Saturday, May 27, 2023

இமைகள் - பாலாஜி சக்திவேல்- MODERN LOVE CHENNAI (2023) -மாடர்ன் லவ் சென்னை - தமிழ் - வெப்சீரிஸ் விமர்சனம் ( லவ் ஆந்தாலஜி )@ அமேசான் பிரைம்


  தனது  முதல்  படமான  காதல்   மெகா  ஹிட்  தந்த  இயக்குநர் பாலாஜி  சக்திவேல்  அதற்குப்பின்  கல்லூரி , வழக்கு எண் 18/9 போன்ற  கவனிக்கத்தக்க  படங்களைக்கொடுத்தார். பிறகு  தன்  கலைப்பயணத்தை  நடிகராகத்தொடர்ந்தவர்  நீண்ட  இடைவெளிக்குப்பின்  இயக்க்நர்  அவதாரத்தை  மீண்டும்  எடுத்திருக்கிறார்  

  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் , நாயகி  இருவரும்  கல்லூரி  மாணவர்கள் . நாயகன்  தன்  காதலை  வெளிப்படுத்தும்போது  தனக்கு  வித்தியாசமான , அபூர்வமான  கண்  பார்வை  தொடர்பான  நோய்  இருப்பதாக  நாயகி  கூறுகிறாள். அதாவது  கொஞ்சம்  கொஞ்சமாக  பார்வை  மங்கி  அடுத்த  10  வருடங்களில்  முழுவதுமாகவே  பார்வை  பறிபோய்விடும்  நோய்/. இதற்கு  சிகிச்சை  இல்லை 


 இருந்தும்  நாயகன்  தன்  காதலில்  தீவிரமாக  இருக்கவே  நாயகி  காதலுக்கு  சம்மதம்  தெரிவிக்கிறாள் . இருவருக்கும்  திருமணம்  நடக்கிறது . ஒரு  குழந்தை  பிறக்கிறது . 


அந்தகுழந்தைக்குத்துணையாக  இன்னொரு  குழந்தை  பெற்றுக்கொள்ளலாம்  என  நாயகன்  சொல்லும்போது நாயகி  அதற்கு  எதிர்ப்பு  தெரிவிக்கிறாள் . பார்வை  சரி  இல்லாததால்  ஒரு  குழந்தையையே  கவனித்துக்கொள்வது  சிரமமாக  இருக்கிறது . இன்னொரு  குழந்தையா? என  மறுக்கிறாள் . இதனால்  இருவருக்கும் இடையே  மன்ஸ்தாபம்  வருகிறது . இதற்குப்பின்  இவர்கள்  வாழ்வில்  நடக்கும்  சம்பவங்கள்  தான்  கதை 


 ஆறு  கதைகளில்  மீதி ஐந்து  கதைகளும்  காதல்  பற்றிப்பேச  இது  மட்டும்  தான்  கல்யாணம், குடும்பம்  என  பேசுகிறது . பிராக்டிகல்  டிஃபிகல்ட்டீஸ்  பற்றி  அலசிஆராய்ந்திருக்கிறார்கள் 


 நாயகனாக  அசோக்  செல்வன். குறை  சொல்ல  முடியாத  நடிப்பு . கோபத்தில்  மனைவியைத்திட்டி  விட்டு  பின்  மனம்  வருந்தி  சாரி  கேட்கும்  காட்சியில்  சைன்  பண்ணுகிறார். ஆனால்  இவரது பர்சனாலிட்டிக்கும்  வயதுக்கும்  சம்பந்தம்  இல்லாமல்  நாயகியின்  தோற்றம்


நாயகியாக பானு.பிளஸ்  டூ  மாணவி   போன்ற  தோற்றம். குழந்தைக்கு  அம்மா  வாக  வயது  முதிர்ந்த  தோற்றத்தில்  100%  பொருந்தவில்லை . அவரது  குரல்  அல்லது  டப்பிங்  குரல்  எடுபடவில்லை . அவரது  அமைதியான  முகத்திற்கும்  குரலுக்கும்  மேட்ச்  ஆகவில்லை 


காலையில்  பள்ளிக்கு  குழந்தையை  ரெடி  பண்ண  கணவன்  உதவவில்லை  என்ற  கோபத்தைக்காட்டுவது  கச்சிதம் , ஆனால்  நாயகன்  நாயகியை  நடுரோட்டில்  கோபத்தில்  விட்டுச்செல்வது  செயற்கை . இருவரது  கேரக்டர்  டிசைனும்  கொஞ்சம்  குழப்படி  தான் 


காதலிக்கும்போது  இருக்கும்  மயக்கம்  கல்யாண  வாழ்க்கையில்  தொடர்வது  சிரமம்  என்பதுதான் இயக்குநர்  சொல்ல  வந்த  கருத்து  எனில்  அதில்  வெற்றி. குடும்ப்ப்பாங்கான   நல்ல  கதை 


யுவன்  சங்கர்  ராஜாவின்  இசை  அருமை  எனில் ஜீவா  சஙகரின்  ஒளிப்பதிவு  அட்டகாசம் 


செம  ஹிட்  சாங்க்ஸ்

1 குக்கூனு  கூவும்  காகம்  நீ

2  பேரன்பே  எனது  கண்ணில்  கிழக்கு  நீதானே?


  ரசித்த  வசனங்கள் 


1   நீ போனதுக்காக  அழலை , ஆனா  நீ  என்னை  விட்டுப்போகமாட்டே-னு  நம்புனேன், அந்த  நம்பிக்கை வீணாப்போயிடுச்சேனு  அழுதேன்

சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் - காதலிக்கும்போது  எல்லாமே  இனிமையாகத்தான்  இருக்கும், குடும்ப  வாழ்க்கையில்  பயணிக்கும்போதுதான்  அதில்  உள்ள  வலிகள்  தெரியும்  என்ற  கருத்தை  முன் வைத்து  எடுக்கப்பட்ட  தரமான  குடும்பப்படம் . ரேட்டிங்  3/5 
0 comments: