Thursday, December 08, 2011

ஒஸ்தி - நாஸ்தி - காமெடி கும்மி கலாட்டா விமர்சனம்

http://vannimedia.com/wp-content/uploads/2011/12/Osthi-Movie-Wallpapers-51.jpg

ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்  டேய்டேய் டேய் டேய்டேய் டேய் டேய்டேய் டேய் டேய்டேய் டேய் டேய் டேய்
ஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்  டேய்டேய் டேய் டேய்டேய் டேய் டேய்டேய் டேய் டேய்டேய் டேய் டேய் டேய்
ஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி மாமூஒஸ்தி

யாரும் பயந்துடாதீங்க.. படம் போட்டதுல இருந்து முடியறவரை ஹீரோ வர்றப்ப எல்லாம் இதுதான் பின்னணி இசை..சும்மாவே சிம்பு ஓவர் அலட்டல் பேர்வழி.. இதுல இன்ஸ்பெக்டர் ரோல் வேற.. பின்னே கேட்கவா வேணும்?விண்ணைத்தாண்டி வருவாயா படம் பார்த்து சிம்புவோட நடிப்பை வியந்தவங்க எல்லாம் இந்தப்படம் பார்த்து வாழ்க்கையை வெறுப்பது உறுதி..

குருவி எனும் குப்பை படத்தை கொடுத்த தரணியைப்பார்த்து உலகம் வியந்தது.. தில் , தூள்,கில்லி என மெகா ஹிட் படங்கள் கொடுத்தவரா இப்படி ஒரு அட்டர்ஃபிளாப்பை கொடுத்தார்?என சந்தேகம், ஆனால் இந்தப்படத்தின் தோல்வி குருவியின் தோல்வியையும் தூக்கி சாப்பிட்டு விடும் போல இருக்கு.. 

படத்தோட கதை என்ன? ஹீரோவுக்கு ஒரு தம்பி.. அவர் நேரடி தம்பி இல்லை.. அம்மாவோட 2வது கணவரோட மகன்.. 2 பேருக்கும் ஆகாது...எல்லாரும் அண்ணனை கரிச்சு கொட்டறாங்க.. தம்பியை புகழ்றாங்க.. ஆனா அண்ணன் இன்ஸ்பெக்டர் ஆகறார், தம்பி வெத்து வேட்டு..

http://www.koodal.com/cinema/koodal_reel/2011/richa-14.jpg


ஹீரோ இருக்கற ஊர்ல எலக்‌ஷன்ல நிக்க வில்லன் வேட்பாளர்கள்க்கு பணம் பட்டுவாடா பண்ண ட்ரை பண்றாரு.. அதை எல்லாம் ஹீரோ தடுத்து தன் வீட்டு பீரோல வெச்சுக்கறாரு..ஏன்னா அந்த மாவட்டத்துல பேங்க்கே இல்லையா?னு கேக்கக்கூடாது.. வீட்லயே வெச்சிருந்தாத்தான் கதை நகரும்.. வில்லன் ஹீரோவோட அம்மாவை கொலை செஞ்சுடறாரு.. ஆனா பாருங்க இந்த சஸ்பென்ஸ் சீன் க்ளைமாக்ஸ்ல தான் இயக்குநருக்கே தெரியுது. ஆனா படம் பார்த்த சின்ன பசங்க கூட சொல்லிட்டாங்க அந்த  மேட்டரை..

அம்மாவை கொன்ன வில்லனை ஹீரோ எப்படி பழி வாங்கறாருங்கறதுதான் மிச்ச கதை.. தம்பி வில்லன் கூட சேர்றதும், க்ளைமாக்ஸ்ல திடீர்னு திருந்தி அவர் அண்ணாங்கறதும் இவரு தம்பிங்கறதும்.. எம் ஜி ஆர், சிவாஜி காலத்துலயே எங்கப்பா பார்த்துட்டாருங்கோவ்..

போலீஸ் யூனிஃபார்ம்க்கே புது கம்பீரம் கொடுத்த படங்கள் என இது தாண்டா போலீஸ், வைஜயந்தி ஐ பி எஸ் ..னு ஒரு லிஸ்ட் சொல்ற மாதிரி போலீஸ் பேரையே கெடுக்கற படமா ஒஸ்தியை சொல்லலாம்..

சாமி படத்துல விக்ரம் செஞ்சதை எல்லாம் தூக்கி சாப்பிடனும்கற உத்வேகத்தோட சிம்பு பண்ற அலம்பல்கள் தாங்கலை.. அவர் பல்லை கடிச்ச படி நெல்லைத்தமிழ் பேசும்போது பாவமா இருக்கு.. 


இதுல பிரமாதமா ஒரு ஸ்டைல் பண்றாரு.. அதாவது கூலிங்க் கிளாசை தூக்கி மேலே போடறாரு.. அது கரெக்டா அவரோட சட்டை காலர் பின்னால நச்னு சொருகிக்குது.. படத்துல ஒரு வில்லன் அமைச்சரா வர்றார்.. அவர் ஹீரோ கிட்டே இதுக்கு விளக்கம் கேக்கறார்.. அதுக்கு நம்ம அண்ணன் சிம்பு - எதிரிங்க பின்னால இருந்து குத்த வரும்போது தெரிஞ்சிக்க.. அடேய் அடேய் அண்ணே.. அது என்ன ரிவர்யூ மிரரா? அவ்வ்வ் 


 ஹீரோயின் ரிச்சா கங்கோபாத்பாய், மயக்கம் என்ன ஹீரோயின்.. தனுஷ் ஜோடியா நடிச்சவர்ங்கற ஒரே காரணத்துக்காக இதுல சிம்புவுக்கு ஜோடி.. பாப்பா பானை விக்கற பரம ஏழை, ஆனா பாருங்க 24 மணி  நேரமும் அவரோட இடுப்புல 15 பவுன்க்கு ஒரு ஒட்டியாணம் இருக்கு.. உலகத்துலயே பானை பிடித்தவள் பாக்ய சாலிங்கற பழ மொழிக்கு அர்த்தம் சொன்ன ஒரே கேரக்டர் இவர் தான் அடங்கொன்னியா..

ஹீரோவுக்கும் , ஹீரோயினுக்கும் காதல் வர்ற சீன் செம காமெடி.. பானை விலை என்ன?னு கேக்கறார்.. ரூ 250னு ஹீரோயின் சொல்ல ரூ 500 குடுத்து ஒரு பானை வாங்கிட்டு மீதி சில்லறை அப்புறமா வாங்கிக்கறேன்னு ஹீரோ சொன்னதும் ஹீரோயின் இன்னொரு பானை கொடுத்து சில்லரையை கழிச்சுட்டு எனக்கு நேர்மை தான் முக்கியம்கறார். உடனே சிம்புவுக்கு காதல் வந்துடுது ஹய்யோ அய்யோ..

சந்தானம் இருக்கறதால ஏதோ கொஞ்சமாவது ஜாலியா படம் பார்க்க முடியுது.. இன்னொரு முக்கியமான விஷயம், இதுவரை எந்த ஒரு தமிழ்ப்படத்திலும்  ஹீரோ போலீஸ் யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு குத்தாட்டம் போட்டு காக்கிச்சட்டையை இப்படி கேவலப்படுத்துனதே இல்லை..

ஆனா ஒரே ஒரு விஷயம் பாராட்டலாம். சிம்பு ஸ்டில்களில் பார்க்க அழகாக ஹிந்தி பட ஹீரோ மாதிரி ஜம்முனு இருக்கார்.. ஆனா படத்துல அவர் டயலாக் பேசறது மகா கொடுமை..

http://www.thedipaar.com/pictures/resize_20111126060151.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. மல்லிகா ஷெராவத்தை புக் பண்ணி அவரை ஹீரோ கூட ஆட விடாமல் வில்லன் கூட ஆட வைத்து சிம்புவை கடுப்பேற்றியது.. ( அப்புறம் போனாப்போகுதுன்னு 4 லைன்க்கு சான்ஸ்.. )

2. ஹீரோயினை கொடுத்த சம்பளத்துக்கு சரிக்கட்ட படம் பூரா முதுகு முழுக்க, இடை முக்கால் வாசி தெரியும் படி உடை வடிவமைத்தது..


3. சந்தானத்தை புக் செஞ்சு காமெடி வசனங்கள் சேர்த்து ரசிகர்களை ஓரளவு காப்பாற்றியது..

4. பாடல்கள் ஆல்ரெடி சூப்பர் ஹிட் என்றாலும் படத்தில் பார்க்கும்போது நடன அசைவுகள் பல இடங்களில் வெல்டன் சொல்ல வைத்தது..

5. ஜித்தன் ரமேஷை முடிஞ்சவரை கேவலப்படுத்தியது ( பாவம் சிம்புவுக்கும் அவருக்கும் என்ன பிரச்சனையோ?)

http://suriyantv.com/wp-content/uploads/2011/11/osthi-simbu-5.jpg

ஹீரோயின் போட்டிருக்கும் 15 பவுன் ஒட்டியாணம் ஹி ஹி
இயக்குநருக்கு சில கேள்விகள், சில சந்தேகங்கள், ஆலோசனைகள்

1.  ஒரு சாதாரண இன்ஸ்பெக்டர் எப்படி எல்லா கேசுக்கும் மீடியாக்களிடம் பேட்டி தர்றார்? அட்லீஸ்ட் அவரை ஏ சி யாகவாவது காட்டி இருக்கலாம்.

2.  சிம்புவின் அம்மாவாக வரும் ரேவதி அவ்வளவு தத்தியா? சிம்பு கொண்டு வரும் கட்டுக்கட்டான பணத்தை எல்லாம் ஏது? எப்படி இவ்ளவ் பணம் என்றெல்லாம் கேட்காமல் பீரோவில் வைப்பது எப்படி?

3. ஒரு இன்ஸ்பெக்டரின் அம்மா இறந்ததும் அவர் அப்போதே போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் பண்ணீ இருக்க மாட்டரா? தலையணையால் தலையை அமுக்கி கொல்லப்பட்ட ரேவதி பிணத்தில் மூக்கில் ரத்தம் வந்திருக்குமே?

4. நாசர், ஜித்தன் ரமேஷ் இருவரும் அவர்கலது சம்பாத்யத்தை அனைத்தையும் பீரோவிலேயே தான் வைப்பாங்களா? அதென்ன போயஸ் தோட்டமா? வில்லன் அந்த பங்களாவை எரிச்சதும் நடுத்தெருவுக்கு வந்துடுவாங்களா?

5. எல்லா பணமும் போனதும் ஜித்தன் ரமேஷ் ஏன் வில்லனிடம் வேலைஆளாக சேர்கிறார்? சிம்புவிடம் போய் சொன்னால் தீர்ந்தது மேட்டர்..

6. க்ளைமாக்ஸில் எந்த வித டர்னிங்க் பாயிண்ட்டும் நடக்காமல் ஜித்தன் ரமேஷ் திடீர் என திருந்துவது எப்படி? படத்தை முடிக்கவா? அதே போல் சிம்பு 15 ரீல் வரை தன் அப்பாவை கரித்துக்கொட்டிட்டு இருந்தவர் திடீர்னு பாசம் பொங்க பேசுவது எப்படி?

7. ஜித்தன் ரமேஷ்  கல்யாணம் நடக்கும் சமயத்தில் சிம்பு தன் ஜோடியுடன் வந்து நான் தான் அண்ணன், எனக்குத்தான் முதல்ல மேரேஜ் நடக்கனும்னு தன் ஜோடியோட வர்றார், ஓக்கே, அவர் மணடபத்தை விட்டு போனதும் ரமேஷ் மேரேஜை நடத்தலாமே? ஏன் எழவு வீடு போல் எல்லாரும் எந்திரிச்சு போறாங்க?

http://www.freedownloadpond.com/wp-content/uploads/2010/10/richa_gangopadhyay_hot_navel_stills_01.jpg

படம் சிம்பு ரசிகர்கள் கூட பார்க்க முடியாது..

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 37

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்கிங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஈரோடு ஸ்ரீலட்சுமியில் படம் பார்த்தேன்

இந்தப்படம் 15 நாள் ஓடும் எல்லா செண்ட்டர்லயும்..

http://surfingall.files.wordpress.com/2010/12/richa-gangopadhyay-hot-in-black1.jpga


டிஸ்கி - வசனத்துக்கு தனி காமெடி கும்மி பதிவு இருக்கு ஹி ஹி

டப்பா படமான ஒஸ்தியில் சந்தானம் பேசும் டாப்பான காமெடி வசனங்கள்

 

Beauty and the Beast - ஹாலிவுட் பட விமர்சனம்

 

நையாண்டி நாரதரும், நாட்டு நடப்பும் ( ட்வீட்ஸ் & ஜோக்ஸ்)


1.வெளியில் சொல்ல முடியாத அளவு ரகசியம் என் வாழ்க்கையில் இருக்கிறது : சோனியா அகர்வால்! # தயக்கம் என்ன? சொல்லுங்க, பொழுதைபோக்கலாம்

-------------------------------



2. கொலைவெறி பாடலை கேட்டு புல்லரித்துப் போன அமிதாப்!  # தமிழ் தெரியாத அண்ணனே புல்லரிச்சுட்டாருன்னா.....

-----------------------------



3. ஒய் திஸ்கொலை வெறி பாட்டை  6 நிமிஷத்துலயே ரெடி பண்ணிட்டேன் # அண்ணே, ஒரே லைனை 37 டைம் திருப்பி திருப்பி  சொல்ல எதுக்குன்னே அம்புட்டு நேரம்?

-----------------------------------------



4. சோனியா அகர்வால் -ன் ஒரு நடிகையின் வாக்குமூலம் பட ரிலீஸை முன்னிட்டு செல்வராகவன் ஒரு இயக்குநரின் வாக்குமூலம் என ஒரு குறும்படம் எடுக்கறாராம்

-------------------------------------


5. டியர்.என்னை வர்ணீங்க..

இதோ ஆரம்பிச்சடறேன்..

ஆனா ஒரு கண்டிஷன்.என் மனசை மட்டும் தான் வர்ணிக்கனும்.

. அய்யோ நான் லவ்வர் போஸ்ட்டை ரிசைனிங்க்

--------------------------------------





6. கடவுளே! அழகில்லாத பெண்களை ஏன் படைச்சே?

தம்பி.. பெண் என்றாலே அழகுதான், இதுல அழகுள்ள, அழகில்லாத என ஏன் பிரிச்சு பார்க்கறே?

-------------------------------------

7. பெண்களை வர்ணிக்கறப்ப இனிமே உடம்பை வர்ணிக்கக்கூடாதாம்.

.அய்யய்யோ, இனி எப்படி என்ன பொய் சொல்லி லவ்வரை கரெக்ட் பண்றது?அவ்வ்வ்

---------------------------------------

8. தமிழ்நாட்டில் ஒரு சொட்டு சாராயம் கூட இல்லாமல் செய்து காட்ட எங்களால் முடியும் - அன்புமணி #  குடிச்சே அழிக்க நீங்க என்ன கேப்டனா?


----------------------------------------------

9.  திராவிடக்கட்சிகள் 45வருடங்களாக வசனங்கள் பேசி மக்களை ஏமாற்றிவருகின்றன-அன்புமணி# பின்னே ,டூயட், குத்தாட்டம் எல்லாம் எதிர்பார்க்க முடியுமா?


-----------------------------------------

10. . இனி வரும் காலங்களில் பாமக ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கும்- அன்புமணி#பகல் கனவுகள் பலிப்பதில்லை டாக்டர் அய்யா

=---------------------------------------




11.  ஜெ. மீது நடவடிக்கை எடுக்க சொன்னால் என்னை மிரட்டுகிறார்கள்-ஸ்டாலின்# லூசாப்பா நீங்க? போலீஸ் ஸ்டேஷன்ல போய் எஸ் ஐ மேல புகார் குடுத்தா? அம்மா ஆட்சி நடக்கறப்ப அம்மா மேலேயே புகார் குடுத்தா?

--------------------------------


12. ப்ரியங்கா சோப்ரா மும்பையில் செய்வதை த்ரிஷா  இங்கே தமிழில் செய்யலாமே? -சாரு நிவேதிதா # செய்யலாம், ஆனா சென்சார் அனுமதிக்கனுமே?

-----------------------------------------

13. . வீட்டை அபகரித்ததாக ஸ்டாலின் மீது புகார் . # பெரிய வீடு தானே? அப்போ சிவில் கேஸ் தான் பிரச்சனை இல்ல.. 

------------------------------------------

14.  மின்சாரம் தடைபடும் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும், 50 ரூபாய் வீதம் நுகர்வோருக்கு, மின் வாரியம் நிவாரணம் தர வேண்டும்#  தமிழக கஜானா காலி ஆகப்போகுது

------------------------------------------

15.  எனக்கு சம்பளம் முக்கியமில்லை; நல்ல படங்கள்தான் முக்கியம்-  ஜெனிலியா # அக்கா, நான் ஒரு குறும்படம் எடுக்கறேன், ஓ சி ல வந்து நடிச்சு குடுங்க

--------------------------------------



16.  கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட தேசம்னு கேரளாவை சொல்றாங்க, ஆனா சாத்தானால் சபிக்கப்பட்ட தேசம் ஆகிடுமோன்னு பயமா இருக்கு #FakeCryOfKerala

------------------------------------

17. . சார், ஒரு நல்ல கேரக்டர் இருக்கு , பண்றீங்களா? 

சாரி சார் அட்லீஸ்ட் 140 கேரக்டர் வேணும் # ட்விட்டர் ஆக்டர்

--------------------------------------

18.  கேரளா அரசே! மனசுக்குள்ள ஜெ என நினைப்பா? ஏன் கோர்ட் ஆர்டரை மதிக்கலை?#FakeCryOfKerala

----------------------------------

19. . அத்தான், எதுக்காக என்னை சேலை கட்ட சொல்றீங்க?ஐ ஆல்வேஸ் இன் மாடர்ன் டிரஸ்.. 

அதுவா? சேலை கட்னாலாவது அழகா இருக்கியா?ன்னு பார்க்கத்தான்

------------------------------------------

20.  ஜட்ஜ் - உங்களுக்கு ஆங்கில அறிவு கிடையாதா?

கைதி - எதுக்கு சுத்தி வளைக்கனும்? , எனக்கு அறிவே கிடையாது. இப்போ என்ன செய்வீங்க?

---------------------------------------

21 அழகு நிலையம் செல்வதில், அதற்கு செலவு செய்வதில் உலக அளவில் பெண்களே அதிக நேர விரயம் , பண விரயம் செய்யுறாங்க

---------------------

22 .பசங்க ஒரு நாளுக்கு ஒரு தடவை பவுடர் அடிச்சாலேஅதிகம், இந்த பொண்ணுங்க டெயிலி 13 தடவை பவுடர் அடிக்கறாங்க

-----------------------------------

23 .194 நாள் சிறைவாசத்திற்குப் பின் கனிமொழி ஜாமீன்# அடடா, இன்னும் 6 நாள் இருந்தா வெற்றிகரமான 200வது நாள் போஸ்டர் ஒட்டி இருக்கலாம், வட போச்சே

-----------------------------------------

24. துரோகம் செய்து விட்டது மத்திய அரசு:ஹசாரே மீண்டும் உண்ணாவிரத அறிவிப்பு# தாத்தா! போர் அடிக்குது, வேற வெள்ளாட்டு வெள்ளாடலாம்

--------------------------------------

25.  சில்லரை வர்த்தக அன்னிய முதலீட்டால் விவசாயிகள் பயனடைவர்- பிரதமர் # அன்புள்ள சிங்க், நீங்க விவசாயக்குடும்பமா?

----------------------------------------

Wednesday, December 07, 2011

ரஜினி-ன் கோச்சடையான் - பஞ்ச் டயலாக்ஸ் - காமெடி கும்மி

http://www.teluguwave.com/wp-content/uploads/2010/07/Soundarya-Rajinikanth-getting-engaged-to-Ashwin.jpg

ரஜினியின் ராணா படம் எடுக்க கால அவகாசம் தேவைப்படுவதால் ரஜினி அதுவரை என்ன செய்யலாம்னு யோசிச்சிருக்கார்..என்ன தான் ரஜினி குணம் ஆகி விட்டாலும் அவரது பழைய உடல் பொலிவு இல்லை.. ரொம்ப இளைச்சுட்டார்.. இந்த கெட்டப்பில் வீரமான கேரக்டரும், குதிரை சவாரி செய்யும் மன்னர் கேரக்டருமான  ராணா கேரக்டரில் நடிக்க அவருக்கு தயக்கம் ஏற்பட்டதில் வியப்பு இல்லை.. 


 இந்த சமயத்துல தான் ரஜினிக்கு ஒரு ஐடியா , அவரோட பொண்ணு எடுத்த படமான சுல்தான் தி வாரியர் பிஸ்னெஸ் ஆகாம பொட்டில தூங்குது.. காரணம் அது ஒரு அனிமேஷன் படம்.. ஆனானப்பட்ட டின் டின் கூட தமிழ் நாட்டில்  பிரமாதமாக ஓடலை.. ஜூராசிக் பார்க் எடுத்து ஹிட் ஆக்குன ஸ்பீல்பெர்க்காலயே முடியாதது சவுந்தர்யா ரஜினியால முடியுமா?னு ஒரு கேள்விக்குறி.. 

அதனால எப்படி எம் ஜி ஆர் நடிச்ச கடைசி படத்தோட சில காட்சிகளை வெச்சு கே பாக்யராஜ் அவசர போலீஸ் 100-னு ஒரு படம் குடுத்தாரோ அந்த மாதிரி சுல்தான் த வாரியர் படத்தோட கொஞ்சம் காட்சிகள் ரஜினி நடிச்சா ஒரு படம் ரெடி ஆகிடும்.. ஒரே கல்லுல 2 மாங்கா.. ராணா ரெடி ஆவதற்குள் ரெஸ்ட் எடுத்த மாதிரியும் ஆச்சு.. மகளோட படத்தை முடிச்சுக்கொடுத்த மாதிரியும் ஆச்சு..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRyUNNktUz1KzJn0VU9QyXADtIJCxXVKAkJPq7iX0X6Z2Ya623-1zqUAr6xWlJP1cWc3tZOFhArrCeXu0rMVK-ZBH3HpROb2zijVHQ2UnyZGAqBrJsewCm97VAb8G7bzGyYylSKCM-V2ZR/s1600/Rana-Rajinikanth.jpg

இது நம்ம ஆளு படம் பாலகுமாரன் டைரக்‌ஷன் என இருந்தாலும் டைரக்‌ஷன் மேற்பார்வை கே பாக்யராஜ் என போட்டால் தான் வாங்குவோம்னு விநியோகஸ்தர்கள் அடம் பிடிச்ச மாதிரி மகள் படத்துக்கு எந்த தடையும் வந்து விடக்கூடாது என்று ரஜினி கே எஸ் ரவிக்குமார் பெயரை கதை வசனம் டைரக்‌ஷன் மேற்பார்வை என போட ஐடியா செஞ்சிருக்காங்க..

 ஹீரோயின் அனுஷ்கா, தங்கை கேரக்டர்ல சிநேகா என பேச்சு வார்த்தை நடந்துட்டிருக்கு.. 

அந்த கோச்சடையான் படத்துல ரஜினி என்ன பஞ்ச் டயலாக் பேசுவார்? கற்பனை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOQEash-KNLksCGwe1tJSRVKjPdfJ-sIc5eNRYLpZkcUOZhwdpWmZ-US2RPAYJjS1bbrLoonDSbi-h14Uv1a1D_eDbRbVYeD_b0mrKaqCPnYf2JsdKq6E-KIW63fP4_luIJPf5YK0AhDA/s400/soundarya+wedding+photos+2.jpg



1. கோச் (COACH) ச்சை பகைச்ச ப்ளேயர் கூட டீம் ல இருந்துடலாம், இந்த கோச்சடையானை பகைச்சுக்கிட்டா பூமிலயே இருக்க முடியாதுடா கண்ணா!


-----------------------------------
2. டானா (DON) இருந்தவன் தான் இந்த ராணா! அந்த ராணாவுக்கே நைனாடா இந்த கோச்சடையான்

-------------------------------------

3. கால தேவனுக்கே  டைம் குடுத்தவன் நீ.. மரண தேவனுக்கே டேக்கா கொடுத்தவன் நான் 

-----------------------------------------

4. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது ஸ்டைலு.. இரண்டெழுத்தில் என் பேச்சிருக்கும்  - ராணா

------------------------------------------------

5. என் பேரு ராணா…. என்னை எதிர்க்க யாராவது இருக்காங்களா ஆணா? என்னை பகைச்சுக்காதே வீணா…என் பேரை கேட்டாலே பேதி ஆகிடும் தானா

-------------------------------------

http://www.hdwallpapers.in/walls/beautiful_anushka-normal.jpg

6.  அரசாங்கமே எனக்கு எதி”ரானா.”லும் … அரசியல் வாழ்வு ஒரு புதி”ரானா”லும் …கலங்க மாட்டான் இந்த ராணா.


-----------------------------------------

7. சபரி மலை போனா தமிழர்களை தாக்கறாங்க.. இந்த அண்ணாமலை மறு அவதாரம் எடுத்து வரனும்னு ஆளாளுக்கு கேக்கறாங்க

---------------------------------

8. அரசியலுக்கு வந்தவங்க சாதிக்காததை அரசியலுக்கு வராம  சாதிக்கறவன் தான் நாட்டுக்கு தேவை

--------------------------------------

9. இகழ்ச்சி அடையான் ஒரு முயற்சி உடையான்.. வீண் புகழ்ச்சி விரும்பான் இந்த கோச்சடையான்

------------------------------------------

10. என் இமேஜ் டேமேஜ் ஆனாலும் எனக்கு கவலை இல்லை, முல்லை பெரியாறு டேம் ஏஜ்டு-னு சாக்கு சொல்லி இடிக்க விட மாட்டேன்

---------------------------------------

http://files.whiteapple4u.webnode.com/200000402-3aaad3ba45/Sneha_blue.jpg

11. இரட்டை இலைக்குத்தான் ஜனங்க ஓட்டு போட்டாங்க.. இரட்டை விலைக்கு இல்ல

------------------------------------

12. கோர்ட்டுக்குப்போறதுக்கே நேரம் இல்லாதவங்க கோட்டைக்கு வந்து என்ன செய்யப்போறாங்க?

----------------------------------------------


டீன் ஏஜ் ஜோக்ஸ் - TEEN AGE JOKS

 
1.காலைல இருந்து கஷ்டப்பட்டு உங்களுக்கு பாடம் நடத்தி இருக்கேன்.. என்ன புரிஞ்சுது?

டீச்சர்.இஷ்டப்பட்டு பாடம் நடத்தலையா? அது ஏன்?

---------------------------------------

2. டியர். நம்ம காதல் ஒரு வெங்காயம் மதிரி..

என்ன உளர்றீங்க?

கட் பண்ணி பாரு.. கண்ல கண்ணீர் வரும் ..

-------------------------------------

3. சாமி!இப்படி ஒரு மொக்கை ஃபிகரை எனக்கு லவ்வரா தந்திருக்கியே.. ஏன்?

டேய்,நாயே, உண்டியல்ல நீ போட்ட எட்டணாக்கு இதுவே அதிகம்டா!

--------------------------------------

4. கண்ணாடியை நாம் கவனமாக கையாள்வது போல மற்றவர்கள் உணர்வுகளை கையாள வேண்டும், சிறு சொல் கூட கீறலை ஏற்படுத்தி விடும்

----------------------------------

5. ஆஃபீஸ்ல எவ்ளவ் பிரஷரை மேனேஜர் என்மேல இறக்கினாலும் நான் கண்டுக்க மாட்டேன்.. ஏன்னா அதிக அழுத்தம் குடுத்துத்தானே கரி வைரம் ஆக்கப்படுது.. ?

---------------------------------

6. கடவுளிடம் நான் கேட்டுப்பெற்ற வரங்கள் நிறைய! ஆனால் கேட்காமலேயே கிடைத்த வரம் நீ!! # SMS

-------------------------------

7. நமக்குக்கிடைக்கும் சந்தோஷங்களுக்கும், நமக்கு வரும் வலிகளுக்கும் நாமே பொறுப்பு

----------------------------

funny and beautiful species pictures1

8. காதல் என்பது ஒருவரை சந்திக்கும்போது வருவதை விட அவரைப்பற்றி நினைக்கும்போதே அதிகம் வருகிறது

---------------------------------

9. அன்பில் தன் அம்மாவுடன் போட்டி போடக்கூடிய தகுதி படைத்த பெண்ணையே ஆண் தன் துணையாக அடைய நினைக்கிறான்

--------------------------------

10. உனக்கு உரிமை இல்லாததை அடைய நினைக்காதே.. முயற்சிக்காதே! உனக்கு உரியதை விட்டுத்தராதே!

---------------------------------

11. ஒரு ஃபிகரை புரிஞ்சுக்கறதுங்கறது 2 KBPS ஸ்பீடுல 1 GB  ஃபைலை லோடு பண்றப்ப 95 % கம்ப்ளீட் ஆகறப்ப கரண்ட் போகுமே அது போல!

---------------------

12.உன்னை நம்பும் இதயத்தை விட அழகானது வேறு எதுவும் இல்லை

-----------------------------------

13. ஆணின் பலவீனம் பெண்ணின் தற்காலிக அழகை நிரந்தரம் என நம்புவது, பெண்ணின் பலவீனம் ஆணின் நிரந்தர அறிவை எதேச்சையானது என நினைப்பது

---------------------------------

14. நீ ஒவ்வொரு முறை சிரிக்கும்போதும் மரணம் உன்னை விட்டு விலகுகிறது, என் சரணம் உன்னை நோக்கி வருகிறது

-------------------------------

15. நண்பனும், எதிரியும் நமக்குள்ளே. உன் மனதை நீ அடக்கினால் அது உன் நண்பன், அடக்காவிட்டால் அதுவே எதிரி

-----------------------------------





16. அத்தை பையனை மேரேஜ் பண்ணிக்கறதா சொன்னேன், அதிர்ச்சில மயக்கம் ஆகிட்டான்.


ஓஹோ மாமா ஸ்டேஜ்ல இருந்து கோமா ஸ்டேஜ்க்கு போய்ட்டானா?


-------------------

17. பேங்க்ல ஒர்க் பண்ற பொண்ணைத்தான் மேரேஜ் பண்ணிக்குவேன் .

ஓக்கே, குடும்ப”பாங்க்”கான பொண்ணா பார்த்துடலாம்

----------------




18. நம் இருவரில் பரஸ்பரம்  யார்  யார் மீது அதீத அன்பு வைத்திருக்கிறோம் என்று பொறாமை அற்ற போட்டி நிலவுகிறது

--------------



19. பிளாக்கில் விசிட்டர்ஸ் டுடே ஜீரோ என காண்பித்தால் பிளாக் ஓனரே  அந்த பிளாக் பக்கம் போக வில்லை என்று அர்த்தம்


------------------------


20.  என் உள்ளக்காதலை அவ கிட்டே சொன்னேன், சாரி ஐ ஆம் ஆல்ரெடி மேரீடுன்னா..

அப்புறம்?


என் கள்ளக்காதலை சொன்னேன், ஓக்கேன்னுட்டா..

--------------------------

 



21.  உன் வாசம் வீசும் கர்ச்சிப் வேணும் - கல்யாணத்துக்கு முன்

ஏண்டி, ஒழுங்கா ஒரு கர்ச்சீப்பைக்கூட  துவைக்க மாட்டே? -

(கல்யாணத்துக்குப்பின்)


---------------------------

22. பிளாக்கில் உருப்படியாக பதிவை ரெடி பண்ணாமல் வாசகரை மட்டும் ரெடி பண்ணினால் அவர் எதை படிப்பார்?


----------------------------

23. லொள்ளானவனிடம் ஐ லவ் யூ சொன்னாள். ஜொள்ளானவன் ஆனான். கல்யாணம் எப்போ? என்றாள்.தில்லானவன் அல்ல என்றான் # சே! இவனும் எஸ்கேப்பா?


-------------------------

24. சுவரில் ஆணி அடிக்க எதுக்கு உன் மனைவி கையை யூஸ் செஞ்சே?

அவ தான் நக ”சுத்தி”ன்னா


-------------------------------

25.  லாடம் கட்டுனா குதிரை வேகமா ஓடும், படப்பெட்டிக்கு லாடம் கட்டுனா டப்பா படம் பிரமாதமா ஓடிடுமா? டவுட்டு


-------------------



 

26 அந்த லேடீஸ் காலேஜ்ல வாலிபால் டீம் 2 இருக்காமே?


ஆமா, வாலிப பால் டீம், வயசான பால் டீம் # ஜூனியர்  VS  சீனியர்

-----------------

27. XQS மீ சார், என் பிளாக் பக்கம் வந்துட்டுப்போக முடியுமா?

படிக்கற அளவு பிரமாதமா மேட்டர் இல்லையே ?

உங்களை யார் படிக்க சொன்னது? ஜஸ்ட் விசிட்

-------------------------


28. கலைஞர் அய்யா, எல்லாரும் கிண்டல் பண்றாங்க,இனியாவது ஊழல் பண்றதை நிறுத்துங்க.


எத்தனை பேர் கிண்டல் பண்ணினாலும் யாராலும் தடுக்க முடியாது.

-------------------------



29 பெண்ணின் கஷ்டங்களை ஓரளவுக்காவது உணர ஆண் பெண்ணாக பிறப்பெடுக்க தேவை இல்லை, பெண் உடை அணிந்து ஒரு நாள் வீட்டில் உலாவந்தால் போதும்


------------------

30. வெய்யிலிலும், மழையிலும் எனக்கு உன் நினப்பு,ப்ளீஸ் திருடிட்டுப்போன குடையை மட்டும் திருப்பிக்குடுத்துடு #  SMS


---------------------





31. எதுவுமே சுலபம் இல்லைதான், ஆனால் எல்லாம் பாஸிபிள்தான் # தேவை முயற்சி

-----------------------

32  விக்ரமை காதலிக்கிறேன்! விஷாலை ரொம்ப பிடிக்கும்!! - ஸ்ரேயா # விக்ரம் தொழில் அதிபர் அல்ல,விஷால் எழில் அதிபர் அல்ல,அப்புறம் ஏன்?


---------------------------

33  ஐஸ்வர்யா தனுஷ்இயக்கும் முதல் படமான "3"-ல் இருந்து நடிகை அமலாபால் திடீரென நீக்கம் # முதல்ல பட டைட்டிலை மாத்துங்க. நாமம்தான் நினைவு வருது

--------------------------

34 அரவக்குறிச்சி திமுக., எம்.எல்.ஏ.,கைது:காவிரி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய விவகாரம் # அனுமதி கேட்டப்ப கொடுக்காம விட்டுட்டு!!

-------------------------------

35 . தனித்திருந்தேன்,பசித்திருந்தேன்,விழித்திருந்தேன். நீ வரவே இல்லை. # மீறி வந்தா செக்யூரிட்டிக்கு உங்கம்மாவையும் கூடவே கூட்டிட்டு வந்துடறே?

Tuesday, December 06, 2011

பிரபல பத்திரிக்கைகளின் கவனத்திற்கு.. இது நியாயமா?

வலைத்தளங்களில் ட்விட்டரின் சேவை, பங்களிப்பு மகத்தானது,,அப்பப்ப நடக்கும் உலக நடப்புகளை ட்விட்டரில் உடனுக்குடன் அறிய முடிகிறது .17.7. 2010 -ல் நான் வலைத்தளம் தொடங்கி விட்டாலும்  ஆனந்த விகடனில் வலை பாயுதே பகுதியில் ட்விட்டர்ஸ் அப்டேட் பார்த்து 1.2.2011 -ல் தான் ட்விட்டர் உலகத்திற்கே வந்தேன். 

ஆனால் வாசகர்களிடம் பலத்த வரவேற்பு பெற்ற வலை பாயுதே ட்வீட்ஸ்க்கு சன்மானம் இல்லை.. இது ஏன்? வாரா வாரம் 8 லட்சம் புத்தகம் விற்கும் ஆனந்த விகடன் ட்வீட்ஸ் போட 2 பக்கங்கள் ஒதுக்குகிறது. அதில் மினிமம் 20 ட்வீட்ஸ் வருகிறது.. அதில் ஒரு ட்வீட்டுக்கு ரூ 100 பரிசு கொடுத்தால் என்ன? எழுதுபவர்களுக்கு உற்சாகமாக இருக்குமே?

அதே போல் படைப்பு வந்தால் காம்ப்ளிமெண்ட்ரி காப்பி அனுப்புவதில்லை.. ட்வீட் போடுபவர்களின் பயோ செக் பண்ணி பார்த்தால் அவர்கள் வலை தள முகவரி அல்லது ஃபோன் நெம்பர், அல்லது மெயில் ஐ டி இருக்கும்.. அதன் மூலம் முகவரி விசாரித்து  சன்மானமும் , காம்ப்ளிமெண்ட்ரியும் அனுப்பலாமே?

அதே போல் குமுதம் ரிப்போர்ட்டரில் ஆன் லைன் ஆப்பு என்ற பெயரில் 2 வாரங்களாக ட்வீட்ஸ் போடுகிறார்கள்.. அதை தொகுப்பவர் குமுதத்தில் பணியாற்றும்  வந்தியத்தேவன் என்பவர்..  இவர்களும் சன்மானம், புத்தகப்பரிசு அனுப்ப பரிசீலனை செய்ய வேண்டும்.. 

தின மலர் பேப்பரில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு முழுப்பக்கமும்  ஃபேஸ் புக், ட்விடர் கமெண்ட்ஸ்க்கு ஒதுக்குகின்றனர்... அவர்கள் பேப்பரை அனுப்பாவிட்டாலும் பரவாயில்லை.. சன்மானமாவது அனுப்ப வேண்டும்..தினமலரில் ஒரு ஜோக்குக்கு ரூ 500 பரிசு தருவதால் ட்வீட்க்கு ரூ 250 தாராளமாக தரலாம்.

மல்லிகை மகள்  எனும் பெண்கள் மாத இதழை நண்பர்  திரு ம கா சிவஞானம் நடத்துகிறார்.. அவர் வலைப்பூவும் வைத்துள்ளார்...  அவர் தன் பத்திரிக்கையில் வரும் ஜோக்கிற்கு ரூ 50 பரிசு தருகிறார்.. அவர் அந்த இதழில் ட்விட்ஸ் க்கு ஒரு பக்கம் ஒதுக்குகிறார்.. அந்த புக் சேல்ஸ் குறைவு என்பதால் அவர்கள்  புக் மட்டுமாவது அனுப்பலாம்.. 

புதிய தலை முறை புக் ஆசிரியர் மாலனின் மேற்பார்வையில் நடை பெறுகிறது..ஆரம்பத்தில் 3 வாரங்கள் ட்வீட்ஸ் போட்டாங்க.. இப்போ போடறதில்லை .. ஏன்னு தெரியலை. 


இந்தியா டு டே புக்கில் ஒரே ஒரு இதழில் ட்வீட்ஸ் போட்டாங்க.. அப்புறம் போடறதில்லை.. 


பாக்யா வார இதழில் நெட்டில் இருந்து சுட்டவை என்ற டைட்டிலில் இரு வாரங்களாக ஜோக் போடறாங்க..

நிற்க.. மாறி வரும் உலகில் ட்விட்டரின் பங்களிப்பை இணைய  இணைப்பு இல்லாத மக்களிடம் கூட அதை கொண்டு சேர்க்கும் பத்திரிக்கைகளின் பணி மகத்தானது என்பதில் ஐயம் ஏதும் இல்லை.. ஆனால் அதே சமயத்தில் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு சன்மானமும், பத்திரிக்கைகளை அதாவது படைப்பு வந்த புக்கை படைப்பாளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.. 

அப்புறம்.. ட்விட்டர்களில் ரெகுலராக சிலரது ட்வீட்ஸ்களே மீண்டும் மீண்டும் வருகிறது.. புது முகங்களுக்கு வாய்ப்பு அதிகம் வருவதில்லை.. இதை தவிர்க்க பத்திரிக்கைகள் பிரசுரம் ஆகும் ட்வீட்ஸ்களில் பாதி பிரபல ட்வீட்டர்ஸ்.. மீதி பாதி புது முகங்களுக்கு என ஒதுக்கலாம்.. ட்விட்டரில் இருக்கும் பிரபல ட்வீட்டர்களும் அதாவது தங்களிடம் அதிக ஃபாலோயர்ஸ் உள்ள ட்வீட்டர்களும் புதுமுக ட்வீட்டர்ஸ்க்கு RT செய்து அவர்களுக்கு உதவலாம்.. 

ஆல்ரெடி பலர் பலரது ட்வீட்களை ரீ ட்வீட் செய்து கொண்டு தான் இருக்காங்க.. அதை எல்லோரும் செய்ய முற்பட வேண்டும்.. 

இப்போது நான் சொன்னது எல்லாம் சுட்டிக்காட்டலே, சொல்லிக்காட்டல் அல்ல.. எனவே பத்திரிக்கைகள் இக்கட்டுரையின் நோக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

இப்பதிவில் கமெண்ட் போடும் ட்வீட்டர் நண்பர்கள் , பதிவர்கள் தங்கள் ஆதங்கத்தை, கருத்தை த்தெரிவிக்கலாம்..

வெட்டிப்பயல் எழுதிய குட்டி குட்டி ஜோக்ஸ்


1.எனக்குப் பிடிச்ச கிளாமர் நடிகை நான்தான்! - நமிதா # எனக்குப்பிடிச்ச சிறந்த முதல்வர் நான் தான் - கலைஞர்


----------------------------------------

2 .டியர் டேமேஜர், நீங்க ஃபிகர்ங்க கிட்டே கடலை போடறப்ப நாங்க கண்டுக்கறோமா? ஆனா நாங்க அந்த புனிதப்பணியை செய்யறப்ப உங்களுக்கு ஏன் பொறுக்கறதில்லை?



------------------------------------------

3 கோவை , திருப்பூர் மக்கள் கிணறு, போரிங்க் பைப் போன்ற நிலத்தடி நீரை பருகுவதை தவிர்க்கவும்.என்புருக்கிநோய் அபாயம், சுகாதாரத்துறை எச்சரிக்கை

------------------------------------

4 நிலம் வாங்க ரூ.6.23 லட்சம் வைத்திருந்த தஞ்சை பிச்சைக்காரர் # நில மோசடி வழக்குல இவரையும் கைது பண்ணிடாதீங்கய்யா பாவம்

-----------------------------------

5  சீதையாக நடித்த ராமராஜ்யம் படம் ப்ளாப் ,  நயன்தாரா அப்செட் # நல்ல வேளை, ஹிட் ஆகி இருந்தா கண்ணகியா ஒரு படத்துல நடிக்க இருந்தாங்களாம்

-------------------------------------


6 கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயரை நீக்குவேன்: கனிமொழி நம்பிக்கை # அய்யய்யோ, அப்போ அரசியலை விட்டே விலகப்போறீங்களா? மேடம்

-----------------------------------




7. மேனேஜர் சார்! உங்களுக்கு ஒரே ஒரு சம்சாரம் தானா?

ஆமா, எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை

-------------------------------------


8. நம் காதல் விழாவின் முதல் பந்தியில் உன் மொத்த அன்பையும் பரிமாறி விட்டாயே!எதிர் காலத்திற்கு இருப்பு இருக்குமா?

-----------------------------------------

9. ஒரு நல்ல படைப்பை உருவாக்குவது மிக எளிது,அந்த படைப்பை நம் பெற்றோர்களிடமும் காட்டி பெருமைப்படத்தக்கதாய் இருந்தால் போதும்



---------------------------------------

10. ஒரு நகைச்சுவை எழுதுவது என்பது மிக எளிது.. யார் மனதையும் புண் படுத்தாமல் கவர வைப்பதே அரிதானது ,அழகானது

--------------------------------




11. உன்னை மறக்க நினைப்பதை மறந்துவிடுகிறேன் அடிக்கடி..


அப்டியா? உருப்பட்ட மாதிரிதான் - பாட புத்தகம்

------------------------------------------

12. உலகத்துலயே மிக அசுத்தமான சூழலில் பராமரிக்கப்படும் பிரபல கோயில் ஸ்தலம் சபரி மலை தான் # ஐயப்பா சாமியா? ஐயோ அப்பா சாமியா?
----------------------------------

13. 24 மணிநேரமும் மக்களுக்காக யோசிக்கிற ஒரே தலைவர் கலைஞர் - குஷ்பூ # ஆமா, மேடம் , பல மக்களைப்பெற்ற மகராசர் ஆச்சே?

------------------------------------

14. ஆள்மாறாட்ட அமைச்சர் கல்யாணசுந்தரத்திடம் 300 கேள்விகள்! # கடைசிக் கேள்வி! , XQS மீ! நீங்க கல்யாணசுந்தரம்தானே?!

--------------------------------------------

15. சமையல் கலையின் வெற்றி என்பது நாக்கின் துணை இல்லாமல் நாசியின் மூலம் வாசம் நுகர்ந்தே ருசியின் தரத்தை உணர்வதே

--------------------------------------




16.அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க தி.மு.க. முடிவு # மானம் மிகு தமிழ் இனத்தலைவர்க்கு நன்றி!அப்புறம் தலைவரே, பொண்ணுக்கு ஜாமீன் கிடைச்சுடுச்சு போல?

---------------------------------

17 தவறான பெண்களுடன் தொடர்பு கொள்ளும் ஆண்கள் தயவு செய்து மனசாட்சியுடன் செயல்பட்டு மனைவியுடன் கூடுகையில் காண்டம் உபயோகிக்கவும் # எய்ட்ஸ் தினம்

-------------------------------------

18. ஈரோடு மேயர் மல்லிகா அடியாட்களுடன் காலைக்கதிர் நாளிதழ் அலுவலகத்தில் புகுந்து அராஜகம்! # NKKP ராஜா, விடாதீங்க, போட்டி ரவுடிய வளர விடாதீங்க

-------------------------------------
19 தமிழ்நாடே ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டதால் இப்போதைய நிலை என்ன ஆச்சு?-கேப்டன் # மப்புல ஓவரா உளறாதீங்கண்ணே, நீங்கதானே போடச்சொன்னிங்க?

----------------------------------------

20 மலையாள படங்களில் நடிப்பது ஈஸி : கனிகா! # ஹி ஹி எஸ் மேடம்,காஸ்ட்யூம் டிசைனருக்குக்கூட வேலை இல்லை

----------------------------------------------

funny pose dog-yoga
Dog In A Lotus Pose Meditating

21 தமிழ் ரசிகர்களை இழிவுபடுத்தி பேசவில்லை -நடிகர் கார்த்தி #ஆமாமா, நானும் கேட்டேன், ரொம்ப கேவலமா எல்லாம் பேசலை, லேசாதான் தாக்குனாரு

------------------------------------

22  டிச.2 முதல் வித்யாபாலனின் கவர்ச்சி விருந்து!! த டர்ட்டி பிக்சர் #என்னய்யா டைட்டில் இது? பியூட்டி பிக்சர்னு வெச்சு அழகியலை கூட்ட வேணாம்?

---------------------------------------

23 முல்லைப் பெரியாறு பிரச்னையில் மக்கள் அமைதி காக்க வேண்டும்-கலைஞர் # ஆமா, நாங்க எல்லாரும் ஊமையா இருக்கோம், நீங்க ஆமையா புகுந்து கெடுங்க

------------------------------------------

24 கலைஞரும், ஜெயலலிதாவும் என் இரு கண்கள் - நமீதா. # அப்போ மொத வேலையா ஆபரேஷன் பண்ணி நொள்ள கண்ணை மாற்றி  நல்ல கண்ணா வைங்க 

-----------------------------------------

25. தீமைக்கும் நன்மை செய் - போராளி பட பஞ்ச்  # அதனாலதான் நாங்க கலைஞரையும், ஜெவையும் மாற்றி மாற்றி சி எம் ஆக்கறோம்?

--------------------------------------

டிஸ்கி - படங்கள் ஓவியர் இளையராஜாவின் ஓவியங்கள்

Monday, December 05, 2011

புரட்சிப்பதிவருடன் ஒரு நேர் காணல் - காமெடி கும்மி கலாட்டா

சார்.. இங்கே புரட்சிப்பதிவர் எங்கே குடி இருக்கார்? நான் அவரை பார்க்கனும்... 

அதோ நேரா போனா ஒரு காஃபி கஃபே வரும் பாருங்க.. அந்த கடைக்கு எதிர்ல தான் குடி இருக்கார்..

சபாஷ், பலே ,காபி பேஸ்ட்டுக்கு எதிரானவர்ங்கறதால காஃபி ஷாப்க்கு எதிர்லயே குடி இருக்கார் போல..

அக்கா, வணக்கம்க்கா ..அண்ணன் இருக்காருங்களா?

அவர் தூங்கிட்டு இருக்காருப்பா.. 

என்னது? தூங்கறாரா? அவர் ஒரு விழிப்புணர்வுப்பதிவர் ஆச்சே? எதுக்கு தூங்கறாரு?எழுப்புங்க.. 

தம்பி.. மதியாதார் தலை வாசல் மிதியாதேன்னு பழமொழி தெரியுமில்ல.. என் வீட்டுக்கு எதுக்கு வந்தே?

அண்ணே, அக்காவை கேட்டுப்பாருங்க.. நான் வாசப்படியை மிதிக்கலை, தாண்டித்தான் வந்தேன்.. 

சரி சொல்லு இன்னா மேட்டரு?

நீங்க தான்னே சொல்லனும்.. உங்க பிளாக்ல உங்க ஃபோட்டோ பார்த்தேன், சூப்பரா இருக்குண்ணே.. அது உங்க 25 வயசுல எடுத்ததுங்களா?

ச்சே, ச்சே  அது என் சொந்த முகம் கிடையாது.. கூகுள் ல போய் காபி பண்ணி என் பிளாக்ல பேஸ்ட் பண்ணிக்கிட்டேன்.

அடடா.. என்னண்ணே.. ஓப்பனிங்க்லயே டக் அவுட் ஆகி சொதப்பறீங்க? நீங்கதான் காபி பேஸ்ட்க்கு எதிரானவர் ஆச்சே.. சொந்த முகத்தையும், உங்க ஃபோன் நெம்பர் , அட்ரஸ் எல்லாம் போடலாமே? அதானே வீரனுக்கு அழகு? இப்போ பாருங்க நான் ஒரு டம்மி பீசு.. நானே என் ஃபோட்டோ , ஃபோன் நெம்பர் எல்லாம் தில்லா போட்டிருக்கேன், நீங்க ஏண்ணே பம்பறீங்க? ஆமா, இதானே உங்க டைரி.. என்னமோ எழுதி இருக்கே?

அகர முகர எழுத்தெல்லாம் ஆதி பகவன்  முதற்றே உலகு-

இது திருக்குறள் ஆச்சே.. ஆல்ரெடி திருவள்ளுவர் எழுதிட்டாரே, நீங்க ஏன் மறுபடி அதை எழுதினீங்க?

லூஸ் ,மாதிரி பேசாதேப்பா.. நம்ம முன்னோர்கள் எழுதுன நல்ல விஷயங்கள் எல்லாருக்கும் போய்ச்சேர வேண்டாமா?

என்னண்ணே, உங்களுக்கு ஒரு நியாயம்  ஊருக்கு ஒரு நியாயம்.. வேடந்தாங்கல் கருணையும், கவிதை வீதி சவுந்தரையும் திட்டி  8 போஸ்ட் போட்டிருக்கீங்களே? அது ஏன்?

ஹி ஹி எல்லாம் ஒரு வயிற்றெரிச்சல் தான்.. ஈசியா ஹிட்ஸ் வாங்கறாங்க..மற்ற பதிவர்கள் எல்லாம் நல்ல போஸ்ட் எழுதியும் ஹிட் ஆக மாட்டேங்குது.. 

சரி... இதென்ன நோட்டு?

அதுவா? எங்க மேரேஜ்க்கு சொந்தக்காரங்க மொய் வெச்சாங்க இல்லையா அந்த நோட்டு, யார் யார் எவ்வளவு மொய் வெச்சாங்க?ன்னு கணக்கு.. நான் அவங்க வீட்ல விசேஷம் நடக்கறப்ப பதில் மொய் வைக்கனும் இல்லையா? அதுக்குதான்..

ஓஹோ.. இதே ஃபார்முலாவை அவங்க ஃபாலோ பண்ணுனா மட்டும் ஏன் திட்டறீங்க? பிளாக் உலகம் ல 10 பேர் பிளாக் போய் நாம கமெண்ட் போட்டாத்தான் அவங்க நம்ம பிளாக் வருவாங்க.. நாம ஓட்டு போட்டாத்தான் அவங்க ஓட்டு போடுவாங்க.. இதுல என்ன தப்பு கண்டு பிடிச்சீங்க?

அதில்லை, 1689 பேர் பிளாக் உலகத்துல இருக்காங்க, ஆனா இந்த 3 பேர் மட்டும் டாப் 20 ல வந்துடறாங்க, அதான் வயிற்றெரிச்சலா இருக்கு.. அதுவும் காபி பேஸ்ட் போஸ்ட்டா இருக்கு.. 

சரி, காபி பேஸ்ட் சரியா தப்பா?ங்கற விவாதம் அப்புறம் வெச்சுக்கலாம், உண்மைத்தமிழன் அண்ணன் கூட ஜூனியர் விகடன் போஸ்ட்டை ரெகுலரா போடறார்..  ஆரூர் மூனா செந்தில் கூட ஒரு போஸ்ட் சொந்த போஸ்ட், ஒரு போஸ்ட் காபி பேஸ்ட் போடறார்.. அவங்களை எல்லாம் எதுவுமே சொல்லாம ஏன் குறிப்பிட்ட இந்த 3 பேரை மட்டும் குறி வைக்கறீங்க?

நீ லூஸாப்பா.. அவங்க 2 பேரையும் பார்க்கவே பயமா இருக்கு.. எனக்கு பயந்த சுபாவம் வேற.. ஆனா கருண், சவுந்தர் எல்லாம் புள்ளப்பூச்சிங்க.. பயந்துக்குவாங்க.. அதான்

சரி.. நீங்க இதுவரை எத்தனை  போஸ்ட் போட்டிருக்கீங்க?

23

அதுல மக்கள்க்கு யூஸ் ஆகற மாதிரி போஸ்ட் எத்தனை?

ஹி ஹி  எல்லாமே அடுத்தவனை குறை சொல்லி போட்ட போஸ்ட் தான் 

சரி, என் போஸ்ட் இதுவரை எத்தனை தெரியுமா? 912.. அதுல ஆனந்த விகடன் , ஜூனியர் விகடன், அவள் விகடன்  காபி பேஸ்ட் பதிவு மொத்தம் 230.. மீதி எல்லாமே சொந்தப்பதிவுதான் ஜோக்ஸ், சினிமா விமர்சனம் , கட்டுரைன்னு போகுது..இதுல உங்களுக்கென்ன கஷ்டம்? சொல்லுங்க?

அதாவது ஒருத்தனே நெம்பர் ஒன்னா வர்றது எனக்குப்பிடிக்கலை... எல்லாருக்கும் வாய்ப்பு வேணும்.. 

அண்ணே, ஓட்டப்பந்தயத்துல முதலாவதா வரனும்னா முதல்ல ஓடி வர்றவனை விட வேகமா ஓடனும்.. அதை விட்டுட்டு அவன் காலை வாரக்கூடாது.. எங்களுக்கும் குடும்பம் இருக்கு, ஆஃபீஸ் வேலை இருக்கு.. எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டு பிளாக் வேலையையும் பண்றோம்.. சும்மா திடீர்னு யாரும் ஜெயிக்க முடியாது.. இதுலயும் உழைப்பு இருக்கு.. 2010 ஜூலை 17 ல பிளாக் உலகத்துக்கு வந்தேன்.. நான் உண்டு என் வேலை உண்டுன்னு எழுதிட்டு இருக்கேன்.. அடுத்தவங்க வம்பு தும்புக்கு போறதில்லை.. நீங்க ஏண்ணே இப்படி இருக்கீங்க? ஏதாவது மன வியாதியா? டாக்டரை போய் பாருங்கண்ணே?

ஆங்க்.. ஒரு குறை கண்டு பிடிச்சுட்டேன்,,.. டைட்டில் ஏன் கிளாமரா வைக்கறே?இதுக்கு பதில் சொல்லு.. 

அண்ணே.. ஒரு சினிமாக்கு டைட்டில் எப்படி முக்கியமோ.. போஸ்டர் டிசைன் எப்படி முக்கியமோ அதே மாதிரி ஒரு பதிவுக்கு டைட்டில் ரொம்ப முக்கியம், மக்களை சுண்டி இழுக்கற மாதிரி டைட்டில் வைக்கனும்.. இது எல்லாம் பேசிக் லெசன்.. அப்புறம் இன்னொரு விஷயம் தெரியுமாண்ணே. கருண், கவிதை வீதி சவுந்தர் 2 பேரும் ஆவரேஜ் பிளாக் ஹிட்ஸ் 1000 டூ 2000 தான், நீங்க அவங்களை தாக்கி போஸ்ட் போட்ட அன்னைக்கெல்லாம் 3000 ஹிட்ஸ் ஆகிடுச்சாம்.. 

அய்யய்யோ.. எனக்கு வயிறு எரியுதே.. இப்படின்னு தெரிஞ்சிருந்தா நான் அவங்களை தாக்கியே இருக்க மாட்டேனே..

இன்னும் சொல்றேன் கேளுங்க . ஒரு பிரபல பதிவர் தன்னோட பஸ்ல என் போஸ்ட் லிங்க் குடுத்து எவ்வளவு மோசமா விமர்சனம் எழுதி இருக்கான் பாருங்க.. அப்டினு கமெண்ட் போட்டாரு.. உடனே அதுல அப்படி என்ன இருக்குன்னு பார்க்க அவரோட ஃபாலோயர்ஸ் 2000 பேரும் வந்து என் ஹிட்ஸ்ஸை ஏத்துனாங்க.. ரொம்ப நன்றிண்ணே அப்டின்னு நான் கமெண்ட் போட்டேன் , உடனே உங்களை மாதிரியே அவரும் பதறி அந்த லிங்க்கை அவர் பஸ்ல இருந்து தூக்கிட்டார்..

என் நல்ல எண்ணத்தை புரிஞ்சுக்காம பேசாதே.. நல்ல நல்ல பதிவுகள் அடையாளம் காணப்படாமலேயே இருக்கு.. உன்னை மாதிரி குப்பை ஆளுங்கதான் திரும்ப திரும்ப சூடான இடுகைல வர்றீங்க.. அதை தடுக்கனும்..

ரைட்டு.. அதுக்கு ஒரு ஐடியா இருக்கு.. உங்களூக்குன்னு ஒரு வாசகர் வட்டம் இருக்கு.. நீங்க நல்ல இடுகைகளை மக்களூக்கு அடையாளம் காட்டுங்க.. எதெல்லாம் நல்ல இடுகையோ அதுக்கு லிங்க் கொடுத்து வலைச்சரம் மாதிரி செயல்படுங்க, 4 பேருக்கு நல்லது நடக்கும், அவங்களூக்கும் ஹிட்ஸ் கிடைக்கும்..

சாரி , அது என் வேலை  இல்லை.. எனக்கு யாரையாவது ஏதாவது குறை சொல்லிட்டே இருக்கனும்.. இப்போ உன் பிளாக்ல சினிமா விமர்சனம் போடறப்ப எதுக்கு கூகுள்ல போய் நடிகைங்க ஃபோட்டோவை போடறே?


அண்ணே, இதுக்காக நான் சென்னையோ, மும்பையோ  போயா ஃபோட்டோ எடுக்க முடியும்.. கூகுள்ல தான் எடுக்க முடியும்..


சரி.. எல்லாரும் வாரம் 5 போஸ்ட்  போடறாங்க, நீ மட்டும் ஏன் டெயிலி 2 போஸ்ட் போடறே? உன்னால பல தரமான பதிவர்கள் வெறுத்துப்போய் பிளாக் எழுதறதையே விட்டுட்டாங்க..

அண்ணே.. லூஸ் மாதிரி பேசாதீங்க.. ராமநாராயணன் மாசம் ஒரு  படம் எடுத்து ரிலீஸ் பண்றதால ஷங்கரோ, மணி ரத்னமோ சினி ஃபீல்டை விட்டு போய்ட்டாங்களா? அவங்கவங்களுக்கு உள்ள மரியாதை அப்படியே தான் இருக்கும்.. டெயிலி 2 போஸ்ட் போடறதால ஒருத்தன் நல்ல பதிவர்னு பேர் வாங்கிட முடியாது.. குறிஞ்சி மலர் போல் அரிதாக பதிவு போடுவதால் ஒரு நல்ல பதிவரை யாரும் குறை சொல்லவும் முடியாது

ஓஹோ, இத்தனை வியாக்கியானம் பேசறியே.. அப்புறம் ஏன் தமிழ்மணம் ரேங்கிங்க் வேணும்னு அலையறே.. அதை விட்டுட்டு நீ பாட்டுக்கு இருந்தா எனக்கு வயிறு எரியாதுல்ல?


அண்ணே.. ஸ்கூல்ல படிக்கறப்பதான் ஒழுங்கா ரேங்க் எடுக்க முடியல.. இங்கயாவது எடுக்கலாம்னுதான் , இதெல்லாம் ஒரு ஜாலிதான்.. இதுனால யாருக்கும் 10 பைசா லாபம் இல்ல.. அப்படி ஏதாவது வருமானம் இருந்தாலாவது உங்க குய்யோ முறையோ அரற்றலுக்கு ஒரு  காரணம் சொல்லலாம்..

சரி.. என் பிளாக்ல ஒரு எதிர் பதிவு போடறேன்.. அங்கே சந்திக்கலாம்..

பெண்களும், பொசஸிவ்னெசும் ( ஜோக்ஸ்)

1.அளவுக்கு மீறி அணுவளவும் கூடப் பேசினால் பெண்களுக்குப் பிடிப்பதில்லையாமே?

அப்டி இல்ல.. அனு கூட பேசினா பிடிக்காது, பொசசிவ்னெஸ்

-------------------------------

2. அளவுக்கு மீறிப் பேசினால் பெண்களுக்குப் பிடிப்பதில்லையாமே?

சொல்றதை மட்டும் கேட்டுக்கனும், எதிர்ப்பேச்சு பேசாம இருந்தா பிடிக்கும்

-------------------------------------

3. கீச்சுகளை கோர்ப்பதற்கான தளம் எதுவென சொல்லமுடியுமா? ஏன்?

இன்னும் என்ன கோர்த்து விடப்போறீங்க? அவ்வ்வ்

------------------------------------

4.வர்மக்கலையைப்பற்றி ஒரு லூசுப்பையன் பார்வைல கதை சொல்லி இருக்கீங்களே? என்ன டைட்டில்?



பேக்கு வர்மம்

--------------------------------------------

5. ஹர்பஜன்சிங்க் - சித்தி ராதிகா என்ன ஒற்றுமை?

அவர் சரத்பவார்க்கு அறை விட்டவரு, இவர் சரத் குமார்க்கு ... ஹி ஹி

--------------------------------

6. படத்தோட ஹீரோவை ஏன் பாட்டெழுத சொல்றீங்க? 

இல்லைன்னா அவர் ஹீரோயின் கூட கடலை போட்டுட்டு இருக்காரே?

-----------------------------------

7. உங்க படத்தை ஏன் வெள்ளிக்கிழமை ரிலீஸ் பண்றீங்க?  

சனி, ஞாயிறு 2 நாள் லீவ் வருதே, அந்த அளவாவது ஓடட்டும்னுதான்

-----------------------------------

8. என் சம்சாரம் கிழிச்ச கோட்டை  நான் தாண்டவே மாட்டேன்..

ஏன்?


  தாண்டினா அப்புறம் அவ ருத்ர தாண்டவம் ஆடிடுவா

-----------------------------------------

9. ஸ்வீட்ஸ்டால்காரர் சினிமா பைத்தியமாம்.. 

அதுக்காக அமலா பால் கோவா செண்ட்டர்னு கடைக்கு பேர் வைக்கனுமா?

--------------------------------------

10. கோவிலில் எப்போது ஃபிகர்  உள்ளே நுழைந்ததோ அப்போவே  என் பக்தி  வெளியே போய்விட்டது

----------------------------------

11. ஒரு திருமணம்  உங்க லைஃபையே மாத்திடும்.. ரெண்டு திருமணம்  உங்க ஒயிஃபையே மாத்திடும்

-----------------------------------

12. இளவரசர் ஏன் சிங்கத்தை கட்டிப்பிடிச்சு போஸ் தர்றார்?

அரியணை ஆசை வந்ததை சிம்பாலிக்காக  அரியை ( சிங்கத்தை) அணைச்சு காட்றார்..

------------------------------------------------

13. பிரியாணில சரக்கு வாசம் அடிக்குதே?

டியர், நீ தானே கொஞ்சம் பட்டையை போடச்சொன்னே?

----------------------------------


14. பாரதிராஜாவின் அன்னக்கொடியும், கொடி வீரனும் சரித்திர வெற்றி பெறும்கறாரே? அது  கொடி காத்த திருப்பூர்க்குமரன் வரலாறா?


--------------------------------------


15. கரண்ட் இருக்கும்போதே நெட்டில் பிட்டுப்படம் பார்த்துக்கொள் # நாங்களும் எதிர் ட்வீட் போடுமோமில்லை

---------------------------------

16. ஒன் சைடு லவ் தெரியும், அதென்ன ஒன் சைடு சைட்டு?  ஹி ஹி மாப்ளைக்கு ஒரு கண் தான் தெரியும் # டோரிக்கண்ணாயிரம்

------------------------------


17. மூணாறில் மனைவியால் கொலை செய்யப்பட்ட கணவன் கடைசியாக கேட்ட பாடல் - ஒய் திஸ் கொலை வெறி கொலைவெறி டி?

---------------------------------


18. மாஸ் ஹீரோ , மாஸ்க் ஹீரோ என்ன வித்தியாசம்? 

மாஸ் ஹீரோன்னா செட்டப்பை மட்டும் மாத்துவாரு, மாஸ்க் ஹீரோன்னா கெட்டப்பை மாத்துவாரு

---------------------------------------


19. கூட்டுக்குடித்தன தம்பதிகள் கூடலுக்கான அழைப்பிற்கு சங்கேத வார்த்தைகளை பரிமாறிக்கொள்வதில் விற்பன்னர்களாக இருக்கிறார்கள் # அவதானிப்பு

---------------------------------

20. நான் வாயைத் திறந்தால் பலர் ஜெயிலுக்குப் போக வேண்டி வரும் - ஆ ராசா #  என் மனசை திறந்தா பலரும் காம்ப்ரமைஸ்க்கு வர வேண்டி இருக்கும் - சோனா 

--------------------------------

21.எனக்குப் பிடிச்ச கிளாமர் நடிகை நான்தான்! - நமிதா # எனக்குப்பிடிச்ச சிறந்த முதல்வர் நான் தான் - கலைஞர்


----------------------------------------

22. சென்னை வருகிறார் கனிமொழி: பலமான வரவேற்பு காத்திருக்கிறது # சென்னை வரும் வெண்ணையே!195 நாட்கள் ஜெயிலில் களி தின்னியே! ஊழல் அன்னையே!

---------------------------------------

23. பார் இருட்டா இருந்தா அது சாதா டாஸ்மாக், பிரைட்டா  ஒரு டியூப்லைட் எரிஞ்சா அது எலைட் ஒயின் ஷாப் ?

--------------------------------

24. கேரளாவுக்கு புத்தி கூறும்படி பிரதமருக்கு ஜெ வேண்டுகோள்  # அவருக்கே புத்திமதி சொல்ல ஆயிரம் பேர் Qல, அவர் எங்கே அடுத்தவங்களுக்கு சொல்ல?

---------------------------------

25. வாழை இலையில் பரிமாறப்பட்ட உணவை சாப்பிட்டால் நம் உடம்புக்கு நல்லது, வாழை இலையையே சாப்பிட்டால் வாழை விவசாயிக்கு நல்லது # கோக்குமாக்குதத்ஸ்

-----------------------------------

26. இப்பலாம் ஏன் படங்கள் வியாழக்கிழமை ரிலீஸ் பண்றாங்க?

வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனா 3 நாள் தான் ஓடுது, வியாழன் ரிலீஸ் செஞ்சா 4 நாள் ஓடுமே? அதான்

-------------------------------------

27. அங்காடித்தெரு அஞ்சலியின் நிஜ பெயர் பாலா திரிபுர சுந்தரி # பொது நலன் கருதி வெளியிடுவோர் ஜி கே கோவிந்தசாமி

-------------------------------------

28. பெண்கள் வாகனம் ஓட்டினால் கன்னித்தன்மை இழந்துவிடுவார்கள்- சவூதி அரேபியா மத சபை # புருஷன் பேரு மயில்வாகனமா இருக்கும்யா லூசே!

-----------------------------------------

29. ஒரு நல்ல படைப்பை உருவாக்குவது மிக எளிது,அந்த படைப்பை நம் பெற்றோர்களிடமும் காட்டி பெருமைப்படத்தக்கதாய் இருந்தால் போதும்



---------------------------------------

30. ஒரு நகைச்சுவை எழுதுவது என்பது மிக எளிது.. யார் மனதையும் புண் படுத்தாமல் கவர வைப்பதே அரிதானது ,அழகானது

--------------------------------

31. உன்னை மறக்க நினைப்பதை மறந்துவிடுகிறேன் அடிக்கடி..


அப்டியா? உருப்பட்ட மாதிரிதான் - பாட புத்தகம்

------------------------------------------


32. யார் எந்த கருத்தை சொன்னாலும் அதை அப்படியே ஏத்துக்கிட்டா அவன் சுய புத்தி இல்லாதவன், எதையும் ஏத்துக்கலைன்னா அவன் சொல்புத்தி இல்லாதவன்

----------------------------------

33. 24 மணிநேரமும் மக்களுக்காக யோசிக்கிற ஒரே தலைவர் கலைஞர் - குஷ்பூ # ஆமா, மேடம் , பல மக்களைப்பெற்ற மகராசர் ஆச்சே?

------------------------------------

34. ஆள்மாறாட்ட அமைச்சர் கல்யாணசுந்தரத்திடம் 300 கேள்விகள்! # கடைசிக் கேள்வி! , XQS மீ! நீங்க கல்யாணசுந்தரம்தானே?! ( ப .பி)

--------------------------------------------

35. சமையல் கலையின் வெற்றி என்பது நாக்கின் துணை இல்லாமல் நாசியின் மூலம் வாசம் நுகர்ந்தே ருசியின் தரத்தை உணர்வதே

--------------------------------------


Sunday, December 04, 2011

ஆ . ராசா குறுந்தகடு ( ஜோக்ஸ் )


1. ஏய் மிஸ்டர் , நடிகையோட பிறந்த நாளை கொண்டாடறியே வெக்கமா இல்ல? 

மேடம்.. நடிகையை கொண்டாடுனாத்தான் தப்பு!!! # சமாளிஃபிகேஷன் சண்முக ராஜ்

---------------------------------

2. கணவனின் கறுப்புப்பக்கங்களை மனைவியால் ஜீரணித்துக்கொள்ளும் அளவு , மனைவியின் கறுப்புப்பக்கங்களை கணவனால் ஜீரணித்துக்கொள்ள முடிவதில்லை

------------------------------------

3. என் மனைவியை அக்கா என அழைக்கும் பக்கத்து வீட்டு ஃபிகரே.. மகிழ்ச்சி.. நிற்க.. என்னையும் ஏன் அண்ணா என அழைத்து குழப்புகிறாய்?  # மச்சினியே

------------------------------------

4. கூகுள் பஸ் ஏன் க்ளோஸ் பண்றாங்க? 

பஸ் பயணம் பலருக்கு ஒத்துக்கறதில்லையாம், வாமிட் ஃபீலிங்க், அதனால கூகுள் ரயில் விடப்போறாங்களாம்

--------------------------------

5. கலைஞரின் ஆட்சிக்காலத்தில் கலைமாமணி பட்டம் வாங்கிய சிகாமணிகள் அனைவரும் போயஸ்-க்கு வந்து அதை ரிட்டர்ன் செய்யவும் - ஜெ அதிரடி அறிவிப்பு

----------------------------------



6. வெந்நீர்க்குளியல், காதல் இரண்டும் ஒன்று தான்.. இதமாக இருந்தாலும் சோம்பேறித்தனத்தை தருகிறது

-----------------------------------

7.பெண் குழந்தைகளே பெரியவர்கள் ஆனபின்  தன் பெற்றோரை கடைசி காலம்  வரை காக்கிறார்கள், கவனிக்கிறார்கள்

-------------------------------

8. ஒரு பெண்ணிடம் எத்தனை நகைகள் உள்ளன என்பதை  ஏதாவது திருமண விசேஷத்தின்போது அறியலாம்

---------------------------------

9. TRக்கும் STRக்கும் உள்ள வித்தியாசம்? 

டி ஆர் தாடி வெச்சிருப்பார்.. எஸ் டி ஆர்  அப்பப்ப ஒரு லேடியை வெச்சிருப்பார்

------------------------------------

10. ஆண்கள் சொல்ல வருவதை காது குடுத்துக்கேட்பதில்லை பெண்கள், அவர்கள் காதை கொடுப்பது கணவன்  கம்மல் வாங்கித்தரும்போதுதான்

-----------------------------------



11. உங்க பையனுக்கு சொம்புன்னு பேர் வெச்சிருக்கீங்களே? ஏன்?  

சிம்புன்னு பேர் வெச்சா மட்டும் நம்ம பேச்சை கேட்டு உருப்படவா போறான், விடுங்க

-------------------------------------

12. கணவன் துணி துவைத்து காயப்போடுகிறான், மனைவி கணவனை துவைக்கிறாள், சில சமயம் கணவனை காயப்போடுகிறாள்

---------------------------
13. அழகு இல்லாதவர்கள் அழகு நிலையம் போகிறார்கள். # ஆண் = இயற்கை அழகு

---------------------------

14. உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடியது ஊறுகாய், அதை கண்டு பிடித்தது கண்டிப்பாக ஒரு பெண்ணாகத்தான் இருக்கும்.

----------------------------

15. ஜெ- நான் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை என்னாலே கூட மாத்த முடியாது.

.ஜட்ஜ் - மேடம், நீங்க இன்னுமா நடிகையா ?பஞ்ச் டயலாக் பேச? சி எம்!!

-----------------------------------


16. ஆண்கள் அழகு நிலையம் செல்வது முடியை திருத்த மட்டுமே ( பெரும்பாலும்)பெண்கள் அழகு நிலையம் செல்வது பர்ஸை வீக்காக்கி ஆணை வருத்த மட்டுமே

---------------------------------------

17. குழந்தைகளை நேசிப்பவர்கள், குழந்தைகள் மீது அதீத பாசம் வைப்பவர்கள் என மனிதர்களை இரு பிரிவாக பிரிக்கலாம்

----------------------------------------

18. அன்புள்ளம் இல்லாத ஆண்கள் என உலகில் யாரும் இல்லை, அன்பை வெளிப்படுத்தத்தெரியாத ஆண்கள் வேண்டுமானால் இருக்கலாம்

-------------------------------

19. திருட்டு டிவிடிக்கு ஒரு உத்தமமான தமிழ்பேரு வையுங்கப்பா..

ராசா குறுந்தகடு

-----------------------------------

20. பெண்ணைக்கண்டதும் அவளைக்கவர ஏதாவது செய்ய முற்படுவதே ஆணின் பெரிய பலஹீனம்

----------------------------------------------


Saturday, December 03, 2011

ரஜினி-யின் அண்ணாமலை ரீ மேக் ( ஜோக்ஸ்)

Kunming Lake, Beijing, China
Photo: Reflections of trees on lake
1,ஹீரோயின் டெயிலி ஆஃபீஸ்க்கு பஸ்ல தான் போறா..

ஓஹோ.. பெரிய பட்ஜெட் படம் போல.. 

---------------------------------------------

2. கணக்கு டீச்சர் பயங்கர அரசியல் அறிவு உள்ளவர்னு எப்படி சொல்றே?

50 கோடி  ஊழல் பண்ணுனதுக்கு 5 வருஷம்,  ஜெயில் தண்டனைன்னா 1 3/4 லட்சம் கோடி  ஊழல் பண்ணுனதுக்கு எத்தனை வருஷம்தண்டனை?ன்னு கேட்கறாரே?

-----------------------------------------

3. இன்னைக்கு நியூஸ் கேட்காம விட்டுட்டேன்.. 

அதனால என்ன?

என்னென்ன பொருள் இன்னைக்கு விலை ஏறுச்சுன்னு தெரியலையே?


----------------------------------------------

4. டைரக்டர் சார்... உங்க படத்துல நம்ப முடியாத சீன் இருக்கே?

எப்டி?

பெரிய தொழில் அதிபரா  இருக்கற ஹீரோ ஒரே பாட்டுல கஷ்டப்பட்டு உழைச்சு பால்காரரா மாறிடறாரே? (டைட்டில் ஜோக்)

-------------------------------------------------

5.  பால் விலையை ஏத்துனதுக்கு கட்சிக்காரங்க ஏன் எதிர்ப்பு தெரிவிக்கறாங்க?

கட்சியோட வளர்ச்சிக்கு பால் ஊத்திட்டாங்கன்னுதான்

----------------------------------------

Molly Strohl string photography fashion

6. ஜட்ஜ் - குற்றத்தை ஒத்துக்கறியா?

கைதி - ஒத்துக்கிட்டா ரிலீஸ் பண்றதா வாக்கு குடுங்க, ஒத்துக்கறேன்

--------------------------------------------

7.  உங்க மேல சுமத்தப்பட்ட குற்றப்பத்திரிக்கையே 7 கிலோ தேறும் போல?

கருணை அடிப்படையில் அந்த சுமையை குறைக்கனும் யுவர் ஆனர், பாதி பக்கங்களை கிழிச்சிடவா?

----------------------------------------------

8.  தலைவரே.. மக்கள் சாகும் வரை உண்ணா விரதம் இருக்காங்களாம்.. 

அடடா.. 

நீங்க சாகும் வரை....

----------------------------------------

9.  வக்கீல் தனது குறுக்கு விசாரணையை துவங்கலாம்.. 

பார்த்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க.. ஏன் குறுக்கு வழியை ஆதரிக்கறீங்க?நேர்மையா விசாரிக்க சொல்லுங்க.. 

------------------------------------------

10.  என் தலை முடி எவ்ளவ் நீளம்னு பார்க்கனுமா? ( ஷாம்பூ விளம்பரம்)

தேவை இல்லை.. சாப்பிடறப்பவே ரெண்டு மூணு முடி வந்துடுச்சு

-----------------------------------------


Molly Strohl string photography fashion

11.  நீங்க கருத்தொருமித்த தம்பதியரா?

ஆமா, 2 பேருமே ஒற்றுமையா டைவரஸ்க்கு  அப்ளை பண்ணி இருக்கோம்..

----------------------------------------

12.  மேனேஜர் எங்கே?

அவர் அவுட் ஆஃப் ஸ்டேஷன்.. 

 அடடா.. அவர் என்ன லூஸா? ரயில்வே ஸ்டேசனுக்கு உள்ளே தானே ரயில் எல்லாம் வரும்?

---------------------------------------------

13. எனக்கு கவிதை எழுத தெரியாது..ரொம்ப லோக்கலா எழுதுவேன்..


அடடா.. அப்புறம் ஏன் சார் பாட்டெழுத ஃபாரீன் போறீங்க?

-------------------------------------------

14. எத்தனை புது ஹீரோக்கள் வந்தாலும்  நான் யாரையும் பார்த்து மிரண்டதே இல்லை.. 



ஓ.. உங்க சம்சாரத்தை கண்டாக்கூடவா?


---------------------------------------------------

15. உன் மனைவிக்கு கோபம் வந்தா உடனே நீ சமாதானப்படுத்திடுவியா? ஏன்?

இல்லைன்னா அவ என்னை படுத்தி எடுத்துடுவா

---------------------------------------------------------

 

ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் -ஹை க்ளாஸ் ஃபிகர் ( ஜோக்ஸ்)

رقص سنتي


1. டைரக்டர் சார் , ஹீரோ , ஹீரோயின் எல்லோருமே 16 ஆம் வாய்ப்பாடு ஒப்பிக்கறாங்களே , ஏன்?

இது ஒரு மல்ட்டி லேயர் ஸ்க்ரீன்ப்ளே--ன்னு சொன்னேனே? அதான் மல்ட்டிப்ளிகேஷன் மேட்டர் வருது... 

--------------------------------------

2. சார் , உங்க பட  ஹீரோயினுக்கு ஏன் நடிப்பே வர்லை?

என்னைக்கேட்டா? அதை அவங்க கிட்டே தான் கேட்கணும்..

-------------------------------------------

3. படத்தின் ஆரம்பக்கட்ட காட்சியை காணத்தவறாதீர்கள் -னு விளம்பரம் பண்றீங்களே,, எதுக்கு?

அப்போதானே டைட்டில்ல என் பேரு வருது?

-------------------------------------------

4. படத்துல செகண்ட் ஆஃப் ரொம்ப ஸ்லோவா போகுது சார்..

தியேட்டர் ஆபரேட்டர்கிட்டே சொல்லி இடைவேளைக்குப்பிறகு வேகமா ஓட்ட சொல்லவா?

-----------------------------------------

5. என் படத்துல 3 சூப்பர் ஹிட் பாட்டு இருக்கு.. அதுக்காகவே படம் ஓடிடாது?

லூஸா சார் நீங்க? யூ டியூப்லயே அதை நாங்க பார்த்துக்க மாட்டோமா?

----------------------------------------


Excellent Weekly Shots pictures
سيل

6. டைரக்டர் சார் , உங்க சம்சாரத்துக்கு ஏன் மொட்டை போட்டீங்க?

இல்லையே?

டைட்டில்ல தயாரிப்பு -னு உங்க சம்சாரம் பேருதானே வந்தது?

---------------------------------------------------

7. மேடம் , தமிழ்க்காலாச்சாரத்துக்கு பங்கம் விளைவிக்கற மாதிரி இந்தப்படத்துல நடிச்சிருக்கீங்களே , ஏன்?


அப்டியா? கலாச்சாரம்னா என்ன?

----------------------------------------------------------

8. போராளி பாண்டி-ன்னு தலைவர் பட்டப்பேரு வெச்சுக்கிட்டாரே, ஈழப்போராளியா?

அட நீங்க வேற.. போராளி படத்துல தலைவர் ஒரு சீன்ல வர்றாராம்.. 

----------------------------------------------------------------

9.  சி.பி ஐ இவ்ளவ் கெடுபிடியா இருப்பாங்கன்னு யாரும் எதிர்பார்க்கலை.. 

ஏன்?

டெயிலி ஆஃபீஸ்க்கு 2ஜி பஸ்ல போனவங்களைக்கூட விசாரிக்குதே?

------------------------------------------

10. டாக்டர் .. சீக்கிரம் என்னை டிஸ்சார்ஜ் பண்ணுங்க.. நான் வாயைத்திறந்தா பல பேரு கேஸ்ல மாட்டுவாங்க..

டோண்ட் ஒர்ரி.. ஆபரேஷனுக்குப்பிறகு நீங்க கண்ணையே திறக்க மாட்டீங்க.. 

------------------------------------------

بدون شرح

11.  அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே?

ஓ +VE  ரத்தம் எடுக்கனும், இந்தாங்க ஏ டி எம் கார்டு , போய் எடுத்துட்டு வாங்கங்கறாரே?

-------------------------------------------

12.  டாக்டர்.. எனக்கு நாளம் இல்லா சுரப்பிகள் ஃபெயிலியர் ஆகிடுச்சு..... 

சுத்தம்.. நலம் இல்லா சுரப்பிகளா.. எல்லாமே  ? அவ்வ்வ்

---------------------------------------------------

13.  ஈரோடு ரயில்வே ரிசர்வேஷன் கவுண்ட்டர்ல என்ன கலாட்டா?

லோயர் பர்த் கிடைச்ச பொண்ணு “ நான் ஹை கிளாஸ் ஃபிகர்.. அப்பர் பர்த் -தான் வேணும்” -னு கேட்குதாம்..

--------------------------------------------------

14.  டாக்டர்.. கை முறிஞ்சிடுச்சு-னு மாவுக்கட்டு போட்ட பேஷண்ட்க்கு இப்போ இடுப்பு முறிஞ்சிடுச்சு

அடடா... மாவு கிராக்கி இப்போ சாவு கிராக்கி ஆகிடுச்சா?

-------------------------------------------------------

15. தலைவர் அரிச்சந்திரனோட கொள்ளுப்பேரன் போல.. 

ஏன்?

தனக்குப்பொய்யே பிடிக்காதுங்கறதுனாலதான் டிரைவிங்க் (LIE )லை சென்ஸ் கூட எடுக்கலைன்னு சொல்லி சமாளிக்கறாரே?

-------------------------------------------------


بدون شرح

Friday, December 02, 2011

சசிகலாவின் வளர்ப்பு மகன் நடிகர் கரண் அவர்களே ( ஜோக்ஸ்)



1.  சசிகலாவின் வளர்ப்பு மகன் நடிகர் கரண் அவர்களே!-னு தலைவர் பேசறாரே?

தினகரன் , சுதாகரன் , திவாகரன் ,  பாஸ்கரன் - வரிசையால குழம்பி இருப்பார்..


-----------------------------------------

2. இந்தப்படத்துல  வில்லனுக்கும் செண்டிமெண்ட் சீன் இருக்கு..

எப்படி?

ஹீரோயினை ரேப் பண்ணிட்டு நான் செஞ்சது தப்புன்னா என்னை மன்னிச்சிடுங்கன்னு கதறி அழறாரே?

-------------------------------------------

3.  என் மனைவி  பெட்ரூம்ல குதிரை மாதிரி..

புரியலையே?

யானை படுத்தா குதிரை மட்டம் தானே?

---------------------------------------------

4. ஒன் சைடு லவ் தெரியும்.. அதென்னா ஒன் சைடு சைட்டு?

ஹி ஹி மாப்ளைக்கு ஒரு கண் மட்டும் தான் தெரியும்..

-----------------------------------------------

5.  மாஸ் ஹீரோ தெரியும்.. அதென்னா? மாஸ்க் ஹீரோ?

அவர் முகத்தை காண சகிக்காது.. ஏதாவது மாஸ்க் போட்டுத்தான் நடிப்பாராம்..

-------------------------------------

funny
funny

6.  ஏழு அறை-ன்னு ஒரு படத்துக்கு பூஜை போட்டேன்... என் வீடு வாசல் எல்லாத்தையும் விற்க வேண்டியதா போச்சு...

அடடா... ஏழறையை  ஸ்டார்ட் பண்றதுக்குள்ள ஏழரை ஸ்டார்ட் ஆகிடுச்சா?

--------------------------------------------


7.ஆஃபீசில் ரிசப்ஷனிஸ்ட்டாக ஷோ காட்டும் 48 மார்க் ஃபிகரே, கொஞ்சம் சிரிச்சுத்தொலையேன். ஏன் உம்முன்னே இருக்கே?

-----------------------------------

8. நீங்த ஆபிஸ்க்கெல்லாம் போவிங்களா ?

யோவ், எங்க ஆஃபீஸ்ல 12 ஃபிகர் இருக்கு, போகாம?வேற என்ன வேலை?

------------------------------------


9. மாப்ளை பொண்ணு பார்க்க போறீங்களே, பொண்ணை பற்றி ஒரு முக்கிய மேட்டர்  .. 

ஹி ஹி மேரேஜ் முடிச்சுட்டு அதை கேட்டுக்கறேன் # மாட்னாங்க ஹா ஹா

-------------------------------------




10. மழை வரும் என்று தெரிந்து கொண்டு எங்கள் ஆஃபீசில் இருக்கும்  ஃபிகர்கள் குடையுடன் வந்ததற்கு அகில இந்திய ஜொள்ளர்கள் சங்கம் சார்பாக கண்டனங்கள்

------------------------------------


funny

11. ஆஃபீஸ் டைம் முடிஞ்சிடுச்சு.மழை .. டேமேஜர்ட்ட கார் இருக்கு, ஆனா போக மாட்டார் , பாருங்க எல்லா ஃபிகர்ஸையும் வழியனுப்பிடுதான் போவார் .#நற நற 

--------------------------------


12. பெண்களை விட ஆண்கள் சிறந்த படைப்பாளிகள், ஓவியர்கள் ஆக பரிமளிக்கிறார்கள் என்பது பப்ளிக் டாய்லெட்ஸில் காணக்கிடைக்கிறது # அவதானிப்பு

------------------------------

13. நமது கவுரவம் நாக்கின் நுனியில் , கண்ணியம் விரல் நுனியில் - காதலியுடனான பொழுதுகள்

---------------------------------


14. முள்ளுக்கு பயந்தா ரோஜாவை பறிக்க முடியாது, கடலை போட பம்முனா ஃபிகரை கரெக்ட் பண்ண முடியாது # கேவலமான தத்ஸ் 8975

-------------------------------

15. 95 % பெண்கள் ஆத்திக வாதிகளாகவும் ,  75 % ஆண்கள் நாத்திகவாதிகளாகவும் இருக்கிறார்கள் # பொழப்பத்த ஆராய்ச்சி செய்த பொழுது போகாத பொம்மு

------------------------------------



16. மனைவியின் தங்கை என்பதற்கு கொழுந்தியா என்ற கிளுகிளுப்பான சொல்லை கண்டு பிடித்த தமிழன் வாழ்க!! 

--------------------------------------

17. டேய், எதுக்கு அடங்காதவன் மாதிரி வீட்டுக்குள்ள நடிக்கறே? 

அப்பவாவது என்னை அடக்க ஒரு ஃபிகரை மேரேஜ் பண்ணி வைப்பாங்களா?ன்னு ஒரு நப்பாசைதான்

----------------------------------

18. அனன்யா, ரேவதி, சுஹாசினி இவங்க நடிக்கற படங்கள்ல இவங்களோட நடிப்பை மட்டுமே ரசிக்க முடிகிறது # நெக்ஸ்ட் டோர் கேர்ள் அப்பியரன்ஸ்

--------------------------------

19. மனைவியை டீ போட்டு திட்ட ஆண்களுக்கு கிடைத்த ஒரு சாக்கு, எனவே தான் பாட்டு செம ஹிட்டு #ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி டி

--------------------------------------

20. டேம் 999 படத்தில் தெரியாம நடிச்சுட்டேன்- விமலா ராமன்# ம்க்கும், கண்ல விளக்கெண்ணெய் ஊற்றி பார்த்தாச்சு, எங்களுக்கும் ஒண்ணும் தெரியல. 

--------------------------------------------






டிஸ்கி - மேலே உள்ள குழந்தை படம் ..எனது நண்பர் சாந்த குமார்-ன் வாரிசு. நியூசிலாந்தில் பிறந்த தமிழகத்துப்பூ , பூவின் பெயர் ரேஷ்மி.. ரேஷ்மி என்றால் வெளிச்சம் என்று பொருள்.. பலரது வாழ்வில் ஒளி விளக்காய் வெளிச்சம் கொடுக்கும் அளவு பெரிய ஆளாக வாழ வளர வாழ்த்துகிறேன்.