Wednesday, December 21, 2011

ஈரோடு பதிவர் சந்திப்பு - வெளிவந்த பல பதிவுலக ரகசியங்கள் பாகம் 2

தொகுத்து வழங்குவது ஈரோடு  கதிர் ,, தாமோதரன் ,திரையில் ஜாக்கி


பதிவர்கள் எல்லாரும் வந்து சேர்ந்தாச்சு.. யார் யார் என்ன பேரு, பிளாக் பேரு என்ன? அப்டின்னு ஈசியா அடையாளம் கண்டுக்க ஒரு ஐடியா பண்ணி இருந்தாங்க .அதாவது ரிசப்ஷன்லயே ஒரு ஐ டி கார்டு ,திடீர் உப்புமா, திடீர் கிச்சடி மாதிரி உடனடி ஐ டி கார்டு, அவங்கவங்க பேர் , பிளாக் நேம் எழுதி அதை சட்டைல மாட்டிக்கனும்.. எல்லாரும் மாட்டிக்கிட்டாங்க. ஆனா பாருங்க எனக்கு பின்னூசி குத்த தெரில ஹி ஹி , இதை வெளீல சொன்னாலும் கேவலம், உள்ள சொன்னாலும் கேவலம்.. 

அப்புறம் உள்ளே போய் எல்லார் சட்டை பாக்கெட்டையும் பார்க்க வேண்டியது , அவங்க கிட்டே வாலண்ட்டரியா போய் அறிமுகம் பண்ண வேண்டியது..ஃபோட்டோ எடுத்துக்க வேண்டியது. ( ஆரியக்கூத்தாடினாலும், திராவிட விஷால் கூத்தாடினாலும் காரியத்துல கண்னா இருடான்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க ஹி ஹி )


 ஆரூர்மூனா செந்தில், சங்கவி சதீஷ்,மெட்ராஸ்பவன் சிவக்குமார்,ஃபிலாசபி பிரபாகரன்,மீ, லக்கிலுக் யுவகிருஷ்ணா, நாய் நக்ஸ் நக்கீரன்

ஆனா லேடீஸ் பெரும்பாலும் பேட்ஜ் குத்திக்கலை. ஹேண்ட் பேக்லயே வெச்சுக்கிட்டாங்க, அதனால பெரும்பாலான பெண் பதிவர்களை அடையாளம் காண முடியாம போச்சு.. இதுல ஒரு உளவியல் ரீதியான சிக்கலும் இருக்கு..210 ஆண்கள் இருக்கற கூட்டத்துல 15 பெண் பதிவர்கள் இருப்பதால் அவங்களுக்கு ஒரு அன் ஈசி இருக்கும். அவங்களா போய் யார் கிட்டயும் அறிமுகம் பண்ணிக்க முடியாது, ஆண் பதிவர்கள் வாலண்ட்ரியா போய் அவங்க கிட்டே அறிமுகம் செஞ்சு பேசுனா மண்டபத்துல அது தனியா தெரியும்...பசங்க கிண்டல் பண்ணுவாங்க, பார்றா பொண்ணுங்க கிட்டே போய் வழியறான்னு.. அதனால இரு பிரிவும் தனித்தனியா  இருந்தாங்க, ஏற்கனவே அறிமுகம் ஆனவங்க மட்டும் கலந்து பேசிக்கிட்டாங்க, மத்தவங்க வேடிக்கை பார்த்துட்டு இருந்தாங்க..




 இது எதிர்காலத்துல நடக்கற பதிவர் சந்திப்புல தவிர்க்கப்படனும்.. பதிவர் சந்திப்பே எதுக்குன்னா இதுவரை எழுத்தில் மட்டுமே அடையாளம் காணப்பட்டவர்கள் நேரில் உருவத்தை, அவர்கள் பழகும் விதத்தை காணூம் வாய்ப்பாக அதை பயன்படுத்தவே...

அப்புறம் கண்ணில் தென்பட்ட உறுத்தலான இன்னொரு விஷயம்.. பிரபல பதிவர்கள் எல்லாம் ஒரு குரூப், மீடியம் பதிவர்கள் இன்னொரு குரூப், அதிகம் எழுதாத பதிவர்கள் ஒரு குரூப் என பதிவர்கள் 3 பிரிவாக தனித்தனியே இருந்தது வருந்தத்தக்கது..

சாதனை புரிந்த பதிவர்கள் என 15 பேருக்கு விருது குடுத்தாங்க, அவர்கள் ஆரம்பத்துலயே மேடைக்கு அழைக்கப்பட்டு  கவுரவிக்கப்பட்டாங்க.. சிறப்பு அழைப்பாளர்கள், விருந்தினர்கள் பேசியதும், விருது வழங்கப்பட்டதும் அவங்க எல்லாம் கிளம்பிட்டாங்க.. அதற்குப்பிறகு மீதி இருப்பவர்கள் அறிமுகம் நடந்தது.. இது பலருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கும்.


 வீடு சுரேஷ்குமார், மீ


இவங்க பரிசு வாங்குவதை பார்க்க, இவங்களுக்கு கை தட்டவா நாங்க வந்தோம் என பலர் புலம்பியதை காண முடிந்தது. ஒரு விழா நடத்துவது  எவ்வளவு சிரமம், அதில் யார் மனதையும் புண் படுத்தாமல் எப்படி நடத்துவது, வந்திருந்தவர்களை எப்படி நடத்துவது என்று நமக்கெல்லாம் ஒரு பெரிய பாடமாக இந்த நிகழ்ச்சி இருந்தது..

எந்த ஒரு நிகழ்வில் இருந்தும் பாசிட்டிவ் பார்வை வேண்டும் என்ற பெரியவர்கள் கூற்றுக்கு ஏற்ப இந்த நிகழ்ச்சியில் இருந்து எப்படி எல்லாம் விழா ஏற்பாடு இருக்க வேண்டும் என்னும் பாடத்தை கற்றுக்கொண்டேன்.. இது யாரையும் குறை சொல்லும் நோக்கம் அல்ல.. நிறை  குறைகளை அலசும் ஒரு முயற்சி அவ்வளவுதான்..

விழாவில் தொகுப்பாளர்களாக 3 பேர் மிக பிரமாதமாக விழாவை தொகுத்து வழங்கினார்கள்.. அப்புறம் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம்.. சாதனையாளர்கள் 15 பேரின் பயோ டேட்டா , அவர்கள் வலைப்பூ பற்றிய விபரங்கள் அனைத்தும் மேடையிலேயே ஒரு திரை கட்டி அட்டகாசமாக தொகுத்து அளித்தார்கள்.அந்த அழகிய பணியை அகல் விளக்கு ராஜா ஏற்றுக்கொண்டார்.. முதலில் உண்மைத்தமிழன்



ஜாக்கிசேகர், உண்மைத்தமிழன்

1. உண்மைத்தமிழன்  - இவரைப்பற்றி சொல்லவே வேணாம், டைரக்டர் எழுதுன திரைக்கதையை விட சினிமா விமர்சனத்தில் இவர் எழுதும் கதையின் நீளம் அதிகமா இருக்கும், கடும் உழைப்பாளி.. பிரம்மச்சாரி .. தமிழன் எக்ஸ்பிரஸ் உட்பட பல பத்திரிக்கைகளில் பணி ஆற்றியவர், முருக பக்தர்..இயற்பெயர் சரவணன்,4 வருடங்களாக வலைத்தளம் இயக்கி  வருகிறார்,சென்னையை சார்ந்தவர்

2. ஜாக்கிசேகர் - வலை உலகின் சூப்பர் ஸ்டார், இவர் பற்றி தாக்கி எழுதவே பல வலைத்தளங்கள் இயங்கி வருகிறது என்றாலும் காய்த்த மரமே கல்லடி படும் என்பதால் அதை பற்றிக்கவலைப்படாமல் 4 வருடங்களாக சினிமா விமர்சனம், சமூக விழிப்புணர்வுக்கட்டுரைகள் எழுதி வருகிறார்.. 4 குறும்படங்கள் இயக்கி உள்ளார்.. உதவி ஒளிப்பதிவாளராக திரைத்துறையில் பணி ஆற்றி வருகிறார்.விஜய் டி வி யின் நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேறு உள்ளார், அதில் பல விவாதங்கள் புரிந்தவர்,4 வருடங்களாக வலைத்தளம் இயக்கி  வருகிறார்,சென்னையை சார்ந்தவர், இவர் பெயர் வாசிக்கப்பட்டதும் பலத்த கரகோஷம் ஹாலில்



3. ஜீவ்ஸ் எனும் அய்யப்பன் -  பிட்ஸ் இன் ஃபோட்டோகிராஃபி (PIT) எனும் வலைத்தளம் நடத்துகிறார்.. புகைப்படங்களூக்கான தளம் அது . கல்கி , அமுத சுரபி, வடக்கு வாசல் போன்ற இதழ்களீல் கட்டுரை எழுதி இருக்கிறார். 4 வருடங்களாக வலைத்தளம் இயக்கி  வருகிறார்,பெங்களூர்வாசி


 அதிஷா , ஸ்டாலின் குணசேகரன்

4. அதிஷா எனும் வினோத்குமார் - புதிய தலைமுறை தலைமை நிருபர்.. மிகச்சிறந்த  எள்ளல் நடைக்கு சொந்தக்காரர். ட்விட்டர், பஸ், ஃபேஸ்புக் என எல்லாவற்றிலும் இவரது படைப்புகள் பிரபலம்.. சென்னையை சார்ந்தவர்


 தேனம்மை லட்சுமணன்,

5. தேனம்மை லட்சுமணன் - இவர் படைப்பு வராத புக்ஸே இல்லை.. இவர் பிளாக் திறந்தாலே அந்த புக்ல வந்த படைப்பு, இந்த புக்ல வந்த கதை என கலக்கலாக இருக்கும்.. பெண் பதிவர்களில் அதிகமாக எழுதுபவர். சென்னையை சார்ந்தவர்.






6. வெய்யிலான் எனும் ஸ்ரீகாந்த் ரமேஷ் - விருதுநகர் வாசி, பணி திருப்பூர்.. 4வருடங்களாக வலைப்பூ வைத்துள்ளார், இவர் எனகு அறிமுகம் இல்லாதவர்.. திருப்பூரில் சேர்தளம் எனும் அமைப்பை சார்ந்தவர் போல.. ஒரு பெரிய குரூப்பே ஒரே மாதிரி வெள்ளை நிற டி சர்ட்டில் வந்து மண்டபத்தில் ஒரு கலகலப்பை ஏற்படுத்தினார்கள்.





7. வலைச்சரம் சீனா - வலைத்தளம் வந்த புதிதில் எல்லா பிளாக்குக்கும் கமெண்ட்ஸ் போட்டு பின்னூட்ட பிதாமகர் பட்டம் பெற்றவர்.. வலைச்சரத்தின் மூலம் பல புதியவர்களை அடையாளம் காட்டியவர்..




8. கே ஆர் பி செந்தில்  - இவர் எழுத்துக்கள் எல்லாம் படு சீரியஸ் ஆக இருக்கும்.. செம கோபக்காரர் போல என நினைத்தால் ஆள் படு ஜாலி டைப்.. சென்னை வாசி.. பயோடேட்டா ஸ்பெஷலிஸ்ட். கேபிள் சங்கரின் நெருங்கிய நண்பர்..





9. சுரேஷ்பாபு - இவர் புகைபட கலைஞர், பல ஜனரஞ்சகப்பத்திரிக்கைகளில் படைப்பு வர கண்டவர். இவர் எனக்கு அறிமுகம் இல்லை





10. லக்கிலுக் யுவகிருஷ்ணா - 2010 ஆம் ஆண்டு சுஜாதா விருது பெற்ற வலைத்தள வாசி. புதிய தலைமுறை நிருபர். தீவிர திமுக அனுதாபி.. ஆள் செம ஜாலி டைப். ட்விட்டரில் செம கலாட்டா செய்யற நபர். இவர் விருது வாங்கறப்ப ஒரு காமெடி. விருது தர்றப்ப கொடுத்த சில்வர் தட்டையும் எடுத்துட்டு போய்ட்டார். அப்புறம் ஒருத்தர் பதறி ஓடி வந்து தட்டு வேணும்னு கேட்டு வாங்குனது செம கலட்டாவான சீன்.. இவர் வரும்போது மட்டும் நிறைய பேர் கைதட்டுனாங்க.. ஆள்ங்களை ஏற்பாடு பண்ணிட்டு வந்துட்டார் போல.




11. நாளைய இயக்குநர் புகழ் ரவிக்குமார் - இவர் எடுத்த ஜீரோ கிலோ மீட்டர் ஷார்ட் ஃபிலிம் எனக்கு மிகவும் பிடித்தது.. நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பல படங்கள் இடம் பெற்று 3ம் பரிசு பெற்றவர். நகைச்சுவை உணர்வு நிரம்பியவர்.




12. பாலபாரதி - நல்ல கவிஞர். பல ஜனரஞ்சகப்பத்திரிக்கைகளில் இவரது நீண்ட கவிதைகள் பிரசித்தம்.. எனக்கு பழக்கம் இல்லை,புதிய தலைமுறையில் பணி புரிகிறார்






13. இளங்கோவன் பாலகிருஷ்ணன் - குறும்பட இயக்குநர்.கோவை பி எஸ் ஜி ஆர்ட்ஸ் காலேஜ் லெக்சரர்.எனக்கு பழக்கம் இல்லை




14. மகேந்திரன் - சிறந்த சமூக ஆர்வலர்.. பல மன நிலை குன்றிய நண்பர்களுக்கு உதவி செய்தவர்..



