Wednesday, August 08, 2012

சிம்பு - நயன் தாரா மீண்டும் கம்பைன் ஸ்டடி ஸ்டார்ட்டட்?

மீண்டும் நட்பை புதுப்பித்து கொண்ட சிம்பு - நயன்!
1.சயின்ஸ் டீச்சர் - MARS - சிறு குறிப்பு வரைக..


 லொள் மாணவன் - ச்சீ, வெட்கமா இருக்கு மிஸ்  (”மார்”ஸ்)


-------------------



2. புட்டுக்கிட்ட லவ் ஒவ்வொன்றுக்கும் மீண்டும் ஒரு ஒப்புட்டு, ஒட்டு உண்டு # நயன்ட்டனின் நான்காம் விதி


---------------------



3. ஜோசியர் - உங்களுக்கு குபேர யோகம் இருக்கு .


 ஆசியர் - மிசஸ் குபேரனுக்கு இந்த மேட்டர் தெரியுமா?



-----------------------


4. சின்ன வயசுல ஜப்பான்னா பான் பராக் போடறவங்க அதிகம் இருக்கும் ஊர்னு நினைச்சேன்


--------------


5. ஸ்வீட்டி நீ என் அருகில் இருந்தால் நான் தூங்கப்போவதில்லை பின் ஏன சொல்கிறாய்் ஸ்வீட் ட்ரீம்ஸ்?



----------------------------




6. வில்லன் - என்னோட கோபம் ரொம்ப மோசமானது #




டேய் நாயே.கோபம்னாலே மோசமானதுதான்.அதுல உன்னுதுஎன்ன ? என்னுது என்ன?


-----------------------------


7. சத்தம் எனக்கு பிணக்கு.முத்தம் மட்டும் விதிவிலக்கு



-------------------------


8. டாக்டர் ,எனக்கு அழுகை எளிதா வந்துடுது.இதுக்கு என்ன அர்த்தம்?



 உங்க வீட்ல வெங்காயம அரிவது உங்க சம்சாரம் இல்லை.நீங்கனு தெரியுது்



-------------------------------


9. இன்ட்டர்வியூவில் -உங்களுக்கு ஹிந்தி தெரியும்னிங்களே,பேசுங்க பார்க்கலாம்.



அவ்ளவ் டீட்டெயிலா தெரியாது.யாராவது பேசுனா அது ஹிந்தினு தெரியும்



----------------------


10.இதே மதுபானக்கடை பிரபல ஹீரோ படமா இருந்திருந்தா டாக்டர் ராம்தாஸ் குதி குதினு குதிச்சிருப்பாரு


------------------------


Photo: - August 07 / 2012, Tuesday. Photo of the day - 297.

Vine snake.

:: Feel free to share it::

Photo Credits: RAJ DHAGE l https://www.facebook.com/raj.dhagewai

All rights reserved © RAJ DHAGE : Please do not copy or distribute these pictures/images without permission.

-



11. ஏகபட்ட வெடிகுண்டுகள் வெடிப்பதால் இனி அது விஸ்வரூ "பாம்"


--------------------

12. டாக்டர் ஒரு கெட்ட கனவு கண்டேன்.



அடடா,ஏன் பார்த்தீங்க ? கண்ணை மூடி கம்முனு இருந்துருக்கலாம்



--------------------------


13. உங்க பையனுக்கும் ஹவாலாவுக்கும் தொடர்பு இருக்கா?



 அழகிரி - ஹவாலா? எவ அவ?எனிவே அது அவன் பர்சனல்மேட்டர்.விருப்பப்பட்டா மேரேஜ்க்கு ஓக்கே




-------------------


14. டாக்டர் நான் எங்கே இருக்கேன்?



ஹாஸ்பிடல்லதான்.நோ ஒர்ரி.எங்கோ உயிரோட இருக்கீங்களே.அதுபோதாதா?


-------------------------------


15. ஈ பி காரங்க ஸ்பின் பவுலர்ஸா?#சுழற்சி முறையில் மின்சாரம் விநியோகம்



-----------------------


The Overseas Highway - Florida Keys

Plzz Join this page ●◗●◗► Bleeding Paradise

16. சொர்க்கத்துக்கு குறுக்கு வழி உன் இடை.நேர் வழி உன் உதடு



---------------------


17. ஜட்ஜ் -சி எம் நற்பெயரை கெடுத்தீங்களா?


கேப்டன் - அபாண்டம்.கிரந்தம் தவிர்க்க செயலலிதா என்றேன்



-------------------


18. கல்யாண் ஜுவல்லரிக்கு போட்டியா யாரும் ஏன் இன்னும் நிச்சயதார்த் ஜூவல்லரி ஆரம்பிக்கல?



----------------------


19.ஸ்கூல் ,காலேஜ் பெண்கள் யூனிபார்மில் ஒருமாற்று அழகு குறைவாக இருக்கிறார்கள் # அவதானிப்பு



--------------------------


20. இன்னைக்கு புல் பார்ம்ல இருக்கீங்களாமே ?



ச்சே ச்சே ஜஸ்ட் குவாட்டர் மட்டும்தான்



-----------------------


குழந்தைகள் மட்டுமல்ல அவர்களின் குறும்புகளும் கொள்ளை அழகு..



21. ஹேவ் எ குட் டே .


தாங்க்ஸ் மிஸ்.நாளைக்கு பிரிட்டானியாவா



------------------------



22. மேடம்,எல்லாரையும் மச்சான்னு கூப்பிடறீங்க,அதுக்கு அர்த்தம் தெரியுமா?



 நமீதா - நான் கூப்பிடற எல்லாருமே மச்சம் உள்ளவங்கதான்



--------------------
 23.மோசடி வெளிப்பட்டு, புகார் பதிவு செய்து 24 மணிநேரம் ஆகியும் நாளிதழ்களில் செய்தி வராதது விளம்பர காசுக்கு அவர்கள் படும் ஆசையை காட்டுது#ஈமு



----------------------


24. ஆண்பாவம் ரீமேக்கில் உதயநிதி,சந்தானம் # ஆடியன்ஸ் பாவம் சார்



---------------------


25. டவுட் டேவிட் - ரைட்டர் சார், உங்க படைப்புல அறுசுவையும்  எதிர்பார்க்கலாமா?


ரைட்டர் ரிவிட் -  நான் என்ன ஹோட்டலா நடத்தறேன்?



------------------------------


26.கல்யாண மண்டபங்களில் ஆண்கள் சீட்டுக்கச்சேரி, சரக்கு ஒப்பாரி என இறங்கும்போது பெண்கள் அரட்டைக்கச்சேரியில் வம்பளக்கிறார்கள்



-----------------

al Vikatan's photo.






Tuesday, August 07, 2012

ஓலைப்பட்டாசு- சுஜாதா - சிறுகதை

அந்த தீபாவளி, என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அதைப் பற்றி சொல்வதற்குள் தேவைப்பட்ட அளவுக்கு மட்டும் சுயபுராணம். என் பெயர் எதற்கு? நான். அவ்வளவுதான். மற்றவர் பெயர்கள் முக்கியம். அது சந்தானம் ஐயங்கார், பெருந்தேவி, சின்னா இவர்களின் பெயர்கள் இந்த கதைக்கு என்னிலிருந்து அவர்களை அந்நியப்படுத்துவதற்கு முக்கியம்.



பார்த்தீர்களா… ஆரம்பித்த விஷயத்தை விட்டு அலைகிறேனே. காரணம் – என் வயசு இன்றைக்கு எழுபது. பார்த்த மரணங்கள் ஆறு. இரண்டு மனைவிகள். ஒரு தேசிய விருது. ஒரு நாள் ஜெயில். ஒரு ப்ராஸ்டேட் ஆபரேஷன். கராஜில் நெருக்கமாக மூன்று கார்கள். உறவினரின் துரோகங்கள். தென் ஆப்பிரிக்கா டர்பனில் இரண்டு வருஷம் இவ்வாறு அதிகம் சேதப்படாமல் எழுபதை அடைந்து விட்ட ஒருவன் இறந்துபோனால் ஹிந்துவில் எட்டாம் பக்கத்தில் நான்கு வரிகளில் எழுபது வருஷமும் அடங்கி போகும்.




சொல்ல வந்தது, அந்த ஒரு தீபாவளி பற்றி. சீரங்கத்தில் என் பன்னிரண்டாவது வயதில் என் பாட்டியின் கண்காணிப்பில் வாழ்ந்தேன். அதனால் கொஞ்சம் பணத்தட்டுப்பாடு. அந்த தீபாவளிக்கு பட்டாசு வாங்க மொத்தம் ஐந்து ரூபாய்தான் தந்தாள். இப்போது என் வீட்டில ஐந்து ரூபாய் தாளை, தரையில் விழுந்தால் வேலைக்காரர்கள் கூட பொறுக்கமாட்டார்கள். அப்போது குறைவான பொருளாதாரத்தில் ஐந்து ரூபாயில் அதிகப்படியாக சந்தோஷம் கிடைக்க… கொள்ளிடக் கரையருகில் ஓலைப்பட்டாசு சல்லிசாக விற்பார்கள்.


பனையோலையில் சின்னதாக வெடிமருந்தை வைத்து முடிச்சுப் போட்டு மிகச் சின்னதாக திரியுடன், பனையோலை வாலுடன் பிரமாதமாக வெடிக்கும். ஆனால், ரொம்ப உஷாராக இருக்க வேண்டும். பற்ற வைப்பதற்குள்ளே வெடித்து கையை உதறவேண்டி வரும். மேலும் ஒரு வாரம் வெயிலில் காயப்போட்டே ஆகவேண்டும். பாட்டி கொடுக்கும் காசில் ஓலைப்பட்டாசு பாதப் பணத்துக்கு வாங்கிக்கொண்டு, மிச்சத்தில் கொல்லன் பட்டறைக்கு போய் ஒரு வேட்டுக் குழாயும் கந்தகப் பொடியும் வாங்கிக் கொண்டேன்.


 இது ஒரு மாதிரி மினி வேட்டுக்குழாய். நீண்ட கம்பியின் இறுதியில் ஒரு குழலும் போல்ட்டும் இருக்கும். குழலில் மஞ்சளான கந்கத்தை கெட்டித்து அதனுள் போல்ட்டை செருகி சுவரில் மடேர் என்று ஒரு அறை அறைந்தால் கேட்கும் வெடிச் சத்தம், நம் காதில் விண்ண்ண்ண் என்று அலறும். வெடியை விட திண்ணையில் சுதேசமித்திரன் படித்து கொண்டிருக்கும் தாத்தாக்களின் பின்பக்கம் மெள்ள நழுவி, ஒரு டமால் அடித்துவிட்டு, கோரதமுட்டியை நோக்கி ஓடுவதில் உள்ள உற்சாகம்தான் மிக சுத்தமானது.



அந்த தீபாவளி ஓலைப் பட்டாசு காயப் போட மாடிக்கு சென்ற போது, பக்கத்து வீட்டு “எடுத்துக்கட்டி”யின் மேல் செருப்பு வைத்திருந்தது. அதில் ஏறினேன். பின்னால் யாரோ கஷ்டப்பட்டு முனகுவது போல் சத்தம் கேட்டது. உதவி தேவையோ என்று நான் சுவர் எகிறி குதித்து அந்தப் பக்கம் போய் பார்த்தபோது சந்தானமையங்கார் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு, சின்னவை பல இடங்களில் தடவிக் கொடுத்து சிகிச்சை மாதிரி என்னவோ செய்து கொண்டிருந்தார். சந்தானமையங்கார் அடுத்த வீட்டுக்காரர்.


எங்களையெல்லாம் ஓட ஓட விரட்டுபவர். கிரிக்கெட் பால் உள்ளே போனால் திருப்பி தரமாட்டார். கண்டபடி திட்டுவார். அவர் வீட்டு சுந்தர் எங்களுடன் விளையாட வரமாட்டான். அவர்கள் எந்த விதத்திலோ பணக்காரர்களாம். கொலுவுக்கு சில்க் ஜமக்காளங்கள் போட்டு, பெட்ரோமாக்ஸ் வைப்பார்கள். சின்னா அவர் வீட்டு சமையல்காரி. ரவிக்கை முந்தானையில் அவள் சேகரித்து இருந்த கொய்யாக் காய்கள் சிதறிக் கிடந்தன. தரை எல்லாம் வியர்வையால் ஈரமாக இருந்தது.


 சந்தானயைங்காரின் செருப்புதான் ‘எடுத்துக்கட்டி’யில் மேல் வைத்திருந்தது. “என்ன மாமா பண்றீங்க “என்று கேட்டபோது அவர் திடுக்கிட்டு “இவளுக்கு உடம்பு சரியா இல்லை. மூச்சு வாங்கறதுன்னா… அதனால, தசமூலாரிஷ்டம் கொடுத்து சரி பண்றேன். போடா போடா… நீ எங்க இங்க வந்து தொலைச்சே… ஓடிப் போ” என்றார்.



“பட்டாசு காயப் போட வந்தேன். மாமியை கூப்பிடட்டுமா” என்றேன்.



“மாமி பெட்டவாத்தலை போயிருக்கா. சுவரேறி குதிச்செல்லாம் வரக்கூடாது. போலீஸ்காரன் புடிச்சுப்பான்” என்றார்.



இதையெல்லாம் கேட்காதது போல், சின்னா ஒரு மாதிரி மயக்கத்தில் கண் மூடிக்கொண்டு சற்றே நெற்றியை சுருக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.



நான் வீரராகவனிடம் சொன்னேன். வீரராகவன் எங்கள் கிரிக்கெட் காப்டன். “பாவம்டா அவ. மேல்மூச்சு வாங்கிண்டிருந்தது. சந்தான மாமா தடவிக் கொடுத்தார். இல்லைன்னா ரொம்ப கஷ்டப்பட்டிருப்பா” என்றேன்.



அவன் அதைக் கேட்டு கைகொட்டி கண்ணீர் வரச் சிரித்தான். “நீ கொக்கோகப் படம் எதும் பார்த்ததே இல்லையா? மார்கழி மாதம் உற்சவத்தில் விக்குமே?”



“இல்லை…”



அவன் “வா” என்று உள்ளே சென்று பரண் மேல் கத்யத்ரயம் திவ்யபிரபந்தசாரம் போன்ற புத்தகங்களின் நடுவே செருகியிருந்த பழுப்பான புத்தகத்தை எடுத்து பிரித்துக் காட்டினான்.



