Saturday, September 24, 2011

விஜயகாந்த்தை வளர்த்துவிட்டது என் தப்பு - ஜெ ஆவேசம், கேப்டன் திகைப்பு!!

http://www.envazhi.com/wp-content/uploads/2009/04/news_88483393193.jpg 
 
மிஸ்டர் கழுகு: ''விஜயகாந்த்தை வளர்த்துவிட்டது தப்பு!''

கார்டனில் கர்ஜித்த ஜெ.!
 
 
சி.பி - டைட்டில்லயே பிரச்சனை ஸ்டார்ட்.. அப்போ கேப்டனுக்கு அம்மா வளர்ப்புத்தாயா?
                      

ச்சி வெயில் உலுப்பி எடுப்பதை கழுகார் முகத்தில் பார்க்க முடிந்தது. வந்ததும், ஐஸ் வாட்டரை அருந்துவதற்குப் பதிலாக தலையில் தெளித்துக்கொண்டார். சூட்டைக் குறைக்கும் ஐடியா! 




''கூட்டணிக் கட்சிகள் அனைத்தையும் ஜெய லலிதா கை கழுவுவதைத்தான் தண்ணீர் தெளித்து சிம்பாலிக்காகக் சொல்கிறீரோ?'' என்றோம். அவர், மெள்ளச் சிரித்தபடி,

''அ.தி.மு.க. அணியில் நடப்பதைச் சொல்வதற்கு முன்னால் ஒரு சுவாரஸ்யம்... அதைக் கேட்டுவிடும்!'' என்று பீடிகை போட் டார்!

''தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் விஜயகாந்த் மனம் திறந்து பேசியதை உமது நிருபர் விலாவாரியாக எழுதி இருந்தார். இது கட்சிக்குள் பலத்த சலசலப்பைக் கிளப்பியது. இதையடுத்து, கடந்த 20-ம் தேதி கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார் விஜயகாந்த். 'கூட்டம் நடக்குறது வெளியில் யாருக்கும் தெரியக் கூடாது. யாரும் காரில் வர வேண்டாம். ஆட்டோவில் வாங்க. வரும் எல்லாரும் கூட்டமா வராதீங்க... தனித்தனியா வந்துடுங்க. வெளியில் யாரும் நின்னும் பேசாதீங்க!’ என்று மாவட்டச் செயலாளர்களுக்குச் சொல்லப்பட்டு இருந்ததாம். 

கூட்டத்தில் விஜய்காந்த் பேசும்போது, 'உங்களை காரில் வர வேண்டாம். கூட்டமா நிற்க வேண்டாம் என்றெல்லாம் சொல்லி இருப்பாங்க. எல்லாம் காரணமாகத்தான் சொன்னோம். நம்ம கட்சி ஆபீஸ்ல ஒரு குண்டு ஊசி கீழே விழுந்தாக்கூட, அதைப் பத்திரிகைக்காரங்களுக்கு யாராவதுசொல்றீங்க. 


சி.பி - குண்டு விழுந்தாதான் செய்தி ஆகும், குண்டூசி விழுந்தாலுமா?

நமக்குள் நாம் என்ன வேணும்னாலும் பேசிக்கலாம். அதை சிலர் பத்திரிகைகளுக்கு சொல்லிட்டா, அவங்களும் பரபரப்பா செய்தி வெளியிடுறாங்க. ரகசியக் கூட்டம்னு நடத்திட்டு அதை வெளியில் சொல்றது எப்படி தர்மமாக இருக்கும்? 


சி.பி - அண்ணே, 2 பேர் மட்டும் கலந்துக்கிட்டாதான் அது ரகசியக்கூட்டம்.. மேட்டர் வெளில வராது..   10 பேர் கலந்துக்கறப்ப கறுப்பு ஆட்டை எப்படி கண்டு பிடிப்பீங்க?  



நீங்க இப்படியே பண்ணிட்டு இருந்தீங்கன்னா நிர்வாகிகள் கூட்டம் நடத்துறதையே நான் தவிர்க்க வேண்டி இருக்கும். உள்ளாட்சி தேர்தலில் எதுவும் நடக்கலாம். எதைப்பத்தியும் நீங்க கவலைப்பட வேண்டாம். எல்லோரும் உற்சாகமா வேலைகளைப் பாருங்க. கோவை மாநாட்டில் எல்லா விஷயங்களையும் முடிவு பண்ணிக்கலாம். நான் இப்படி எல்லாம் பேசினேன் என்று அதையும் போய் பத்திரிகைகாரங்ககிட்ட சொல்லிடாதீங்க!’ என்று கர்ஜித்து முடித்தாராம்.''

சி.பி - அண்ணன் தண்ணியை போட்டுட்டு  மப்புல உளர்றதெல்லாம் கர்ஜிக்கற கேட்டகிரில வந்துடுமா? டவுட்டு!




''அதையும் சொல்லீட்டாங்களா?'' என்று நாம் கேட்டதும்... சிரிப்பைச் சிந்தியபடி தொடர்ந்தார் கழுகார்.


''உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி விஷயத்தில் என்ன நடக்கிறது என்கிற கதைக்கு அடுத்து வருகிறேன். விஜயகாந்த் மீது அளவில்லாத கோபத்தில் இருக்கிறார் ஜெயலலிதா. அதைவிட அவரை தே.மு.தி.க-வுடன் கூட்டணி வைத்துத்தான் ஆக வேண்டும் என்று சொன்னவர்கள் மீதும் ஆத்திரத்தைக் கொட்டுகிறார். 'அவருக்கு அவ்வளவு செல்வாக்கு... இவ்வளவு செல்வாக்குனு சொல்லி என்ன ஏமாத்திட்டீங்க... அவரைத் தேவை இல்லாம நாமதான் வளர்த்துவிட்டுட்டோம். அப்பவே அவரைக் கூட்டணியில் வெச்சிருக்கக் கூடாது’ என்றாராம் ஜெயலலிதா.


 சி.பி - சபாஷ்!!! ஜெ பச்சை தமிழச்சி என்பதை நிரூபிச்சிட்டாங்க.. காரியம் ஆகும் வரை காலைப்பிடி, ஆன பின் கழுத்தைப்பிடி!!


'என்னை அவமானப்படுத்துற மாதிரி பேசினார்னு தெரிஞ்சே கூட்டணி வைக்கக் காரணம், கருணாநிதிக்கு எதிரான ஓட்டு சிதறிடக் கூடாதுங்கற ஒரே நோக்கம்தான். ஆனால், ஜெயிச்சு வந்ததும் நம்மை அவர் மதிக்கவே இல்லை. அத்தோட அவமானப்படுத்துற மாதிரி நடந்துக்கிறார்!’ என்றாராம் ஜெயலலிதா. 

 சி.பி - கேப்டன் எங்கேம்மா அவமானப்படுத்துனாரு? ஓ பன்னீர் செல்வம் அளவுக்கு இல்லைன்னாலும் அவரளவுக்கு பம்மிக்கிட்ட்டே தானே இருந்தாரு..?


இந்தக் கோபமே கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் மொத்தமாக ரியாக்ஷன் காட்டுகிறது!''


''என்னதான் பிரச்னை?''

''உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது கணிச மான இடங்களை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ஏகத்துக்கும் அடக்கி வாசித்தது. பரமக்குடி துப்பாக்கிச் சூடு போன்ற விஷயங்களில்கூட சட்டசபையில் பெரிய அளவில் கோபத்தைக் காட்டவில்லை. ஆனால், நிலைமை வேறு மாதிரியாக இருந்தது. உள்ளாட்சித் தேர்தலில் நடக்கும் ஒவ்வொரு 'மூவ்’வும் ஜெயலலிதாவின் ஆலோசனைப்படிதான் நடக்கிறது. 

சி.பி - அம்மா கூட கூட்டணி வைக்கறப்பவே  எடுக்கறது பிச்சை.. இதுல கவுரம் பார்க்கலாமா எச்சை? என மனசை பக்குவப்படுத்திக்கனும் பங்காளீகளா?

அதற்காக தொகுதி பங்கீட்டை முடிவு செய்வதற்காக ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்தார் ஜெயலலிதா. பேருக்குதான் அது குழு. அந்த குழு மூலமாக, கூட்டணிக் கட்சிகளுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்குத் தேவையான தொகுதிகளின் பட்டியலை தயார் செய்து காத்திருந்தார்கள். 

சி.பி - அழைப்பு வரும் அம்மாவிடமிருந்து என காத்திருப்பதும் கடவுள் கண்ணைத்திறந்து நம்மை காப்பாற்றுவார் என நினைப்பதும் பேதமை..
http://www.tribuneindia.com/2008/20080225/nat3.jpg


குழு மூலம் பட்டியலைக் கேட்டு ஜெயலலிதா வாங்கிப் பார்ப்பார்... என்று இலவு காத்த கிளியைப்போல கூட்டணிக் கட்சிகள் காத்துக்கொண்டிருந்த சமயத்தில்தான், அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியலை ரிலீஸ் செய்துகொண்டு இருந்தார் ஜெயலலிதா. சட்டசபைத் தேர்தலில்கூட கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளைத் தவிர்த்துதான் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்போதோ மொத்தத் இடங்களையும் வெளியிட்டு கூட்டணிக் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துவிட்டார்.''

சி.பி - அதிர்ச்சி வைத்தியம் அளித்ததால் இன்று முதல் டகால்டி  டாக்டர் ஜெ என அழைக்கப்படுவார்!!!


''தே.மு.தி.க.வின் நிலைமை?''

சி.பி - தலைல முக்காடு...  இனி போக்கிடம் சுடுகாடு.. 


''மூன்று மேயர்கள், 30 நகராட்சித் தலைவர்கள் பதவிக்குப் போட்டியிட நினைத்தது தே.மு.தி.க. ஆனால், மேயர் பதவிகளை தர முடியாது என்று முதலிலேயே கைவிரித்துவிட்டதாம் அ.தி.மு.க. துணை மேயர் பதவிகள் மற்றும் சில நகராட்சித் தலைவர் பதவிகளை வேண்டுமானால் விட்டுக்கொடுப்பதாக சொன்னதாம். இதெல்லாம் அதிகாரப்பூர்வமாகச் சொல்லப்படவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரையில் அதிகாரப் பூர்வமான பேச்சுவார்த்தை தே.மு.தி.க-வுடன் நடத்தவில்லை. 


சி.பி - பேச்சு வார்த்தை நடத்தனுமா? ஆசையைப்பார்த்தியா அண்ணனுக்கு? ஏச்சு கிடைக்காம இருந்தா போதாதா?

பேருக்கு தொகுதி பங்கீட்டுக் குழுவை நியமித்து, பட்டியல்களை எல்லாம் வெளியிட்டு, தேர்தல் தேதியும் அறிவிக்க வைத்து சரியாக காய்களை நகர்த்தி, கடைசி நேரத்தில் கழுத்தை அறுத்துவிட்டார்கள் என்றே நினைக்கிறது தே.மு.தி.க.''


''கம்யூனிஸ்ட்களுக்கு?''

''கம்யூனிஸ்ட்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அதிலும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லையாம். திருவொற்றியூர், சிதம்பரம், கோவில்பட்டி ஆகிய நகராட்சிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வசம் இருக்கிறது. அதை வாங்கினாலே போதும் என்று போராடுகிறார்கள். இதே நிலைதான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும். இவர்கள் கதியே இப்படி என்றால்... டாக்டர் கிருஷ்ணசாமி, நடிகர் சரத்குமார் பற்றிச் சொல்லித் தெரியவேண்டியது இல்லை அல்லவா!'' என்று சொல்லி மீண்டும் சிரித்தார் கழுகார்!


''கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஷாக்கானதைத் தானே உம்மிடம் சொன்னேன். இப்போது அ.தி.மு.க-வினர் அதிர்ச்சியைக் கேளும்!''


''சொல்லும்!''

''போயஸ் கார்டனில் இருந்து ரிலீஸ் ஆன வேட்பாளர் பட்டியலைப் பார்த்து, அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்களே அரண்டுபோனார்கள். காரணம், கட்சியின் மா.செ-க்களுக்கும் ஜெ. செக் வைத்திருப்பதுதான். 'நகராட்சித் தொடங்கி ஒன்றிய கவுன்சிலர்கள் வரையிலான பதவிகளுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்துகொடுக்கும்படி கார்டனில் இருந்து மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவு போடப்பட்டது.

சாதி, செல்வாக்கு உள்ளிட்ட சகல விவரங்களையும் கணக்கிட்டு, தர வாரியான மூன்று நபர்களை வரிசைப்படி ஒவ்வொரு பதவிக்கும் தேர்வு செய்து கொடுக்கும்படி கார்டன் தரப்பு சொல்லி இருந்தது. அதற்கேற்றபடி, தங்களது விசுவாசிகளை முதல் இரண்டு இடங்களிலும், ஆகாத ஆட்களை மூன்றாம் இடத்திலும் குறிப்பிட்டு பட்டியல் அனுப்பினார்கள் மாவட்டச் செயலாளர்கள். 


இந்த விஷயம் அம்மாவுக்கு எப்படித் தெரிந்ததோ... மாவட்டச் செய லாளர்கள் கொடுத்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தவர்களின் பெயர்களை மட்டுமே அவர் டிக் செய்ய, மாவட்டச் செயலாளர்கள் மிரண்டுவிட்டனர். அறிவிப்பு வந்த பிறகு ஆட்களை மாற்றச் சொல்லியும் அம்மாவிடம் பேச முடியாது. அதனால், அம்மாவின் டிக் பட்டியலில் உள்ளவர்கள் தங்களுக்கு ஆகாதவர்களாக இருந் தாலும், அவர்களின் வெற்றிக்காக மா.செ-க்கள் போராட வேண்டிய இக்கட்டு உருவாகிவிட்டது!’ எனச் சொல்லும் சீனியர் நிர்வாகிகள், ஜெயலலிதா இப்படி செய்ததற்கான பின்னணிகளையும் விளக்கினார்கள்...''


''அது என்ன?''

''சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் உள்ளாட்சித் தேர்தலில் தீவிரமாக இருக்கும் என்பதை ஜெயலலிதா தெளிவாக அறிந்து வைத்திருந்தார். சசிகலாவின் உறவினர்கள் கைகாட்டும் ஆட்களுக்குத்தான் மாவட்டச் செயலாளர்கள் முதல் இடம் கொடுத்து இருப்பார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். அதனால்தான், மூன்றாவது இடத்தில் இருந்த ஆட்களைத் தேர்வு செய்து மாவட்டச் செயலாளர்களுக்கு மட்டும் அல்லாது, சசிகலா வகையறாக்களுக்கும் அம்மா செக் வைத்தார் என்கிறார்கள். 

கார்டனில் இருந்து வெளியான பட்டியலில் இப்போது ஒரு சில இடங்களுக்கு மட்டுமே வேட்பாளர்கள் மாற்றப்படுகின்றனர். அம்மாவிடம் வேறு விதமான காரணங்களைச் சொல்லி, மாற்றப்படும் பட்டியலில் உள்ள பலருமே சசிகலா உறவினர்கள்தானாம்!''


''தி.மு.க. விஷயத்துக்கு வாரும்!''

சி.பி - அதானே? விகடனின் டார்கெட்டே திமுக தானே?

''கனிமொழி ஜாமீன்தானே இப்போதைய தி.மு.க. விஷயம்... கனிமொழியும், சரத்குமாரும் ஜாமீன் மனுத் தாக்கல் செய்ததும், அதிக நம்பிக்கையுடன் இருந்தார்கள். இரண்டொரு நாளில் ஜாமீன் கிடைத்துவிடும் என்பதுதான் அவர்களது நினைப்பு. ஆனால், நீதிபதி சைனி, 'இந்த மனுவைப் படிக்க எனக்கு அவகாசம் தேவை. அக்டோபர் 1-ம் தேதி பார்க்கலாம்’ என்று சொல்லிவிட்டு எழுந்து சேம்பருக்குள் சென்றதும், நீதிமன்றத்தில் உட்கார்ந்திருந்த ராஜாத்தி அம்மாள் கலங்கிவிட்டாராம். 

சி.பி - ஜட்ஜ் சைனி நல்லா சைன் பண்ணிட்டார் போல.. 

அவரை ஆசுவாசப்படுத்த கனிமொழியால் முடியவில்லையாம். 'நீ சென்னைக்குப் போம்மா... நான் பார்த்துக்கிறேன்’ என்று மகள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும், தாய்க்கு தாளவில்லையாம். நீதிமன்ற வளாகத்துக்குள் இருக்கும் சிறு செல்லில் வைத்திருந்துவிட்டு... திகார் செல்ல வாகனம் தயாரானதும்தான் கனிமொழியை அழைத்துச் செல்வார்கள். அந்த செல்லுக்குள் உள்ளே நுழையும் வரை கனிமொழியும் தைரியமாகத்தான் இருந்துள்ளார். ஆனால், உள்ளே நடந்து போனவர் தலையைத் திருப்பி ராஜாத்தியைப் பார்த்ததும் கண்கலங்கிவிட்டாராம்.''


''வருத்தம் இருக்கத்தானே செய்யும்!''


''கனிமொழி, சரத்குமார் ஆகிய இருவர் குறித்தும் கவலைப்பட்டு கருணாநிதி வெளியிட்ட அறிக்கை தி.மு.க-விலும், டெல்லியிலும் பலத்த சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. 'ஆ.ராசா உள்ளிட்டவர்களுக்கு ஏதோ ஒரு சம்பந்தம் இருந்தாலும் கனிமொழி, சரத்குமாருக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லையே?’ என்று கருணாநிதி அந்த அறிக்கையில் சொல்லி இருந்தார். 

'ஆ.ராசாவை கருணாநிதி கழற்றிவிடுகிறாரா?’ என்று சிலர் கேட்க ஆரம்பித்துள்ளனர். கருணாநிதியின் இந்த அறிக்கையையே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, சோனியா கவனத்துக்கு டி.ஆர்.பாலு கொண்டுசென்றதாகவும் சொல்கிறார்கள். சோனியா ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று கருணாநிதி நினைக்கிறார். இதற்கிடையே, ஆ.ராசா மீது கருணாநிதிக்கே சில வருத்தங்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள்!''


''அது என்ன?''

''செப்டம்பர் 15-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்வதாக நீதிபதி சைனி சொல்லி இருந்தார். அதற்கு மறுநாள் கனிமொழி ஜாமீன் மனுத் தாக்கல் செய்ய தயாராகிக்கொண்டு இருந்தார். ஆனால், அன்று குற்றச்சாட்டு பதிவு செய்யவிடாமல் டிராய் அறிக்கையை முன்வைத்து ஆ.ராசா பேச ஆரம்பிக்க... அதையே மற்றவர்களும் எடுக்க, விவகாரம் நீண்டுகொண்டே போய் அக்டோபரைத் தொட்டுவிட்டது. 

செப்டம்பர் 30-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்ய இருப்பதாக நீதிபதி சொல்லி இருக்கிறார். எனவே கனிமொழி, சரத்குமாருக்கு ஜாமீன் கிடைப்பது வரைக்கும் ஆ.ராசா அமைதியாக இருக்க வேண்டும் என்று கருணாநிதி சொல்லி அனுப்பி உள்ளாராம்!'' என்ற கழுகார் சிறிது இடைவெளிவிட்டு பேசினார்...


''செப்டம்பர் 15-ம் தேதி அன்று, நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.பி.ஆர்.சௌந்திரபாண்டியனாருக்கு பிறந்தநாள் விழா. சென்னை பாண்டிபஜாரில் உள்ள அவரது சிலைக்கு  முக்கியப் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம். கடந்த மூன்று ஆண்டுகளாக ராஜாத்தி அம்மாள் தவறாமல் வருகை தந்தார். ஆனால், இந்தமுறை ஆப்சென்ட். 'நான் வரலை!’ என்று சொல்லிவிட்டாராம். அவர் டெல்லியிலேயே தங்கி இருப்பது கருணாநிதியை இன்னும் வருத்தமடைய வைத்துள்ளது.


கலைஞர் டி.வி-யின் மேலாளர்கள் மூவர், சமீபத்தில் டெல்லிக்குப்போய் இருந்தார்களாம். திகார் ஜெயிலுக்குப்போய் கனிமொழியைச் சந்தித்துப் பேசினார்களாம். சரத்குமார்தான் டல்லாக காணப்பட்டாராம். கனிமொழி உற்சாகமாய் பேசினாராம். 'இந்த மாத இறுதிக்குள் நான் பெயிலில் வெளியே வந்துவிடுவேன்... அப்பாகிட்ட சொல்லுங்க.' என்று தகவல் சொல்லி அனுப்பினாராம். இது ஒன்றுதான் கருணாநிதிக்கு ஆறுதலான விஷயம்!'' என்று கிளம்பத் தயாரான கழுகார்


''சாதித் தலைவர் ஒருவரை போலீஸ் அதிகாரி சந்தித்ததாக ஒரு செய்தியை உமக்குச் சொல்லி இருந்தேன். அந்த இடத்தில் அப்படி ஒரு சந்திப்பு நடக்கவில்லை என்றும் பரமக்குடி விவகாரத்துக்கும் அந்த அதிகாரிக்கும் அப்படி எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சிலர் அடித்துச் சொல்கிறார்கள்!'' என்றார்.

அவரிடம், ''உள்ளாட்சித் தேர்தல் தேதியைப் பார்த்தோம். அக்டோபர் 17, 19... என்று சோ.அய்யர் அறிவித்திருக்கிறார். ஜெயலலிதா பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகும் அக்டோபர் 20-க்கு முன்னதாக தேர்தல் நடந்துவிடும் என்று சொன்னீர். அது மாதிரியே நடந்துள்ளதே!'' என்றோம்.

அந்தப் பாராட்டை ஏற்றுக்கொண்டவராக வானத்தில் மிதந்தபடி வணக்கம் வைத்தார் கழுகார்!


 1.  நரேந்திர மோடியைப் பாராட்டுவதைப் பார்த்தால்... தமிழகத்தை குஜராத் போல வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வந்துவிடுவாரா ஜெயலலிதா? 
 
  தமிழகத்தில் தொழில் தொடங்க வந்த இரண்டு முக்கிய மோட்டார் நிறுவனங்கள்  குஜராத்துக்கு தங்கள் ஜாகையை மாற்றிக் கொண்டதற்கு உண்மை யான காரணம் என்ன? இந்த நிலை தொடர்ந்தால் தமிழகம் எப்படி முன்னேற்றத்தில் குஜராத் ஆகும்?

சி.பி - குஜராத் போலா? அப்போ மது விலக்கு கொண்டு வர தில் இருக்கா?


  2.பரஞ்சோதி - கே.என்.நேரு? 


ஒருவர் மீது பாலியல் புகார்!
இன்னொவருவர் மீது கிரிமினல் புகார்!
சபாஷ்... சரியான போட்டி!

 சி.பி - ஆமா, இவங்க 2 பேரும் பெரிய ரஜினி  - கமல்?  கம்பேர் பண்றதுக்கு..

  3.அரக்கோணம் ரயில் விபத்துக்கு உண்மையான காரணத்தைக் கண்டுபிடிப்பதில் ஏன் இத்தனை குழப்பங்கள்?
  சென்னை சென்ட்ரலில் இருந்து ஒரு ரயிலைக் கடத்திச் சென்று விபத்துக்குள்ளாக்கியவன் யார் என்று இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லையே! ஒரு அரசாங்கத்துக்குப் பல்லாயிரம் கோடிப் பணத்தை ஆண்டுதோறும் சம்பாதித்துக் கொடுக்கும் ஒரு துறை எப்படி பொறுப்பில்லாமல் இயங்குகிறது பார்த்தீர்களா?

சி.பி - கண்டு பிடிச்ச எல்லாத்தையும் வெளில சொல்லிட்டு இருக்க முடியுமா?பல கேஸ்ல பல மேட்டர் தெரிஞ்சாலும் சில பல காரணங்களால் வெளில சொல்ல முடியாத நிலைமை இருக்கும்.. 


4. 'பெட்ரோல் விலை உயர்வை நாங்கள் ஏற்கவில்லை’ என்கிறாரே தங்கபாலு? 

  தமிழகத்தில் இருக்கும் 'துணிச்சலான அரசியல்வாதி' என்று தங்கபாலுவை நான் சும்மா சொல்லவில்லை என்பது இப்போதாவது தெரிகிறதா?

 சி.பி - காமெடி பீஸுன்னா ஜோக் மட்டும் தான் சொல்லனும்.. இதெல்லாம் சொல்லப்படாது..


 5. மதச்சார்பின்மையைப் பற்றிப் பேச நரேந்திர மோடிக்கு அருகதை உண்டா? 

  கடந்த காலத் தவறுகளில் இருந்து மோடி பாடம் கற்கக் கூடாதா? பிராயச் சித்தம் தேடுவதற்கு எல்லா மனிதர்களுக்கும் உரிமை உண்டு. ஆனால், அவர் திருந்தி விடக் கூடாது என்று சிலர் நினைப்பதுதான் ஏன் என்று புரியவில்லை!


சி.பி - இந்தக்கேள்விக்கு துக்ளக் சோ நல்லா ஜால்ரா அடிப்பார்.. சாரி. நல்லா பதில் சொல்வார்.

  6.உண்மையான இந்தியர்கள், தூக்குத் தண்டனையை ஆதரிக்கவே செய்வார்கள் என்கிறேன் நான்...?


  தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கால்கோள் நாட்டியவர்களில்  இவரும் ஒருவர். சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்ட அவர் சிறையில் இருந்தபடி தனது அனுபவங்களை எழுதினார். 'சிறையில் தவம்’ என்ற தலைப்பில் அது புத்தகமாக வந்தது. அந்த டைரியில் 21.2.1922-ம் நாளைப் பற்றி அவர் எழுகிறார்..


'அப்பாத்துரை என்ற சமையல்காரரை தூக்கிலிடப் போகிறார்கள். இன்று நான் அதிகாலையில் எழுந்துவிட்டேன். அன்று தூக்கிலிடப்பட இருந்த மனிதனின் நினைவு என்னை முன்னதாக எழுப்பி இருக்க வேண்டும். என் படுக்கையில் உட்கார்ந்தவாறே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். அந்த நிமிஷங்கள் ஒரு யுகம் போலத் தோன்றின. 

அவர்கள், துரதிர்ஷ்டம் பிடித்த அப்பாத்துரையை கைவிலங்கிட்டு அழைத்து வந்தனர். காலடி ஓசையில் இருந்து அவர்கள் வந்ததை உணர்ந்தேன். சில நிமிஷங்களில் தலைமை வார்டர் என் அறையைத் தாண்டிச் சென்றார். அதிலிருந்து அப்பாத்துரையின் வாழ்வு முடிந்தது என்று தெரிந்து கொண்டேன். கடவுள் கொடுத்ததை மனிதன் பகிரங்கமாகப் பறித்துக் கொண்டான். அதைச் சட்டப்படி நியாயம் என்றும் எண்ணிக் கொண்டான்!’


- இப்படி எழுதி இருப்பவர் மூதறிஞர் ராஜாஜி.

 சி.பி - மரண தண்டனை விதிக்கப்பட்டால் எப்போது மரணம் வரும் என்று காத்திருப்பது மரணத்தை விடக்கொடுமையானது..



 7.  யாரையும் கேட்காமல் பட்டியல் வெளியிட்டு விட்டாரே ஜெ.? 

 சி.பி - அவர் எம்ஜியாரையே மதிக்காதவர்.. கறுப்பு எம் ஜி ஆருக்கு அல்வாதான், ஆனா கசக்கும் அல்வா!!


  யாரைக் கேட்க வேண்டும்_ இது ஜெ. வாய் திறந்து சொல்லாத பதில்!


ஒரு உண்மை மட்டும் புரிகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதும் கூட்டணிகளுடன் பேசுவதற்கு முன்னதாக ஒரு பட்டியல் வெளியாகிவிட்டது. 'அம்மாவுக்குத் தெரியாது’ என்று அப்போது சிலர் சொன்னார்கள். இன்று நடப்பதைப் பார்த்தால், அதுவும் 'அம்மாவுக்குத் தெரிந்து நடந்ததுதான்’ என்ற முடிவுக்கு வரவேண்டி உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே தனித்து நிற்கலாம் என்ற ஐடியா அவருக்கு இருந்திருப்பதும் தெரிகிறது.





  8.அடுத்த மாதம் திருமணம் ஆகப் போகும் எனக்கு உங்களது அறிவுரை? 


சி.பி - இப்படி கண்டவங்க கிட்டேயும் கேட்காம மனைவி பேச்சை மட்டும் கேட்டு நடந்துக்கப்பா..

  கேள்வி கழுகாருக்குதானே.! புதுமணத்தம்பதிக்கு புத்திமதி சொல்லாதே என்கிறது சாஸ்திரம். ஆனால், வி.ஸ.காண்டேகர் தனது கதை ஒன்றில் சொன்ன வாசகம் கவனத்துக்கு வருகிறது.

'திருமணம் என்பது ஒரு போர். என்னதான் லாகவமாகச் செயல்பட்டாலும் சேதாரம் இருக்கத் தான் செய்யும்’.

சி.பி - ஆனா சேதாரம்  நாட் டூ தாரம் , ஆல் லாஸ் டூ ஹஸ்”பெண்டு”

 9 முதல் நாள் அணு உலைக்கு ஆதரவு... மறுநாள் எதிர்ப்பு.. என்ன ஆச்சு ஜெயலலிதாவுக்கு? 


  பேரறிவாளன், சாந்தன், முருகன் விவகாரத்திலும் இப்படித்தான் நடந்து கொண்டார். இனிமேல் ஜெயலலிதா எந்தப் பிரச்னை தொடர்பாகவும் முதல் நாள் எழுதும் அறிக்கையை ரிலீஸ் பண்ணாமல் இருந்து... மறுநாள் யோசித்த பிறகு வெளியே விட்டால் நல்லது!

சி.பி - நிலையான முடிவு எடுக்கும் முன் சில தடுமாற்றங்கள் இருக்கத்தான் செய்யும்.. 


  10. ரயில் விபத்து ஏற்பட்டு உயிர்ச்சேதம் அடைந்தால் முன்பெல்லாம் ரயில்வே மந்திரி பதவி விலகுவார். ஆனால், தற்போதைய மந்திரி, ஆறுதல் மட்டும் கூறிவிட்டு கடமையை முடித்துக் கொள்கிறாரே?


  ஆறுதலாவது சொல்ல வருகிறாரே!  ஆறு மாதங்களுக்கு முன்னால் பீகாரில் ஒரு விபத்து ஏற்பட்டபோது மத்திய மந்திரி போகவே இல்லை. முன்பெல்லாம் எப்பவாவது விபத்து நடக்கும். அது பெரிய விஷயமாகி பதவி விலகுவார். இப்போது மாதம் தோறும் இந்தியாவில் எந்தப் பகுதியிலாவது நடக்கிறது விபத்து. பதவி விலக ஆரம்பித்தால் விலகிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்!

சி.பி - பதவி பெற எவ்வளவு சிரமப்படவேண்டியதா இருக்கு..? கண்டவன் கால்லயும் விழ வேண்டியதா இருக்கு.. உங்களுக்கென்னா ஈசியா சொல்லிடுவீங்க.. அவங்களுக்குத்தானே கஷ்ட நஷ்டம் தெரியும்.. ?

11.  வைகோ இன்னும் எவ்வளவு காலம்தான் மைக் பிடித்துக் கொண்டே இருக்கப் போகிறார்? 


  மைக் இருக்கும் வரை..
 
சி.பி - அவர் ஆட்சியைப்பிடிக்கும் வாய்ப்பு 0.001% கூட இல்லை!!!

நன்றி - ஜூ வி

Friday, September 23, 2011

ஜீரோ சைஸ் அழகியும் ,நேரோ பீஸ் ஜிகிடியும் - ஸ்ருதி கமல் கிளு கிளு பேட்டி காமெடி கும்மி

http://www.chennai365.com/wp-content/uploads/actress/sruthi_kamal/sruthi_kamal07.jpg

சைஸ் ஃபோர் அழகு போதும் எனக்கு!

''வாவ்! நிச்சயம் சொல்லியே ஆகணும் ஸ்ருதி... முன்னைவிட இப்போ ரொம்ப அழகா இருக்கீங்க!''


 சி.பி - யோவ். என்னய்யா ,ஓப்பனிங்க்லயே டபுள் மீனிங்க் கமெண்ட்..? என்ன தான் பாப்பாவுக்கு தமிழ் சரியா தெரியாதுன்னாலும் அதுக்காக இப்படியா?


''ஹேய்ய்ய்ய்... அப்போ இதுக்கு முன்னாடி நான் அழகா இல்லையா?'' - அதட்டல் குரலில் மிரட்டிவிட்டு, சட்டெனக் குறும்பாகச் சிரிக்கிறார் ஸ்ருதி ஹாசன். சர்வதேச கலர் கொண்ட அக்மார்க் தமிழ் ஹீரோயின்!  


 சி.பி - அதாவது தனது முதல் படமான லக் ஹிந்திப்படம் டப்பா ஆச்சே அதன் ஹீரோயின்..?

1. '' 'ஏழாம் அறிவு’க்கு இப்பவே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு போல...''

சி.பி -- ஓவர் பில்டப் படங்கள் டப்பா ஆன கதை 1. பாபா 2 ஆள வந்தான் 3. குருவி ,4 அசல் 5.வல்லவன் 6,........ என தொடரும் பட்டியல்கள்..... ஆனா ஏ ஆர் முருகதாஸ் அந்த பட்டியல்ல சேர மாட்டார்னு தோணுது.. லேட்டஸ்ட் சூப்பர் டூப்பர் ஹிட் எங்கேயும் எப்போதும் அதை உறுதி செய்யுது,.. 


http://cinesouth.com/images/new/09012008-THN14image1.jpg


''சும்மாவா? ஹீரோ, ஹீரோயின்ல ஆரம்பிச்சு லைட்பாய் வரை யார்கிட்ட என்ன பெஸ்ட்டோ அதைக் கொண்டுவந்திருக்கார் முருகதாஸ் சார். சும்மா பாட்டுக்கு மட்டும் வந்துட்டுப் போகாம, படம் முழுக்க நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர். ஒவ்வொரு ஷாட்டும் சவால்தான்!

சி.பி - சும்மா கதை விடாதீங்க.. படம் பூரா பாட்டாவே இருக்கா?



சூர்யா ஸோ ஸ்வீட். ஆரம்பத்தில் ரொம்ப நடுங்கிட்டேன். 'முகத்தில் நடுக்கத்தைக் காட்டக் கூடாது’னு அட்வைஸ் மட்டும் பண்ணாம, ஒவ்வொரு ஷாட்லயும் எனக்காகப் பொறுமையாக் காத்திருந்து, சமயங்களில் விட்டுக்கொடுத்து என் பயத்தைப் போக்கினார்!''

சி.பி - ஹி ஹி தோள்ல, முதுகுல தட்டிக்குடுத்திருப்பாரே? தட்டிக்குடுத்து வேலை வாங்குறதுங்கறது இதானா/ அவ்வ்வ்



மேலும் படங்களுக்கு...
2. ''ரஜினி பொண்ணு - கமல் பொண்ணு சேர்ந்து '3’ படம் பண்றீங்க! ஃப்ரெண்ட்லி பழக்கம் தாண்டி ஈகோ மோதல் எதுவும்?''

சி.பி - அப்படி ஒரு நினைப்பே இல்லைன்னாக்கூட இனிமே அப்டி நினைக்க வெச்சுடுவாங்க போல.. இந்த பிரஸ் காரங்க. 


''உண்மை சொல்லவா... இதுக்கு முன்னாடிலாம் ஐஸ்வர்யாவை எங்கேயாவது நிகழ்ச்சிகளில் சந்திக்கிறதோடு சரி. சும்மா 'ஹாய்... ஹவ் ஆர் யூ’னு விசாரிச்சுட்டு 'பை பை’ சொல்லிருவோம். ஆனா, இப்போ அவங்ககூட நிறைய நேரம் செலவழிக்கிறேன். சொல்லப்போனா, இப்பதான் நாங்க ரொம்ப ஃப்ரெண்ட்ஸ்.




ஸ்ருதிஹாசன்


ஒரு இயக்குநராக எந்தச்  சூழ்நிலையையும் அழகா சமாளிக்குறாங்க ஐஸ்வர்யா. ஸ்பாட்ல நான் ஒரு நடிகை, தனுஷ் நடிகர், ஐஸ்வர்யா இயக்குநர்... இவ்வளவுதான் மனசுல இருக்கும். வேலை மட்டும் மனசில் இருந்தா ஈகோவுக்கு அங்கே என்ன வேலை?''

சி.பி - ச்சே.. உப்பு சப்பு இல்லாம போச்சே...!!!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHaLA8jYIM32bWMDqFcP0g-f_UOBP1incqX8h0NOp_MtiiIYSVhvMYsZ8GwOHLVazkn9EgrG8oI4HTpfR3gaIXmvPnLyPeMyv6wiJUYg3vxZLSmarNZhp4e97cKvuGKPQ0AeD6AmF5fWA/s1600/7aam-arivu-logo-launch-at-hyderabad-stills-39.jpg


3. ''உங்க தங்கச்சி அக்ஷராவும் நடிக்கப்போறதா ஒரு தகவல். உண்மையா?''

சி.பி - அண்ணனுக்கு ஆசை.. அக்‌ஷரா ஸ்டில்லை பேட்டில போடனும்னு.. அதை நியாயப்படுத்த சம்பந்தமில்லாம ஒரு கேள்வி.. ம் ம் 


''எனக்குத் தெரிஞ்சு அக்ஷரா இப்போதைக்கு அப்படி எந்த முடிவும் எடுக்கலை. டான்ஸில் மட்டும்தான் அவங்க முழுக் கவனமும் இருக்கு. அப்பாவைப் பொறுத்தவரை எங்களுக்கு அட்வைஸ் கொடுப்பார். நாங்க என்ன முடிவு எடுத்தாலும் அதுக்குக் குறுக்கே நிற்க மாட்டார். ஒரு அக்காவா என் தங்கச்சிக்கு ப்ளஸ், மைனஸ் சொல்வேன்!''

 சி.பி - உங்க தங்கைக்கு பிளஸ் கமல்.. மைனஸ் ஸ்ருதிகமல்.. ஹி ஹி பை கோர்த்து விட்டு குளிர் காய்வோர் சங்கம்.. 


4. ''ஏற்கெனவே நீங்க ரொம்ப ஸ்லிம். இப்போ 'சைஸ் ஜீரோ’ வேற ட்ரை பண்றீங் களாமே?''

சி.பி - எல்லா கோலிவுட் ஃபிகர்ஸூக்கும் பொதுவா ஒண்ணு சொல்லிக்கறேன், தமிழன் குண்டா குஷ்பூ, ஹன்சிகா மோத்வானி மாதிரி கசக்கு முசக்குன்னு இருந்தாத்தான் ரசிப்பான்.. ஸ்லிம்மாகறேன்னு ஸ்லிப் ஆகிடாதீங்க.. ஹி ஹி 


''இது என்ன புதுக் கதை? நான் இப்பவே சைஸ் ஃபோர். இதுக்கு மேல நானே நினைச்சாலும் வெயிட் குறைக்க முடியாது. என் உடம்பு மேல மத்தவங் களைவிட எனக்கு அக்கறை அதிகம். சாப்பாட்டின் அருமை தெரியாதவங்க தான் டயட் அது இதுனு உடம்பைக் கெடுத்துக்குவாங்க.

http://a2zkb.files.wordpress.com/2011/02/shruti-akshara-hassan-04.jpg?w=299&h=319

சி.பி - என்னது உங்க சைஸ் வெறும் 4 தானா? அவ்வ்வ்வ் எனக்கு ஜி கே கம்மி.. ம் ம் 

அதுவும் நம்ம ஊர் சாப்பாட்டின் அருமை கொஞ்ச நாளா வது வெளிநாட்டில் தங்கி இருந் தாத்தான் தெரியும். அங்கேலாம் நம்ம சாப்பாட்டை நாமதான் சமைக்கணும். அதனால, உங்க அடுத்த கேள்விக்கு இப்பவே நான் பதில் சொல்லிடுறேன்... ஸ்ருதிக்கு நல்லாவே சமைக்கத் தெரியும்!''

