Thursday, May 04, 2023

OH MY DARLING (2023) =மலையாளம் - சினிமா விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்

 


   OH MY DARLING (2023) =மலையாளம் - சினிமா விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்

இந்தப்பட்ம் கேரளாவில் ரிலீஸ் ஆனபோது பலரும் இடைவேளை முடிந்ததும் கிளம்பி விட்டார்கள் . காரணம் வழக்கமான லவ் ஸ்டோரியாக ஸ்லோவாக படம் போனதுதான். அது போக ப்ரமோஷனில் இது ஒரு ரொமாண்டிக் காமெடி மெலோ டிராமா என விளம்பரப்படுத்தினார்கள் . ஆனால் இடைவேளைக்குப்பின் தான் திரைக்கதையில் திருப்பமே வருகிறது. எனவே ஓ டி டி யில் படம் பார்ப்பவர்கள் பொறுமையாகப்பார்க்க வேண்டும்ஸ்பாய்லர் அலெர்ட்நாயகன் வழக்கம் போல வேலை வெட்டி இல்லாத இளைஞன்.அம்மா, அப்பா , தங்கை என ஒரு நார்மல் ஃபேமிலி பேக் கிரவுண்ட் உள்ளவர் அதே போல தான் நாயகியும் , இருவரும் ஓப்பனிங் சீன்லயே காதலர்களாகத்தான் காட்டப்படுகிறார்கள் . அதனால இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த தருணம், அறிமுகப்படலம் இதெல்லாம் இல்லைநாயகியோட பிறந்த நாளுக்கு நாயகன் அவள் வீட்டுக்கே போய் கிஃப்ட் தந்து சர்ப்பரைஸ் தருவது , அதே போல நாயகனின் பிறந்த நாளுக்கு நாயகி டிட்டோ வேலையை செய்வது . நண்பர்களுடன் பார்ட்டி , சரக்கு அடிப்பது என முதல் 40 நிமிடங்கள் பார்த்துப்பழகிய டெம்ப்ளேட்டான காதல் கதை தான்திருமணத்துக்கு முன்பே நாயகி தான் கர்ப்பம் என்ற தகவலை நாயகனிடம் சொல்லி விரைவில் திருமணம் செய்து கொள் என கட்டாயப்படுத்துகிறாள் , ஆனால் நாயகனுக்கு நிரந்தர வேலை கிடைக்காமல் திரு,மணம் செய்வதில் இஷ்டம் இல்லைநாயகியின் பெற்றோரை சந்தித்து பேச முன் வருகிறான். தங்கள் மகளுக்கு ஒரு காதலன் இருக்கிறான், மகள் திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாக இருக்கிறாள் என்ற இரு அதிர்ச்சிக்ரமான விஷயங்களை எப்படி அவர்கள் ஜீரணித்துக்கொள்வார்கள் என்ற தயக்கத்துடன் நாயகன் அவர்களிடம் விஷயத்தை சொல்ல அவர்கள் அதை எல்லாம் பெரியதாக அலட்டிக்கொள்ளாமல் அவ்ர்கள் பங்குக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை சொல்கின்றனர் . நாயகன் மட்டுமில்லாமல் படம் பார்க்கும் ஆடியன்சுக்கும் அது பெரிய அதிர்ச்சிஅந்த எதிர்பாராத திருப்பம் என்ன? இதற்குப்பின் இவர்கள் திருமணம் நடந்ததா? என்பதை திரையில் காண்கநாயகனாக மெல்வின் ஜி பாபு டெம்ப்ளேட்டான மலையாள தாடிக்கார இளைஞன் கேரக்டர். கச்சிதமாக நடித்திருக்கிறார். ரொமாண்டிக் போர்சன், அப்பா , தாத்தா செண்ட்டிமெண்ட் போர்சன், அம்மா உடனான பாண்டிங் , காதலியுடன் ஊடல் என பல இடங்களில் நடிக்க நல்ல வாய்ப்புநாயகியாக அனிகா சுரேந்திரன் மாறுபட்ட க்தாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால் லைட்டான லவ் போர்சன் , செண்ட்டிமெண்ட் சீன்களில் சைன் பண்ணிய அளவு அந்த ட்ரான்ஸ்ஃபர்மேஷன் சீனில் கலக்கவில்லை. அதற்கு முக்கியக்காரணம் அவரது பால் வடியும் முகம்பச்சைக்கிளி முத்துச்சரம் ஜோதிகா மாதிரி வில்லித்தனம் , படையப்பா நீலாம்பரி மாதிரி நெக்டிவ் ஷேடு உள்ள கதாபாத்திரத்தை இன்னும் பிரமாதமாக நடித்திருக்க வேண்டும் , குருவி தலையில் பனங்காய் கதைதான்நாயகன் ,நாயகி இருவரது பெற்றோரும் கச்சிதமாக தங்கள் பங்களிப்பை செய்திருக்கிறார்கள் .அன்சார் ஷாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்ணுக்கு இதம் , நாயகியின் படுக்கை அறை டெக்ரேஷனில் ஆர்ட் டைரக்டர் உள்ளேன் ஐயா என்கிறார்ஷான் ரஹ்மானின் இசையில் இரு பாடல்கள் ஓக்கே ரகம், பின்னணி இசை இன்னும் மிரட்டி இருக்கலாம் குறிப்பாக கடைசி அரை மணி நேரத்தில் கலக்கலான இசையை தந்திருக்கலாம்லிஜோ பாலின் எடிட்டிங்கில் 2 மணி நேரப்படமாக ட்ரிம் பண்ணி இருக்கிறார்கள்


சபாஷ் டைரக்டர்

1 நாயகனின் அம்மா யூ ட்யூப் ல புரோகிராம் செய்பவர் எனக்காட்டி கதைக்கு தேவையான சுவராஸ்யங்களை அந்த கேரக்டர் வழி புகுத்திய சாமார்த்தியம்

2 ஹாஸ்பிடல் ல அப்பா சீரியசாக இருக்க வெளியே நாயகனும், அம்மாவும் பேசிக்கொள்ளும் செண்ட்டிமெண்ட் காட்சி ச்பாஷ் ரகம்

3 நாயகனின் தாத்தா நாயகனின் அப்பா வின் லவ் மேரேஜ்க்குப்பின் காண்டாக்ட் இல்லாமல் இருப்பது குடும்பத்தை நாயகன் சேர்த்து வைப்பது எல்லாம் லேடிசை கவரும் அருமையான செண்ட்டிமெண்ட் காட்சிகள்4 திரைக்கதைக்கு மிக முக்கியமே நாயகியின் ட்விஸ்ட் மேட்டரும் , அதைத்தொடர்ந்து வரும் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் பிரச்சனையும் தான், அந்தகாட்சிகளை குறைவாகக்காட்டி விட்டு முதல் பாதியை ஜவ்வாக இழுத்திருக்க வேண்டாம், இருந்தாலும் பின் பாதி திருப்பம் அட்டகாசம்ரசித்த வசனங்கள்1 ஃபிரண்ட்ஸ் அண்ட் பெனிஃபிட் கான்செப்ட் தான் நல்லதுகமிட்மெண்ட் இல்லாத உறவில் என்ன சுவராஸ்யம் இருக்கும் ?2 ஒரு பையன் ஒரு பெண்ணை விரும்பிட்டா அவ வீட்ல இருக்கறவங்களோட ஒவ்வொரு அசைவையும் தெரிஞ்சு வெச்சுக்குவான், அதுதான் ஆண்கள்3 அப்பா , அது வந்து இது புது விதமான எக்சசைஸ்நீ எல்லாம் எக்சசைஸ் பண்ண ஆரம்பிச்சதே புது விஷயம் தான்4 சாரி ஆக்சிடெண்டலா கை பட்டு அப்படி ஆகிடுச்சுஅது எப்படி? வெறும் கை மட்டும் பட்டா பிரெக்னெண்ட் ஆவாளா?5 நேரம் கிடைக்கும்போதெல்லாம் உன் குடும்பத்தோட டைம் ஸ்பெண்ட் பண்ணு6சாரி மம்மி நான் அப்படி உங்க கிட்டே பேசி இருக்கக்கூடாதுவிடுடா , குடும்பம்னா சண்டை வரத்தான் செய்யும், அப்றம் சமாதானம் ஆகிக்கலாம், நீ அப்பா கிட்டே சண்டை எல்லாம் போட்டுக்கோ , ஆனா பேசாம இருக்காத7 இந்தக்கால பசங்களுக்கு அன்பை வெளீல காட்டத்தெரியாது8 அங்க்கிளுக்கு என்னை ரொம்பப்பிடிக்கும், ஆனா நான் எனக்கு ஏதாவது பிரசனை வரும்போதுமட்டும் தான் அங்கே போய் இருக்கேன், ஆனா ஒரு தடவை கூட அவருக்கு ஏதாவ்து பிரச்சனை இருக்கா?னு கேட்டதில்லை

லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்1 கர்ப்பமா இருக்கும் நாயகியிடம் நாயகன் வைட்டமின் மாத்திரைனு பொய் சொல்லி அபார்ஷன் மாத்திரை தர்றான். காலேஜ்படிக்கும் பெண் அதைப்படிச்சுப்ப்பார்க்க மாட்டாளா> தனி மாத்திரையா இருந்தா பரவால்லை . அட்டையுடன் பெயரும் இருக்கே?2 நாயகன், நாயகி இருவரும் அடிக்கடி நாயகி வீட்டு மாடியில் சந்திக்கிறார்கள் , கீழே பெற்றோர் , ஒரு முறை கூட மாட்டவே இல்லை3 நாயகியின் பிறந்த நாள் அன்று நாயகியின் வீட்டுக்கு வரும் நாயகனை மேலே மாடிக்கு வரவைக்க எணியை இறக்கும் நாயகி அடுத்த நாள் காலை வரை அந்த ஏணியை எடுத்து வைக்க மறக்கிறாள் , ஆனால் வீட்டில் யாரும் பார்க்கவில்லை4 தன் காதலி கர்ப்பம் ஆனதும் அதற்கு பாவமன்னிப்புக்கேட்க சர்ச் போகும் நாயகன் தங்கள் குடும்ப நண்பர் பாதிரியார் இருக்கும் சர்ச்க்கே போய் மாட்டிக்குவாரா? வேற சர்ச்சா இல்லை

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -க்ளீன் யூ


சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - முதல் பாதி செம போர் . பின் பாதி செண்ட்டிமெண்ட் காட்சிகள் அருமை , கடைசி அரை மணி நேரம் கலக்கல் வேகம்,அமேசான் பிரைமில் காணக்கிடைக்கிறது , ரேட்டிங் 2.5 /.Oh My Darling
Oh My Darling (2023 film).jpg
Theatrical release poster
Directed byAlfred D Samuel
Written byJineesh K Joy
Produced byManoj Sreekanta
Starring
CinematographyAnsar Shah
Edited byLijo Paul
Music byShaan Rahman
Production
company
Ashtree Ventures
Release date
  • 24 February 2023
CountryIndia
LanguageMalayalam

0 comments: