்கல்யாணம் போல


 எப்படி சொல்றீங்க?


தாம்பூலப்பைல இலந்தைப்பழம் போட்டுத்தர்றாங்களே?




---------------------------


25. இந்த மேரேஜ்ல மாப்ளைக்கு இஷ்டம் இல்லைன்னு எப்படி சொல்றே?


கல்யாணப்பத்திரிக்கைல 4 கார்னர்லயும் மஞ்சள் தடவறதுக்குப்பதிலா ஐ டெக்ஸ் மை தடவி இருக்கே?



--------------------------------



Photo