Tuesday, September 11, 2012

முதலுதவி!

முத்தான முதலுதவி!


டாக்டர் ஆர்.பார்த்தசாரதி


தொகுப்பு: உஷா ராமகிருஷ்ணன்




மருத்துவ ரீதியான அவசரக்கட்டம் என்று வரும்போது, முதலுதவி தருவது இன்றியமையாதது. நம் அன்புக்குரியவர்கள் பாதிக்கப்படும்போது, இயற்கையாகத் தோன்றக்கூடிய பதற்றத்தோடு உணர்வாலும் கலங்கி விடுவோம். பாதிக்கப்பட்ட நபருக்கு அவசர உதவி தர ஆளிருந்தும் அதைத் தரத் தெரியாத காரணத்தால் பாதிக்கப்பட்டவர் இறந்த பரிதாபத் தருணங்களும் உண்டு.



விபத்துக்குள்ளாவது அல்லது திடீரென்று நோய்வாய்ப்படுவது என்ற நிலையில், முதலுதவி தேவைப்படுகிறது. முதலுதவி தருவதற்கான நோக்கம் - உயிர் போவதைத் தடுப்பது, ஒருவரது பாதிப்பு நிலையின் தீவிரத்தைக் குறைப்பது அல்லது விரைவான நிவாரணம் தருவது. பெரும்பான்மையான நிலைகளில் முதலுதவி என்பது முதல்கட்ட நடவடிக்கையே. விரைவாக மருத்துவ வல்லுநரின் உதவியை நாடுவது முக்கியம்.


மாரடைப்பு




அறிகுறிகள்: தொடர்ந்தோ, விட்டு விட்டோ நடுமார்பில் வலி, மேல் வயிற்றில் வலி, மார்பில் தொடங்கி தோள், பல், தாடை, கைகள் வரை பரவும் வலி, வாந்தி, தலைச்சுற்றல், அதிகமான வியர்வை, மூச்சுத் திணறல்.
ஐந்து நிமிடங்களுக்கு மேல் அதிக வலி தொடர்ந்தால், ஆம்புலன்ஸுக்குச் சொல்லுங்கள். சார்பிட்ரேட் 5 எம்.ஜி மாத்திரையை நாக்குக்கடியில் அடக்கச் சொல்லி, ஆஸ்ப்ரின் மாத்திரை அவருக்கு அலர்ஜி இல்லையென்றால், அதையும் மென்று விழுங்கச் சொல்லலாம். இதனால் இதயத்தில் தடைப்பட்ட ரத்த ஓட்டம் மீண்டும் இயங்கத் தொடங்கும். அவர் மயக்கமாகி விட்டால், ஆம்புலன்ஸ் வருவதற்குள் செயற்கை மூச்சு தாருங்கள் (செய்யும் முறை இத்தொகுப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளது).




நெஞ்சு வலி




மேலே சொன்ன அறிகுறிகள் ஏதும் இல்லாமல் நெஞ்சு வலி இருந்தால், வாய்வுத் தொல்லையாக இருக்கக்கூடும். இதற்கு ஜெலுசில்/ரேன்டாக் மருந்து கொடுப்பதோடு குளிர்ந்த பாலோ மோரோ குடிக்கக் கொடுக்கலாம். வலி குறையாத பட்சத்தில் மருத்துவரிடம் செல்லுங்கள்.



நரம்புத் தளர்ச்சி அல்லது வலிப்பு


பொதுவாக வலிப்பு வரக்கூடியவர்கள், தன்னைப் பற்றிய விவரங்கள் அடங்கிய அடையாள அட்டையை உடன் வைத்திருக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டிருப்பவரது உடைகளைத் தளர்த்தி, சுற்றுப்புறத்தைக் காற்றோட்டமானதாக ஆக்குங்கள். ஆம்புலன்ஸுக்கு சொல்லுங்கள். வலிப்பு எப்படியும் சிறிது நேரத்தில் நிற்கும் என்பதால், அதுவரை காத்திருங்கள். நின்ற பிறகு சுலபமாக மூச்சுவிட ஏதுவாக, பக்கவாட்டில் படுக்க வையுங்கள். அவர் சுய நினைவுக்குத் திரும்பும்போது ஊக்கமூட்டிப் பேசுங்கள்.


செய்யக் கூடாதவை: அவரை அடக்கி அசைவை நிறுத்த முயல்வது, இரும்புப் பொருள்களைக் கையில் அல்லது வாயில் கொடுப்பது.



எலும்பு முறிவு




சௌகரியமான நிலையில் அவரை அமர்த்தவும். பாதிக்கப்பட்ட இடத்தை நகர்த்தக்கூடாது. கால், கை, விரல் என்று எந்த இடத்தில் எலும்பு முறிந்திருப்பது போல் தோன்றுகிறதோ, அதை சிறிய கொம்பு, தடியான போர்வை, குடை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்துக் கட்டி விடவும். விரல் பாதிக்கப்படும்போது பக்கத்து விரலோடு சேர்த்தும் கட்டலாம். மருத்துவ உதவி பெறுவதற்கு முன் இதைச் செய்வது அவசியம். முதுகுத் தண்டில் முறிவு இருந்தால், முடிந்த வரை தலை மற்றும் முதுகை அசைக்காமல் வைத்திருப்பது நல்லது. சொல்லத் தெரியாத குழந்தைக்கு வீக்கமோ, வலியால் அழுகையோ, நகர்த்த முடியாத நிலையோ இருந்தால் விரைந்து மருத்துவ உதவியை நாடுங்கள்.
லிஃப்ட் மற்றும் இயந்திரப் படிகளில் மாட்டிக் கொள்ளுதல்:
முன்னெச்சரிக்கையாக, காலணிகளில் இருக்கும் கயிறு(லேஸ்) கட்டப்பட்டிருக்கிறதா என்று கவனியுங்கள். புடவை புரளாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்நோக்கி, படியின் நடுவில் நில்லுங்கள். குழந்தைகளின் கைகளைப் பற்றிக் கொள்ளுங்கள். விளையாட அது இடம் இல்லை. எஸ்கலேடரில் யாராவது மாட்டிக் கொண்டால், பட்டனைத் தேடி, இயக்கத்தை நிறுத்த முனையுங்கள்.
லிஃப்டில் பயணிக்கும்போது, கைகளால் கதவு மூடுவதைத் தடுக்கக் கூடாது. லிஃப்ட் இடையில் நின்று விட்டால், எச்சரிக்கை பட்டனை அழுத்தி, உதவி கிடைக்கும்வரை காத்திருக்க சிறுவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள்.
அடிபட்டதால் தோன்றும் ரத்தப்போக்கு:
அடிபட்ட இடத்தில் அழுக்கும் கிருமியும் இருந்தால் அகலும்படி சுத்தமாகக் கழுவுங்கள். துணி ஒன்றை காயம்பட்ட இடத்தில் வைத்து நன்றாக அழுத்துவது ரத்தப்போக்கை நிறுத்த உதவும். ரத்தம் நின்றுவிட்டால் களிம்பு தடவி மெல்லிய பேண்டேஜ் வைத்துக் கட்டுங்கள். ரத்தம் நிற்காத நிலையில், ஐஸ்கட்டிகளைத் துணியில் வைத்து மூடி, காயத்தின் மீது ஒத்தடம் கொடுங்கள். ரத்தம் வெளியேறுவதைத் தடுக்க, வெட்டுப்பட்ட இடத்திற்கு மேலாக இறுகக் கட்டுவது கூடாது.



துண்டிக்கப்பட்ட விரல்



விபத்தில் விரல் துண்டிக்கப்படும்போது, அவரைக் காற்றோட்டமாக வைத்து நன்றாக மூச்சுவிட அனுமதியுங்கள். பாதிக்கப்பட்ட கையையோ காலையோ நிமிர்த்தி, முடிந்தால் இதயத்துக்கு மேலாகப் பிடித்துக் கொள்ளுங்கள். துண்டுபட்ட விரலை சுத்தமான நிலையில், நல்ல ப்ளாஸ்டிக் கவரில் வைத்து மூடி, அதை ஐஸ்கட்டிகள் கொண்ட டப்பாவிலோ கவரிலோ குளிர்ச்சியாக வைக்கவும். சரியான முறையில் பாதுகாத்து அறுவை சிகிச்சைக்கு விரைவாக எடுத்துச் சென்றால், துண்டான விரல் மீண்டும் இணைக்கப்படும் சாத்தியக்கூறு அதிகம். அறுவை சிகிச்சை செய்யக்கூடிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.



செய்யக் கூடாதவை: துண்டுபட்ட விரலை நேரிடையாக ஐஸ்கட்டிகளில் உறையவைப்பது, பாதிக்கப்பட்டவருக்கு சாப்பிடவோ, குடிக்கவோ உணவு கொடுப்பது.



நாய்க்கடி:



கடித்த இடத்தில் ரத்தம் வந்தால், ரத்தம் சிறிது நேரம் கசிய விடுங்கள். நாய்க்கடி பட்ட இடத்தை சுத்தமான நீரினால் கழுவுங்கள். முதலுதவிக்குப் பின் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. ஆன்ட்டி-ராபீஸ் ஊசிக்கு இப்போது தொப்புளைச் சுற்றிப் போடும் பதினான்கு ஊசிகள் தேவையில்லை. கடிபட்ட அன்று, மூன்றாவது நாள், ஏழாவது நாள், பதினான்காவது நாள் மற்றும் முப்பதாவது நாள் என தலா ஒரு ஊசி கையில் போடப்படுகிறது. கூடவே முதல் நாளன்று டெட்டனஸும் எடுத்துக் கொள்வது நல்லது.


பாம்புக்கடி


அவருக்குக் குடிக்கவோ, சாப்பிடவோ எதுவும் கொடுக்காதீர்கள். கடித்த இடத்துக்கு இரண்டு அங்குலங்கள் மேலே கட்டு போடுங்கள். கடித்த பாம்பின் தோற்றத்தைக் கண்டுகொண்டு மருத்துவரிடம் விவரிக்க முடிந்தால், அவர் அதை அனுமானித்து சிகிச்சை கொடுக்க முடியும்.


பூச்சிக்கடி


முதலில் பூச்சியை உடலிலிருந்து ஜாக்கிரதையாக அகற்றுங்கள். கடித்த இடத்தை நன்றாகக் கழுவி, கிருமிநாசினி களிம்பைத் தடவலாம். அலெக்ரா போன்ற அலர்ஜி மாத்திரை உட்கொள்ளலாம். ஜுரம், வாந்தி, மயக்கம் போன்றவை தோன்றினால் மருத்துவ உதவியை நாடுங்கள்.



அலர்ஜி


ஒவ்வாமையாலோ, பூச்சி கடிப்பதனாலோ சருமத்தில் தடிப்போ, அரிப்போ, சிவந்தோ காணப்படுவது அலர்ஜியின் அறிகுறி. ஆன்டி- அலர்ஜி மாத்திரை (அலெக்ரா) கொடுக்கலாம். நாக்கிலோ, உதட்டிலோ, மூச்சுக் குழாயிலோ வீக்கம் காணப்படுவது அலர்ஜியின் தீவிர நிலை. இதற்கு உடனடி மருத்துவ உதவி தேவை.



தேள் கொட்டு:-






கடிபட்ட இடத்தை நன்றாகக் கழுவி, ஐஸ்கட்டிகளைத் துணியில் சுற்றி பத்து நிமிடங்களுக்காவது ஒத்தடம் கொடுக்கவும். அசாதாரண அறிகுறிகள் தோன்றினால் விரைந்து மருத்துவ உதவியை நாடுங்கள். டெடனஸ் ஊசி போட வேண்டியது அவசியம்.
மனிதக்கடி:-


குழந்தைகள் சண்டையில் ஒருவரை ஒருவர் கடித்துக் கொள்ளக் கூடும். கடிபட்ட இடத்தை சோப்பால் சுத்தம்செய்து நன்றாகக் கழுவவும். கடி ஆழமாக இருந்தால் மருத்துவரிடம் சென்று ஆன்டி-டெடனஸ் ஊசிப் போடவும். அவர் தேவைப்பட்டால் உட்கொள்ள மருந்து கொடுப்பார்.


ரத்த வாந்தி:-


வாந்தியை அதிகம் தூண்டி விடாதீர்கள். ரேன்டாக் போன்ற மாத்திரை கொடுக்கலாம். அவரை நிமிர்ந்து உட்கார வைக்கவும். ரத்தமாக அதிகம் எடுத்தால் தாமதிக்காமல் மருத்துவ உதவி நாடவும்.



செய்யக் கூடாதவை: காரசாரமான உணவை உட்கொள்ளுதல்; மது அருந்துதல், புகை பிடித்தல், படுக்க வைப்பது.


வாந்தி:-


தொடர்ந்து இரண்டு மூன்று தடவைகள் எடுக்க நேர்ந்தால், முதல் கட்டமாக அஜீரணப் பிரச்னையா என்று பார்க்க ஜெலுஸில்/ரேன்டாக் வகை மருந்தைக் கொடுக்கலாம். தொடர்ந்து வாந்தி எடுக்காமல் இருக்க டோம்ஸ்டால் போன்ற மாத்திரை ஒன்று எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் நிவாரணம் கிடைக்கவில்லையெனில் மருத்துவ உதவியை நாடுங்கள். வாந்தியுடன் அதிகமான வியர்வை, மூச்சிரைத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தாலும் உடனே மருத்துவமனை செல்வது நல்லது. வெது வெதுப்பான நீரை அடிக்கடி சிறிய அளவில் குடிக்கக் கொடுத்துக் கொண்டிருங்கள்.



விஷம் உட்கொள்ளுதல்






ஆம்புலன்ஸுக்கு உடனே சொல்லுங்கள். எந்த வகையான விஷம் என்பது தெரிந்தால், மருத்துவரிடம் காட்ட அதை கையோடு எடுத்துக் செல்லுங்கள். நோயாளி மூச்சுப் பேச்சின்றி இருந்தால் செயற்கையாக மூச்சு கொடுக்கவும் (தொகுப்பின் இறுதியில் விளக்கம் தரப்பட்டிருக்கிறது).



செய்யக் கூடாதது: வாந்தியைத் தூண்டுவது



தீக்காயம்:



தீக்காயம் பட்டவுடன் பத்து நிமிடங்களுக்குக் குழாயடியில் குளிர்ந்த நீரில் காட்ட வேண்டும் அல்லது சிறிது நேரம் தண்ணீரில் மூழ்க வைக்கவும். பிறகு இலேசான காயமாக இருந்தால் சில்வெரெக்ஸ் போன்ற களிம்பு தடவி, மெல்லிய துணியால் கட்டவும்.



பெரிய தீக்காயமாக இருக்கும் நிலையில் சிவந்த சருமத்தோடு சேர்த்து கொப்புளங்களும் வீக்கமும், வலியும் காணப்படும். அதைவிட தீவிரமான காயத்தில் சருமம் வெளுத்தோ, கருகியோ காணப்படும். இந்நிலையில் நரம்பு பாதிக்கப்பட்டிருக்கும் என்பதால் வலி தோன்றாது. இதற்கு மருத்துவ உதவியை உடனே நாடுங்கள். அதுவரை ஈரமான மெல்லிய துணி கொண்டு கட்டலாம். காயம் பட்ட இடத்தை உயர்த்தி வைத்துக் கொள்ளவும்.



செய்யக் கூடாதவை: பஞ்சில் மருந்து தடவி நேரிடையாக காயத்தின் மேல் வைப்பது; கொப்புளங்களை உடைப்பது; உடலோடு ஒட்டிக் கொண்டிருக்கும் தீந்த உடையை அகற்றுவது.


மூக்கிலிருந்து ரத்தம் வழிதல்:


மூக்கின் மிருதுவான பகுதிகளை கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் கொண்டு பிடித்துக் கொள்ளவும். இதன் பிறகு மூக்கின் எலும்பை நோக்கி அழுத்தி விடவும். வெளிவரும் ரத்தத்தை மீண்டும் உறிஞ்சாமல் இருக்க, தலையை முன்நோக்கி சாய்த்து வையுங்கள். ஐந்து நிமிடங்களுக்கு மூக்கைப் பிடித்துக் கொண்டு, மேற்சோன்னவற்றை ரத்தம் நிற்கும் வரை தொடர்ந்து செய்யுங்கள்.



கண்ணில் தூசி விழுதல்



கண்ணைத் திறக்க முடியாமல் போனால் கட்டாயம் செய்யக் கூடாதது கண்ணைத் தேய்ப்பது. கண்களைக் குளிர்ந்த நீரால் கழுவலாம், ஊதி வெளியேற்ற முயற்சிக்கலாம். கண்ணில் விழுந்த பொருளை நீக்க முடிய வில்லையென்றால் மருத்துவ உதவி அவசியம். அப்படிப் போகும்போது கண்களை மூடி, மெல்லிய துணி வைத்து கட்டி, பாதுகாப்பாக வைத்திருங்கள்.



ஜுரம்


சிறுவர்களுக்கு பேரசிட்டமால் மருந்து கொடுத்தும் இரண்டு நாட்களுக்கு மேல் ஜுரம் நீடித்தால், மருத்துவரிடம் செல்லுங்கள். ஜுரத்தை அவ்வப்போது தெர்மா மீட்டர் வைத்து சோதிப்பது அவசியம். ஜுரம் 101 டிகிரிக்கு மேல் சென்றால் வலிப்பு வரலாம். அப்போது கவனம் தேவை. குளிர்ந்த நீரில் கைத்துண்டை நனைத்து, நெற்றியில் வைத்தால் சூடு இறங்கும். யாருக்குமே ஜுரம் அந்த அளவுக்கு செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.



சிறுநீரில் ரத்தம்



ஒருமுறை இந்நிலை தோன்றினாலும் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள். வெளியேறிய ரத்தத்தின் நிறம், அதன் தன்மை, அளவு, எத்தகைய வலி இருந்தது போன்ற விவரங்களை மருத்துவரிடம் சொல்லத் தயாராய் இருங்கள்.



பக்கவாதம்




பாதிக்கப்பட்டவர் திடீரென்று கீழே விழுந்தால், அது பக்கவாதமா என்று அறிந்து கொள்வது சரியான மருத்துவ உதவியை நாட உதவும். அவரை சிரிக்கச் சொன்னால் ஒரு பக்கம் கோணிக் கொள்ளும்; ஒரு வார்த்தை பேசச் சொன்னால் பேச்சு குழறும்; இரு கைகளையும் மேலே தூக்கச் சொன்னால், ஒரு பக்கம் தூக்க முடியாமல் போகும்; நாக்கை நீட்டச் சொன்னால் அதுவும் கோணலாகும். இந்த அறிகுறிகள் இருந்தால், ஒரு மணி நேரத்துக்குள் கட்டாயம் மருத்துவ சிகிச்சை தர வேண்டும்.



தண்ணீரில் மூழ்குதல்


மூழ்கிய நபரைக் கரை சேர்த்தவுடன் ஈரத் துணிகளை அகற்றி, கம்பளியால் சுற்றி இதமாக்குங்கள். முகத்தை ஒருபக்கமாகத் திருப்பி படுக்க வைத்து, கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி வைக்கவும். உடலின் நடுப்பகுதியை உயர்த்தி வைத்து, வயிற்றை அழுத்தி நுரையீரலுக்குள் சென்ற நீரை வெளியேற்ற வழி வகுக்கவும். முச்சு குறைவாகவோ, இல்லாமலோ இருந்தால் வாயுடன் வாய் வைத்து மூச்சுக் கொடுக்க வேண்டும். மூச்சு வந்தவுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவும்.


டீஹைட்ரேஷன்


வாந்தி, பேதி போன்றவற்றால் உடலிலிருந்து நீர் அதிகம் இழக்கும் போது, யாரும் செய்யக்கூடிய, பாதிப்புகள் இல்லாத வைத்தியம், ஒரு தம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பும், ஒரு மேசைக்கரண்டி சர்க்கரையும் கலந்து குடிக்கக் கொடுப்பது. பிற மருத்துவ உதவிகள் நாடுவதற்கு முன்பு, இதை எவ்வளவுக்கெவ்வளவு செய்கிறோமா, அவ்வளவுக்கவ்வளவு ஆபத்தைத் தவிர்த்து விடலாம்.


தலையில் அடி:
வீட்டில் கதவு, அலமாரிகளில் யாராவது தலையில் இடித்துக் கொண்டால், உட்கார வையுங்கள். வீக்கம் இருந்தால் ஐஸ்கட்டி வைக்கலாம். சுயநினைவோடு இருந்தால் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. சிறிது நேர ஓய்வில் சரியாகிவிடும். யாரையாவது காவலுக்கு வைத்துக் கொள்ளுங்கள். அடிபட்டது சிறிய குழந்தையென்றால், சில மணி நேரங்களுக்கு கண்காணித்து தகுந்த நடவடிக்கை எடுங்கள். குழந்தை தூங்கினால், நான்கு மணி நேரங்களுக்கு ஒரு முறை எழுப்பி நிலையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். சாதாரண இடி என்றால் பெரும்பாலும் பதற்றப்பட வேண்டியதில்லை.



தலையில் அடிபட்டதில் ஒருவர் சுயநினைவை இழந்துவிட்டால், சுற்று வட்டாரத்தைக் காற்றோட்டமாக ஆக்குங்கள். மூச்சு இல்லாதது போல் தோன்றினால், செயற்கை வழி மூச்சு தரலாம். நினைவும் தப்பி, வாந்தியும் எடுத்தால், தாமதிக்காமல் மருத்துவ உதவி நாடுங்கள். கண்ணைத் திறக்க முடியாமல் செருகிக்கொண்டு போனாலோ அடுத்த நாற்பத்தெட்டு மணி நேரத்தில் தலைச் சுற்றலோ, மயக்கமோ, வாந்தியோ இருந்தாலோ உடனடி மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.
அடி பலமாக இருந்து, சுய நினைவு இருந்தால், முடிந்த வரை நினைவு தப்பாமல், கன்னத்தைத் தட்டியோ பேச்சுக் கொடுத்தோ, பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனை விரைவது முக்கியம். வெளிக்காயம் பட்டிருந்தால் தகுந்த முதலுதவியும் நடவடிக்கையும் எடுப்பது அவசியம்.
செய்யக் கூடாதது: தலையில் அடிபட்டவர் நன்றாக ஓய்வெடுக்கட்டும் என்று நினைத்து தூக்க மாத்திரை கொடுக்கக்கூடாது. வெளியே சென்ற இடத்தில் அடிபட்டால், சில மணி நேரத்துக்கு வண்டி ஓட்டாதீர்கள்.
குழந்தை எதையாவது விழுங்கி விட்டால்...
விழுங்கிய பொருள் ஆபத்தானதா? வயிறு வலிக்கிறதா? மூச்சுத் திணறல், தொடர்ந்து இருமல், தலை தொங்குதல், மயக்கம் போன்றவை இருந்தால், மூச்சுக் குழாயில் மாட்டிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். எதுவாக இருந்தாலும் உடனே மருத்துவமனை விரைய வேண்டும். பொருள் ஆபத்தில்லாததும், மிகச் சிறிய அளவானதுமாக இருந்தால் இரண்டு மூன்று நாட்கள் காத்திருக்கலாம். ஆனால், அசாதாரண அறிகுறிகள் தோன்றினால் மருத்துவரிடம் சென்று விடுங்கள்.
காதுகளில் வேற்றுப் பொருள் சென்றால்...
காதை நிலத்தை நோக்கிச் சாய்த்து, பொருள் விழுகிறதா என்று பார்க்கலாம். பூச்சி காதுக்குள் சென்று விட்டால் மட்டும் மிதமான சூட்டில் இருக்கும் ஆலிவ் எண்ணெய் அல்லது பேபி ஆயிலை காதுக்குள் விட்டால் பூச்சி அதில் மிதந்து வெளியே வந்துவிடும்.
செய்யக் கூடாதது: காதில் இருக்கும் பொருளை எடுக்கும் பொருட்டு காட்டன் பட்ஸ் உட்பட எதையும் கொண்டு குத்துவதால் காது பாதிப்படைவதோடு, பொருள் மேலும் உள்ளே செல்லும் அபாயம் அதிகம்.
மூக்கில் வேற்றுப் பொருள் சென்றால்...
மெள்ள மூச்சை வெளியே விட்டு எடுக்க முயற்சி செய்யலாம். மூக்கின் இன்னொரு துவாரத்தை விரலால் மூடி, பொருள் விழுந்த துவாரத்தை சிந்துவது போல் மூச்சு விட்டு வெளியே வருகிறதா என்றும் பார்க்கலாம். மூக்கை உறிஞ்சுவதோ, மூச்சை இழுப்பதோ தவிர்க்கப்பட வேண்டும். மெள்ள வாயால் மூச்சு விடுவது, பொருள் மேலும் மூக்கினுள் செல்வதைத் தடுக்கும். மருத்துவ உதவி நாடுவது அவசியம், அதிலும் மூச்சுத் திணறல் இருந்தால் தாமதிக்க வேண்டாம்.
செய்யக் கூடாதது: படுக்க வைப்பது, மூக்கை மேல்நோக்கி வைப்பது.
மயக்கம்
மூளைக்கு ரத்தம் கிடைக்காதபோது மயக்கம் ஏற்படுவது உண்டு. முடிந்தவரை அவர் விழுவதற்குள் பிடித்துப்படுக்க வையுங்கள். மூச்சுப் பேச்சின்றி இருந்தால் செயற்கை மூச்சு தாருங்கள். (விளக்கம் இறுதியில்). தெளிந்த பிறகு, தலையை சற்றே உயர்த்தி, குடிக்க சிறிது தண்ணீர், பழச்சாறு, காபி, டீ இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொடுங்கள். மயக்கத்தின் காரணம் தெரிந்து தகுந்த நடவடிக்கை எடுப்பது அவசியம்.
ரத்தத்தில் சர்க்கரை குறைவால் மயக்கம் வந்தால், அரை கப் பழச்சாறு, க்ளூக்கோஸ் மாத்திரை, சில மிட்டாய்கள் போன்ற ஏதாவது கொடுங்கள். பதினைந்து நிமிடங்கள் கழித்த பிறகும் நிலை சரியாகவில்லை என்றால் மீண்டும் தரலாம். அதற்கும் குணம் தெரியாதபோது மருத்துவரிடம் செல்லுங்கள்.
செய்யக் கூடாதது: மயக்கத்தில் குடிக்கக் கொடுப்பது, உலுக்கி எழுப்ப முயற்சிப்பது.
செயற்கையாக மூச்சுத் தருவது எப்படி?
ஒருவர் மூச்சுப்பேச்சு இல்லாமல் இருந்தாலோ, மூச்சுவிடத் திணறினாலோ, மூச்சுக் கொடுக்கும் விதம்:
1. அவசர உதவியைக் கூப்பிட்டு, அவர்கள் வருவதற்குள் பாதிக்கப்பட்டவருக்கு உதவி கொடுங்கள்.
2. மார்புக் கூட்டின் நடுவில், ‘திபோல் விரியும் இடத்தில் கைகளை ஒன்றன் மேல் மற்றொன்றை வைத்து இரண்டங்குலத்துக்கு அழுத்துங்கள். ஒரு நொடிக்கு ஒன்று என்ற விதத்தில் பதினைந்து தடவை மீண்டும் மீண்டும் நன்றாக அழுத்தி விடுங்கள்.
3. தலையை பின்நோக்கி வைத்து, தாடையை நிமிர்த்தி வையுங்கள். மூக்கைப் பிடித்து, அவர் வாயை உங்கள் வாயால் மூடி மூச்சு விடுங்கள். ஒரு நொடிக்கு ஒரு மூச்சு என்ற விதத்தில் இருமுறை செய்யும்போது மார்பில் மூச்சு ஏறுவது தெரிகிறதா என்று பாருங்கள்.
4. இல்லையென்றால் இரண்டாவது கட்டளையை மீண்டும் பின்பற்றுங்கள்.
முதலுதவி டிப்ஸ்
விபத்தில் ஒருவரைக் காப்பாற்ற முற்படும்போது உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். காப்பாற்ற முனைபவர் பதற்றப்படாமல் பொறுமையாகச் செயல்படுவது அவசியம்.
* முன்பின் தெரியாத ஒருவருக்கு உதவும்போது, அவரைப் பற்றிய மருத்துவக் குறிப்புகள் உடன் இருக்கிறதா என்று பாருங்கள். சரியான உதவியைத் தர அது உதவும்.
* நீங்கள் மருத்துவர் இல்லையென்றால், உங்களை மருத்துவராக பாவித்து சுயமாக மருந்துகள் உட்கொள்ளாதீர்கள். ஆன்டி-டெடனஸ் ஊசி ஒரு மாதத்திற்குள் போட்டிருந்தால் மீண்டும் தேவையில்லை.
* ‘முதலுதவி கிட்’ - இதை உங்கள் வீட்டில் தயார் நிலையில் வைத்திருங்கள். அந்தப் பெட்டியை குழந்தைகள் கையில் எட்டாத உயரத்தில் வைக்கவும்.
* வீட்டில் கண்ணுக்குத் தெரியும்படியாகவும் உங்கள் அலைபேசியிலும் ICE (IN CASE OF EMERGENCY) என்று தொடங்கி உங்கள் குடும்பத்தவர், குடும்ப மருத்துவர், ஆம்புலன்ஸ் போன்றோரது தொடர்பு எண்களைக் குறித்து வைக்கவும்.
* வீட்டில் வைத்திருக்கும் மருந்துகள் காலாவதி ஆகவில்லை என்பதை அவ்வப்போது ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளுங்கள்.
முதலுதவிப் பெட்டி

இதில் குறைந்தபட்சம் இருக்க வேண்டியவை:
பேண்ட் எய்ட், பேண்டேஜ், ஒட்டும் டேப், பஞ்சு, கத்தரிக்கோல் புண்ணை ஆற்றும் களிம்பு சீழ்பிடிக்காமல் வைக்கும் திரவம் தெர்மாமீட்டர் பாதிக்கப்பட்டவரைக் கலவரப்படுத்தாமல் சரியான முறையில், தெளிவான சிந்தனையோடு முதலுதவி கொடுக்க முடியுமானால், பெரும்பான்மையான நிலைகளில் நோயாளியை ஆபத்திலிருந்து காப்பாற்றி விடலாம்!
நன்றி - கல்கி, புலவர் தருமி

நீ தசரதனா? ராமனா?

‎2004ல் சுனாமி வந்தபோது சொல்லாமல் விட்டதினால்தானே ஆயிரக்கணக்கான மக்களைச் சாகடிச்சு மக்கள் தொகையை கணிசமாகக் குறைக்க முடிந்தது... அதுபோலத்தான் கூடங்குளம் புராஜக்ட...
1.காமெடியர்களாக அறியப்பட்ட பலர் நிஜ வாழ்வில் டென்ஷன் பார்ட்டிகளே # எஸ் வி சேகர் ,ஒய் ஜி மகேந்திரன் ,கிரேசி மோகன்,சோ @ நாடகமேடை 




-------------------------



2. இதயம் பேசுகிறது இதழுக்காக எஸ் வி சேகரிடம் பேட்டி எடுத்தபோது அவர் செம கான்ட் ஆன ? # ஆம்பளை சிலுக்கு பட்டம் கேவலமா தோ ணலை? 




----------------------



3. ஒய் ஜி மகேந்திரன் ஒரு நாடகமேடையில் - டேய்,விசில் அடிக்கறவன் வெளில போங்க்டா 
#ஈரோடு கொங்கு கலையரங்கம்






-----------------------


4. இலங்கைல நடந்தது இனப்படுகொலையே அல்ல--சோ# துக்ளக் சும்மா லக் ல தான் ஓடுது,சரக்கில்லைனு சொன்னா ஒத்துக்குவீங்களா? 




---------------------



5. அந்த 7 நாட்கள் பட க்ளைமாக்ஸை கே பாலச்சந்தர் ஸ்டைல்ல மாத்தி இருந்தா பட்ம் 7 நாள் தான் ஓடி இருக்கும் 




------------------------



Photo: இருவேறாய் கிடந்து
ஓருவேராய் படர்ந்து
கிளர்வதே 
காதல்....

6. அத்தான்.நான் உளர்றது எல்லாம் உங்களுக்கு புரியுதா?



 உளறல்கள் புரிவதற்கானவை அல்ல ;-) 




-------------------------


7. முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன்- விஜய் ஆண்டனி  # அப்புறம் எப்படி நடப்பீங்கண்ணே? கி கி கி 





----------------------------



8. அரவிந்த்சாமியின் தங்கை நான்: புதுத்தகவல் சொல்லும் நடிகை விபா!!  # இந்த விஷயம் அர்விந்த்சாமிக்குத்தெரியுமா? 




--------------------------


9. என்னிடம் கவர்ச்சி இல்லை: ரம்யா நம்பீசன் # இப்போதைக்கு இல்லையா? எப்போதைக்கும் இல்லையா? 




------------------------------



10. தினமலர் இணையதள செய்தி எதிரொலி: முகமூடி படத்தில் மாயாவி பாடல் சேர்ப்பு # ம்க்கும், அப்படியே 100 நாள் ஓடிடுமாக்கும்?




-----------------------------



Photo: காதலில் சிக்கிக்கிடக்கும் 
என் பெரும்பாலான  கவிதைகளுக்கான
உற்சாகம் உன்னிலிருந்தே
ஆரம்பம்......

# நண்பேன்டா


11. தசரதனுக்கு 60,000 மனைவிகள், ஒரு பிரச்சனையுமில்லை! ராமனுக்கு ஒரு மனைவி, 1000 பிரச்சனைகள்!"# நீதி -ஒண்ணோட நிறுத்தாதே:-)



-----------------------


12. திருட்டு டிவிடியில் என் படத்தை பாருங்கள்-மிஸ்கின் (சொன்னது)# ஏன்னா என் எல்லா படங்களும் திருட்டி டிவிடி யில் சுட்ட படங்களே( சொல்லாதது)!



----------------------


13. ஆறிய உதடுகள் என்னுது.என்றும் ஆறாத சூடான உதடுகள் உண்ணுது# நோ ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்,மிஸ் டேக்




---------------------------


14. உங்க சம்சாரத்தின் சேலையை நீங்களே உங்க கைப்பட துவைச்சா 1 உங்க கோபம் குறைஞ்சிடும் 2 .சம்சாரம் மனசு நிறைஞ்சிடும#டூ இன் ஒன்்



----------------------------


15. ஈரோட்டில் மழை.ஊருக்கு வரும் பெண்கள் கையில் குடையுடனும்,இடை மூடிய உடையுடனும் வரவும்



-------------------------



Photo: எப்படியோ போகட்டுமென்ற
கோவத்தின் பின்னும்
பாசம் படர்ந்துகிடத்தல்...

# அன்பின் இயல்பு நிலை..



16. தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் டுவிட்டரை தடை செய்ய மத்திய அரசு தீவிரம் # இதுதான் எல்லை தாண்டிய தீவிர வாதம்



---------------------------


17. அக்டோபர் 2 முதல் குவாட்டருக்கு மாநில அரசு தடை விதிக்கலாம்.தீபாவளி முதல் ட்விட்டர்க்கு மத்திய அரசு தடை விதிக்கலாம் # பட்சி



-----------------------------


18. ஜெ - தமிழ் நாட்டை விட்டு தீய சக்தியை துரத்தும் பூர்வாங்க வேலைதான் ட்விட்டர்க்கு தடை விதித்து அங்கிருந்து முதலில் துரத்துவது @ கற்பனை




----------------------------


19. இளையராஜா - அப்பாடா.தடை விதிச்சுட்டா ஒரு பய நீஎபொவ படம் பற்றி நக்கல் அடிக்க முடியாது




-------


20. டைம்லைனை பிளாக் பண்ணினால் கூட தமிழன் பொறுத்துக்குவான்.டி எம் மை பிளாக்கினா பொங்கிடுவான்:-)



-------------------------




Photo: இந்த தனிமையின் நிமித்தம்
மண்டியிட்டு சாகிறேன்
அன்றில்
உனை தின்றுகொண்டே வேகிறேன்...

# நினைவு ஒரு பெரும் வலி...........




21. வயதான காலத்திலும் வாலிப முறுக்கு எனக்கு வரும்: கருணாநிதி # தலைவரே ! மிக்சர் பார்ட்டி காமெடியை உங்க முறுக்கு காமெடி மிஞ்சப்போகுது




---------------------------------


22. பிரதமர் மன்மோகன் சொத்து மதிப்பு ரூ.10.73 கோடி # கமுக்கமா இருந்துட்டே அமுக்குவது எப்படி? மணிமேகலைப்பிரசுரம் புக் போடுங்க



------------------------


23. 100 வது ராக்கெட் வெற்றி மன்மோகன் பெருமிதம் # அது கிடக்குது கழுதை,நிலக்கரி ஊழல்ல எத்தனை கோடி அடிச்சீங்க?



--------------------------


24. 2குழந்தைகளுக்கிடையே போதிய இடைவெளி விட்டா அது குடும்பக்கட்டுப்பாடு.2 முத்தங்களுக்கிடையே அதீத இடைவெளி இருந்தா காதல் தட்டுப்பாடு




-------------------------


25. முன் இருப்பவளை நான் நகர்த்துகிறேன் என் இடத்திற்காக..பின்னிருப்பவன் என்னை நகர்த்துகிறான் அவன் இடத்திற்காக # பஸ் உரசல்




----------------------------



Photo: எல்லா வலிகளுக்குப்பின்னும்
புதைக்கப்படுகின்ற
சோகங்களின் புதை மணல் தான்

# பெண் மனம்..........



26. திறந்த நடிகை என தனியே யாரும் கிடையாது.கவர்ச்சி நடிகை என்றாலே அவர்கள் முற்றும் திறந்த நடிகைகளே



---------------------


27. லோலாயீ என்றால் என்ன??


1.வம்புக்கு இழுப்பவர்,வம்பு சண்டைக்கு தருணம் பார்த்து இருப்பவர்


.2,கில்மாவுக்கு தயாராக யாராக இருந்தாலும் ஓக்கே சொல்பவர் 


-----------------------


28. இந்த கால பொண்ணுங்க துப்பட்டாவே போடறதில்லை.ஆனா பசங்க துப்பட்டா கவிதை போட தவறுவதில்லை



-----------------------


29. இன்று உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம்: எனவே யாரும் இன்று யாரையும் திருமணம் செய்யவோ , புதிய காதல் வெளிப்படுத்தவோ வேண்டாம் :-)




------------------------------


30. விரைவில் மிரட்ட வருகிறது ரெசிடெண்ட் ஈவில்-5  # ரெசிடெண்ட் = தங்கும் வீடு , ஈவிள் = பேய் ,  ரெசிடெண்ட் ஈவிள் = வீட்டில் இருக்கும் பேய்?




----------------------------------



Photo: உன் இயல்புக்குள்
என் இயலாமையைப்
போர்த்திக்கொள்கிறேன்..
மறைந்திருப்பதின் வலியை
நீயும்
மறைந்துகிடப்பதின் பொருளை
நானும் 
அறியும் வரை இது இப்படியே 
இருந்துவிட்டு போகட்டும்

# பெண் மனம்...

Monday, September 10, 2012

மன்னாரு - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9AZAv40G6mDw1dUN3p6_ZuiNUwnbcvMlhH6YwjtT1t1-Ny4SaDjQ0n3BW42CiF4Iwl-n_Mwa7J7bMlU5-volmtKN2FToINtaFkrXjShJEg-QSadQIPmrQ0tUr2TZ2w2mynUg4g5qtO45N/s640/Mannaru+Movie+Posters+Mycineworld+Com+(3).jpg ஒரு ஊர்ல ஒரு லவ் ஜோடி ரிஜிஸ்தர் ஆஃபீஸ்ல மேரேஜ் பண்ணிக்கறாங்க. ஊரை விட்டு ஓட பிளான். வில்லன்கள் துரத்திட்டு வர்றாங்க. மாப்ளை பொண்ணு கூட போக முடியலை.. டக்னு தன் நண்பனை தன் மனைவி கூட அனுப்பி வைக்கறார். மாப்ளை வில்லன்கள் கிட்டே மாட்டிக்கறார். அவரை அடைச்சு வெச்சுடறாங்க.. 


 இப்போ அந்த பொண்ணு, மாப்ளையின் நண்பன் 2 பேரும் கொடைக்கானல் ல லாட்ஜ்ல ஒரே ரூமில் தங்க வேண்டிய சூழ்நிலை.. அப்புறம் மாப்ளையின் நண்பன் தன் ஊருக்கு அவளை கூட்டிட்டுப்போனா அங்கே அவனோட காதலி , ஊர் பெருசுங்க..  என்ன ஆச்சு? எப்படி இந்த இடி ஆப்பச்சிக்கலுக்கு விடை கிடைச்சது என்பதை அனுபவம் குறைவான திரைக்கதையால் சொதப்பி இருப்பதே மன்னாரு.. 



 இந்த கதையை திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் டைரக்‌ஷன்ல யதார்த்த நாயகன் சேரன் ஹீரோவா நடிச்சிருந்தா கனகச்சிதமா இருந்திருக்கும்.. மிஸ் பண்ணிட்டாங்க..


 ஹீரோ அழகர் சாமியின் குதிரை ஹீரோ அப்புக்குட்டி.. படத்தின் முன் பாதியில்  ஆங்காங்கே எரிச்சல் படுத்தும் நடிப்பா இருந்தாலும் இடைவேளைக்குப்பின் அபாரமான நடிப்பு.. இவர் இயல்பாய் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் அழகு.. ஆனால் செயற்கையாய்  செய்யும் பல இடங்கள் கடுப்படிப்பு.. 


 ஹீரோயின் ராட்டினம் ஹீரோயின் ஸ்வாதி .மிக கச்சிதமான , பொருத்தமான  தேர்வு.துளியும் ஓவர் ஆக்டிங்க் பண்ணாமல் அச்சு அசலாக அந்த கேரக்டரை முன்னிறுத்துகிறார். கண்ணியமான தோற்றம், கவுரவமான ஆடை வடிவமைப்பு , குடும்பப்பாங்கான தோற்றத்துக்கு கண்ணை மூடிக்கிட்டு இவரை இனிமே செலக்ட் பண்ணலாம்.


http://l2.yimg.com/bt/api/res/1.2/qIohxAfyGNtf1s8DNeH7Tg--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MDA7cT04NTt3PTYwMA--/http://media.zenfs.com/en_us/News/ybrand.dinamalar.com.ta/15212333019.jpg



தம்பி ராமையா தான் படத்துக்கு வசனம். அதுக்காக அவர் படத்துல பேசிப்பேசிக்கொல்லனுமா? மைனா படத்துல எந்த அளவு  ரசிக்க வெச்சாரோ அதே அளவு இதுல கடுப்பேத்துறார்.


ஹீரோவின் மாமா பெண்ணாக வரும்  அந்தப்பொண்ணு மேக்கப் போடாம இயல்பா சில காட்சிகளிலும், ஓவர் ஆக்டிங்கா பல காட்சிகளிலும் வருது.


http://www.thaalamcinema.com/uploads/news/original/-MA469318.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்




1. பெண்களைக்கவரும் பாக்யராஜ் ஸ்டைலில் கதை தேர்ந்தெடுத்தது, அழகான ஹீரோயின் செலக்‌ஷன்,ரம்மியமான ஒளிப்பதிவு



2. இங்கே எதுவுமே சரி இல்லை பாடலும், கரகாட்டக்கார பாடலும் துள்ளலான நாட்டுப்புற இசையும் கலக்கல்.. அப்படியே கிராமத்து இசையை, நடனத்தை கண் முன் நிறுத்துது ( பாட்டும் ராமையா தானாம்)


3. இடைவேளை வரை திரைக்கதையை வேகமாக நகர்த்தியது, கொடைக்கானல் லொக்கேஷன்கள்

http://l1.yimg.com/bt/api/res/1.2/oY4JDtnI.0sgMtdND04l5w--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MDA7cT04NTt3PTYwMA--/http://media.zenfs.com/en_us/News/ybrand.dinamalar.com.ta/15212382399.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்



1. அண்ணே! வண்டியை கொஞ்சம் நிறுத்துங்க



ஓடற வண்டியை நிறுத்தச்சொல்றியே?



பின்னே? நிக்கற வண்டியையா நிறுத்தச்சொல்வாங்க?



2. அய்யா என் ஊரு  தாண்டிக்குடி, எனக்கு ஒரு டிக்கெட் குடுங்க



 தியேட்டருக்கு வந்தா டிக்கெட் மட்டும் கேளுங்க. ஊர்ப்பேர் எல்லாம் சொல்லி ஏன் கேவலப்படுத்தறீங்க?



3. நாம இப்போ எங்கேடா போறோம்?



மேரேஜ்க்கு



யார் மேரேஜ்க்கு?



என் மேரேஜ்க்குத்தான், ஹி ஹி



4. உழைக்கறவன் கைல ஒரு மோதிரம் கூட இல்லை, ஆனா மொதலாளிங்க கைல  10 விரல்லயும் மோதரம்



5. எனக்கும், என் நண்பன் மனைவிக்கும் ஒரு ரூம் வேணும்.



அடப்பாவிங்களா. இப்போ எல்லாம் இப்படி எல்லாம் ஓப்பனா கேட்க ஆரம்பிச்சுட்டீங்களா?



6. நான் சொன்னா அவங்க நம்ப மாட்டாங்க.




 ஏன்?



 அவளவ் மரியாதை என் மேல .



7. இந்த ஊர்த்தலைவர் யார் தெரியுமா? நாந்தேன்..




 இப்போதானே சொன்னீரு?



மறந்துட்டீன்னா?



8. கரகாட்டக்காரி வனஜாவை கற்பாழிக்கப்போறாங்க போல. வாங்க நாமும் போவோம்//


அய்யய்யோ எதுக்கு?


 அடச்சே, அவளைக்காப்பாத்த.



9. நான் ஒருத்தன் மட்டும் படிச்சவனா இருக்கறதால இந்த ஊர்ல எத்தனை பிரச்சனைகளை சமாளீக்க வேண்டியதா இருக்கு?



10. அவன் நெம்பர் ஒன் குடிகாரன்.



அப்போ நீ யாருவே? நெம்பர் டூ  குடிகாரனா?



11. இது என்ன கழுத்தா? தாலி கட்ற மரமா?  எதுக்கு ஆளாளுக்கு  என் கழுத்துல தாலி கட்ட திட்டம் போடறீங்க?



http://img1.dinamalar.com/cini/CineGallery/VM_113532000000.jpg

யக்குநரிடம் சில பல கேள்விகள்



1. காதலிக்கறவனுக்கு முதல்ல தைரியம் தான் வேணும். பதிவுத்திருமணம் நடந்த பின் ஏன் வில்லன்களுக்கு பயந்து  மாப்ளை தன் கல்யாண டிரஸ்சை  ஹீரோவுக்கு போட்டு விடறாரு?அவர் மாட்னா பரவாயில்லையா?


2. பஸ் ஸ்டேண்ட்ல மாப்ளை, பொண்ணு , ஹீரோ 3 பேரும் நிக்கறாங்க. வில்லன்கள் அங்கே வர்றாங்க. எதுக்கு மாப்ளை லூஸ் மாதிரி ஹீரோவை நீ என் சம்சாரத்தை கூட்டிட்டு போ. நான் பின்னாலயே வர்றேன்னு சொல்றான்/ அவன் லூஸா? மிக்சர் பார்ட்டியா? தியாகியா? கேனமா? படத்தோட முக்கியமான இந்த காட்சில மாப்ளை ஏன் ஹீரொவை தன் மனைவி கூட அனுப்பறார்னு காரணம் சரியா சொல்ல வேணாமா?


3. மாப்ளை ஒரு சீன்ல சாஃப்ட்வேர் கம்பெனில 3 வருஷம் வேலை செஞ்சதா சொல்றாரு. பொண்ணும் தான். அப்படி இருக்கும்போது சாட்சிக்கையெழுத்து போட யாருமே வர்லையே, ஏன்?


4. படத்துக்கு சம்பந்தமே இல்லாம திருநங்கைகளை கேவலப்படுத்தி ஒரு பாட்டு சீன் இருக்கு. எதுக்கு? இந்த லட்சணத்துல ஆர் பாண்டியராஜன் அந்த பாட்டுக்கு மட்டும் வந்துட்டுப்போறாரு? அவர் என்ன சாரு நிவேதிதாவா? கிளாமர்க்கு யூஸ் பண்ணிக்க?


5. ஹீரோவோட மாமா பொண்ணு மல்லிகா கிணத்துல தண்ணி சேந்திட்டு இருக்கு. அப்போ ஒரு பொண்ணு வந்து “ உன் மாமன் வேற ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்திருக்கார்”னு சொல்லுது.  உடனே மல்லிகா சேந்திட்டு இருந்த குடத்தை அப்படியே கிணத்துல தொபுக்கடீர்னு போட்டுட்டு காலியான குடம் ஒண்ணை எடுத்துட்டு போகுது. அங்கே மாமனை பார்த்ததும் அதிர்ச்சில குடத்தை கீழே போடுது. அப்போ தண்ணீர் ஃபுல்லா கொட்டுது. எப்படி? கர்நாடகாக்காரன் தண்ணி குடுத்தானா?


6. ஹீரோவோட மாமா பொண்ணு கிட்டே ஹீரோயின் தனியா கூட்டிட்டுப்போய் இந்த மாதிரி விஷயம், உன் மாமா உன்னைத்தான் நினைக்கறார்னு சொல்லிட்டா 4 வது ரீல்லயே படம் ஓவர்.. ஆனா அவ கடைசி வரைக்கும் அப்படி சொல்லவே இல்லை..



7. ஹீரோ அழகை பற்றி நான் சொல்றதா நினைக்க வேண்டாம். அவர் முகத்தை எதுக்கு அவ்ளவ் க்ளோசப்ல அடிக்கடி காட்டனும்? ஆனானப்பட்ட ஐஸ்வர்யாராயா இருந்தாலும் சில கோணங்கள்ல அழகு கம்மியா தெரிவாங்க.. அந்த ஆங்கிள்களை அவாய்டு பண்ணனும் . ஹீரோ பல் துலக்காத காரை பற்களை, எண்ணெய் பூசாத தலை முடியை அவ்ளவ் க்ளோசப்ல அடிக்கடி காட்றீங்களே, ஏன்.. கலா மாஸ்டரை க்ளோசப்ல காட்டுன மாதிரி.. உவ்வே..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgazXhCfxOjd0jcrRz4K4NTZHgXKpR7wzCHtTKeKLmn947VWySXYcWS821fDdQvG-cKl4yHrEX1UW-5MLQqf5HNjpRbdyuyAJxPrl-apguag3a5iKT_juxL1YqiEruAoR6AmVs9yfUitO__/s1600/tamil-movies-mannaru-movie-audio-launch15.jpg

8. ஹீரோ ஒரு ஆட்டை திருடுனாருன்னு ஊர் மக்கள் முன்னால அவரை கட்டி வெச்சு ஹீரோவோட அப்பாவே அடிப்பதும், ஆடு திருடு போகலை, கட்டை அவுத்துட்டுப்போயிடுச்சு என்று ஒரு ஆள் வந்து சொல்வதும் 1980 டைப் அரதப்பழசான செண்ட்டிமென்ட் காட்சிகள். ஒட்டவே இல்லை.. இந்தக்காலத்துல  1000 கோடி அடிச்சவனை ஒரு அடி வைக்க முடியலை, ஆடு திருடுனதுக்கு அவ்ளவ் அடியா?


9. ஹீரோவுக்கும், நண்பனின் மனைவிக்கும் எந்த மேட்டரும் இல்லை, ஜோடி சேரப்போவதில்லை. எதுக்கு தேவை இல்லாம  ஹீரோ மேல் நல்ல அபிப்ராயம் அவளுக்கு வர்ற மாதிரி வரிசையா சீன் வெச்சீங்க?



10 . இந்த திரைக்கதையின் முக்கிய மைனஸ் என்ன தெரியுமா? ஆடியன்ஸ் மனசுல ஹீரோவும், அந்த நண்பன் மனைவியும் ஒண்ணு சேர்ந்துடுவாங்களா? என்ற நினைப்பை ஏற்படுத்தனும்.. பதை பதைப்பை கொண்டு  வரனும். ஆனா ஹீரோ யார் கூட சேர்ந்தா நமக்கென்ன? சேராட்டி நமக்கென்ன? என்ற அலட்சியம் தான் வருது..


11. ஒரு சீன்ல மாப்ளை ஒரு ரூம்ல அடைச்சு வைக்கப்பட்டிருக்கார். அவரை சுத்தி வேட்டை நாய்கள் 12 இருக்கு.. அதை எல்லாம் தூங்க வெச்சுட்டு அண்ணன் எஸ் ஆகறார். யோவ்.. நாய்ங்க என்ன கும்ப கர்ணன்களா? அப்படித்தூங்க? தூக்க மருந்தோ, மயக்க மருந்தோ தராம எந்த நாயும் அப்படித்தூங்க சான்ஸே இல்லை..


12. ஆனானப்பட்ட கமல் ஹாசனே அபூர்வ சகோதரர்கள் படத்துல சேர்ல கட்டி வெச்ச சீன்ல அடக்கி வாசிச்சாரு. இந்தப்படத்துல மாப்ளை சேர்ல கட்டி வெச்சாலும் அதை எல்லாம் உடைச்சுட்டு 8 பேரை ஃபைட் போட்டு காலி பண்றாரு..  யப்பா...


13. மாப்ளையும், பொண்ணும் மேரேஜ் பண்ணிட்டாங்க, எம் எல் ஏவோட பையனுக்கு நிச்சயம் ஆன பொண்ணு. மாப்ளையை பிடிச்சிடறாங்க. முதல் வேலையா என்ன பண்ணுவாங்க? மாப்ளை கைல இருக்கற செல் ஃபோனை வாங்கி யார் யார் எல்லாம் கால் பண்றாங்க?ன்னு ட்ரேஸ் அவுட் பண்ணி பொண்ணோட இருப்பிடத்தை கண்டு பிடிக்க முயற்சி பண்ணுவாங்க. அதை விட்டுட்டு செல் ஃபோனை லூஸ் மாதிரி ஆஃப் பண்ணி வைப்பாங்களா?  பொண்ணு மாப்ளை செல்லுக்கு எப்போ ஃபோன் பண்ணாலும் ஸ்விட்ச் ஆஃப்னு வருது. அந்த சீன் 2 டைம் வெச்சா பரவாயில்லை 8 டைமா?


14. ஹீரோ ஓப்பனிங்க் ஷாட்ல கில்மா படம் பார்க்க போறாரு. படம் போட்ட உடனே ஆடியன்ஸ் எங்கே பிட்டை காணோம்?னு ஆர்ப்பாட்டம் பண்றாங்க. இயக்குநர் இதுக்கு முன்னே பிட் படம் பார்த்ததே இல்லையா? இடைவேளைக்கு 5 நிமிஷம் முன்னால தான் பிட் வரும். கடைசி வரைக்கும் வர்லைன்னாத்தான் அப்படி சண்டை போடுவாங்க, சீட்டை கிழிப்பாங்க. அதுவரைக்கும் கமுக்கமா உக்காந்து படம் பார்ப்பான் இந்த மறத்தமிழன் ( ர்கள்)


15.  .  டைட்டில் வைக்கும்போது கேரக்டர் நேம் வைக்கனும்னா அந்த ஹீரோ மினிமம் 25 படமாவது நடிச்சிருக்கனும். அப்போத்தான் ஒரு கெத்து இருக்கும். வளரும் நடிகர்கள் படத்துக்கு கதைக்குத்தக்க டைட்டில் தான் வைக்கனும்,. இந்தப்படத்துக்கு நான் வைக்க நினைக்கும் டைட்டில் “ கை மாறிடுமோ ரோஜா? “ ( ஆர் கே செல்வமணி மன்னிக்க )

16. ஒரு சீன்ல ஹீரோயின் அதாவது ஹீரோவின் நண்பனின் மனைவி ஸ்வாதி ஹீரோ கேரக்டர் எவ்ளவ் யோக்கியம்னு வார்த்தைல சொல்றார். நான் தூக்கத்துல படுத்திருந்தப்போ சேலை விலகி இருக்கும், மாராப்பு நகர்ந்திருக்கும்னு.. அதை நாங்க எப்படி நம்பறது? காட்சியா அதை ஏன் எடுக்கலை? எவிடன்ஸ் ஸ்ட்ராங்கா இருந்திருக்கும், கில்மா சீனுக்கு கில்மா  ( இந்த கடைசி கேள்வி மட்டும் சும்மா ) 



http://gallery.southdreamz.com/cache/movie-launch/mannaru/exclusive-mannaru-movie-launch-stills-12_720_southdreamz.jpg



எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40

 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - டைம் பாஸ் படம் தான் இது. பார்க்கலாம்... பெண்களும் பார்க்கும் தரத்தில் தான் படம் இருக்கு. ஈரோடு  ஸ்டாரில் படம் பார்த்தேன்

 டிஸ்கி -1-பாகன் - சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/09/blog-post_8.html

2.  RAAZ 3 - பாலிவுட் சினிமா விமர்சனம் 18+-http://www.adrasaka.com/2012/09/raaz-3-18.html

 http://moviegalleri.net/wp-content/gallery/mannaru-movie-latest-stills/mannaru_movie_stills_3251.jpg

ஜெவை ஆபாசமாக சித்தரித்த சிங்களப்பத்திரிக்கை கார்ட்டூன்

https://athikalai.files.wordpress.com/2012/03/eelam-mathi-cartoon-1.jpg?w=1000ஒரு பெண் முதல்வரை வகை தொகை இல்லாமல் ஆபாசமாக சித்தரித்த கார்ட்டூனிஸ்ட்க்கு என் வன்மையான கண்டனங்கள். கார்ட்டூன் என்பது பார்த்து ரசித்து மனம் விட்டு சிரிக்க வைக்க.இப்படி வக்ரத்தை வெளிப்படுத்த அல்ல.சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து ஜெ அவதூறு வழக்கு,கடும் கண்டனம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுத்து மன்னிப்பு கேட்க வைக்கனும்் 

சில நாட்களுக்கு முன் தமிழகத்திற்கு வந்த இலங்கை விளையாட்டு வீரர்களை ஜெயலலிதா திருப்பி அனுப்பினார்.அதற்க்குப்பழி வாங்கும் விதமாக இலங்கையில் இருந்து வெளி வரும் ஒரு சிங்களப்பத்திரிக்கை மிக ஆபாசமாக தமிழ் நாட்டின் சி எம் ஜெவை ஆபாசமாக சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்டுள்ளது. ஹசந்தா விஜெநாயகே என்பவர் தான் அதை வரைந்தவர். 



பதவியில் இருக்கும் ஒரு மாநில முதல் அமைச்சரையே ஒருவரால் இப்படி சித்தரிக்க முடிகிறது என்றால் இவர்கள் கையில் அப்பாவித்தமிழ்ப்பெண்கள் சிக்கி இருந்த போது என்ன செய்திருப்பார்கள் என்று கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை.. 


நேற்று வெளியான இந்த கார்டூனை இலங்கையில் பல இடங்களில் கட் அவுட்டாக பேனராக  வைத்திருக்கிரார்களாம். 24 மணி நேரம் ஆகியும் இது குறித்து பிரதமர் அலுவலகம் ஏதுவும் வாயைத்திறக்காமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கு.. மவுனகுரு இதுக்காகவாவது வாயைத்திறக்க வேண்டும்.. 


இலங்கை அரசுடனான வர்த்தக உறவுகளை துண்டிக்க வேண்டும். மன்னிப்பு
 கேட்க வைக்க வேண்டும்.. 


எதிர்க்கட்சிகளும் தங்கள் பகையை மறந்து இதற்கு குரல் கொடுக்க வேண்டும்..  ஏன்னா எலக்‌ஷன் வர்றப்போ பல பிரிவா பிரிஞ்சு சண்டை போட்டுக்கிட்டாலும் ஒரு  அந்நிய தேசம் நம்ம மாநில சி எம்மை அவமானப்படுத்தியது நம்ம இனத்தை அவமானப்படுத்தியதற்குச்சமம்..

கொடுங்கோலன் ராஜபக்சேவைக்கூட  யாரும் இவ்வளவு மோசமாக சித்தரிக்கவில்லை. அவர்கள் அதிக பட்ச கோபம் அவரை  எமனாக மட்டுமே சித்தரித்தது. ரத்தக்காட்டேரி போல் சில படங்கள் அவ்வளவுதாம்ன்,


 அவரை பர்சனல் லைஃப் பற்றிய தகவல்களோ , விமர்சனமோ, அவர் குடும்பத்தைப்பற்றி எந்த வித மோசமான வர்ணனைகளோ வரவில்லை. ஆனால்  பெண் என்றும் பாராமல் மாநில முதல்வரை இப்படி அவமானப்படுத்தியது அவர்கள் தரத்தையும், அசட்டுத்துணிச்சலையும், மன வக்ரத்தையுமே  வெளிப்படுத்துகிறது.

 
 
Vol. 06. No. 13 Sunday 09 September 2012
 
 
 
 
   

News Menu

Archive Articles

Politics



8-1     

சென்னை - குமுதம் - ஜோக் ரைட்டர்ஸ் சந்திப்பு பாகம் 1

குமுதம் பத்திரிக்கையின் இணை ஆசிரியர் இரா மணிகண்டன்  20 நாட்களுக்கு முன் ஃபோன் பண்ணி குமுதம் ஆஃபீசில் முன்னணி ஜோக் எழுத்தாளர்கள் சந்திப்பு ஒண்ணு வைக்கப்போவதாகவும் , குமுதம் ஜோக்ஸ் தரத்தை முன்னேற்றும் ஆலோசனைக்கூட்டமாகவும், ஜோக் எழுத்தாளர்களை கவுரப்படுத்தும் விழாவாக அது இருக்கும் எனவும் அறிவித்தார்.மிக்க மகிழ்ச்சியுடன் வருவதற்கு ஒப்புதல் தெரிவித்தேன். நிகழ்ச்சி நடைபெறும் நாள் 8.9.2012 சனிக்கிழமை


 ஏன்னா இந்தக்காலத்துல தமிழ் நாட்டில்  படைப்பாளிகளுக்கு மரியாதை கிடைப்பதே அரிது. ஏற்கனவே 12 வருடங்களுக்கு முன் இதே போல் ஒரு சந்திப்பு  நிகழந்தது. 2000 ஆம் ஆண்டின் குமுதம் தீபாவளி மலரில் அது ஃபோட்டோக்களுடன் இடம் பெற்றது. அப்போ  தேர்வு ஆன டாப் டென் ஜோக் ரைட்டர்ஸ் 



1. வி சாரதி டேச்சு, திருவல்லிக்கேணி, சென்னை , 

 2. அம்பை தேவா , தூத்துக்குடி , 

3, சி பி செந்தில்குமார் , சென்னிமலை

 4. பா ஜெயக்குமார் , வந்தவாசி 

5. எஸ்  எஸ் பூங்கதிர் , திருவெண்ணெய் நல்லூர்


 6. சீர்காழி வி ரேவதி, தஞ்சாவூர்


7. உ ராஜாஜி , இடைக்காட்டூர்,சிவகங்கை


8. பாஸ்கி  ,சென்னை


9.தஞ்சை தாமு


10. இரா கமலக்கண்ணன், நாமகிரிப்பேட்டை






இந்த முறை  பழைய லிஸ்ட்டில் இருந்தவங்கள்ல முதல் 3 பேர் , 6வது நபர் மட்டும் இடம் பிடிச்சோம். மீதி ஆட்கள் புது வரவு . அதில் முக்கியமானவர் பர்வீன் யூனுஸ், இவர் இப்போ பெருந்துறையில் வங்கி மேலாளராக பணி புரிகிறார். அவர் தான் விடு பட்ட பல ஜோக் ரைட்டர்ஸை  விழாவுக்கு ஒருங்கிணைப்பதில் பெரும்பங்கு ஆற்றியவர்.


வழக்கம் போல் அதே ஏற்காடு எக்ஸ்பிரஸ் பயணம். சென்னையில் அதிகாலை 4.15 க்கு செண்ட்ரல் போயாச்சு. அங்கே இருந்து எதிர் புறம் உள்ள பார்க் ஸ்டேஷனுக்கு நடந்து போய்  எலக்ட்ரிக் ரயிலில் பல்லாவரம் ஸ்டேஷன் போனேன். அங்கே ட்விட்டர் நண்பரும் , அட்ராசக்க இணையத்தின் ஆரம்ப கால வாசகரும், ஆலோசனை சொல்பவருமான சிவ பக்தர் தீவிர ஆன்மீகவாதி சிவ கீர்த்தியுடன் சந்திப்பு. 


 சென்னை மழையுடன் என்னை வரவேற்றது, நண்பர் சிவா என்னை குடையுடன் வரவேற்றார். மழையிலும் தாமதிக்காமல்  வந்த அவர் என்னை அவர் வசிக்கும் அபார்ட்மெண்ட்டுக்கு அழைத்துச்சென்று உபசரித்தார். காலை டிபன் அவர் கைங்கரியம். ஆனியன் தோசை 8 சாப்பிட்டேன். காலை, மாலை என இரு வேளைக்கும் அவர் வாங்கி வந்த மாவு பாக்கெட் ஒரே  வேளையில் காலி ஆனது.. 

9.30 மணிக்கு என்னை பல்லாவரம் ஸ்டேஷனில் டிராப் பண்ணினார். விழா நடக்கும் நேரம் காலை 11 மணி தானே போயிடலாம்னு நினைச்சது எவ்லவ் பெரிய தப்பு.. ஏகப்பட்ட கூட்டம். வரிசையில் நின்று டிக்கெட் எடுக்கவே 30 நிமிடம் ஆகிடுச்சு. அங்கே இருந்து எக்மோர் ஸ்டேஷன் போனேன். மணி 10.30 ஆகிடுச்சு. 


 அம்பை தேவாவும் , பர்வீன் யூனுசும் ஃபோன் பண்ணி குமுதம் ஆஃபீசுக்கு வந்துட்டதா சொன்னாங்க.. கே ஆனந்தன் ஃபோன் பண்ணி நாங்க எல்லாம் 9 மணிக்கே வந்துட்டோம்.. நீங்க தான் லேட் என்றார்.. இதில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் வெளியூரில் ஒரு நிகழ்ச்சிக்கு செல்லனும்னா நம்ம ஊர் கணக்கு ஒத்து வராது.. பங்க்சுவாலிட்டியை கடை பிடிக்க  முன்னதாக தயாராக வேணும்.. 


அங்கே இருந்து 20 ஆம் நெம்பர் பஸ் பிடிச்சு அபிராமி தியேட்டர்  ஸ்டாப் போனேன் . ஆட்டோ வாடகை ரூ 70ன்னு சொன்னாங்க,. பஸ்சில் 5 ரூபாதான். சிக்கனம் தேவை எக்கணமும். 11. 15 க்கு ஆஃபீஸ் போய்ட்டேன். என்னமோ சி எம் ஆஃபீஸ் மாதிரி பயங்கர செக்யூரிட்டி..  ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவது போல் உள்ளே செல்ல ஏகபப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பண்ணி வெச்சிருந்தாங்க. போன தடவை இவ்வளவு பாதுகாப்பு இல்லை.. 


அதாவது  உள்ளே செல்லும் ஒவ்வொரு கதவிலும் செக்யூரிட்டி ஏதோ ஒரு கார்டை சொருகறார். அப்போதான் கதவு திறக்குது.. 

 கூட்டம் ஜஸ்ட் அப்போதான் ஆரம்பிச்சிருந்தாங்க.. நான் வரப்போ அம்பை தேவா தான் முதல்ல பேசிட்டிருந்தார்.


1.அம்பை தேவா - நான் 30 வருஷங்களா ஜோக் எழுதிட்டு இருக்கேன். என் பூர்வீகம் அம்பை.. விக்ரமசிங்க புரம் ( மணிரத்னம் எடுத்த ராவணன் படத்துல உலக அழகி ஐஸ்வர்யா ராய்  14 ஷாட்ல குளிச்சுட்டே இருப்பாங்களே அந்த அம்பா சமுத்திரம் - சி .பி ) நடிகர் சிவகுமார் என் நீண்டகால நண்பர். அவர் மகன் கார்த்தியின் திருமணத்துக்காக  கோவை வந்து பின்  ஊர் திரும்பும்போது நடந்த பெரிய  பஸ் விபத்தில் என் மகள் , மனைவிக்கு பெரிய காயம் ஏற்பட்டதால் நீண்ட நாட்கள் சென்னை மருத்துவ மனையில் தங்க வேண்டிய சூழலால் சென்னையில் பணி மாற்றல் வாங்கிக்கொண்டேன்.அந்த விபத்து சிகிச்சைக்கு சிவகுமார் ரூ 1,50,000 உதவி செய்தார்.  வாரா வாரம் 100 ஜோக்குகள் எழுதறேன்.. எனக்கு ஜோக் எழுதுவதில் சலிப்பே ஏற்பட்டதில்லை .



2. பர்வீன் யூனுஸ்  - நான் ஒரு வங்கியில் மேலாளரா இருக்கேன். மாசம் ரூ 60,000 சம்பளம் வாங்கினாலும் ஜோக் சன்மானமா ரூ 50 வந்தது என மனைவி ஃபோன் பண்ணிச்சொல்லும்போது ஏற்படும் மன மகிழ்ச்சி அளவில்லாதது. அது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. கடந்த 2 வருடங்களாக பல பத்திரிக்கைகளில் எழுதிட்டு வர்றேன்.  எல்லா படைப்பாளிகளுக்கும் எஸ் எம் எஸ் மூலமா யார் யார் படைப்புகள் எந்த எந்த பத்திரிக்கைகளில் வந்திருக்கு என தகவல் சொல்லிடுவேன்.. குமுதம் பத்திரிக்கையும், விகடனும் என் 2 கண்கள் போல.. தொடர்ந்து வாய்ப்பு தர்றீங்க.. 



3. பாலாஜி கணேஷ் , கோவிலாம்பூண்டி - சார் சொன்னா நம்ப மாட்டீங்க.. மிக வறுமையான சூழலில் நான் இருக்கேன்././ நான் வேலைக்குப்போய் சம்பாதிப்பதை விட ஜோக் எழுதி சம்பாதிக்கறதுல தான் வீட்ல அடுப்பு பொங்குது.. சில சமயம் நீங்க அனுப்பிய மணி ஆர்டர் பணத்துல தான் அரிசி வாங்கி சமைச்சிருக்கோம்.. என் வாழ்க்கைல பத்திரிக்கைகளும், படைப்புகளும் இரண்டறக்கலந்துடுச்சு . 



4. கே ஆனந்தன் பி பள்ளிப்பட்டி  - நான் ஜோக்ஸ், ஒரு பக்க கதை என எல்லாம் கலந்து கட்டி எழுதிட்டு வர்றேன்.. ஒரு பக்க சிறுகதைகள் எழுத என்னை ஊக்குவிச்சதே குமுதம் தான்.மற்ற பத்திரிக்கைகளை விட குமுதம் தான் என் படைப்புலக வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் வகிக்குது.. ஏன்னா ஒரு முறை விகடன் ஆஃபீஸ்ல ஃபோன் பண்ணி 2 நாளுக்குள் அனுப்புங்க அவசரம்னு சொல்லி ஒரு டாபிக்ல ஜோக்ஸ் அனுப்ப கேட்டாங்க.. நானும் ஆஃபீஸ்க்கு லீவ்  போட்டுட்டு மாங்கு மாங்குன்னு 100 ஜோக்ஸ் எழுதி அனுப்பினேன். ஒண்ணு கூட வர்லை..  மனசு விட்டுப்போச்சு.. ஆனா குமுதத்துக்கு நான் அனுப்பற  ஜோக்ஸ்ல 20க்கு 1 என்ற விகிதத்துல வந்துடுது..



5. சொக்கம்பட்டி தேவதாசன்  - நான் ஆனந்த விகடன் உட்பட பல பத்திரிக்கைகளில் நிருபராக பணி ஆற்றியவன். கடந்த 5 வருடங்களாக ஜோக்ஸ் எழுதிட்டு வர்றேன். ஆனந்த விகடன் தீபாவளி  மலரில் பல ஜோக்ஸ் என்னுது வந்திருக்கு. என்னை லட்சக்கணக்கான மக்களுக்கு அறிமுகம் செஞ்சதில் குமுதத்திற்கு பெரிய பங்களிப்பு இருக்கு.




6. சீர்காழி வி ரேவதி - நான் தஞ்சையில் இருக்கேன்.. என் மனைவி பேர்ல தான் எழுதிட்டு இருக்கேன்.. 21 வருடங்களாக ஜோக்ஸ் எழுதிட்டு இருக்கேன்.. என்னோட முதல் ஜோக் வந்ததே குமுதத்துல தான்.. புக்ல என் பேரு ஐ மீன் என் மனைவி பேரு பார்க்கும்போது எழுதுவதற்கான உத்வேகம் பெருகும்..



7. அ . பேச்சியப்பன் , ராஜபாளையம் - குமுதம் ரிப்போர்ட்டர்  வைத்த பாபா பஞ்ச் டயலாக் போட்டியில் 200க்கும் மேற்பட்ட பஞ்ச் டயலாக்ஸ் அனுப்பினேன்.. அதில் தேர்வானதுதான் 

1. நான் சாய் பாபா அல்ல, யார் பக்கமும் சாயாத பாபா, 

2. நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்..



இப்போ குமுதம் நடத்திய கோச்சடையான் பஞ்ச் டயலாக் போட்டியிலும் கலந்திருக்கேன்.. வாசகர்களை நாடித்துடிப்பு அறிந்து குஷிப்படுத்துவதில் குமுதம் தான் என்றும் நெம்பர் ஒன்..



8. சுபஸ்ரீ சென்னை - நானும், எங்கப்பாவும் கடந்த 3 வருடங்களா குமுதத்துக்கு ஜோக்ஸ் எழுதிட்டு இருக்கோம்.. என் படைப்பு வந்தா என்னை விட எங்கப்பா தான் சந்தோஷப்படுவார்.  ஒரு பொண்ணா நான் சந்தோஷப்படறது என்னை எங்கப்பா ஊக்குவிக்கறதுதான். 



9.  நா கி பிரசாத் , கோவை - என் முத ஜோக், என் முதல் சிறுகதை வந்ததெல்லாம்  குமுதம் இதழில் தான். புதிய படைப்பாளிகளை குமுதம் ஊக்குவிப்பது போல் எந்த பத்திரிக்கையும் ஊக்குவிப்பது இல்லை.. ஒரு பக்க கதை போடும்போது அதில் படைப்பாளிகளின் பெயரை நல்லா போல்டு லெட்டர்ல போடுங்க.. ஏன்னா 2 லைன்ல ஜோக் எழுதறவங்க பேரும், ஒரு பக்கத்துல கதை எழுதறவங்க பேரும் ஒரே சைஸ்ல தான் வருது..  இன்னும் அட்ராக்சனா பேர் போட்டா நல்லாருக்கும்,,


 இதைத்தொடர்ந்து பேசுனவங்க எல்லாம்  ஒரே டைப்ல தான் பேசுனாங்க.. அவங்க பேச்சுல ஒண்ணை கவனிச்சேன்.. எல்லாரும் அவங்கவங்களைப்பற்றி ஒரு சுய அறிமுகம், அப்புறம் குமுதம் துதி பாடல் இதுதான் மேலோங்கி இருந்தது.. கூப்பிட்ட்டிருப்பது குமுதம் பத்திரிக்கையின் ஜோக்ஸ் தரத்தை மேம்படுத்துவது எப்படி? என்பதற்கான ஆலோசனைக்கூட்டம்.. ஆனா வந்தவங்கள்ல பெரும்பாலும் அந்த டாப்பிக்கை தொடவே இல்லை.. 


குமுதம் பத்திரிக்கையின் நிறை குறைகள் என்ன? அவங்க என்ன செய்யறாங்க? என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? ட்விட்டர்ஸ்க்கு ஏன்  விகடன், குங்குமம் போல்  மரியாதை செலுத்தலை?என்பது பற்றி விளக்கமா நான் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு அடுத்த பதிவில்..... 

கேப்டன் ஸ்டைலும் ஜெ ஸ்டைலும்

பவானி கூடுதுறை ஆற்றில்
1.மிஸ் , உங்க கிட்டே ஒரு விஷயம் சொல்லனும் எப்படி ஆரம்பிக்கன்னு தெரியல.



 சுத்தம் ஆரம்பத்துலயே ஸ்டார்ட்டிங்க ட்ரபுளா? விளங்கிடு.ம்.




---------------------------------------



2. பெண் பார்க்கும் படலத்தின் போது - 



என்னங்க 2 இட்லி வைக்கறீங்க?முதல் சுற்றிலேயே ஒரு எடசு (12) இட்லி சாப்பிடற ஆளுங்க 



----------------------------


3, ஆபீஸ்பெண்களின் டிபன் பாக்ஸ் ஆண்களின் டிபன்பாக்சைவிட 3 மடங்கு சின்னதா இருந்தும் நம்மை விட 2 மடங்கு எனர்ஜெட்டிக்கா இருப்பதன் மர்மம் என்ன? 




-----------------------------------



4. ஆபீசுக்குசேலையில் வரும் பெண்கள் 10 நிமிடத்துக்கு ஒரு முறை முந்தானையை சரி செய்கிறார்கள் # சுளுக்கெடுப்பு ஸாரி கணக்கெடுப்பு் 




----------------------------------------



5. புத்தகத்திருவிழாக்களில் சமையல் புக்தான் செம சேல்சாம் #நீதி -நாட்டில் பெண் ராஜ்ஜியம் ,வீட்டில் சமையலில் பூஜ்யம்் 





-------------------------



பவானி கூடுது றையில் பலா மரம்



6. ஆபீஸ் இன்று ஆப் டெ என்பதால் ஆபீஸ போகும் பெண்கள் ஆப் ஸேரியில் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்் 




-------------------------



7. ஆத்திகவாதிகள் சனீஸ்வரரையும்,நாத்திகவாதிகள் (அவரவர் ) ஆத்திக்காரியையும் வணங்கினால் இந்த நாள் மட்டுமல்ல,எல்லா நாளும் இனிய நாளே 





-----------------------


8. பூ போட்ட சாரி புடிச்சிருந்தா வில்லேஜ் பொண்ணு,பூசாரியே பிடிச்சிருந்தா வில்லங்கமான பொண்ணு 





----------------------------



9. செந்"தில்" = முருகன் = அழகன் 



--------------------


10. குணக்குன்று ஸன்னி லியோன் - ஜிசம் 2 படத்தில் நடித்தது நான் அல்ல.என் டூப்.இந்த ஸ்டேட்மெண்ட் டூப் அல்ல 




----------------------


தாலி அம்மன் @சென்னிமலை



11. எனக்குப்பின்னால பெரும்படையே இருக்கு # அடடா ஸ்கின் டாக்டர்ட்ட உடனே முதுகைக்காட்டுங்க 



-------------------------


 12. ஆ ராசா - சுடும் போட்டியில் நான் கலந்திருந்தால் அனைவருக்கும் கடும் நெருக்கடியை கொடுத்திருப்பேன் @ஒலிம்பிக்





----------------------


13. மு க -  கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி நிறுத்தியதும் ஒரு வகையில் நல்லதே.எங்களைத்தவிர யாரும் கோடியில் புரளக்கூடாது 




-------------------------



14. தமிழகத்தில் இரண்டு பேர் உயிர் உள்ளவரை நடிபபுக்குபெருமை சேர்க்க இருக்கிறார்கள் 1,கமல் 2 மு கருணாநிதி 




--------------------


15. மு க -காடு வா வா என் கிறது.வீடு போ போ என் கிறது.பதவி ஆசை கொண்ட சிலர் கட்சி ஆரம்பிக்கத்துடிக்கிறார்கள் # அன்னஹசாரே 



---------------------


முத்துக்குமரன் @சென்னிமலை




16. விஜய் - சகுனம் நல்லாருக்கு.துப்பாக்கி ஹிட் அடிச்சுடும்# ஒலிம்பிக் 



-------------



17. சுடுவதில் இந்தியர்கள் திறமைசாலிகள் 



-------------------------


18. அன்னா ஹசாரே - நான் கட்சி ஆரம்பிச்சா எடுபடுமா? 




நமீதா - என்னை கொ ப செ ஆக்குங்க.கட்சியும் எடுப்பா இருக்கும்,ஹி ஹி 




------------------


19.ஆடி 19 இந்தியாவுக்கும் ,சூர்யனுக்கும் 7 1/2 # சூரியனை சுற்றி கருவளையம்




-----------------



20. வானில் சூரியனை சுற்றி கரு வளையம். கோபாலபுரத்தில் உதய சூரியனை சுற்றி வளைக்கத்துடிக்கும் சிவப்பு நிலையம் ( குஷ்பூ) 





-------------------------


வாரனாம்பிகை அம்மன் ஆலயம @ ஈரோடு்




21.சாரி டியர்.பாரீன் மாப்ளையைத்தான் கட்டிக்குவேன்.




 10 லட்சம் குடுத்தா நானும் அங்கே போய்ட்டு வந்துடுவேன.பாரீன் ரிட்டர்ன் மாப்ளை ஆகிடுவேன்் 




------------------



22. lift = மின் தூக்கி ,தூண்டில் = மீன் தூக்கி? # சபாஷ் துபாஷ் 




--------------------


23. கோபப்படுவது என் 'ஸ்டைல்': விஜயகாந்த் பேச்சு # வெட்டிக்கோபத்தை எல்லாம் கண்டுக்காம விட்டுடறது என் ஸ்டைல் - ஜெ 




-----------------



 

Sunday, September 09, 2012

மீண்டும் அதே ஒலி! - யாழினி மாறன் - சிறுகதை

முடிவே முதலாக



மீண்டும் அதே ஒலி!



யாழினி மாறன்



ஊட்டிக் குளிரில் முடங்கிக் கிடந்த ஜெசிந்தா எழுந்து போய், ஜன்னலைத் திறந்து பார்த்தாள். ‘வாட் எ ஒண்டர்ஃபுல் க்ளைமேட்?’ காலைப் பனி மூடிய ஏரியின் அழகை முதன் முதலாக ரசித்த ஜெசிந்தாவின் பார்வை வீட்டு வாசலில் விழுந்ததும் திடுக்கிட்டது. காம்பவுண்ட் கேட் திறந்து கிடந்தது.



‘வினித் கூட இன்னும் எழுந்திருக்கலையே?’ யோசித்தபடியே பின்னால் திரும்பிப் பார்த்தாள். வினித் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தான்.


டார்லிங் வீடு எப்படி இருக்கு?"


சூப்பர்ப்... பட், நம்ம ரெண்டு பேருக்கு இவ்வளவு பெரிய வீடா? எனக்குப் பயமாய் இருக்குங்க."



கொஞ்சலாகச் சொன்ன ஜெசிந்தாவை, ஹேய்... ஜெஸி... இது எனக்கு கம்பெனி கொடுத்த வீடு. நான் கூட இருக்கறப்ப உனக்கென்ன பயம் ..." என்றபடியே வினித் ஆசையாய் அணைக்க வந்த போதுதான், ‘சர்ரக்... சர்ரக்’ பக்கத்து ஹாலில் யாரோ நடக்கும் சத்தம் கேட்டு வினித்தைத் தள்ளி விட்டாள் ஜெஸி.



என்னங்க... வீட்டுல நம்மளைத் தவிர வேற யாரும் இல்ல. ஆனால் ஹால்ல யாரோ நடமாடுற சத்தம் கேட்குதே?"


ஜெஸி... புது ஊர்... புது இடம்... நடுராத்திரியில பூனை கீனை ஏதாவது போயிருக்கும்."



டீ எஸ்டேட்டில் மேனேஜராகப் பணிபுரியும் வினித்தை கல்யாணம் பண்ணிக்கொண்டு, ஊட்டிக்கு வந்த முதல் நாள் இரவு வினித் சொன்ன சமாதானத்தை ஏற்றுக் கொண்டாலும், அடுத்து வந்த நாட்களிலும் அந்தக் காலடி ஓசை கேட்டு ஜெசிந்தா பயந்து போனாள்.



இப்போ வீட்டு காம்பவுண்ட் கேட் திறந்து கிடக்கு. வினித்திடம் சொல்லி முதல்ல வேறு வீடு பார்க்கச் சொல்ல வேண்டியதுதான்..." வினித்தை எழுப்பி விஷயத்தைக் கூறினாள்.



அய்யோ... ஆரம்பிச்சிட்டியா? காத்துல கேட் தானா திறந்திருக்கும். இதுக்குப் போய் பயப்படலாமா டார்லிங்? முதல்ல உன்னைய ஒரு ஈ.என்.டி. டாக்டர்கிட்ட கூட்டிப் போயி உன் காதை செக்கப் பண்ணணும் ஜெஸி..." கிண்டலடித்தபடியே அணைக்க வந்த வினித்தை பொய்க் கோபத்தில் தள்ளி விட்டாள்.



அன்று முழுவதும் எஸ்டேட்டைச் சுற்றிப் பார்த்து விட்டு, இரவு உணவை உட்லண்ட்ஸில் முடித்துவிட்டு, வீடு திரும்பினார்கள். தூக்கம் வராமல் வினித் விழித்திருக்க, ஜெசிந்தா அசதியில் உடனே தூங்கிப் போனாள்.



இதோ பார் நிஷா. கல்யாணத்துக்கு முன்னால நாம லிவிங் டு கெதர் லைஃப்ல இருந்தோம். இப்போ எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி. என் வொய்ஃபுக்கு தெரியறதுக்குள்ள நம்ம ரிலேஷன்ஷிப்பை இதோட, இன்னியோட நிறுத்திப்போம். இனிமே இப்படி நடுராத்திரியில வீட்டுக்கு வராதே. அதுதான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது. ப்ளீஸ்..."



வினித் யாரிடமோ பேசுவது, கனவில் கேட்பது போல் இருக்கவே, ஜெசிந்தா திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள். அருகில் வினித் இல்லை. கூடவே அந்த ‘சர்ரக்... சர்ரக்...’ சத்தம்.



மீண்டும் அதே ஒலி. பல இரவுகள் கேட்டது. படுக்கையில் இருந்து திடுக்கென எழுந்த ஜெசிந்தாவுக்கு விக்கல் தூக்கிப் போட்டது. உள்ளங்கை ஈரத்தைத் துடைத்தபடி ஒருக்களித்த ஜன்னலை லேசாக விலக்கிப் பார்த்தாள்.



ஒரு ஜோடி செருப்புகள் வாசலைத் தாண்டிக் கொண்டிருந்தன.

நன்றி - கல்கி , புலவர் தருமி

மரப்பாச்சி -உமா மகேஸ்வரி - சிறுகதை

http://img.dinamalar.com/data/more_pic_gallery/nmalarnews_85447329283.jpg

பரணில் எதையோ தேட ஏறிய அப்பா இறங்கும்போது வேறொரு பொருளைக் கையில் வைத்திருந்தார். கடந்த காலத்தின் தூசு அவர் மீது மங்கலாகப் படிந்திருந்தது. பழைய பொருள்களோடு ஞாபகங்களையும் உருட்டிக் களைத்துக் கனிந்த முகம். அப்பா அனுவைக் கூப்பிட்டார்





 எந்த நொடியிலும் விழுந்து சிதறுவதற்கான அச்சுறுத்தல்களோடு அவசர வாழ்வில் விளிம்பில் தள்ளாடும் அபூர்வமானதொரு குழந்தைக் கணத்தைத் தன்னிலிருந்து சேகரித்து அவளில் நட்டுவிட வேண்டும், உடனடியாக. ஒரு மாயாஜாலப் புன்னகையோடு அதை  அனுவிடம் நீட்டினார்.





சிறிய, பழைய மஞ்சள் துணிப்பையில் பத்திரமாகச் சுற்றிய பொட்டலம், பிரிபடாத பொட்டலத்தின் வசீகரமான மர்மத்தை அனு ஒரு  நிமிடம் புரட்டிப் பார்த்து ரசித்தாள். உள்ளே என்ன? பனங்கிழங்குக் கட்டு?  பென்சில் டப்பா? சுருட்டிய சித்திரக் கதைப் புத்தகம்? எட்டு வயது அனுவிற்கு இந்தப் புதிரின் திகில் தாங்க முடியவில்லை.அப்பாவின் ஆர்வமோ  அது இவளுக்குப் பிடித்திருக்க வேண்டுமே என்பதாக இருந்தது.





அவசர அவசரமாகப் பிரித்தபோது வெளியே வந்தது கரிய மரத்தாலான சிறிய பெண்ணுருவம். அதனுடைய பழமையே அனுவிற்குப் புதுமையானதாயிற்று. தெய்வ விக்கிரகங்களின் பிழைபடாத அழகோ, இயந்திரங்கள் துப்பிய பிளாஸ்டிக் பொம்மைகளின் மொண்ணைத்தனமோ வழவழப்போ அதற்கில்லை. விரல்களை உறுத்தாத சீரான சொரசொரப்பு. இதமான பிடிமானத்திற்கு ஏதுவான சிற்றுடல்; நீண்டு மடங்கிய கைகள்; ஒரு பீடத்தில் நிறுத்தப்பட்ட கால்கள்; வாழ்தலின் சோகத்தை வளைகோடுகளுக்குள் நிறைத்த கண்கள்; உறைந்த உதடுகள். ‘ஹை, பின்னல்கூட போட்டிருக்கப்பா.’





அனு ஒவ்வொன்றாகத் தடவிப் பார்த்தாள் அதிசயமாக. ‘ஒவ்வொரு அணுவிலும் இதைச் செதுக்கிய தச்சனின் விரல்மொழி, உளியின் ஒலி’ என்று அப்பா முழங்கை, கால்கள் மற்றும் முகத்தில் இருக்கிற சிறுரேகைகளைக் காட்டிச் சொன்னார். பிறகு அவளுடைய திகைப்பைத் திருப்தியோடு பார்த்தபடி, புதிய விளையாட்டுத் தோழியுடனான தனிமையை அனுமதிக்கும் விதமாக அங்கிருந்து நகர்ந்தார்.





மரச் செப்புகள், சிறு அடுப்பு, பானை, சட்டி, சருவம், குடம், கரண்டி என்று எதிர்காலச் சமையல் அறையின் மாதிரி அவள் சிறு கைகளில் பரவிச் சமைந்து




அவளைக் களைப்புறச் செய்தது. வட்டத் தண்டவாளத்தில் ஓடும் குட்டி ரயிலின் கூவல் சோகத்தின் நிழலை நெஞ்சுள் பூசுகிறது. கிளி, மைனா, புறா என்று பறவை பொம்மைகளின் மொழியோ சதா மேகங்களைத் துழாவிக் கொண்டிருக்கிறது. பிளாஸ்டிக் யுவதிகள் அவள் கற்பனையின் கனம் தாளமாட்டாத மெலிவோடு இருக்கிறார்கள்.





அம்மா சமையல், கழுவுதல், துவைத்தல், துடைத்தல் என எந்த நேரமும் வேலைகளோடிருக்கிறாள். பிறகு தங்கச்சிப் பாப்பாவின் குஞ்சுக் கை, கால்களுக்கு எண்ணெயிட்டு நீவி, காலில் குப்புறப் போட்டுக் குளிக்கவைக்கிறாள். துவட்டிச் சாம்பிராணிப் புகை காட்டி, நெஞ்சோடு அணைத்துச் சேலையால் மூடி மூலையில் உட்கார்ந்திருக்கிறாள் நெடுநேரம்.





‘அம்மா நான் உன் மடியில் படுத்துக்கட்டுமா?’





‘இன்னும் சின்னக் குழந்தையா நீ?’ நெஞ்சு வரை மேடேறிய கர்ப்ப வயிற்றோடு அம்மாவுக்குப் பேசினாலே மூச்சிரைக்கிறது. அவள் பகிர்ந்து தரும் அன்பின் போதாமை அனுவை அழுத்துகிறது.





அப்பா மெத்தையில் சாய்ந்து மடக்கி உயர்த்திய கால்களில் தங்கச்சிப் பாப்பாவைக் கிடத்தி தூரியாட்டுகிறார். கிலுகிலுப்பையை ஆட்டி பாப்பாவிற்கு விளையாட்டுக் காட்டுகிறார். ‘ங்கு, அக்கு’ என்று பாப்பாவோடு பேசுகிறார்.





‘அப்ப, இந்தக் கதையில அந்த ராஜா…’ என்று அனு எதையாவது கேட்டால்., ‘பெரிய மனுசிபோல் என்ன கேள்வி நை நைனு, சும்மா இரு’ என்று அதட்டுகிறார்.





‘நான் யார்? பெரியவளா, சின்னவளா, நீயே சொல்’ அனு கேட்கையில் மரப்பாச்சி மௌனமாய் விழிக்கும்.





‘எனக்கு யாரிருக்கா? நான் தனி.’ அனுவின் முறையிடல்களை அது அக்கறையோடு கேட்கும். சுடுகாயைத் தரையில் உரசி அதன் கன்னத்தில் வைத்தால் ‘ஆ, பொசுக்குதே’ என்று முகத்தைக் கோணும். கொடுக்காப்புளிப் பழத்தின் கொட்டையில், உட்பழுப்புத் தோல் சேதம் அடையாமல் மேல் கறுப்புத் தோலை உரித்து நிலை மேல் வைத்தால் பகல் கனவும் பலிக்கும் என்கிற அனுவின் நம்பிக்கைகளுக்கு ‘ஆமாஞ்சாமி’ போடும். அவள் நிர்மாணிக்கிற பள்ளிகளில் மாணவியாக, தொட்டில்களில் பிள்ளையாக, சில நேரம் அம்மாவாக, கனவுலக தேவதையாக எந்த நேரமும் அனுவோடிருக்கும்.





மரப்பாச்சி புதிய கதைகளை அவளுக்குச் சொல்லும்போது, அதன் கண்களில் நீல ஒளி படரும். மரப்பாச்சி மரத்தின் இதயமாயிருந்தபோது அறிந்த கதைகள், மரம் வானை முத்தமிட்ட பரவசக் கதைகள், மழைத்துளிக்குள் விரிந்த வானவிற் கதைகள்… அவள் எல்லா நாளும் ஏதாவது ஒரு கதையின் மடியில் உறங்கினாள்.





வருடங்கள் அவளை உருகிப் புதிதாக வார்த்தன. நீண்டு, மினுமினுக்கிற கைகள்; திரண்ட தோள்கள்; குழைந்து, வளைந்த இடுப்பு, குளியல் அறையில் தன் மார்பின் அரும்புகளில் முதன் முறையாக விரல் பட்டபோது பயந்து, பதறி மரப்பாச்சியிடம் ஓடி வந்து சொன்னாள். அது தனது சிறிய கூம்பு வடிவ மார்புகளை அவளுக்குக் காட்டியது.





அவள் குளியல் அறைக் கதவுகளை மூடித் தன்னைத் தனிப்படுத்திக் கொள்வதில் அம்மாவிற்குக் ஆதங்கம். ‘நான் தலை தேய்து விடறேனே’ என்கிறாள்.



‘ஒண்ணும் வேணாம்’ என்று அனு விலகுகிறாள். அம்மா தனக்கும் அவளுக்கும் இடையே தள்ளத் தள்ள முளைத்தாடும் திரைகளை விலக்க முயன்று, தாண்டி முன்னேறுகையில் புதிது புதிதாய் திரைகள் பெருகக் கண்டு மிரண்டாள். நிரந்தரமான மெல்லிய திரைக்குப் பின்புறம் தெரியும் மகளின் வடிவக்கோடுகளை வருடத் தவித்தாள்.



எல்லோரும் தூங்கும் இரவுகளில் அனுவின் படுக்கையோரம் அம்மா உட்கார்ந்திருப்பாள். அனுவின் உறக்கத்தில் ஊடுருவி நெருடும் அம்மாவின் விழிப்பு. உள்ளங்கை அனுவின் உடல் மீது ஒற்றி ஒற்றி எதையோ எதையோ தேடும். ‘என்னம்மா?’ பாதி விழிப்பில் அனு கேட்டால் பதற்றமாகக் கையை இழுத்துக்கொண்டு, ‘ஒண்ணுமில்லை’ என முனகி, முதுகு காட்டிப் படுத்துக் கொள்வாள். அம்மாவின் முதுகிலிருந்து விழிகளும் வினாக்களும் தன் மீது பொழிவதை அனுவால் அறிய முடியும்.





பள்ளிக்குக் கிளம்பும் நேரம் இப்போதெல்லாம் மேலாடையைச் சரியாகப் போடுவது அம்மாதான், சாயங்காலம் அவள் வர பத்து நிமிடம் தாமதித்தால் , வாசலில் அம்மா பதறித் தவித்து நிற்கிறாள். எங்கே போனாலும் அம்மாவின் கண்களின் கதகதப்பும் மிருதும் அடைகாக்கிறது.





தன் அயர்விலும் ஆனந்தத்திலும் மரப்பாச்சி மங்குவதையும் ஒளிர்வதையும் கண்டு அனு வியக்கிறாள். தன்னை அச்சுறுத்தவும் கிளர்த்தவும் செய்கிற ததும்பல்களை மரப்பாச்சியிடமும் காண்கிறாள். கட்புலனாகாத கதிர்களால் தான் மரப்பாச்சியோடு ஒன்றுவதை உணர்கிறாள்.





மரப்பாச்சியின் திறந்த உடல், கோடுகள் தாண்டி மிளிரும் விழிகள், இடுப்பும் மடங்கிய கையும் உருவாக்கும் இடைவெளி அனைத்தையும் உறிஞ்சத் திறந்த உதடுபோல் விரியும். அனுவின் உலகம் அதற்குள் வழுக்கி, நகர்ந்து, சுருங்கும்.





சிறுமிகள் அனுவை விளையாடக் கூப்பிட்டு உதடு பிதுக்கித் திரும்புகிறார்கள். கூடத்துத் தரையில் முடிவுற்று ஆடும் தொலைக் காட்சியின் ஒளி நெளிவுகள், இரவில் ஊறும் இருள், ஜன்னல் கதவுகள் காற்றில் அலைக்கழிய, அனு கட்டில் ஓரத்தில் சுருண்டிருப்பாள்.





மேஜையில் இருக்கும் மரப்பாச்சியின் கண்கள் அவளைத் தாலாட்டும் மெல்லிய வலைகளைப் பின்னுகின்றன. அதன் முலைகள் உதிர்ந்து மார்பெங்கும் திடீரென மயிர் அடர்ந்திருக்கிறது.



வளைந்து இடுப்பு நேராகி , உடல் திடம் அடைந்து, வளைந்த மீசையோடு அது பெற்றஆண் வடிவம் விசித்திரமாயும் விருப்பத்திற்குரியதாகவும் இருக்கிறது. அதுமெதுவாக நகர்ந்து அவள் படுக்கையின் அருகில் வந்தது. அதன் நீண்ட நிழல் கட்டிலில் குவிந்து அனுவை அருந்தியது. பிறகு அது மெத்தை முழுவதும் தனது கரிய நரம்புகளை விரித்ததும் அவை புதிய புதிய உருவங்களை வரைந்தன.;




துண்டு
துண்டாக. அம்புலிமாமா கதைகளில் அரசிளங்குமரிகளை வளைத்துக் குதிரையில்
ஏற்றுகிற இளவரசனின் கைகள். சினிமாக்களில் காதலியைத் துரத்தி ஓடுகிற
காதலனின் கால்கள். தொலைக்காட்சியில் கண் மயங்கிய பெண்ணின் கன்னங்களில்
முத்தமிடுகிற உதடுகள். தெருவோரங்களில், கூட்டங்களில் அவள் மீது தெறித்து
, உணர்வைச் சொடுக்கிச் சிமிட்டுகிற கண்கள். இன்னும் அம்மாவின் இதமான
சாயல்கள், அப்பாவின் உக்கிரக் கவர்ச்சியோடான அசைவுகள், அத்தனையும்
சிந்திய நிழற்துண்டங்கள், அபூர்வமான லயங்களில் குழைந்து கூடி உருவாகிறான்
ஒருவன்.





அவள் ஒருபோதும் கண்டிராத, ஆனால் எப்போதும் அவளுள்
அசைந்தபடியிருந்த அவன், அந்த ஊடுருவல் தனக்கு நேர்வதைத் தானேயற்று கவனம்
கொள்ள முடிவது என்ன அதிசயம்? தனக்கு மட்டுமேயாகவிருந்த அந்தரங்கத்தின்
திசைகளில் அவன் சுவாதீனம் கொள்வது குளிர்ந்த பரபரப்பாகப் பூக்கிறது. அந்த
இரவு, காலையின் அவசரத்திலும் உடைபடாது நீண்டது. அனு வேறெப்போதும் போலன்றி
தன் உடலை மிகவும் நேசித்தாள்.





கனவின் ரகசியத்தைப் பதுக்கிய மிதப்பில்
பகல்களிருந்தன. பள்ளி முடிந்ததும் தாவி வந்து அவளை அள்ளுகிற மரப்பாச்சி;
‘ஏன் லேட்?’ என்று ‘உம்’மென்றாகிற அதன் முகம்; நீள்கிற ரகசியக்
கொஞ்சல்கள்; அம்மா இல்லாத நேரம் இடும் முத்தங்கள்; அவள் படுக்கையில்
அவளுக்கு முன்பாகவே ஆக்கிரமித்திருக்கிற அவன். போர்வைக்குள் அனுவின்
கைப்பிடியில் இருக்கிற மரப்பாச்சியை அம்மா பிடுங்க முயற்சித்தால்,
தூக்கத்திலும் இறுகப் பற்றிக் கொள்கிறாள்.





அதன் விரிந்த கைகளுக்குள்
தன்னைப் பொதிந்தும், மார்பு முடிகளைச் சுருட்டி விளையாடியும் மீசை நுனியை
இழுத்துச் சிரித்தும் தோள்களில் நறுக்கென்று செல்லமாய்க் கிள்ளியும் அவள்
நேரங்கள் கிளுகிளுக்கும். தாபங்களின் படிகளில் சுழன்றிறங்குகிறாள் அவள்.
அகலவும் மனமின்றி அமிழவும் துணிவின்றி வேட்கையின் விளிம்பலைகளில் நுனிப்
பாதம் அளைகிறாள்.





கிருஸ்துமஸ் லீவ் சமயம் அத்தை வந்தபோது அனு கவுனை கால்களுக்கிடையில்
சேகரித்து, குனிந்து, கோல நடுச்சாணி உருண்டையில் பூசணிப் பூவைச்
செருகிக்கொண்டிருந்தாள். ‘அனு எப்படி வளர்ந்துட்டே!’ அத்தை
ஆச்சரியத்திற்குள் அவளை அள்ளிக் கொண்டாள். உணவு மேஜையில் விசேஷமான
பண்டங்கள், பார்த்துப் பார்த்துப் பரிமாறும் அம்மா. அத்தை அனுவை
லீவிற்குத் தன்னோடு அனுப்பும்படி கேட்டதும் அம்மாவின் முகத்தில் திகிற்
புள்ளிகள் இறைபட்டன. ‘


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiASm72zBQ4idYimOoLqcv1gyq-fDMSELenDDKWDn6sSZER-UvOOVt62u6jUj9EQmDDid0IL_PFsHAvEzmWvrEojxGDzjuFoCETcSuA9YzFBUwMdyFbt4VvDqQYFZ2EB613tcq_9ueEPGs/

அய்யோ மதினி, இவளை நாங்க கடிச்சா முழுங்கிடுவோம்?
அப்படியே இவள் ஆளாகிற முகூர்த்தம் எங்க வீட்டில் நேர்ந்தால் என்ன
குத்தம்? எனக்கும் பிள்ளையா குட்டியா? ஒரு தரம் என்னோட வரட்டுமே’ அத்தை
அவளைத் தன்னருகில் வாஞ்சையாக இழுத்துக் கொண்டாள்.





ஒரு உறுப்பையே தன்னிலிருந்து வெட்டியெடுப்பது போன்ற அம்மாவின் வேதனை
கண்டு அனு மருண்டாள். துணிகளை அடுக்கிய பெட்டியில் மரப்பாச்சியை வைக்கப்
போனபோது அத்தை, ‘அங்கே நிறைய பொம்மை இருக்கு’ என்று பிடுங்கிப்
போட்டதுதான் அனுவுக்கு வருத்தம்.

அந்தப் பயணம் அவளுக்குப் பிடித்திருந்தது. நகர்கிற மரங்கள்; காற்றின்
உல்லாசம்; மலைகளின் நீலச்சாய்வு. எல்லாமும் புத்தம் புதிது.

அம்மா வற்புறுத்தி உடுத்திவிட்ட கரும்பச்சைப் பாவாடையில் அனுவின்
வளர்த்தியை மாமாவும் வியந்தார். பார்த்த கணத்திலிருந்தே மாமாவிடம்
இருந்து தன்பால் எதுவோ பாய்வதை உணர்ந்து அவள் கூசினாள். ‘எந்த கிளாஸ் நீ?
எய்த்தா, நைன்த்தா?’ என்று கேட்டுவிட்டு பதிலைக் காதில் வாங்காமல்
கழுத்துக் கீழே தேங்கிய மாமாவின் பார்வையில் அது நெளிந்தது.





‘ எப்படி
மாறிட்டே? மூக்கொழுகிக்கிட்டு, சின்ன கவுன் போட்டிருந்த குட்டிப் பொண்ணா
நீ?’ என்று அவள் இடுப்பைத் திமிறத் திமிற இழுத்துக் கொஞ்சியபோது மூச்சின்
அனலில் அது ஊர்ந்தது. ‘சட்டை இந்த இடத்தில் இறுக்குதா?’ கேட்டு தொட்டுத்
தொட்டு மேலும் கீழும் அழுத்தித் தேடிய உள்ளங்கையில் இருந்து அது
நசநசவென்று பரவியது. மாமாவின் கைகளில் இருந்து தன்னை உருவிக்கொண்டு
ஓடினாள் அனு.





அத்தை பிரியமாயிருந்தாள். திகட்டத் திகட்ட கருப்பட்டி ஆப்பாம், ரவை
பணியாரம், சீனிப்பாலில் ஊறிய சிறு உருண்டையான உளுந்து வடைகள் என்று
கேட்டுக்கேட்டு ஊட்டாத குறைதான்.



‘உன் அடர்த்தியான சுருள்முடியில் இன்னிக்கு ஆயிரங்கால் சடை பின்னலாமா?
பின்னி முடித்து, கொல்லையில் பூத்த பிச்சி மொட்டுகளை ஊசியில் கோர்த்து
வாங்கி , ஜடையில் தைத்து, பெரிய கண்ணாடி முன் திருப்பி நிறுத்தி, சின்னக்
கண்ணாடியைக் கையில் தந்தாள். ‘நல்லாயிருக்கா பார் அனு!’



அம்மா ஒளிந்துவைத்த அன்பின் பக்கங்கள் அத்தையிடம் திறந்து புரண்டன. அனு
எந்நேரமும் அத்தையை ஒட்டி, இரவில் சுவர் மூலையில் ஒண்டிப் படுத்து,
அத்தையின் சேலை நுனியைப் பார்த்தபடியே தூங்க முனைவாள். அவ்வளவு
தூரத்தையும் ஒரு விரல் சொடுக்கில் அழித்துவிட்டு ,
மரப்பாச்சிக்குள்ளிருந்து கிளம்பி வருகிறான் அவன்.





அத்தைக்கும்
அனுவிற்கும் நடுவே இருந்த சிறிய இடைவெளியில் தன்னை லாவகமாகச் செலுத்திப்
பொருத்திப் படுக்கிறான். உறக்கத்தோடு அனுவின் தசைகளிலும் நரம்புகளிலும்
கிளர்ந்து கலக்கிறான். அவனும் அவளும் இடையறாத மயக்கத்தில் இருக்கையில்
ஒரு அன்னியப் பார்வையின் திடீர் நுழைவில் அத்தனையும் அறுபடுகிறது. அனு
உலுக்கி விழிக்கிறாள். மிகவும் அவசரமாக கழிப்பறைக்கு போகவேண்டும்
போலிருக்கிறது. கொல்லைக் கதவு திறந்து தென்னைகள், பவழமல்லி, மருதாணி
எல்லாம் கடந்து, இந்த இருட்டில் குளிரில்…அய்யோ, பயமா இருக்கே. அத்தையை
எழுப்பலாமா? ச்சே, அத்தை பாவம். அலுத்துக் களைத்து அயர்ந்த தூக்கம். ஏறி
இறங்கும் மூச்சில் மூக்குத்தி மினுக்கும். காதோர முடிப் பிசிறில்,
கன்னத்து வியர்வைத் துளிர்ப்பில் அத்தைக்குள் புதைந்த குழந்தை வெளித்
தெரிகிறது. எப்படியாவது தூங்கிவிடலாம். இல்லை, தாங்க முடியவில்லை.




அடிவயிற்றில் முட்டும் சிறுநீர் குத்தலெடுக்கிறது. மெல்ல எழுந்து
அத்தைக்கும் முழிப்புக் காட்டாமல் , கொலுசு இரையாமல் பூனைபோல நடந்து,
சாப்பாட்டு மேஜையில் இடித்துச் சமாளித்து, இருட்டில் தடவி சுவிட்சைப்
போடுகிறாள். கதவில் சாவியைத் திருகும் சிற்றொலி நிசப்தத்தின்
மென்மைக்குள் பெரிதாக வெடிக்கிறது. அத்தை புரள்வது கேட்கிறது. ‘ரொம்ப
இருட்டாயிருக்குமோ?’ பயந்து, நடுங்கி, அடித்தாழை ஓசையிட நீக்கி, கதவைத்
திறந்தால் பளீரென்று நட்சத்திரங்களின் கலகலத்த சிரிப்பு. மின்விளக்கின்
மஞ்சளௌளி தரையில் சிறுசிறு நாகங்களாக நெளிகிறது; மிக
அழகாக,அச்சமேற்படுத்தாததாக. தன் பயங்களை நினைத்து இப்போது சிரிப்பு
வருகிறது. காற்றில் அலையும் பாவாடை. பிச்சிப்பூ மணம். செடிகளின் பச்சை
வாசனை. மருதாணிப் பூக்களின் சுகந்த போதை, தாழ்ந்தாடுகிற நட்சத்திரச்
சரங்கள். நிலவின் மழலையொளி. கழிவறைக் கதவின் கிறீச்சிடல்கூட இனிமையாக.
சிறுநீர் பிரிந்ததும் உடலின் லகுத்தன்மை. இந்த மருதாணிப் புதர்கிட்டே
உட்கார ஆசையாயிருக்கே.




அய்யோ அத்தை தேடுவாங்க. திரும்பி வருகையில் அனு
தான் தனியாக இல்லாததை உணர்ந்தாள். உடல் மீது நூறு விழிகள் மொய்த்து
உறுத்தின. அனிச்சையாக ஓடத் தொடங்கியபோது எதன் மீதோ மோத, கடினமான கைகள்
அவளை இருக்கின, காலையில் உணர்ந்த அதே சுடு மூச்சு. ‘ச்சீ, இல்லை; என்னை
பேய் பிடிச்சிடிச்சோ?’ கரிய, நரை முடியடர்ந்த நெஞ்சில் அவள் முகம்
நெருக்கப்படுகிறது. கொட்டும் முத்தங்கள் – கன்னத்தில், உதட்டில்,
கழுத்தில், அவளுள் தளிர் விடுகிற அல்லது விதையே ஊன்றாத எதையோ தேடுகிற
விரல்களின் தடவல், மாறாக அதை நசுக்கிச் சிதைக்கிறது. சிறிய மார்பகங்கள்
கசக்கப்பட்டப்போது அவள் கதறிவிட்டாள்.





வார்த்தைகளற்ற அந்த அலறலில்
அத்தைக்கு விழிப்புத் தட்டியது. காய்ந்த கீற்றுப் படுக்கைமீது அனுவின்
உடல் சாய்க்கப்பட்ட போது அவள் நினைவின்மையின் பாதாளத்துள் சரிந்தாள்.
கனமாக அவள் மேல் அழுத்தும் மாமாவின் உடல். அத்தை ஓடிவரவும் மாமா அவசரமாக
விலகினார்.





அத்தையின் உலுக்கல்; ‘அனு, என்ன அனு!’ அவளிடம் பேச்சு
மூச்சில்லை. ‘பாத்ரூம் போக வந்தப்ப விழுந்துட்டா போல.’ மாமாவின்
சமாளிப்பு. அத்தை மௌனமாக அவளை அணைத்துத் தூக்கிப் படுக்கையில்
கிடத்துகிறாள்.

அரை மயக்க அலைகளில் புரளும் பிரக்ஞை. ‘இதுவா? இதுவா அது? இப்படியா,
இல்லை, முகமும் முகமும் பக்கத்தில் வரும்; உடனே ஒரு பூவும் பூவும்
நெருங்கி ஆடும்; வானில் புதிய பறவைகள் சிறகடிக்கும். நீலமேகமும் பசும்
புல்வெளியும் ஒட்டி உறவாடும்; திசைகளெங்கும் குழலிசை இனிமையாகப்
பெருகும்; அப்படித்தானே அந்த பாட்டில் வரும்? ஓஹோ, அப்படியிருந்தால் இது
பிடித்திருக்குமா? நீ விரும்புவது அணுகுமுறையின் மாறுதலையா? இல்லை. ச்சே,
இந்த மாமாவா? காதோர நரை. வாயில் சிகரெட் நெடி. தளர்ந்த தோள்களின் வலுவான
இறுக்கத்தில் இருந்த கிழட்டுக் காமத்தின் புகைச்சல். நெஞ்சைக் கமறுகிறது.
உடல் காந்துகிறது. மார்பு வலியில் எரிகிறது. கண்கள் தீய்கின்றன.





‘அய்யோ அனு, மேல் சுடுதே. இந்த மாத்திரையாவது போட்டுக்கோ’ அத்தை வாயைப்
புடவையால் போர்த்திக்கொண்டு விம்முகிறாள். மாமாவின் அறைக்கு ஓடி என்னவோ
கோபமாய்க் கத்துகிறாள்.





‘நான் இனி நானாயிருக்க முடியாதா? மாமாவின் தொடல் என் அப்பாவுடையது
போலில்லை. அப்பா என்னைத் தொட்டே ஆயிரம் வருடம் இருக்குமே! என் முதல் ஆண்
இவனா! என் மேல் மோதி நசுக்கிய உடலால் என்னவெல்லாம் அழிந்தது? பலவந்தப்
பிழம்புகளில் கருகி உதிர்ந்த பிம்பங்கள் இனி மீளுமா? மாமா என்னிலிருந்து
கசக்கி எறிந்தது எதை? எனக்கு என்னவோ ஆயிடிச்சே. நான் இழந்தது எதை?
தூக்கம் ஒரு நனைந்த சாக்குப்போல் இமைமீது விழுந்தது.







காலையில் தேய்ந்த ஒலிகள். அடுப்படியில் லைட்டரை அழுத்தும் சத்தம், பால்
குக்கரின் விசில், டம்ளரில் ஆற்றும் ஓசை. விழித்தபடி படுத்திருந்த
அனுவிடம், ‘இந்தா காப்பியைக் குடி அனு’ என்கிறாள் அத்தை.





‘வேணாம், எனக்கு இப்பவே அம்மாகிட்டே போகணும்’

அத்தையின் கெஞ்சல்களை அனு பொருட்படுத்தவில்லை. மாமா பேப்பரை
மடித்துவிட்டு பக்கத்தில் வருகிறார். மறைக்க முடியாத குற்ற உணர்வு அவர்
முகத்தில் படலமிட்டிருக்கிறது அசிங்கமாக.





‘உனக்கு மாமா ஒரு புது ஃப்ராக் வாங்கித் தரட்டுமா?’. தோளில் பட்ட கையை
அனு உடனடியாக உதறித் தள்ளுகிறாள். மாமா அத்தையின் முறைப்பில் நகர்ந்து
விலகுகிறார்.





பயணம் எவ்வளவு நீண்டதாக நகர்கிறது? எத்தனை மெதுவாகச் சுழலும் சக்கரங்கள்?
அத்தையின் மௌனம் நெஞ்சில் ஒற்றுவதாகப் படிகிறது. அத்தை அம்மாவின் நைந்த
பிரதியெனத் தோற்றம் கொள்கிறாள். ‘அம்மா, அம்மா! நான் உன்னிடம் என்ன
சொல்வேன்? என்னால் இதை எப்படிச் சொல்ல முடியும்?’

‘என்னாச்சு? உடனே திரும்பிட்டீங்க? அம்மா இடுப்புக் குழந்தையோடு ஓடி
வருகிறாள். அனுவைப் பாய்ந்து தழுவும் அவள் பார்வை. அத்தை
வரவழைத்துக்கொண்ட புன்னகையோடும் கலங்கி வருகிற கண்ணோடும்.

‘ஒரு நாள் உங்களைப் பிரிஞ்சதுங்கே உங்க பொண்ணுக்குக்க் காய்ச்சல்
வந்துடுச்சு’ எனவும் அம்மாவின் விழிகள் நம்பாமல் அனு மீது நகர்ந்து
தடவுகின்றன – கை தவறி விழுந்தும் உடையாமல் இருக்கிற பீங்கான் சாமானைப்
பதறி எடுத்துக் கீறவில்லையே என்று சரி பார்ப்பதுபோல.

அனு ஒன்றும் பேசாமல் உள்ளே ஓடுகிறாள். வீட்டின் நாற்புறமும் தேங்கிய
துயரம். அமானுஷ்யமான அமைதி அங்கே பொருக்குக் கட்டியுள்ளது. ‘என்
மரப்பாச்சி எங்கே?’ அனு தேடுகிறாள். கூடத்தில் தொலைகாட்சிப் பெட்டிமீது,
அடுக்களையில் பொம்மைகளிடையே, பாப்பாவின் தொட்டிலில், எங்கும் அது இல்லை.
‘அது கீறி உடைந்திருக்கும். நூறு துண்டாக நொறுங்கிப் போயிருக்கும். அம்மா
அதைப் பெருக்கி வாரியள்ளித் தூர எறிந்திருப்பாள். அனுவின் கண்களில் நீர்
கோர்த்தது. அழுகையோடு படுக்கையில் சரிந்தபோது மரப்பாச்சி சன்னலில்
நின்றது. ஆனால் அது அனுவைப் பார்க்கவேயில்லை. அவளையன்றி எங்கேயோ,
எல்லாவற்றிலுமோ அதன் பார்வை சிதறிக் கிடந்தது. அனுவின் தொடுகையைத்
தவிர்க்க அது மூலையில் ஒண்டியிருந்தது. அதனோடான நெருக்கத்தை இனி
ஒருபோதும் மீட்க முடியாதென்று அவள் மனம் கேவியது. உற்றுப் பார்த்தபோது
மரப்பாச்சியின் இடை வளைந்து, உடல் மறுபடியும் பெண் தன்மையுற்றிருந்தது.
மீண்டும் முளைக்கத் தொடங்கியிருந்த அதன் மார்புகளை அனு வெறுப்போடு
பார்த்தாள்.


http://abedheen.files.wordpress.com/2010/10/marappachchi_cover.jpg