Saturday, March 10, 2012

அல்போன்சா -சில்ஃபான்சா -1992 - எ கில்மா தெஃப்ட் லவ் ஸ்டோரி

http://www.oneadda.com/wp-content/themes/utility/timthumb.php?src=http://www.oneadda.com/wp-content/uploads/2012/03/aaaaaaa.jpg&h=200&w=300&zc=1 

அல்போன்சா காதல் குழப்பத்தில் சிக்கியிருப்பது இது முதல் முறையல்ல, 3வது முறையாகும். இதில் 2 முறை அவர் தற்கொலைக்கு முயன்று மீண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


சி.பி - சூசயிடு அட்டெம்ப்ட்டா? பிரெட்டெண்ட் டு பி சூசயிடு அட்டெம்ப்ட்டா? நல்லா விசாரிங்கப்பா. ( தற்கொலை முயற்சியா? தற்கொலை முயற்சி செய்வது போல் நடிப்பி பயிற்சியா? - நன்றி மேஜர் சுந்தர்ராஜன்)



அன்னக்கிளி செல்வராஜ் மூலம் கதாநாயகியாகத்தான் தமிழ்

 சினிமாவுக்குள் வந்தார் அல்போன்சா. இவரது தந்தை பெயர் ஆண்டனி. இவர் ஒரு டான்சர். தாயார் பெயர் ஓமனா. இரண்டு அண்ணன்கள், ராபர்ட் என்கிற தம்பி அல்போன்சாவுக்கு உண்டு. வீட்டில் இவர் ஒரே பெண் என்பதால் செல்லம் ஜாஸ்தி. கேரளாவிலிருந்து வந்தவர் என்பதால் தமிழ் சினிமாவில் பட்டுக்கம்பளம் போட்டுத்தான் வரவேற்றார்கள். ஆனால் ரசிகர்கள் அல்போன்சாவை கதாநாயகியாக ரசிக்கவில்லை. அதையும் தாண்டி அவரிடம் ஒட்டிக் கொண்டிருந்த கவர்ச்சிதான் மேலோங்கி தெரிந்தது. இதனால் அவர் கவர்ச்சி நாயகியாக மாறினார்.


சி.பி - வர்ற படங்களில் எல்லாம் மேல் அங்கி விலகியே இருந்ததால் கவர்ச்சி மேலோங்கி இருந்தது ஹி ஹி 




பாட்ஷா படத்தில் அவர் பாடிய கவர்ச்சிகரமான பாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுவே அவருக்கு பெரும் பிரேக்காகவும் அமைந்தது. அதன் பின்னர் அல்போன்சாவின் கவர்ச்சி நடனத்துக்கு கூட்டம் சேர்ந்தது, அவரும் பிசியாக ஆடிக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் அவருக்கும் சாகர் என்ற நடிகருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் இந்த காதல் படு வேகமாக காலியாகிப் போனது. சாகர் இன்னொரு பெண்ணை மணந்து கொண்டு ஒதுங்கினார். ஆனால் இந்த நிராகரிப்பால் அதிர்ந்தும், ஏமாந்தும் போன அல்போன்சா, தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றினர்.

இந்த நேரத்தில்தான் அல்போன்சாவின் தம்பி ராபர்ட் தலையெடுத்தார், டான்ஸ் மாஸ்டரானார். அல்போன்சாவும் மெதுவாக கிரேஸ் குறைந்து படங்களிலிருந்து ஒதுங்க ஆரம்பித்தார். நோபள் என்பவரைக் கல்யாணம் செய்து கொண்டார். குழந்தையும் பிறந்தது.

இந்தத் திருமண வாழ்க்கை சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் இடையில் என்ன நடந்ததோ, நோபளுக்கும், அவருக்கும் பிரச்சினை வெடித்தது. அதற்குக் காரணம், வினோத்குமார் மீது அல்போன்சாவின் பார்வை படர்ந்ததே என்கிறார்கள். வினோத்குமாருடன் அல்போன்சா நெருங்கிப் பழக ஆரம்பித்ததால் வெகுண்ட நோபள், தனது மனைவியையும், மகளையும் விட்டு விட்டு துபாய் போய் விட்டார். அது அல்போன்சாவுக்கு வசதியாகிப் போய் விட்டது.




விருகம்பாக்கத்தில் பிளாட்டை வாடகைக்குப் பிடித்து அங்கு வினோத்துடன் குடும்பமே நடத்த ஆரம்பித்து விட்டார். அல்போன்சாவுடன் இணைந்தது முதல் தனது குடும்பத்தினரைக் கூட மறந்து விட்டார் வினோத்குமார். இப்படியாக இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர்.

இந்த செயலை இருவரது வீட்டாரும் ஆரம்பத்திலேயே கண்டித்து சரி செய்திருந்தால் ஒரு உயிர் பறி போயிருக்காது. ஆனால் அதைச் செய்யாமல் ஆளாளுக்கு அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்ததால்தான் அல்போன்சாவும், வினோத்குமாரும் தங்கள் இஷ்டத்திற்கு நடந்து கொண்டு இப்படி ஒரு உயிரைப் பறி கொடுக்க நேரிட்டுள்ளது.


Its a preplanned murder says vinoth kumars father



தற்போது போலீஸ் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார் அல்போன்சா. இதில் என்ன விசேஷம் என்றால், முதல் முறையாக அவர் தற்கொலைக்கு முயன்று எந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாரோ, அங்கேயேதான் தற்போதும் அனுமதிக்கப்பட்டுள்ளார்!



சி.பி - அந்த ஹாஸ்பிடல்தான் அவரோட ரெகுலர் சூசயிடு அட்டெம்ப்ட் ட்ரீட்மெண்ட் ஹாஸ்பிடலாம் ஹி ஹி 


"என் மகன் தற்கொலை செய்து கொள்ளவில்லை; நடிகை அல்போன்சா குடும்பத்தினர், திட்டமிட்டு கொலை செய்துள்ளனர், என, வினோத்குமாரின் தந்தை பாண்டியன் கூறினார். அல்போன்சா உள்ளிட்ட மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்க, போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார்.

நடிகை அல்போன்சா வீட்டில், அவரது காதலன் வினோத்குமார், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதிக அளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்ற நடிகை அல்போன்சா, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று நாள் சிகிச்சை முடிந்து, நேற்று முன்தினம் வீடு திரும்பியுள்ளார். வினோத்குமாரின் மரணம் குறித்து, பிரேத பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை. இந்நிலையில், காதலன் வினோத்குமார் தற்கொலை செய்து கொள்ளவில்லை; அது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என, அவரது தந்தை பாண்டியன், போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் கொடுத்தார்.

இது குறித்து பாண்டியன் -   என் மூத்த மகன் வினோத்குமார், சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு, ஆறு ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்தார். என் மைத்துனர் பாலு வீட்டில் தங்கி, சினிமா தொடர்பான பயிற்சிக்கு சென்று வந்தார். கவசம் என்ற படத்தில், கதாநாயகனாக நடித்தார். படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்து, திரையிடத் தயாராகவுள்ளது.



என் மகன் நடனத் திறமையை வளர்த்துக் கொள்ள, நடன இயக்குனர் ராபர்ட் என்பவரிடம் பயிற்சிக்கு சேர்ந்தார். நான்கு மாதமாக, அவரது வீட்டிலேயே தங்கினார். என்னிடம் இரண்டு லட்ச ரூபாய் பணம் பெற்று, ராபர்ட்டிடம் கொடுத்தார். ராபர்ட் அவரது நண்பருடன் சேர்ந்து, சங்கு என்ற படம் எடுப்பதற்கான தயாரிப்பு செலவுக்கு, 50 லட்சம் ரூபாயை என் மகனிடம் கேட்டுள்ளனர். என் மகன் தர மறுத்து விட்டான். இது பற்றி என்னிடமும் கூறினான்.


சி.பி - கோடம்பாக்க செண்ட்டிமெண்ட் தெரியாதா? சங்கு-ன்னு யாராவது டைட்டில் வைப்பாங்களா? அதான் சங்கு ஊதிடுச்சு .. அவ்வ்வ்


அந்த படத்தில், ஒரு கதாநாயகனாக உன்னை போடுகிறேன் என கேட்டும் பணம் தராத நிலையில் தான், எதிர் வீட்டில் குடியிருந்த அவரது அக்கா, நடிகை அல்போன்சாவை மகனுக்கு அறிமுகம் செய்து வைத்து, அவர் மூலமாக பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தான், கடந்த 4ம் தேதி, நள்ளிரவு திடீரென, மகனின் மொபைல் போனில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய அல்போன்சா, "உங்கள் மகன் தற்கொலை செய்து கொண்டார் என கூறி வைத்து விட்டார். நாங்கள் பதறியடித்து அங்கு சென்ற போது, கார் "பார்க்கிங்கில், தரையில் போட்டு வைத்திருந்தனர். அவனது மூக்கு, வாய் பகுதியிலும் ரத்தம் இருந்தது.

அவனது அறைக்கு சென்று பார்த்த போது, சுவரில் ஆங்காங்கே ரத்தம் படிந்திருந்தது. சம்பவத்தன்று, இரவு 7.30 மணிக்கு என்னிடம் பேசினான். தான் நன்றாக இருப்பதாகவும், மாத்திரைகளை நேரம் தவறாமல் சாப்பிடுமாறு, எனக்கு அறிவுரையும் கூறினான். அடுத்த இரண்டு, மூன்று மணி நேரத்தில், என் மகன் தற்கொலை செய்வதற்கு வாய்ப்பே இல்லை.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQJX3jvxNeWarhUvcghT96h0SfS2fAZ-9stMS43eoB0IwvIFTeMEetLwPiRXHbbT6LLF1CXAh-OyAbgnEE0ayRiM0C1jfKVV5tWGn0nynLQA91eF-arM0aOgFq5xwU0E_YdF2FNsqNpZo/s640/alfonsa1.jpg






"பணம் தர மறுத்ததால், என் மகனை, அல்போன்சா, அவரது தம்பி ராபர்ட், அவரது அம்மா மூவரும் சேர்ந்து, திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விருகம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தேன். அவர்கள் நடவடிக்கை எடுக்காததால், கமிஷனரிடம் புகார் செய்தேன். என் மகன் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ஓய மாட்டேன்
.

கலைஞர்,கேப்டன் என்ன வித்தியாசம்?

http://www.urdufb.com/wp-content/uploads/2012/01/Sameera-Reddy.jpg

1.ப.சிதம்பரம் என் நம்பிக்கைக்கு பாத்திரம் ஆனவர் - பிரதமர் # பிரபுதேவா நயன் தாராவுக்கு மாத்திரம் கணவர் - சிம்பு

---------------------------------------

2. லிங்குசாமி என்னை சமீரா என கூப்பிடுவார் -அமலாபால் # அப்போ சமீராரெட்டியை என்ன?ன்னு கூப்பிடுவார்?டவுட்டு

-------------------------------------

3. 7ஆம் அறிவு போதிதர்மாவின் கதை - உதயநிதி ஸ்டாலின் # அப்போ அது கேப்டனோட தர்மா பட உல்டாவா? -அறிவு ஜீவி பிரேமலதா கேள்வி

-------------------------------

4. எனக்கு ஞாபக மறதி அதிகம் - ப. சிதம்பரம் # என்னிடம் வெளிவராத எக்கச்சக்க திறமைகள் (!!) இன்னும் இருக்கின்றன - த்ரிஷா

-----------------------------

5. சட்டசபைல எங்க பலம் நேத்து 1, இன்னைக்கு 29, நாளைக்கு...? - கேப்டன் # நேத்து கட்டிங்,இன்று குவாட்டர், நாளை ஃபுல் - சரக்கு சஞ்சய்சாமி

-----------------------------------------

6. ஒவ்வொரு தமிழனும் இறுமாப்புக்கொள்ளூம் அளவு 7ஆம் அறிவு படம் இருக்கும் - முருகதாஸ் # இரு மாப்பு, படம் வரட்டும், நாங்க சொல்றோம் , ரிசல்ட்டை ( வந்தாச்சு, ஊத்திக்குச்சு)

---------------------------------

7. எனக்கு கூச்ச சுபாவம் அதிகம் - சமீராரெட்டி # எங்களுக்கும் நீங்க நடிக்கற படம்  ,ஸ்டில்ஸ் எல்லாம் பார்க்கறப்ப கூச்சமாத்தான் இருக்கு

---------------------------------

8. தனித்து நிற்பதால் பாமகவுக்கு மக்கள் ஆதரவு-ராமதாஸ்  # இனி புனிதமான கேரக்டரில் மட்டுமே நடிக்க முடிவெடுத்ததால் நயன் தாரா புகழ்  ஓங்கியது

-------------------------------

9. ஹன்சிகாவுடன் போட்டியா? மறுக்கிறார் ஜெனிலியா!!  # அவரோட ஆள் வேற, என்னோட ஆள் வேற

------------------------------

10.வித்யா-விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை பெண்களுக்கு குறைவு.அது ஏன்?


