Sunday, April 15, 2012

ராஜீவ் காந்தி கொலை வழக்கு சம்பந்தப்பட்ட மூவருடைய தூக்குத் தண்டனையை எதிர்த்துக் குரல் கொடுக்க தி.மு.க. தயங்குகிறதா?''குஷ்பூ பேட்டி






1.  ''சினிமா, அரசியல் - எதில் நடிப்பது சிரமம்?''


சி.பி - சினிமால நடிக்க மேக்கப் போடனும், வெய்யில்ல நிக்கனும், ரிகர்சல் பார்க்கனும், டைரக்டர் ஓக்கே சொல்லனும்.. இத்தனை தடை இருக்கு.. அதனால அரசியல்ல நடிக்கறது தான் ஈசி.. 

 ''அரசியலை நடிப்புன்னு சொன்னா, அது முட்டாள்தனம். அரசியல்ல நடிப்பே கிடையாது

 சி.பி - என்ன மேடம் நீங்க இவ்ளவ் அப்பாவியா இருக்கீங்க? ஈழத்தமிழரைக்காப்பாத்த உண்ணா விரத நாடகம் போட்ட கலைஞர், ஜெ, சசி பிரிவு நாடகம், திராவிடக்கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லைன்னு காமெடி டிராமா போட்ட ராம்தாஸ்னு திரும்புன பக்கம் எல்லாம் நாடகம் தான்..

  அப்படி நடிச்சா, அவங்க உண்மையான அரசியல்வாதி கிடையாது. சினிமாவில் தினம்தினம் வேற வேற கேரக்டர்ல வாழ வேண்டி வரும். காலையில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண் கேரக்டர்னா, சாயங்காலமே ஒரு ஏழைப் பெண்ணா நடிக்கணும். தினம்தினம் வேற அனுபவங்கள். ஆனா, அரசியலைப் பொறுத்தவரை நடிப்பு கிடையாது. நீங்க எப்படி இருக்கீங்களோ, உங்க மனசுல என்ன இருக்கோ... அந்த உண்மையை மட்டும்தான் பேசணும்!''
2. ''நீங்கள் தமிழச்சியாகவே மாறிவிட்டேன் என்கிறீர்கள். ஆனால், கவர்ச்சி உடையுடன் நமீதா பொது நிகழ்ச்சிகளில் வலம் வருவதை, 'அது அவருடைய சொந்த விஷயம்!’ என்று ஆதரிக்கிறீர்கள். இது தான் தமிழ்ப் பண்பாடா?''


சி.பி - கேள்வியே தப்பு.. என்னமோ நாட்டுல நமீதா மட்டும் தான்  அப்படி வர்ற மாதிரியும் , மத்தவங்க எல்லாம்  இழுத்துப்போர்த்திட்டு வர்ற மாதிரியும் கேட்கறீங்களே. கலைஞர் டி வி மானாட மயிலாட பார்க்கவும்..

 ''இதை ஏன் தமிழ்ப் பண்பாட்டோட குழப்பிக்கிறீங்க. அது அவங்க சொந்த விஷயம்... அவ்வளவுதான். அவங்க எப்படி டிரெஸ் பண்ணணும், எப்படி வரணும்கிறது அவங்க சுதந்திரம். அவங்களோட தனிப்பட்ட விஷயம். அதுல நாம தலையிடுறது தப்பு. அதைப் பத்திப் பேச நாம யாரு? நமக்கு என்ன உரிமை இருக்கு?
நமீதாவைப் பொறுத்த அளவில் அப்படி டிரெஸ் பண்றதுதான் அவளோட இயல்பே. வேணும்னே கவர்ச்சியா வரணும்கிற எண்ணம் எல்லாம் அவளுக்குக் கிடையாது. 'நான் சினிமாவுல இருக்கேன். அதனால இப்படித்தான் இருப்பேன்கிற எண்ணம் அவளுக்குக் கிடையாது. ஷூட்டிங் இல்லாத நேரத்தில் மும்பையில் அவளைச் சந்திச்சிருக்கேன். அப்பவும் அப்படித்தான் இருப்பா. அதனால அவளைப் பத்திக் கவலைப்பட்டு உங்க நேரத்தை வீணாக்கிக்காதீங்க .


சி.பி - நமீதா எந்த டிரஸ் போட்டாலும் அவருக்கு அது பத்தாது.. ஏன்னா அவர் யானை மாதிரி இருக்கார்... அவர் போடற டிரஸ் பூனை அளவு தான் இருக்கு.. இதுக்கெல்லாம் கண்டனம்  தெரிவிச்சுட்டு இருக்காம ரசிச்சுட்டு போவதே நல்லது.. 
3. ''தி.மு.-வில் மகளிர் அணிக்கு உரிய மரியாதை இருக்கிறதா?''


சி.பி - தமிழ் இனத்தலைவரை பற்றி என்ன நினைச்சீங்க? மனைவிக்கு மரியாதை,  மகளிர் அணிக்கு தனி மரியாதை தர்றவர் ஆச்சே.. 
 ''அப்படி மரியாதை இருக்கிறதாலதான் ஒவ்வொரு மேடையிலும் சற்குணப் பாண்டியன் அம்மாவைத்தலைவருக்குப் பக்கத்து இருக்கையில் உக்காரவைக்கிறாங்க. அந்த மரியாதை இல்லைன்னா, ஒவ்வொரு அரங்கிலும் முன் இருக்கைகள் மகளிர் அணிக்காக ஒதுக்கப்பட வாய்ப்பே இல்லை


 இருக்கை முன்னுரிமை மட்டும் இல்லை, மனதில் தோன்றிய கருத்துக்களைத் தைரியமாகப் பேச மகளிர் அணிக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. மற்ற கட்சிகளில் ஆண்களுக்கேகூட அந்த வாய்ப்பு வழங்கப்படுமாங்கிறது சந்தேகம்தான். எங்கள் மகளிர் அணியின் தலைவி சற்குணப் பாண்டியன், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவர். இதைவிட வேறு என்ன மரியாதை வேண்டும்?''





சி.பி - ஆஃபீஸ், வீடு, கட்சி எல்லா இடங்களிலும் லேடீஸுக்குத்தாங்க மரியாதை.. ஆம்பளைங்களை எவன் மதிக்கறான்? பொண்ணுங்களைத்தான் மதிக்கறான்.. அவ்லவ் ஏன்? நம்ம தமிழ் நாட்டின் சி எம் , இந்தியாவின் ரியல் பி எம்  , கவர்னர் எல்லாம் ஒரு பெண் தானே?

4. ''இன்றைய தமிழகப் பெண் அரசியல் தலைவர்களில் தங்களைக் கவர்ந்தவர் யார்... ஏன்?''


சி.பி - - என்னைக்கவர்ந்தவங்க ஜனாதிபதி  பிரதீபா பாட்டில் தான். அநாயமா கவர்மெண்ட் காசுல சாரி பணத்துல உலகத்தை ரவுண்ட் அடிச்சுட்டு வந்துட்டாங்களே?
 ''இங்க ஜெயலலிதாம்மா, ஜெயந்தி நடராஜன்னு ஒரு சிலர்தான் இருக்காங்க. ஜெயலலிதாபற்றி இங்க நான் எதுவும் சொல்ல விரும்பலை. ஜெயந்தி நடராஜன் மேடம்பற்றிச் சொல்லலாம். அவங்க ரொம்பவே போல்டான லேடி. மத்திய அமைச்சரா தங்களோட பணிகளை ரொம்பவே சிறப்பா செய்றாங்க. சமீபத்தில்கூட சுற்றுச்சூழல் பற்றிய கருத்தரங்கில் அவங்களுடைய பேச்சு, பலத்த கைதட்டல் வாங்கிச்சு.அவங் களோட உழைப்பு எனக்குப் பிடிக்கும்!''

5. ''உங்களுக்கு ஆண் குழந்தை இல்லையே என்ற வருத்தம் உண்டா?''



சி.பி - எதிர் காலத்துல குஷ்பூ சி எம் ஆனா அவருக்கு வாரிசா ஒரு ஆண் குழந்தை  இல்லையேன்னு வருத்தம் இருக்கும் தான்.. 

 ''ச்சே... சான்ஸே இல்லை. ரெண்டு பெண் குழந்தைகள் இருக்கணும் என்பதுதான் என் கனவே. மூணு அண்ணனுங்ககூட வளர்ந்தவள் நான். அப்புறம் எப்படி நான் ஆண் குழந்தைக்கு ஆசைப்படுவேன். எப்பவும் பெண் குழந்தைகள் மீதுதான் எனக்கு ரொம்ப ஆசை. என் பொண்ணுங்களைப் பற்றியும் சொல்லிடுறேன். பெரியவள் ஆறாம் கிளாஸ் படிக்கிறா. ரொம்பக் குள்ளமா இருக்கா(?!). ஆமாங்க, இந்த 11 வயசுல ஆறடிக்கு இருக்கா. சின்னப் பொண்ணு 9 வயசுல என்னைவிட ஒரு இஞ்ச் உயரமா இருக்கா. நான் 5.4. அவள் 5.5. உயரத்தில் ரெண்டு பேருமே அவங்க அப்பா மாதிரி.


 பெரியவ பாக்குறதுக்கு பாதி நான், பாதி அவர். குணத்துல அவங்க அப்பா மாதிரி. அதிகமாப் பேச மாட்டா. அவ உண்டு, அவளோட புக்ஸ் உண்டுனு இருப்பா. நிறையப் படிப்பா. சைலன்ட். அவளோட எல்லா விஷயங்களையும் என்கிட்ட மட்டும்தான் ஷேர் பண்ணிப்பா. யார்கிட்டேயும் அவளோட ஃபீலிங்ஸை சொல்ல மாட்டாள். அவளுக்கு நான் மட்டும்தான்



 சின்னவள், சுந்தரை ஜெராக்ஸ் மெஷின்ல போட்டு வெளியில எடுத்த மாதிரி இருப்பா. எதுவா இருந்தாலும், அந்த நேரத்தில் பேசி சண்டை போட்டு முடிச்சிடணும். அடுத்த நாளெல்லாம் அவளால தள்ளிவைக்க முடியாது. அதுக்கு அவளுக்கு டைம் இல்லை. ஆனால், ரெண்டு பேரும் அப்பா செல்லம். பாதித் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும், அப்பாவைத்தான் பிடிக்கும்னு சொல்லுவாங்க.


 எங்கயோவது ஷாப்பிங், வெளியூர், வெளிநாடு போனாக்கூட அவங்க மூணு பேரும் ஒரு கேங்கா கைப்பிடிச்சு நடந்து போயிட்டு இருப்பாங்க. நான் பாவமாத் தனியா வருவேன். அவங்க அப்பா பக்கத்துலயே என்னை நெருங்கவிட மாட்டாங்க. வீட்லயும் அப்படித்தான். அவங்களுக்கு அப்பா பக்கத்துல யாரும் உட்கார்ந் துடக் கூடாது. அவர் நடுவுல உட்கார்ந்துஇருப்பார். ஒருத்தி இந்தப் பக்கம் இன்னொருத்தி அந்தப் பக்கம் உட்கார்ந்துஇருப்பாங்க. ஏன்னா, வீட்ல நான் ஹிட்லர்!''

 சி.பி - காலத்தின் கோலம் பார்த்தீங்களா? பட்லர் மாதிரி இருக்கேன்னு உங்களை வருஷம் 16 படத்துல கார்த்திக் நக்கல் அடிச்சாரு. இப்போ ஹிட்லர் ஆகிட்டீங்க.
6.''தி.மு.-வின் அடுத்த தலைவர் போட்டிக்கான களத்தில் நிற்பவர்களில், இந்த இயக்கத்தை வழிநடத்தும் தகுதி யாருக்கு இருப்பதாக நினைக்கிறீர்கள்?''


சி.பி - சீனியாரிட்டி பிரகாரம் அன்பழகன் தான் தலைவர் ஆகனும், ஆனா கலைஞர் ஸ்டாலினை ஆக்கப்பார்க்கறாரு.
 ''இப்போ தலைவருக்கு மட்டும்தான் அந்தத் தகுதி இருக்கு! அவருக்கு அடுத்து யாருன்னு தலைவரே யோசிச்சுவெச்சிருப்பாரு. நேரம் வரும்போது அவரே சொல்வாரு!''

7. ''ராஜீவ் காந்தி கொலை வழக்கு சம்பந்தப்பட்ட மூவருடைய தூக்குத் தண்டனையை எதிர்த்துக் குரல் கொடுக்க தி.மு.. தயங்குகிறதா?''


சி.பி - தயங்கலை, பம்முது.. காங்கிரஸ் கூட்டணி வேணும், அவங்களை எதிர்த்துக்க முடியாது. வேற என்ன பண்ண  முடியும்?
  ''இளகிய மனம்கொண்ட எங்க தலைவர் தயங்குவாரா என்ன? தூக்குத் தண்டனைக்கு எதிரா தலைவரே நிறையப் பேசியிருக்காங்க. அவங்க மூணு பேரையும் தூக்கில் போடக் கூடாதுன்னும் சொல்லியிருக்காங்க. அப்படி இருக்கும்போது, இந்தக் கேள்விக்கே இடம் இல்லை. பாண்டுரங்கன் தவறான அரசியல் புரிதலோடு இருக்கார்னு தெரியுது


 இதை இன்னொரு கண்ணோட்டத்துலயும் பார்க்கணும். அவங்களுக்கு தண்டனைன்னா, 1991-லயே அவங்களைத் தூக்கில் போட்டிருக்கணும். 21 வருஷம் - அதாவது, கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக் காலம் - தங்களின் வாழ்க்கையை சிறையிலேயே கழிச்சிருக்காங்க. ஒரு தாய் தன் குழந்தையைப் பிரிஞ்சு வாழ்றாங்க. தாய், தந்தை அரவணைப்பு இல்லாம ஒரு குழந்தை வளர்ந்திருக்கா.


 இதைவிட அவங்களுக்கு வேற என்ன தண்டனையைத் தந்து விட முடியும்? 21 வருஷத்துக்குப் பிறகு மறுபடியும் தூக்குத் தண்டனைன்னா... அது எவ்வளவு பெரிய கொடுமை? தமிழக மக்களின் இந்த மன உணர்வை மத்திய அரசு கருத்துல எடுத்துக்கணும்!''


8. ''சினிமா பிரபலங்களின் காதல்அதிக காலம் நீடிக்காதது ஏன்?''

சி.பி - சினிமா இண்டஸ்ட்ரில இருக்கறவங்களூக்கு கைக்கு எட்டுனது வாய்க்கும் எட்டிடுது..  தப்பு பண்ண மத்தவங்களை விட அதிக சான்ஸ் கிடைக்குது.. ஃபாரீன் ஷூட்டிங்க் போறப்ப ஒரே ஹோட்டல்ல பக்கத்து பக்கத்து ரூம்.. யார்க்கு தெரியப்போகுது? அதனால தப்பு அடிக்கடி நடக்குது.. அது தம்பதிகளுக்குள் தெரிய வரும்போது சண்டை வருது
 ''உங்களை மாதிரி பலர் கண்ணு வைக்கிறதுதான் காரணம். பொதுவா, இங்கே நிறையப் பேர் காதலிக்கிறாங்க; கல்யாணமும் பண்ணிக்கிறாங்க. அதில் பலர் காதலிக்கும்போதே பிரியுறதும்... கல்யாணத்துக்கு அப்புறம் டைவர்ஸ் பண்ணிக்குறதும் பெருசா வெளியில தெரியுறது இல்லை. அவங்களை நம்ம மீடியாவும் கண்டுக்கிறதும் இல்லை.


 ஆனா, சினிமாவில் இருக்கிறவங்களோட காதலையும் அவங்களுக்குள் ஏற்படுற ஊடலையும் நம்ம மீடியா ஊதிப் பெரிசாக் குது. இப்படி வரும் செய்திகள் அவங்களுக்குள் ஏற்படுற கருத்துவேறுபாட்டை இன்னும் அதிகமாக்குது. அதேபோல் நம்ம மக்களும் பேப்பர், டி.வி-யில் வர்ற செய்திகளை எந்தவித விசாரிப்புகளும் இல்லாம அப்படியே நம்பிடுறாங்க. ஒரு வதந்தியைக்கூட, 'இருக்கும்பா. இல்லாமலா இப்படி எழுதுறாங்கனு பேசுவாங்க. பிறகு, 'குறிப்பிட்ட அந்தச் செய்தி தவறுனு சம்பந்தப்பட்ட பத்திரிகையே மறுப்பு வெளியிட்டாக்கூட, 'அதெல்லாம் சும்மா... மறைக்கிறாங்கப்பா... சம்பந்தப்பட்டவங்க கூப்பிட்டுப் பேசியிருப்பாங்க. அதனால இப்ப சும்மா ஃபார்மாலிட்டிக்கு மறுக்கிறாங்கனு பேசிக்குறாங்க. நடிகர், நடிகைகளை தியேட்டரில் கொண்டாடுறீங்க .கே! ஆனா, அவங்க தனிப்பட்ட சுதந்திரத்துக்கும் கொஞ்சம் மரியாதை தரணும். இதெல்லாம்விட, யார் மேலயும் யாரும் வெச்சிருக்கிற அன்பு, காதல் உண்மையா இருந்தா... அது எவ்வளவு பிரச்னை வந்தாலும் கடைசி வரை நீடிக்கும். இது சினிமாவுல இருக்கிறவங்களுக்கு மட்டுல்லை.... எல்லாருக்கும் பொருந்தும்!''

9. ''ஸ்டாலின் - அழகிரி இவர்களில் யார் தி.மு.-வுக்குத் தலைமை ஏற்கப் பொருத்தமானவர்?''

சி.பி - அண்ணன் அழகிரி மொழி அறிவு இல்லாத நிதானம்னா என்னன்னு தெரியாத லோக்கல் ரவுடி.. தம்பி ஸ்டாலின் அண்ணன்  கமுக்கமான, அமுக்கமான ஆள்... 2 கொள்ளீல  எது பெஸ்ட் கொள்ளின்னு பார்த்தா ஸ்டாலின் தான்.. ஆனா அப்படி எந்த அசம்பாவிதமும் வராம ஏதாவது புது தலைவர்கள் வந்தா தேவலை
 ''அதுபற்றி எல்லாம் தலைவர்தான் முடிவு பண்ணணும்!''


10. ''இந்த கேரக்டரை நாம செய்திருக்கலாமேனு உங்களை யோசிக்கவைத்த கேரக்டர் எது?''  
 ''கிட்டத்தட்ட 200 படங்களில் நடிச்சாச்சு. இப்பவும் 'சின்னத் தம்பிகேரக்டர்ல நாம நடிச்சிருக்கலாமேனு யோசிச்சவங்க, யோசிக்கிறவங்கதான் நிறையப் பேர் இருக் காங்க. சமீபத்தில் மலையாளத்தில் நான் நடிச்ச 'கையப்புபட கேரக்டர்ல நடிச் சிருக்கலாமேனுகூட நிறையப் பேர் நினைச் சதா என்கிட்ட சொல்லியிருக்காங்க.
நான் தொடர்ந்து கதாநாயகியா நடிச்சிட்டு இருந்தப்ப இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தா, பாலசந்தர் சாரின் ஒவ்வொரு படத்திலும் நான் நடிக்க ஆசைப்பட்டேன்னு சொல்லிஇருப்பேன். அப்புறம் நிச்சயமா 'மௌன ராகம்ரேவதி மேடம் கேரக்டர்ல நடிச்சிருக்கணும்னு சொல்லியிருப்பேன். அமிதாப் பச்சன் நடிச்ச 'சீனி கம்படத்தில் தபு கேரக்டர் மேல எனக்குப் பொறாமையே உண்டு. அந்தப் படம் பார்த்துட்டு, திட்டித் திட்டி தபுவுக்கு மெசேஜ் அனுப்பியிருக்கேன்!''       


சி.பி -  உங்களூக்கு மேட்டர் தெரியுமா? தபுவுக்கு செல் ஃபோன்ல மெசேஜ் படிக்கற பழக்கமே கிடையாதாம்.. ஸ்டார் டஸ்ட் இதழ் 1.6.2009 இதழ்ல   பேட்டி குடுத்திருக்காரு.. ஹய்யோ அய்யோ
11. ஒரு நடிகையாக நீங்கள் பெற்றது என்ன? இழந்தது என்ன?''


சி.பி - பெற்றது பல பாய் ஃபிரண்ட்ஸ்களை.. இழந்ததும் கழட்டி விடப்பட்ட பாய் ஃபிரண்ட்ஸ்களே ஹி ஹி 
 ''பெற்றது பேர், புகழ், பணம், குடும்பம், மரியாதை, எல்லாருடைய அன்பு. இழந்தது என்று எதுவும் இல்லை. 'நடிகையானதால் இதை இழந்துட்டேன்னு சொன்னா, அது பொய்யாத்தான் இருக்கும். சில நேரங்களில் பிரைவசி பாதிக்கப்படும். என் பெரிய பொண்ணு ரொம்பவே கூச்சப்படுற டைப். போட்டோவுக்கு முகம் காட்டக்கூடத் தயங்குவா. வெளியூர், வெளிநாடுகளுக்கு டூர் போனோம்னா, வளைச்சு வளைச்சு போட்டோ எடுப்பாங்க. எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டாங்க.

 என் குழந்தைகள் வளர்ந்துட்டாங்க. அவங்க போட்டோக்கள் வெளியில வரக் கூடாதுனு நினைக்கிறேன். அதை இழப்புன்னு சொல்ல முடியாது. மக்களின் அதீத அன்புன்னு வேணும்னா சொல்லலாம்.''





டிஸ்கி - இதன் முதல், 2 வது,3வது , 4வது பாகம் படிக்க 

முற்றும்

ஹிலாரி கிளிண்ட்டனை நக்கல் அடித்து மாட்டிக்கொண்ட பதிவர்கள்



'குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள்' என்ற திருவிளையாடல்
தருமியின் புலம்பலைப் போல, கிண்டல் அடித்தே புகழ் பெற்று விடும் நபர்களும்இருக்கவே செய்கின்றனர். அமெரிக்காவை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இப்படி தான் கிண்டல் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றனர். இணைய உலகில் பரவலாக தங்களைப் பற்றி பேச வைத்து இணைய நட்சத்திரங்களாகி இருக்கிறார்கள்.

ஆடம் ஸ்மித், ஸ்டேசி லேம்ப் என்னும் அந்த இரண்டு இளைஞர்களும் அமெரிக்க
வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை கிண்டல் செய்து இணையநட்சத்திரங்களாக உருவாகி இருக்கின்றனர். ஆனால் அவர்களின் கிண்டல் நாகரீகமாகவும் அதைவிட நேர்த்தியாக அமைந்திருந்தன என்பதை கவனிக்க வேண்டும்.


ஹிலாரியோ உலகறிந்த பெண்மணி! திருமதி கிளின்டனாக அறிமுகமான அவர், ஓபாமாஅமைச்சர‌வையில் இடம் பெற்று இன்று நட்சத்திர அந்தஸ்து பெற்ற அமைச்சராக புகழ் பெற்றிருக்கிறார்.

ஹிலாரி பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் சளைக்காமல் பேட்டி
கொடுக்கிறார். எந்த பிரச்னையானாலும் க‌ருத்து தெரிவிக்கிறார். ஹிலாரி சொல்வதை அமெரிக்கா மட்டும் அல்ல உலகமே உற்று கவனிக்கிறது.

இத்தகைய ஹிலாரி தலைவர்களுக்கு அனுப்பும் எஸ்.எம்.எஸ் செய்திகளை படிக்கமுடிந்தால் எப்படி இருக்கும்?

அதைத் தான் ஸ்மித்தும் லேம்பும் செய்தனர். டம்ப‌லர் (www.tumblr.com) இணையத்தில் ஒரு தளத்தை துவக்கி அதல் ஹிலாரி அனுப்பும் எஸ்.எம்.எஸ் செய்திகளை இடம் பெற வைத்தனர். அதாவது ஹிலாரி அனுப்புவது போல செய்திகளை இவர்களே உருவாக்கி  தளத்தில் இடம் பெற வைத்தனர். அதுவும் ஹிலாரி கறுப்பு நிறக் கண்ணாடியோடு காட்சி தரும் (கையில் செல்போனோடும் தான்) அசத்தலான புகைப்படத்தை போட்டு அதில் புகைப்பட குறிப்பு போல ஹிலாரியின் செய்திகளை இடம் பெற வைத்தனர்.


உதாரணத்திற்கு ஒரு பதிவில் ஹிலாரியிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா, "ஹே ஹில்.. என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்க, ஹிலாரியோ கூலாக "உலகை இயக்கி கொண்டிருக்கிறேன்" என பதில் சொல்வது போல அமைந்திருந்தது.

இதே போல இன்னும் பல தலைவர்களுடனும் பிரபல‌ங்களுடனும் ஹிலாரி குறுஞ்செய்தி வடிவில் உரையாடுவது போல படங்களை உருவாக்கி புதுப்புது பதிவாக வெளியிட்டு வந்தனர்.

கற்பனை தான் என்றாலும் இதில் இருந்த நகைச்சுவை உணர்வும் நேர்த்தியும் படித்தவர்களை கவர்ந்தது. இதனை ரசித்தவர்கள் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டனர். அவர்கள் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டவர். அவ்வளவு தான்.. இணைய உலகம் முழுவதும் 'textsfromhillaryclinton' என்னும் இந்த தளம் பற்றி தான் பேச்சானது.

நண்பர்கள் அந்த பதிவுகளை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டனர்; டிவிட்டரில் பகிர்ந்து கொண்டனர். நாளிதழ்களும் பத்திரிகைகளும் இந்த பரபரப்பு பற்றி செய்தி வெளியிட்டு மேலும் பரப‌ரப்பை உண்டாக்கின.

நண்பர்கள் ஸ்மித்தும், லேம்பும் தங்கள் ஐடியா இந்த அளவுக்கு ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கவில்லை. அவர்களைப் பொருத்தவரை ஜாலியாக பேசிக்கொண்டிருந்த போது விளையாட்டாக உருவான எண்ணம் இது.

இருவருமே வாஷிங்டன் நகரை சேர்ந்த‌வர்கள். சமீபத்தில் ஒரு நாள் இருவரும் பார் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஸ்மித்,தனது நண்பரிடம் ஹிலாரியின் கருப்பு கண்ணாடி அணிந்த அசத்தலான புகைப்படத்தை காண்பித்து, இந்த புகைப்படத்தை பார்த்திருக்கிறாயா, கண்ணாடியும் செல்போனுமாக எவ்வளவு கம்பீரமாக கச்சிதமாக இருக்கிறது என்று கேட்டிருக்கிறார். நண்பர் லேம்பும்அதனை ஆமோதிக்க, அந்த நொடியில் ஹிலாரியை எஸ்.எம்.எஸ் செய்தி அனுப்ப வைத்தால் என்ன என்று தோன்றியிருக்கிறது.

உடனே 'டெக்ஸ்ட் ஃப்ரம் ஹிலாரி க்ளின்டன்' என்னும் பெயரில் வலைப்பதிவு செய்யத் துவங்கி விட்ட‌னர். அடுத்த ஒரு வார்த்தில் அந்த தளம் சூப்ப‌ர் ஹிட்டாகிவிட்டது. கற்பனையான செய்திகள் தான் என்றாலும் அவற்றை கண்ணியத்தோடே வெளியிட்டனர். நகைச்சுவயில் எல்லை தாண்டாமலும் பார்த்து கொண்டனர். எனவே அந்த பதிவுகள் ரசிக்கும்படியே இருந்தன.

இதனால் இருவரும் இணைய உலகில் புகழ் பெற்றது ஒரு ஆச்சர்யம் என்றால் அதைவிட ஆச்சர்யம் ஒன்று அவர்களுக்கு காத்திருந்தது. அவர்கள் தளத்தின் நாயகி ஹிலாரியிடம் இருந்தே இருவருக்கும் அழைப்பு வந்தது. ஆம்.. யாரை கிண்டல் செய்து குறுஞ்செய்தி வெளியிட்டு கொண்டிருந்தன‌ரே அவரே நண்ப‌ர்களை சந்திக்க விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது.

நேரில் ஹிலாரியை சந்தித்த போது ஹிலாரி தானும் அந்த தளத்தின் ரசிகர் என்று கூறி, நண்பர்களை பிரம்மிப்பில் ஆழத்தி விட்டார். சில நிமிடங்களே அந்த சந்திப்பு நீடித்தாலும் நண்பர்கள் இருவரும் ஹிலாரியுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். அதனை பெருமையோடு தங்கள் தளத்தில் வெளியிடவும்
செய்தன‌ர்.

ஹிலாரியை நையாண்டி செய்து ஹிலாரியையே ரசிகையாக்கிக் கொண்ட இந்த இருவரும் இணைய கில்லாடிகள் தான். ஆனால் ஒரு சின்ன வருத்தம். இருவரும் புதிய பதிவுகள் வெளியிடுவதை நிறுத்திக் கொண்டு விட்ட‌னர்.

இந்த புகழே போடும் என நினைத்து விட்டனர் போலும். ஆனால் இதுவும் கூட புத்திசாலித்தனம் தான். இனி எப்படி தொடர்வது என தடுமாற்றம் வந்து தரம் குறையும் முன்னே குட்பை சொல்லிவிட்டனர்.

அந்த தளம் அப்படியே இருக்கிறது. இப்போதும் பழைய படங்களையும் குறுஞ்செய்திகளையும் பார்க்கலாம். ரசிக்கலாம்!

இணையதள முகவரி : http://textsfromhillaryclinton.tumblr.com/

தமிழக ஃபிகர்கள் - கேரளா ஃபிகர்கள் - ஒரு ஒப்பீடு ( ஜோக்ஸ் )


1.என்னதான் ஃபிகர் இலியானா மாதிரி இருந்தாலும் வலியனா நீயா போய் பேசாத. # கெத்து நம்ம சொத்து


------------------------------

2. ஒரு கல் ஒரு கண்ணாடி படம் டபுள் ஓக்கேவாம், அநேகமா உதய நிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்துடுவார்னு நினைக்கறேன்


-------------------------


3. விழா நாட்களில் உங்கள்  கண்ணில் படும் பசித்தவனுக்கு ஒரு வேளை உணவு பரிமாறுங்கள்,அதுதான் மன நிறைவை அளிக்கும் கொண்டாட்டம்


------------------------------------

4. ஹோட்டல்ல ரெகுலரா ரோஸ்ட் சாப்பிடறவன் கூட எதிர் சீட்டில் ஃபிகர் இருந்தால் 2 இட்லி ஒரு வடை என ஆர்டர் செய்து நமுட்டு சிரிப்பு சிரிக்கிறான்


-----------------------


5. படைப்பாற்றல், கற்பனைத்திறன் இவற்றை வளர்த்துக்கொள்ள புராணங்கள், இதிகாசங்கள்,இலக்கியங்கள் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள் 


-----------------------------------

 ஐ தமிழச்சி ட்விட்டரில் பகிர்ந்த லண்டன் வாழ் முருகன் கோவில்

london ஶ்ரீ ஈஸ்ட்ஹாம் முருகன் உங்களுக்கு அருள் புரிவானாக.. - ஷர்மியானந்தா


6. பெண்களின் அதிக பட்ச அழகு திருமண மண்டபங்களிலும், ஆண்களின் அதிக பட்ச அழகு  பிரசவ வார்டில் பிறந்த தன் குழந்தையை பார்க்கும்போதும் வெளிப்படும்


------------------------------

7. பூமியை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுங்கள்.. ஃபிகர்கள் உள்ள ஒரே கிரகம் இதுதான் ( ஃபிகரே ஒரு கிரகம் தான் )


--------------------------------------

8. எவ்வளவு முன் விரோதம் இருந்தாலும் மரணம் நிகழ்ந்த வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்று விடுங்கள், பகைமை பாராட்ட அது நேரம் அல்ல


------------------------------------

9. கேரளாப்பெண்கள் தமிழகத்தை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டியது - மாராப்பு. தமிழக ஃபிகர்கள் கேரளாவைப்பார்த்து கற்றுக்கொள்ள வேண்டியது - போஷாக்கு 


--------------------------------

10. பணி நிமித்தம் வெவ்வேறு ஊர்களில் வசிக்கும் தம்பதிகளின் வாழ்வு பாழும் பணத்தேவையை வலியுடன் நமக்கு நினைவு படுத்துகிறது


--------------------------

அஜித்தின் பில்லா 2 கெட்அப் ? http://pic.twitter.com/kKmVDlBKரவிசங்கர்
-

11. மிஸ்டர் ஆஃபீசர், உங்க சம்சாரம் எப்பவும் கூந்தலை முகத்துல பறக்க விட்டு பாதி முகத்தை மறைச்சுக்கறாங்களே? ஏன்? 


 முழுசாக்காட்டுனா நீ செத்தே!


-----------------------------------------


12. புகுந்த வீட்டில் தான் படும் கஷ்டங்களை முழு அளவில் பிறந்த வீட்டுக்கு சொல்லி விட முடிவதில்லை பெண்களால்.. 



-------------------------------

13. நாம் எது சொன்னாலும் ஆண்கள் லூஸ்தனமாக நம்பிவிடுகிறார்கள் என்று முட்டாள்தனமாக பெண்கள் நினைத்துக்கொள்கிறார்கள்,நம்பற மாதிரி காட்டிக்குவோம்


----------------------------------------

14. ரேஷன் கார்டு மூலம் குடும்பத்தலைவர்கள் என அறியப்படும் ஆண்கள் சிற்றரசர்கள் போல, மனைவி அவர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பேரரசர்கள் போல


---------------------------------------------


15. பெண்ணின் மனம், அவள் வெளிப்படுத்தும் வார்த்தைகள் 2ம் வலிமையானவை, ஆணின் மனம், வார்த்தைகள் எளிமையானவை



--------------------------------------




16. கோயில்களில் இருக்கும் அபூர்வ அமைதி, ரசிக்க வைக்கும் வாசனை இரண்டும் நாத்திக வாதியையும் இழுக்க வல்லவை


-----------------------


17. ஹோட்டலில், லாட்ஜில் குளித்து விட்டு கிளம்ப எடுத்துக்கொள்ளும் 2 மணி நேரத்தங்கலுக்கு கூட 24 மணீ நேர வாடகை செலுத்த வேண்டி இருப்பது எந்த வகை நியாயம்?


-------------------------------

18. சம்போகம் நடந்த மறுநாள் தலைக்குளித்தால் அவள் தமிழ்ப்பெண்,தினமும் தலைக்கு குளித்தால் அவள் கேரளாப்பெண் # வெள்ளிக்கிழமை விதி விலக்கு


----------------------------------

19. டெய்லரிங்க் டிப்பார்ட்மெண்ட்ல ஒரு டவுட்.ஏன் ஜாக்கெட்ல இன்னும் ஜிப் சிஸ்டம் அமுலுக்கு வர்லை? காலம் காலமா பட்டன் அல்லது கொக்கி மட்டும்


---------------------------


20. செஞ்சோற்று கடன் என்பது கேரளா மெஸ்சில் அக்கவுண்ட் வெச்சு சாப்பிடறது # சாப்பாடு சிவப்பு


------------------------------------

Saturday, April 14, 2012

கூடங்குளம் உதயகுமார் நல்லவரா? கெட்டவரா? ஓ பக்கங்கள் ஞானி பேட்டி - சூர்யக்கதிர்


1. பாகிஸ்தான் தீவிரவாதி கசாப்புக்கு உள்ள உரிமையைக் கூட எனக்குத் தரவில்லை என்று மமதா பானர்ஜியின் பிடிவாதப் போக்கால் ரயில்வே அமைச்சர் பதவியை இழந்துள்ள தினேஷ் திரிவேதி குமுறியிருக்கிறாரே?



நியாயமான குமுறல். ஆனால் மம்தாவின் பிடிவாத அரசியல் பற்றியெல்லாம் அவருக்கு மநதிரி பதவியை மம்தா தரும்போதே தெரியாதா என்ன ?


2. விலைவாசி உயர்வும், மட்டமான வேட்பாளர்கள் தேர்வுமே உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் தோல்விக்குக் காரணம் என்கிறாரே சோனியா காந்தி?


உடனடியான காரணங்கள் அவை என்பது உண்மைதான். ஆனால் நீண்ட காலக் காரணங்களில் முக்கியமானது மாநில அள்வில் அங்கே காங்கிரசுக்கு சரியான தலைவர்கள் இல்லை என்பதுதான். அப்படி இல்லமல் போனதற்கு காங்கிரசின் டெல்லித் தலைமைதான் காரணம். தி.மு.க, அ.தி.மு.க இரண்டும் வேண்டாம் என்று தமிழகத்தில் ராகுலும் சோனியாவும் நாளை வந்து கடும் பிரசாரம் செய்தால் மக்கள் என்ன கேட்பார்கள் ?


 வேண்டாம் என்பது சரி. பதிலுக்கு யார் ? அதற்கு சோனியாவும் ராகுலும் இதோ தங்கபாலு, இதோ வாசன் என்றால் தமிழக மக்கள் சிரிக்கமாட்டார்களா? அதே நிலைதான் உ.பியிலும். குறைந்தப்ட்சம் ராகுல் காந்தி தன்னையே உ.பி முதல்வர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக அறிவித்து எம்.எல்.ஏ தேர்தலில் நின்றிருந்தால், குறைந்தப்ட்சம் அவர் அங்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வரையிலுமாவது வந்திருக்க முடியும்.


3. தனி ஈழத்துக்கான பிரபாகரன் போராட்டம் தவறானது என்று கூறும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. அவர் போராட்டம் சரியானதே. ஆனால் சகோதரச் சண்டைதான் தமிழ் ஈழம் அமைவதைக் கெடுத்தது என்கிறாரே கருணாநிதி?


கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது தனி ஈழம் பற்றி பேசமாட்டார். பதவி பறி போன காலங்களில் மட்டுமே பேசுவார். ஈழத்தமிழர் பிரச்சினையை நீண்ட நாட்களாகக் கெடுத்து வருவதில் அவரது பங்கு கணிசமானது.


4. அன்னா ஹசாரே தனிக்கட்சி ஆரம்பித்தால் தாக்குப் பிடிப்பாரா?


அதை விட பி.ஜே.பியிலேயே சேர்ந்துவிடலாம். என்றைக்காவது பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால், ஜனாதிபதி பதவியும் பாரத ரத்னா விருதும் கொடுப்பார்கள். தனிக் கட்சி ஆரம்பித்தால் அவர்களே அவரைத் தொலைத்துக் கட்டிவிடுவார்கள்.


5. ஒரு அரசியல்வாதி மக்களுக்காக வருத்தப்படுவது எப்போது?


தன்னிடம் ஓட்டுக்கு பணம், வாங்கியவர் வாக்குப்பதிவுக்கு முன்பு செத்துப் போய்விட்டால் மட்டுமே வருத்தப்படுவார் என்பதுதான இன்றைய நிலை. உண்மையான அரசியல்வாதி எனபவர் எப்போதுமே மக்களுக்கக வருத்தப்படுபவர். அந்த அடிப்படையிலேயே வேலை செய்பவராக இருப்பார்.



6. தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதற்காகவே அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்தது இந்தியா. அதேசமயம், நாங்கள் இலங்கையின் இறையாண்மையில் தலையிட மாட்டோம், அதற்கு குந்தகம் விளைவிக்க மாட்டோம் என்று சொல்லியிருக்கிறாரே பிரதமர் மன்மோகன் சிங்?


யாரும் அவரை எந்த இறையாண்மையிலும் தலையிடச் சொல்லவில்லை. தமிழர்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள் என்றுதான் சொல்கிறார்கள். அதை எப்போது எப்படி இந்தியா பெற்றுத்தரும் என்பதைத் தவிர மீதியெல்லாம் பேசுகிறார் அவர்.

 
7. தற்போது வெளியாகும் திரைப்படங்களின் டைட்டில் எல்லாம் சொதப்பலாகி வருவதை கவனித்தீர்களா?


டைட்டிலை சொதப்பினாலும் பரவாயில்லை. படத்தையே சொதப்பிவிடுகிறார்களே…



8. பெங்களூரு நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் மீது வக்கீல்கள் பயங்கரமான தாக்கி இருக்கிறார்களே இது சரியா?


நிச்சயம் சரியல்ல. இதற்கான அடிப்படைக் காரணம் பத்திரிகைத்தொழிலுக்குள் சில சமூக விரோதிகள் நுழைவது போல வக்கீல் தொழிலிலும் சமூக விரோதிகளின் எண்ணிக்கை கூடி வருகிறது. வக்கீல் தொழிலே மிகவும் கவலைக்கிடமான் நிலையில் எங்கேயும் இருக்கிறது. மருத்துவம், பொறியியல் போல சட்டப்படிப்பு படிக்கவும் எந்தெந்த பாடங்களில் கட் ஆஃப் மார்க் எவ்வளவு இருக்க வேண்டும் என்ற நிலையை விதிகளை ஏற்படுத்தினால்தான் தொழிலை காப்பாற்றமுடியும்.


 
9. குஜராத் பேரவையில் எம்.எல்.ஏக்கள் சீன் படம் பார்க்கவில்லை என்று தடயவியல் துறை விளக்கம் அளித்துள்ளதே? 


சட்டப்பேரவை என்பது எம்.எல்.ஏக்களுக்கு அலுவலக வேலை என்ற பார்வை முதலில் வரவேண்டும். அலுவலகத்தில் வேலை நேரத்தின்போது எப்படி நடக்க் வேண்டும் என்று ஒவ்வொரு துறை ஊழியருக்கும் நடத்தை விதிகள் இருப்பது போல எம்.எல்.ஏக்கள் எம்.பிகளுக்கும் தேவைப்படுகிறது. வீட்டுக்கு போய் என்ன பார்க்கிறார்கள் என்பது நமக்கு முதன்மையான பிரச்சினை அல்ல – அது அவர்கள் வேலையில் பாதிப்பு ஏற்படுத்தாதவரையில்.


10. கூடங்குளத்தில் இயல்பு நிலை திரும்ப முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளாரே?


தா. பா பிள்ளையைம் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கபட நாடகம் ஆடுபவர். கூடங்குளத்தை திறக்கவேண்டுமென்று இந்திய-ரஷ்ய முதலாளிகள் விஸ்வாசத்தில் கூவிக் கொண்டிருந்தவர். அகிம்சை வழியில் போராடும் மக்களுக்கு பயந்துகொண்டு போலீசை அரசு குவித்ததும் இயல்பு நிலை என்று அறிக்கை நாடகம் ஆடுகிறார் பாண்டியன். தமிழ்க இடதுசாரிக் கட்சிகள் பேசாமல் கட்சியைக் கலைத்துவிட்டு தி.மு.கவிலோ .அதி.முகவிலோ ஐக்கியமாகிவிடலாம். தா.பாவுக்கு ஏற்ற இடம் தமிழகக் காங்கிரஸ்

.

11. நாடாளுமன்றத்துக்கு இடைத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால் சமாஜ்வாதி கட்சியினர் தயாராக இருக்க வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் தெரிவித்துள்ளாரே?


அதுதான் கடந்த ஒரு வருடமகவே பி.ஜே.பியின் ஆசை, முயற்சி எல்லாம். ஆனால், காங்கிரசுக்கு மாற்று அணி பலமாக இல்லாதவரையில் காங்கிரசின் கூட்டாளிகள் அதைக் கவிழ்க்க மாட்டார்கள். இப்போது பி.ஜே.பியும் பலமாக இல்லை. காங்கிரசும் பலமாக இல்லை. எனவே மூன்றாவது அணி ஆசை முலாயமுக்கு வந்திருக்கிறது. மாநிலத்தில் முதல்வராக மகன் அகிலேஷ், மத்தியில் பிரதமராக தான் என்பது அவர் கனவு. மூன்றாவது அணி வாய்ப்பும் பலவீனமாகத்தானிருக்கிறது.


12. ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றிருந்தாலும் அதனை செயல்படுத்த இலங்கை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச கொக்கரித்துள்ளாரே?



13. ஜெனிவா தீர்மானத்தால் ராஜபக்‌ஷேவுக்கு அப்படி ஒன்றும் ஆபத்து வந்துவிடாது என்கிறார்களே? 


அந்தத் தீர்மானமே ஒரு டுபாக்கூர் தீர்மானம். இலங்கைப் போர்க் குற்றங்கள் பற்றி சுயேச்சையான சர்வதேச விசாரணை கோராமல், இலங்கை நியமித்த விசாரன கமிஷனின் அறிக்கையையே தயவுசெய்து இலங்கை நிறைவேற்றவேண்டுமென்று விண்னப்பிக்கும் தீர்மானம் அது. நீ அடிக்கிற மாதிரி நடி. நான் அழுகிற மாதிரி நடிக்கிறேன் என்று அமெரிக்காவும் இலங்கையும் கூட இந்தியாவும் நாடகம் ஆடியிருக்கின்றன. தங்கள் நாட்டு அறிக்கையையே நிறைவேற்றமாட்டோம் என்று சொல்லுகிற அரசை என்ன செய்வது ?



14. இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளதாலும், அந்தத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளதாலும், இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் மீது சிங்களர்கள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது என்கிறாரே கருணாநிதி?



15. அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதால் இலங்கையில் வசிக்கும் மீதமுள்ள தமிழர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளாரே?


இவர்களே அவர்களுக்கு ஐடியா கொடுக்கிறமாதிரி இருக்கிறது. அப்படி ஓர் அபாயம் இருக்கிறதென்றால் ஏன் இவர்கள் மத்திய அரசை தீர்மானத்தை ஆதரிக்கச் சொன்னார்கள் ? முரண்பாடுகளின் மூட்டைகள் அப்பாவும் மகளும்..


16. மத்திய ரயில்வே பட்ஜெட்டில் முன்னாள் அமைச்சர் தினேஷ் திரிவேதி அறிவித்த பயணிகள் கட்டண உயர்வை வாபஸ் பெறுவதாக புதிய ரயில்வே அமைச்சரான முகுல் ராய் நாடாளுமன்றத்தில் அறிவித்துவிட்டாரே?


தவறான முடிவு. பத்தாண்டுகளாக கட்டணத்தை உயர்த்தாமல் இருந்ததும் தவறு. படிப்படியாக சிறிய அளவில் ஏற்றி வந்திருந்தால் சிக்கல் இருந்திராது. இப்போதும் ஏற்றிய விகிதத்தை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். கட்டணத்தை உயர்த்தியபிறகும் கூட பஸ் கட்டணத்தை விட ரயில் குறைவாகவே உள்ளது. ரயில் சேவையைத்தான் ஒரு நாடு அதிகரிக்க வேண்டும். தொலை நோக்கில அதுவே விலை மலிவானதும் செலவு குறைவானதுமாகும். திரிவேதி- முகேஷ் மாற்றங்கள் மம்தா- காங்கிரஸ் கூட்டணி தர்மத்தின் கோளாறு. கூட்டணி தர்மத்தின் கோளாறில்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தது.

 
17. தவறாக சிக்க வைக்கப்பட்டுள்ளேன்… 2 ஜி வழக்கிலிருந்து விடுவியுங்கள் என்கிறாரே கனிமொழி?


அதை நீதிமன்றத்தில் வாதாடி அரசு வைக்கும் சாட்சியங்கள் பொய் என்று நிரூபித்து வெளியே வர முயற்சிப்பதை விட்டுவிட்டு இப்படி புலம்புவது அனுதாபம் சம்பாதிக்கத்தான்.


18. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தயங்கித் தயங்கி ஆதரித்தாலும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்திருக்கிறாரே ஜெயலலிதா?


இப்போது அவருக்கு மத்திய அரசுடன் நல்லுறவுக் காற்று அடிக்கிறது. நன்றி: கூடங்குளம். எந்தக் காற்று எப்போது திசை மாறிஅ டிக்கும் என்பது பின்னர்தான் தெரியும்.


19. உங்களுக்கு இந்த வார மகிழ்ச்சி என்ன ? இந்த வார வருத்தம் என்ன
?

தமிழக அரசு பட்ஜெட்டில் சூரியசக்தி மின் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதுதான் இந்த வார மகிழ்ச்சி. அதற்காகக் குரல் எழுப்பி ஆபத்தான அணு மின்சாரம் வேண்டாம் என்று வரலாறு காணாத விதத்தில் காந்திய அறவழியில் எட்டு மாத காலமாக அமைதியாகப் போராடிவந்த கூடங்குளம் மக்களின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு அவ்ர்களை ஒடுக்க போலீசையும் ராணுவத்தையும் மத்திய மாநில அரசுகள் ஏவிவிட்டிருப்பதுதான் இந்த வார…..அல்ல இந்த வருடத்தின் வருத்தம்.


20. கூடங்குளம் உதயகுமார் நல்லவரா? கெட்டவரா?


எனக்கு இதில் சந்தேகமே இல்லை. அவர் நல்லவர்தான். ஒரு சிறு பிரச்சினையில் கூட உணர்ச்சிவசப்பட்டு கையை ஓங்கிவிடக்கூடிய மரபில் வந்திருக்கும் கிராம மக்களை எட்டு மாத காலமாக அரசுகள் எவ்வளவு எரிச்சலூட்டியபோதும், அமைதியாகவே போராட வைத்ததுஎன்பது சாதாரண விஷயம் அல்ல.

அவருக்கு காந்தி அமைதிப் பரிசோ பாரத ரத்னாவோ தரலாம். தொடர்ந்து அவருக்கும் அவர் குழுவினருக்கும் எதிராக எவ்வலவோ அவதூறுகளை அரசுகள் செய்தன.

 வெளிநாட்டு பணத்தை தொண்டு நிறுவனம் மூலம் போராட்டத்தில் பயன்படுத்துவதாக டி.வி டி.வியாக முழங்கிய நாராயணசாமி நாடாளுமன்றத்தில் அந்தக் குற்றச்சாட்டுக்கு இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று வெட்கமில்லாமல் ஒப்புக் கொண்டிருக்கிறார்.


 இந்த மண்ணுக்காக உயிரையே கொடுப்பேன் என்று தேர்தல் நேரத்தில் பேசிவிட்டு பிரசாரம் முடிந்ததும் பதினைந்து நாள் வெளிநாடுகளுக்கு சொகுசுப்பயணம் போய்விடுகிற அரைச்யல் பிரமுகர்கள் நிறைந்திருக்கும் தமிழ்நாட்டில், வெளிநாட்டில் பத்து வ்ருடத்துக்கு மேல் பார்த்த வேலையை உதறிவிட்டு தாயகம் திரும்பி, சேர்த்துவைத்த சொந்தப்பணத்தில் பள்ளிக்கூடம் நடத்துபவர் நல்லவரில்லாமல் வேறென்ன ?


 அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்காக இங்கே வெயிலில் அலைந்து திரிந்து வாடி உழைக்காமல், அமெரிக்காவிலேயே தொடர்ந்து வேலை செய்துகொண்டு வசதியாக வாழ்ந்துகொண்டிருந்தால், யார் அவரை என்ன சொல்ல முடியும் ?



21. ஜெயலலிதாவின் விஷன் 2023 திட்டத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதே?

அரசு பணம் ஒதுக்குவது மட்டும் போதாது. 2023க்குள் 2 கோடி இளைஞர்களை ஸ்கில்ட் ஒர்க்கராக ஆக்குவோம் என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்.நல்ல லட்சியம். ஆனால் டாஸ்மாக் கடைகளை மூடாமல் 2 லட்சம் பேரைக் கூட தயார் செய்யமுடியாது.


சூரியகதிர் 1.4.2012 - நன்றி

உன் போதைக்கு நான் ஊறுகாவா? -சரக்கு சங்கரலிங்கம

கட்டுனது ஆஞ்சினயர் கோயில்,நிக்கிறது ஃபிகரோட http://pic.twitter.com/VFHxLEm - குள்ள புஜ்ஜி
1.உலகின் எந்த ஒரு மனைவியும்  தன் கணவனை குறை கூறாமல் இருந்ததில்லை # நீதி 1. ஆண் நிறை குடம் 2. பெண் குறை கூறும் குணம்



------------------------------------

2. நித்தியானந்தா வீடியோ உண்மையே -தடவியல் நிபுணர்கள் # தடவி தடவி கண்டு பிடிச்சுட்டங்களா?


-------------------------------------

3. கடைசி நிமிட மூளைச்சலவையில் பெற்றோர் சொல்பேச்சு கேட்டு காதலனை கை விடுபவள் தான் நல்ல பெண்கள் என்றால் இந்த உலகின் நல்ல பெண்கள் நரகத்துக்குப்போகட்டும்

-----------------------------

4. அசைவம் சாப்பிடறவங்களுக்குத்தான் பன்றிக்காய்ச்சல் வருதாம் , டுபாக்கூர் ஆய்வில் தகவல் # கொளுத்திப்போடு


------------------------


5. 14 ஆண்டுகளில் ஒரு நாள் கூட "லீவு' எடுக்கல: தொடர்ந்து பள்ளிக்கு வந்து அசத்தும் கான்பூர் மாணவன் # டீச்சர் செம ஃபிகரா இருக்கும்


------------------------------------

6. "வைகோ, சீமான் காகித புலிகள்' : திருச்சியில் இளங்கோவன் பேச்சு # புலியைப்பார்த்து எலி நக்கல் அடிக்குதே அடடே!!


--------------------------------

7.  நான் சல்மான்கானுடன் நெருக்கமாகத்தான் இருக்கிறேன்;  - அசின் # சல்மான் ஒரு ஜொள்மான் ,இது புரியாத ஃபிகர் வாயில் மண்


--------------------------------

8. உன் போதைக்கு நான் ஊறுகாவா? புதுப்பட டைட்டில் # டைரக்டர் பேரு சரக்கு சங்கரலிங்கமா?


----------------------------

9. நண்பனின் மரணத்தை விட நம் எல்லோரையும் பாதிப்பது ஒரு நட்பின் மரணம்



----------------------------

10. பாக் அதிபரிடம் எல்லாவித பிரச்சனைகளையும் பேசினேன் - மன்மோ! # லூஸ் தனமா ராணுவம் ரொம்ப வீக்கா இருக்குன்னு பேசிடலையே?



-----------------------------------

11.என்னை உன் மனதில் சுமந்ததால் ,வலியையும் சேர்த்தே  சுமப்பதால் இன்று முதல் நீ போர்ட்டர் என அழைக்கப்படுவாய் ! # எ கீ


--------------------------

12. எல்லா ஃபிகரும் நல்ல ஃபிகரே!


----------------------------

13. ஆண்கள் கவர்ச்சி காட்டத் துணிவதில்லை, பெண்கள் கவர்ச்சியை மறைக்கத் துணியில்லை!! # எ கீ


-----------------------------


14. கலைஞர் டி வி க்கு வாஸ்து சரி இல்லை, அதனால மானாட மயிலாட- ல பெட்ரூமை திண்ணைக்கு  ஷிஃப்ட் பண்ணிட்டாங்க.. அவ்வ்வ்


-----------------------------

15. ஒத்த ரசனை உடைய ஃபிகரை காட்டிலும் ரெட்டை ரசனை, ட்ரிபிள் ரசனை உள்ள ஃபிகரையே மனம் அதிகம் விரும்புகிறது!


-------------------------


16. சவுரியை பராமரிக்கத்தெரியாத ஃபிகருக்கு  கூந்தல் அழகி பட்டம்  கிட்டுவதில்லை.

---------------------

17. கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே மீன்ஸ் ஹை கிளாஸ் ஃபிகர்ஸ் இஃப் ரேப்டு டிடிண்ட் கம்ப்ளைண்ட் இன் போலீஸ் ஸ்டேஷன்?


---------------------------

18. நான் மிகச் சோம்பேறியாய் இருப்பதற்கான முதல்  காரணம் என் சம்சாரமும் செம சோம்பேறி என்பதால்..

--------------------------


19. ஒவ்வொரு பெண்ணையும் தங்களுக்கு பிடிக்காத ஆண்கள் பெயரை எழுத சொன்னால் அது இன்ஃபினிட்டியில் தான் இருக்கும்

------------------------------

20. பத்து மணிநேரம் தூங்குறது சோம்பேறித்தனம் இல்ல!பக்கத்துல ஒரு ஃபிகர் கூட இல்லாம படுத்திருப்பதே சோம்பேறித்தனம்..!



------------------------

Friday, April 13, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி - கலக்கல் காமெடி - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggphRLV1XyzfBgyoBo5SD4JcIdR5z3Y-H6VCJ6DHR7HcPHR4_MENdXU41-ECgSVtxl_4KGlwYxyrjTGFg5vNiZfKwkr1l1wrd9eM165_6FGdI8Cl0L6ROIlrp8Y7kvCehjoAnr4kMIT_Ps/s1600/oru+kal+oru+kannadi+New+Tamil+movie+Wallpapers1.jpgஹீரோ பைக்ல டிராஃபிக் சிக்னல்ல நிக்கறப்ப அங்கே   கலர்ஃபுல்லா ஒரு பிச்சைக்காரி சாரி  லட்சக்காரி கம் லட்சணக்காரியை பார்க்கறாரு.. 35 மார்க் ஃபிகரை லாங்க் ஷாட்ல பார்த்தாலே 10 அடி தூரம் பாய்ஞ்சு போய் கடலை போடற தமிழன் கசக்கு முசக்குன்னு கொழுக் மொழுக்னு  திமிசுக்கட்டையை 25 வயசுல பார்த்தா இன்னா பண்ணுவாரு? ஜொள் விட்டுக்கிட்டே பின்னால போறாரு..

 பார்த்தா ஃபிகரு சாரி அந்த திமிசுக்கட்டை போலீஸ் ஆஃபீசர் பொண்ணு ..நம்ம ஆளுங்க உடனே ஒரு போலீஸ் ஆஃபீசர் பொண்ணு இப்படித்தான் பூனம் பாண்டே மாதிரி அரை குறை  டிரஸ்சோட அலைவாங்களா?ன்னு லாஜிக் மிஸ்டேக் கேள்விகள் கேட்டறக்கூடாதுன்னு ஹீரோயின்பை ஏர் ஹோஸ்டல்ல ட்ரெயினிங்க் படிக்கற ஸ்டூடண்ட்டா காட்டிடறாரு.. ( திடீர்னு ஒரு சீன்ல ஏர் ஹோஸ்டலாவே காட்றாங்க )

பார்த்ததுமே காதல்.. ஹீரோ ஓப்பனா சொல்லிடறாரு.. ஆனா ஹீரோயின் ஒத்துக்கலை... நேரா அவங்கப்பா கிட்டேயே கூட்டிட்டு போய் டாடி இவன் என் கையை பிடிச்சு இழுக்கறான்னு புகார்.. ஆல்ரெடி பல பசங்க கைஅயை பிடிச்சு இழுத்து பஞ்சாயத்து பண்ணி இருப்பாங்க போல.. ஹீரோயின் அப்பா கூலா ஹீரோவை துரத்தி விடறார்.. 

 ஹீரோ கவலையே படலையே.. நாய் மாதிரி பின்னாலயே அலைஞ்சு எப்படியோ கட்டையை கரெக்ட் பண்ணிடறாரு.. கூட இருக்கற ஃபிரண்ட் செய்யற சில குளறுபடிகளால பல குழப்பங்கள் வருது.. சின்னச்சின்ன ஊடல்கள், பிரிவுகள் எல்லாம் முடிஞ்சு அவங்க எப்படி சேர்றாங்க அப்டிங்கறதை லாஜிக் எல்லாம் பார்க்காம ஒரு காமெடி டிராமா மாதிரி சொல்லி இருக்காரு டைரக்ட்டர் ராஜேஸ்..  


http://www.indiancinemagallery.com/Gallery2/d/776873-1/Oru+Kal+Oru+Kannadi+movie+stills+07_03_12+_4_.jpg



படத்தோட ஹீரோ சாட்சாத் சந்தானம் தான்.. அவர் வரும் காட்சிகள் எல்லாம் அரங்கம் அதிருது.. படம் முழுக்க காமெடி களை கட்டுது.. படத்துல மொத்தம் 112 ஜோக்ஸ்..  செம சிரிப்பு.. ஸ்க்ரிப்ட்டில் எழுதிய வசனங்கள் போக தானாக டைமிங்காய் பேசும் வசனங்கள் தான் அதிகம்.. அதற்க்குத்தான் அப்ளாஸ்சும்.. 

க்ளை மாக்ஸ் மண்டப சீனில் கன்னத்தில் சந்தனத்துடம் சந்தானம்  கலக்கல் ஹீரோவாய் இருக்கிறார் .. இந்தப்படத்துக்குப்பின் சந்தானம் சம்பளம் எகிறுவது உறுதி..

 செகண்ட் ஹீரோவாய் உதய நிதி ஸ்டாலின்..  இவரே படத்தின் தயாரிப்பாளர் என்பதால் பெரிய பில்டப் எல்லாம் தராமல் இயல்பாக அறிமுகம் ஆகிறார்.. அப்பாவுக்குப்பிள்ளை தப்பாம பிறந்துருக்கார்.. அதாவது அடக்கமா , அமைதியா இருக்கற மாதிரி காட்டிக்கறார்.. ஒரு புது முக ஹீரோ என்ற அளவில் இவர் பாஸ் மார்க் தாண்டி ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் ஆகிறார்.. விஜய், விஷால் வகையறாக்கள் கவனிக்க .. நடன காட்சிகளில் பாக்யராஜ் பாணியில் சமாளிக்கிறார்.. 

 ஹீரோயின் ஹன்சிகா மோத்வானி .. சாக்கு மூட்டைக்குள் திணிக்கப்பட்ட தர்பூசணிப்பழம் ( கோஷாப்பழம்) போல் மினுக்குகிறார்.. பாடல் காட்சிகளில்  ஸ்லோமோஷனில் தளும்புகிறார்.. (45 லட்சம் சம்பளம் வாங்கிட்டு அது கூட இல்லைன்னா எப்படி?) 

ஹீரோவின் அம்மாவாக வரும் சரன்யா காமெடியில் அடி பின்றார்.. 20 வருடங்களாக பேசாத தன் கணவர் பேசும் சீனில் அவர் காட்டும் உற்சாகம் கிளாஸ் ரகம்.. அப்பாவாக வரும் அழகம் பெருமாள் நடிப்பு ஓக்கே.. 

 சாயாஜி ஷிண்டே ஹீரோயின் அப்பா.. வந்தவரை ஓக்கே சினேகா , ஆர்யா கெஸ்ட் ரோல்... குட்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgef6l8PAIeiSe6P3yDUJgPubB9uuNLG1JIs9scnV16VWHaNDG7UegXz1t9TwUxKG8ZPhcWK7g7OZq0ZM1USsYatxbE-Zw5ZhwHu4TJAA2WGdK7xatG0cvTte7l26Ay74N2s5yz_eekv8k/s1600/ok+ok+%25281%2529.jpg

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1.  ஹீரோ அண்ட் கோ டிராஃபிக் எஸ் ஐ யிடம் மாட்டி ஸ்டேஷனில் விடிய விடிய சந்தானத்தை மிமிக்ரி பண்ணச்சொல்லி டார்ச்சர் பண்ணும் காட்சி கலக்கல் காமெடி

2. கனவுக்காட்சியில் ஹீரோவை வில்லன் ஷூட் பண்றப்ப தேமேன்னு பக்கத்துல நிக்கற சந்தானத்தை துப்பாக்கிக்குண்டு வாங்க வைக்கும் இடம் செம.. 

3.  கதையே இல்லாமல் போனாலும் திரைக்கதையில் சுவராஸ்யம் சேர்த்த விதம், சந்தானத்தை அவர் வழியில் பேச விட்ட சுதந்திரம்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgct2GAZCH8YjGaQksyN20UgHq8Vhw9QGVMfpsKBmr9v2ds_uvDwxdfIxRUxJojfvIspwz05q9_ktARIiTeiTmwZ4cpTB4PXtkt6ii1ByXf26Ug2PBLw1zBvrGYPZOgzaQY3zgz8aRI7KZH/s1600/Oru+Kal+Oru+Kannadi+Movie+Stills+Mycineworld+Com+(8).jpg

4. தயாரிப்பாளராய் எந்த பந்தாவும் காட்டாமல் அடக்கி வாசித்து  நல்ல பிள்ளையாய் இருக்கும் உதய நிதி.. 

5. படத்தின் சூப்பர் ஹிட் பாடல் ஆன வேணாம் மச்சான் வேணாம் மச்சான் இந்த பொண்ணுங்க காதலு.. மூடி திறக்கும் முன்பே நம்மை கவுக்கும் குவாட்டரு பாட்டுக்கான சிச்சுவேஷன், நடன அமைப்பு செம கலக்கல்..  அரங்கத்தில் பாதிப்பேர் எழுந்து ஆடறாங்க  ( பொண்ணுங்களால  எத்தனை பேர் பாதிக்கப்பட்டாங்களோ? )

6. உயிரே உயிரே எங்கே , காதல் ஒரு பட்டர் ஃபிளை, அழகே அழகே, அகிலா அகிலா என் நெஞ்சில் பூ பூத்ததோ என எல்லா பாடல்களுமே கேட்கும் படி இருக்கு.. படமாக்கப்பட்ட விதமும் ஓக்கே 

 7. யாரையும் யோசிக்க வைக்காமல் , காமெடி ஒன்றையே குறி ஆக்கி பர பர என நகரும் காட்சி அமைப்புகள் பிளஸ்.. 


http://moovstills.com/wp-content/uploads/2012/03/Oru-Kal-Oru-Kannadi-Movie-Stills-31-e1331105217367.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1.  சிட்டி கமிஷனர் பொண்ணு  டூ வீலர் இருக்கு, கார் இருக்கும் ஜீப் இருக்கு அதெல்லாம் விட்டுட்டு ஹீரோ வரட்டும்கரதுக்காகவே பஸ் ஸ்டாப்ல நிப்பாரா?  எந்த ஹை க்ளாஸ் ஃபிகர் பஸ்ல போகுது?


2. சரண்யா காலைல 10 மணிக்கு எக்சாம் ரிசல்ட் பார்க்கப்போனவர் கோயிலுக்குப்போனேன் அதான் லேட்னு நைட் 10 மணீக்கு வர்றார்..  அவ்லவ் நீளமான ரிசல்ட்டா?

3.  ஹீரோவும் , சந்தானமும் பேசிட்டு இருக்காங்க.. அப்போ சந்தானம் மீசை இல்லாம  படம் பூரா வர்றவரு அந்த சீன்லயும் மீசை இல்லாம வர்றார்... பேசிட்டு இருக்கறவங்க  அப்படிக்கா கிராஸ் பண்ணி அந்த ரோட்டுக்குப்போய் டான்ச் ஆடி வேணாம் மச்சான் பாட்டுக்கு ஆடறப்ப மீசையோட இருக்காரு.. அந்த பாட்டு முடிஞ்ச அடுத்த சீன் மீசை நோ.. 

4. மேரேஜ் ஆகி 25 வருஷம் ஆச்சு.. 25 வது ஆண்டு விழா இன்னைக்குன்னு சரண்யா ஒரு சீன்ல சொல்றாங்க.. அடுத்த சீன்லயே 20 வருஷமா என் கிட்டே பேசாமயே இருக்காரு அப்டிங்கறார்... அதுவும் டிகிரி முடிச்சுட்டதா பொய் சொன்னதுக்காக.. இந்தக்காலத்துல எந்த புருஷனாவது இந்த சின்னக்காரணத்துக்காக 20 வருஷம் பேச்சு வார்த்தை எதுவும் இல்லாம இருப்பானா? ( பேச்சு வார்த்தை மட்டும் தான் இல்லை ஹி ஹி )

5. எல்லா படங்கள்லயும் ஹீரோயினா மனசு மாறி ஹீரோவை ஏத்துக்கற மாதிரி சீனே வைக்கறதில்லை.. க்ளை மாக்ஸ்ல கல்யாண கோலத்துல இருக்கும்போது அந்த மாப்ளை ஆல்ரெடி ஒரு ஃபிகரை மேட்டர் முடிச்சு கழட்டி விட்டுருப்பான்.. அதை யாராவது காட்டிக்கொடுத்து பேரை கெடுப்பாங்க.. அதே சீன் தான் இதுலயும்..

6. போலீஸ் ஹையர் ஆஃபீஸ் வீட்டு மேரேஜ்.. மண்டபத்துல நோ போலீஸ்..??? பாதுகாப்பே இருக்காதா?


http://chennaionline.com/images/gallery/2012/March/20110322103210/oru-kal-oru-kannadi-movie-latest-photos-images-stills-37.jpg


பஞ்ச் டயலாக்ஸ், ஃபைட்ஸ் எல்லாம் இல்லாம வன்முறைக்காட்சிகள் இல்லாத ஜாலி எண்ட்டர்டெயின்மெண்ட் சினிமா .. சந்தானத்துக்காக பார்க்கலாம்.. 

 எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 43

 எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே 

 சி.பி கமெண்ட் -  கதை முக்கியம் இல்லை.. ஜாலி சிரிப்பு போதும்னு சொல்றவங்க, சந்தானம் ரசிகர்கள் என எல்லாரும் படம் பார்க்கலாம்.. 

 ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்

 ஏ செண்ட்டரில் 75நாட்கள், பி செண்ட்டரில் 40 டூ 50 நாட்கள் , சி சென்ண்டரில் 20 நாட்கள் ஓடும்

 படத்தின் கலக்கலான காமெடி ஜோக்ஸ் 112 அடுத்த பதிவில்



http://chennai365.com/wp-content/uploads/On-Location/Oru-Kal-Oru-Kannadi/Oru-Kal-Oru-Kannadi-Stills-030601001.jpg

diskci - review of the film http://www.adrasaka.com/2012/04/ok-ok-108.html