15. ஓவியர் ஜீவா - திரைச்சீலை என்னும் திரைப்படத்தை பற்றி எழுதப்பட்ட புத்தகத்துக்கு  தேசிய விருது பெற்ற சாதனையாளர்..


---..... தொடரும்

டிஸ்கி -

ஈரோடு பதிவர் சந்திப்பு - வெளிவந்த பல பதிவுலக ரகசியங்கள் பாகம் 1

Tuesday, December 20, 2011

ஸ்வீட்டி , ஃப்ரூட்டி , ஜோக்ஸ்

http://www.our-kerala.com/newgallery/images/photos/images/reshmi_menon2.jpg1."பெரியண்ணன் போல மத்திய அரசு செயல்படக்கூடாது'- பிஜேபி # கேப்டன் நடிச்ச பெரியண்ணா அந்தளவு ரீச் ஆகி இருக்கா? அடப்பாவமே!

--------------------------

2. ஐ.எஸ்.ஐ.யுடன் எனக்கு தொடர்பிருப்பதாக நிரூபி்த்தால் நான் அரசியலைவிட்டு விடுகிறேன் -இம்ரான்கான் # அண்ணே, ஐ எஸ் ஐ யாரு? புது மும்பை நடிகை?


------------------------------------

3. 7 அப் குளிர்பான விளம்பரத்தில் சிம்பு! # ஹூம், ரொம்பத்தான் குளிர் விட்டுப்போச்சு,சூர்யா ரூட்டை செலக்ட் பண்ணிட்டார் போல

------------------------------

4. அன்னா ஹசாரேயின் போராட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பில்லை : பவார் # கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம சொல்லிக்கறாரே?ஹய்யோ , அய்யோ


--------------------------------

5. உண்ணாவிரதத்தில் கனிமொழி,குஷ்பு,சல்மா பெமினா.உமன்ஸ் எரா படித்தனர்! # சும்மா படம் பார்த்திருப்பாங்க, பக்கத்தை புரட்டினாலே நம்ம ஆளுங்க கதை விடுவாங்க

-----------------------------------


6. டாப்சி- நான் சினி ஃபீல்டுல டாப்க்கு போயிடுவேன்னு சிம்பாலிக்கா என் பேர் சொல்லுது. 


நிருபர் - எப்படியோ டப் பார்த்துடுவீங்க#TAPSEE


----------------------------------



7. உண்ணாவிரதத்தில் கனிமொழி,குஷ்பு,சல்மா பெமினா.உமன்ஸ் எரா படித்தனர்! #  அடடா,  3 பேர் சேர்ந்து ஏன் 2 புக்ஸை படிக்கனும்?

------------------------------------------

8. நான் ஓப்பன் டைப் - அனன்யா # நம்ப மாட்டோம், ஆதாரம் இருக்கா? மூடி டைப் போல தோணுதே!

-----------------------------------

9. பெண்களை,ஆண்கள் வர்ணிப்பது திருமணத்திற்குப்பின்  நின்று விடுகிறதா?

நோ,மேரேஜ் ஆன பொண்ணுங்களை வர்ணிக்கறோமே? விதி விலக்கு -சொந்த சம்சாரம்

------------------------------------
10. திருப்பூர்-ல் போக்குவரத்து நெரிசல் பகுதியில் சினிமா ஷூட்டிங்! # எப்படியோ பனியன் சிட்டியை சினிமா பைத்தியம் ஆக்கி சனியன் சிட்டி ஆக்கிடுவாங்க

-------------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBXPiD6GgFKxKmU3bBYNdSVH4ZIEb8AJqgHHqeX0A-CjO5GvZ9P3wtqfHzagGyeq2L6iDLCXSLWryp7O_ZcSoMB4UHzXohzCWbi0dIlt_ZxpS-A2t4HZhOz7dLjTHKVoPYI3bJhyphenhyphen45khxl/s1600/Reshmi+Menon+Cute+Photos++in+Theneer+vduthi+(4).jpg

11. டியர்.. நீ தேர் மாதிரி .. 

நிஜமாவா? 

அவ்ளவ் அழகா அசைஞ்சு வர்றேனா? ம்ஹூம், எதுக்கும் அசைஞ்சு குடுக்க மாட்டேங்கறியே?

-----------------------------------------

12. எல்லாத்தவறும் செய்து விட்டு  மாட்டிக்காமல் சாமார்த்தியமாக தப்பும்போதும் திமிர் வந்து விடுகிறது # எதிர் ட்வீட் அல்ல 

--------------------------------


13. ஒரே ஒரு நாள் முல்லைக்கு தேர் கொடுத்தானாம் பாரி.தினம் தினம் முல்லைக்கு என் கூந்தலை கொடுக்கறேன் நான், 

மேடம், சவுரி எல்லாம் கணக்கில் வராது

------------------------------------

14. நடிகை ஷில்பாஷெட்டி கர்ப்பம்  # இதுவும் எங்க ஆட்சியின் சாதனைதான்னு எவனாவது சொல்லி வம்புல மாட்டிங்காதிங்கப்பா

---------------------------------

15. இந்த பொண்ணுங்க ஆஃபீஸ்ல இருக்கறப்பவும் வேலை செய்யவிடறதில்லை, வீட்லயும் வேலை செய்ய விடறதில்லை , டிஸ்டர்பிங்க் # சொந்தமா யோசிச்சேன்

----------------------------------



16. "அனுஷ்காவை மிரட்டும் ஆந்திரஅரசியல்வாதிகள்"- # பொறுத்தது போதும் தமிழா பொங்கி எழு, ஓங்கி அழு

-----------------------------------


17. தனுஷ் பாடலுக்கு கன்னட நடிகர் கண்டனம்!  # அதெப்பிடி மாப்ளை பாட்டை மாமனாரே கண்டிப்பாரு?


----------------------------

18. ஃபிகரு- நான் பஸ்ல எப்பவும் பின் சீட்ல தான் ட்ராவலிங்க்,ஏன்னு தெரியுமா? 

தெரியும், அப்போதான் எல்லா பசங்களையும் சைட் அடிக்க முடியும்

---------------------------


19. ஸ்வீட்டி ஷெட்டி வயது 31. பார்த்து இருக்கீங்களா? 

யோவ், நாங்க எல்லாம் யூத். வயசை பார்க்கறதில்லை, மனசை மட்டும்தான் பார்ப்போம் ஹி ஹி 

------------------------------------------


20. எல்லாரையும் கலாய்ச்சிட்டு மன்னிப்பு கேக்குறதே வேலையா போச்சு. 

என்ன பண்றது மேடம், காமெடியும் வேணும், அடியும் வாங்கக்கூடாது#WAT TO DO?

-------------------------------------
http://mimg.sulekha.com/reshmi-menon/images/wallpaper/1440-900/reshmi-menon-sexy-wallpapers070.jpg

வடிவேல் காமெடி டயலாக்ஸ் இன் மம்பட்டியான்

http://www.filmics.com/tamil/images/stories/news/December/16-12-11/Mambattiyan-Movie-Review.JPG
 
மம்பட்டியான் படத்தில் வடிவேல் காமெடி வசனங்கள்

1. சொர்ணம் , குளிச்சிட்டியா?

அவ்வ் , பார்த்துட்டியா?

ஒளிஞ்சிருந்து பார்க்க நான் ஒழுக்கம் கெட்டவன் கிடையாது


------------------------------------------

2.  உன்னை விட்டுட்டுப்போனவனை நீ என்னான்னு சொன்னே?

ஹி ஹி கட்டிக்கப்போறவன்னு...


----------------------------------------------

3. இவரோட பெரியப்பா யார் தெரியுமில்ல? பெரிய அயோக்கியப்பசங்க பரம்பரைல இருந்து வந்தாலும் இவர் நல்லவர் ஹி ஹி

-------------------------------------

4. என்னை மட்டும் சல்லீசா அடிங்க, மம்பட்டியான்  காட்ல சுத்தறான், அவனை பார்க்காமயே தோத்துடுங்க.. திரும்பி வந்துடுங்க, நல்லா இருக்குய்யா உங்க வீரம்... 

---------------------------------

5. என்னை அடிக்கறதால 10 பைசாவுக்குக்கூட பிரயோஜனம் இல்ல.. பீ கேர்ஃபுல்

------------------------------------


6.  அட்ரா சக்க.. சக்க -  ஐ ஜிக்கே  ஆபரேஷனா?

--------------------------------

7.  டேய் , நீ போய் சொர்ணா கிட்டே நான் கேட்டதா சொல்லி ஒரு சொம்புல தண்ணி வாங்கிட்டு வா

இதுக்கேண்ணே , அங்கே போகனும்? நானே எங்க வீட்ல இருந்து கொண்டு வர்றேன்.. 

வேணாம்டா,சொர்ணா கிட்டே தான் மூலிகைத்தண்ணி இருக்கும்.. சொல்ற வேலையை மட்டும் செய்... அவ முழு சொம்புல தண்ணி குடுத்து விட்டா ஆள் தனியா இருக்கானு அர்த்தம், பாதி சொம்புல தண்ணி குடுத்து விட்டா  வேற யாரோ விவசாயம் பண்ணிட்டு இருக்காங்கனு அர்த்தம்

--------------------------

8. நிறையா தண்ணி சொம்புல கொடுத்து விட்டு என்னை நிலை குலைய வைக்கறா..,அரை சொம்பு மட்டும் தண்ணி குடுத்து சில சமயம் என்னை அலைய வைக்கறா.. 

-----------------------------

9. போலீஸ்கார் போலீஸ்கார் பல்க்கா ஏதும் செஞ்சுடாதீங்க, நான் சின்னப்பையன்.. கொஞ்சமா அடிச்சா போதும்.. 

-------------------------

10. இப்போ நீ என்ன பண்றே. உன் 2 காலையும் தூக்கி தோள்ல போட்டு டான்ஸ் ஆடற..

 உமக்கு எகத்தாளம் ஜாஸ்தி.. அதெப்பிடி முடியும்?

--------------------------------

11. உஷ் அப்பா, அடி பின்னிட்டாங்க.. ஒரு மணி நேரமா உந்தி உந்தி நடக்கறேன், 10 மீட்டர் தூரம் தான் கடந்து இருக்கேன் போல , வீடு போய்ச்சேர எப்படியும் ஒரு மாசம் ஆகிடும்போல இருக்கே.. அவ்வ்வ்வ்வ்வ்

-----------------------------------

12.  சார்.. சும்மா இருக்காம தொங்க விட்டுடுவேன்னு சொல்லி அவனுக்கு நீங்களே ஐடியா குடுத்துட்டீங்க, இப்போ அவன் உங்களை தொங்கல்ல விட்டுட்டு எஸ் ஆகிட்டான்.. 

-------------------------------

13.  சொன்னா கோபப்படாதீங்க, உங்க செட்டப்க்கு பலர் மேல கண்ணு

-----------------------------

14 என்னை எதுக்குய்யா அந்த இடத்துல அடிச்சீங்க, புள்ளயோட கற்புல கபடி விளையாடிட்டு வந்திருக்கான், அவனுக்கெல்லாம் எதுக்கு மரியாதை 

-----------------------------

http://600024.com/files/2011/05/Meera-Jasmine.jpg

 மனதில் நின்ற பிற வசனங்கள்

1.  நம்மை துரத்தறவங்க துரத்திட்டே இருக்கட்டும், நாம களைச்சுப்போற வரை ஓடிட்டே இருப்போம்.. அதுதான் நம்ம தலை எழுத்துப்போல

2.  ரெண்டு திருடனுங்க வந்ததும் விட்டுட்டு ஓடிப்போனவன் நாளைக்கு 4 முரடன்க வந்தா உன்னை கூட்டிக்குடுக்க தயங்கமாட்டான்..


3. ஏன் என்னை பார்த்து பயப்படறே? உனக்கும், எனக்கும் என்ன சம்பந்தம்?


மழைக்கும் , மண்ணுக்கும் உள்ள சம்பந்தம்

4.  மம்பட்டியான் காட்லதான் இருக்கான், ஆனாலும் அவன் ஊருக்கே அய்யனார்... 

5. ஹீரோயின் -  பொசுக்கப்போறோம்கற நினப்பு நெருப்புக்கும் இல்ல, பத்திக்கப்போறம்கற பயம் பஞ்சுக்கும் இல்ல, அப்புறம் ஏன் பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்தா பத்திக்குமோன்னு பயப்படனும்? 

சி.பி - ஹி ஹி இது ஒரு சாக்கு , நடத்துங்க..

6.  நல்லா பேசற பையனுக்கு ஏன் ஊமையன்னு பேர் வெச்சாங்க தெரியுமா? மம்பட்டியான் பற்றி என்ன கேள்வி யார் கேட்டாலும் வாயே திறக்க மாட்டான்னு அர்த்தம்.. 

7. ஹீரோ - நீங்க செத்தா உங்க குடும்பம் மட்டும் தான்  அழும்.. நான் செத்தா இந்த ஊரே அழும்.. 

அண்ணன் ஊர் பூரா குடும்பம் வெச்சிருப்பார் போல.. அவ்வ்வ்வ்

8.  ஏம்மா, எதுக்கு இங்கே உன் வீட்டு கூரைல கொடி பறக்க விட்டிருக்கே?

கட்சி ஆரம்பிக்கலாம்னு..

இன்னும் குடும்பமே நடத்தலை.. அதுக்குள்ள கட்சி எதுக்கு? 

சி.பி -யாரப்பா அது கலைஞரை தாக்கறது, அவரு அவுட் ஆஃப் ஃபார்ம்..

9.  உங்களுக்கு தமிழ் தவிர பல மொழிகளும் தெரியும் போல இருக்கு?

இதயத்துல  காதல் வந்துட்டா நாக்குல தமிழ் தெலுங்கு எல்லாம் தாண்டவம் ஆடுமே?



10.ஐ லவ் யூன்னு சொல்லுங்க..


ம்க்கும், இது என்ன பெரிய அதிசயம், எனக்கு 2 மொழில லவ் யூ சொல்ல தெரியும்..


எத்தனை மொழில எப்படி சொன்னாலும் காதல் காதல்தான்



11. ஹீரோ - எனக்குப்பிறகு ஒரு சரித்திரம் உருவாகும், அதுல என்னை பிடிக்க முயற்சி செஞ்சவர்னு மட்டும்தான் உங்க பேரு பதிவாகும், ஆனா பிடிக்க மாட்டிங்க கடைசி வரை..


சி.பி - ஆல்ரெடி இருக்கற ஹிஸ்டரியெ படிக்காம கிடக்கு.. இதுல புதிய சரித்திரம் வேறயா? விளங்கிடும்.. 

12.  நான் என்ன தப்பு செஞ்சேன், மக்கள்ட்ட கொள்ளை அடிச்ச பணத்தை மக்கள்ட்டயே  திருப்பி கொடுக்கறேன்..

சி.பி - ஹூம், ஆ ராசா குரூப் அடிச்ச பணத்தை யாராவது கொள்ளை அடிங்கப்பா.. 

13.  ஹீரோ - இனிமே நான் செத்தாதான் நீ அழனும்..

ஹீரோயின் - இனி நான் அழவே மாட்டேன்

சி.பி - அய்யய்யோ, அப்போ ஹீரோ கடைசி வரை சாகவே மாட்டாரா?

http://suriyantv.com/wp-content/uploads/2011/06/Meera-Jasmine.jpg

டிஸ்கி - 1  வடிவேல் காமெடி டயலாக்ஸ் போஸ்ட்ல என்ன இதுக்கோசரம் மீரா ஜாஸ்மின் ஃபோட்டோன்னு யாருக் கேட்காதீங்க, எல்லாம் அதுக்கோசரம்தான் ஹி ஹி

டிஸ்கி 2 -

மம்பட்டியான் - சினிமா விமர்சனம்

சசிகலா மாட்டியது எப்படி? சென்னையை விட்டே துரத்த ஜெ முடிவெடுத்தது ஏன்?

http://i51.tinypic.com/33e7m7q.jpg

சசிகலா, அவரது கணவர் நடராஜன், இவர்களது குடும்பத்தினர் என, 14 பேரை அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி, முதல்வர் ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.இதன் மூலம், ஆட்சி மற்றும் கட்சியில் சசிகலா குடும்பம் போட்ட ஆட்டம் குளோசானது. ஜெயலலிதாவின் இந்நடவடிக்கையை, அ.தி.மு.க., தொண்டர்கள் வரவேற்றுள்ளனர். 


 சி.பி - கலைஞர் தான் பாவம் கதி கலங்கி இருக்காராம், ஜெ மீது வைக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டே சசிகலா ஆதிக்கம் தான், அதுவும் உடைஞ்சுடுச்சேன்னு அய்யா கலக்கமாம்..
.

.

அரசு நிர்வாகத்திலும், கட்சி நிர்வாகத்திலும் சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து தலையிட்டு வந்தனர். இதன் மூலம், அரசுக்கும், கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி வந்தனர். இதையடுத்தே, இந்த அதிரடி நடவடிக்கையை முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ளார்.அ.தி.மு.க., அரசு பதவியேற்றதும், அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கப் பிரிவில், சிறப்பு அலுவலர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்ட, ஏ.பன்னீர்செல்வம், கடந்த வாரம், அப்பணியிலிருந்து ராஜினாமா செய்தார்;

சி.பி - ராஜினாமா செஞ்சாரா? செய்ய வைக்கப்பட்டாரா?நம்மாளுங்க உயிரை விட்டாலும் பதவியை விட மாட்டானுங்களே? 


இதிலிருந்து பிரச்னைகள் வெளிப்படத் துவங்கின. பன்னீர்செல்வம், நடராஜனுக்கு மிகவும் நெருக்கமாவனர். ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக ஓய்வு பெற்ற இவர், சிறப்பு அலுவலராகப் பணியில் அமர்த்தப்பட்டார்.கோட்டையில், அதிகார மையமாக விளங்கிய இவர், அதிகாரிகள் மாற்றம், அமைச்சர்கள் மாற்றம், அரசு டெண்டர்களை முடிவு செய்தல் என, அனைத்திலும் தலையிட்டு வந்தார் என குற்றச்சாட்டு எழுந்தது. அமைச்சர்களும், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும், கோட்டையில் உள்ள இவரது அறைக்கு வந்து, இவரை சந்தித்து விட்டு செல்லும் நிலையில் இவர் இருந்தார்.


சி.பி - அதாவது வர்ற வருமானத்துல 10% எடுத்துக்கிட்டு மீதி 90% ட்டை மேலிடத்துக்கு குடுத்திருந்தா பிரச்சனையே வந்திருக்காது, அண்ணன் 90 %ட்டை ஆட்டையை போட்டுட்டு `10%ட்டை மட்டும் தள்ளி விட பார்த்திருப்பார்.. உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா கதை ஆகிடுச்சு

http://itsmeena.files.wordpress.com/2011/03/cartoon.gif

இத்தகவல்கள் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதால், பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த திருமலைச்சாமி மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இது போன்ற நடவடிக்கைகள் நடந்து கொண்டு இருக்கையில், சசிகலா போயஸ் தோட்டத்தில் தங்குவதில்லை என்றும், இளவரசியின் வீட்டில் அவர் தங்குகிறார் என்றும் தகவல்கள் வெளியானது.இதனால், ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் அதிகமாகி, எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என பரபரப்பாகப் பேசப்பட்டது. 

சி.பி - பரபரப்பா பேசப்படுதோ இல்லையோ, இப்படி நியூஸ் போட்டே பர பரப்பு பண்ணிடுவாங்க, நம்மாளுங்க 


அதன் எதிரொலியாக, சசிகலா, நடராஜன் மற்றும் இவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என, 14 பேரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து நீக்கி, ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார்.முதல்வரின் நடவடிக்கை மூலம், இனி மன்னார்குடி கும்பலின் அட்டூழியம் முடிவுக்கு வந்ததாக, அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.

சி.பி - அதை காலம் தான் முடிவு செய்யும், எப்போ வேணாலும், எப்படி வேணாலும் ஜெ மனசு மாறிடும், அதுக்கு வரலாற்றில் சான்று இருக்கு.. 



கட்சியிலிருந்து, சசிகலா குடும்பத்தினர் நீக்கப்பட்டதை வரவேற்று, அ.தி.மு.க.,வினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அப்போது, அவர்களில் சிலர் கூறும் போது, "சசிகலா கும்பலை விரட்டியடித்து ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் மூலம், அவருக்கு ஏற்படவிருந்த அவப்பெயர் தடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.

சி.பி - ஒரு சின்ன கரெக்‌ஷன்,  ஏற்படவிருந்த அவப்பெயர் தடுக்கப்பட்டுள்ளது என்பது தவறு, ஏற்பட்ட அவப்பெயர் நீக்கப்பட்டுள்ளது என்பதே சரி.. ஆல்ரெடி அம்மா பேரு சசிகலாவால கெட்டுப்போச்சே..

24 மணி நேரம் கெடு?சசிகலா, நடராஜன் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் சென்னையிலிருந்து, 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என, ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ராவணன், மோகன் ஆகியோர் வீடுகளில் போலீசார் நடத்திய ரெய்டில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிகிறது.

சி.பி - சென்னைல இருந்து ஏன் வெளியேறனும்? மன்னர் காலத்துல நாடு கடத்தும் திட்டம் இருந்துச்சு, இப்போ மம்மி ரிட்டர்ன்?ஒரு வேளை ஜெ வே நாடகம் போட்டு இன்கம்டாக்ஸ் ரெயிடு, சொத்துகுவிப்பு வழக்குல இருந்து தப்பிக்க இப்படி ஒரு டிராமா போடராறோ என்னவோ?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3DWpkZa-2dRWUE4FZ-01LCEEPtJ0GGHtZmcfYz_jz4AUKaG4rl8SFWnfHby9ycqOCS2XyFXcTb05Re1OuBDrp7sBtZlGvNLf8nIjNQyrGtCW7982xg1QQSdrunhc0mHyKbLhXtD8lwZWw/s1600/jayalalitha-cartoon.jpg

கட்சியில் இருந்தாரா நடராஜன்? : ஜெயலலிதாவுக்கு, முதன் முதலில்மனைவி சசிகலாவை அறிமுகம் செய்த நடராஜன், பிற்காலத்தில் பின்புலத்தில்இருந்து சசிகலாவையும் கட்சியையும்இயக்க ஆரம்பித்தார்.இதனாலேயே 1992ல், நடராஜனுடன்கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என ஜெயலலிதா அறிவித்தார். 

 சி.பி - ஆமா, ஜெவைத்தவிர வேற யாரும் தொடர்பு வெச்சுக்கக்கூடாது ஹி ஹி

அப்போதே அவர் கட்சியில்உறுப்பினராக இருந்தாரா இல்லையா, எனகட்சியினருக்கே தெளிவாக தெரியவில்லை.1996ல் கருத்து வேற்றுமை ஏற்பட்டபோது, சசிகலாவையும் நடராஜனையும் கட்சியை நீக்குவதாக ஜெயலலிதா அறிவித்தார். மூன்று மாதங்களில் சசிகலா கட்சியில் சேர்க்கப்பட்டார். அப்போதும்நடராஜனின் நிலைமை தெரியவில்லை.பின், சசிகலாவுக்கு தலைமை செயற்குழுஉறுப்பினர் பதவி தரப்பட்டபோது கூட,நடராஜனுக்கு பதவி தரப்படவில்லை. இருப்பினும் அவர் கட்சியில், "நிழல்'மனிதராகவே வலம் வந்தார். 

 சி.பி - இதுல என்ன மர்மம் வேண்டிக்கிடக்கு? ஜெவுக்கு சசி பிடிக்கும், ஆனா நடராஜனை பிடிக்கலை, அவரை 100 % விரட்ட வழி இல்லை, அது சசிக்கு பிடிக்காது ஹி ஹி இதான் சிக்கலே..


சசிகலாவும்நடராஜனும் ரகசியமாக சந்தித்துக்கொள்வதாக அவ்வப்போது தகவல்கள் வந்தன.

சி.பி - அட விடுங்கப்பா பாவம் சொந்த சம்சாரத்தை சந்திச்சதை என்னவோ சீக்ரெட் ஏஜண்ட் ஜேம்ஸ்பாண்ட் வில்லியை ஹோட்டல்ல சந்திச்ச மாதிரி பில்டப் குடுக்கறீங்க?  

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKaT9PRyh4FvmTbG_ndqT2xeo9P_1PIqy1_B6T3Nvy2t-HIO9JsYQIYpp-vgR8W9Ot01MxDjn274NVs5iOxOzhqfcpPIJ1lQil42UB5lk4lrTScXuFlPRdFMJ-bEgh_auFVURhnJdYA4nN/s1600/jayalalitha.jpg

கட்சிக்காரர்கள் பலரும் நடராஜனுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்தனர். இந்நிலையில் சசிகலாவின் கூட்டத்துடன்சேர்த்து, நடராஜனும் கட்சியை விட்டு நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் வினோதம் என்னவென்றால், கட்சியில் இருக்கிறாரா இல்லையா என கட்சியினருக்கு தெரியாமலேயே,நடராஜன் நீக்கப்பட்டுள்ளார். 

சி.பி - தங்கமலை ரகசியம் கூட கண்டு பிடிச்சுடலாம், போயஸ் தோட்ட மர்மத்தை கண்டுபிடிக்கவே முடியாது.. 

டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து போயஸ் கார்டனுக்கு அனுப்பப்பட்ட ரகசிய பைல், முதல்வரின் கண்ணில் படாமல் மறைக்கப்பட்டது. அந்த பைலை, வெள்ளிக்கிழமை அன்று முதல்வர் ஜெயலலிதா எடுத்து படித்துள்ளார். அதன் பின்னர் தான் சசிகலாவின் ஆதரவர்களாக வலம் வந்த அதிகாரிகள், ஒவ்வொருவராக, "கழற்றி' விடப்பட்டுகின்றனர்.


சி.பி - அதென்ன ஃபைல்? கடைசி வரை ரகசிய ஃபைலாவே இருந்துடுமோ?

"எம்.ஜி.ஆர்., கூட இந்தளவிற்கு தனி மெஜாரிட்டியில் ஜெயிக்கலைங்க... இந்தம்மாவிடம் (ஜெயலலிதா) பொதுமக்கள் நிறைய எதிர்பார்க்கிறாங்க' என்ற பேச்சு, தமிழகத்தின் அடிமட்ட அரசியல் தொண்டனிடம் இருந்து, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் வரை பேசப்பட்டது.

சி.பி - ஜெ ஜெயிச்சதே எம் ஜி ஆர் செல்வாக்க்குலதான் என்பதை யாரும் மறந்துடக்கூடாது.. விதை விதைச்சவர் எம் ஜி ஆர் , அறுவடை பண்றது ஜெ

முதல்வரின் நிழலாக பின் தொடரும் சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள், "தமிழகத்தில் நடப்பது எங்கள் ஆட்சி' என்ற தோரணையில் தலைமைச் செயலகத்தில் வலம் வந்தனர்.தற்போது நீக்கப்பட்ட, 14 பேரில் ராகவன் என்பவர், தேர்தல் முடிவு வந்து கொண்டிருந்த நேரத்தில், சி.எம்.டி.ஏ., பிரின்சிபல் செக்ரடரி தயானந்த கட்காரியை போனில் அழைத்து, "நாங்கள் சொல்லும் பைலில் கையெழுத்து போடா விட்டால் நடப்பதே வேறு' என மிரட்டியுள்ளார்.


சி.பி - மிரட்டியவர்கள் விரட்டப்பட்டுள்ளனர் ம் ம் குட்

அந்த நபர், வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை என, தலையிட்டு, கடைசியாக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் துறையிலும் தலையை நீட்டினார். "2 ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சரின் ஆசியுடன், கடந்த ஆட்சியில் சென்னையில் பணியாற்றி வந்த, "ஜிம் பாடி பில்டர்' ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர், கார்டன் அதிகார நபரை பிடித்தார்.அடுத்த சில நாட்களில் அந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி, மேற்கு மண்டலத்தில் உள்ள வளமான மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டார். இது போன்ற ஏகப்பட்ட தலையீடுகள், போலீஸ் துறையில் அரங்கேறின.

சி.பி - என்னைக்கேட்டா கவர்னர் தலையிட்டு ஜெ மேல கேஸ் போட வைக்கனும். ஒரு அரசாங்கமே தனி நபர் பிடில சிக்கிட்டு இருந்ததை வேடிக்கை பார்த்துட்டு நிர்வாகத்தை  பலவீனம் ஆக்குனதே ஒரு குற்றம் தான்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXAqUa3AgLzKLSACm5ed3EBGF1_xn-WgHZDqyLlO8X-Bvu-MChJynz6XI1BwIaCwP22zkK928cwEPZkSry7jE8Z4RjORXw68spj4b-5aZ8wTPCjWD7k8M0ZYO8nK_s_jSyUF1xhZg7ycY/s640/82687605.preview.jpg

கார்டன் அதிகார மையத்தினரால் நடத்தப்படும் வசூல் வேட்டை குறித்து, டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து ரகசிய, "பைல்' முதல்வருக்கு அனுப்பப்பட்டது. அந்த பைலை முதல்வரின் பார்வையில் படாமல் கார்டனில் உள்ள சிலர் மறைத்து விட்டனர்.டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து கார்டனுக்கு அனுப்பப்பட்ட ரகசிய பைல், ஒரு மாதத்திற்கும் மேலாக கார்டனில் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டிருந்தது. இம்மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை, அந்த பைலை ஜெயலலிதா படித்துள்ளார்.அதில், சசிகலா மற்றும் அவரது வகையறாக்கள் ஒவ்வொருவரை பற்றியும், வசூல் வேட்டை பற்றியும் விலாவாரியாக, "புட்டு புட்டு' வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, கார்டன் அதிகார மையத்தினரால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் தகவல், நியாயமான, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளால் முதல்வரிடம் தயக்கத்துடன் தெரிவிக்கப்பட்டது.


சி.பி - எல்லாம் ஜெவுக்கு தெரிஞ்சே தான் நடந்திருக்கும், பங்கு பிரிக்கும்போது சண்டை வந்திருக்கும்

அதன் பின் தான், முதல்வர் சாட்டையை சுழற்றினார். தலைமைச் செயலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த, சிறப்பு திட்ட செயலரான பன்னீர்செல்வம் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

அவர், சசிகலாவின் கணவர் நடராஜனின் தீவிர விசுவாசி. பன்னீர்செல்வம், ஐ.ஏ.எஸ்., ஆனதற்கு, நடராஜன் உதவியதாக கூறப்படுகிறது. பன்னீர்செல்வத்திற்கு அடுத்து, முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரான, திருமலைச்சாமி, கார்டனில் இருந்து விரட்டப்பட்டார்.இவர், கார்டன் அதிகார மையத்திற்கு மிகவும் நெருக்கமானவர். கார்டனில் நடக்கும் விஷயங்களை கேட்டு முகம் சிவந்த ஜெயலலிதா, திருமலைச்சாமியிடம் நேரடியாக விசாரித்த போது, பல தகவல்கள் முதல்வரை அதிர்ச்சியடை செய்தன.

 சி.பி - கூட இருந்த ஜெவுக்கே அதிர்ச்சின்னா மக்கள்க்கு எப்படி இருக்கும்? அதெல்லாம் என்னா மேட்டர்னு கண்டு பிடிச்சு வெளீல விடுங்கப்பா. 


திருமலைச்சாமியின் வாக்கு மூலத்தை, அமைச்சர்களை நேரில் அழைத்து விசாரித்து, நூறு சதவீதம் உறுதி செய்தார் ஜெயலலிதா. இனிமேலும் தாமதித்தால் எல்லாம் வீணாகிப் போய்விடும் என்ற எண்ணத்தில், கழக தலைமைக் செயற்குழு குழு உறுப்பினர் சசிகலா, அவரது கணவர் நடராஜன், அவரது சகோதரர் ராமச்சந்திரன் உட்பட, 14 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும், மற்ற பொறுப்புகளில் இருந்து ஜெயலலிதா விடுவித்து உத்தரவிட்டார்.

 சி.பி - எலக்‌ஷனுக்குப்பிறகு ஜெ எடுத்த பல வெட்டி அதிரடி அறிவிப்புகளூக்கிடையே , இருப்படியான உத்தரவு இது ஒண்ணுதான்.. அவர் இமேஜ் இதனால மக்கள் மத்தியில் உயரும் என்பதில் ஐயம் இல்லை.. கீப் இட் அப்.. 

கார்டன் அதிகார மையத்திற்கு வேண்டப்பட்ட அதிகாரிகள் பலர், செய்தித் துறையில் பல இடங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அந்த அதிகாரிகள், "எம்.என்., - எம்.ஆர்.,' வீட்டில் எடுபிடி வேலைகளை செய்து வந்துள்ளனர். நேற்று, ஜெ., வின் அதிரடியால், செய்தித் துறையில் பணியாற்றி வந்த ஆதரவு அதிகாரிகள் சிலர், மொபைல் போனை, "ஆப்' செய்து விட்டு, "எஸ்கேப்' ஆகி விட்டனர். முதல்வரின், "ஹிட் லிஸ்டில்' உள்ளவர்களில் சிலர் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

சி.பி - மேடம், யாரையும் விடாதீங்க, அவங்க வெச்சிருந்த  பணத்தை எல்லாம் கைப்பற்றிடுங்க.. ஆனா அந்த விபரம் எல்லாம் ரகசியமா நடக்கட்டும் ஹி ஹி 




சொத்துக்குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதாவின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்றால், அடுத்த முதல்வரை யாரை நியமிப்பது என, சசிகலா உறவினர்கள் ஜோதிடம் பார்த்த தகவல் மற்றும் சசிகலா, இளவரசிக்காக சட்ட நிபுணரிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது, தி.மு.க., குடும்பத்தினரிடம் மறைமுக தொடர்பு வைத்த விவகாரம் போன்றவை தெரிய வந்ததால், மன்னார்குடி குடும்பத்தினருக்கு கூண்டோடு கல்தா கொடுக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

சி.பி - ஜெ கோர்ட் விசாரணைக்காக பெங்களூர் போனப்பவே சசி குரூப் செமயா குஷில இருந்திருப்பாங்க.. ஆல்டெர்நேட் சி எம் ஆகலாம்னு பிளான் பண்ணி இருப்பாங்க.. 


சசிகலா குடும்பத்தினர்முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலர்கள், கட்சி நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து, முதல்வரின், "குட்புக்'கிலிருந்து அவர்களை வெளியேற்றுவதில் சசிகலாவின் உறவினர்களின் முக்கிய பணியாக இருந்தது.முதல்வர் ஜெயலலிதாவை தினமும் யார் சந்திக்க வேண்டும், எந்தெந்த கடிதங்கள் அவரது பார்வைக்கு அனுப்ப வேண்டும், எந்தெந்த பைல்களை அனுப்பி கையெழுத்து பெற வேண்டும் போன்ற பணிகளை சசிகலா செய்து வந்தார்.

 சி.பி - எவ்வளவு சுருட்டுனாரோ யாருக்குத்தெரியும்? எல்லாம் மக்கள் பணம் தான் அவ்வ்வ்

அவரது கண் அசைவு இன்றி, போயஸ் கார்டன் வீட்டில் எந்த காரியமும் நடக்காது.சர்வ வல்லமையுடன் கோலோச்சி வந்த சசிகலாவை, கட்சியிலிருந்து நீக்குவதற்கு அவரது குடும்ப அதிகார மையமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சசிகலாவின் உறவினர் ஒருவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளார். அவருக்கும், தி.மு.க., குடும்பத்தினர் சிலருக்கும் மறைமுக நட்பு இருந்துள்ளது. தி.மு.க., குடும்பத்தினருக்கு வேண்டிய ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பதவிகளில் நியமிக்க வைப்பதில், அவரது கைங்கர்யம் உண்டு

 சி.பி - எப்படியோ நல்லது நடந்தா சரிதான் 

http://deco-01.slide.com/r/1/0043/dl/TtO0gTpF0z_n99lbQr_Tbkp62gm8slz3/watermarksm

Monday, December 19, 2011

சசிகலாவை கழட்டி விட்ட ஜெ - காமெடி கும்மி கலாட்டா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhf7Awrr-3YJbN1IJ8vMiZ0-3lmPGQFVreYYhDE-AzUl6FBSWeErQ1HpW4dAFakhDyVJi7wsGL0XDuW-BfimkHnx7rr2dwrV4TX12cxi5KQjcW2WEutADWdd7P8X1CLXBfZ5VaEdGu7a9u0/s1600/jj-sasikala.jpg
அ.தி.மு.க., அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், நடராஜன், தினகரன், சுதாகரன், திவாகர்(மன்னார்குடி), பாஸ்கரன்,ராமசந்திரன், வெங்கடேசன், ராஜராஜன், குலோத்துங்கன், ராவணன், மோகன் உள்ளிட்ட 12 பேரும் அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இவர்களுடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


சி.பி - அடேங்கப்பா, இவங்க எல்லாம் அதிமுகல இருந்தாங்கண்ணே இப்போத்தானே தெரியுது.. 


ஏறக்குறைய 25 ஆண்டு காலமாக சசிகலா மற்றும் அவரை சுற்றியுள்ள குடும்பத்தினர் கையில் இருந்த அ.தி.மு.க.,வில் முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. சசி இல்லாமல் ஜெ., இல்லை என்ற நிலையை தகர்த்து எறிந்திருக்கிறார் ஜெ., .


சி.பி - உள்ளடி வேலைகள் என்ன நடந்ததோ, என்ன மர்மமோ யாருக்குத்தெரியும்?  


சமீப காலமாக ஜெ மற்றும் சசி குடும்பத்தினர் இடையே அரசல் புரசலாக புகைச்சல் இருந்து வந்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கட்சியின் பொது செயலர் ஜெ., இன்று அ.தி.மு.,கவில் இருந்து மொத்தம் 12 பேரை நீக்குவதாக அறிவித்துள்ளார்.

சி.பி - இப்படித்தான் 2001 ல ஒரு தடவை டிராமா போட்டாங்க 


.இந்த 12 பேருடன் கட்சிக்காரர்கள் யாரும் இனி எவ்வித தொடர்பும் கொள்ள கூடாது என்று கடும் எச்சரிப்பும் வெளியிட்டுள்ளார். 12 பேரும் சசியின் நெருங்கிய வட்டாரம் ஆகும்.

 சி.பி - இனிமே ஆரும் அவங்க கூட சேரக்கூடாது, ஆரும் புழங்கக்கூடாது - நாட்டாமை

கடந்த 15 ஆண்டு கால வரலாற்றில் சசி குடும்பத்தினரும் அவருக்கு வேண்டப்பட்டவர்களும் கட்சியில் கோலோச்சி வந்திருந்தனர். கட்சியிலும் , ஆட்சிக்கு வந்தால் அரசிலும் இவர்கள் தலையீடு இல்லால் இருக்காது. அரசு துறை பொறுப்புகள் டிரான்ஸ்பர் மற்றும் கட்சியில் பதவி வேண்டுமானால் சசி வட்டராத்தையே நாட வேண்டிய நிலையில் அ.தி.மு.க., தொண்டர்கள் இருந்து வந்தனர்.

இந்நிலையில் இந்த கூட்டத்தனர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு அ.தி.மு.க, தொண்டர்கள் இடையே பெரும் வரவேற்பு கிட்டியிருக்கிறது. ஜெ.,யின் அதிரடி நடவடிக்கையால் சசி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சி.பி - நடராஜன் மட்டும் ஜாலியா இருப்பார் ஹி ஹி


சசி நீக்கம் ஏன்., ? பரபரப்பு தகவல்: சசியை கட்சியில் இருந்து நீக்க ஜெ., எடுத்த அதிரடி நடவடிக்கைக்கு பல பின்னணி தகவல்கள் இருந்துள்ளன. இது குறித்த விவரம் வருமாறு: சசிகலா மற்றும் அவரது வட்டாரத்தினர் கட்சியை தங்கள் வசம் கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். ]


அதாவது பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் ஜெ.,வுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. இதில் அவருக்கு எதிராக தீர்ப்பு அமையும் பட்சத்தில் அவர் ஜெயிலுக்கு செல்ல நேரிட்டால் அந்நேரத்தில் என்ன செய்வது என பெரும் ஆலோசனை நடத்தியது சசி கூட்டம். இதன் ஒரு கட்டமாக நடராஜன் அ.தி.மு,.க.,வை தங்கள் வசம் கொண்டு வர தங்களுக்கு வேண்டிய கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசில் அதிகாரிகள் என பலரை தங்கள் இஷ்டம் போல் பொறுப்பில் கொண்டு வரதிட்டமிட்டார். 


சி.பி - ஓஹோ, ஓ பன்னீர் செல்வம் மாதிரி ஆல்டர்நேடிவ் சி எம் ஆகலாம்னு கனா கண்டாங்களோ?


இதற்கு சசியும் ஒப்புதல் தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் இந்த உள்ளடி வேலை நடந்த போது தொலைபேசி உரையாடல் தமிழக உளவுத்துறைக்கு கிடைத்தது. இந்த தகவலை உளவுத்துறை மூலம் அறிந்து கொண்ட ஜெ., இந்த அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பதாக ஒரு உறுதி செய்யப்படாத தகவல் தெரிவிக்கின்றன. 

http://tamil.oneindia.in/img/2011/07/14-sasi-jaya300.jpg


 1.நம் கண்ணுக்குத்தெரியாத, நம் அறிவுகுப்புலப்படாத ஏதோ ஒரு மர்மம் போயஸ் தோட்டத்தில் ஒளிந்து கிடக்கிறது


------------------------------------------------
2. 18 - கூட்டுத்தொகை 9 - ராசியான எண் வர்ற தேதில தனக்கு ராசி இல்லாதவங்களை ஜெ ஒதுக்கி இருக்காங்களே?

-------------------------------------------------
3. ஏட்டிக்குப்போட்டியாக கலைஞர் தன் மகன் ஸ்டாலின், அழகிரி, கனிமொழியை கட்சியை விட்டு நீக்கீட்டால் இன்னும் நல்லாருக்கும்

----------------------------------------------
4. தமிழ்நாட்டில் யாருக்கும் தோழிகளே இருக்கக்கூடாது, ஜெ அதிரடி அறிவிப்பு , இளைஞர்கள் திகைப்பு @இமேஜினேஷன்


-----------------------------------------
5. கலைஞர் டி வி மானாட மயிலாட ஜட்ஜ் பதவியில் இருந்து கலா மாஸ்டர் நீக்கம் - ஏட்டிக்குப்போட்டி , தானிக்கு தீனி @ இமேஜினேஷன்

----------------------------------------
6. சசிகலா உச்ச நீதி மன்றத்தில் மனு - திடீர் என கழட்டி விட்டதுக்கு காம்பன்சேஷன் எதிர்பார்ப்பு ஹி ஹி ஹி

------------------------------------------
7. கல்தா கொடுத்தது கட்சிக்கு மட்டும்தான், மற்றபடி நட்பு நீடிக்கிறது - ஜெ???

--------------------------------------
8. எதிரிக்கூடாரத்திலிருந்து யார் வந்தாலும் கழகம் மானம் , ரோஷம் எல்லாம் பார்க்காமல் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளும் - கலைஞர் அழைப்பு ஹி ஹி

------------------------------------
9. ஹலோ,  நண்பா!! நாடே பரபரப்பா இருக்கு, முதல்ல உங்க தோழியை கூப்பிட்டு டூ சொல்லுங்க, அதான் ஃபேஷன்

---------------------------------------
10. நான் திருவள்ளுவரின் கூடாநட்பு பற்றி இப்போதான் படிச்சேன் - ஜெ விளக்கம், சசிகலா கலக்கம்

-----------------------------------
11. இனி வருடா வருடம் டிசம்பர் 18 கழட்டி விடும் நாளாக அறிவிக்கப்படுகிறது, எல்லாரும் நைஸா யூஸ் பண்ணிக்குங்கப்பா

--------------------------------
12. நான் ஜெவுக்கு புதிய தோழியாக இருக்க ஆசைப்படுகிறேன் - பிரேமலதா விஜயகாந்த் பேராசை அறிக்கை # கற்பனை

---------------------------------
13. சசிகலா நீக்கத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை, நான் ஆலோசனை ஏதும் கூறவில்லை, இது ஜெ எடுத்த முடிவு # அடுத்த வார துக்ளக் தலையங்கம்

----------------------------------

தேமா, புளிமா ,நேர் மா , நிரைமா, நரைமா, கில்மா , நக்மா ( ஜோக்ஸ்)

http://gallery.southdreamz.com/cache/actress/swathi/super-masala/actress-swathi-hot-02_720_southdreamz.jpg

1.தேமா, புளிமா ,நேர் மா , நிரைமா, நரைமா, கில்மா , நக்மா ,சும்மா ,அய்யோ அம்மா கவிதை

-------------------------------------

2. ஜம்முன்னு ஒரு ராகம் - ஹம்சத்வனி , கும்முனு ஒரு மோகம் ஹம்சத் மோத்வானி # சரக்கு மாஸ்டரின் லாவணி

-----------------------------------

3. எது நடக்ககூடாதென்று நினைக்கிறோமோ அது ஜாக்கிங்க் போகுது அவ்வ்வ்வ்வ் # குண்டு ஃபிகர் குஜ்ஜு

-------------------------------------------

4. தனக்குப்பிடித்த சிநேகிதன் தனக்குப்பிடிக்காத யாருடனும் பேசவோ, பழகவோ கூடாது என பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள்

-----------------------------------------

5. பாய் ப்ரெண்டுடன் ஒரே ரூமில் தங்க அனுமதி மறுப்பு : ஹோட்டலில் நடிகை ரிச்சா தகராறு# ஓங்கி ஒரு அறை! ஒரே அறைல தங்குவியா?ன்னு

------------------------------------

6. நீண்ட நாளாக அடியே-னு யாரையாவது கூப்பிடனும்ன்னு ஆசை, ஆனா யாராவது அடிச்சுட்டா?


-----------------------------------


7. தமிழ்நாட்டை சுற்றி காம்பவுண்ட் கட்டுவோம்-கேப்டன் # இப்படியே உளறிட்டே இருந்தீங்கன்னா அண்ணியிடம் சொல்லி உங்க தலையில கொட்டுவோம்


----------------------------------------

8. சோனியா வீட்டு முன் உண்ணாவிரதம் இருப்பேன் - அன்னா # ஒரு நடிகையின் வாக்குமூலம் ரிலீஸ் பண்ணக்கூடாதுன்னா?

--------------------------------------

9. ஃபிகரு- நான் ரொம்ப வெளிப்”படை” ..

மீ - முதல்ல ஸ்கின் டாக்டர்ட்ட போய் பாரம்மா , உடம்பெல்லாம் படை

----------------------------------------



10. லிப்ஸ்டிக் பூசுவது ஃபிகரின் உதட்டுக்கும் , காதலனின் வயிற்றுக்கும் கெடுதல் விளைவிக்கும். பொது நலன் கருதி சொல்றேன்

-----------------------------------


http://ravinderpics.files.wordpress.com/2011/01/colorsswathi131.jpg
11. திருமண மண்டபங்கள்ல பந்தி பரிமாற இனி போகக்கூடாது. ஒரு ஃபிகர் என்னை டேய் தம்பின்னு கூப்பிடுது, இன்னொண்ணு ஏய் சாம்பார்ங்குது அவ்வ்

----------------------------------------

12. எங்க டேமேஜர் எங்களை திட்டும்போது பக்கத்து தெருவுக்கே கேக்கற மாதிரி கத்தறார், லேடிஸ் ஸ்டாஃபை திட்டறப்ப குசுகுசுன்னு பேசறார், அடேய்

------------------------------

13. மெய் எழுத்துக்கள் ஏதுமில்லா உன் பெயரே எனது உயிர் எடுக்கும் எழுத்துக்கள்

-----------------------------

14. திரும்பி பார்க்கிறேன் .. மீண்டும் வந்த வழியில் பயணிக்க வேண்டும் போல் இருக்கிறது ..

யோவ், ரூட்டை மாத்தய்யா, ஒரே ஃபிகரை ரிப்பீட்ட்டா ஒய்??


--------------------------------

15.பதவியை ராஜினாமா செய்யத் தயார்- விஜயகாந்த் ஆவேசம்#ம்க்கும்,அமெரிக்க ஜனாதிபதின்னு அண்ணன் மனசுக்குள்ள ஒரு  நினப்பு

-----------------------------------------


16. 2012 புத்தாண்டிற்கு மல்லிகா ஷெராவத்தின் ஒய் திஸ் கொலைவெறி  பாட்டுக்கு நடனம்! # ஆடுங்க, பார்க்கறோம், தயவு செஞ்சு தனுஷ் மட்டும் வேணாம்

-----------------------------------


17. விகடன் பவர் ஸ்டாரை வாரம் வாரம் வலை.பாயுதே வுல ஆஜர் ஆக்குதே , ஏன்? 

ஒரு காமெடி பீஸ்க்கு காமெடி போர்ஷன்ல சான்ஸ் தந்தா என்ன தப்பு?

--------------------------------------


18. கவுதம் மேனனுடன் இணைந்து ஈராஸ் இண்டர்நேஷனல்  யோஹன் அத்தியாயம் ஒன்று படம் தயாரிப்பு .# ஈராஸ் சீக்கிரம் ஈ லாஸ் ஆகப்போகுது, ஹய்யோ அய்யோ

----------------------------------------


19. 300 வயது வாழ அகத்தியர் கூறும் வழிமுறை# இதை படிச்சுட்டுத்தான் டாக்டர் ராம்தாஸ் அய்யா ஆட்சியை எப்படியும் பிடிச்சுடுவோம்னு கனா காண்றாரோ?

----------------------------------------


20. "அன்னக்கொடியும் கொடிவீரனும்" படநாயகி  இனியா ஷூட்டிங்க் ஸ்பாட்டில் ஓவரா சீன் போடறார்.# அந்த சீனை தனியா ஷூட் செஞ்சா படம் ஓடலைன்னா பிட்டா அட்டாச் பண்ணி ஓட்டலாமே?

------------------------------


21 மன்மோகன் சிங் மூன்று நாள் சுற்றுப்பயணமாக நாளை ரஷ்யா செல்கிறார் # இத்தாலி ரஷ்யாவுக்கு பக்கமோ?

--------------------------------


22. ஜீன்ஸ் போட்டு திருப்பதியில் சாமி தரிசனம்,தமன்னாவுக்கு கண்டனம்!! # அதானே, ஜீன்ஸ் போட்டா எப்படி நாங்க தரிசனம் பண்ண முடியும்?அட்லீஸ்ட் மிடி?

-----------------------------------




23 கேரளா ஃபிகர்களுக்கு ஒரு அவசர அறிவிப்பு, ஈரோட்டில் தாக்கப்பட்ட மலையாளிகள் கடை சேதத்திற்கு நான் பொறுப்பல்ல, மீ ஜஸ்ட் பருப்பு அவ்வ்வ்

----------------------------------


24. “சசியை யாரும் பார்க்கக் கூடாது! “ அமைச்சர்களுக்கு ஜெ. அதிரடி # அம்மா, நானாவது பார்க்கலாமா? - சசிகலா கணவர் நடராஜன் கெஞ்சல்

-------------------------------------------


25. உங்க மனைவிகிட்டே பொய்யே பேச மாட்டீங்களாமே?

ஆமா, வாயே திறக்க மாட்டேன், எதுக்கு வம்பு? எதையாவது உளறிட்டா?

--------------------------------------



26. மேடம்.,நீங்க ஆன் லைன்ல இருக்கறது தெரியாம உளறிட்டேன் .

டேய் லூசு, நீ பெண் லைன்ல இருந்தாலும் அப்படித்தானே உளறிட்டு இருப்பே?

-------------------------------
http://gallery.southdreamz.com/cache/actress/swathi/extreme-masala-closeups/tamil-masala-actress-swathi-hot-images-1_720_southdreamz.jpg

டிஸ்கி -

ஈரோடு பதிவர் சந்திப்பு - வெளிவந்த பல பதிவுலக ரகசியங்கள் பாகம் 1

 

GHOST PROTOCOL -MISSION IMPOSSIBLE -4  - ஸ்டைலிஷ் ஆக்‌ஷன் பிரம்மாண்டம் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

 

Sunday, December 18, 2011

ஈரோடு பதிவர் சந்திப்பு - வெளிவந்த பல பதிவுலக ரகசியங்கள் பாகம் 1

 
 மேலே இருக்கும் மேடம் பொதிகை சேனல்ல செய்தி வாசிக்கறவங்களாம்


ஈரோட்டில் பதிவர் சந்திப்பு இன்று 18.12. 2011 ஞாயிறு வெற்றிகரமாக நடந்தது, 210 பேர் மொத்தம் வந்திருந்தாங்க.. அதுல வலைப்பதிவர்கள், ஃபேஸ் புக் , ட்விட்டர் நண்பர்கள் அனைவரும் அடக்கம்.. சென்னையிலிருந்து ஜாக்கிசேகர், கே ஆர் பி செந்தில், ஃபிலாஷபி பிரபாகரன், தண்டோரா மணீ ஜி , உண்மைத்தமிழன் , மெட்ராஸ் பவன் சிவகுமார்.. என நீளும் லிஸ்ட்.. வரிசையா பார்ப்போம்..

சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஃபோன், நாய் நக்ஸ் நக்கீரன் என்னமோ தீவிரவாதி ரேஞ்சுக்கு மிரட்டுனாரு.. நான் சிதம்பரத்துல ரயில் ஏறிட்டேன்.. ஈரோடு 8 மணிக்கெல்லாம் வந்துடுவேன், என்னை வரவேற்க ரெடியா இருந்துக்கோ என்றார்... அடங்கொன்னியா.. இவர் பெரிய சீமை சரக்கு ஷில்பாஷெட்டியா?ன்னு மனசுக்குள்ள நினைச்சுட்டு ஓக்கே டன் அப்டினு ஃபோன்ல சொன்னேன்.. 

அடுத்து ஆரூர் மூனா செந்தில்... 24 மணி நேரமும் மப்புல இருக்கற மாதிரியே டி பி ல ஃபோட்டோ வெச்சிருப்பாரே அவர் தான்..அவர், அண்ணே, நான் சேலம் தாண்டிட்டேன் ( அவ்வளவு பெரிய ஊரை எப்படித்தாண்டுனாரோ..?). 7.30 மணிக்கெல்லாம் ஈரோடு வந்துடுவேன்னாரு..இவர் எஸ் எம் எஸ் ல, ரொம்ப சிக்கனமாம், அடங்கொய்யால, சரக்கு அடிக்கறப்ப மட்டும் அந்த சிக்கனம் தெரியாதா?  ( ஆனா ஆள் தான் தாதா மாதிரி மிரட்ற டைப்ல உருவம், பச்ச மண்ணுய்யா .. செம ஜாலி டைப்)


சொன்ன படி 8 மணிக்கு டான்னு வந்த நக்கீரன் மிஸ்டு கால் குடுத்தார்.. நாமே மிஸ்டு கால் மன்னன், நம்ம கிட்டேயேவா?அப்டின்னு நானும் பதில்க்கு ஒரு மிஸ்டு கால் குடுத்தேன்.. அவர் சொல்ல வந்த தகவல் நான் ஈரோடு வந்துட்டேன்.. நான் சொன்ன தகவல் நான் ரயில்வே ஸ்டேஷன் வந்துட்டேன்.. வந்தாரை வாழ வைக்கும் விருந்தோம்பல் பண்புக்காக 80 பைசா செலவானாலும் பரவாயில்லைன்னு நானே அவர்க்கு கால் பண்ணி ?”யோவ் , எங்கேய்யா இருக்கே?” ந்னு கேட்டேன்.. அவர் நீங்க சொன்ன படி ரயில்வே ஸ்டேஷன் ஆர்ச் வந்துட்டேன்..ப்ளூ கலர் சர்ட் போட்டிருக்கேன்னு அடையாளம் சொன்னாரு.. 

ஆளை கண்டு பிடிச்சு அவரை பிக்கப் பண்ணிட்டு ( பாருங்க மகா ஜனங்களே.. நான் எந்த ஃபிகரை யும் பிக்கப் பண்ணலை, ஒன்லி ஆண் பதிவர்) பழைய பாளையம் பஸ் ஸ்டாப்க்கு போனோம்.. ரோட்டரி சி டி ஹால் தான் ஸ்பாட்.. அங்கே போய் விசாரிச்சோம்.. அப்போ நக்கீரன் கேட்டார்..

யோவ், நீங்க லோக்கல் தானே.. எங்கே மீட்டிங்க்னு கூட தெரியாதா?


தமிழ்வாசி பிரகாஷ் , மீ, நாய் நக்ஸ் பிளாக் நக்கீரன், மெட்ராஸ் பவன் சிவக்குமார்

 ஹி ஹி எனக்கு கோயில், ஸ்தலம், தியேட்டர்  மட்டும் தான் தெரியும், இந்த கிளப் மேட்டர் எல்லாம் நமக்கு தெரியாது”

சரின்னு சித்தோடு சங்கவிக்கு ஃபோனை போட்டேன்.. நிற்க.. சங்கவின்னா ஃபிகர்னு யாரும் நினைச்சுடாதிங்க, சங்கவி வலைப்பூ  சதீஷ் , இவருக்கும் கில்மாவுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு.. கில்மா படத்துக்குப்பேர் போன மலையாளப்படம் அஞ்சரைக்குள்ள வண்டி,  கில்மா போஸ்ட்க்கு பேர் போனது அஞ்சறைப்பெட்டி ஹி ஹி . நிறைய பேருக்கு குழப்பம் வரும் , ஈரோடு மாவட்டத்துலயே 3 சதீஷ் இருக்காங்க.. 1. நல்ல நேரம் சதீஷ் ( ஜோதிடர்) 2. சங்கவி ( சதீஷ் ,சித்தார், பவானி) 3. ஜேம்ஸ்பாண்ட் 007 சதீஷ் ( டெக்னிக்கல் & இமேஜ்  ஃபோட்டோஸ் கலெக்‌ஷன்ஸ் போடற சதீஷ் )

கோமாளி செல்வா , வெங்கட் , மீ

சித்தார் சதீஷ்கிட்டே மண்டபம் எங்கேன்னு கேட்டா அவர் நமக்கும் மேலே இருப்பார் போல.. பழைய பாளையம் பஸ் ஸ்டாப்ல யாரையாவது விசாரிங்க, சொல்வாங்கன்னாரு.. அடங்கோ , அது எங்களுக்குத்தெரியாதாய்யா.. நீங்க வேணும்னா ஈரோடு  கதிர்க்கு ஃபோன் போட்டு கேளுங்களேன்.. இதுல ஒரு ரகசியம், நான் அவுட் கோயிங்க் கால் பேசறதுன்னா ஏர் செல் நெம்பரா இருந்தா மட்டும் தான் பேசுவேன், ஏன்னா எனக்கு ஏர் செல் டூ ஏர் செல் ஃப்ரீ.. இண்ட்டர் நேஷனல் ஃபிகரா இருந்தாலும் வேற கம்பெனி ஃபோன் என்றால் மீ பேச லேது ஹி ஹி , கதிர்ட்ட இருக்கற ஏர்செல் பிசியாவே இருந்துச்சு.. இன்னொரு பி எஸ் என் எல் நெம்பர் எனக்கு தெரியாது.. 

ஃபிலாஷபி பிரபாகரன் , மீ,
 அப்புறம் டீக்கடைல விசாரிச்சு ஸ்பாட்டை கண்டு பிடிச்சு மண்டபம் போனா அங்கே ஆல்ரெடி 8 பேர் இருந்தாங்க.. ஒரு அவசர அறி முகம்.. யார் யார்னு எல்லாம் நினைவில்லை.. அப்போ ஈரோடு கதிர் முதுகை தொட்டார் ( என் முதுகைத்தான் ) டக்னு திரும்பறப்ப அவர் செல் ஃபோனை தட்டி விட்டுட்டேன்.. ஜஸ்ட் மிஸ் ஆகி இருக்கும் , நல்ல வேளை பிடிச்சுட்டாரு..

ஆரூர் மூனா செந்திலை பிக்கப் பண்ணிட்டு  வர்றேன் -னு கிளம்புனேன்.. அப்புறம் பார்த்தா அவர் பாட்டுக்கு இங்கே மண்டபம் வந்துட்டு மெசேஜ் அனுப்பறார்.. தமிழ்வாசி பிரகாஷ், வலைச்சரம் சீனா ஐயா ஆன் த வே-ன்னு சொன்னாங்க. நைட் 11 மணிக்கு ஈரோடு வந்து சேர்ந்தாங்க போல..

நான் சென்னிமலை கிளம்பி போய்ட்டேன், இன்னைக்கு காலைல 9.00 மணிக்கு பிரகாஷ் ஃபோன் பண்ணி நாங்க ஹால்க்கு வந்துட்டோம், நீங்க எப்போ வர்றீங்க?னு கேட்டாரு.. அரை மணி நேரத்துல அங்கே இருப்பேன்னேன்..

ரவி, ஜேம்ஸ் பாண்ட் சதீஷ், மீ, உண்மைத்தமிழன்

9.40 க்கு ஹால்க்கு வந்துட்டேன்.. பதிவுலகின் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சேகர் எண்ட்ரன்ஸ்ல ஒரு குரூப்போட பேசிட்டு இருந்தாரு. புதிய தலை முறை தலைமை நிருபர் அதிஷா இருந்தாரு.. அவர் கேட்ட கேள்வி என்னை அதிர வெச்சுட்டுது.. “ ஏன் என் ட்விட்டர் அக்கவுண்ட்டை பிளாக் பண்ணி வெச்சிருக்கீங்க? ஃபாலோ பண்ண முடியலை? உங்க பிளாக் எல்லாம் ரெகுலரா படிப்பேன், மொக்கை படமா விமர்சனம் போட்டு கொலையா கொல்வீங்களே?ன்னார்.. 
அய்யய்யோ, நான் எதும் பிளாக் பண்ணலை, என்னையும் அறியாம எதையாவது க்ளிக் பண்ணி இருப்பேன், நான் டெக்னிக்கல் மேட்டர்ல ரொம்ப வீக் ( மேட்டர்ல ரொம்ப ரொம்ப வீக் ), உடனடியா பார்க்கறேன்ன்னேன்.. 

யுவ கிருஷ்ணா அவர் பக்கத்துலயே இருந்தாரு.. ட்விட்டர்லயும் சரி, பிளாக்லயும் சரி 15 வருஷம் முன்னால எடுத்த ஃபோட்டோவை வெச்சிருக்காரு ஜனங்களே..  யாரும் ஏமாந்துடாதீங்க.. ( நாம எவ்வளவோ தேவலை , 4 வருஷம் முந்திய ஃபோட்டோ தான் வெச்சிருக்கோம்.. ) அவர்ட்ட கேட்டேன், 




அண்ணே, ஏன் பழைய ஃபோட்டோ வெச்சீருக்கீங்க?

 எனக்கு பழசுதான் ரொம்ப பிடிக்கும்னாரு ( இவர் நடு நிசி கீச்சு மன்னன் போல - மிட் நைட்ல கில்மா ட்வீட் தான் நநிகீ )

நக்கீரன், நான் 2 பேரும் அப்படியே கீழே இறங்கி வந்தோம், எதிர்ல கோகுலத்தில் சூரியன் வெங்கட், சேலம் தேவா வந்தாங்க

எனக்கு அடையாளம் தெரியலை.. நக்கீரன் தான் சொன்னாரு.. வர்றது வெங்கட் போல? 

இருக்காது, அவர் டி பி ல சிந்தாமணி கலர் சட்டை தானே போட்டிருப்பாரு?இதுல வேற கலர் போட்டிருக்காரு.. அதுவும் இல்லாம டி பி ல சிவப்பா இருக்காரு, இதுல கலர் கம்மியா இருக்கே?

கே ஆர் பி செந்தில் ,(எங்கே செல்லும் இந்தப்பாதை) , மீ


அப்புறம் பார்த்தா ஆள் வெங்கட் தான்.. சேலம் தேவா ட்விட்டர் டி பி ல குழந்தை மாதிரி முகத்தை வெச்சிருக்காரே.. ஆள் ஆறரை அடி , ஓங்காம அடிச்சாலே ஒன்றரை டன் வெயிட் வரும் போல அவ்வ்வ்வ்வ்வ்வ்

உண்மைத்தமிழன் என்னை காட்டி என்னமோ மிரட்ற மாதிரி என்னமோ சொன்னாரு.. கிட்டே போய் என்னண்ணே? அப்டின்னேன்
தம்பி.. ரொம்ப ஓவரா ஆடாதே, உன் பிளாக்ல இனிமே ஃபிகருங்கற வார்த்தையே வரக்கூடாது, எந்த விமர்சனம் எழுதுனாலும் நீ ஹீரோயினை ஃபிகர்னு தான் வர்ணீக்கறியாம், நிறைய புகார் வருது.. அப்புறம் ஏதாவது பிரச்சனைன்னா நாங்க காப்பாத்த மாட்டோம்னாரு.. 

லக்கி லுக் மப்பு கிக் யுவ கிருஷ்ணா, மீ

ஃபிலாசபி பிரபாகரன் கிட்டே மெட்ராஸ் பவன் சிவக்குமார் வந்திருக்காரா?ன்னு கேட்டு செம பல்பு வாங்குனேன்.. அடப்பாவமே , அரை மணி நேரமா பேசிட்டு இருந்திங்களே. அவர் தான் சிவக்குமார்னார். அடங்கோ

மணி காலை 10.45  விழா ஆரம்பிச்சுது.. சிறப்பு விருந்தினர் புத்தகத்திரு விழா புகழ் ஸ்டாலின் குணசேகரன்....

தொடரும்


GHOST PROTOCOL -MISSION IMPOSSIBLE -4 -4 - ஸ்டைலிஷ் ஆக்‌ஷன் பிரம்மாண்டம் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

 http://im.in.com/media/read/content/2011/Dec/mission-impossible-ghost-protocol-poster2_20111216085915_300x400.jpg

ஜேம்ஸ்பாண்ட்  படங்களுக்கு சமமாக கலக்கலான பிரமாண்டத்தோடு, மிக ஸ்டைலிஷாக  ஆக்‌ஷன் செய்வது, அலட்டிக்கொள்ளாமல் நடிப்பது டாம்க்ரூஸ் படங்களில் உள்ள மிகப்பெரிய பிளஸ்.. ஒரு சீன் கூட போர் அடிக்காமல் விறு  விறு திரைக்கதையில் படம் செம ஸ்பீடுதான்..

படத்தோட கதை என்ன? அமெரிக்காக்கும் ,ரஷ்யாக்கும் போரைத் தூண்ட சதி பண்ணி ஒரு ஏவுகணையை அமெரிக்கா மேல போட ஒரு தீவிரவாத கும்பல் சதி பண்ணுது ..... அத தடுக்கற வேலை ஹீரோ & டீம் கிட்ட ஒப்படைக்கறாங்க. இதுக்கு இடைல ரஷ்யா ல  க்ரெம்லின் அப்டீங்கற இடத்துல குண்டு வெடிக்குது. அதுக்கு காரணம் ஹீரோ &  டீம் தான்னு பழி விழுது.... அத எப்படி ஹீரோ & டீம் போக்கறாங்க.... அந்த ஏவுகணையை  வெடிக்க விடாம தடுத்தாங்களா ? இல்லையா?... என்பதை பர பர விறு விறுன்னு சொல்லி இருக்கற படம்...

ஓப்பனிங்க் ஷாட்ல ஒரு ஏஜெண்ட் அந்த ராக்கெட்டின் லாஞ்சிங்க் கோடு உள்ள ஃபைலோட ஓடறார்.. 2 பேர் துரத்தறாங்க.. அவர் அப்படியே மொட்டை மாடில இருந்து ஜம்ப் பண்ணி அப்படியே ஒரு யு டர்ன் அடிச்சு அந்த  2 பேரையும் ஷூட் பண்றதும், அவர் தரைல விழறப்ப பாரசூட் மாதிரி ஒரு ஸ்பாஞ்ச் மெத்தை அவரை காப்பதும் அப்ளாஸோ அப்ளாஸ் தியேட்டர்ல.. 

ஜெயில்ல இருந்து ஹீரோ தப்பிக்கற சீன் செம கலக்கல்.. அப்புறம் அந்த ஆஃபீஸ் ரிசப்ஷன் ஆளை டைவர்ட் பண்ண ஹீரோ & கோ  ஒரு மாயத்திரையை உருவாக்கி கொஞ்சம் கொஞ்சமா முன்னேறுவது விஞ்ஞான வித்தையின் உச்சம்.. 

ரஷ்ய ஆஃபீசர்ஸ் போல யூனிஃபார்மில்  அவங்க ஆஃபீஸ்க்கே போகும் ஹீரோ வேலை முடிந்ததும் அதே யூனிஃபார்மை கழட்டி திருப்பி போட்டு ஜெர்கின் கோட்டாக மாற்றுவது , போகிற போக்கில் பிளாட்ஃபார்ம் கடையில் வைக்கப்பட்ட ஷூவை லபக்குவது  செம டைமிங்க்..

http://www.filmofilia.com/wp-content/uploads/2011/11/ghost_protocol_cp_1.jpg
இப்போ நான் சொல்ற சீன் அஜித் நடிக்கும் பில்லா -2 படத்துல அப்படியே சுடப்போறாங்க, எல்லாரும் நோட் பண்ணிக்குங்க.. 

ஒரு ஹோட்டல்ல தீவிரவாத கும்பலின் பரிவர்த்தனை நடக்குது..அதாவது ஹோட்டல்ல ரூம் நெம்பர் 189-ல வில்லி ராக்கெட் கோடு லாஞ்ச் சீக்ரெட் கோட் கொண்ட ஃபைலை கொண்டு வர்றா.. வேற 2 டெரரிஸ்ட் டைமண்ட்ஸ் கொண்டு வர்றாங்க. இவங்க ஒருவரை ஒருவர் முன்னே பின்னே பார்த்ததே இல்ல..

ஹீரோ & டீம் பிளான் என்னன்னா ரூம் நெம்பரை மாத்திடறாங்க..டம்மி ரூம் இப்போ 189. வில்லியை ஹீரோவும், நண்பரும் சந்திக்கறாங்க.. அவ கிட்டே நீங்க முதல்ல உங்க டாக்குமெண்ட்ஸை காட்டுங்க, செக் பண்ணிட்டு வைரம் எக்ஸேஞ்ச்னு சொல்றாங்க.. அவ காட்டறா.. ( டாக்குமெண்ட்ஸை)

ஹீரோவோட ஒரு கண்ல எக்ஸ்ரே மாதிரி ஒரு காண்டாக்ட் லென்ஸ் பொருத்தப்பட்டிருக்கு. அது அப்படியே வில்லி காட்டுன் 13 பக்கங்களையும் ஜெராக்ஸ் எடுக்குது.. 

இன்னொரு ரூம்ல ஹீரோயின் அந்த 2 தீவிரவாதிங்களை சந்திக்கறா .அவங்க கிட்டே நீங்க உங்க வைரங்களை முதல்ல காண்பிங்க, நான் அப்புறம் டாக்குமெண்ட்ஸ் தர்றேன்கறா.. அவங்க வைரங்களை காட்றாங்க.. அப்போ ரூம்க்கு ஹீரோவோட ஆள் சர்வர் கம் ரூம் பாய் மாதிரி வந்து அந்த டைமண்ட்சை எடுத்து வேற டைமண்ட்ஸை அங்கே மாத்தி வெச்சுடறா.. 

இங்கே ஹீரோயின் வெச்சிருக்கற சூட் கேஸ் ல அங்கே ஹீரோ குரூப் ஸ்கேன் பண்ணி அனுப்புன ஜெராக்ஸ் ஆஃப் த டாக்குமெண்ட்ஸ் அப்படியே பிரிண்ட் அவுட் ஆகுது.. 

என்ன ஒரு பிரில்லியண்ட் ஐடியா .. படத்தில் பார்க்கும்போது வாவ் என பாரட்டத்தோன்றும்.. 

இடைவேளைக்குப்பிறகு கதை துபாய்க்கும், இந்தியாவில் மும்பைக்கும் பயணிக்குது.. 

http://www.hollywoodnews.com/wp-content/uploads/2011/12/2011-mission-impossible-ghost-protocol-tom-cruise-paula-patton-600x300.jpg
துபாய் பாலைவனத்தை ஏரியல் வியூவில் காட்டும் அந்த சீன் செம..  மும்பை பார்ட்டியில் அனில் கபூர்  ஒரு சீன்ல வர்றார்.. அவரை மயக்க ஹீரோயின்  செய்யும் சரச சல்லாபங்கள் நம்ம ஊர் நமீதா மாதிரி..

136 அடுக்கு மாடியில் ஹீரோ செய்யும் சாகசங்கள் என்னதான் கிராஃபிக்ஸ் கலந்து இருந்தாலும் மெய் சிலிர்க்க வைக்கிறது..


காமெடியான சில வசனங்கள்

1. ஒரு முக்கியமான ஃபைலை தொலைச்சாச்சு, அதை தேடிட்டு இருக்கேன்..

ம், நீதானே தொலைச்சே, நீயே தேடு.. 

2.  என்ன? இங்கே இருந்தா குதிக்கப்போறே? எலும்பு கூட தேறாது.. குதி கண்ணா குதி..

 இல்ல, அங்கே இருந்து பார்த்தப்ப ஹைட் கம்மியா இருந்தா மாதிரி தோணுச்சு.. 

3.  அட, நீயா? நீ செத்துடேன்னு நினைச்சோம்.. 

இன்னும் இல்ல. இனிமே தான் சாகனும்.. 

4.  தேவையானதை மட்டும் எடுத்துக்குங்க, கிளம்பலாம்.

அப்படியா?

ஆமா, ஆனா எந்த நேரத்துலயும் எது வேணாலும் தேவைப்படலாம்

5. நான் இந்த டீம் ஒர்க்ல என்ன வேலை பண்ண?

இதென்ன கேள்வி? எடுபுடி வேலை தான்.. 

ரொம்ப சந்தோஷம்.. \

 http://www.blackfilm.com/read/wp-content/uploads/2011/06/Mission-Impossible-Ghost-Protocol-44.jpg


6. இந்த கிளவுசை போட்டுக்கோ, ஸ்பைடர் மேன் கிளவுஸ் மாதிரி, சுவர்ல பல்லி மாதிரி போலாம், இதுல நீலக்கலர் லைட் எரிஞ்சா பேட்டரி பலமா இருக்குன்னு அர்த்தம்.. 

ம் ம் , ஓக்கே, சிவப்பு கலர் லைட் எரிஞ்சா?

உனக்கு ஆப்புன்னு அர்த்தம்.. 

7. இன்னும் 28 நிமிஷம் தான் இருக்கு..

டேய், என் வாட்சும் ஓடுது, நானே டென்ஷன்ல இருக்கேன் , நீ வேற கவுண்ட் டவுன் குடுத்து கடுப்பைக்கிளப்பாதே..

8.  அடடா, உயரத்துல இருந்து ஜம்ப் பண்ண ட்ரை பண்னேன், இந்த ரோப் நீளம் பத்தலை.. 

அதான் பார்த்தாலே தெரியுதே, அந்தரத்துல தொங்கறியே.. 

9. ஒரு கண்ல காண்டாக்ட் லென்ஸ் பொருத்தறோம், அட்ஜஸ் பண்ணிக்க,

ஹூம், இந்த ஒத்தை கண்ணை வெச்சுக்கிட்டு என்ன பண்னப்போறோமோ?

10.  அப்பாடா, தாங்க் காட்( GOD)

iஇப்போ உன்னை சுடறேன், அந்த நன்றியை கடவுள்ட்ட நேர்ல நீயே போய் சொல்லிக்கோ.. 

11.  நான் விக்க வந்திருக்கேன்
எதை?


என் எதிர்காலத்தை

புரியலை

அணு ஆயுதப்போருக்கான அடிப்படையை

12.  என்னால எந்த ஆபத்தும் உனக்கு இல்ல.. 

இப்போ இல்ல.. 

13. ஹீரோயின் - உலகத்துலயே பெஸ்ட்  ஆர்ட்ஸ் கலெக்‌ஷன் உங்க கிட்டே இருக்குன்னு சொன்னாங்க 

வில்லன் - என் கூட தனியா வந்தா  மட்டும் காட்டறேன் ( அடேய்)

14.  அடுத்த தடவை ஆக்‌ஷன் ல ஆளை மயக்கர வேலையை நான் செய்யறேன், அதுதான் ஈஸி, இது ரொம்ப ரிஸ்க் பிடிச்ச வேலைப்பா

http://hotnewshome.com/wp-content/uploads/2011/12/mission-impossible-ghost-protocol-uk-20111213-115229-486.jpg

படத்துல 2 கிளாமர் குயினுங்க, ஹீரோயின் லோகட் காட்டி மயக்குது, வில்லி எதையுமே காட்டாத மயக்குது. ஹி ஹி ஹி 

ஹீரோயின் ஜாக்கிசான் மாதிரி ஃபைட் எல்லாம் போடுது அவ்வ்வ் 

ஹீரோவுக்கு வயசானது முகத்துல அப்பட்டமா தெரிஞ்சாலும், அவரோட சுறு சுறுப்பு கொஞ்சம் கூட குறையல.. 

கல்ல்கலான ஆக்‌ஷன் படம் டோண்ட் மிஸ் இட்.. ஃபேமிலியோட பார்க்கலாம்.. டீசண்ட்டா தான் இருக்கு..

ஈரோடு வி எஸ் பி ல படம் பார்த்தேன்

http://www.shockya.com/news/wp-content/uploads/mission-impossible-ghost-protocol-blue-dress.jpg

டிஸ்கி -  1.

உச்சிதனை முகர்ந்தால் - ஈழத்தின் கண்ணீர் கவிதை -சினிமா விமர்சனம்

 

2.

மௌனகுரு - நேர்த்தியான சஸ்பென்ஸ் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

 

3.

மம்பட்டியான் - சினிமா விமர்சனம்

Saturday, December 17, 2011

உச்சிதனை முகர்ந்தால் - ஈழத்தின் கண்ணீர் கவிதை -சினிமா விமர்சனம்

http://pirapalam.com/wp-content/uploads/2011/12/2-SHEET-1-1-1024x756.jpgஈழத்தில் நம் ரத்தங்கள் பட்ட கஷ்டங்களை பிரச்சார நெடி இன்றி ஒரு உண்மை சம்பவத்தின் திரைக்கதை ஆக்கல்  மூலம்  படம் ஆக்கும் முயற்சியில் ,எந்த விதமான வியாபார நோக்கம் இல்லாமல், கமர்ஷியல் சேர்ப்பு இல்லாமல்  கண்களை நனைக்க வைத்து , இதயத்தை கனக்க வைக்கும் ஒரு செல்லுலாயிடு சிறுகதை இந்த உச்சிதனை முகர்ந்தால்...

