Friday, November 02, 2012

கோடி! - சீதா ரவி - சிறுகதை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjomnWRF2NiaH4Qy3aoxLw0eAfHYyFhs6BffYI5ncmZFf4vA726yX57OTyypTQeH4OedU4ko33zkVkHDOR8m__A9gW8gsqzicReF7UymaOO2WmuLBFrMK2IzR-BQdJ-bcjAmPzmDgU-8eau/s640/Seetha_Ravi.jpg 

கோடி!

சீதா ரவி

ஒலிக்கலவையின் உஷ்ணத்தை மீறி ஒரு பனித்துளி மௌனம் சாவித்ரியின் நெஞ்சைக் குளிர்வித்தது. அந்த மௌனத்தில் அவளுடன் சத்யன் மட்டுமே இருந்தான். சடங்குகளின் தீவிரம் அவற்றின் அர்த்தத்தையும், அர்த்தமின்மையையும் தாண்டி எங்கோ போய்க் கொண்டிருந்தது. உறவு ஜனம், புரோகிதர், நட்பு வட்டம் என்று யார் யாரோ பொறுப்பெடுத்துக் கொண்டு அவற்றை வழி நடத்திக் கொண்டிருந்தனர்.
இப்படியொரு கணம் வாழ்வில் சம்பவிக்கும் என்று நன்கு உணர்ந்து அதுபற்றி உரையாடிய நாட்களில் இருவருமே பதறியதில்லை. சாவைப் பற்றி இப்போ ஏன் அமங்கலமாக..." என்று அவள் அவனை அடக்கியதும் இல்லை; அவன் அவளைக் கட்டுப்படுத்தியது மில்லை. நான் முதல்ல போய்ட்டா நீ என்ன பண்ணுவே?" போன்ற அபத்த கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கவும் இல்லை. என்றேனும் ஒருநாள் நிகழப் போகும் நிச்சயமான பிரிவை, நேருக்கு நேராகச் சந்தித்து ஏற்பதே நல்ல தென்றுதான் அவர்களின் உரையாடல் பல்வேறு தினங்களிலும் வந்து முடிந்திருக்கிறது.
கஷ்டமாத்தான் இருக்கும்! என்ன செய்ய...?" என்பான்.
ஒண்ணும் செய்ய முடியாது!" என்று அவள் சிரித்தவாறு எழுந்து ஏதேனும் பழம் நறுக்கி வரப் போய் விடுவாள்.
இப்போது மரணம் வந்து மலர்ச் செண்டு நீட்டுகிறது. மிஞ்சியிருக்கும் அவள்தான் அதைப் பெற்றுக் கொண்டாக வேண்டும். பழம் நறுக்கி எடுத்துவர எழுந்து போய்விட முடியாது. சடங்குகள் சத்யனைச் சுற்றி வட்டமிடுகின்றன. தீபக் பொறுமையாகச் செய்து கொண்டிருக்கிறான் அனைத்தையும். பார்கவி இடைவிடாது கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறாள்.
மாமனாருக்காக இவ்வளவு அழுகிற மருமகப் பொண்ண நான் பார்த்ததில்ல!"
பின்னே! சொந்த மகளாட்டமில்ல கொண்டாடினார்..."
மூணும் பிள்ளையா போச்சுல்லே அதான் மருமக மேல அவ்ளோ பாசம்..."
சத்யனுடன் மௌனத்தில் கைகோத்திருந்த சாவித்ரி மிருதுவாக இதழ் விரித்துச் சிரித்தாள். அவளுக்குத் தெரியும் - மூன்று பெண்களும் ஒரு பிள்ளையுமாகப் பிறந்திருந்தால்கூட சத்யன் மருமகளை மகளாகத்தான் பாவித்திருப்பான். அவனால் வேறு விதமாக இருக்க முடியாது.
இத்தனைக்கும் பெரிய புரட்சிக்காரனல்ல சத்யன். சராசரி எதிர்பார்ப்புகளின் வலிமைக்கு ஆட்பட்டவன். கோப- தாபங்கள் நிறைந்தவன். அவளும் அவனுமாகப் போராடி அந்த முரட்டுக் கலவையை இழைத்து இழைத்து ஒரு புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தியிருந்தனர். அதில் சாவித்ரியின் பங்கு பெரும்பங்கு என்பதை சத்யன் ஒருமுறை சுட்டிக் காட்டினான். அவள் மறுத்தாள்.
என்னோட இயல்புபடி நான் பொறுமையாய் இருக்கேன். நீங்கதான் உங்க இயல்பை மாத்திக்க ரொம்ப உழைச்சிருக்கீங்க... உங்க முயற்சிதான் அதிகம்..." சொல்வதற்குள் அவளுக்குக் குரல் கம்மி அழுகை வந்து விட்டது. நீர் தளும்பிய இமைகளை முத்தமிட்டு அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் அவன்.
உழைத்து, உருகி, மேம்பட்டு, ஒன்றி வளர அவகாசம் நிறைந்த மணவாழ்வு. இளம் பருவத்தில் இணைந்து, ஏற்றத் தாழ்வுகளையும் சுக துக்கங்களையும் பகிர்ந்து முன்னேறிய ஆண்டுகள். அந்தப் பகிர்தலில் விளைந்த நெருக்கத்தில் மனவேறுபாடுகளின் இடைவெளி குறுகி மறைந்தது. இச்சைகளும் ஏக்கமும் மெதுமெதுவே கரைந்துபோய் நிறைவு கவிந்து நின்றது. இப்போது... பிரிவின் வேதனையைப் பொறுக்க அந்த நிறைவின் மடியில் தஞ்சம் புக முடிகிறது.
வாசல் பக்கத்தில் திடீரென்று சலசலப்பு அதிகரித்தது. மிகப் பெரிய கேவல் ஒலி ஒன்று மோதிக்கொண்டு வர, அதனுடன் உள்ளே நுழைந்தாள் தேவகி. ஐயோ!" என்ற கதறலுடன் சாவித்ரியை நெருங்கினாள். பேரிழப்பின் மத்தியிலும் சாவித்ரி காத்த அமைதியின் கௌரவம் தேவகிக்குச் சற்றும் புலனாகவில்லை. பின்னோடேயே வந்த பாலு அவளைப் பற்றி சாவித்ரியிடமிருந்து அகற்றினான்.

அவளை விட்டு விடும்படி மெதுவாக சாவித்ரி அவனிடம் ஜாடை காட்டிவிட்டு, அண்ணியை அருகில் சோஃபாவில் அமர்த்திக் கொண்டாள்.
கொஞ்சமாவா செஞ்சடீ! உசிரக் கொடுத்து அவருக்காகவே வாழ்ந்தியே சாவித்ரி... அதுக்காகவேனும் பூவும் பொட்டும் வாய்ச்சிருக்கணும்டீ உனக்கு! இந்தப் பாவி மனுஷன் இப்படி உன்னை அலங்கோலம் பண்ணிட்டுப் போய்ட்டானே..."
வந்திருந்த பெண்கள் மெல்ல நெருங்கி வட்டமிட்டுக் கொண்டனர். திடீரென்று தன் மீது கவனம் குவிந்து போனதை உணர்ந்தாள் சாவித்ரி. கண்ணீரும், பச்சாதாபமும் அச்சமும்அடுத்து என்ன?’ என்ற இலேசானதோர் ஆர்வக் குறுகுறுப்பும் இணைந்த கலவையான வேலியொன்றின் மத்தியில் அவளை இருத்தியிருந்தனர். அப்பெண்களுள் பலர் அடக்க முடியாமல் அழுது கொண்டிருந்தனர். சாவித்ரிக்கும் நெஞ்சு முட்டி அழுகை வெள்ளம் பெருகி வந்தது.
கொஞ்சம் விலகுங்க...!" உறுதியும் தீர்மானமும் தொனிக்க பார்கவி வந்தாள். பெண்கள் வட்டம் இடைவெளி ஏற்படுத்திக் கொடுத்தது.
பார்கவியைக் கண்டதும் மீண்டும் ஒரு கேவலுடன் ஆரம்பித்தாள் தேவகி. பாவி மனுஷன்! வாயும் வயிறுமா இருக்கற மருமவ பெத்து பிழைக்கறதைப் பாக்காத போய்ட்டானே...!"
ஷ்! போதும் அமைதியாயிருங்க" பார்கவி அதட்டியது உறைக்காமல் தொடர்ந்து புலம்பினாள் தேவகி.
மிக அருகே நின்ற மருமகளை ஏறிட்டுப் பார்த்தாள் சாவித்ரி. சட்டென்று அவள் காலருகே உட்கார்ந்து கொண்டாள் பார்கவி. ஆறுதலாகக் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னாள். அத்தை, இன்னும் கொஞ்சம் நேரம்தான். அப்புறம் கொண்டு போய்டுவாங்க. வேன் வந்துடுச்சு. நீங்க வந்து பார்க்கணும்னா பார்த்துடுங்க."
சாவித்ரிக்கு நெஞ்சு நொறுங்கிப் போயிற்று. என்ன செய்வதென்று புரியவில்லை. சுற்றிலும் அழுது அரற்றும் கூட்டத்தின் மத்தியில் எழுந்து போய் சத்யனைப் பார்க்கப் பிடிக்கவில்லை. மிக மிக அந்தரங்கமான தனது துக்கத்தைக் காட்சிப் பொருளாக்குவது, சத்யனுக்கு தான் இழைக்கும் முதலும் கடைசியுமான துரோகமாகிப் போய் விடாதோ!
நான் வேணா இவங்க எல்லாரையும் கொஞ்சம் நேரம் வெளியே அனுப்பிடறேன்" தனது கையைப் பற்றிய பார்கவியின் கை இலேசாக நடுங்குவதை உணர்ந்தாள் சாவித்ரி. மெல்ல விரல்களை விடுவித்துக் கொண்டு மருமகளின் நெற்றியை வருடிக் கொடுத்தாள். தலையை மட்டும் இடம் வலமாக அசைத்து தமது மறுதலிப்பைச் சொன்னாள்.
வாய்க்கரிசி போடறவங்கள்லாம் வாங்கோ" - துயரின் கனத்தைப் புறங்கையால் ஒதுக்கும் யதார்த்தத்துடன் ஓங்கி ஒலிக்கும் குரல். பெண்களெல்லாம் வாசல் நோக்கிச் செல்ல, நில்லுங்க! ஏங்க, அந்தப் புடைவையைக் கொண்டாங்க இப்படி..." என்று தம் கணவனை நோக்கிச் சைகை காட்டிச் சொல்கிறாள் தேவகி. பிரபல ஜவுளி நிறுவனத்தின் கேரிபாக் கைமாறி கைமாறி அவளிடத்தில் வந்து சேர்கிறது.
சங்கராந்தி கார்த்திக்குச் சீர் செஞ்ச கையாலே இத்தையும் செய்ய வச்சுட்டானே அந்த ஈசுவரன். தெய்வமே! சாவித்ரி! அடியே நெஞ்சு நோகுதுடீ!" புலம்பியவாறு புடைவையை உறையிலிருந்து எடுக்கிறாள் தேவகி.
வாசல் நோக்கிச் சென்ற பெண்கள் கூட்டம் நின்று திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. பொங்கும் விழிகளும் சிந்திய மூக்குமாக ஒரு வண்ணக்கலவை நிற்பது சாவித்ரிக்குத் தெரிகிறது.
இது என்ன அண்ணி...?" முதல் முறையாக வாய் திறந்து பேசுகிறாள் சாவித்ரி.
பிறந்த வீட்டுப் புடைவை போடணும். முக்கியமான சடங்கு..." யாரோ பதில் சொல்கிறார்கள்.

தேவகி, அந்தப் புதுச் சேலையை எடுத்துக்கொண்டு அருகே வருகிறாள். அழகான வெள்ளையில் சிவப்புக் கரையிட்ட பருத்திச் சேலை.
எதுக்கு அண்ணி இதெல்லாம்?"
மாமி! மாமி! இருங்க..." வாசல் பக்கம் சென்ற பார்கவி பதறிக்கொண்டு ஓடி வருகிறாள். புதுப் புடைவையை தேவகியின் கைகளிலிருந்து வெடுக்கென்று பிடுங்கிக் கொள்கிறாள்.
சும்மா இருங்க! அவங்களைக் கொஞ்சம் நிம்மதியா விடமாட்டீங்க!" தேவகியின் முகம் அதிர்ச்சியில் பேயறைந்தாற்போல் மாறுகிறது.
பார்கவி!" கம்பீரமாக இடைமறிக்கும் குரல் சாவித்ரியினுடையது. அந்தப் புடைவையை மடிச்சுக் கொண்டு போய் என் பீரோல வை."
விடுங்க அண்ணி!" தேவகியைச் சமாதானம் செய்ய முற்படுகிறாள்.
அம்மா! உள்ளேயிருக்கற லேடீஸ்லாம் கொஞ்சம் வர்றீங்களா...?" வெளியேயிருந்து அதட்டலாக மீண்டும் அழைப்பு.
கசமுசவென்று பேசியபடி நகரும் பெண்களில் சிலர் அவ்வப்போது திரும்பி தேவகியையும் சாவித்ரியையும் பார்த்துப் பார்த்துச் செல்கின்றனர்.
திடீரென்று ஆவேசமாகக் குரலெழுப்புகிறாள் தேவகி. நல்லது கெட்டதுக்கு மதிப்பில்லாம போச்சு இந்த வீட்டுல! மாஞ்சு மாஞ்சு செய்யணும்னு புடைவை வாங்கிட்டு வந்திருக்கோம். இப்படி உதாசீனமா நடத்தறீங்க மாமியாரும் மருமகளும்..."
தேவகி! வாயை மூடு!" மனைவியை நோக்கிப் பாய்ந்து வரும் அண்ணனை சாவித்ரிதான் தடுத்து நிறுத்துகிறாள்.
நான் அப்பவே சொன்னேன் சாவித்ரிக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு... இந்தப் பிடிவாதக்காரி கேட்டாத்தானே."
விடுங்க அண்ணே! சும்மாயிருங்க... இதோ பாருங்க அண்ணி! அவரும் நானுமா இணைஞ்சு நடத்தின வாழ்க்கையிருக்கே... அதுவே ஊடும் பாவுமாய் இருந்து எனக்குப் பாதுகாப்பை, தெம்பை, தைரியத்தைத் தரும்... அது போதும்; கோடி புடைவையெல்லாம் இந்த நேரத்துல வேணாம்..."
பிறந்த வீட்டு ஆதரவுக்கு அடையாளம்டீ அந்தப் புடைவை... புரியாம பேசறே... இது ஆகாது..." தேவகி விடுவதாயில்லை.
அழுதுகிட்டே கொண்டாந்து போடறது ஆதரவுக்கா அண்ணி? இல்லே இன்னியோட உன் அந்தஸ்து மாறிப் போச்சு, நீ சுமங்கலி இல்லேன்னு அடையாளப்படுத்தறதுக்கா...?"
அதிர்ந்து நிற்கும் தேவகியின் கண்களில் மிகுந்த குழப்பம். அதிலே குற்ற உணர்வின் கள்ளத்தனமும் கலந்து கிடப்பது தெரிகிறது. புடைவையை உள்ளே வைத்து விட்டுத் திரும்பும் பார்கவி, மாமியாரை நெருங்கி நின்று கொள்கிறாள்.
அப்போ அந்தப் புடைவையை என்னதான் செய்வீங்க...?"
ஒரு நல்ல நாளா பார்த்துப் பிரிச்சு உடுத்திக்கறேன். எங்க கல்யாண நாள் வருமில்லே, அப்போ உடுத்திக்கிறேன்."
வெளியே சத்யனின் உடலை வேனில் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். உடலை மட்டும்தான்.


நன்றி - கல்கி - புலவர் தருமி 

Hancock -சினிமா விமர்சனம்

http://www.supamovs.com/c/1516/1516_0.jpg 
ஹீரோ ஒரு சூப்பர் மேன் மாதிரி,. அசாத்திய சக்தி உள்ளவர், பறப்பார், தாவுவார், அவரை துப்பாக்கிகுண்டுகள் உட்பட எந்த ஆயுதத்தாலும் எதுவும் பண்ண முடியாது .லாஸ் ஏஞ்சல் நகர்ல இருக்கற குற்றவாளிகளுக்கு இவர் சிம்ம சொப்பனம் மாதிரி. எங்கே குற்றம் நடந்தாலும் ஹீரோ ஆஜர். இப்போ என்ன பிரச்சனைன்னா குற்றம் நடந்தா அரசுக்கு என்ன நஷ்டம் ஆகுமோ அதை விட டபுள் மடங்கு ஹீரோவால அரசாங்கத்துக்கு ஆகிடுது. 


படத்தோட முதல் சீன்லயே ஒரு பேங்க்ல கொள்ளை நடக்குது.அதை ஹீரோ தடுக்கறாரு. ஆனா பல கட்டிடங்களை உடைச்சு சேதம் பண்ணிடறாரு. ஒரு போக்குவரத்து நெரிசலில்  ரயில்வே டிராக்ல மாட்டின காரை தூக்கி கடாசிடறாரு, ஏகப்பட்ட கார் உடஞ்சு தண்டச்செலவு. அந்தக்கார்ல வந்தவர்  ஹீரோ 2  நன்றி சொல்லி தன் வீட்டுக்கு கூட்டிட்டு போறாரு. 


 அவருக்கு ஒரு சம்சாரம், ஒரு  வாரிசு.அவரோட சம்சாரத்துக்கு ஹீரோவை பார்த்தாலே பிடிக்கலை. அவர் ஹீரோ கிட்டே அட்வைஸ் பண்றாரு. உன்னை எல்லாரும் வெறுக்கறாங்க. அரசு , மக்கள் எல்லாரும் உன்னை விரும்பும்படி பண்ண முடியும். நீ பேசாம போலீஸ்ல சரண்டர் ஆகிடு. 15 நாள் உள்ளே இரு. நீ இல்லாம  போலீஸ் + மக்கள் திண்டாடனும். குற்றங்கள் பெருகும். அந்த டைம்ல நீ எண்ட்ரி ஆகி அவங்களை காப்பாத்தினா நீ ஃபேமஸ் ஆகிடலாம். இதான் பிளான். 


 அவர் திட்டப்படியே எல்லாம் நடக்குது. ஹீரோ எல்லாராலும் பாராட்டப்படறார். இப்போ தான் ஒரு ட்விஸ்ட். ஐடியா குடுத்தவரோட சம்சாரம் தான் ஹீரோவோட முன்னாள் சம்சாரம். இந்த மேட்டர் அந்த சம்சாரத்துக்கு தெரியுது. ஹீரோவுக்கு தெரில.


3000 வருஷத்துக்கு முன்னால கடவுளால் படைக்கப்பட்ட தேவர்கள் இவங்க 2 பேரும். இவங்க இணைஞ்சா  அபூர்வ சக்தி 2 பேருக்கும் போயிடும். விலகி இருந்தா 2 பேருக்கும் சக்தி இருக்கும். என்ன ஆச்சு? என்ன முடிவு எடுத்தாங்க? என்பதே மிச்ச மீதிக்கதை


மென் இன் பிளாக் ஹீரோ வில் ஸ்மித் தான் இதுல ஹீரோ. அசால்ட்டா நடிச்சிருக்கார்.ஆரம்பத்துல ஆண்ட்டி ஹீரோவா வரும்போது வில்லத்தனம், சூப்பர் ஹீரோ ஆன பின்  ஹீரோயிசம், தன் முன்னாள் மனைவி பற்றி தெரிந்த பின் கலவையான உணர்ச்சிகள் என அவர் நடிப்பு கலக்கல் ரகம்..


ஹீரோயின் Charlize Theron வசீகரிக்கும் பார்வை, அவருக்கு கண், உதடு எல்லாமே ( முகத்துல) சின்னது . ஆனா கொள்ளை அழகு.  ஹீரோ தான் இவரது முன்னாள் கணவர்னு தெரிஞ்சதும் கதை கிளுகிளுப்பா போய் இருக்க வேண்டியது, அங்கேயும் சைபர் க்ரைம் கேஸ் பயமோ என்னமோ திரைக்கதை தடம் மாறிடுது.


இன்னொரு ஹீரோவா வரும் Jason Bateman அமைதியான நடிப்பு. நம்ம ஊர் சரத் பாபு மாதிரி ஜெண்டில்மென் கேரக்டர். நல்லா பண்ணி இருக்கார். 


http://expedientmeans.files.wordpress.com/2008/07/ctheron.jpg



 மனம் கவர்ந்த வசனங்கள்



1. விதியா எதையும் முடிவு பண்றதில்லை, நாம தான் நிர்ணயம் பண்ணனும்.


2. அதிகாரியை பார்த்தா “ யூ ஹேடு டன் எ குட் ஜாப்”னு பாராட்டனும்.. எங்கே சொல்லு? 

 அவன் வேலையை அவன் செய்யறான், நான் ஏன் பாராட்டனும்? 



3, ஏண்டா டேய் , கார்ல புட்டி இல்லை, குட்டி இல்லை. நீங்க ஒரு பேங்க்கை கொள்ளை அடிச்சு என்னடா யூஸ்?


4. உஷ் அப்பா, நாற்றம் குடலை பிடுங்குது


சரக்கு அடிச்சா சென்ட் வாசம் அடிக்கும்னு நினைச்சியா மிஸ்? 



5. இவன் பண்ற அலப்பரைகளை பார்த்தா பேசாம பேங்க் கொள்ளையே தேவலாம் போல. ஏகபப்ட்ட செலவு வைக்கிறான்.


6. உன் தலையை கழட்டி அவன் கிட்டேயும், அவன் தலையை கழட்டி உன் கிட்டேயும் கொடுத்துடுவேன், அப்புறம் நான் ஃபுட் பால் விளையாடிட்டிருப்பேன். செய்ய முடியாதுனு நினைக்கறியா? என் கூலிங்க் க்ளாஸை பிடுங்குன இல்லை, இதுக்கு இதான் தண்டனை 


http://www.film.com/wp-content/uploads/2005/03/21471186-21471189-large.jpg




 இயக்குநரிடம் சில கேள்விகள்





1. படத்துல சுவராஸ்யமான பகுதியே ஹீரோ ஹீரோயின் இருவரும் முன்னாள் தம்பதிகள் என்பதில்தான். ஆனா திரைக்கதையில் அதை விட ஹீரோவின் ஆக்‌ஷன் காட்சிகள், சாகசங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கு. மாறாக  அவங்க கதையில் இன்னும் ஆழமா போய் இருந்தா இன்னும்  கலக்கலா வந்திருக்கும் . 



2. ஹீரோ  ஸ்மித் எதுக்காக இன்னொரு ஹீரோ பேச்சை கேட்கறார்? அவருக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஹீரோ யார் பேச்சையும் கேட்காதவர், யாரையும் மதிக்காத ஆள். ஆனா அவருக்கு மட்டும் ஒபீடியன்ட்டா நடக்க காரணம் என்ன?ன்னு திரைக்கதைல சொல்லப்படவே இல்லை.. 



3. ஹீரோயின் ஹீரோவைப்போலவே பவர் உள்ளவர்னு  வேற யாருக்கும் தெரியாது. ஒரு கட்டத்துல ஹீரோ, ஹீரோயின் 2 பேருக்கும் சண்டை வந்துடுது. அப்போ டி வி லைவ் கேமரா ஓடுவதை பார்த்து யாரும்  தன்னை அடையாளம் காணாமல் இருக்க ஹீரோயின் ஒரு கூலிங்க் கிளாஸ் போட்டு மறைச்சுக்கறா. என்ன கொடுமை சார் இது? அவ புருஷன் அவளை கூலிங்க் கிளாஸ்ல டி வி ல பார்த்தா கண்டு பிடிக்க மாட்டாரா? 


4. ஹீரோயின் ஹவுஸ் ஒயிஃப் தான். பெரும்பாலான சம்சாரங்கள் போல தண்டமா தான் வீட்டுல உக்காந்து  டி வி பார்த்துட்டு இருக்காங்க. தனக்கு அபூர்வ சக்தி இருக்குன்னு தெரிஞ்சும் கணவர் ஆஃபீஸ் போன பின்னாடி மாறுவேஷம் போட்டு ஹீரோ செஞ்ச அதே சாகசச்செயலை செய்யலை? ஆண்டவன் படைப்பே மக்களை தீய சக்தில இருந்து காப்பாற்றத்தான்னு க்ளைமாக்ஸ்ல ஒணத்தியா  வசனம் பேசற ஹீரோயின் தான் ஏன் எதுவுமே மக்களுக்காக செய்யலை? 


5. பொதுவா பொண்ணுங்களுக்கு ஆண்களை விட மனோ வலிமை அதிகம் தான், ஆனா உடல் வலிமைல ஹீரோவை விட ஹீரோயின் பல மடங்கு சக்தி படைச்சவரா எதுக்காக படைக்கப்பட்டிருக்கார்? அந்த சக்தியை அவர் ஆக்கபூர்வமா செஞ்சாரா? எதுவுமே கதையில் காணோமே?


6. ஹீரோ நெம்பர் ஒன்  ஸ்மித்தை ஹீரோ நெம்பர் 2 மோட்டிவேட் பண்றாரு, மக்களிடம் நல்ல பேர் வாங்க வெச்சுடறாரு, ஆனா அவருக்கு அதனால என்ன யூஸ்? அவர் பிராஜக்ட் யாராலும் சீண்டப்படாம இருக்கு. மீடியாக்கள் அவர் கிட்டே பேட்டிக்கு வர்றப்போ  ஹீரோ நெம்பர் ஒன் அபூர்வ சக்திக்கு காரணமா தன்னை சொல்லிட்டு அந்த பிராஜட்டை ஈசியா மார்க்கெட்ட் பண்ணி இருக்கலாமே? அப்படி காட்டிட்டா 2 பேருக்கும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் யூஸ்னு  ஆகிடுமே?



7. ஹீரோ ஸ்மித் ஹீரோயின் கிட்டே நம்ம 2 பேருக்கும் என்ன உறவு? அப்டின்னுதான் கேட்கறார், இந்த தத்தி ஒண்ணு உண்மையை சொல்லனும், இல்லை கமுக்கமா இருக்கனும், ரெண்டும் கெட்டானா எதுக்கு  “ இந்த ரகசியத்தை என் புருஷன் கிட்டே சொல்லிடாதீங்க? “ அப்டினு சொல்லி மாட்டுது? தவளை தவளை.. 


8. ஹீரோவை போலீஸ் ஜெயில்ல போடும்போது தனி அறைல போடாம ஆல்ரெடி ஹீரோவால ஜெயிலுக்கு வந்த கைதிகளோட ஏன் அடைக்கனும்? பழியை தீர்க்க அவங்க வம்புக்கு வருவாங்க, ஜெயில் ரன களம் ஆகும்னு அவங்களுக்கு தெரியாதா? 


http://www.dailystab.com/blog/wp-content/uploads/2009/09/hancock.jpg



 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


 1. படத்தின் ஓப்பனிங்க் ஷாட்டில் வரும் செசிங்க் சீன் , வங்கிக்கொள்ளைகள் 2  படமாக்கம் பிரம்மாண்டம், ஆக்‌ஷன் கலக்கல்/./



2. ஹீரோயின் , 2 ஹீரோக்கள் செலக்‌ஷன்ஸ் கன கச்சிதம்.  அந்த ட்விஸ்ட் நல்லா ஒர்க் அவுட் ஆகி இருக்கு.. க்ளைமாக்ஸ்ல ஒரு ட்விஸ்ட் இருக்கு, சபாஷ்.


3  சூப்பர் மேன் சாகச காட்சிகளில் கம்ப்யுட்டர் கிராஃபிக்ஸ் நீட். கொள்ளையர்களை பிடிக்கும்போது ஹீரோவுக்கும் , கொள்ளையர்களுக்கும் நடக்கும் உரையாடல்கள் செம சிரிப்பு 







 சி,பி கமெண்ட் - இந்தப்படம் 2008லயே ரிலீஸ் ஆகிடுச்சு. ஈரோடு வி எஸ் பி ல படம் பார்த்தேன். ஆனா கே டி வில  ஒருக்கா போட்டாங்க. அப்போதான் எழுதனும்னு தோணுச்சு. மீண்டும் வாய்ப்பு கிடைச்சா டோண்ட் மிஸ், ஜாலி எண்ட்டர்டெயின்மெண்ட்

http://topnews.in/light/files/Charlize-Theron_24.jpg

தேனம்மை - இயக்குநர் மகேந்திரன் - சிறுகதை






         முதலில், தனது குடும்பக் கதையைப் பத்திரிகையில் எழுதுவதற்கு சம்மதம் சொன்ன கான்ஸ்டபிள் புகழேந்திக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

""என்னதான் இது உங்களின் உண்மைக் கதை என்றாலும், கதை எழுதுகிறவர்களின் இயல்புப்படி கொஞ்சம் கற்பனையும் சேர்த்துக் கொள்வேன்... பரவாயில்லையா?'' என்று கேட்டபொழுது, ""அதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. என் கதையையே யாரும் நம்பப்போறதில்லை... அதுக்கு நீங்க காது மூக்கு வச்சு எழுதினா மட்டும் என்ன ஆயிடப்போறது'' என்றார் புகழேந்தி... இன்றுதான் முதன்முதலாக  அவரை இப்படி விரக்தியுடன் பார்க்கிறேன்... நேற்றுவரை சிரித்த முகத்தோடு உலாவந்த அவர் யாரும் அறியாத அவருடைய கதையை என்னிடம் இன்று சொல்லவைத்திருப்பதும் இந்த திடீர் விரக்திதான்.

""சொன்னா நம்பமாட்டீங்க'' என்ற எச்சரிக்கையோடு அவர் ஆரம்பித்தாலும், அவர் சொல்வதை எல்லாம் நான் நம்பத் தயாராக இருந்தேன்... அவர்மீது நான் கொண்டுள்ள மரியாதை அதற்கு அடிப்படை என்றால், அவர் என் ஊர்க்காரர் என்ற வகையில் கூடுதலான ஒரு நெருக்கம். புகழேந்தியும் நானும் செட்டிநாட்டில் உள்ள கொத்தமங்கலம் ஆட்கள். நான் சென்னைவாசியாகி பல வருடங்களுக்குப் பிறகு ஒரு ஹோட்டலில் வைத்து தற்செயலாக அவரைச் சந்தித்தேன். பேச்சுவாக்கில் இருவருக்கும் சொந்த ஊர் ஒன்றுதான் எனத் தெரிந்ததும் நட்பாகிவிட்டோம். அவர் சென்னைக்கு மாற்றலாகி வந்து இரண்டு வருஷமே ஆகிறது.

அவர் இளைஞர். நான் நரைத்தவன்... இருந்தாலும் சகவயது நண்பனைப் போல் என்னைப் பாவித்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் வீட்டிற்கு வந்து சந்தித்து சிரித்துச் சிரித்து பேசிவிட்டுப் போவார்... ஆனால் ஒரு தடவைகூட அவர் வீட்டிற்கு வரும்படி என்னை அவர் அழைத்ததே கிடையாது. அதற்கான காரணம் என்ன என்பதைத்தான் இன்று என்னிடம் சொல்லி என்னை அதிர்ச்சியும் வியப்பும் அடைய வைக்கிறார். இருந்தாலும் அவர் சொன்னதை எல்லாம் நிஜம்தான் என நான் நம்புவதற்கு, அவருக்கும் எனக்கும் உள்ள ஒரு பொதுவான குணாதிசயமே ஆதாரம்.

எல்லாரும் மதிக்கும் எழுத்தாளனாக என்னை நான் கற்பனை செய்து கொண்டு என்னையே நான் ஏமாற்றிக் கொண்டிருப்பதைப் போல, நேற்று வரை புகழேந்தியும்கூட ஒரு கற்பனை உலகில் வாழ்ந்திருக்கிறார்.


என் வீட்டில் உள்ளவர்கள் விடுமுறைக்கு கொத்தமங்கலம் போய் விட்டதால் வீட்டில் நிலவிய தனிமையும் நிசப்தமும் புகழேந்தியை மனம்விட்டுப் பேசவைத்தது.

புகழேந்தியின் என்றும் மாறாத சிரித்த முகத்தை இரண்டு வருடங்களாகப் பார்த்துக்கொண்டு அவரது போலீஸ் காலனியைச் சேர்ந்த எல்லாரும் இன்று வரை "அதிசயப்படுவதற்கு'க் காரணமே புகழேந்தியை அவரது மனைவி சித்ரா தினம் தினம் சண்டையிட்டு வீட்டையே ரணகளமாக்கிக் கொண்டிருக்கும் கொடுமைதான்!

கடந்த இரண்டு வருடங்களாக ஒருநாள்கூட விடுமுறை விடாமல் ட்யூட்டி முடித்து அன்பான கணவன் வீட்டிற்குள் வந்ததுமே சித்ரா ஏன் சண்டைக் கோழியாக மாறி அவனைக் குதறி எடுக்கிறாள் என்பதைவிட, காலனிக் காரர்கள் வியப்பது எல்லாம் காலையில் சிரித்தபடியே வெளியே வரும் புகழேந்தியைப் பற்றித்தான்.

அதுவும் வீட்டிற்குள் சித்ரா என்னதான்  கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாலும் எதிர்க் குரலாக புகழேந்தியிடமிருந்து ஒரு முணு முணுப்புகூட வருவதில்லை. ட்யூட்டிக்குப் போக காலையில் வீட்டிலிருந்து வெளியே வரும் புகழேந்தி, குலப்பெருமை காத்து நிற்கும் குணவதியோடு குடும்பம் நடத்தும் மகா அதிர்ஷ்டசாலிபோல அவர்கள் எல்லாரிடமும் சிரித்துப் பேசும் அதிசயத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை; குழப்பமடைகிறார்கள்.

இப்படிப்பட்ட அருமையான புருஷனை அவன் மனைவி ஏன் தினம் தினம் வதைத்துக் கொல்லவேண்டும்? இப்படி சண்டை போடத் தெரிந்த வளுக்கு புருஷன் பிடிக்காவிட்டால் அவனை உதறிவிட்டு சொந்த ஊருக்குப் போய் வசதியாய் பிறந்த வீட்டில் உட்கார்ந்து கொள்ளத் தெரியவில்லையா? இப்படியெல்லாம் காலனிக்காரர்கள் நினைக்க முடியாதபடி சித்ராவின் இன்னொரு வகையான முகம்தான் அவர்களை அதிர்ச்சியடைய வைத்துவிடுகிறது.

புகழேந்திபோலவே சித்ராவும் ஒரு வினோதப் பிறப்புதான். புகழேந்தி வீட்டில் இல்லாதபோது பல தேவைகளை முன்னிட்டு மற்றவர்கள் மாதிரி வீட்டிலிருந்து வெளியே வரும் சித்ரா, "மணாளனே மங்கையின் பாக்கியம்' என வாழ்கிற உத்தமக் குலவிளக்காய், காலனிப் பெண்களிடம் அன்பும் கருணையும் பொங்க அவள் இனிமையாகப் பேசிப் பழகும் வினோதம் எல்லார் வாயையும் அடைத்துவிடும். ""இவளுக்கே தெரியாமல் இவளுக்குள்ளே புகுந்துவிடும் மோகினிப் பிசாசுதான் புகழேந்தி யைக் குதறி எடுத்து அவனை பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது போலிருக்கிறது. பாவம், புருஷனிடம் சண்டைக்கோழியாக தான் உருமாறுவதெல்லாம் இவளுக்குத் தெரியாது என்றுகூட அந்தக் காலனிவாசிகள் பயத்துடன் சந்தேகப்படத் தொடங்கினார்கள். இப்படி, சித்ராவைக் குறித்துப் பரிதாபப் படுகிறவர்களாகவும் புகழேந்தியைக் குறித்து அதிசயப்படுகிறவர்களாகவும் இரண்டு கோணங்களில் அல்லாடிக் கொண்டிருந்த காலனிக்கு வெளியூரிலிருந்து விருந்தாளியாக வந்த பெண் ஒருத்தி புகழேந்தி குடும்பத்தைப் பற்றி சகலத்தையும் கேட்டுவிட்டு புதிதாக ஒரு புதிரை அந்தப் பெண்களிடம் விதைத்து விட்டாள்.

""எனக்கும் கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் பிள்ளை பிறக்கா மல் ஊருக்குள் நான் அவமானப்பட்டப்ப, இந்த சித்ரா மாதிரித் தான் எனக்கும் என் புருஷன்மேல ஆவேசம் வந்து தினசரிக்கும் அந்த ஆளை கொதிக்கிற எண்ணெயில் போடாத குறையாக வறுத்துக் கொண்டி ருந்தேன். ஆனா அந்த ஆளு இந்த அப்புராணி புகழேந்தி மாதிரி இல்லே... என்னைப் போட்டு காட்டடி மாட்டடியாய் உதை பின்னிப்பிடுவாரு. ஆனா என்னைக்கு எங்களுக்கு ஒரு புள்ளை பொறந்துச்சோ அந்த நிமிஷத்திலிருந்து நாங்க ரெண்டுபேரும் அடியோட மாறிட்டோம். இன்னிக்கும்கூட, நேத்துத் தான் தாலி கட்டினமாதிரி நாங்க நடத்துக்கிறதைப் பார்த்து ஊரே மூக்கில விரல் வைக்குது...'' என்று சொல்லி வைத்தாள் அந்த விருந்தாளி.

இதற்குப் பிறகு "எதைக் குடித்தால் பித்தம் தீரும்' என்றிருந்த காலனிப் பெண்களுக்கு இப்போது தற்காலிகமாக ஒருவித ஆறுதல் கிடைத்தது. சித்ராவுக்கும் ஒரு குழந்தை பிறந்தால் புது மனுஷியாகிவிடுவாள்... அப்புறம் புருஷனை வதைப்பதை நிறுத்திவிடுவாள் என்று தீர்மானித்து கொஞ்சம் மௌனிக்கத் தொடங்கினார்கள்.

-இப்படி புகழேந்தி சொல்லிவரும்போது நான் அவசர மாய்க் குறுக்கிட்டேன்.

""புகழ்... இதுவரைக்கும் நீங்க சொல்லிவர்றதெல்லாம் சங்கீத வித்வான் ராக ஆலாபனை பண்றமாதிரித்தான் எனக்குத் தோணுது. நீங்கள் இன்னும் பாடத்தொடங்கவே இல்லையே.'

""என்னசார் சொல்றீங்க?''

""புகழ்! நீங்க இதுவரை சொன்னதுலே எனக்கு சில விஷயங்கள் புரிஞ்சுக்கிற மாதிரி தெளிவா இல்லே. உங்க சம்சாரம் ரெண்டு வருஷமா உங்களோட சண்டை போடுறாங்கன்னா, எதைக் காரணம் சொல்லி சண்டை போடுறாங்க? இந்தமாதிரி பொஞ்சாதியாலே வீட்டுக் குள்ளே அவஸ்தைப் படுற நீங்க வெளியே எப்படி சிரிச்ச படி நடந்துக்க முடியுது? இதெல்லாம் எனக்கு காத்துல கை வீசுறமாதிரி இருக்கு.''

""அடுத்தாப்ல அதைத்தான் சார் சொல்ல இருந்தேன். நீங்க பொறுமை இழந்துட்டீங்க.''

""சாரி புகழேந்தி...''

""எங்கிட்ட சண்டைபோடுறப்ப எல்லாம் சித்ரா திரும்பத் திரும்ப ரெண்டே ரெண்டு விஷயங்களைத்தான் குத்திக்காட்டுவா... "நீ பொழைக்கத் தெரியாத ஆம்பி ளைய்யா... நீ சம்பாதிச்சு கொண்டு வர்றதெல்லாம் ஒரு சம்பாத்தியமா?' ரெண்டாவது, நீ ஒரு கொலைகாரன்... உன் ஜாதக தோஷம்தானே என் புள்ளையைக் கொன் னுச்சு... எம் முன்னாலேயே வராதே....'' இந்த ரெண்டை வச்சே  எல்லாத்துக்கும் வம்புக்கு இழுப்பா... உன்னை மாதிரி ஒருத்தனுக்கு சட்டை எதுக்கு? சாப்பாடு எதுக்கு? இப்படி தொடுத்துக்கிட்டே போவா''

""என்ன புகழேந்தி.... உங்களுக்கு குழந்தை பெறந்து இறந்தது உண்மையா?''

""ஆமா சார்... ஆனா அது இங்கே இல்ல. ஊர்லே...''

""சாரி புகழ்... சரி, உங்க கல்யாணம் ஆனப்ப சித்ரா எப்படி?''

""எல்லாரும் அதிசயப்படற அளவுக்கு அன்பானவ  சார்... சித்ரா என் சொந்த மாமா பொண்ணு...  எங்க மாமாவுக்கு விவசாயம்தான் பிரதானம்... தவிர ஜோசியம் சொல்றது ஜாதகம் பாக்குறதுலே ஊருக்குள்ளே அவருக்கு பெரிய பேரு... நல்ல வசதியான வீட்ல பொறந்தும் சித்ராவுக்கு மட்டும் ஆடுங்களை மேய்க்கிறதுலேதான் அலாதிப்பிரியம்... ஆடுங்ககிட்டே காட்டுற அன்பை எல்லாம் ஊரிலே இருக்குற எல்லார்கிட்டேயும் காட்டுவா... அப்படி ஒரு பாசக்காரி... இப்படி இனிமையான ஒருத்திக்கு சித்ரான்னு பெயர் வச்சதுக்குப் பதிலா, எங்க நகரத்தார் பெண்களோட அழகான பெயர்கள்லே ஒண்ணான "தேனம்மை'ன்னு பெயர் வச்சுக்கலாமேன்னு நினைச்சுக்குவேன். எல்லாத்துக்கும் மேலே அவளோட அழகு...! காட்டுப் பக்கம் அவ ஆடு மேய்க்கிறதே பார்த்தா, "ஆடு மேய்க்கிற ராஜகுமாரி' மாதிரி இருப்பா. இதெல்லாம்தான் நான் அவளைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கக் காரணம். கல்யாணத்துக்கு முன்னாடியே நானும் சித்ராவும் புருஷன் பெஞ்சாதி மாதிரித்தான் நடந்துக்கிட்டோம். கல்யாணமாகி அஞ்சாவது மாசமே பெறந்த எங்க குழந்தை யைக் கையிலே ஏந்துறதுக் குள்ளே கண்ணை மூடிருச்சு. ஜோசியம் ஜாதகத்துல பெரிய ஆள்னு பேர் வாங்குன மாமாவுக்கு இப்படியெல்லாம் நடக்கும்னு முன்னாடியே தெரியாமப் போச்சா? இதெல் லாம் நடந்து ஒரு வருஷம் ஆனப்பதான் ஏதோ மந்திரம் போட்ட மாதிரி சித்ரா திடுதிப் புன்னு அடியோட இப்படி ஆளே மாறிட்டா...  அப்பதான் சென்னைக்கு மாத்தல் ஆகி இங்கே வந்தேன்...

சித்ராவுக்கு இந்த மாதிரி எதிர்பாராம எப்படி திடீர் குண மாற்றம் ஏற்பட்டுச்சோ, அதே போல என்னைக்காச்சும் ஒருநாள் அவ மறுபடியும் அதிசயம்போல பழைய அன்பான சித்ராவா மாறுவாங்குற நம்பிக்கை இப்பவும் எனக்கு இருக்கு. அவளை ஒரு மனநோயாளியா நினைச்சு அனுதாபத்தோடதான் அவளைப் பார்த்தேனே தவிர அவளை வெறுக்குறதுக்கு என் அறிவு இடம் குடுக்கலே. ஆனா என்னைச் சுத்தி உள்ளவங்க என் சிரிச்ச முகத்தைப் பார்த்து சந்தேகப்படுறதுலே தப்பே இல்லே... என்னோட மகிழ்ச்சிகரமான கற்பனை வாழ்க்கையைப் பத்தி அவங் களுக்கு என்ன தெரியும்?''.

புகழேந்தி தனது கற்பனை வாழ்க்கையின் மர்மத்தை இப்போது உடைத்தபொழுது அந்த உண்மையை நான் ஜீரணிக்கவில்லை என்பதும் என் மனதிற்குள் அவநம்பிக்கை முளைத்துவிட்டது என்பதும் என் முக மாற்றத்தை வைத்தே புத்திசாலியான புகழ் புரிந்துகொண்டார்.

""என்ன சார்... போலீஸ்காரங்க பொய்க்கேசு போடுவாங்கன்னு சொல்ற மாதிரி நான் சொன்னதையும்

அந்த லிஸ்ட்லே சேர்த்துட்டீங்களா?''.

""அப்படி இல்லே புகழேந்தி. உங்களுடைய இந்த மானசீகமான வாழ்க்கை மட்டும் நடைமுறைக்கு சாத்தியம்னா, உங்களை முன்மாதிரியா எடுத்துக்கிட்டு யாருமே விவாகரத் துக்காக கோர்ட்டுக்கு ஓடமாட்டாங்க. மொத்தத்துலே புருஷன் பெஞ்சாதி பிரிவுக்கே உலகத்துலே அவசியம் இல்லாமப் போயிடும்''.

""சார்... நீங்க எந்த வெளிநாட்டுக்காவது போயிருக்கீங்களா?''.

""போனதில்லே... ஏன் கேக்குறீங்க?''.

""நீங்க போனதில்லே, பார்த்ததில்லேங்குறதுக்காக, இந்த ஜப்பான், சைனா, ரஷ்யா, அமெரிக்கா எல்லாம் இந்த பூமியிலே இல்லேன்னு ஆயிருமா?''.

""இது விதண்டாவாதம்''.

""அப்ப, சுய உணர்வோட நான் வாழ்ற கற்பனை வாழ்க்கை மட்டும் உங்களுக்கு சாத்தியமில்லாத ஒண்ணாகவும் கட்டுக்கதையாகவும் ஏன் தோணுது? பல வருஷங்களுக்கு முன்னாலே, கால் இல்லாத ஒரு மனிதனுடைய "ஒலிம் பிக்ஸ்லே ஓடணும்'ங்குற எண்ணத்தை சாத்தியமில்லாத ஒண்ணுன்னுதான் எல்லாரும் சிரிச்சிருப்பாங்க. ஆனா கால்கள் இல்லாத "ஆஸ்கர் பிஸ்டோரி யஸ்' செயற்கைக் கால்களோட ஓடி, போன ரெண்டுமுறை  தனக்கான பிரிவுள்ள ஒலிம்பிக்ஸ்லே உலக சாதனை படைச்சப்ப, ஆச்சரியப்பட்ட உலகத்துல நீங்களும் ஒருத்தர். இல்லியா சார்? என்னுடைய செயற்கையான வாழ்க்கைக் கான நியாயத்தை மட்டும் நீங்க புரிஞ்சுக்கிட்டா, என் கற்பனை உலகம் எனக்கு எப்படி சாத்தியமாச்சுன்னு தெரிஞ்சுக்குவீங்க. துரதிர்ஷ்ட வசமா என் அன்பு மனைவி சித்ரா இப்படி வேற ஒருத்தியா மாறினதைப் பொறுக்காம அவளை நான் பொறந்த வீட்டுக்குத் துரத்தி அடிக்கலே. இந்த விவாகரத்தைப் பத்தி நான் கற்பனைகூடப் பண்ணதில்லே. இன்னொரு பெண் ணைத் தேடி நான் ஓடவும் இல்லே... இதெல்லாம் எப்படி எனக்கு சாத்தியமாச்சு? இப்பவும் என் சித்ராவெ நேசிக்கிறேன். அவளுக்காகப் பரிதாபப்படுறேன். மறுபடியும் பழைய சித்ராவா அவ ஒருநாள் புதுப்பிறவி எடுப்பான்னு முழு நம்பிக்கையோட இருக்கேன். அந்த அற்புதமான நாள் வரும்போது வரட்டும்னு நான் முடிவு எடுத்தப்பதான்,

அப்படி ஒரு கனவு எனக்கு வந்துச்சு.''

""பகல் கனவா?''.

""இல்லே சார்... சத்தியமா இல்லே... நான் ஆரம்ப காலத்து அன்பான சித்ராவ நினைச்சபடியே தூங்கப்போன ஒரு ராத்திரிதான் அந்த மாதிரி விநோதக் கனவு கண்டேன். எங்க ஊர் வயக்காட்டு வேப்பமரத்தடியிலே நான் களைச்சுப்போய் உக்காந்திருக்கிற மாதிரியும், என் பக்கத்துலே என் மனைவிபோல ஒரு பெண்- முகம் தெளிவாத் தெரியலே- எனக்கு நெருக்கமா உட்கார்ந்தபடி ஆசையோட உரிமை யோட என் கைவிரல்களை எடுத்து நீவி விடுறா. இப்படி அந்தக் கனவுலே வந்தவ மாதிரித்தான் என் சித்ராவும் நாங்க காதலிச்ச காலத்துலேயும், கல்யாணம் பண்ணிக்கிட்டப்பவும் என் கைவிரல்களை நீவிவிட்டு சந்தோஷப்படுவா.

அதே கனவுல சித்ராவும் தூரத்துலே நின்னு ஆடுங்களை மேய்ச்சபடி எங்க ரெண்டுபேரையும் பார்த்து ஏதோ பரிகாசம் பண்ணிச் சிரிக்கிறா.  ஆனா என் மனைவியாக என்னோட இருக்கறவள் என் விரல்களை நீவி விடுறதை நிறுத்தலே... அப்போ சித்ராவின் முரட்டு ஆடு ஒன்று எங்களைப் பார்த்து முட்டுவதுபோல பாய்ந்து வருகிறது. அவ்வளவுதான், கனவு மறைஞ்சிடுச்சு. விடிந்தபிறகும் அந்தக் கனவு எனக்கு இனம்புரியாத ஒருவித ஆறுதலைக் கொடுப் பதுபோல உணர்ந்தேன். நம்முடைய கஷ்டங்களை எல்லாம் கண்ணுக்குத் தெரியாத கடவுளிடம் சொல்லி நிம்மதி அடைகிறோமே...!

அதுபோலவே... இன்னார் முகம் என்று சொல்ல முடியாத படி அந்தக் கனவில் என் மனைவியாக வந்தவள் எனக் குள்ளிருந்த மன இறுக்கத்தைத் தளர்த்தி விட்டாள் என்றுதான் சொல்வேன். பிறகு அந்தக் கனவு மனைவியே பகலிலும் எனக்கான பணிவிடைகளை ஆத்மார்த்தமான அன்போடும் பரிவோடும் செல்வதுபோல நான் விளையாட்டாக கற்பனை செய்ய அந்தக் கற்பனையே எனக் குள் இனம்புரியாத மலர்ச்சியைத் தோற்றுவித்தது. பிறகென்ன? அந்தக் கற்பனையே எனது நிரந்தரமான- செயற்கையான வாழ்க்கையாகிவிட்டது. என் மகிழ்ச்சியும் நிரந்தரமானது; சாத்தியமானது. என் கற்பனை மனைவிக்கு "தேனம்மை' எனப் பெயர் வைத்தேன். என் மனைவி சித்ராவைக்கூட கல்யாணத்திற்கு முன்னால் "தேனம்மை' என்று அழைக்க ஆசைப்பட்டவன் அல்லவா நான்?

தேனம்மை இரவு பகல் எந்நேரமும் என்னிடம் அன்பைப் பொழியும் மனைவியாக வாழ்வதுபோலவும், மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லாத வாழ்வு வாழ்வதாகவும் என் மனம் குதூகலப் பட்டது.

இப்படி என் கற்பனை வாழ்க்கை என்னை எப்போதும் சிரித்தபடி வைத்திருக்க, சித்ரா என்னதான் கூச்சல் போட்டு ரகளை செய்தாலும் அவள் செய்கை எல்லாம் எனக்கு மௌனப்படம் பார்க்கிற மாதிரிதான் ஆனது. இப்படி என் அந்தரங்கம் மகிழ்ச்சியில் திளைக்கும்போது என் முகத்திலும் புன்னகையும் மலர்ச்சியும் நிரந்தரமாகிவிட்டது. இந்த என்னுடைய ரகசிய வாழ்க்கை பற்றி வேறு யாருக்கு என்ன தெரியும்? சித்ராவை ஒரு கொடுமைக்காரி என்றும் என்னை ஒரு அப்பாவி என்றும் நினைப்பவர்கள் எப்பேர்ப்பட்ட ஏமாளிகள்? இரவு பகல் எந்நேரமும் தேனம்மை அடிக்கடி என் காதுகளில் இதழ் பதித்து "எல்லாரிடமும் எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பு காட்டுங்கள். உங்களுக்கு எந்தக் குறையும் வரவே வராது' என்று மந்திரம் சொல்லும்போதெல்லாம் பழைய சித்ராவைத்தான் தேனம்மை எனக்கு நினைவூட்டுவாள். இப்போதும் சித்ராவை நான் நேசிப்பதற்கு இந்தக் கற்பனை தேனம்மைதான் காரணம்...''.

""வீட்டுலே உங்களுக்குச் சமைச்சுப் பரிமாறுறதும் அந்தத் தேனம்மை தானா புகழ்?''.

""ஏன் சார் சுத்தி வளைக்கிறீங்க. இப்படி? நேரிடையாவே கேளுங்களேன். கனவுலே மனைவியாத் தெரிஞ்சவளை தேனம்மைன்னு பேர் வச்ச குடும்பம் நடத்துறதாச் சொல்றியே. நீ சிரிச்சபடி வாழ்றதுக்கு அவ தான்னு வேறே கதை விடுறியே... இப்படி எல்லாம் பித்துக் குளித்தனமாய் பேசுறதுக்கு உனக்கு வெக்கமா இல்லே?ன்னு கேக்க நினைக்கிறீங்க...

இல்லியா சார்''.

""நோ... நோ... அப்படி இல்லே புகழேந்தி''.

""இப்படி நீங்கள் இல்லேன்னு சொல்றது என் மேலே நீங்க வச்சிருக்கிற மரியாதையாலே சார். எனக் குப் புரியாதா என்ன. ஏன் சார்... "திருப்பதிக்குப் போய் ஏழுமலையானை வேண்டிக் கிட்டேன். என் வியாதி குண மாயிடுச்சு. வேளாங்கண்ணி போனேன், என் கஷ்டமெல் லாம் நீங்கிடுச்சு. பழனிக்குப் போய் நேந்துக்கிட்டேன். கோர்ட்டுலே என் கேஸ் ஜெயிச்சிடுச்சு...' இப்படி ஒவ்வொருத் தரும் தங்களோட கஷ்டம் தீர்ந்ததுக்கு ஆளுக்கொரு கடவுள் பேரைச் சொல்லுவாங்க. நீங்களும் நம்புவீங்க. ஆனா நான் உண்டாக்கின தேனம்மை எனக்கு சந்தோஷத்தைக் குடுக்கு றாள்னு சொன்னா மட்டும் நம்ப மாட்டீங்க. எல்லா தெய்வங்களுக்கும் பேர் வச்சதே நாம்பதான் சார்... இப்ப நான் ஒரு தெய்வத்துக்கு தேனம்மைன்னு பேர் வச்சேன். நீங்க பரிகாசமாப் பார்க்குறீங்க. இதையே நான் கொஞ்சம் மாத்தி பக்கத்து ஊருலே இருக்குற "தேனாண்ட அம்மன்' கோயிலுக்குப் போயி தினமும் விளக்கு ஏத்துனேன்.

அதுதான் என்னோட சந்தோஷத்துக்கும் சிரிப்புக்கும் காரணம்னு சொல்லியிருந்தா நம்புவீங்க, இல்லே?''

""புகழேந்தி... என் கேள்விகள் எல்லாம் வெளிச்சத்தை அதிகமாக்க விளக்கின் திரியைத் தூண்டி விடுகிற மாதிரிதான்... இப்பொழுது நான் உங்களிடமிருந்து இன்னும் பிரகாசமான வெளிச்சத்தை எதிர்பார்க்கிறேன். தேனம்மையுடன் நேற்று வரை மகிழ்ச்சிகரமாக இருந்த நீங்கள் இன்று திடீரென

அந்த விளக்கே அணைந்தமாதிரி விரக்தியோடு என்னிடம் வந்தது ஏன்?''.""நேத்து ராத்திரி என் தேனம்மை இறந்துட்டாள் சார்''.

""புகழேந்தி...?!''

""கற்பனை மனைவி எப்படி சாக முடியும்னுதானே நினைக்கிறீங்க? கனவுல வந்த பெண்ணைத்தானே என் மனைவியா பாவிச்சு ஏத்துக்கிட்டேன். அப்போ, கனவுலே தேனம்மை இறந்ததையும் ஏத்துக்க வேண்டியவன்தானே நான்?''.

""அந்தக் கற்பனைப் பெண்ணுக்கு நீங்கள் நினைத்தால் உயிர் கொடுக்கலாமே?''.

""தேனம்மையைக் கொன்றவனே நான்தான் சார்...

அவளுக்கு நானே எப்படி உயிர் கொடுக்க முடியும்?''.

""எனக்குப் புரியலே''.

""கடந்த ரெண்டு வருஷமா என்னை சந்தோஷமா வச்சிருந்த தேனம்மை நேத்து ராத்திரிகூட "எந்தக் கவலையும் இல்லாமத் தூக்குங்க ராஜா' என்று தட்டிக் கொடுத்துதான் என்னைத் தூங்க வைத்தாள். விடியல் கருக்கலில் ஒரு கனவு. அந்தக் கனவில் தேனம்மை இரண்டு பெண்களாக எனக்கு மாறி மாறித் தெரிகிறாள். என்னைப் பார்த்து ஆத்திரப்பட்டுச் சண்டையிடும்போது அவள் சித்ராபோலவும், அவளே எனக்கருகில் வந்து சிரிக்கும் போது தேனம்மையாகவும் தெரிகிறாள். நான் குழப்ப மடைகிறேன். இனிமேலும் உன்னோடு வாழத் தயாராய் இல்லை. உன்னுடைய ஜாதக தோஷத்தினால்தானே என் பிள்ளை செத்தது. நீ ஒரு கொலைகாரன். நிரந்தரமாக உன்னை விட்டுப் போகிறேன். என் பின்னால் வராதே...' என்று அவள் சித்ராவாக மாறிக் கூச்சலிட்டபடி தலைவிரிகோலமாகத் தெருவைப் பார்த்து ஓடுகிறாள்.

தெருவில் படுவேகமாகப் போய்க்கொண்டிருக்கும் வாகனங்களில் அடிபட்டுச் சாகவேண்டும் என்பதற்காகவே தெருவின் குறுக்கே வேகமாகப் போகிறாள். என்னால் சித்ராவைப் பின்தொடர முடியவில்லை. என் கால்கள் கட்டிப் போட்டதுபோல  உணர்கிறேன். "போகாதே' என்று கத்திக் கூப்பிடவும் எனக்கு வாய் வரவில்லை. ஆணி அடித்ததுபோல் நான் பார்த்துக் கொண்டு நின்றிருந்த போதுதான் வெளியே ஒரு லாரியில் சித்ரா அடிபட்டுத் தூக்கி எறியப் படுகிறாள். இப்போது என் கால்கள் நகரத் தொடங்க தெருவிற்கு ஓடுகிறேன். ரத்தச் சேற்றில் இறந்து கிடக்கும் சித்ராவைத் தூக்கி என் மடியில் கிடத்தி  அவள் முகத்தைப் பார்க்கிறேன். அது சித்ரா இல்லை. தேனம்மை. "எல்லாரையும் நேசியுங்கள்' என்பதுபோல அவள் முகத்தில் அந்தப் புன்னகை மட்டும் உயிரோடு இருக்கிறது.

"எந்தப் பிரதிபலனும் பாராமல் எல்லாரிடமும் அன்பு காட்டுங்கள்' என்று இரண்டாண்டு காலமாகச் சொல்லிக் கொண்டிருந்த தேனம்மையின் மந்திரத்தை மறந்துவிட்டு, கனவில் தெருவை நோக்கி ஓடிய சித்ராவைத் தடுத்து நிறுத்த முடியாமல், "செத்தால் சாகட்டும்' என்று நினைத்து நின்று விட்டேனா? அப்படியா அவளை நான் வெறுத்தேன்? கிடையவே கிடையாது. தெருவில் அடிபட்டுச் செத்தவள் சித்ரா என்று பதறித்தானே அவளை எடுத்து என் மடிமீது போட்டேன். அப்புறம்தானே இறந்தவள் தேனம்மை என்று தெரிந்தது. அத்துடன் அந்தக் கனவு கலையவில்லை. தொடர்கிறது. ஒரு  மயானத்தில் நான் கண்ணீருடன் நிற்கிறேன். எனக்கு அன்பைப் போதித்த தேவதை சிதையில் எரிந்துகொண்டிருக்கிறாள்.

அப்போது, யாரோ ஒரு பெண் ணின் வளையல்கரங்கள் என் கண்ணீரைத் துடைத்து விடுகிறது. அவள் யாரென்று எனக்குத்  தெரியவில்லை. எரியும் கொள்ளியிலிருந்து ஒரு தீப்பொறி பறந்து வந்து என் முகத்தில் விழுந்து நீர்த் துளியாக மாறுகிறது. இத்து டன் அந்தக் கனவும் செத்து விட்டது. அவசரமாக எழுந்து உட்கார்ந்தேன். என் உடம்பெல்லாம் நடுங்கியது. ஏதோ கருகித் தீய்ந்த நெடி என்னைச் சுற்றிலும் பரவி யிருப்பது மாதிரி உணர்வு. கொஞ்சம் தள்ளியிருந்த சித்ரா வின் கட்டிலைத் திரும்பிப் பார்த்தேன். அங்கே சித்ரா வைக் காணோம். அவளைத் தேடவேண்டும் என்ற வழக் கத்திற்கு மாறான அவசரத் தூண்டுதல் எனக்குள்ளே.

அடுக்களைப் பக்கம் போனேன். அங்கேயும் அவள் இல்லை. புழக்கடையிலோ, வாசல் பக்கமோ எங்கேயும் அவள் தட்டுப் படவில்லை. என்னை மீறிய பதற்றம் எனக்குள் தொற்றிக் கொண்டது.

ஸ்டோர் ரூம் கதவுகள் திறந்து கிடந்தன. அவநம்பிக்கை யோடு எட்டிப் பார்த்தேன். அங்கே இருட்டில் சுவர் ஓரமாக தரையில் உட்கார்ந்து மேல் நோக்கி மடக்கியிருந்த கால் களைக் கட்டிக்கொண்டு முழங்கால்களில் முகம் பதித்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருக்கிறாள் சித்ரா. நான் எதுவும் கேட்கவில்லை. என் கனவுதான் என்னை இம்சித்துக் கொண்டிருக்கிறதே... கனவில் இடுகாடுவரை போய்த் திரும்பியிருக்கிறேன் என்பதால் அவசரமாகக் குளித்து முடித்தேன். இந்த இரண்டு வருஷத்தில் முதன்முறையாக என் தேனம்மை பக்கத்தில் இல்லாமல் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு உங்களைப் பார்க்க வந்தேன்.''

புகழேந்தியிடம் உடனே என்னால் எதுவும் பேசமுடிய வில்லை. தேனம்மை பற்றி அவர் கடைசியாகக் கண்ட கனவு என்னையும் கொஞ்சம் பதற்றம் கொள்ள வைத்தது. அதேசமயம் புகழேந்தியின் வினோத சொப்பனம் என்னை யோசிக்கவும் வைத்தது. தேனம்மையே சித்ராபோல ஒரே உருவத்தில் மாறிமாறி அநிதக் கனவில் தெரிந்ததாக புகழேந்தி சொன்னார். ஆக, கனவில் இரண்டு பெண்கள் வரவில்லை என்பது உறுதியாகிவிட்டது. தேனம்மையின் அன்பு நிறைந்த உள்ளம் ஆரம்ப காலத்து சித்ராவைப்போலவே இருந்ததாக புகழேந்தி சொல்லியிருக்கிறார். தனக்குப் பரிச்சய மான எந்த ஒரு பெண்ணின் முகத்தையும் தேனம்மைக்கு ஒட்டவைத்துப் பார்க்காதது புகழேந்தியின் கண்ணியம். சித்ராவிற்கும் தேனம்மைக்கும் உடல் அமைப்பில் என்ன மாதிரி ஒற்றுமை அல்லது வித்தியாசம் இருந்தது என்ற நுணுக்கங்கள் எல்லாம் புகழேந்தி சொல்லவே இல்லை. அதை அவருடைய நாகரீகமாக எடுத்துக்கொள்ளலாம். சித்ராவிட மும் தேனம்மையிடமும் அவர் கண்ட பேரழகு அவர்களின் பரிசுத்தமான அன்பு மட்டும்தான் என்பதை புகழேந்தியின் வாக்குமூலம் மிக அழுத்தமாய்ப் பதிவு செய்கிறது. இந்த ஒரு வலுவான மன ஓட்டத்தின்படி பார்த்தால் அன்பே உருவான அந்தப் பழைய சித்ராவைத்தான் அவர் தேனம்மையாக கற்பனையில் உருவாக்கிக்கொண்டு, "இப்படி ஒருத்தியாக

 -அதாவது அந்தப் பழைய சித்ராவாக இன்றைய சித்ரா எப்போது மாறுவாள்?' என்ற அவரது ஆழ்மன ஏக்கமே அவரது கற்பனை வாழ்க்கையாக அமைந்துவிட்டதா? இந்தக் கற்பனை வாழ்விற்கு தூண்டுதலாக அவர் சொன்ன கனவில்கூட அவரது விரல்களை நீவிவிட்ட "மனைவி'யைப் பற்றிச் சொல்லும்போதுகூட "ஆரம்பத்தில் சித்ராவும் இப்படித்தான் என் விரல்களை ஆசையாக நீவிவிடுவாள் என்று குறிப்பிட்டாரே... நேற்று ராத்திரி அவருக்கு வந்த விபரீதமான கனவுகூட அவரது ஆழ்மன பயத்தின் வெளிப்பாடாகத்தான் தோன்றுகிறது.

தன் மனதில் இருப்பதையெல்லாம் என்னிடம் இறக்கி வைத்துவிட்டு என் முன்னால் புகழேந்தி அமைதியாக உட்கார்ந்திருப்பதுபோல் தோன்றினாலும், அது உண்மை யான அமைதி அல்ல என்பதும், அதற்கான காரணமும் எனக்கு விளங்குகிறது.

""புகழேந்தி... உங்களிடம் அதீத அன்பு காட்டிய தேனம்மையை நினைத்துக்கொண்டு உடனே வீட்டிற்குச் செல்லுங்கள். சித்ரா இப்போதும் தனி அறையில் அமைதி யாக உட்கார்ந்திருந்தால், ஏன், என்னாச்சு... உடம்புக்கு ஏதாவது?'' என்று கனிவுடன் விசாரியுங்கள். கனவில் தெருவை நோக்கி ஓடிய சித்ராவைத் தடுக்க இயலாமல் நின்றுவிட்டதுபோல இப்போதும் நடந்துகொள்ளாதீர்கள். உடனே புறப்படுங்கள். பிறகு மறக்காமல் எனக்கு போன் பண்ணி விவரம் சொல்லுங்கள். வழக்கத்திற்கு மாறாக சித்ராவின் இன்றைய அமைதி எனக்குப் பயத்தைக் கொடுக்கி றது'. என் வேண்டுகோளை எதிர்பார்த்துக் காத்திருந்தவர் போல உடனே புறப்பட்டார் புகழேந்தி.

புகழேந்தி போன பிறகு புகழேந்தி சொன்னதையெல்லாம் ஆதி முதல் அந்தம் வரை திரட்டி வைத்துக்கொண்டு என் மனம் ஏதேதோ கற்பனைகளை யூகிக்கத் தொடங்கியது.

கொத்தமங்கலத்தில் சித்ராவின் குடும்பத்தைப்போல புகழேந்தியின் குடும்பம் வசதி படைத்த ஒன்றாக இருக்க முடியாது. அதனால்தான் போலீஸ் வேலையில் சேர்ந்து குடும்பத்தைக் காப்பாற்றும் கட்டாயம் புகழேந்திக்கு வந்தி ருக்கிறது. சித்ராவின் தகப்பனாருடைய ஜாதக ஜோசிய மெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் அவர் வசதி யானவர் என்பதால் சித்ராவிற்குப் பெரிய இடத்து மாப்பிள்ளை யைத்தான் எதிர்பார்த்திருப்பார். ஆனால் காதலோ அவர் களைக் கணவனும் மனைவியும்போல் பழகவைத்துவிட்டது. மகள் சித்ரா கருவைச் சுமக்கிறாள் என்று அறிய நேர்ந்ததும் அவரால், அவர்களின் கல்யாணத்தை தடுக்க முடியாது போயிருக்கும். ஆனால் குழந்தை பிறந்தவுடனேயே  இறந்த தும் சித்ரா மனம் நொறுங்கிப்போன தருணத்தில், மகளை ஆறுதல் படுத்தும் சாக்கில் புகழேந்தியின் ஜாதக தோஷம் தான் குழந்தை இறக்கக் காரணம் என்பதை எல்லாம் ஒன்றுக்கு பத்தாகச் சொல்லி மருமகன் மீதிருந்த வெறுப்பையும் ஆத்தி ரத்தையும் காட்டியிருப்பார். குழந்தையைப் பறிகொடுத்து நொந்திருந்த சித்ராவின் பலவீனமான மனம், அப்பாவின் ஜாதக விளக்கத்தை நம்பியதன் விளைவு புகழேந்திதான் கொலைகாரன் என நம்பிவிட்டாள். மருமகனைப் பழிவாங்கு வதாக நினைத்து மகளிடம் திரும்பத் திரும்ப புகழேந்தி

அவளுக்குப் பொருத்தமில்லாத கணவன் என்பதாக அவர் சொன்ன கட்டுக்கதைகள் எல்லாம் உலகம் அறியாத அந்தப் பெண்ணை மனம் பேதலிக்கச் செய்திருக்க வேண்டும்.

இப்படி நேரான வழியில் போன என் கற்பனை விபரீத மாகவும் யோசித்தது. புகழேந்தியிடம் சண்டை போடுகிறவள் காலனிப் பெண்களிடம் அசாத்திய அன்பு காட்டி அவர் களை அதிர்ச்சியடைய வைத்ததாக புகழேந்தி சொன்னாரே. வீட்டினுள் ஒருத்தியாகவும், உலகத்திற்கு ஒருத்தியாகவும் இரட்டை வேடம் போடுவது மனச்சிதைவு கொண்ட ஒரு பெண்ணிற்கு சாத்தியமா? இதுதான் எனது வினோதக் கற்பனைக்கு வழிகாட்டியது. கண்ணுக்குப் புலப்படாத ஒரு தேனம்மையுடன் இரண்டு வருடங்கள் புகழேந்தி வாழ்ந்ததுபோல... (இந்த நொடியே எல்லாம் புரிந்துகொண்டு வாசகர்கள் மனதில் கசப்பு உதயமாகியிருக்கும். சித்ராவை இழிவுபடுத்தும் வக்கிரம் எனக்கு இல்லை.)

சித்ராவும் ஏன் ஒரு கற்பனை வாழ்க்கை வாழ்ந்திருக்கக் கூடாது? மருமகன் தகுதியைக் கேவலமாகப் பேசிய அப்பா விற்குப் பதிலடியாக, அவளது  ஆழ்மனம் சாதாரண கான்ஸ்டபிளான புகழேந்தியை ஒரு உதவி கமிஷனராக கற்பித்துக்கொண்டு, சித்ராவின் மடி நிறையச் சம்பாதித்துக் கொட்டும் கணவனாக இருக்கும் புகழேந்தியின் பெருமைக் குரிய மனைவியாகப் பூரிப்படைந்தவளாய் காலனிப் பெண்களிடம் எந்தக் குறையும் இல்லாதவளாக இனிமை யாகப் பழகியிருக்கலாம். "எல்லாம் நம்ம மனசைப் பொறுத்தது' என்று சும்மாவா சொல்கிறார்கள்.

உதவி கமிஷனராக புகழேந்தி இப்போது கை நிறையச் சம்பாதிக்கிறான் என்ற பொய்யான மகிழ்ச்சியில் தனக்குப் பிறந்த குழந்தையின் இழப்பைக் கூட அவள் சாதாரணமாக எடுத்துக்கொண்டிருக்கலாம். அல்லது மறந்திருக்கலாம்.

ஆனால் டியூட்டி முடிந்து வெறும் கான்ஸ்டபிள் புகழேந்தியாக கணவன் வீட்டிற்குள் நுழைந்தவுடன், அவளின் கனவு கள் இடிந்து நொறுங்கி, தகப்பனால் புருஷனை வெறுக்கப் பழகிவிட்ட சித்ராவாக மாறிவிடுகிறாளா? புகழேந்தி சொன்னதையெல்லாம் வைத்துக்கொண்டு இப்படி நான் தர்க்க சாஸ்திரத்திற்கு முரணாக யோசிப்பது முட்டாள்த்தனமாக இருக்கலாம். ஆனால் சித்ரா ஒரு விசித்திரமான மன நோயாளி. அதே சமயம், நேற்று ராத்திரி புகழேந்திக்கு வந்த விபரீதக் கனவு மாதிரியே சித்ராவிற்கும் வந்திருக்க வாய்ப்பு இருக்கிறதே? அவளது அந்தக் கனவில் முதல் முறையாக சித்ராவை, புகழேந்தி கடுமையாகத் திட்டியிருக்கலாம்.

"இனிமேலும் உன்னைப்போல ஒரு அரக்கியிடம் நான் வாழ விரும்பவில்லை' என்று கூச்சலிட்டுக்கொண்டு தெருவை நோக்கி ஓடியிருக்கலாம். லாரியில் அடிபட்டும்

அவன் செத்திருக்கலாம். பின்னாலேயே பதறி ஓடிய சித்ரா இறந்த புருஷனை மடியில் போட்டுக் கதறியிருக்கலாம். மயானத்தில் அவன் சிதையில் எரியும் கொடுமையைப் பார்த்து நெஞ்சில் அடித்துக்கொண்டு அவள் அழுது மயங்கி யிருக்கலாம்.

-மிகப் மிகப் புராதானச் சிறப்பு கொண்டது மனிதனின் கற்பனைதான் என்றாலும், என் கற்பனை ஏன் இப்படித் தாறுமாறாகப் போகிறது?

புகழேந்தியிடமிருந்து நிச்சயம் போன்வரும். அப்போது இந்தக் கற்பனைக்கு எல்லாம் முடிவு தெரிந்துகொள்ளலாம். ஆனாலும் ஒன்று மட்டும் நிச்சயம். எந்த ஒரு கதைக்கும் இது தான் முடிவு  என்று ஒன்று இருக்கவே முடியாது. முடிவு என்று சொல்லப்படும் இடத்திலிருந்து புதிதாக இன்னொன்று ஆரம்பமாகும் என்பது என்னுடைய நம்பிக்கை.

போன் ஒலிக்கிறது. ஆமாம்... புகழேந்தியேதான்.

""வணக்கம்... சொல்லுங்க மிஸ்டர் புகழேந்தி... சொல்லுங்க.

ம்... ம்... அப்படியா? அப்படியா...?! அப்புறம்...?''






















நன்றி - நக்கீரன் -






ஒரு ஈழப்போராளியின் ரத்தத்தை உறைய வைக்கும் பேட்டி

"நேற்று... நான் விடுதலைப் போராளி! இன்று... பாலியல் தொழிலாளி."

ஒரு பெண் புலியின் வாக்குமூலம்
இது ஒர் உண்மைக் கதை
ம.அருளினியன்
ஓவியங்கள் : ஸ்யாம்
வித்யா ராணி... 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி 'ஜெயசிக்குறு எதிர் சமர்’ என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர். ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச் சொன்ன 'சோதியா படையணி’யின் முன்னணித் தளபதிகளில் ஒருவர்.



ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற வீராங்கனைகளுக்கு இணையாகத் தமிழ் ஈழத்தில் ஒரு காலம் புகழப்பட்ட வித்யா ராணி... கால வெள்ளச் சுழலில் இன்று ஒரு பாலியல் தொழிலாளி.



 உங்களிடம் கருணை தேடியோ, பரிதாபம் ஈனவோ வித்யா ராணி இங்கு பேசவில்லை... 'இதுதானடா தமிழா... இலங்கையில் இப்போதைய நிலைமை!’ என்று சில உண்மைகளை முகத்தில் அறையவே இந்தப் பேட்டிக்குச் சம்மதித்தார்.


''எனது சொந்த ஊர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை. 1995 ஜூலை மாதம் நாம் இடம் பெயர்ந்து நவாலியில் உள்ள தேவாலயத்தில் தஞ்சம் புகுந்து இருந்தோம். நவாலியை அண்மித்த பிரதேசங்களில் இருந்து சுமார் 500 பேரளவில் அங்கு தஞ்சம் புகுந்திருந்தோம். ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி 'புக்காரா’ விமானங்கள் வானத்தில் இருந்து நடத்திய தாக்குதலில் எனது கண்ணுக்கு முன்பாக சுமார் 125 அப்பாவித் தமிழ் மக்கள், 'அவர்கள் தமிழர்கள்’ எனும் ஒரே காரணத்துக்காகக் கொல்லப்பட்டனர்.



 என்னுடன் அந்தக் கணம் வரை சிரித்து விளையாடித் திரிந்த எனது இரண்டு வயதுத் தம்பி எனது கண்களுக்கு முன்பாக உடல் இரு துண்டாகி இறந்துபோனான். தம்பி உடல் சிதைந்து இறந்த கணம் எனக்கு நினைவு தப்பியது. சுமார் ஒரு வாரம் மயக்கமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். கண் விழித்துப் பார்த்தபோது, தம்பியோடு தாயையும் அந்தத் தாக்குதலில் பறிகொடுத்ததை அறிந்துகொண்டேன்.




நான் உயிரினும் மேலாக நேசித்த எனது தம்பியைக் காப்பாற்ற முடியவில்லை என்கிற வலி எனக்குள் ஆற்றுப்படுத்த முடியாத கோபத்தைக் கிளப்பியது. சிறு குழந்தை அவன். எனது உதவி இல்லாமல் காலைக் கடன்கூடக் கழிக்க முடியாத குழந்தை. அவன் என்ன பாவம் செய்தான்? அவன் உடல் சிதறிக் கொல்லப்பட என்ன காரணம்? தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக எவ்வளவு காலம்தான் எமது குழந்தைகளை நாம் பலிகொடுப்பது? எமது அடுத்த சந்ததியைக் காக்க வேண்டிய கடமை எனக்கு இருப்பதாக எனது உள் மனம் சொன்னது. நான் விடுதலைப் புலிகளுடன் போராட்டத்தில் இணைந்தேன்.




''பெண்களை முதல்முறையாக மரபு வழியாகப் போராடவைத்த எல்.டி.டி.ஈ. இயக்கத்தில் பெண்கள் படையணி எந்த அளவுக்கு வலிமையாக இருந்தது?''




''1985 ஆவணி மாதம் 18-ம் திகதி பெண் புலிகளுக்கான உத்தியோகப்பூர்வமான பயிற்சிப் பாசறை ஆரம்பிக்கப்பட்டது. அன்றில் இருந்து ஈழப் போரின் இறுதிக் கணம் வரை விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய தூண்கள் பெண்கள் படையணி. பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பிரபாகரன் செய்தது மிகப் பெரிய சமூகப் புரட்சி. சாதிக் கொடுமைகளும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் தாண்டவமாடிய ஈழத்தில் பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பெண்களின் மேல் கலாசாரம் எனும் பெயரால் விதைக்கப்பட்ட அடக்குமுறைகளை எல்லாம் பிரபாகரன் நீக்கினார்.




ஆண்கள் படையணிகள் மேல் வைத்திருந்த அதே நம்பிக்கை அவருக்கு பெண்கள் படையணிகள் மீதும் இருந்தது. பிரபாகரன் ஈழ விடுதலைக்காக மாத்திரம் போராடவில்லை. அவர் பெண் விடு தலைக்காகவும் போராடியவர். ஈழ விடுதலையை அவரால் அடைய முடியவில்லை. ஆனால், பெண் விடுதலை ஈழத்தில் எப்போதோ பெறப்பட்டுவிட்டது!''




''அவரது படையணியில் இருந்தவர் என்ற முறையில், பிரபாகரன் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது எது?''



''இந்த நூற்றாண்டு கண்ட மாபெரும் வீரன் அவர். ஒரே ஒரு  துப்பாக்கியுடன் ஆரம்பித்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை யுத்த  விமானம் வரை முன்னெடுத்து வந்தவர். அவர் இறந்தவுடன் ஈழப் போர் முடிவுக்கு வந்துவிட்டது. ஈழத் தமிழர்கள் இப்போது தலைவன் இல்லாத குடும்பம்போல உணர்கிறோம்!''




''இப்போது நீங்கள் பாலியல் தொழிலாளியா?'



''ஆம். இப்போது நான் ஒரு பாலியல் தொழிலாளி. ஆனால், பாலியல் தொழிலாளி ஆக்கப்பட்டவள்!''




''என்ன நடந்தது?''



''விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் இருந்தபோது சக போராளி கீரனைக் காதலித்து மணந்தேன். நான்கு வருடக் காதல் அது. நாங்கள் வாழ்ந்த வாழ்வுக்குச் சாட்சியாக இரு குழந்தைகள். இறுதிப் போரின்போது ஆனந்தபுரத்தில் ரசாயனக் குண்டடித்து இறந்துபோன 700 போராளிகளில் அவரும் ஒருவர்.




அவர் இறந்தவுடன் எனக்கு இருந்த ஒரு துணையும் இல்லாமல் போனது. அவர் இறந்துபோகும் கணம் வரை எனது குழந்தைகளின் எதிர்காலம்பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனாலும், நான் மனம் தளராமல் போராடினேன். எமது போராட்டத்தில் தோற்றுப்போவோம் என நாங்கள் கனவிலும் நினைத்தது இல்லை. ஆனாலும், நாங்கள் தோற்றுவிட்டோம். எமது போராட்டம் தோற்றுப்போனால் என்ன செய்வது என்கிற எந்தவிதமான முன் ஏற்பாடும் எங்களிடம் இல்லை. 




முள்ளிவாய்க்காலில் இருந்து நானும் எனது ஆயுதங்களைக் கைவிட்டு ராணுவப் பிரதேசங்களுக்கு எனது இரு குழந்தைகளுடன் வந்தேன். வவுனியா மெனிக் ஃபாம் முகாமில் தங்கியிருந்தபோது, ராணுவப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டேன். எனது குழந்தைகள் என்னிடம் இருந்து பிரிக்கப்பட்டனர். வவுனியா வில் இருந்து விசாரணைக்காக அனுராதபுரம் முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டேன்.




அங்கு கொண்டுசெல்லப்பட்ட முதல் நாளே விசாரணை எனும் பெயரில் ராணுவத்தினரால் கூட்டாகக் கற்பழிக்கப்பட்டேன். காலை, மாலை, இரவு என ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று முறையாவது கற்பழிக்கப்பட்டேன். எனது கண்களுக்கு முன்னால் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண் போராளிகள் ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டனர். பெரும்பாலான பெண் போராளிகள் தற்கொலை செய்துகொண்டனர். எனது குழந்தை களின் எதிர்காலத்தை நினைத்து நான் உயிருடன் இருந்தேன்.




அழகான பெண் போராளிகள் உயர் அதிகாரிகளால் கற்பழிக்கப்பட்டனர். சில போராளிகள் சிங்கள இனவாத அமைச்சர்களாலும் கற்பழிக்கப்பட்டனர். 'சோதியா படையணி’யில் குறிப்பிடத்தக்க தளபதியாக இருந்தவள் என்ற ஒரே காரணத்துக்காக ராணுவ உயர் அதிகாரி ஒருவரும் சிங்களப் பேரினவாதத்தைத் தனது ஒவ்வொரு வார்த்தையிலும் விஷமாக உமிழும் ஒரு அமைச்சரும் என்னைக் கூட்டாகக் கற்பழித்தனர்.




 காமப் பசியாற்றுவதற்காக அவர்கள் கற்பழிக்கவில்லை. 'தமிழ்ப் பெண்களைக் கற்பழிக்கிறோம்’ என்ற மிருக வெறி உந்தித் தள்ளலே அவர்களை முடுக்கியது. எங்கள் வேதனைகளைக் கை கொட்டி ரசிக்கும் மிருகத்தனம் இருந்தது. கூட்டாகக் கற்பழிக்கப்படும்போதே ரத்தப்போக்கு அதிகமாகி இறந்தார் என் தோழி ஒருவர்.




 குதறிக் கிழிக்கப்பட்ட பெண்களின் பிறப்புறுப்பில் பெட்ரோல் ஊற்றி அவர்கள் வலியால் துடிப்பதைக் கை கொட்டி ரசித்தனர். அவர்களின் மார்பகத்தில் ஊசிகளை ஏற்றி, அவர்களின் மலத் துவாரங்களில் இரும்புக் குழாய்களைச் செலுத்தி, அவர்கள் வலியால் துடிப்பதை வெற்றித் திருவிழாவாக ரசித்தனர். பெண் போராளிகளை எவ்வளவு தூரம் சிதைக்க முடியுமோ அவ்வளவு தூரம் மிருகத்தனமாகச் சிதைத்தனர். எனது குழந்தைகளுக்காக நான் எனது உயிரைக் கையில் பிடித்தவண்ணம் இருந்தேன்!'




''விசாரணை சித்ரவதையில் இருந்து எப்படித் தப்பினீர்கள்?''



''சிறிது காலத்தில் அவர்களாகவே விடுவித்தனர். எங்களை மீள் குடியேற்றம் செய்வதாகக் கூறி, முல்லைத் தீவுக் காடுகளுக்குள் கொண்டுவிட்டனர். அடுத்த வேளை உணவுக்கே திண்டாடும் நிலை. வன விலங்குகள், பாம்பு, பூச்சிகளுக்கு இடையே என் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் பட்ட அவலத்தை வார்த்தையில் வடிக்க முடியாது. பின், ஒருவழியாக அங்கிருந்து தப்பி யாழ்ப்பாணம் வந்தேன். யாழ்ப்பாணம் வந்த கணத்தில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன்!'



''நீங்கள் பாலியல் தொழிலாளியாக மாறக் காரணம்..?'  



''பசிதான் காரணம் சகோதரா. யாழ்ப்பாணம் வந்த எங்களுக்கு உதவ யாருமே இல்லை. தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் கட்சிகள் எல்லாமே வெறுமனே பெயர் அளவில்தான்  இயங்குகின்றன. முன்னாள் போராளி எனத் தெரிந்ததும் யாரும் உதவக்கூட முன்வரவில்லை. எங்களை ஏதோ தீண்டத்தகாதவர்கள்போல நடத்தினார்கள். எங்களிடம் பேசினால்கூட அவர்களுக்கு ஏதும் பாதிப்பு வரலாம் என அஞ்சினர்.



நானும் எனது இரண்டு குழந்தைகளும் தனித்துவிடப்பட்டோம். பசியால் பிஞ்சுக் குழந்தைகள் வாடுவதை எவ்வளவு காலம்தான் சகித்துக்கொண்டு இருப்பது. பால் சுரக்காத மார்பை சப்பியவாறு 'பால்... பால்’ என எனது சிறு குழந்தை அழுவதை நான் எப்படித் தம்பி சகித்துக்கொண்டு இருப்பது. எனக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை!''




''ஏன், நீங்கள் வேலை தேடவில்லையா?''



''எங்களுடன் பேசவே பயந்தவர்கள் வேலை தருவார்களா என்ன? நான் வேலை தேடிச் சென்ற அனைத்து இடங்களிலும் என்னை உள்ளே விடவே பயந்தனர். பசி தாங்காமல் பிச்சை எடுத்தேன். எங்களுக்குப் பிச்சை போடக்கூடப் பயந்தனர். மீண்டும் சொல்கிறேன்... எனக்கு வேறு வழி ஏதுமே இல்லை. யாழ்ப்பாணம் பழைய புகையிரத நிலையத்தில் பசி வயிற்றைச் சுருக்கப் படுத்திருந்தபோது, அங்கு வந்த ஒருவரிடம் பிச்சை கேட்டேன். அவர் என்னைப் படுக்க அழைத்தார். சென்றேன். அவர் வேலை முடிந்ததும் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் உணவு வாங்கித் தந்தார். அன்றில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன். தம்பிக்காகப் போராளி ஆன நான், எனது குழந்தைகளுக்காகப் பாலியல் தொழிலாளி ஆனேன்!''




''யாரெல்லாம் உங்களின் வாடிக்கையாளர்கள்?''



''பெரும்பாலும் வயதானவர்கள். சில சிங்கள யாத்ரீகர்களும் வந்து போவார்கள். சில பாடசாலை மாணவர்களும் வருவார்கள். ஆனால், நான் அவர்களை அனுமதிப்பது இல்லை.''




''தமிழ் அரசியல் கட்சிகள் எதுவுமே உங்களுக்கு உதவ முன்வரவில்லையா?''



''அவர்கள் வெறும் பேச்சுக்குத்தான் அரசியல் கட்சிகள். அவர்கள் சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் ஏஜென்ட் போலவே செயல்படுகின்றனர்.''

''இந்தியாவில் இருந்துகொண்டு தமிழ் ஈழத்துக்காகப் போராடும் எந்தத் தலைவர் களும் உங்களைப்போன்ற பெண்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வரவில்லையா?''




(அதுவரை எந்த உணர்ச்சியும் இல்லாமல் தன்மையாக ஒலித்த குரலில் அனல் ஏறுகிறது) ''இந்தியாவில் இருந்துகொண்டு ஈழத்துக்காகப் போராடுவதாகச் சொல்லும் எந்தத் தலைவர் களிடமும் ஈழம் சம்பந்தமான நேர்மையான புரிந்துணர்வே இல்லை. 'ஈழத் தமிழர்களாகிய நாங்கள் தோற்றுவிட்டோம்’ என்கிற நிர்வாண கசப்பான உண்மையைக்கூட இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.



அதனால்தான் இன்றும் 'இனி ஒரு ஈழப் போர் வெடிக்கும். பிரபாகரன் திரும்பி வருவார்’ என்றெல்லாம் சும்மா எழுதிக் கொளுத்திப்போடு கின்றனர். எமது போராட்டம் ஈழத்தில் இருந்து சர்வதேசத்தின் சதியால் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டுவிட்டது. எனது குழந்தைகளுக்கு அடுத்த வேளை உணவு இல்லாமல் பாலியல் தொழில் செய்துவரும் என்னிடம் வந்து, 'எப்போது உங்கள் அடுத்த போராட்டம்?’ என்று கேட்டால், விளக்குமாறால் அடிப்பேன்.




 (சட்டென ஆற்றாமை பொங்க, குரல் உடைந்து அழுகிறார்.) இந்தியத் தலைவர்களே... உங்களைக் கை கூப்பித் தொழுகிறேன்... எங்களை வைத்து வியாபாரம் செய்வதை இனியாவது நிறுத்துங்கள். எமது அடுத்த சந்ததி வாழ வேண்டும். ஒரு நாளேனும் நிம்மதியான உறக்கம்கொள்ள வேண்டும். உங்களுடைய பிள்ளைகள் மட்டும் படித்தால் போதுமா? எமது அடுத்த சந்ததியும் கல்வி கற்க வேண்டும்.




ஈழத்தில் இன்னொரு போர் வேண்டும் என்று கூறும் நண்பர்களே... உங்களுக்குப் போர் எவ்வளவு வலியானது என்று தெரியுமா? போர் எவ்வளவு கொடுமையானது என்று தெரியுமா? கண் எதிரே ஷெல் பட்டு இறந்துபோன பெற்றோரின் உடல் களைக்கூடத் தகனம் செய்ய முடியாமல் உயிருக்கு அஞ்சி ஓடிய எம்மவர்களின் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? தாய் இறந்ததைக்கூட அறியாது தாய்ப்  பால் குடித்த குழந்தையின் அவலத்தை நீங்கள் கண்டதுண்டா? கர்ப்பிணித் தாயின் வயிறு வெடித்து, தாயும் நிறைமாத சிசுவும் அருகிலேயே கணவரும் துடிதுடித்த அவலத்தை நீங்கள் கண்டது உண்டா? கண்டிருந்தால், நீங்கள் ஈழத்தில் மட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் ஆதரிக்க மாட்டீர்கள்!''




''உங்களால் இந்தப் பேட்டியில் விமர்சிக்கப்படும் நபர்கள் பதிலுக்கு உங்களை 'விபசாரி’ என விமர்சித்...'



(கேள்வியை முடிக்கும் முன்பே சுளீரெனச் சொல்கிறார்...) 'நான்  எனது உடலைத்தான் விற்கிறேன். அவர்களைப் போல ஆன்மாவை அல்ல!''
(பின்குறிப்பு : பேட்டி அளித்தவரின் நலன் கருதி, அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது.)




வாசகர் கருத்து -


1.Venky1 Days ago
1. முதன் முதலாக அரசியல் கோ.... (வைகோ, திருமா, சீமான் போன்ற பலரை) அடையாளம் காட்டி அவர்களை வேறு எதையாவது செய்ய சொல்லுவது. அதிசயம். இனிமேலும், இதனை படித்து விட்டு அவர்கள் இலங்கை, ஈழம் என்று பேசினால் நிஜமாகவே வெட்கம் கெட்ட மாந்தர்கள் என்பதற்கு விளக்கமாக இருப்பார்கள்.

2. புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் அதிகார ஆசையில் கருகி போன இவர்களை அடையாளம் கண்டது. அன்னிய அரசுகளின் பாதுகாப்பில், அந்த நாட்டின் குடிமக்களாகிவிட்டு அந்த தைரியத்தில் இந்த மக்களை தூண்டிவிட்டு அவர்களின் அழிவை வேடிக்கை பார்த்து - இந்த புலம் பெயர்தவர்களை போல ஒரு கொடிய கூட்டத்தை பார்க்கவே இயலாது. இன்றும் ஒரு அரசை அமைத்து கொண்டு, இந்த மக்களை இன்னமும் தூண்டிவிட்டு - இவர்களை என்ன செய்வது? போரினை தூண்டிய இவர்கள் இந்த பெண்ணின் அவல குரலை கேட்டது உண்டா? இல்லை அது அவர்களுக்கு வேடிக்கையா - இறந்த பெற்றோர்களை அடக்கம் செய்யாது ஓடியவர்கள் - இவர்களுக்கு காட்சி பொருட்களா என்ன? முதலில் அந்த புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் வாயை அடையுங்கள். அவர்களை அடையாளம் கண்டு விகடன் வாசகர்களுக்கும் காட்டியது அதிசயமே.

உண்மையாகவே விகடனுக்கு இலங்கை தமிழர்களின் மீது அக்கறை உள்ளது என்பதை இது காட்டுகிறது. 
2. Ramakrishnan23 Hours ago
30 ஆண்டுகள் ஆகிவிட்டன ஒரு சந்ததி காலம் முடிந்துவிட்டது...என்ன செய்தார் பிரபாகரன் ....பரிதாபம்..பணம் கொடுத்து உதவலாம்...ஆனால் இழந்த வாழ்க்கையை கொடுக்க முடியுமா???? நம் அரசியல்வாதிகள் எல்லாரும் சுய நல வாதிகள்
இலங்கை தழிழர்கள் யாரும் நம்மை எதிர்பார்க்கவில்லை ஆனால் நாம்தான் அவர்களை வைத்து அரசியல் செய்கிறோம்
3. Appan23 Hours ago
படிக்க வேதனையாக உள்ளது. இந்த துயரத்தில் இந்தியா, தமிழகதிர்க்கும் பங்கு உண்டு. சில வருடங்களுகு முன் இப்படி ஒரு பெண் போராளி அந்த இயக்கதிலிருந்து வெளியே வந்து 'ஏன் இந்த இயக்கதிலிருந்து வெளி வந்தேன் என்று' மேலை நாட்டு பத்திரைகளில் எழுதி உள்ளார். அவர் கூற்றுப்படி பிரபகர்னிடைய போக்குத்தன் காரணம் என்கிரார். பிரபாகரன் ஈழ போராட்டம் எல்லாம் பணம் பன்ன ஈழம் விடுதலை பெற இல்லை. அந்த பெண்மனி இப்போ ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகி உள்ளார். இந்த பெண் படிதவர் ஆதாலல் தொடக்கதிலே புலியை அறிந்து விலகினார். ஆனால் படிக்காத பெண்கள் இந்த கட்டுரையுல் உள்ள பெண் போல் கடைசிவரை போரிட்டு உயிரை இழந்தார்கள்.
4.முஹம்மது ரஸ்வி24 Hours ago
கடைசிக்கேள்விக்கான அந்த பாவப்பட்ட பெண்மணி சொன்னதைத்தான் ஈழம் போர் முடிவிற்கு வந்தததிலிந்து சொல்லி வருகிறேன். கருணாநிதி ஒன்றும் செய்யாமல் இலங்கை தமிழர்களை கைவிட்டார். வைகோ, பழ.நெடுமாறன், சீமான் போன்றவர்கள பேசியே கைவிட்டார்கள். மேடையில் மேலும் மேலும் உணர்ச்சி பொங்க பேசிவிட்டு அடுத்த கூட்டத்திற்கு பேச போய் விடுகிறார்கள். அங்கு அடிவாங்குவது யார். இராஜபக்சே இந்தியா வரும்போதெல்லாம் அவரை எதிக்கிறேன் பேர்வழி என்று அவரை கோபமூட்டி இன்னும் கொடுமைப்படுத்த ஏற்பாடு செய்கிறார்கள். இவர்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தாலே போதும். இறைவன் நாடினால், இலங்கையில் அமைதி திரும்பும்.




நன்றி - விகடன்

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 2.11.2012 ) 7 படங்கள் முன்னோட்ட பார்வை

1.SKY FALL -
http://tamil.oneindia.in/img/2012/10/25-skyfall-300.jpg 

இங்கிலாந்து நாட்டின் ரகசிய உளவாளி பாத்திரமான  'ஜேம்ஸ்பாண்ட்' உலக சினிமா வரலாற்றில் மிகவும் பிரபம். பியர்ஸ் பிராஸ்னனை தொடர்ந்து  தற்போது அப்பாத்திரத்தில்  டேனியல் கிரெய்க் நடித்து வருகிறார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டேனியல் கிரெய்க் நடிப்பில்  'குவாண்டம் ஆப் சோலாஸ்' வெளிவந்தது. அப்படத்தினை தொடர்ந்து  இந்த ஆண்டுதான் ஜேம்ஸ்பாண்ட்டின் புதிய படம் வெளிவர இருக்கிறது.

ஸ்கை ஃபால் (SKY FALL) என பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஜேம்ஸ்பாண்ட் படவரிசையில் 23 -வது படமாகும். அதுமட்டுமின்றி இந்த ஆண்டுதான்  ஜேம்ஸ்பாண்ட் கேரக்டர் உருவாகி 50 ஆண்டுகள் துவங்குகிறது.

மிகுந்த பொருட் செலவில் உருவாகி வரும் 'ஸ்கை ஃபால்' படத்தை சாம் மெண்டிஸ் இயக்கி வருகிறார். சேவியர் பார்டெம் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் ஜூடி டென்ச், ரால்ப் பெயின்னஸ், ஆல்பர்ட் பின்னர் ஆகியோர் நடிக்கின்றனர். கதாநாயகிகளாக நவோமி ஹாரிஸ், பெர்னிஸ் மர்லோகே ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தியாவில் கோவா, அஹமதாபாத், டெல்லி ஆகிய இடங்களிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்.

 skyfall - சினிமா விமர்சனம் | அட்ரா சக்க - http://www.adrasaka.com/2012/11/skyfall.html
 http://www.cineulagam.com/photos/full/movies/yarukku_thirum_001.jpg

2. யாருக்குதெரியும் -நாளை உனது நாள் படத்தின் ரீமேக் போல தோணுது  யாருக்கு தெரியும் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தாள போட வைக்கும் என்று இசையமைப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளார். 


கொலிவுட்டில் தயாரிப்பாளர் ஸ்ரீதர் தயாரித்துள்ள யாருக்கு தெரியும் படத்தை இயக்குனர் கணேஷன் காமராஜ் இயக்கியுள்ளார்.

இந்தப்படத்துக்கு தமிழ்ப்படம் கண்ணன் இசையமைத்துள்ளார். அவர் யாருக்கு தெரியும் படப்பாடல்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.


நான் தமிழ்ப்படத்துக்கு பிறகு சுமார் பத்து படங்களுக்கு மேல் இசையமைக்கும் வாய்ப்புகள் வந்தன. சாப்ளின் சம்மந்தி, மை, பரிமளா திரையரங்கம், அழகன் அழகி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளேன்.


இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக்கொள்ளும் போதே படங்களுக்கு இசையமைக்க தயாரானேன்.


என் இசையமைப்பில் படங்கள் வெளியாக உள்ளன. யாருக்கு தெரியும் என்ற திகில் படத்துக்கு நான் இசையமைத்துள்ளேன். இந்தப்படம் நிச்சயம் வெற்றிப்படமாக அமையும்.


இதில் வரும் பாடல்கள் அனைத்தும் தாள போட வைக்கும் என்றும் படத்தின் பின்னணி இசை அற்புதமாக வந்துள்ளது எனவும் இசையமைப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளா



ஒரு தொழிற்சாலைக்குள் மாட்டிக்கொண்ட 7 பேர், அதுவும் அவர்கள் யார் என்பதும்., ஏன் தொழிற்சாலைக்குள் மாட்டிக்கொண்டார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. முடிச்சுக்கள் அவிழ்க்கப்படும் வரை விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை. 


இங்கே நாம் மாட்டிக்கொள்ள நம் 7 பேரில் ஒருவர்தான் காரணமாக இருக்குமோ என்று ஒவ்வொருவரையும் சந்தேகப்படுவது சுவராஸ்யம். சேரில் கட்டப்பட்டுக்கிடக்கும் கதாபாத்திரம் மூலம் தான் அவர்கள் ஏன் அவ்வாறு தான் யார் என்று தெரியாமல் அல்லாடுகிறார்கள் என்பது தெரிய வருகிறது.

அவரை அவிழ்த்து விட்டு இனிமேல் யார் மீதும் யாரும் சந்தேகப்படக்கூடாது என்கிற முடிவினை எடுக்கிறார்கள். அந்த 7 பேரில் ஒருவரான ரியாஸ் கான் கொல்லப்பட்டுக் கிடக்கத் திகில் இன்னும் அதிகரிக்கிறது. அடுத்தது 3 பேர் கொல்லப்பட இருக்கிறார்கள் என்று தெரிய வரும் போது மீதமிருக்கும் 6 பேரில் யார் அந்த மூவர் என்கிற பதைபதைப்பு படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் தொற்றிக் கொள்கிறது என்றால் மிகையாகாது.


ரியாஸ் கானும் கலாபவன் மணியும் தங்கள் பாத்திரங்களுக்குக் கம்பீரம் சேர்க்கிறார்கள். ஜெயபிரகாஷ் வழக்கம் போலவே வந்து ஜமாய்க்கிறார்.
யாருக்குத் தெரியும்? நிச்சயமாகத் தமிழ்சினிமா ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவம் தான்.

இயக்குனர் கணேசன் காமராஜின் திரைக்கதையினை அதன் திகில் குறையாமல் அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேஷ் கே தேவ்.ஈரோட்டில் ரிலீஸ் இல்லை, பெருந்துறை முருகனில் ரிலீஸ்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTNkbI3k6pDZWBjmGH2tgwVbBJxb_0YcQbG1Ukvie7M7mM4kRbm5h4qwYqD6Tn27A1Y2YtdYJVSp7V3CiJvzjU-5m4X0OgjCpkibs6_wY6HfnQDsKAw1T8Pa9nPDo1IFge3IHUHYnseA4X/s1600/Kalyana+Kanavugal+%25282011%2529.PNG

3. கல்யாணகனவுகள்- 2011 லயே ரிலீஸ் ஆகிடுச்சு போல. ரீ ரீலிஸா? தெரில 


Movie Name : Kalyana Kanavugal
Cast : Various
Music Director : Er GE Raja
Director : Muthu Vijayan
Lyrics : Shanmugaseelan, G Krishna
Year : 2011

Aadi Varum Ammanukku - Madhurai Saroja, Alagu Raja, Hemambika
Indhiyavin Thamarai Poovum - MS Nehru, Sharavia
Patthurai Thandi Puttu - G Krishna
Oru Thuli Thannirukku - G Krishna, Bhanu Roopini
Mappillaiya Vara Pooran - Sharavia
Vasa Malar Pootthiruchu - Hemembika







4. மகன் -இந்தப்படத்தை பற்றி விபரம் ஏதும் கிடைக்கலை 


 http://www.cartoonbrew.com/wp-content/uploads/SoR.jpg?9d7bd4

5. SONS OF RAM -  Surayavanshi Ram of Ayodhya, the greatest warrior king that ever lived, was forced to send his beloved wife Sita into exile, thus leading him and his kingdom to despair and towards an empty future. Unknown to Ram, far away in sage Valmiki's hermitage, Sita lives as Vandevi, raising their twin sons, Luv & Kush. 


Though not aware of their lineage, the twins imbibe wisdom, compassion & combat skills that would put any royal prince to shame. Sita teaches Luv -Kush to always work as a team, secretly hoping that her estranged family would find a way to come together one day. The twins must conquer their inner demons before they can achieve their destinies. Accompanied by a steadfast gang of lovable friends, Luv-Kush's journey takes them from enchanted forests with mythical creatures to the revered land of Ayodhya, the home of their fabled heroes.
 
http://cdn4.supergoodmovies.com/FilesFive/asaivam-aa8a4af2.jpg

6. அசைவம் ( ஹாட் மசாலா) -இது ஏதோ தெலுங்கு கில்மாப்படம் போல . தமிழ்ல டப் ஆகி வருது. ஈரோடு அன்னபூரணியில் ரிலீஸ்

http://www.telugunow.com/wp-content/uploads/2012/10/Denikaina_Ready_Review-600x312.jpg

7.Denikaina Ready  - தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு. இவர் பல தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். விஷ்ணு நடித்த ‘தேனி கைனா ரெடி’ (எதற்கும் தயார்) என்ற சினிமா கடந்த திங்கட்கிழமை ரிலீஸ் ஆனது. விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடித்து உள்ளார். மோகன்பாபுவின் சொந்த பட நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.ஈரோட்டில் ரிலீஸ் இல்லை



ஜெ வை எதிர்க்க பெஸ்ட் சாய்ஸ் மு க ஸ்டாலினா? கேப்டனா?

1.மத்தவங்க தப்பு செஞ்சு மாட்டுனா நாம செய்ய வேண்டியது 1 அதே போல் தப்பு செய்யாம இருக்கனும் 2 மாட்டிக்காம தப்பு பண்ணனும் 




--------------------


2. எதிர்க்கட்சிகளுக்கு ஜெ.கடிதம் எழுதினால் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுப்பார்கள்: கருணாநிதி # ஆர்டர் போட்டுதான் எனக்கு பழக்கம் -ஜெ 



----------------------


3. வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ராஜினாமா # உள்ளே போகப்போறாரா?ஐ மீன் உள் துறை 



------------------------


4. மின் பற்றாக்குறையை என்னிடம் ஏன் தெரிவிக்கவில்லை - ஜெ. # போன் பண்ணப்ப உங்க போன்ல் பேட்டரி வீக்காம்.சார்ஜ் போடக்கூட கரன்ட் இல்லையாம் 



----------------------


5. சன் டிவி புதிய ஐபிஎல் அணி வாங்கியதில் மெகா ஊழல் - லலித் மோடி # அப்போ சன் டி வி இனி மெகா டிவி ? 



--------------------


6. அந்நிய சக்திகள் நம் நாட்டை கைபர் கணவாய் வழியாகவும் ,ஆதிக்க சக்திகள் நம்மை சைபர் க்ரைம் மூலமாகவும் ஆக்ரமித்தன 



-------------


7. மழை பெய்யும் தினங்களில் 1,வீட்டில் சண்டை இல்லை 2 மின் வெட்டு இல்லை 



---------------------

8. விஜய் - ஐ ஆம் வெய்ட்டிங்க் # துப்பாக்கின்னு டைட்டில் வெச்சுட்டு வெய்ட்டிங்னா எப்டி? ஐ ஆம் பைட்டிங் னு சொல்லுங்க 



------------------------------


9.விஜய் - நீ தம் அடிப்பியா?




காஜில் - இல்லை.ஆனா ஈவ் டீசிங் கேஸ் குடுப்பேன# துப்பாக்கி ட்ரெய்லர்் 



------------------------


10. கொடி இடையைப் பெறுவதற்கான எளிய வழி.இடையில் ஏதோ ஒரு கட்சிக்கொடியை டாட்டுவாக வரைந்து கொள்வதே 



--------------------


11.  மு க மைன்ட் வாய்ஸ் - ரயில்வே துறை கைக்கு வந்துட்டா ரொம்ப நீளமா ஊழல் பண்ணலாம்



-----------------------



12. நாட்டை ஆள்பவரைப் பொறுத்தே காவல்துறையின் செயல்பாடுகள் அமையும் -் ஜெ # ஓனர் சொல்படிதான் ஒர்க்கர்ஸ் நடப்பாங்களா ? அடடே,புதுசா இருக்கே



------------------


13. காமாலைக்காரன் கண்ணுக்கு கலைஞர் என்ன கலர் துண்டு போட்டாலும் மஞ்சளாத்தான் தெரியும்




-----------------------


14.  எவ்வளவு பதட்டமான சூழ்நிலையிலும் அதை வெளீல காட்டிக்காம சம்சாரம் கையை கெட்டியா பிடிச்சுக்கனும் # கேப்டன் கற்றுக்கொடுத்தது



-----------------------


15. ஏங்க கம்முனு இருங்க அப்டினு பிரேமலதா மேடம் கேப்டனை அதட்டுவாங்கன்னு பார்த்தேன், மூச். பொண்ட்டாட்டின்னா இப்டி இருக்கனும்




-----------------------


16. ஏய், பிரேமல்தாவை பார்த்தியா? எப்டி அடக்க ஒடுக்கமா இருக்காங்க?



அத்தான்,அவங்க கட்டி இருந்த புடவை சூப்பர் இல்ல? # சுத்தம்




------------------------



17. மு.க ஸ்டாலினை விட ஜெவை எதிர்காலத்தில் எதிர்க்க கேப்டன் தான்  பெஸ்ட் பர்சன் என தோணுது



--------------------



18. மாணவர்களை அடித்தால் ஆசிரியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை # ஹூம், நாம படிக்கும்போது இந்த சட்டம் வந்திருந்தா எட்டாம் கிளாஸ்லயே ஃபெயில் ஆகி இருப்பேன்



--------------------------


19. ஜட்ஜ் - தீர்ப்பை அடுத்த மாசம் ஒத்தி வைக்கிறேன்#



தள்ளி வெச்சா கொள்ளி வெச்சுடுவாங்க, எதா இருந்தாலும் டக்னு இப்பவே சொல்ங்க



--------------


20. திருமணத்துக்குப்பின் ஆண் ஒல்லி ஆகிறான் , பெண் குண்டாகிறாள் # நீதி - மேரேஜ் பண்ணும்போதே யோசி



------------------------

21. உப்பு 2 வகை

 1. எக்சசைஸே செய்யாம உடம்பு உப்புவது

 2.மேரேஜ் ஆனபின் லேடீஸ் உடம்பு சந்தோஷத்துல தானா உப்புவது



------------------------

22. சுவாமி மலை படிக்கடுகளில் நடக்கும்போது ஒரு சுவாமிஜி சொல்றாரு - தம்பி, படிக்கட்டு சாமி மாதிரி , மிதிக்காம போ # லொள்




--------------------------



23. இந்தியாவில் 64% பால் ஆரோக்கியமற்ற பால்.. # அப்போ அமலா பால் 36 ?




---------------------


24. எண்ணெய் காய்ஞ்சுடுச்சா?ன்னு கடுகு பொரியும் சத்தத்தை வைத்து மனைவி கண்டறிகிறாள்.தீஞ்ச வாசம் நுகர்ந்தே கணவன் உணர்கிறான்




-------------------


25. கேப்டனின் ஏர்போர்ட் சீறல்கள் சினிமாவில் வருவது போலவே இருந்தது.சினிமா நாயகர்களை அரசியலில் பெரிய ஆள் ஆக்கி விடுவதின் சூட்சுமம் இதற்குத்தானோ



----------------------


26.ஒரு ஹாட் நியூசின் ஆயுட்காலம் அடுத்த ஹாட் நியூஸ் வரும் வரை மட்டுமே # கேப்டன் பாறைகள்




-----------------


27. பத்திரிகையாளர்களுடன் மோதல்: விஜயகாந்த் மீது போலீஸில் புகார்# லீகலுக்கு லீகல் ,இல்லீகலுக்கு இல்லீகல்.அடிக்கு அடி உதைக்கு உதைரெடியாdsp்




--------------------


28. ஜெ - நானா கூப்பிடலை.அவங்களா வந்தாங்க


 கேப்டன் -நானா ஏதும் கேட்கலை.நீங்களாதான் சொல்றீங்க




----------------------------


29. அபி ஸ்ரீ - டாடி, நான் ஹால்லயே படுத்துக்கறேன், எப்படியும் இங்கே தான் என்னை தூக்கிட்டு வந்து படுக்க வைக்கப்போறீங்க # லொள் ;-))




-------------------


30.  முதியோர் இல்லம் கட்டப்போகிறேன்: நடிகை ஹன்சிகா # முந்தானை முடிச்சு தீபா டீச்சர் ஆஆஆஆஆ



--------------------------------


31. + 2 படிக்கும் ஸ்டூடன்ட் -டீச்சர், ஐ லவ் யூ !


 பளார் !



ஹலோ, அடிச்சா 3 வருஷம் தெரியுமில்ல?



ஈவ் டீசிங்க் 7 வருஷம் புரியுதா? அடங்கு



-------------------

Thursday, November 01, 2012

கோவை இரட்டை கொலை வழக்கில் தீர்ப்பு , கேஸ் விபரம்

 மாலை மலர் செய்தி

கோவை, அக். 29-
கோவை ரங்கே கவுடர் சித்தி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித் ஜெயின். ஜவுளி வியாபாரி. இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதிகளின் செல்ல மகள் முஸ்கின் (வயது 10). அருமை மகன் ரித்திக் (7).
கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந்தேதி காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வதற்காக புறப்பட்டு வந்தனர். அவர்களை கடத்தி பணம் பறிக்க வேண்டும் என திட்டமிட்டிருந்த டிரைவர் மோகனகிருஷ்ணன் என்ற மோகன்ராஜ் தனது திட்டப்படி கால் டாக்சியில் அவர்களை கடத்திச் சென்றான்.
திட்டத்தை அரங்கேற்ற பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியை சேர்ந்த நண்பன் மனோகரனையும் சேர்த்துக் கொண்டான். உடுமலையை அடுத்த தீபாலப்பட்டி பி.ஏ.பி. வாய்க்கால் பகுதிக்கு சென்ற அவர்கள் சிறுமி முஸ்கினை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
எங்கே நாம் செய்த தவறு வெளியே தெரிந்து விடுமோ என்ற பயத்தில் முஸ்கின், ரித்திக்கை கால்வாயில் தள்ளி கொன்றனர். இந்த கொடூரங்களை செய்த மோகன்ராஜ், மனோ கரனை போலீசார் சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர்.
கொலை நடந்தது எப்படி என்று விசாரிக்க 2010 நவம்பர் 9-ந்தேதி கோவையில் இருந்து வேனில் அழைத்து சென்றனர். வேன் செட்டிப்பாளையம் ரோட்டில் சென்றபோது போலீசை தாக்கிவிட்டு மோகன்ராஜ் தப்ப முயன்றான். அவனை போலீசார் என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொன்றனர்.
இதைத் தொடர்ந்து மனோகரன் மீதான வழக்கு விசாரணை 2011 ஜூன் மாதம் 23-ந் தேதி கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கியது. 7 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் வழக்கு கோவை மகளிர் கோட்டுக்கு மாற்றப்பட்டது.
வழக்கில் 121 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். அதில் 47 சாட்சிகள் அரசு தரப்பில் விசாரிக்கப்பட்டனர். 69 ஆவணங்களும், 38 சான்று பொருட்களும் ஒப்படைக்கப்பட்டன.எதிர் தரப்பில் 5 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 2 ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன.
வழக்கின் விசாரணை அதிகாரியான போலீஸ் இன்ஸ்பெக்டர் கனக சபாபதி தொடர்ந்து 3 நாட்கள் சாட்சியம் அளித்தார். கடந்த செப்டம்பர் மாதம் 4-ந்தேதி நீதிபதி சுப்பிரமணியம் குற்றஞ்சாட்டப்பட்ட மனோகரனிடம் வழக்கு தொடர்பாக 155 கேள்வி கேட்டு பதிலை பதிவு செய்தார்.
கடந்த 15-ந்தேதி சிறப்பு அரசு தரப்பு வக்கீல் சங்கர நாராயணனும், 22-ந்தேதி எதிர்தரப்பில் வக்கீல் சர்மிளாவும் வாதாடினர்.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று (29-ந்தேதி) தீர்ப்பு கூறப்படும் என்று நீதிபதி சுப்பிரமணியம் அறிவித்திருந்தார். பரபரப்பான இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட இருந்ததால் கோர்ட்டு வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் மனோகரன் இன்று காலை 10 மணி அளவில் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். 10.30 மணி அளவில் நீதிபதி சுப்பிரமணியம் கோர்ட்டுக்கு வந்தார். முதல் வழக்காக முஸ்கின்- ரித்திக் கொலை வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது நீதிபதி சுப்பிரமணியம் குற்றஞ்சாட்டப்பட்ட மனோகரனிடம், உன் மீது கூட்டு சதி, குழந்தைகளை கடத்துதல், கூட்டாக சேர்ந்து கற்பழித்தல், கொலை செய்தல், பிணையாக வைத்து பணம் பறிக்க கடத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. உனக்கு வழங்கப்படவுள்ள தண்டனை குறித்து தெரியுமா? என்று கேட்டார்.
அதற்கு மனோகரன் தெரியாது என்றார். அதைத் தொடர்ந்து மனோகரனின் வக்கீல் ஷர்மிளாவிடம் நீங்கள் ஏதும் கூற விரும்புகிறீர்களா? என்று நீதிபதி கேட்டார். அதற்கு ஷர்மிளா இல்லை என்று பதிலளித்தார்.
இதைத் தொடர்ந்து வருகிற 1-ந்தேதி தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என்று நீதிபதி சுப்பிரமணியம் கூறினார்.

 

 தினமணி

கோவையில் இரட்டைக் கொலை: மனோகரனுக்கு தூக்கு தண்டனை


கோவையில், இரண்டு பள்ளிக் குழந்தைகளைக் கடத்திச் சென்று கொலை செய்த குற்றவாளி மனோகரனுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்துள்ளார்.


கோவையில் 2010ஆம் ஆண்டு முஸ்கான், ரித்திக் ஆகிய குழந்தைகளைக் கடத்திச் சென்று, முஸ்கானை பாலியல் பலாத்காரம் செய்து பிறகு இருவரையும் கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவடைந்து அக்டோபர் 29ம் தேதி, இந்த வழக்கில் மனோகரன் என்பவர் குற்றவாளி என்று நீதிபதி எம்.பி.சுப்பிரமணியன் தீர்ப்பளித்திருந்தார். குற்றவாளிக்கான தண்டனையை இன்று அறிவித்த நீதிபதி, மனோகரனுக்கு 3 ஆயுள் தண்டனை மற்றும் சாகும் வரை தூக்கிலிடுமாறு தீர்ப்பளித்தார்.




கோவை ஜவுளிக்கடை உரிமையாளர் ரஞ்சித். இவரது குழந்தைகள் முஸ்கான் (11), ரித்திக் (8). இருவரும், காந்திபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில், 2010 அக்டோபர் 29-ஆம் தேதி குழந்தைகள் இருவரும் கடத்தப்பட்டனர். இதில், சிறுமி முஸ்கான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர், பொள்ளாச்சி அருகே உள்ள பி.ஏ.பி. பிரதான வாய்க்காலில் இருவரும் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.



இந்த இரட்டைக் கொலை தொடர்பாக குழந்தைகளை வேனில் பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஓட்டுநரான பொள்ளாச்சி, அங்கலங்குறிச்சியைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன், அதே பகுதியைச் சேர்ந்த அவரது கூட்டாளி மனோகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 2010 நவம்பர் 9-ஆம் தேதி குழந்தைகளைக் கொலை செய்த இடத்தைக் காட்டுவதற்காக மோகனகிருஷ்ணனை போலீஸார் வேனில் அழைத்துச் சென்றனர். கோவை செட்டிபாளையம் அருகே போலீஸ் வேன் சென்றபோது, தப்ப முயன்றதால் என்கவுன்ட்டரில் மோகனகிருஷ்ணன் சுட்டுக் கொல்லப்பட்டார்; மனோகரன் சிறையிலடைக்கப்பட்டார்.



மனோகரன் மீதான இந்த வழக்கு விசாரணை 2011 ஜூன் 23-ஆம் தேதி கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கியது. வழக்கில் மொத்தமாக 121 பேர் அரசுத் தரப்பு சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர். 69 ஆவணங்களும், 38 சான்று பொருள்களும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.



7 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை அரசுத் தரப்பில் 47 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அதில், 9 பேரிடம் மறு குறுக்கு விசாரணை நடைபெற்றுள்ளது. எதிர்த்தரப்பில் 6 பேர் சாட்சிகளாக அனுமதிக்கப்பட்டு 5 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.



அக்டோபர் 22-ஆம் தேதியுடன் அரசுத் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.பி.சுப்பிரமணியன், அக்டோபர் 29-ஆம் தேதி தீர்ப்பு அளிப்பதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலையில் நீதிபதி முன், மனோகரனை போலீஸார் ஆஜர்படுத்தினர். அரசுத் தரப்பில் வழக்குரைஞர் சங்கரநாராயணன் ஆஜரானார். எதிர்த்தரப்பில் வழக்குரைஞர் ஷர்மிளா ஆஜரானார்.



இந்த வழக்கில் ஆள் கடத்தல், கூட்டுச் சதி, கற்பழித்தல், கொலை செய்தல், சாட்சியங்களை சிதைத்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ், சாட்சிகளின் விசாரணை அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் மனோகரனைக் குற்றவாளி என்று அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார். இத் தீர்ப்பு குறித்து தான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என நீதிபதியைப் பார்த்து மனோகரன் கூறினார்.



மனோகரனுக்கு அதிகபட்சமாக தூக்குத் தண்டனை அளிக்க வேண்டுமென அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.



அரசு வழக்குரைஞர் சங்கர நாராயணன், ஏற்கெனவே இதுபோன்று குழந்தைகளைக் கடத்தி, கற்பழித்துக் கொலை செய்த 2 வழக்குகளில் உயர் நீதிமன்றமும், 5 வழக்குகளில் உச்ச நீதிமன்றமும் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை அளித்துள்ளது. மேலும், இதேபோல் ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியதை, உச்ச நீதிமன்றம் விசாரித்து தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது என்றார்.

நன்றி - தினமணி , மாலை மலர்