Monday, August 13, 2012

போடா போடி - வரலட்சுமி சரத் குமார் பேட்டி - கிடாவெட்டு

http://www.extramirchi.com/wp-content/uploads/2008/07/varalakshmi-with-sarath.jpg 

ம்மாவின் அழகு.... அப்பாவின் கம்பீரம்... இரண்டும் கலந்து வசீகரிக்கிறார் வரலட்சுமி சரத்! நீண்ட நாட்களாக சினிமா என்ட்ரி டிரைலர் காட்டிக்கொண்டே இருப்பவரிடம் பேசினால், இளமைப் பட்டாசுதான்...


 ''அறிமுகமாகும் 'போடா போடி’ படத்திலேயே அம்மா கேரக்டராமே.... செம ரிஸ்க் ஆச்சே?''


சி.பி - சிம்புவுக்கு அம்மாவாவா நடிக்கறார்? சிம்புவோட குழந்தைக்குத்தானே அம்மாவா நடிக்கறார்? அதனால ஒண்ணும் ரிஸ்க் இல்லை, சிம்பு கிட்ட மட்டும் கொஞ்சம் ரிஸ்க்.. 



''ஸோ வாட்? எனக்குக் குழந்தைன்னா ரொம்பப் பிடிக்கும். 'போடா போடி’ படம் 'அலைபாயுதே’ பட பாணியில் ஒரு க்யூட் லவ் ஸ்டோரி. ஸ்வீட் நத்திங்ஸ்ல ஆரம்பிச்சு, டீன் ஏஜ் காதல், பொசஸிவ்னெஸ்னு நிறைய ட்ரீட் இருக்கு. ஒரே படத்தில் காதல், குழந்தை, பாசம்னு நடிக்க ஸ்கோப் உள்ள கேரக்டர். அந்தப் படத்தில் நடிக்கலைன்னாதான் நிறைய மிஸ் பண்ணியிருப்பேன்!'' 


'' ஆனா, 'போடா போடி’யை விட்டுட்டு சிம்பு அடுத்தடுத்த படங்களுக்குப் போயிட்டார். உங்கள் முதல் படம் ரிலீஸ் ஆக இவ்ளோ லேட் ஆகுதே; ஏன் சிம்பு படத்துல கமிட் ஆனோம்’னு ஃபீல் பண்றீங்களா?''


சி.பி  - இதுவரைக்கும் ஃபீல் பண்ணலையாம்.. இனிமே ஃபீல் பண்ணலாம்


''தினம் நல்லது நடக்கணும்னு ஆசைப்படறோம். ஆனா, அப்படியே நடக்குதா என்ன? பொறுமையாக் காத்திருக்கிறவங்களுக்கு நல்லது பெருசா நடக் கும்னு சொல்வாங்க. நான் பொறுமையா இருக் கேன். அப்புறம் சிம்பு... அவர் என் பெஸ்ட் ஃப்ரெண்ட். மியூஸிக், எடிட்டிங், கேமரானு எப்ப வும் அவருக்கு சினிமா சினிமா சினிமாதான். 'சல்சா’னு ஒரு டான்ஸ். எனக்கு நல்லாத் தெரியும். நான் ஸ்டெப்ஸ் போடறதைப் பார்த்துட்டு, எந்த அனுபவமும் இல்லாம அவரும் சூப்பர்பாஆடினார். ஐ ஃபீல் கம்ஃபர்ட்டபிள் வித் சிம்பு!''


http://www.our-kerala.com/newgallery/images/photos/images/varalaxmi%20sarathkumar%20Hot%20insaree1.jpg


''விஷாலுக்கும் உங்களுக்கும் காதல்னு சொன்னாங்களே?''


''அப்பா 'ஐ லவ் இந்தியா’ படத்துல நடிக்கும்போது நான் குட்டிப் பொண்ணு. அப்பவே எனக்கு விஷாலைத் தெரியும். இதுல மறைக்க எதுவும் இல்லை. விஷால் என் பெஸ்ட் ஃப்ரெண்ட். என் ஃபேமிலி ஃப்ரெண்ட்னுகூட சொல்லலாம். தட்ஸ் ஆல்!''


சி.பி - ஃபேமிலி ஃபிரண்ட்னா எப்படி? உங்க ஃபேமிலில இருக்கற எல்லாருக்கும் அவர் ஃபிரண்ட்டா? அவரோட ஃபேமிலில இருக்கற எல்லோரும் உங்க ஃபிரண்டா?





''நீங்க 'தட்ஸ் ஆல்’ சொல்றீங்க. ஆனா, விஷாலுக்காக உங்களுக்கும் த்ரிஷாவுக்கும் பயங்கரச் சண்டைன்னு பேசிக்கிறாங்க?''



சி.பி - ச்சே ச்சே  த்ரிஷாவுக்கு ஆல்ட்டர்நேடிவ் அரேஞ்ச்மெண்ட்ஸா ஆர்யா இருக்கறதால பெரிய சண்டை வர வாய்ப்பில்லை 



''அப்படியா என்ன? நான், த்ரிஷா, விஷால் மூணு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். வீட்ல இருந்தா சாட்டிங், போர் அடிச்சா மீட்டிங்னு ஊர் சுத்துவோம். எங்களுக்கு நடுவுல இப்படி ரூமர் கிளப்பிவிட்டது யாரோ, அவங்களுக்கு ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன்... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!''

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6zIM3iabP-z9IyaBLkkep5ZReUd9beVDSHLuBGto8mXM5URCQLGEBHQlpFwEcgf1ou-rPbT92VhrHhsOH_0nMAkp_rgeuMAlTlHV5iPms6E8mS9z7h_5zMxY5bLv551_Qo4ZDPa6EwCzf/s400/VaralakshmiSarathkumar4.jpg


 நன்றி - விகடன்

முற்றும் துறந்த பெண் முனிவர்

1.பிரபுதேவா தனுஷ் 2 பேருக்கும் சிம்புதான் சீனியர் சகலை 


------------------

2. வீரம் உள்ள எல்லோரும் போர்க்களத்தில் இறங்கலாம்.மனதில் ஈரம் உள்ளவர்கள் மட்டுமே கவிதைக்களம் இறங்க முடியும்் 



-------------------------


3.  திருப்பதி ,பழநி போவோர் கவனத்திற்கு .பெருந்துறையிலும் மொட்டை அடிக்கப்படும் -இவண் -சுசி ஈமு டேக் இட் ஈசி மாமு குரு 


----------------------


4. முகத்தை உம்முனு வெச்சிருந்தா சோனியா அகர்வால் ,மனசை கும்முனு வெச்சிருந்தா கா"ஜில்" அகர்வால் # ஜம்மு ஜம்பு ரசிகர் மன்றம் 



--------------------

5. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் 1. சாருலதா 2.மாற்றான் 3.இருவன் # ஆகஸ்ட் ரிலீஸ் உல்டா புல்டா ஆஃப் ஹாலிவுட் ஃபிலிம் 


--------------------------





6. கட்டுமானம் இடிந்த விழுந்து பலர் பலியான வழக்கில் ஜேப்பியார் கைது # மாப்பி ஜேப்பி ஜெ வெச்சுட்டாங்க ஆப்பி




-------------------


7. அஃபீசியல் டீசர் = ஆஃபீஸ்ல இருக்கற பொண்ணுங்களை ஆஃபீஸ்க்குள்ளே டீஸ் பண்ற ஆள்? # சபாஷ் துபாஷ்



--------------------


8.  தனித்துவம் எனக்குத்தேவை இல்லை.உன்னுடனான கூட்டுத்துவம் போதும்



-----------------



9. கலி முத்திடுத்து,என்ன் பண்ண?


களி முத்திடுச்சுனா மோர்ல ஊற வெச்சு சாப்பிடலாம்



----------------------

10. இன்ஸ்பெக்டர் ,ஒரு திருடன் என்னை பாலோ பண்றான்


 பின்னே நமீதா வா உன் பின்னால வருவாங்க?



----------------------
M.a. Bhageerathi Anantharaman shared Chweety Nandhini's photo.




11. மேரேஜ் முடிஞ்சும் ஏன் இன்னும் நீங்க கிளம்பலை?



கல்யாண முகூர்த்தம மட்டும்தானெ முடிஞ்சிருக்கு?்


------------------------


12. வீட்டுக்கு வாபேசிக்கிறேன்.



சொல் பேச்சு மீறக்கூடாது ஒன்லி பேச்சு நோ அடிதடி.ஓகே?



------------------------


13. கடவுளே.முற்றும் துறந்த பெண் முனிவர் யாருமே இல்லயே .ஏன்?



----------------------


14. குடிகாரன் - என் வாழ்க்கை "ஜின்"னா பின்னம் ஆகிடுச்சு



------------------------

15. புரோ புவா - நான் அருந்ததி அனுஷ்கா மாதிரி இருக்கேன் #



 ஆஆனந்த் - குழப்பாதே, அருந்ததி ஒல்லி ஃபிகர், அனுஷ்கா கில்லி ஃபிகர்


-----------------------





16. நான் மகிழ்ச்சியோடு இருக்கேன்னு ஒரு பொண்ணு சொன்னா முறைப்பையன் பேரு ஆனந்த் அல்லது சந்தோஷ்னு இருக்கும் # அவதானிப்பு



----------------------------


17. நான் ”மகிழ்ச்சி”யோடு இருக்கேன்னு ஒரு பையன் சொன்னா அவன் கோவைல சுத்திட்டு தண்டமாயாருக்கோ செலவுபண்ணிட்டு இருக்கான்னு அர்த்தம் # அவதானிப்பு


------------------------


18. கடவுளே! நீ மட்டும் எப்படி எப்பவும் ஜாலியா இருக்கே?


 பக்தா! நான் பொண்ணுங்களோட சகவாசம் வெச்சுக்கறதில்லை, செலவு பண்றதில்லை


------------------------

19. அப்பா காசை செலவு பண்றதுல பொண்ணுங்களுக்கு இஷ்டமே இருக்காது, எவனாவது இளிச்சவாயன் சிக்குனா அவனை மிளகா அரைச்சா அதான் கிக்



-------------------------

20. இன்ஸ்பெக்டர், அதிகாரத்தை நீங்க மிஸ் யூஸ் பண்றதா புகார் வருது.


. அபாண்டம் சார், மீ யூசிங்க் மை மிசஸ் ஒன்லி


-------------------------


21. இன்று ஆடி கிருத்திகை வெள்ளி. கோயில்களில் அழகிய தரிசனம் # சத்தியமா சாமியைத்தான் சொன்னேன்



----------------------------



Sunday, August 12, 2012

புவியியல் சந்தேகம்-பூமி (கா ) உரிமையாளார் யார்?

s photo.
இப்படி ஒரு அரசியல்வாதியைத்தான்
நாம் தேர்ந்தெடுத்திருக்கிறோம்
என்பதற்காக நாம் அவமானப்பட வேண்டும்.
ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைக்குக்
கத்தியாலேயே தன் பிறந்தநாள் கேக் ஊட்டுகிறாராம்.. இவரைப் போன்ற அரசியல் வாதிகளை மனநலக்காப்பகத்தில் வைத்துதான் பார்த்துக் கொள்ளவேண்டும்..
1.PLAY BOY BOOK  = விளையாட்டுப்பையனோட புத்தகம்? # சபாஷ் துபாஷ்



-----------


2. தமிழக கோயில்களில் விஐபி தரிசனம் ரத்து! # அதாவது விஐபிங்க யாரையும் கோயில்ல வெச்சு பொண்ணு பார்க்கக்கூடாதுங்களா?



--------------------------


3. புவியியல் சந்தெகம் - பூமிகா பட்டா போட்டாச்சா? உரிமையாளார் யார்? 



----------------------


4. என் மீது மான நட்ட வழக்குப்போட்ட ஜெ மதுவிலக்கு கொண்டுவந்தால் அவர் மீது மது பான நட்ட வழக்கு போடுவேன் -கேப்டன் அறிக்கை 



-----------------------


5. டாக்டர் டெயிலி 3 இளநீர் சாப்பிட்டா நல்லதா? 



ஆமா தென்னை விவசாயிகளுக்கு நல்லது 


----------------------


ஈரோடு டூ சென்னிமலை வழியில் பைக் மினி டோர் மோதல்.உயிருக்கு ஆபத்து இல்லை.ஹெல்மட் அணிவீர்


6. ஈமு கோழி நட்டம் ஆனதற்கும் கோச்சடையான் தாமதம் ஆவதற்கும் எந்த ஸம்பந்தமும் இல்லை # சிவ தாண்டவ ஸ்டில் 



-------------------------


7. மேடம்.எந்தகடைல அரிசி வாங்கறீங்க? 



நமீதா - தட் ஈஸ் நன் ஆப் யுவர் பிஸ்னெஸ். அட நீங்க வேற.என் பிஸ்னெசே அரிசி மண்டிதானுங் 


-------------------------------


8.  பயணங்கள் இனிமையானவை விபத்து நேராத வரை 


-----------------


9. ஈரோடு மாவட்டத்தில் நடுத்தர மக்களை குறி வைத்து முயல் வளர்ப்புத்திட்டம் ,நாட்டுக்கோழி திட்டம் வருது.உஷார் மக்களே 



------------------------


10. தனி நபரிடம் சீட்டு பணம் கட்டுவதை தவிருங்கள்.ஈமு திட்டத்தில் பல முதலீட்டாளர்கள் மக்களிடம் ஸீட்டுப்பணம் வசூலித்துஏமாற்றி ஏமாந்திருக்காங்க 


----------------------------


அ அ அ அ , டீச்சர் இன்னொருக்கா .. — with Senthamil Moorthi and Raja Ca.

11. சுசி ஈமுப்பண்ணை ஓனர் கோவை வி ஐ பி யிடம் இடம் வீடு அடமானம் வைத்து பணம் பெற்று ஆஸ்திரேலியாவில் செட்டில்டு.கைவசம் 780 கோடி 


-------------------


12. டியர் நீ நல்லா நாட்டுக்கோழி மாதிரி இருக்கே.ஈமு கோழி திட்டம் மாதிரி அல்வா குடுத்திடுவியோன்னு பயமா இருக்கு 



-----------------------


13.  காதல் மனிதத்தனம் என்பவர்கள் காதல் கவிதை பைத்தியக்காரத்தனமானது என்பது என்ன தனம்?


------------------------


14. ஜிம்மில் தவமிருக்கும் நமீதா # அஜித் மாதிரி நடக்கனும், ஃபைனான்ஸ்காரன் மாதிரி ஓடனும், அப்போதான் உடம்பு குறையும் மேடம்


----------------------------



15. கச்சதீவை மீட்க கடலில் இறங்கிப் போராட நான் தயார்! - விஜயகாந்த்!! # அந்தக்கடலில் திமிங்கிலம், சுறா எல்லாம் இருக்காம் - ஜெ நக்கல் பதில்



---------------------------



16. மந்திரிகள்,அதிகாரிகளுடன் கோட்டையில் ஜெ 90நிமிடம் ஆலோசனை# அம்மா ஆர்டர், ஆல் ஒபே, இதுல என்ன ஆலோசனை வேண்டிக்கிடக்கு?



------------------------


17. நில அபகரிப்பு வழக்கில் ரித்திஷுக்கு முன்ஜாமின்  # நாயகன் எதிர்நாயகன் ஆகிட்டார்



------------------------------


18. நீங்க ஏன் ஊக்குவிக்கறதே இல்லை?


இப்போ எல்லாம் ஜிப் சிஸ்டம் தான் ஃபேஷன், அதனால ஊக்கு”விக்கறதை” நிறுத்திட்டேன்



-----------------------------


19. தலைல பூ வச்சா முகம் எப்டி அழகாகுது?


 பூ வெச்சதும் முகத்துல ஒரு “பூ”ரிப்பு வந்துடும், அதான்



---------------------------

20. எம்ஜிஆர். எங்கே ? கருணாநிதியும், ஜெவும் எங்கே ? - விஜயகாந்த் # எம்.ஜி.ஆர். கல்லறையில் ,கருணாநிதியும், ஜெவும் ஏசி போட்ட சில் அறையில்



-----------------------------


முத்துகிருஷ்ணன்'s photo. — with Vijay Asokan and 29 others.



21.நாட்டுக்கோழி,  ஈமுக்கோழி - என்ன வித்தியாசம்?




 முட்டை போட்டா அது நாட்டுக்கோழி, நாமம் போட்டா அது ஈமுக்கோழி



-----------------------------


22. லேடி -டாக்டர், என் கூந்தல்ல பேன், பொடுகு அதிகமா இருக்கு..



போலி டாக்டர் - உக்காரும்மா, பேன் பார்க்கிறேன் ;-0


-------------------------

23. தீவிரமா த ஹிந்து பத்திரிக்கை படிச்சுட்டு இருக்கறவங்களை ஹிந்து தீவிரவாதின்னு சொல்லலாமா?



-------------------------


24. நிருபர்- மேடம் . உங்க மிலிட்ரி கணவர் என்ன பண்ணிட்டு இருக்கார்?



 ஜிஞ்சிதா - அவர் அங்கேயும் சுடறதில்லை, சும்மாதான் இருக்கார் ;-0


----------------------


25. காலில் விழுவதை கேவலமாக நினைத்தால் தமிழ் நாட்டில் யாரும் அமைச்சராக முடியாது



-----------------------------





26. நாட்டுக்கட்டைகள் இருந்தும் எந்த யூசும் இல்லாம இருந்தா அவர் தச்சர், நாட்டுக்கட்டை இருந்தும் அந்நியர் யூசில் இருந்தா அவர் மிக்சர்



------------------------

27. ஆஃபீஸ்ல இருந்து வர்றப்போ (அவங்கவங்க)சம்சாரம் பூ வாங்கிட்டு வாங்கன்னா அன்னைக்கு பூகம்பம் ( கோரிக்கை) இருக்குன்னு அர்த்தம் ;-0


----------------------

28. கிளியோபட்ரா கழுதைப்பால்ல குளிச்சாராம் #


டவுட் 1 . உடம்பு பூரா பிசுக் பிசுக்னு இருக்காது?


 டௌட் 2 . எறும்பு, ஈ மொய்க்காதா?


--------------------------





Rofl :P



இரண்டணா - சுஜாதா - சிறுகதை

இப்போதும் சிலர் இரண்டணா நாலணா என்ற சொற்களைப் பயன்படுத்தினால் சுதந்திரத்துககு முன் பிறந்தவர்கள் என்று நிச்சயமாக சொல்லலாம் இரண்டணா ஒரு தனி நாணயம். பித்தளை. சதுர வடிவில் இருக்கும். ஒரணா போல அசிங்கமான நௌ¤நௌ¤கள் இல்லாமல் கூர்மையான முனைகளை மழுப்பி ஒருபககததில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் தன் தலையில் கிரீடத்துடன் சைடுவாகாக பார்த்ததுக கொண்டிருப்பார். அவர் கிரீடத்தை துக்கிப் பார்ததால் அப்போது தான் கிராப்பு வெட்டிக் கொண்டிருக்கலாம் என்று தோன்றும்





இரண்டணா அந்த தினங்களின் பொருளாதாரத்தில் முக்கியமான நாணயம் இந்த நாட்களின் எட்டுபைசாவுக்கு சமம் என்று அதை அலட்சியம் பண்ணிவிடாதீர்கள் நான் சொல்லும் நாட்களில் சீரங்கம் திருச்சி பஸ் கட்டணம் இரண்டணா. பெனின்சுலர் கபேயில் தோசை இரண்டணா . கிருஷ்ணன் கோட்டை வாசலில் இலநதைப்பழம் லேக்கா உருணடை கொடுக்காப்புளி எல்லாமே காலணாதான் அதாவது இரண்டணாவில் எட்டில் ஒரு பங்கு. டிபிஜி கடையில் அழிக்கும் ரப்பர் கட்டைபேனா மசிக்கூடு ரூல்டு பேப்பர் ப்ளாட்டிங் பேப்பர் வாங்கியும் இரண்டணாவுக்கு சில்லரை தருவார் அல்லது ஒரு புளிப்பு மிட்டாய் தருவார் .



 வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது மார்கழி மாதத்தில் பகல் பத்தில் தேர்முட்டியருகில் தரையில் பள்ளம் தோண்டி துருத்தி வைத்து சாணி பூசி பெரிய வாணலி அமைத்து அதில் கொள்ளிடம் மணலைக் கொட்டி அதனுடன் வருக்கப்பட்டு உற்சாகமாக வெடிக்கும் பட்டாணி ஒரு பை நிறைய இரண்டணாவுக்கு கிடைக்கும், இரவு பெடரமாக்ஸ் வெளிச்சத்தில் பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதை கொக்கோகம் போன்ற புத்தகங்கள் எங்கேயோ பார்த்துக்கொண்டு வாங்கலாம். ரங்கராஜாவில் ‘காப்டன் மார்வல் ‘படம் தரைடிக்கெட் இரண்டணா. தங்கராசு மிதிவண்டி நிலையத்தில் அவர்சைக்கிள் இரண்டணாவுக்கு எடுக்கலாம் அதற்கு கீழே ஒரணா அரையணா காலணா தம்பிடி போன்ற பரிவார நாணயங்கள் இருந்ததால் இரண்டணா இருக்கிறவன் ஆகாகான் போல உணரலாம்



விகடன் பத்திரிகை நீல நிறத்தில் அச்சிட்ட சிறுவர் மலருடன் இரண்டணா .ஒரு பாக்கெட் கலர்கலராக இருக்கும் பலப்பம் இரண்டணா. லிப்ஸ்டிக் போல சிவப்படிக்கும் மிட்டாய் ஐஸ்கட்டியை சரக்சரக் கென்று தேய்த்து சர்பத் ஊற்றி உறிஞசுவதுடன் ஒரு காத்தாடி தலையாரி பம்பரம் எல்லாம் வாங்கலாம் என்ன என்ன வெல்லர்ம இரண்டணாவில் வாங்கலாம்!




அப்பேற்பட்ட இரண்டணா நாணயத்தை தொலைத்துவிட்டேன் சொல்கிறேன் பாட்டி என்னை ஒரு ஆழாக்கு எண்ணெய் வாங்கிக்கொண்டு வா என்று இரண்டணா கொடுத் அரையர் கடைக்கு அனுப்பினாள் கூடவே ஒரு கிண்ணியும் கொடுத்தாள். ஈயம் பூசினது வாயகன்றதுநான் அந்தவயசில் ஸ்தலத்திற்கு ஸ்தலம் ஓட்டம் தான் ஒரு நிமிஷத்துக்குள் அரையர் கடைக்கு வந்து “மாமா ஒரு ஆழாக்கு எண்ணெய்” என்றேன் அரையர் கடை என்று எப்படி பெயர் வந்தது தெரியாது கடை சொந்தக் காரர் அரையர் இல்லை அய்யங்கார்தான்.


ஆனால் கோவில் அரையர்கள் பரம்பரையெல்லாம் கீழ உத்திர வீதியில் இருந்தார்கள் இநத அரையர் எங்கள் வீட்டிற்கு எடடுவீடு தள்ளி இருந்தார் சாதி வழக்கத்துககு மாறாக பலசரக்கு கடைவைத்திருநத ஒரே அய்யங்கார் சன்னமான குரலில் வரவேற்பார் எப்போதும் பலகையில் உட்கார்ந்து கொண்டிருப்பார் நிலக்கடலையோ முந்திரிப்பருப்போ எதையும கண்ணெதிரே ,இருந்தாலும் வாயில் போட்டுக் கொள்ள மாட்டார். கையில் பனை விசிறிக்கொண்டு இருப்பார் அவர் கடையில் ஏலக்காய் கிராம்பு கோதுமை அரிசி லவங்கப்பட்டை சீமெண்ணை எல்லாம் கலந்து ஒரு சுகமான வாசனை வீசும்




“என்ன எண்ணைடா நல்லெண்ணையா தேங்கா எண்ணெயா ஆமணக்கு எண்ணெயா விளக்கெண்ணையா வேப்பெண்ணையா ” என்றார்



அப்போதுதான் இவ்வளவு எண்ணெய் இருப்பது தெரிந்து நான் மீண்டும் பாட்டியிடம் ஓடி வந்து “என்ன எண்ணை பாட்டி?”



“உன்னை கன்னம் கன்னமா இழைக்கணும் நம்மாத்தில எப்பவாவது நல்லெண்யைதவிர எதாவது பயன்படுத்துவமா நல்லெண்ணைதாண்டா”




மீண்டும் ஓடிப்போய் “ ஒரு ஆழாக்கு நல்லெண்ணை மாமா”



“நல்லெண்ணை ஆழாக்கு ரெண்டரை அணா ஆச்சேப்பா பாட்டி கிட்ட போய் இன்னும அரைணா வாங்கிண்டு வரயா” நான் மீண்டும் ஓடி வந்து சொல்ல“ ஏண்டா மடயா ஆழாக்கு ரெண்டரை அணான்னா ரெண்டணாவுக்கு உண்டானதை வாங்கிண்டு வரதுக்கென்ன புத்திகிடையாதா உனக்கு” இப்படி பரபக்கபரக்க ஓடிண்டேருப்பியா“




”நீ சொல்லவே இல்லையே பாட்டி“ என்றேன் நியாயம் தானே ”காதுல வாங்கிக்கோ அரையர் கிட்டபோயி போன வாரம்தான் ரெண்டணா ஆழாக்கு ஒரு முழு ஆழாக்கு கொடுத்தாரேன்னு கேளு இல்லைன்னா முக்காலே மூணுவீசம் ஆழாக்கு போடச் சொல்லு நன்னா பார்த்து எல்லா எண்ணெயும் பாத்திரத்தில விழுந்து கீழசொட்டாம வாங்கிண்டு வா வரப்ப ஓடி வராதே கொட்டிடப்போறே “ இந்த எச்சரிக்கைகளுக்கெல்லாம் தேவை இல்லாதபடி அடுத்த முறை அரையர் கடைக்கு போக விடாமல் வழியில் ஒரு சம்பவம் நிகழந்தது




ராஜன் கேர்ள்ஸ் ஸ்கூல் எதிரில் தெரு நடுவில் தேர்முடடியருகில் கொட்டு சப்தம் கேட்டது அதைக் கடந்துதான் அரையர் கடைக்கு போக முடியும் கூட்டம கூடிக்கொண்டிருந்தது நையாண்டி மேளம் கேட்டது . மத்தளம் அவ்வப்போது உருமியது பைஜாமா அணிந்த ஒரு சிறுமி அலட்சியமாக உள்ளங்கைகளை தரையில அழுத்தி பல்ட்டி அடித்து சுற்றி வந்தாள் அவளைவிட சற்றே பெரிய சிறுவன் ஒரு கழியை லாவகமாக துக்கி நிறுத்த மஸ்தான் தரையில் வட்டம வரைந்து அதில் பாம்புப் பெட்டிகள் ஒரு மகுடி வேறு என்னஎன்னவோ உபரகணங்கள் கோழிமூககு இறகு போர்த்திய போர்வை கருப்புத் துண்டு என்று பலவித உபகரணங்களை பரப்பிக் கொண்டிருக்க ”வாங்க வாங்க நாகூர் பாபா மோடி மஸ்தான் பரம்பரை , மனுசனை பாம்பாக்குவேன் பாம்மை மனசனாக்குவேன் “ ஒரு கீரி ஆணியில் தனிப்பட்டு சுற்றி வந்து கெர்ணடிருக்க மோடி மஸ்தான் என்னையே பார்த்து ”பயப்படாத பக்கத்ல வந்து குந்து“ என்று என்னை அழைத்தான் அந்த பரட்டைததலை சிறுமி சின்ன பல்வரிசையில் என்னைப் பார்த்து சிரித்தாள்




ஆழாக்கு எண்ணெயை மறந்தேன் முதல் வரிசையில்போய் உட்கார்ந்துகொண்டுவிடடேன் அவ்வப்போது மத்தளம் தட்டிக்கொண்டு அவன் இடைவிடாமல் பேசினான்




”கந்துமதக்கரியை வசமாக்கலாம் கரடிபுலி வாயைக் கட்டுவேன் சிங்கத்தை முதுகிலல போட்டுப் பேன் பாம்பை எடுத்து ஆட்டுவேன் … இது என்ன?“ என்ற சபையோரில் ஒருவரை கேட்டான்




”ஒரணா“ ”என்னது ஒக்காளியா“ என்று கேட்க சபையில் சிரிப்பு ”நெருப்பில அரதம்வச்சு வேதிச்சு வித்துருவேன் வேற யாருமபார்க்காம உலகத்தில உலாவுவேன் எப்பவும் இளமையா இருப்பேன் மத்தொருவன் சரீரத்தில பூந்துருவேன் தண்ணில நடப்பேன் நெருப்பில குந்துவேன் எல்லாம் எதுக்காக?“ என்று கேள்வி கேட்டு தயங்கி தன் சட்டையை நீக்கி பட்டென்று வயிற்றில் எதிரொலிகேட்கத் தட்டி ”பாழும் வவுத்துக்காக!“




”நீ காசு கொடுக்கவாணாம் உன் காசை உம் மடிலயே வெச்சுக்க வித்தை பாரு பாத்து மஸ்தான் குஷியாயிருச்சுன்னு ஒரணா ரெண்டணா கால் ரூபா அரை ரூபா ஒரு ரூபா தட்ல போடு பச்சைப்புள்ளையை பந்தாடப் போக்ஷற்ன்“ எல்லாரும் பலமா கைத்தட்டுங்க என்று சொல்லி நாங்கள் கைதட்ட காத்திராமல் உய் உய் என விசிலடித்தான்




நான் அவன் வித்தையில் பரிபூர்ணமாக ஐக்கியமானேன் ”தகிரியமுள்ளவங்க யாராச்சும் இருந்தா வாங்க“ என்று கேட்க ஒரு சிறுவன் முன்னால்வந்து நின்றான் அந்தப் பையனை கூப்பிட்டு அவன்முன் விரல்களை என்னவோ பண்ண அவன் சட்டென்று துங்கிப்போக அழுக்குத் துணடால் போர்த்திப் படுக்க வைத்தான் ”யார் வூட்டுப் புள்ளையோ இது“ என்றான் தரையில் ஒரு முகம் வரைந்தான் அந்த முகத்திற்கு ஒரு வாய் மட்டும் பெரிசாக வரைந்தான் பக்கத்தில் ஒரு பேனாக்கத்தியை வைத்தான் பாம்புப் பெட்டியைத திறந்து அதை உசுப்பிவிட ஒரு முறை அவன் மணிக்கட்டில் கொத்தியது த என்று அதை அதட்டினான்



உள்ளுணர்வில் அஙகிருந்து விலகவேண்டும என்றுதான் தோன்றியது ஆனால் கட்டிப்போட்டவன் போல ஆகிவிட்டேன சன்மத்துககு இந்த இடத்தைவிட்டு விலகப் போவதில்லை கீரிப்பிள்ளை ஒன்றுக்குப்போனது அந்த பைஜாமா சிறுமி பெரிய கொம்பை வைத்துக் கொண்டு அவன் தோளிலிருநது கயிற்றுக்கு எவ்வி அதன்மேல லாவகமாக நடந்தாள் அதன்பின் கழி முனையில் படுத்திருக்க இவன் கீழே இருந்து பாலன்ஸ பண்ணி அவளை சுற்றினான் இந்த நேரத்தில் எல்லாம் பையன் கண்மூடிப் படுத்திருந்தான் எனக்கு மிகவும் கவலையாக இருந்தது ”யார் பெத்தபுள்ளையோ இதை எழுப்பவாணாமா?“




”வித்தை பாத்திங்கோ இப்ப நம்ம ராணி தட்டு கொண்டாருவா ஒரணா ரெண்டணா“ என்று சொன்னபோது சபையோர் மெல்ல எழுநதிருக்க ”ஏய்!“ என்று குலை நடுங்குமாறு ஒரு அதட்டுப் போட்டான் ”பாப்பார தெருவில வித்தை காட்டிட்டு காசு வாங்காம போகமாட்ன் நீ மட்டும காசு தராம வூட்டுக்கு போனே என்ன ஆகும்பாரு“ என்று கையில் அந்த பேனைக்கத்தியை எடுத்து தரையில் வரைந்திருந்த வாயில் கீறினான் படுத்திருந்த பையன் வாயிலிருந்து ரத்தம் வடிந்தது ”இதான் உனக்காகும் ராத்தரி“ அப்டியே எல்லோரும் மூச்சடங்கி கதிகலங்கி ப்போய் நின்றோம் மௌமான சூழ்நிலையில் அவன் கத்தியைக் காட்டிக்கொண்டே மெல்ல எங்களிடம வந்தான் நான் எனனிடமிருந்த இரண்டணாவைப் போட்டதை அவன் பார்க்கக் கூட இல்லை உடுக்கை அடித்துக் கொண்டே சற்றி வந்தான் கீரி சுற்றிக் கொண்டு இருந்தது வித்தை எப்போது முடிந்தது ஞாபகமில்லை மெல்ல கனவிலிருந்து விடுபட்டவன்போல நடந்து வந்தேன்




வீட்டின் அருகில் வந்தபோதுதான் நிஜ உலகத்து நிதர்சனங்கள் எனக்கு உரைக்க ”எங்கே இரண்டணா“ என்பதுமட்டுமின்றி எங்கே கிண்ணி? கிண்ணியையும் வைத்துவிட்டு வந்துவிட்டேன பாட்டி சமயலறையிலிருநது குரல் கொடுத்தாள்” ஏண்டா இத்தனை நாழி எண்ணையை மோடைமேல வச்சுட்டு பாடம் படிக்கபோ“ என்றள் மீண்டும தெருக்கோடிக்கு ஓடினேன் அதற்குள் வித்தைக்காரன் சாமக்கிரியைகளை கவர்நதுகொண்டு சென்றிருக்க வேண்டும விறிச்சோடியருந்தது தெரு. போய்விட்டான்





நான் செய்வதியறியாது திகைத்து நிற்க தெற்கு சித்திரை வீதி மூலையில் மீண்டும் கொட்டு சப்தம்எதிரொலிததது சப்தம் வந்த திசையை நோக்கி ஓடினேன் தெற்குவாசல் அருகில் வாணி விலாஸ் பிரஸ் எதிரில் அவன் அடுத்த டேரா போடடிருக்க மெல்ல கூட்டம் கூடிக் கொண்டிருந்தது வித்தைககாரன் அருகில் சென்க்ஷற்ன அந்தப்பையன், வாயில் ரத்தம் வந்து கிடந்தவன் பைஜாமா பெண்ணுடன் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தான்




வித்தைக்காரன் எங்கள் விட்டுக் கிண்ணியை திருப்பித் திருப்பிப் பார்ததுக் கொண்டிருந்தான் இது எவ்வளவு பெறும் என்பதுபோல் ”வா தம்பி“ ”நான் வந்து கீழ சித்திரைவீதில விததை பார்க்க வந்தேங்க கிண்ணியை விட்டுட்டு போய்ட்டடங்க அந்த கிண்ணி என்னுது“ ”தம்பி வந்தியா கிண்ணி தரேன் ஆனா ஒருகண்டிசன் “என்ன ”எங்கூட வரியா வித்தைகாட்ட லர்ல்குடி பிச்சாண்டாரகோவில் இந்தபக்கம் குளித்தலை அந்தப்பக்கம் புதுக்கோட்டை வரைக்கும போகலாம்“ என்றாள். பைஜமா சிறுமி என்னைப் பார்த்து மோகனமாக சிரித்தாள்




”ஏபிசி புஸ்தவம் வெச்சிருக்கியா“ என்று கேட்டாள் நான் அங்கேயே உட்கார்ந்து கொண்டு விசும்ப ஆரம்பித்தேன் ”என் கிண்ணியை கொடு“ ” கொடுக்கறேன் கொடுக்கறேன் “ அவன் என்னிடம அந்த கிண்ணியை கொடுக்காமல் அவவப்போது நீட்டி நீட்டி கொடுப்பதுபோல் கொடுதது கையை இழுத்துக கொண்டான் நான் பெரிசாக அழ ஆரமபித்ததும் கொடுத்தான் ”கிண்ணியை கொடுத்துடடு வந்துரு நல்ல ஐயர் வூட்டு சாப்பாடு போடடறேன் ஊர் உலகமெல்லாம் சுத்தலாம் பனாரஸ் அலகாபாத் கல்கத்தா “ நான் வீட்டுக்கு திரும்பும்போது அந்தப் பெண் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள் ”வரல்ல? வரப்ப ஏபிசி பொஸ்தவம் கொண்டுட்டுவா” என்றாள் நான் ஓடிவந்து அவசரமாக என் உண்டியலை உடைதது எட்டு காலணா சேர்த்து அரையர் கடைக்கு போய் எண்ணை வாங்கிக்கொண்டு வந்து விட்டேன், *





பாட்டி திட்டுவாளோ என்று நான் வித்தைக்காரருடன் போயிருந்தால் என்ன ஆகியிருப்பேன் என்று இந்த வயசில் எப்போதாவது எண்ணிப் பார்ப்பேன் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு ஒருகையால் மத்தளம் தட்டிக்கொண்டு மற்றொரு கையால்புல்லாங்குழல் வாசிக்க அந்தப் பெண் சுழனறு சுழன்று ஆட…. எது எப்படியோ இந்தக் கதையை எழுதியிருக்க மாட்டேன்.



நன்றி - சுஜாதா , உயிர் மெய், சிறுகதைகள்

தப்பாட்டம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFtZm1h7aJpHTYN5wuB1_fJmDf4RhIDDXoss5QGO8JdlServtV8kwdCYgeqqdgMtf5c7Jx4X562crKLOX2JiMTIkIF3RiR29zf91kmVH-byOqBDOnGVhyxz_qiKSVD_FkijI6KzWiGFyVo/s1600/12.jpgவெளிச்சத்துக்கு வரும் வித்தியாச வாழ்வுகள்!



உருண்ட மலை ஓரத்துல... உறுமி சத்தம் கேட்டதென்ன...



கட்டுரை, படங்கள்: ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு



நாலு மாசம் ஜோரு! மீதி மாசம் போரு! எங்க கதையக் கேளு; ஏற்றம் எந்த நாளு? சொல்லியடிச்சா தப்பு! சொல்லாம அடிச்சா மப்பு!" தப்பாட்டக்காரர் ஒருவரின் சரியான பாடல் கேட்டது தஞ்சாவூர் ரெட்டிப்பாளையத்தில். இந்த மூணு வரிக்குள்ளே முடங்கிக் கிடக்குது தப்பாட்டக்காரர்கள் வாழ்க்கை. ரெட்டிப்பாளையம் தப்பாட்டக்காரர்கள் நிறைந்த கிராமம் என தமிழக அளவில் அறியப்பட்டுள்ள ஒரு கிராமம். சமீப காலத் திரைப்படப் புகழ் சின்னப் பொண்ணு ‘வாக்கப் பட்டது’ இந்தக் கிராமத்தில்தான்.




ஊருக்குள்ளே எந்தப் பக்கம் திரும்பினாலும் தப்பாட்டக் கலைக்குழு விளம்பர போர்டுகள். நாற்பது ஐம்பது குடும்பங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தப்பாட்டக் கலைஞர்கள். எழவு வீட்லயும், கோயில் திருவிழாவுலயும் தப்பு அடிக்கறதுதான் நாங்க பாரம்பரியமாய் செஞ்சு வந்த வேலை. எங்களுக்கெல்லாம் தப்பாட்டக் கலைஞர்கள்ங்கற கௌரவத்தையும் பெருமையையும் பெற்றுத்தந்தது த.மு.எ.ச.தான். அவுங்கதான் தமிழ்நாடு பூரா நடத்தி வந்த கலை இரவு நிகழ்ச்சிகள்ல, துணிச்சலாய் மேடையேத்தி எங்களுக்குப் பெரிய அளவுல அங்கீகாரம் வாங்கித் தந்தவங்க!" என்கிறார் தஞ்சை வீரசோழ தப்பாட்டக் கலைக்குழு தலைவர் ரெங்கராஜ்.





சிங்கப்பூர், இந்தோனேஷியா, பர்மானு வெளிநாடுகளுக்கெல்லாம் போயி தப்பாட்டம் நடத்திட்டு வந்திருக்கோம். இந்த ஊர்ல உள்ள பல கலைஞர்களில் ஏதோ ஒரு சமயத்துல வெளிநாடு போய்ட்டு வந்த ஆளாத்தாங்க இருப்பாங்க!" எனச் சொல்பவரின் வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொண்டே, தெரு முழுக்க நோட்டமிடுகிறது நம் கண்கள். ஒன்றிரண்டு ஓட்டு வில்லை வீடுகள் தவிர்த்து மத்த எல்லாமே கீத்துக் குடிசைகள். அவ்வளவு ஏன்? மண் சுவர்கள் மீது குத்த வைக்கப்பட்டிருக்கிறது வீரசோழ தப்பாட்டக் குழு தலைவர் ரெங்கராஜுவின் கீற்றுக் குடிசை. அந்த வீட்டுக்குப் பின்புறம்தான் ‘சினிமா புகழ்’ சின்னப்பொண்ணு வீடு. கான்கிரீட்டால் ஆன அந்த வீடு மட்டும் ஏசியால் குளிர்ந்திருக்கிறது. மற்ற வீடுகள் வறுமை வெயிலின் உக்கிரத்தில் பொடிந்து போய் கிடக்கின்றன.


http://koodu.thamizhstudio.com/images/alindu_thappattam_2.jpg

வெளிநாட்டுக்குன்னு ஒரு ட்ரிப் போய்ட்டு வந்தா, ஒரு ஆளுக்கு பத்தாயிரம் ரூபாய் தருவாங்க. அதுல என்ன பண்ணிட முடியும்? வந்ததும் எங்காளுங்க எங்களை ரவுண்டு கட்டிடுவாங்க. மாப்ள மச்சான்களுக்கு பார்ட்டி வெச்சே கரைஞ்சி போயிடும்" என ராஜேந்திரன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஒரு குடிசையிலிருந்து அசைவக் குழம்பு மணம் காற்றில் கரைந்து வந்தது.




எங்காளுங்க பெரும்பாலோர் மாட்டுக் கறிதாங்க விரும்பிச் சாப்பிடுவோம். புதன், ஞாயிற்றுக்கிழமைகளில் அது இருந்தாதான் சோறு உள்ளே எறங்கும்!" எனக்கூறி சில வினாடிகள் இடைவெளி விட்டவர், என்ன? இதைச் சொல்லவும் எங்களை இப்படிப் பாக்குறீங்க. இன்னைக்கு எல்லா டவுன்லயும் தெருவோரத் தள்ளுவண்டிக் கடைகள்ல ‘பீப்’னு சொல்லி, இதைத்தானே ‘சமத்துவமா’ எல்லா ஆளுங்களும் சாப்ட்டுட்டு இருக்காங்க?"னு சீண்டினார் சரவணன்.




ரெட்டிப்பாளையத்துக்கும் தப்பாட்டத்துக்கும் என்ன சம்பந்தம்? நான் பொறந்தது திருக்காட்டுப்பள்ளி பக்கத்துல ஒம்பத்து வேலி கிராமம். எங்க அப்பாதான் ஊரு வெட்டியான். நான் ஸ்கூலுக்கே போகலை. எட்டு - ஒம்பது வயசுலேருந்து எங்க அப்பா கூடவே கூட்டிட்டுப் போவார். அவருக்கு ஓய்வா இருக்கும்போது தப்பை எடுத்து அடிடான்னு சொல்வார். நான் எடுத்து அடிப்பேன். அப்பிடி கத்துகிட்டதுதான்." என்ன கதைவுடுறீங்களா? உங்களுக்கு குருநாதர்னு யாரும் இல்லியா?" எனக் கேட்டால், மீண்டும் கொட்டத் தொடங்குகிறார் ரெங்கராஜ்.



இந்த ஊருக்கே குருநாதர்னு ஒருத்தர் இருக்கார். அவர்தான் காமாட்சிபுரம் முருகேசன். இந்த ஊருக்கு வந்து எல்லாத்துக்கும் தப்படிக்கறது, பாட்டுப் படிக்கறதுனு கத்துக் கொடுத்தவர். ஏதோ தத்தக்கா பித்தக்கானு எல்லாம் தப்பு அடிச்சிட முடியாது; அடிச்சிடவும் கூடாது. இதுலயும் ஒரு வகையான நாதம் இருக்குங்க. அது தப்புக்கட்டை உருவாக்குற விதத்துல இருக்கு!" நம் ஆர்வத்தைத் தூண்டி விட்டார் ரெங்கராஜ்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjS10nMEfK90QBxXYUpoiBuI45BE0C8PZ5Vc0j8ca-34keg9OdaWeTY9uwDH2XlN7K-bW8X206E25Cj6hpfa22Ow5R4Liiz8kOV4mTFffFHEw1X3st6SzZ6kTS-7tb1YUDhtB4S58NB7Idl/s1600/100_2366.jpg


புளியங்கொட்டைப் பசையைத் தப்புக்கட்டையிலும் தோலிலும் தடவி ஒட்ட வைத்துக் கொண்டிருந்தார் ராஜேந்திரன். இதுக்கு வேம்புக்கட்டையும், எருமைக் கண்ணுக்குட்டி தோலும்தாங்க லாயக்கு. அதுவும் மூணு- நாலுவயசு கண்ணுக்குட்டி தோலா இருக்கணும். அதான் எளந்தோலு. அந்தத் தோலு தப்புல தான் நாதம் நல்லா இருக்கும். சும்மா... எடுத்து அடிச்சா வெண்கலம் மாதிரி கேக்கும்"- நம்மிடம் பேசிக் கொண்டே ‘தப்புக் கட்டை’ தயார் செய்து கொண்டிருந்தார்.



என்ன? வீட்டு உள்ளார நைஸா பார்க்குறீங்க... உங்களுக்கு காப்பித் தண்ணி வெச்சுக் குடுக்கக்கூட பொம்பளையாளு வீட்ல இல்லே. இன்னொரு வீட்ல கறிக் குழம்பு வாடை சூப்பராய் வந்திச்சே அது எப்படிங்கறீங்களா? அந்தாளு சூப்பராய் குழம்பு வைப்பான். எங்காளுக வீட்ல எல்லா பொம்பளைகளும் நூறு நாள் வேலைக்கு மாறி மாறிப் போய் வருவாங்க," என்கிறார் அவர்.




இந்த நாறப் பொழப்பு"னு பேச ஆரம்பித்தார் ஒருவர். இதுலேந்து எங்க புள்ளைங்களாவது விடுபடட்டும்னுதான் ஒவ்வொரு வீட்லயும் புள்ளைங்கள படிக்க வெச்சிட்டு வர்றோம். அதையும் மீறி சில வீடுகள்லேருந்து சில தத்துவாரி பயலுக எங்ககூட தப்படிக்க வந்துடுவாங்க. மாசி, பங்குனி, சித்திரை, வைகாசினு நாலு மாசம் எங்களுக்கு சீசன் காலம். கோயில் திருவிழா அது இதுன்னு எங்களைப் புடிக்க முடியாது. சீஸன் முடிஞ்சி வீட்ல வந்து படுத்தா எங்களை எழுப்ப யாராலும் முடியாது.




அப்புறம் என்ன? எந்த ஊர்ல எப்ப எழவு விழும்னு காத்துக் கிடப்போம். எழவு காரியம், கட்சிப் பேரணி, வி.ஐ.பி. வரவேற்பு எப்ப சேதி வரும்னு பார்த்துக்கிட்டே இருப்போம். அதான் எங்களுக்கு சைடு வருமானம். வெளியூரு எழவு காரியம்னு, பஸ்சுல ஏறப் போனா கண்டக்டரும் எங்களை ஏத்த மாட்டாருங்க. அதுக்குனு லோடு ஆட்டோவுல எங்க குழுவுல பத்து பேரு ஏறிப் போனா, நடு வழியில போலீஸ் தொல்லை. சில ஊர்கள்ல வம்புச் சண்டை, பெரிய கலவரமே ஆவுறதும் உண்டு" என்கிறார் ரெங்கராஜ்.



விழுப்புரம் - பாண்டி - இடையிலே ஒரு கிராமம். கோயில் திருவிழா. தலித் சமூகத்தவர் ஏற்பாடு. அதுல எங்க தப்பாட்டக் கச்சேரி. நைட்டு பத்து மணிக்கு ஆரம்பிச்சோம். மொதல் ஒரு மணி நேரமாய் அம்மன் மற்றும் சாமி பாடல்களாப் பாடிட்டிருந்தோம். பிரச்னை ஏதுமில்லை. ‘எங்க தலைவரைப் (திருமாவளவன்) பத்திப் பாட்டுக் கட்டுங்க’னு கூட்டத்துலேர்ந்து குரல்கள் வந்துச்சு. நாங்களும் உடனே, ‘ஏ... பஞ்ச பரம்பரை பாமர மக்களாய்... பட்ட கதை கேளுங்க... நாம பட்ட பாட்டைக் கேளுங்க... செருப்புப் போட்டா அடிச்சான்... சேரியில முள்ளைப் பதிச்சான்’னு நாலு வரிதான் பாடினோம். அவ்வளவுதான். எங்கேர்ந்து கல்லுக வந்திச்சனே தெரியலை. மேடையை நோக்கி அவ்வளவு கல்லுக. அடிதடி. அப்புறம் போலீஸ் வந்து, எங்க நிகழ்ச்சியை ரத்து பண்ணி அதுக்கப்புறம்தான் அமைதியாச்சு. நிகழ்ச்சியைக் கட் பண்ணிட்டு உயிர் பிழைச்சாப் போதும்னு நாங்க கிளம்பிட்டோம். இந்த மாதிரி சமயத்துல நாங்க பேசுன தொகை எங்களுக்குக் கிடைக்காது." என்கிறார் ரெங்கராஜ்.




ரெட்டிப்பாளையம் அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் தப்பாட்டக்காரர்கள், அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்களிலிருந்து தற்போதுதான் ஒருசில பிள்ளைகள் கல்லூரிப் படிப்பைத் தொட்டுள்ளனர். படித்து முடித்து அரசு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றால், தப்பாட்டக்காரர் குடும்பங்களின் வாழ்க்கைத் தரம், உயர்வு பெறும் என்கிற நம்பிக்கை அவர்களிடம் இருக்கிறது.

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0a/A_Sound_from_thappu-_Tamilnadu.ogv/mid-A_Sound_from_thappu-_Tamilnadu.ogv.jpg


தப்பாட்டக் கச்சேரிகளுக்கு அவர்கள் தங்களை அலங்கரித்துக் கிளம்பும் விதமே அலாதி. காலில் சலங்கை, இடுப்பிலே கச்சை, மார்பிலே பனியன், தலையிலே வண்ண ரிப்பன் என அட்டகாசமாக கிளம்புகிறார்கள். இருள் படர்ந்து வந்த வேளையில் அவர்கள் அன்று கிளம்பினர். பக்கத்து ஊரில் தப்பாட்டக் கச்சேரி. நாமும் உடன் சென்றிருந்தோம். உருண்டை மல ஓரத்துல... உருண்ட மல ஓரத்துல உளுந்து காயப் போட்டிருந்தேன்... அந்த உளுந்தைக் கூட்டி அள்ளும் முன்னே... நான் பொறந்த சண்டாளச் சீமையிலே... இன்னைக்கி உறுமி சத்தந்தான் கேட்டதென்ன?... கேட்டதென்ன?" காற்றில் மிதக்கிறது அந்தப் பாடல், அவர்களின் வாழ்க்கையைப் போலவே.
a
aa

ஜிங்க் சக் சில்பான்சியின் டைரிக்குறிப்பு கள்

நீயும் நானுமாய்
நடந்த இடங்களை
கடந்து செல்கிறேன்
நீயற்ற உன் நினைவோடு..........

- ரேவா
1.ஜெனரேஷன் கேப்னா என்ன?


 7 1/2 ஐ கூட்டும் எட்டாம் கிளாஸ் படிக்கும்  மாணவன் - உங்களுக்கும், எனக்கும் உள்ள தூரம் தான் மிஸ், ஹி ஹி மியாவ்


-------------------


2. ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம், எ கா தருக 


, மிஸ், ஈமுவால கெட்ட எடுபட்ட பயல்கள் லிஸ்ட் வேணா தரவா?


---------------------


3. பொண்ணுங்க வாயை மூடிட்டு இருந்ததாவும், ஆம்பளைங்க பக்கத்து வீட்டை எட்டிப்பார்க்காம இருந்ததாவும் நோ எஸ் டி டி  # எ கீ



------------------------



4. ஜெ - அடச்சே, ஜஸ்ட் மிஸ், ஈமு விளம்பரத்துல கேப்டன் நடிக்காம போய்ட்டாரே?



------------------------------

5. திமுக வின் டெசோ மாநாடு = டெ “ஷோ” மாநாடு ;((



-------------



இனிய காலை வணக்கம் நண்பர்களே....


6. திமுகவின் ஈழ ஆதரவு வேஷமும், பிரபல நடிகர்களின் ஈமு ஆதரவு கோஷமும் சுயநலத்தின் வெளிப்பாடே




---------------


7. ஜோதிகா டூ சூர்யா - நல்ல வேளை நீங்க தப்பிச்சீங்க, கிடைச்ச விளம்பரத்தை வளைச்சுப்போடு பாலிசி படி ஈமு AD  ல நடிச்சிருந்தா களி தான்



------------------


8. 9 தாரா -பசுபதிக்கு ஜோடியா நடிக்கமாட்டேன் # இந்துக்களின் தெய்வம் பசு,பத்தினிக்கு தெய்வம பதி.இந்துமதத்தையே அவமானபடுத்திட்டீங்களே்




----------------------


9. ஜட்ஜ் -ஈமு கோழியை நேர்ல பார்த்திருக்கீங்களா?அது எப்படி இருக்கும்?



 சரத் - மேக்கப் போடாத கலா மாஸ்டர் மாதிரி இருக்கும்


------------------------


10. கலைஞர்  மு க - கழக ஆட்சியிலே ஈமு கோழியால் கோடிக்கணக்கில் லாபம்.அம்மையார் ஆட்சியில் படு பயங்கர நட்டம# ராசி இல்லாத ஆட்சி்




-----------------------------
Photo: படித்ததில் பிடித்தது:
காலையில் நீங்கள் கண்விழிக்கும் போது ,உங்கள் கைகளில் புதிய புத்தகமாக 24 மணி நேரம் இருக்கிறது.அதை விரயமாக்காமல் ஒவ்வொரு பக்கமாய் ரசித்து புரட்டுங்கள்!
இனிய மாலை வணக்கம்




11. தோழியை நம்பினா ஜெவும்,ஈ மு கோழியை நம்புனா யாரும் உருப்பட முடியாது



-------------------------


12. டியர் மழை வருது மழை வருது குடை கொண்டு வா.



எங்கேயும் வெளில போக வேணாம்.குண்டா கொண்டா.தண்ணி பிடி


-----------------------

13. டேமேஜர் சார்.மழை வருது.பீல்டு ஒர்க் போக முடியாது.



ஓக்கே என்பீல்டு பைக்கை வாட்டர் சர்வீஸ் பண்ணனும்.மழைல நனைய விட்டு துடைங்க



------------------------------


14. உங்க ஊர்ல நல்ல பல் டாக்டர் யாரு?



 ராஜ்தான் நல்ல டாக்டர்.ரியாஸ் சொத்தை பல் டாக்டர்


-----------------------


15. யுவர் ஆனர் fair&;lovely போட்டு என் முகம் சிவப்பாகலை.



ஜட்ஜ் - அதான் கோபத்துல சிவந்திருக்கே


-----------------------------



Photo: மனிதன் தான்,அவனது குணங்களை அமைக்கும் சிற்பி,சூழ்நிலையை உருவாக்கும் ஓவியன்,விதியை நிர்ணயிக்கும் சிருஷ்டிகர்த்தா,அவனது எண்ணங்களின் தலைவன்!
இனிய காலை வணக்கம்!



16. ச்சே இன்னைக்குனு பார்த்துஆபீஸ்ல எல்லாரும் டார்க் கலர் டிரஸ் #மழை



-------------------------


17. எழுத்தாளர் வாமு கோமு தன் பேரை மாத்திக்கப்போறாராம் # ஈமு எதிரொலி


-------------------------

18. பல நாள் கலைஙர் ஒரு நாள் அகப்படுவார்


----------------


19. கிருஷ்ண ர் தெரியும.அது யார் ஜெயந்தி ? # கோகுலாஷ்டமி டவுட்ஸ்்



---------------------


20. மெயில் என்று தெரியாமல் ரயில் எனநினைத்து சில மயில்கள் ஏறிவிடுகின்றன



---------------------





21. சுட்டுப்போட்டாலும இனி கூட்டணி இல்லை -கேப்டன் # என்ன பிட்டுப்போட்டாலும் உங்களுக்கு கூட்டம் இனி இல்லை்


-----------------


22. ரஜினியோட ஹிட்டு தீ.மாதவனோட ஹிட்டு ரன்.அஜித்தோட அடுத்த ஹிட்டு தீரன்



------------------------

23. பசுபதியுடன் நடிக்க மாட்ட்டேன்-நயன்தாரா # மாமா சேதுபதி ஐ பி எஸ் ஓக்கேவா ஆங் - கேப்டன்


-----------------------

24. வாழ்க்கை ஒரு வட்டம் - சிம்பு நயன்தாரா பிரபுதேவா சிம்பு்


------------------------


25. ஆல் அபவுட் அன்னா கில்மாபடத்தை வீட்டுக்கு கொண்டு வரும்போது கவரில் அன்னா ஹசாரெ என எழுதி வைத்தால் நீயும் ஒரு கேப்மாரியே


--------------------





26. கில்மா குரூப் பேஸ்புக்கில் படிக்கபோனால் அது க்ரூப் ஸ்டடி ஆகிடுமா?


-------------------


27. ஆர்த்திராவ் - இன்ஸ்பெக்டர்.என் கற்பை காணோம்.



மங்குனி இன்ஸ்பெக்டர் - வீடு பூரா நல்லா தேடிப்பார்த்து்ட்டியாமா?


----------------------------------------------------------------


28. மண்ணுக்கு மண் வேறு ருசி.வேறு வாசம் # மழை


----------------


29. பேஸ்புக்ல பிரண்ட்ஷிப் ரிக்வஸ்ட் அனுப்பற மாதிரி லவ்வர் ரிக்வஸ்ட் ஆப்ஷன் இருக்கா?


--------------------------


30. மனைவியிடம் இரவு 8 மணிக்குப்பின் சண்டை போடும் கணவன் தொலைநோக்குபார்வை அற்றவன் # ஜிங்க் சக் சில்பான்சியின் டைரிக்குறிப்பு




------------------------



Lunch...............

Saturday, August 11, 2012

அப்பா அன்புள்ள அப்பா - சுஜாதா - சிறுகதை

செய்தி வந்த உடனே பஸ் பிடித்து சேலம் போய்ப் பார்ததால் அப்பா படுக்கையில் உட்கார்ந்திருந்தார்.




“எங்கே வந்தே” என்றார்.



“உனக்கு உடம்பு சரியில்லைன்னு” என்று மழுப்பினேன்.



“நேற்று வரை சரியில்லாமல்தான் இருந்தது. டாக்டர்கள் என்னமோ பண்ணி உட்கார வைத்து விட்டார்கள்.சாப்ட்டியா?”என்றார்” எனக்கு என்ன வாங்கிண்டு வந்தே?”



“என்னப்பா வேணும் உனக்கு”



“உப்பு பிஸ்கட். கொஞ்சம் பாதாம் அல்வா. அப்பறம் ஒரு சட்டை வாங்கிக் கொடுத்து விட்டுப் போ-”



சட்டையைப் போட்டு விட்டதும் “எப்படி இருக்கேன்” என்றார்.



பல்லில்லாத சிரிப்பில் சின்னக் குழந்தை போலத்தான் இருந்தார்.



நர்ஸ் வந்து “தாத்தா உங்க மகன் கதைகள் எல்லாம் படிச்சேன். ரொம்பஇன்டெலிஜெண்ட்” என்றதற்கு “நான் அவனை விட இன்டெலிஜெண்ட்” என்றார்.




பேப்பர் பேனா எடுத்து வரச்சொல்லி “உன் முன்னோர் யார் என்று அபபுறம் தெரியாமல் போய் விடும்” என்று வம்சாவழியைச் சொல்லி எழுதிக் கொள்ளச் செய்தார். ஞாபகம் தௌவாக இருந்தது. முதன் முதன் முதல் திருவாரூரில் நுறு ரூபாய் சம்பளத்தில் பதவியேற்ற தேதி சொன்னார். கணக்கம் பாளையம் பின்கோடு நம்பர் சொன்னார். “பழைய விஷயங்கள் எல்லாம் ஞாபகம் இருக்கிறது. சமீப ஞாபகம்தான் தவறிப்போகிறது. நீ வந்தால்கேட்கவேண்டும் என்று ஏதோ ஒன்று. என்ன என்று ஞாபகம் இல்லை. ஞாபகம் வந்ததும் ஒரு காகிதத்தில் குறித்து வைக்கிறேன்”




“அப்பா உனக்கு எத்தனை பென்ஷன் வருகிறது தெரியுமோ?”




“தெரியும் .ஆனால் பணத்தில் சுவாரஸ்யம் போயவிட்டது. எத்தனை இருந்தால் என்ன? நீங்கள் எல்லாம் என்னைக் காப்பாற்றாமலா போவீர்கள்?”




“ஏதாவது படித்துக்க காட்டட்டுமா அப்பா?”




“வேணட்ம். நிறையப் படித்தாயிற்று. இப்போது அதெல்லாம் எதற்கு என்று ஒரு அலுப்பு வந்து விட்டது. நீ போ உனக்கு எத்தனையோ சோலி இருக்கும். அமமாவின் வருஷாப்திகம் ஏப்ரல் ஒண்ணாம் தேதி வருகிறது. அப்போது வநதால் போதும். நான் படுத்துக் கொள்ளட்டுமா? களைப்பாக இருக்கிறது. காலையில் போவதற்குள் ஒரு முறை சொல்லிவிட்டுப் போ” என்றார்.




பெங்களூர் திரும்பிவந்து ஒரு வாரத்துககுள் மறுபடி சீரியஸ் என்னனனனறு தந்தி வந்தது.




என்.எஸ் பஸ்ஸில்” என்ன ஸார் அடிக்கடி சேலம் வர்றிங்க?”




“எங்கப்பா சீரியஸா இருக்கார்ப்பா”




“ஓ அப்டிங்களா? டேய் அந்த மல்லி மூட்டையை பாத்து இறக்குங்கடா”



ஸ்பெஷல் வார்டில் அவரைப் பார்த்து திடுக்கிட்டேன். படுக்கையில் கண்மூடிப் படுத்திருந்த முகத்தில் தாடி. காலில் பட்டர்ஃப்ளை ஊசி போட்டு சொட் சொட்டெனறு ஐவி க்ளுக்கோஸ் உள்ளே போய்க்கொண்டிருந்தது. சுவாச மூக்கில் ஆக்ஸிஜனும் ஆஸ்பத்திரி வாசைனயும் வயிற்றைக் கவ்வியது.




கண்ணைக் கொட்டிக்கொட்டிக் கண்ணீரை அடக்கிக்கொண்டு “அப்பா அப்பா” என்கிறேன்.

கண்ணைத் திறக்கிறார் பேசவில்லை. “நான்தான் வந்திருக்கிறேன்” என்று கையைப் பற்றுகிறேன்.




பேசும் விருப்பம் உதடுகளில் தவிக்கிறது.கையை மெல்லத் துக்கி முக்கில் இருக்கும் குழாய்களை அகற்றப் பார்க்கிறார். தோற்கிறார்.




“நீ போனப்புறம் ஒரு நாளைக்கு சரியா இருந்தார் அதுக்கப்புறம் இப்படி”



படுக்கையில் பூஞ்சையாக நெற்றியைச் சுருக்கிகொண்டிருக்கும் அபபாவைப் பார்க்கிறேன். இவரா ஆயிரம் மைல் தனியாகக் கார் ஓட்டிக்கெண்டு சென்றவர்? இவரா மின் வாரியத்தை தன் டிஸிப்ளினால் கலக்கியவர் “நல்ல ஆபிஸர்தான் ஆனா கொஞ்சம் முன் கோபிங்க”




இவரா அணைக் கட்டின் பாரப்பெட் சுவரின் மேல் ஏறிக்கொண்டு விளிம்பில் ஒரு ஃபர்லாங் நடந்தவர்?”என் வில் பவரை டெஸ்ட் பண்ணிப் பார்ககணும் போலிருந்தது” இன்ஜினியரிங் படிப்பையும் இளம் மனைவியையும் விட்டு விட்டு காஙகிரசில் சேருகிறேன் என்று காணமால் போனவர் இவரா?”ஐ வாஸ் கிரேஸி தட் டைம்”.




மேல் நர்ஸ் வந்து அவரை உருட்டி முதுகெல்லாம் யுடிகொலோனும் பேபி பவுடரும் போடுகிறார். “பெட்ஸோர் வந்துரும் பாருங்க”




ஸ்டாஃப் வந்து பக்கத்துககு ஒரு ஊசி கொடுத்து “நீங்கதான் ரைட்டர்ங்களா?” என்கிறார். நான் ஆஸபத்திரியைத் திகைத்துப் போய்ப் பார்க்கிறேன்.




ஆஸபத்திரியிலிருந்து தப்பிப்பதைப் பற்றி ஸர்வைவல் புத்தகங்கள் ஆங்கிலத்தில் எழுதீயிருக் கிறார்கள். டாக்டர்கள் எல்லோரும் நல்லவர்கள். ஆனால் ஸ்பெஷலிஸ்டுகள்.



“ஒரு ஸிடி ஸ்கான் எடுத்துரலாமே டாக்?”




“முழுங்கறதுக்கு ரொம்ப கஷ்டப்படறார், ஒரு பேரியம் மீல் கொடுத்துப் பார்த்துரலாம். அப்றம் ஒரு ஆன்ஜியோ”



“ஃப்ளுயிட் ரொம்ப கலெகட் ஆயிருச்சு. புட் ஹிம் ஆன் எ ஹெவி டோஸ் ஆஃப் லாஸிக்ஸ்” எல்லா டாக்டர்களுமே திறமைசாலிகள்தான், நல்ல நோக்கமுள்ளவர்கள் தான், ஆனால் ராத்திரி முழுக்க அவர் அருகில் கீழே படுத்திருக்கிறேன். துக்கமில்லை. கொஞ்ச நேரம் வராந்தாவில் உட்கார்ந்து காற்று வாங்குகிறேன். கான்க்ரீட் மேடையில் வேப்ப மரம் முளைத்திருக்கிறது. காகங்கள் ஸோடியம் விளக்குகளைச் சூரியன் என்று குழம்பிப்போய் இரை தேடச் செல்கின்றன. இங்கிருந்து அப்பா தெரிகிறார். அசையாமல் படுத்திருக்கிறார். முகத்தில் வேதனை எழுதியிருக்கிறது. கூப்பிடுகிறாரா? கிட்டப்போய்க் கேட்கிறேன்.




“என்னப்பா?”



“போதும்ப்பா என்னை விட்டுருப்பா” என்று மெல்லச் சொல்கிறார்.வில்லியம் ஹண்ட்டரின் கட்டுரை ஞாபகம் வருகிறது. If I had strength enough to hold a pen. I would write how easy and pleasant it is to die.




பொய்!




ஆனால் இவர் அவஸ்தைப் பட்டால் எனக்கு அபத்தமாகத்தான் படுகிறது. இவர் செய்த பாவம் என்ன? ப்ராவிடணட் பண்டில் கடன் வாங்கி பையன்களைப் படிக்கவைத்ததா? அவர்களுக்கு வரதட்சணை வாங்காமல் கல்யாணம் செய்துவைத்ததா? ஏழை உறவினர்களுக்கும் ஆசிரியருக்கும் மாசாமாசம் பென்ஷனிலிருந்து பணம் அனுப்பியதா? குடும்ப ஒற்றுமைக்காகப் பாடுபட்டதா? பிரபநதத்தில் ஒரு வரி விடாமல் மனப்பாடமாக அறிந்ததா?




காலை ஐந்து மணிக்கும்பிக்கத்தில் இருக்கும் சர்ச் எழுந்து ஒலி பெருக்கி மூலம் ஏசுநாதரைப் பேசுகிறது. அப்பாவுக்கு இது கேட்குமா? ரேடியோ சிலோனில் சுவிசேஷத்தை தவறாத ஆர்வததுடன் கேட்கும் தீவிர வைஷ்ணவர் “பைபிளில் பல இடஙகளில் நம்ம சரணாகதி தத்துவம் சொல்லியிருக்கு தெரியுமோ? சில இடஙகளில் ஆழ்வார் பாடல்க ளுக்கும் அதற்கும் வித்தியாசமே தெரிவதில்லை” பங்களூரில் குரான் முழுவதையும் படிக்கச் சொல்லிக் கேட்டது நினைவுக்கு வருகிறது.




ஆஸபத்திரி புது தினத்துக்குத் தயாராகிறது.மணி அடித்துவிட்டு சில்லரை கொடுக்காதவர்களை யெல்லாம் விரட்டுகிறார்கள். டாக்டர் ரவுண்ட்ஸ் வருகிறார். “இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருப்பார்னு சொல்லமுடியாது.இன்னிக்கு கொஞ்சம் இம்ப்ருவ்மெண்ட் தெரிகிறது. கன்னத்ததைத் தட்டி “நாக்கை நீட்டுங்கோ” மெல்ல நாக்கை நீட்டுகிறார்.




“பேர் சொல்லுங்கோ”



“சீனிவாசரா..”



“அஃபேஸியா அத்தரோ சிலிரோஸிஸ் .ஹி இஸ் மச் பெட்டர நௌ. டோண்ட் ஒர்ரி”



புதுசாக பல்மனரி இடீமா உன்று சேர்ந்து கொண்டு அவரை வீழ்த்தியது.



சென்ற மாதம் இருபத்திரண்டாம் தேதி பிற்பகல் மூன்று மணிக்கு இறந்து போனார் உடன் அப்போது இருந்த சித்தி “கண் வழியா உசிர் போச்சு “என்றாள். பம்பாயிலிருந்து தம்பி வரக் காத்திருந்து மூன்று பிள்ளைகளும் அவரைச் சுற்றி நின்று கொண்டு அவர் மார்பைக் கண்ணீரால் நனைத்தோம்..வீட்டுக்குக் கொண்டு வந்ததும் வாசலில் நெருப்புக் கொண்டுவைத்தார்கள்.

நண்பர்கள் வந்தார்கள். ஆஸபத்திரி வண்டியில் எடுத்துக் கொண்டு போய் “வீட்டில் ஒருவரில்லை வெட்டவெளியாச்சுதடி காட்டில் எரித்த நிலா கனவாச்சே கண்டதெல்லாம்” என்று முழுமையாக எரித்தோம்.



காலை எலும்புகளைப் பொறுக்கிச் சென்று பவானி போய்க் கரைத்தோம்.இந்து பேப்பரில் இன்ஸர்ஷன் கொடுத்தோம். “மாலை மலர்ல செய்தி வந்திருந்ததே பார்த்திங்களோ?”



உறவுக் காரர்கள் வந்தார்கள். சினிமாவுக்குப் போனார்கள். வாத்தியார் கருட புராணத்தின் பிரதியை என்னிடம் கொடுத்தார். பிராமண போஜனம் செய்விக்காதவர்களை யெல்லாம் சிரித்துக்கொணடே கொடுமைப் படுத்திக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு நதியைக் கடப்பதற்கு கோதானம் இல்லையென்றால் ஒரு தேங்காய் கிஞசித்து ஹிரண்யம்! அப்பா மரணத்தைப் பற்றி ஒரு முறை சொன்னது ஞாபகம் வருகிறது “அது ஒரு முற்றுப் பள்ளி.வி ஸீஸ் டு எக்ஸிஸ்ட்.எபிக்யுரஸ் சொன்னதை மறுபடி படி”




“Death is nothing to us since so long as we exist death is not with us but when death comes. we do not exist”.




ஒன்பதாம் நாள் பத்தாம் நாள் பதினோராம் நாள்.. பிரேதத்தின் தாகமும் தாபமும் திருவதற்காக அதன் ரெப்ரசெண்டேடிவ்வாக வந்த “ஒத்தன்” என்னைப்பார்த்து சிரித்து “நீங்க எழுதின ரத்தத்தின் நிறம் சிவப்பு குங்குமத்தில நன்னா இருக்கு ஸார் அடுத்ததடவை ஒரு ஸோஷல் தீமா எடுததுண்டு எழுதுங்களேன்”

சேலம் கடைத் தெருவில் பத்தாறு வேஷ்டிகளுக்கும சொம்புகளுக்கும் அலைந்தோம். ங்கத்திலிருந்து ப்ரபந்த கோஷ்டி வந்து எங்கள் தலையில் பரிவட்டம் கட்டி நாலாயிரமும் ராமானுச நுத்தந்தாதியும சரம ஸ்லோகமும் சொல்லிவிட்டு”எனக்கினி வருத்தமில்லை” இரண்டு மணி பஸ் பிடித்துப் போனார்கள்.



“அவ்வளவு தாம்பா பிள்ளைகள்ளாம் சேர்ந்துண்டு அவரை பரமபதத்தில ஆசார்யன் திருவடி சேர்த்துட்டேள். இனி அந்த ஆத்மாவுக்கு ஒரு குறையும் இல்லை! மாசிய சோதம்பத்தை மட்டும் ஒழுங்கா பண்ணிடுஙகோ”.




சுபஸ்வீகாரம். எல்லோரும் பந்தி பந்தியாக சாப்பிடுகிறோம். எட்டணா தட்சணைக்காக வாசல் திண்ணையில் ஒன்பதுபேர் காலையிலிருந்து காத்திருக்கிறார்கள். காஷவுல்ட்டியில் எனக்கு ட்ரங்க் டெலிபோன் வருகிறது.தொடர் கதைக்கு டைட்டில் கேட்டு. பங்களுர் திரும்பி வருவதற்கு முன் அப்பாவின் அந்த கடைசிக் குறிப்பைப் பார்க்கிறேன். Ask Rangarajan about Bionics ஓவர்சீஸ் பாங்கில் மிசையில்லாத என்னைப் பார்தது சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்கிறார்கள். அப்பாவின் ‘எய்தர் ஆர் சர்வைவர்’ அக்கவுண்டில் அவர் தகனத்துககு ஆன செலவு முழுவதும் இருக்கிறது.

நன்றி - சுஜாதா , உயிர் மெய், சிறுகதைகள்

ஜெவை நக்கல் அடித்த கேப்டன் - தஞ்சை விழாவில் பேச்சு

http://www.hindu.com/2006/09/13/images/2006091317580601.jpg

தஞ்சை: முதலமைச்சர் ஜெயலலிதா செல்போன் மாதிரி... அவங்க, எப்பவுமே
தொடர்பு எல்லைக்கு அப்பால்லதான் இருப்பாங்க” என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கிண்டலாக கூறினார்.







தஞ்சையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியது:



“ நான் கோபக்காரன்னு சொல்றாங்க, சட்டசபையில் என் கட்சியை பத்தி தப்பா பேசினதை எதிர்த்து கேட்டா கோபக்காரன் னு சொல்றதா? இதே நான் அன்னைக்கு அமைதியா இருந்திருந்தா மத்த கட்சிக்காரங்கள்லாம் என்னை தப்பா பேசியிருப்பாங்க, நாய் மனுசனைக் கடிச்சா நியூஸ் இல்ல, மனுசன் நாயை கடிச்சா அது நியூஸ், அதுமாதிரிதான் இதுவும்.



நான் சின்ன வயசுல பார்த்த தஞ்சாவூர் இப்ப இல்லை, எங்கப் பார்த்தாலும் வயலும் வாய்க்காலுமா இருக்கும்.அப்படிப்பட்ட தஞ்சாவூர் இன்னைக்கு காய்ஞ்சுபோய் கிடக்கு. காரணம் இந்த அரசு. 12 மணி நேரம் மின்சாரம்னு சொன்னாங்க, மின்சாரம் வருது, ஆனா ஃபுல்லா லோ வோல்டேஜ், மோட்டார்களெல்லாம் ‘டப்’ ‘டுப்’னு வெடிக்குது.



ஜூன் ல தண்ணி வந்துடும், ஜூலையில் தண்ணி வந்துடும்னு சொன்னாங்க, ஜூன் போய்,ஜூலைப் போய் ஆகஸ்டும் வந்துடுச்சு, ஆனால் இன்னும் தண்ணி வந்தபாடில்லை. எல்லாத்துக்கும் இவங்களோட (முதல்வர்) வீண் கவுரவம், இவங்க மட்டும் கவுரம் பார்க்காமல் கேரள, கர்நாடக முதல்வர்களை சந்திச்சு பேசியிருந்தாங்கன்னா இவ்வளவு பிரச்னைகள் வந்திருக்காது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5a6HI2NI-K-UkMIzSzH-N8Ohxfy9PVhdTtGa8a0a4ZPmKe0GwPAC-6q4_seAGJAN5bCSJKKi_4IUrmdzADew9Fxdo8NqzhPL_DftYWiKJUFi-ZQfDuAVbD9r1m03xAVK-RVWT8sbNkH_d/s640/9-11-11a.jpg




மாடு ‘மே’ னு கத்தும், சேவல் ‘கொக்கரக்கோ’ னு கத்தும், ஆனால் அந்த அம்மா பக்கத்துல இருக்குற காக்கா கூட்டங்கள்லாம் ‘கா கா’ னு கத்துறதுக்கு பதிலா மாத்தி ‘அம்மா’ ‘அம்மா’ னு கத்துறாங்க.



என் மக்களை நீங்க நல்லபடியாக வாழவைங்க, நானும் உங்ககூட சேர்ந்துகிட்ட ‘ஜால்ரா’ அடிக்கிறேன்.என்கிட்ட ஒரு அதிமுககாரன் ஒருத்தன் சொன்னான், “அம்மா கொடநாடுபோயிருக்காங்க” னு,அதுக்கு நான் கேட்டேன், “அவங்க போயஸ் கார்டன்ல இருந்தா என்ன,கொடநாட்டுல இருந்தா என்ன? இப்ப உன்னால போய் பார்க்கமுடியுமா?”னு கேட்டேன், செல்ஃபோன் மாதிரி அவங்க, எப்பவுமே தொடர்பு எல்லைக்கு அப்பால்லதான் இருப்பாங்க.


ஓராண்டு சாதனைன்னு சொல்றாங்களே, என்ன சாதனை,எங்க பார்த்தாலும் ஊழல், லஞ்சம், பேங்க்ல லோன் கேட்டு போறவங்ககிட்ட ‘அ.தி.மு.க உறுப்பினர் அட்டை வைச்சிருக்கியா னு கேட்குறான்’.இப்படியெல்லாம் கேட்க உங்களுக்கு வெட்கமாயில்லை.175 குவாரிகள்ல முறைகேடுகள் நடந்திருக்கு. ஆனால் அது சம்பந்தப்பட்ட அமைச்சர் போய் அதையெல்லாம் இன்னும் பார்க்கலை.ஏன் இன்னும் விசாரிச்சு வெள்ளை அறிக்கை வெளியிடலை.




இவங்களுக்கும் அந்த கூட்டத்திற்கும் தொடர்பு இருக்கு, அதனாலதான் கண்டுக்காமல் இருக்காங்க.இவங்க மக்கள் மேல அக்கறைப்படுறதேயில்லை,நாங்க ஏதாவது நல்லது செஞ்சோம்னா “விஜயகாந்த் மேல கேஸ் போடு”ன்னு சொல்றது, காலரா பத்தி ஸ்டாலின் பேசுனார்னா, அவர் மேல வழக்கு, கலைஞர் மேல வழக்கு, முரசொலி பத்திரிக்கை மேல வழக்கு,அப்படி பார்க்கும்போது ஜெயலலிதாவுக்கு இந்த வாரம் ‘வழக்கு வாரம்’.



நான் எந்த வழக்குகளுக்கும் பயப்படமாட்டேன்,நான் பழைய சோறு,வெங்காயம் சாப்பிட்டு வளர்ந்தவன்,வாழ்க்கை முழுக்க எதிர்ப்புகளை பார்த்தவன்,இந்த பயமுறுத்தல்களுக்கெல்லாம் நான் பயந்திடமாட்டேன்.




நான் 2005 ல் "லஞ்சம்,ஊழலை ஒழிப்பேன்" னு சொன்னேன், அப்ப “இதெல்லாம் ஒரு கொள்கையா? “ னு சொன்னாங்க, ஆனால் இன்னைக்கு நாடே ஊழலை எதிர்த்து பத்தி எறிஞ்சுக்கிட்டுருக்கு.
http://www.envazhi.com/wp-content/uploads/2012/02/vijayakanth_jayalalitha_59.jpg



நான் அந்த அம்மாவோட கூட்டணி வைச்சிருந்தப்பகூட நான் அவங்களை பார்த்ததும்,இந்த அமைச்சர்கள் மாதிரி குனிஞ்சு தரையை கூட்டலை, நீங்க சொல்லுங்க மக்களே, உங்களுக்கு ஒரு கி.மீ தூரம் வரைக்கும்கூட நான் உருண்டுக்கிட்டே வர்றேன், ஆனால் அவங்ககிட்ட நான் பம்ம மாட்டேன்.



ஒரு குருவும்,நாலைந்து சீடர்களும் இருந்தாங்க,அப்போ அந்த குரு,அந்த சீடர்கள்கிட்ட ஆளுக்கொரு மாம்பழத்தை கொடுத்து,“இதை யாரும் பார்க்காத இடத்துல வைச்சு சாப்பிடுங்க”னு சொன்னாராம்.எல்லாரும் ஒரு ஒரு இடத்துல ஒளிஞ்சு நின்னு சாப்பிட்டாங்களாம். ஆனால் ஒரே ஒரு சீடன் மட்டும் அந்த பழத்தை சாப்பிட போகாமலே நின்னுக்கிட்டுருந்திருக்கான், அதைப் பார்த்த குரு, “ஏன் நீ அந்த வீட்டுக்குளே போய் ஒளிஞ்சு நின்னு சாபிட வேண்டியதுதானே, அங்க யாரும் பார்க்காமாட்டாங்க” னு சொன்னாராம்.





அதுக்கு அந்த சீடனோ, “அங்க யாரும் பார்க்கமாட்டாங்கன்னு சொல்றீங்களே? ஆனால் மேல இருந்துஒருத்தன் நம்மளையெல்லாம் பார்த்துக்கிட்டுருக்கானே, என்ன பண்றது?”னு கேட்டானாம்..அதுமாதிரிதான் இந்த அதிகாரிகளும் காவல்துறையினரும்யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சுக்கிட்டு நடந்துகிட்டுருக்காங்க, உங்க திமிரையெல்லாம் எங்ககிட்ட காட்டாதீங்க, தேமுதிக தொண்டர்களை உங்களால பிரிக்க முடியாது, ஏன்னா எங்க பேஸ்மெண்ட் ரொம்ப ஸ்ட்ராங்கு”என்றார் விஜயகாந்த்


http://1.bp.blogspot.com/-yVusvZPxk1k/T9tBNAxUMAI/AAAAAAAABmk/2Kfwnn61kas/s1600/vijayakanth_20110307.jpg
நன்றி - விகடன்

PUTHIYA MUKHAM -ப்ரியாமணியின் மலையாள சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFr7q5ClhKpx6Vzlt71bIfQADoeU3_pMPBWEEIG_ORm2xRdujKvO5h8sr67qsfBiu_nXu-wRmh_Zq8kWovmu6dsG7HCtED8DypObqKmQKKkIvxNymDEQrxI9Kmy0CmL3M1MGSnpDEec_Y/s400/3645720933_c10007c0e4.jpg

கேரளாவின்  சூப்பர் ஸ்டார்ல 6 வது இடத்தில் இருக்கும் பிருத்விராஜ் நம்ம ஊர் கனா கண்டேன் ஹீரோ 2009 ல நடிச்சு 130 நாட்கள் ஓடி 15 கோடி கலெக்‌ஷன் ஆகி அந்த ஆண்டின் பெஸ்ட் மசாலா என்ற பட்டம் பெற்ற படம்.. ஆல்ரெடி நம்ம தமிழ்ல ரிலீஸ் ஆன சுரேஷ் மேனன் - ரேவதி நடித்த புதிய முகத்துக்கும், இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... நம்மாளுங்க இதை தமிழ்ல தில் தில் மனதில் அப்டினு டப் பண்ணி இருக்காங்க. 


ஹீரோ பிராமணர்..  ரொம்ப சாஃப்ட் டைப்..  காலேஜ்ல படிச்சுக்கிட்டே பார்ட் டைம்ல மிருதங்கம் கத்துத்தர்றார். இவர் தன் ஃபேமிலி ஃபிரண்ட் வீட்டு பொண்ணை லவ் பண்றார். 2 சைடிலும் ஓக்கே.. 

 வில்லன் அதே காலேஜ்ல  சீனியர் ஸ்டூடண்ட்.. அவங்கப்பா ஊர்ல பெரிய கேடி. அவருக்கு சப்போர்ட்டா ஒரு போலீஸ் ஆபீசர். அந்த ஆபீசருக்கு ஒரு பொண்ணு..  அதுதான் பிரியாமணி.. பிரியாமணியை  வில்லன் லவ்வி 2 குடும்பத்துலயும் பேசி 4 வருஷம் கழிச்சு படிப்பு முடிஞ்ச பின் மேரேஜ்னு பேசியாச்சு.. பிரியாமணிக்கு வில்லன் மேல லவ் எல்லாம் இல்லை, ஆனா வீட்ல ஓக்கே சொன்னதால்  கடனுக்கு ஓக்கே சொல்றார்..


http://cinespot.net/gallery/d/25443-1/Puthiya+Mukham+Malayalam+Movie+_10_.JPG


வில்லன் ஹீரோயினை டேட்டிங்க் கூப்பிடறார்.. அவ போகலை. 4 வருஷம் கழிச்சுத்தான் எல்லாம்னு சொல்லிடறா.. ஆனா ஹீரோ கூட பைக்ல சுத்துறா.. யாராவது இதை ஜீரணீச்சுக்குவாங்களா? அன்னா ஹசாராவே அரசியல்வாதி ஆகற கால கட்டம் இது.. உடனே வில்லன் செம காண்ட் ஆகி அண்ணன் அழகிரி மாதிரி ஆள்படை பலத்தோட ஹீரோவை போட்டு நொங்கு நொங்குனு நொங்கிடறார்.. 


 சேது விக்ரம் மாதிரி ஹீரோ மனநலக்காப்பகத்துல ட்ரீட்மெண்ட் எடுத்து வர்றார்..  ஆல்ரெடி நிச்சயம் செஞ்ச தன் லவ்வர் கம் ஃபேமிலி ஃபிரண்ட் வீட்ல மேரேஜை கேன்சல் பண்ணீடறாங்க.. மாப்ளை மெண்ட்டல்னு அதுக்கு காரணம் சொல்றாங்க.. உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெடு என்ற தமிழனின் உயர்ந்த கொள்கைப்படி ஹீரோ வில்லனுக்கு நிச்சயம் ஆன பிரியாமணியை  வில்லன் கண் முன்னால கையை பிடிச்சு ( நல்ல வேளை கையை பிடிச்சாரு ) சவால் விடறார்.. என் ஆளை மேரேஜ் பண்ணிக்க முடியாதபடி நீ எப்படி பழி வாங்கினியோ அதே மாதிரி உன் ஆளை நீ மேரேஜ் பண்ணிக்க முடியாதபடி நான் பழி வாங்கறேன்.. 



 காலேஜ் மொத்தமும் பார்த்துட்டு இருக்கு.. ஹீரோயின் கெக்கே பிக்கேன்னு சிரிக்குது.. எவனா இருந்தா எனக்கென்ன? எவனாவது தாலி கட்னா சரிங்கறது அவங்க பாலிஸி போல.. 

 இந்த கேவலமான சவால்ல ஹீரோ எப்படி ஜெயிக்கிறார்ங்கறது இந்த டப்பா படத்தோட கதை.. இந்தப்படம் அங்கே ஹிட் ஆகி இருக்குன்னா அங்கே எந்த அளவு கதைப்பஞ்சம் இருந்திருக்கனும்?



http://www.zonkerala.com/movies/gallery/puthiya-mukham/meera-nandan-and-prithviraj-49.jpg

கல்லூரி வாசல் படத்தை லைட்டா உல்டா பண்ணி இருக்காங்க.. அவ்ளவ் தான்..



ஹீரோ பிருத்விராஜ் மிருதங்க சக்ரவர்த்தி சிவாஜி ரேஞ்ச்க்கு பில்டப் கொடுத்திருக்காங்க..  அவர் படத்துல 2 சீன்ல மட்டும் தான் அதை வாசிக்கற மாதிரி பாவ்லா காட்றார்..  மைதா மாவு என்று வில்லன் அவரை கிண்டல் செய்வது சரி  என்றே தோணுது.. கனா கண்டேன் படத்தில்  கலக்கலான வில்லனாக பட்டாசு கிளப்பியவரா இப்படி? சோ சேடு././ இடைவேளை வரும்போது அவர் திடீர் பாட்ஷா ஆகி 45 பேரை ஜஸ்ட் லைக் தட் தூக்கி வீசி துவம்சம் செய்வதெல்லாம் ஓவர்..


ஹீரோயின்  2 பேரு பிரியாமணி மீரா நந்தன்.. பிரியாமணி படம் பூரா பொட்டே வைக்காம என்னமோ இலவசமா ரேஷன் கடைல அரிசி போடறப்போ பணியாள் ஒரு அலட்சியம் காட்டுவானே அப்படி காமா சோமான்னு வந்துட்டுப்போறாங்க.. போனா போகுதுன்னு ஒரு டூயட் இருக்கு.. சொல்லிக்கற மாதிரி ஜொள்ளிக்கற மாதிரியோ எதுவும் இல்லை..


 மீரா நந்தன்  மொத்தமே 13 காட்சிகளில் தான் வர்றார்.. வர்ற சீன்கள் எல்லாம் ஆம்பளையையே  பார்க்காத ஆள் மாதிரி ஹீரோ மேல விழுந்து பாய்கிறார்.. ம்ஹூம்.. கேரக்டரைசேஷன் சரி இல்லை..


அன்பு பட ஹீரோதான் இதுல வில்லன்.. வந்தவரை ஓக்கே..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtqwAElKp0Na5i99FSBsz8FhUFeb7IBK9w_BuqFD_EDNvkffpQDVfi97L1Hb_pvB4R1lUaTR2QT3q6oj6tQA172h5nQP7XV4fhC0Tcv2KpOAxRO6ji6qBo7GW3-rFeuiIrfXjucc8kQTA/s1600/priyamani_hot_saree_stills_pics_01.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்



1.  உன் தம்பி காலேஜ்ல இருந்த நாளை விட லாக்கப்ல இருந்த நாள் தான் அதிகம்



2. டீக்கடையில் - ஹாய் கேர்ள்ஸ்.. உங்களுக்கு பால் வந்தாச்சா?


 நோ.. நாங்க டீ சொல்லி இருக்கோம்.. ( அடங்கோ)



3. அந்தப்பொண்ணுக்கு நான் தான் லோக்கல் கார்டியன் மாதிரி..



நீ லோக்கல்னு  அவளுக்கு தெரியுமா?



4.  நீங்க மிருதங்கம் வாசிக்கறதை நான் நேர்ல பார்க்கனும்./. ( நல்ல வேளை, ஹீரோ அதுக்கு பதிலுக்கு நீ நாதஸ்வரம் வாசிச்சு நான் பார்க்கனும்னு சொல்லலை.. அடேய் அடேய் )


5. காலேஜ் பொண்ணுங்க எல்லாருக்கும் உங்க மேல தான் கண்ணு.. கண்ணடி பட்டா உடம்பு தாங்காது..



6. இந்த வீட்டுல மேரேஜ் பண்ணிக்கப்போறது யாரு?



எங்க 2 பேருக்கும் ஆகிடுச்சு.. மிச்சம் இருக்கறது எங்க பொண்ணு நீ தான்..


 அப்புறம் ஏன் என்னைக்கேட்காம இந்த முடிவு எடுக்கறீங்க?



7. தோக்கறது சுருண்டு விழ அல்ல, நிமிர்ந்து எழ..


8. நம்ம 2 பேர்ல யாரோ ஒருத்தர் தான் உயிரோட இருப்பாங்க.. அது நிச்சயம் நீயா இருக்காது.. ( பஞ்ச் டயலாக்காம்.. )



9. மண்ணையும், பொண்ணையும் வலுக்கட்டாயமா  வாங்கக்கூடாது. விருப்பப்பட்டு சந்தோஷமா வரனும்../



10. தேவை இல்லாத விஷயங்கள் மனசுக்குள்ளே  கஷ்டப்படுத்தும்.. அதனாலதான் உன் கிட்டே அந்த மேட்டரை நாங்க சொல்லலை..


http://moonramkonam.com/now/wp-content/uploads/2012/06/Priyamani-Hot-pics-19.jpg



 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. ஹீரோயின் நாய் சேகரோட பொண்ணு போல.. என் நினைவு உனக்கு எப்போதும் இருக்கட்டும்னு ஹீரோ கையை பிடிச்சு நறுக்னு கடிச்சு வைக்கறா.. நல்ல வேளை கையை கடிக்குது.. அந்த பொண்ணு கேனமா? இல்லை அதி தீவிரக்காதலா? கேரக்டரைசேஷன் சரி இல்லை..  அப்படி அட்டாச்மெண்ட்டா இருக்கற பொண்ணு  திடீர்னு  பெற்றோர் வந்து “ மாப்ளை மனநிலை சரி இல்லை, வேணாம்”னு சொன்னதும் பெருசா ஏதும் எதிர்ப்பு காட்டலையே?



2. இன்னொரு  ஹீரோயின் பிரியாமணி  வீட்ல பார்த்த மாப்ளைக்கு ஓக்கே சொல்லிடுச்சு.. அவன் கூட வெளீல போக மாட்டாளாம்.. ஆனா ஹீரோ பைக்ல உக்காந்து போவாளாம்.. என்ன கேனத்தனமான லாஜிக்? இது?


3. வில்லன் ரவுடித்தனம் பண்றான், அதனால அவனை பிடிக்கலைனு ஹீரோயின் க்ளைமாக்ஸ்க்கு 20 நிமிஷம் முன்னால சொல்லுது.. ஆனா அந்த வில்லன் பண்ற அதே ரவுடித்தனத்தை ஹீரோ பண்றப்ப  ஒண்ணும் சொல்லலை.. என்னய்யா இது?


4. ஹீரோ என்ன தான் பெரிய புடுங்கி ஆக மாறி இருக்கட்டும்.. ஒரு ஃபைட் சீன்ல 7 பேர் வரிசையா வர்றாங்க.. இவர் ஒரே ஒரு ஆள் மேல காலை வெச்சு எத்தறார்,... உடனே 7 பெரும் அந்தரத்துல 12 தடவை சுத்தி விழறாங்க.காமரா நல்லா அதை படம் பிடிச்சுருக்கு.. படு காமெடி சீன் அது..


5. வில்லன் பிரியாமணி பின்னால சுத்துனா அதுல ஒரு நியாயம் இருக்கு.. ஆனா அவன் எப்போ பாரு ஹீரோ போற இடத்துக்கு எல்லாம் போய் ஹீரோவை  ஃபாலோ பண்றான்.. அவன் என்ன ஹோமோவா?



6. ஹீரோயின் படிச்சவ.. வில்லனை பெற்றோர் பார்த்து பேசி முடிக்கும்போதே அவன் ஒரு மொள்ளமாரின்னு தெரியும்.. அப்போ எதுவும் சொல்லாம க்ளைமாக்ஸ் டைம்ல இப்போதான் எனக்கு அவன் வில்லன்னு தெரியும் வேணாம்கறாளே?



7. இந்தக்காலத்துல பட்டா போடாத நிலத்துலயே அவனவன் வேலி கட்டி சொந்தம் கொண்டாடுறான். ஆனா 2 தரப்பு வீட்டிலும் பேசி முடிவான பின்  மாப்ளை கூப்பிட்டு அவன் கூட பொண்ணு போகாம இருக்கறதுக்கு வலுவான காரணம் சொல்லப்படலை... ஆனா ஹீரோ பின்னால கூட்டணீக்கட்சி மாதிரி ஒட்டி உறவாடறார்



சி பி கமெண்ட் - இந்த குப்பை படத்தை யாரும் பார்த்துடாதீங்க.. ஈரோடு ஸ்ரீகிருஷ்ணாவில் பார்த்தேன்







https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhY_TSqDEs6fIyZVWWBe2qx_15Dbx9UYAXx31kfQauFb90-JzfGH6dnxl5ER5-385OUUyhpMoDZU6nuI7t6UvZz-eDcwpRG8cVoc-pVXKPKqBmWPRquBI_PaUz-cGgYJyoh57fmbZwXl0o/s1600/priyamani-latest-spicy-hot-sexy-stills-pictures-photo-gallery-08.jpg
























35,000 கோடி ஊழல்!!! அடேங்கப்பா சி டி ரெடி

35 ஆயிரம் கோடி மாமூல் வாங்கியோர் சி.டி.! 


இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டை அடையாளப்படுத்தும் முக்கிய அம்சமாக இருப்பது கனிமக் கொள்ளைதான் போலும்! ஆந்திராவில் நடந்தது மாபெரும் கொள்ளை. கர்நாடகாவில் ஆட்சியையும் முதலமைச்சர் களையுமே ஆட்டுவிப்பதும் இதுதான். வடகிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் பசுமை வேட்டைக்குத் தூண்டுதலாய் அமைந்ததும் கனிம வளங்கள்தான். அரசாங்கத்தின் சொத்தை தனியார் கொள்ளை அடித்துப் பதுக்கிக்கொள்வது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. தமிழகத்தில் இப்போதுதான் முதன்முதலாக இந்த முதலைகள் சிக்க ஆரம்பித்து உள்ளனர்!



கனிம வளங்கள் குவிந்துகிடக்கும் நிலப் பகுதி மலையாக, காடாக, மூன்று போகம் விளையும் நிலமாக இருந்தாலும் அவை உடனடியாக தேசியச் சொத்தாக மாற்றப்படும். அதன் பின் அவை அடிமாட்டு விலைக்கு தனியார் முதலாளிகளுக்குக் குத்தகை என்ற பெயரில் தாரைவார்க்கப்படும். இப்படித்தான் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள கனிம வளங்கள் சுரண்டப்படுகின்றன. இதற்கு ஆப்பு வைப்பதுபோல் ஒரு முடிவு எடுத்து கனிமக் கொள்ளையர்களைக் கதிகலங்க வைத்துள்ளது ஜார்கண்ட் மாநில அரசு.



ஜார்கண்ட் மாநிலத்தின் காத்குரி மற்றும் மேற்கு சிங்பும் பகுதிகள் இரும்புத் தாது நிரம்பிய மாவட்டங்கள். இங்கு இரும்புத் தயாரிப்புத் தொழிற்சாலை அமைக்கப்போகிறோம் என்று கூறி ஆறு தனியார் நிறுவனங்கள் மாநில அரசிடம் அனுமதி பெற்றன. பிறகுதான் அவை அனைத் துமே, இரும்புத் தாதுக்களை வெட்டி எடுக்கும் நிறுவனங்கள் என்பது தெரியவந்தது. 

உடனே அவர் களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ஜார்கண்ட் அரசு ரத்து செய்தது. ஜார்கண்ட் அரசின் இந்த அதிரடி நடவடிக்கையை எதிர்த்து, தனியார் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோத்தா, ஹெச்.எல்.கோகலே ஆகியோர், 'கனிம வளங்கள் தேசிய சொத்து. தேசிய சொத்தைக் குத்தகைக்கு விடுவது, விடப்பட்ட குத்தகையை ரத்துசெய்வது போன்ற நடவடிக்கைகள் சுரங்கம் மற்றும் கனிம சட்டங்களுக்கு உட்பட்டது.



 இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. கனிம வளங்கள் உள்ள நிலம் தனியாருக்குச் சொந்தமானதாக இருந்தாலும், அவர்கள் அதை குத்தகைக்குப் பெற்றிருந்தாலும் நிலத்தில் கிடைக்கும் கனிமங்கள் அரசுக்குச் சொந்தமானவைதான். கனிம வளங்களை அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மாநில அரசின் கூட்டு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மற்றபடி வேறு யாரும் அதற்கு உரிமை கோர முடியாது’ என்று கூறி தனியார் நிறுவனங்களின் மனுக்களைத் தள்ளுபடி செய்துவிட்டனர். ஜார்கண்ட் அரசின் நடவடிக்கையையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் கவனத்தில்கொண்டால், மதுரை கிரானைட் குவாரிகளுக்கும் இந்தத் தீர்ப்பு அப்படியே பொருந்தும்.



இந்த நிலையில், ''கிரானைட் குவாரி மோசடி வழக்கில் சிலதனியார் முதலாளிகள் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்'' என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதி உள்ளது தமிழ்நாடு கனிம வள நிறுவன ஊழியர் சங்கம். அதன் செயலாளர் விஜயனைச் சந்தித்தோம். 



''அதிகாரிகளின் தில்லுமுல்லுகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், டாமின் நிறுவனம் பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு கனிமவள நிறுவனத்தை 1979-ம் ஆண்டு, அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். இதன் பிரதான நோக்கம், கிராமப்புற வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பதும், மண்ணுக்கு அடியில் வீணாகப் புதைந்துகிடக்கும் கனிமங்களைக் கண்டுபிடித்து, அவற்றை வெட்டி எடுப்பதன் மூலம் நாட்டின் வருவாயை உயர்த்துவதும்தான். டாமின் தொடங்கப்பட்டபோது, அதன் முதலீடு 100 கோடி ரூபாய். கனிம வளங்களைக் கண்டுபிடிப்பதும், அவற்றை வெட்டி எடுத்து விற்பனை செய்வதும் முழுக்க முழுக்க டாமின் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதேபோல், கனிம வளங்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்தாலும், தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் இருந்தாலும், அவை அரசுக்குத்தான் சொந்தம் என்ற நிலை இருந்தது.



10 ஆண்டுகளுக்கு முன்பு டாமின் நிறுவனத்தின் கொள்கையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்படி, அரசுக்குச் சொந்தமான குவாரிகளில் உள்ள கனிமங்களை வெட்டி எடுக்கும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், தனியார் பட்டா நிலங்களில் உள்ள கனிமங்களை நிலத்தின் சொந்தக்காரர்களே வெட்டி எடுத்து விற்பனையும் செய்யலாம் என்று விதிமுறைகள் மாற்றப்பட்டன. இவற்றைக் கண்காணிக்கும் பொறுப்பை மட்டும் டாமின் அதிகாரிகள் தங்கள் வசம் வைத்திருந்தனர். இதுபோன்ற வாய்ப்புக்காக காத்திருந்ததைப்போல், தனியார் முதலாளிகள் தங்கள் தகிடுதத்தங்களை அரங்கேற்ற ஆரம்பித்தனர்.



டாமின் நிறுவனத்தில் கனிமங்கள் வெட்டி எடுக்கும் தனியார் நிறுவனங்கள், அதற்கு அருகிலேயே ஒரு பட்டா இடத்தை வாங்குவார்கள். அங்கு கிரானைட் கிடைக்கிறதோ இல்லையோ... அங்கும் கற்கள் வெட்டும் பணி நடைபெறும். அரசு குவாரியில் வெட்டி எடுக்கப்பட்ட கற்கள் அனைத்தும் தனியார் குவாரிக்குக் கடத்தப்படும். பின், அந்தக் கற்கள் தனியார் குவாரியிலேயே வெட்டி எடுக்கப் பட்டதாகக் கணக்கு காண்பிக்கப்படும். இதை கண்காணித்துப் பதிவுசெய்ய வேண்டிய உதவி இயக்குனர் (சுரங்கம்), வருவாய்த் துறை கோட்ட மேலாளர் போன்றவர்களை தனியார் முதலாளிகள்  கவனித்துவிடுவார்கள். இதனால் அரசுக்கு வர வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் தனியார் முதலாளிகளுக்குப் போய்ச்சேரும். உதாரணமாக மதுரையில் உள்ள அரசு டாமின் குவாரிக்கு 30 அடி தூரத்தில், அரசியல் செல்வாக்குள்ள மனிதரின் மகனுக்குச் சொந்தமான  கிரானைட் குவாரி உள்ளது. அரசு குவாரியில் வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்கள் எல்லாம், இந்தக் குவாரியில் வெட்டி எடுக்கப்பட்டதாகக் கணக்கு காண்பிக்கப் பட்டு உள்ளது

.

இதேபோல், வேலூர் மாவட்டம் மகிமண்டலம் என்ற ஊரில் வெட்டி எடுக்கப்பட்ட 45 கன மீட்டர் அளவுள்ள கற்களை 3 க.மீ அளவுள்ள கற்கள் என்று போலியாகக் கணக்கு காட்டி உள்ளனர். ஒரு க.மீ. கறுப்பு கிரானைட் கல்லின் விலை 70 ஆயிரம் ரூபாய். அப்படியானால் அரசுக்கு எவ்வளவு இழப்பு என்று கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள். அதேபோல், மேலூரில் பி.ஆர்.பி. நிறுவனம் 100 அடி ஆழத்துக்குக் கற்களை வெட்டி எடுத்துள்ளது. இதைப் பொதுப் பணித் துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்துள்ளனர்.



இந்தத் தொழிலில், தனியார் நிறுவனங்கள் லாபம் மட்டும் ஆண்டுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும்போது, தமிழக அரசின் கனிம வள நிறுவனம், கடந்த ஆறு ஆண்டுகளாக 100 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே லாபம் ஈட்டியுள்ளது. தனியார் முதலாளிகளின் கைக்கூலிகளாக அவர்கள் செயல் பட்ட காரணத்தால்தான், இத்தனை முறைகேடுகளும் நடந்தன. தற்போது, விதிமுறைகளை மீறி கொள்ளை லாபம் சம்பாதித்த சில தனியார் முதலாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அந்த முதலாளிகளின் கூட்டுக் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். அதோடு முழுக்க முழுக்க கனிம வளத்தைத் தோண்டி எடுக்கும் பணிகளை முன்பு போல் அரசே செய்ய வேண்டும்'' என்றார் விரிவாக.



''மதுரை கலெக்டராக இருந்த சகாயம் ஒரு கணக்குப் போட்டு சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என்று சொல்லி இருக்கிறார். ஆனால் மதுரை வட்டாரத்தில் இருக்கும் கனிம வளங்களைக் கணக்கிட்டு சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் வரைக்கும் முறைகேடு நடந்துள்ளதாக முடிவுக்கு வந்துள்ளோம்'' என்று இப்போது சொல்லும் சில உயர் அதிகாரிகள், ''வருவாய்த் துறை, கனிமவளத் துறை, காவல் துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு இதுவரை இந்த நிறுவனங்கள் எவ்வளவு செலவு செய்துள்ளன என்பதற்கான பட்டியலை சி.டி.யாக தயாரித்து வைத்துள்ளார்கள்.


டைரியில் எழுதியும் வைத்துள்ளார்கள். அதன் விவரங்கள் எங்களுக்குக் கிடைத்துவிட்டன. கடந்த 15 ஆண்டுகளாக இப்படி மாமூல் வாங்கிய மந்திரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் பட்டியல் பெரியது!'' என்கிறார்கள். இதனைத் தெரிந்துகொண்ட குவாரி அதிபர் ஒருவர், ஆட்சியை மிரட்டும் தொனியில் அதிகாரி ஒருவருக்கு போன் செய்து பேசியதாகவும் அவர் அதனை டேப் செய்து கோட்டைப் பிரமுகர் ஒருவருக்குக் கொடுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது அரசு நடவடிக்கையின் வேகத்தை இன்னும் தீவிரப்படுத்தி உள்ளது.



அதிரடி தொடரட்டும்!



'சத்யராஜ், சரத்குமார் சொன்னதால பணம் போட்டோம்!''



ஈமு ஓட்டம்... பதறும் முதலீட்டாளர்கள்!



எத்தனையோ முறை சொன்னோம். ஆனால், பட்டால்தான் திருந்துவோம் என்ற முடிவோடு ஏமாந்தவர்களை என்னவென்று சொல்வது!



ஈமு கோழியில் முதலீடு செய்பவர்களைத் தொடர்ந்து எச்சரித்து வந்தோம். கடந்த சில வாரங்களுக்கு முன், கோபிசெட்டிபாளையத்தில் கே.ஜி. பிரைட் லைவ் ஸ்டாக் இந்தியா (பி) லிமிடெட் என்ற நிறுவனத்தின் மீது புகார் கிளம்பியது. இப்போது, பெருந்துறையைச் சேர்ந்த சுசி ஈமு ஃபார்ம்ஸ் காவல்துறையின் பிடிக்குள் சிக்கி இருக்கிறது. ஏமாற்றப்பட்டு நொந்துபோய் இருக்கும் விவசாயிகள் அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்துள்ளனர். கூடவே, இந்த நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் நடித்த நடிகர்கள் சத்யராஜ், சரத்குமார் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் புகார் செய்யவே ஏரியா கலகலக்கிறது.



ஈமு வளர்ப்பு மோசடிக்கு எதிராக பல வருடங்களாகப் போராடி வரும் வழக்கறிஞர் தளபதியைச் சந்தித்தோம். ''சுசி ஈமு நிறுவனத்தின் அதிபர் குரு என்ற குருசாமி. இவர், பெருந்துறை நகர பா.ம.க. செயலாளராக இருந்தவர். இத னால் அவருக்கு ஒரு அறிமுகம் இருந்தது. மேலும், ஈமுவுக்காக விளம்பரம் செய்த நடிகர்கள் சத்யராஜ் மற்றும் சரத்குமார் மீது மக்களுக்கு நிறைய மரியாதை இருக் கிறது. 

 

அதனால்தான், பாமர கிராம விவ சாயிகள் உட்பட 25,000 பேருக்கும் மேல் முதலீடு செய்தனர். மொத்த முதலீடு 600 கோடி ரூபாயைத் தாண்டி இருக்கலாம். இந்த மோசடிக்கு மாவட்ட நிர்வாகம், கால்நடைத் துறையும் உடந்தையாக இருந்துள்ளன. இவர்கள் அனைவரின் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார் ஆவேசமாக.



சுசி ஈமு ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் சார்பில் பேசியவர்கள், ''எங்க நிறுவனத்தின் உரிமையாளர் குரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். இங்கே உள்ள ஆதிக்க சமுதாயத்தினரும், காவல்துறையைச் சேர்ந்த சில அதிகாரிகளும் மாமூல் கேட்டு தொடர்ந்து அவரை மிரட்டி வந்தனர். ஆனால், மாமூல் கொடுக்க குரு மறுத்து விட்டார். அதனால், ஆட்களைத் தயார் செய்து, ஒரே சமயத்தில் எங்கள் நிறுவனத்தை முற்றுகையிட வைத்து பிரச்னை ஆக்கி விட்டனர். முதலீட்டாளர்களுக்கு நாங்கள் பணம் கொடுக்கத் தயாராகவே இருக்கிறோம்'' என்றனர்.



விளம்பரத்தில் நடித்த நடிகர் சத்யராஜிடம் பேசினோம். ''ஈமு கோழி விளம்பரம்னு சொன்னாங்க. நடிச்சுக் கொடுத்தேன். மத்தபடி அதுல இருக்கும் நல்லது கெட்டது எல்லாம் எனக்குத் தெரியாதுங்க'' என்று சொன்னார்.




சரத்குமார் தரப்பிலோ, ''சுசி ஈமு நிறுவனத்தினர் ஒரு ரெஸ்டாரன்ட் நடத்தி வருகின்றனர். அதற்கான விளம்பரத்தில், ஈமு கோழியின் கறி உடலுக்கு நல்லது. ஈமு கோழி சாப்பிடுங்க என்பது மட்டும்தான் சரத்குமார் சொல்வதைப் போல வரும். மற்றபடி எந்த இடத்திலும் ஈமு வளர்த்தால் லாபம் சம்பாதிக்கலாம் என்று அவர் சொல்லவில்லை. அதுவும் இல்லாமல் விளம்பரத்தின் நம்பகத் தன்மைக்கு அதில் நடித்தவர்கள் எப்படி பொறுப்பாக முடியும். இதை சட்டரீதியாக சந்திக்க சரத்குமார் தயாராக இருக்கிறார்'' என்றார்கள்.

ஆனால், மாமூல்

ஈமு தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷிடம் பேசினோம். ''ஆயிரக்கணக்கான புகார்கள் வந்துள்ளன. 200 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. புகார் தருபவர்கள் சத்யராஜ், சரத்குமார் போன்ற நடிகர்கள் சொன்னதனால்தான் முதலீடு செய்தோம் என்கின்றனர். இந்த விஷயத்தில் நடிகர்களும் பொறுப்பு உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். இவை ஒரு பக்கம் இருக்க... அந்தப் பண் ணைகளில் இருக்கும் ஈமுவுக்கு உணவு கொடுக்க யாரும் இல்லை. அதன் பசியைப் போக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்'' என்றார்.



ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்!



நன்றி - ஜூ வி