சி.பி - நீங்க சமைப்பீங்க ஓக்கே.. மத்தவங்க சாப்பிட முடியுமா? டவுட்டு/...

thanx - vikatan

http://www.deccanchronicle.com/sites/default/files/imagecache/article_vertical/article-images/akshara-hassan_2.jpg.crop_display.jpg

ஆயிரம் விளக்கு - சனாகான் +சத்யராஜ் + சாந்தனு கே பாக்யராஜ் +கூட்டணி - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoBOTOTfNIsHcX_GTj0LvQn191GzRssHEsm3K11bApumlKIYe9AJfyzm7utTwzAT9lhg6tujb0XkEAmcCgX83hyphenhyphenXbIrK-_h5iNWrhi7a6rB_WZB48uPAm3tifuP3hgdgdcCzIuTPACV4zH/s1600/av1.jpgசத்யராஜ் பாசத்துக்கும் அன்புக்கும் ஏங்கும் ஒரு தாதா.. சாந்தனு ஆள் நல்ல பர்சனாலிடியாக இருந்தாலும் மொக்க ஃபிகர் மோஹனா (சனாகான்)வை லவ்வும் ஒரு சாதா இளைஞன். இந்த சாதா இளைஞனை அந்த தாதா தத்துப்பிள்ளையாக வளர்க்க நினைக்கிறார்... அவர் தாதா என இந்த சாதாவுக்கு தெரியாது..  இருவருக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டம் தான் கதை.. 


ஹீரோ சாந்தனு - நேர்ல பார்க்க சாக்லெட் பாய் மதிரி இருக்கும் கே பாக்யராஜ் வாரிசு இந்தப்படத்துல ஏன் தூங்கி எழுந்த விடியா வெள்ளி போல் இருக்கார்னு தெரில.. எப்பவும் ஆள் டல்லா இருக்கார்.. ஹீரோயின் கூட 3 டூயட்டும், சத்யராஜ் கூட ஒரு பாட்டும் பாடறார்.. 2 ஃபைட் போடறார்..  அவ்ளவ் தான்...!


ஹீரோயின் சனாகான் சாதாரண 40 மார்க் ஃபிகர்.. இவர் படம் முழுக்க நடிப்பையும் காட்டலை.....குணச்சித்திரத்தையும் காட்டலைன்னு சொல்ல வந்தேன் ஹி ஹி .. ஃபேஸ் எக்ஸ்பிரஸ்னா என்ன?ன்னு பாப்பாக்கு சுத்தமா தெரில பாவம்.. ஒரு சீன்ல வாய்க்கால்ல தண்ணியைப்பார்த்ததும் அசால்ட்டா எந்த தயக்கமோ, கூச்சமோ இல்லாம தாவணியை கழட்டி வீசிப்போட்டுட்டு வாய்க்கால்ல குதிச்சுடறார். அட ஆண்டவா!!! பார்க்கற மத்தவங்கதான் கூச்சப்படறாங்க.. ( நான் அக்மார்க் அப்பாவி என்பதால் அந்த சீனில் கண்களை க்ளோசிங்க். )இது அப்போ தெரிஞ்ச சனாகானின் லோஹிப் மேல சத்தியம்...

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/09/aayiram-vilakku-movie-still.jpg

கிளை வில்லன் சுமன்... அண்ணன் கேப்டன் மாதிரி எப்பவும் மப்புலயே இருப்பார் போல.  இவருக்கு கொடுக்கப்பட்ட வேலை என்னான்னா தனது போட்டி தாதாவை அப்பப்ப சவால் விடறது..உறுமுவது .... எமாந்த இ வா எவனாவது வந்தா அவனை கொலை பண்றது. . 

இணை வில்லன் சானா கான்க்கு மாமா பையன். இவருக்கு 24 மணி நேரமும் என்ன வேலைன்னா பைக் பெட்ரோல் டேங்க் உள்ளே ஒரு பெரிய அரிவாள் வெச்சு அலையறது.. எவனாவது தன் முறைப்பெண்ணை கையை ப்பிடிச்சு இழுத்தா அவன் கையை வெட்டறது..  டேய்.. திருந்துங்கடா...

கஞ்சா கறுப்பு. நல்ல குணச்சித்திர நடிகரும், ராம் படம் மூலம் அறிமுகம் ஆன காமெடி நடிகரும் ஆன இவர் இன்னும் எத்தனை நாளுக்கு உப்பு சப்பு இல்லாத படத்துல கிச்சு கிச்சு மூட்டுவாரோ... ஒரு சீன்ல கூட சிரிப்பே வர்ல பாஸ்.. சாரி.. 


http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=2374&option=com_joomgallery&Itemid=77

படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1. வாத்தியார் சார். பசங்க  தப்பு பண்ணுனா  நீங்க மார்க் கம்மியா போடுவீங்க.. நாங்க ஆளையே போடுவோம்..  ( டேய் ரவுடிங்களே.. முதல்ல குளியல் போடுங்கடா!)


2. மிஸ் .. ஐ லவ் யூ..

உங்க மணிபர்ஸ் குடுங்க.

எதுக்கு?

என்னை யார் லவ் பண்ணாலும் அவங்க மணிபர்ஸை செக் பண்ணுவேன். ( சோனாவை விட கேவலமான மைண்ட் தாட்டோ?!!)

3. மிஸ்... உங்க பேக்கை கொடுங்க..  ( யாரும் ஜெர்க் ஆக வேணாம்.. அவரு கேட்கறது ஹேண்ட் பேக்கை ஹி ஹி )

எதுக்கு?

எனக்கும் லவ் பண்றவங்க பேக்கை செக் பண்ணி பழக்கம் .. ( நல்ல வேளை... )

4.  நான் இந்த ஆத்துல குதிச்சு தற்கொலை பண்ணிக்கப்போறேன்..

உள்லே தண்ணிப்பாம்பு நிறைய இருக்குமே?

கொத்துமா?


தெரில.. கேட்டு சொல்றேன்.. ( அஞ்சாங்கிளாஸ் தமிழ் நான் டி டெயில்ல வர்ற கதை உல்டா... )



5. லிங்கத்துக்கும், உனக்கும் என்னா லிங்க்.. ?

அவருக்கு நான் தாங்க ரைட் ஹேண்ட்... ( அப்போ அவருக்கு பதிலா நீ தான் ஊட்டி விடுவியா? )


http://indiansamachar.in/wp-content/uploads/2011/09/Tamil-Actress-Sana-Khan-Hot-pictures1.jpg
6.  இவருதான் என் புது ஃபிரண்ட் கண்ணாயிரம்...

பாப்பா யாரு... உன் புது கேர்ள் ஃபிரண்டா..? ( அப்போ நிறைய பழைய கேர்ள் ஃபிரண்ட் இருக்கா? அவ்வ்வ்)


7. இந்த சட்டை எங்கப்பாவுது.. ஆனா நான் அவரைப்பார்த்ததே இல்ல.. அவர் சட்டையை நீ போட்டிருக்கறதைப்பார்க்கறப்ப அப்பா மாதிரிதான்யா என் கண்ணுக்கு தெரியறே..

8. அந்த கொதிக்கற பால் தேக்ஸாவை எடு..


எதுக்குங்கய்யா.. குடும்பத்தோட புரூ காஃபி போட்டு குடிக்கவா?

இல்ல... உன் தலை மேல கொட்ட....

9. பெத்தவங்களையே மத்தவங்களா நினைக்கற பசங்களுக்கு மத்தில மத்தவங்களைக்கூட  பெத்தவங்களா நினைக்கற மனுஷங்களும் இந்த உலகத்துல இருக்காங்கப்பா...

http://flicksbuzz.com/Assets/Images/Mollywood/Mollywood-News/Sana-Khan-Hot-Stills-Overview.jpg

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. ரூ 2 லட்சம் மார்க்கட்ரேட் உள்ள இடத்தை ஃபேக்டரி கட்ட சாந்தனுவிடம் பேரம் பேசும் ரவுடி 5 லட்சம் தர்றதா சொல்றாரு.. ஓக்கே.. பேரம் படியாம 20 லட்சம் வரை இறங்கி வர்றாரே? அது எப்படி? அவனே ரவுடி... ஏன் பம்பனும்? மிரட்னா சைன் பண்ணிடறாரு.. ?

2. அதே நிலத்தை சாந்தனு அவர் அவசரத்தேவைக்கு விற்க முன் வரும்போது மார்க்கெட் ரேட்டை விட பாதி விலைக்குத்தர்றாரே.. ஏன்? நிலமும், தங்கமும்  எப்போதும் மதிப்பை இழக்காதே?


3. ஹீரோயினை ஹீரோ தான் புளூ கிராஸ் மெம்பர்னு ஏமாத்தி லவ் பண்றாரு ஓக்கே.. அதுக்குப்பிறகு 2 மாசம் கழிச்சு ஹீரோயின் ஹீரோ வீட்ல இல்லாதப்ப ஹீரோ வீட்டுக்கு போறப்ப இந்தா பார்த்துக்கோன்னு சொல்ற மாதிரி அந்த ஏமாத்துனதுக்கான ஆதாரங்களை டேபிள் மேலயே வெச்சிருக்காரே? அது ஏன்?


4. பெரும்பாலான ஹீரோயின்கள் சமூக சேவை செய்யும் ஆண்கள், தாதாக்கள் ரவுடிகளைத்தான் லவ் பண்றாங்க. அப்போ என்னை மாதிரி 3000 ரூபா சம்பளத்துக்கு வேலைக்குப்பொறவங்களுக்கு எல்லாம் ஜோடியே கிடைக்காதா?


http://7blues.com/wp-content/gallery/sana-khan/sana-khan-movies-stills.jpg
இந்தப்படம் எல்லா செண்ட்டர்களீலும் 7 நாட்கள் ஓடும்.. ஏன்னா அடுத்த வெள்ளீக்கிழமை வரை வேற படம் எதுவும் வர்லை.

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 35

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்கிங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - டி வி ல போட்டாக்கூட பார்த்துடாதீங்க.. என் மார்க் - 25

ஈரோடு சண்டிகாவில் இந்தப்படம் பார்த்தேன்

பிப்ரவ‌ரி 14 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹோசிமின் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் தனது இரண்டாவதுப் படத்தை இயக்கியுள்ளார்.இந்தப்படம் இயக்குனதுக்கு அண்ணன் சும்மாவே இருந்திருக்கலாம்.




நீங்க மன்மோகன் சிங்கா? மீன் மோகன் சிங்கா? மன்மோகன் ஜிங்க்ஜக்கா?

Grecia
1. மேடம், பிரைம் மினிஸ்டரான நீங்க  தேசியக்கொடியை அவமானப்படுத்தீட்டீங்களே?

கோடிக்கணக்குல ஊழல் பண்ணி சிலர் தேசத்தையே அவமானப்படுத்தறதுக்கு நான்  எவ்வளவோ பெட்டர்

---------------------


2. இந்தியாவிலேயே அறிவிற்சிறந்த முதல்வர் ஜெ - மன்மோகன் சிங் # நல்ல வேளை, அழகுல சிறந்தவர்னு சொல்லாம விட்டீங்க!

---------------------------------


3.தேசியக்கொடியை போர்த்திக்கிட்டு படுத்திருந்தீங்களாமே?

இது ஒரு தப்பா? நெக்ஸ்ட் டைம் படுத்துக்கிட்டு அப்புறமா போர்த்திக்கறேன், ஓக்கேவா?

------------------------------


4. ஆனானப்பட்ட இலியானா,தமனாவே அடக்கி வாசிக்கையில் இடைத்தேர்தலில் போட்டியிட குஷ்பூ ஏன் துடிக்கிறார்? # டவுட்டு டேவிட்டு

-------------------



5. நீ ஒரு போர்க்குற்றவாளி! நமக்கிடையே நடக்கும் காதல் போரில் எப்போதும் நீ தான் மிஞ்சுகிறாய்! நான் தான் கெஞ்சுகிறேன்!

-----------------------

6. முகமூடிகளுடன் உலா வரும் மனிதர்கள் கூட சோக எண்ணங்கள் தலை தூக்கும்போது தனிமையை நாடுகிறார்கள்

---------------------------


7. தியானம்,யோகா,பிராணயாமம் செய்பவர்கள் பரபரப்பு வாழ்க்கையிலிருந்து விலகி அமைதி அடைகிறார்கள்

------------------


8. ரசிகர் மன்றங்களைக்கலைத்தால் அதற்குப்பிறகு ரிலீஸ் ஆகும் படம் ஹிட் ஆகும் என்பது கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் கேனத்தனமான செண்ட்டிமெண்ட்

----------------------------

9.  தலைவர் ஏன் கடுப்புல இருக்காரு?

மதுரையை இழந்த கந்தர கோல பாண்டியன் பட்டம் குடுத்தாங்களாம்

-----------------



10. யார் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லாம கழுவற மீன்ல நழுவற மீனா எஸ் ஆகும் நீங்க மன்மோகன் சிங்கா? மீன் மோகன் சிங்கா?

------------------------


11.தலைவரே! 2ஜி விவகாரம் என்ன ஆகும்?

தீபாவளி வரை பொறு!

புரியலையே? புஷ்வாணம் ஆகிடும்.!!

------------------------------

12. காதலை வெளிப்படுத்த காதலி முன் காதலன் மென்று விழுங்கும்போதே காதலி புரிந்தும் புரியாதது போலே காத்திருப்பாள்

--------------------------

13. காதலியின் மீது கொண்டுள்ள அன்பை விட அவள் மேல் வைத்திருக்கும் காதல் மேல் அதீத அன்பு வைத்திருப்பான் உண்மைக்காதலன்

---------------------------

14. உலகிலேயே தர்மசங்கடமான விஷயம் 2 பெண்களை அவர்களுக்கு எதிரில் ஒப்பிடுவதே!

---------------------------

15.ஜட்ஜ் - நடிகையைப்பார்த்து நீங்க ஒரு டிக்கெட்தானே?னு கேட்டீங்களாமே?

பொய் ,யுவர் ஆனர், நீங்க போட்டிருக்கறது வி நெக் ஜாக்கெட்தானேனு கேட்டேன்

---------------------------------------

16. சார், உங்க பையன் எங்கே போனாலும் அவன் பின்னாலயே நீங்களும் போறீங்களே, ஏன்?

அவன் யாரையாவது கையைப்பிடிச்சு இழுப்பான், நான் காலைப்பிடிச்சு மன்னிப்பு கேப்பேன்

-----------------------------------------

17. ஏமாற்றங்களை யாரும் எதிர்பார்ப்பதில்லை, ஆனால் எதிர்பார்ப்புகளே ஏமாற்றங்களாய் ஆகின்றன

-------------------------------------

18. ஒரு நபரை வெறுப்பதாக இருந்தால் உறுதியாக வெறு, ஆனால் ஒரு நபரை விரும்புவதாக இருந்தால் விளையாட்டுக்காக விரும்பி விடாதே!

--------------------------------------

19. இவ்ளவ் கம்மியா மார்க் வாங்கி இருக்கியே, இனிமே என்னை அப்பான்னு கூப்பிடாதே!

கூல் டாடி.. இது ஜஸ்ட் ஸ்கூல் டெஸ்ட் தான், டிஎன்ஏ டெஸ்ட் அல்ல!

----------------------------------

20. பசங்க கண்களை மூடினால் அவங்க மனக்கண்ணில் ஒரு பெண் தோன்றுகிறாள், பொண்ணுங்க கண்களை மூடினால் அவங்க  மனக்கண்ணில்  பசங்க வரிசையா வர்றாங்க

-----------------------------------



 
 

Thursday, September 22, 2011

பத்ரா - ஆறடி அனுஷ்கா!! + நேரடி ஆந்திரா - தெலுங்கு சினிமா விமர்சனம்

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/02/BATHRA-STILLS-49.jpgபோக்கிரி படத்துல விஜய் நடிப்போட ஒரிஜினல் தெலுங்குல மகேஷ்பாபு பண்ணுனாரே நினைவு இருக்கா?அவர்தான் ஹீரோ..படத்தோட பாதி நேரம் ஒரு பாலை வனத்துல பயணம் வித் அஸ்கா அழகி அனுஷ்கா...( அதாங்க ஸ்வீட் கேர்ள்.. ) இதுக்கு மேல படத்துல கதை என்ன வேணும்? ஜாலியா எஞ்சாய் பண்ண வேண்டியதுதான்..

ஹீரோ மகேஷ் வழக்கம் போல் ஆள் அலட்டிக்காம நடிக்கறார்..அனுஷ்காவுக்கும் ,இவருக்கும் பாடி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக வில்லை என்றாலும் அதைப்பற்றி யாருக்கும் அக்கறை இல்லை.. எல்லா ஹீரோக்களையும் போல ஹீரோயினை கலாய்க்கிறார், வில்லனை வாஷிங்க் மிஷின் இல்லாமலேயே துவைத்து எடுக்கிறார். .. அடியாட்கள் 87 பேர் ஒண்ணா வந்தாலும் அண்ணன் தன் மேல ஒரு கீறல்கூட விழாம எல்லாரையும் அடிச்சு காயப்போடறார்.

அனுஷ்கா ரொம்ப அப்பாவியா வர்றார். எந்த அளவு அப்பாவின்னா எவனோ பார்ட்டில வாங்க ஹெலிகாப்டர்ல வாக்கிங்க் போய்ட்டு வர்லாம்னு கூப்பிட்டா ஏதோ 30 கிமீ போறதா நினைச்சுட்டு பாகிஸ்தான் பார்டர் வர்றது கூட தெரியாம வர்றார்.. அது கூட தேவல. அவன் கூட பின்னாலயே காட்டுக்குள்ள போறார். அவன் பாக்கெட்ல இருந்து காண்டம் பாக்கெட் கீழே விழுந்ததும் தான் அக்காவுக்கு ஏழாம் அறிவு ஓப்பன் ஆகி எஸ் ஆகறாங்க.. அவ்வளவு அப்பாவி/..


நானும் என் 16 வயசுல இருந்து தேடறேன்.. இந்த மாதிரி அப்பாவி சிக்கவே மாட்டேங்குது. எல்லாம் விபரமான பார்ட்டிகளா தான் இருக்காங்க.. ஐ லவ் யூ சொன்னாலே அம்மா கிட்டே பேசுங்கங்கறாங்க. சாரி நான் அதிமுக அல்லன்னு சமாளிக்க வேண்டியதா இருக்கு./.


வில்லன் பிரகாஷ் ராஜ். அண்ணன் ஃபேஸ்ல புது சம்சாரம் கட்ன குதூகலத்தையே ஜாணோம், ஆள் டல்லாவே இருக்காரு. அநேகமா அண்ணன் நிகழ்கால அண்ணியை கழட்டி விட்டுட்டு அடுத்த மேரேஜ் பண்ணிடுவார்னு தோணுது..

விமர்சனம் டிராக் மாதிரி எங்கெங்கேயோ போகுது. சோனா - சரண் கில்மா கதை போல. கதைக்கு வருவோம். 

ஒரு கிராமத்துல இரிடியம் தாது மணல்ல கலந்திருக்கு. அதை எடுக்க வில்லன் ப்ளானிங்க். அதுக்காக அந்த ஊர் மக்களை இடத்தை காலி பண்ண வைக்க நீர் நிலைகள்ல வாட்டர் விஷம் மிக்‌ஷிங்க். சிலர் சாகறாங்க. பயந்து மக்கள் ஊரை காலி பண்ணுவாங்கன்னு வில்லன் எதிர்பார்க்கறார்.. ஆனா அப்போதான் ஹீரோவை எதிர்ல பார்க்கறார். .. 

அப்புறம் என்ன? ஒரு அரசாங்கத்தையே கைக்குள்ள போட்டிருக்கற மல்ட்டி மில்லியனர் வில்லனை ஒரு சாதாரண டாக்சி டிரைவர் புரட்டி எடுக்கறதை வாய்ல லாலிபாப் சாப்பிட்டுக்கிட்டே நாம பார்க்க வேண்டியதுதான்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkGZ3_atabwPOS1kQBHlJGLimRkrsl-QB2-cHKbRr7Zfe3dk6Zgb4kzRiBU6el7XifsvvimjC60cM2A2zXQjcUP9V0R8lJWbevpL-gDDXaF-SkFu18Hq0uAh2vLmFqGYrG0nCC1pX48m0/s1600/1.jpg


உத்தேசமாகப்புரிந்த வசனங்கள்

1. பாப்பா உயரம் 5 அடி 10 அங்குலம்.. கரண்ட் கம்பம் மாதிரி.. ஆள் தான் உயரம்.. ஆனா செம கட்டை.. ( அடடா குள்ளமா இருந்தாக்கூட கட்டையான குட்டைன்னு பஞ்ச் டயலாக் பேசி இருக்கலாம்.. )

2.  ஓக்கே மொத்தம் டேமேஜ் செலவு  8950 ரூபா.. அதை ரவுண்ட் பண்ணி ரூ10,000 ஆக கொடுத்துடு..

அது எப்படி? அதை ரவுண்ட் பண்ணுனா  ரூ 9000 தானே வரும்?

ஆமா, ஆனா ரூ 10,000த்துல தானே நிறைய ரவுண்ட்ஸ் இருக்கு.. ?

3.  பொம்பளய பார்த்தா எல்லாரும் ஆம்பளை ஆகிடறாங்க.. கத்தி கைல இருந்தா எல்லாரும் கடவுள் ஆகிடறாங்க..

4.  என்னா பாப்பா.. பேண்ட் போட மறந்துட்டியா?

 ஷட்டப்....

ஓ.. சாரி.. உன் டிரஸ்சே அவ்ளவ் தானா?


5. சார்.. என்ன சாப்பிடறீங்க?


சர்வர்.. கொழுப்பு,சர்க்கரை இல்லாத உணவுப்பொருள் உங்க ஹோட்டல்ல என்ன இருக்கோ அது கொண்டு வா..

தண்ணீர் தான் இருக்கு சார்..

6.  முக்கியமான ஃபோட்டோஸை அண்ணன் என்னைத்தான் எடுக்க சொல்வார்..

ஆமா அப்போத்தான் அதுல நீ இருக்க மாட்டே..

7.  அவன் கிட்டே காண்டம் இருந்தது.. பயந்துட்டேன்.. எதுக்குடா ரிஸ்க்னு ஓடி வந்துட்டேன்..

அடடா.. என் கிட்டே அது கூட இல்லையே?

8. அவங்க டிரஸ் என்ன வெங்காயம் விலை மாதிரி மேலே ஏறிக்கிட்டே இருக்கு?

9. இந்த ஊர்ல எல்லாரும் உன்னை தெய்வம்னு கூப்பிடறாங்க.....

நான் சாதாரண டிரைவர்டா..

பகவான் கிருஷ்ணர் கூட சாரதி தாண்டா..



http://whatslatest.com/blog/wp-content/uploads/2009/08/anushka4.jpg
10.  என்ன திட்டத்தோட இங்கே வந்தே?


ம்.. ஜஸ்ட் கிஸ்.. நான் நல்லவ என்பதால் இத்தோட உங்களை விட்டுட்டு போறேன்..


11. எனக்கு ஃபர்ஸ்ட் கீர் மட்டும் தான் போடத்தெரியும்..


போதும் போதும்ம். அதை வெச்சே இவ்வளவு தூரம் வந்திட்டியே

12.  நான் காமெடி பண்ணுவேன்.. ஆனாவேற யாராவது  காமெடி பண்ணுனா எனக்கு பிடிக்காது..

13. உயரமா இருக்கற பொண்ணை தொட்டா அவன் உயரத்துக்கு போயிடுவான் ( எங்கே? சொர்க்கத்துக்கா?)

14. எதுக்காக என்னை துரத்திட்டு வர்றே?

எதுக்காக என்னை பார்த்ததும் நீ ஓடறே..

எனக்கு எதுவும் தெரியாது..

நான் இன்னும் எதுவும் கேட்கவே இல்லையே?



படம் ஜாலியா போகுது..... தெலுங்குக்கு ஓக்கே. தமிழ்ல விரைவில் ரீ மேக் செய்யப்படலாம்.. லெமன் அழகி தமனாவின் முன்னாள் காதலரும் ,இந்நாள் ரஞ்சனியின் மணவாளனுமான கார்த்தி ஹீரோவா நடிக்க வரப்போகுது தமிழ்ல.

http://www.virupu.com/Anushka-6/photos/actress-anushka-sizzling-swimsuit-hot-spicy-stills-4.jpg

இயக்குநருக்கு சில கேள்விகள்

1.  ஒரு பொண்ணுக்கு 30 கிமீ தூரத்துக்கும் 3000 கிமீ தூரத்துக்கும் வித்தியாசம் தெரியாதா?

2. கதைப்படி ஹீரோ அந்த கிராமத்துக்கு வந்ததும் கடவுள் ஆகறார். அவர் மனசுல நினைக்கறது நடக்குது.. இறந்த குழந்தைக்கு உயிர் வருது.. மழை வா அப்டின்னா வருது. பூமில இருந்து தண்ணி வான்னா வருது.. அப்புறம் எதுக்காக அவர் மெனக்கெட்டு வில்லன் இடத்துக்கு போய் ஃபைட் போட்டு அவனை வீழ்த்தனும்? மனசுல அவனை ஜெயிக்கனும்னு நினைச்சா போதாதா?

3. பாலைவனத்துல ஹீரோ முதுகுல வில்லன் கடப்பறையால குத்திடறான், ஹீரோ என்பதால் அவர் உயிர் பிழைச்சுக்கறார் ஓக்கே.. ஆனா அந்த காயத்துல கடப்பாறைத்துண்டை உடம்புல இருந்து எடுக்க வேகமா வண்டில மோத முதுகு வழியா அது தெறிச்சு விழறதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க.. ஆள் அவுட் ஆகிடுவார்.. அதுக்கும் பிறகும் அவர் 34 பேரை சண்டை போட்டு அழிக்கறார்..அது எப்படி?

4. ஒரு சாதாரண டாக்ஸி டிரைவருக்கு ஏன் ஒரு மல்ட்டி மில்லியனர் அப்டி பயந்துக்கறார்? அவர் என்ன மாணீக் பாட்ஷாவா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzRLVNMco_SEJq-qWTH2p85OqTssVifey0AdnSJxBL9qHG8lwchmljwRgGqZryeiu_fWhfH3q8cDqISj3dT6uF4UbnfM52cgthDLO7GtAKa6jhZFgQjayC74x8LmFJ4uonBJG-7TKEcno/s1600/anushka+hot+-+panchakshari+stills+(6).jpg

பாடல் காட்சிகள் சுமார்தான். பாட்டு லைனே புரில. ஏதோ அனுஷ்கா இருப்பதால் தப்பிச்சோம்.

ஆனந்த விகடன் , குமுதம்ல எல்லாம் இதுக்கு விமர்சனம் போட மாட்டாங்க.

சி.பி கமெண்ட் - டி வி ல போடறப்ப பாருங்க..  மார்க் - 38

ஈரொடு சங்கீதாவுல பார்த்தேன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_96EyJoC9ZfWZUm9OlHy100aKZGC7J3yPGMLgYlF-Ym_v4Yf2AnCzqUOgq8S0gWIOy_2wNMql5P2zOkp79aET8r2MyYWHHAhClR47HC-JC1-DpqbJj4ZHUikSAwA2ASngtP9z-dKYv8I/s1600/Hot+anushka.jpg

ஒரு ஜோதிடப்பைத்தியத்தின் கேனத்தனமான காதல்!!!!!!!!!

Aliens Bike
1.நீ என்னுடன் இருக்கையில் நான் குழந்தை ஆகிறேன், நீ என்னை விட்டு விலகிச்சென்றதும் நான் மடந்தை ஆகிறேன்.

-----------------------------------

2. உயிர் மெய் எழுத்து என் உயிர் ஆனது - நீ!  ,

மெய் எழுத்து என் கனவானது - ச்!

