Showing posts with label ராம். Show all posts
Showing posts with label ராம். Show all posts

Saturday, August 31, 2013

தங்க மீன்கள் - சினிமா விமர்சனம்


ஒரு படைப்பாளிக்கு ஆத்ம திருப்தி அளிப்பது  அவனது படைப்புக்குக்கிடைக்கும்  கை தட்டல்  ஓசையே!படம் பார்க்கும்  அனைவரையும்  எழுந்து  நின்று  கை தட்ட வைக்கும் அளவு  பிரமாதமாக  ஒரு படம்  கொடுத்திருக்கும்  இயக்குநர் ராம்க்கு  மரியாதையுடன்  ஒரு  சல்யூட் .கமர்ஷியலுக்காக  எதையும் செயற்கையாக சேர்க்காமல் எடுத்துக்கொண்ட கதைக்கருவுக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்ததற்கு ஒரு சபாஷ் !


ஹீரோ  ஒரு கிராமத்தில் வசிக்கும் சராசரி ஆள். லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டவன், பெற்றோருடன் கூட்டுக்குடித்தனம். 2 ஆம்  வகுப்பு படிக்கும் ஒரு பெண் தேவதை மழலையாக . பணி புரியும்  இடத்தில் சம்பளம் சரி வரத்தராததால்  பாப்பாவுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியவில்லை, எல்லாத்துக்கும் தன் அப்பாவை எதிர் பார்க்க வேண்டிய பொருளாதார நிர்ப்பந்தம்.


ஒரு கட்டத்தில் அப்பாவுடனான வாக்குவாதத்தில் வீட்டை விட்டு வெளியேறும்  ஹீரோ கொச்சினில்  பணி நிமித்தம் தங்குகிறான்.2000 ரூபா ஃபீஸ் கட்டவே முடியாத அவனிடம் பாப்பா 25,000 மதிப்புள்ள வோடஃபோன் நாய் கேட்குது. அவன் எதிர்  கொள்ளும் கஷ்டங்களை  மிக கவிதையான நடையில் சொல்லி இருக்கிறார் .


படத்தில்   முதல் அப்ளாஷ் அந்த மழலைக்குத்தான் , மிக பிரமாதமான நடிப்பு . அப்பா , அப்பா என செல்லம் கொஞ்சும் போதும் சரி , பள்ளியில் எல்லோர் முன்னாலும் அவமானப்படும்போதும் சரி  அட்டகாசமான நடிப்பு . என்ன ஆங்காங்கே  ஓசை பேபி ஷாலினி போல்  ஓவர் ஆக்டிங்கும் உண்டு . அது இயக்குநரின் தவறே அன்றி அந்த  குழ்ந்தையின் தவறில்லை . இந்த மாதிரி மழலைகளை நடிக்க வைக்க மணி ரத்னம் போல் குழந்தைகளை இயல்பாக இருக்க விட்டு படம் பிடிக்க வேண்டும் , நடிக்க விட்டு படம் பிடிக்கக்கூடாது . எது எப்படியோ இந்த ஆண்டின் சிறந்த   குழ்ந்தை நட்சத்திரம் விருது உறுதி .சாதனா என்ற பெயர் சாதனை படைக்கவோ?




ஹீரோவாக இயக்குநர் ராமே களம் இறங்கி இருக்கிறார் , சேரன், தங்கர் பச்சான் போன்ற வெகு சிலரே நடிக்க ஒத்துக்கொள்ளும் கேரக்டர் . குழ்ந்தையிடம் பாசம் காட்டுவது , அப்பாவிடம் வாக்குவாத்ம் செய்வது , மனைவியிடம் எரிந்து  விழுவது ம், ஸ்கூலில்  டீச்சரிடம் சண்டை போடுவது என இவர் வரும் காட்சிகள் எல்லாமே எதார்த்தமோ எதார்த்தம் .ஒரு இயக்குநர்  ஹீரோவாக அவர் இயக்கும் படத்தில் நடித்தால்   திரைக்கதையை விட அவர் கேரக்டருக்கே முக்கியத்துவம்  கொடுக்கப்படும் , ஆனால் அப்படி நடக்காமல்  குழந்தையை மையபடுத்திய விதம் பிரமாதம் . 


ஹீரோயினாக  சாதனாவின் அம்மாவாக  வருபவர் மகேந்திரன்  பட நாயகி போல் அவ்வளவு அமைதி , சாந்த சொரூபியாக வரும் அவர்  குழந்தை வயசுக்கு வருவது பற்றி சந்தேகம் கேட்கும்போது பொரிந்து தள்ளுவதில் ஸ்கோர் செய்கிறார். கவர்ச்சி என்ற இம்மியளவு  நிரடல் கூட இல்லாமல் மிக கண்ணியமான ஒரு கதாநாயகிக்கு சிறந்த எடுத்துக்காட்டு . வெல்டன் .


குழந்தைக்கு பாட்டியாக வரும்  ரோகினி , தாத்தாவாக வரும்  பூ பட ராம் , டீச்சராக வரும்  பத்மப்ரியா என    கேரக்டராகவே மாறிவர்கள் லிஸ்ட் செம நீளம் . மிக பாந்தமான நடிப்பு அனைவருடையதும் 



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள் 


1.  படத்தின் ஓப்பனிங்கிலேயே இவ்வளவு திகிலான , பர பரப்பான  ஒரு காட்சி கடந்த 10 வருடத்தில்  வந்ததில்லை ( புலி வருது பட கனவு பலிக்கும் கருணாஸ் காட்சி விதி விலக்கு ) . குளத்தில் தங்க மீன்கள் இருபதாக நம்பும் சிறுமி எந்த நேரத்திலும்  தங்க மீனைக்காண குளத்தில் குதிப்பாள் என எகிற வைக்கும் பி பி  வர வைப்பதில்  இயக்குநருக்கு வெற்றி . அதே டெம்ப்ப்போவை க்ளைமாக்சில் உபயோகித்தது  அருமை 


2. அர்பிந்துசரிரா என்பவரின் பிரமாதமான ஒளிப்பதிவு படத்துக்கு பெரும் பலம் . குளம் , காடு , மலை , புல் வெளி என அவர் கேமரா விளையாடி இருக்கிறது . இது போன்ற கலைப்பூர்வமான  ஒரு படத்துக்கு கேமரா எந்த அளவு முக்கியம் என்பதை உணர்ந்து செய்திருக்கிறார்கள் , வெல்டன் 



3. யுவன் சங்கர் ராஜா வின் பின்னணி இசை அபாரம் . நந்தலாலா படத்தின் பி ஜி எம்மை ஆங்காங்கே டச் பண்ணி வந்தாலும்  யுவனின் சரிதத்தில் இது ஒரு முக்கியமான படம் . ஆனந்த யாழை  மீட்டுகின்றாய் பாட்டு இந்த ஆண்டின்  மிக முக்கியமான மெலோடி ஹிட் சாங்க் . படமாக்கிய விதம் அருமை . அதே போல் மற்ற  2 பாட்டுகளும்  குறை சொல்ல முடியாத தரத்தில் .. 



4. சைக்கிளில் டிராப் பண்ணும் அப்பா வேண்டாம் , காரில் வா என தாத்தா  அழைக்கும்போது குழந்தை ஸ்கூல் பேக்கை மட்டும் காரில் வைத்து விட்டு சைக்கிளில் அப்பாவுடன் பயணிக்கும் காட்சி  கண் கலங்க வைத்த , நெஞ்சை நெகிழ வைத்த காட்சி . அந்த சீனில்  ராமின் முக பாவனை அருமை 


5.  மிக மெதுவாக, ஒரு நதியின் அமைதியுடன் பயணிக்கும்  திரைக்கதைக்கு  மதி நுட்பமான , பிரமாதமான வசனங்கள்  கை கொடுத்திருக்கிறது . உதவி  இயக்குநர்கள் மட்டும் இந்தப்படத்தில்  27 பேர் . அனைவருக்கும் பாராட்டுக்கள் 


6. ஹீரோ தன் நண்பனிடம் கடன் கேட்பதும் , இழுத்தடிக்கும் நண்பனிடம் அவர் பொரிவதும்   பிரமாதமான காட்சி அமைப்பு 


7. போஸ்டர் டிசைன்கள் , விளம்பரங்களில் அப்பா மகள் பாசத்தை உணர்த்தும் ஸ்லாகன்கள் அழகு 



இயக்குநரிடம்  சில  கேள்விகள்:


1. ஸ்கூல் மிஸ்கள் எல்லாரையுமே சிடு சிடு முகமாக காட்டி இருப்பது செயற்கை தட்டுகிறது . பத்மப்ரியா மட்டுமே விதி விலக்கு . பாதிக்குப்பாதி இரு தரப்பிலும்  காட்டி  இருக்கலாம் . குழந்தை மீது பரிதாபம் வர வேண்டுமே என்பதற்காக டீச்சர்கள் எல்லோரும்  ஓவராக கண்டிப்பது பட்டவர்த்தனமாய்த்தெரிகிறது 



2. இடைவேளை கார்டு போடும்போது ஹீரோ சைக்கிளில்  ரயில்வே கிராசை கடந்த அடுத்த செகண்டிலேயே ரயில்வே கேட் போடப்படுகிறது , கேட் போட்ட அடுத்த செகண்டிலேயே ரயில் வருகிறது , அது எப்படி? ரயில்வே   ரூல்ஸ் படி 10 நிமிடங்கள் முன்னதாக கேட் போடப்பட வேண்டுமே? சீன் எஃபக்டா வரனும் என்பதற்காக ரயில்வே ரூல்ஸை  மீறலாமா?



3. மழலை மீது  அவ்வளவு பாசமாக இருக்கும்  ஒரு அப்பா  அடிக்கடி தம் அடிப்பது ஏன்? குழந்தைகள் முன்னிலையில்  அப்பா தம் அடிப்பது இந்தப்படத்தின்  கதைக்குத்தேவையே இல்லையே?



4. பத்மப்ரியா டீச்சர்  வீட்டில்  அவர் கணவர்  ஒரு கொடுமைக்காரர் போல் காட்டி இருப்பதும்  திரைக்கதைக்கு தேவை  இல்லாததே 


5. தங்க மீன்கள்  குளத்தின் கதையை சொல்வதிலேயே   குழந்தை குளத்தில் குதிக்கும் அபாயம்  இருப்பதை அப்பா உணர வில்லையா? ஒரு முறை  பாப்பா அந்த  குளத்தில் இறங்க முற்படுவதைப்பார்த்த பின்பாவது அவர் இன்னொரு புனைக்கதை  குறி குளத்தில் இறங்காமல்  எச்சரிக்கைப்படுத்தி  இருக்கலாமே?  


6. ஹீரோ தன் நண்பனிடம் கடன் கேட்கும்போது அதை தட்டிக்க்ழிக்க நினைப்ப்வன்  மணி பர்சில் பணத்தை அப்படி பட்டவர்த்தமாய் காட்டுவானா? அந்த விசிட்டிங்க் கார்டை தனியா எடுத்து வைத்து கொடுத்திருக்கலாமே?



7.  சொந்த அப்பாவிடம் என்ன ஈகோ வேண்டிக்கிடக்கிறது? நண்பனிடம் அவமானப்படுவதற்க்கு அப்பாவிடம் பணிந்து போகலாமே?


8.  டபிள்யூ , எம்  குழப்பம்   3ஆம் வகுப்பு மாணவிக்கு வருவது நம்ப முடியவில்லை



9. பாப்பா எக்சாம் எழுத   ரூ 3000 கட்ட வேண்டும் என ஹெச் எம் சொல்கிறார். ஆனால் தாத்தா   ஹீரோவிடம் 2000 ரூபா ஃபீஸ் கட்டியாச்சு என்கிறார். எதுக்கு இந்த  குழப்பம் ?



10 , சம்பளம் சரியாக  வராத ஏழை  ஹீரோ ஏன் தனியார் ஸ்கூலில் மகளைப்படிக்க வைக்க வேண்டும் ? ஆரம்பத்திலேயே அரசுப்பள்ளியில் படிக்க வைக்கலாமே?


