Showing posts with label EEMU. Show all posts
Showing posts with label EEMU. Show all posts

Tuesday, August 07, 2012

பெருந்துறை சுசி ஈமுப்பண்ணை - கோடிக்கணக்கில் மோசடி - தலைமறைவு


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

ஈமு கோழிப்பண்ணையின் தாயகம் என சொல்லப்படும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சுசி ஈமுக்கோழிப்பண்ணை இழுத்து மூடப்பட்டது.. நேற்று அங்கே ஒரே பரபரப்பாக இருந்தது, மக்கள், முதலீட்டாளர்கள் கூட்டம் கூடி இருந்தது.. கொடுத்த பணத்தை திருப்பிக்கொடு என்று கோஷம் போட்டார்கள்.


ஆர் பார்த்திபன், கே பாக்யராஜ், பரவை முனியம்மா போன்ற பலர் பணத்தை வாங்கிக்கொண்டு எல்லாம் தெரிந்தவர்கள் போல கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்டை படித்து நடித்து விட்டுப்போகிறார்கள்.. இது சமுதாயத்தை எந்த அளவு பாதிக்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை.. 

 ஒரு சோப் விளம்பரமோ, ஷாம்பு விளம்பரமோ இந்த அளவு பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. ஆனால் லட்சக்கணக்கான முதலீடு சம்பந்தப்பட்ட மேட்டர் என்பதால் மக்கள் ஒரு நம்பகத்தன்மையை  சினிமா பிரபலங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். 


மக்கள் இவர்களைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.. சினிமா பிரபலங்களும் காசு கிடைக்குதுன்னு கண்ட கண்ட விளம்பரங்களில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்.. இதனால் பாதிக்கப்படுவது அவர்கள் இமேஜும் தான்..


நேற்று மாலை 5 மணிக்கு  முதலீட்டாளர்கள் வாசலில் கூடி நின்று கோஷம் போட்டிருக்கிறார்கள்.. கொடுத்த பணத்தை திருப்பிக்கொடு, லாபம் ஏதும் வேண்டாம், முதலீட்டுத்தொகை மட்டும் போதும் என  கெஞ்சிக்கேட்டும் பொறுப்பான பதில் இல்லை..


ஈரோடு, கோவை, சேலம் மாவட்டங்களில் மட்டும்  கிட்டத்தட்ட 18 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.. முழுமையான விபரம் இன்னும் 2 நாட்களில் தெரியும்..  பணத்தை இழந்தவர்கள் பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து வருகிறார்கள்.. பலர் வெளியே சொன்னால் கேவலம் என்று யோசித்து வருகிறார்கள்..


 கலைமகள் சபா, தேக்கு மர மோசடி ஆகியவற்றுக்குப்பின் சமீபத்தில் நடந்த மிகப்பெரும் மோசடி இதுதான்.. கவுண்டர்கள் , முதலியார்கள் சமூகத்தினர் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது ..


ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ 6000 தருவதாக வாகு கொடுத்தவர்கள் அபப்டி தர முடியாததால்  வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் கேள்விக்கு பதில் தர முடியாமல் திணறினர்..

 அரசு 80 ப்பைசா வட்டி தருது, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் தனியார் சீட்டு நிறுவனங்கள் நமக்கு ரூ 2 முதல் ரூ3 வரை வட்டி தருது.. அப்படி இருக்க ரூ 100க்கு ரூ 6 வட்டி என்றதும் மக்கள் அது எப்படி முடியும்? என்றெல்லாம் யோசிக்காமல் முதலீட்டை அள்ளி அள்ளி வழங்கினர்,..


இப்போ உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா என்ற பழமொழிக்கெற்ப சோகத்தோடு உலா வருகின்றனர்..


ஈமு கோழிகளுக்கு தீவனம் வழங்கும் நிறுவனத்துக்கு இவர்கள் ரூ 1,34,000 பாக்கி வைத்திருக்கிறார்கள்.. எனவே அவர்கள் சப்ளையை நிறுத்தி விட்டார்கள். விஷயம் வெளீயே கசிந்ததும் மக்கள் பொங்கி விட்டார்கள்..


 மக்களின் புகாருக்குப்பின் போலீஸ் பெருந்துறை சுசி பண்ணை உரிமையாளர்  குருவை தொடர்பு கொண்டபோது அண்ணன் செல்லை ஸ்விட்ச் ஆஃப் பண்ணீ விட்டிருந்தார்.. கம்ப்யூட்டர்களை செக் பண்ணியபோது அவர்கள் வங்கிக்கணக்கில் ரூ  18,78,000 மட்டுமே இருந்தது..


இது மேலும் அதிர்ச்சி.,. ஏன்னா குறைஞ்ச பட்சம் 1000 பேர் தலா 1 லட்சம்னு முதலீடு  கணக்கு போட்டலும் 10 கோடி ரூபா இருக்கனும்.. எல்லாம் ஸ்வாகாவா? தெரியலை
 சுசி ஈமு பண்ணை ஒரு வருடம் முன் தமிழ் முரசு பத்திரிக்கைக்கு கொடுத்த இண்ட்டர்வியூவை இப்போ பார்ப்போம்


‘ஈமு கோழி வளர்ப்பு தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. பண்ணை அமைத்து சிரத்தையுடன் தொழிலில் ஈடுபட்டால் லாபத்தை அள்ளலாம் என்று கூறுகிறார் ஈரோடு மாவட்டம் பெருந்துறை யில் ‘சுசி ஈமு பார்ம்ஸ் இந்தியா’ நடத்திவரும் எம்ஜிஎஸ்.அவர் கூறியதாவது:

நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். கல்லூரி படிப்பை முடித்தவுடன் தனியார் நிறுவனத்தில் மாதம் 8 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைபார்த்து வந்தேன். விவசாயம் மற்றும் பண்ணைகள் பற்றிய தகவல்களை ஆர்வமுடன் தெரிந்து கொள்வேன். ஆந்திரா, புதுவை ஆகிய இடங்களில் உள்ள பண்ணைகளுக்கு சென்று ஈமு கோழி வளர்ப்பு குறித்து முழுமையாக அறிந்துகொண்டேன்
.
2004ம் ஆண்டு 5 ஜோடி ஈமு கோழிகளுடன் பெருந்துறையில் பண்ணை துவங்கினேன். அவை முட்டையிட துவங்கியதும்  வேறொரு பண்ணையாளரிடம் கொடுத்து குஞ்சு பொரிக்க செய்து, அவற்றையும் சேர்த்து வளர்த் தேன். ஈமு வளர்ப்பையே முழு நேர தொழிலாக மேற் கொண்டேன். தமிழகத்தில் ஈமு எண்ணிக்கை குறைவு. ஒப்பந்த அடிப்படையில் ஈமுவை வளர்க்க விவசாயிகளிடம் ஆர்வத்தை உருவாக்கினேன்.  சிரமம் இல்லாத வளர்ப்பு முறை, அதனால் கிடைக்கும் வருமானத்தை பார்த்து இன்று தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையிலும், சொந்தமாகவும் ஆயிரக்கணக்கானோர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சந்தை வாய்ப்பு!ஈமு இறைச்சி விற்பனையாளர்கள் நேரடியாகவே பண்ணைக்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். அக்கம்பக்கத்தினர் வீட்டுத்தேவைக்கும், விசேஷங்களுக்கும் வாங்கிச் செல்வார்கள். ஓட்டல்கள், உணவு விடுதிகளுக்கும் நேரடியாக ஆர்டர் பிடித்து சப்ளை செய்யலாம்.
பயன்கள்: மற்ற பறவை, விலங்கி னங்களை ஒப்பிடும்போது ஈமுவில் கழிவு குறைவு. முட்டை, இறைச்சி, எண்ணெய் கிடைக்கிறது. ஈமு கோழிகளின் இறைச்சி மற்ற இறைச்சிகளை விட சுவையில் தனித்தன்மை வாய்ந்தவை. ஆடு, மாடு போன்ற கால்நடைகள்தான் சிவப்பு மாமிசம் கொடுக்கும். சிவப்பு மாமிசம் கொடுக்கும் பறவை இனம் ஈமு. ஈமு இறைச்சிக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.  40 முதல் 45 கிலோ எடை கொண்ட ஈமுவை இறைச்சிக்காக வெட்டும்போது 10 முதல் 12 கிலோ கொழுப்பு தனியாக கிடைக்கும்.கொழுப்பை காய்ச்சி எண்ணெய் எடுக்கப்படுகிறது. 5 முதல் 6 லிட்டர் ஈமு எண் ணெய் கிடைக்கும். சுத்திகரிப்பு செய்து வலி நிவாரணி, அழகு சாதன கிரீம்கள் தயாரிக்க பயன்படுத்தப்படு கிறது. ஒரு ஈமுவில் 6 சதுரஅடி தோல் கிடைக்கும். மிருதுவாகவும், அதிக வலுவாகவும் இருப்பதால் செருப்பு, கைப்பை, பர்ஸ்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.இதன் சிறகுகள்  கம்ப்யூட்டர் போன்ற இயந்திரங்களை சுத்தம் செய்யும் பிரஷ்கள் தயாரிக்கவும், அழகான தொப்பிகள், ஆடைகளின் மேல் அழகு வேலை பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாஸ்து பொருளாகவும் ஈமு முட்டைகளை பயன்படுத்துகின்றனர். ஈமு முட்டைகளை வீட்டில் வைத்திருந்தால் செல்வம் பெருகும் என்பது அவர்களது நம்பிக்கை.

கட்டமைப்பு


பண்ணை தொடங்க குறைந்தது 5 ஜோடி ஈமு குஞ்சுகள்(ரூ.75 ஆயிரம்) வேண்டும். 40 அடி நீளம், 35 அடி அகல இடம் வேண்டும். இடத்தை சுற்றி 5 அடி உயரம் கம்பி வேலி, தீவனம் மழையில் நனையாமல் இருக்க சிறிய ஆஸ்பெஸ்டாஸ் ஷெட், தீவனம் வைக்க 2 பாத்திரம், தண்ணீர் தொட்டி (இதற்கு செலவு ரூ.15 ஆயிரம்), முட்டைகளை பொரிக்க வைக்க இன்குபேட்டர் (ரூ.3 லட்சம்), சீரான மின் சப்ளைக்கு ஜெனரேட்டர் (ரூ.1 லட்சம்) போன்றவை வேண்டும்.எங்கு வாங்கலாம்?ஈமு குஞ்சுகள் மற்றும் தீவனங்களை தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் உள்ள ஈமு பண்ணைகளில் பெற்றுக் கொள்ளலாம். இன்குபேட்டர், ஹேச்சர் மெஷின் ஐதராபாத்தில் கிடைக்கும்.குஞ்சுகள் தேர்வுஈமு குஞ்சுகளை வாங்கும்போது பார்வை, கேட்கும் திறன் சரியாக உள்ளதா, கால்களை வளைக்காமல் நடக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். 3 மாதத்துக்கு மேற்பட்ட குஞ்சுகளைதான் வாங்க வேண்டும். முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகளுக்கு 3 மாதம் வரை உடல் பகுதியில் வெள்ளை கோடுகள் இருக்கும். 3 மாதத்துக்கு பின் கோடுகள் மறைந்து இயல்பான நிறம் வரும். 3 மாத ஈமு, 4 முதல் 6 கிலோ எடை இருக்கும்.வளர்ப்பு முறை3 மாத குஞ்சுகளை வாங்கிவந்து 5 மாதம் வரை கூட்டமாக வளர்க்கலாம். ஆண், பெண் தெரிந்த பின்  தனித்தனியாக பிரித்து வளர்க்க வேண்டும். பெண் ஈமுக்கள் 18வது மாதத்தில் முட்டையிடும் பருவத்துக்கு வரும். தொண்டையில் இருந்து தும்தும் என ஒலி எழுப்புவதை வைத்து இதை தெரிந்து கொள்ளலாம்.   24வது மாதத்தில் இனச்சேர்க்கைக்கு  விட்டால் அதிக முட்டை கிடைப்பதோடு தரமான குஞ்சுகளையும் பொரிக்க வைக்க முடியும்.குஞ்சு பொரிப்பு


ஹேச்சர் மெஷினில் ஒரே நேரத்தில் 700 முட்டைகளை அடுக்கி வைத்து, 93 முதல் 96 டிகிரி வரை தொடர்ந்து 52 நாட்களுக்கு  வைத்திருக்க வேண்டும். பொரித்த குஞ்சுகளுக்கு கால்கள் வளையாமல் இருக்க 2 கால்களையும் சேர்த்து டேப் மூலம் ஒட்டி விடவேண்டும். 15 நாட்களுக்கு பின் டேப்பை பிரித்து இன்குபேட்டரில் 20 நாட்களுக்கு வைக்க வேண்டும். பின்னர் குஞ்சுகளுக்காக தனியாக ஷெட் அமைத்து ஒரு மாதம் வளர்க்க வேண்டும். 3 மாதத்துக்கு பின்னர் வளர்ந்த கோழியாக மாறும்.வருமானம்


3 மாத வயதுள்ள 5 ஜோடி ஈமு வளர்த்தால் 16 மாதத்துக்குள் 30 கிலோ எடையுள்ள ஈமு கோழி கிடைக்கும். 5 ஜோடியும் சராசரியாக 30 கிலோ எடை இருந்தால் 300 கிலோ இறைச்சி கிடைக்கும். ஒரு கிலோ இறைச்சி குறைந்தபட்சம் ரூ.295க்கு விற்பனை செய்யலாம். இதன் மூலம் ரூ.88,500 கிடைக்கும். வெட்டப்படும் கோழிகளில் இருந்து 5 லிட்டர் எண்ணெய் வீதம் 5 ஜோடி ஈமுவுக்கு 50 லிட்டர் ஈமு எண்ணெய் கிடைக்கும். ஒரு லிட்டர் ரூ.1500க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.75 ஆயிரம் கிடைக்கும். இறைச்சி, கொழுப்பு மூலம் ஒரு ஆண்டில் ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்து 500 கிடைக்கும்.


இதற்கான செலவு 5 ஜோடி ஈமு கோழிகள் ரூ.75 ஆயிரம், 15 மாதத்திற்கு அதற்கான தீனி உள்பட மற்ற செலவுகள் ரூ.25 ஆயிரம். ஆண்டு முடிவில் 5 ஜோடிகளுக்கு மட்டும் ரூ.63,500 வருமானம் கிடைக்கும். 15 மாதத்தில் இறைச்சிக்காக ஈமுக்களை


இனவிருத்தி செய்து வளர்த்தால் பெண் ஈமுக்கள் 18வது மாதத்தில் பருவத்துக்கு வந்து ஆண்டுக்கு 20 முட்டைகள் தரும். 5 ஜோடி வளர்க்கும்போது 100 முட்டைகள் கிடைக்கும். இதன்மூலம் தரமான 60 குஞ்சுகள் கிடைத்தால் அவற்றை விற்று ரூ.4.5 லட்சம் சம்பாதிக்கலாம்.தினமணி செய்தி - ஈரோடு பகுதியில் சுசீ ஈமு ஃபார்ம் - ஈமு கோழி வளர்ப்பு நிறுவனத்தில் கடந்த 3 நாள்களாக கோழித் தீவனம் இன்றி திண்டாடுவதால், ஈமு கோழிகள் தீவனம் இன்றி வாடிப் போயுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 


சுசீ ஈமு ஃபார்ம் கோழிப் பண்ணையில் முதலீடு செய்தவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக புகார் அளித்து, பண்ணையை முற்றுகையிட்டு வருகின்றனர். இதனால் பண்ணையின் செயல்பாடு தடைப்பட்டுள்ளது. கோழிப் பண்ணை நிர்வாக இயக்குனர் மீது முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்தனர் போலீஸார். இந்நிலையில் இன்று அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. 


அதிகாரிகள் அந்தக் கோழி நிறுவனத்தின் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த 75 ஆயிரம் ஈமு கோழிகளுக்குத் தேவையான தீவனம் நிறுவனத்தில் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. கடந்த 3 நாள்களாக கோழிகள் தீவனமின்றி இருந்ததும் தெரியவந்தது. அதிகாரிகளும் அவற்றின் தீவனத்துக்கு வழி தெரியாமல் திண்டாடுகின்றனர். கோழிகளையும் அழிக்க முடியாது என்பதால் சரியான தீர்வு குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

 நன்றி - ஈரோடு சோழமண்டலம்  ஃபைனான்ஸ் கதிர், தமிழ் முரசு, பெருந்துறை நகர பொதுமக்கள், பெருந்துறை போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு, தினமணி

Thursday, May 03, 2012

ஈரோடு மக்களை முட்டாள் ஆக்கும் ஈமு கோழி மோசடி

''ஈமு கோழி இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்!, ஒருமுறை முதலீடு செய்தால் வாழ்நாள் முழுக்க வருமானம் பெறலாம்!'' - இப்படிப்பட்ட கவர்ச்சியான விளம்பரங்கள் இன்று ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் மாவட்டங்களை கலங்கடித்து வருகின்றன.


'பொன்ஸி’ நிதி மோசடித் திட்டம் போல நடந்துவரும் இத்திட்டங்களில் உள்ள  ஆபத்தை உணராமல், அப்பாவி மக்கள் பணத்தை லட்சக்கணக்கில் கொண்டு போய் கொட்டுவதைப் பார்த்து, களத்தில் இறங்கி விசாரிக்கத் தொடங்கினோம். ( விகடன் டீம்)


நாம் முதலில் சந்தித்தது தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் சுப்பு என்கிற முத்துசாமியை.

''ஒப்பந்த முறையில் ஈமு கோழி வளர்க்க விரும்புபவர்கள், முதலில் 1.5 லட்சம் ரூபாயை டெபாசிட்-ஆக கட்ட வேண்டும். அதைத் தொடர்ந்து மூன்று மாத வயதுடைய ஆறு ஈமு கோழி குஞ்சுகளை தருவார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனமே அந்த ஆறு கோழிகளையும் திருப்பி எடுத்துக் கொள்வதாகச் சொல்லி ஒப்பந்தம். 


இதில் அதிர்ச்சி என்ன வெனில், இரண்டு ஆண்டு வரை கோழிகளை வளர்க்கும் நபருக்கு கோழித் தீவனம் வழங்குவதுடன், வளர்ப்புக் கூலியாக மாதம் 6,000 ரூபாயும், ஆண்டு ஊக்கத் தொகையாக 20,000 ரூபாயும் கொடுப்பதாகவும் ஒப்பந்தத்தில் சொல்கிறார்கள். முதலீடு செய்த பணமும் கிடைக்கிறது; கூடவே மாத வருமானமும் வருகிறது என்று நினைத்து அப்பாவி மக்கள் ஈசல் போல இத்திட்டத்தில் விழுகிறார்கள்'' என்றார் சுப்பு.


இதெல்லாம் எப்படி சாத்தியம்? 


'ஒரு ஈமு கோழி ஆண்டுக்கு 30 முட்டை வரை இடும். ஒரு முட்டையின் விலை 1,500 ரூபாய்.  சேதாரம் போக 22 முட்டைகள் தேறினால், 33 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.


30 கிலோ கறி மூலம் 9,000 ரூபாயும், 3 கிலோ கொழுப்பு எண்ணெய் மூலம் 7,500 ரூபாயும் மற்றும் அலங்கார பொருட்களாகும் இதன் இறகுகள், மருத்துவக் குணம் கொண்ட எலும்புகள், நகம் உள்ளிட்டவைகள் மூலம் 5,000 ரூபாய் என மொத்தம் 54,500 ரூபாய் கிடைக்கும்' என்கின்றன  ஈமு கோழி வளர்க்கும் நிறுவனங்கள். 


இதுபற்றி தடப்பள்ளி அரக்கன்கோட்டை நீர் பாசன விவசாயிகள் சங்க செயலாளர் வக்கீல் சுபி.தளபதியிடமும் பேசினோம்.


''ஈரோடு மாவட்டத்தில் மட்டும் பதினைந்துக்கும் மேற்பட்ட ஓப்பந்தமுறை ஈமு கோழி வளர்ப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தங்க நாணயம் தருகிறோம், போனஸ் தருகிறோம் என்ற ஆசை வார்த்தைகளைக் கூறி விவசாயிகளை ஏமாற்றி வருகின்றன இந்நிறுவனங்கள். 


மஹாராஷ்டிர மாநிலத்தில் ஒப்பந்தமுறை ஈமு கோழி வளர்த்துவந்த ஒரு நிறுவனம் 200 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பதாக கண்டுபிடித்து, அந்நிறுவனத்தை தடை செய்திருக்கிறது மகாராஷ்டிரா அரசாங்கம். அதேபோல ஆசை வார்த்தைகளைச் சொல்லி, இங்கும் மக்களை ஏமாற்றி வருகின்றன சில நிறுவனங்கள்'' என்றார்.   


எனினும், கோவையைச் சுற்றியுள்ள நான்கைந்து மாவட்டங்களில் இருந்து கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் இத்திட்டங்களில் முதலீடாகி இருப்பதாகச்  சொல்கிறார்கள் வேறு சிலர்.


கடந்த பத்து ஆண்டுகளாக ஈமு கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருபவரும், தமிழ்நாடு ஈமு அசோசியேஷன் தலைவருமான ராஜேந்திரகுமாரிடம் பேசினோம்.


''தமிழகத்திலிருந்து ஈமு கோழியின் மூலம் பெறப்படும் எந்த ஒரு பொருளும் ஏற்றுமதி செய்யப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. அதை பதப்படுத்தி வைக்கும் தொழிற்சாலைகளும் இங்கு இல்லை. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக சொல்வதிலும் உண்மை இல்லை'' என்றார்.


இத்திட்டம் பற்றி இதுவரை அரசுத் தரப்பில் பெரிதாக கண்டு கொள்ளப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, இத்திட்டம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் தென் மாவட்டங்களுக்கு பரவ ஆரம்பித்திருப்பது அபாயகரமான வளர்ச்சிதான்!
மக்கள் கருத்து

1.mahendran.r
 
தமிழ்நாட்டில் ஈமு கறி விற்பனை அப்படி ஒன்றும் சொல்லிக்கொல்வது போல் இல்லை. எங்கும் ஏற்றுமதியும் இல்லை, எப்படி காசு வளரும்? அடுத்தவர் முதலீட்டில் (வைப்புத்தொகை) இருந்துதான் உங்கள் பணம் வரும் போல் தெரிகிறது! 1.5 லட்சம் வைப்புத்தொகை=>6000*12 20000 54500=146500=> என்ன லாபம்? இதுவும் காந்தப்படுக்கை மோசடி போல் ஆகாமல் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்
2.ram1
 
நிறைய தொலைக்காட்சிகளில் இத்திட்டத்தை பற்றிய விளம்பரங்கள் பிரபல நடிகர்களின் நடிப்போடு வெளிவருகின்றது.

நம்பும்படியாக இல்லை. இருந்தாலும் முதலில் பணம் செலுத்தியவர்களுக்கு பணம் அவர்கள் சொன்னபடி தந்து விட்டார்கள்.

மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனம் ஆண்டிற்கு 25 சதவீதம் வட்டி தருவதாகவும், ஈமு நிறுவனஙள் பொதுமக்களிடம் வாங்கும் பணத்தை அதில் முதலீடு செய்து கிடைக்கும் வட்டியை பொதுமக்களுக்கே திருப்பி தருவதாகவும். எஞ்சிய தொகை தான் ஈமு நிறுவனங்களின் வருமானம் என்றும் கூறப்படுகிறது.

மற்றபடி கோழி வளர்ப்பெல்லாம் ஒரு கண்துடைப்பென்றே ஒரு சிலர் கூறுகின்றார்கள்.

அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஈமு நிறுவனங்களில் மக்கள் டெபாசிட் செய்வது குறைந்தாலோ, அல்லது மத்திய பிரதேசத்தை சேர்ந்த நிதி நிறுவனம் திவாலானாலோ (ஏமாற்றினாலோ) தான் மக்களுக்கு பணத்தை திருப்பி தரமுடியாத சூழ் நிலை ஏற்படும்.

அதன் பிறகு தெரியும், சுசி, ருசி, பசி எல்லாம்.


நன்றி - நாணயம் விகடன்
டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள்.