Showing posts with label எக்ஸ்பிரஸ். Show all posts
Showing posts with label எக்ஸ்பிரஸ். Show all posts

Monday, November 19, 2012

காமெடி எக்ஸ்பிரஸ் - லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் - சிறுகதை

காமெடி எக்ஸ்பிரஸ்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

கீர்த்தனாரம்பத்திலே, ஒபாமாவும் ரோம்னியும் முட்டிக் கொண்டிருந்த காலகட்டத்திலே, இந்தக் கதை ஆரம்பிக்கிறது. தனக்குகன்னா பின்னாவென்று தேர்தல் நிதி வாரிக் கொடுக்கும் NRI இந்தியர்களைக் குஷிப்படுத்த அதிபர் ஒபாமா வருடாவருடம் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடுவது தெரிந்ததே.
நவம்பர் 6, 2012 எலெக்ஷன் ஜுரம் தொற்றிக் கொண்ட நிலையில் நவம்பர் 13ல் வரும் தீபாவளியை அக்டோபரிலேயே கொண்டாடிவிட அமெரிக்க அரசு உத்தரவு பறக்கிறது.
வெள்ளை மாளிகையில் எக்கச் சக்கமான இந்தியர்கள் கூட்டம்.
வடக்கத்தி சேட்டு ஒருவர் ஒபாமாவின் காதில் கிசுகிசுக்கிறார்: வழக்கமா அல்வா சாப்பிட்டுட்டு போட்டோ எடுத்துக்கிட்டு போயிடுவோம். அடுத்த தீபாவளிக்கு நீங்க இருப்பீங்களா போயிடுவீங்களான்னு தெரியல."
ஒபாமா சேட்டை ஒரு மாதிரியாக முறைக்க, சேட்டு தொடர்கிறார்.

மீன், அமெரிக்க ஜனாதிபதியா. அதனால இந்த வருஷம் நீங்க உங்க கையால ஒரு வெடியாவது கொளுத்தணும்னு எல்லாரும் ஆசைப்படறாங்க."
ஒபாமாவால் என்றைக்குத்தான் உடனடியாக முடிவெடுக்க முடிந்தது? புருவத்தைச் சுருக்கி யோசிக்கிறார். உடனடியாக உதவியாளர் ஒருவர் ஓடி வந்து, சார், எல்லாருமே ரூ. 10,000 ப்ளேட்வாலா ஆளுங்க. ஒரே ஒரு வெடி கொளுத்தினா ஒண்ணும் கொறைஞ்சிடாது. அதுக்கு வேணும்னா தனியா ஒரு ரேட்டு போட்டு கலெக்ஷன் பண்ணிடறேன்."
உடனே பிரகாசமான ஒபாமா ஒரு ஒத்தை வெடியை ரோஸ் கார்டனில் கொளுத்த ஆயத்தமாகிறார். எல்லோரும் போட்டோ பிடிக்க ரெடி. ஆனால் அந்த ஒத்தை வெடி வெடிக்காமல் நமுத்துப் போய் பிசுபிசுக்கிறது.
உதவியாளர் ஓடிவந்து அதைக் கையிலெடுத்துப் பார்த்து, சத்தமாக 'Made in China' என்கிறார்.
ஒபாமா உடனே தொண்டையைச் செருமியபடி,சீனர்கள் நம்மை ஏற்றுமதியில் ஏமாற்றுவது எனக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறேன். இனிமேல் ஒவ்வொரு நூடுல்ஸ் பாக்கெட்டிலும் எத்தனை நூடுல்ஸ் இருக்கிறது என்று அவர்கள் கண்டிப்பாகத் தெரிவித்தே ஆகவேண்டும். யாரங்கே? இது அரசாணை... உடனே தண்டோரா போடுங்கள்," என்று கர்ஜிக்கிறார்.
வழக்கம்போல் அவருடைய கட்சி ஜால்ரா கூட்டம் விசிலடிக்கிறது.
எந்த இந்தியனாவது இன்னொரு இந்தியனை முன்னால நிற்கவிடுவானா? ‘இதுதான் சமயம்என்று தமிழர் ஒருவர் சேட்டின் அடித்தொடையில்நறுக்கென்று கிள்ள, அவர் பயந்து விலக, அவருக்கு முன்னால் போய் நின்று, அது போனா போவட்டும், சார், இதை வெடிங்க. இது Made in Sivakasi, Tamil Nadu"
சிவகாசி கெடக்கட்டும்யா, தென்காசியில உங்க ஊரு அர்நால்ட் ஷ்வாசநெகர் இருக்காரே, அவரு சௌக்கியமா?"
மிஸ்டர் ப்ரசிடெண்ட், நெசமாவே உங்களுக்கு சரத்தைத் தெரியுமா?"
என்னது தெரியுமாவா? வேர்ல்ட் வைட் ஒரே நேரத்தில நெட்ல தமிழ்ப் படம் ரிலீஸ் பண்ணினஜக்கு பாய்அவருதானேயா?"
அடேடே, ஒபாமாவுக்கு அவ்வளவு தூரம் ஜெனரல் நாலட்ஜா?
போட்ரா போன சித்தப்புக்கு!
நெசமாவே போன்ல ஒபாமாதானுங்களா? நானு நாட்டாமை 2, கோச்சடையான் 3, ராணா 4 எல்லாத்திலயும் கும்பலோட கோவிந்தாவா நடிக்கிறேன்னு அவருகிட்ட சொல்லிட்டீங்களா?" - சமத்துவக்கட்சியின் சகலகோடி 11 உறுப்பினர்களும் ஒருங்கே தலையாட்ட, குஷியாகிறார் சரத்ஜி!
யூ ஸீ மிஸ்டர் ஒபாமா, மை சப்போர்ட் ஈஸ் ஆல்வேஸ் தேர் ஃபார் யூ. நானே 2011 தமிழ்நாட்டு சி.எம்.மா ஆகலாம்னு தான் இருந்தேன். சரி, அப்புறமா பார்த்துக்கலாம்னு இப்ப மறுபடியும் டெம்பரவரி பவ்யமாயிட்டேன். கேன் அரேஞ்ச் ஈவன் டன் க்ரோர் சப்போர்ட்டர்ஸ் ஃபார் யூ. ஆனாக்க இந்தக் குண்டுச்சட்டியில குதிரை ஓட்ற கூடங்குளம்வாலாஸ் எல்லாருமே யூஸ்லெஸ்னு நீங்க ஒரு பதில் ஸ்டேட்மென்ட் மட்டும் விட்ருங்க.
அப்படியே ஹாலிவுட்ல எதுனா ஒரு படத்துல பல்டி அடிக்கிற ஸ்டன்ட் சீனா இருந்தாலும் பரவாயில்ல, நீங்க சொல்லி அதை மட்டும் எனக்கு வாங்கிக் கொடுத்துட்டீங்கன்னா உலகநாயகனுக்கு மின்னாடியே நானும் உலக சினிமாவுல..."

கால் கனெக்ஷனே சரியில்லயே," என்று காதைக் குடைந்தபடியே ஒபாமா லைனை டிஸ்கனெக்ட் செய்கிறார்.
வெள்ளை மாளிகையில் ராம்னிக்கு இல்லாத அல்லக்கைகளா? ஒபாமா - சித்தப்பு சமத்துவ மீட்டிங் நியூஸ் உடனே பரவி, அவரும் மேட்சிங்காகப் போடுகிறார் கேப்டனுக்கு ஒரு கால்!
ஹா, திஸ் ஈஸ் ராம்னி!"
ஏற்கெனவே கூடாரம் காலியானதில் பேஸ்தடித்துக் கிடக்கும் கேப்டன் போன் அடித்ததிலேயே செம கடுப்பாகிறார்.
வேட்டியை மடித்துக்கட்டி நாக்கைத் துருத்தி, , ஆர்ராது ராமுநீ, யார்கிட்ட விளையாடறீங்க, யாரோ மெனுவில இல்லாத வெள்ளைக்கார பேரையெல்லாம் சொன்னா நாங்க மெரண்ட்ருவமா?"
காலைத் தூக்கிச் சுவரில் வைத்து எகிறத் தயாராகும் தலைமையை, சோர்ந்து கிடக்கும் கட்சிக்காரர் ஒருவர் கூல் செய்கிறார்.
இல்லீங்க, நெசமாவே ராம்னிங்கறது அமெரிக்க அப்போசிஷன் லீடர்ங்க. ஒபாமாவை எதிர்த்து நிக்கிறாரு. உங்ககிட்ட ஏதோ ஆலோசனை கேட்கணும்கிறாரு."
, அதையெல்லாம் மொதல்லயே சொல்ல மாட்டீங்களாடா! உங்களுக்கெல்லாம் வெட்டிச் சம்பளம் அவனாடா கொடுக்குறான்?"
யூ ஸீ மிஸ்டர் ராம்னி, டோண்ட் வொர்ரி அபௌட் அம்மா, மீன் ஒபாமா. ஒபாமாவ ஒழிக்கணும்னு நீங்க நெனச்சீங் கன்னா மொதல்ல அவரோட கூட்டு வைக்கணும். ஜெயிச்சி வந்த உடனே அவருகிட்டயே பயங்கரமாய் மோதணும். அப்புறமா கூட்டும் கிடையாது, பொரியலும் கிடையாது எல்லாமே அவியல்தான்னு ஒரு ஸ்டேட்மென்டும் விடணும். நாட்ல அவனவனும் ஒண்ணும் புரியாம தலைய பிச்சிப்பான், நாம ஃபுல்பூஸ்ட்ல யாரையாவதுபளார் பளார்னு டைமிங்கா நாலு நெத்து நெத்திட்டுப் போயிட்டே இருக்கலாம்.
ஹலோ, ஹலோ, இருங்க, இருங்க, காலை கட் பண்ணிறாதீங்க. மொதல்ல அமெரிக்காவுல எங்க இந்தத் திராணி கிடைக்குதுன்னு மட்டும் கேட்டு வாங்கி பத்து ஃபுல் பெட்டி அனுப்புங்க. இங்ஙன ஒரு பயபுள்ளைக்கும் இந்த பெசல் நாலெஜ்ஜு பத்தாது. அக்காங்!"
ராம்னி தடாலென்று கீழே விழுந்து மூர்ச்சையாகிறார்!

 நன்றி - கல்கி 

Wednesday, October 03, 2012

கமலுடன் எப்போ? மிஷ்கின் பேட்டி @ சினிமா எக்ஸ்பிரஸ்

http://icdn.indiaglitz.com/tamil/news/miskint020506_1.jpg

இங்கே எதையும் துணிச்சல் என வெளிப்படையாக பேசி விட முடியாது. அதற்குள் ஆயிரம் பேசி விடுவார்கள். அன்றாடம் நடக்கும் எல்லா விஷயங்களையும் நம்முடைய சொந்த வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்ப்பதே இல்லை. ஆனால், சினிமா என வந்து விட்டால், இது அவன் வாழ்க்கையில் நடந்திருக்குமோ, இவன் வாழ்க்கையில் நடந்திருக்குமோ என சிறகு கட்டி விடுவார்கள். அதிலிருந்து தப்பிப்பதே பெரிய சவால். இந்தப் படமும் நிச்சயம் சவால்தான். சின்ன வயதில் நாம எல்லோரும் படித்த காமிக்ஸ் கதைதான் இது. ஒரு சூப்பர் ஹீரோ. அநியாயங்களை தட்டிக் கேட்பார். சில பிரச்னைகள், அதிலிருந்து மீள்வார். இது சாதராண கதைதான். அது எடுத்து வைத்திருக்கிற விஷயம் ரொம்பவே பிடித்தமானதாக இருக்கும். என் ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறேன். "அஞ்சாதே' எல்லோரையும் கவனிக்க வைத்தது. "நந்தலாலா' நான் படைப்பாளியாக இருப்பதற்கு பெருமைப்பட வைத்தது. "யுத்தம் செய்' படத்தில் பெற்றோர்களின் கவலையை, கண்ணீரை எடுத்து வைத்தேன். இப்போதும் என் படங்களை பயந்து பயந்துதான் செய்துக் கொண்டிருக்கிறேன். என்னை யாரும் கேள்வி கேட்டு விடக் கூடாது என்பதற்காக. என் எல்லாப் படங்களிலும் ஏதோ புதிய விஷயங்களை முன்னெடுத்து வந்திருக்கிறேன். விமர்சனங்களையும் சந்தித்து இருக்கிறேன். "முகமூடி' நிச்சயம் வேறு மாதிரியான படம்தான்





.ஜீவா முன்பு மாதிரி இல்லை. எதிர்பார்க்காத இடத்துக்கு வந்து விட்டார். அவருக்கான இடத்தை உணர்ந்து இருக்கிறீர்களா?




ஜீவா இப்போது ரொம்பவே ஷார்ப். முதன் முதலில் நான் சந்தித்த ஜீவா இப்போது இல்லை. நாளுக்கு நாள் பக்குவப்பட்டுக் கொண்டே இருக்கிறார். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி, அவருடயை சினிமா அக்கறை என்னை ஆச்சரியப்படுத்தும். ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு அவதாரம் எடுக்க ஆரம்பித்து விட்டார். இந்தப் படத்திலும் ஒரு அவதாரம் எடுத்திருக்கிறார். அவருக்கு இது நம்பிக்கையான படம். ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார். சிம்பிளான கதையானாலும், தொழில்நுட்ப ரீதியில் படமாக்கும் போது பெரிய சவால் இருந்தது. படத்துக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ரொம்பவே வெயிட்டான சூப்பர் மேன் உடை அணிந்து நடித்தார். ஷாட் இல்லாத போதும் அதை அணிந்திருக்க வேண்டிய அவசியம். ஏ.சி. அறைக்குள் அமர்ந்திருந்தாலும் வியர்க்கும். ரொம்பவே கஷ்டம். ஜீவா இடத்தில் வேறு எந்த நடிகர் இருந்தாலும் இந்த அளவுக்கு ஒத்துழைப்பு இருந்திருக்குமா என்று சொல்ல தெரியவில்லை. ஜீவாவுக்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடம் காத்திருக்கிறது. ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் ஹிந்திக்கும் போக போகிறார் என சொன்னார்கள். அவருக்கு இன்னும் தகுதிகள் கிடைக்கும்.





என்ன, நரேனை வில்லனாக்கி விட்டீர்களே?




நரேன் என் பெருமை மிகு தயாரிப்பு என சொல்லலாம். நான் கேட்டால் அவன் எந்த வேடத்திலும் நடிப்பேன் என்பான். அந்தளவுக்கு குரு பக்தி மிகுந்தவன். ""நீங்கதான் சார் என்ன தூக்கி விடணும். வேறு யாரு எனக்கு இருக்கா''ன்னு கேட்கும் போதே, என் பழைய வாழ்நாள் ஞாபகத்துக்கு வந்து விடும். என்னை மாதிரியே நிறைய உழைப்பான். சினிமா பற்றி நிறைய தெரிந்தவன். நரேன்தான் இதற்கு சரியாக வருவான் என்று தோன்றியது. கேட்டதும், ""எப்போ சார் ஷூட்டிங் வரணும்''ன்னு கேட்டான். ஹீரோ, வில்லன் என்ற பாகுபாடுகள் எல்லாம் அவனுக்கு தெரியாது. அவனிடம் கேட்டுப் பாருங்கள். ""நான் சினிமா நடிகன்'' என ரொம்பவே சிம்பிளாக பதில் சொல்லுவான். ரொம்பவே நம்பகமானவன். இது போக உங்கள் எல்லோருக்கும் தெரிந்த செல்வாவுக்கு முக்கிய கேரக்டர் கொடுத்திருக்கிறேன். அப்புறம் ஹீரோயின்ஸ்... பூஜா ஹெக்டே, மும்பை பொண்ணு. நல்லா நடித்திருக்கிறார்.





"மிஷ்கின் இயக்கத்தில் கமல்' என்று செய்தி வந்த காலமெல்லாம் உண்டு. ஆனால் அதன் பின் எந்தவொரு பெரிய ஹீரோவுக்கும் கதை சொல்லுவதே இல்லையா? அஜித், விக்ரம், விஜய், சூர்யா யாரும் உங்கள் கண்களில் படவே இல்லையா?





அதை கதைதான் தீர்மானிக்க வேண்டும். நான் யாரையும வலுக் கட்டாயமாக எந்த கதைக்குள்ளும் கொண்டு போய் திணிக்க முடியாது. அப்படி செய்தால் அது நல்லா இருக்காது. நீங்கள் சொல்லுகிற எல்லோருமே அருமையான நடிகர்கள். எல்லோரையும் நான் மதிக்கிறேன். அஜித் அருமையான மனிதர் என கேள்விப்பட்டிருக்கிறேன். விஜய் எந்த கதைக்கும் சரியாக பொருந்துவார். விக்ரம் பெரிய பெரிய இடங்களுக்கு போய்க் கொண்டே இருக்கிறார். சூர்யாவை ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். இவர்களுக்கெல்லாம் கதை தயார் செய்யும் எண்ணத்துக்கே நான் இன்னும் போகவில்லை. யாருக்காவது ஒருவருக்கு படம் இயக்கினாலும் என் பாணி மாற வேண்டும். அந்த பக்குவம் எனக்கு இப்போதைக்கு வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. அவர்களுக்கு தகுந்த கதைகள் அமைந்து, அதில் அவர்கள்தான் நடிக்க வேண்டும் என தேவை ஏற்பட்டால் நிச்சயம் நடக்கும். அதை அப்போதைய சூழல்தான் தீர்மானிக்க வேண்டும். இப்போதைக்கு எனக்கு இந்த இடம் போதும்.




"நந்தலாலா' உங்களை நல்ல நடிகராகவும் பளிச்சிட வைத்தது. தொடர்ந்து நடிக்கலாமே?



நண்பர்கள் பலரும் இதை கேட்கிறார்கள். எனக்கான கதைகள் அமையும் போது நிச்சயம் நடிப்பேன். மற்றபடி வேறு ஒருவரின் இயக்கத்தில் நடிப்பது சரியாக வருமா என்று தெரியவில்லை. யோசிக்கலாம்.இந்தப் படத்திலும் கே-தான் மியூசிக். அவரின் இசையில் அப்படியென்ன ஸ்பெஷல்?ரொம்பவே இசை தெரிந்தவன் கே. "யுத்தம் செய்' படத்தின் போது, ரொம்ப சின்ன பையன். ஆனால் அவன் பேசுகிற விஷயங்கள் ரொம்பவே ஆச்சரியம் அளிக்கும். ""உனக்கான உயரம் ரொம்பவே பெரிதாக இருக்கும்''ன்னு அவனை அழைத்துக் கொண்டு வந்து, "யுத்தம் செய்' படத்தில் மியூசிக் செய்ய வைத்தேன். எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி விட்டான். நிறைய இசை ஞானம் உள்ளவன். இப்போது கூட "ஆரோகணம்' படத்தில் ஒரு பாட்டு... அவ்வளவு சூப்பர். நல்லா வருவான்




.தமிழ் சினிமாவின் டிரெண்ட்டை கவனிக்கிறீர்களா? "ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துக்கு அவ்வளவு கூட்டம் இருந்தது. "வழக்கு எண்' பரவலான பாரட்டுகளைப் பெற்றது. மக்களின் ரசனையை புரிந்துக் கொள்ள முடிகிறதா?



மக்கள் சரியாகவே இருக்கிறார்கள். சில நேரங்களில் படைப்பாளிகள்தான் அவர்களை ஏமாற்றி விடுகிறார்கள். ""ஒன்றுமே தெரியாமல் சென்னைக்கு வந்தேன். சினிமாவில் சேர்ந்தேன். இன்றைக்கு பெரிய இயக்குநராகி விட்டேன்'' என இனி யாரும் பேட்டி கொடுக்க முடியாது. ஏனென்றால் முதல் படத்திலேயே ரசிகர்கள் "செக்' வைக்கிறார்கள். அசிஸ்டெண்ட்டா சேர வேண்டும் என்கிற ஆசையில் ஒரு இளைஞன் என்னிடம் வந்தான். ""யாரையெல்லாம் படிச்சிருக்க''ன்னு கேட்டா, ""படித்தவர்களெல்லாம் சினிமாவில் சாதிக்க முடியாது''ன்னு ரொம்பவே சிம்பிளா பதில் சொன்னான். அவனை திட்டி அனுப்பி விட்டேன். முதலில் சினிமாவுக்கு வர வேண்டும் என முடிவெடுத்து விட்டால், நிறைய படியுங்கள். காலி டப்பாவாக வந்து இங்கு எதையும் கற்றுக் கொள்ள முடியாது.

Monday, October 01, 2012

கும்கி லட்சுமி மேனன் பேட்டி @ சினிமா எக்ஸ்பிரஸ்

http://lh3.ggpht.com/-VZ01vKPh9_E/TtEDAthz6sI/AAAAAAAA5Ks/7HXrxjKtx10/Lakshmi%252520Menon_new%252520still_thumb.jpg
  "சுந்தரபாண்டியன்', "கும்கி' என அடுத்தடுத்த படங்களின் மூலம் தமிழ்த்திரை வானத்தில் உலா வரக் காத்திருக்கும் இளங்கிளி.""இப்போதுதான் எனக்கு 15 வயதாகிறது. அதற்குள்ளாகவே தமிழ் சினிமாவில் பெரிய இடம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. தொடக்கமே "கும்கி', "சுந்தர பாண்டியன்' என பெரிய படங்கள். ஒரு விதத்தில் நினைத்தால் பயமாகவும் இருக்கிறது. தமிழ்நாடு பிடிக்கும். தமிழும் பிடிக்கும். பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்'' படபடக்க பேசுகிறார் லட்சுமி மேனன்.



தமிழ் சினிமாவுக்கு வந்தாகி விட்டது சரி, இதற்கு முன்....?




கேரளத்திலுள்ள திருவனந்தபுரம்தான் சொந்த ஊர். என் அப்பா ராமகிருஷ்ணன். வேலை நிமித்தமாக துபாயில் இருக்கிறார். அம்மா உஷா, டான்ஸ் பள்ளி நடத்தி வருகிறார். முன்பு அம்மா சென்னையில்தான் இருந்தார். இருந்தாலும் சின்ன வயதிலேயே குடும்பத்துடன் கேரளத்துக்கு வந்து விட்டார்கள். சென்னை கலாசேத்ராவில் டான்ஸ் கற்றுக் கொண்டார். இரண்டு பாட்டிகளும் டான்ஸ் டீச்சர்ஸ். இவர்களுக்கெல்லாம் ஒரே செல்லம் நான்தான்.எனக்கும் டான்ஸ் மீது அலாதி ஈடுபாடு. பரதம், கதகளி இரண்டுமே தெரியும். இப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். பள்ளியில் நடந்த டான்ஸ் போட்டியை பார்க்க வந்த மலையாள இயக்குநர் விநயன் சார் "ரகுவின்டே சொந்தம் ரசியா' படத்தில் ஒரு சின்ன வேடம் தந்தார். இதுதான் நான் சினிமாவுக்கு வந்த கதை. அந்தப் படத்தை பார்த்த பிரபு சாலமன் சார் என்னை "கும்கி' மூலம் இங்கே கொண்டு வந்து விட்டார். இப்போது "சுந்தரபாண்டியன்' படத்தையும் முடித்து விட்டேன். அடுத்த படத்துக்கு காத்திருக்கிறேன்.




"கும்கி'யில் மலை வாழ் பெண்ணாக நடித்த அனுபவம் எப்படி?




இவ்வளவு கஷ்டமாக இருக்கும் என எதிர்பாக்கவில்லை. மலைவாசி பெண். பேச்சு முதல் நடை, உடை, பாவனை என எல்லாவற்றையும் மாற்றி நடிக்க வேண்டும். தலைமுடியில் இருந்து நகம் வரைக்கும் எல்லாமே மாற வேண்டிய ரோல். செருப்புக் கூட போடாமல் கொதிக்கிற பாதை மேல் நிற்க வேண்டும். பாதை இல்லாத வனப்பகுதிகளில் பயம் இல்லாமல் கால் வைக்க வேண்டும். முக்கியமான காட்சிகளில் முகத்தில் உணர்ச்சி காட்டி நடிக்க வேண்டும். சினிமா என்றால் ஜாலியாக இருக்கலாம் என்றுதான் நினைத்தேன். இப்படியும் ஒரு சினிமா இருக்கிறதென பிரபு சாலமன் சார் காட்டினார். இந்த வயதில் இது மாதிரியான ஒரு சினிமா கிடைத்ததில் மகிழ்ச்சி. இது அதிர்ஷ்டம். இனி சினிமாவில் நடிக்க முடியாது என்ற நிலை வந்தால் கூட எனக்கு வருத்தம் இல்லை. "கும்கி' அவ்வளவு நன்றாக வந்திருக்கிறது. எனக்காக டப்பிங் பேசும் போது கொஞ்சம் படம் பார்த்தேன். சான்úஸ இல்லை. படம் வந்த பிறகு அல்லி.. அல்லி.. என என்னை கொண்டாடுவீங்க.



நீங்கள் சொல்லுவதை பார்த்தால் ஹீரோ விக்ரம் பிரபுவை விட உங்களுக்குத்தான் கதையில் ஸ்கோப் அதிகம் இருக்கும் போல?




அட எல்லோரும் கஷ்டப்பட்டுத்தான் வந்திருக்கிறோம். அதுவும் ஹீரோ விக்ரம் பிரபு. சான்úஸ இல்லை. அவருக்கும் இது முதல் படம். சிவாஜி சார் பேரன், பிரபு சார் மகன் என எந்த பந்தாவும் இல்லை. பாறைகள் மீது சறுக்கணும். சட்டை போடாமல் வனப்பகுதியில் திரியணும். யானை மீது சவாரி செய்யணும். தந்தம் பிடித்து முத்தம் கொடுக்கணும். கூடவே இருந்து பார்த்தால் உங்களுக்கெல்லாம் பயம் வந்திருக்கும். நான் தைரியமாக இருந்தேன். சில நேரங்களில் எனக்கே பதறும். ஆனால் விக்ரம் பிரபு முகத்தில் துளியும் பயம் இருக்காது. பதற்றம் இல்லாமல் படத்தில் மிரட்டி எடுப்பார். அதோடு அவரிடம் வேலை வாங்குகிற பிரபுசாலமன் சார். நிஜமாகவே அவர் சூப்பர் டைரக்டதான்


http://filmreviews.bizhat.com/wp-content/gallery/kumki/kumki_movie_stills-1.jpg
.முதல் படத்திலேயே இவ்வளவு கண்ணியமாக நடித்தால், தமிழ் சினிமா உங்களை ஏற்றுக் கொள்ளுமா?



 ஏற்றுக் கொண்டார்களே. "கும்கி' படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. போஸ்டர் பார்த்து விட்டு ""எங்கள் படத்தில் நடிக்கிறீங்களா?''ன்னு கேட்டது இயக்குநர் சசிகுமார் சார்தான். "சுந்தர பாண்டியன்' என பேர் வைத்து, கதை சொல்லி, ஷூட்டிங் போய் இதோ படம் ரிலீஸ் ஆகி விட்டது. படம் பார்த்தவர்களிடம் கேளுங்கள். ""இந்த பொண்ணு எப்படி?''ன்னு. அந்தளவுக்கு பெர்மான்ஸ் காட்டியிருக்கிறேன். நானே எதிர்பார்க்காத கேரக்டர். நிஜத்தில் நான் ரொம்பவே சாப்ட். பத்து வார்த்தைகளில் கேள்வி கேட்டால், ஒரு வார்த்தையில்தான் பதில் சொல்லுவேன். எனக்கு போய் கலகலவென்று சீனுக்கு சீன் வசனம் வைத்து என்னை மாற்றி விட்டார்கள். ""பத்து நிமிஷத்து பத்து எக்ஸ்பிரஷன் கொடுக்கிறேயே''ன்னு சொல்லி ஆச்சரியப்பட்டார் சசிகுமார். தமிழ்நாட்டில் எனக்கு பிடித்த இடம் தேனி. அங்கேதான் ஷூட்டிங். சொல்லவே வேண்டாம். படம் நல்லாவே வந்திருக்கிறது. பாருங்கள். அப்படியே என்னையும் ஆதரியுங்கள்.



எல்லோருக்கும் ரோல் மாடல் இருப்பார்கள். சினிமாவை பொறுத்தவரையில் யார் உங்கள் ரோல் மாடல்? எது உங்களுக்கு கனவு படம்?




எனக்கு தமிழ் படங்கள் என்றால் ரொம்பவே பிடிக்கும். அம்மாவுக்கு தமிழ் படங்கள் பிடிக்கும் என்பதால் நானும் அப்படியே ஆகி விட்டேன். "மௌன ராகம்', "பூவே பூச்சூடவா', "சிந்து பைரவி' இந்த படங்களுக்கெல்லாம் அம்மா அடிமை. ஆனால் அதற்கு நான் எதிர்மறை. "சேது', "பிதாமகன்', "வாரணம் ஆயிரம்', "மைனா' இது மாதிரியான படங்களை பார்த்து ரசித்தவள் நான். அதே மாதிரியான படங்கள் வந்தால் நிச்சயம் இழக்க மாட்டேன். அதே சமயத்தில் நல்ல ரோல் என்றால் கிளாமருக்கும் பிரச்னை இல்லை. ரேவதி மேடம்தான் ரோல் மாடல்.




அப்படியென்றால் தமிழ் சினிமாவில் மட்டும்தான் நடிப்பீர்களா?




இல்லை. எனக்கு தமிழ் சினிமா பிடிக்கும். இரண்டு படங்களை முடித்து விட்டேன். ""படிப்புதான் முக்கியம்'' என அம்மா சொல்லி விட்டார். அதனால் இப்போதைக்கு படிப்பு. "சுந்தர பாண்டியன்' பார்த்தவர்கள் என்னை பாராட்டுகிறார்கள். அடுத்து "கும்கி'யும் இரண்டு படங்களும் வெளிவந்து எனக்கு என்ன ரெஸ்பான்ஸ் கிடைக்கிறதென பார்க்க வேண்டும். அதன் பிறகுதான் எந்த முடிவாக இருந்தாலும். விநயன் சார் கொடுத்த ஒரு சின்ன வாய்ப்பு மூலமாக மலையாளத்தில் நல்ல பேர் வாங்கி விட்டேன். தமிழும் நிச்சயம் கை கொடுக்கும்.



 நீங்கள் எப்படிப்பட்ட பொண்ணுன்னு தெரிந்தால், நல்லாயிருக்குமே?



நான்தான் சொன்னனே. ரொம்பவே சாப்ட் டைப். ஆனால் இப்போது கொஞ்சம் மாறியிருக்கிறேன். "கும்கி'யும், "சுந்தர பாண்டிய'னும் என்னை மாற்றியிருக்கின்றன. ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்த சிலர் ""உன்னை மாதிரி துறு துறு பொண்ணை பார்த்ததே இல்லை''ன்னு சொன்னாங்க. அதை நினைக்கும் போதெல்லாம் சிரிப்புதான் வரும். எனக்கு இது பிடித்திருக்கிறது. நல்ல பெயர் வாங்கணும். நல்ல பொண்ணுன்னு எல்லோரும் பேசிக்கணும். மீடியா ஆள்களோடு எப்போதுமே தொடர்பில் இருக்க வேண்டும் என அப்பா சொன்னார். அதை நான் சரியாக செய்து வருகிறேன் என்று நினைக்கிறேன். நல்லா படிக்கணும். நல்ல படங்களாக நடிக்கணும். அது போதும்.
http://lh5.ggpht.com/-TluYB5i2InI/TtECwvphpGI/AAAAAAAA5J8/FKbcxp872Q4/lakshmi%252520menon_thumb.jpg