----------------------------

3. உன் அழகைப்பார்க்கையில் எனக்கு தாழ்வு மனப்பான்மை வந்துவிடுகிறது, 

உன் அன்பைப்பெறுகையில் வாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது

---------------

4. உன் அலங்காரங்கள் என்னைத்தாக்குகின்றன! உன் அகங்காரங்கள் என்னை உன்னிடம் அண்ட விடாமல் செய்கின்றன!

-------------------------

5. உன்னுடனான சம்பாஷைணகளின்போது உன் உதடுகளின் மூலம் வரும் ஒலிகளை உன் கண்களின் ஒளிகள் இருட்டடிப்பு செய்து விடுகின்றன. (ஒளியின் வேகம் ஒலியின் வேகத்தை மிஞ்சி விடும்னு சயின்ஸ் டீச்சர் டெல்)

---------------------------

6. பூக்களை நீ சூடும்போது உனக்கான பிரத்யேக நறுமணத்தை நீ இழக்கிறாய் அன்பே!!

-----------------------------

7. உலகில் இதுவரை சொன்னவற்றில் உன்னத புத்திமதி - யாருக்கும் புத்திமதி சொல்லாதே!

----------------------------

8. முடியும் என்றால் முயற்சி செய், முடியாது என்றால் பயிற்சி செய்

-------------------------

9. ஒரு இடத்தை வாங்கும் முன் வில்லங்கச்சான்றிதழ் பெறுவது மாதிரி ஒரு மனதை நேசிக்கும்முன் வெற்றிடச்சான்றிதழ் வாங்கமுடிந்தால் எப்படி இருக்கும்? ( பெரும்பாலும் ஆல்ரெடி புக்டு ஆகவே இருக்கே?)

-----------------------------------

10. நாம் இருவரும் இணையும் காதல் கூட்டணியில் விருப்பம் எனக்கு! கடைசி நிமிடம் வரை கூட்டணி பற்றி வாய் திறக்காத சாமார்த்தியம் உனக்கு!

---------------------------


11. நமக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட வழியே இல்லை, ஏன் எனில் உன்னுடனான ஒற்றுமையில் நான் கண்ணும் கருத்துமாய் இருக்கிறேன்

-

---------------------

12. வாழ்வின் பாதி நேரம் உன் மடியில் நான் தலை சாய்ந்திருக்க வேண்டும், மீதி நேரம் என் மடியில் நீ தலை சாய்ந்திருக்க வேண்டும். ( வேலைக்கே போகமாட்டேன் ஹி ஹி )

---------------

13. உணவில் நான் சைவம், நீ அசைவம், அன்பில் நான் புத்தன், நீ ஹிட்லர், எதிர் எதிர் துருவங்கள் நாம், ஆனாலும் ஈர்க்கப்பட்டோம்

---------------



14. உன் மனதை மாற்றிவிட நான் முயலும்போது என் மனதை ஏமாற்றி விட நீ முடிவு செய்து விடுகிறாய்

-------------------


15. நீ 143 சொல்லும்போதே கூட்டுத்தொகை 8 வருதே, அஷ்டமத்துல சனி என்றே நினைத்தேன் # ஒரு ஜோதிடப்பைத்தியத்தின் கேனத்தனமான காதல்

---------------------------------


16. தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியம் சிலரிடம் மட்டுமே உண்டு, அதை திருத்திக்கொள்ளும் மனோ பக்குவம் மிகச்சிலரிடம் மட்டுமே உண்டு

---------------------------------

17. குற்றம் நடந்தது என்ன? என்று நட்பு வட்டத்தில் ஆராய்ந்து கொண்டிருந்தால் நம் மனநிம்மதி,நேரம் இழப்பதைத்தவிர பெரிதாக ஏதும் நடக்காது

--------------------------------

18. கனகாம்பரப்பூக்களை மட்டுமே நான் உன் கூந்தலில் சூடுவேன், உள்ளதில் மிக லேசான பூ அதுவே! # ஒரு முழமே 5 ரூபாதான் - சிக்கன சிகாமணி

-----------------------------

19. அடுத்த ஜென்மத்திலாவது நாம் ஒன்று சேர்வோம் என்றாய்!ஆறுதலாய்,போன பிறவியிலும் இப்படி சொல்லி ஏமாற்றி இருப்பாயோ?

------------------

20. உன்னை சந்திக்கும் முன் எனக்கு விக்கல் வந்ததில்லை! சந்தித்த பின் விக்கல் வராத நாளே இல்லை!

----------------------------------------




21. தன்னைவிட மிகக்குறைந்த வயதுள்ள பெண்ணை திருமணம் செய்தபெரியாரை எதிர்த்த அண்ணா ஏனோ எம்ஜிஆரை, கலைஞரை கண்டிக்கவும்,கண்டுக்கவும் இல்லை

--------------------------------------
22. கறந்த பாலின் தூய்மையுடன் உன் மனசு! பிறந்த மழலையின் பொலிவுடன் உன் காதல்!

-------------------------------------

23. வேண்டும் என்றே நீ என்னைப்பிரிந்தாய்! நான் வேண்டாம் என்றே விலகிச்சென்றாய்!

------------------------------------

24. நம் இருவர் கண்களும் முதன் முதலில் சந்தித்தபோது என் உள்ளுணர்வு ஏதும் சொல்லவில்லை!ஏன் எனில் என் உணர்வுகள் ஏதும் அப்போது வேலையே செய்யவில்லை

---------------------------

25. காங்., தனித்து போட்டி: திமுக., வெளியேற்றவில்லை: தங்கபாலு # முதல் இரவில் சண்டை ஏதும் இல்லை, திண்ணையில் தான் நல்லா காத்து வருது!!

--------------------------------------

Wednesday, September 21, 2011

சோனா அக்கா சொர்ணாக்கா ஆன பின்னணி, குண்டூசி அணி என்ன? - காமெடி கும்மி கலாட்டா


http://www.cinepicks.com/tamil/actress/sona/actress-sona-stills-4.jpg

1.ஏய் மிஸ்டர்! எதுக்காக அந்த நடிகைட்ட தவறா நடக்க முயற்சி செஞ்சீங்க?

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்னு சொன்னாங்க.

----------------------------------------

2. நான் ஆர்த்தோடெக்ஸ் ஃபேமிலி, என்னை அப்படி கூப்பிடலாமா? - கண்ணிய நடிகையும் ,குணவதியுமான நடிகை சோனா

, நான் கோ ஆப் டெக்ஸ் ஃபேமிலி, நான் அப்படி கூப்பிடுவேனா? - சரண்

# யோவ்! என்னய்யா நடக்குது?

--------------------------------------
3.  SPB- சோனா, நான் சமரசம் பேச வந்திருக்கேன்.

சோனா- ஏன் சார் சோபால உக்காந்தீங்க. வாங்க, பெட்ரூம்ல போய் கட்டில்ல உக்காந்து ஃபிரீயா பேசலாம்

---------------------------------


4. கவர்ச்சியால் மயக்கி பணம் பறிக்க முயன்றார்! சோனா மீது சரண் குற்றச்சாட்டு!! # ராமரா இருக்கறவர் சீதை கூடவே இருக்கறது!ஏன் சோனாவிடம் போனீங்க?

-----------------------------------------

5. மேடம், டிஸ்கொத்தே கிளப்புக்கு டேன்ஸ் ஆட வந்த நீங்க ஏன் பெட்ஷீட் போர்த்திட்டு வந்திருக்கீங்க? குளிரா?

நான் குணச்சித்திர நடிகை, கவர்ச்சி காட்ட மாட்டேன்.

-------------------------------------

6. மேடம்! நடு ராத்திரில நடந்த பார்ட்டிக்கு ஏன் போனீங்க?

நவராத்திரி கொலு மாதிரி சாமி கும்பிடற ஃபங்கஷன்னு நினைச்சுட்டேன்

---------------------------------------

7. மேடம், நீங்க ஏன் அவரை தப்பா நினைச்சீங்க?லவ்வுக்காக அப்ரோச் பண்ணி இருக்கலாம்?

ரோஜா குடுத்திருந்தா பரவால்ல, 25 முழம் மல்லிகைப்பூ குடுத்தாரு

---------------------------

8. ஹிந்தில சோனா என்றால் தங்கம், தூங்குதல் என 2 அர்த்தம் வருது .

டீச்சர், தமிழ்ல சோனா என்றால் ஆப்பு என்ற ஒரே அர்த்தம்தான் வருது

------------------------------------

9. இன்ஸ்பெக்டர்! எதுக்காக கேசுக்கு சம்பந்தமே இல்லாம நடிகை சோனாலி பிந்த்ரே கிட்டே விசாரணை பண்றீங்க?

சாரி சார்! சோனாவையே விசாரிச்சு போர் அடிக்குது

----------------------------------

10. துக்ளக் ஆசிரியர் சோ-ன்னா எனக்குப்பிடிக்கும்னு பேட்டி குடுத்தேன்.பத்திரிக்கைக்காரங்க அதை திரிச்சு சோனான்னா பிடிக்கும்னு போட்டுட்டாங்க..

எங்களை எல்லாம் இ னா  வா னா அப்டின்னு நினைச்சீங்களா?

-------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEje1TL_zkfD4q2nnCFfp-QL-rylQKZAWgptyrX-TTXAlUfapSg5tMoU5qfovNMVBgOfjq-_9CDqyQ6jhCk30B0kTCHiHWkB5gLnXRyAQlRxaHJ_KZxLHj8wzhrJ-aWCzMTyfsE4-gDNqpE/s1600/sona7.jpg

11. மேடம்,சன் டி வி கேமரா மேன் வந்துட்டாங்க. ஸ்டார்ட் ஆக்‌ஷன்!!

-அய்யய்யோ!! ரேப் பண்றாங்களே!!!

--------------------------------

12. ஷங்கர்,வைரமுத்து,ஏ ஆர் ரஹ்மான் 3 பேரும் சோனா கேஸ்ல எப்டி மாட்னாங்க?

சோனா அவள் அங்கம் தங்கம் தானா? அப்டின்னு இந்தியன்ல பாட்டு வருதே?

------------------------------

13. 10 கோடி ரூபா நஷ்ட ஈடு கொடுத்தா நான் இந்த கேஸை வாபஸ் வாங்கிக்கறேன்.

ஏம்மா! அவ்ளவ் பணம் என் கிட்டே இருந்தா ஹாலிவுட் நடிகைக்கே ட்ரை பண்ணி இருப்பனே? ஏன் லோக்கல்க்கு வர்றேன்?

----------------------------------------

14.மேடம்! பார்ட்டிக்கு போறப்ப,  அரைகுறையா  ஏன் டிரஸ் பண்ணிக்கிட்டு    போனீங்க?


பெண்களுக்கு 33 %இடம்தான்  ஒதுக்குனாங்க. ஆனால், என் உடம்புலதான்  50%  டிரஸ் இருந்ததே.


--------------------------------------


15. இன்ஸ்பெக்டர்!!!  அவர் என்னை மானபங்கப்படுத்திட்டார்.


மேடம்!  உங்க கற்பை இன்ஸ்யூர் செஞ்சு வச்சிருக்கீங்களா?!


--------------------------------------


16. மேடம், காம்பரமைசுக்கு(compramise )  ரெடியா?


அய்யய்யோ! காப்பாத்துங்க! காப்பாத்துங்க! என்னை  காம்புக்கு(camp )
கூப்பிடுறார்


----------------------------------------


17. மேடம்!இந்தாங்க இந்தாங்கமும், மிளகு ரசமும் செஞ்சு கொண்டு வந்திருக்கேன்.


எதுக்கு?

"சமரசம்" பண்ண வந்திருக்கேன். 

------------------------------------------


18. ஜட்ஜ்: நடிகையோட உணர்ச்சிகளை தூண்டி விட்டீங்களாமே!?\


கைதி: அதான், விட்டுட்டேனே யுவர் ஆனர்.


-----------------------------------------------

19. நான் சொல்வதெல்லாம்உண்மை - எங்கே சொல்லுங்க பார்க்கலாம்


நான் தொடுவதெல்லாம் பெண்மை. ஓ சாரி,   நான் சொல்வதெல்லாம்உண்மை


---------------------------------------------


20. நடிகை: நான் கவுரமான குடும்பத்தை சேர்ந்தவ.


நிருபர்: உங்க பேமிலில  எல்லாரும் கௌரவமா  மிட்நைட் பார்ட்டிக்கு  

போவீங்களா? இல்லை நீங்க மட்டுமா?

-----------------------------------------


21. மேடம்! உங்ககிட்ட தனியா பேசணும்.

சரி, வெட்டி பேச்சு பேசுற ஆளை எனக்கு பிடிக்காது. ஏன்னா? நான் "ஆக்க்ஷன்" 

ஹீரோயின்.

----------------------------------


22. இன்ஸ்பெக்டர் சார், நாலு பேருக்கு முன்னாடி இவர்,  என் கையை பிடிச்சு இழுத்துட்டார்.

மேடம்! நாலு பேருக்கு முன்னாடி  கையை பிடிச்சு இழுத்தது பிரச்சனையா? இல்லை கையை மட்டும் பிடிச்சது பிரச்சனையா?


------------------------------------------------

ராவோடு ராவா சரக்கு அடிக்க ராவடி ராமசாமி செஞ்ச ரப்சர்..

Linus Ricard
Linus Ricard


1. ரசிக்கத்தெரிந்தவனுக்கு இருள் கூட அழகு, நேசிக்கத்தெரிந்தவனுக்கு நிராகரிப்பும்......

---------------------

2.என்னை நீ பிரிந்தாலும், மறந்தாலும் நீ எனை நினைக்கும்போது நான் உன் கண்களில் கண்ணீராக  பிறப்பெடுப்பேன்

--------------------

3. பயப்படும்படும்படியா எதுவும் இல்லைன்னு சொல்லியும் ஏன் கண் கலங்கறீங்க?

டாக்டர், காதல் வயப்படும்படியா உங்க நர்ஸ் இருக்கே?

------------------------


4. சதீஷ்,என் கண் முன்னாலயே இன்னொருத்தியை சைட் அடிக்கறீங்களே?

நானும் எத்தனை நாள் தான் உன் லவ்வராவே நடிக்கறது? # மங்காத்தா எஃப்க்ட்


-----------------



5. பல படிப்பினைகளை அவள் எனக்கு கற்றுக்கொடுத்தாள் என்பதால் என்னை கை விட்டாலும் அவளுக்கு என் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்


----------------------

Photo



6. மிஸ்டர் ராமசாமி!! ராவோடு ராவா சரக்கு அடிச்சீங்களாமே? 


நான் என்ன ராப்பிச்சைக்காரனா? பகல்ல தான் அடிச்சேன் # ஃபுல் மப்பு தான் ஆனாலும் நாங்க டே ஷிஃப்டு ( டைட்டில் ட்வீட்)


-------------------


7. யோவ், இதெல்லாம் ஓவரு, ஃபீஸை என் கிட்டே தான் பணமா தரனும், 

சாரி டாக்டர், ஒரு அன்புல நர்ஸ் கிட்டே சேலையா கிஃப்ட் பண்ணிட்டேன் # காதல் நோயாளி


-------------------


8. ரமேஷ்.!எப்பவும் ஏன் எங்க வீட்டுக்கு வர்றதில்லை? 

உங்கம்மா என்னை பார்த்தா உனக்கு ஆபத்து ,உன் தங்கையை நான் பார்த்துட்டா நம்ம காதலுக்கு ஆபத்து .. 

( இது சி.போ ரமேஷ் காதல் கதை அல்ல)


------------------


9. உங்க உடம்புல விட்டமின் சத்து குறைவா இருக்கு.

எதுல விட்ட மீன் டாக்டர்? ஆத்துல விட்ட மீனா? குளத்துல விட்ட மீனா? # சைவ பேஷண்ட்டின் லொள்

----------------------------

10. கணவன் மனைவிக்குள்ள நடக்கற அந்தரங்க மேட்டர் 4 சுவருக்குள்ள தான் நோ பப்ளிக் சாரி.

அது ஓக்கே, அய்யோ அம்மா, பளார் அப்டினு சத்தம் கேட்டுதே?

-----------------------------

Paisajes


11. பல ஃபிகர்களிடமிருந்து DM மெசேஜ் வரும்போதெல்லாம் ஆர்வமா ஓப்பன் பண்ணுனா அது ஸ்பேம் மெசேஜ், #அடங்கொய்யால

-----------------------

12. நான் வென்றுவிடக்கூடாது என நீ விலகினாய்! தனிமை என்னை தின்று விடக்கூதே என நான் வந்தேன்,வென்றது காதல்

---------------------

13. தேர்தல் முடிந்து 3 மாதங்கள் ஆன பிறகும் நான் இதுவரை எந்த சொத்தும் வாங்கவில்லை - ஜெ. # இன்னும் டைம் இருக்கு மேடம்.,வீ   வெயிட்

------------------------

14. வன்முறை கூடாதே,ஆயுதங்கள் தேடாதே என கண்டித்து தீர்ப்பு சொன்ன ஜட்ஜ் கையில் எதற்கு ஒரு சுத்தியல்?

----------------------------

15. எனை விட்டு விலகுவதே உன் இலக்கு! உனை நோக்கி நெருங்கி வருவதே  என் இலக்கு!

-----------------------------




16. மழை போல் நீ எப்போதாவது தான் வருகிறாய், நான் பூமி போல் எப்போதும் உனக்காக காத்திருக்கிறேன்

-------------------------

17. காதல், அன்பு இரண்டையும் யார் ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்களை தேவதைகள் ஆசீர்வதிக்கின்றன.

--------------------------

18. மழைக்குப்பின் வந்து போய் விடும் வானவில் மாதிரி உன் காதல், என்றென்றும் ஒரே இடத்தில் நிலையாய் இருக்கும் வானம் போன்றது என் காதல்

------------------------------

19. தினமலர் எம்ப்பளம் தாமரை எனும்போதே அது சேற்றில் இருந்து வந்தது என யூகிக்க முடிகிறது

-----------------------

20. சென்சேஷனல் நியூசுக்காக சென்ஸ் இல்லாமல் நியூஸ் வெளியிடும் தினமலரை புறக்கணிப்போம். ( செங்கொடி பற்றிய அவதூறு செய்தி)

--------------------------------




21.என்னைத்தான் லவ் பண்றேன்னு நம்பினதுக்கு நல்ல பாடம் கத்துக்குடுத்துட்டே,ரிப்ளைக்கு ஏன் இவ்ளவ் லேட்?

டேய் லூசு,இன்றுதான் ஆசிரியர்கள் தினம்?

---------------------------------

22.சிறந்த இடம்தான், ஆனால் நாம் அதில் தங்கி விடவோ , தேங்கி விடவோ கூடாது#கடந்த காலம்

--------------------------------

23. வாழ்வை நாம் வெறுக்கும் 2 தருணங்கள்

1. சூப்பர்ஃபிகர் பக்கத்து வீட்டில் ஆனால் சீனியர்

2. மொக்கைஃபிகர் முறைப்பெண்ணாய் # சே,என்ன வாழ்க்கைடா

------------------------

24. கஷ்டப்பட்டு தேன் கூடு கட்டறே, ஆனா மனுஷன் அதை ஈசியா திருடிடறானே?

தேனி - தேனைத்தான் அவனால திருட முடியும்,தேனை உருவாக்கும் கலையைதிருடமுடியாது

----------------------------

25. காலேஜ் டூர் போறப்ப HOD பக்கத்து சீட்ல, ஈசியான எக்ஸாம் அன்னைக்கு பக்கத்துல சூப்பர் ஃபிகர் # போன ஜென்மத்துல நிறைய பாவம் செஞ்சிருப்போமோ?

-----------------------------


Tuesday, September 20, 2011

மரோ சரித்ரா மாதிரி ஒரு வருடம் ஓடுவது போல் ஒரு ஹிட் குடுக்க முடியுமா? கே பாலச்சந்தர் பகிரங்க சவால் பேட்டி - காமெடி கும்மி

விகடன் மேடை - கே.பாலசந்தர்


1.''சமீபத்தில் உங்கள் மனதைத் தொட்ட திரைப்படங்கள் எவையெவை?'' 


 ''சமீபத்திய திரைப்படங்கள் எல்லாவற்றை யும் பார்க்கவில்லை. பார்த்து நெகிழ்ந்தவை 'தாரே ஜமீன் பர்’, 'அங்காடித் தெரு’, 'பருத்தி வீரன்’, 'ராவணன்’, 'விண்ணைத் தாண்டி வருவாயா’, 'மைனா’, 'ஆடுகளம்’, 'கோ’. பொறாமைப்பட்டது சிலவற்றைப் பார்த்து. அதில் ஒன்று 'மதராசபட்டணம்’!''

சி.பி - அண்ணே! உண்மையைச்சொல்லுங்க, ராவணன் படம் பார்த்து தூங்கி இருப்பீங்க, எப்படி நெகிழ முடியும்?ஒரு வேளை, ஐஸை பார்த்து... ச்சே ச்சே நீங்க சீனியர். அப்டி இருக்காது.



2. ''பாரதிராஜா ஸ்கூலில் இருந்துதான் பாக்யராஜ், மணிவண்ணன், பாண்டியராஜன்,  பார்த்திபன் என்று ஏராளமான இயக்குநர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால், பாலசந்தர் ஸ்கூலில் இருந்து நிறைய இயக்குநர்கள் உருவாகாதது ஏன்?'' 


 ''வஸந்த், சுரேஷ்கிருஷ்ணா, சரண், ஹரி, சமுத்திரக்கனி, அமீர்ஜான், சாணக்யா, நாகா. இன்னும் பலரும் வெள்ளித் திரையிலும் சின்னத் திரையிலும் சக்கைப் போடு போடுகிறார்களே... பொதுவாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். பாலசந்தர் ஸ்கூல் என்றால், உதவியாளர்களை உட்காரவைத்து வகுப்பு எடுப்பது இல்லை.

அவர்கள் தங்களை உடன்படுத்திக்கொண்டவர் கள். இயக்குநர் ஒவ்வொரு காட்சியையும் எப்படித் துவங்குகிறார், எப்படி முடிக்கிறார், என்ன ஷாட் வைத்தால் வெளிப்பாடு சிறப்பாக இருக்கும்; எந்த நேரங்களில் க்ளோசப் வைக்கிறார், வசனங்கள் ஏற்கெனவே எழுதப்பட்டு இருந்தாலும் படப் பிடிப்பின்போது சில பகுதிகளை ஏன் மாற்றி எழுதுகிறார், அதனால், கூடுதலாக என்ன பயன் விளைகிறது, நடிகர்களை எப்படிக் கையாள்வது போன்ற பல அம்சங்களைப் படப்பிடிப்புத் தளத்தில் கூர்ந்து கவனித்துக் கற்றுக்கொள்பவர்களே முன்னுக்கு வருகிறார்கள்.

இன்னும் சொல்லப் போனால், எனக்கு எப்போதுமே மிகக் குறைவான உதவியாளர்கள்தான் இருந்திருக்கிறார்கள்.மூன்று பேர்களுக்கு மேல் இருந்தது இல்லை. அதிலும் பல ஆண்டுகள் என்னிடமே உதவியாளர்களாக இருந்திருக்கிறார்கள்.

வஸந்த் - 8 வருடம், சுரேஷ்கிருஷ்ணா - 7 வருடம். என்னிடம் பணிபுரிந்த மொத்த உதவியாளர்களின் எண்ணிக்கை 15 பேருக்கு மேல் இருக்காது!''

சி.பி - அண்ணன் கிட்டே அசிஸ்டெண்ட்டா சேர்ந்தா அவ்வளவு சீக்கிரம் வெளில போக விட மாட்டாராம், இது அனந்து அவரது கில்மா சிநேகிதியிடம் சொன்ன தகவல். ஹி ஹி 


'


3. ''நீங்கள் அறிமுகப்படுத்திய புதுமுகங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த முகம்?'' 


சி.பி - பப்ளீக்கா கேக்கறப்ப முகம்னு பூடகமாத்தான் கேட்க முடியும்.. ஹி ஹி

'' 'நிழல் நிஜமாகிறது’ நினைவிருக்கிறதா? காது கேளாத அந்தக் கதாபாத்திரத்துக்குப் பல நாட்கள் நான் சல்லடை போட்டுத் தேடினேன். கடைசியில் கிடைத்தவர்தான் அந்தப் புதுமுகம். 'அனுமந்து’... அந்தக் கதாபாத்திரத்துக்கும் கதைக்கும் அவர் எத்தனை பொருத்தமாக இருந்தார் என்பதை நீங்களும் அறிவீர்கள்.


அந்த முகம்தான் எனக்கு மிகமிகப் பிடித்த முகம். அவரது நடிப்பு எப்படி? எனது தேர்வு எப்படி?''

சி.பி - அண்ணனாவது வலையில சிக்கறதாவது? 




4.''சினிமாவை வெறும் நாடக பாணிக்குக் கொண்டுசென்றீர்கள் என உங்களைப் பற்றி ஒரு கருத்து நிலவுகிறது... அது எந்த அளவுக்கு உண்மை?'' 


 ''வாழ்க்கை என்னும் நாடகத்தையே சினிமாவில் காட்டியதால் இருக்கலாம். நாடகக் கலையில் இருந்து உருமாற்றம் பெற்று வந்ததுதானே திரைக்கலை. 30 ஆண்டுகளுக்கும் முந்தைய எனது திரைப் படங்களில் நாடகத்தின் பாதிப்பும் தாக்கமும் இருந்து இருக்கலாம். திரைப்படங்களின் தாய், நாடகம். எனது நாடகங்கள் அனைத்தையுமே திரைப்படங்களாக ஆக்கி அதில் மிகப் பெரிய வெற்றி பெற்றவன் என்கிற அனுபவத்தில் சொல்கிறேன்.

நா-டகங்களில் மக்களால் வெகுவாகரசிக்கப்பட்ட இடங்களை அப்படியே திரைப்படத்திலும் அமைத்துக்கொண்டு இருந்தேன். அந்த வகையில், நாடகத்தின் பாதிப்பு இருந்திருக்கிறது எனலாம். திரைப்படத்துக்கு என்று புதிதாகத் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் இந்தப் பாதிப்பு இருந்தது இல்லை!''

சி.பி - என்ன இப்படி சொல்லீட்டீங்க? நான் மட்டுமா? விசு.. டி ஆர், என ஒரு பெரிய கேங்கே இருக்குன்னு சொல்லி இருக்க வேண்டியதுதானே?





5. ''நீங்கள் இயக்கிய படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம்? செய்திருக்க வேண்டாம் என நினைக்கிற படம் எது? ஏன்?'' 


 ''பிடித்த படம் என்று சொன்னால் நிறையவே இருக்கின்றன. ஒன்றே ஒன்று சொல்லுங்கள் என்று நீங்கள் அடம் பிடித்தால் அந்த ஒன்று 'புன்னகை’ திரைப்படம். செய்திருக்க வேண்டாம் என்று நினைத்தது எதுவும் இல்லை.

எனக்குப் பிடித்தவை ரசிகர்களுக்குப் பிடிக்காமல் போனது உண்டு. அதேபோல எனக்குப் பிடிக்காதவை ரசிகர்களுக்குப் பிடித்ததும் உண்டு!''

சி.பி - வானமே எல்லை படம் தான் எனக்கு ஆத்ம திருப்தியை கொடுத்த படம்னு அண்ணன் குமுதம்ல ஒரு பேட்டில சொல்லி இருந்தாரு.. மறந்துட்டாரு போல.. 




'6. 'உங்கள் மனதுக்குப் பிடித்த தமிழக அரசியல்வாதி யார்? ஏன்?'' 


 ''தேடிக்கொண்டு இருக்கிறேன். நேரம் தேவைப்படுகிறது. எடை போட்டுச் சொல்ல!''

சி.பி - பொத்தாம்பொதுவா அரசியல்வாதில யாரைப்பிடிக்கும்னா அண்ணன் எடுத்து விட்டுருப்பாரு..   இப்படி தமிழ்நாட்ல என லிமிட் போட்டா அவர் தடுமாறுகிறார் பாருங்க..




7. ''முற்போக்குச் சிந்தனையுடன் படம் எடுத்த நீங்கள் வீட்டில் எப்படி?'' 


'A bowler is only as good as a batsman allows him to be என்று கிரிக்கெட்டில் ஒரு வாசகம் உண்டு. வெளியே நீங்கள் பார்ப்பது கிளைகளும், இலைகளும், மலர்களும், கனி களும்தான். வேர் என்பது வீடுதான்!


நான் என் படங்களில் முற்போக்கான கருத்துக்களைக் காட்டி இருக்கிறேன் என்றால், அதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் என் குடும்பத்தினர்தான். எனவே, வீட்டில் நான் முற்போக்காக இருக்கிறேன் என்று சொல்வதை விட, வெள்ளித் திரையில் நான் முற்போக்காக இருந்ததற்கு வீடுதான் காரணம் என்றே சொல்ல வேண்டும்!''

சி.பி - எப்பேர்ப்பட்ட சிங்கமும் வீட்ல பம்மித்தான் ஆகனும்.. இவர் தயாரிக்கற படங்கள்ல இவர் சம்சாரம் பேருதானே?

?


8. ''இப்போதைய நடிகர்களில் தமிழ் சினிமா இன்னும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என நீங்கள் கருதும் நடிகர்?'' 


''பிரகாஷ்ராஜ் (?).''

சி.பி - இதுக்கே அண்ணன் முத சம்சாரத்தை கழட்டி  விட்டாரு. இன்னும் புகழ் வந்திருந்தா என்ன என்ன நடந்திருக்குமோ?




'9. 'உங்களுக்கும், கடலுக்கும், கடல் அலைகளுக்கும் அப்படி என்ன ஒரு டச்? எந்தப் படமானாலும் ஒரு 'கடல் ஷாட்’ வந்துவிடுகிறதே?'' 


 'The language of eternal questions என்று கடலை வர்ணிப்பார் ரவீந்திரநாத் தாகூர். ஏன்? கடல், நமது கேள்விகளை விழுங்கிவிடுகிறது. மற்றபடி, கேள்விகளுக்கு இறுதியான விடைகள் கிடையாது என்பதைத்தான் ஓயாத அலைகள் ஒழிவின்றிச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.

சிலர் தினமும் மெரினாவுக்குப் போகிறார்கள். கடலைப் பார்த்தால் உங்களுக்குப் பிரமிப்பாக இல்லையா? பாறைகளின் கன்னத்தில் அறையும் கடலின் சக்தி என்னைப் பிரமிக்கவைக்கிறது. ஜப்பானில் சமீபத்தில் தோன்றிய சுனாமியின் வீரியத்தை டி.வி-யில் பார்த்தபோது, கொஞ்சம் பயம் வந்தது. நாம் வாழும் நிலம் என்பது கடலின் பிச்சை. கொஞ்சம் காலாற நடப்போம் என்று அது உள்ளே வந்தால், நம் கதி என்ன ஆவது?!


கடல், மனதைப்போல எப்போதும் சலனப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கடலில் அது அலைகளாகவும் மனதில் அது உணர்ச்சிகளாகவும் தெரிகின்றன. பின், கடலைவிட வேறு எது என்னைக் கவர்ந்துவிட முடியும்?''

சி.பி - அண்ணனோட முத லவ் பீச்ல டெவெலப் ஆகி இருக்கும்.. அந்த ஞாபகமா எல்லா படத்துலயும் கடலை காட்றாரு போல!!!




10.  '' 'மரோசரித்ரா’ திரைப்படம் ஒரு வருடம் ஓடியது! அப்போது உங்கள் மகிழ்ச்சி எப்படி இருந்தது?'' 


 '''ஈலாண்டி சரித்ரா மல்லி எப்புடு ஒஸ்துந்தோ அனி’. ஓ... மன்னிக்க! இப்படி ஒரு சரித்திரம் மறுபடி எப்போது வரும் என்று ஏங்கச் செய்தது!''

சி.பி -அண்ணனுக்கு தெலுங்கு நல்லா தெலுசு...அதுக்காக அண்ணனுக்கு ஆந்திரா ஃபிகர் பழக்கம்னு யாரும் தப்பா நினைக்க வேணாம்.. 




11. ''நீங்கள் அறிமுகப்படுத்திய நாயகிகளில் மிகவும் பிரமிக்கவைத்தவர் யார்?'' 


''நான் நாயகிகளை அறிமுகப்படுத்தியதே இல்லை. என் கதாபாத்திரங்களைத்தான் முன்னிலைப்படுத்தினேன்!

ஒவ்வொரு பெண் கதாபாத்திரத்திலும் நான் குடிபுகுந்து வாழ்ந்தேன். ஒவ்வொரு கதாபாத்திரமும் என்னுள் நுழைந்து என்னை முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டன.


நீங்கள் பார்த்தது சுஜாதா, நான் கண்டது கவிதா! நீங்கள் பாராட்டியது சரிதாவை, நான் சீராட்டியது கண்ணம்மாவை!''

சி.பி - அண்ணே கேட்ட கேள்விக்கு நேரடியா பதில் சொல்லுங்கண்ணே.. பாலு மகேந்திராவுக்கு எப்படி ஷோபா ,அர்ச்சனா பிடிக்குமோ அது போல உங்களுக்கு யாருன்னு நிருபர் பூடகமா கேட்கறாரு.. ஹி ஹி 




12. ''நீங்கள் இயக்கிய படங்களில் சங்கீதத் துக்கும் நாட்டியத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?'' 


''இந்தியக் கலைகள் மனதில் கிளர்ச்சி ஏற்படுத்துவதற்காக அல்ல, உணர்ச்சிகளை மேம்படுத்துவதற்காக. They are not for entertainment. They are meant for enlightenment. நாதம் படைப்பின் ஆதி; நடனம் அதன் அந்தம் என்று சொல்வார்கள். எனவே, இசையும் நடனமும் மனிதனுக்கு முழுமை தருவதால், அவை மற்ற கலைகளைவிடவும் முதன்மையானவையாகக் கருதப்படு கின்றன.

அவை நம் வாழ்வோடு இரண்டறக் கலந்தவை. ஒரு காலத்தில் தமிழ் நாட்டில், ஆடல் பாடல் இல்லாத வீடே கிடையாது. அன்று ஒவ்வொரு வீட்டிலும் எந்தப் பெண்ணும் ஓரளவாவது ஆடுவாள்; கொஞ்சமேனும் பாடுவாள். இன்று, தொலைக்காட்சியை நம்பிக்கிடக்கிறது கலை!''


சி.பி - எந்தக்கேள்வியை கேட்டாலும் அண்ணன் ஒரு இங்கிலீஷ் கொட்டேஷனை அள்ளி விடறாரே? போன ஜென்மத்துல நடிகையா பிறந்திருப்பாரோ?டவுட்டு

- அடுத்த வாரம்... 


கமல் நடிப்புக்கும் சிவாஜி நடிப்புக்கும் என்ன வித்தியாசம்? 


உள்ளாடை அணிந்துகொள்வது போல் ஒரு காட்சியிலாவது உங்கள் கதையின் நாயகிகள் வருகிறார்களே... அதில் என்ன 'சென்ட்டிமென்ட்’? 


உங்கள் படத்தின் மூலம் எப்படியும் நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் என் இளமைப் பருவத்தில் ஊரைவிட்டுக் கிளம்பி, ஆசை நிறைவேறாமல் ஊருக்கே திரும்பிவிட்டேன். என்னைப் போன்றவர்களுக்கு உங்கள் ஆறுதல் என்ன? 


விறுவிறு பதில்கள் தொடர்கின்றன...

நன்றி - விகடன்

அன்புள்ள நாயன்மார்களே! நயன் தாரா மார்களே!

Good Paintings
1.கொடுக்கல், வாங்கல்ல நான் கரெக்டா இருப்பேன்.

அதுக்கென்ன இப்போ?

நான் 186 கிஸ் கொடுத்திருக்கேன், ஆனா  நீ 89 கிஸ் தான் தந்திருக்கே,பேலன்ஸ்?

-----------------------------------

2. தலைவர் ஏன் அறிக்கைல எந்த வரிலயும் ஃபுல் ஸ்டாப்பே வைக்கலை?

ஃபுல் மப்புல இருந்தாராம்.

---------------------------

3.உங்களுக்கு என்ன பிராப்ளம்?DR  கிட்டே எதையும் மறைக்காதீங்க?

முதல்ல கொஞ்சம் தள்ளி நில்லுங்க, நர்ஸ் மோஹனாவை மறைச்சுட்டு நிக்கறீங்க.

------------------------------

4. இது 100% காமெடி படம்னு எப்படி சொல்றே?

முழு பட ஷூட்டிங்க் ஜோக் ஃபால்ஸுல தானே எடுத்திருக்காங்க?

------------------------

5. தலைவர் பையனை லவ் பண்ணுனது தப்பாபோச்சு.

ஏண்டி?

பீச்ல என்கூட லவ் டயலாக் பேசி முடிச்சதும் கை தட்ட லாரி நிறைய ஆளுங்களை கூட்டி வந்திருக்காரு

---------------------------




6.DR,என் கண் பார்வை மங்கலாகிட்டே வருது.

எப்டி சொல்றீங்க?

\அனுஷ்காவுக்கும் , அமலாபால்க்கும் வித்தியாசமே தெரியறதில்லை இப்போவெல்லாம்

--------------------------------------

7. கீழ்போர்ஷன்ல குடிஇருக்கற ஃபிகர் காலி பண்ணிட்டுப்போறது அவ சவுகர்யம், ஏன்போலீஸ்ல புகார் தர்றே?

போறப்ப என் வீட்டையும் காலி பண்ணீட்டுப்போய்ட்டா

---------------------------------

8. தலைவரே! சபரி மலைல இருந்து சென்னை வந்தீங்களா?

இல்லையே, ஏன்?

நான் கடந்து வந்த பாதை கரடு முரடானதுன்னு சொன்னீங்களே?

------------------

9.  ஃபைனல்மேட்சுக்குத்தானே தலைவர் தலைமை தாங்கறாரு?ஏன் குவாட்டர் ஃபைனலுக்கே வந்துட்டாரு?

குவாட்டர் கிடைக்கும்னு நப்பாசைதான்

--------------------------------

10. அவள் நினைவுகளே வாழ்க்கை என்றான பிறகு அவள் தொடும் தூரத்தில் இருந்தால் என்ன? தொலை தூரத்தில் இருந்தால் என்ன? # ஃபாரீன் காதலி

----------------------------






11. உண்மையான கணவர்கள் இறந்ததும் சொர்க்கம் போவார்கள், துரோக எண்ணம் கொண்டவர்கள் பூமியிலேயே சொர்க்கம் காண்பார்கள் # சாய்ஸ் ஈஸ் யுவர்ஸ் @SMS

----------------------------------

12. ஐ ஆம் கோயிங்க் டூ ஸ்லீப்னா தமிழ்ல என்ன அர்த்தம்?

“ நான் தூங்கப்போறேன்”

டேய், என் டவுட்டை க்ளியர் பண்ணிட்டு தூங்கப்போடா

------------------------------


13. பெண் மட்டும் தான் உயிரை சுமப்பாள் என்று யார் சொன்னது? ஒவ்வொரு ஆணின் மனதைத்தொட்டுப்பார்,அதில் ஒரு பெண்ணின் நினைவு உயிராய் இருக்கும்

-------------------------


14. உன் முகம் எப்போதும் வெறுப்பை உமிழ்கிறது,என் மனம் எப்போதும் உன் மேல் அன்பை பொழிந்து கொண்டே இருப்பதால் என் முகம் பெருமிதத்தால் கமழ்கிறது

--------------------

15. தல அஜித்தோட அடுத்த பட டைட்டில் என்ன?

ரம்மி ( பிரேக் ஆல் ஜொள்ஸ்)

---------------------------------




16.  ரெட் லை ஏரியா பூரா ரெய்டு பண்ண சொல்லி மேலிட உத்தரவு. கண்ல விளக்கெண்ணெய் ஊத்திட்டு தேடறோம்..

சிவப்பு விளக்கு எண்ணெய்  ஊத்திட்டு  தேடுங்க

----------------------------

17. தலைவருக்கு தமிழ்ப்பற்று ஜாஸ்தின்னு எப்டி சொல்றே?

அன்னா ஹசாரேன்னு சொல்லாமே அன்னா ஹ அய்யாவே அப்டிங்கறாரே?

--------------------------------

18. டிராஃபிக் சிக்னல்ல நிக்கறப்ப ஏன் சைட் அடிக்கறே?

இங்கே தான் சிக்னல் நல்லா கிடைக்குது

----------------------

19. தலைவரே! மக்களுக்காக பாடுபடுவோம்னு அடிக்கடி பேசறீங்களெ? அது நிஜமா?

ச்சே! ச்சே! மகளுக்காக பாடுபடுவோம்னு ஓப்பனா பேச முடியுமா?

---------------------------------

20. அன்புள்ள நாயன்மார்களே! நயன் தாரா மார்களே!
அப்டின்னு தலைவர் பேசறாரே?



அதாவது காங்கிரஸ்காரர்களே! 2 வீடு மாறுவோரேன்னு அர்த்தமாம்

-------------------------------