Monday, May 22, 2023

JAWANUM MULLAPPOOVUM (2023) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( சஸ்பென்ஸ் த்ரில்லர்) @அமேசான் பிரைம்

     


 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு  டீச்சர். இவரது  கணவர்  15  வருடங்கள்  மிலிட்ரியில் பணியாற்றி  இப்போது  ஊருக்கு  வந்து  செக்யூரிட்டி  வேலை  பார்ப்பவர்., இவர்களுக்கு 13  வயதில் ஒரு  மகள்  உண்டு .கணவருக்கு  முல்லைப்பூ  வாசம்  அலர்ஜி . திருமணத்தன்று  கூட  நாயகி கூந்தலில்  சூடி  இருந்த  முல்லைப்பூவால்  அலர்ஜி  ஏற்பட்டு  தொடர் தும்மல் போட்டவர் ,ஆனால்  நாயகிக்கு  முல்லைப்பூ  என்றால்  மிகவும்  இஷ்டம் . இது  குறித்து  இருவருக்கும்  அடிக்கடி  சண்டை  வரும் 


நாயகி  டீச்சராக  இருப்பதால் ஸ்பெஷல்  கிளாஸ் , கல்ச்சுரல்  புரோகிராம்  உட்பட  பல  விஷயங்களுக்காக  பலரும்  அடிக்கடி  நாயகிக்கு  ஃபோன்  செய்வார்கள் , வாட்சப்பில்  மெசேஜ்  அனுப்புவார்கள் . எப்போப்பாரு  ஃபோனும்  கையுமா  இருக்கிறாளே  என்று  கணவருக்கு  மனைவி  மீது  சந்தேகம்,  மனைவியின்  செல் ஃபோனை  எடுத்து  அடிக்கடி  செக்  செய்பவர்.


ஒரு  நாள் மகள்  பள்ளி  விழாவுக்காக  திருவனந்தபுரம்  செல்ல வேண்டிய  சூழல் , கணவனும்  , மகளும் ஊரில்  இல்லை ,வீட்டில்  நாயகி  தனியாக  இருக்கிறார்.. அப்போது  நாயகி  சிஸ்டம்ல  ஒர்க்  செய்து  கொண்டு  இருக்கும்போது தவறுதலாக  கை பட்டு  போர்ன்  வெப்சைட்க்கு  போய்  விடுகிறது. அதை  சரி  செய்வதற்குள்  சிஸ்டத்தில்  போலீஸ்  சைரனுடன்  மெசேஜ்  வருகிறது . சைபர்  கிரைம்  போலீசால்  உங்கள்  கம்ப்யூட்டர்  லாக் செய்யப்பட்டு  விட்டது . இதை  ரிலீஸ்  செய்ய  குறிப்பிட்ட  தொகையை  இந்த்  நெம்பருக்கு  இண்ட்டர்நேஷனல்  டெபிட்  கார்டு  மூலம்  ட்ரான்ஸ்ஃபர்  செய்ய  வேண்டும் 


நாயகிக்கு  என்ன  செய்வதென்றே தெரியவில்லை , பள்ளியில்  சைபர்  கிரைம் அவார்னெஸ்   புரோகிராம்  நடத்தும்  ஆளைத்தொடர்பு  கொண்டு  விபரத்தை  சொல்கிறார். கடும் மழை  பெய்து  இருக்கும்  சூழ்நிலையில்  வில்லன்  அங்கே  வருகிறான். சூழ்நிலையை  தனக்கு  சாதகமாக்க  நினைக்கிறான். அதே  ச்மயம்  கணவர்  வீட்டுக்குத்த்திரும்புகிறார். இதற்குப்பின்  என்ன  நடந்தது  என்பதுதான் திரைக்கதை 


நாயகி  ஜெயஸ்ரீ  டீச்சராக   சிவதா  நாயர்  மங்களகரமான  முகம், டீச்சருக்கான  மிடுக்கு , கண்ணியமான    உடை  என  கச்சிதமாக  நடித்திருக்கிறார்/ வில்லனிடம்  மாட்டிக்கொண்டு  பரிதவிக்கையில்  பயத்தை  நம்மில்  கடத்துகிறார்


சந்தேக  புத்திக்கணவராக  வருபவர்  நன்றாக  நம்மிடம் எரிச்சலை  சம்பாதிக்கிறார். வில்லனாக   வரும்  சைபர்  கிரைம் கோச்சிங்க்  கிளாஸ்  டீச்சர்  சரியான  வில்லத்தனம்  காட்டுகிறார்


மாத்தை  சுனில்  இசையில் இரண்டு  பாடல்கள்  ஹிட்  ஆகி  உள்ளன, பிஜிஎம் மில்  இன்னும்  மிரட்டி  இருக்கலாம். சனல்  அன்ருதன்  கச்சிதமாக  2  மணி  நேரம்  13  நிமிடங்கள்  ஓடுமாறு  ட்ரிம்  பண்ணி  எடிட்டிங்  செய்திருக்கிறார். இந்தகதைக்கு  ஒன்றரை  மணி  நேரமே  அதிகம், ஷியால்  சதீஷின்  ஒளிப்பதிவு  கச்சிதம் 


பெண்களுக்கான  சமூக  விழிப்புணர்வுக்கதையை  எழுதி  திரைக்கதை  அமைத்திருப்பவர்   சுரேஷ்  கிருஷ்ணன். இயக்கம்  ரகுமேனன். அமேசான்  பிரைம் ஓடி டி  யில்  கிடைக்கிறது 


சபாஷ்  டைரக்டர்


1  அரை  மணி  நேரக்குறும்படமாக  எடுக்க  மட்டுமே  கண்ட்டெண்ட்  உள்ள  கதையை  ரெண்டே  கால்  மணி  நேரம்  இழுத்தது 


2  டைட்டில் குத்து  மதிப்பாக  வைத்து  விட்டு  அதை  ரிலேட்  பண்ணிக்க  மெயின்  கதைக்கு  சம்பந்தமே  இல்லாமல்  காட்சிகள்  வைத்தது


3  அடல்ட்  கண்டெண்ட்  உள்ள  கதையை  யூ படமாக  கண்ணியமாக  எடுத்தது 


ரசித்த  வசனங்கள் 


1   ஒரு  பெண்ணுக்கு  எப்போது  தோல்வி  ஏற்படுகிறது  தெரியுமா?  அவளது  துணை  அவளைப்புரிந்து  கொள்ளாமல்  சந்தேகப்படும்போது , அவள்  என்ன  செய்தாலும்  அதில்  குற்றம்  கண்டு பிடிக்கற  ஆள்  துணையா  வந்தால் ... 


2    நைட்  டைமில்  இவ்ளோ  சத்தமா  மிக்சி  அரைச்சா  பக்கத்து  வீட்டில் எப்படி  நாங்க  தூங்குவ்து ?


 சரி சரி   சைலன்சர்  வெச்ச  மிக்சி  வாங்கிக்கறோம்


3  நோ  என்பதற்கு  என்ன  அர்த்தம்  தெரியுமா?  நெக்ஸ்ட்  ஆப்புர்ச்சுனிட்டி  லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  சிஸ்டம்  அல்லது  ஃபோன்  ஹேங்  ஆனால் அதை  ஆஃப்    பண்ணி  ஆன்  பண்ணினா  போதும்  என்ற  நாலெட்ஜ்  சின்னபையனுக்குக்கூடத்தெரியும். டீச்சருக்கு  ஏன்  தெரியலை ? 


2   சக  டீச்சர்களில்  யாருக்காவது  ஃபோன் பண்ணி  ஐடியா  கேட்டிருக்கலாம், ஏன்  செய்யவில்லை ? 


3   வில்லன்  தன்  செல்  ஃபோனை  சார்ஜ்  போடறேன்  என  சொல்லி காமிராவை  ஆன்  பண்ணி  வைத்துட்டுப்போன  பின்  அதே  ரூமில்  நாயகி  டிரஸ்  மாற்றுவது  நம்ப  முடியலை . பெண்கள்  அவ்வளவு  உஷார்  இல்லாமயா  இருப்பாங்க ? 


4 வீட்டில்  வில்லனைத்தவிர  யாரும்  இல்லாத  சூழலில்  நாயகி  மழையில்  நனைந்ததால்  உடை  மாற்ற  வேண்டிய  சூழலில்  சுடிதார்  தானே  இட  வேண்டும் ? ஏன்  சேலை ?  (  திரும்பி  வரும்  கணவன்  கரெக்டா  அதை  சொல்லிக்காட்றான், இந்நேரத்துல  எதுக்கு  சேலை ?}


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  நல்ல  விழிப்புணர்வுக்கதைதான்  ஆனா   ஜவ்வா  இழுத்துட்டாங்க  முடியல  ரேட்டிங் 2 / 5 


Jawanum Mullappoovum
Jawanum Mullapoovum.jpg
Theatrical release poster
Directed byRaghu Menon
Written bySuresh Krishnan
Screenplay bySuresh Krishnan
Produced by
  • Sameer Sait
  • Vinod Unnithan
Starring
CinematographyShyal Satheesh
Edited bySanal Anirudhan
Music by
Production
company
2 Creative Minds
Release date
  • 31 March 2023[2]
Running time
118 mts
CountryIndia
LanguageMalayalam

0 comments: