Showing posts with label MISHKIN. Show all posts
Showing posts with label MISHKIN. Show all posts

Wednesday, October 03, 2012

கமலுடன் எப்போ? மிஷ்கின் பேட்டி @ சினிமா எக்ஸ்பிரஸ்

http://icdn.indiaglitz.com/tamil/news/miskint020506_1.jpg

இங்கே எதையும் துணிச்சல் என வெளிப்படையாக பேசி விட முடியாது. அதற்குள் ஆயிரம் பேசி விடுவார்கள். அன்றாடம் நடக்கும் எல்லா விஷயங்களையும் நம்முடைய சொந்த வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்ப்பதே இல்லை. ஆனால், சினிமா என வந்து விட்டால், இது அவன் வாழ்க்கையில் நடந்திருக்குமோ, இவன் வாழ்க்கையில் நடந்திருக்குமோ என சிறகு கட்டி விடுவார்கள். அதிலிருந்து தப்பிப்பதே பெரிய சவால். இந்தப் படமும் நிச்சயம் சவால்தான். சின்ன வயதில் நாம எல்லோரும் படித்த காமிக்ஸ் கதைதான் இது. ஒரு சூப்பர் ஹீரோ. அநியாயங்களை தட்டிக் கேட்பார். சில பிரச்னைகள், அதிலிருந்து மீள்வார். இது சாதராண கதைதான். அது எடுத்து வைத்திருக்கிற விஷயம் ரொம்பவே பிடித்தமானதாக இருக்கும். என் ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறேன். "அஞ்சாதே' எல்லோரையும் கவனிக்க வைத்தது. "நந்தலாலா' நான் படைப்பாளியாக இருப்பதற்கு பெருமைப்பட வைத்தது. "யுத்தம் செய்' படத்தில் பெற்றோர்களின் கவலையை, கண்ணீரை எடுத்து வைத்தேன். இப்போதும் என் படங்களை பயந்து பயந்துதான் செய்துக் கொண்டிருக்கிறேன். என்னை யாரும் கேள்வி கேட்டு விடக் கூடாது என்பதற்காக. என் எல்லாப் படங்களிலும் ஏதோ புதிய விஷயங்களை முன்னெடுத்து வந்திருக்கிறேன். விமர்சனங்களையும் சந்தித்து இருக்கிறேன். "முகமூடி' நிச்சயம் வேறு மாதிரியான படம்தான்





.ஜீவா முன்பு மாதிரி இல்லை. எதிர்பார்க்காத இடத்துக்கு வந்து விட்டார். அவருக்கான இடத்தை உணர்ந்து இருக்கிறீர்களா?




ஜீவா இப்போது ரொம்பவே ஷார்ப். முதன் முதலில் நான் சந்தித்த ஜீவா இப்போது இல்லை. நாளுக்கு நாள் பக்குவப்பட்டுக் கொண்டே இருக்கிறார். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி, அவருடயை சினிமா அக்கறை என்னை ஆச்சரியப்படுத்தும். ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு அவதாரம் எடுக்க ஆரம்பித்து விட்டார். இந்தப் படத்திலும் ஒரு அவதாரம் எடுத்திருக்கிறார். அவருக்கு இது நம்பிக்கையான படம். ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார். சிம்பிளான கதையானாலும், தொழில்நுட்ப ரீதியில் படமாக்கும் போது பெரிய சவால் இருந்தது. படத்துக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ரொம்பவே வெயிட்டான சூப்பர் மேன் உடை அணிந்து நடித்தார். ஷாட் இல்லாத போதும் அதை அணிந்திருக்க வேண்டிய அவசியம். ஏ.சி. அறைக்குள் அமர்ந்திருந்தாலும் வியர்க்கும். ரொம்பவே கஷ்டம். ஜீவா இடத்தில் வேறு எந்த நடிகர் இருந்தாலும் இந்த அளவுக்கு ஒத்துழைப்பு இருந்திருக்குமா என்று சொல்ல தெரியவில்லை. ஜீவாவுக்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடம் காத்திருக்கிறது. ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் ஹிந்திக்கும் போக போகிறார் என சொன்னார்கள். அவருக்கு இன்னும் தகுதிகள் கிடைக்கும்.





என்ன, நரேனை வில்லனாக்கி விட்டீர்களே?




நரேன் என் பெருமை மிகு தயாரிப்பு என சொல்லலாம். நான் கேட்டால் அவன் எந்த வேடத்திலும் நடிப்பேன் என்பான். அந்தளவுக்கு குரு பக்தி மிகுந்தவன். ""நீங்கதான் சார் என்ன தூக்கி விடணும். வேறு யாரு எனக்கு இருக்கா''ன்னு கேட்கும் போதே, என் பழைய வாழ்நாள் ஞாபகத்துக்கு வந்து விடும். என்னை மாதிரியே நிறைய உழைப்பான். சினிமா பற்றி நிறைய தெரிந்தவன். நரேன்தான் இதற்கு சரியாக வருவான் என்று தோன்றியது. கேட்டதும், ""எப்போ சார் ஷூட்டிங் வரணும்''ன்னு கேட்டான். ஹீரோ, வில்லன் என்ற பாகுபாடுகள் எல்லாம் அவனுக்கு தெரியாது. அவனிடம் கேட்டுப் பாருங்கள். ""நான் சினிமா நடிகன்'' என ரொம்பவே சிம்பிளாக பதில் சொல்லுவான். ரொம்பவே நம்பகமானவன். இது போக உங்கள் எல்லோருக்கும் தெரிந்த செல்வாவுக்கு முக்கிய கேரக்டர் கொடுத்திருக்கிறேன். அப்புறம் ஹீரோயின்ஸ்... பூஜா ஹெக்டே, மும்பை பொண்ணு. நல்லா நடித்திருக்கிறார்.





"மிஷ்கின் இயக்கத்தில் கமல்' என்று செய்தி வந்த காலமெல்லாம் உண்டு. ஆனால் அதன் பின் எந்தவொரு பெரிய ஹீரோவுக்கும் கதை சொல்லுவதே இல்லையா? அஜித், விக்ரம், விஜய், சூர்யா யாரும் உங்கள் கண்களில் படவே இல்லையா?





அதை கதைதான் தீர்மானிக்க வேண்டும். நான் யாரையும வலுக் கட்டாயமாக எந்த கதைக்குள்ளும் கொண்டு போய் திணிக்க முடியாது. அப்படி செய்தால் அது நல்லா இருக்காது. நீங்கள் சொல்லுகிற எல்லோருமே அருமையான நடிகர்கள். எல்லோரையும் நான் மதிக்கிறேன். அஜித் அருமையான மனிதர் என கேள்விப்பட்டிருக்கிறேன். விஜய் எந்த கதைக்கும் சரியாக பொருந்துவார். விக்ரம் பெரிய பெரிய இடங்களுக்கு போய்க் கொண்டே இருக்கிறார். சூர்யாவை ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். இவர்களுக்கெல்லாம் கதை தயார் செய்யும் எண்ணத்துக்கே நான் இன்னும் போகவில்லை. யாருக்காவது ஒருவருக்கு படம் இயக்கினாலும் என் பாணி மாற வேண்டும். அந்த பக்குவம் எனக்கு இப்போதைக்கு வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. அவர்களுக்கு தகுந்த கதைகள் அமைந்து, அதில் அவர்கள்தான் நடிக்க வேண்டும் என தேவை ஏற்பட்டால் நிச்சயம் நடக்கும். அதை அப்போதைய சூழல்தான் தீர்மானிக்க வேண்டும். இப்போதைக்கு எனக்கு இந்த இடம் போதும்.




"நந்தலாலா' உங்களை நல்ல நடிகராகவும் பளிச்சிட வைத்தது. தொடர்ந்து நடிக்கலாமே?



நண்பர்கள் பலரும் இதை கேட்கிறார்கள். எனக்கான கதைகள் அமையும் போது நிச்சயம் நடிப்பேன். மற்றபடி வேறு ஒருவரின் இயக்கத்தில் நடிப்பது சரியாக வருமா என்று தெரியவில்லை. யோசிக்கலாம்.இந்தப் படத்திலும் கே-தான் மியூசிக். அவரின் இசையில் அப்படியென்ன ஸ்பெஷல்?ரொம்பவே இசை தெரிந்தவன் கே. "யுத்தம் செய்' படத்தின் போது, ரொம்ப சின்ன பையன். ஆனால் அவன் பேசுகிற விஷயங்கள் ரொம்பவே ஆச்சரியம் அளிக்கும். ""உனக்கான உயரம் ரொம்பவே பெரிதாக இருக்கும்''ன்னு அவனை அழைத்துக் கொண்டு வந்து, "யுத்தம் செய்' படத்தில் மியூசிக் செய்ய வைத்தேன். எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி விட்டான். நிறைய இசை ஞானம் உள்ளவன். இப்போது கூட "ஆரோகணம்' படத்தில் ஒரு பாட்டு... அவ்வளவு சூப்பர். நல்லா வருவான்




.தமிழ் சினிமாவின் டிரெண்ட்டை கவனிக்கிறீர்களா? "ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துக்கு அவ்வளவு கூட்டம் இருந்தது. "வழக்கு எண்' பரவலான பாரட்டுகளைப் பெற்றது. மக்களின் ரசனையை புரிந்துக் கொள்ள முடிகிறதா?



மக்கள் சரியாகவே இருக்கிறார்கள். சில நேரங்களில் படைப்பாளிகள்தான் அவர்களை ஏமாற்றி விடுகிறார்கள். ""ஒன்றுமே தெரியாமல் சென்னைக்கு வந்தேன். சினிமாவில் சேர்ந்தேன். இன்றைக்கு பெரிய இயக்குநராகி விட்டேன்'' என இனி யாரும் பேட்டி கொடுக்க முடியாது. ஏனென்றால் முதல் படத்திலேயே ரசிகர்கள் "செக்' வைக்கிறார்கள். அசிஸ்டெண்ட்டா சேர வேண்டும் என்கிற ஆசையில் ஒரு இளைஞன் என்னிடம் வந்தான். ""யாரையெல்லாம் படிச்சிருக்க''ன்னு கேட்டா, ""படித்தவர்களெல்லாம் சினிமாவில் சாதிக்க முடியாது''ன்னு ரொம்பவே சிம்பிளா பதில் சொன்னான். அவனை திட்டி அனுப்பி விட்டேன். முதலில் சினிமாவுக்கு வர வேண்டும் என முடிவெடுத்து விட்டால், நிறைய படியுங்கள். காலி டப்பாவாக வந்து இங்கு எதையும் கற்றுக் கொள்ள முடியாது.

Thursday, April 19, 2012

முகமூடி - நான் கதை திருடி? - மிஸ்கின் பேட்டி - கெடாவெட்டு

http://www.getcinemas.com/images-news/jiivas-mugamoodi-is-launched-today.jpg


'''முகமூடி’ - என் சின்ன வயசுக் கனவு. 'அம்புலி மாமா’, 'பாலமித்ரா’, 'முத்து காமிக்ஸ்படிச்சு வளர்ந்தவன் நான். இரும்புக் கை மாயாவி  இப்பவும் என் கனவில் வர்றான். 'முகமூடிஸ்க்ரிப்ட் முடிச்சதும் நான் நினைச்சது வந்ததை உணர்ந்தேன்.ஆனந்த விகடன் பேட்டி இது

சி.பி - படம் பார்த்துட்டு என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்குன்னு யாரும் சொல்லாம இருந்தா சரி.. 



 இப்போதைய தமிழ் சினிமா சூழலில் சூப்பர் ஹீரோ படம் எடுப்பது கஷ்டம். கண்ணு முன்னாடி ஒரு கொடுமை நடந்துட்டு இருக்கு. அதை எதிர்கொள்ள நினைக்கிறவன் என்ன மாதிரி நடந்துக்குவான்னு யோசிச்சுப்பார்த்தேன்... ஒரு ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், இரும்புக் கை மாயாவி மாதிரி ஏதாச்சும் சாகசம் பண்ணாத்தான் உண்டு. அதுதான் இந்தப் படத்துக்கான விதை. நான் செய்ததிலேயே எனக்கு ரொம்ப சந்தோஷத் தைக் கொடுக்கிற படம் 'முகமூடிதான்!'' - குளிர் கண்ணாடி விலக்காமல் பேசுகிறார் இயக்குநர் மிஷ்கின்.

சி.பி - நான் எடுத்ததிலேயே அதிகமா கையை கடிச்ச படம் இதுதான் - டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சொல்லப்போறாங்க பாருங்க

http://nowrunning.com/Content/Movie/2012/Mugamoodi/stills/Mugamoodi-10.jpgஅண்ணன் ஒரு சாயல்ல மன்சூர் அலிகான் போல இருக்காரு அவ்வ் 
1. ''பேட்மேன், ஸ்பைடர்மேன் பாணி படம்னா... ரசிகர்கள் நிறைய எதிர்பார்ப்பார்களே?''

சி.பி - இந்த ரசிகர்களுக்கு வேலை என்ன? எப்பவும் நிறைய  எதிர்பார்க்கறதே அவங்க வேலையாப்போச்சு.. எத்தனை சீன் இருந்தாலும் பத்தலைம்பாங்க

''ப்ளாக்ல எழுதறவங்களுக்கும் ஜோல்னா பைக்காரர்களுக்கும் இப்பவே சொல்லிடுறேன்... இது அதுமாதிரியான படம் இல்லை. 'புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கலாமா?’, 'முகமூடி சோடா மூடினு இப்பவே தலைப்பு எல்லாம் எழுதிவெச்சுட்டு ரெடியா இருப்பீங்க.

 சி.பி - அண்ணே.. வணக்கம்னே.. உங்க நந்தலாலா படம் 7 நாளாவது ஓடுச்சுன்னா அதுக்கு பிளாக் விமர்சனம் தாங்க காரணம்.. 80 % பேர் பாராட்டி தான் எழுதி இருந்தாங்க..  காப்பி அடிக்கறது தப்பில்லைங்க்ணா. இதுஇதான் இப்படித்தான்னு ஒத்துக்கனும். இன்ஸ்பிரேஷனா இருந்துச்சுன்னு சொல்லனும்.. நீங்க ஒரிஜினல் படத்தை கமுக்கமா மறைச்சுட்டு எல்லாம் என்னோட சொந்த சரக்குன்னா எப்படி?

 ஆனா, நான் புலியும் இல்லை... பூனையும் இல்லை. எம்.ஜி.ஆர். மாஸ்க் போட்டுக்கிட்டு தெள்ளத்தெளிவா ஒரு படம் எடுத்திருக்கேன். இதை நம்ம சமகாலத் தமிழ்ச் சூழலில் வெச்சுப் பார்க்கணும். எளிமையான சகல மனிதர்களுக்கும் போய்ச் சேரும் முயற்சி இது!''

2. ''ஜீவா எப்படி இதற்குப் பொருந்தினார்?''

''பேச ஆரம்பிச்சதுமே 'ஆறு மாசம் குங்ஃபூ கத்துக்கணும் ஜீவானு சொன்னேன். 'ஏழெட்டு வருஷமா அந்தப் பயிற்சியில் இருக்கேன். இன்னும் அதை எங்கேயும் பயன்படுத்தலைனு சொன்னார். இந்த புராஜெக்ட்டுக்குள் முழுசா இறங்கிட்டார். என் மேல் ரொம்ப நம்பிக்கை வெச்சிருக்கார்.  


இனி, ஒவ்வொரு வருஷமும் ஒரு படம் அவர்கூட பண்ணலாம்கிற அளவுக்கு நட்பு வளர்ந்திருக்கு. சூப்பர்மேன் டிரெஸ் தயாரிக்கச் துணி செலவே 45 லட்சத்தைத் தாண்டுச்சு. ஹாங்காங்ல இருந்து சண்டைப் பயிற்சிக்கு வந்திருந்தாங்க. அந்த டிரெஸ் போட்டுட்டு நிக்கிறது ரொம்பக் கஷ்டம். பத்து நிமிஷம் தொடர்ந்து நின்னா, கண் பொங்கும். உடம்பெல்லாம் வியர்த்து ஒழுகும். அதை எல்லாம் பொறுத்துக்கிட்டு இருந்தார் ஜீவா

 இவ்வளவு சின்ன வயதில் ஒரு நடிகனுக்கு இவ்வளவு மெச்சூரிட்டி சாத்தியமானது சத்தியமா ஆச்சர்யம் தான். ஜீவாவுக்கு இன்னும் மரியாதையையும் பெருமையையும் இந்தப் படம் சேர்க்கும்!''


சி.பி - கற்றது தமிழ், ராம் போன்ற ப்டங்கள் ஜீவாவின் வயசுக்கு மீறிய அழகிய நடிப்பு.. சிவா மனசுல சக்தி, கோ இரண்டும் அவரது கமர்ஷியல் கலக்கள்ஸ்.. 

http://lh4.ggpht.com/-5Nb5mvPK6nk/Ty-8Qsr2TCI/AAAAAAABEM8/WEOBILNWZ-0/actress_radhika_apte_very%252520hot%25255B3%25255D.jpg 
3. ''என்ன... நரேனை வில்லனா ஆக்கிட்டீங்க?''


சி.பி - மிஸ்கின் அண்ணன் பிரசன்னாவை  வில்லன் ஆக்குனது ஒர்க் அவுட் ஆச்சு.. அதனால அப்படியே ஃபாலோ பண்றார் போல. 

''படத்துக்கு வில்லன் ரொம்ப முக்கியம். அசிஸ்டென்ட்டுகள் வரிசையாப் பெயர்களை அடுக்கிக்கிட்டேபோனாங்க. 'ஏன் நம்ம நரேனை நடிக்கவெச்சா என்ன?’னு கேட்டேன். அவங்க நம்பலை. அந்த நிமிஷமே நரேனுக்கு போன் போட்டேன். 'வில்லனாவா... புறப்பட்டு வர்றேன்னு வந்து நின்னார். சில நிமிஷங்களில் வில்லனை ஃபிக்ஸ் பண்ணிட்டோம்!''


சி.பி - வில்லனா புறப்பட்டு வந்து ரேப் சீன் இருக்கா?ன்னு கேட்டுடலையே? சித்திரம் பேசுதடி படத்துல அவரை நீங்க ஹீரோ ஆக்குனதுக்கு நன்றிக்கடனா அவரை இதுல நடிக்க நீங்க கட்டாயப்படுத்தினதா ஒரு பேச்சு இருக்கு 
4. '' 'நந்தலாலாவோட நடிப்பை நிறுத்திட்டீங்கபோல... ஏன்?''

சி.பி - ஹி ஹி படம் ஊத்திக்கிச்சு. 10 நாலாவது ஓடி இருந்தா செகன்ட் டைம் ட்ரை பண்ணி இருக்கலாம். 

''அந்தப் படத்தில் நடிச்சது காலத்தின் கட்டாயம். அதுக்கு விகடன் 'சிறந்த நடிகர்பட்டம் கொடுத்தது உச்சபட்ச அங்கீகாரம். இப்பவும் ரொம்ப ஆழமா, ஆத்மார்த்தமான ஸ்க்ரிப்ட் அமைஞ்சா நான் நடிக்கத் தயார்தான். அது என் ஸ்க்ரிப்ட்டாக இருந்தால் இன்னும் சந்தோஷம். ஆனா, நடிப்பது என் முதல் விருப்பம் கிடையாது!''

5. ''எப்போதையும்விட தமிழ்ப் படங்கள் இப்ப நிறைய ரிலீஸ் ஆகுது. ஆனால், வெற்றி ரொம்ப அபூர்வமா இருக்கே... ஏன்?''


சி.பி - பரட்டைத்தலையோட பல்லு துலக்காத ஹீரோ, அவனை லவ் பண்ற பொண்ணு ஊர்ல 2 தாதா அவங்களூக்குள்ள மோதல் இப்படி அரைச்ச மிளகாயை மறுபடி மறுபடி அரைச்சா? 

''பல சினிமாக்களில் ஆன்மா இல்லை. ஆனா, மக்க ளின் எதிர்பார்ப்பு பல படிகள் தாண்டிப்போயிருச்சு. ஹாலிவுட் படங்களின் டெக்னாலஜி கண்ணுக்கு முன்னாடி தெரியுது. புரட்டிப் போடுற மாதிரி வித்தியாசமா செய்தால் பிழைச்சிக்கலாம். எல்லாத்துக்கு நடுவிலும் ஒரு பையன் திடீர்னு ஒரு விபத்தை மையமாவெச்சு 'எங்கேயும் எப்போதும்எடுத்தாரே... முதல் படத்திலேயே தமிழ் சினிமாவையே 'யார் இந்தப் பையன்?’னு திரும்பிப் பார்க்கவைக்கலை?

 தாங்க முடியாத சோகத்தோட படத்தை முடிக்கலை? பிரபு சாலமன் 'மைனாவை எவ்வளவு காவியமா எடுத்திருந்தார்? இப்படிப்பட்ட விஷயங்கள் இருந்தால், யார் நடிச்ச, யார் இயக்கிய படமா இருந்தாலும் ஜெயிக்கும். 25 வருஷத்துக்கு முன்னாடி வர வேண்டிய படத்தை எல்லாம் எடுத்துட்டு, 'ஓடலைனு இப்போ யாரும் கவலைப்படக் கூடாது!''
http://www.tamilnow.com/movies/misc/mugamoodi-pooja/mugamoodi-pooja-5114.jpg

6. ''அப்போ புதுசா சினிமாவுக்கு வர்றவங்களுக்கு என்ன தேவைனு நினைக்கிறீங்க?''

சி.பி - திரைக்கதை அமைக்கும் திறனும், நல்ல தமிழ் நாவல்களில் இருந்து கதையை தேர்ந்தெடுக்கும் லாவகமும், பக்கா ஸ்கிரிப்ட் ரெடி ஆன பின்பே ஷூட்டிங்க் ஸ்பாட் போகும் மனமும் வேண்டும் 


''நிறையப் பேர் குழப்பத்தில் இருக்காங்க. 19 வயசில் பிழைக்க வந்து 32 வயசில்தான் முதல் படம் பண்ணினேன். இதுவரைக்கும் 72 தொழில் பண்ணியிருக்கேன். சினிமாவுல சாதிக்கணும்னு எல்லாருக்கும் ஆசை, கனவு இருக்கலாம். ஆனா, அதுக்கான விதை பழுது இல்லாம இருக்கணும். தன்னைத் தயார்படுத்திக்கணும். நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்னாடி இரண்டு வருஷம்

லேண்ட்மார்க்கில் வேலை பார்த்துக்கிட்டே சினிமாவைப் பத்தி புத்தகங்கள் படிச்சேன். தினசரித் தயாரிப்பு இல்லாம இங்கே எதுவும் நடக்காது!''


7. ''சினிமாவைப் பத்தி இவ்வளவு பேசுறீங்க... ஆனா, உங்க படத்திலும் குறிப்பிட்ட சில காட்சிகள், பாட்டுகள் யோசிச்சுவெச்ச மாதிரியே வருதே?''

சி.பி - எல்லாம் பிஸ்னெஸ் தான். பாட்டு இருந்தா ஆடியோ சி டி விக்கலாம்.. 4 காசு பார்க்கலாம்
''குத்துப் பாட்டுதானே? சினிமாவில் எனக்குப் பிடிக்காததே இந்தப் பாட்டுங்கதான். பாட்டு இல்லாமப் படம் எடுக்கிறதுதான் எனக்குப் பிடிக்கும். தமிழ் சினிமாவில் பாட்டுக்களும், கிளைமாக்ஸில் மூச்சுவிடாம வசனம் பேசுறதும் நின்னால்தான், அதுக்கு வாழ்வு வரும். ஆனா, நான் குத்துப் பாட்டு வெச்சாலும் அதுல விரசமோ, ஆடைக் குறைப்போ இருக்காது. தொப்புளுக்கு க்ளோஸப் வைக்கிறது இல்லை.  


ஒரு உண்மையை ஒப்புக்கத்தான் வேணும். என்னால் குத்துப் பாட்டு இல்லாம படம் எடுக்க முடியலை. இதைச் சொல்ல நான் வெட்கப்படலை. ஆனா, அந்தப் பாட்டு என் விருப்பத்தோட சம்பந்தம் இல்லாததுனு சொல்றதுக்குத்தான் மஞ்சள் சேலை கட்டி ஆடவிடுறேன்!''


சி.பி - ஓஹோ, கலைஞர் மஞ்சள் துண்டு போடறதுக்கும் இதான் அர்த்தமா? கட்சியின் தலைவராக, நாட்டின் சி எம்மாக என் மன விருப்பம் இல்லாமல் தான் நடந்துக்கறேன்னு அதுக்கு அர்த்தமா? 

http://tamil.way2movies.com/wp-content/uploads/2012/03/Radhika-Apte_deal.jpg