சத்யா- ஏன்னா WIT எழுதற லேடீஸே கம்மி.. எழுதுனாத்தானே கொடுக்க முடியும்?


-------------------------------------
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEih2VJJHZws2ycUXRXr6NmoIOr3fPL6Xq24DI1ApWohb4HYkfUaolPVEcNLxNFgmGNhClcBg8B7lmChoHozYuF_H1gdy8sZdlxAs7aFHtiuNweA8MkeRQC5PUMVbzr83GUt1AtnI07Sb5UN/s1600/Sameera_Reddy_Unseen_New_Pics_Erra_Gulabeelu.jpg

11. காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க: ஹசாரே பிரசாரம் # பக்கத்துவீட்டுக்காரி கேரக்டர் சரி இல்லை, அவளை லவ் பண்னாதீங்க, நான் ரொம்ப நல்லவ

----------------------------------

12.தேர்தலில் தோற்கவில்லை,வெற்றியை திருட்டு கொடுத்தோம் - ப.இளம்வழுதி # சோ. அகர்வாலை டைவர்ஸ் செய்யலை, சும்மா பிரிந்து வாழுகிறோம்-செல்வராகவன்

--------------------------------------

13. மைனாரிட்டி ஆட்சியை நடத்தி மெஜாரிட்டி திட்டங்களை கொண்டு வந்தோம்-துரைமுருகன் # எட்டாங்கிளாஸ் ஃபெயிலானவனே இப்டின்னா ஏழாங்கிளாஸ் பாஸ் ஆனவன்?

----------------------------------

14. மறுபிறவி என ஒன்றிருந்தால் நான் அம்மாவின் பாதுகைகளாக பிறக்கவேண்டும், என்னை சுமந்த அவளை நான் சுமந்து நன்றிக்கடன் தீர்க்க!! #SMS

--------------------

`15. மற்றவர்களிடம் இருந்து  எதையும் எதிர்பார்க்காதே,மற்றவர்களுடன் எதையும் ஒப்பிட்டுப்பார்க்காதே! நிம்மதியாக இருப்பாய்

------------------------------------

16. உண்மையான காதலில் வலி உண்டாகிறது.உன்னை விரும்பும் நபருக்கு நீ , நீ விரும்பும் நபர் உனக்கும் வலி தருவார்,பரிமாறிக்கொள்ளப்படும் வலிகளே காதல்

--------------------------------

17. நம்மை வெறுப்பவர் லிஸ்ட்டை ஈஸியா கண்டு பிடிச்சிடலாம், ஆனா நம்மை மனசுக்குள் நேசிப்பவர் பட்டியலை முழுசாக கண்டுபிடிக்கவே முடியாது

-------------------------------------

18. டேமேஜர் 3 ஃபிகர்ட்ட ஒரே சமயத்துல கடலை போடறது தப்பில்லையாம், நான் ரிசப்ஷனிஸ்ட் கிட்டே குட்மார்னிங்க் சொன்னதுக்கு 2 மணிநேரமா முறைக்கறாரு

-------------------------------

19. வலிகள் இல்லாத காதல் இல்லை, வலிகளே இல்லை என்றால் அது காதலே இல்லை

--------------------------------------

20.அழகு அழியக்கூடியது, அறிவு மழுங்கக்கூடியது

------------------------------------


http://www.masala.com/images/tmp/full/sameera2212_full.jpg

Friday, March 09, 2012

JOHN CARTER -ஏலியன்ஸ் உடான்ஸ் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://www.disneydreaming.com/wp-content/uploads/2012/01/John-Carter-International-Movie-Poster.jpg 

இந்தக்கதைல மொத்தம் 3 கிரகம் இருக்கு. உதாரணமா அதிமுக கட்சில சசிகலா, நடராஜன்,இளவரசின்னு 3 கிரகங்கள் இருக்கே அது மாதிரி.. தமிழ் நாட்ல கலைஞர், ஜெ, டாக்டர் மான மிகு ராம்தாஸ்-னு 3 கிரகங்கள் இருக்கே அது மாதிரி,நயன் தாராவை சுத்தி சிம்பு, பிரபுதேவா,ஜெயம் ரவின்னு 3 கிரகம் இருக்கே அது மாதிரி ( ஜெயம் ரவி லேட்டஸ்ட் கிரகம் ஹி ஹி ).

மார்ஸ்னு ஒரு கிரகம்.. இங்கே தான் ஹீரோயின் கொஞ்சம் முற்றிய முகத்தோட,வற்றாத , 2 கைகளால் அணைத்தால் பற்றாத தேகத்தொட கிட்டத்தட்ட டிம்பிள் கபாடியா இன் விக்ரம் மாதிரியும் தூரத்தட்ட கேத்ரினா கைஃப் மாதிரியும் இருக்காங்க .. பூமியில் இருக்கற ஒரு குதிரைப்படை வீரர் தான் ஹீரோ ஜான் கார்ட்டர்.. வில்லன் வில்லனோட மகன் இருக்கற கிரகம் தான் ஹீலியம் ..

பூமில இருக்கற ஹீரோ ஏதோ ஒரு தங்கப்புதையல் இருக்கற தங்கக்குகையை தேடிப்போறார்.. போற வழில அவருக்கு ஒரு பவர் கிடைக்குது.. அதாவது ஸ்பிரிங்க் மாதிரி ஜம்ப் பண்ற பவர்.. காலை ஒரு உந்து உந்துனாருன்னா ஜொய்ங்க்னு ஆகாசத்துல 2 கி மீ போய்ட்டு வருவார்.. கால் சுளுக்காது.. இதை நம்ப முடியாதவங்க கால் கிலோ மல்லிகைப்பூவை  வாங்கிட்டு தியேட்டருக்கு வரவும் .. அப்பப்ப நம்ம காதுல வெச்சுக்க.. 

மார்ஸ் கிரகத்துல இருக்கற ஜீவராசிகள்க்கு  4 கை, 2 கால்.. மத்ததெல்லாம் எத்தனைன்னு தெரியலை.. என்னமோ ஈரோடு எலிகெண்ட் டெயிலர்ட்ட டிரஸ் தெச்ச மாதிரி அந்த ஏலியன்ஸ்ங்க டிரஸ் போட்டிருக்குங்க.. அவங்க ஹீரோவோட பறக்கும் சக்தியை பார்த்துட்டு வியக்காங்க.. இது எப்படின்னா ஏதோ எதேச்சையா தனுஷ் கொலை வெறி பாட்டை பார்த்து மயங்கி பிரதமரே பார்ட்டிக்கு கூப்பிட்டாரே? கமல் பொண்ணு ஸ்ருதி 3 படத்துல ஷூட்டிங்க் ஸ்பாட்ல தனுஷ் ஐஸ்வர்யா பார்க்க பார்க்க கில்மா பண்ணுச்சே அந்த மாதிரி ஒரு லக்கி பிரைஸ்.. 


http://media1.onsugar.com/files/2012/03/10/2/192/1922283/03ca4b8024337481_FishingThumb.xxxlarge_2/i/John-Carter-Movie-Pictures.jpg

ஹீரோயினை வில்லனோட மகன் கல்யாணம் பண்ண ட்ரை பண்றான்.. ஹீரோ அதை தடுத்து  எம் ஜி ஆர் மாதிரி காப்பாத்தி அவன் பண்ணிடறான்.. அதாவது கல்யாணத்தை.. அவ்ளவ் தான் கதை.. 

 செம காமெடியான மேட்டர் என்னான்னா நம்ம ஊர்ல ஜிகிடிங்க எல்லாம் அரைகுறையா ஜின்ஸ், ஸ்லீவ்லெஸ் அப்படி சென்னை பஜார்ல சுத்தும்ங்க.. மேரேஜ் அன்னைக்கு பார்த்தா முக்காடு போட்ட முனிஸ்புரி மாதிரி, சீதா தேவிக்கு அக்கா மாதிரி பாந்தமா பட்டு சேலை கட்டி அடக்க ஒடுக்கமா இருக்கும்.. ஆனா இந்தப்படத்துல ஹீரோயின் கல்யாண டிரஸ் செம காமெடி..  மேலே ஒரு பிரா , கீழே ஒரு கோவணம் ஹி ஹி அது அவங்க கிரக  வழக்கமாம்.. அடக்கிரகமே..

 டைரக்டருக்கு ஃபோன் போட்டு கேட்டப்ப ( ஏன்? அவர் மட்டும் தான் படத்துல ரீல் விடனுமா? நாம விடக்கூடாதா? ஹி ஹி ) அவர் சொல்றாரு. கோடிக்கணக்குல சம்பளம் தர்றோம்.. முடிஞ்சவரை உரிச்சுக்காட்டிடனும் அப்டிங்கறார்.. நம்ம ஊரா இருந்தா டூயட் சீன்ல சீன் காட்ட வைக்கலாம்.. அவங்க நாட்டுல இந்த மாதிரி பாரம்பரிய உடை அப்டினு ஏதாவது சொல்லி ஏமாத்தனும் போல.. 


http://bestmoviesevernews.com/wp-content/uploads/2012/02/john-carter-movie-image-31-e1329520416937.jpg

ஓக்கே .. இப்போ நடிப்பை பார்க்கலாம்.. ( நல்லா கேட்டுக்குங்க.. நான் நடிப்பை மட்டும் தான் பார்த்தேன்) ஹீரோ ஆள் ஜெகஜோதியா இருக்கார் ( சரவணா ஸ்டோர் அண்னாச்சி கணக்குப்பண்ணி குடித்தனம் வெச்சாரே அந்த ஜீவஜோதி மாதிரி ஹி ஹி )அவர் எக்சைஸ் எல்லாம் நல்லா பண்ணி பாடியை கட்டு மச்தா வெச்சிருக்காரு.. மிச்ச வேலை எல்லாம் கிராஃபிக்ஸ் பார்த்துக்குது. பாதி நேரம் அண்ணன் ஆகாயத்துல பறக்கறாரு.. மீதி நேரம் ஹீரோயின் கையை  அணடர் லைன் கையை மட்டும் தடவிட்டு இருக்காரு .. 

ஹீரோயின் இந்திய ரசிகர்களுக்கு பிடித்தமாதிரி முக அமைப்பு.. தமிழர்களுக்கு பிடித்தமாதிரி குஷ்பூ, ஹன்சிகா உடற்கட்டு ( சுந்தர் சி, பிரபு, கார்த்திக் மன்னிக்க , மற்றும் பிரபுதேவா மன்னிக்க ஹி ஹி )

இந்தப்படத்துல ஒரு சீன்ல லிப் டூ லிப் சீன் இருந்ததா பக்கத்து சீட் ஆள் சொன்னாரு.. எனக்கு ஏன் தெரியலைன்னா நான் தாவணிக்கனவுகள் பாக்யராஜ் மாதிரி /. சின்னகுழந்தைங்க பார்க்கக்கூடாத மாதிரி சீன் வந்தா நானே எட்டனாவை கீழே போட்டு பொறுக்கிட்டு இருப்பேன் ( பொறுக்கிப்பய ஹி ஹி )

கேப்டன் எல்லாம் என்னய்யா ஆள்? நரசிம்மாவுல 86 பேரைத்தானே அடிச்சார்? இதுல ஹீரோ 1876 பேரை ஒரே ஒரு வாளை வெச்சு அடிச்சு தள்ளறாரு  



 அடங்கப்பா சாமி .. ஒளிப்பதிவு  ஓக்கே .. லொக்கேஷன்கள் நல்லாருக்கு //ஹீரோயின் கூட நிக்கற 5 ஜிகிடிங்க நல்லாருக்காங்க ஹி ஹி 

http://static.moviefanatic.com/images/gallery/lynn-collins-and-taylor-kitsch-in-john-carter_433x278.jpg

  மனதில் நின்ற வசனங்கள்

1.  சின்ன வயசுல இருந்தே நீ இப்படித்தான்.. நடக்காத விஷயத்தை நடத்திக்காட்டறேன். முடிச்சுக்காட்டறேன்னு சொல்றவ. முற்போக்கு எண்ணம் உள்ளவ,.. 

2. ஹீரோ - நான் தான் உன்னை காப்பாத்த வந்தேன்.. ஆனா நியாயமா பார்த்தா நான் தான் ஒதுங்கி நிக்கனும் போல.. 

 ஹீரோயின் - ஆமா.. ஏதாவது டேஞ்சர்னா என்னை கூப்பிடு.. நான் பார்த்துக்கறேன்.. 

3.  யுத்தம் அவமானச்சின்னம்

 ஆனா நல்ல விஷயத்துக்கு நடந்தா அது மக்களைக்காக்கற கலங்கரை விளக்கம் ( ஆனா இந்தியாவுல மட்டும் 2 நாள் கூட தாங்காதாம் அவ்வ்வ் )


4.  நீ சொல்றதை உண்மைன்னு எப்படி நம்பறது?

 ஏன்? நீ சொல்றதை நான் நம்பலையா? என்னை நம்பித்தான் ஆகனும் ( பாப்பா அவன் ஆம்பளை, நம்பலாம்.. நீ பொம்பளை எப்படி நம்பறது?)

5.  ஏய்.. கை கொடுன்னா வெறும் விரலை மட்டும் தர்றே.. இதை எப்படி குலுக்க?

இதே போதும் ..... 

6.  மூளை இல்லாதவன் போல் நடிக்கறது கஷ்டம் , அது எல்லாருக்கும் வராது.. 

7. எந்த ஒரு ராஜ்யத்தையும் ஆள மக்கள் ஆதரவு ரொம்ப முக்கியம் 

 புரியலை 

 உனக்குப்புரியலைன்னா  அதை புரிஞ்சவனை வாரிசா தேர்ந்தெடுக்க வேண்டி வரும்..   ( மக்கள் ஆதரவு கிடைக்க எளிய வழி.. எதையாவது இலவசமா தர்றதா சொல்லி ஏமாத்தறதுதான் )

http://www.ropeofsilicon.com/Images/stories/2012/mar/collins-interview-john-carter_0352012_020045.jpg


8.  வில்லன் - எனக்கு மனசாட்சி இருக்கு

 ஹீரோயின் - மனசே இல்லாத உனக்கு மனசாட்சி இருக்குறது எப்படி?

9. இந்த கிரஹத்துல ஆண்கள் உப்பை விட சப்பை.. பெண்கள் பாறையை விட கடினமானவங்க  ( அடப்பாவமே அப்போ எதுக்கும் யூஸ் ஆக மாட்டாங்களா?)

10. ஒரு வீரன் ஆயுதத்தை மாத்துவான் , ஆனா மனசை மாத்த மட்டான்

11.  சாகா வரம் பெற்றவர்களால மட்டும் தான் மரண பயம் இல்லாம வாழ முடியும்

12.. நான் இருக்கறவரை இந்த கிரகத்தை யாராலும் ஒண்ணும் பண்ண முடியாது.. 

 உயிர் போற நேரத்துலயும் ஊக்கம் குடுக்கறியா?

13. சில நேரங்கள்ல நமக்கு விருப்பப்படாததை விரும்பித்தான் ஆகனும்


http://spinoff.comicbookresources.com/wp-content/uploads/2012/03/john-carter-collins4-570x380.jpg

 படம் பார்க்கற யாரும் இந்தக்கதையை நம்பவே முடியலையே அப்படின்னு சொல்லிடக்கூடாதுன்னு ஒரு முக்கியமான டயலாக்கை 7 இடத்துல ரிப்பீட்டறாங்க

 அந்த டயலாக் “ என்னால நம்பவே முடியல “ - இந்த டயலாக்கை ஹீரோ 4 தடவை, ஹீரோயின்  3 தடவை சொல்றாங்க.

 சி.பி கமெண்ட் - ஸ்கூல் பசங்க, பொழுது போகாதவங்க மட்டும் இந்தப்படத்தை பார்க்க்கலாம் மோசம் இல்லை.. கொஞ்சம் டகால்டி .... 

 ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல படம் பார்த்தேன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfEa41mGxPvazWehVrqt4CowXkSaeJ53LmVY3N7zDgOEeaNdOuhJbmrd5St7Dy3Xht3momS5CrflyJYrT1fiJaUUsh_CJNFlFiZP3JlXn7l7_hYTvNR_qMVnoCkLgmt9leRWjCtp-I9zE/s1600/2207220-dejahthoris_lynn_collins.jpg

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (9.3..2012) 5 படங்கள் முன்னோட்ட பார்வை


 http://3.bp.blogspot.com/_rR_DLxd7wts/S_-45vOPe5I/AAAAAAAAEkU/3cdBcXotQn0/s1600/maasi-poster.jpg

1. மாசி - ஜி.கிச்சா இயக்கத்தில் அர்ஜுன் நடிக்கும் மாசியில் அவருக்கு போலீஸ் அதிகா‌ரி வேடம்.
படம் பற்றி கேட்டால், அர்ஜுன் ஆச்ச‌ரியமாகச் சொல்லும் ஒரு விஷயம், “இதுவரை ஆ‌க்சன் ஹீரோவா நடிச்சேன். இதில் முதல் முறையா எதி‌ரிகளுடன் மசில் ஃபவருடன் மோதாமல் மைண்ட் பவரை யூஸ் பண்றேன். ஏதி‌ரிகளை எப்படி புத்திசாலித்தனத்தால் வீழத்துகிறேன் என்பது ஹைலைட்டாக இருக்கும்.
 
சி.பி - அப்போ இன்று முதல் நீங்கள் மைண்ட் பவர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுவீர்கள் ஹி ஹி 

” ஆ‌க்சன் கிங் அறிவை வைத்து விளையாடுவது ச‌ரிதான். ஆனால், அவரது ரசிகர்க‌ள் இதை ஏற்றுக் கொள்வார்களா? அந்த சந்தேகம் இயக்குனருக்கும் இருக்கும் போலிருக்கிறது. அதனால், இருக்கிற ஒன்றிரண்டு சண்டைகளை பிரமாண்டமாக எடுத்திருக்கிறார். 
 
சி.பி - அறிவை வெச்சு விளையாடறேன்னு ஹீரோ வில்லன் 2 பேரும் 13 ரீலும் செஸ் விளையாடாதீங்கய்யா செம காண்டாகிடுவோம்.. 

http://reviews.in.88db.com/images/maasi/maasi8.jpg
அதிலும் கிளைமாக்ஸ் சண்டை மிகப் பிரமாண்டம். அர்ஜுன் பொன்னம்பலத்துடன் மோதும் இந்தக் காட்சியில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்களுடன் 600 கார்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த சண்டைக் காட்சியை படமாக்க பயன்படுத்தப்பட்டவை ஏழு கேமராக்கள். தமிழ் சினிமா ச‌ரித்திரத்தில் இது முதல்முறை. 
 
சி.பி - 7 கேமராவானா என்ன? 70 கேமராவா இருந்தா என்ன? படத்துல ஒரு சீன் தானே ? அதுவும் இல்லாம எந்திரன்ல 35 கேமரா யூஸ் பண்ணாங்களே?

இதே கிச்சா சினேகாவை வைத்து பவானி ஐபிஎஸ் படத்தை இயக்கி வருகிறார், அதுவும் ஒரே நேரத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சி.பி - விளங்கிடுச்சு.. அந்தப்படம் ரிலீஸ் ஆகி பல மாசங்கள் ஆச்சு.. அப்போ இந்தப்படம் 2009ல ஸ்டார்ட் பண்ணிய படம் போல அவ்வ்வ்வ்,
 
ஈரோடு ஆனூர்,ராயல்,அன்னபூரணி 3 தியேட்டர்ல ரிலீஸ்.. ஆனா நாளைக்குதான்
 
http://tamilmp3songslyrics.com/PhotoGallery/Jun11/Sevarkodi1.jpg


2. சேவற்கொடி - பனேரி பிக்சர்ஸ் சார்பில் தயாரான புதிய படம் சேவற்கொடி. பிரபல நீச்சல் வீரர் அருண் பாலாஜி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் நாயகியாக பாமா நடிக்கிறார். இவர்களுடன் பவன், பிதாமகன் மகாதேவன், ஸ்ரீரஞ்சனி, சாய்ஜெகன், மணிமாறன், தவசி, கூத்துப்பட்டறை தயாள் உள்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்குகிறார் இரா.சுப்ரமணியன். 
 
 
அபியும் நானும் படத்தின் வசனகர்த்தாவான இவர் அப்பட இயக்குநர் ராதா மோகனின் உதவியாளராக சினிமா கற்று கொண்டவர் என்பதும் கவனிக்கத்தக்கது!

சேவற்கொடி குறித்து சுப்பிரமணியம் அளித்துள்ள பேட்டியில், பிறரைப் பற்றி தவறாக புரிந்து கொள்ளும் தனிமனித கோபம்தான் அத்தனை பிரச்னைக்கும் காரணம் என்ற கருவுடன் படத்தை இயக்கி வருகிறேன். 
 
திருச்செந்தூரில் நடந்த உண்மை சம்பவம்தான் படத்தின் கதை. திருச்செந்தூரின் புகழ்பெற்ற சூரசம்ஹார காட்சிகளும் படத்தில் இடம்பெறுகின்றன. அந்த நிகழ்ச்சியில்தான் படத்தின் நாயகனும், நாயகியும், வில்லனும் ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்கள். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறோம், என்று கூறியுள்ளார்.
http://www.filmics.com/gallery/d/147128-1/Sevarkodi-Movie-Photo-Stills-33.jpg

அம்பாசமுத்திரம் அம்பானி, முதல்இடம், படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பி.செல்லத்துரையின் ஒளிப்பதிவில் உருவாகும், இப்படத்திற்கு எங்கேயும் எப்போதும் பட இசையமைப்பாளர் சி.சத்யா இசையமைப்பதும் அவரது முதல்படம் இதுதான் என்பது ஹைலைட்!
 
கவினர் வைரமுத்துவின் இளமை துள்ளும் வரிகளும் அதற்கு ஏற்ப M.L.R.கார்த்திகேயன் குரலும் இந்த பாடலை மேலும் மேருகேட்டுகிறது.

நாயகியின் அழகை + அவளது செயல்களை வர்ணித்து பாடும் ஹீரோ பாடல் போல இருக்கு இது. நம்ம வைரமுத்து சார் சும்மா ஹீரோயின் அழகாய் மிக அழகாய் பாடலில் வர்ணித்து இருக்கிறார். அதனை நீங்களும் என்னுடன் சேர்ந்து ரசித்து கேளுங்கள்.

பாடல் வரிகளை சிதைக்காமல் மிக நேத்தியாய் இசை கோர்வை. பாடலில் அங்கங்கே 'சக்போன்' இசையை தூவி மேலும் அழகு சேர்த்திருக்கிறார் அறிமுக இசை அமைப்பாளர் C.சத்யா.

சத்யாவின் இசை மிகவும் தேர்ந்த இசை அமைப்பாளர் போல இருக்கு. வாழ்த்துக்கள் !!!!

கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு!
வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு!
தூரத்தில் பார்த்த காதல் வராது!
பக்கத்துல பார்த்த காமம் வராது!
மானுமில்ல மயிலுமில்ல!
கூனுமில்ல குயிலுமில்ல!
இருந்தும் மனசு விழுந்து போயிசுது!

அவ மூக்குமேல வேர்வையாகனும்!
இல்லை நாக்கு மேல வார்தையாகனும்!
அவ மாத்தி உடுத்தும் ஆடையாகனும்!
இல்லை போர்த்தி படுக்கும் போர்வையகனும்!

அழுக்கு துணிய உடுத்தி அவ தளுக்கி நடக்கும் போதும்
சுளுக்கு பிடித்த மனசு அட சொக்குது சொக்குதுடா !
சுத்தமான தெருவில் அவ துப்பி செல்லும் போதும்
எச்சில் விழுந்த இடத்தில் மனம் நிக்குது நிக்குதுடா!

