Showing posts with label கட்டிடம். Show all posts
Showing posts with label கட்டிடம். Show all posts

Wednesday, May 18, 2011

ஆட்சிக்கு வந்ததும் அம்மா சந்திக்கும் முதல் வழக்கு.. அதிமுக அதிர்ச்சி

http://mmimages.mmnews.in/Articles/2010/Nov/4115d304-e7a7-48b8-9e64-6ff0154e2a57_S_secvpf.gif 

தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தமிழக அரசுக்கு  நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. 

http://www.chikubuku.com/news_images/1268657988jayalaliitha%20AIADMK%20chief.jpg
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவில், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் இருந்து தலைமைச் செயலகத்தை மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

அதற்கான பணிகள் நடந்து வருவது பற்றிய புகைப்படங்களும் பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன.

அரசினர் தோட்டத்தில் ரூ.1000 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து தலைமைச் செயலகத்தை மீண்டும் கோட்டைக்கு மாற்றுவது சட்ட விரோதம்.

அதுமட்டுமல்ல. மீண்டும் கோட்டைக்கு மாற்றுவதால் மக்களின் வரிப்பணம் வீணாகும் நிலை ஏற்படும். கோட்டைக்கு மீண்டும் தலைமைச் செயலகத்தை மாற்றுவதற்கு புதிய அரசு சரியான காரணங்களை தெரிவிக்க வேண்டும்.


தனிப்பட்ட நபர்களின் விருப்பு, வெறுப்புகளுக்காக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. எனவே தலைமைச் செயலகத்தை அரசினர் தோட்டத்திலிருந்து கோட்டைக்கு மாற்றுவதற்கு தடை விதித்து, முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலர், பொதுப் பணித் துறைச் செயலர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.
 http://mmimages.mmnews.in/Articles/2011/Mar/1ac6b751-0864-4b9d-a1d8-b6bcab0fc787_S_secvpf.gif
இம்மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜேஷ்வரன், வாசுகி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச், அடுத்த மாதம் 15-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசின் தலைமை செயலாளர், பொதுப்பணித்துறைச் செயலாளர், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும், இந்த இட மாற்றத்துக்கு உத்தரவு பிறப்பித்தது யார்? ஆளுனரா? அல்லது வேறு யார் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

முன்னதாக, தலைமைச் செயலக இடமாற்ற பணிக்கு தடை விதிக்கும்படி வழக்கறிஞர்  கிருஷ்ணமூர்த்தி விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.


கலைஞர் இட்ட சட்டங்கள் , அவர் அமைத்த திட்டங்கள் எதுவும் உபயோகிக்கக்கூடாது என்பது ஜெவின் நினைப்பு. ஆனால் பொது மக்களின் வரிப்பணம் வீணாகும்போது அவர் தன் பிடிவாதத்தை தளர்த்தத்தான் வேண்டும்.

அதே போல் 108 ஆம்புலன்ஸ் திட்டம் கைவிடப்படும் என தெரிகிறது. வேண்டுமானால் பெயரை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டம் அது . தொடர வேண்டும் என்பதே நடு நிலையாளர்கள் அவா.. செய்வாரா? ஜெ?