Showing posts with label Adil Hussain. Show all posts
Showing posts with label Adil Hussain. Show all posts

Friday, November 23, 2012

Life of Pi (2012) - சினிமா விமர்சனம்

http://7tab.in/wp-content/gallery/life-of-pi-wallpapers/life-of-pi-wallpapers-1.jpgபடத்தை எடுக்க முடிவு பண்ணும்போதே ஆஸ்கார் அவார்டை அள்ளிடனும்னு  ஒரு முடிவோடதான் இயக்குநர் களம் இறங்கி இருக்கார். அவார்டு வாங்குவது உறுதி. ஆனா  அனைத்துத்தரப்பு மக்கள் ரசிக்கும் ஜனரஞ்சகப்படமா  உருவாக்கும் வாய்ப்பு இருந்தும் எப்படி அதை ஹேர் இழையில் தவற விட்டார்னு பார்ப்போம் . 


ஹீரோவோட குடும்பம் பாண்டிச்சேரில இருக்கு.அப்பா கிட்டத்தட்ட  ஜூ மாதிரி விலங்குகள் கொண்ட ஒரு கண்காட்சி ஹால் ( உயிரியல் பூங்கா )  நடத்தறவர்.அந்த இடம் அரசாங்கத்துக்கு சொந்தமானது, காலி பண்ணச்சொல்றாங்க. கனடா நாட்டில் வேலை கிடைச்சிருப்பதால் அங்கே போய் செட்டில் ஆகிடலாம்னு விலங்குகளுடன் கப்பல் பயணம் பண்றாங்க... 



வழில கடல்ல புயல். ஹீரோவோட பெற்றோர் அவுட். தப்பிப்பிழைச்சது  ஒரு வரிக்குதிரை   , உர்ராங்குட்டான், புலி , எலி , ஹீரோ. இவங்க ஒரு படகுல பயணம் பண்றாங்க. அந்த சாகசப்பயணம் தான்  கதை.. 


சும்மா சொல்லக்கூடாது. துணிச்சலான கதை . ஒரே மாதிரி மசாலாப்படங்களை பார்த்து சலித்த கண்களுக்கு வித்தியாசம்.கேமராமேனுக்கு பூப்போட்டு கும்பிடனும். அவ்வளவு செய் நேர்த்தி , உழைப்பு


ஹீரோ சுராஜ் ஷர்மா  அந்த கதாப்பாத்திரமாவே மாறிட்டார். தமிழில் கமல் போல் அந்த கேரக்டருக்காக இரு விதமான தோற்றம், நிறத்தில் , உடல் மொழியில் அருமை 


ஹீரோயின் ஸ்ரவந்தி பரத நாடியக்கலைஞராக வருகிறார். மாநிறம் என்றாலும் கொள்ளை அழகு நந்திதா தாஸ் தங்கை மாதிரி , மனதை சுண்டும் தோற்றம் .. 


 தபு ஹீரோவுக்கு அம்மாவா வர்றார்.. அதிக காட்சிகள் இல்லை. வந்தவரை ஓக்கே . 


 யன்  மார்டெல் என்கிற நாவலாசியரின் புகழ்பெற்ற நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம்.இயக்குனர் ஆங் லீ..இவர்   HULK  படத்தின் இயக்குநர் .

http://www.moviedeskback.com/wp-content/uploads/2012/07/Life_of_Pi_movie_wallpapers-1920x1080.png-004.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 



1.  புயல் வந்து கப்பலை புரட்டிப்போடும் இடத்தில் ஒளிப்பதிவு , பின்னணி இசை செம 




2. புலி மற்றும் ஹீரோ இருவரும் தனிமைப்படுத்தப்பட்ட பின் தன்னந்தனிக்கடலில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் காட்சிகள் நேஷனல் ஜியாக்ரஃபி பார்த்தது போல் அத்தனை தத்ரூபம்.


3. இரண்டாவது புயல் தாக்கும்போது முதல் புயலுக்கும் இதற்கும் நல்ல வித்தியாசம் காட்டியது . அந்த காட்சியில் கிராஃபிக்ஸ் எது?  ரியல் புயல் எது? என்றே கண்டறிய முடியவில்லை 



4. கடலில்  இரவில் , நிலா வெளிச்சத்தில் திமிங்கலம் வரும் காட்சி. அந்த பிரம்மாண்டம் இன்னும் கண் முன்.. 


5. மீன்கள் பறந்து பறந்து வந்து காற்றில் படகில் விழுவதும் புலி சாப்பிடுவதும் முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் காட்சி 



6. மிதக்கும் தீவில் ஹீரோ போனதும் சுற்றிலும்  ஒரே விதமான 1000க்கணக்கான விநோத பிராணிகள் சூழ ஹீரோ அந்த ஓடையில் ஆனந்தக்குளியல் போடும் காட்சி  


7, நான் சாதா தியேட்டரில் தான் படம் பார்த்தேன், 3 டி எஃப்ஃபக்ட்ல இன்னும் கலக்கலா இருந்திருக்கும் சாத்தியம் இருக்கு 

http://www.apnatimepass.com/life-of-pi-movie-wallpaper-17.jpg

 இயக்குநர் திரைக்கதையில் சறுக்கிய இடங்கள்



1. கடல் பயணம் பண்ணும் ஆள் கடலின் உப்புக்காற்றில் கருத்துடுவாங்க. அதை படிப்படியாய் காட்டி இருக்கனும். ஹீரோ செக்கச்செவேல் என இருக்கார். க்ளைமாக்ஸ்க்கு கொஞ்சம் முன்னே அட்டக்கறுப்பா ஆகிடறார். அப்படி காட்டக்கூடாது . ஸ்டெப் பை ஸ்டெப் கறுப்பாக்கி காட்டி இருக்கனும் 



2. ஆனந்த விகடனில் கடல் கதைகள் பல எழுதிய நரசய்யா வின் கடற்பயணக்குறிபுகள்  பல இடங்களில் விரவி இருந்தும் டைட்டிலில் அவருக்கு க்ரெடிட் தரவே இல்லை 


3. நாம வீட்டில் படுத்துத்தூங்கிட்டு இருக்கும்போது லேசா மழைச்சாரல் நம்ம மேல பட்டா ஆழ்ந்த தூக்கமா இருந்தாலும் டக்னு விழிச்சுடுவோம், உள்ளுணர்வு எழுப்பி விட்டுடும். ஆனா ஹீரோவோட குடும்பம் கப்பல்ல அறையில் படுத்து தூங்கும்போது புயலில் கடல் நீர் உட்புகுந்து நீரில் மூழ்கி சாவது அவ்வளவு சாதாரணமா காட்டியது தப்பு. போராடி பின் மூழ்கி செத்திருக்கனும், ஐ மீன் அப்படி எடுத்திருக்கனும். 


4. பரத நாட்டியக்கலைஞர்கள் பயிற்சியின் போது மல்லிகைப்பூ போன்ற வாசனைப்பூக்கள் சூட அனுமதி இல்லை. தலை வலி தரும், மனதை திசை திருப்பும்  என்பதால். ஆனா பரத நாட்டிய பள்ளியில் ஹீரோயின் உட்பட ஆளாளுக்கு வித விதமா  பூச்சரம் சூடி இருக்காங்க 


5. புயல் வரும்போது பெரும்பாலான காட்சிகள் க்ளோசப் காட்சிகளே. லாங்க் ஷாட்ஸ் தான் நம்பகத்தன்மை கொடுக்கும் . த அபிஸ் படத்துலயும் சரி, டைட்டானிக்லயும் சரி லாங்க் ஷாட்ஸ் நிறைய இருந்தது


6. படகுல வரிக்குதிரை  செத்துக்கிடக்கு. பசித்த புலி அதை சாப்பிடாம  எலியை கவ்வுமா? அதாவது மசாலா ரோஸ்ட் கண் முன் இருக்கும்போது யாராவது இட்லிக்கு ஆசைப்படுவாங்களா? அனுஷ்கா , ஹன்சிகா மாதிரி கொழுக் மொழுக் ஃபிகர் பக்கத்துல இருக்கும்போது யாராவது வர லட்சுமியை தேடிப்போவாங்களா? 


7. க்ளைமாக்ஸ்ல ஹீரோ இன்னொருவர் கிட்டே  தன் கதையை சொல்லி முடிச்சுட்டு இன்சூரன்ஸ் ஆஃபீசர்ங்க நம்பாததால நான் வேற ஒரு கதை சொன்னேன்னு ஆரம்பிச்சு சொல்றது எதுக்கு? தேவை இல்லை.. அட்லீஸ்ட் 2 விதமான விருமாண்டி டைப் கண்ணோட்டக்கதைகளை சொல்லிட்டு இதில் எது உண்மை? என சஸ்பென்சாக முடிச்சிருக்கலாம். 


8. . புலி , ஹீரோ இருவர் மட்டுமே வரும் காட்சிகள் ரொம்ப நீளம். சுவராஸ்யம் போயிடுது. இதே ஹீரோயின் ஹீரோ கூட இருந்திருந்தா இன்னும் ஜாலியா திரைக்கதை இருந்திருக்கும் 


9. படம் மொத்தம் 2 மணி நேரம் ஓடுது. அந்த மிதக்கும் தீவில் ஹீரோ இருப்பது ஜஸ்ட் 8 நிமிஷம் தான் வருது. குழந்தைகளை கவரும் அந்தக்காட்சியை 20 நிமிடம் பண்ணி ஹீரோ - புலி வரும் அந்த நீண்ட காட்சியை நீளத்தை ட்ரிம் பண்ணி இருக்கலாம் 



10  ஓப்பனிங்க்ல ஹீரோ இந்து, முஸ்லீம் , கிறிஸ்டியன் 3 மதங்களையும் விரும்பினார் , பின் பற்றினார் என்பதெல்லாம் கதைக்கு தேவை இல்லாதது . அனைத்து தரப்பினைரையும் கவரும் மலின யுத்தின்னும், செயற்கைன்னு சர்வ சாதாரணமா சொல்லிடுவாங்க


11. கிராமங்களில் ஒரு சொல வடை உண்டு  சுண்டைக்கா கால் பணம் , சுமைக்கூலி முக்காப்பணம்னு . ஹீரோவின் அப்பாவுக்கு விலங்குகள் மீது பாசம் ஏதும் இல்லை, சேல்ஸ் தான் பண்ணப்போறார், அதை பாண்டிச்சேரிலயே பண்ணி இருக்கலாமே? எதுக்கு லக்கேஜ் சார்ஜ் எல்லாம் கட்டி கடல்ல  ஃபாரீன் கூட்டிட்டுப்போய் சேல்ஸ் பண்ணனும்? கட்டுபடி ஆகுமா? அதனால் அந்த இடத்தில் கண்டாவில் போய் இதே ஜூவை நடத்தறேன், அந்த விலங்குகளை என்னால் பிரிய முடியலைன்னு சீன் வெச்சிருக்கலாம்


12. ஹீரோவோட குடும்பம் என்ன ஆகறாங்கன்னு விஷுவலா காட்டவே இல்லை. படத்துக்கு ரொம்ப முக்கியமான  காட்சி ஆச்சே?


13. திமிங்கலம் ஹீரோவை கிராஸ் பண்ணி அது பாட்டுக்கு போகுது, எதுவுமே பண்ணலையே?  கிராஃபிக்ஸ் திமிங்கலமா?


14. படத்துல காதலுக்கு இடம் இல்லைன்னு முடிவு பண்ணிட்டா ஹீரோயினை காட்டி இருக்கவே தேவை இல்லை. சும்மா 8 நிமிடங்களே வரும் காட்சிக்கு எதுக்கு இவ்லவ் பில்டப்? ஆசை காட்டி மோசம் செஞ்ச மாதிரி ஆகிடுச்சே?


15. நாவலா படிக்கும்போது அப்பப்ப போர் அடிச்சா வெச்சுட்டு அப்புறம் படிக்கலாம், ஆனா படமா எடுக்கும்போது அந்த சலிப்பை மறக்கடிக்க திரைக்கதைல ஜிம்மிக்ஸ் சேத்தனும், சுவராஸ்யமான சம்பவங்கள் வேணும், சும்மா ஒரு போட் , ஒரு புலி , ஹீரொன்னு  படத்தை ஓட்டிட முடியாது


16. குடிக்க தண்ணி கொஞ்சமா தான் இருக்கு, கடல் பயணி ஃபாலோ பண்ண வேண்டிய முக்கிய விதி தொண்டை காயாம பார்த்துக்கறது , ஹீரோ அடிக்கடி  வானத்தை பார்த்து அய்யோ கடவுளே  காப்பாத்துனு காட்டுக்கத்தலா கத்தறாரே? ஏன்?


17 .  புயல் தாக்கியதும்  கப்பலில் அபாயச்சங்கு ஒலிக்குது, அபாய விளக்கு எரியுது ஆனா பதட்டமான சூழலை , மனிதர்கள் இங்கும் அங்கும் அலை பாய்வதை விஷுவலா காட்டவே இல்லை..
http://media.glamsham.com/download/wallpaper/movies/images/l/life-of-pi-wallpaper-10-s.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்




1. பொதுவா எல்லாரும் பயணம் செய்யும்போது அந்தந்த ஏரியா ஸ்டாம்ப் கலெக்‌ஷன்ல  ஈடுபடுவாங்க , ஆனா  என் மாமா நீச்சல் குளம் எங்கே பார்த்தாலும் அதில் நீந்திடுவார்


2. பாண்டிச்சேரி தெற்கு ஃபிரான்ஸ் போல இருக்கு 



3. இந்துக்களிடம் உள்ள பிரச்சனையே அவன் 1000க்கணக்கான கடவுள்களை வழி பட்டான் , வணங்குவான் என்பதே 


4. சின்னப்பசங்க வளரும்போது அவங்க கண்ணுக்கு எல்லா கடவுள்களூம் சூப்பர் ஹீரோவா  தெரிவாங்க லைக் அனுமார், விஷ்ணு 



5. கடவுள் அவரை காப்பாத்தலை , மருந்து மாத்திரை தான் காப்பாத்துச்சு 



6. கடந்த காலத்தோட இருக்கும் ஒரே இணைப்பு எங்கம்மாவுக்கு கடவுள் & கடவுள் நம்பிக்கை 


7. குற்றவாளிகள் செய்யும் குற்றத்துக்கு , பாவத்துக்கு அப்பாவியை ஏன் பலியிடனும்? அவன் கிட்டே ஏன் அன்பு செலுத்தனும்? அப்படிப்பட்ட பாவியை கடவுள் ஏன் படைக்கனும்? 



8. இந்து மதம் எனக்கு நம்பிக்கையை கொடுத்துது, கிறிஸ்துவ மதம்  கடவுளோட அன்பை அறிமுகம் செஞ்சுது 


9. மூன்று மதத்தையும் ஒருத்தன்  கத்துக்கிட்டான்னா அவன் ஒண்ணையும் உருப்படியா ஃபாலோ பண்னலைன்னு அர்த்தம் 


10. நம்பிக்கை என்ற வீட்டில் ஏகப்பட்ட அறைகள் உண்டு 


11. மிருகங்களுக்கும் ஆன்மா உண்டு, அதை நான் அதனோட கண்களில் பார்த்திருக்கேன் 


12. வெஜிட்டபிள்  ஃபுட் ஏதாவது குடு 

 பசுவோட ஈரல் தரவா? பசு வெஜ் தானே? 


13.  மனித வாழ்வில் பிரிவை விட பெரிய வலி எது தெரியுமா? ஒரு நிமிஷம் நின்னு நாம பிரியப்போறோம், போய்ட்டு வர்றேன் அப்டினு சொல்லிக்க முடியாதது தான்



14,. கொலம்பஸ் மாதிரி நாம அமெரிக்கா போகப்போறோம்

 அப்பா, ஆனா கொலம்பஸ்  இந்தியாவுக்குத்தானே வந்தார்? நாம ஏன் இந்தியாவை விட்டு போறோம் ? 

http://img.india-forums.com/wallpapers/1280x1024/236001-press-meet-of-film-life-of-pi.jpg

 சி.பி கமெண்ட் -  அழகிய ரசனை உடையவர்கள் , ஒளிப்பதிவுக்காகவே படம் பார்க்கலாம் என நினைப்பவர்கள் , ,மாறுபட்ட படம் பார்க்க நினைப்பவர்கள், சாண்டில்யனின் கடல் புறா டைப் நாவல் ரசித்தவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஆர்ட் ஃபிலிம் . ஆஸ்கார் அவார்ட் கன்ஃபர்ம் ஈரோடு வி எஸ் பி யில் படம் பார்த்தேன். ஒளிப்பதிவு  , 3டி எஃபக்ட் , கிராஃபிக்ஸ் காட்சிகள் இந்த 3 பிரிவில் ஏதாவது 2 ஆஸ்கார் அவார்டு நிச்சயம்

Friday, October 05, 2012

ENGLISH VINGLISH - சினிமா விமர்சனம்

http://makeupandbeauty.com/wp-content/uploads/2012/10/Hidesign-in-English-Vinglish-3.jpg 

ஒரு அம்மா தன் பெண் குழந்தைக்கு எப்படி சமையல் கத்துக்கொடுக்கறாங்களோ, ஒரு அப்பா எப்படி  தன் பையனுக்கு நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற அடிப்படை வித்தைகளை கற்றுத்தர்றாரோ அது போல அந்த குழந்தைகள் வளர்ந்து பெரியவங்க ஆன பின்னாடி  தான் கற்ற கல்வி அல்லது வித்தை , கலைகளை தன் பெற்றோருக்கு கற்றுத்தருதா? 10% கூட இல்லை.. 


பெற்றவர்கள் மனோ பாவம் தான் கற்றவைகள் எல்லாம் தன் குழந்தைகளுக்கும் கற்றுத்தருவதோடு அல்லாமல்  தான் கல்லாதவை, தனக்கு தெரியாதவை எல்லாம் தங்கள் வாரிசுகள் தெரிஞ்சு வெச்சிருக்கனும்னு உயர்வா நினைப்பாங்க. ஆனா வாரிசுகள் அப்படி இல்லை. 


ஹீரோயின் ஒரு ஹவுஸ் ஒயிஃப். சமையல்ல ஸ்பெஷலிஸ்ட். குறிப்பா லட்டு செய்வதில் டேலண்ட்.  டீன் ஏஜ்ல ஒரு பொண்ணு, 6 வயசுல ஒரு பையன். எல்லாரும் நுனி நாக்குல இங்க்லீஷ் பேசறாங்க. ஆனா ஹீரோயினுக்கு இங்க்லீஷ் ரொம்ப வீக்.


தன் குழந்தைகள் , கணவர் எல்லாரும் தன்னை கிண்டல் பண்றது அவளுக்கு பிடிக்கலை. 


அவ அக்கா  ஃபாரீன்ல இருக்கா.அக்கா பொண்ணுக்கு மேரேஜ். தனியா ஃபாரீன் போக வேண்டிய சூழல்.அவ மட்டும் முதல்ல போறா.அங்கே இங்க்லீஷ்கு தனியா டியூஷன் போறா.

தன்னை மதிக்காத கணவன் இருக்கும்போது  இங்க்லீஷ் டியூசன்ல தன்னை மதிக்கும் பலர் இருக்கக்கண்டு சந்தோஷப்படறா. அதுல ஒருத்தன் பிட்டைப்போடறான் , ஐ மீன் லவ் அப்ளிகேஷன்.


எக்சாம் வருது. எக்சாம் டேட்டும் அக்கா பொண்ணு மேரேஜ் டேட்டும் ஒண்ணு.

 என்ன ஆகுது? என்பது மிச்ச மீதிக்கதை.. 


http://cdn.koimoi.com/wp-content/new-galleries/2012/09/Sridevi-In-English-Vinglish-Movie-Stills-And-Music-Reciew.jpg



 படத்தில் முதல் பாராட்டு இயக்குநர் கவுரி ஷிண்டேவுக்கு. மசாலா ஸ்கிரிப்ட் எல்லாம் கைல எடுக்காம இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்ததுக்கு. இது  அவர் வாழ்வில் நடந்த உண்மைச்சம்பவமாம். அவர் அம்மா கதை . ஹேட்ஸ் ஆஃப் மேடம்.. 


படத்தோட மொத்த பாரமும் ஸ்ரீதேவி  இடுப்புல தான் ஸாரி முதுகுலதான். பூவே பூச்சூடவா நதியா எப்படி எம் குமரன் சன் ஆஃப் மகா லட்சுமில செகண்ட் ரவுண்ட் ஆரம்பிச்சாரோ அதே போல் அவருக்கு இது குட் ஓப்பனிங்க்.. 50 வயசு ஆன மாதிரியே தெரியலை.1977  ல 16 வயதினிலே படம் ரிலீஸ் ஆனப்ப மினிமம் அவருக்கு 16 வயசுனு  வெச்சாக்கூட  இப்போ அவருக்கு 49 வயசு இருக்கும் .ஆனா ஆள் நீட்டா தான் இருக்கார். 


தாழ்வு மனப்பான்மையில் துடிப்பது , தன் மகளே  தன்னை  திட்டுவது கண்டு பொறுமுவது , ஃபாரீன் க்ளாஸில் தன் சமையலை எல்லாரும் பாராட்டும்போது பெருமிதப்படுவது , திடீர்க்காதல் பிரப்போசலில் மனம் தடுமாறுவது  எல்லாமே கிளாசிக் நடிப்பு.. 


அடுத்த பாராட்டு ப்ரியா ஆனந்த். அக்கா மகளாக அழகுப்பதுமையா வர்றார். கண்ணுக்கு குளிர்ச்சியா ஆங்காங்கே சிரிப்பது அருண் ஐஸ் க்ரீம் சாப்பிட்ட மாதிரி.. அவரோட ஆடை வடிவமைப்பு, நகை அலங்காரங்கள் , கூந்தல் அலங்காரங்கள் எல்லாமே கொள்ளை அழகு.. குறிப்பாக மணப்பெண்ணாய் அவரை பார்க்கும்போது பேசாம நாமளே போய் தாலி கட்டிக்கலாமா? என எண்ண வைக்கும் அழகு.. 



இங்க்லீஷ் மாஸ்டராக வருபவர் , திடீர்க்காதலனாக வருபவர் , அக்கா கேரக்டர் என சொல்லிட்டே போலாம்.ஸ்ரீதேவியின் சுட்டிப்பையனா வர்ற குட்டி சோ க்யூட்.. அவன் செய்யும் சின்ன சின்ன குறும்புகள் ரசிக்க வைக்குது.. அடிக்கடி அம்மாவை பே என பயமுறுத்துவது செம..  அந்த டீன் ஏஜ் பொண்ணு நடிப்பும் கன கச்சிதம்././ 


 அஜித் ஒரே ஒரு சீன்ல 3 நிமிஷம் வர்றார்.. தன்னம்பிக்கை டயலாக் அடிச்சுட்டு போறார்.. 


http://mimg.sulekha.com/tamil/english-vinglish/stills/english-vinglish-05.jpg


 இயக்குநர் பாராட்டு  பெறும் இடங்கள்



1. ஹீரோயின் இங்க்லீஷ் கிளாசில் எல்லோராலும் பாராட்டப்பட்டு ஒரு வித பெருமிதத்துடன் வெளியே வந்து தோரணையா  ரோட்டில் நடப்பதும் , யாஹூ என கையை பம்ப் பண்ணுவதும் அக்மார் ஸ்ரீதேவி ஸ்பெஷல் நடிப்பு . அந்த காட்சியில் கேமரா ஆங்கிள் லாங்க் ஷாட்டில் கன கச்சிதம். 


2. படத்தின் மார்க்கெட்டிங்க்காக அஜித்தை கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்தது , ஹிந்தியில் அமிதாப் 


3. தெளிவான திரைக்கதை  அமைப்பு , கண்ணை உறுத்தாத அழகிய ஒளிப்பதிவு , ஃபாரீன் லொக்கேஷன்ஸ் அழகு.. 



4. படத்தில் நடித்த அனைத்து கேரக்டர்களும் மனதில் பதியும்படி நடிக்க வைத்தது, குறிப்பாக அந்த இங்க்லீஷ் டியூசன் செண்டர் ஸ்டூடன்ஸ் எல்லாரையும் சரியா யூஸ் பண்ணியது 


5. படத்தின் உயிர் நாடியான அந்த க்ளைமாக்ஸ் காட்சியில் வேலைக்காரன் தர்மதுரை ரஜினி மாதிரி ஹீரோயின் மானாவாரி இங்க்லீஷில் பேசி அசத்த விடாமல் மிக நார்மலான , எளிமையான ஆங்கிலத்தில் உரை ஆற்ற விடுவது.. 


http://www.indicine.com/images/gallery/bollywood/movies/english-vinglish/73236-english-vinglish-2-large.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோயின்  தான் இங்க்லீஷ் டியூசன் போற மேட்டரை ஏன் தன் சொந்த  அக்கா கிட்டே மறைக்கறா?  இது என்ன பெரிய தப்பா? வெட்கப்பட வேண்டிய விஷயமா? தனக்குத்தெரியாத ஒரு விஷயத்தை அவ கத்துக்கறா , அவ்வ் தானே? 



2. ஹீரோயின் ஒரு சீன்ல  தன் அக்கா கிட்டே “ ஒரு காலத்துல  உனக்கு இங்க்லீஷே வராது, இப்போ பின்னிப்பெடல் எடுக்கறே” அப்டிங்கறாங்க. ஏன் அக்கா கிட்டேயே இங்க்லீஷ் கத்துக்கக்கூடாது. வீட்ல சமையல் வேலை எல்லாம் ஹீரொயின் தானே செய்யறாங்க? அக்கா ஆஃபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் அந்த சமையல் டைம் டியூசன் டைமாக்கிக்கலாமே? 



3. உனக்கு தனியா ஒரு கம்பெனி கிடைச்சுதா? எங்களோட இருக்கறது.ல உனக்கு சந்தோஷம் இல்லையா?ன்னு கணவன் கேட்கறப்பவாவது  ஹீரோயின் “ டேய் வெண்ணெய், நான் எங்கேயும் போகலை, டியூசன் தான் போனேன்னு சொல்றதுக்கு என்ன? பெங்களூர் கோர்ட்ல  ஜெ , சசிகலா எல்லாம் பம்முன மாதிரி ஏன் பம்முறாங்க? 



4.கன்னிப்பருவத்திலே , மவுன கீதங்கள் படங்கள்ல அந்த ஒரு நிமிட உரசல் சபலம் சீன் இருந்ததுன்னா படத்தோட ஆணி வேரே அந்த சீன் தான். தேவைப்பட்டுது. இந்தப்படத்துல கதையோட நோக்கம் ஒரு அம்மா எப்படி ஆங்கிலம் த்தெரியாம உலகை ஃபேஸ் பண்றாங்க என்பதே.. ஒரு பெண் இயக்குநரா இருந்துட்டு எதுக்கு தேவையில்லாத அந்த கில்மா சீன்? 



5. இப்போ ஆடியன்ஸ் மனசுல ஹீரோயின் இங்க்லீஷ் கத்துக்குவாங்களா? மாட்டாங்களா? என்ற துடிப்பு மாயமா போய் அந்த கள்ளக்காதல்க்கு ஹீரோயின் ஓக்கே சொல்வாங்களா? மாட்டாங்களா? என திசை திரும்புதே? 

 ஸ்ரீதேவியின் குடும்பம் மகள்கள் மற்றும் கணவர் ( ரியல் லைஃப்)
http://www.teluguwave.in/wp-content/uploads/2012/08/Sridevi-and-Daughters-at-English-Vinglish-First-Look.jpg



6. சப்போஸ் ஹீரோயின் மனசுல அப்படி ஒரு எண்ணமே இல்லைன்னா  எதுக்கு அந்த சிச்சுவேஷன்ல அலைபாயுதே மனம் அப்டினு ஒரு பாட்டு.. 


7. லட்டு பிடிக்கும் ஆரம்ப காட்சியில் ஹீரோயின் இடது கைல ஏன் பிடிக்கறாங்க? வலது கைதானே பெஸ்ட்? அதே காட்சி க்ளைமாக்ஸில் வரும்போது மற்ற பெண்கள் 2 பேரு கைல கிளவுசோட  இருக்காங்க, ஆனா ஹீரோயின் மட்டும் வெறும் கைல இடது கைல லட்டு பிடிக்கறாங்க


8. அவனவன் ஐ ஏ எஸ் எக்சாம்க்கு கூட கவலைபடலை.. ஆனா சாதா இங்க்லீஷ் டியூசன் எக்சாம்  மேரேஜ் அன்னைக்கே வர்ற தெல்லாம் ஒரு ட்விஸ்ட்டா?   ஆடி போனா ஆவணி , தாவணி போனா ஏதோ. ஒரு சுங்கடி . இதுக்கு ஏன்  டென்ஷன்? 



9. ஒரு குடும்பப்பெண் மேரேஜ் ஆகி 2 குழந்தை இருக்கறவ அவளுக்கு விழிப்புணர்வு, ஜாக்கிரதை உணர்வு  ஜாஸ்தியாவே இருக்கும். இங்க்லீஷ் தெரியலைன்னாலும் இங்கிதம் தெரியும். டியூசன் க்ளாஸ்ல  வர்ற அந்த கள்ளக்காதலன் பிட்டை போடப்போறான்னு தியேட்டர்ல இருக்கும் வயசுக்கு வராத வனஜாவுக்கே தெரியுது. ஸ்ரீதேவிக்கு ஐ மீன் அந்த கேரக்டருக்கு தெரியாதா? 



10.  க்ளைமாக்சில் ஹீரோயின் ஆங்கிலத்தில் உரை ஆற்றும்போது அவர் பெண் திடீர் என  உணர்ச்சி வசப்பட்டு அழுவது ஓவர். ஏன் அப்படி திடீர்னு திருந்தனும்? 



11. ஒரு சாதாரண விஷயத்துக்கு, வாக்கு வாதத்தில் மகள் “ உன் மூஞ்சியைப்பாரு “ என திட்டி விடுகிறாள். அவ வயசு அப்படி , பக்குவம் பத்தலை. ஆனா ஒரு அம்மாவான ஹீரோயின் உடனே உணர்ச்சி வசப்பட்டு பேசும் அந்த நீண்ட டயலாக் செயற்கை  பெற்றோர் என்றால் பொறுமை , சகித்தல் இது கூட தெரியாதா? ..


12. திரைக்கதையில் இங்க்லீஷ் டியூசன் போவது தவிர அழுத்தமான சம்பவங்களே இல்லையே? ஏ செண்டர் ரசிகர்களுக்கு ஓக்கே.. ஆல் கிளாஸ் ஆடியன்சை கவர ஏதும் இல்லையே?


13. ஒரு இடைவெளிக்குப்பின் தம்பதிகள் ஃபாரீனில் தனி அறையில் சந்திக்கும்போது குட்டிப்பையன் மம்மி என வந்து பக்கத்துல படுத்துக்கறான், உடனே கணவர் ரொம்ப சலிச்சுக்கிட்டு அந்தப்பக்கம் திரும்பிப்படுத்து தூங்கறார் , குழந்தை தூங்க மேக்சிமம் 10 நிமிஷம் ஆகுமா? அது கூட வெயிட் பண்ண முடியாதா?


http://moviegalleri.net/wp-content/gallery/english-vinglish-press-meet-stills/english_vinglish_press_meet_stills_sridevi_priya_anand_84f401e.jpg

படத்தின் இயக்குநர் ( என்னை கேட்டா இவரே நடிச்சிருக்கலாம்)


மனம் கவர்ந்த வசனங்கள்


1. சுட்டிப்பையன் கம் குட்டி - அம்மா, உனக்கு கோபம் வருமா? வருவாதா? 

 டேய்,. அது வருவாதா இல்லை. வராதா? டோண்ட் ஒர்ரி, எனக்கு எப்பவும் கோபம் வரவே வராது 



2. நான் நல்லா சமைக்கலைன்னா வீட்டுக்கே வர மாட்டீங்களோ? 



3. போம்மா , உனக்கு பி டி னா என்னன்னே தெரியாது 


 ஆனா பேரண்ட்ஸ்னா என்னனு தெரியும்.. அவங்க கடமை என்னன்னும் தெரியும்




4. இந்த வயசுல எல்லா சைல்ட்ஸும் பேரண்ட்சை அவமானப்படுத்திட்டுதான் இருப்பாங்க.. 



5. ஆஃபீஸ்ல ஒர்க் பண்ற பெண்ணை இவ்ளவ் க்ளோசாவா கட்டிப்பிடிப்பாங்க? 


 இதுக்குப்பேரு ஹக் . நாம ஹலோ சொல்றோமில்லை.. அது போல.. ஹக் பண்றது நெருக்கத்தை காட்டும் 


 அப்போ நாம 2 பேரும் கணவன், மனைவி .  இந்த நெருக்கத்தை காட்னீங்களா? 




6. அஜித் - இங்க்லீஷ்காரங்களைப்பார்த்து நாம பயப்படத்தேவை இல்லை.. அவங்க தான் நம்மை பார்த்து பயப்படனும்.. முத தடவை என்பது நம்ம வாழ்வில் ஒரு முறைதான் வரும்.. ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு முத தடவை உண்டு.. எஞ்சாய்.. 


 நான் முதன் முதல்ல தமிழ் பேசுனப்போ அதை கிண்டல் செஞ்சவங்க உண்டு. இப்போ ஏத்துக்கலையா? 

 இங்க்லீஷோ , மலையாளமோ  எல்லாம் ஒரு மொழிதான்./. 



7. ஆம்பளை சமைச்சா அது கலை, பொம்பளை சமைச்சா அது  அவங்க கடமையா? 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNkoxLTgwGp6R4zFHx8n-I7uLgAB072rGYVHp_FfRbQbi6uDkj5_wBMMv3jTUirMRtj5HcqQr4mm2TY2ymi2bTo8PessNmHncy-P7Tet5hIsfb-SyTBQkGOu2MD5VMSvGdejz5I61G4Tk/s640/Priya+Anand+at+NAC+Jewellers+for+1000+Diamond+Necklaces+Festival+Event+(3).jpg?priya-anand-in-saree-at-nac-ewellers-for-1000-diamond-necklaces-festival-event--actress-pics%20http:
8. இந்தக்கால குழந்தைகளுக்கு பேரண்ட்ஸ் கிட்டே எப்படி நடந்துக்கனும்னு தெரியலை..  நான் என்ன குப்பைத்தொட்டியா? ஆளாளுக்கு தூக்கி எரிய? எப்போ பாரு குறையே சொல்லிட்டு இருந்தா எப்படி? 



9. தாம்பூலப்பைன்னா என்னமா? 


 மேரேஜ்க்கு வர்றவங்களூக்கு நாம தர்ற பரிசு

 அவங்க தானே நமக்குத்தரனும்?

 ஹா ஹா ம் ம் ஆனா நாம தர்ற சின்ன பதில் கிஃப்ட்னு வெச்சுகலாம்


 10. அமெரிக்கா இவ்ளவ் பெரிய நாடுன்னு சொல்றாங்க,, அழகான இடம்கறாங்க. ஆனா இங்கே நான் 2 விஷயங்கள் மிஸ் பண்றேன் . 1. அம்மா  2 இட்லி.  


11. எதை ஸ்டார்ட் பண்ணுனீங்களோ அதை ஃபினிஷ் பண்ணவேணாமா? 

 ம் ம் என் குழந்தைகளுக்கு அம்மாவா இருப்பதுதான் என் முத கடமை  இங்க்லீஷ் எனக்கு முக்கியம் இல்லை.. 



12. என் மனைவி லட்டு ஸ்பெஷலிஸ்ட். அதை உருவாக்கவே அவ பிறந்திருக்கா.. ( இந்த சீனில் அப்போ நான் சமையலுக்கு மட்டுமா? என்பது போல் ஒரு பார்வை பார்க்கிறாரே. செம ) 



13.  எனக்கு என் கணவர்ட்ட இருந்து காதல் இல்லாட்டி கூடப்பரவாயில்லை. அட்லீஸ்ட் ஒரு மரியாதை.. .. 



14. இவளுக்கு 17 வயசு இருக்கும்போது ஏதோ கோபத்துல, வாழ்க்கைல ஒரு வெறுப்புல என்னை ஏம்மா பெத்தீங்கன்னு கேட்டா.. இதை எல்லாம் பர்மிஷன் போட்டுட்டா செய்ய முடியும்.. 


15. குடும்பம்கறது  அன்பு மற்றும் மரியாதை.. நம்மை நாமளே நேசிக்கலினா எப்படி> ? நாம நம்மை நேசிக்க ஆரம்பிச்சா நம்ம பழைய வாழ்க்கையையே நேசிக்கத்தோணும்..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiokAvNqLSk8jh1Pjb94-euy7q_Mpchvl4whESEVwGTUljQkaoBQRqAxRFfGCU7pilTqVg1rVyYAI2LBEY3XPX9Wt4ZIi6A3nmtFz1DXv6RmY5lWu3zhh0_3SIhS_EoCXOts-WSy_91iY0y/s1600/Priya-Anand-Hot-Saree-stills-03.jpg


சி.பி. கமெண்ட் - ஒரு திறமையான ஓவியன்  அல்லது சிற்பி தனது அழகிய படைப்பை  நிர்மாணிக்கும்போது சின்ன தவறு நடந்திருக்கலாம். ஆனாலும் அந்தப்படைப்பு நம் மனம் கவர்ந்து விடும். அது போல் மேக்கிங்க் வைஸ் சற்று சறுக்கி இருந்தாலும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நல்ல சினிமா தான் இது.. ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் பார்த்தேன்

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 42 ( இது ஹிந்தி டப்பிங்க் என்பதால்  விகடன் விமர்சனம் போட மாட்டாங்க )


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்கிங்க் - ஓக்கே



 டெக்கான் கிரானிக்கல் - 3 1/2   / 5


 டைம்ஸ் ஆஃப் இண்டியா  - 6 1/2  / 10