11.  தாத்தா , பாட்டி , மகன் என நால்வரும் மிக எளிமையான உடை உடுத்தி  இருக்கும்போது   மருமகள் மட்டும்  பொருந்தாத ஆடம்பர உடை உடுத்தி  இருப்பது ஏன்?  ரோகினி வரும் ஒவ்வொரு காட்சியிலும் அவர் 200  ரூபா மதிப்புள்ள சாதா  வாயில் புடவை தான் அணிந்து வருகிறார் . ஆனால் குழ்ந்தையின் அம்மாவாக   வருபவர் 2500  ரூபா புடவையில் வருகிறார். தாய் வீட்டு சீதனமாக  இருந்தாலும் கணவன்  மிக சாதாரணமாக உடை உடுத்தி  இருக்கும்போது  காதல் கல்யாணம் செய்த மனைவி அவனைப்போலவே எளிமையான ஆடையில்




மனம் கவர்ந்த வசனங்கள்


1. அப்பா.அந்த அங்க்கிள் ஏன் வீட்டுக்குள்ளே வர்ல?  


கடன் வாங்க வர்றவங்க வீட்டுக்குள்ளே வர மாட்டாங்க


2. பணம் கடன் கேட்டா இல்லைனு அப்பவே சொல்லிடுங்கடா.அலைய விடாதீங்க.பணம் இல்லைனு சொல்றதுல என்ன க்வுரவக்குறைச்சல்



3. அப்பா, செத்துப்போறதுன்னா என்னா?

இந்த உலகத்தை விட்டே போறது .


அப்டின்னா?

நமக்குப்பிடிச்சவங்க யாரையும் பார்க்க முடியாது


அப்போ நீயும் செத்துப்போய்டுவியாப்பா? ப்ளீஸ்ப்பா, நீ மட்டும் செத்துடாதே



4. இவன் படிக்கறதுக்கு காசு கட்டுனோம், இவன் குழந்தை படிக்கவுமா? குழ்ந்தைக்கு இவன் தானே அப்பன்?


5, டீச்சர் - இப்போ செல்லம்மா கிட்டே ஒரு கேள்வி கேட்கப்போறேன்


லொள் மாணவன் - ஹி ஹி ஹி


என்னடா சிரிப்பு ?


அவ என்னைக்கு சரியான பதில் கொடுத்திருக்கா?



6. பறவை இனங்கள்லயே தானே கூடு கட்டாம அடுத்தவங்க கட்டுன கூட்டில் வசிப்பது குயில் மட்டுமே


மனுஷங்க நாம இருப்பது கூட வாடகை வீட்டில் தானே?



7. ஏம்மா? சம்பளம் வாங்கியாச்சா?ன்னு உன் புருஷன் கிட்டே கேட்டியா?


கேட்டா உன் வேலையைப்பாருன்னு சொல்லிடறாரு அத்தை

சாமார்த்தியக்காரி தான் , எப்படி ஊசி குத்தற மாதிரி பதில்


8. டியர் , கொஞ்சம் என்னை வெளீல கூட்டிட்டுப்போறீங்களா?


எங்கே?


எங்கேயாவது



9. நான் காதலிச்சப்ப பார்த்த கல்யாணி நீங்க இல்லை

ஆமாண்டி , கொஞ்சம் தொப்பை போட்டிருக்கு


10 பணம் இருந்தா பணம் இருக்குதேன்னு கவலை , இல்லைன்னா பணம் இல்லைன்னு கவலை



11. எதுக்குங்க இப்போ அந்த நாயை அடிச்சீங்க ?


நான் யாரைத்தான் அடிக்கறது ?



12. வேலை நல்லாப்பார்க்கறவரை முதலாளிங்க எல்லாம் மகனே , அவனே இவ்னேம்பாங்க , சம்பளம் கேட்டா எவன் பாங்க



13. ஆளுக்கு வயசாகிற மாதிரி தொழிலுக்கும் வயசாகுது



14. ஏண்டா , நான் என்ன எப்பவும் உன் கூடவா இருந்தேன்? உனக்கு நல்ல அப்பனா இல்லை?


அதை நான் சொல்லனும்


15. யாராவது செத்தா ஸ்கூல் லீவ் விடறாங்க , ஐ ஜாலி


அதுக்காக பிரேயர்ல அப்படித்தான் கை தட்டுவியா? உங்கப்பா செத்தாலும் இப்படித்தான் கிளாப்ஸ் பண்ணுவியா?