“ஆமாண்டா, இப்படித்தாண்டா சந்தான மாமாவும் சின்னாவும் இருந்தா…”



அவன் ஒரு வக்கீல் போல பல கேள்விகள் கேட்டு “இது தெரிந்ததா?”, “அது புரிந்ததா?” என்றெல்லாம் கேட்டு, அவவப்போது குபீர் குபீரென்று சிரித்து, “அடிச்சடா லக்கி ப்ரைஸ்” என்று சொன்னது எனக்கு விளங்கவில்லை. அவ்வப்போது என் நண்பர்கள் என்னை மரியாதையுடன் பார்த்தார்கள். மீண்டும் மீண்டும் அந்த காட்சியை விவரிக்க சொல்லியே வதைத்தார்கள்.



“எனக்கு எல்லாம் புரியறது. ஆனா எதுக்குடா தலைல முண்டாசு?” என்றான் பாச்சு.



“அதாண்டா ட்ரிக்கு. அதை கட்டிண்டா அடையாளம் தெரியாதாம். வேற யாரோனு நினைச்சுண்டுருவோமாம்” என்று வீரு விளக்கியது புரிந்தும் புரியாமலும் இருந்ததை அவன் என்னை ஒரு மாதிரி பார்த்து, “நீ ஒண்ணு பண்ணு. அவர்கிட்ட போய் ‘மாமா மொட்டை மாடில ஓலைப்பட்டாசு காயப்போட போயிருந்த போது உங்களையும் சின்னாவையும் பார்த்துட்டேனே. மாமி பெட்டவாத்தலைலேர்ந்து வந்தாச்சா’ன்னு… அவாள்லாம் சீட்டாடிண்டிருப்பா… அங்க போய்க் கேட்டு பாரு…”



“ஐயோ… போடா… தோலை உரிச்சுருவார்…”



“அதான் இல்லை. பாரேன் நடக்கிறதை. எதுக்கும் ஓடத் தயாராவே இரு. ஓரமா நின்னு கேட்டுட்டு வந்துரு. நடக்கிறதைப் பாரேன்.”



அவர்கள் மிகவும் கட்டாயப்படுத்த நான் மெள்ள தைரியம் பெற்று பக்கத்து வீட்டு திண்ணைக்கு நழுவி ஓரத்தில் உட்கார்ந்தேன். வெள்ளி செம்பில் காபியும், பத்தமடை பாயுமாக “ஆஸ்” ஆடிக் கொண்டிருந்தார்கள். புகையிலையை துப்பிவிட்டு வாய் கொப்பளிக்க வரும்போது என்னை பார்த்து சந்தானமையங்கர் திடுக்கிட்டு “என்னடா?” என்றார்.



“மாமா, மாடில ஓலைப் பட்டாசு பெருந்தேவி மாமி வந்தாச்சா பெட்டவாத்தலைலருந்து?” இவ்வாறு ஆரம்பித்தவுடன் “வாடா” என்று என்னை அப்படியே அலாக்காகத் தூக்கி உள்ளே செலுத்தி, என் வாயில் கல்கண்டு, அரிசி பப்ரமுட்டு, லேக்கா உருண்டை என்று இனிப்பான வஸ்துக்களை திணித்துவிட்டு “என்ன பார்த்தே, சொல்லு…”



“நீங்க சின்னாவுக்கு சிகிச்சை எதும் பண்ணலை” என்றேன்.



“பின்ன என்னவாம் அது?”



“வீரு சொல்றான் கொக்கோகமாம் அது…”



“மாமிகிட்ட சொல்லாதே, சொல்லாம இருந்தா உனக்கு என்ன வேணும் சொல்லு? சொல்லுடா கண்ணு…”



நான் யோசித்து “எனக்கு சிங்க மார்க் பட்டாசு ஒரு சரம், ஒத்தை வெடி ஒரு டஜன், ரெட்டை வெடி ஒரு டஜன், கேப்பு துப்பாக்கி, குதிரைவால், தரைச்சக்கரம், ஊசிப்பட்டாசு, ராக்கெட், ஏரோப்ளேன், விஷ்ணு சக்கரம், லட்சுமி வெடி அப்புறம் பத்த வெக்க மட்டிப்பால் வத்தி” என்று என் சக்திக்கேற்ப ஒரு பட்டியல் சொல்லிப் பார்த்தேன்.



அவர் எழுந்து அலமாரிக்குச் சென்று ஒரு காகிதத்தில் எழுதி “இதைக் கொண்டு போய் டி.பி.ஜி. கடையில கொடு. உனக்கு வேணுங்கறதை வாங்கிக்கோ. ஆனால மாடில என்ன பார்த்தே?”



“ஓலைப் பட்டாசு காயப் போடறப்ப உங்களையும் சின்னாவையும்.”



“ஏய்… யாரும் கேட்டா அங்க ஏதும் பார்க்கலைன்னு சொல்லணும்… அப்பத்தான் பட்டாசு.”



“சரி மாமா” என்றேன்.



“சரி மாமா” என்று என் தலையில் நெத்தினார்.



அந்த தீபாவளிக்கு நானும் வீரராகவனும் ஆசை தீர பட்டாசு வெடித்ததும் அல்லாமல், கார்த்திகைக்கும் நிறைய பாக்கி வைத்தோம். பாட்டி “ஏதுரா இத்தனை பட்டாசு?” என்றதற்கு “நாங்கள்லாம் சேர்ந்து சந்தா கட்டி வாங்கினோம் பாட்டி” என்று புளுகினேன்.




அடுத்த தினங்களில் நான எப்போது சந்தானமையங்காரை பார்த்தாலும் “இங்க வாடா” என்று உள்ளே பரிவுடன் அழைத்து “சர்க்கரைப் பொங்கல் சாப்பிடறியா? வறுத்த பாதாம் பருப்பு வேணுமா? அரவணை வேணுமா?” என்று தின்னக் கொடுத்துக் கொண்டேயிருந்தார்.




சில நாட்களில் தைரியம் பெற்று, “மாமா தெற்கு வாசல்ல புதுசா ஒரு பம்பரம் வந்திருக்கு. கோல் எடுத்தா கைல அப்படியே பூனைக்குட்டி மாதிரி தூங்கறது மாமா” என்றால்



“உடனே போய் ரெண்டு பம்பரமா வாங்கிக்கோ. தலையாரில குத்து பட்டா மாத்து பம்பரம் வேணுமோ இல்லையோ?” என்பார். அப்புறம் மேலும் தைரியம் பெற்று நிஜ கிரிக்கெட் பந்து, ஸ்டம்ப் எல்லாம் கேட்டுக் கூடக் கொடுத்துவிட்டார்.



பெருந்தேவி மாமி “என்ன இப்படி இந்தப் பிள்ளைக்குச் செல்லம் கொடுக்கறீங்க?” என்று கேட்டதற்கு “பையன் நன்னா படிக்கறான். அதுக்கு ஒத்தாசை பண்ணலாம்னு” என்றார் என்னைப் பார்த்து கண் சிமிட்டி.



இவ்வாறு இனிதாகக் கழிந்து கொண்டிருந்த தினங்கள் அதிகம் நீடிக்கவில்லை. வீரு “ஒரு பார்க்கர் பேனா கேட்டுப் பார்” என்று சொல்ல சந்தானமையங்கார் வீட்டுக்குள் சுதந்திரமாக நான் நுழைய மரவேலைப்பாடுகள் நிறைந்த கறுப்பு மேசை கண்ணாடியில் தெரிய விறுவிறுப்பாக தன்னை விசிறிக்கொண்டு சந்தானமையங்கார் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருக்க, பக்கத்தில் அவர் மனைவி பெருந்தேவி கோபத்துடன் அழுதுகொண்டிருக்க, அருகே ஓரத்தில் சின்னா வாயை முந்தானையால் பொத்தி அவளும் அழுது கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் மாமி “வாடா… இந்த பிராமணன் செய்த அநியாயத்தை பார்த்தாயோ… மொட்டை மாடில சின்னாவை கூட்டி வெச்சுண்டு…”




“ஏய் நீ போடா…”



“ஏண்டி அந்த பிராமணன்தான் துப்புக்கெட்டு போய் உன் கையை புடிச்சான்னா உன் புத்தி எங்கடி போச்சு? இடுப்பொடிஞ்ச சக்களத்தி, நீ நல்ல பாம்புக்குட்டி, சக்கை திங்க வந்தவளே” அதன் பின் “உனக்கு குளிர் காய்ச்சல் வர… உனக்கு பாடை கட்ட” என்று பலமாக திட்டியதில் சின்னா, “கிணற்றில் விழப் போகிறேன்” என்று புறப்பட எனக்கு அழுகை வந்து விட… “பாருங்கோ…. இந்த பிள்ளை கூட வருத்தப்படறது. உங்களுக்கு வெக்கமா இல்லை… ஓசிச் சிறுக்கி.”




நான் அழுதது அதற்காக இல்லை. சந்தானமையங்காரிடம் என் ப்ளாக்மெயில் இப்படி திடீரென்று மதிப்பிழந்து போய் விட்டதே என்றுதான்!



அடுத்த தீபாவளிக்கு பழையபடி ஐந்து ரூபாய்க்கு ஓலைப்பட்டாசு, வேட்டுக் குழாய்தான்.




அந்த தீபாவளியை மறக்க முடியாது தான். அந்த வயசிலேயே எனக்கு கொஞ்சம் அவசரப்பட்டுக் கிடைத்த சில சில ஞானங்களால் அறியாச் சிறுவன் அறிந்த சிறுவனாகிவிட்டேன். அது என் பிற்கால வாழ்க்கையை எவ்வளவு தூரம் மாற்றிவிட்டது! என் பிழைப்பே இந்த மாதிரி மற்றவர் பற்றி தகவல் அவதூறு சேகரித்து விலை பேசுவதாகி, அதைப் பயன்படுத்திக் கொண்டு பணம் சேர்ப்பதாகி விட்டது.


 எத்தனையோ பேரை என் நளின மூர்க்கங்களில் பயமுறுத்தி நிறையவே காசு சேர்த்து விட்டேன். இப்போது தீபாவளிக்கு என் இரண்டு மனைவியருக்கும் எட்டாயிரம் ரூபாயில் புடவை எடுக்கிறேன். என் பிள்ளைகள் தொடர்ந்து அறுபது நிமிஷம் வெடிக்கும் ஆயிரம் ரூபாய் சரமெல்லாம் வெடிக்கிறார்கள்.




நான் பண்ணையில் போய் உட்கார்ந்து கொண்டு, என் நாய்களுடன் பேசுகிறேன். “சீஸர், ரீட்டா… அந்த தீபாவளியன்று சந்தானமையங்காரை மாடியில் பார்த்திராவிட்டால், நான் எங்காவது பி.காம். படித்து விட்டு ரயில்வே கிளார்க்காக நிம்மதியாக இருந்திருப்பேனே!



ஆம்! என் முதல் பொய், முதல் பெண் தரிசனம், முதல் பணம் பிடுங்கும் வழி எல்லாமே அந்த தீபாவளியில்தான் துவங்கி திருத்த முடியாமல் விகாரப்படுத்தப்பட்டேன்.



காரணம் – ஓலைப் பட்டாசு!




நன்றி - சுஜாதா , உயிர் மெய், சிறுகதைகள்

சிவப்பு ரோஜாக்கள் - சினிமா விமர்சனம்

http://img.filmlinks4u.net/2010/07/Sigappu-Rojakkal-1978.png

என் இனிய தமிழ் மக்களே புகழ் பாரதிராஜா மண்வாசனை கிளப்பும் கிராமத்துப்படங்களைத்தான் திறம்பட இயக்குவார்  என்ற எண்ணத்தை தவிடு பொடியாக்கிய க்ரைம் த்ரில்லர் தான் சிவப்பு ரோஜாக்கள் , பின்னாளில் வந்த பல க்ரைம் படங்களுக்கு முன்னோடி.. கே பாக்யராஜின் திரைக்கதை (உதவி), வசனத்தில் ( முழு) தயாரான படம். வடிவுக்கரசி இதில் கிளாமராக நடித்திருப்பது, கவுண்டமணி, பாக்யராஜ் சின்ன கேரக்டரில் வந்து போவது என சிற்சில ஆச்சரியங்கள் உண்டு.. .


ஹீரோ கமல் ஒரு பிஸ்னெஸ் மேன்.. அவரோட மெயின் வேலை என்னான்னா  ஃபிகரை கரெக்ட் பண்றது, மேட்டர் முடிச்சதும் கொலை செஞ்சு அவர் வீட்டுத்தோட்டத்தில் புதைப்பது.. இந்த மாதிரி சைக்கோ ஆக அவருக்கு  ஒரு ஃபிளாஸ்பேக் இருக்கு.. அது அப்புறம்.. 

ஒரு ஜவுளிக்கடைல ஹீரோயினை பார்க்கறார்.. லவ் @ ஃபர்ஸ்ட் சைட்.. சைக்கோவுக்கு லவ் வருமா? பத்து பைசா சம்பாதிக்க வக்கில்லாத பொடிப்பசங்களுக்கே லவ் வர்றப்போ கோடியில் புரளும் சைக்கோவுக்கு லவ் வராதா என்ன?


ஹீரோ பெருசா ரிஸ்க் எல்லாம் எடுக்கலை.. அதே ஜவுளிக்கடைக்கு 3 டைம் போறார்.. ஃபிகர் செட் ஆகிடுச்சு.. 365 நாள் போனாலும் நமக்கு செட் ஆகறதில்லை. கார்ல ரைடு கூட்டிட்டுப்போறார், சினிமாவுக்கு கூட்டிட்டு போறார்.. மேரேஜ் பண்ணிக்க புரப்போஸ் பண்றார்.. ஃபிகர் ஓக்கே சொல்லிடுது. 


 ரிஜிஸ்டர் ஆஃபீஸ்ல மேரேஜ்.. இவ்ளவ் வசதி உள்ள அப்பாடக்கர் ஏன் எந்த சொந்தம் பந்தம், ஆஃபீஸ் நண்பர்கள் யாரும் இல்லாம தனியா மேரேஜ் பண்ண வந்திருக்கீங்களேன்னு அந்த கேனம் பூனம் கேட்கலை.. எப்படியோ புளியங்கொம்பா.  ஒருத்தன் சிக்கிட்டான்னு மேரேஜ் பண்ணிக்குது..


http://www.cinemastrikesback.com/news/new%20dailies/SivappuRojakkal1.jpg


பங்களாவுக்கு கூட்டிட்டு போறான்.. சுத்தி காட்டிட்டு கில்மாவுக்கு முத அடியை எடுத்து வைக்கறப்போ கம்ப்பெனில இருந்து ஃபோன்;./. கம்பெனில வேலை பார்த்த ஒரு ஃபிகர் காணாம போனது தொடர்பா ஒரு பிரச்சனை.. ஃபிகரோட அண்ணன்காரன் வந்திருக்கான்.. இவரு புது சம்சாரத்தை விட்டுட்டு  கம்ப்பெனிக்கு போறாரு


அண்ணன்காரன்  தன் தங்கயை இந்த ஆஃபீஸ்ல ஒர்க் பண்ற ஆள் யாரோ ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய் இருக்கான், சாட்சி இருக்கு, சர்வர் சொன்னான்கறான்..  உடனே ஹீரோ அந்த ஹோட்டல் போய் அந்த சர்வரை க்ளோஸ் பண்ணிட்டு வர்றான்

 இந்த சைக்கிள் கேப்ல  ஹீரோயின் என்ன பண்றா?  ஏவாள் மாதிரி ஆப்பிளை அப்படியே சாப்பிடாம கத்தியால கட் பண்ணி சாப்பிடறா.. அப்போ விரல் ல லைட்டா காயம் ஆகி ரத்தம் கொட்டுது.. ஹீரோவோட பூனை அந்த ரத்தத்தை டேஸ்ட் பாக்குது,. 

 ஹீரோயின் பயந்துடறா,.. அப்படியே ஜன்னல் வழியா பார்க்கறா.. கரெக்டா மழை வருது. தோட்டத்துல புதைக்கப்பட்ட ஒரு டெட் பாடியோட கை மட்டும் மேல வருது..  திகில் கொடுக்கும் கை. வீல்னு கத்தறா.. ( ஹேண்ட்னு தானே கத்தி இருக்கனும்)


ஹீரோவோட வளர்ப்புத்தந்தையும் , தோட்டக்காரனும் அவுட் ஹவுஸ்ல  டி வி ல ஹீரோ நடிச்ச ஐ மீன் ரியலா எடுத்த லைவ் பிட்டுப்படம் பார்த்துட்டு இருக்காங்க. ஹீரோயின் அதை பார்த்துடறா.. பிட்டுப்படத்தை, அதை அவங்க பார்த்துட்டு இருந்ததை.. 


 ஹீரோ கரெக்டா வர்றான்.. ஒரே சேசிங்க் தான்/. துரத்தல் தான் (  2ம் 1 தான்) போலீஸ் வந்து பிடிச்சுடுது.. ஹீரோ மெண்டல் ஹாஸ்பிடல்ல சேர்க்கப்பட நலம்.. 


படத்துல முதல் ஹீரோ திரைக்கதையும்,  இளையராஜாவின் பின்னணி இசையும்.. மிகச்சிறப்பா பண்ணி இருக்காங்க.. 


கமல்க்கு லவ் சப்ஜெக்ட் சொல்லியே தர வேணாம்.. காதல் இளவரசர்..   ஹீரொயினை கரெக்ட் பண்றது, அதுல கூட ஒரு பணக்காரத்தனம்,  கெத்து காட்டுவது, அப்பப்ப ஹீரோயின் கிட்டே பிட்டு போடறது ஒரே ரொமான்ஸ் மயம் தான்.. கல்லறையில் துரத்தும் காட்சியில் திகில் கலக்கல்.. 


 ஸ்ரீதேவி.,. அந்தக்கால இடை அழகி.. இவர் கிட்டே என்ன ஸ்பெஷாலிட்டின்னா இவர் உதடு , கன்னம், இடை இன்ன பிற சமாச்சாரங்களை எல்லாம் தனித்தனியாவும் ரசிக்கலாம், டோட்டலாவும் ரசிக்கலாம்.. அவ்ளவ் அழகு..  ஹீரோ ஏ ஜோக் சொல்லும்போது, கில்மாவுக்கு பிட் போடும்போது இவர் ச்சீ சொல்லும் அழகே தனி.. ஒண்ணுந்தெரியாத பாப்பா மாதிரியே முகத்தை வைத்துக்கொள்வதில் பாப்பா பி ஹெச் டி போல.. 


அடுத்து வடிவுக்கரசி.. வர்ணிக்கவே கூச்சமா இருக்கு.. ஏன்னா  முதல் மரியாதை, படையப்பாவில் எல்லாம் வயசான கேரக்டர்ல பார்த்து பழகிடுச்சு.. இருந்தாலும் இதுல கிளுகிளுப்பாத்தான் இருக்கு.. லோ கட்  ஜாக்கெட்ல இவர் கமலிடம் டபுள் மீனிங்கில் பேசும்போது செம கிளு கி்ளு.. ( ஏன்னா டபுள் மீனிங்க் டையலாக்கை லேடீஸ்  பேசும்போது கிக் டபுள்  மடங்கு ஆகிறதுன்னு சென்னிமலை சித்தர் சொல்லி இருக்காரு )


கவுண்டமணி கலக்கல் மணி எப்பவும் போல.. சார்  சார் என பம்பும்போது, இண்ட்டர்வ்யூவுக்கு வந்த ஃபிகர்களிடம் வழியும் போது கலக்குகிறார்.. கே பாக்யராஜ்  சர்வராக சில காட்சிகளில் வருகிறார். ( பாரதிராஜா தான் இவரை வற்புறுத்தி நடிக்க வைத்தாராம்)
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCOuiOGO5xyGhigeElp7udhUYI419vpdey6Q3QTux02dJi2k6pC2HHv6noenOfxAFJ8KdWGtymjzyFJh4po3rybdlE59B9I8ofgY1txiUpfgQizqzSTGMIou5nu3JGE6KuvpxU1TayREU/s1600/Sridevi+Kamal+Haasan+Sreedevi.jpg




இயக்குநர் பாராட்டு பெறும் காட்சிகள்



1. ஹீரோ - ஹீரோயின் காதல் காட்சிகள் அவ்வளவு யதார்த்தம்.. ஹீரோயின் தோழி சீண்டுகையில் ஹீரோயின் வெட்கம்.. செம.. சிலுவையை சுமந்து க்ளைமாக்ஸில் ஹீரோயினை துரத்தும் ஹீரோவின் கண்களில் கொலை வெறி எல்லாம் கலக்கல்.. 



2. படத்தில் லாஜிக் மீறலையும் மீறி மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்திய காட்சிகள் - பூனை ரத்தம் சுவைப்பது, தோட்டத்து மண்ணில் இருந்து பிணத்தின் கை வெளியே வருவது.. அந்தக்கட்சிகளில் இளையராஜாவின் பி ஜி எம் கலக்கல்.. 


3. நத்திங்க் நத்திங்க் என டென்ஷன் ஆகி கமல் கத்தும் டெரர் சீன்.. ஹீரோயினுக்கு முதன் முதலாக ஹீரோவின் இன்னொரு கோர முகம் தெரிய வரும் சீன்,.. பின்னாளில் கே எஸ் ரவிக்குமார் எடுத்த க்ரைம் த்ரில்லர் படமான புரியாத புதிர் படத்தில் ரகுவரன் சொல்லும் ஐ நோ ஐ நோ என்ற புகழ் பெற்ற காட்சி இந்த காட்சியின் உல்டாவே,.,.

4. இளையராஜாவின் அட்டகசமான பின்னணி இசை, தீம் மியூசிக் சாங்க், 2 சூப்பர் ஹிட் பாடல்கள், ஒளீப்பதிவு என டெக்னிக்கல் மேட்டர்ஸ் ஆல் பர்ஃபெக்ட் ( 1978)





http://www.shotpix.com/images/46224764671477334604.png
இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஒரு கம்ப்பெனி ஓனர் தன் கம்பெனில ஒர்க் பண்ற லேடீஸை கரெக்ட் பண்றது எல்லா இடத்திலும் நடப்பதுதான்.. ஆனா இந்தக்கதைல வர்ற ஹீரோவோட எய்மே ரேப் அண்ட் மர்டர் தான்.. எப்படியும் கொலை பண்ணப்போறோம்னு தெரிஞ்சே தான் எல்லாம் பண்றான்.. அப்படி இருக்கறவன் ஏன் தன் கம்பெனி ஆள் மேல கை வைக்கனும்? பின்னால போலீஸ் பிரச்சனை வரும்னு தெரியாதா?  கார் எடுத்துட்டு பஸ் ஸ்டாப் போனா 1000 ஃபிகர்கள் படியும், பிக்கப் பண்ணிட்டு மேட்டரை முடிச்சுட்டு மர்டர் பண்ணிட்டா ரிஸ்க் இல்லை, போலீஸ் ட்ரேஸ் அவுட் பண்ண வழியும் இல்லை ( இதை ஐடியாவா சொல்லலை, கனி இருப்ப காய் கவர்ந்தற்று என்ப்தால் சொன்னேன்)


2. சின்ன வயசுல தனக்கு இழைக்கபட்ட  பாலியல் கொடுமைக்கெதிரா சைக்கோ ஆகும் ஹீரோ தவறான பெண்களை கொலை பண்றது ஓக்கே, எதுக்கு கில்மா?  ( தன் வளர்ப்புத்தந்தை வீடியோவில் பார்க்க என்று சால்ஜாப்பு சொல்லப்பட்டாலும் ஏற்கும்படி இல்லை, அதுக்கு பி எஃப் இருக்கே?)


3. தன் பங்களா தோட்டத்துல  ஏகப்பட்ட பிணம் இருக்கு, அவுட் ஹவுஸ்ல  வளர்ப்புத்தந்தை டி வி ல  பிட்டுப்படம் பார்க்கறார், தன்னைப்பற்றிய சுய விபரக்குறிப்புகள் எழுதபட்ட ரூம் இருக்கு- இத்தனை மைனஸ் இருந்தும் எந்த லூசாவது அந்த பங்களாவுக்கு ஹீரோயினை கூட்டிட்டு போவானா? அவ்லவ் வசதி உள்ளவன் ஏதாவது ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல முதல் இரவை முடிச்சுடுவானே?


4. ஹீரோ ஹீரோயினை காலம் பூரா வெச்சு காப்பாத்த லவ்வறாரா? அல்லது அவரையும் மேட்டரை முடிச்சுட்டு க்ளோஸ் பண்ண திட்டமா? என்பதும் தெளிவா சொல்லப்படலை.. 


5. அவுட் ஹவுஸ்ல பிட்டுப்படம் பார்க்கும் ஹீரோவின் வளர்ப்புத்தந்தை தாழ்ப்பாள் போடாம கதவை அப்படி திறந்து போட்டுட்டா பார்த்து ஹீரோயின் கிட்டே மாட்டிக்குவார்? ( ஏன்னா கில்மாப்படம் பார்ப்பதின் பால பாடமே சவுண்ட் வராம மியூட்ல வைப்பதும் வாசல் கதவை தாழ் போடுவதும் தான் )


http://www.shotpix.com/images/02010586592183352455.png


6. நம்ம வீட்ல ஒரு பெருக்கானோ, எலியோ செத்தா அருவெறுப்பா அதை தூக்கி டிச்சுல ஐ மீன் சாக்கடைல போட்டுடுவோம்.. ஆனா இதுல சஸ்பென்ஸை கூட்ட பெருக்கானை தோட்டத்துல புதைக்கற மாதிரி சீன் வெச்சிருக்காங்க.. தேவை இல்லாத சீன்


7. ஹீரோவின் ஃபிளாஸ்பேக் சீன்ல அந்த காலேஜ் ஃபிகரு கில்மா புக்ஸ் எல்லாம் படிச்சதால சூடாகி ஹீரோவை வலியனா ரேப்புக்கு பிட் போடுது.. கரெக்ட்டா அம்மா வந்துடறாங்க.. பொதுவா இந்த மாதிரி எதுக்கும் துணீஞ்ச கட்டைங்க எதையும் பிளான் பண்ணீ செய்வாங்க.. வாசல் கதவு, வீட்டுக்கதவு தாள் போடாமயா செய்வாங்க.. அம்மா பக்கத்துல கோயிலுக்கு போய் இருக்கா, எந்நேரமும் வர்லாம்னு இருக்கும் சிச்சுவேஷன்ல லைட் மீல்ஸ் சாப்பிட்டா ஓக்கே, ஆற அமர ஃபுல் மீல்ஸ் சாப்பிடறது நாட் ஓக்கே..


8. அந்த காலேஜ் ஃபிகரோட அம்மா ஹீரோ கிட்டே கோயிலுக்கு போறதா சொல்லிட்டு மட்ட மத்தியானம் கிளம்பி போகுது.. எந்த ஊர்ல அந்நேரத்துல கோயில்ல விஷேஷமோ? ஒரு வேளை ஆண்ட்டியும்  கில்மாவுக்கு வேற எங்கேயோ போயிடுச்சு போல.  


9. பயங்கர திகிலா வந்திருக்க வேண்டிய  பூனை காட்சி சரியா எடுக்கலை.. ஒவ்வொரு டைமும் பூனையை யாரோ தூக்கி ஹீரோயின் மேல வீசுவது நல்லா தெரியுது.. இன்னும் பெட்டரா பண்ணி இருந்திருக்கலாம்..


10. கை படாத ரோஜாவா வரும் ஹீரோயின் ஹீரோ பல களம் கண்டவர்னு தெரிஞ்சும் அவருக்காக உருகுவது, குணம் அடைய பிரார்த்திப்பது அக்மார்க் சினிமாத்தனம்.. கொஞ்சம் கூட தார்மீக கோபம் வராதா?


11. ஹீரோ சாட்சியான  சர்வரை கொலை பண்றது ஓக்கே.. அதை ஹோட்டல்லயே செய்யறது டேஞ்சர் ஆச்சே.. ரிமோட்டான ஏரியாவுக்கு வரச்சொல்லி பேரம் பேசி பின் படியலைன்னா அங்கே போட்டுத்தள்ளிட்டா நாளைக்கு போலீஸ் விசாரனை வந்தா ஹீரோ மேல பழி விழாதே..


12. பேரம் பேசும்போது சர்வர் ரூ 50,000 கேட்கறார்.. 1978ல ஒரு பவுன் ரூ 2300  அந்த கணக்கு பிரகாரம் பார்த்தா மார்க்கெட் ரேட் படி ரூ  50 லட்சம்.. ஒரு சாதாரண சர்வர் ஒரு மர்டரர் கிட்டே அவ்ளவ் பணம் கேட்பானா? தன்னையே அவன் கொலை பண்ணிட்டா? என சிந்திக்க மாட்டானா?


http://123tamilforum.com/imgcache2/2011/09/6-11.jpg



அட்டகாசமான பாடல்கள்


1. இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது


2. நினைவோ ஒரு பறவை, விரிக்கும் அதன் சிறகை..


 மனம் கவர்ந்த வசனங்கள்


1. வர்றேன்


 போறேன்னு சொல்லிட்டு போங்க, ஏன்னா நீங்க வந்துட்டுப்போற இடம்  ஜெயில்


 நோ வர்றேன், என் அடுத்த பிறந்த நாளுக்கு இதே ஜெயிலுக்கு..





2. கூண்டுக்கு உள்ளே இருக்கறவங்க எல்லாரும் குற்ற வாளிங்களூம் இல்லை, வெளீல நடமாடிட்டு இருக்கற எல்லாரும் நல்லவங்களும் இல்லை..


3. கவுண்டமணி - சாப்ட்ட்டாச்சா?


யா

 ஆல் ஆஃப் யூ கம் டூ இண்ட்டர்வியூ?நான் தான் மேனேஜர்.. எந்திரிக்க மாட்டீங்களே? ஏன்னா உங்க வயசு அப்படி, என் வயசு இப்படி, வேலை உனக்கு கன்ஃபர்ம்.. அகத்தின் அழகு முகத்தில் தெரியுதே.. டேலண்ட் டேலன்.ட் ஹி ஹி



4. கவுண்டமணி - இண்ட்டர்வியூவுக்கு வந்திருக்கும் லேடீஸ்ல  நீங்க பாதிப்பேரு, நான் பாதிப்பேரு பார்க்கலாமா? ஏன்னா நிறைய பேரு வந்திருக்காங்க..ஆளுக்குப்பாதின்னா வேலை சுளுவா முடியும்.. வேற ஏதும் இல்லை


5. இந்த மாதிரி தான் டிரஸ் பண்ணிட்டு ஆஃபீஸ்க்கு வருவீங்களா?


 (கட் ஷாட் - கனெக்‌ஷன் )- சில நேரங்கள்ல இதுவும் போடறது கிடையாது


6. உங்க பொழுது போக்கு என்ன மிஸ்?


(கட் ஷாட் - கனெக்‌ஷன் )-  பி எஃப் பார்ப்பது, ட்ரிங்க்ஸ் பார்ட்டிஸ்..



7. மிஸ்.. உங்களுக்கு முன் அனுபவம் இருக்கா?

 எதுல? ஐ மீன் ஸ்டெனோ, பி ஏ இப்படி பல வேலை பார்த்திருக்கேன்..


எந்த இடத்துலயும் ஏன் பர்மனெண்ட்டா இல்லை?



8.  உங்களுக்கு வேலை இல்லைன்னு சொல்லிட்டா வாட் யூ ஃபீல்?


 நோ வே..  நோ ஒர்ரி.. இந்த கம்பெனி நல்ல திறமையான  நபரை இழக்கும்



9.  ஓக்கே, நான் உன்னை வெச்சுக்கறேன், ஐ மீன் வேலைக்கு



10. ஹீரோயின் - புது வெரைட்டீஸ் நிறைய வந்திருக்கு, பார்க்கறீங்களா?


 யா யா



http://s3images1.filmorbit.com/media/15/88/35/1588355.jpeg



11. பியூட்டி ஃபுல்..  ஐ டாக் அபவுட் த கர்ச்சீஃப்


12.  ஐ லைக் தட் கலர்.. உங்க இடுப்பு ஓரமா இருக்கே. ஐ லைக் இட்..  பியூட்டி ஃபுல்.. இப்பவும் நான் கர்ச்சீபை தான் சொன்னேன்



13.  பிரேசியர் வேணும்


 என்ன சைஸ்?\


 ஏதோ ஒரு சைஸ் குடுங்க/

 ஓஹோ, உங்க மனைவி சைஸ் சொல்லி விடலையா?



14. எனக்கு இன்னும் மேரேஜ் ஆகலை..  ஹி ஹி


 சரி சரி புரியுது புரியுது



15. சித்ரா 2 நாளா  ஆஃபீஸ் வர்லையே?

 கவுண்டமணி - அந்த ஒரே கவலைதான் சார் எனக்கும்,. 2 நாளா சோறே இறங்கலை



16. ஹீரோயின் தோழி - யூ வாண்ட் பனியன்?

 யா


 கை வைச்சதா? கை வைக்காததா?

 எனக்கு எப்பவும் கை வைக்காததுதான் பிடிக்கும்



17. ஹாய் சினிமாவுக்கு போலாமா?


 அப்போ வார்டன்?

 அவரையும் கூட்டிட்டுப்போகமுடியாதே?



18.நான் ரெகுலரா உங்க கடைக்கு வர்றதால ஆர் யூ மிஸ்டேக்கன் மீ?


ச்சே, ச்சே அதெல்லாம் ஒண்ணும் இல்லை



முன் பின் அறிமுகம் இல்லாம  உங்களுக்கு கர்ச்சீஃப் எல்லாம் கிஃப்ட் பண்ணுனனே அதனால ஏதும் விகல்பா நினைக்கலையே?




ச்சே, ச்சே அதெல்லாம் ஒண்ணும் இல்லை







வர்றப்போ எல்லாம் உங்க டேபுளுக்கே வர்றேனே? அதனால ஏதும் தப்பா நினைக்கலையே?




ச்சே, ச்சே அதெல்லாம் ஒண்ணும் இல்லை


இப்போ நான் உங்க கிட்டே ஐ லவ் யூ சொன்னா தப்பா நினைப்பீங்களா? 




ச்சே, ச்சே அதெல்லா.......அவ்வ்வ்வ்வ்



17. படம் ஓக்கேவா?


 ரொம்ப செக்சியா இருந்துது


 வைகுண்ட ஏகாதசி எப்போ?

 எதுக்கு ?

 அப்போதான் சம்பூர்ண ராமாயணம் போடுவான், போலாம்..



18. முன் அனுபவம் இல்லாம ஒரு காரியத்துல இறங்குனா அது சரி வருமா?

 நோ நோ எந்த காரியத்துலயும் முன் அனுபவம் கண்டிப்பா தேவை

 அதான் நானும் சொல்றேன்.. எப்போ ஆரம்பிக்கலாம்?

 ச்சீய்



19.  என்ன சிரிப்பு?


 கவுண்டமணி - நீங்க முதலாளி, சிரிச்சீங்க, அதான் நானும் சிரிச்சேன்



20. பிரார்த்தனைல உங்களுக்கு நம்பிக்கை இல்லை?

 பரீட்சைக்கு போறப்ப சாமி கும்பிட்டுட்டு போறதை விட நல்லா படிச்சுட்டுப்போகனும்னு நினைக்கறவன் நான்



http://s3images1.filmorbit.com/media/15/88/36/1588361.jpeg



21. சாமி சிலை எவ்ளவ்?

 10 ரூபா


 ரொம்ப சீப்பான சாமி போல./.  சரி சரி முறைக்காத



22. இதுதான் டைனிங்க் டேபிள்.. இதுல நான் உக்காந்து சாப்பிட்டதா நினைவே இல்லை, ஏன்னா  ஐ ஆம் எ லோன்லி மேன், எல்லாம் பெட்ரூம்ல தான்


23.  ஆஃபீஸ்லயே ஒரு டபுள் பெட்ரூம் ரெடி பண்ண சொல்லட்டா?


 எப்பவும் உங்களுக்கு பெட்ரூம் நினைவு தானா?


 சரி, இனி சோபாலயே வெச்சுக்குவோம்



24. இத்தனை புக்ஸும் நீங்க படிச்சவையா?

 யா, இனிமே நோ தியரி, ஒன்லி பிராக்டிகல்.

 அப்போ இவை எல்லாமே.....

 ஹி ஹி எஸ்



25. வாழ்க்கை பூரா நானே ஜெயிக்கனும்கறதுக்காக  யாரையும் விளையாட்டுல சேர்த்துக்கறதில்லை



26. சில பேரோட விதியை வேதனைப்படறதால மாத்திட முடியாது


27. என் பிரார்த்தனைல எனக்கு நம்பிக்கை இருக்கு


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhK5-sAenDxFm9BNqyXEKjGf6G7Acg2313rqwI8euszIHWIaLOaJoNJFKmqjHUnoV4RBOQt-owPKHTSYBA1q33IkrMuyBqJv1PhA03Pz-vsHh6alGLjmNAIpkVGbJZ8AIbeYRuQLPg5HvjP/s320/bharathiraja.jpg



பாடல்கள்



இந்தப்படம் 1980ல ஹிந்தில ரீ மேக் ஆச்சு.. அப்புறம் ஜப்பான் மொழில டப் பண்ணி அங்கே ரிலீஸ் ஆச்சு..

கர்நாடகா -சிருங்கேரி - ஸ்ரீசாரதா பீடத்தின் ஆச்சார்யா ஜகத்குரு. பேட்டி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSIB_dMmT8-lncyaG9nk-Nie1ljXBS_1LIw4VMeU96mafdGBSBrGIjBpKEcCDhan49a5mMuc_ZBRJZIpU1WNjQBJlc71B1Tnh3VhPV0PkhSwh4RXxR7lDqp5hq7WrudomvtI9ckSfrGou2/s320/SirungeriNews1.jpg 

ஆச்சார்ய தரிசனம்




தர்ம சிந்தனை தூண்டப்பட வேண்டும்!




பி.சுவாமிநாதன்




கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புண்ணிய பூமி - சிருங்கேரி. மகான் ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்தாபிதம் செய்த புனிதமான ஸ்ரீசாரதா பீடம் இங்கேதான் அமைந்துள்ளது. ஸ்ரீ சரஸ்வதி தேவியே இங்கு சாரதாதேவியாக அருள்பாலிக்கின்றாள். ஸ்ரீ ஆதி சங்கரருக்கு சிவபெருமான் தந்தருளிய ஸ்படிக லிங்கத்துக்கு சிருங்கேரி பீடாதிபதிகள் இன்றளவும் பூஜை செய்து வருகின்றனர்.



சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் 36ஆவது ஆச்சார்யாளாகத் தற்போது வீற்றிருப்பவர் ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் ஆவார். ‘கல்கி’ இதழின் பிரத்யேகப் பேட்டிக்காக ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளை சென்னையில் சந்தித்தோம். நறுக்குத்தெறித்தாற் போல் தமிழ் பேசுகிறார் ஜகத்குரு.



தங்களுக்கு முந்தைய ஆச்சார்யாளான ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தரிடம் தாங்கள் பார்த்து வியந்த நிகழ்வு ஏதேனும் சொல்லுங்களேன்...?




ஒன்றா, இரண்டா... அவரிடம் நான் பார்த்து வியந்த நிகழ்வுகளை இங்கே சொல்ல ஆரம்பித்தால், அது ஒரு மாபெரும் தொகுப்பாக ஆகிவிடும். 23 வருடங்கள் அவருடன் இருந்திருக்கிறேன்; பயணித்திருக்கிறேன். பல விஷயங்களை எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவரிடம் நான் என்னென்ன அம்சங்களைக் கண்டு வியந்தேனோ, தெரிந்து கொண்டேனோ - அவற்றை எல்லாம் தொகுத்து ‘அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்திரம்’ என்று எழுதி இருக்கிறேன். அதாவது 108 நாமாக்களில் என் குருநாதரின் சரிதத்தை எளிமையாகக் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த நாமாக்களை எவர் ஒருவர் சொல்லிப் பிரார்த்திக்கும்போதும் என் குருநாதரை பிரத்யட்சமாகத் தரிசிக்கலாம்."



தர்ம சிந்தனை இன்று பெருகி இருக்கிறதா?





தர்மம் செய்ய வேண்டும் என்பது ஓர் உணர்வு. எந்த ஓர் உணர்வும் தூண்டப்பட வேண்டும். தூண்டப்பட்டால்தான் அதற்குப் பலன் இருக்கும். எல்லோருக்கும் பக்தி உணர்வு இருக்கிறது. இந்தப் பக்தி உணர்வானது தூண்டப்பட்டால்தான் பலன். பக்தி உணர்வு தூண்டப்படுவதன் வெளிப்பாடே - சத் சங்கம். வழிபாடு. பஜனை. நாம கோஷம்.



அதுபோல் தர்மம் செய்ய வேண்டும் என்கிற எண்ணமும் ஒவ்வொருவருக்குள்ளும் தூண்டப்பட வேண்டும். உரிய சந்தர்ப்பம் வரும்போது இத்தகைய தர்ம உணர்வு ஒவ்வொருவருக்குள்ளும் தூண்டப்படும். தர்மம் செய்ய வேண்டும் என்கிற உணர்வு எல்லோருக்கும் இருக்கிறது. அதற்குரிய சந்தர்ப்பம் வர வேண்டும்.



இன்றைக்கு எனது உபன்யாசம் இங்கே இருக்கிறது என்றால், இதைக் கேட்பதற்கு எல்லோரும் வர வேண்டும். ஆச்சார்யாள் உபன்யாசத்தைக் கேட்க எல்லோரும் வர வேண்டும் என்றால், வருவதற்கு உரிய சந்தர்ப்பம் வாக்க வேண்டும் அல்லவா? சந்தர்ப்பம் அமைந்தால்தானே வர முடியும்?



சந்தர்ப்பம் அமைந்தபின் சிரத்தை வரும். உபன்யாசம் கேட்பதற்கே சந்தர்ப்பம் வரவில்லை என்றால், ஜனங்களுக்கு சிரத்தை எப்படி வரும்? எந்த ஒரு நல்ல காரியத்தையும் கேட்பதற்கு - செய்வதற்கு மக்களுக்கு சந்தர்ப்பத்தைத் தர வேண்டும்."
http://www.ammandharsanam.com/magazine/July2010unicode/images/Thagavlkalangiyam.jpg


நேர்மையாக வாழும்போது அதிக கஷ்டங்கள் வருகின்றனவே? இதுவே பல நேரங்களில் சோர்வைத் தருகின்றதே...?




நேர்மையாக வாழ்ந்து வருபவருக்குத் தான் கஷ்டங்கள் வரும். சோதனைகள் வரும். நியாயம் தோற்பது போல் தெரியும். ‘தோற்றுப் போய் விடுவோமோ’ என்கிற பயம் வரும். ஆனால், கடைசியில் நேர்மை தான் ஜெயிக்கும்.



பொதுவாக, ஆன்மிகத்தில் இருந்தாலே எல்லா கஷ்டங்களையும் பட வேண்டி இருக்கும். கஷ்டப்படுகிறவர்தான் கடைசியில் ஜெயிப்பார். ஸ்ரீராமரின் வாழ்க்கையையும், ஸ்ரீதர்மரின் வாழ்க்கையையும் பார்த்தாலே இது புரியும்.



மூன்று லோகங்களையும் ஆண்டவன் ராவணன். புஷ்பக விமானம் என்ன... படாடோபமான அரண்மனை என்ன... சோகுசாக இருந்தான். ஆனால், ராமபிரானுக்கு என்ன வசதி இருந்தது? அவர் பட்ட கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா? கடைசியில், ராவணனின் கொட்டம் அடங்கி, சத்தியம் ஜெயித்து, ராமபிரான் சக்கரவர்த்தி ஆனாரே!



எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். கடவுளின் கண்களை நம்மால் மூட முடியாது. இது நினைவில் இருக்க வேண்டும்."



பிரார்த்தனை செய்தால், அது பலித்து விடுமா? ஒருவரின் பிரார்த்தனை பலிக்க என்ன செய்ய வேண்டும்?





பிரார்த்தனை மட்டும் போதாது. பக்தியும் நம்பிக்கையும் வேண்டும். பக்தியும் நம்பிக்கையும் இல்லாமல் செய்யப்படுகின்ற பிரார்த்தனை பலன் தராது

.

இன்றைக்கு எல்லோரிடமும் நம்பிக்கை இருக்கிறது. ‘நிச்சயம் நல்லது நடக்கும்... நடக்க வேண்டும்’ என்று நம்பித்தான் பக்தி உணர்வு மேலோங்க கோயிலுக்கும் பீடங்களுக்கும் வருகிறார்கள். தங்கள் பிரார்த்தனைகளை அங்கே வைத்து அவை நிறைவேறப் பெறுகிறார்கள்."




மதங்களுக்கும் அரசியலுக்கும் தொடர்பு இருக்கிறதா?



அரசியலுக்கு மதம் தேவை இல்லை. ஆனால், தர்மம் அவசியம் தேவை.



தர்மம் என்றால் என்ன? உண்மை. இந்த உண்மையைத்தான் நாம் தர்மம் என்கிறோம். ‘நான் அரசியலுக்கு வந்து விட்டேன். இனிமேல் உண்மை பேசவே மாட்டேன்’ என்று யாராவது சொல்ல முடியுமா? தர்மத்தை மீற முடியுமா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKCIVaovKPvyB2lfHJ7MeHbG0xjjSTufeEYHbDIEe0g0S57qRHdjN4s6ZX_Wi5ppe88gq3mnL7yi-jNjMp2hH_V2u9GOK3fxb3eYT3vxEjN7eZhSsgynv6H2sZTrfoCHfPi5EHwMxv4Jk/s640/sringeri+mutt9.jpg

மதத்தையும் தர்மத்தையும் சேர்த்துக் குழப்பிக் கொள்ளக் கூடாது. மதம் என்பது ஒவ்வொருவரும் தொன்றுதொட்டுப் பின்பற்றி வரும் வழி. ஆனால், தர்மம் என்பது இந்த மதத்துக்கு மட்டும் தான் என்றில்லை. எல்லா மதத்துக்கும் உண்டு. ‘அப்பா- அம்மாவை வைத்துக் கடைசிவரை காப்பாற்ற வேண்டும்’ என்பது இந்து மதத்துக்கு மட்டுமில்லை... உலகில் இருக்கிற எல்லா மதங்களுமே இதைப் போதிக்கின்றன. ‘திருடக் கூடாது... பொய் சொல்லக் கூடாது’ என்பதை இந்து மதம்தான் என்றில்லை... அனைத்து மதங்களுமே போதிக்கின்றன. நாம் கொண்டுள்ள தர்மத்தை எந்த நாளும் கைவிடக் கூடாது."



புன்னகைத்து விடைகொடுக்கிறார் ஜகத்குரு. அவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறோம். ஒரு சமஸ்தானத்தை - சன்னிதானத்தைத் தரிசித்த ஆனந்தமும் சிலிர்ப்பும் மேலோங்க... வெளியே வந்தால் - பெரும் ஜனத்திரள் இந்த மஹா ஸ்வாமிகளின் தரிசனத்துக்காகக் காத்திருக்கிறது.



சென்னையில் சாதுர்மாஸ்யம்





சிருங்கேரியின் 35-வது ஆச்சார்யாளாக இருந்த ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தரால் அடையாளம் காணப்பட்டு, சிறு வயதிலேயே சந்நியாசம் பெற்றவர் ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்.



ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் நாகுலேரு நதிக்கரையில் அமைந்துள்ள அலகுமல்லிபடு கிராமத்தில் 1951-ல் அவதரித்தவர் ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள். பெற்றோர் இவருக்கு வைத்த திருநாமம் - சீதாராம ஆஞ்சநேயலு. பள்ளியில் படித்த காலத்திலிருந்தே சம்ஸ்க்ருத மொழியிலும் கவிதை புனைவதிலும் கரை கண்ட சீதாராம ஆஞ்சநேயலு, சிறந்த சிவ பக்தர்.



அப்போது சீதாராம ஆஞ்சநேயலுக்கு வயது ஒன்பது. சிருங்கேரி பீடத்தில் 35-வது ஆச்சார்யாளான ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள் ஒரு முறை சீதாராம ஆஞ்சநேயலு படித்து வரும் பள்ளிக்கு விஜயம் செய்தார். சீதாராம ஆஞ்சநேயலுவின் அளவு கடந்த ஞானம், குருதேவரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. சிறிது நேரம் உரையாடிவிட்டு, சிறுவனுக்குப் பொன்னாடை வழங்கி அருள் பாலித்தார்.



அடுத்தடுத்து வந்த ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தரின் யாத்திரைகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார் சீதாராம ஆஞ்சநேயலு. இப்படித்தான் குருவுக்கும் சீடனுக்கும் அன்னியோன்னியமும் ஏற்பட்டது.



தன் 23-வது வயதில் (1974-ல்) ‘ஸ்ரீபாரதீ தீர்த்தர்’ எனும் தீக்ஷா நாமத்துடன் - புகழ் பெற்ற சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் 36-வது ஆச்சார்யாளாகப் பொறுப்பேற்றுக் கொண்டார் சீதாராம ஆஞ்சநேயலு. 1989-ல் ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகளின் முக்திக்குப் பின் பாரத தேசத்தின் ஒப்பற்ற குருவாக இவர் அமைந்து உலா வருவது நாம் பெற்ற பேறு. 1960-ஆம் ஆண்டு சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள் சென்னை தி.நகரில் சாதுர்மாஸ்ய விரதத்தை (சந்நியாசிகள் அனுஷ்டிக்கும் விரதம்) மேற்கொண்டார். அவருக்கு அடுத்த சிருங்கேரி பீடாதிபதியான ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் தற்போது சென்னை மயிலாப்பூரில் ‘சுதர்மா’ இல்லத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டித்து வருகிறார்.


http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_448861.jpgA



நன்றி - கல்கி, சீதாரவி, அமிர்தம் சூர்யா, கதிர்பாரதி, புலவர் தருமி

பெருந்துறை சுசி ஈமுப்பண்ணை - கோடிக்கணக்கில் மோசடி - தலைமறைவு


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

ஈமு கோழிப்பண்ணையின் தாயகம் என சொல்லப்படும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சுசி ஈமுக்கோழிப்பண்ணை இழுத்து மூடப்பட்டது.. நேற்று அங்கே ஒரே பரபரப்பாக இருந்தது, மக்கள், முதலீட்டாளர்கள் கூட்டம் கூடி இருந்தது.. கொடுத்த பணத்தை திருப்பிக்கொடு என்று கோஷம் போட்டார்கள்.


ஆர் பார்த்திபன், கே பாக்யராஜ், பரவை முனியம்மா போன்ற பலர் பணத்தை வாங்கிக்கொண்டு எல்லாம் தெரிந்தவர்கள் போல கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்டை படித்து நடித்து விட்டுப்போகிறார்கள்.. இது சமுதாயத்தை எந்த அளவு பாதிக்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை.. 

 ஒரு சோப் விளம்பரமோ, ஷாம்பு விளம்பரமோ இந்த அளவு பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. ஆனால் லட்சக்கணக்கான முதலீடு சம்பந்தப்பட்ட மேட்டர் என்பதால் மக்கள் ஒரு நம்பகத்தன்மையை  சினிமா பிரபலங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். 


மக்கள் இவர்களைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.. சினிமா பிரபலங்களும் காசு கிடைக்குதுன்னு கண்ட கண்ட விளம்பரங்களில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்.. இதனால் பாதிக்கப்படுவது அவர்கள் இமேஜும் தான்..


நேற்று மாலை 5 மணிக்கு  முதலீட்டாளர்கள் வாசலில் கூடி நின்று கோஷம் போட்டிருக்கிறார்கள்.. கொடுத்த பணத்தை திருப்பிக்கொடு, லாபம் ஏதும் வேண்டாம், முதலீட்டுத்தொகை மட்டும் போதும் என  கெஞ்சிக்கேட்டும் பொறுப்பான பதில் இல்லை..


ஈரோடு, கோவை, சேலம் மாவட்டங்களில் மட்டும்  கிட்டத்தட்ட 18 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.. முழுமையான விபரம் இன்னும் 2 நாட்களில் தெரியும்..  பணத்தை இழந்தவர்கள் பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து வருகிறார்கள்.. பலர் வெளியே சொன்னால் கேவலம் என்று யோசித்து வருகிறார்கள்..


 கலைமகள் சபா, தேக்கு மர மோசடி ஆகியவற்றுக்குப்பின் சமீபத்தில் நடந்த மிகப்பெரும் மோசடி இதுதான்.. கவுண்டர்கள் , முதலியார்கள் சமூகத்தினர் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது ..


ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ 6000 தருவதாக வாகு கொடுத்தவர்கள் அபப்டி தர முடியாததால்  வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் கேள்விக்கு பதில் தர முடியாமல் திணறினர்..

 அரசு 80 ப்பைசா வட்டி தருது, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் தனியார் சீட்டு நிறுவனங்கள் நமக்கு ரூ 2 முதல் ரூ3 வரை வட்டி தருது.. அப்படி இருக்க ரூ 100க்கு ரூ 6 வட்டி என்றதும் மக்கள் அது எப்படி முடியும்? என்றெல்லாம் யோசிக்காமல் முதலீட்டை அள்ளி அள்ளி வழங்கினர்,..


இப்போ உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா என்ற பழமொழிக்கெற்ப சோகத்தோடு உலா வருகின்றனர்..


ஈமு கோழிகளுக்கு தீவனம் வழங்கும் நிறுவனத்துக்கு இவர்கள் ரூ 1,34,000 பாக்கி வைத்திருக்கிறார்கள்.. எனவே அவர்கள் சப்ளையை நிறுத்தி விட்டார்கள். விஷயம் வெளீயே கசிந்ததும் மக்கள் பொங்கி விட்டார்கள்..


 மக்களின் புகாருக்குப்பின் போலீஸ் பெருந்துறை சுசி பண்ணை உரிமையாளர்  குருவை தொடர்பு கொண்டபோது அண்ணன் செல்லை ஸ்விட்ச் ஆஃப் பண்ணீ விட்டிருந்தார்.. கம்ப்யூட்டர்களை செக் பண்ணியபோது அவர்கள் வங்கிக்கணக்கில் ரூ  18,78,000 மட்டுமே இருந்தது..


இது மேலும் அதிர்ச்சி.,. ஏன்னா குறைஞ்ச பட்சம் 1000 பேர் தலா 1 லட்சம்னு முதலீடு  கணக்கு போட்டலும் 10 கோடி ரூபா இருக்கனும்.. எல்லாம் ஸ்வாகாவா? தெரியலை




 சுசி ஈமு பண்ணை ஒரு வருடம் முன் தமிழ் முரசு பத்திரிக்கைக்கு கொடுத்த இண்ட்டர்வியூவை இப்போ பார்ப்போம்






‘ஈமு கோழி வளர்ப்பு தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. பண்ணை அமைத்து சிரத்தையுடன் தொழிலில் ஈடுபட்டால் லாபத்தை அள்ளலாம் என்று கூறுகிறார் ஈரோடு மாவட்டம் பெருந்துறை யில் ‘சுசி ஈமு பார்ம்ஸ் இந்தியா’ நடத்திவரும் எம்ஜிஎஸ்.அவர் கூறியதாவது:





நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். கல்லூரி படிப்பை முடித்தவுடன் தனியார் நிறுவனத்தில் மாதம் 8 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைபார்த்து வந்தேன். விவசாயம் மற்றும் பண்ணைகள் பற்றிய தகவல்களை ஆர்வமுடன் தெரிந்து கொள்வேன். ஆந்திரா, புதுவை ஆகிய இடங்களில் உள்ள பண்ணைகளுக்கு சென்று ஈமு கோழி வளர்ப்பு குறித்து முழுமையாக அறிந்துகொண்டேன்
.




2004ம் ஆண்டு 5 ஜோடி ஈமு கோழிகளுடன் பெருந்துறையில் பண்ணை துவங்கினேன். அவை முட்டையிட துவங்கியதும்  வேறொரு பண்ணையாளரிடம் கொடுத்து குஞ்சு பொரிக்க செய்து, அவற்றையும் சேர்த்து வளர்த் தேன். ஈமு வளர்ப்பையே முழு நேர தொழிலாக மேற் கொண்டேன். தமிழகத்தில் ஈமு எண்ணிக்கை குறைவு. ஒப்பந்த அடிப்படையில் ஈமுவை வளர்க்க விவசாயிகளிடம் ஆர்வத்தை உருவாக்கினேன்.  சிரமம் இல்லாத வளர்ப்பு முறை, அதனால் கிடைக்கும் வருமானத்தை பார்த்து இன்று தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையிலும், சொந்தமாகவும் ஆயிரக்கணக்கானோர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.




சந்தை வாய்ப்பு!



ஈமு இறைச்சி விற்பனையாளர்கள் நேரடியாகவே பண்ணைக்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். அக்கம்பக்கத்தினர் வீட்டுத்தேவைக்கும், விசேஷங்களுக்கும் வாங்கிச் செல்வார்கள். ஓட்டல்கள், உணவு விடுதிகளுக்கும் நேரடியாக ஆர்டர் பிடித்து சப்ளை செய்யலாம்.




பயன்கள்: மற்ற பறவை, விலங்கி னங்களை ஒப்பிடும்போது ஈமுவில் கழிவு குறைவு. முட்டை, இறைச்சி, எண்ணெய் கிடைக்கிறது. ஈமு கோழிகளின் இறைச்சி மற்ற இறைச்சிகளை விட சுவையில் தனித்தன்மை வாய்ந்தவை. ஆடு, மாடு போன்ற கால்நடைகள்தான் சிவப்பு மாமிசம் கொடுக்கும். சிவப்பு மாமிசம் கொடுக்கும் பறவை இனம் ஈமு. ஈமு இறைச்சிக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.  40 முதல் 45 கிலோ எடை கொண்ட ஈமுவை இறைச்சிக்காக வெட்டும்போது 10 முதல் 12 கிலோ கொழுப்பு தனியாக கிடைக்கும்.



கொழுப்பை காய்ச்சி எண்ணெய் எடுக்கப்படுகிறது. 5 முதல் 6 லிட்டர் ஈமு எண் ணெய் கிடைக்கும். சுத்திகரிப்பு செய்து வலி நிவாரணி, அழகு சாதன கிரீம்கள் தயாரிக்க பயன்படுத்தப்படு கிறது. ஒரு ஈமுவில் 6 சதுரஅடி தோல் கிடைக்கும். மிருதுவாகவும், அதிக வலுவாகவும் இருப்பதால் செருப்பு, கைப்பை, பர்ஸ்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.



இதன் சிறகுகள்  கம்ப்யூட்டர் போன்ற இயந்திரங்களை சுத்தம் செய்யும் பிரஷ்கள் தயாரிக்கவும், அழகான தொப்பிகள், ஆடைகளின் மேல் அழகு வேலை பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாஸ்து பொருளாகவும் ஈமு முட்டைகளை பயன்படுத்துகின்றனர். ஈமு முட்டைகளை வீட்டில் வைத்திருந்தால் செல்வம் பெருகும் என்பது அவர்களது நம்பிக்கை.

கட்டமைப்பு


பண்ணை தொடங்க குறைந்தது 5 ஜோடி ஈமு குஞ்சுகள்(ரூ.75 ஆயிரம்) வேண்டும். 40 அடி நீளம், 35 அடி அகல இடம் வேண்டும். இடத்தை சுற்றி 5 அடி உயரம் கம்பி வேலி, தீவனம் மழையில் நனையாமல் இருக்க சிறிய ஆஸ்பெஸ்டாஸ் ஷெட், தீவனம் வைக்க 2 பாத்திரம், தண்ணீர் தொட்டி (இதற்கு செலவு ரூ.15 ஆயிரம்), முட்டைகளை பொரிக்க வைக்க இன்குபேட்டர் (ரூ.3 லட்சம்), சீரான மின் சப்ளைக்கு ஜெனரேட்டர் (ரூ.1 லட்சம்) போன்றவை வேண்டும்.



எங்கு வாங்கலாம்?



ஈமு குஞ்சுகள் மற்றும் தீவனங்களை தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் உள்ள ஈமு பண்ணைகளில் பெற்றுக் கொள்ளலாம். இன்குபேட்டர், ஹேச்சர் மெஷின் ஐதராபாத்தில் கிடைக்கும்.



குஞ்சுகள் தேர்வு



ஈமு குஞ்சுகளை வாங்கும்போது பார்வை, கேட்கும் திறன் சரியாக உள்ளதா, கால்களை வளைக்காமல் நடக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். 3 மாதத்துக்கு மேற்பட்ட குஞ்சுகளைதான் வாங்க வேண்டும். முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகளுக்கு 3 மாதம் வரை உடல் பகுதியில் வெள்ளை கோடுகள் இருக்கும். 3 மாதத்துக்கு பின் கோடுகள் மறைந்து இயல்பான நிறம் வரும். 3 மாத ஈமு, 4 முதல் 6 கிலோ எடை இருக்கும்.



வளர்ப்பு முறை



3 மாத குஞ்சுகளை வாங்கிவந்து 5 மாதம் வரை கூட்டமாக வளர்க்கலாம். ஆண், பெண் தெரிந்த பின்  தனித்தனியாக பிரித்து வளர்க்க வேண்டும். பெண் ஈமுக்கள் 18வது மாதத்தில் முட்டையிடும் பருவத்துக்கு வரும். தொண்டையில் இருந்து தும்தும் என ஒலி எழுப்புவதை வைத்து இதை தெரிந்து கொள்ளலாம்.   24வது மாதத்தில் இனச்சேர்க்கைக்கு  விட்டால் அதிக முட்டை கிடைப்பதோடு தரமான குஞ்சுகளையும் பொரிக்க வைக்க முடியும்.



குஞ்சு பொரிப்பு


ஹேச்சர் மெஷினில் ஒரே நேரத்தில் 700 முட்டைகளை அடுக்கி வைத்து, 93 முதல் 96 டிகிரி வரை தொடர்ந்து 52 நாட்களுக்கு  வைத்திருக்க வேண்டும். பொரித்த குஞ்சுகளுக்கு கால்கள் வளையாமல் இருக்க 2 கால்களையும் சேர்த்து டேப் மூலம் ஒட்டி விடவேண்டும். 15 நாட்களுக்கு பின் டேப்பை பிரித்து இன்குபேட்டரில் 20 நாட்களுக்கு வைக்க வேண்டும். பின்னர் குஞ்சுகளுக்காக தனியாக ஷெட் அமைத்து ஒரு மாதம் வளர்க்க வேண்டும். 3 மாதத்துக்கு பின்னர் வளர்ந்த கோழியாக மாறும்.



வருமானம்


3 மாத வயதுள்ள 5 ஜோடி ஈமு வளர்த்தால் 16 மாதத்துக்குள் 30 கிலோ எடையுள்ள ஈமு கோழி கிடைக்கும். 5 ஜோடியும் சராசரியாக 30 கிலோ எடை இருந்தால் 300 கிலோ இறைச்சி கிடைக்கும். ஒரு கிலோ இறைச்சி குறைந்தபட்சம் ரூ.295க்கு விற்பனை செய்யலாம். இதன் மூலம் ரூ.88,500 கிடைக்கும். வெட்டப்படும் கோழிகளில் இருந்து 5 லிட்டர் எண்ணெய் வீதம் 5 ஜோடி ஈமுவுக்கு 50 லிட்டர் ஈமு எண்ணெய் கிடைக்கும். ஒரு லிட்டர் ரூ.1500க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.75 ஆயிரம் கிடைக்கும். இறைச்சி, கொழுப்பு மூலம் ஒரு ஆண்டில் ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்து 500 கிடைக்கும்.


இதற்கான செலவு 5 ஜோடி ஈமு கோழிகள் ரூ.75 ஆயிரம், 15 மாதத்திற்கு அதற்கான தீனி உள்பட மற்ற செலவுகள் ரூ.25 ஆயிரம். ஆண்டு முடிவில் 5 ஜோடிகளுக்கு மட்டும் ரூ.63,500 வருமானம் கிடைக்கும். 15 மாதத்தில் இறைச்சிக்காக ஈமுக்களை


இனவிருத்தி செய்து வளர்த்தால் பெண் ஈமுக்கள் 18வது மாதத்தில் பருவத்துக்கு வந்து ஆண்டுக்கு 20 முட்டைகள் தரும். 5 ஜோடி வளர்க்கும்போது 100 முட்டைகள் கிடைக்கும். இதன்மூலம் தரமான 60 குஞ்சுகள் கிடைத்தால் அவற்றை விற்று ரூ.4.5 லட்சம் சம்பாதிக்கலாம்.



தினமணி செய்தி - ஈரோடு பகுதியில் சுசீ ஈமு ஃபார்ம் - ஈமு கோழி வளர்ப்பு நிறுவனத்தில் கடந்த 3 நாள்களாக கோழித் தீவனம் இன்றி திண்டாடுவதால், ஈமு கோழிகள் தீவனம் இன்றி வாடிப் போயுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 


சுசீ ஈமு ஃபார்ம் கோழிப் பண்ணையில் முதலீடு செய்தவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக புகார் அளித்து, பண்ணையை முற்றுகையிட்டு வருகின்றனர். இதனால் பண்ணையின் செயல்பாடு தடைப்பட்டுள்ளது. கோழிப் பண்ணை நிர்வாக இயக்குனர் மீது முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்தனர் போலீஸார். இந்நிலையில் இன்று அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. 


அதிகாரிகள் அந்தக் கோழி நிறுவனத்தின் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த 75 ஆயிரம் ஈமு கோழிகளுக்குத் தேவையான தீவனம் நிறுவனத்தில் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. கடந்த 3 நாள்களாக கோழிகள் தீவனமின்றி இருந்ததும் தெரியவந்தது. அதிகாரிகளும் அவற்றின் தீவனத்துக்கு வழி தெரியாமல் திண்டாடுகின்றனர். கோழிகளையும் அழிக்க முடியாது என்பதால் சரியான தீர்வு குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

 



நன்றி - ஈரோடு சோழமண்டலம்  ஃபைனான்ஸ் கதிர், தமிழ் முரசு, பெருந்துறை நகர பொதுமக்கள், பெருந்துறை போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு, தினமணி

செவ்வாய் கிரக வெற்றி ! கலைஞர் , ஜெ அறிக்கை ( ஜோக்ஸ் & ட்வீட்ஸ் )

சுகமுடன்.....!
1.கண்டக்டர் - இது லேடீஸ் சீட்;ஜெண்ட்ஸ் உக்கார முடியாது. 



 அப்பாடக்கர் ஆறுமுகம் - இல்லியே ;உக்காரமுடியுதே் 




--------------------


2. டீச்சர் - ஏன் 20 வது ரேங்க் வாங்கி இருக்கே? வெட்கமா இல்லை? 



மக்கு ஜக்கு -நோ மிஸ் ஆனானப்பட்ட இந்தியாவே ஒலிம்பிக்ல 39 வது ரேங்க்தான் 



------------------------


3. முன் பின் அறிமுகம் இல்லாத பிகருடன் கடலை ஸ்டார்ட் பண்ண எது நல்ல நாள்?



டவுட் என்ன? நண்பர்கள் தினம் தான், இந்த நாள் இனிய நாள் # ஹாய் மிஸ் ஹேப்பி பிரண்ட்ஸ் டே அன்ட் நைட் அப்டினு ஸ்டார்ட் பண்ணிடலாம்



-------------------------



4. மார்க்கெட், சூப்பர் மார்க்கெட் என்ன வித்தியாசம்?



மார்க்கெட் (உழவர் சந்தை) = குறைந்த விலை ,நேரடி கொள்முதல் ,சூப்பர் மார்க்கெட் = டபுள் மடங்கு விலை ;பிரிட்ஜில் வைத்த பழைய காய்கறி 




------------------------


5. தலைவர் இவ்ளவ் அப்பாவியா இருக்காரே?

 ஏன்?


வத்தலும் தொத்தலுமா இருக்கும் ஒல்லிபெண் கடனை கட்ட வைக்கும் குழம்பு தான் வத்தல் குழம்பானு கேட்கறாரே?



-------------------------------


கிழிந்து போன
உயிர்
ஒற்றைக் கவிதைத் தாளாய்
உன் பாதையில் வந்து விழுகிறது.
அப்போதும் நீ
கடந்து போகவே செய்கிறாய்.


6. அத்தான், அந்தமான் பார்க்க போலாமா?



 உங்கப்பா செலவுன்னா மாரீச மானா இருந்தாலும் ஓக்கே, என் செலவுன்னா ஜூ - மான் மட்டும் (zoo  மான்)



-----------------


7. தலைவருக்கு லொள்ஸ் ஜாஸ்தின்னு எபப்டி சொல்றே?


சோழா பூரி, சோளக்கருது ( சோளக்கதிர்) இதெல்லாம் சோழ பரம்பரைகள் வழித்தோன்றல்கள் தான் சாப்பிடனுமா?  னு கேட்கறாரே/



------------------


8. நித்யானந்தா குறித்து கேள்வி வேண்டாம்: மதுரை ஆதீனம் சலிப்பு # அப்போ ரஞ்சிதா, ஆர்த்தி பற்றி கேட்டா களிப்பு?



--------------------------


9. புகழ்வதை பிடிக்காமல் ஏற்கிறேன் - இளையராஜா!  # கலைஞர் மாதிரி? நல்ல இசைக்”கலைஞர்”



-------------------------


10. ஜட்ஜ் - பட்டப்பகல்ல கிரானைட் கடத்தி இருக்கே? 



 கைதி - கிரா”நைட்” ந்கறதுக்காக நைட்ல கடத்த முடியும்ங்களா?



-------------------


Photo


11. அழகி நம்மை கடந்து சென்றால் அது கடந்த காலமா? நிகழ்காலமா? 


-----------------


12. கடவுள் - பக்தா! எனக்கு படைச்சுட்டு ஏன் நீ சாப்பிடறே? 


பக்தன் - எல்லா படைப்பும் உன்னுது,ஆனால் அதற்கான உரிமை மட்டும் என்னுது


-----------------------


13. ஜோசியர் - மேரேஜ் ஆகாத ஒரு நபர் தான் அடுத்த  பிரதமர் .



 ராகுல்காந்தி, ஜெ - ஐ ஜாலி, அப்போ நாம தான் பி எம்



-----------------------------


14. அத்தான்,தாய்ப்பால் குடுத்தால் அழகு குறைஞ்சிடுமா?  



கொடுக்கலைன்னா தாய்மையின் அழகு குறைஞ்சுடும்


----------------------------


15. இழுக்க இழுக்க துன்பம் தருவது - மெகா சீரியல், தம்,பாஞ்சாலியின் சேலைத்தலைப்பு



-------------------------


Photo: Iniya maalai vanakkam


16.உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டே - இதை லேடீஸ் ஜெண்ட்ஸ் கிட்டே சொல்ல முடியாது



-------------------------


17. மதுபானக்கடை = பல சரக்கு கடை



------------------



18.  இந்தியாவில் காங்கிரஸ்க்கான இடம் எப்போது மறுக்கப்படுகிறதோ அப்போதுதான் நமக்கு உண்மையான விடுதலை,அதுவே "கை”யறு நிலை"



----------------------------


19.மிஸ்டர் சாரு, உங்க எழுத்தால இந்த உலகத்தை “புரட்டிப்போட்ரலாம்”னு நினைக்கறீங்களா?


 சாரு - ஹா ஹா  என் இலக்கு உலகம் அல்ல, ஹி ஹி மியாவ்


--------------------


20.மார்க்சியெம் = சி எம் டென்த்ல , பிளஸ்டூ ல வாங்குன மார்க்?




-----------------------------



Photo: "Success also hurts,
When u dont have a loved one
to  Wish u..

Failure also looks beatiful,
When u have a loved one
to  support u..!

# Eppadillam nammalai theatrikka vendi irukku da saami..!


21. என்னை மிகவும் பாதித்த கவி - பாரதி, பாதித்த  பாவி - பா . ரதி 




-----------


22. டியர், அர்ஜெண்ட்டா லிப் கிஸ் வேணும்.. 



எதுக்கு?



 செவ்”வாய் ”கிரஹத்துல விண்கலம் இறங்கிடுச்சு, கொண்டாடவேணாமா? 



-------------------------


 23. இலவம்பஞ்சு மெத்தையில் படுத்தால் முதுகு வலி வருமாம் # படுத்தறிவு



------------------------


24. நல்ல வேளை, ஒலிம்பிக்ல ஆணுக்கு வெள்ளி, பொண்ணுக்கு வெண்கலம், ஆணாதிக்கம்னு யாரும் கிளம்பலை # இந்தியா




------


25. பொண்ணுங்களுக்கு கெட்டிக்காரங்களை  பார்த்ததும் பிடிக்கும்.உடனே லவ் பண்ணி, மேரேஜ் பண்ணி அவனை முட்டாள் ஆக்கிட்டுத்தான் மறுவேலை



---------


Photo: piriyangal surundu kidakkirathu,
en kanavugalil..!



26. செவ்வாய் கிரஹத்துல விண்கலம் இறங்கிடுச்சாம்...



. அடக்கிரகமே.


. நோ, செவ்வாய் கிரகம்


----------------------------





27.ஜெ- எதையும் முன் கூட்டியே செய்து விடும் அரசு இது, அதனால் தான் செவ்வாயில் இறங்க வேண்டிய விண்கலம் திங்கள் அன்றே இறங்கிவிட்டது


-------------------


28.கலைஞரின்  மோசமான ஆட்சியிலே முறிந்து போன சிம்பு - நயன்தாரா தூய நட்பு இப்போது எனது ஆட்சியிலே புதுப்பிக்கப்பட்டது, அண்ணா நாமம் வாழ்க -ஜெ



-----------------


29. செவ்வாயில் ஈரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது # ஜொள்


-------------------

30. செவ்வாயில் நில ஆக்ரமிப்பு , மணல் கொள்ளை செய்ய முடியுமா? கலைஞர் அவசர ஆலோசனை, பொதுக்குழு கூட்டப்பட்டது



-------------------------


Photo: GOOD MORNING..

Monday, August 06, 2012

குதிரை -சுஜாதா - சிறுகதை ( நகைச்சுவை)

சிலருக்கு லாட்டரியில் பரிசு விழுகிறது. சிலரை பிரபல டைரக்டர் பஸ்ஸடாண்டில் பார்த்து “அடுத்த அமாவாசைக்கு ஷ¨ட்டிங்குக்கு வா” என்கிறார்.இப்படித் திடீர் என்று தனிமனிதர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.ஏதோ ஒரு வகையில் பிரசித்தி பெறுகிறார்கள்.அம்மாதிரி நானும் பிரசித்தமானேன். என்னை ஒரு குதிரை கடித்ததால்!





“குதிரையா?” என்று வியப்புடன் கேட்கிறீர்கள் அல்லவா? உங்களுக்குச் சொல்கிறேன். முதலில் என்னைப் பற்றி. அப்புறம் குதிரையைப் பற்றி. என்பேர் கிஷ்ண சாமி அதை கிச்சாமி என்று சுருக்கி மனதில் ஒரு பிம்பம் ஏற்படுததிப் பாருங்கள். அதேதான் நான். தொழில், தோற்றம் என்று எந்த வகையிலும் எனக்குப் பிரத்தியேகம் கிடையாது. தினப்படி காப்பி குடித்து, பேப்பர் படிதது, துணி மடித்து, பஸ் பிடித்து அங்குலம் அங்குலமாக மாயும் மனித எறும்பு.




மனைவி, குழநதை ,மாமனார், வாடகை வீடு, பாத்ரூமில் பாட்டு, மண் தொட்டியில் ஒன்றிரண்டு மலர்ச்செடிகள், தவணை முறையில் ரேடியோ என்று பிரகாசமற்ற பிரஜைதான் நான்.



குதிரை கடிக்கும் வரை! குதிரையும் அவ்வளவு பிரசித்தமில்லாத ஜட்கா வண்டிக் குதிரைதான்.எங்கள் வீட்டிலிருந்து அஹமத் ஸ்டோர்ஸ்க்கு போகும் வழியில் ஆஸ்பத்திரி இருக்கிறது.அதன் வாசலில் வழக்கம்போல் இளநீர் காலி பாட்டில்கள் எல்லாம் விற்கும் இடத்துக்கு எதிரே ஒரு குதிரைலாயம் இருக்கிறது. பொதுவாக எல்லா ஆஸ்பத்திரிகளுக்கும் எதிரில் இந்த லாயம் இருப்பதை நீங்கள் கவனித் திருக்கலாம்.


இந்த லாயங்களில் மற்றொன்றையும் கவனித்திருக்கலாம், திருச்சி தென்னுர் போனலும் பிட்ரகுண்டா போனலும். ஒரே அமைப்பு. உயரமான கருங்கல் கம்பங்கள் மேல் ஜாக்கிரதையாக ஓடு வேய்ந்திருக்கும். நடுவே 1938 ல் ஏதோ ஒரு உள்ளூர் நாயுடுவின் உபயத்தில் கட்டடப் பட்டது என்று அறிவித்து ஒரு தண்ணீர்த் தொட்டி இருக்கும்.நகரச் சந்தடியில் ஒரு சோம்பேறித் தீவாக கொஞ்சம் சேணம்,கொஞ்சம் லத்தி ஈரப்புல் கலந்து நாற்றமடிக்கும்.



வண்டிக் காரர்க்ள் சுகமாக எங்கேயோ கவனித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். ஒன்றிரண்டு குட்டிக் குதிரைகள் தெனபடும்.அவை அழகாக இருக்கும். திடீர் என்று குதிரைக் குட்டி உற்சாகம் பெற்று வெறி பிடித்தாற்போல போக்கு வரத்தின் ஊடே ஓடும். இந்த மாதிரித் தான் நான் சொல்லும் இடமும். அதைக் கடந்து செல்லும்போது லேசாக மழை பெய்ததால் சற்று ஒதுங்கி குதிரைகளின் கிட்டே நடந்து போனேன்.



சில குதிரைகள் என்னை சட்டை செய்யாமல் அவ்வப்போது உடம்பில் எதிர்பாராத இடங்களைச் சிலிர்த்துக்கொண்டு தெய்வமே என்று வண்டிக்காரன் கொடுத்ததை மென்று கொண்டிருந்தன. எல்லாமே கிழட்டுக் குதிரைகள். முதுகெலும்புகள் தெரிய தோள்பட்டையில் தழும்போடு கால்கள் ஜபேட் அடித்து குதிரையா கழுதையா என்று தீர்மானமாக சொல்ல முடியாத அளவுக்கு இருந்தன. அவற்றில் ஒன்று என் முழங்கையைக் கடித்துவிட்டது.



நான் நடந்து கெசாண்டே இருக்கும் போது முழங்கைப் பகுதியில் சுரீர் என்கிறதே என்று பார்த்தால் குதிரை கடித்து முடித்துவிட்டு என்னைப் பார்த்தது. தொள தொள என்ற உதடுகளுடன் சிரித்தது. நான் ‘ஸ்ஸ்ஸ்ஸ்’ என்று முழங்கையைப் பார்ததுக்கொணடு குதிரைக் காரனைத் தேடினால் காணவில்லை. ஒரே ஒரு பையன் எங்கோ பார்ததுக் கொண்டு நின்றான். மறுபடி கடித்துவிடப் போகிறதே என்று விலகி வந்து காலை வெளிச்சத்தில் காயத்தை ஆராய்ந்தேன். லேசாகப் பல்லுப் பட்டிருந்தது.



அது ஒன்றும் நிகழவில்லைபோல் என் மேல் சுவாரசியம் விலகிப் போய் எதையோ மென்று கொண்டிருந்தது.என்னை யாரும் பார்க்கவில்லை.’ச்சே’ என்று பொதுப்படையாகத் திட்டிவிட்டு அடிக்கடி காயத்தைப் பார்த்துக் கொண்டே’ டெட்டால்’ போட்டு
அலம்பிக் களிம்பு தடவ வேண்டும் என்று எண்ணிய படி வீட்டுக்கு விரைந்தேன். என் மனைவி வாசலில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.கடைக்குப் போன கணவன் குதிரை கடித்து இத்தனை சீக்கிரம் திரும்பி வருவான் என்று எதிர் பார்க்கவில்லை.



“என்ன வந்துட்டிங்க? அகமத் ஸ்டோர் மூடியிருக்கா?”



 “இல்லை வரவழியில..”


 “ என்ன ஆச்சு? என்ன கையில”


“உள்ள வாயேன் சொல்றேன்”



 “என்ன ஆச்சு விழுந்திட்டிங்களா?”



“இல்லை ஆஸபத்திரிக்கு எதிர்ல கதிரை லாயம் இருக்கு பாரு அது வழியா நடக்கறபோது குதிரை கடிச்சுடுத்து”




“என்னது,குதிரையா?”



“ஆமாம்”


 “கடிச்சுதா?”



மாமனார் உள்ளே வர


“அப்பா குதிரை எங்கயாவது கடிக்குமா?”



என்று அவரிடம் கேள்வி.


“எதை” “


மனுஷாளைப்பா”



 “சேச்சே”


“இதோ உங்க மாப்பிள்ளையைக் கடிச்சிருக்கு” “



அப்படியா, ஆச்சரியமா இருக்கே! என்ன மாப்பிளளை எதாவது அதைப்போய் சீண்டனம் பண்ணேளா?”




“இல்லே ஸார் அந்தப் பக்கமா நடந்து போயிண்டிருந்தபோது லபக்குன்னு கவ்விடுத்து” “



குதிரை லாயத்துக் கெல்லாம் எங்க போறேன். கல்யாணி நீ எதாவது வண்டி கொண்டுவரச் சொன்னாயா?




” “இல்லைப்பா ஸ்டவ்வுத் திரி வாங்கிண்டு வர அகமத் ஸ்டோர்ஸ்க்கு அனுப்பிச்சேன். எதுக்கு நீங்க குதிரை கிட்டல்லாம் போறேள்? அய்யோ நன்னாப்பல்லுப் பட்டிடிருக்கே. விஷப் பல்லா இருந்துடப் போறது. அப்பா அதைப் பாருங்க”



மாமனார் கிட்ட வந்து பார்த்து


“கன்னித்தான் போயிருக்கு. மாப்பிள்ளை நீங்க எதுக்கும் ராயர் கிட்டக் கொண்டு காட்டிடுங்கோ. கல்யாணி, அழைச்சுண்டு போயிடு. ஜட்கா வண்டிக் குதிரையா” “



ஆமாம்”


சற்று யோசித்து“



ஜட்கா வண்டிக் குதிரை கடிக்காதே” என்றார் ஜ.வ.குதிரைகளில் டாக்டர் பட்டம் வாங்கினவர் போல். “



இந்தக் குதிரை கடிச்சுது ஸார் என்ன பண்ண?” என்றேன்



. “இவருக்கு மட்டும எல்லாம் ஆகும்பா, கணக்கால் அளவுக்கு தண்ணீர் போதும் இவருக்கு முழுகிப்போய்டுவார்.இப்படித்தான் திருச்சினாப்பள்ளியில உய்யக் கொண்டான் வாய்க்கால்ல.


.” “சரிதான் நீ ஆரம்பிக்காதே”

என்று அதட்டினேன். “எதுக்கும் டாக்டர் ராவ் கிட்ட கொண்டு காட்டிடறது நல்லது” என்றாள். எனக்கும் காயத்தைப் பார்த்ததில் அபபடித்தான் பட்டது.ஆனால் இதை டாக்டரிடம் எப்படிச் சொல்லப் போகிறேன் என்று கவலையாக இருந்தது.’’




நரஹரி ராவ் எங்கள் குடும்பத்து டாக்டர் . அறுபது வயசானாலும் நல்ல ப்ராக்டிஸ், நாங்கள் போனது காலை வேளையாக இருந்தாலும் நல்ல கூட்டம்.குழந்தைகளும் தாய்மார்களும் க்ளார்க்ககுகளும் மப்ளர்காரர்களுமாக அடைத்துக் கொண்டு காத்திருந்தார்கள்.சின்ன இடம் அதில் பாதி தடுத்து நரஹரிராவ் உள்ளே உட்கார்ந்துகொண்டு யாரையோ ‘ஆ’ சொல்லிக் கொண்டிருப்பது பனிக் கண்ணாடியில் குழப்பமாகத் தெரிந்தது. ’எங்களுக்கு உட்கார இடம் இல்லை. அடுத்த முறை பையன் வெளியே வந்தபோது கல்யாணி



 “இந்தாப்பா டாக்டர் கிட்ட சொல்லு அவசரமா பார்க்கணும்னு” என்றாள்.

“எல்லாருக்குந்தாம்மா அவசரம்”



“இல்லைப்பா இவரை குதிரை கடிச்சுடுத்துப்பா. ரத்தமா கொட்டறது பாரு



”என்றாள்



 “கல்யாணி! என்ன சொன்னே? சரியாக் காதுல விழலை குதிரையா?”



“ஆமாம் மாமி. போயும் போயும் குதிரை கிட்ட கடி பட்டுண்டு வந்திருக்கார். என்னத்தைச் சொல்லி மாள?”



 “குதிரை வளக்கறிங்களா?” “அதுங்கிட்ட எதுக்குப் போனார்?




” எல்லோரும் என்னையே பார்த்தார்கள்.


 “உள்ளே வாங்க கிச்சாமி”


என்றார் டாக்டர்.



“என்ன குதிரை கிட்டல்லாம் போய் விளையாடிண்டு இந்த வயசில




” “டாக்டர் அது வந்து ஆஸ்பத்திரிக்கு எதிர்த்தாப்பல நடந்து போயிண்டிருநதேனா.


.” என் கதையைத் தணிந்த குரலில் சொன்னேன்.“


 டாக்டர் அதுக்கு எதாவது விஷப் பல்லு இருக்குமா” என்றாள் கல்யாணி இடையே. “தெரியலைம்மா. இருக்காதுதான். ஆனா கல்யாணி நானும் இதே மில்கார்னர்ல முப்பது வருஷமா ப்ராக்டிஸ் பண்ணிண்டிருக்கேன்.குதிரை கடிச்ச கேஸை இப்பதான் முதல்ல பார்க்கறேன்”


என்றார். “என்ன பண்றது டாக்டர்? ஆக்ஸிடெண்ட்டுக்குன்னே பொறந்தவர் இவர்.ஸ்கூட்டர் ஓட்டக் கத்துக்கறேன்னு ஸ்கூட்டரை ஸ்டாண்டில இருந்து எடுக்கறதுக்கு முன்னாடியே ஆக்ஸிடெண்ட் பண்ணிட்டார்.தொப்புன்னு போட்டுண்டு கீழே விழுந்தார். கால்ல பாருங்ஙகோ தழும்பு” டாக்டர காயத்தை கவனித்தார்.




 “வலிக்கிறதா? இருங்க காட்டரைஸ் பண்ணிடறேன்” என்று குட்டியாக இருந்த ஸ்பிரிட் அடுப்பைப் பற்ற வைத்து விட்டு அலமாரியிலிருந்து தடிமனான ஒரு புத்தகத்தைப் பிரித்து அதன் பின் அட்டவணையில் குதிரை, குதிரைக் கடி என்று தேடினார். “ம் ஹ§ம் டெக்ஸ்ட் புக்லயே இல்லை. எதுக்கம் கவலை படாதங்கோ சீட்டு எழுதிக் கொடுக்கறேன். நேரா ஆஸபத்திரிக்குப் போய் இன்ஜெக்ஷன் ஒரு கோர்ஸ் ஆரம்பிச்சுடுஙகோ இப்பவே”என்றார்.




 “அந்த இன்ஜெக்ஷனை இஙகேயே போட்டுண்டடுடலாமே டாக்டர்” “எங்க கிட்ட ஸீரலம் கிடையாது, ஆதுவும் இல்லாம டாக்டர் கோபி எல்லாம் தேர்ந்தவர். அவர் பார்த்து தேவைப் பட்டுதுன்னாத்தான் ஊசி போட்டுக்கணும். இப்ப காட்டரைஸ் பண்ணி அனுப்பிச்சுர்றேன்” என்று சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் சிரித்துவிட்டு “குதிரை” என்று தனக்குள் சொல்லிக்கொண்டு“



டாக்டர் கோபிக்கு லெட்டர் கொடுக்கறேன் உடனே போம்” என்றார். ஆஸபத்திரியை நோக்கி நடக்கும்போது ஒரு மாடு கிழிசல் பனியனை மென்று கொண்டிருந்தது



. “பாத்து வாங்கோ .இது வேற கடிச்சு வெக்கப்போறது” என்றாள் கல்யாணி. “என்ன கல்யாணி சொல்றே? வேணும்னுட்டா கடிச்சுப்பா?” “வேணுமோ வேணாமோ நம்மாத்தில மட்டும்தான் இந்தமாதிரியெல்லாம் நடக்கறது. டாக்டர் சொன்னார் பாருங்கோ” “எல்லாம் எனக்கும் கேட்டுது. அதபாரு குதிரை கடிக்காதுதான் என்னைக் கடிச்சுடுத்து என்ன பண்ணச் சொல்றே ? ஏன் கடிச்சேன்னு வேணா விசாரிச்சுன்டு வரட்டுமா?”



 “வேண்டாம். மறுபடியும் கடிச்சு வெக்கப் போறது. கடிக்கறதுன்னா அந்தப் பக்கம் ஏன் போகணும்?” “



குதிரை கடிக்கும்னு யாருக்குடி தெரியும் மூதேவி!”

நடுரோடில் எங்களை வேடிக்கை பார்கக கூட்டம் கூடிவிடவே நாங்கள் கலைந்து நடந்தோம்.ஆஸபத்திரியில் டாக்டர் கோபிநாத்தைத் தேடிக்கொண்டு சென்றேன்.நீண்ட பெஞ்சு போட்டு பலபேர் உட்கார்ந்திருந்தார்கள். கல்யாணி இங்கே வந்து “குதிரை கடித்துவிட்டது” என்று இரைந்து கூறி சலுகை கேட்கப் போகிறாளே என்று பயமாக இருந்தது.ஆககால் கல்யாணி பேசாமல்தான் உட்கார்ந்தாள்.அங்கே உட்கார்ந்திருந்தவர்களை விசாரித்ததில் பெரும்பாலோர் நாய்க்கடிக் காரர்கள் என்று தெரிந்தது. அங்கங்கே ஒன்றிரண்டு எலி தேள் இருந்தன. எல்லாருடைய சீட்டுகளிலும் நாய் நாய் என்றுதான் எழுதியிருந்தது.அங்கே அருந்த சிப்பந்தி அவற்றை அடுக்கி வைக்கம் போது என் சீட்டு வந்தபோது மட்டும மயங்கினான்.

“குதிரை! இங்க யாருப்பா கிருஷ்ணசாமி”




“கிருஷ்ணசாமி நான்தான் ”என்றேன்.


 “உங்க டிக்கெட்டில் தப்பா போட்டிருக்கு குதிரை ன்னு. கொஞ்சம் திருத்திக் கொடுக்கறிங்களா”


 “இல்லை ஸார் என்னை குதிரைதான் கடிச்சிருக்கு



” இப்போது அத்தனை பேரும் திக்கித்துப் போய் என்னைப் பார்க்க, சிப்பந்தி உடனே உள்ளே போய் கோபிநாத்திடம் சொல்ல “கூப்பிடு உள்ளே அவரை முதல்ல” என்றார். “வாங்க உக்காருங்க. ராயர் போன் பண்ணிச் சொன்னார். நீங்கதானா அது? குதிரை எங்கே கடிச்சுது உங்களை?”என்று விசாரித்தார்.



 “ஆஸ்பத்திரிக்கு எதித்தாப்பல ஸ்டாண்டு இல்லை? அங்கே” “



அதைக் கேக்கலை.உடம்பில எந்த பாகத்தில?”


 நான் என் கைச்சட்டையை வழித்துக் காட்டினேன்.



“காட்டரைஸ் பண்ணாரா?”என்று அலமாரியிலிருந்து தடியான புத்தகம் ஒன்றை எடுத்தார். “அந்தப் புஸ்தகத்தில் ‘குதிரைக்கடி’ கிடையாது டாக்டர்”என்றாள் கல்யாணி.



“எப்படிச் சொல்றிங்க?” “டாக்டர் ராவ் பார்த்துட்டார்” “மிஸடர் கிருஷ்ணசாமி ஒண்ணு பண்ணலாம் நான் குதிரை கடிச்ச கேஸை இதுவரை ட்ரீட் பண்ணதில்லை எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்.


ஒரு ஷார்ட் கோர்ஸ் ஆரம்பபிச்சுர்றேன் ஸ்ப்க்யுட்டேனியஸ்ஸா..” “டாக்டர் உயிருக்கு ஆபத்து எதும்ம இல்லையே?” “சேச்சே பயப்படாதிங்கம்மா.மிஸ்டர் கிருஷ்ணசாமி எதுக்கும் ரெண்டு மூணுநாள் அந்தக் குதிரையை வாட்ச் பண்ணிக்கிட்டு இருங்க.செத்து கித்து வெக்குதான்னு. எந்தக் குதிரை கடிச்சுது ஞாபகம் இருக்குமோல்லியோ?”



“ம்” என்றேன் சந்தேகமாக


மூணு நானைக்கு எதுக்குப் பார்க்கணும்” என்றாள் கல்யாணி.



அதுக்கு வெறி கிறி எதாவது பிடிச்சிருந்தா செத்துப்போய்டும் . அது உயிரோட இருந்தா கவலைஇல்லை.எதுக்கும் பயப்படடிதிங்க ரிஸ்க் எடுத்துக்காம கோர்ஸை ஆரம்பிச்சுர்றக்ஷன்



. தினம் காலை இந்த வேளைக்கு வந்துடுங்க என்ன ?


” “பகவானே என்ன க்ஷசொதனை பாத்திங்களா?”


 என்று புலம்பிக்கொண்டே வெளியே வந்தாள் கல்யாணி.



வந்ததும் அங்கே உட்கார்ந்திருந்தவர்களிடம சட்டென்று பேச்சு நின்று போய் ஒரு சிலர் உள்ளங்கையால் வாயை மறைத்துக்கொண்டு பக்கத்தில் இருப்பவரிடம் என்னைக் காட்டிப் பேசுவதை கவனித்தேன். முதுகில் கூட அவர்களது பார்வை பட்டது. திடீரென்று திரும்பி’குதிரை கடிச்சா என்னய்யா?“ என்று சத்தமாகக் கேட்க நினைத்தேன். ஆஸ்பத்திரியை விட்டு வெளியே போகும் போதே குதிரையை ஒரு நடை விசாரித்து விட வேண்டும் என்று கல்யாணி சொன்னாள். எனக்கு அது தேவையாகப் படவில்லை. இருந்தும் அங்கே போனோம். ”குதிரையை ஞாபகம் இருக்கோல்லியோ?“ என்றாள்


. ”இருக்கும்னு நெனைக்கிறேன்.நெத்தில டைமண்ட் ஷேப்பில வெள்ளையா ஒரு திட்டு இருந்ததா ஞாபகம்.“

லாயத்துக்குப் போனபோது ஏறக்குறையக் காலியாக இருந்தது. சிறுவன் மட்டும் காலை ஆட்டிக்கொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான்.


 ”ஏம்பா எல்லாக் குதிரையும எங்கே?“


 ”எல்லாம் சவாரி போயிருக்குதுங்க. கொச்ம் இருங்க வந்துடும்.


பாடி கொடுத்துட்டாங்களா


“ ”பாடியா?“


”இவன் என்ன சொல்றான்“


என்றாள் கல்யாணி.


 ”ஏம்பா இந்த அடத்தில எத்தனை குதிரை இருக்கு?“


”ஏங்க எதாவது எலக்சனா?


குதிரைச் சின்னத்தில் நின்னறிங்களா?



 ஊர்கோலம் போகணுமா?


எத்தனை குதிரை வேணும்?“



ஒரே ஒரு குதிரைதாம்பா. நெத்தில டைமண் மாதிரி இருக்கும்“



 ”கரீம்பாய் குதிரையை சொல்றிங்க. இதோ இப்ப சவந்துடுங்க. கபர்ஸ்தான் போயிருக்குது“



”அது உயிரோட இருக்கில்லே?“ ”


இல்லாம,பின்ன?“


 ”நல்லது“


 என்று புறப்பட்டு வந்துவிட்டோம். ”



தினம் ஆஸ்பத்திரிக்கு வர வழியில ஒரு விசை குதிரையை விசாரிச்சுண்டு வந்துருங்கோ“


 என்றாள் கல்யாணி. மறுதினம் ஆஸபத்திரிக்குப் போகிற வழியில் என்னைக் கடித்த குதிரையை மறுபடி சந்தித்தேன் அந்தப் பையன்தான்



 ” கரீம்பாய் கல் பூச்சானா? ஓ ஆத்மி ஆயா “


 என்றான். கரீம்பாய்க்கு காலையிலேயே கண்கள் கலங்கியிருந்தன. என்னைப் பார்தது,



 ”என்ன சாமி நம்ம சுல்தானைப் பத்தி விசாரிச்சிங்களாமே?“


என்றான்.நான் கிட்டப்போய்ப் பார்த்ததில் என்னைக் கடித்த குதிரை அதுதான் என்று தெரிந்துபோய்விட்டது



. ”பாய்! இந்தக் குதிரை நல்லாத்தானே இருக்குது? உயிரோடதானே இருக்குது?“



சேணம் எல்லாம் கழற்றிப் போட்டு எண்ணெய் தேய்த்துக் கொள்வதற்கு முன்பிருக்கும் நங்கை போல் இருந்தது.


 ”ஏன் சாமி“



 ”நேத்திக்கு இது என்னை கடிச்சிடுச்சுப்பா. குதிரை உயிரோடதான் இருக்கான்னு தினம் பார்க்கச் சொல்லியிருக்கார்


டாக்டர்“


 ”கடிச்சுதா? அதெல்லாம் செய்ய மாட்டானே நம்ம சுல்தான், க்யூன் சுல்தான் ஸாப்கோ காட்டா?“



 குதிரை ”பிஹிர்ர்ர்“ என்றது.



”என்னா குதிரைங்க இது?“



என்று அதன் கழுத்தருகில் சொரிந்து கொண்டே சொன்னான்.



”ரேக்ளா ரேஸ்ல எல்லர்ம ப்ரைஸ் வாங்கிருக்கு. க்யுன் சுல்தான்?“




 ”பிஹிர்ர்ர்“ ”ஏதோ சௌக்கியமா இருந்தா சரி. அதோ பார் முழங்கையைக் கடிச்சுடுச்சு. தினப்படி ஊசி போட்டுக்க வேண்டியிருக்கு. குதிரையைக் கட்டுப் படுத்தி வெச்சுக்கக் கூடாதாப்பா?“




 ”ஊசி போட்டுக்கறியலா?“ என்று சுல்தான் போலவே சிரித்தான். ”எதுக்கு? குதிரை கடிச்சதுக்கா? இத பாரு.“




என்று தன் கையைக் காண்பித்தான். ”எத்தனை தடவை புல் குடடுக்கறப்ப கொள் கொடுக்கறப்ப சுல்தான் என்னைக் கடிச்சிருக்கான் தெரியுமா? ஊசியா போட்டுக் கிட்டேன்? க்யூன் சுல்தான்?“ எதற்கும் நான் ரிஸ்க் எடுத்துக் கொள்ளவில்லை.ஆஸ்பத்திரிக்குப் போகும் போதெல்லாம் சிப்பந்திகள் குதிரைக்காரர் வந்துட்டாரு”


 என்று பேசிக்கொண்டாலும், எதிர் வார்டிலிருந்து நண்பர்களையெல்லாம் கூட்டி வந்து என்னைக் காட்டினாலும், வீட்டில் கல்யாணியின் பல உறவினர்கள் பேருக்குப் பேர்“குதிரை கடிச்சுடுத்தாமே ” என்று விசாரித்தாலும் மதிக்காமல் பிடிவாதமாக சிகிச்சைக்குச் சென்றேன்.சில நாட்களில் காயம் ஆறிவிட்டது. ஆனால் அந்த சம்பவத்துக்குப் பின் என் பெயர் மாறிவிட்டது ‘குதிரைக் கிச்சாமி’ என்று.



ஊருக்கு ஊர் கிச்சாமி இருக்கிறார்கள், ஆனால் நாட்டில் ஒரே ஒரு ‘குதிரைக் கிச்சாமி’ நான்தான் என்பதில் ஒரு அற்ப சந்தோஷம்.




நன்றி - சுஜாதா , உயிர் மெய், சிறுகதைகள்