Tuesday, May 09, 2023

AUGUST 16 , 1947 ( 2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா) @அமேசான் பிரைம்

 


    இந்தப்படம் தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆனபோது  போஸ்டர்  டிசைன்  பார்த்து  பயந்து  படம்  பார்க்கல, ஏதோ  சுதந்திரப்போராட்டப்போர்  பற்றிய  சப்ஜெக்ட்னு  விட்டுட்டேன், அது  போக  டைட்டிலிலேயே  ஜிஎஸ்டி(AUGUST)  இருந்தது . டிக்கெட்  போக  எக்ஸ்ட்ரா  சார்ஜ்  வசூலிப்பாங்களோ?னு  ஸ்கிப் பண்ணிட்டேன், இப்போ  பார்த்தா  அது லவ்  சப்ஜெக்ட் , அடடா, மிஸ்  பண்ணீட்டமேனு  ஃபீலிங்கோட தான்  படம்  பார்த்தேன்

 ஸ்பாய்லர்  அலெர்ட்


தமிழ்  நாட்டில்  செங்காடு  என்ற  ஒரு கிராமம், மக்கள்  படிப்பறிவு  இல்லாமல்  ஆங்கிலேயர்களுக்கு   அடிமைப்பட்டு  வாழ்ந்து  வந்த  கால  கட்டம்,  வில்லனான   ஆங்கிலேய  துரை அந்த  ஊரில்  எந்தப்பெண்ணைக்கண்டாலும்  விடாத  பெண்  பித்தன்.இவனிடமிருந்து  பெண்ணைக்காப்பாற்ற  இரண்டே  வழிகள்  1  பூமி தானம்  என்ற  பெயரில்  பெற்ற  பெண்ணையே  மண்ணில்  உயிரோடு  புதைத்து  கொல்வது  2  ஆண்  போல்  வேடமிட்டு  உலாவரச்செய்வது. இதனால்  ஒரு  பெண்  அந்த  ஊரில்  வயதுக்கு  வந்தாலே  பெற்றோர்  மனம்  நடுங்கித்தான்  வாழ்ந்தார்கள் 


 நாயகி தேவதை  போன்ற  அழகி .ஜமீன்  வாரிசு . அட்டு  ஃபிகரையே  விட்டு  வைக்காத   வில்லன்  லட்டு  ஃபிகரைக்கண்டால்  விடுவானா? ஜமீன்  வாரிசு  என்றும்  பாராமல்  நாயகியை  தன்  வீட்டுக்கு  அனுப்பச்சொல்கிறான். 24  மணி  நேரம் அவகாசம்  தருகிறான். ஆனால்  நாயகியின்  அப்பா  தன்  மகளை  கொலை  செய்ய  முடிவு  செய்கிறார்


நாயகன்  நாயகியை  சின்ன  வயதில்  இருந்தே  ஒரு  தலையாய்  காதலித்து  தறுதலையாய்  சுற்றிக்கொண்டு  இருப்பவன் ஜமீன் தாரர்  உட்பட  அனைவரும்  வில்லனிடம்  பம்மிக்கொண்டிருக்க  நாயகி  மீது  கால்  வைத்த  வில்லனை  பாகுபலியில்  வருவது  போல  ஒரே  போடாக  போட்டுத்தள்ளி  விடுகிறான்


 இடைவேளைக்கு  முன்பே  வில்லனை  ஒழித்து  விட்டால்  இனி  கதையில்  என்ன  சுவராஸ்யம்  இருந்து  விடப்போகிறது  என்று  நினைத்தால்  அதற்குப்பின்  தான்  இரு  ட்விஸ்ட் . 1  இந்தியாவிற்கு  சுதந்திரம்  கிடைத்து  விடுகிறது, ஆனால்  தகவல்  தொழில்  நுட்பம்  வளராத  அந்த  ஊருக்கு  மட்டும்  விஷயம்  பரவவில்லை 2  வில்லனின்  அப்பா  தன்  மகனைக்கொன்றவனைப்பழி  வாங்கத்துடித்துக்கொண்டு  இருக்கிறார்

 இதற்குப்பின்  திரைக்கதையில்  நிகழும்  சுவராஸ்யங்களே    மீதி  படம் 


 நாயகனாக  கவுதம்  கார்த்திக். இதுவரை  பிட்டுப்படங்கள் , சி  செண்ட்டர்  ரசிகர்களுக்கான  டப்பாப்படங்களில்  மட்டுமே  நடித்து  தன்  பெயரையும் , அப்பா  கார்த்திக் , தாத்தா  முத்து ராமன்  பெயரையும்  கெடுத்து  வந்த  கவுதம்  கார்த்திக்  கண்ணியமான  ரோலில்  நடித்த  இரண்டே  படங்கள்  1  பத்து தல  2  AUGUST  16  , 1947


நாயகியிடம்  காதலை  வெளிப்படுத்தாமல் உள்ளுக்குள்ளேயே  உருகிக்காதலிக்கும்  அந்தக்கால  இதயம்  முரளி  ரோல்  இவருக்கு , கச்சிதமாக  செய்திருக்கிறார். வில்லனிடம்  ஆவேசம்  காட்டும்போது  ஆக்சன்  ஹீரோ  ஆகிறார்


கிராமிய  சிற்பம்  மாதிரி  நாயகியாக   ரேவதி  ஷர்மா , இவரது  முக  அழகுடன்  ஆடை  வடிவமைப்பும்  சேர்ந்து  கண்ணியமான  தோற்றத்தைத்தந்து  விடுகிறது. சிரித்த  முகத்தில்  ஸ்கோர் செய்பவர்  அழுகைக்காட்சிகளில்  அந்த  அளவு  எடுபடவில்லை 


வில்லனாக , வில்லனின்  அப்பாவாக  நடித்த  இருவருமே  வெறுப்பு  வர  வைப்பது  போல  கச்சிதமாக  நடித்திருந்தார்கள் 


போஸ்  வெங்கட் ,  நீலிமா  ராணி  இருவரும்  கெஸ்ட்  ரோல்  செய்திருக்கிறார்கள் 


 முதல்  10  நிமிடம்  படம்  ஸ்லோவாகப்போனாலும்  கதைக்குள்  சுலபமாக  நம்மை  இழுத்துக்கொண்ட  பின்  சுவராஸ்யம்தான்


ஷான் ரோல்டன் இசையில்  3  பாடல்கள்   கலக்கலான  கொண்டாட்டப்பாடல்களாக  செம  ஹிட்  அடித்திருப்பது  சிறப்பு, பின்னணி  இசை  பாடலுக்கு  அமைந்த  இசை  அளவு  செம  ஹிட்  ஆகவில்லை 


எஸ்  கே  செல்வகுமாரின்  ஒளிப்பதிவு  கிராம  மக்களின் யதார்த்த  முகங்களைப்பதிவு  செய்ததிலும்  நாயகியின்  அழகை  உள்வாங்கிய  விதத்திலும்  கவனம்  பெறுகிறது  

ஆர்  சுதர்சனின்  எடிட்டிங்கில்  144  நிமிடங்கள்  ட்யூரேசன்  வருமாறு  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார், கதை  , திரைக்கதை , இயக்கம்  என  என் எஸ்  பொன்குமார்  கச்சிதமாகப்பணியாற்றி  இருக்கிறார்

சபாஷ்  டைரக்டர்  ( என் எஸ்  பொன்குமார் )



1  நாட்டுக்கு  சுதந்திரம்  கிடைத்த  விஷயத்தை  சொல்லிவிடக்கூடாது , ஊர்  மக்களுக்கு  தெரிந்து  விடக்கூடாது  என  ஒரு  நபரை  வில்லன்   நாக்கை  வெட்டி  அனுப்புவது  கொடூரமாக  இருந்தாலும்  அந்த  நபர்  ஊர்  மக்களிடம்  விடுதலை  கிடைத்த  விஷயத்தை  சொல்ல  முற்படும்  காட்சி  காமெடியாக  படம்  பிடித்த  விதம் 


2  வில்லன்  நாயகியின்  கழுத்தில்  கால்  வைத்து  அழுத்தும்போது  நாயகன்  எண்ட்ரி  கொடுத்து காலை  ஒரே  வெட்டாக  வெட்டும்  காட்சி  பாகுபலியை  நினைவு  படுத்தினாலும்  தியேட்டரில்  கைதட்டலை  அள்ளி  இருக்கக்கூடிய  காட்சி 


3   நாயகியின்  பெயரை , உருவத்தை  நாயகன்  தன்  நெஞ்சில்  பச்சை  குத்தி  இருப்பதை  நாயகி  உணரும் காட்சி   பவுனு  பவுனு  தான்  பட  க்ளைமாக்சை  நினைவுபடுத்தினாலும்  நல்ல  செண்ட்டிமெண்ட்  சீன் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1    எங்களை  விட்ட  கோட்டிக்காரப்பயலே  ( ஹீரோ  வஞ்சப்புகழ்ச்சி  கோஷ்டிப்பாடல் )


2  நினைச்சா  இனிக்கற, நிலவா  மினுக்கற  மாயக்காரி (  டூயட்  மெலோடி ) 

3  கொட்டுங்கடா  ( கும்மாளப்பாட்டு )


  ரசித்த  வசனங்கள் 


1 இந்த  உலகத்துலயே  மிகப்பெரிய பயந்தாங்கோழிகள்  இந்தியர்கள் தான், அந்த  பயத்தோடயே  உங்க  உயிர்  பிரியனும் \\


2 நான்  ஊரை  விட்டுப்போகும்போதும்  மக்கள்  பயத்தோடதான்  இருக்கனும், நான்  ராஜா  மாதிரி  போகனும் \\


3  திடீர்னு  இந்தியர்களுக்கு  தைரியம்  வந்துடுச்சா| ? தைரியம்  வந்த மாதிரி  நடிக்கறாங்களா? 100  வருசம்  ஆனாலும்  ஆங்கில  மொழி  பேசறவங்களைக்கண்டாலே இந்தியர்கள்  அலறனும் 


4   அவன்  ஒரு  பிச்சைக்காரன் , சுடக்  கூடாது அதானே?

 இல்லை  அவன்  ஒரு  இந்தியன், நீங்க  அவனை  சுட  முடியாது  


5  குத்த  தைர்யம்  இல்லாதவன் கிட்டே  கத்தியைக்கொடுத்த  மாதிரி  சுதந்திரத்தின்  அருமை  தெரியாத  உங்களுக்கு  சுதந்திரம்  கிடைச்சா  என்ன  பண்ணப்போறீங்க ? 




லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  வில்லன்  பெரிய  ஆங்கிலேய துரை ,  மெய்க்காபாளன்  அல்லது  காவல்ர்  யாரும்  அவனுக்கு  பாதுகாப்புக்கு  இருக்க  மாட்டாங்களா? நாயகன்  அவ்வளவு  ஈசியா  வில்லனின்  பங்களாவுக்குள்  காவலை  மீறி  வர  முடியுமா? 


2  வில்லனைக்கொன்ற  நாயகன்  முதலில்  வில்லனை  அவன்  வீட்டிலேயே  ஒளித்து  வைக்கிறான், பின்  வேறு  இடத்துக்கு  மாற்றும்போது  டெட்  பாடியை  நல்லா  கவர்  பண்ணி  கொண்டு  போகாம  பெப்பரப்பேனு  அப்படியா  கொண்டு  போய்  மாட்டிக்குவாங்க , அதுக்கு  டெட் பாடி  குடோன்லயே  இருந்திருக்கலாம் 


3  நாயகன்  தன்  காதலை  நாயகியிடம்  வெளிப்படுத்தலை  , அது  ஓக்கே  ஆனா  நாயகி  தானாக  முன்  வந்து  காதலிக்கும்போது  நாயகன்  ஓவர்  தியாகி  ஆக  தன்னைக்காட்டிக்கொள்வது  செயற்கை 


4  க்ளைமாக்ஸ்  காட்சி  ஊர்  மக்கள்  ஒன்று  திரண்டு  வீரர்களை மடக்குவது  சினிமாத்தனம் + செயற்கை 


5  வில்லனின்   காலை  நாயகன்  வெட்டுனதும்  அதிகப்படியான  ரத்த  இழப்பால்  உடனடியாக  மயக்கம்  தான்  வரனும் , ஆனால்  வில்லன்  நாயகன்  கூட  ஒத்தைக்காலுடன்  ஃபைட்  போடுவது  எல்லாம்  செம  காமெடி 





 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-   வெட்டும்  காட்சி  மட்டும்  தான். யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   சுவராஸ்யமான  பின்னணியில்  ஒரு  காதல்  கதை , தாராளமாகப்பார்க்கலாம்,. நாயகியின்  அழகு  + செம  ஹிட்  பாட்டு 3 க்காகவே  பார்க்கலாம் . ரேட்டிங் 2.75 / 5 


August 16 1947
Official poster of 16 1947.jpg
Directed byN. S. Ponkumar
Written byN. S. Ponkumar
Produced by
Starring
CinematographySelvakumar S. K.
Edited byR. Sudharsan
Music bySean Roldan
Production
companies
A. R. Murugadoss Productions
Purple Bull Entertainment
God Bless Entertainment
Release date
  • 7 April 2023
Running time
144 minutes
CountryIndia
LanguageTamil
Box officeest.₹1 crore[1]

0 comments: