Showing posts with label ஜூவி. Show all posts
Showing posts with label ஜூவி. Show all posts

Wednesday, March 21, 2012

கூடன்குளம் - ஜெ நடத்திய நாடக காட்சிகள் - ஜூ வி கட்டுரை - ஒரு பார்வை



''உலகில் நடக்கும் வெவ்வேறு விஷயங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை என்பது தானே கேயாஸ் தியரி?'' 

சி.பி - ஆமா.. பஸ் கட்டணம் ஏற்ற லேட் ஆச்சுன்னாலும் சரி.. கூடன்குளம் திறக்க லேட் பண்ணாலும் சரி.. இடைத்தேர்தல் இருக்குன்னு அர்த்தம். 

''ஒரு வழியாக கூடங்குளம் அணு மின் திட்டத்துக்குப் பச்சைக் கொடி காட்டி இருக்கிறது தமிழக அரசு. 'கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனே திறக்க வேண்டும்’ என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார் ஜெயலலிதா. இந்த விவகாரத்தில் பெரிய அரசியல் சதுரங்கமே ஆடப்பட்டிருக்கிறது. சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்த சமயத்தில் கூடங்குளம் போராட்டம் வெடிக்க ஆரம்பித்து இருந்தது. தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கத் தொடங்கிய நேரத்தில், 'கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானதுதான்’ என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து அறிக்கை வந்தது. உண்ணாவிரதத்தைக் கைவிடச் சொல்லிய அந்த அறிக்கையைக் கண்டு, போராட்டக் குழுவினர் கொதித்தார்கள். எதிர்ப்பு கடுமையாக இருந்தால், 'கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்கும் வரை அதனைத் திறக்கக் கூடாது’ என்று அடுத்த நாளே ஜெயலலிதா அறிவித்தார்.


சி.பி - பல்டி அடிக்கறது அரசியல் வாதிகளுக்கு கை வந்த கலை ஆச்சே.. என்ன.. ஜெ ரொம்ப ரேரா தான் பல்டி அடிப்பாங்க...
 

 'கூடங்குளம் பாதுகாப்பானதுதான்’ என்று ஜெயலலிதா முதலில் வெளியிட்ட அறிக்கையில் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி சிலவற்றை குறிப்பிட்டு இருந்தார். கிட்டத்தட்ட இப்போது அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு வெளியிட்ட ஜெயலலிதாவின் அறிக்கையில், அதனை அப்படியே வழிமொழிந்திருந்தார். மிகமிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது அறிக்கையை அவரே ஜெராக்ஸ் எடுத்து ஒப்புக்கொண்டு இருக் கிறார்!''

''கூடங்குளத்தைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் ஆரம்பத்தில் இருந்தே ஜெயலலிதா உறுதியாகத்தான் இருந்தார். தீவிரவாதத் தடுப்பு மையம், பட்ஜெட், பெட்ரோல் விலை உயர்வு, ஈழத் தமிழர்கள் விவகாரம், தமிழக அரசுக்கு போதிய நிதி அளிக்கவில்லை என்று மத்திய அரசோடு பல விஷயங் களில் முரண்பட்டார். இவை அனைத்துக்கும் வெளிப்படையாகவே அறிக்கையும்விட்டார். ஆனால்,  கூடங்குளம் விவகாரத்தில் மட்டும் வாய் திறக்காமல் இருந்தார். 'கூடங்குளம் திட்டம் செயல்படுத்தத் தகுதி ஆனதுதான். ஆனால், அந்தப் பகுதி மக்கள் எதிர்க்கும்போது, அவர்களது பேச்சுக்கு செவிமடுக்கத்தானே வேண்டும்’ என்பது ஆரம்பத்தில் அவரது நிலைப்பாடாக இருந்தது.


 சி.பி - அதெல்லாம் சும்மா.. ஆரம்பத்துலயே அவங்க முடிவு எடுத்திருப்பாங்க.. ஆனா தேர்தல், இடைத்தேர்தல்க்காக  வெயிட்டிங்க்..இப்போ எல்லாம் முடிஞ்சது.. அதான் சுய ரூபம் காட்டறாங்க

  'தூத்துக்குடி ஏரியாவில் பலம் பொருந்திய மணல் மனிதர் ஒருவர் கூடங்குளம் அணு உலை வந்தால், தனது தொழில் பாதிக்கும் என்று கருதி காய்களை நகர்த்தி வருகிறார்’ என்று பெயர் குறிப்பிடாமல் தனது கட்சிப் பொதுக்குழுவில் சொன்னார் விஜயகாந்த்.


சி.பி - இதென்ன புதுக்கரடி?  கேப்டன் மப்புல இருக்கறப்ப சொன்னதா? திராணியோட சொன்னதா?


 தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான 'முரசொலி’யிலும் இதுபற்றி வெளிப்படையாகவே பெட்டிச் செய்தி வெளியானது. 'அந்த மணல் மனிதர் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களின் தேர்தல் செலவைப் பார்த்துக்கொண்டவர். அதனால்தான், கூடங்குளத்தை வராமல் ஜெயலலிதா பார்த்துக்கொண்டார்’ என்று எல்லாம் செய்திகளை றெக்கை கட்டின.''


சி.பி - அடப்பாவிகளா?வில்லனா இருந்தாக்கூட மறைமுகமா மக்களுக்கு அந்தாள் நல்லதுதான்யா  பண்ணி இருக்கான்.. ஏதோ கொஞ்ச நாள் தள்ளீப்போட்டிருக்கார்..
''இந்த அரசியல் விமர்சனங்கள் பற்றி ஜெயலலிதா கவலைப்பட்டதைவிட மின் வெட்டுதான் அவருக்கு தீராத தலைவலி ஆனது. 'வேறு வழி இல்லை! கூடங்குளம் திறக்கப்பட்டுத்தான் ஆக வேண்டும்’ என்று முடிவுக்கு வந்தார் ஜெயலலிதா. அதிலும் அரசியல் வித்தைகளை நடத்தியதுதான் ஆச்சரியம். கூடங்குளத்தின் பாதுகாப்பு பற்றி ஆராய மாநில அரசின் சார்பில் போடப்பட்ட வல்லுனர் குழு அறிக்கை கடந்த மாதம் 28-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், அதன் மீது முடிவு எடுக்காமல் கிடப்பில் போட்டார் ஜெயலலிதா.



காரணம், சங்கரன் கோவில் இடைத்தேர்தல். கூடங்குளத்தைத் திறக்க வேண்டும் என்று, ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், 'தமிழக அரசு நியமித்த குழுவின் பரிந்துரைகளை சுட்டிக்காட்டித்தான் கூடங்குளத்தைத் திறக்க வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார். அப்படி முடிவு எடுத்திருந்தால், அந்தக் குழு அறிக்கை கொடுத்த மறுநாளே அறிவித்திருக்கலாம். ஆனால், சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிந்த அடுத்த நாள் இந்த முடிவை அவர் எடுத்ததற்கு அரசியல் பின்னணிதான் முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது!''


''சங்கரன்கோவில் தேர்தல் முடிந்ததும் கூடங்குளம் திறக்கப்பட்டுவிடும்என்ற நிலை அனைவரும் எதிர்பார்த்ததுதான்


''சங்கரன்கோயில் வாக்குப்பதிவு முடியும் தருவாயில், 'நாளை அமைச்சரவை கூடும்’ என்கிற அறிவிப்பு வந்தது. அப்போதே, பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. 'சங்கரன்கோவில் தேர்தலுக்கு முன்னதாக கூடங்குளத்தைத் திறந்தால் போராட்டக்காரர்களால் ஏதாவது கொந்தளிப்பு ஆகி... சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்து... அது தேர்தல் வெற்றியைப் பாதிக்கலாம்’ என்று நினைத்தாராம் முதல்வர். அதற்குத்தான் தாமதம் காட்டி உள்ளார்!''

 சி.பி - யார் எக்கேடு கெட்டால் என்ன? எனக்கு காரியம் நடந்தா சரி - ஜெ


 கூடங்குளத்தைத் திறக்க வேண்டும் என்கிற அறிவிப்பை ஜெயலலிதா வெளியிடுவதற்கு மூன்று மணி நேரம் முன்பு டெல்லியில் நடந்த சம்பங்கள்தான் தமிழகத்தில் இப்படி அதிர்வலைகளை உண்டாக்கியதாம். டெல்லியிலும் தமிழகத் திலும் நடந்த சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கின்றனவாம். இங்கே அமைச்சரவைக் கூட்டம் நடந்துகொண்டு இருந்தபோது 'இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரிக் கும்’ என்று நாடாளுமன்றத்தில் சொல்லிக்கொண்டு இருந்தார் பிரதமர் மன்மோகன் சிங். பிரதமரின் இந்த அறிவிப்பும் அமைச்சரவை முடிவும் வெவ் வேறாக இருந்தாலும் அதற்குள் அரசியல் பின்னணி இருக்கிறது. அதுதான் கேயாஸ் தியரி.’

''15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்ட கூடங்குளத்தை எப்படியும் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் மத்திய அரசு ரொம்ப உறுதியாகவே இருந்தது. ஆனால், மாநில அரசிடம் இருந்து எந்த ஒத்துழைப்பும் இல்லை. அதோடு வேறு விவகாரங்களில் மத்திய அரசோடு முரண்டு பிடித்துக்கொண்டு இருந்தார் ஜெயலலிதா. இந்தப் பின்னணியில்தான் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்கிற குரல்கள் தமிழகத்தில் இருந்து எழுந்தன.


 ஜெயலலிதா இது தொடர்பாக இரண்டு கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதினார். ஆனால், சரியான ரியாக்ஷன் இல்லை. அதற்குப் பதிலாக, 'எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு எதிரான தீர்மானத்தையும் ஆதரிப்பது இல்லை என்பது இந்தியாவின் பொதுவான நிலைப்பாடு’ என்று தீர்மானத்துக்கு எதிராகவே கருத்து சொல்லிவந்தது மத்திய அரசு. 'கூடங்குளத்தைத் திறக்க வேண்டும் என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றுகிறோம். அதற்குப் பதிலாக நீங்கள் என்ன செய்வீர்கள்?’ என்று மத்திய அரசுக்கு செக் வைத்தாராம் ஜெயலலிதா. 'என்ன வேண்டும்?’ என்று கேட்டது மத்திய அரசு. நிதிஉதவி, மின்சாரம் உட்பட மத்திய அரசிடம்  கோரிக்கைகளின் பட்டியல் ஒன்றைக் கொடுத்தாராம் ஜெயலலிதா. அதில் ஒன்றுதான் ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது. அதைத்தான் நிறைவேற்றி இருக்கிறார்கள் என்றும் டெல்லிப் பறவைகள் சொல்கின்றன.''



'' 'இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றினார் ஜெயலலிதா. அதன் மீது எந்த நடவடிக்கையும் இந்தியா எடுக்கவில்லை. இப்போது ஐ.நா. தீர்மானத்தை ஆதரிப்பதாக அறிவித்ததற்கு அவசரம் காட்டியது கூடங்குளத்துக்காகத்தான். மத்திய மாநில அரசுகள் கணக்குப் போட்டு காய்களை நகர்த்தியதன் விளைவு.... கூடங்குளம் பிரச்னையும் தீர்ந்தது. ஐ.நா. தீர்மான விவகாரமும் ஓய்ந்தது. பாம்பும் சாகக் கூடாது கம்பும் உடையக் கூடாது என்கிற கணக்கு சரியாகி இருக்கிறது. இந்த 'மூவ்’களை கடைசி நேரம் கண்டு கோதாவில் திடீரென்று கருணாநிதியும் குதித்தார்.''


''அவர் ஏதோ உண்ணாவிரதம் என்று அறிவிப்பு வெளியிட்டாரே?''

''திங்கள் கிழமை அன்று காலையில் கருணாநிதி யிடம் பிரதமர் பேசினார். 'அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்’ என்று அப்போது சொன்னாராம் பிரதமர். இதை அறிந்துகொண்டுதான், உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று கருணாநிதி அறிவித்தார். பிரதமர் அறிவிப்பு டெல்லியில் இருந்து வந்ததும் கருணாநிதி உண்ணாவிரதத்தை வாபஸ் வாங்கிக்கொண்டார். 'அதாவது கருணாநிதி மிரட்டியதால்தான் மன்மோகன் இந்த முடிவு எடுத்தார்’ என்பதைக் காட்ட நடந்துள்ளன இந்தச் சம்பவங்கள்!''

 சி.பி - நாடகம் போடறதுல கலைஞர் கில்லாடி ஆசே..
''கூடங்குளம் போராட்டக்காரர்களை ஜெயலலிதாவே நேரடியாக அழைத்துப் பேசினாரே!''
''இரண்டு தரப்பையும் அழைத்துப் பேசினோம் என்பதைப் பதியத்தானே வேண்டும்!
கேபினெட் நடந்துகொண்டு இருந்தபோதே கூடங்குளம் பகுதிக்கு போலீஸார் மலையளவு குவிக்கப்பட்டுவிட்டார்கள்.




சங்கரன்கோவில் தேர்தல் பணிகளுக்காக சென்ற போலீஸார் அங்கு திருப்பிவிடப்பட்டார்கள். மாநில அரசு நினைத் தால்தான் கூடங்குளத்தை திறக்க முடியும் என்பதில் மத்திய அரசும் தெளிவாக இருந்தது. எனவே ஜெயலலிதாவையே அவர்கள் முழுமையாக நம்பி இருந்தார்கள். அவர்களது எண்ணத்துக்கு 19-ம் தேதிதான் வந்தார் ஜெயலலிதா!


இதனால் கூடங்குளம் பகுதியில் வன்முறை ஏற் படக்கூடும் என்பதால் முதல் நாளிலேயே, தென்மண்டல ஐ.ஜி-யான ராஜேஸ்தாஸ் தலைமையில் 4,000 போலீஸார் குவிக்கப்பட்ட னர். சங்கரன்கோவில் தேர்தல் பணிக்காக வந்திருந்த எட்டு மாவட்ட எஸ்.பி-க்கள் கூடங்குளம் பகுதிக்குத் திருப்பிவிடப்பட்டனர். நிலைமையைக் கண்காணிக்க கூடுதல் டி.ஜி.பி-யான ஜார்ஜ் வந்து சேர்ந்தார். வன்முறையைக் கட்டுப்படுத்த வஜ்ரா வாகனங்கள், கலவரத் தடுப்புப் படை என கூடங்குளம் அணு உலை முன்பாக பெரும் படையே குவிக்கப்பட்டது.

அணு உலைக்கு எதிரில் வாடகைக் கட்டடத்தில் அமர்ந்து அணு உலையைக் கண்காணித்து வந்த போராட்டக் குழு உறுப்பினர்களான வக்கீல் சிவசுப்பிரமணியன், ராஜலிங்கம் உள்ளிட்ட ஒன்பது பேரை போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். தமிழக அரசின் தீர்மானம் பற்றி அறிந்த இடிந்தகரை மக்கள், ஆலய மணியை அடித்துக் கூட்டத்தை திரட்டினர். அதற்குள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்ததால், இடிந்தகரை பகுதியில் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது.''

''போலீஸை வைத்து இதற்குப் பதில் சொல்வார்களா?''
''போராட்டக்காரர்களை 18-ம் தேதி இரவு நெல்லைக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு மாவட்ட ஆட்சியர் அழைத்தார். 'என்ன விஷயம்?’ எனக் கேட்டதற்கு, 'ஏற்கெனவே நீங்கள் முதல்வருக்கு கொடுத்திருந்த மனு பற்றி பேச வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார்.

'கூடங்குளத்தில் போலீஸாரைக் குவிப்பதையும் எங்களைத் திட்டமிட்டு அழைப்பதையும் சந்தேகத்துடன் பார்க்க வேண்டும். இதனால், நாங்கள் அங்கு செல்ல மறுத்து விட்டோம். 19-ம் தேதி காலையில் மீண்டும் எங்களை அழைத்த அவர், 'ராதாபுரம் வரையாவது வாருங்கள். அங்கு வைத்துப் பேசிக்கொள்ளலாம்’ எனக் கூப்பிட்டார். இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாக எங்கள் மக்கள் சந்தேகப்பட்டார்கள்.


அதனால் எங்களைப் போக அவர்கள் அனுமதிக்கவில்லை. நாங்கள் போயிருந்தால் எங்களைக் கைது செய்திருப்பார்கள்’ என்று போராட்டக்காரர்கள் சொல்கிறார்கள். கூடங்குளத்தை அமைதியாகத் திறக்கவிடுவார்களா என்பது இரண்டொரு நாட்களில் தெரிந்துவிடும்''

சி.பி - இந்த தலைமுறை மக்கள் மின்சாரம் பெற வேண்டும் என்பதற்காக கூடங்குளம் அணு உலை திறப்பது நம் எதிர் கால சந்ததிக்கு நாம் செய்யும் துரோகம்.. மக்கள் பெருமளவில் இதை எதிர்க்கக்கூடாது என்பதற்க்காக செயற்கையான 8 மணி நேர மின் வெட்டை ஜெ உருவாக்கினார் என்று சில ர் சொல்றாங்க.. நாளை கூடங்குளத்தில் ஏதாவது விபத்து நடந்து மக்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? மேலும் அங்கே பணீ புரிந்த 147 பேருக்கு புற்று நோய் என்று இந்தியா டு டே கட்டுரை வெளியிட்டு இருக்கு.. அதுக்கெல்லாம் என்ன பண்ணப்போறாங்க?

இப்போ லேட்டஸ்ட் நியூஸ் அந்த ஏரியா மக்களுக்கு தண்ணீர் சப்ளை, , மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் நிறுத்தமாம்/... அட தேவுடா.. ஏழை எளிய மக்களை அடக்குமுறை கொண்டு ஆள ஆங்கிலேயர் என்ன? நம்மாளுங்க என்ன? எல்லாம் ஒரே கேட்டகிரிங்க தான்..

Saturday, June 11, 2011

ஏர்செல் ஊழல் vs தயாநிதி மாறன் -அதிர வைக்கும் உண்மைகள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_w6TudwSeLIi9hyphenhyphenSEvmFijhf7pY6wvm5A1LjOUmLcbQL5KFVstBp2NnWaiQ5hmbtXsN7XDh0Pqr71e1YBFO9nX5hg9dE-9XoRBlz8fnahqSQpRGio93ep2cDltvLmH7XNPpKIFkgQI14/s1600/Aircel+wifi+service.jpgசிக்கவைத்த சிவசங்கரன்... தவிக்கும் தயாநிதி மாறன்!

16 வருடப் பகையின் கதை

சி.பி.ஐ. துருப்புச் சீட்டுக்களில் ஒருவராக மாறி, இன்று தயாநிதி மாறனின் பதவிக்கு வேட்டு வைக்கும் மனிதராகி இருக்கிறார், ஏர்செல் சிவசங்கரன். ஒரு காலத்தில் கருணாநிதி, முரசொலி மாறன்... இருவரின் செல்லப்பிள்ளை. இன்று தயாநிதி மாறனுக்கு கடுமையான எதிரி!

'கடந்த 16 ஆண்டு காலப் பகையின் கதை’ என்று விவரம் அறிந்த வட்டாரங்களால் சொல்லப்படும் கரன்ஸி ஆட்டத்தைப் பற்றிய தகவல்கள் இங்கே...!

'என்னுடைய ஏர்செல் கம்பெனியை மலேசியாவின் மேக்சிஸ் குழுமத்துக்கு விற்கச் சொல்லி தயாநிதி மாறன் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தார்!’ என்று சிவசங்கரன் சி.பி.ஐ-யிடம் புகார் சொன்னதாகத் தகவல் வெளியானது. மாறன் இந்தக் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்து, ''சிவசங்கரன் மில்லியனர் இல்லை, அவர் ஒரு மல்டி பில்லியனர். அவரை யாரும் மிரட்ட முடியாது. அப்படியே மிரட்டப்பட்டு இருந்தாலும் அவர் நீதிமன்றத்துக்கு அப்போதே சென்று இருக்கலாம்'' என்று பதில் கூறி இருந்தார். ஆனாலும் இந்த சர்ச்சை அடங்குவதாக இல்லை!


யார் இந்த சிவசங்கரன்?

சென்னையில் வசிக்கும் 54 வயதாகும் சிவசங்கரன், திருவண்ணா மலைக்காரர். பி.இ. (மெக்கானிக்கல்), எம்.பி.ஏ. (ஹார்வர்டு பல்கலைக் கழகம்) படித்தவர். ஸ்டெர்லிங் குரூப் மற்றும் சிவா வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று ஆரம்பித்து, பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர். பின்லாந்து நாட்டில் காற்றாலை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்று கடந்த 30 வருடங்களில் பல்வேறு பிசினஸ்களில் ஈடுபட்டு வந்தாலும், உச்சகட்ட பெரிய டீல் என்றால், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனியிடம் 4,860 கோடிக்கு ஏர்செல் உள்ளிட்ட மூன்று  நிறுவனங்களை விற்று லாபம் பார்த்தது.

 பிறகு, நார்வே நாட்டில் ஷிப்பிங் கம்பெனி, மற்றொரு நாட்டில் மினரல் வாட்டர் பிசினஸிலும் இறங்கினார். மகாராஷ்டிர மாநிலத்தில் ரிசார்ட் பிசினஸ், சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்திலும், தனது பணத்தை முதலீடு செய்தார். லேட்டஸ்ட்டாக, வெளிநாட்டில் படிப்பு முடித்துத் திரும்பிய தனது மகனை ஷிப்பிங் பிசினஸைக் கவனிக்கும்படி பணித்திருக்கிறார்.


கம்ப்யூட்டர் உலகில் நுழைகிறார்!

அது 1983-ம் ஆண்டு. 'கம்ப்யூட்டர்’ என்ற வார்த் தையே பலரை மிரள வைக்கும். அது எப்படி இருக்கும் என்றுகூட அப்போது பலருக்குத் தெரியாது. இனி உலகத்தை இதுதான் ஆட்சி செய்யப் போகிறது என்று மற்ற அத்தனை பேரையும் முந்திக்கொண்டு இனம் கண்டுகொண்ட சிவசங்கரன், டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜின் அப்பா நடத்திவந்த ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தை சகாயமான விலைக்கு வாங்கி, அதற்கு ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர்ஸ் என்று புதிய பெயர் சூட்டினார்.

அந்தக் காலகட்டத்தில், கம்ப்யூட்டர் என்றாலே லட்சத்தில் விலை சொன் னார்கள். இவர் வெளிநாடுகளில் இருந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்து, அதைவைத்து இங்கே கம்ப்யூட்டர் உருவாக்கி, ஒவ்வொன்றையும் சுமார் 33,000 என்று விற்பனை செய்தார். தொலைநோக்குப் பார்வை, கடுமையான உழைப்பு, தொழில்நுட்ப மூளை, வியாபார தகிடுதத்தங்கள் என்று அனைத்தையும் சரிவிகிதத்தில் பயன்படுத்தி, ஒரு சில ஆண்டுகளிலேயே மற்ற நிறுவனங்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர் நிறுவனத்தை வளர்த்தார்.

அதன் பிறகு சென்னை டெலிபோன்ஸ் 'எல்லோ பேஜ்’ புத்தகத்தை பிரின்ட் பண்ணும்  டெண்டரைக் கைப்பற்றினார்.  கம்ப்யூட் டரை அடுத்து இன்டர்நெட் அறிமுகமானபோது... 'வந்துவிட்டது, அடுத்த புரட்சி’ என்பதை உணர்ந்து கொண்ட சிவசங்கரன், 'டிஷ்நெட் டிஎஸ்எல்.’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.

அதைத் தொடர்ந்து ரயில்வே ஸ்டேஷன்களில் 'பாரீஸ்தா’ ரெஸ்டாரெண்டுகளை ஆரம்பித்தார். இன்னொரு பக்கத்தில் பிட்னெஸ் சென்டர்களும் நடத்தினார். செல்போன் அறிமுகமானதும், அதன் வீச்சு பலமாக இருக்கும் என்பதை எல்லோரையும்விட மிகமிக முன்னதாகவே மோப்பம் பிடித்த சிவசங்கரன், ஏர்செல் நிறுவனத்தை தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு துவக்கினார்.

வேகமாக வளர்ச்சியடைய ஏர்செல் என்ற ஒரு குதிரை போதாது என்பதை உணர்ந்த சிவசங்கரன், 210 கோடி கொடுத்து 'ஆர்பிஜி செல்லுலார்’ என்ற இன்னொரு செல்போன் நிறுவனத்தையும் வாங்கினார்.

சிவசங்கரனின் பாலிசி!

'வியாபாரத்தில் சென்டிமென்ட் பார்க்கக்கூடாது’ என்பது சிவசங்கரனின் தாரக மந்திரம். தான் ஆரம்பித்த டிஷ்நெட் நிறுவனம், எதிர்பார்த்த வளர்ச்சி அடையவில்லை என்றதும், சற்றும் தயங்காமல் 270 கோடிக்கு விற்றுவிட்டார்.

கோடிகளில் புரண்டாலும்... அவரின் எண்ண ஓட்டங்கள் எப்போதும் எளிமையானதுதான். தன் சகாக்களிடம் பேசும்போது விஷயத்தை எளிமையாக புரியவைக்க அவர் பல்வேறு உதாரணங்கள் சொல்வதுண்டு. ''என்னோட மனைவி, பிள்ளைகளைத் தவிர நான் போட்டிருக்கும் சட்டையைக் கூட விற்பேன்!'' என்று அடிக்கடி சொல்வார்.

''சரவணபவனுக்குப் போற எல்லோருமே இட்லியைத்தான் வாங்குறாங்க. சட்னி, சாம்பாரை வாங்குவதில்லை. ஆனால் சட்னியும் சாம்பாரும் கொடுக்கவில்லை என்றால் இட்லி விற்பனை ஆகாது. அதுபோல, நம்மிடம் கம்ப்யூட்டர் வாங்க வருபவர்களுக்கு நாம் பிரின்டரையும் சேர்த்தே கொடுக்க வேண்டும். அப்போதுதான் கம்ப்யூட்டர் விற்பனை அதிகமாகும்!'' என்பது அவரது பிரபலமான உதாரணம்.

''சிவசங்கரன் தொலைநோக்குப் பார்வை கொண்ட கலர்ஃபுல் தொழில் அதிபர்!'' என்று சொல்பவர்களும் உண்டு. ''ஒரு தொழில் இல்லாமல் பல்வேறு தொழில்களை ஆரம்பித்து நடத்தும் அவரை தொடர் தொழில் தொழிலதிபர்!'' என்றும் சொல்கிறார்கள்.

கம்ப்யூட்டரின் பயன்பாடு மெள்ளத் தொடங்க ஆரம்பித்ததுமே எழுத்தாளர் சுஜாதாவை தனக்கு ஆலோசகராக வைத்துக் கொண்டவர் சிவசங்கரன். அப்போது உடன்வேலை பார்க்க வந்தவர்தான் கனிமொழியின் கணவர் அரவிந்தன்!

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் சிறு கட்டடத் தில் அலுவலகம் வைத்திருந்தவர், 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் தேனாம்பேட்டை பகுதியில் 24 கோடி களைக் கொடுத்து, ஹரிகந்த் டவர் என்கிற கட்டத்தை விலைக்கு வாங்கி 'ஸ்டெர்லிங் டவர்’ என்று பெயர் மாற்றி னார். அதில் இருந்து அவரை 'ஸ்டெர்லிங்’ சிவசங்கரன் என்ற அடைமொழியுடன்தான் அழைப்பார்கள்.

 சிவசங்கரனைப் பற்றி அவரது பிசினஸ் நண்பர்களிடம் கேட்டபோது, ''கடந்த 30 வருடங்களில் அவர் சுமார் 25 தொழில்களில் ஈடுபட்டு இருந்தார். எந்த பிசினஸையும் அவர் தொடர்ந்து நடத்தியது இல்லை. ஒரு தொழிலைத் துவக்குவார்; அதை நன்றாக வளர்ப்பார்; ஒரு லெவலுக்கு வந்ததும், அதைப் பல மடங்கு லாபம் வைத்து வேறு யாரிடமாவது விற்றுவிட்டு வேறு பிசினஸுக்குத் தாவிவிடுவார்.

உதாரணத்துக்கு, ரயில்வே ஸ்டேஷன்களில் காபி ஷாப்-களை பிரமாண்டமாகத் துவங்கி, பிறகு அதை அடுத்தவருக்குக் கைமாற்றிவிட்டார். இதுதான் சிவசங்கரனின் ஸ்டைல். ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு அடிக்கடி மாறியதால், பலத்தரப்பட்ட பிசினஸ் பிரமுகர்களுடன் மோதல், விரோதம் அதிகமானது. இதுவே அவருக்கு நிறைய தொழில்முறை எதிரிகளை உருவாக்கிவிட்டது!’' என்று சொல்கிறார்கள்.

கருணாநிதி, முரசொலி மாறன் அறிமுகம்!

1989-ம் ஆண்டில், அப்போதைய முதல்வர் கருணாநிதி, டிட்கோ நிறுவனம் சார்பாக பிரபல தொழில திபர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். திடீரென ஒரு பிரமுகர் எழுந்து, 'நான் ஒரு தொழில் அதிபர். பெயர் சிவசங்கரன். டிட்கோவில் போய்க் கடன் கேட்டால், முதலியாரா? ரெட்டியாரா? என்ன சாதி என்றுதான் கேட்கிறார்கள்.

தொழிற்சாலை துவங்குவது பற்றிக் கேட்காமல், இப்படிக் கேட்பது சரியா?’ என்று துணிச்சலாகக் கேட்க... முதல்வர் ஆச்சர்யத்தோடு திரும்பிப் பார்த்தார். 'யாருப்பா நீ? உனக்கு என்ன உதவி வேணும்?’ என்று கேட்டு விசாரித்து, ஒன்றிரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வழிவகை செய்தார்.

சென்னை டெலிபோன்ஸ் வெளியிடும் எல்லோ பேஜஸ் டெண்டரை பயங்கரப் போட்டியில் குதித்து வாங்கினார். சென்னையைச் சேர்ந்த பிசினஸ் நிருபர்கள் இதன் பிறகுதான், சிவசங்கரனை நெருக்கமாகக்  கவனிக்க ஆரம்பித்தார்கள்.


தமிழகம் முழுக்க சிவசங்கரன் பிரபலம் ஆனது, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பங்குகளை வாங்கியபோதுதான். நாடார் சமூகத்தினர் மத்தியில் பலத்த கொந்தளிப்பைக் கிளப்பியது. 'முரசொலி மாறனின் நண்பரான சிவசங்கரன்தான் இதை வாங்கி இருக்கிறார்’ என்று சொல்லி தி.மு.க-வுக்கு எதிரான பிரச்னையாக மாற்றினார்கள்.

மெர்க்கன்டைல் வங்கி மீட்புக் குழுவினர் ஜெயலலிதாவைப் பார்த்து, அவரது ஆதரவைக் கோரினார். அதன்பிறகு, கணிசமான பங்குகளை மட்டும் நாடார் சமூகத்தவர்களுக்கு கொடுத்தார்.

1995-ம் ஆண்டு தமிழகத்தில் தொலைத் தொடர்புத் துறை லைசென்ஸ் பெற சிவசங்கரன் முயற்சித்தார். 97-98-ல் சென்னையைத் தலைமையகமாகச் கொண்டு ஏர்செல் தொடங்கினார். அப்போது முரசொலி மாறனுக்கும் இவருக்குமான நட்பு அதிகமானது. ஆர்.பி.ஜி. செல் நிறுவனத்தின் பங்குகளை சிவசங்கரன் வாங்க முரசொலி மாறன் உதவி செய்ததாகவும் சொல் கிறார்கள். இந்த நட்பு முரசொலி மாறன் மறைவுக்குப் பிறகு தொடரவில்லை.

சிவசங்கரனை விரட்டிய சம்பவம்!

2006-ம் வருடம் ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில், ஈரோட்டைச் சேர்ந்த ஏ.என்.சண்முகம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் (பூந்தமல்லி கோர்ட்டில் வழக்கின் எண் சி.சி. 191/2006) கொடுத்தார். அதில், ''சென்னை அய்யப்பன்தாங்கலில் எனக்கு 2.43 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வீடுகளைக் கட்டி விற்கும் திட்டத்தைச் செயல் படுத்தலாம் என்று ஸ்டெர்லிங் நிறுவனத் தலைவர் சிவசங்கரன் என்னிடம் கேட்டார்.

அவர் பேச்சை நம்பி, 1.05 ஏக்கர் நிலத்தை மட்டும் பவர் எழுதித் தந்தேன். கொஞ்ச நாட்களுக்குப் பிறகுதான் தெரியவந்தது, அந்த நிலத்தை நான் சிவசங்கரனின் நிறுவனத்துக்கு விற்பனை செய்துவிட்டதாக போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப் பதிவு செய்துவிட்டார்!'' என்று சொல்லப்பட்டது. 

இந்தப் புகாரை பதிவு செய்த போலீஸார்,  ஸ்டெர்லிங் நிறுவன அலுவலர்கள் ஆறு பேர்களை கைது செய்தனர். நிறுவனத் தலைவர் சிவசங்கரனை விசாரணைக்காக போலீஸ் தேட... சிவசங்கரன் எங்கே போனார் என்று தெரியவில்லை. தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் படியேறினார் சிவசங்கரன்.

ஆனால், அங்கே இவரது கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது. ''இந்த வழக்கைப் பின்னணியில் இருந்து போட வைத்ததே தயாநிதி மாறன்தான்!'' என்று சிவசங்கரன் ஆட்கள் செய்தியைக் கிளப்பினார்கள்.

இரண்டு தனி மனிதர்களுக்கு மத்தியிலான மோதலாகத் தொடங்கி இன்று இந்திய அரசியலையே ஆட்டிப் படைக்க ஆரம்பித்துள்ளது. சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யும் போதுதான் இந்தப் பகை யாரையெல்லாம் காவு வாங்கப் போகிறது என்பதும் தெரியும்!


தெஹல்காவும் தயாநிதியும்!

''ஏர்செல் கம்பெனியின் சார்பாக 14 சர்க்கிள்களில் செயல்பட, நாங்கள் கொடுத்த விண்ணப்பத்தை நொண்டிக் காரணங்களைக் காட்டி, தயாநிதி மாறனின் அமைச்சரகம் தாமதப்படுத்தியது. இது குறித்து, 2005-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதி, அமைச்சராக இருந்த தயாநிதிக்குக் கடிதம் எழுதினேன்.

பலன் எதுவும் இல்லை. அதன்பிறகு, என்னுடைய ஏர்செல் கம்பெனியை, தயாநிதி மாறனின் மலேசிய நண்பரான அனந்தகிருஷ்ணின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்யச் சொல்லி, எனக்குக் கொலை மிரட்டல் வந்தது. அதனால் வேறு வழி இல்லாமல் ஏர்செல் கம்பெனியின் 74 சதவிகித பங்குகளை அனந்தகிருஷ்ணனின் மலேசிய (மேக்சிஸ் குழுமத்தின்) கம்பெனிக்குக் கைமாற்றினேன்.

என் கட்டுப்பாட்டில் ஏர்செல் இருந்தபோது வருடக்கணக்கில் முயன்றும் கிடைக்காத லைசென்ஸ், அனந்தகிருஷ்ணனின் கைகளுக்கு ஏர்செல் சென்ற ஆறே மாதங்களில் கிடைத்தது!

இந்த  உரிமங்களைக் கொடுத்த நான்கே மாதங்களில் சன் டைரக்ட் டி.வி-க்கு சவுத் ஆசியா என்டர்டெயின்மென்ட் ஹோல்டிங் லிமிடெட் என்ற மலேசிய கம்பெனியிடம் இருந்து 600 கோடிகள் முதலீடு வந்திருக்கிறது. இந்த நிறுவனமும் அனந்தகிருஷ்ணனின் நிறுவனம்தான். அதன் பிறகு (அதாவது, பிப்ரவரி 2008-ல் இருந்து ஜூலை 2009 வரை)  சவுத் ஆசியா எஃப்.எம். நிறுவனத்துக்கு அனந்தகிருஷ்ணனின் மேக்ஸிஸ் குரூப் மேலும் 100 கோடியை முதலீடு செய்து இருக்கிறது...'' என்று சிவசங்கரன் சொன்னதாக 'தெஹல்கா’ செய்தி வெளியிட்டுள்ளது! 


''சிவசங்கரன் ஒரு மல்டி பில்லியனர். அவரை யாரும் மிரட்ட முடியாது. தவிர, மேக்சிஸ் குழுமம் சன் டி.வி-யில் முதலீடு செய்த காலகட்டத்தில் நான் அமைச்சராகவே இல்லை. தவிர சன் டி.வி-யிலும் நான் பங்குதாரர் இல்லை. ஆகையால், என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செய்தியை தெஹல்கா வெளியிட்டு இருக்கிறது'' என்று சொல்லி தயாநிதி மாறன், தெஹல்காவுக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்!


நன்றி - ஜூவி

Saturday, May 14, 2011

சொக்க வைத்த சோனியாவை தாக்க வந்த கடிதம்-சுப்ரமணியம் சாமியின் புது குண்டு - காமெடி கும்மி

http://rajkanss.files.wordpress.com/2008/10/cartoon_1991.jpg?w=480&h=341 
 
சோனியாவை மிரட்டும் கடிதப் புயல்!

சுவாமியின் அடுத்த அதிரடி 

சி .பி - அதிரடியா? காமெடியா?
 
டந்த மாதம் டெல்லியில், சி.பி.ஐ-யின் புதிய அலுவலகத்தை பிரதமர் மன்மோகன்சிங்க்
திறந்துவைத்தார். 11 தளங்களைக்கொண்ட அந்தப் புதிய கட்டடத்தின், 6-வது தளத்தில் சி.பி.ஐ-யின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு இருக்கிறது. சி.பி.ஐ. தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து அது கையாண்ட முக்கியமான 14 வழக்குகளின் விசாரணை விவரங்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்று உள்ளன.  1968-ல் நடந்த பண்டிட் தீனதயாள் உபாத்யாயா கொலை வழக்கில் தொடங்கி, 2009-ல் நடந்த
சத்யம் நிறுவன வழக்கு வரை அடக்கம்.

சி .பி - அப்போ எல்லா வழக்கு விசாரணைகளும் அடக்கம் செய்யப்பட்டு விடுமா?
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYzhE1NP9PVSg9Rpmhyxkm8CyyR8CoW1l6cnPr1Qk40_jFz4pvCSDHSEt0tu_mVsfKzDOC_1bbPNg44EFb52DAmSd3CQ7jf8qxjTjt0bCb6s4j8YWKZ3ocKYyKzkfVZU5ZxiAyoxEp2Mqg/s314/304.jpg
ஆனால், நாட்டையே உலுக்கிய - ஏறத்தாழ 20 ஆண்டுகள் சி.பி.ஐ. விசாரித்த போஃபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு விசாரணை தொடர்பான விஷயங்கள் இதில் இடம்பெறவில்லை. ஊடகங்கள் இதைச் சுட்டிக்காட்டிக் கேள்வி கேட்டபோது, தங்களுக்கும் போஃபர்ஸுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாததுபோல காட்டிக்கொண்டனர் காங்கிரஸார்.

சி. பி  - ஒரு தமிழ் இனத்தையே காட்டிக்கொடுத்தவர்கள் ஆச்சே?
 
காங்கிரஸ் இப்போதைக்கு, ஊழலுக்கு எதிரான முகத்தையே வெளிக்காட்ட விரும்புகிறது. காமன் வெல்த் ஊழல், அலைக்கற்றை ஊழல்​கள் தொடர்பான விசாரணைகள், லோக்பால் மசோதாவுக்கான முஸ்தீபு​கள் மூலம், தன்னை அப்பழுக்கற்ற கட்சியாகக் காட்டிக்கொள்ள, காங்கிரஸ் விரும்புகிறது.

சி. பி - என்ன தான் திருடன்  ஒண்ணும் தெரியாதது போல் நடிச்சாலும் அவன் முகமே அவனை காட்டிக்குடுத்துடுமே? 

http://rajkanss.files.wordpress.com/2008/10/cartoon_200.jpg?w=480&h=679
ஆனால், பிரதமர் மன்மோகன் சிங்கின் மேஜைக்குப் போயிருக்கும் ஒரு கடிதம், காங்கிரஸின் அடி மடியிலேயே கை வைக்கிறது. 206 பக்கங்களில், 43 ஆதாரக் குறிப்பு​களுடன் எழுதப்பட்டு இருக்கும் அந்தக் கடிதத்தின் சாராம்சம், 'சோனியா ஓர் ஊழல்வாதி - அவர் மீது வழக்குத் தொடர அனுமதி வேண்டும்!’ என்பதுதான்.

சி .பி - அழகிரி மீது நடவடிக்கை எடுக்கனும்னு கலைஞர் கிட்டே கடிதம் குடுக்கறதும் இதுவும் ஒண்ணு தான். 


கடிதத்தை எழுதி இருப்பவர் சுப்பிர​மணியன் சுவாமி!
குழி தோண்டிப் புதைக்கப்பட்ட போஃபர்ஸ் ஊழல் வழக்கில் இருந்து தற்போதைய ஹவாலா ஹசன் அலி மோசடி வழக்கு வரை பல்வேறு ஊழல், மோசடிகளில் சோனியாவுக்குப் பங்கு உண்டு என்று அடித்துச் சொல்கிறது, இந்தக் கடிதம்!
 http://rajkanss.files.wordpress.com/2008/09/pg2a1.jpg
இந்தக் கடிதத்தில் உள்ள பல கேள்விகள் ஸ்வீடனின் தேசியப் புலனாய்வு அமைப்பின் தலைமை விசா​ரணை அதிகாரியாகவும் ஃபோபர்ஸ் விவகாரத்தில் ஸ்வீடன் நாட்டின் அரசுத் தலைமை வழக்கறிஞராகவும் பணியாற்றிய ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம் நடத்திய விசாரணையின் அடிப்படை​யில் அமைந்துள்ளது.

அந்த விசாரணையில் எழுப்பப்பட்ட கேள்விகள் இவை...

போஃபர்ஸ் பீரங்கி பேரத்​துக்குப் பிறகு ஆட்டோவியோ குவாத்​ரோச்சியின் நிறுவனங்களுக்கு எப்படிப் பெரும் தொகை கிடைத்தது?

  சோனியா காந்தி குடும்பத்தாருக்கும் குவாத்ரோச்சிக்கும் உள்ள உறவு என்ன?

குவாத்ரோச்சியையும் அவருடைய ஏ.இ. சர்வீசஸ் நிறுவனத்தையும் போஃபர்ஸ் பீரங்கி நிறுவனத்துக்கு அறிமுகப்படுத்தியது யார்?

கமிஷன் வாங்கியது குவாத்ரோச்சி​தான் என்பது தெரிந்த பின்னரும், அவரால் இந்தியாவில் வழக்கைச் சந்திக்​காமல் எப்படித் தப்பிக்க முடிந்தது?

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால் முடக்கி​வைக்கப்பட்ட அவருடைய வங்கிக் கணக்கு, எப்படி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்து, அவரால் பணத்தை எடுத்துக்கொள்ள முடிந்தது?

அதன் பின்னணியில் இருந்தது யார்?

அந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டு இருக்கும் இன்னொரு முக்கியமான குற்றச்சாட்டு, வெளிநாட்டு வங்கிகளில் சோனியா காந்தியின் குடும்பத்தார் பணத்தைக் குவித்துவைத்து இருக்கிறார்கள் என்பது! 

வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் பணம், ரஷ்ய உளவு நிறுவனமான கே.ஜி.பி-யிடம் இருந்து பனிப் போர் காலத்தில் பெறப்பட்ட பணமாக இருக்கலாம் அல்லது பல்வேறு ஊழல்கள் மூலமாகச் சேர்த்த பணமாக இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்தக் கடிதத்தின் மீது முடிவு எடுக்க பிரதமருக்கு மூன்று மாதங்கள் அவகாசம் தந்து இருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.

சி.பி. -அந்த 3 மாச அவகாசத்துக்குள்ள ஆதாரங்களை எல்லாம் அழிச்சிடுவாங்க.. 

பிரதமர் முடிவெடுக்காத பட்சத்தில், இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பத் திட்டமாம்.

''வலுவான ஆதாரங்களுடன் சொல்லப்பட்டு இருக்கும் இந்தக் குற்றச்சாட்டுகளை பிரதமர் நிராகரித்தால், சோனியா மீது வழக்குத் தொடர, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கப் பிரகாசமான வாய்ப்புகள் இருக்கின்றன. வழக்கமான உத்தியைப் பயன்படுத்தி, கடிதத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிடவும் முடியாது. ஏற்கெனவே, அலைக்கற்றை ஊழல் தொடர்பாக ஆ.ராசா மீதான குற்றச்சாட்டுகளை அப்படிப் போட்டுத்தான், கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தார் பிரதமர்!'' என்கிறார் சுவாமி.

சி.பி - விமர்சனங்களை சந்திக்கறது நமக்கு புதுசா? எனக்கு எதுவும் தெரியாது.. என் கவனத்துக்கு வராமலே எல்லாம் நடந்து விட்டது என சொல்ல எவ்வள்வு நேரம் ஆகிடும்?

இந்தக் கடித ஏவுகணையை எப்படிச் சமாளிப்பது என்று குழப்பத்தில்  இருக்கிறார் பிரதமர். இது தொடர்பாக, கபில் சிபலிடம் பிரதமரும் சோனியாவும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. பிரதமர் நிராகரித்து, உச்ச நீதிமன்றம் வழக்கை அனுமதித்தாலும், சி.பி.ஐ. தங்கள் வசம் இருப்பதால், சமாளித்துக்கொள்ளலாம் என்று அந்தக் கூட்டத்தில் பேசப்பட்டதாகத் தெரிகிறது.
 http://img.dinamalar.com/data/uploads/WR_825509.jpeg
மன்மோகன் சிங், ஒரு கட்சிக்காரராக இந்தக் கடிதத்தை நிராகரிப்பாரா... அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுத்து தன்னுடைய இமேஜைக் காப்பாற்றிக்கொள்வாரா?

சி.பி - இமேஜ் இருந்தா காப்பாத்தலாம் .ஏற்கனவே அது செம டேமேஜ்

Wednesday, April 13, 2011

பணம் தாராளமாக விளையாடிய டாப் 50 தொகுதிகள்.. ஒரு பார்வை

Hilarious political cartoon images
 தேர்தல் கமிஷனின் பார்வைக்கும்  ஒரு பட்டியல் போய் இருக்கிறது.   பணத்தினால் வெற்றி முடிவு செய்யப்படும் தொகுதிகளின் நிலவரம் இங்கே...

1. மதுரை மேற்கு: மாவட்டத்திலேயே மிக
அதிகமாகப் பணம் விளையாடும் தொகுதி.  கவர்களைக் கொடுப்பதற்காக தொகுதிக்காரர் ஒருவரையும், பக்கத்துத் தொகுதிக்காரர் ஒருவரையும் சேர்த்து அனுப்புகிறார்கள். இரவில் பட்டுவாடா முடிந்ததும் காலையில் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு போன் செய்து, 'கவர் வந்துச்சா?’ என்று கேட்டு உறுதி செய்கிறார்கள். யாராவது கவர் வாங்க மறுத்தாலும், 'ஓட்டு போடுறதும் போடாததும் உங்க விருப்பம்ணே. நாங்க எங்க வேலையைச் சரியா செய்யணும்ல. சும்மா வெச்சுக்கோங்கண்ணே...’ என்று பாசமாய் பேசி பணக் கவரைத் திணித்துவிட்டே போகிறார்கள்! 

2. மதுரை மத்தி:  மேற்கு தொகுதியைப்போலவே இங்கும் பட்டுவாடா டீம் பக்கா. அபார்ட்மென்ட்கள், வசதியான குடியிருப்புகளைக்  கவனிப்பதற்காக வக்கீல்கள் தலைமையில் 'கவர் டீம்’ போட்டு இருக்கிறார்கள். மற்ற இடங்களில் பெரியம்மாக்கள், பாட்டிகள் மூலம் சப்ளை நடக்கிறது. வாங்க மறுக்கும் வீடுகளிலும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது!

3. மதுரை வடக்கு:  இந்தத் தொகுதியில் இடத்துக்கு ஏற்ப ஓட்டுக்கு 100 முதல் 1,000 வரை அனல் பறக்கிறது. நிலைமை இழுபறியாகலாம் என்று வந்த தகவலைத் தொடர்ந்து, இங்கு பணம் இப்போது தாறுமாறாய்ப் பாய்கிறது!


4. மேலூர்: இங்கே நிலைமை உல்டா.  வேட்பாளர் வேகமாக முன்னேறுகிறார் என்றதுமே, ஓட்டுக்குக் கொடுத்த பணத்தை கட்சி நிர்வாகிகள் பலரும் பதுக்கிவிட்டார்கள். கடைசி நேரம் என்பதால், இப்போது கட்சிப் பாகுபாடு இல்லாமல் 200 முதல் 500 வரை சப்ளை ஆகிறது!

5. திருப்பத்தூர்: எல்லா தரப்பும் பணம் கொடுக்கிறது. ஓட்டுக்கு 500 வீதம் ஊர் முக்கியஸ்தர்கள் மூலமாகப் பணம் போய்ச் சேர்ந்துவிட்டது. இது தவிர, கிராமப்புறங்களில் கோயில் கட்டுவது உள்ளிட்ட காரியங்களுக்காகக் கணிசமான தொகையும் இறங்கி உள்ளது.

6. மானாமதுரை:  ஓட்டுக்கு 200 என்ற கணக்கில் 80 ஆயிரம்  பேருக்கு கவர்கள் போய்விட்டதாகப் பேச்சு.  இதில் இடையில் சில ஆட்கள் சுருட்டியதும் நடந்து இருக்​கிறது.

7. சங்ககிரி: சுற்றி உள்ள கிராமங்களில் 500 வரை கைகளில் திணிக்கப்பட்டு இருக்கிறது. கட்சி நிர்வாகிகளும் பசையோடு நடமாடுகிறார்கள்.

8. மேட்டூர்:  ஓட்டுக்கு 500 என்று பட்டுவாடாவைத் தொடங்கிவிட்டனர்.


9. வேலூர்:  எப்போதும்போல இல்லாமல் இந்த முறை வைட்டமின் 'ப’-வுடன் பலரும் திரிகிறார்கள்.   வேண்டியவர்கள் மூலம் நபருக்கு 300 வீதம்  வழங்கப்படுகிறது. பணத்தைக் கொடுத்து விட்டு ஒருவர் எந்த சின்னத்துக்கு வாக்களிக்கணும் என்று சொல்ல உடன் வந்தவர்கள் அந்த ஆளை அடித்து திருத்தி இருக்கிறார்கள்.

10. காட்பாடி:  கடுமையான போட்டி காரணமாக திடுமெனப் பணம் இறைக்கத் தொடங்கிவிட்டார்கள். நபருக்கு 300 முதல் 700 வரை போணி ஆகிறதாம். அடுத்த  தரப்பிலும் இறங்கிவிட்டார்கள்.   300 முதல் 500 வரை பட்டுவாடா ஆகிறதாம்!

11. கீழ்வைத்தியணான் குப்பம்:   300 தாராளமாகக் கையில் விளையாடுகிறது!

12. சோளிங்கர்: கட்சி வேட்பாளரை விட சுயேச்சை ஒருவர்தான் பணத்தை வாரி இறைத்து வருகிறார்.

13. திருச்சி மேற்கு:  பவர் கட்டாகும் சமயத்தில் படபடவெனப் பண விநியோகம் நடக்கிறதாம். சில நேரத்தில், 'இந்த இடத்தில் பணம் கொடுக்கிறார்கள்... அந்த இடத்தில் பணம் கொடுக்கிறார்கள்’ என்று அதிகாரிகளுக்குத் தகவல் பறக்கிறது. அதிகாரிகள் அங்கு சோதனைக்கு செல்லும் நேரத்தில், வேறு ஒரு இடத்தில் கமுக்கமாக விநியோகம் நடக்கிறதாம். கொடுக்கப்படும் பணம் 500!

14. ஸ்ரீரங்கம் : 'பணம் கொடுத்தாலும், பணம் பெற்றாலும் கைது செய்யப்படுவார்கள்’ என்ற தேர்தல் கமிஷனின் விதி இங்குதான் அமலானது. பணம் கொடுத்தவர்களில் பிரதானமானவர் தி.மு.க. வேட்பாளர் ஆனந்தின் மாமனார் ஆண்டிமணி. இவர் கைதுக்குப் பிறகு, தீப்பெட்டியில் உள்ள குச்சிகளை எடுத்துவிட்டு, அதில் 500 வைத்துக் கொடுக்கிறார்களாம். இன்னும் சில இடங்களில் பால் பாயின்ட் பேனாவில் பணத்தை சுருட்டிவைத்துத் தருகிறார்களாம்!

15. லால்குடி:  அதிகாலையில் நியூஸ் பேப்பரைப்போல சரசரவென வேஷ்டி, சேலைகள் சப்ளை ஆகின்றன. அந்தத் துணியைப் பிரித்துப் பார்த்ததும், கூடுதல் உற்சாகம் அடைகிறார்கள். காரணம் செல்லோ டேப் வைத்து துணிக்குள் ஒட்டிருக்கும் 500 நோட்டு!

16. நாகப்பட்டினம்:  பண விநியோகப் பொறுப்பு தெருவில் ஒருவருக்கு என்று பிரித்துக் கொடுக்கப்பட்டு உள்ளது. சில நோட்டுகளை மட்டுமே பாக்கெட்டில் வைத்திருப்பார். தெருவில் இருப்பவர்கள் வெளியே கிளம்பினால், அவரிடம் பேச்சுக் கொடுத்தபடியே பாக்கெட்டுக்குப் பணத்தை மாற்றிவிடுவார்!

17. பாப்பிரெட்டிப்பட்டி:   200 முதல் 500 வரை பரவலாக பட்டுவாடா நடக்கிறது!

18. தளி: பலமான கூட்டணி என்றாலும்  நூலிழையில் சறுக்கிவிடக் கூடாது என்று பயம். அதனால், கையில் எடுத்திருக்கும் ஆயுதம், பணம்!

19. திருவாரூர்: 500 விநியோகம் அமோகமாய் நடக்கிறது. கட்சியின் அடிமட்டக் கிளை செயலாளர்கள் வரை பணம் கொடுக்கப்பட்டுவிட்டது. தேர்தல் ஆணையம் கெடுபிடி செய்தாலும், காவல் துறை கண்டுகொள்ளவே இல்லை!

20. நன்னிலம்:  ஆளும் கட்சிக்காரர்களுக்கு 500. எதிர்க் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு 1000 அள்ளித் தருகின்றனர். அதனால், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள்கூட, தங்களை எதிர்க் கட்சி என்றே சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள்!

21. கும்பகோணம்:  இங்கே முதல் கட்ட  விநியோகமே 1,000 என்று தொடங்கிவிட்டார்கள். 'ப’ தவிர வேறு எதுவும் கை கொடுக்காது என்பதில் தெளிவாக இருப்பதால், குடும்பம் ஒன்றுக்கு 5,000 கடைசிக் கட்டத்தில் கொடுக்கிறார்கள்!

22. பேராவூரணி:  கிளை ஒன்றுக்கு 10,000 மட்டுமே கொடுக்கப்படது. இதை எப்படி வாக்காளர்களுக்குக் கொண்டுபோய் சேர்ப்பது என விழிக்கிறார்கள்!

23. அரவக்குறிச்சி:  தொகுதி முழுக்க பணம் விளையாடுகிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிறது.

24. விழுப்புரம்:   500 தொடங்கி 1,000 வரை அள்ளிவிடப்படுகிறது!

25. திருவண்ணாமலை:  முதல் ரவுண்டிலேயே 500 கொடுத்து குளிப்பாட்டிவிட்டனர். இரண்டாவது சுற்று ஆரம்பம்!

26. அந்தியூர் :  கூடுதல் வாக்குகள் வைத்திருக்கும் ரேஷன் கார்டுகளைத் தேர்ந்தெடுத்து, வீட்டுக்கு ஒரு கூப்பன் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த கூப்பனைக் கொடுத்து ஒரு டி.வி.எஸ். சூப்பர் எக்ஸ்.எல். வண்டி வாங்கிக்கொள்ளலாமாம். 'இதுக்குப் பிறகும் ஓட்டை மாத்தியா போடப் போறாங்க..?!’ என்பது  நினைப்பு!

27. மடத்துக்குளம்:   500 தொடங்கி 1,000 வரை கொடுப்பதுடன,  சில பல வீடுகளுக்கு மிக்ஸியும். 

28. கன்னியாகுமரி:  படு வேகத்தில் பணப்பட்டுவாடா முடிக்கப்பட்டது. தினமும் இரவு நேரத்தில் அரை மணி நேரம் மின்சாரத்தை நிறுத்தி, அந்தந்தப் பகுதி முக்கியஸ்தர்களிடம் பணத்தை ஒப்படைத்துவிட்டார்கள். மறுநாள் காலையில் செவ்வனே சேரவேண்டிய இடங்களுக்கு சென்று சேர்கிறது!

29. ஆத்தூர் : தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே தொகுதிக்குள் இருக்கும் நம்பிக்கையானவர்கள் வீடுகளில்  பணத்தைப் பதுக்கிவிட்டனர்.  வீடு வீடாக 500 முதல் 3,000 வரை கொடுத்து முடித்துவிட்டனர். கரை வேட்டி கட்டாத நபர் நிதானமாக வீடு வீடாகப் போய்ப் பட்டுவாடா செய்கிறார்!

30. தூத்துக்குடி:  பணத்தை வெளியில் எடுத்துச் செல்ல முடியவில்லை என்பதால், டோக்கன் முறையைக் கையாளுகிறார்கள். 

31.  திருச்செந்தூர்:  தொகுதியில் கட்சி நிர்வாகிகள் மூலம் சில்லரை சில்லரையாக ஆனால், சரியாக பணம் வாக்காளர்களை சென்றடைகிறது!

32. ஸ்ரீவைகுண்டம்:  'பணம் கொடுக்கிறாங்க’ என்று திடீர் திடீரென வதந்திகள் பரவி மக்கள் ஆளாய் பறக்கிறார்கள்.

33. ஓட்டப்பிடாரம்:  பணம் இறைப்பார்கள் என்று மக்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்க, ஆங்காங்கே கோயில் பிரசாதம்போல குறைந்த அளவாக மட்டும் பட்டுவாடா நடக்​கிறது!

34. அருப்புக்கோட்டை:  தேர்தல் அறிவிப்பதற்கு சில மாதம் முன்பே, பிள்ளையார் சுழி போடப்பட்டது. அடுத்த கட்டமாக, டோக்கன் மூலம் 500 விநியோகம் நடைபெற்றது. வீட்டுக்கு ஒரு கூப்பன் வழங்குகிறார்கள். அந்த கூப்பனுக்கு 3,000 மதிப்புள்ள அன்பளிப்பு வழங்கப்படும் என்று உத்தரவாதம் வழங்கப்படுகிறது!

35. திருச்சுழி:  ஓட்டுக்கு 500 என்று கட்சி வித்தியாசம் பார்க்காமல் தொகுதி முழுவதும் செலவழிக்கிறார்கள். யாரா இருந்தாலும்... காசு!

36. விருதுநகர்:  கூட்டணி பலத்தை நம்பாமல், ஓட்டுக்கு 200 முதல் 500 வரை கொடுத்து மக்களை அமுக்குகிறார்கள்!

37. பெரம்பலூர் : வாக்காளர்களின் செல்போனுக்கு டாப்- அப் பண்ணிக் கொடுப்பது, இலவசமாக சிலிண்டர் சப்ளை செய்வது என பெண்களைக் கவர்கிறார்கள்!

38. ஜெயங்கொண்டம்:   வார்டு பொறுப்பாளர்கள் மூலமாக இரவோடு இரவாக ஓட்டுக்கு 200 வீதம் அள்ளி வீசி அனைவரையும் கவர் செய்துவிட்டார்கள்! 

39. போடி:  சிட்டிங் எம்.எல்.ஏ லட்சுமணனின் அண்ணி பரிமளாவைப் பணம் கொடுத்ததாக போலீஸார் கைது செய்த பின்னரும் பட்டுவாடா நடக்கத்தான் செய்கிறது. அந்தப் பக்கம், ஓட்டுக்கு 1,000 என விநியோகம் நடக்கத் தொடங்க, அசந்து நிற்கிறார்கள் மக்கள்!   

40. ராதாகிருஷ்ணன் நகர்:  சுய உதவிக் குழுக்களுக்கு ஆளும் கட்சிப் பணம் விநியோகம் செய்வதாக செய்திகள் கிளம்ப... பறக்கும் படை காரை வளைத்துப் பிடித்தது. காரில் இருந்த 50,000 பணமும், எந்தெந்த சுய உதவிக் குழுக்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டது என்கிற விவரம் எழுதப்பட்ட காகிதக் கட்டும் கைப்பற்றப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து நடக்கிறது பண விநியோகம்!

41. கொளத்தூர்:  கடந்த ஒரு வாரமாகவே வார்டு வாரியாக இரவு 9 மணிக்கு மேல் கரன்ட் கட் ஆகிப் பண விநியோகம் வெள்ளமாகப் பாய்ந்தது. ''நம்ம ஏரியாவுக்கு எப்ப கரன்ட் கட் பண்ணுவீங்க?'' என்று கேட்கும் அளவுக்கு மக்களைத் தயார்ப்படுத்தி இருந்தனர். ஏரியாவில் பேப்பர் போடும் ஆட்களை எல்லாம் ஒரு இடத்தில் அழைத்து மீட்டிங் போட்டு இருக்கிறார்கள். பேப்பரில் பணம் விழவும் வாய்ப்பு இருக்கிறது!

42. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி: முஸ்லிம்கள் ஓட்டுகள் அதிகம் என்பதால், அவர்களைக் குறிவைத்து பணம் விநியோகம் நடக்க ஆரம்பித்தது. கவுன்சிலர் தலைமையிலான குழுதான் பணத்தை விநியோகம் செய்கிறது!

43. மயிலாப்பூர் :  எப்படியும் வெல்ல வேண்டும் என்று... பண விநியோகம் ஏரியாவில் பாய்கிறது. காங்கிரஸின் போட்டி வேட்பாளர் மட்டும் இதைக் கண்டு பிடித்துச் சொல்கிறார்!

44. விருகம்பாக்கம்.:  குடிசை வாழ் மக்களில் யாராவது 2,000 ரூபாய்க்குள் தாலி, தோடு, மூக்குத்தி, வளையல் என்று எதையாவது மார்வாடிக் கடையில் அடகு வைத்திருந்தால், வீடுகளுக்கு வந்து அந்த ரசீதை கேட்டு வாங்கிப் போகிறார்கள். மார்வாடிக் கடையில் பணத்தை செட்டில் செய்துவிட்டு, 'இன்னார் வருவார்... அவரிடம் நகையை கொடுத்துவிடவும்' என்று சொல்லிப்போகிறார்கள்!

45. திருவள்ளூர்:  கூரியர் கம்பெனி மூலம் தபால் வரும் பாணியில் பணம் பட்டுவாடா நடக்கிறது. சென்னையில் இருந்து மின்சார ரயிலில் பணம் திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு பார்சல் வருகிறது. அதை எடுத்துச் செல்லும் பைக் ஆசாமிகள், கூரியர் தபால் பைகளை அள்ளிக்கொண்டு பறக்கிறார்கள். 1,000 வீதம் வீடுகளுக்கு கவர் விநியோகம் நடக்கிறது!

46. அம்பத்தூர்:   நள்ளிரவில் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. கதவைத் திறந்தால், குறிப்பிட்ட மத ஸ்தலத்துக்கு பெண்களை அழைக்கிறார்கள். ஆண்கள் போகலாம். ஆனால், வாசலில் நிற்க வேண்டும். பெண்களிடம் கவர்கள் தரப்படுகின்றன. தலைக்கு 1,000 வீதம் வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்த மாதிரி பணம் கவரில் இருக்கிறது. பெண்கள் இல்லாத வீடுகளில், ஆண்களின் வங்கிக் கணக்குக்குப் பணம் மாறுகிறது! 

47. திருவொற்றியூர்': டோல்கேட் அருகே மீனவக் குப்பத்து மக்களிடம் பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் பணம் விநியோகம் செய்ய... தகவல் போய் தேர்தல் கமிஷனின் பறக்கும் படை வந்தது. உடனே அந்த இளைஞர் 21,000 மட்டும் தெருவோரம் வீசிவிட்டு, பைக்கில் தப்பினார். ஹவாலா ஸ்டைலிலும் பணம் கை மாறுகிறது. சிறு துண்டு பேப்பரில் அம்புக் குறி வரையப்பட்டு இருக்கும். அந்த பேப்பரை குறிப்பிட்ட வீட்டில் போய்க் கொடுத்தால், 1,000 தருகிறார்கள்!

48. கும்மிடிப்பூண்டி : வினோதமான முறையில் இங்கு பணப் பட்டுவாடா நடக்கிறது.   கார்கோ ஜீன்ஸில் இடுப்பில் இருந்து கால் வரை உள்ள பகுதிகளில் நிறைய பாக்கெட்டுகள் இருக்கும். அந்த பாக்கெட்டுகள் முழுவதும் கரன்ஸிகள். எங்கே பணம் தேவை என்று செல்போன் அடிக்கிறார்களோ, உடனே அந்த படை ஸ்பாட்டில் ஆஜராக... பணம் கைமாறுகிறது.

49. ஆலந்தூர்: இங்கே   500 நோட்டுகளை அமர்க்களமாக விநியோகம் செய்கிறார்கள். கையும் களவுமாக சிலர் பிடிபட்டு இருந்தாலும், பணப்பட்​டுவாடா தொடர்கிறது.

50. மதுரவாயல்:   ஒரு ஓட்டுக்கு 200, இரண்டு ஓட்டுக்கு 500 மூன்று ஓட்டுக்கு 1,000 நான்கு ஓட்டுகளுக்கு மேல் போனால் 2,000 என கொடுக்கிறார்கள். சினிமா தியேட்டர் போன்ற பொது இடங்களில் விநியோகம் அமோக​மாக நடக்கிறது.


டிஸ்கி - நேற்று நிறைய பேருக்கு ஒரு எஸ் எம் எஸ் வந்தது.. அதில் தினகரன் நாளிதழ் இன்று (13.4.2011) வாங்குவோருக்கு ரூ 1000 இலவசம் என... ஆனால் டுபாக்கூர்..