Tuesday, August 21, 2012

கலைஞர், எம்ஜி ஆர் ஜெ, சசிகலா- வாழ்க்கை ஒரு வட்டம்

.கலைஞர் செய்த தவறால் எம்ஜிஆரும், எம்ஜி ஆர் செய்த தவறால் ஜெவும், ஜெ செய்த தவறால் சசிகலாவும் அரசியலுக்கு வந்தார்கள் # வா ஒ வட்டம்



-----------------------

2. வாழ்க்கை போகும் போக்கில் வழுக்கையை வரவைக்காமல் இருக்க முடிவதில்லை 




-------------------------


3.  பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்,பள்ளியறையில் தூங்கியவன் கலவி இழந்தான் 


----------------------


4. இனிமேல் தீவிரவாதிகள் அனுப்பும் ஒரு SMSக்கு ரூ 10 வசூலிக்கப்படும் - பிரதமர் பெருமிதம் 



-------------------------

5. காரணமேதுமில்லை.. நான் சின்ன வயசுல இருந்தே மந்தியாத்தான் இருக்கிறேன்.




-------------------


சொக்கவைக்கும் சொன்லா...

6. இன்ஸ்பெக்டர்.FIR போட்டாச்சா? 



போலி இன்ஸ்பெக்டர் - பட்டப்பகல்லியேவா? 



--------------------


7. ஒரு போன் விளம்பரம் - எங்க போன் பேட்டரி 5 நாள் நிக்கும் # அப்புறம் மொத்தமா படுத்துக்குமா? 




--------------------------


8. ட்விட்டர், ஃபேஸ்புக் எல்லாம் 15 நாள் கண்காணிக்கறீங்க , ஓக்கே, அப்போ 16 ஆம் நாள்ல இருந்து தீவிரவாதிங்க யூஸ் பண்ணா அப்போ என்ன செய்வீங்க? 



-------------------

9. ஃபேஸ்புக்கை கலைஞரால் ஃபேஸ் பண்ண முடியலை, ஏன்னா  மு.க  முக ராசி இல்லாதவர் - ஜெ  @ கற்பனை


--------------------------


10,கர்ப்பம்னா  பசங்க பயப்படுவாங்க, சர்ப்பம்னா எல்லாருமே பயப்படுவாங்க # தத்ஸ் 



--------------



கடை வீதி கலகலக்கும் இவ நடந்து வந்தா...!

11. ஒரு படைப்பாளி ஏன் அங்கீ”காரத்துக்கு” மட்டும்  ஏங்கறான்? அவன் என்ன சுகர் பேஷண்ட்டா?



--------------


12. வாழ்க்கை என்பது எதிர் வீட்டு ஃபிகர் மாதிரி, கண்ணுக்கு எட்டுனது கைக்கு எட்டாது # ப வீ பார்வதிப்ரியனின் டைரியில் இருந்து


----------------


13.  டியர், நீங்க எனக்கு பச்சைத்துரோகம் பண்ணிட்டீங்க, என் பேரை பச்சை குத்திக்கறேன்னு சொல்லி கடைசி வரை குத்தவே இல்லையே?



-----------------


14.வந்தாரை எல்லாம்  வாழ வைக்க நான் தயாராகவே இருக்கிறேன், ஆனால் யாரும் வரவில்லை ;-0



--------------------------------

15.  இப்போல்லாம் ஃபிகரு  கொஞ்சம் நல்லாருந்தாலே ஓடிருது... #ஓடாத ஃபிகர் கொஞ்சம் கூட நல்லா இல்லை.. # எ கீ



-----------------


கோவா வின் அக்வாபோர்ட் கடற்கரை ஒரு பார்வை



16. உன் கிட்டே லைசென்ஸ் இருக்கா? நோ சார்.என் கிட்டே இருப்பது LIE SENSE அல்ல. TRUTH sense தான் # டிராபிக் டிராஜடி





-----------------------------


17.வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை- மன்மோகன் # ஸ்விஸ் பேங்க் மேட்டர் வெளில வந்துடுச்சா?



---------------------


18. உனக்கும் மீறிய சக்தி ஒண்ணு இருக்குன்னு நம்பினா அதுவே உன் சம்சாரம்


-----------------------


19. கிரானைட் அதிபர் பி.ஆர்.பி பழனிச்சாமி போலிஸில் சரண்டர்! -- # அவங்கவங்களா சரண்டர் ஆனா உண்டு.போலீஸ் போய் பிடிக்கமாட்டாங்க.போல



--------------------------

20. இளைஞர்களுக்கு வழிவிடுகிறேன்: லக்ஷ்மண்.. சச்சின் மைண்ட் வாய்ஸ்-உன்னை கேட்டாங்களா முருகேஷா?




-------------------------------


இதுல யாருக்கு 5 அறிவு

Monday, August 20, 2012

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மர்மங்கள்

http://resultsbuzz.in/wp-content/uploads/2012/05/TNPSC-Images.jpg 
கேள்வித்தாளை லீக் செய்தவர் யார்?

பிடிக்கத் துடிக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை


நல்ல நம்பிக்கையை பெற்றுவந்த டி.என்.பி.எஸ்.சி.க்கு திருஷ்டிப் பரிகாரம்... கடந்த வாரத்தில் நடந்தது. எல்லாம் ஒழுங்காய் போய்க்கொண்டு இருப்பதைப் பொறுக்காத மனிதர்கள் புகுந்து விளையாட.. எது ஓட்டை என்பதற்கான தேடுதல் துரிதமாய் நடக்கிறது!


சமீபத்தில் நடந்த தேர்வில் மட்டும் அல்ல, கடந்த சில ஆண்டுகளாகவே  டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் வினாத்தாள் லீக் ஆகி இருக்கிறது என்று அதிர்ச்சியைக் கிளப் புகிறார்கள், லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரத்தினர். ''டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு, கல்வித்துறை ஆசி ரியர்கள், டியூஷன் சென்டர்கள், டுடோரியல் கல்லூரிகள் என்று ரகசியத் தொடர்பு இருக்கிறது. இந்தத் தொடர்பு மூலம் கோடிக்கோடியாக கொள்ளை அடித்திருக்கிறார்கள்.


 இந்த முறை சென்னையில் இருந்து கேள்விகள், பாலன் என்பவருக்குப் போய் இருக்கிறது. பாலன் மூலம் இ-மெயிலில் பல்வேறு நபர்களுக்கு வினாக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த பாலன் யார்? அவருக்குக் கேள்வித்தாள் யார் மூலம் கிடைத்தது என்பதைத்தான் விசாரித்து வருகிறோம்'' என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில். அவர்களே கடந்த ஆண்டு நடந்த இரண்டு சம்பவங்களைச் சொல்கிறார்கள்.




டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதுகிறவர்கள் சென்னையைச் சேர்ந்த பாலன் அண்டு கோ நெட்வொர்க் ஆட்களிடம் பணம் கொடுத்தால் போதும். ஒரு துண்டுக் காகிதத்தில் பீச் ரோட்டில் உள்ள ஒரு நூலகத்தில் இருக்கும் ஒரு நபரைப் பார்க்கச் சொல்வார்கள். 'புத்தகம் கொடுக் கவும்' என்ற வார்த்தை மட்டும்  பென்சிலால் அதில் எழுதப்பட்டு இருக்கும்.

 அங்கே போனால், ஒரு குறிப்பிட்ட புத் தகத்தைக் கொடுத்து, அதை நன்றாகப் படித்து தேர்வு எழுதச் சொல்வார்கள். அந்தப் புத்தகத்தில் வினாத்தாளில் வர விருக்கும் கேள்விகளில் 80 சதவிகிதம் வரை இருக்குமாம். கடந்த வருடம்தான், டி.என். பி.எஸ்.சி. உறுப்பினர் ஒருவரின் அரவ ணைப்பில் இந்த நெட்வொர்க் இயங்குவதைக் கண்டுபிடித்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், அந்த நூலக நபரையும் பிடித்து விட்டனர். ஆனால், இந்த வருடமும் அதேபோன்று நெட்வொர்க் இயங்கி உள்ளதுதான் ஆச்சர்ய்ம்! 



சென்னையில் இருந்து உடுமலைப்பேட்டையில் உள்ள ஒரு சென்டருக்கு குரூப் 2 தேர்வுக்கு முந்தைய நாள் இரவு, அங்கே படிக்கும் மாணவர்களை எல்லாம் வரவழைத்து இருக்கிறார்கள். தலைக்கு ஒரு லட்சம் வீதம் வசூல் செய்துகொண்டு, பாடம் நடத்தும் போர்டில் வினா - விடைகளை எழுதிப் போட்டு இருக்கிறார்கள். அந்த போர்டில் எழுதி யதை அழிக்காமலேயே போய்விட்டதால், அடுத்த நாள் விஷயம் வெளியே கசிந்து விட்டது என்கி றார்கள்.



