Showing posts with label வடிவேல். Show all posts
Showing posts with label வடிவேல். Show all posts

Tuesday, April 24, 2012

இம்சை அரசன் 23 ம் புலிகேசி பாகம் 2 - வடிவேல் பேட்டி - கெடாவெட்டு

http://www.gingly.com/grpimg/201006211823vadivelu-attitude.jpg 

ரெடி... டேக்... ஆக்ஷன்!’ சொல்கிறார் அந்த 75 வயது லேடி டைரக்டர்.


 ''எட்டு மாதம் சுமந்து என்னை ஈன்றெடுத்த தாயே'' - புலிகேசி வசனத்தைப் பேசிப் புல்லரிக்கவைக்கிறார் வடிவேலு. சுற்றி வேடிக்கை பார்க்கும் உறவுகள் கைதட்டி ஆரவாரிக்கிறார்கள்.


''ஏய் வடிவேலு... சொன்னாலும் சொல்லாட்டியும் நீ எட்டு மாசத்துலயே பொறந்த புள்ளதான். புலிகேசி டைரக்டரு அவரா இந்த வசனத்த எழுதினாரா... இல்ல நீயா எடுத்து வுட்டியா?'' - அந்த 75 வயது டைரக்டர் விழுந்து விழுந்து சிரிக்கிறார். அவர் வடிவேலுவின் தாய் சரோஜினி.


சி.பி - அவசரத்துல பொறந்த பய புள்ளையா? அதான் இப்படி அவதிப்படுது அய்யோ பாவம்..

''ஆத்தா... எந்தெய்வமே... ஒம் மொகத்துல இப்பத்தானே சிரிப்பைப் பாக்குறேன். ஊரு ஒலகத்தையே சிரிக்கவெச்ச நானு, ஓடுற ஓட்டத்துல ஒங்கள எல்லாம் மறந்துட்டேன் அம்மா. ஒன்னைய ஆஸ்பத்திரிக்கு அள்ளிட்டுப் போனப்பதான் 'பெத்தெடுத்த இந்த ஆத்தாவை விட்டுட்டா காலுல றெக்கையக் கட்டிக்கிட்டுப் பறந்தோம்’னு மனசு குறுகுறுத்துச்சு.


 'எங்களோட வைத்தியம் முடிஞ்சிடுச்சு. இனிமே உங்க வைத்தியந் தான் வடிவேலு, அம்மாவுக்கு முக்கியம்’னு மதுரை அப்போலோ ஆசுபத்திரி டாக்ட ருங்க சொன்னப்பதான் எம் மனசு குளிர்ந் துச்சு. எந்தாயக் காப்பாத்துற பாக்கியம் எனக்கு அமையணும்கிறதுக்காகவே இறைவன் இப்படியரு இடை வெளியை உண்டாக்கி இருக்கான்.


 வழக்கம்போலவே பரபரப்பா சுத்திக் கிட்டு இருந்திருந்தா இன்னிக்கு ஒம் பக்கத்துல உக்காந்து சிரிக்கவெக்கிற பாக்கியம் அத்துப்போயிருக்கும் என்னை யப் பெத்த அம்மா!''


வடிவேலு கண் கலங்க, ஆறுதலாக அவரை மார்போடு அணைத்துக்கொள்கிறார் 

சரோஜினியம்மா.


கடந்த இரு வாரங்களாக அம்மா முன்னால் தன் காமெடிக் காட்சிகளை நடித்துக்காட்டி, அவருக்குச் சிரிப்பு வைத்தியம் செய்துகொண்டு இருக்கிறார் வடிவேலு.


''என்ன கையப் புடிச்சு இழுத்தியா..?''


''இதெல்லாம் நரம்பு இல்ல தாயி... நீங்க போட்ட நூடுல்ஸு...''


''சங்கமே அபராதத்துலதான் ஓடிக்கிட்டு இருக்கு...''


பலவித பாப்புலர் பஞ்ச்சுகளையும் வடிவேலு அள்ளிவிட... வயிறு வெடிக்கிறது சுற்றி அமர்ந்திருப்பவர்களுக்கு.


http://flashnewstoday.com/wp-content/uploads/2010/03/Vadivelu-.jpg
1. ''பரபரப்பா நடிச்சுக்கிட்டு இருந்த வடிவேலு இப்படி வீட்டுக்குள்ளேயே இருக்கிறதில் உங்களுக்கு வருத்தம் இல்லையா?'' சி.பி - நல்ல வேளை வீட்டுக்குள்ளேயே இருக்காரு.. வெளீல வந்தா கைமா தான்.. ஒரு பக்கம் கேப்டன் ஆட்கள், இன்னொரு பக்கம் அம்மா ஆட்கள்..

- சரோஜினி அம்மாவிடம் கேட்டேன்.

''அவன் நடிச்சு ஓய்ஞ்சிட்டதா நீங்க நெனைக்கிறீங்களா... அடப்போங்கப்பா. அவன் சம்பாதிக்க வேண்டிய புகழும் பணமும் இனிமேதான் இருக்கு. இதுவரைக்கும் அவன் நடிச்சதெல்லாம் பத்து சதவீதந்தான்.


சி.பி - அண்ணன் இதுவரைக்கும் வாங்குன அடி எல்லாம் சாதா, இனிமே  வாங்கப்போறதுதான் ஸ்பெஷல் சாதா. ஹி ஹி 

 இனிதான் இருக்கு பாக்கி தொண்ணூறும்! எம் புள்ள திரையில நடிச்சதை நான் பாத்திருக்கேன். ஆனா, நேர்ல அவன் பண்ற கூத்தும் கும்மாளமும் கொஞ்சமா, நஞ்சமா? எங்க வீட்டுக்காரரு இறந்தப்ப புள்ளைங்க எல்லாரும் வருத்தப்பட்டாக. அப்போ நான் வடிவேலுகிட்ட சொன்னேன், 'அப்பா செத்துட்டார்னு அழாதப்பா... நம்மளோட கஷ்டத்தை எல்லாம் அவரு அங்கே கொண்டுக்கிட்டு போயிட்டாருனு நெனச்சு நிம்மதியா இரு’னு. 


இப்பவும், 'இந்த ஓய்வு நல்லதுக்குத் தான்பா... உனக்குக் கெடுதல் பண்றவங்கள நம்ம குலசாமி அய்யனார் பாத்துப்பார்’னு எம் புள்ளைக்குத் தைரியம் சொல்றேன். எம் புள்ள மார்க்கெட்டு போயி வீட்ல கெடக்கல தம்பி. அது இப்போ கோடம் பாக்கத்துக்கு லீவு விட்டிருக்கு... அம்புட்டுத் தேன்!'' - வாய்கொள்ளாத பூரிப்பில் சிரிக் கிறார் சரோஜினி.


''ஒம் பேட்டி போதும்மா... இனி நான் பேசிக்கிறேன்''- வான்ட்டடாக வருகிறார் வடிவேலு.


2. ''எப்போதான் ரீ - என்ட்ரி கொடுக்கப்போறீங்க?''


சி.பி - அதுதான் கோடம்பாக்கத்துல  நோ எண்ட்ரி கொடுத்துட்டாங்களே.. எப்படி ரீ எண்ட்ரி வர..?

''கொடுப்போம்ணே... ஏன் அவசரப்படணும்? இப்பவும் நிறையப் பேர் கூப்பிட்டுக்கிட்டுதான் இருக்காங்க. 


சி.பி - என்னை ஏவி எம் ல கூப்பிட்டாங்க. கோச்சடையான் டீம் கூப்பீட்டாக. ஆனா நான் ரொம்ப பிஸி.. ஹிஹி

ஆனா, இப்போதைக்கு காமெடி ரோல் பண்ண எனக்கு விருப்பம் இல்லண்ணே. இத்தன நாள் இடைவெளிக்கு அப்புறம் வாரப்ப... நம்ம என்ட்ரி டெரரா இருக்கணுமில்ல? அதுக்காகத்தான் ஹீரோ ரோல் பேசிக்கிட்டு இருக்கேன். புலிகேசி பார்ட் டூ ஒருபக்கம்... தெனாலிராமன்கிற கதை ஒரு பக்கம்னு டிஸ்கஷன் ஓடிக்கிட்டு இருக்கு. சம்மர் முடியட்டும்ணே... மக்களுக்கு பம்பர் பரிசு கொடுத்திருவோம்!''


சி.பி - சம்மர் முடிஞ்சா ராகு காலம் ஸ்டார்டிங்க்கா? இம்சை அரசன் ஓடுச்சு ஓக்கே.. இந்திர லோகத்தில்  நா அழகப்பன் ஓடலை, ஏன்? ஏதோ டிஃப்ரண்ட்டா இருந்தால் முத படம் ஓடிடும், அதே மாதிரி 2 வது படமும் எடுத்தா ஓடுமா?

http://www.extramirchi.com/wp-content/uploads/2008/02/senthil-son-marriage.jpg


3. ''பெத்த அம்மாவைத் தாங்குதாங்குனு தாங்குறீங்க... ஆனா, முதல்வர் அம்மாவைப் பத்தி எதுவுமே சொல்றது இல்லையே... அவங்க ஆட்சி எப்படி இருக்கு?''


சி.பி - ம்க்கும், கேள்வி கேட்டு அவரை வம்புல சிக்க வைக்கப்பார்க்கறீங்க.. அம்மாவுக்கு ஆதரவா பேசுனா அழகிரி அண்ணன் கோபப்படுவார், எதிரா பேசுனா ஓ பி எஸ் கோபப்படுவார்.. 


''ஆட்சியைப் பத்தியெல்லாம் பேசுற நிலையில நான் இல்லண்ணே..சி.பி - ஹா ஹா ஹா அடி பலமோ.?

 ஆனா, அவங்களைப் பத்தி நச்சுனு நாலே வார்த் தையில நான் சொல்ல நினைக்கிறது இது தான். காலுக்கு உதவாத செருப்பை கழட்டி எறியுறதுல அவங்க கரெக்டான முதலமைச்சர்.''சி.பி - அண்ணே, செருப்புன்னு நீங்க சொல்றது நெருப்புண்ணே.. கருப்பு நெருப்பு.. வீட்டுக்கு வெளீல போறப்ப செருப்பு இல்லாம போக முடியாது. கேவலமா பேசாதீங்க. 

4. ''தேர்தல் வெற்றிக்குக் கூட்டணிதான் முக்கியம்கிற இந்தக் காலகட்டத்துல ஒருத்தங்க வேண்டாம்னா, அடுத்தவங்க சேர்த்துக்கப்போறாங்க. அப்படி ஒண்ணு நடந்தா?''''அது காலுக்கும் கேடு... அதை மாட்டிக்கிடற ஆளுக்கும் கேடு!''
5. ''நீங்க இப்படிச் சொல்றீங்க. ஆனா, 'என்னை அடக்க நினைப்பவர்கள் அழிந்துபோவார்கள்’னு சொல்றாரே விஜயகாந்த்?''


''ஏங்காதுல அப்புடி ஏதும் விழலையேண்ணே... ஏங்காதுல கேட்குற குரல் என்ன தெரியுமாண்ணே... 'நா அடங்கிப் பல மாசமாச்சு... தேவையில்லாம ஏன் என்னையவே சீண்டுறீங்க. இது நல்லது இல்ல... யாருக்கு, எனக்கு!’ அப்புடின்னுதான் யாரோ புலம்புற மாதிரி இருக்கு. 


எம் படத்துல பாக்குற அத்தனை கேரக்டர்களையும் ஒருசேரப் பாக்குற மாதிரி இருக்குண்ணே... ஸ்நேக் பாபு, நாய் சேகர், கைப்புள்ளனு சிரிப்பா பார்த்த கேரக்டர் எல்லாம் ஒண்ணுசேர்ந்து சீரியஸா பேசுற மாதிரிதானே இருக்கு? சினிமாங்கிறது நிழல். நிஜ வாழ்க்கை வேறண்ணே... 


 நகைச்சுவை, இசை, ஃபைட்னு மொத்த ரத்தமும் உடலோடும் உயிரோடும் கலந்து கட்டி மெனக்கெட்டுச் செய்யிற வித்தைண்ணே சினிமா. ஒரு மாஸ்டரும் ஏராளமான ஃபைட்டர்ஸும் சேர்ந்து ரத்தம் சிந்தி நம்மள தைரியசாலியாக் காட்டுற வித்தியாசமான உலகம்ணே... அங்க நாக்கைத் துருத்தி சேட்டையக் காட்டலாம்ணே. 


 ஆனா, மக்கள் பிரதிநிதிகளும் முதல்வரும் அமர்ந்திருக்கிற ஒரு சபையில நாக்கைத் துருத்துறது நாகரிமாக படலையேண்ணே... நான் அன்னைக்குச் சொன்னது எல்லாம் இன்னைக்கு நடக்குறது நல்லாப் பார்த்தா தெரியும்ணே!''


http://photos.geni.com/p12/dd/04/9e/86/534448388ca1da76/dsc00341_medium.jpg


6. ''இத்தகைய விமர்சனங்களை எல்லாம் சட்டையே செய்யாமல், 'நிச்சயம் ஆட்சி யைப் பிடிப்போம்!’னு விஜயகாந்த் நம்பிக்கையோடு சொல்றாரே?''''என்னது ஆட்சியையா... இம்புட்டுக்காணு பூச்சியைக்கூட அவரால பிடிக்க முடியாது!''


சி.பி - இப்படியே வெறும் வாய்லயே வெத்தலை போடுங்க.. வெயிட் அண்ட் ஸி.. கேப்டன் இன்னும் 10 வருஷங்கள்ல ஆட்சியை பிடிப்பது உறுதி.. 


http://vijaynet.files.wordpress.com/2006/10/pulikesi17.jpg

7. ''இன்றைய அரசியல் நிலவரங்களை எப்படிப் பாக்குறீங்க?''


''இன்னும் நாள் இருக்குண்ணே... ஏன் இம்பூட்டு அவசரப்படுறீங்க? இவ்வளவு அவசரம் உமக்கு ஆகாதையா. நான் ரொம்பப் பொறுமையா இருக்கேன். அதனாலதான், என் வூட்டுக்குப் பக்கத்துல எழுதிக்கிடக்குற கறுப்பு காமராஜரையும் கறுப்பு அண்ணாவையும் இன்னும் பல பல கறுப்புத் தலைவர்களையும் இந்தக் கறுப்பு பொறுமையோட பார்த்துக்கிட்டு இருக்கேன்!''


சி.பி .  விட்டா கருப்பு காமராஜும் நானே, அழகிய அண்ணாவும் நானே அப்டினு பாட்டுப்பாடி ஓட்டு  கேப்பீங்க போல.. 

 THANX - VIKATAN


Tuesday, December 20, 2011

வடிவேல் காமெடி டயலாக்ஸ் இன் மம்பட்டியான்

http://www.filmics.com/tamil/images/stories/news/December/16-12-11/Mambattiyan-Movie-Review.JPG
 
மம்பட்டியான் படத்தில் வடிவேல் காமெடி வசனங்கள்

1. சொர்ணம் , குளிச்சிட்டியா?

அவ்வ் , பார்த்துட்டியா?

ஒளிஞ்சிருந்து பார்க்க நான் ஒழுக்கம் கெட்டவன் கிடையாது


------------------------------------------

2.  உன்னை விட்டுட்டுப்போனவனை நீ என்னான்னு சொன்னே?

ஹி ஹி கட்டிக்கப்போறவன்னு...


----------------------------------------------

3. இவரோட பெரியப்பா யார் தெரியுமில்ல? பெரிய அயோக்கியப்பசங்க பரம்பரைல இருந்து வந்தாலும் இவர் நல்லவர் ஹி ஹி

-------------------------------------

4. என்னை மட்டும் சல்லீசா அடிங்க, மம்பட்டியான்  காட்ல சுத்தறான், அவனை பார்க்காமயே தோத்துடுங்க.. திரும்பி வந்துடுங்க, நல்லா இருக்குய்யா உங்க வீரம்... 

---------------------------------

5. என்னை அடிக்கறதால 10 பைசாவுக்குக்கூட பிரயோஜனம் இல்ல.. பீ கேர்ஃபுல்

------------------------------------


6.  அட்ரா சக்க.. சக்க -  ஐ ஜிக்கே  ஆபரேஷனா?

--------------------------------

7.  டேய் , நீ போய் சொர்ணா கிட்டே நான் கேட்டதா சொல்லி ஒரு சொம்புல தண்ணி வாங்கிட்டு வா

இதுக்கேண்ணே , அங்கே போகனும்? நானே எங்க வீட்ல இருந்து கொண்டு வர்றேன்.. 

வேணாம்டா,சொர்ணா கிட்டே தான் மூலிகைத்தண்ணி இருக்கும்.. சொல்ற வேலையை மட்டும் செய்... அவ முழு சொம்புல தண்ணி குடுத்து விட்டா ஆள் தனியா இருக்கானு அர்த்தம், பாதி சொம்புல தண்ணி குடுத்து விட்டா  வேற யாரோ விவசாயம் பண்ணிட்டு இருக்காங்கனு அர்த்தம்

--------------------------

8. நிறையா தண்ணி சொம்புல கொடுத்து விட்டு என்னை நிலை குலைய வைக்கறா..,அரை சொம்பு மட்டும் தண்ணி குடுத்து சில சமயம் என்னை அலைய வைக்கறா.. 

-----------------------------

9. போலீஸ்கார் போலீஸ்கார் பல்க்கா ஏதும் செஞ்சுடாதீங்க, நான் சின்னப்பையன்.. கொஞ்சமா அடிச்சா போதும்.. 

-------------------------

10. இப்போ நீ என்ன பண்றே. உன் 2 காலையும் தூக்கி தோள்ல போட்டு டான்ஸ் ஆடற..

 உமக்கு எகத்தாளம் ஜாஸ்தி.. அதெப்பிடி முடியும்?

--------------------------------

11. உஷ் அப்பா, அடி பின்னிட்டாங்க.. ஒரு மணி நேரமா உந்தி உந்தி நடக்கறேன், 10 மீட்டர் தூரம் தான் கடந்து இருக்கேன் போல , வீடு போய்ச்சேர எப்படியும் ஒரு மாசம் ஆகிடும்போல இருக்கே.. அவ்வ்வ்வ்வ்வ்

-----------------------------------

12.  சார்.. சும்மா இருக்காம தொங்க விட்டுடுவேன்னு சொல்லி அவனுக்கு நீங்களே ஐடியா குடுத்துட்டீங்க, இப்போ அவன் உங்களை தொங்கல்ல விட்டுட்டு எஸ் ஆகிட்டான்.. 

-------------------------------

13.  சொன்னா கோபப்படாதீங்க, உங்க செட்டப்க்கு பலர் மேல கண்ணு

-----------------------------

14 என்னை எதுக்குய்யா அந்த இடத்துல அடிச்சீங்க, புள்ளயோட கற்புல கபடி விளையாடிட்டு வந்திருக்கான், அவனுக்கெல்லாம் எதுக்கு மரியாதை 

-----------------------------

http://600024.com/files/2011/05/Meera-Jasmine.jpg

 மனதில் நின்ற பிற வசனங்கள்

1.  நம்மை துரத்தறவங்க துரத்திட்டே இருக்கட்டும், நாம களைச்சுப்போற வரை ஓடிட்டே இருப்போம்.. அதுதான் நம்ம தலை எழுத்துப்போல

2.  ரெண்டு திருடனுங்க வந்ததும் விட்டுட்டு ஓடிப்போனவன் நாளைக்கு 4 முரடன்க வந்தா உன்னை கூட்டிக்குடுக்க தயங்கமாட்டான்..


3. ஏன் என்னை பார்த்து பயப்படறே? உனக்கும், எனக்கும் என்ன சம்பந்தம்?


மழைக்கும் , மண்ணுக்கும் உள்ள சம்பந்தம்

4.  மம்பட்டியான் காட்லதான் இருக்கான், ஆனாலும் அவன் ஊருக்கே அய்யனார்... 

5. ஹீரோயின் -  பொசுக்கப்போறோம்கற நினப்பு நெருப்புக்கும் இல்ல, பத்திக்கப்போறம்கற பயம் பஞ்சுக்கும் இல்ல, அப்புறம் ஏன் பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்தா பத்திக்குமோன்னு பயப்படனும்? 

சி.பி - ஹி ஹி இது ஒரு சாக்கு , நடத்துங்க..

6.  நல்லா பேசற பையனுக்கு ஏன் ஊமையன்னு பேர் வெச்சாங்க தெரியுமா? மம்பட்டியான் பற்றி என்ன கேள்வி யார் கேட்டாலும் வாயே திறக்க மாட்டான்னு அர்த்தம்.. 

7. ஹீரோ - நீங்க செத்தா உங்க குடும்பம் மட்டும் தான்  அழும்.. நான் செத்தா இந்த ஊரே அழும்.. 

அண்ணன் ஊர் பூரா குடும்பம் வெச்சிருப்பார் போல.. அவ்வ்வ்வ்

8.  ஏம்மா, எதுக்கு இங்கே உன் வீட்டு கூரைல கொடி பறக்க விட்டிருக்கே?

கட்சி ஆரம்பிக்கலாம்னு..

இன்னும் குடும்பமே நடத்தலை.. அதுக்குள்ள கட்சி எதுக்கு? 

சி.பி -யாரப்பா அது கலைஞரை தாக்கறது, அவரு அவுட் ஆஃப் ஃபார்ம்..

9.  உங்களுக்கு தமிழ் தவிர பல மொழிகளும் தெரியும் போல இருக்கு?

இதயத்துல  காதல் வந்துட்டா நாக்குல தமிழ் தெலுங்கு எல்லாம் தாண்டவம் ஆடுமே?10.ஐ லவ் யூன்னு சொல்லுங்க..


ம்க்கும், இது என்ன பெரிய அதிசயம், எனக்கு 2 மொழில லவ் யூ சொல்ல தெரியும்..


எத்தனை மொழில எப்படி சொன்னாலும் காதல் காதல்தான்11. ஹீரோ - எனக்குப்பிறகு ஒரு சரித்திரம் உருவாகும், அதுல என்னை பிடிக்க முயற்சி செஞ்சவர்னு மட்டும்தான் உங்க பேரு பதிவாகும், ஆனா பிடிக்க மாட்டிங்க கடைசி வரை..


சி.பி - ஆல்ரெடி இருக்கற ஹிஸ்டரியெ படிக்காம கிடக்கு.. இதுல புதிய சரித்திரம் வேறயா? விளங்கிடும்.. 

12.  நான் என்ன தப்பு செஞ்சேன், மக்கள்ட்ட கொள்ளை அடிச்ச பணத்தை மக்கள்ட்டயே  திருப்பி கொடுக்கறேன்..

சி.பி - ஹூம், ஆ ராசா குரூப் அடிச்ச பணத்தை யாராவது கொள்ளை அடிங்கப்பா.. 

13.  ஹீரோ - இனிமே நான் செத்தாதான் நீ அழனும்..

ஹீரோயின் - இனி நான் அழவே மாட்டேன்

சி.பி - அய்யய்யோ, அப்போ ஹீரோ கடைசி வரை சாகவே மாட்டாரா?

http://suriyantv.com/wp-content/uploads/2011/06/Meera-Jasmine.jpg

டிஸ்கி - 1  வடிவேல் காமெடி டயலாக்ஸ் போஸ்ட்ல என்ன இதுக்கோசரம் மீரா ஜாஸ்மின் ஃபோட்டோன்னு யாருக் கேட்காதீங்க, எல்லாம் அதுக்கோசரம்தான் ஹி ஹி

டிஸ்கி 2 -

மம்பட்டியான் - சினிமா விமர்சனம்

Saturday, June 04, 2011

வடிவேலு VS விஜய்காந்த் -இனி என்ன ஆகும்? காமெடி கும்மி

http://2.bp.blogspot.com/_Vk2ir6UMOjY/TOeKZ1bkGbI/AAAAAAAAHzU/loRUekiycVs/s1600/Vadivelu-and%2BActress-Asin-in-Press-meet%2B.jpg
தி மனிதனின் அடையாளமான ஹோமோசேப்பியன்ஸை அச்சு அசலாக வார்த்ததுபோல் 'உர்’ரென்று இருக்கிறார் வடிவேலு.

 சி.பி - ஆமாமா.. ஆப்பு அடிக்கப்பட்டவங்க உர்னு தான் இருப்பாங்க.. கிர்னு கீழே விழாம இருக்கறதே பெரிசு..ஆதம் பாவா இயக்கத்தில் உருவாகும் 'உலகம்’ படத்தில் வடிவேலு ஏற்று நடிக்கும் 25 வேடங்களில், இந்த ஹோமோசேப்பியன்ஸ் வேடமும் ஒன்று. ''எப்படி இருக்கு நம்ம கெட்டப்பு? இப்போ வரைக்கும் ஏழு கெட்டப்பு ரெடியாகி இருக்கு. மற்ற கெட்டப்பும் தயார்னா... தாரைத் தப்பட்டைகள் கிழியப் பயணத்தைத் தொடங்கிர வேண்டியதுதான்!'' - அரசியலில் எத்தகைய சூட்டை ஏற்படுத்தினோம் என்பதை எல்லாம் மறந்துவிட்டு, பகபகவெனச் சிரிக்கிறார் வடிவேலு.

சி.பி - அவர் எங்கேங்கே சூட்டை எழுப்புனாரு?சூடு வாங்கிட்டு வந்து நிக்கறாரு.. மீடியாக்கள் தான் அவரை பெருசாக்குனாங்க.. அவரே சொன்ன படி அவரை டம்மி பீஸாத்தான் மக்கள் நினைச்சிருக்காங்க.. 

 கடந்த சட்டமன்றத் தேர்தலில் திடீர் சூறாவளியாகக் கிளம்பி விஜயகாந்த்தைச் சுளுக்கெடுத்தவர். 'அவரு கேப்டன்னா... நான் டாப் டென்!’ என ஆரம்பித்து, 'தண்ணி’லை விளக்கம் வரை அவருடைய அதிரடிகள் நீள... தி.மு.க. புள்ளிகளே திகைத்துப்போனது உண்மை. ஆனால், தேர்தல் முடிவு வேறு விதமாக அமைய... வடிவேலுவின் காட்டில் மீண்டும் கல் மழை!

சி.பி - டாப் டென் எல்லாம் கிடையாது வேணும்னா டூப் டென்னு சொல்லலாம்
http://www.cinechance.com/forum/tamil-films/jan-01-08/shriya-vadivelu.jpg


1. ''கால்ஷீட் ஒதுக்க நேரம் இல்லாத அளவுக்கு பிஸியா இருந்த நீங்க, திடீர்னு பிரசாரத்தில் குதிக்க என்ன காரணம்?''

சி.பி - எல்லாம் சொந்தப்பிரச்சனைக்கு வஞ்சம் தீர்க்கத்தான்.. பின்னே தமிழ்நாடு நல்லா இருக்கனும்கற அக்கறையா என்ன?

''என் சொந்தப் பிரச்னைக்கோ, சொத்துப் பிரச்னைக்கோ, நான் பிரசாரத்தில் குதிக்கலை. எப்பவுமே யாரோட வம்புதும்புக்கும் போகக் கூடாதுன்னு நினைக்கிறவன் நான். ஆனா, நான் ஒதுங்கிப்போக நினைச்சாலும், அதுக்கு சிலர் வழிவிடலை. குழந்தைங்க முதல் பாட்டி வரை எல்லோரையும் சிரிக்க வைக்க நினைக்கிற எனக்கு இப்படி ஒரு இக்கட்டு. ஒரு புழுவை மிதிச்சாலும் எத்தனை நாளைக்கு அது பொறுத்துக்கிட்டு இருக்கும். அதான் அடக்க முடியாம பொங்கிக் கிளம்பிட்டேன்!''

சி.பி - பொங்குனது ஓக்கே.. ஆனா இப்படி அடிபட்டு கன்னம் வீங்குனது நாட் ஓக்கே.. 2. ''விஜயகாந்த்துக்கும் உங்களுக்கும் என்னதான் பிரச்னை?''

 சி.பி - ஒரே உறைல 2 கத்தி இருக்க முடியாதும்பாங்க.. ஒரே ஊர்க்காரங்கள்ல 2 பேரும் பெரும் குடிகாரர்கள்னு பேர் எடுத்தா எப்படி? யாரா இருந்தாலும் தனித்து தெரிய தானே ஆசைப்படுவாங்க?
''சில விஷயங்களை விளக்கிச் சொன்னாத்தான் புரியும். 2007-ல் அவரோட படத்துக்காக என்கிட்ட வந்து பேசினாங்க. ஓப்பனிங் ஸாங்கே நான்தான் பாடணும்னு வற்புறுத்தினாங்க. அவர் கட்சி கொடியைப் பிடிச்சுக்கிட்டு நான் பாடுற மாதிரி ஸீனுக்கு ரொம்ப வற்புறுத்தினாங்க.


'அய்யா, ஆளை விடுங்க!’ன்னு விலகிட்டேன். அடுத்தபடியா 'கருப்பு எம்.ஜி.ஆர்-தான் அடுத்த முதல்வர்’னு நான் அவரைப் பார்த்து வசனம் பேசணும்னு சொன்னாங்க. ஒருத்தரைப் புகழ்ந்தா, அடுத்தவங்க கோபப்படுவாங்க. அந்தப் பொல்லாப்பு நமக்கு எதுக்குன்னு தவிர்த்திட்டேன். 'அப்போ நான் முதல்வர் ஆவதில் வடிவேலுவுக்கு விருப்பம் இல்லையா?’ன்னு அவர் வருத்தப்பட்டாராம்.

வருங்கால முதல்வர்னு நான் ஒருத்தன் கூவினா, அவர் முதல்வராகிட முடியுமா? இதுதான்யா ஆரம்பப் பிரச்னை. அதுக்கு அப்புறம் என் வீடு முழுக்கக் கல் எறிஞ்சு அவங்க பண்ணின அடாவடி எல்லோருக்கும் தெரிஞ்சது தான். ஆனாலும், நான் அமைதியா இருந்தேன்.

அடுத்த தடவை நடந்த கல் வீச்சில் என் குழந்தைக்கு மண்டை உடைஞ்சிடுச்சு. நான் தனி மனிதனாத் தவிச்சு அழுதது அன்னிக்குத்தான் தம்பி. பெத்த புள்ளைங்களுக்காகத்தானே நாம சம்பாதிக்கிறோம்; கஷ்டப்படு றோம். அப்படி இருக்க, புள்ளைங்களுக்கு ஒரு இடைஞ்சல் வர்றப்ப எப்படிப் பொறுத்துக்க முடியும்?

வெளியில தெரிஞ்சது இது... சொல்லக் கூசுற அளவுக்கு இந்த ரெண்டு வருஷத்துல நான் படாதபாடு பட்டேன். ஊரையே சிரிக்க வெச்ச ஒருத்தன் பொழப்பு, சிரிப்பா சிரிச்சது யாருக்குத் தெரியும்? 'வடிவேலுவுக்கு இது தேவையா’ன்னு கேட்ட யாருக் காவது என்னைச் சுத்தி நடந்த இத்தனை பிரச்னையும் தெரியுமா?''

சி.பி- நீங்க சொல்றதுல ஏதோ இடிக்குதே? எங்கள் அண்ணா படத்துல தான் அப்படி  ஒரு சம்பவம் நடந்தது..அதுக்குப்பிறகு நீங்க அவர் படத்துல நடிக்கவே இல்லையா என்ன?

http://3.bp.blogspot.com/_Vk2ir6UMOjY/TOeKcITz50I/AAAAAAAAHzY/12fBynPAlDI/s1600/Vadivelu-and-Actress-Namitha-in-Jegan-Mogini-Tamil-Movie.jpg
3. ''இதனால்தான் பிரசாரத்துக்குப் போனீங்களா? இல்லை, தி.மு.க-வில் இருந்து யாராவது வற்புறுத்தினாங்களா?''


''நான் வான்டடா போன ஆளுய்யா! திடீர்னு ஒருநாள் கோபாலபுரம் போனேன். 'அய்யா, உங்களுக்காக நான் பிரசாரம் பண்றேன்’னு சொன்னேன். கலைஞர், அழகிரி, ஸ்டாலின் எல்லோருக்கும் ஏக சந்தோஷம். அப்போ, 'நான் உங்களுக்கு ஆதரவா மட்டும்தான் பேசுவேன். அந்தம்மாவை நான் தாக்கிப் பேசமாட்டேன்’னு சொல்ல நான் வாயெடுத்தேன்.

நாடி ஜோசியர் மாதிரி என்னைக் கூப்பிட்ட கலைஞர், 'அரசோட திட்டங்களை மட்டும் நீங்க பேசுங்க... அந்த அம்மாவைத் திட்டிப் பேசாதீங்க’ன்னு சொன்னார். எனக்கு வாயடைச்சுப்போச்சு. ஒருத்தனோட மனசுக்குள்ள இருக்கிற விஷயத்தைக்கூட தெளிவாத் தெரிஞ்சு வெச்சிருக்கிற தலைவர்யா அவர். உசுப்பேத்துவாங்கன்னு பார்த்தா, இப்படி ரியலா பேசச் சொல்றாங்களேனு எனக்குத் திகைப்பு தாங்கலை!''

சி.பி - பின்னே நீங்களே ஜெவையும் திட்டிட்டா அப்புறம் கழகக்கண்மணிகளுக்கு,அழகிரிகளுக்கு வேலை வேணாமா? அப்புறம் ஒரு பய அவங்களை மதிக்க மாட்டானே?
4. ''ஓஹோ... விஜயகாந்த்துக்கு எதிரா நா கூசும் அளவுக்குத் தனி மனிதத் தாக்குதல் நடத்தியது நியாயமா?''

சி.பி - என்ன கேனத்தனமான கேள்வியா இருக்கு?மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி.. தனி மனித தாக்குதலில் பி ஹெச் டி வாங்கியவர் கலைஞர்.. அவர் கட்சிக்கு ஆதரவா பேசறவங்க பின்னே எப்படி பேச முடியும்?


''தப்புதான்... நான் தனி மனிதத் தாக்குதல் நடத்தியது தப்புதான். 'அவர் அப்படிப் பண்றார், இப்படிப் பண்றார்’னு நான் பேசினது தப்புதான். தனி மனிதத் தாக்குதல் பற்றி ஆதங்கப்படுறவங்க, அரை மணி நேரம் என் வீட்டு வாசல்ல வந்து நின்னு பாருங்க சார். உங்க காதே கருகிப்போற அளவுக்குத் திட்டுவாங்க. இன்னிக்கும் அப்படித்தான் நடக்குது. அது தப்பு இல்லையா?''

 http://1.bp.blogspot.com/_Vk2ir6UMOjY/TOeKTDD_NOI/AAAAAAAAHzM/dbZ22iG3TW8/s1600/Vadivelu-and-Actress-Tamanna-in-Thillalangati-Tamil-Movie.jpg
5. ''உங்களுடைய பிரசாரத்தையும் மீறி விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவராகவே உட்கார்ந்துட்டார். இனி, உங்களின் நிலைப்பாடு?''


'' 'சின்னக் கவுண்டர்’ பட ஷூட்டிங் நடந்த நேரம்... என்னையப் பார்த்து எந்த ஊர்னு கேட்டார் அந்த ஆள். 'மதுரை’ன்னு சொன்னேன். 'ஒரு நாளைக்கு அம்பது ரூபா சம்பளம் வாங்குற நீ எல்லாம் ஊரப் பார்க்கப் போனா என்னய்யா?’னு கேட்டார்.

அன்னிக்கே என்னை ஊருக்கு அனுப்புற திலேயே குறியா இருந்தார். என்ட்ரியானப்பவே என்னையப் பார்த்து எளக்காரமாக் கேட்ட ஆளு, என்னோட இந்த அளவுக்கான வளர்ச்சியை எப்படிப் பொறுப்பார்?


தேர்தல்ல அவர் ஜெயிச்சிட்டார்னா, ஜெயிக்கவெச்ச மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டியதுதானே? அதை விட்டுட்டு, நாய் வைக்கோல் போரைச் சுத்துற மாதிரி எந்த நேரமும் என் வீட்டையே சுத்திக்கிட்டு இருந்தா எப்படி? என்னைய அடிக்கத்தான் மக்கள் உங்களை ஜெயிக்க வெச்சாங்களா?

'நாங்க அந்தம்மாவோட உருவ பொம்மையவே எரிச்ச ஆளுங்க... எங்க வலிமை தெரிஞ்சு தான் அந்தம்மா எங்களைக் கூட்டணியில் சேர்த்துக்குச்சு. அவங்களுக்கு முன்னால நீ எம்மாத்திரம்? கவர்மென்ட்டே எங்களோடது’னு நைட்டும் பகலும் என் வீட்டுல நின்னு கத்துறாங்க.

அந்தம்மாவுக்கு வீசிய ஆதரவு அலையில ஜெயிச்சிட்டு, இப்படி அபவாதம் பேசலாமாண்ணே... இன்னும் என்ன வேணும்னாலும் பேசட்டும்ணே... நான் இனி பின்வாங்கப்போறது இல்லை. மனசுக்குள்ளகிடக்குற ரணம் இன்னும் ஆறலைண்ணே... அந்த வெறி அடங்கலை. அடக்கவும் மாட்டேன். அவர் சட்டசபைக்கு உள்ளே எதிர்க் கட்சித் தலைவர்னா, வெளியில் அவருக்கு எதிர்க் கட்சித் தலைவர் நான்தான்!''

சி.பி - ரைட்டு.. இனிப்பேசிப்பிரயோஜனம் இல்லை.. ஹி ஹி உதை கன்ஃபர்ம் டி6. ''பிரசாரத்தில் இறங்கியதால், இப்போ பட வாய்ப்புகளே இல்லாமல் உட்கார்ந்து இருக்கீங்களே... வருத்தமா இல்லையா?''

''மனசு முழுக்க இருந்த ரணத்தைக் கொட்டித் தீர்த்த நிம்மதியில் இருக்கேன். அவரோட அத்தனை அடாவடிகளையும் வெளியே சொல்லாமல் தாங்கி இருந்தா, நெஞ்சு வெடிச்சே செத்திருப்பேன்.

பட வாய்ப்புகள் குறைஞ்சா, எனக்கு வருத்தம் இருக்காது. சிந்திக்கவும் ஓய்வெடுக்கவும் இந்த இடைவெளி எனக்கு அவசியமாப் படுது. கொஞ்ச காலம் ஒதுங்கித்தான் இருப்போமே... வடிவேலுவோட காமெடி தேவைன்னு தோணிச்சுன்னா... மக்களே நம்மளை நடிக்கவைப்பாங்க சார்!''

சி.பி - எங்கே ? சந்தானம் சைக்கிள் கேப்ல சிக்சரா அடிச்சுட்டு இருக்காரு.. சிங்கம் புலி ஒரு பக்கம் கோல்களா போடறாரு.. உங்களுக்கு ரீ எண்ட்ரி கஷ்டம்.. இனி டிஸ்ஸெண்ட்ரி தான்.. 
7. ''வடிவேலுவுக்கு இந்த வீம்பு தேவையான்னு சினிமாக்காரங்களே குரல் எழுப்புறாங்களே?''

''வயித்துப்போக்கும் வாந்தியும் அவன் அவனுக்கு வந்தாத்தானே தெரியும். நியாயமான சினிமாக்காரங்க நிச்சயம் என்னைப்பற்றிப் பேசி இருக்க மாட்டாங்க. ஆட்சிக்குத் தகுந்த மாதிரி நாக்கை மாற்றிப் பேசுறவங்கதான் என்னை வசை பாடி இருப்பாங்க.

நான் பிரசாரம் பண்ணினப்ப கூடின கூட்டத்தைப் பார்த்து மிரண்டவய்ங்க எத்தனை பேர்னு எனக்குத் தெரியும். 'இவனுக்கு ஏன்டா இம்புட்டுக் கூட்டம்?’னு வயிற்றெரிச்சலோட தூக்கம் வராமத் தவிச்சவய்ங்களையும் தெரியும். கூட்டம் கூட்டமா திரண்ட மக்கள்தான் என்னோட சொத்துங்கிறதை இந்தத் தேர்தல் பிரசாரத்தில் பார்த்துட்டேன் சார்!''

சி.பி - யோவ்.. என்னாய்யா பேச்சு ? இது? ஷகீலா ஸ்டேஜ் ஏறுனாக்கூட மாளாத கூட்டம்   வரும்.. அதுக்காக அவருக்கு மக்கள் செல்வாக்கு இருக்குன்னு சொல்லிட முடியுமா?அவர் எலக்‌ஷன்ல நின்னா ஓட்டு போடுவாங்களா?,,,,..
http://sites.google.com/site/cinemaphotogallery/Vadivelu5.jpg

8. '' 'ராணா’ படத்தில் இருந்து நீக்கப்பட்டதால், 'ராணா படமாவது, கானா படமாவது’ என ரஜினியைத் திட்டியது தவறு என உணர்கிறீர்களா?''


''யார் சொன்னா? அவருக்கும் எனக்கும் எப்பவாச்சும் பிரச்னை வந்திருக்கா? மத்தவங்க மாதிரி முதல்வர்னு என்னை முழங்கச் சொன்னாரா... ஆள் அனுப்பினாரா... வம்பு இழுத்தாரா? எதுக்கும் என்னை ரஜினி வற்புறுத்தலை. அப்படியிருக்க ஏன் இப்படி எல்லாம் முடிச்சுப் போடுறாங்க?

கலைஞர் அய்யாவைப் பார்த்துட்டு வெளியே வந்தப்ப, 'ராணா படத் தில் இருந்து உங்களை நீக்கிட்டாங்களாமே?’னு கேட்டாங்க. 'ராணா படமா இருந்தாலும் சரி, கானா படமா இருந்தாலும் சரி... இல்லை என் கேரியரே அவ்வளவுதான்னாலும் சரி... என் பிரசாரத்தைத் தொடரவே செய்வேன்’னு பதில் சொன்னேன். இதில் அவரை நான் எந்த இடத்தில் திட்டுறதா அர்த்தம் வருது?

எனக்குச் சிக்கலை உண்டாக்கணும்னு அவரோட மோதல்னு கிளப்பிவிடுறது நியாயமா? அவரை நான் ரொம்ப மதிக்கிறேன். 'சந்திரமுகி’ பார்த்த ரஜினி ரசிகர்களுக்கு என்னை நல்லாத் தெரியும்!''

சி.பி - அப்போ நீங்க சொல்றதை வெச்சுப்பார்த்தா ஒண்ணு உங்களுக்கு நாவடக்கம் பத்தாது.. இன்னொண்ணு ராணா படம் யார் நடிப்புல உருவாகுதுங்கற மேட்டரையே அப்டேட் பண்ணிக்கல.. ரெண்டும் டேஞ்சர் தான்.. இனி உங்களை புக் பண்ண நினைக்கறவங்க ஏன் வீணா ரஜினி,கேப்டன்,ஜெ இத்தனை பேரை  பகைச்சுக்கனும்னு நினைப்பாங்க..


9. ''அரசியலில் அடுத்த கட்டம்?''

''கல் எறிஞ்சு களைப்பாகிக்கிடக்கிறவங்கதான் அதைத் தீர்மானிக்கணும். அவங்க நடந்துக்கிறதைப் பொறுத்துதான்... என்னோட நடவடிக்கையும் இருக்கும்... ஆமா!''

சி.பி - எனக்கென்ன தோணுதுன்னா நல்ல நாளா பார்த்து ஒரு சால்வை வாங்கிட்டுப்போய் கேப்டனைப்பார்த்து இருவரும் ஒரே தாய் வயிற்றில் பிறக்கவைல்லையே தவிர மற்றபடி அம்மா பாசத்துக்கு ஏங்குபவர்களே.. இருவரும் ஒண்ணா தண்ணி அடிச்சவங்களே..  இருவரும் சினிமாக்காரங்களே அப்டின்னு ஏதையாவது உளறி நைஸா சமாதானம் ஆகிக்குங்க.. தி முக ல வரிசையா எல்லாரும் உள்ளே போய்ட்டு இருக்காங்க.. அவங்களையே காப்பாத்திக்க அவங்களுக்கு நேரம் இருக்காது.. உங்களை எல்லாம் காப்பாத்த நேரமும் இல்லை.. அவங்களுக்கு அது இனி தேவையும் இல்லை..

 நன்றி - விகடன்