டீச்சர் , குழந்தைட்ட இப்படியா பேசுவாங்க ?



16. ஏய் , உன் தாத்தாவைப்பார்த்தா எருமை மாடு மாதிரி இருக்கார்டி

உஷ் சும்மா இரு


17. டிகிரி படிக்காதவங்க குழ்ந்தை படிக்கக்கூடாதுன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா சார்?



18. இந்த நாயோட விலை ஏன் இவ்வளவு ஜாஸ்தி இருக்குன்னா இதனோட அண்ணன் சூப்பர் ஸ்டார் மோகன் லால் வீட்ல வளருது


அப்போ இதை மெகா ஸ்டார் மம்முட்டி வீட்ல வித்துடு



19. உனக்கு யார் மேலயாவது  கோபம்னா அவங்களை என்ன வேணா பண்ணு , திட்டு , அடி , கொலை கூட பண்ணு , ஆனா பேசாம மட்டும் இருந்துடாதே




ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்- 50 



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - நன்று 

ரேட்டிங் =  4  / 5


சி பி கமெண்ட் -தங்கமீன்கள் - நேர்த்தியான ஒளிப்பதிவு ,மனதை வருடும் பின்னணி இசை ,நுட்பமான வசனங்கள் ,கண் கலங்க வைக்கும் நடிப்பு- அனைவரும் தியேட்டருக்குப்போய் பார்க்கவேண்டிய தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் , டோண்ட் மிஸ் இட்

ஏழ்மையை அனுபவிக்காதவர்கள் ,அதணால் ஏற்படும் அவமானங்களை உணராதவர்கள் தங்க மீன்கள் மாதிரி படத்தை ரசிக்க முடியாது

தங்க மீன் கள் கமர்சியல் ரீதியான வெற்றி பெரும் வாய்ப்பில்லை.பல விருதுகளை அள்ளும்.பத்திரிக்கைகளில் பலத்த பாராட்டு விமர்சனங்களை அள்ளும்

Monday, November 19, 2012

காமெடி எக்ஸ்பிரஸ் - லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் - சிறுகதை

காமெடி எக்ஸ்பிரஸ்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

கீர்த்தனாரம்பத்திலே, ஒபாமாவும் ரோம்னியும் முட்டிக் கொண்டிருந்த காலகட்டத்திலே, இந்தக் கதை ஆரம்பிக்கிறது. தனக்குகன்னா பின்னாவென்று தேர்தல் நிதி வாரிக் கொடுக்கும் NRI இந்தியர்களைக் குஷிப்படுத்த அதிபர் ஒபாமா வருடாவருடம் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடுவது தெரிந்ததே.
நவம்பர் 6, 2012 எலெக்ஷன் ஜுரம் தொற்றிக் கொண்ட நிலையில் நவம்பர் 13ல் வரும் தீபாவளியை அக்டோபரிலேயே கொண்டாடிவிட அமெரிக்க அரசு உத்தரவு பறக்கிறது.
வெள்ளை மாளிகையில் எக்கச் சக்கமான இந்தியர்கள் கூட்டம்.
வடக்கத்தி சேட்டு ஒருவர் ஒபாமாவின் காதில் கிசுகிசுக்கிறார்: வழக்கமா அல்வா சாப்பிட்டுட்டு போட்டோ எடுத்துக்கிட்டு போயிடுவோம். அடுத்த தீபாவளிக்கு நீங்க இருப்பீங்களா போயிடுவீங்களான்னு தெரியல."
ஒபாமா சேட்டை ஒரு மாதிரியாக முறைக்க, சேட்டு தொடர்கிறார்.

மீன், அமெரிக்க ஜனாதிபதியா. அதனால இந்த வருஷம் நீங்க உங்க கையால ஒரு வெடியாவது கொளுத்தணும்னு எல்லாரும் ஆசைப்படறாங்க."
ஒபாமாவால் என்றைக்குத்தான் உடனடியாக முடிவெடுக்க முடிந்தது? புருவத்தைச் சுருக்கி யோசிக்கிறார். உடனடியாக உதவியாளர் ஒருவர் ஓடி வந்து, சார், எல்லாருமே ரூ. 10,000 ப்ளேட்வாலா ஆளுங்க. ஒரே ஒரு வெடி கொளுத்தினா ஒண்ணும் கொறைஞ்சிடாது. அதுக்கு வேணும்னா தனியா ஒரு ரேட்டு போட்டு கலெக்ஷன் பண்ணிடறேன்."
உடனே பிரகாசமான ஒபாமா ஒரு ஒத்தை வெடியை ரோஸ் கார்டனில் கொளுத்த ஆயத்தமாகிறார். எல்லோரும் போட்டோ பிடிக்க ரெடி. ஆனால் அந்த ஒத்தை வெடி வெடிக்காமல் நமுத்துப் போய் பிசுபிசுக்கிறது.
உதவியாளர் ஓடிவந்து அதைக் கையிலெடுத்துப் பார்த்து, சத்தமாக 'Made in China' என்கிறார்.
ஒபாமா உடனே தொண்டையைச் செருமியபடி,சீனர்கள் நம்மை ஏற்றுமதியில் ஏமாற்றுவது எனக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறேன். இனிமேல் ஒவ்வொரு நூடுல்ஸ் பாக்கெட்டிலும் எத்தனை நூடுல்ஸ் இருக்கிறது என்று அவர்கள் கண்டிப்பாகத் தெரிவித்தே ஆகவேண்டும். யாரங்கே? இது அரசாணை... உடனே தண்டோரா போடுங்கள்," என்று கர்ஜிக்கிறார்.
வழக்கம்போல் அவருடைய கட்சி ஜால்ரா கூட்டம் விசிலடிக்கிறது.
எந்த இந்தியனாவது இன்னொரு இந்தியனை முன்னால நிற்கவிடுவானா? ‘இதுதான் சமயம்என்று தமிழர் ஒருவர் சேட்டின் அடித்தொடையில்நறுக்கென்று கிள்ள, அவர் பயந்து விலக, அவருக்கு முன்னால் போய் நின்று, அது போனா போவட்டும், சார், இதை வெடிங்க. இது Made in Sivakasi, Tamil Nadu"
சிவகாசி கெடக்கட்டும்யா, தென்காசியில உங்க ஊரு அர்நால்ட் ஷ்வாசநெகர் இருக்காரே, அவரு சௌக்கியமா?"
மிஸ்டர் ப்ரசிடெண்ட், நெசமாவே உங்களுக்கு சரத்தைத் தெரியுமா?"
என்னது தெரியுமாவா? வேர்ல்ட் வைட் ஒரே நேரத்தில நெட்ல தமிழ்ப் படம் ரிலீஸ் பண்ணினஜக்கு பாய்அவருதானேயா?"
அடேடே, ஒபாமாவுக்கு அவ்வளவு தூரம் ஜெனரல் நாலட்ஜா?
போட்ரா போன சித்தப்புக்கு!
நெசமாவே போன்ல ஒபாமாதானுங்களா? நானு நாட்டாமை 2, கோச்சடையான் 3, ராணா 4 எல்லாத்திலயும் கும்பலோட கோவிந்தாவா நடிக்கிறேன்னு அவருகிட்ட சொல்லிட்டீங்களா?" - சமத்துவக்கட்சியின் சகலகோடி 11 உறுப்பினர்களும் ஒருங்கே தலையாட்ட, குஷியாகிறார் சரத்ஜி!
யூ ஸீ மிஸ்டர் ஒபாமா, மை சப்போர்ட் ஈஸ் ஆல்வேஸ் தேர் ஃபார் யூ. நானே 2011 தமிழ்நாட்டு சி.எம்.மா ஆகலாம்னு தான் இருந்தேன். சரி, அப்புறமா பார்த்துக்கலாம்னு இப்ப மறுபடியும் டெம்பரவரி பவ்யமாயிட்டேன். கேன் அரேஞ்ச் ஈவன் டன் க்ரோர் சப்போர்ட்டர்ஸ் ஃபார் யூ. ஆனாக்க இந்தக் குண்டுச்சட்டியில குதிரை ஓட்ற கூடங்குளம்வாலாஸ் எல்லாருமே யூஸ்லெஸ்னு நீங்க ஒரு பதில் ஸ்டேட்மென்ட் மட்டும் விட்ருங்க.
அப்படியே ஹாலிவுட்ல எதுனா ஒரு படத்துல பல்டி அடிக்கிற ஸ்டன்ட் சீனா இருந்தாலும் பரவாயில்ல, நீங்க சொல்லி அதை மட்டும் எனக்கு வாங்கிக் கொடுத்துட்டீங்கன்னா உலகநாயகனுக்கு மின்னாடியே நானும் உலக சினிமாவுல..."

கால் கனெக்ஷனே சரியில்லயே," என்று காதைக் குடைந்தபடியே ஒபாமா லைனை டிஸ்கனெக்ட் செய்கிறார்.
வெள்ளை மாளிகையில் ராம்னிக்கு இல்லாத அல்லக்கைகளா? ஒபாமா - சித்தப்பு சமத்துவ மீட்டிங் நியூஸ் உடனே பரவி, அவரும் மேட்சிங்காகப் போடுகிறார் கேப்டனுக்கு ஒரு கால்!
ஹா, திஸ் ஈஸ் ராம்னி!"
ஏற்கெனவே கூடாரம் காலியானதில் பேஸ்தடித்துக் கிடக்கும் கேப்டன் போன் அடித்ததிலேயே செம கடுப்பாகிறார்.
வேட்டியை மடித்துக்கட்டி நாக்கைத் துருத்தி, , ஆர்ராது ராமுநீ, யார்கிட்ட விளையாடறீங்க, யாரோ மெனுவில இல்லாத வெள்ளைக்கார பேரையெல்லாம் சொன்னா நாங்க மெரண்ட்ருவமா?"
காலைத் தூக்கிச் சுவரில் வைத்து எகிறத் தயாராகும் தலைமையை, சோர்ந்து கிடக்கும் கட்சிக்காரர் ஒருவர் கூல் செய்கிறார்.
இல்லீங்க, நெசமாவே ராம்னிங்கறது அமெரிக்க அப்போசிஷன் லீடர்ங்க. ஒபாமாவை எதிர்த்து நிக்கிறாரு. உங்ககிட்ட ஏதோ ஆலோசனை கேட்கணும்கிறாரு."
, அதையெல்லாம் மொதல்லயே சொல்ல மாட்டீங்களாடா! உங்களுக்கெல்லாம் வெட்டிச் சம்பளம் அவனாடா கொடுக்குறான்?"
யூ ஸீ மிஸ்டர் ராம்னி, டோண்ட் வொர்ரி அபௌட் அம்மா, மீன் ஒபாமா. ஒபாமாவ ஒழிக்கணும்னு நீங்க நெனச்சீங் கன்னா மொதல்ல அவரோட கூட்டு வைக்கணும். ஜெயிச்சி வந்த உடனே அவருகிட்டயே பயங்கரமாய் மோதணும். அப்புறமா கூட்டும் கிடையாது, பொரியலும் கிடையாது எல்லாமே அவியல்தான்னு ஒரு ஸ்டேட்மென்டும் விடணும். நாட்ல அவனவனும் ஒண்ணும் புரியாம தலைய பிச்சிப்பான், நாம ஃபுல்பூஸ்ட்ல யாரையாவதுபளார் பளார்னு டைமிங்கா நாலு நெத்து நெத்திட்டுப் போயிட்டே இருக்கலாம்.
ஹலோ, ஹலோ, இருங்க, இருங்க, காலை கட் பண்ணிறாதீங்க. மொதல்ல அமெரிக்காவுல எங்க இந்தத் திராணி கிடைக்குதுன்னு மட்டும் கேட்டு வாங்கி பத்து ஃபுல் பெட்டி அனுப்புங்க. இங்ஙன ஒரு பயபுள்ளைக்கும் இந்த பெசல் நாலெஜ்ஜு பத்தாது. அக்காங்!"
ராம்னி தடாலென்று கீழே விழுந்து மூர்ச்சையாகிறார்!

 நன்றி - கல்கி