தூங்கி எழுந்தா பிள்ளை அழகு!
அவ சோம்பல் முறிச்சா கொள்ளை அழகு!
அவ சொல்லுக்கடங்கா முடியும் -
சுத்தி கசக்கிய மலரும்
என்னை இழுக்கும் கண்ணை மயக்கும்!
தேத்துபல்லும் கண்டு பித்து பிடிக்கும்!

அவ மூக்குமேல வேர்வையாகனும்!
இல்லை நாக்கு மேல வார்தையாகனும்!
அவ மாத்தி உடுத்தும் ஆடையாகனும் !
இல்லை போர்த்தி படுக்கும் போர்வையகனும் !

வெளக்கமாறு புடுச்சி அவ வீதி பேருக்கும் போது
வளைவு நெளிவு பார்த்து மனம் வலுக்க பார்க்கதடா!
குளிச்சி முடிச்சி வெளியில் அவ கூந்தல் துவட்டும் போது
தெரிச்சு விழுந்த துளியில் நெஞ்சு தெரிச்சு போகுதடா!

அவ வளவி ஒலிக்கும் வாசல் அழகு!
அவ பூசும் ஒலிக்கும் வீதி அழகு !
ஒரு விக்கல் எடுக்கிற தோதும்
தும்மி முடிக்கிற தோதும்
அவஸ்தையிலும் அவள் அழகு !
குத்தம்குறையிலும் மெத்த அழகு !

அவ மூக்குமேல வேர்வையாகனும்!
இல்லை நாக்கு மேல வார்தையாகனும்!
அவ மாத்தி உடுத்தும் ஆடையாகனும் !
இல்லை போர்த்தி படுக்கும் போர்வையகனும் !
 
இந்தப்படம் எதிர்பாராத வெற்றியை தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.. ட்ரெயிலர், ஸ்டில்ஸ் எல்லாம் பக்கா .ஈரோடு இன்னும் ஸ்டாரில் ரிலீஸ்
 
http://chennai365.com/wp-content/uploads/movies/Pathirama-Pathukkunga/Pathirama-Pathukkunga-Stills-042.jpg
 
3. பத்திரமா பாத்துக்குங்க  - உறவுகளின் பரிணாமத்தை சொல்லும் படம்  உறவுகளின் பரிணாமத்தை சித்தரிக்கும் வகையில், ஒரு புதிய படம் தயாராகியிருக்கிறது. இந்த படத்துக்கு, பத்திரமா பாத்துக்குங்க என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

வாடா போடா, இனிது இனிது ஆகிய படங்களில் நடித்த ஷரண்குமார் கதாநாயகனாக நடிக்க, ராட்டினம், மன்னாரு படங்களில் நடித்து வரும் ஸ்மிதாஸ்ரீ கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சம்பத்ராம், வையாபுரி மற்றும் பலரும் நடித்து இருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு டைரக்ஷன்: வி.சி.சோமசுந்தரம்.

படத்தை பற்றி தயாரிப்பாளரும், டைரக்டருமான வி.சி.சோமசுந்தரம் சொல்கிறார்:-
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAzyuNqN34sTAk7SOAMb2TuZ0pqWLEU_h4IIlXtWVF6yUKaGZ5vxQFAi-Mbb1xhWruNGpn1XAd3h9v-zJHd4NwstvGHaRotAmFqUHWi1nMjBxchsXxQDsvQzOEQKQn4ypINlE7mrixa6Pn/s1600/pathirama-pathukkunga-movie-stills-26.jpg

நட்பு, காதல் மற்றும் உறவுகளின் எல்லா பக்கங்களையும் பதிவு செய்யும் கதை இது. கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் காதல் வந்த விதத்தையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் படம் விளக்கும். திரைக்கதையில் புதிய யுக்தியை கையாண்டிருக்கிறோம். ஜித்து ஒளிப்பதிவு செய்ய, சிவாஜிராஜா இசையமைத்து இருக்கிறார்.  
 
சி.பி - படம் எடுக்கற எல்லாருமே  திரைக்கதையில் புதிய யுக்தியை கையாண்டிருக்கிறோம்.அப்டினும், இதுவரை யாருமே தொடாத சப்ஜெக்ட்டும்னுதான் சொல்றாங்க.. ஹி ஹி 
 
ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் ரிலீஸ்
http://chennai365.com/wp-content/uploads/Poster/Naanga/Naanga-Movie-Stills-030604004.jpg

4.  நாங்க -தலைவாசல் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கி எண்ட்டர் ஆன செல்வா  பின் பூவேலி உட்பட பல ஹிட் படங்கள் கொடுத்தவர்.. அவரது 25 வது படம் தான் இது.. கதை 1980ல ஸ்டார்ட் ஆகி 2011 ல முடியுதாம் ..காலேஜ் ஃபிரண்ட்ஸ் பல வருடங்களுக்குப்பின் சந்திக்கும்ப்போது நடக்கும் சுவராஸ்யங்கள் தான் படமாம்.. அவர் சொல்றதை பார்த்தா பறவைகள் பல விதம், ஒரு கல்லூரியின் கதை டைப்ல படம் இருக்கும்.. போல

 இதுல 5 லவ் ஸ்டோரி இருக்காம் .. 13 புதுமுகங்கள் நடிக்கறாங்களாம்.. 
 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh51myaKE4uvaepj8SdD3bvoLTDCU1tORPm_oarpONqs51mSBLZA7YyvqO9wI92S3aAPGGUNRzFKlyRbL8GIZb40yd6f-Zp3vZ5bGSCvcgLYDa6SdsDow1t5vqjRrgg9gRxNVbpb1_g-4ed/s1600/naanga_movie_stills_pics_photos_05.jpg

 படத்துல கதை அம்சம் எப்படியோ சதை அம்சம் கண்டிப்பா இருக்கும்.. ஏன்னா இதுல கஸ்தூரி கில்மா கேரக்டர்ல வர்றாராம்.. விகடன் கேலரில மட்டும் கிளு கிளு ஸ்டில்ஸ் 46 இருக்கு.. கூகுள் சர்ச்ல 127 படங்கள் இருக்கு .. ஹி ஹி 
 
ஈரோடு ஸ்ரீநிவாசாவில் ரிலீஸ்
http://chennai365.com/wp-content/uploads/Hollywood/John-Carter-Maaveeran/John-Carter-Maaveeran-Stills-030402002.jpg

5. JOHN  CARTER - ஆங்கிலப்பட ரசிகர்களுக்கு இது மார்ஸ்.. ஏலியன்ஸ் டைப் படம்.. கிராஃபிக்ஸ் காட்சிகள்க்கு பஞ்சமில்லை.. சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம்கறதால இந்தப்படம் செம கலக்கு கலக்கும்னு எதிர்பார்க்கலாம்.. ஈரோடு வி எஸ் பி தியேட்டரில் ரிலீஸ்..

http://bestmoviesevernews.com/wp-content/uploads/2012/02/john-carter-movie-image-31-e1329520416937.jpg

பெண்களே !பெண்களே ! நீங்கள் எங்களை கடலிலே தூக்கிப்போட்டாலும்

1.எனக்கு வரப்போகும் கணவர் அழகா,உயரமா,தொழில் அதிபரா இருக்கனும் - நமீதா # அவரையாவது மாமான்னு கூப்பிடுங்க, மச்சான்னு கூப்பிட்டு கடுப்பு ஆகிடபோறார்

-----------------------------

2. டேமேஜரா இருந்தும்கூட உங்க பொண்ணு அடக்கமா குனிஞ்ச தலை நிமிராம நடக்குதே?

சவுமியின் டாடி - நல்லா பாருங்க, செல் ஃபோன்ல .ட்விட்டர்ல ட்வீட்டிங்க்

--------------------------

3. எந்த லேடி ஸ்டாஃபையும் தலை நிமிர்ந்தே பார்க்காத கண்ணியமானவன் அப்டினு எங்க ஆஃபீஸ்ல இன்னைக்கு எனக்கு ஒரு அவார்டு கொடுத்தாங்க#அடிச்சு விடு


--------------------------

 4. இந்தக்காலத்துல மக்கள் சோகத்தை, பிரிவை, வலியை மட்டும் பகிர்ந்துக்கறாங்க ,அவங்க சந்தோஷத்தை பற்றி மூச்!


----------------------------------

 5. பெண்களே !பெண்களே ! நீங்கள் எங்களை கடலிலே தூக்கிப்போட்டாலும் நாங்கள் உங்களுடன் கடலை போட்டுக்கொண்டுதான் இருப்போம் ஹி ஹி


-------------------------------

6. அழகு+அறிவு+புத்திசாலித்தனம் இதெல்லாமே தன் கிட்டே மட்டும் தான் இருக்குன்னு நினைச்சுக்கறது பெண்கள் படைப்பில் பிரம்மனின் தவறு


-----------------------------------

 7. இன்று பிரபல பெண்ட்வீட்டரிடம் பேசினேன்.டைம் லைனில் அவர் ஃபோன்நெம்பரை பகிர வேண்டாம் என்றார், எனவே அனைவருக்கும் DM இல் அனுப்பிட்டேன் ஹி ஹி


---------------------------

 8. குடும்ப நலன் கருதியும், குழந்தையின் எதிர்காலத்தை நினைவில் கொண்டும் பல தம்பதிகள் பல்லைக்கடித்துக்கொண்டு பிடிக்காத வாழ்வு வாழ்கிறார்கள்


----------------------------------

 9. இயற்கையின் விசித்திரம் என்னன்னா பல சமயங்களில் ஒரு மோசமான கணவனுக்கு நல்ல மனைவியும், நல்ல கணவனுக்கு மோசமான மனைவியும் அமைவதே! :((


--------------------------------

 10. அடிச்சுச் சொல்றேன் என் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் கூட தாவ மாட்டார்-விஜயகாந்த்! # ரொம்ப அடிக்காதீங்க, பை எலக்‌ஷன் வந்துடப்போகுது


----------------------------------

 11. சர்வதேச மகளிர் தின நல் வாழ்த்துக்கள்.இந்நன்னாளில் அனைத்து மகளிரும் ஆண்களுக்கு சம உரிமை கொடுத்து , அவர்களை மதிக்க முயற்சிக்கவும் ஹி ஹி  ( 8.3.2012)

-------------------------------------

12. பொண்ணுக்கு மூல நட்சத்திரம், மாமனார், மாமியார் இல்லாத ஜாதகம் இருந்தா சொல்லுங்க.


 1ம் பிரச்சனை இல்லை,மேரேஜை முடிங்க, மிச்சத்தை அவ முடிப்பா

----------------------------------

13. 6 நாட்களில் 520 கி.மீ.பிரசாரம்:விஜயகாந்த் திட்டம்# மாமோய், தொப்பை குறையும் ஓக்கே, மப்பை எப்போ எப்படி குறைப்பீங்க? - பிரேமலதா

-----------------------------

14. பிரதமரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை: சோனியா..# இதுதான் சாக்கு, தி முக தலைவரை மாற்ற கட்சி ஒன்றும் சங்கரமடம் இல்லை - கலைஞர்

---------------------------

15. 60 வயதில் நான் இளைஞரணி செயலாளர்': ஸ்டாலின் புலம்பல் # 90 வயதிலும் நான் மானாட மயிலாட பார்க்கிறேன், புலம்பிட்டா இருக்கேன்?-கலைஞர்

-----------------------------------

16. சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை-சீமான்# அட்லீஸ்ட் விஜயலட்சுமிக்காவது ஆதரவு தாங்கண்ணே


---------------------------------------

17. பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும்: பிரதீபா பாட்டீல்..# வேணாம் மேடம் அதி “காரம்” அல்சருக்கு வழி வகுக்கும்,அதிக அதிகாரம் ஆணவத்துக்கு..
---------------------------------

18. ஃபீமேல்ஸ் எல்லாரும் அவங்க இஷ்டத்துக்கு இருப்பதே ஃபெமினிஸ்ட்


--------------------------------

19. நடிகைகளுக்கு தமிழன் ஏன் கோயில் கட்டறான்னா பெண்களை தெய்வமா வணங்க அவன் ட்ரையல் பார்க்கறான் # சமாளிஃபிகேஷன்

------------------------------

20. என்னை அடக்க நினைத்தால் அது நடக்காது:விஜயகாந்த் # அண்ணே!இந்த டயலாக் அம்மாவுக்கா? சம்சாரத்துக்கா?


--------------------------

Thursday, March 08, 2012

சங்கர் ஊர் ராஜபாளையம் - வள் வள் வழா வழா - சினிமா விமர்சனம்

http://123tamilforum.com/imgcache2/2012/02/ShankarOorRajapalayamMovieOnline-1.jpg 

நான் எல்லாம் டீன் ஏஜ் ல இருந்தப்ப  யார் வீட்டுக்காவது போனா “இங்கே எல்லாம் என்ன வேலை? பொண்ணுங்க இருக்கற இடம்னு விரட்டி விட்டுடுவாங்க.. இந்தப்படத்துல செம காமெடியான நம்பவே முடியாத சீன் இருக்கு.. உஷ் அப்பா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.. படத்தோட கதை கண்றாவி எல்லாம் அப்புறம்.. முதல்ல அந்த சீனை சொல்றேன் ..

ஹீரோ எலட்ரிகல் கடை மாதிரி ஏதோ வெச்சிருக்கார்.. ஹீரோவோட ஃபிரண்ட் எலக்ட்ரீசியன்.. ஹீரோயினோட அம்மா அவங்க வீட்ல ஃபேன் ஓடலைன்னு சொல்லி வர சொல்றாங்க.. ஹீரோவும் , ஹீரோவோட ஃபிரண்டும் வீட்டுக்கு போறப்ப ஹால்ல அந்தம்மா இருக்காங்க.. மாடில போய் ஒரு ஸ்டூல் எடுத்துட்டு வாங்க.. ஃபேனை ரெடி பண்ண அப்டின்னு அந்தம்மா சொல்லுது... 

ஹீரோ போறாரு.. அங்கே ஹீரோயின் டிரஸ் பண்ணிட்டு இருக்கு.. யாரும் டென்ஷன் ஆகாதீங்க.. பாவாடை   ஜாக்கெட் எல்லாம் போட்டுத்தான் இருக்கு. சரியா சேலை கட்டறப்ப  ஹீரோ தெரியாத்தனமா அங்கே எண்ட்டர் ஆகிடறார். நல்லா பாருங்க ( ஹீரோயினை அல்ல .. சிச்சுவேஷனை)

 இந்த மாதிரி டைம்ல ஒரு பொண்ணு என்ன பண்ணனும்? முன்னெ பின்னே அட்லீஸ்ட் சைடுல கூட பார்க்காத ஒரு ஆம்பளை டிரஸ் மாத்துறப்ப வந்துட்டானேன்னு பதறனும்.. அதை விட்டுட்டு பாப்பா வெட்கமா  ஹீரோவை பார்த்து சிரிக்குது.. ஹய்யோ அய்யோ 

ஹீரோயினை விடுங்க.. ஒரு வயசுப்பெண்ணை மாடில டிரஸ் மாத்த வெச்சுட்டு எந்த அம்மாவாவது அப்படி ஆள் அனுப்புவாளா? அவ்வ் 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3Y0ridCcbQTwmzeSCkeQ1vfZ6R-htw768d9XuMtTtY-_CdqRftDXeb-Bxfrcq1XByppWhGJV2wOhK1D6q4RNV4DgmYht_y_DZuPwDNQLvycj3QbjAsEGGbCpgnjFwQxjDYc1PYMHHZb8/s320/shankar_oor_rajapalayam_01.jpg
 ஓக்கே கதைக்கு வருவோம்.. முன்ஜென்மத்தின் பிரதிபலிப்புதான் இந்த ஜென்மத்தில் நடக்கிறது என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதன் அடிப்படையில் அமைந்ததுதான் இக்கதை. 700 ஆண்டுகளுக்கு முன் பிறக்கும் தாவர வகையை சேர்ந்த ஒரு உயிர், பெண் ஒருத்தி மீது காதல் கொள்கிறது. அடுத்த ஜென்மத்தில் அந்த உயிர் மனிதனாக பிறந்து அதே பெண்ணை சந்தித்து காதல் கொள்கிறது..

ஹீரோ ஹீரோயின் 2 பேரும் லவ் பண்றாங்க.. ஹீரோயின் அண்ணன் ஒரு தாதா ( அட போங்கப்பா ) அண்ணன் கண்டிப்பானேன்னு பயந்து சொல்லாம அலைபாயுதே ஸ்டைல்ல கல்யாணம் பண்ணிக்கறாங்க .. ஹீரோயின் வீட்ல யாரும் இல்லாதப்ப ஹீரோவுக்கு ஃபோன் போட்டு வரச்சொல்றா.. எதுக்கு? தாயக்கரம் விளையாடவா கூப்பிடுவா? எல்லாம் கில்மாக்குதான்.. மேட்டர் முடிச்சுட்டு ஹீரோ கிளம்பறப்ப வில்லன் கரெக்டா வந்துடறான் .. 

 அப்புறம் என்ன? ஒரே சேசிங்க் தான்.. க்ளைமாக்ஸ்  அவங்க 2 பேரும் சேர்ந்தாங்களா? இல்லையா?ன்னு வெண் திரையில் தில் உள்ளவங்க பாருங்க.. முழுக்கதையையும் சொன்னவன் ஏன் அந்த க்ளைமாக்ஸ்  மட்டும் சொல்லலைன்னு கேட்கறவங்களுக்கு மட்டும் ரகசியமா ஒரு வார்த்தை.. நான் தூங்கிட்டேன் ஹி ஹி 

ஹீரோ கந்தேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். என் உயிர்த்தோழன் பாபு சாயல்ல தாடியோட இருக்கார்..பஞ்ச் டயலாக் எல்லாம் பேசாம அமைதியா வந்து டைரக்டர் சொன்ன படி கேட்டு பொடுவாட்ட ( அடக்கமா) நடிச்சிருக்கார்.. ஓக்கே பாஸ் மார்க்.. 

 அவருக்கு ஜோடியாக ஹாசிகா நடிக்கிறார்.இந்த பட நாயகி ஹாசிகா ஆந்திர வரவு.தென்னிந்திய அழகி பட்டம் "பெற்றவர் ".இவர் அறிமுகமான் படம் 'மலர் மேல் நிலை பள்ளி '.இந்த படம் இன்னும் வெளிவரவில்லை.(அநேகமா ஆக வாய்ப்பு கம்மி)

 நடிப்பு ஓக்கே .. மிதமான மேக்கப், அளவான புன்னகை. இவருக்கு ஆடை வடிவமைப்பு மற்றி பர்சனலா ஒண்ணு சொல்லிக்கறேன்.. எப்பவும் ஒரே மாதிரி ஆடைகளை யூஸ் பண்ணனும். சில காட்சிகள்ல நமீதா மாதிரி கும்முன்னு இருக்கீங்க.. பல காட்சிகள்ல கவுசல்யா மாதிரி, கவுதமி மாதிரி சப்புன்னு இருக்கீங்க.. புரிஞ்சுக்கிட்டு நடந்துக்கவும் .. 

படத்துல குறிப்பிட்டு சொல்ல வேற யாரும் இல்லை.. இயக்குநர் பாராட்ற அளவு பெருசா எதுவும் செய்யல.. ஒரு கனவா உயிர் வரையா பாட்டு மட்டும் கேட்கற மாதிரி இருக்கு.. 


http://www.indiancinemagallery.com/Gallery2/d/767203-1/Shankar+Oor+Rajapalayam+stills+_4_.jpg

 இயக்குநர் செய்த லாஜிக் மிஸ்டேக்ஸ் 

1.  ஹீரோயின் ஹீரோ கிட்டே ரோட்ல ஒதுக்குப்புறமா நின்னு பேசிட்டு இருக்கா.. அப்போ ஹீரோயினோட கிளாஸ் மேட் வர்றா.. உடனே  ஹீரோயின் பதறி “அய்யய்யோ அவ வந்தா காலேஜ் பூரா பரப்பிடுவா” அப்டிங்கறா.. இந்தக்கதை நடக்கறது 2012.. தானே? 1980ல தான் அப்படி பயந்தாங்க.. இப்போ எல்லாம் பாய் ஃபிரண்ட்ஸ் வெச்சிருக்கறது கவுரவமா நினைக்கறாங்க.. காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் எதிர் பாலிடம் பேசுவது சர்வ சாதாரணம்

2.  ஹீரோயின் காலேஜ் கிளாஸ் பிளாக் போர்டுல வருகை - 30 பேர்னு எழுதி இருக்கு .. ஆனா க்ளாஸ் ரூம்ல இந்தப்பக்கம் 3 வரிசை 4 சேர் =12 பேர்.. அந்த பக்கம் 3 வரிசை 4 சேர் =12 பேர்.. ஆக மொத்தம் 24 பேர் தான் இருக்காங்க.. 

3.  ஹீரோயின் வீட்ல யாரும் இல்லை,ஹீரோவை ராமாயணம் படிச்சுக்காட்ட ஹீரோயின் வரச்சொல்றா (ஆனா அவன் வந்து காமாயணம் தான் பண்றான்) வர்றவன் நேரா வாசல் வழியா வந்தா வேலை முடிஞ்சுது.. எதுக்கு கஷ்டப்பட்டு சுவர் ஏறிக்குதிச்சு திருட்டுத்தனமா வரனும்? 

4. ஊரை விட்டு ஓடிப்போற ஹீரோயின் ஒரு சின்ன பேக் வெச்சிருக்கா , அதுக்குள்ள அதிக பட்சம் 2 செட் டிரஸ் தான் போட முடியும்,.,. ஆனா ஹீரோயின் அம்மா பீரோவை திறந்து பார்த்து அய்யய்யோ பீரோ காலி, கப்போர்டு காலி எல்லாத்தையும் எடுத்துட்டு போய்ட்டான்னு சொல்றா.. அது எப்படி?

5. ஹீரோயின் அண்ணன் தன் தங்கை ஒருத்தன் கூட ஓடிட்டான்னு தெரிஞ்சதும் தங்கச்சியை கொலை பண்ணிடறான்.. அவ்ளவ் கோபம் இருக்கறவன் ஏன் தங்கச்சி காதலனை கொலை பண்ணலை? ஜஸ்ட் அடி மட்டும்? அவன் வந்து மறுபடி வில்லனை பழி வாங்குவான்னு தெரியாதா?

http://www.lateststills.com/wp-content/uploads/2011/06/shankar-oor-rajapalayam-movie-stills-_40_-300x300.jpg


யாம் பார்த்த மொக்கைகளில் இந்த மொக்கை போல் கடிதானது எங்கும் காணோம் அவ்வ்வ்வ்

 எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 35

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்

 சி.பி கமெண்ட் - எல்லா செண்ட்டர்லயும் 5 நாள் ஓடும் ஹி ஹி 

http://1.bp.blogspot.com/-Imz7dw1ScEU/TeWe2UmclUI/AAAAAAAACPw/yx0JHYWsRIU/s1600/24x12+2+%252B0.jpg

வாடகைத்தாய் - சிறுகதை ( மகளிர் தின ஸ்பெஷல்)


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhriyK9Dxt3fS_U3bZ0AmjJtHUhXuTAo4AvKF12fBYcnVuf5PqMScDVZ5Gl4d1n86swTAmRZguY8CrxX0yROekrlD0TO_EJJJo6Vj9R554xINgrNCpvdsOIT6D6ZIMVFush-hLprlHIuIC/s400/mom1.jpg 

நடுநிசி இரவில் வந்த அந்த அதீத வலியின் பொருட்டு உறக்கம் கெட்டு விழித்தாள் மலர். எப்படியான வலி இது.? முன் எப்போதும் இதுபோல் வந்ததில்லையே. இதன் பொருட்டு ஏதேனும் தீங்கு நேருமோ என மனமெல்லாம் படபடப்பு.

பாதிக்கும் மேல் குச்சிகள் வெளிவந்துவிட்ட அந்த கோரைப் பாயில் புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தவள் கைகளை தரையில் ஊன்றியபடி மெல்ல எழுந்தாள். இரட்டைக் குழந்தைகளை சுமந்துக் கொண்டிருந்த வயிறு அவளுக்கு முன்பாக நகர பெருமூச்சு வாங்கியபடி அறையின் மூலையில் தொங்கிக் கொண்டிருந்த முருகப்பெருமானின் புகைப்படத்தின் முன்பு வந்தாள்.

