Showing posts with label experience. Show all posts
Showing posts with label experience. Show all posts

Monday, March 21, 2011

பங்குனிதேர் உற்சவம் -சென்னிமலையில் ஒரு உற்சாக உலா..?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglpO6dgaJc4OFurCXq9JC2YrzJiFKxksuLzLDlPYwcsjaDBVzdT9uBGrsG0HAj86folCq2rsWLZeOutsvd04l5FhDWyhWfu2XgdyQ_LTjLdcYvX6RHD_4pz1xGQKKAYU3idzlBdlthNv1t/s400/thaipusam6_creativespark.jpg 

நேற்று பங்குனித்தேர்த்திருவிழா...வழக்கமா தைத்தேர்க்கு இருக்கற உற்சாகமும், மக்கள் கூட்டமும் இதுல 4 மடங்கு கம்மியா இருந்தது.சென்னிமலையோட மக்கள் தொகை 1,76,000 .அதுல வெறும் 500 பேர் வந்தாக்கூட தேரை இழுக்கலாம்.. ஆனா காலைல 6 மணில இருந்து வேட்டு வெச்சு  7 மணிக்குத்தான் கூட்டம் சேர்ந்தது.வேட்டு சத்தம் கேட்டு அங்கங்கே மனித தலைகள் தெரிய ஆரம்பித்தன.


தைத்தேர்க்கு வெளியூர் ஆட்கள் நிறைய வருவாங்க.. கூட்டம் செமயா இருக்கும்.. ஆனா இந்த தேர்க்கு ஏன் கூட்டம் வர்றது இல்லைன்னு தெரியல..பல வருடங்களாவே அப்படித்தான் இருக்கு..


மக்களிடையே பக்தி குறைந்து வருவதும், அவர்களிடையே  கடவுள் பற்றிய உண்மையான நம்பிக்கை அருகி வருவதும் வருத்தமான விஷயங்கள்.ஏன்னா தனி மனித ஒழுக்கத்துக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் ஆன்மீகம் தெரிஞ்சோ தெரியாமயோ ஒரு காரணியா இருக்கு.

எப்படின்னா ஒரு ஸ்கூல்ல ஹெச். எம் .கண்டிஷனா இருந்தா அந்த ஸ்கூல்  ஸ்டூடண்ட்ஸ் பங்க்சுவாலிட்டியா இருப்பாங்க.. ஒரு ஆஃபீஸ் அல்லது கம்பெனியின் மேனேஜர் கண்டிப்பானவரா இருந்தா அங்கே வேலை செய்யறவங்களும் ஒழுங்கா வேலை செய்வாங்க..அதே போல் முன்பெல்லாம் கடவுள் பற்றிய பயம் அதிகமா இருந்தது. தப்பு பண்ணுனா சாமி கண்ணை குத்திடும் என்று பயமுறுத்தி வெச்சிருந்தாங்க..

மனசாட்சிக்கு பயப்படாதவன் கூட சாமிக்கு பயப்பட்டான்.சாமி சும்மா விடாது.. தண்டனை உண்டுன்னு பயந்தான்.சின்ன வயசுல நோட் புக்கோ,பேப்பரோ மிதி பட்டா சரஸ்வதி சாமியை அவமானப்படுத்திட்டே.. உனக்கு இனி படிப்பே வராதுன்னு சொல்வாங்க..காசை,அல்லது பணத்தை தெரியாம மிதிச்சாக்கூட லட்சுமி சாமியை அவமானப்படுத்தீட்டே.. உன் கிட்டே செல்வம் தங்காது.. உன் கிட்டே லட்சுமி சேர மாட்டா அப்படிம்ப்பாங்க..
http://www.thedigitaltrekker.com/wp-content/uploads/2009/02/20090208-045908.jpg
ஆனா இந்தக்கால பசங்க கிட்டே பக்தியையோ,உண்மையான ஆன்மீகத்தையோ பார்க்க முடியல..இப்ப இருக்கற தலை முறைகள்ல எத்தனை பேருக்கு தேவாரம், திருவெம்பாவை, திருப்பாவை, கந்த சஷ்டி தெரியும்?


கடவுள் நம்பிக்கை இல்லாதவங்க கூட புராணங்கள், பக்தி இலக்கியங்கள் படிப்பது தப்பில்லை.இப்போ இருக்கற ஆட்கள்ல எத்தனை பேர் திரு நீறை நெற்றி நிறைய இட்டுக்கறாங்க..?அது சும்மா கம கமன்னு வாசம்  வீசுமே.. தலை வலியை காணாம போகச்செய்யுமே..நிறைய பேரு பவுடர் அடிச்சுட்டு ஒரு துளி கீற்று பவுடரை திருநீறு மாதிரி இட்டுக்கறாங்க..

கோயிலுக்குள்ள இளைஞர்களைப்பார்க்கறது அரிதாகி விடுகிறது..ஒரு அசாதாரணமான அமைதி கோயில்ல இருக்கும். பல கஷ்டங்கள், குடும்ப பிரச்சனைகள், ஆஃபீஸ் தலை வலிகள் எல்லாத்துக்கும் ஒரு அரு மருந்தா கோவில் விசிட் நமக்கு கை கொடுக்கும்.

நீங்க சாமியே கும்பிட வேண்டாம்.சும்மா வந்துட்டு போங்க.. 10 நிமிஷம் அமைதியா உட்கார்ந்து பாருங்க..ஒரு மாற்றம் தெரியும்.. மனசுல ஒரு நிம்மதி இருக்கும்.சாமி கும்பிடறவங்க பெரும்பாலும் அவங்களுக்கு என்ன தேவை என்பதை கோரிக்கையா வைக்கிறான்.அதற்கான காணிக்கையை உண்டியல்ல போடறான்.. இதுக்குப்பெயர் பக்தியா?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwZICUISpjB2rN7jRhZmg14nYiQjwfWFezMsF5VwlJVAKK7hdPE14jYYdUxNgn6D6sPiZ5L61QfXDwjQ51EB1ERNj7Cq4FCINUjHmWYbbWBPLdgjC0bta0wLScWFoDMKAhxAhcFU0qojU/s1600/SAM_1546.JPG
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை
யாம் பாட கேட்டே யும் வாள் தடங்கன்,
,மாதே வளருதியோ வன் செவியோ நின் செவி தான்
மாதேவன் வார்க்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்

வீதி வாய்க்கேட்டலுமே விம்மி விம்மி மெய் மறந்து
போதார் அமளியின் கண் நின்றும் புரண்டிங்கன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்....
இந்தப்பாட்டு திருவெம்பாவைல வருது..மார்கழி மாசத்துல விடியற்காலைல 5 மணிக்கு எழுந்து பச்சைத்தண்ணில குளிச்சு ,நெற்றில பட்டை இட்டுக்கிட்டு வெறும் வேட்டி மட்டும் கட்டி சட்டை இல்லாம குளிர்ல ஈஸ்வரன் கோயிலை சுற்றி வருவாங்க..பாட்டு பாடிக்கிட்டே ..( திருவெம்பாவை)

பாட்டுக்கு அர்த்தம் புரியனும்னு அவசியம் இல்லை.. கேட்டாலே புண்ணியம்னு சொல்வாங்க..

ஒண்ணும் வேணாம் காலைல எழுந்ததும் சுப்ரபாதம் பாட்டு டேப்ல போட்டு கேளுங்க.. மனசுல ஒரு எழுச்சி தோணும்.. மன அமைதி கிடைக்கும்.
http://tconews.files.wordpress.com/2008/07/dsc00863.jpg
அப்புறம் மனிதனின் மிருக குணங்களை  இறைவனின் சந்நிதானம் அடக்க வல்லது. குறிப்பா சைவம் மட்டும் சாப்பிடறவங்க இதை உணர முடியும்.ஒரு உயிரை கொன்று அதன் சதைகளை விரும்பி சாப்பிடும்போது யோசிச்சுப்பாருங்க....நாம இறந்தா அதை சவம் என சொல்றோம்.. ஆனா விலங்கு இறந்தா மட்டன் ஆகிடுது.. அதுவும் டெட் பாடிதான்.. டெட் பாடியை சாப்பிடறோம்னு அருவெறுப்பு மனுஷனுக்கு வரனும்.

நான் ஏன் சைவத்தை பற்றி இந்த அளவு சொல்றேன்னா மனிதனோட உணவுப்பழக்க வழக்கம் அவனோட கேரக்டரை தீர்மானிக்குது..அசைவத்தை தவிர்க்க முடியாதவங்க அதை குறைக்கலாம்..

சபரி மலைக்கு மாலை போடறவங்க மாலை கழுத்துல இருக்கற வரை உத்தமனா இருப்பதும், மாலை கழுத்தை விட்டு இறங்குனதும் பண்ணாத அட்டூழியம் எல்லாம் பண்ணுவதும் நகைக்க வைக்கும் உண்மைகள்.

கோயில் பிரசாதங்கள் செம டேஸ்ட்டாக இருபதற்கு முக்கிய காரணம் அதை சமைப்பவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடவும் ,பக்தியோடவும் சமைக்கறதுதான்.இந்த வித்யாசத்திற்கு இன்னொரு உதாரணம் சொல்றேன்.நம்ம அம்மா சமையலை விட மனைவியோட சமையல் டேஸ்ட் கம்மியா தான் இருக்கும் இதுக்கு என்ன காரணம்?
http://img.dinamalar.com/data/aanmeegam/large_160032500.jpg
1. கிட்டத்தட்ட 25 வருஷங்களா நாம அம்மா கைப்பக்குவத்தை சாப்பிட்டு பழகிட்டோம்.

2.மனைவி சமைக்கும்போது சில சமயங்களில் ஏதானும் சண்டை போட்டுக்கிட்டு வேண்டா வெறுப்பா சமைக்கலாம். அந்த வெறுப்புண்ர்வு கூட சமையலில் வந்து விடுமாம்.

கட்டுரை எங்கேயோ ஆரம்பிச்சு இங்கே வந்து நிக்குது..கடவுள் இருக்காரா? இல்லையா? முன் ஜென்மம் என்பது உண்மையா?பொய்யா?கர்ம வினைப்பயன் என்பது என்ன? ஜாதகம் என்பது உண்மையா? வரும் வாரங்களில் பார்ப்போம்.

Saturday, February 19, 2011

எல்லாத் தொகுதிலயும் சுயேச்சைகளே ஜெயிச்சுட்டா ..?

1. காலேஜ்ல  ஃப்ஸ்ட்  இயர்  ஸ்டூடன்ஸை  சந்திக்க  தலைவர்  ஆர்வமா  இருக்காரே...  ஏன்?

முதன்  முதல்ல  அவங்க  போடற  ஓட்டு  அவருக்கே  விழனுமாம்.

-------------------------------------------------------


2. தலைவர்  ஜோசியர்  மேல  ஏன்  கடுப்பா  இருக்காரு?

உங்களுக்கு  அரசியல்ல  எதிர்காலம்  பிரகாசமாத்தான்  இருக்கு.  ஆனா  பாவம்  நாட்டோட  எதிர்காலம்தான்  நாசமாப்  போகப்  போகுது  அப்டீன்னாராம்.

-----------------------------------------

3. இதுதான்  நான்  சந்திக்கப்போகும்  கடைசி  தேர்தல்-னு  தலைவர்  சொல்றாரே?

எனக்கென்னமோ  மக்கள்  ஏமார்ற  மாதிரி  தெரியலை.  நாங்கள்  சிந்திக்கப்  போகும்  முதல்  தேர்தல்-னு  அவங்க  சொல்றாங்க.


-------------------------------------------------

4. தலைவர்  ஏன்  மூடு  அவுட்டாகிட்டாரு?

எல்லாத்  தொகுதிலயும்  சுயேச்சைகளே  ஜெயிச்சுட்டா  நம்ம  கதி  என்ன?-னு டவுட்  கேட்டானாம்.

---------------------------------------


5. எகிப்து  நாட்டை  நினைச்சு  ஏங்க  பெருமூச்சு  விடறீங்க...

டியர்...  அது  வேற  ஒண்ணும்  இல்லை.  அங்கே  சர்வாதிகார  ஆட்சி  ஒரு  முடிவுக்கு  வந்துடுச்சு...


--------------------------------------------

6. இந்த  மாத்திரையை  சாப்பாட்டுக்குப்  பிறகு  சாப்பிடுங்க.

டாக்டர்  நான்  எப்பவும்  டிஃபன்  தான்  சாப்பிடுவேன்.

----------------------------------------------------
7. ஜட்ஜ்: நீ  ரேப்  பண்ணுன  பொண்ணு  மாசமா  இருக்கா.  இப்போ  என்ன  பதில் சொல்லப்போறே  அந்தப்  பொண்ணுக்கு?

கைதி: ஒருவர்  ரேப்  செய்வதால்  மட்டுமே  ஒரு  பெண்  கர்ப்பமாகி  விட  முடியாது-னு  எதையாவது  உளறி  எஸ்கேப்  ஆகிடுவேன்  யுவர்  ஆனர்.


----------------------------------------------------------

8. அவருக்கு  சினிமா  நாலெட்ஜ்  சுத்தமா  இல்லை-னு  எப்படி  சொல்றே?

‘சிங்கம்  புலி’  படத்தோட  ஹீரோ  டைரக்டர்  சிங்கம் புலியா?  அப்டினு கேட்கறாரே?----------------------------------------------

9. தலைவர்  விடுதலைப்  புலி  எதிர்ப்பாளர்-னு  எப்படி  சொல்றே?

ஆடுபுலி,  சிங்கம் புலி  இரண்டு  படமும்  எப்படி  ரிலீஸ்  ஆச்சு?-னு கேட்டறாரே?

------------------------


10. சிரஞ்சீவி  தன்னோட  கட்சியை  காங்கிரஸ்ல  இணைச்சது  தப்பு-னு  எப்படி சொல்றே?

பின்னே  என்ன?  காதலியைக்  கூட்டிட்டு  ஊரைவிட்டு  ஓடி  வந்தவன்  3  மாசம் கழிச்சு  காதலியை  அவளோட  பெற்றோர்  வீட்லயே  விட்டுட்டு  வந்தா  எப்படி இருக்கும்?


-----------------------------

diski - 1st image - tapsi     2nd image   iliyanaa      ,,

Saturday, January 01, 2011

புத்தாண்டில் நாம் எடுக்க வேண்டிய சபதங்கள்

health-studies.jpg (400×314)
1. தினமும் அதிகாலை 5 மணிக்கு துயில் எழ வேண்டும்.

2. காலைக்கடன்களை முடித்த பிறகு வெறும் வயிற்றில் 4 டம்ளர் தண்ணீர் குடுக்க வேண்டும்.

3. அருகில் உள்ள மைதானத்தில் 4 கி மீ நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

4. நேரம் இருந்தால் யோகா,மூச்சுப்பயிற்சி (பிராண யாமம்) உடல்பயிற்சி செய்ய வேண்டும்.

5.குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும். (சுடுநீரில் குளித்தால் சோம்பலும் ,தூக்கமும் வரும்)

6.காலை உணவை தவிர்க்கக்கூடாது.சிலர் பட்டினி இருந்தால் மெல்லிய தேகம் கிடைக்கும் என தவறாக நினைக்கிறார்கள்.

7.உணவு சாப்பிடும்போது பாதி வயிறு மட்டும் சாப்பிட்டு, கால் வயிற்றில் தண்ணீர் குடித்து கால் வயிற்றை காலியாக விட வேண்டும்.

8.அலுவலகத்தில் வேலை செய்யும்போது பர்சனல் செல் அழைப்புகளை தவிர்க்க வேண்டும்.

9.மதிய உணவில் மோர் சேர்த்துக்கொள்வது நல்லது.

10 இரவில் 8 மணியிலிருந்து 9 மணிக்குள் டின்னரை முடித்து விட வேண்டும்.
health.jpg (378×311)
11. இரவு 10 மணிக்கு தூங்கி விட வேண்டும். செகண்ட் ஷோ சினிமா பார்ப்பது,தூக்கத்தை கெடுக்கும் காரியங்கள் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.

12. பெரியவர்களுக்கு 7 மணி நேரத்தூக்கமும் குழந்தைகளுக்கு 9 மணி நேரத்தூக்கமும் அவசியம்.

13. சைவ உணவே சிறந்தது. அசைவ உணவு மிருக உணர்வை,பொறாமை குணத்தை ,கோபத்தை அதிகமாக்கும் சக்தி படைத்தது. தவிர்க்க முடியவில்லை எனில் குறைக்க முற்சிக்கவும்.

14. குடும்பத்துடன் பேச நேரம் ஒதுக்குங்கள்.குறிப்பாக குழந்தைகளுடன் தினமும் ஒரு மணி நேரம் செலவு செய்யுங்கள்.

15. வாரம் ஒரு முறை விடுமுறை நாளில் குடும்பத்துடன் வெளியே செல்லவும்.அது நண்பர் வீடோ, பார்க்கோ,பீச்சோ எதுவாகவும் இருக்கலாம்.

16.ஈகோ பார்ப்பதை விட்டுத்தள்ளுங்கள்,வாக்குவாதம் செய்வதை தவிருங்கள்.

17. உடல் ஆரோக்கியம் மிக முக்கியம் .6 மாதத்திற்கு ஒரு முறை பற்களை சுத்தம் செய்ய பல் மருத்துவரை அணூகவும்.முழு உடல் பரிசோதனையை 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு வருடத்துக்கு ஒரு முறை செய்வது நல்லது.

18. பத்திரிக்கை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்து வாரம் குறைந்த பட்சம் ஒரு புக்காவது படிக்கவும்.

19.பட்டி மன்றம்,நகைச்சுவை அரங்கம் ,விழாக்கள்,ஊர் பண்டிகைகள் இவைகளில் கலந்து கொள்வது மனதை லேசாக்கும்.

20.பிறந்தநாள்கள் ,பார்ட்டிகள் இவற்றில் அநாதை ஆசிரமங்களுக்கு நம்மால் இயன்ற உதவி செய்வது நல்லது.

டிஸ்கி - மொக்கைப்பதிவு போடும் நானே நல்ல பதிவு போடும்போது நல்ல பதிவு போடும் நீங்கள் இன்னும் சிறந்த பதிவுகளாக போடலாமே...

Monday, December 27, 2010

ஈரோடு - போராடு - ஹாட்ரிக் வெற்றியோடு

sonia-agarwal-wallpaper.jpg (564×834)
தொடர்ந்து மூன்று வாரங்களாக நெம்பர் ஒன் இடத்தில் என்னை வைத்த தமிழ்மணம் நிர்வாகம்,நண்பர்கள்,பதிவர்கள்,வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.தமிழ்மணம் டாப் 20 பட்டியல் அறிவுப்பு வந்த பிறகு வினவு,உண்மைத்தமிழன் ஆகிய இருவர் மட்டுமே தொடர்ந்து 2 முறை நெம்பர் ஒன் பிளேஸ் அடைந்துள்ளார்கள்.

எனவே 3வது வெற்றி பெற நான் போன வாரம் கடும் போராட்டத்தை சந்திக்க நேர்ந்தது.23 12 2010 அன்று ஹிட்ஸ் ரேட்டை வைத்து பார்க்கையில் டெரர் கும்மி,ராம்சாமி,கே ஆர் பி செந்தில்,ரமேஷ் ஆகியோர் முதல் 4 இடங்க்ளில் இருந்தனர்.நான் 7 வது இடத்தில் இருந்தேன்.சரியான நேரம் பார்த்து என் லேப்டாப்பில் தமிழ்மணம் ஃபாண்ட் வேலை செய்யவில்லை.சரக்கும் கைவசம் இல்லை.எனவே 2 மீள் பதிவுகள் போட்டு சமாளித்தேன்.

ராம்சாமியின் சிம்ரனோமேனியா சூப்பர்ஹிட் ஆகி கலக்கிக்கொண்டிருந்தது.அதே போல் டெரர் கும்மியின் பதிவுலக அப்பெண்கள்காவலன் பதிவு பிரம்மாண்ட வெற்றி அடைந்து பதிவுலகை கலக்கியது.இனி வரும் வாரங்களில் டெரர் கும்மி எல்லாருக்கும் டஃப் ஃபைட் குடுப்பாங்கன்னு எதிர்பார்க்கலாம்..

வைகை டாப் 10க்குள் வந்துவிடுவார் என்று நான் வியாழன் அன்றே கணித்து அவரிடம் அட்வான்ஸ் வாழ்த்து தெரிவித்தேன்.அவர் நம்பவில்லை.பார்ப்போம் என்றார்.அவரது காமெடி எழுத்துக்கள் வரும் காலங்களில்  இன்னும் பேசப்படும்.

பதிவுலகின் மும்மூர்த்திகள் என அழைக்கபடும் உண்மைத்தமிழன்,கேபிள் சங்கர்,ஜாக்கிசேகர் ஆகியோர் வைத்திருக்கும் ஹிட்ஸ் ரேட் அபாரமானது.ஆவ்ரேஜ் ஹிட்ஸ் தின்மும் 1700 சர்வசாதாரணமாக வும் அதிக பட்சம் 3000க்கும் குறையாமலும் உள்ளதை கவனிக்கிறேன்.அதையும் மீறி அவர்களை விட 3 மடங்கு ஹிட்ஸ் குறைவாகவும்,மொக்கைப்பதிவு போட்டும் எப்படி காலத்தினை  ஓட்டுகிறேன் என்பதை கணக்குபோட்டால் ஒரு உண்மை விளங்குகிறது.தமிழ்மணம் வழியாக வரும் ஹிட்ஸ் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது.

இயக்குநர் கே பாக்கியராஜ் அவர்கள் அவரது வாசகர் நிகரன் என்பவரிடம் அவரை தொடர்பு கொள்ளச்சொல்லி தனது செல்ஃபோன் எண்ணை தந்திருக்கிறார்.மிக்க மகிழ்ச்சி.ஆனால் நான் ஏற்கனவே அவர் இயக்கிய சித்து பிளஸ் டூ படத்தின் விமர்சனத்தை
நெகட்டிவ்வாக எழுதி விட்டதால் தொடர்பு கொள்ள சங்கடப்பட்டு அவருக்கு மெசேஜ் மட்டும் அனுப்பினேன்.இதுவரை பதில் இல்லை.

நேற்று ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.ஏற்கனவே நான் சொன்னபடி பணீயின் காரணமாக செல்ல முடியவில்லை.வால்பையன்,கோவை டாக்டர் கந்தசாமி
உட்பட பலர் என்னை சந்திக்க ஆவலாய் இருந்ததை அறிந்தேன்.மிக்க மகிழ்ச்சி.எனக்கும் அதே ஆவல்தான் .அடுத்த முறை நிச்சயம் சந்திப்போம்.

கோபி நாகராஜசோழன் ,திருப்பூர் கார்த்தி,சேலம் வெங்கட்,கோவை அருண் நால்வரையும் சந்திக்க நான் ஆவலாய் இருந்தேன்.ஆனால் அவர்களால் வர இயலவில்லை

மாலை 6 மணிக்கு ஈரோடு பிருந்தாவன் பார்க்கில் நான்,நல்லநேரம் சதீஷ்,கோமாளி செல்வா,நண்டு நொரண்டு,சித்தோடு 007 சதீஷ் போன்றோர் சந்தித்தோம்.சங்கவியை தொடர்பு கொண்டபோது கிளம்பி விட்டதாக சொன்னார்.ஜாக்கிசேகரை ஃபோனில் அழைத்தோம்.அவர் ஃபோனை அட்டெண்ட் பண்ணலை.
 ஃபோட்டோவில்

இடம் இருந்து வலமாக  கோமாளி செல்வா, 007 சதிஷ்,நல்ல நேரம் சதீஷ்,நான் ,நண்டு நொரண்டு

சங்கவி பிறகு ஃபோனில் தொடர்பு கொண்டு பேசினார்,நான் வந்து சந்தித்தால் தனியாக மீட்டிங்க் போடறாங்க என சொல்லி விடுவார்கள் எனவே அதை தவிர்த்தேன்  என்றார். அவர்து முன் ஜாக்கிரதை உணர்வுக்கு ஒரு சபாஷ்.

ஈரோட்டில் போட்டியாக ஒரு சங்கம் ஆரம்பிக்கும் எண்ணம் எனக்கு இல்லை.என் பிளாக்கை கவனிக்கவே எனக்கு தினமும் 1 மணீநேரம்தான் கிடைக்கிறது.எனவே யாரும் அப்படி நினைக்கத்தேவை இல்லை.
தொடர்ந்து நல்ல பதிவுகள் போடுவோம்.ஆரோக்கியமான போட்டியில் வெற்றி தோல்விகளை பக்குவப்பட்ட மனதுடன் சந்திப்போம்.

டிஸ்கி 1 - லீவ் நாட்களில் நெட் பக்கம் வராதவர்களுக்கு


தென்மேற்குபருவக்காற்று - மண்மணம் மணக்கும் காதல் கதை-

சினிமா விமர்சனம்


டிஸ்கி 2 - 

அரிதுஅரிது - சைக்கோ திரில்லர் - சினிமா விமர்ச


டிஸ்கி 3 - 

மன்மதன் அம்பு - புரொடியூசருக்கு சொம்பு- சினிமா விமர்சனம்