இந்த வருடம் நடந்த சம்பவம் குறித்து டி.என்.பி.எஸ்.சி. அலுவலக வட்டாரத்தில் விசாரித்தோம். ''எங்களைப் பொறுத்தவரை, நிஜ வினாத்தாளை எடுத்து, யாரோ மற்றவர்களுக்குப் படித்துக் காட்டியிருக்கிறார்கள். அதைக்கேட்டு, தப்பும் தவறுமாக எழுதியுள்ளனர். வினாக்களுக்கான பதில்களிலும் தவறுகள் இருக்கின்றன.


இதையெல்லாம் தவறு செய்தவர்களிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்களில் இருந்து அறிய முடிகிறது. திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி, நாமக்கல், ஆயக்குடி ஆகிய இடங் களில் உள்ள சில சென்டர்களில் படித்துத் தேர்வு எழுதி யவர்கள் இதுவரை 100% வேலையில் சேர்ந்திருக்கிறார்கள். இவை எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதையெல்லாம் ரகசியமாக சர்வே செய்து வருகிறோம்'' என்றனர்.


http://www.thehindu.com/multimedia/dynamic/01072/TH-EXAM_1072396f.jpg

லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி களிடம் பேசியபோது, ''பயங்கரமான நெட்வொர்க் அமைத்து வேட்டை நடத்தி இருக்கிறார்கள். இதை நிச்சயம் லோக்கல் போலீஸாரால் டீல் செய்ய முடியாது. முன்னர் நாங்கள் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வீடுகளில் சோதனை நடத்தியபோது பல்வேறு ஆதாரங்களைக் கைப்பற்றினோம்.


மேற்கொண்டு விசார¬ணையைத் தொடர முடியாமல் தடை வாங்கி விட்டனர். அதனால், தமிழக அரசு உடனே தலையிட்டு எங்களுக்கு இருக்கும் தடையை உடைத் தால், திடுக்கிடும் பல விவரங்களைக் கொண்டு வருவோம். இப்போதைய வினாத்தாள் லீக்கின் ஆணிவேர் எங்கே இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது என்பதால் வேறு வழியின்றி வேடிக்கை பார்க்கிறோம்'' என்றனர் வருத்தத்துடன்.



இந்தச் சூழலில் கடந்த வருடம் குரூப் 2 தேர்வு எழுதித் தோற்றுப் போன, சென்னையைச் சேர்ந்த  போலீஸ் அதிகாரி ஒருவரின் மகன், நம்மைத் தொடர்பு கொண்டு பேசினார்.



''கடந்த ஆண்டு குரூப் 2 தேர்வுக்காக நான் மெனக்கெட்டுப் படித்து எழுதினேன். அப்போது மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த சிலர் என்னிடம் வந்து, 'கஷ்டப்பட்டுப் படிச்சா, வேலை கிடைக்காது. எங்களைக் கவனி. அப்பத்தான் உனக்கு வேலை கிடைக்கும்' என்று என்னிடம் சொன்னார்கள். வினாத்தாள் முன்கூட்டியே வாங்கித் தருவதாகப் பேரம் பேசியவர்கள், மூன்று லட்சம் கேட்டனர். அந்த அளவுக்கு வசதி இல்லை என்பதைவிட, குறுக்குவழியில் போக விரும்பாமல் நோ சொல்லி விட்டேன்.


ஆனால், என்னை அணுகிய அதே நபர், தேர்வில் மிகஅதிக மதிப்பெண்கள் பெற்று அரசுப்பணியில் சேர்ந்துவிட்டார். அவருக்கு வேண்டப்பட்ட பலரும் அதிக மதிப்பெண்கள் எடுத்து அரசுப் பதவிகளைப் பிடித்து விட்டனர். குறுக்கு வழியில் பதவியைப் பிடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கொதித்தார்.



என்ன செய்யப்போகிறது அரசு?


  நன்றி - ஜு வி 



http://i.ytimg.com/vi/utTdVEjTb9E/0.jpg

Bicentennial Man (1999) -ஷங்கர்-ன் எந்திரன் -ன் மூலம்- ஒரு பார்வை

http://ecx.images-amazon.com/images/I/51PBTXBTSFL._SL500_AA300_.jpg

ரோபோ, ஒரு பெண்ணை உருகி உருகிக் காதலித்தால்? பஸ்களைக் கவிழ்த்து அட்டகாசம் செய்யாமல் உணர்ச்சிகளால் நிரம்பிய சாந்தமான மனிதனாக வாழ்ந்தால்? அப்படியொரு ரோபோ படம் 1999-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது! க்ரிஸ் கொலம்பஸ் இயக்கியிருந்த அந்தப் படத்தின் பெயர் Bicentennial Man.



தமது வீட்டு வேலைகளைச் செய்வதற்காக ‘ஆண்ட்ரு’ என்கிற ரோபோவை வாங்கி வருகிறார் மார்ட்டின். சுட்டியாகவும் அறிவாளியாகவும் இருக்கும் ஆண்ட்ருவை, மார்ட்டினின் மூத்த மகளுக்குப் பிடிப்பதில்லை. குழந்தைகளுக்கே உரிய வெறுப்பின் காரணமாக ரோபோவை வீட்டை விட்டு வெளியேற்ற விரும்புகிறாள். ஆனால், முயற்சிகள் தோல்வியடைகின்றன. வெறுப்பின் உச்சகட்டமாக வீட்டு மாடியில் இருந்து குதிக்கும்படி ரோபோவுக்கு உத்தரவிடுகிறாள். ஆண்ட்ரு, எஜமானியின் உத்தரவுக்குக் கட்டுப்படுகிறது. ஆண்ட்ருவின் பெரும்பகுதிகள் நொறுங்கிப் போகின்றன.



கோபமடையும் மார்ட்டின், ரோபோவை நமது குடும்ப உறுப்பினரைப் போலவே நடத்த வேண்டும் என மகள்களிடம் கண்டிப்புடன் உத்தரவிடுகிறார். ‘ரிப்பேர்’ செய்யப்பட்டு வீடு திரும்பும் ஆண்ட்ரு அந்த வீட்டின் ஒரு செல்லப்பிராணி ஆகிறது. ஒரு கட்டத்தில் இன்னொரு உறுப்பினராகவே மாறுகிறது. தவிர, மகள்களின் உற்ற தோழனாகவும் மாறிவிடுகிறது.


http://images5.fanpop.com/image/photos/25300000/Bicentennial-Man-robin-williams-25340319-2126-1433.jpg

ஒரு நாள் மார்ட்டினின் இளைய மகள் ‘லிட்டில் மிஸ்’ஸின் கைவினைப்பொருள் ஒன்றை உடைத்துவிடும் ஆண்ட்ரு, அதே போன்ற பொம்மையை, தத்ரூபமாக வடிவமைக்கிறது. ஆண்ட்ரு, சுயமாகச் சிந்திப்பதையும் அதன் க்ரியேட்டிவிட்டியையும் அறிந்துகொண்ட மார்ட்டின் ரோபோ தயாரிப்பாளர்களிடம் கொண்டு செல்கிறார். மற்ற ரோபோக்களும் ஆண்ட்ருவைப் போலத்தானா என்பதை அறிந்து கொள்வதுதான் அவரின் நோக்கம். ஆனால் ஆண்ட்ரு சிந்திப்பதை அறியும் நிறுவனத்தின் தலைமை அதிகாரி, ரோபோ சுயமாக சிந்திக்கத் தொடங்கினால் எதிர்காலத்தில் விளைவுகள் விபரீதமாகிவிடும். எனவே, ஆண்ட்ருவை அழித்துவிடுவதுதான் நல்லது என்று வாதிடுகிறார்.





ஆனால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மார்ட்டின் அதைத் திரும்பவும் வீட்டுக்கு அழைத்து வருகிறார். அதோடு நில்லாமல் மனித உணர்ச்சிகளைப் பற்றிய பாடத்தை நடத்துகிறார். ஆண்ட்ரு, உணர்வுகளால் நிறைந்த மனிதனாக மாறுகிறது. மார்ட்டினிடம் இருந்து கற்றுக் கொண்ட மர வேலைகளின் மூலமாக ஆண்ட்ரு சுயமாகச் சம்பாதிக்கிறது. வங்கிக் கணக்கு தேவைப்படும் அளவுக்குக் கொட்டுகிறது வருமானம். இந்நிலையில் தமக்கு உத்தரவிடும் எஜமானர்களிடம் இருந்து விடுதலை தேவை என்பதை விரும்பும் ஆண்ட்ரு, வீட்டை விட்டு வெளியேறுவதற்கு மார்ட்டினிடம் அனுமதி கோருகிறது. மார்ட்டின் வேதனையுடன் அனுமதியளிக்கிறார்.



தம்மைப் போலவே வேறு ஏதேனும் ரோபோக்கள் இருக்கின்றனவா என்பதைத் தேடி அலையும் ஆண்ட்ரு, கெலேட்டி என்னும் ஒரு பெண் ரோபோவை கண்டுபிடிக்கிறது. ஆனால் அந்த ரோபோவுக்கு ஆண்ட்ருவைப் போல திறமைகள் இல்லை. கெலேட்டியை டெவலப் செய்வதற்கு அதன் உரிமையாளருக்கு ஆண்ட்ரு நிதியுதவி செய்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மார்ட்டினின் இளையமகள் ‘லிட்டில் மிஸ்’ மரணப்படுக் கையில் இருக்கும்போது அவளைக் காண வருகிறது ஆண்ட்ரு.



அவளுக்காக, சிறு வயதில் ஆண்ட்ரு செய்து கொடுத்த பொம்மை அங்கே இருப்பதை மிகுந்த காதலுடன் பார்க்கிறது. அப்போது லிட்டில் மிஸ் கண்ணை மூடுகிறாள். இந்தச் சமயத்தில் ‘லிட்டில் மிஸ்’ஸின் பேத்தி போர்ஷியா ஆண்ட்ருவுக்கு அறிமுகமாகிறாள். அச்சு அசலாக தன் பாட்டியைப் போலவே இருக்கும் அவளிடம் ஆண்ட்ருவுக்குக் காதல் பூக்கிறது. போர்ஷியா மிகுந்த குழப்பமடைகிறாள். ஆனால் அவளின் இதயத்தை தமது காதல் மிகுந்த சொற்களால் வென்றெடுக்கிறது ஆண்ட்ரு. போர்ஷியாவும் ஆண்ட்ருவை காதலிக்கிறாள்.



அவர்களின் காதலை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தம்மை மனிதனாக அறிவிக்கும்படி உலக அறிவியல் கழகத்திடம் விண்ணப்பிக்கிறது ஆண்ட்ரு ரோபோ. ஆனால் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகு ஆண்ட்ருவுக்குச் செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட்டு முழு மனிதனாகிறது. பிறகு ஆண்ட்ரு மூப்படையத் தொடங்குகிறார். தமக்கும் மூப்பும் மரணமும் வரும் என்று மீண்டும் உலக அறிவியல் கழகத்திடம் விண்ணப்பிக்கிறார் ஆண்ட்ரு. மனித வாழ்வின் அத்தனை சிக்கல்களையும் சந்தித்துவிட்டு மரணத்தை எதிர்நோக்கும் போது ரோபோவை மனிதனாக ஏற்பதாக உலக அறிவியல் கழகம் அறிவிக்கிறது. இந்த அறிவிப்பைப் பார்த்தபடி ஆண்ட்ரு மரணிக்கிறார்; போர்ஷியாவும் ஆண்ட்ருவுடன் இறந்து போவதாக இந்தக் காதல்காவியம் முடிவடைகிறது.

http://movie2s.com/aimages/BicentennialMan.jpg



ஐசக் அஸிமவ்வின் நாவலைத் தழுவிய இந்தப் படம் ‘ரோபோ என்பது வெறும் இயந்திரம்’ என்ற பொதுவான கருத்தை அடித்து நொறுக்கியது. ஆசை, காதல், கோபம்... என அத்தனை மனித உணர்ச்சிகளையும் தமக்குள் அடக்கி வைத்திருக்கும் இன்னொரு உயிர்தான் ரோபோ என்று சினிமாவின் சாத்தியங்களைப் பயன்படுத்தி க்ளாஸிக்காக வெளிப்படுத்தியது. இந்தப் படத்தின் தழுவல்தான் ரஜினியின் ‘எந்திரன்’ என்ற பேச்சுக்கூடக் கிளம்பியது. அது இருக்கட்டும். இந்தப் படத்தின் கதை உண்மையாக நடப்பதற்கான வாய்ப்பிருக்கிறதா? நடந்துவிடக்கூடும். அறிவியலில் எதுவுமே சாத்தியம்தான். சாத்தியமாக்குவதற்குக் கொஞ்சம் கால அவகாசம் தேவை. அவ்வளவுதான்.



ரோபோ டான்ஸர்!


ஆகஸ்ட் ஒன்றாம் தேதி சில செய்தி சேனல்களில் சீனாவில் ஃப்யுஜின் என்ற இடத்தில் நடைபெற்ற ரோபோவின் நடன நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். ஸோலோ, க்ரூப் டான்ஸ் என்று பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள் ரோபோ டான்ஸர்கள். இதை எப்படி வடிவமைத்திருப்பார்கள்?



முதல் ரோபோ வலது கையை உயர்த்தும்போது மற்ற ரோபோக்களும் வலது கையை உயர்த்தினால்தான் அது க்ரூப் டான்ஸ். இல்லையேல் அது டுமீல் டான்ஸ். முதல் ரோபோ வலது கையை உயர்த்தப் போகிறதா அல்லது தலையை அசைக்கப் போகிறதா என்பதை மற்ற ரோபோக்கள் அறிந்துகொள்ள அவற்றுக்கு இடையே தொடர்பியல் (communication) மிக முக்கியம். இந்தத் துறை மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால் ரோபோக்கள் ஃப்ரொபஷனல் டான்ஸர்களாக இன்னும் சில வருடங்கள் ஆகக் கூடும். அதுவரை ஸ்ரேயாவுக்கும், தமன்னாவுக்கும் பதிலாக ரோபோவை ஆட வைத்து விடுவார்களோ என்ற கவலை தேவையில்லை.
http://all-movie-goofs.info/wp-content/uploads/bicentennial-man-movie-still-9.jpg



நன்றி - கல்கி , புலவர் தருமி

டெசோ-கலைஞரின் ஆகச்சிறந்த நாடகம் - டாக்டர் ராம் தாஸ் பேட்டி @ கல்கி

https://athikalai.files.wordpress.com/2012/03/eelam-mathi-cartoon-2.jpg 

அதிரடிப் பேட்டி!



பறிபோகுது பேச்சுரிமை!



- பதறுகிறார் ராமதாஸ்


ப்ரியன்


டாக்டர் ராமதாஸை நாம் தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்தபோது, அவர் மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்குப் போட்டிருப்பதாகத் தகவல் வந்தது. ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் முதல்வரின் செயல்பாடு மீது ஆக்கபூர்வ விமர்சனம் செய்ததற்கு அவதூறு வழக்கா?" என்று கொதித்தார் டாக்டர். அவரிடம் டாஸ்மாக் விவகாரத்திலிருந்து பேட்டியை ஆரம்பித்தோம்!


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiB0ZSyTcEMVTI3x6CvLRudt2Tdpms7ZzQ_VbUiWihWL-XcsZpZXdHC_2PY5km1Kct-5dmq7jBD43u_gVmas9QY2sqA4cDCt5hPj06POK-xs7SAM9hwt0pRFPVcELJE6GI9elAmGXK3eMRs/s1600/WR_540716.jpeg

1. டாஸ்மாக்களுக்குப் பூட்டுப் போடும் போராட்டம்?




பா.ம.க.வால் 1989-ல் தொடங்கப்பட்ட பா.ம.க. மகளிரணி மூன்றே மாதங்களில், மதுக்கடைகளுக்கு முன் போராட்டம் நடத்தியது. பிறகு, இந்த 23 வருடங்களில் மதுவை ஒழிக்க வேண்டும் என்று பல போராட்டங்கள் நடத்தி இருக்கிறோம். சமீபத்தில் நடத்திய பூட்டுப் போடும் போராட்டம், ஓர் அடையாளம். உண்மையிலேயே பூட்டுப் போடும் அதிரடி போராட்டம் டிசம்பரில் நடக்க இருக்கிறது. மது ஒழிப்புக்காகத் தொடர்ந்து போராடும் ஒரே கட்சி பா.ம.க.தான்!"



2. மற்ற கட்சிகளின் ஆதரவு இல்லையே?



ஏன் இல்லை? காங்கிரஸ் மற்றும் பல்வேறு காந்திய, சமூகநல இயக்கங்கள் எங்களின் இந்தக் கோரிக்கையை ஆதரிக்கின்றன. திராவிடக் கட்சிகள் ஆதரிக்க மாட்டார்கள். காரணம், டாஸ்மாக் மூலம் அரசுக்குப் பெருத்த வருமானம். தவிர, அரசியல்வாதிகளின் பாக்கெட்டுகளுக்கும் பணம் சென்று குவிகிறது. எனவே, இந்தக் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் வரை மது ஒழியாது. அந்த வருமானத்தில்தான் ‘இலவசங்களை’ அள்ளிவிட்டு வோட்டுக்களை பறிக்கிறார்கள்.


இந்தக் கட்சிகள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டால்தான் மதுவை ஒழிக்க முடியும். மாற்று இல்லாத நிலையில் மாறிமாறி இவர்களே தொடர்கிறார்கள். எங்களின் இந்தப் போராட்டத்துக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருக்கிறது! ‘வளர்ச்சி அரசியலை’ முன்வைத்து எங்கள் அரசியல் பயணம் அமையும்."


3. ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு பா.ம.க. செல்வாக்குப் பெற்றுவிட்டதா?



‘திராவிடம்’ என்று பெயர் வைத்திருக்கும் எந்தக் கட்சிகளோடும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம்; காங்கிரஸ், பா.ஜ.க.வோடும் கூட்டணி கிடையாது! நான் தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகளுக்குச் சவால் விடுகிறேன். நீங்கள் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடத் தயாரா? மதுவை ஒழிப்போம் என்று கூறி வாக்குக் கேட்கும் துணிச்சல் உங்களுக்கு உண்டா? ஒரு ரூபாய்கூட மக்களுக்குக் கொடுக்காமல் வோட்டுக் கேட்க முடியுமா?



இவற்றை நாங்கள் கடைப்பிடிக்கப் போகிறோம். உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசியலுக்கு அப்பாற்பட்ட இயக்கங்கள், எங்களின் இந்த நோக்கத்துக்குத் தோள்கொடுக்கத் தயாராக இருக்கின்றன. மக்களும் ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது."


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTkzPBAWWGD1QcG_lBzZgQENkCH2rg7nkBYwDoRwoNKs_DS7jCwlQEIKk63kvdtoQy7FHKvStTkCuVWoW1wxCcovtFUJXbLK3HZbKKZ1RM0ysjj8Rx_RzcETzMsf9Hj5PqC2HgApyHV9QF/s1600/WR_397537.jpeg
4. பா.ம.க.விலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உட்பட விலகினார்களே?



அவர்கள் விலகியதால் பா.ம.க.வுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை; வரவும் வராது! ஒரு பெரிய கட்சியில் சிலர் விலகுவதும் சேருவதும் நடந்துகொண்டுதான் இருக்கும். விலகுபவர்கள் சில காரணங்களைச் சொல்லிக் கொண்டு விலகுவார்கள். இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்தால் எங்கள் லட்சியத்தை அடைய முடியாது."



5. மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் அன்பு மணி மீது சி.பி.ஐ. வழக்குப் பாய்ந்துள்ளதே?






சுதந்திர இந்தியாவில் சுகாதாரத் துறையில் அன்புமணி அமைச்சராக இருந்த போது கண்ட வளர்ச்சியை, அதற்கு முன் எப்போதும் இந்தியா கண்டதில்லை. புகையிலையை ஒழிக்க அவர் எடுத்த நடவடிக்கைகளால் கடுப்பாகிப்போன புகையிலை தொழில் சார்ந்த தொழிலதிபர்கள் அவரைப் பழி வாங்கத் துடித்தார்கள். அன்புமணி மீது போடப்பட்ட வழக்குக்குப் பின்னால் அரசியல் சதி இருக்கிறது. சரியான சமயத்தில் அம்பலப்படுத்துவேன். நீதிமன்றத்தில் எங்கள் நியாயம் வெல்லும்."




6. ஜெ. ஆட்சி?



தி.மு.க. ஆட்சிக்கு ஜீரோ மார்க் கொடுத்தேன். இந்த ஆட்சிக்கு மைனஸ் ஜீரோ கொடுக்க வேண்டியிருக்கிறது. விவசாயம் அழிந்து கொண்டு வருகிறது. அந்த வேலைக்கு ஆளும் கிடைக்கவில்லை; விளைபொருளுக்கு நல்ல விலையும் கிடைக்கவில்லை. விளைநிலங்கள் வீட்டு மனைகளாக லே-அவுட் போடப்படுகின்றன. விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர எந்தத் திட்டமும் இல்லை. மணல் உட்பட இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன.


 தி.மு.க. ஆட்சியில் போட்ட திட்டங்களை மாற்றுவதும், ரத்து செய்வதும்தான் இந்த ஆட்சியின் வேலையாக இருக்கிறது. விமர்சனங்களை ஆரோக்கியமாக எடுத்துக் கொண்டு திருத்திக் கொள்ளாமல் அவதூறு வழக்குப் போடுகிறார்கள்.




ஜெயலலிதா 1991-ல் இருந்து முதல்வராக இருந்த காலகட்டத்தில் மட்டும், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது 250க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளைப் போட்டிருக்கிறார்! அரசியல் சட்டம் நமக்கு வழங்கியுள்ள பேச்சுரிமையைப் பறிப்பதாக இருக்கிறது தமிழக அரசின் செயல்பாடு. இதற்கெல்லாம் அஞ்சமாட்டேன்."


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhW3g-MeVTbQJoll_tKGj-g86_I7R4peM0EEuC36LrtHCCHhY6JOvImLKsyOWqMuXHqgX0e7s2Pnc_9ujXAw2b4p8-EbQMpLINLATDC76gYek4z_hJomkW8HAz98QhuY7qLMyJx3ObEkgme/s1600/WR_776373.jpeg

7. டெஸோ - கருணாநிதி?



ஈழத் தமிழர்களுக்கு அவர் செய்த துரோகத்துக்குப் பரிகாரம் செய்வதாக நினைத்துக் கொண்டு போட்ட நாடகம். அவர் எப்போதெல்லாம் எதிர்க் கட்சியாக இருக்கிறாரோ அப்போதெல்லாம் ஈழப் பிரச்னையைக் கையிலெடுப்பார்; ஆளும்கட்சியாக இருக்கும் போது துரோகம் செய்வார். இந்த டெஸோ பொதுக் கூட்டத்தால் எந்தப் பலனும் இல்லை. தமிழகத்தில் எந்த அரசியல் திருப்பமும் இதனால் ஏற்படாது.


என் ஆச்சர்யமெல்லாம் உண்மையிலேயே ஈழத் தமிழர்கள் விஷயத்தில் உளமார்ந்த ஈடுபாட்டுடன் போராடும் தொல்.திருமாவளவன், கருணாநிதியின் நாடகத்துக்கு எப்படித் துணை போனார் என்பதுதான்! காங்கிரஸைச் சங்கடப்படுத்துவதுதான் கருணாநிதியின் நோக்கம் என்றால் அதுவும் நடக்காது. இவருக்குத்தான் காங்கிரஸை அண்டியிருக்கிற நிலையிருக்கிறதே தவிர, அவர்களுக்கு இவரைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.


 1994-ம் வருடமே பா.ம.க. ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தியது. அப்போது சென்னையில் திரண்ட கூட்டம் பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. அன்றிலிருந்து இன்று வரை அரசியல் தடுமாற்றங்களின் தாக்கம் ஏதுமில்லாமல் ஈழத் தமிழர் பிரச்னையில் ஒரே நிலைப்பாடு எடுத்து வருவது நாங்கள்தான்" - என்கிற டாக்டர் ராமதாஸின் முகம் சீரியஸாகப் பேசியதில் சிவந்திருக்கிறது!


நன்றி - கல்கி , புலவர் தருமி



http://lh4.ggpht.com/_IEYubfMaOJM/TI47QuILB5I/AAAAAAAACGM/AM4kSmr1nyk/rahul_gandhi_farmers1%5B4%5D.jpg

வாஷிங்க்டன் நகரத்தை காட்டினால் மனைவி மகிழ்வார், அது ஏன்?

மானம் கெட்ட மாக்கான் எனும் "மாற்றான்"!

# அதான் கண்டுபுடிச்சிடுறானுங்களே.. எதுக்குடா இந்த மானம் கெட்ட பொழப்பு??
1.மிஸ்டர், ”முன்னே பின்னே ”பார்க்காமயே திடீர்னு ஐ லவ் யூ சொல்றியே? 



 ஹலோ, பார்க்கலைன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?


----------------------


2. சவு”மியாவ்” -போத்தீசு விளம்பரம் செமயா இருக்கு. திரிசா எப்படி இவ்ளோ அழகாயிடுச்சு."  # அந்த விளம்பரம் 12 வருடங்களுக்கு முன் எடுத்தது - 3ஷா



--------------------

3. ஐடி நிறுவனங்களில் பெண்கள் புகார் அளிக்க வசதியா புகார் பெட்டி வைக்கச் சொல்லி காவல்துறை அறிவிப்பு. # புகாரே பெண்களைப்பற்றின்னா?



------------------------


4.விடுமுறை தினம் வரும்போது நைஸாக உன் மாமியார் வீட்டுக்கு உன் மனைவியை பேக் பண்ணி அனுப்பி விட்டால் நீயும் ஒரு சாணக்கியனே!


--------



5. தார வரிசையில் இந்தியா முதலிடம்.நாட்டுக்கே நான் முன்னுதாரணம் - கலைக்னர் பெருமிதம்




-------

Syedbabu Sbd Likes கத்திரிக்காய் முத்தினா கடைக்கு வந்து தானே ஆகனும் ?? வள்ளி.







6. ஓட்டக்கூடாது - டாக்டர் டார்ச்சர் ஆவேசம்



----------


7. கேப்டன் கொஞ்ச நாளா டாக்டர் அய்யாவை காப்பி அடிச்சு அறிக்கை விடறாரே.அடுத்து மவன் சம்முசப்பா ண்டியானை களம் இறக்குவாரோ?



----------------------



8. ஜெ. எப்பவுமே தொடர்பு எல்லைக்கு அப்பால்தான் இருப்பார் -கேப்டன் # அவர் ஃபோனை ஆஃப்ல வெச்சிருப்பாரு, நீங்க சரக்கு ஆஃப் அடிச்சு இருப்பீங்க



--------


9. கொண்டை போட்ட பொண்ணுங்க கூட கடலை போட்டா அதுதான் கொண்டைக்கடலையா? # கட்டைல போன துரையின் கேள்வி


----------


10. மிஸ்! ஆக்டிவா இருப்பதால் உங்களை எனக்கு பிடிச்சிருக்கு.




ஆனா உங்க கிட்டே அட்லீஸ்ட் மாருதி கார் கூட இல்லையே?





----------


மெளனசிஷ்யர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்



11. விடுமுறை தினம் வரும்போது நைஸாக உன் மாமியார் வீட்டுக்கு உன் மனைவியை பேக் பண்ணி அனுப்பி விட்டால் நீயும் ஒரு சாணக்கியனே!



------------------------


12. யாரிடமும் பேசாதவர்களை அமுக்கர்கள், அமுக்கிகள்  என மக்கள் பட்டம் கொடுக்கிறார்கள்.




-------------------------


13. ஜெ ஜெ சில குறிப்புகள் நாவலுக்கு தடை வருமா? - கலைஞர் நக்கல் கேள்வி


----------------------



14. கடவுளை நம்பினோர் கைவிடப்ப(ட்)டார் # ஆத்திக நாத்திக தத்ஸ்


-------------


15. பாட்டுப்போட்டு ஜாலியா டான்ஸ் ஆடுனா பாக்கியவான் கள்,எக்ஸஸைஸ் பண்ணா பாக்யராஜ்கள்



----------------------


16. கலா மாஸ்டரின் கணவர் கலா ரசிகரா இருக்க வாய்ப்பு உண்டா?


----------------------


17. இரு இதயங்களுக்கு இடையே நல்ல புரிதல் என்பது மிகப்பெரிய பிரிவு ஏற்படுத்தும் வலிக்குப்பின்னாலும் வரலாம்்


-----------------

18. கூட இருந்தே குழி பறித்தவர் கருணா.குழி பறித்த பின்னும் கூடவே இருப்பவர் கருணாநிதி்



-------------------------

19. கிராமங்களில் விறகு அடுப்பில் அலுமினியப்பாத்திரத்தில் ,செம்புக்குடத்தண்ணீரில் களைந்த அரிசி சாதம் ,சுண்டக்கா குழம்புக்கு ஈடான சுவை ஏது?



-------------------------

20. பெண்ணைப்பெற்றவர்கள் மாப்பிள்ளை குடிகாரனா?குடிகேடனா?என்றெல்லாம் கவலைப்படாம பணக்காரனா இருந்தா போதும்னு நினைக்கற வரை உலகம் உருப்படாது


-----------------




21. குடிகாரர்கள் அலா"ரம்" வைத்து எழுவதில்லை.மப்பு எப்போ தெளியுதோ அப்போ



------------------------


22. மு க - நம் கழகத்திற்கு வாய்த்த தொண்டர்கள் மிக மிக அப்பாவிகள்.நான் நாட்டு நலனுக்காகத்தான் எல்லாம் செய்வதாக நினைக்கிறார்கள்



---------------------------



23. தமிழ் ஈழம் அமைய உயிரைக்கொடுத்தவர் பிரபாகரன்.பாடுபடுவது போல் நடிப்பவர் முக.உண்மையாய் துடிப்பவர் வைகோ,பழ நெடுமாறன்



-------------------------


24. தமிழ் இனத்தின் தன்னிகரற்ற தலைவா! டெசோ என்பது தமிழா?



--------------------


25. உலக வரை படத்தை எடுத்து அதில் வாஷிங்க்டன் நகரத்தை காட்டினால் உங்கள் துணை மகிழ்வார் # WASHING DONE # துவைச்சாச்சு ஹி ஹி



---------------------------





26. புருஷோத்தமன் = புருஷன் உத்தமன்?



---------------------


27. ஆண்டவன் கட்டளை = கலைனர் சொன்னது (ஆல்ரெடி நாட்டை ஆண்டவர்) ,அரச கட்டளை - ஜெ சொல்வது (ரூலிங் பார்ட்டி)



-----------------



28. நம்ம கைல என்ன இருக்கு? எல்லாம் ஆண்டவன் விட்ட வழி,


டியர் உன் கைல 5 பவுன் வளையல் இருக்கு.கழட்டிக்குடுத்தா அடமானம் வைப்பேன்



----------------------


29. சார் ,உங்க முத மாச சம்பளத்தை என்ன செஞ்சீங்க?


 எல்லாரையும் போல் செலவுதான் செஞ்சேன்


----------------------


30. டியர் ,நீ க்ளோரோபார்ம் மாதிரி.


புரியலையே?


அதாவது ஆள் மயக்கி


-----------------------------



hiresan Manoharan shared Naasama pochu machi's photo.
Hot topic... 

andriya, aniruth kissu kissu...

over nit la obama ahitanya....



31. ஆண்"டவர்" மட்டும் இன்னும் யாருக்கும் கிடைக்கலை


-------------------

32. சாதாரண மக்களுக்கும் எளிதில் புரிவதே என்னைப்பொறுத்தவரை நல்ல இலக்கியம், நல்ல படைப்பு

Sunday, August 19, 2012

சென்னை ஈ சி ஆர் ரோடு NH 47 ஆ? NH 143?யா?

http://www.ecrbeachhouse.com/images/chennai-beachhouseecr.jpgடான்ஸுக்கு கூட்டிட்டு வந்து உடான்ஸ் பண்ணச் சொல்றாங்க!


ஈ.சி.ஆர். பார்ட்டி... மைனர் பொண்ணு!



விபசாரத்தில் பெண்களைத் தள்ளுவதற்காக புதுசு புதுசாகத்​தான் யோசிக்கிறார்கள்.அப்படிக் கையாளப்பட்ட ஒரு டெக்னிக் அம்பலமாகவே, 11 புரோக்கர்களும், 23 பெண்களும் போலீஸாரிடம் சிக்கி இருக்​கிறார்கள்.



சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் அருகே சுதந்திர தினத்துக்கு முன் தினம் இரவு, ஒரு சொகுசுப் பேருந்து நின்றது. பேருந்துக்கு வெளியே சில பெண்கள் கூச்சல் போட்டுக் கொண்டிருக்க... அந்த வழி யாகச் சென்ற ஒருவர் போலீஸுக்குத் தகவல் தட்டிவிட்டார்.
 போலீஸார் ஸ்பாட்டுக்கு வந்ததும், ''இந்த ஆளு எங்களை டான்ஸ் ஆடினா போதும்னு கூட்டியாந்துட்டு, இப்போ வேற மாதிரி இருக்கச் சொல்றான் சார்'' என்று பெண்கள் குற்றம் சாட்டினர். 'ஆஹா... இது வேற விவகாரம்’ என்று உஷாரான போலீஸ், உடனே பஸ்ஸில் இருந்த பெண்களை மயிலாப்பூர் அரசு காப்பகத்துக்கு அனுப்பினர். பிரச்னை செய்த புரோக்கர்கள் 11 பேரை ரிமாண்ட் செய்து விட்டனர்.


http://images03.olx.in/ui/11/06/41/1295810330_160350541_1-Farm-House-for-Daily-Rent-in-ECR-Chennai-ECREast-Coast-Road.jpg

காப்பகத்துக்கு அனுப்புவதற்கு முன், அந்தப் பெண்களில் ஒருவரிடம் பேசினோம். ''என் பேரு சந்தியா. எனக்கு டான்ஸ் நல்லா ஆட வரும். சினிமாவுல முயற்சி செஞ்சேன். பெருசா வாய்ப்பு கிடைக்கலை. அதனால, ஹோட்டல்ல டான்ஸ் ஆடுறேன். நுங்கம்பாக்கத்தில் இருக்குற ஒரு ஸ்டார் ஹோட்டல்ல வெள்ளி, சனி, ஞாயிறு மூணு நாள் மட்டும் டான்ஸ் ஆடப் போவேன். ராத்திரி 9 மணிக்கு ஆரம்பிச்சா 2 மணி வரைக்கும் ஆடுவேன். டிப்ஸ் எல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு 2,000 ரூபா கிடைக்கும். சில பேர் டான்ஸ் முடிஞ்சதும் ரூமுக்குப் போகலாம்னு வம்பு பண்ணிக் கூப்பிடுவாங்க. அவங்களை சமாளிக்குறதுக்குள்ள தாவு தீர்ந்துடும்.




போன வாரம் எங்க ஹோட்டலுக்கு அன்​சாரினு ஒரு புரோக்கர் வந்தார். 'ஈ.சி.ஆர். ரோட்டுல இருக்கிற பண்ணை வீட்டுல வெளிநாட்டுக்காரங்க விருந்துக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க. 25 பேரு அந்த விருந்துல கலந்துக்கப் போறாங்க. அங்கே டான்ஸ் ஆடணும். நிறையத் துட்டு கிடைக்கும்’னு சொன்னார். என்கூட டான்ஸ் ஆடுற பொண்ணுங்க நாலு பேரு இருக்காங்க. அவங்ககிட்டேயும் விஷயத்தைச் சொல்லி, நாங்களே 13 பேரை ரெடி பண்ணிட்டோம். எனக்கு வீடு வடபழனி பக்கத்தில் இருக்கு. 'ராத்திரி 9 மணிக்கு பஸ் வரும் ரெடியா இருங்க’னு அன்சாரி எனக்குப் போன் பண்ணிச் சொன்னார். நாங்க எல்லோரும் வடபழனியில் நின்னுட்டு இருந்தோம். ஏசி பஸ் வந்து எங்களை ஏத்திக்கிட்டு கிளம்புச்சு.




பஸ்ல போகும் போது, அன்சாரி என்கிட்ட வந்து, 'ஃபாரீன்ல இருந்து வர்றவங்களுக்கு தமிழ்நாட்டுப் பொண்ணுங்கன்னா ரொம்பப் பிடிக்கும். டான்ஸ் முடிஞ்சதும் அவங்க ஆசைப்படுற மாதிரி நடந்துக்கோங்க. பணத்தைப் பத்தி கவலைப்பட வேண்டாம். எவ்வளவு வேணும்னாலும் கொடுப்பாங்க’னு சொல்லவும் எனக்கு பக்குன்னு ஆகிடுச்சி. என் கூட வந்த மத்த பொண்ணுங்ககிட்டயும், அன்சாரி கூட வந்த ஆளுங்க இதே மாதிரி பேசினாங்க. உடனே, எல்லா பொண்ணுங்களும் கத்திக் கூச்சல் போட்டு வண்டியை நிறுத்திட்டோம். அதுக்குள்ள போலீஸ் வந்துட்டாங்க...'' என்று நடந்த சம்பவத்தை விளக்கினார்.



http://www.southdreamz.com/wp-content/uploads/2010/11/Lohas-Hotel-New-Well-Being-Spa-Resort-Clark.jpg

''ஈ.சி.ஆர். ரோட்டுல மாயாஜால் தாண்​டிட்டா நிறைய கெஸ்ட் ஹவுஸ் இருக்கின்றன. அங்கதான் இது மாதிரி பார்ட்டிக்கு ஏற்பாடு பண்றாங்க. வெளிநாட்டில் இருந்து வரும் சில பார்ட்டிகளைத் திருப்திபடுத்த சில நிறுவனங்கள் இது மாதிரியான பார்ட் டிகளுக்கு ஏற்பாடு பண்ணுவாங்க. வெளி நாட்டுக்காரங்க, 'ப்ரஷ்ஷா’ வேணும்னு கேட்பாங்க. 
அதுக்காகத்தான் டான்ஸ் அது இதுன்னு பொய் சொல்லி பொண்ணுங்களை ஏமாத்திக் கூட்டிட்டுப் போவாங்க. அங்கே வச்சுப் பணத்தைக் காட்டினா சிலர் சைலன்ட் ஆயிடுவாங்க. பிடிக்காதவங்களை டான்ஸ் முடிஞ்சதும் அனுப்பி வைச்சிடுவாங்க. காசுக்காக சில ஸ்கூல் பொண்ணுங்க கூட இந்த பார்ட்டிக்கு வந்து போறாங்க. இந்த மாதிரி பார்ட்டிகளை அரேஞ்ச் பண்றதுக்காகவே நிறைய புரோக்கர்கள் இருக்காங்க'' என்று நம்மிடம் சொன்னார் ஈ.சி.ஆர். ரோட்டில் உள்ள ரிசார்ட்ஸ் ஒன்றில் பணிபுரியும் மேனேஜர் ஒருவர்.




இந்த வழக்குத் தொடர்பாக விசாரணை நடத்தி இருக்கும் ஐ.ஜி. மஞ்சுநாதாவிடம் பேசினோம். ''மீட்கப்பட்ட பெண்களில் ஒருவர் மைனர். ஏதாவது ஸ்கூல் பொண்​ணாக இருக்குமோன்னு நினைச்சோம். விசாரிச்சபோது அந்தப் பொண்ணு வெளியூரில் இருந்து சென்னைக்கு வந்து, இங்கே ஒரு வீட்டில் வேலை செய்வது தெரியவந்தது. 
பார்ட்டியில டான்ஸ் ஆட ணும்னு சொல்லித்தான் அந்த பொண்ணுங்க 23 பேரையும் கூட்டிட்டுப் போயிருக்காங்க. இருந்தாலும் பிடிபட்ட புரோக்கர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. புரோக்கர்களிலும் பெண்கள்தான் அதிகம். ஈ.சி.ஆர். பகுதியில் இதுபோல பார்ட்​டிகள் நடப்பது தெரிய வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்'' என்றார் உறுதியாக.



இருட்டுக்குள் இன்னும் என்னனென்ன  நடக்கிறதோ...!
http://mithunonthe.net/wp-content/uploads/2010/02/mamallapuram-chennai-ecr.jpg

thanx - ju vi

அதிசய உலகம் - மழலைக்கான படமா? மண்ணாங்கட்டி படமா? - சினிமா விமர்சனம்

http://images3.wikia.nocookie.net/__cb20120727045103/speedydeletion/images/1/19/Theatrical_poster_of_Adhisaya_Ulagam_3D.jpg


லிவிங்ஸ்டன் ஒரு சயிண்ட்டிஸ்ட். தன் மகன் வீட்லயே சின்னதா ஒரு ஆராய்ச்சிக்கூடம் அமைச்சு டைம் டிராவல் மிஷின் பற்றி ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கார்.. அவர் கிட்டே ஒரு பேசும் நாய் இருக்கு. நாய் பேசுமா?ன்னு எல்லாம் கேட்கக்கூடாது. மேடை ஏறிட்டா கண்ட நாய்ங்க எல்லாம் பேசும்போது நன்றி உள்ள நாய் பேசுனா இன்னா தப்பு?


அவர் ஆராய்ச்சி நடத்தும்போது அவர் நண்பர் அவரை பார்க்க வர்றார். பாதிலயே விட்டுட்டுப்போறார். அப்போ அங்கே வரும் பேரக்குழந்தைங்க ஒரு பையன், ஒரு பொண்ணு 2 பேரும் தவறுதலா பல நூற்றாண்டுகள்  முன்னால சாரி பின்னால போயிடறாங்க.. டினோசர் காலம்..



விஞ்ஞானி லிவி குழந்தைகளை காணாம பதறி அவரும் அதே காலகட்டத்துக்கு வந்து அவங்களை பார்த்துடறார்.. ஆனா ரிட்டர்ன் போகனும்னா  டைம் மிஷின்க்கு கரண்ட் , அல்லது பேட்டரி வேணும்.. இப்போ இருக்கற காலத்துல கரண்ட் ஏது? பேட்டரி ஏது?


 அவங்க எப்படி தப்பிக்கறாங்க? இதான் கதை..



http://www.cinejosh.com/gallereys/movies/normal/adhisaya_ulagam_3d_movie_photos_1503120835/adhisaya_ulagam_3d_movie_photos_1503120835_016.jpg


 கேட்க நல்லா த்தான் இருக்கு.. ஆனா லோ பட்ஜெட் படம்கறதால கிராஃபிக்ஸ் சீன்ல குவாலிட்டு குடுக்க முடியல. ஆனா சாமான்ய ரசிகனுக்கு அது பற்றி அக்கறை தேவை இல்லை

 லிவிங்க்ஸ்டன் நல்ல தேர்வு.. அவர் ஃபிரெஞ்ச் தாடி வெச்சாலே சயிண்ட்டிஸ்ட் ஆகிட்ட மாதிரி ஒரு ஃபீலிங்க்.. ( அவருக்கு)மொத்தப்படமே 1 1/2 மணி நேரம் தான்... அதனால ஒண்ணும் சொல்லிக்கற அளவு இல்லை..


வாண்டுகள் 2ம் குறும்புகள், சண்டைகள் போடறது  நல்லாருக்கு. ஆனா எதுக்கெடுத்தாலும் அவங்க வாவ் என்ற ஆச்சரியச்சொல்லை உபயோகிக்கும்போது கடுப்படிக்கிறது..


http://moviegalleri.net/wp-content/gallery/adhisaya-ulagam-3d-movie-stills/adhisaya_ulagam_3d_movie_stills_9468.jpg



மனம் கவர்ந்த வசனங்கள்


1.  அப்பா, யாரோ ரேங்கோ பாஷையாம், உங்களை பார்க்க வந்திருக்கார்.

 ஹய்யோ, அது ரங்க பாஷ்யம்மா


2. இனி நம்ம காலத்துக்கு போக முடியாதே?



 ஐ ஜாலி.. ஸ்கூல்க்கு போக வேண்டியதில்லை, ஹோம் ஒர்க் செய்ய வேண்டியதில்லை..




3.இப்போ என்ன புரிஞ்சுதுன்னு நீ சிரிக்கறே?



http://www.retham.com/plogger-1.0RC1/plog-content/images/movie-stills/adhisaya-ulagam-3d/adhisaya-ulagam-3d12.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஒரு கேனத்தனமான வசனம் பாருங்க -


“ நீ ஏன் ஃபோனை எடுக்கலை?


குளிச்சிட்டு இருந்தேன்

 ஓஹோ! அப்போ குளிக்கறப்போக்கூட ஃபோனை பக்கத்துல வெச்சுட்டு குளிப்பியா?அதனால தான் எடுக்கலையா?



 குளிக்கறப்போ ஃபோன் வந்தா எப்படி எடுக்க முடியும்? ஈரம் ஆகிடாதா? 



2. லிவிங்க்ஸ்டன் அவர் நண்பர் வந்தார்னு பாதிலயே ஆராய்ச்சியை அப்படியே விட்டுட்டு வெளீல போறப்போ நாய் கிட்டே “ யாரும் உள்ளே வராம பார்த்துக்கோ”ங்கறார்.. அதுக்கு கதவை பூட்டிட்டே போகலாமே?


3. லிவியின் பேரப்பசங்க அந்த சர்க்கிள்க்குள்ளே நின்னு சண்டை போட்டுட்டு இருக்காங்க.. அதை ஸ்கேனிங்க்ல காட்டறப்போ 2 பேரும் சும்மா எதிர் எதிரே நிக்கற மாதிரி காட்டுது.. அதுவும் அட்டென்ஷன் பொஷிஷனில். மறுபடி அவங்களை காட்டும்போது அவங்க தொடர்ந்து சண்டை போட்டுட்டு இருக்காங்க..



4. கண்னாடியை அந்த ஆதிவாசி மனுஷன் பார்த்து மிரள்ற மாதிரி சீன் நம்ப முடியல. ஆல்ரெடி அவன் தண்ணீர்ல, குளம் குட்டை, ஆறு, கிணறுன்னு தன் முகத்தை பார்த்திருப்பானே?


5. டைம் மிஷினோட ரூல்ஸ் பிரகாரம் கடந்த காலத்துக்குள்ளே போனா எந்த பாதிப்பும் ஏற்படுத்தக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கும்போது அந்த ஆதி வாசியை எப்படி இங்கே நிகழ்காலத்துக்கு கூட்டிட்டு வர முடியும்?


6. டைம் மிஷின் ரொம்ப லைட்டான பொருளை டெலி போர்ட்டிங்க் மெத்தட்ல  கடந்த காலத்துக்கு பாஸ் பண்ண முடியலைன்னு காட்டறாங்க. அதே போல் ரொம்ப வெயிட்டான பொருளுக்கும் அதே ரூல்ஸ் பொருந்தும்தானே? எப்படி டினோசர் நிகழ்காலத்துக்கு வருது?


7. அந்த பேரக்குழந்தைங்க 5 நிமிஷத்துக்கு ஒரு தடவை வாவ் சூப்பர் தாத்தா என்று சொல்வதாக ஒரு டயலாக் வருவது செம கடுப்பு.. 



http://www.tamilstar.com/photo-galleries/tamil-cinema-adhisaya-ulagam-3d-movie-stills/images/tamil-cinema-adhisaya-ulagam-3d-movie-stills05.jpg



 கவுண்டமணி இயக்குநரிடம் கேட்கும் கேள்வி


 தம்பி , இங்கே வா.. உன் கிட்டே புரொடியூசர் என்ன சொன்னாரு?



 சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் எடுக்கச்சொன்னாரு


 எவ்ளவ் ரூபா  குடுத்தாரு?


50 லட்சம் கொடுத்தாரு..


 எடுத்தியா?


 எடுத்தேண்ணே..


 எங்கே அந்தப்படம்?

 இதாண்ணே அது..


 கடுப்பைக்கிளப்பாத. ஓடிப்போயிடு .. ராஸ்கல்.


சி.பி கமெண்ட் - கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம சின்ன சின்ன பொம்மைகளை வெச்சு படு மோசமான படமாக்கம் இது.. ஆரும் போயிடாதிங்க.. மீறிப்போனா... அப்புறம். அப்பளம் தான் ..  ஈரோடு தேவி அபிராமில படம் பார்த்தேன்

ஆவணி , தாவணி , மாமணி, லாவணி

தமிழ்க்குடில்
1. ஆவணி மாதப்பிறப்பை முன்னிட்டு தாவணி அணிந்த மாமணிகளிடம் மட்டும் லாவணி என்று கொள்கை கொண்டால் நீயும் ஒரு தமிழனே! 



-----------------------------

2.  சென்னை வாழத் தகுதியற்ற நகரம் - உச்ச நீதிமன்ற நீதிபதி.# அதனால்தான் நான் கொடநாட்டில் -ஜெ 


-----------------------


3, அதிமுகவினர் போல நடந்துகொள்ள நினைக்கிறார் ஜெ.: ராமதாஸ் # நான் சர்வாதிகாரி போல்தான் நடந்துகொள்கிறேன் -ஜெ மறுப்பு 



------------------------

4. அத்திப்பூக்கள் என்று பதின் பருவத்தில் நாம் வியந்த பல பெண்கள் இன்று தத்திப்பூக்களாக இருக்கிறார்கள் # அவ"தாளிப்பு" 



-------------------------


5. முதல் காதலியிடம் ஐலவ்யூ சொன்னேன், அவ காது டமாரம் போல . அருகில் உள்ள மனைவியிடம் சொல்ல வாய் திறக்கவில்லை , கட்டுப்பாடு # எ கீ 



--------------------------



6. மு.க வின் முக நூல் முடக்கம் - இது ஆரம்பம் தான் - ஜெ சூசக தகவல் 


---------------


7. எனக்கு மொழி வெறியோ, ஜாதி வெறியோ, இன வெறியோ இல்லை, எனவே எல்லா நாட்டுப்பெண்களையும் சைட் அடிப்பேன் என உளமாற உறுதி கூறுகிறேன் ;-0 


---------------------

8. விக்கி லீக்ஸ்' நிறுவனர் அசாஞ்சை கைது செய்ய லண்டன் போலீஸ் முடிவு  #  அடடா, இதுவும் லீக்ஸ்?ஆகிடுச்சே!



---------------------


9. சிறந்த மாநகராட்சியாக, தமிழக அரசு சார்பில், கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளது # கோவை பாவைகளுக்கு கொண்டாட்டமா இருக்குமே?


---------------------

10. எனக்கு இங்க்லீஷ் வராது என்பது உண்மைதான், அதற்கு மாற்றாக இங்க்லீஷ் கிஸ் கற்றுக்கொண்டேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் ;-0 



------------------


வெளங்கிரும் ..

11. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில்ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு - த. த. அ # என்னையே ஓவர் டேக் பண்ணிட்டாரா? ஆ ராசா கவலை, கலைஞர் வருத்தம் 


----------------------


12. வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை - பிரதமர் # யாரும் பயப்பட வேண்டாம்.இது ஒரு வதந்தி - சோனியா 




-----------------------


13. அன்பே சுனைனா.உன்னை நாயகியா போட்டு படம் எடுத்தா வினையா? # பாண்டி ஒலி பெருக்கி 



----------------

14. விவேகா - அய்யா என்னை ராகிங் பண்றாங்கய்யா.


 மு க - யோவ் சாமியே நடையை சாத்திட்டு கிளம்பிடுச்சு.பூசாரிக்கு பூஜா கேட்குதா?#பேஸ்புக் லாக் 




--------------------

15. அதிக வட்டிக்கு ஆசைப்படும் பெண்களும்,அதிகமா செலவு வைக்கும் குட்டிக்கு ஆசைப்படும் ஆண்களும் நிம்மதியா இருக்கமுடியாது 


---------------------



ஆமாமா.............. அவரு உன்னை விட ஸ்பீடா போவாரு......


16.  சாதாரண ஜனங்கள் இனி வாரம் ஒரு முறை தான் அவங்கவங்க மனைவி கூட பேசனும் -அரசு புதிய கட்டுப்பாடு.கணவர்கள் அமோக ஆதரவு 



----------------------


17. ஓட ஓட தூரங்கொரயல!# ஏன்?ரிவர்ஸ் ரன்னிங்க் போறே?


--------------------------


18. இவனுங்க மட்டும் கட்டுப்பாடே இல்லாம ஊழல் ,கில்மா எல்லாம் பண்ணுவானுங்களாம்.நாம மட்டும் எஸ் எம் எஸ் அனுப்ப கட்டுப்பாடாம்#அடேய்



---------------------


19. sms இல் குடும்பம் நடத்தும் காதலர்கள் ,கள்ளக்காதலர்கள் கதி இனி என்ன? # தினசரி 5 ரேஷனிஸம்



--------------------------


20. சனி நீராடு.= 1,சனிக்கிழமை எண்ணெய் தேய்ச்சு குளி 2,அன்புள்ளமனைவி நீ (ர்)ஆடு




---------------------------





21. தினமும் 5 sms மட்டுமே அனுமதி # இது என்ன செல்போனா?சினிமா தியேட்டரா?


---------------------

22. குடை பிடிக்கிறாய் நீ!இடை பிடிக்கிறேன் நான்.இடமாறு ஜெயிச்ச நிலை!


-------------------


23. ரஞ்சிதாவுடன் கைலாய யாத்திரையா?நித்தி நழுவல் பதில் # லிங்க பூஜைக்கா ,ஆலிங்கன ஆசைக்கா?சுவாமி!


---------------------


24. ஷை சென்ட்டர் - இங்கு வெட்கப்படுவது எப்படி என பெண்களுக்கு கற்றுத்தரப்படும் #2020




------------------------

25. திமுக-அதிமுகவுக்கு "0' போடணும்: விஜயகாந்த் # ஜீரோன்னு தெளிவா சொல்லுங்க.ஓ போடறீங்கன்னு நினைச்சுடப்போறாங்க




---------------------------------- 


திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் உள்ள ஒரே கல்லால் ஆன அற்புத சிலை..
Thirunelveli Nellaiyappar kovilil ulla ore kallaal aana arputha silai ..

Saturday, August 18, 2012

பெண் நலம் - பிரசவத்தில்... பொய் வலின்னா என்ன?-மருத்துவம்

A to Z பெண் நலம்

பிரசவத்தில்... பொய் வலின்னா என்ன?

டாக்டர் கீதா அர்ஜூன்

சந்தியாவும் அவள் கணவர் சாரங்கனும் தங்கள் குழந்தையின் வருகையை ஆவலோடு எதிர் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய நீண்ட நாள் கனவு, நனவாகும் சமயம் இது. பிரசவகாலம் நெருங்கிக் கொண்டு இருந்தது. அப்போது அவளுக்குள் பரபரப்பும், படபடப்பும் கலவையாக எழுந்தன. பிரசவம் மற்றும் வேதனை போன்ற சொற்கள் அவளுக்கு கவலையை அளித்தன. பிரசவம் பற்றி அவள் கொஞ்சமாவது தெரிந்துகொண்டால்தான், தம் பயத்தை உதறித் தள்ள முடியும் என்று சந்தியாவுக்குத் தோன்றிற்று.


டாக்டரின் மேஜையை நெருங்கிய உடனேயே, டாக்டர் அவளை அமரச் சொல்லி சைகை செய்யும் முன்னாலேயே, ‘எனக்குக் குழப்பமாய் இருக்கு டாக்டர்!’ என்றாள் சந்தியா. ‘லேபர்-னா என்ன? அதுதான் பிரசவ வேதனையா?’


முதல்ல உட்காருங்க. குழப்பமோ, கவலையோ படாதீங்க. பிரசவத்தின் போது கருப்பை வாய் மெலிந்து விரிவடைகிறது. பத்து சென்டிமீட்டர் வரை முதல் ஸ்டேஜில் விரிவடையும். இரண்டாவது ஸ்டேஜில் குழந்தை பிறப்புப் பாதை வழியே வந்து விடும். அதைத் தொடர்ந்து பிளசன்டா அல்லது தொப்புள்கொடியுடன் சேர்ந்த பாகம் வெளிவருவது மூன்றாவது கட்டம். முதல் ஸ்டேஜ்ல தொடங்குகிற வலிதான் பிரசவ வேதனை."


எல்லாருக்குமே பிரசவ வேதனை, பிரசவமாகிற காலம் ஒரே மாதிரி இருக்குமா?


ஒவ்வொரு பிரசவமும் வித்தியாசமானதுதான். அது எத்தனை நேரம் நீடிக்கிறது, எப்படி முன்னேறுகிறது என்பது, பெண்ணுக்குப் பெண் மாறுபடும். ஆனால் உங்கள் மகப்பேறு மருத்துவருக்குத்தான் அது சரியாக முன்னேறுகிறதா என்று தெரியும். அப்படி முன்னேற்றம் நார்மலாக இல்லையென்றால், மருத்துவ உதவி அல்லது சிசேரியன் தேவைப்படுமா என்பதைத் தீர்மானிப்பார்."


பிரசவத்துக்குப் பத்து மாசம் என்கிறார்களே டாக்டர், அப்போ 300 நாட்கள் காத்திருக்கணுமா?


சாதாரணமாக மனித கர்ப்பம் 280 நாட்கள் அல்லது 40 வாரங்கள் நீடிக்கும். 37 வாரங்கள் முடிந்து விட்டாலே நீங்கள் பிரசவத்துக்குத் தயாராகிவிட்டீர்கள் என்று பொருள். பெரும்பாலான பெண்கள் எதிர்பார்த்த தேதிக்கு ஒரு வாரம் முன்னதாகவோ ஒரு வாரம் பின்னதாகவோ பிரசவிப்பார்கள்.


 ஒருவேளை 37 வாரங்கள் முடிவதற்கு முன்பாகவே பிரசவம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டால், அதைக் குறைமாதப் பேறுபிரிமெச்சூர் பிரசவம்அல்லதுப்ரிடர்ம்’ (Pre-term) பிரசவம்என்று குறிப்பிடுவார்கள். 37ஆவது வாரம் முடிவதற்குள் உங்கள் பிரசவத்துக்கான அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக உங்கள் மருத்துவரை நீங்கள் பார்க்க வேண்டும்."


எது பிரசவ வலியைத் தோற்றுவிக்கிறது?

இதன் காரணம் யாருக்கும் தெரியாது! ஆனால் ஆக்ஸிடாசின், ப்ரோஸ்டாகிளாடின் போன்ற ஹார்மோன்கள்தாம் கருப்பைச் சுவரை மெலிதாக்குகிறது. குழந்தையின் ஹார்மோனும் இயங்குவதால், தாயின் ஹார்மோன்கள் உற்பத்தியாகி வலியை உண்டாக்குகிறது."


பொய் வலி எடுக்குமாமே, டாக்டர்?

சில வேளைகளில் எப்போது பிரசவ வேதனை தொடங்குகிறது என்று கண்டுபிடிப்பது சிரமம். உங்களை மருத்துவ மனையில் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் அந்த வலி தொடரவில்லையானால், கருப்பை வாயில் விரிவடையவில்லை என்றால், வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்! இதுதான் பொய் வலி."

அப்படியானால் உண்மையான வலி?


கருப்பை சுருங்கி, அதன் வாய் மெலிதாகி விரிவடையும்போதுதான் உண்மையான வலி உண்டாகிறது. பெண்களின் உடலில் அதற்கான அறிகுறிகள் தாமாகவே தெரிய ஆரம்பிக்கும். பிறப்புறுப்பிலிருந்து சற்றே ரத்தம் கலந்த சளி வெளியாகும். இது வலி தோன்றுவதற்கு ஒரு நாளோ, ஒரு சில நாட்களோ முன்னால் நிகழும். வலி தொடங்கிவிட்டது என்பதை அறிய, இரண்டு அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.



தொடர்ந்து, இறுக்கமான பிடிப்பு போல் 30 செகண்டுகளுக்கு நீடித்து, கருப்பை வாய் மெலிதாகித் திறக்கும். அல்லது நீர்க்குடம் உடையும்.


இரண்டில் ஒன்று நிகழ்ந்தாலும், உடனே மருத்துவரை அணுகவும்; அல்லது மருத்துவருக்குச் சொல்லவும். வலி தொடங்கிவிட்டது என்பதை உணர்ந்தால், டாக்டர் சொல்லும் வரை, எந்த உணவும் உண்ண வேண்டாம். நீரும் அருந்தாதீர்கள்."


அப்புறம்?

தொடக்ககால பிரசவ வலியில் கருப்பைவாய் மூன்று சென்டிமீட்டர் வரை விரிவடையும். மூன்றிலிருந்து நான்கு சென்டி மீட்டர் வரை விரிவடையும்போது தான் நிஜமான வலி தொடங்குகிறது. அது அடிக்கடியும், இறுக்கமாகவும் இருக்கும். வேகமாகவும் இருக்கும். சராசரி பெண்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு சென்டி மீட்டர் வீதம் விரிவடையும். வலி அதிகமாக இருக்கையில், முன்னரே பிரசவ அனுபவம் இருந்தால் இது இன்னும் வேகமாக இருக்கும். கருப்பை வாய் முழுவதுமாக விரிவடைந்தவுடன், நீங்கள் குழந்தையைப் பிறப்புப்பாதையில் தள்ளிவிட உங்களை முக்கச் சொல்வார்கள். குழந்தை வெளியே வந்தபின், பிளசன் டாவும் வந்துவிடும்."



சிக்கல்கள் ஏதேனும் இருக்குமா, டாக்டர்?


உங்கள் பிரசவம் நார்மலாக இருக்க, உங்கள் மகப்பேறு மருத்துவரின் அனுபவம், திறமை மற்றும் கவனமான கண்காணிப்பு ஆகியவை இருக்க வேண்டும். உங்கள் இயக்கம், கருப்பைச் சுருக்கம், குழந்தையின் இதயத் துடிப்பின் எண்ணிக்கை பிரசவத்தின்போது கவனிக்கப்படும். அப்போதுதான் பிரசவத்தில் சிக்கல் ஏதும் இருந்தால், உடனே தகுந்த நடவடிக்கை எடுக்க முடியும்.‘


(பருவம் தொடரும் )
எழுத்தாக்கம் : சாருகேசி

நன்றி - கல்கி, அமிர்தம் சூர்யா, கதிர்பாரதி, புலவர் தருமி