படத்தை பார்த்ததும் தானாகவே கைகள் தொழத் துவங்கியது. இனம் புரியாத கலக்கத்திற்கு விடை கூறும் விதமாய் கண்களை மூடி தியானித்து ஆழ்ந்தாள். கடவுளே, இந்த இரட்டை குழந்தைகளை நல்லபடி பெற்றுக் கொடுக்கும் வலிமையை எனக்குக் கொடு. ராதா தம்பதியிடம் நல்லபடி குழந்தைகளை ஒப்படைத்துவிட்டால் போதும். என் கடனெல்லாம் பறந்துவிடும். எந்த பாதிப்பும் இன்றி குழந்தைகளை காப்பாற்றப்பா முருகா என்பதாக இருந்தது அவளின் பிராத்தனை.

மறுநாள் விடிந்ததும் விடியாததுமாக சிவப்பு மாருதி காரில் வந்திறங்கினாள் ராதா. மொத்தமே பத்தடி கொண்ட அந்த ஓட்டு வீட்டின் நுழைவு வாயில் சிறுத்து இருக்கவே தலை குனிந்து உள்ளே நுழைந்தாள். கையோடு கொண்டு வந்த பழக்குவியல் அடங்கிய கவர்களை மலரின் கைகளில் திணித்தாள்.

“எதுக்கும்மா இவ்வளவு பழம்…”

என்ன மலர், மறந்துட்டியா உன் வயித்துல வளர்றது ஒன்னுல்ல இரண்டு குழந்தைங்க. அதை ஆரோக்கியமா நீ எனக்கு பெத்துக் கொடுக்கணுமில்ல. அதுக்குத்தான். ஆமாம், உன் பொண்ணு பார்கவி எங்க?

இங்கதாம்மா வெளியில விளையாடிட்டு இருந்தா. 

இதோ கூப்பிடுறேன்.

இன்னிக்கு டாக்டர் செக்கப் ஆச்சே. அதான் அழைச்சிட்டு போகலாம்னு கார் எடுத்துட்டு வந்தேன். அப்புறம் மாத்திரையெல்லாம் சரியா சாப்பிட்டியா… வாந்தி எப்படி இருக்கு?

5 மாசம் முழுசாயிடுச்சில்ல, வாந்தி நின்னுருச்சிம்மா.

சரி, ஏன் எதையோ பறிகொடுத்த மாதிரியே எப்பவும் மூஞ்சிய வெச்சிட்டிருக்க. ஓ… செத்துப் போன உன் புருஷனை நினைச்சிட்டிருக்கியா. அதையெல்லாம் மறந்துடு. நீ சந்தோஷமா இருந்தாதான் உன் வயித்துல இருக்குற என் குழந்தைங்க நல்லா இருப்பாங்க. புரிஞ்சுதா. சரி சரி கிளம்பு ஹாஸ்பிடலுக்கு நேரமாச்சு.


இதோ ஒரு நிமிஷம் உட்காருங்கம்மா. நான் ரெடியாயிடுறேன்.


 மெல்லிய பூக்கள் போட்ட சந்தன நிற சேலை, அதை ஒத்த ரவிக்கை என பாந்தமாய் மாறினாள். வகிடெடுத்த நீண்ட கூந்தலை பின்னி அடியில் முடிச்சு போட்டாள். கணவன் இறந்ததிலிருந்து பாலைவனமாய் மாறிவிட்ட நெற்றியில் ஒற்றை ஈச்சமரம் தென்பட்டது போல் சின்ன கருப்பு திலகம் வைத்துக் கொண்டாள் மலர் அதுவும் ராதா கொடுத்த தைரியத்தில்.

ஐந்து வயது பார்கவியையும் அள்ளி காரினுள் போட்டுக் கொண்டு மருத்துவமனை நோக்கி கிளம்பினார்கள். வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியம் குறித்து பயணிக்கையில் விலாவாரியாக சொல்லிக் கொண்டு வந்தாள் ராதா. கேட்டுக் கேட்டு சலித்துப் போன மலருக்கு மனம் பின்னோக்கி பயணப்பட்டதில் ஆச்சர்யமில்லை.

விபத்தொன்றில் இறந்துவிட்ட கணவனை நினைத்து நித்தம் அழுது கொண்டிருக்கையில் சதா பசியெடுத்து வயிறு தன் உரிமையை கோர வேறு வழியின்றி கைக்குழந்தையுடன் வீட்டு வேலைக்கென சென்ற வீடுதான் ராதாவினுடையது. திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை ராதாவிற்கு. நீர்க்கட்டிகளின் தொந்தரவினால் கர்ப்பப் பையையே அகற்றிவிட, வாடகைத்தாயின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள எத்தனிக்கையில் கட்டுமஸ்தான தேகம் கொண்ட மலரின் நினைவுகள் ராதாவை ஆக்கிரமித்தது.


ஆரம்பத்தில் மறுத்த மலர், குழந்தை பிறந்தவுடன் பணம் சுளையாக 1 லட்சம் கைக்கு கிடைக்கும் என்ற பிரம்மாஸ்திரத்திற்கு கட்டுப்பட்டாள். பணம் வந்தவுடன் வீட்டிற்கு வெளியேயே கவுரவமாக ஒரு பெட்டிக்கடை வைத்துக் கொள்ளலாம் என்பதாக இருந்தது அவள் எண்ணம்.


இதோ கருவை அவள் கருப்பைக்குள் செலுத்தி 5 மாதங்கள் பூர்த்தியாகிவிட்டது. அதிலும் இரட்டை கரு. வேலைக்காரியாக இருந்தபோது சதா சிடுசிடுத்த ராதா அவளின் குழந்தையை சுமக்கையில் காரியத்தில் கண்ணாக பாசமழை பொழிந்தாள். ராதாவின் குணம் தெரிந்து அவள் மேல் கொண்ட பரிதாபத்தின் பேரில் அத்தனையும் ஏற்றுக் கொண்டாள் மலர்.

 டக் என கார் நிற்கும் சத்தம் கேட்டு நிகழ்காலத்திற்குள் வந்தாள் மலர்.ஹாஸ்பிடலுக்குள் போய் செக்கப் முடிந்து மலரையும் மகளையும் வீட்டில் விட்டு கிளம்பிவிட்டாள் ராதா.


போனவள் போனவள்தான். சதா இரு தினங்களுக்கு ஒருதரம் மலரை வந்து பார்ப்பவள் ஏனோ இருபது நாட்களாக வரவேயில்லை. என்னவாக இருக்கும் என மனது ஓரத்தில் ஒரு நெருடல். மேலும் பத்து நாட்கள் கடந்து போகவே செக்கப் குறித்து ஞாபகப்படுத்த வீடு நோக்கி புறப்பட்டாள் மலர்.


சிவப்பு கார்ப்பெட் விரித்திருந்த அந்த ஹாலினுள் நுழைந்ததுமே ஏசியின் குளிர் மெல்ல உடம்பில் ஊடுருவியது. இவளைப் பார்த்ததுமே ராதா வீசிய அலட்சியப் பார்வையில் திக்கென்றது இவளுக்கு.


அம்மா, நாளைக்கு செக்கப். டாக்டரைப் பார்க்கணும்.அதான் உங்களுக்கு ஞாபகப்படுத்தலாம்னு வந்தேன்.


ம்…ம்… தெரியும். நானே வந்து உன்னை பார்க்கலாம்னு தான் இருந்தேன். உங்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல. இந்த குழந்தைங்க எனக்கு வேணாம்னு முடிவு பண்ணிட்டேன்.அதனால…


என்னம்மா சொல்றீங்க, குழந்தை வேணும்னு எவ்வளவு பிரியமா இருந்தீங்க. இப்பப் போயி…


உங்கிட்ட சொல்லித்தானே ஆகணும். என் புருஷனுக்கு இன்னொரு பொண்ணு கூட தொடர்பு இருக்கு. ஒரு மாசம் முன்னதான் இது எனக்கு தெரிய வந்துச்சு. என்னை ஏமாத்தின அவரோட வாழ எனக்கு விருப்பமில்ல. டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணியிருக்கேன். என் வாழ்க்கையே அர்த்தமில்லாம போனதுக்கப்புறம் இந்த குழந்தைங்க எதுக்கு. அதனால…


அதனால


டாக்டர்கிட்ட பேசிட்டேன். கருவ கிளீன் பண்ணிட போராடி சம்மதம் வாங்கிட்டேன்.


கேட்டதும் அடிவயிற்றில் அப்படியொரு கலக்கம்.


என்னம்மா விளையாடுறீங்களா, 

ஆக்ரோஷமாய் சீறி வந்து விழுந்தது வார்த்தைகள்.


நீங்க வேணும்னும்போது வளர விடவும் வேண்டாம்னா வெட்டி விடவும் இதென்ன தோட்டத்துல விளையற செடின்னு நினைச்சீங்களா. குழந்தைம்மா… அதுவும் இரண்டு உயிர். நீங்க ஐயாவ கூப்புடுங்க. நான் அவர்கிட்ட பேசிக்குறேன்.


உண்மை தெரிஞ்சு நான் சண்டை போட்டதும் அந்த மனுஷன் வீட்டுக்கே வர்றதில்ல. இங்க பார், ரொம்ப பேசாத. உனக்கு கஷ்டம்தான், நான் இல்லேன்னு சொல்லல. என் நிலைமையையும் கொஞ்சம் யோசிச்சு பார்.


முதல்ல, என்னைப் பத்தி நீங்க நினைச்சுப் பாருங்க. புருஷன் போனதுக்கப்புறம் வயித்த தள்ளிட்டு நான் நின்னப்ப என் நடத்தைய சந்தேகிச்சு பலர் பலவிதமா பேசுனாங்க. ஒரு உதவி செய்யற திருப்தியில அதையெல்லாம் பொறுத்துக்கிட்டேன். இப்ப, என் உயிருக்கே உலை வைக்கப் பாக்குறீங்களே.


அடி அசடே… இங்கப் பாரு. நான் டாக்டர் கிட்ட பல தடவை கன்சல்ட் பண்ணிட்டேன். கரு வளர்ச்சி சரியில்லைன்னா அதை பிரசவம் மாதிரி வலி உண்டாக்கி வெளியே எடுக்கிற முறையிலதான் உனக்கு செய்யப் போறாங்க. இது அபார்ஷன் மாதிரி இல்லை. அதனால உனக்கு எந்த பாதிப்பும் இல்லை. மூணு மாசம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டா போதுமாம்.

குறை பிரசவத்த உண்டாக்கி சே… முன்ன பின்ன குழந்தைய சுமந்திருந்தா தானே அதோட அருமை தெரியும்.

யேய், என்ன வாய் ரொம்ப நீளுது. உனக்கு அவ்வளவு அக்கறை இருந்தா நீயே பெத்து வளர்த்துக்கோயேன், பார்ப்போம்.

இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க. இனிமே இது ஈவு இரக்கம் இல்லாத உங்க குழந்தைங்க இல்ல, என் குழந்தைங்க.

இடியென பேசிவிட்டு மின்னலாய் வெளியேறினாள். ஆவேசத்தில் சொல்லிவிட்டு வந்தாலும் உள்ளுக்குள்உதறல்தான். இந்த வறுமையில் பார்கவியோட சேர்த்து 3 குழந்தைகளை எப்படி வளர்ப்பது. நாளுக்கு நாள்
வயிற்றில் ஏறும் சுமை ஒருபுறம், பிரசவத்திற்கு பின் எதிர் கொள்ளப் போகும் சவால் மறுபுறம் என அவளை அலைகழித்தது. அக்கம் பக்கத்தினர் அவளின் கதையைக் கேட்டு உச் கொட்டினர்.

பிரசவ தேதியும் வந்தது. ஒரு பெண், ஒரு ஆணென இரு குழந்தைகளை பெற்றெடுத்தாள் அரசு மருத்துவமனையில். ஆண்டவன் ஒரு கதவை மூடினால் மற்றொரு கதவை திறப்பான் என்பதற்கேற்ப அக்கம் பக்கத்தினர் உதவியில் நெக்குறுகி போனாள் மலர். குழந்தைகளைப் பார்த்ததும் புது வைராக்யம் மனதில் ஊற்றெடுத்தது.

ராதா தம்பதியரின் பேரில் வழக்கு தொடரலாம் என சிலர் அறிவுறுத்தியும் எங்கே குழந்தைகளை பிரிய வேண்டிவருமோ என்ற கலக்கத்தில் மறுத்துவிட்டாள்.

மொட்டுக்கள் இரண்டும் தவழ்ந்து முட்டிப்போட தொடங்கியிருந்தன. பார்கவியும் தம்பி தங்கை என எப்போதும் அவர்களுடனேயான உலகமாகிப் போனாள்.

மழை வலுத்திருந்த ஒரு முன்னிரவு நேரத்தில் பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர் ராதாவும் அவளது கணவன் மோகனும்.

தவழ்ந்துக் கொண்டிருந்த குழந்தைகளை ஆசையாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சேலை தீப்பற்றிக் கொண்டது போல் எரிச்சல் பரவியது மலருக்கு, அவர்களைப் பார்த்ததும்.

மலர், என்னை தப்பா நினைச்சிக்காத. உனக்கு நான் பண்ணதெல்லாம் பெரிய தப்புதான். இப்ப என் வீட்டுக்காரரு திருந்தி வந்துட்டாரு. நான் பேசினத மனசுல வெச்சுக்காம என் குழந்தைங்கள என்கிட்ட கொடுத்துடு. முன்ன பேசின ஒரு லட்சத்துக்கு இப்ப 2 லட்சமா வேணா கொடுத்துடுறேன்.

பணத்தை வீசி பாசத்தை விலை பேச வந்திருந்தவர்களின் கண்களை கூர்மையாக நோக்கினாள். அவளின் பார்வை தகிப்பை தாங்க இயலவில்லை இருவராலும்.

ரெட்டைக் குழந்தைகளை பெற்று நாதியின்றி இருந்தபோது இல்லாத மனிதாபிமானம் தற்போது சுயநலத்தின் பேரில் வந்ததா என்பதாய் இருந்தது அவள் கண்கள் கேட்ட கேள்வி.

வண்டி வந்த சத்தம் கேட்டு என்னவோ ஏதோ என உதவிக்கு வந்தனர் அக்கம் பக்கத்தினர். கூட்டத்தைப் பார்த்ததும் மருண்டனர் தம்பதி.

“ஆம்பளைப் பிள்ளைய வேணும்னா நீயே வெச்சுக்க பொம்பள பிள்ளைய மட்டுமாவது எங்களுக்கு கொடுத்துடு” மெல்ல கசிந்து வெளிவந்தது ராதாவிடம் வார்த்தைகள்.

எச்சில் கூட்டி ‘தூ’ என காறி உமிழ்ந்தாள் அவர்களைப் பார்த்து.

தலையை தொங்கப் போட்டபடி வெளியேறிய அவர்களைக் கண்டு பொக்கைவாய் காட்டி சிரித்தது மழலைகள் இரண்டும்.

SINBAD AND THE MINOTAUR - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyUbhd840sGT5VgvuWTTbnzz_-402d0vudeulYzDX2SekEc47QSa6woAXskzGSgJoDyyFHKnHfzkHp13N-Rkl84TLr2yS0PZhiaUx9IH-0hunCQ2IlJWNWjpS4mA_DbdTpXtBrldYkkB1c/s1600/sinbad-and-the-minotaur.jpg 

தினத்தந்தில  நான் குழந்தையா இருந்தப்ப கன்னித்தீவு கதை வந்தது வருது இன்னும் வந்துட்டே இருக்கும் போல.. முடிவே கிடையாதா? அந்த சிந்துபாத் மூசா அப்படிங்கற அரக்கன் கிட்டே இருந்து லைலாங்கற ஃபிகரை காப்பாத்த செய்யும் சாகசப்பயணம் தான் கதை.. ஆனா இந்தப்படக்கதை வேற .. ரசிகர்களை கவர்றதுக்காக டைட்டிலை மம்மி அண்ட் சிந்துபாத்னு வெச்சிருக்காங்க தமிழ் டப்பிங்க் போஸ்டர்ல .. ஆனா கடைசி வரை மம்மியோ, ஜெவோ யாரும் படத்துல வரவே இல்லை.. 

எல்லா அட்வென்ச்சர்ல வர்ற புளிச்சுப்போன அதே கதைதான். ஒரு தீவுல தங்கப்புதையல் இருக்கு.. அதை தேடி ஹீரோ போறான்.. பார்க்கற நமக்கும், போற அவனுக்கும் போர் அடிக்கக்கூடாதுங்கறதுக்காக ஒண்ணுக்கு 2 ஹீரோயின்.. அவன் சந்திக்கற துக்கங்கள் , துயரங்கள் , சாகசங்கள் தான் கதை.. ஹீரோ வழில 2 ஜிகிடிகளை சந்திக்கறான்.. அது கணக்குல வராது .. 

படத்தை பத்தி சொல்றதுக்கு முன்னால ஒரு செம காமெடி சீன்  சொல்றேன்.. ஹீரோ ஒரு மன்னரோட அரண்மனைக்கு திருட்டுத்தனமா போறான்.. புதையல் பத்தின ரகசியங்கள் அடங்கிய மேப்.. அங்கே அப்போதான் முதன் முதலா ஒரு ஜிகிடியை பார்க்கறான்.. அந்த பாப்பாவும் அப்போதான் ஹீரோவை பார்க்குது.. உடனே “நீ  என்னையும் உன் கூட கூட்டிட்டு போயிடு”ங்குது.. அவ்வ்வ்வ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifaEACGFYm4omjFd1RifgOMO1FyrtI6UCtPJns-P1-8u-we4KhLVLRs2QkWvf8uECdvVdn9zq6DFCY3-rTtVadeQnaDZ384u3f_vtjK8BdAQTe_-Qcrk7sXE2-TUoxUt0JX8MUmt06EjiV/s1600/Sinbad+kissy+face+2.jpg

அதுக்கு டைரக்டர் ஒரு லாஜிக் வெச்சிருக்கார்.. அதாவது ராஜா ஒரு கொடுமைக்காரன்.. பாப்பாவை ரொம்ப கொடுமைப்படுத்தி இருக்கான்.. அதனால எப்படியாவது தப்பிக்க பாப்பா வெயிட் பண்ணி இருக்கு.. கிடைச்ச ஃபிகரை மடக்கி போடு பாலிசி பிரகாரம் ஹீரோவை பார்த்ததும் கிளி தொத்திக்கிச்சுனு சொல்றார்.. ம் ம் 

கதைப்படி 1000 வருஷங்களூக்கு முன்னால மகாராஜா  ஒரு தங்க முத்திரை உள்ள தங்கத்தலையை எங்கேயோ புதைச்சு வெச்சுட்டு அது பற்றின குறிப்பை எழுதி வைக்கறாராம்.. அந்த குறிப்பு 1000 வருஷமா எதுவும் ஆகாம ஃபிரிட்ஜ்ல வெச்ச தக்காளி மாதிரி ஃபிரஸா இருக்காம்.. அட போங்கப்பா.. காது குத்தி இருக்கு எங்களுக்கு..

ஹீரோ ஆள் பார்க்க ஆளவந்தான் மொட்டை கமல் மாதிரி பாடியோடதான் இருக்காரு.. ஆனா அவர் முகம் ராமராஜன் முகம் மாதிரி எந்த விதமான உணர்சியையும் காட்டாம தேமேன்னு இருக்கு.. அட்லீஸ்ட் 2 ஜிகிடிங்க கூட ஏதாவது ரொமான்ஸ் பண்றாரா?ன்னா அதுவும் இல்லை.. சிடு சிடுன்னு முகத்தை வெச்சுட்டு இருக்காரு.. நாங்க எல்லாம் 20 நிமிஷம் டவுன் பஸ்ல போற குட்டி பயணத்துலயே குட்டி கூட  ஏ 4 ஷீட்ல 23 பக்கம் பேசி முடிச்சுட்டு அடிஷனல் சீட்க்காக தேடுவோம்.. இவர் என்னடான்னா யாருமே இல்லாத பாலை வனத்துல அவ்ளவ் சின்சியரா வந்த வேலை என்னவோ அதை மட்டும் பார்க்கறாரு..  

 http://s3.imgimg.de/uploads/encounterssiundemi1080psample2722de11mkv201105101230342722de11jpg.jpg

 மனதில் நின்ற வசனங்கள்

1.  ஒரு வாரத்துக்குத்தேவையான உணவு கிடைச்சுடுச்சு டோய்.. 

இதுவா? இது ஜஸ்ட்  ஒரு வேளைக்குத்தான் பத்தும்

2.  பொண்ணு பார்க்கறதுக்கு நல்லா தான் இருக்கு.. ஆனா சமையலுக்கு ஒத்து வருமா?ன்னு தெரியலையே? ( மையலுக்காவது ஒத்துவருதா?ன்னு பாருங்க )

3.  இந்த சுந்தரி வந்த பிறகு உன் சுறுசுறுப்பு கூடி இருக்கே எப்படி?

4. ஹீரோ - இந்த தீவுல ஸ்பெஷல் என்ன ?

 ஹீரோயின் ( லைக் கவுதமி,கவுசல்யா டைப்) பார்க்க பெருசா எதுவும் இல்லை 

ஹீரோ - ஹூம்... பார்த்தாலே தெரியுது.. எல்லாம் சிறுசுதான்

5. ஜெயிச்சதுக்காக இந்த வெற்றியை கொண்டாடலை.. உயிரை தியாகம் செஞ்சவங்களுக்காக 

6. புதையல் கிடைச்சதும் ராஜா மாதிரி வாழனும்..

உன்னை யார் ராஜாவா ஏத்துப்பாங்க 

 ஐ மீன் ராஜா மாதிரின்னா ராஜாவா இல்லை.. ராஜா மாதிரி இஷ்டப்படி...

என்னமோ செஞ்சு தொலை

அப்போ ஏதாவது தொலையறப்ப  உங்களை கூப்பிடறேன்

 http://www.contactmusic.com/pics/l/cystic%20fibrosis%20%20310507/cystic_fibrosis_024_wenn1345006.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள், லாஜிக் சொதப்பல்கள், யார் எல்லாம் இந்தபப்டம் பார்க்கலாம் என்பதற்கு எல்லாம் இடமே இல்லை.. ஏன்னா அந்த அலவு இந்தப்படம் ஒர்த் இல்லை.. சுருக்கமா சொன்னா இது அதுக்கு சரிப்பட்டு வராது.. 

 இந்த டப்பா படத்தை ஈரோடு ராயல் தியேட்டர்ல பார்த்தேன். 

 ஒளிப்பதிவு, எடிட்டிங்க், இசை  போன்ற அனைத்து தொழில் நுட்பங்களும் சராசரிக்கு கீழே

சி.பி கமெண்ட் - எஸ் ஆகிடுங்க


ஜிகிடி -37.. டகால்டி -17 - ஜெனரெஷன் “கேப்”மாரி மாறி லவ் ஸ்டோரி காமெடி கும்மி

pic.twitter.com/u7DZdlFEa
மேலே உள்ள அனைத்து நிலை பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்

1. ஒரு பெண்ணுக்கு அளிக்கப்படும் கல்வி ஒரு குடும்பத்துக்கே அளிக்கப்படும் முன்னேற்றம்.. பெண்ணின் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம்

 கள்ளக்காதலுக்கு கண் இல்லை: 17 வயது மாணவனுடன் 37 வயது ஆசிரியை ஓட்டம்- போலீசார் தனிப்படை அமைத்து தேடுகிறார்கள்

சி.பி - போலீஸ்ங்களை கடுப்படிக்கறதுக்குன்னே இந்த மாதிரி கேஸ்ங்களும், கேஸ்-ம் மாட்டும் போல.. அவ்வ்வ்

பள்ளியில்  ஆசிரியை கொலை... ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவர்கள் கைது... என பரபரப்பு அடங்கும் முன்னரே தன்னிடம் பாடம் கற்ற மாணவன் ஒருவனை ஆசிரியை ஒருவர் காதலனாக மாற்றிய சம்பவம் சென்னை சவுகார்பேட்டை பகுதியில் நடந்துள்ளது. 

சி.பி - அதென்ன சவுகார் பேட்டையா? கில்மா பேடையா? அடங்கொய்யால.. தாமினி டீச்சர் படத்துல ஐஸ்வர்யா ராய் கூட அப்படி பண்ணலையே?



சவுகார்பேட்டை பி.கே.ஆர். கார்டன் பகுதியில் வசித்து வருபவர் சுரேந்திரகுமார் (வயது 17) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தான்.

இதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிபவர் சுப்ரியா. (பெயர் மாற்றம்) 37 வயதான இவருக்கு திருமணமாகி 8 வயதில் மகன் இருக்கிறான். ஆசிரியை சுப்ரியா, மாணவன் சுரேந்திரகுமாரிடம் நெருங்கி பழகினார். 

சி.பி -கல்விப்பாடம் சொல்லித்தரச்சொன்னா டீச்சர் கலவிப்பாடம் சொல்லிக்குடுத்துட்டாங்க போல அடங்கோ.. 

சிக்கிம் அருகே நேற்று நடந்த தீ விபத்து ( நெருப்பில்லாம புகையாது)

பாடம் கற்றுக் கொடுக்கும் ஆர்வத்தில் ஆசிரியை இப்படி நடந்து கொள்வதாக சுரேந்திரா நினைத்தான். ஆனால் நாளடைவில் சுப்ரியா அவனுக்கு காதல் பாடத்தை கற்றுக் கொடுத்தார். இதனால் குரு-சிஷ்யன் உறவு மாறி 2 பேரும் காதல் வானில் சிறகடிக்க தொடங்கினர். 

சி.பி - சாரி. ஃபார் த இண்ட்ரப்ஷன்.. கள்ளக்காதல் வானில்... 


பள்ளியில் காதலை கற்றுக் கொடுத்தது மட்டுமின்றி, மாலையில் டியூசன் என்ற பெயரிலும் சுப்ரியா, சுரேந்திராவுக்கு அறிவியலை கற்றுக் கொடுத்துள்ளார். செல்போன் மூலமாக ஆபாச எஸ்.எம்.எஸ். மற்றும் படங்களையும் சுப்ரியா அனுப்பினார். 

சி.பி - யோவ்.. அது ஒண்ணும் ஆபாச எஸ் எம் எஸ் கிடையாது அதுதான் கில்மா ஜொள்மா மெசேஜ் ஹி ஹி 


ஒருநாள் சுரேந்திரா வீட்டில் இருந்தபோது சுப்ரியா அனுப்பிய ஆபாச படம் அவனது செல்போனில் வந்து விழுந்தது. இதனை சுரேந்திராவின் பெற்றோர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

சி.பி - நல்லவேளை அதை அவனோட பெற்றோர் பார்த்தாங்க.. வேலைக்காரி அல்லது பக்கத்து வீட்டு ஆண்ட்டி பார்த்திருந்தா அதை வெச்சு அந்தப்பையன் இரண்டாம் உலகம் படத்தை செல்வராகவனுக்கு முன்னமே ஸ்டார்ட் பண்ணி இருப்பான்.. அடங்கோ


இதுகுறித்து கடந்த மாதம் யானைக்கவுனி போலீசில் புகார் செய்தனர். பள்ளியிலும் முறையிட்டனர். இதன்பிறகு ஆசிரியை மற்றும் மாணவனின் நலன் கருதி புகார் வாபஸ் பெறப்பட்டது. 

சி.பி - டீச்சரோட அட்ரஸ், செல் ஃபொன் நெம்பர் எல்லாம் அந்த ஸ்டேஷன் எஸ் ஐ வாங்கி வெச்சிருப்பாரே? ஹி ஹி அதாவது பிற்காலத்துல எச்சரிக்க அவ்வ்வ்  


ஆசிரியை சுப்ரியாவை அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி மாலையில் வீட்டை விட்டு சென்ற சுரேந்திரா பின்னர் வீடு திரும்பவில்லை. அப்பகுதி முழுவதும் தேடிப்பார்த்தும் அவனை கண்டுபிடிக்க முடியாததால் யானைக்கவுனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடினர். 

சி.பி - சொர்க்கத்தை காட்டு காட்டுன்னு காட்டுன சுப்ரியாவுக்கு சுக்ரியா (நன்றி) சொல்ல எங்காவது கூட்டிட்டு போய் இருப்பான்.. 


வியாசர்பாடியில் உள்ள ஆசிரியை சுப்ரியாவின் வீட்டுக்கு உடனடியாக தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் அங்கு அவரையும் காணவில்லை. சுப்ரியாவும், சுரேந்திராவும் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. 2 பேரும் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்களை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர். 

சி.பி - போலீஸ் வலை விரிச்சிருக்கா? அந்த டீச்சர்க்கா? 


சுப்ரியாவின் செல்போனும், மாணவன் சுரேந்திராவின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு தொய்வு ஏற்பட்டுள்ளது. 

சி.பி - செல்ஃபோனை ஆஃப் பண்ணிட்டு கில்மாவை ஆன் பண்ணிட்டாங்க போல.. 


யானைக்கவுனி இன்ஸ்பெக்டர் ராஜசேகர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளார். மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை சுப்ரியா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். மாணவனை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்துவரும் நேரத்தில் ஆசிரியை சிக்கினால் அவரை கடத்தல் வழக்கில் (மாணவர் மைனர் என்பதால்) கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

சி.பி - ராஜசேகர் 5 எழுத்து , சுப்ரியா 5 எழுத்து,சுரேந்திரா 5 எழுத்து ஹி ஹி ( சரி விடு.. புனை பெயர் தானே?)

காதலுக்கு கண் இல்லை என்பார்கள் ஆனால் இன்று.. கள்ளக்காதலுக்கும் கண் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. குருவாக போற்றி மதிக்கப்படவேண்டிய ஆசிரியை ஒருவரே, தனது பள்ளியில் படிக்கும் 11-வது வகுப்பு மாணவனை மயக்கி காதல் வலையில் வீழ்த்திய சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சி.பி - ஈரோடு மாவட்டத்துல நானும் தான் படிச்சேன், டியூஷன் போனேன் ஹூம் , அப்படி ஒரு சம்பவம் நடக்கலை.. 

ஐ நா சபைல குஷ்பூ பேசுனா இன்னா பேசுவாரு? ஹி ஹி ஹி

pic.twitter.com/pMnGPPdsa
அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின நல் வாழ்த்துக்கள்.. இந்த நன்னாளில் அனைத்து மகளிரும் ஆண்களுக்கு சம உரிமை கொடுத்து , அவர்களை மதிக்க முயற்சிக்கவும் ஹி ஹி


 
1.என்னது? என் பொண்ணை 5 வருஷமா லவ் பண்றியா? தப்பு தண்டா ஏதும் நடக்கலையே? 

மாமா, தண்டான்னா என்ன? அது நடக்கலை

---------------------

2. என் சம்சாரம் டெயிலி லெக் பீஸ் சாப்பிடறா....


 ஓஹோ பீஸ்ஃபுல் லைஃப் ஒயிஃப்!!!

-------------------------

3. எங்க காதலுக்கு ஆயுசு கெட்டி! ஆரோக்யமான காதல்.

எப்படி?

 எப்படின்னா நான் டெயிலி 3 டம்ளர் ஹார்லிக்ஸ், அவ 8 டம்ளர் பூஸ்ட் குடிக்கறோம் ஹி ஹி

----------------------------------

4. ரியாஸ் - இனிமே நீங்க 2 தோசை தான் சாப்பிடனும்னு சொன்னேனே? ஃபாலோ பண்றீங்களா?  


எஸ் டாக்டர். ஆனா ஒரு தோசைக்கு 4 கரண்டி மாவு ஊத்திக்கறேன்

-----------------------------------

5. நடிகை - நான் டைரக்டர் ஆர்ட்டிஸ்ட்..ஷூட்டிங்க் ஸ்பாட்டுக்கு வந்ததும் என்னை டைரக்டர்கிட்டே ஒப்படைச்சுடுவேன்#


 அடடா! நிறைய பேர் வேடிக்கை பார்ப்பாங்களே?

---------------------

6. முகத்துக்கு நேராக ஒன்று, முதுகுக்கு பின்னால் ஒன்று என்று பேசி பழக்கம் இல்லாதவர்கள் ஆண்கள்

-------------------------------------

7. தான் உண்டு தன் வேலை உண்டு என்று ஆண் தேமே என்று இருப்பான்.. அக்கம்பக்கம் வீடுகள் சென்று புறணி பேசுவதில் வல்லமை படைத்தவள் பெண்


-----------------------------------

8. மாமியார்- மருமகள் சண்டை இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணி விடலாம், ஆனால் மாமனார்- மாப்பிள்ளை சண்டை ஊருக்கு ஒன்று இருந்தாலே அதிகம்

---------------------------------

9.தன் மனசுக்கு பிடிக்காதவங்க கிட்டே முகம் கொடுத்து பேசவே ஆண் யோசிப்பான், ஆனால் எல்லோரிடமும் சிரித்துப்பேசி கழுத்தை அறுப்பவள் பெண்

--------------------------------

10. கல்யாணம் பண்ணிப்பார்,வீட்டைக்கட்டிப்பார்-பழமொழி,கல்யாணம் பண்ணினால் BAR ,,வீட்டைக்கட்டினால் வீட்டுக்குள்ளேயே BAR -புதுமொழி


-----------------------



11. ஆண்களால் தியாகம் செய்ய முடியுதோ இல்லையோ  துரோகம் செய்ய மாட்டார்கள்


--------------------------------------

12. உலகின் முதல் பெண்ணே சொல் பேச்சு கேட்காதவள் தான். ஆப்பிளை சாப்பிடாதேன்னு கடவுளே சொல்லியும் கேட்கலையே?

--------------------------------

13. டியர்.. பீச்ல எதுக்காக தேசிய கீதம் பாடறே? 


புரியலீங்களா? நம்ம காதலுக்கு இன்னைக்கு ஜன கன மன

----------------------------------

14. கு க சிம்பல் முக்கோணத்துக்கு அர்த்தம் என்ன? 

1 சந்தோஷமா இருந்துக்கோ 2.சாக்கிரதையா இருந்துக்கோ 3.சம்சாரம் கூட மட்டும் இரு


---------------------------------

15. கர்நாடக சட்டசபையில் மேலும் 15 எம்.எல்.ஏ.க்கள் ஆபாச படம் பார்த்தனர் #  க்ரூப் ஸ்டடி பண்றாங்க போல 


--------------------------------
16. காவ்யா,இவன் தான் உன் பாய் ஃபிரண்டா?

 ஆமாம் மேடம்,அவன் என் சோபா ஃபிரண்ட், இவன் என் கட்டில் ஃபிரண்ட்,


-----------------------------

17. நான் மறுபடியும் அதிமுகவில் சேரப் போகிறேன்-. எஸ்.வி.சேகர் # டைமிங்க் காமெடில மட்டும் இல்லை, டைமிங்க் பாலிடிக்ஸ்லயும் கலக்கறீங்களே!


---------------------------------

18. 2050 ஆம் ஆண்டு கு க வாசகம் - நாமே இருவர்.. நமக்கு எதற்கு இன்னும் ஒருவர்?


---------------------------------


19. ஐ. நா. சபையில் பேசுகிறார் நடிகை குஷ்பு #  இங்கே கூடி இருக்கும் ”கணவான்”களே! பிரபுக்களே!அல்லாருக்கும் வண்க்கம்


--------------------------


20. சார், எனக்கு தமிழ் தோடா தோடா தான் மாலும்.. நான் ட்வீட்டலாமா?



 போப்பா தம்பி.. முதல்ல தமிழ் ல எம் ஏ முடி, அதுக்கப்புறமா டைப் அடி


--------------------

pic.twitter.com/Aru8PW9k

பெண்கள் தின ஸ்பெசல் கூந்தல் அலங்காரம்.. ஒரிஜினல் கூந்தல் உள்ளவர்கள் வீட்டிலேயே முயற்சிக்கவும்.. வழக்கம் போல் பெரும்பான்மையினர் சவுரி என்பவர்கள் அழகு நிலையம் சென்று சவுரியை கொடுத்து சென்றால் 2 மணி நேரத்தில் ரெடி செய்து தருவார்கள் ஹி ஹி