ஈழத்தில் நடக்கும் அநியாயங்களை கண்ணுற்று தமிழ்நாட்டு மீடியாக்களுக்கு தகவல் சொல்லும்  சமூக ஆர்வலரான சத்யராஜ் - உயிர் சங்கீதா தம்பதியிடம் தஞ்சம் அடைகிறாள் 13 வயது சிறுமியும், அவள் அம்மாவும்.அவர்கள் பாஸ்போர்ட் , விசா எதுவும் இல்லாமல் சட்டத்துக்கு புறம்பாக தமிழகம் வர்றாங்க.. காரணம் அந்த 13 வயது குழந்தையின் வயிற்றில் இன்னொரு 5 மாத குழந்தை.... 

சிங்கள வெறியர்களால் கேங்க் ரேப் செய்யப்பட்ட அந்த புனிதா தான் கர்ப்பம் ஆனதே தெரியாமல் இருக்கார்.. ஹாஸ்பிடல்ல செக் பண்ணி அபார்ஷன் பண்ண ஆலோசனை கேட்கறப்ப அது முடியாது, ஆபத்துன்னு தெரியுது.. புனிதாவோட அம்மாவே தன் மகளுக்கு விஷம் வெச்சு கொல்ல முயற்சி செய்யறார்.. ஆனா காப்பாத்திடறாங்க.. 
இப்போ இலங்கைல இருந்து தகவல்,சிங்களர்களால் புனிதாவோட அப்பா கொல்லப்பட்டதா .. புனிதாவோட அம்மா மட்டும் கிளம்பி போறாங்க.. அப்பா இறந்த மேட்டர் குழந்தைக்கு(புனிதா) தெரியாது.. 

விமான சத்தம் கேட்டாலோ, பூட்ஸ் சத்தம் கேட்டாலோ புனிதாவுக்கு பயம். அந்தளவு பாதிக்கப்பட்டிருக்கா. சங்கீதாவின் அம்மா ஊர்ல இருந்து மாசமா இருக்கற மகளை பார்க்க வீட்டுக்கு வர்றாங்க, சங்கீதா நிறை மாச கர்ப்பிணி.. அவங்க வீட்ல ஈழப்பொண்ணு இருக்கறது அவங்களுக்குப்பிடிக்கலை..



http://cinesouth.com/images/new/09122011-THN10image1.jpg

ஒரு சமயம் சத்யராஜ்-சங்கீதா தம்பதி பீச்சுக்கு புனிதாவோட போறப்ப புனிதா மிஸ் ஆகி 4 ரவுடிங்க கிட்டே மாட்டிக்கறா.. அவ கர்ப்பம்னு தெரிஞ்சும் அவங்க ரேப் பண்ண ட்ரை பண்றப்ப ஒரு திருநங்கை அவளை காப்பாத்தறாங்க.. 

புனிதாவுக்கு  இப்போ ஹாஸ்பிடல்ல டெஸ்ட் எடுக்கறப்ப ஒரு அதிர்ச்சி செய்தி.. ஹெச் ஐ வி பாசிட்டிவ்.. அதாவது புனிதாவுக்கு எய்ட்ஸ்..  இடைவேளை
சங்கீதாவோட அம்மா  பயங்கர ஆர்ப்பாட்டம் பண்றாங்க.. எய்ட்ஸ் உள்ள பொண்ணு நம்மோட இருக்கக்கூடாதுன்னு.. அவங்க வாக்குவாதத்தை கேட்டு புனிதா  தன்னை காப்பாத்துன திருநங்கை கிட்டே தஞ்சம் புக , இங்கே இவங்க அவளை தேடி பரி தவிக்கறாங்க

சங்கீதாவுக்கு சுகபிரசவம் ஆகிடுது.. புனிதாவுக்கு குழந்தை பிறக்குது, ஆனா புனிதா தன் புனித பயணத்தை பூமில இருந்து சொர்க்கத்துக்கு தன் அப்பா போன இடத்துக்கு போயிடறா.. அவ குழந்தையை சத்யராஜ் - சங்கீதா தம்பதி வளர்க்கறாங்க..

முதல்வேளையா புனிதவதியாக நடித்த நநிகாவுக்கு திருஷ்டி சுற்றிப்போட வேண்டும்.. ஈழப்பெண்ணை கண் முன் நிறுத்தும் நிறம், நடிப்பு, வெள்ளந்தி சிரிப்பு என மனசுக்குள் சம்மணம் போட்டு அமர்ந்து விடுகிறார்.அவர் தெருவில் சின்னக்குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்க்கும்போதும் சரி,சத்யராஜ் வீட்டு நாய்க்கு அமுதன் என தமிழ்ப்பெயர் வைத்து இன்றி விடும்போதும் சரி. இன்ஸ்பெக்டர் சீமான் வீட்டுக்குழந்தைகளுடன் பழகும்போதும் சரி கலக்கலான நடிப்பு.. 


விமான சத்தம் கேட்டால் பயந்து நடுங்குவது, ரவுடிகளை பார்த்து மிரள்வது என நவரச நடிப்பை அள்ளித்தெளித்து இந்த ஆண்டின் சிறந்த மழலை விருதுக்கு தகுதி பெறுகிறார்.. 

அவர்க்கு எயிட்ஸ் நோய் முற்றி  ரத்த வாந்தி எடுக்கும்போதும், பிரசவ வலியில் துடிக்கும்போதும் ஆண்களின் கண்களையும் கலங்க வைக்கிறார்.

2வது பாராட்டு வசன கர்த்தா தமிழருவி மணியன்க்கு..  வாள் முனையை விட கூர்மையான , வேல் முனை போல் குத்தும் கருத்தான் வசனங்கள்.. பல இடங்களில் இலங்கை அரசை பழிக்கும்போது ஏன் தேவை இல்லாமல் சென்சார் வெட்டோ?இலங்கையில் வெட்டினால் ஓக்கே, இங்கே ஏன் வெட்ட வேண்டும்?

3 வது பாராட்டு சத்யராஜ் சங்கீதா ஜோடிக்கு.. ஏற்ற பாத்திரம் அறிந்து இருவரும் அடக்கி வாசித்து பாந்தமாக நடித்திருக்கிறார்கள்.. அம்மாவுடன் வாதிடும் காட்சியில் சங்கீதா பெண் புலியாக சீறுவது அற்புதம்... சீமான் சில காட்சிகளில் வந்தாலும் நிறைவு..

திருநங்கையாக வருபவர், க்ளை மாக்சில் ஆட்டோ டிரைவராக வருபவர்,டாக்டர் கேரக்டர் , நாசர் என பட்டியல் இட்டால் ஏகப்பட்ட பேர் வருவாங்க.. எல்லார் நடிப்பும் கன கச்சிதம்.

இமானின் இசையில் 4 பாடல்கள் அருமை.. அதுவும் இருப்பாய் தமிழா நெருப்பாய். இழிவாய் கிடக்க நீ என்ன செருப்பா பாடல் தமிழனின் தன்மானத்தை, இனமான உணர்வை தூண்டும் காசி ஆனந்தனின் வரிகள் கலக்கல்.. படமாக்கப்பட்ட விதம் அருமை.. 

ஏனோ ஏனோ இது ஏனோ , உச்சிதனை முகர்ந்தால், சுட்டிப்பெண்ணே ,சுட்டிப்பெண்ணே ஒரு கட்டுக்காவல் காற்றுக்கு இல்லை  பாடல் காட்சியில் போன்ற பாடல்கள் அழகிய கவிதை.. 



http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=12502&option=com_joomgallery&Itemid=77

 இயக்குநர் தவிர்த்திருக்க வேண்டிய சில தவறுகள்

1. எயிட்ஸ் நோய் வந்தால் நல்ல ட்ரீட்மெண்ட் எடுத்தால் 10 வருடங்கள் வரை குறைந்தபட்சமும், அதிக பட்சம் 30 வருடங்கள் வரை உயிர் வாழலாம் என  மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால் படத்தில் புனிதா எயிட்ஸால் இறப்ப்பதாக வருகிறது.. பிரசவத்தின்போது இறப்பதாக காட்டி இருக்கலாம்.. இன்னும் 2 நாள் தான் அவருக்கு கெடு என டாக்டர் சொல்வது எயிட்ஸ் நோயாளிகளுக்கு பீதியை அளிக்கும்.. 

2. அதே போல் எயிட்ஸ் உள்ள ஒரு நபரால் உறவு கொள்ளப்படும் ஒருவர் 3 மாதங்களூக்குள் எயிட்ஸால் பாதிக்கப்படுவது உறுதி.. நோயால் பாதிக்கப்பட்ட அறி குறிகள் 2 வது மாதத்தில் இருந்தே தெரிய ஆரம்பிக்கும், ஆனால் நோய் வந்த 5 மாதம் கழித்தும் புனிதாவை 3 வெவ்வேறு தருணங்களில் செக் செய்யும் டாக்டர்கள் நோய் பற்றி அறியாமல் 4 வது தடவை செக் செய்யும்போதுதான் நோய் இருப்பதை அறிகிறார்கள்.. அது எப்படி? கர்ப்பிணி பெண்ணுக்கு பிளட் செக்கப் முதல்ல செய்வாங்களே?

3. மிக இள வயதுப்பெண்ணான புனிதா தான் கர்ப்பமாக இருப்பதே தெரியாதவராக காட்டப்படுகிறது.. 8 மாதம் வரை கூட அப்படி அறியாமல் இருந்த நபர்கள் உண்டு, ஆனால் புனிதா  ஆல்ரெடி கர்ப்பமாக இருக்கும் சங்கீதா வீட்டில் தான் வளர்கிறார்.. தன் வயிறு பெரிதாக இருக்கு என புலம்புகிறார்.. சங்கீதா கர்ப்பம் என்பதை அறிகிறார், ஆனா அவர் கர்ப்பம் என்பது மட்டும் தெரியாதா?



http://pirapalam.com/wp-content/flagallery/uchithanaimuharnthaal/18.jpg

4. சங்கீதாவுக்கு குழந்தை பிறந்த 5 வது நிமிஷத்தில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருமிக்கொண்டு இருக்கும் புனிதா அந்த குழந்தை அருகில் செல்ல டாக்டர்கள் விடுவது எப்படி? ( நோய்த்தொற்று அட்டுக்குழந்தைக்கு ஏற்படும் என சாதா தும்மல், இருமல்வாலாக்களையே அனுமதிக்க மாட்டாங்க)

5. சுட்டிப்பெண்ணே ,சுட்டிப்பெண்ணே ஒரு கட்டுக்காவல் காற்றுக்கு இல்லை  பாடல் காட்சியில்  பெண் விடுதலைப்புலிகள் 10 பேரை குரூப் டேன்சர்ஸ் ரேஞ்சுக்கு ஆட விட்டதை தவிர்த்திருக்கலாம்.. 

6.  அப்புறம் எல்லா சீன்களீலும் காமிரவும் சரி, எல்லா கேரக்டர்களும் சரி புனிதாவை ஃபோக்கஸ் பண்ணி, அதீத இரக்கம் வரவழைக்க பிரம்மப்பிரயத்னம் செய்யறாங்க, இயல்பா விட்டிருக்கலாம்.. 

7. இலங்கையில் இருந்து இந்தியா வரும் பெண் ஒரு பணக்கார வீட்டில் தங்குவதால் அவருக்கு எல்லா வசதியும் கிடைத்து விடுகிறது, ஆனால் உண்மை வாழ்வில் அவர்களுக்கு போக்கிடம் கிடையாது.. ஒரு ஏழை தம்பதியாக சத்யராஜ் - சங்கீதாவை காட்டி இருந்தால் புனிதாவின் மேல் இரக்கம் வர இன்னும் நல்ல சந்தர்ப்பங்கள்...



http://eelamstar.com/wp-content/uploads/2011/10/ochithanai_mugarnthal.png


வணீக ரீதியாக இந்தப்படம் வெற்றி அடைய தமிழனாய் உணர்வு கொண்ட அனைவரும் பார்க்க வேண்டும்.. ஈழத்தமிழர்கள் வாழ்வை, அவர்கள் படும் கஷ்டங்களை நாம் உணர நல்ல வாய்ப்பு..

ஈழப்பிரச்சனையை வைத்து பிழைப்பு நடத்தும் ஓட்டுப்பொறுக்கிகள் கழற்றி வைத்திருக்கும் தங்கள் மன்சாட்சியை மீண்டும் பொருத்தி தங்கள் குடும்பத்துடன் இப்படத்தை காண வேண்டும், சொல்ல முடியாது கல்லுக்குள் ஈரம் கசியலாம்

பாலை போல இந்தப்படம் மதிப்பெண்ணுக்கு  அப்பாற்ப்பாட்டுத்தான் விகடன் கிரீடம் சூட்டும்

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 50

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - நன்று

சி.பி கமெண்ட் -  கண்களை நனைய வைக்கும் அற்புத சிறுகதை

 ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் படம் பார்த்தேன்

 டிஸ்கி -வசன கர்த்தா தமிழருவி மணியன்-ன் கலக்கலான வசனம் திங்கள் கிழமை தனிப்பதிவு-

தமிழருவி மணியன் -ன் எழுச்சியான ,உருக்கமான வசனங்கள் இன் உச்சிதனை முகர்ந்தால்



http://www.koodal.com/cinema/koodal_reel/2011/Uchithanai%20Mukarnthal-reel.jpg

டிஸ்கி 2 -

மௌனகுரு - நேர்த்தியான சஸ்பென்ஸ் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

 

மம்பட்டியான் - சினிமா விமர்சனம்

 

GHOST PROTOCOL -MISSION IMPOSSIBLE -4 -4 - ஸ்டைலிஷ் ஆக்‌ஷன் பிரம்மாண்டம் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்