Sunday, May 28, 2023

காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கற எமோஜி MODERN LOVE CHENNAI (2023) -மாடர்ன் லவ் சென்னை - தமிழ் - வெப்சீரிஸ் விமர்சனம் ( லவ் ஆந்தாலஜி )@ அமேசான் பிரைம்


    ரேஷ்மா  கட்டலா  வின்  கதை , திரைக்கதை யை இயக்குநர்   கிருஷ்ணகுமார்  ராம்குமார்  இயக்கி இருக்கிறார். ஹீரோயின் ஓரியண்டட்  சப்ஜெக்ட்  என்பதால்  ஹீரோயின்  கொஞ்சம்  ஓவர்  ஆக்டிங்  பண்ணி  விட்டாரோ  என்னவோ? மலையாளத்தில்  வெளியான  ஜூன் , ஹிந்தியில் வெளியான ஓம்  ஷாந்தி  ஒசானா  படத்தையும்  ஆங்காங்கெ  நினைவூட்டுகிறது

  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு  சினிமா  பைத்தியம், எல்லா  ஹிட்  படங்களையும்  பார்த்து  அதில்  வருவது  போல  நமக்குக்காதல்  வர  வேண்டும்  என  நினைப்பவர்.ஸ்கூலில்  படிக்கும்போது  ஒருவனைக்காதலிக்கிறாள் , அவன்  என்னடான்னா  சாப்பாட்டு  ராமனாக  இருக்கிறான், நாயகியைக்கண்டு  கொள்ளவில்லை . 


அடுத்து  காலேஜ்  வாழ்க்கையில்  ஒருவனைக்காதலிக்கிறாள் . அவனும்தான். இருவரும்  காதல்  வானில்  சிறகடித்துப்பறக்கலாம்  என  நினைக்கும்போது  ஒரு  நாள்  தன்  காதலன்  வேறு  ஒரு  பெண்ணுடன்  நெருக்க,மாக  இருப்பதைப்பார்த்து  விடுகிறாள்  நாயகி 


பிரேக்கப்  பண்ணி  விட்டு கொஞ்ச  நாள்  சோகமாக  இருக்கிறாள் . பிறகு  டேட்டிங்  ஆப்  மூலம்  பல  இளைஞர்களை  இண்டர்வ்யூ  எடுத்து  எதுவும்  தேறாமல்  மீண்டும்  சோகம்  ஆகிறாள் 


பெற்றோராகப்பார்த்து  ஒரு  அரேஞ்சுடு  மேரேஜ்  செய்து  வைக்கிறார்கள் . அது  சக்சஸ்  ஆனதா? என்பது  க்ளைமாக்ஸ் 


 நாயகி  ஆக  ரிது  வர்மா . ஸ்கூல் லைஃப் , காலேஜ் லைஃப்  இரண்டு  கால  கட்டங்களிலும்  இவரது  ஹேர் ஸ்டைல்  சகிக்க  வில்லை . பிறகு  ஓரளவு  பரவாயில்லை . பல  இடங்களில்  ஓவர்  ஆக்டிங் 


 இவருக்கு  ஜோடியாக  வரும்  அனிரூத்  கனகராஜன் ,பவன்  அலெக்ஸ் , அகிலன்  மூவரும்  பரவாயில்லை  என்றாலும்  கணவனாக  வரும்  வைபவ்  கலக்கி  விட்டார் . முழுக்கதையில்  ஓவர்  ஆக்டிங்  இல்லாமல்   யதார்த்தமான  நடிப்பு  இவருடையதுதான் 


க்ளைமாக்ஸ்  போர்சன்  கச்சிதம் 


ஜி வி  பிரகாஷின்  இசை  பின்னணி  இசை  கனகச்சிதம் 


 ரசித்த  வசனங்கள் 


1  என்  காதல்  நிறைவேற  எந்த  எக்ஸ்ட்ரீம்  லெவலுக்கும்  போவேன்


 சரி , அவனைக்கல்யாணம்  பண்ணிக்குவியா? மாட்டியா? அதை  சொல்லு 


2  முட்டை  பப்ஸ்ல  பாதி  முட்டைதான்  இருக்கு  என்பதற்காக  அதை  [பாதி  முட்டை  பப்ஸ்னு  சொல்ல  முடியுமா?  அது  மாதிரிதான்  என் காதலும், ஒருதலைக்காதலா  இருந்தாலும்   அது  முழுமையான  காதல்தான் 


3  உன்னை  சரியாத்தெரியாதே? எப்படி  டேட்டிங்  வர ?


  சரியாத்தெரிஞ்சுக்கத்தான்  டேட்டிங் 


4 பொண்ணுங்களுக்கு  லவ்  சாங்க்ஸ்  ஆயிரக்கணக்கில்  இருக்கு , ஆனா பிரேக்கப்  பாட்டு  ஒண்ணு  கூட  இல்லை 


5   மோர்  குடிச்சு  உண்ணும்  விரதத்தை  முடிச்சுக்கறேன் 


6   நான்  ஒரு  கதாசிரியர் , கதை  தான்  வரும்  , என் கிட்டே  கேஷ்  வராது , பில்லை  நீயே  பே  பண்ணிடு 


7  சினிமா  தான் உலகிலேயே  சிறந்த  அழகான  ஃபிராடு 


8  உன்  வெட்டிங்  நைட்  இப்படி  ஆகும்னு  நீ  எதிர்பார்த்து  இருக்க  மாட்டியே?


 மேரேஜ்  ஆகும்னே  எதிர்பார்க்கலை


சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -  நம்ப  முடியாத  காட்சிகள் , செயற்கைத்தனமான  நடிப்பு , ஓவர்  ஆக்டிங்  எல்லாம்   மைனசாக  இருந்தும்  ரசிக்கும்படி  இருக்கிறது  என்பதுதான்  பிளஸ் . ரேட்டிங்   2.75 / 5


 


0 comments: