Monday, May 01, 2023

RAVANASURA (2023) - தெலுங்கு - VINCI DA (2019) - பெங்காலி - சினிமா விமர்சனம் ( அமேசான் பிரைம் , நெட் ஃபிளிக்ஸ் )

 


 RAVANASURA (2023) - தெலுங்கு - VINCI DA (2019) - பெங்காலி - சினிமா  விமர்சனம் ( அமேசான் பிரைம் , நெட்  ஃபிளிக்ஸ் )

 

2019 ஆம்  ஆண்டு  பெங்காலி  மொழியில்  வெளியான  சைக்கலாஜிக்கல் க்ரைம் கதையான  வின்சி டா  படத்தின்  அஃபிஷியல்   அடாப்டேஷன்   ராவண அசுரா அதே  திரைக்கதை  அல்ல , இது  மெடிக்கல்  க்ரைம்  த்ரில்லர் . அதனால  இரு பட  விமர்சனங்களையும்  இப்போ  பார்ப்போம் 

ஒரிஜினல் வெர்சன் 

ஸ்பாய்லர்  அலெர்ட் 

சட்டத்தை எப்படி எல்லாம் வளைக்கலாம் என வில்லன்கள் சொல்ல ஹீரோ எப்படி அவங்களை ஜெயிக்கிறார் என படம் எடுக்கும் டைரக்டர் எஸ் . சந்திர சேகர் + சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் ஊழல்களை ஒரு சாமான்யன் ஜெண்டில்மேனாக , இந்தியனாக, முதல்வன் ஆக, அந்நியன் ஆக எப்படி எல்லாம் அவதரித்து மக்களை ரட்சிக்கிறான் aஎன பிரம்மாண்டமாக படம் எடுக்கும் ஷங்கர் இந்த குரு சிஷ்ய காம்போ அமைந்தால் அந்தப்படம் எப்படி இருக்கும்? என்று கற்பனை செய்து பாருங்கள் அதுதான் இந்த படம், உங்களை மாறுபட்ட ஒரு அனுபவத்துக்கு தயார் செய்யும்

17 வயசு முடிஞ்சு 18 வயசு ஆக இன்னும் 6 மணி நேரம் தான் இருக்கு.அப்போ அந்தப்பையனோட அப்பா அவனோட அம்மாவை அடிச்ட்டு இருக்காரு . வேணாம்ப்பா, அம்மாவை அடிக்காதேனு சொல்றான், அப்பா கேட்கலை , கிரிக்கெட் பேட் எடுத்து அப்பாவை ஒரே போடு ஆள் அவுட் . இதுதான் ஒப்பனிங் சீன் , எபடி இருக்கும் ஆடியன்சுக்கு? கொலை செய்தவன் 18 வயது பூர்த்தி அடையாத மைனர் என்பதால் பெரிய தண்டனை இல்லாம தப்பிடறான், இவன் சட்டம் படிச்ச கிரிமினல் ஆகறான். இந்த கேரக்டர் இப்ப்டியே இருக்கட்டும், வாங்க , அடுத்த ஒரு கேரக்டர் அறிமுகம்

அவதாரம் படத்துல அரிதாரத்தைப்பூசிக்கொள்ள ஆசை அப்டினு பாட்டுப்பாடுன கேரக்டர் கொஞ்சம் சுதியை மாத்தி அரிதாரத்தைப்பூசி விட ஆசைனு பாடுனா? அதான் இந்த கேரக்டர் . மிகத்திறமையான ஒப்பனைக்கலைஞன். அவன் திறமை அபாரமானது . பலரிடம் சினிமா சான்ஸ் கேட்டுப்போறான் , எதுவும் சரியா அமையலை . விரக்தி அடைஞ்ச அவனை அந்த க்ரிமினல் யூஸ் பண்ணிக்க நினைக்கிறான்.

ஒரு பிரபலமான தொழில் அதிபர் , அவரைப்பற்றி பயோ பிக்சர் எடுக்கனும், அவரை மாதிரியே உருவ அமைப்பு , முக ஒற்றுமையுடன் கூடிய மேக்கப் போட்டு விடனும்னு ஹீரோ கிட்டே சொல்றான் வில்லனான கிரிமினல் லாயர் . அச்சு அசலா அந்த தொழில் அதிபர் மாதிரியே மேக்கப் போட்டு விடறான் ஹீரோ . அந்த தோற்றத்தில் ஒரு பேங்க் டி எம்ல கொள்ளை அடிச்சு கொலையும் செஞ்சு சிசிடிவி கேமராவில் ஆதாரம் ஆக்கி அந்த தொழில் அதிபரை சிக்க வைக்கறான் வில்லன்

இந்த மாதிரி 3 வெவ்வேற மேக்கப் , வெவ்வேற சம்பவங்கள் . தன்னை யூஸ் பண்ணி கொலை , கொள்ளை செய்யும் வில்லன் அடிப்படையில் நல்ல காரியம் தான் பண்றான் என்றாலும் அந்த சம்பவத்தால நல்லவங்களும் பாதிக்கப்படறாங்க என்பதை ஹீரோவால ஜீரணிச்சுக்க முடியல . தப்பு செஞ்சு சாட்சிகள் இல்லாம தப்பிக்கற பணக்கார கிரிமினல்களை அவங்க செய்யாத தப்புக்காக ஆதாரத்துடன் சட்டப்படி தண்டனை வாங்கித்தருவதுதான் வில்லனின் ஃபார்முலா

ஹீரோவுக்கும் , வில்லனுக்குமான இந்த செஸ் கேமில் செக் மேட் வைத்தது யார்? எப்படி? என்பது மீதி கதை

ஓப்பனிங் சீன்லயே வில்லன் இண்ட்ரோ ஆடியன்ஸ் மனசுல பச்சக்னு ஒட்டிக்குது. கொலை பண்ணி தப்பியவனை அதே போல் ஒரு கொலை செய்து அந்த கேசில் மாட்டிவிடுவது, கொள்ளை , திருட்டு கேசில் தப்பியவனை அதே டைப் திருட்டுக்கேசில் மாட்டி விடுவது எல்லாம் ஓக்கே , ஆனா ரேப் கேசில் தப்பியவனை அதே போல் ஒரு ரேப் கேசில் மாட்ட வைப்பதற்காக வில்லன் அப்பாவிப்பெண்ணை ரேப் பண்ணுவது எல்லாம் கொடூரம் . சைக்கோத்தனமான இந்த கேரக்டரை நல்லா பண்ணி இருக்கார் .

ஹீரோவா , மேக்கப் மேனா வர்றவர் தனக்கு வருமானம் இல்லை , நிரந்தர வேலை இல்லை என்பதால் காதலியிடம் பம்மிக்கொண்டே பழகுவது , காதலில் கண்ணியம் காப்பது, மனசாட்சி உறுத்துவது , தன் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காதபோதும் கலைஞனுக்குரிய கர்வம், கெத்து மெயிண்ட்டெயின் பண்ணுவது என பாராட்டும்படியான நடிப்பு

நாயகியா வ்ர்றவர் மிக இயல்பான பக்கத்து வீட்டுப்பெண் போன்ற தோற்றம். ஒப்பனை மிகை இல்லாமல் உடலில் நகை இல்லாமல் எளிமையான அழகுக்கு சொந்தக்காரர்.

இந்த மூன்று மெயின் கேரக்டர்களை வைத்து எழுதப்பட்ட திரைக்கதை மிக சிறப்பு . ஒரு இடத்தில் கூட தொய்வில்லை

ஒளிப்பதிவு , பின்னணி இசை , எடிட்டிங் பக்கா

சபாஷ் இயக்குநர்

1 நாயகன் நாயகி சந்திக்கும் இடங்கள் ஆர்ட் டைரக்டர் ரசனை தெரிகிறது . பிரமாதமான பின்னணி . ஒவ்வொரு சந்திப்பிலும் வெவ்வேறு லொக்கேசன்கள் , ரசிக்கும்படி தேர்வு செய்த விதம் அருமை

2 எடுத்துக்கொண்ட கதை மாமூல் கமர்ஷியல் ,மசாலா படத்துக்கானது என்றாலும் அதை படமாக்கிய விதத்தில் தன் தனி திறமையை காட்டி இது கலை கலந்த கமர்ஷியல் என ஆங்காங்கே உணர்த்திய விதம் குட்

3 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் யூகிக்க முடிந்தது என்றாலும் எக்ஸ்க்யூட் பண்ணிய விதம் சிறப்பு

4 பிரபல ஹிந்தி ஹீரோ நடைபாதை ஓர தொழிலாளர்கள் மேல் குடி போதையில் கார் ஏற்றி காயப்படுத்திய வழக்கை சாமார்த்தியமா திரைக்கதையில் கனெக்ட் பண்ணிய விதம்

நச் டயலாக்ஸ்

 ஒரிஜினல் வெர்சன்

1 ஒரு சப்ஜெக்ட் பற்றி வாதாடும் முன் அதைப்பற்றிய டீட்டெய்ல்ஸ் படிச்சு வெச்சுக்கறது நல்லது

2 சுய மரியாதை உள்ள கலைஞன் வெறும் பணத்துக்காக மட்டும் வேலை செய்வதில்லை

3 என்னை மாதிரி தொழில் பக்தி உள்ள ஒரு ஒப்பனைக்கலைஞன் கிட்ட மாறுபட்ட வித்தியாசமான மேக்கப் போட முடியுமா?னு கேட்பது மானை ருசிக்க முடியுமா?னு பசிச்ச புலி கிட்டே கேட்பது மாதிரி

4 ஒப்பனை பண்றவனோட கை ஒப்பனை செய்யப்படுபவனின் முகத்தில் படும்போது காதலியின் நிர்வாண உடலில் கை படுவது போலே உணர்வான்

5 காதலியின் உடலை முதன் முதலாக தொட்டு உணரும் ஸ்பரிசம் தான் ஒப்பனை இடுபவன் ஒவ்வொரு முறை ஒப்பனை செய்கையில் உணர்வான்

6 அநியாயத்தை தட்டிக்கேட்க கடவுள் தயங்கறப்ப ஒரு மனிதன் கடவுள் அவதாரம் எடுக்க வேண்டிய தேவை உருவாகுது

7 அமைதிக்கான நோபல் பரிசு எங்கே இருந்து கிடைச்சது தெரியுமா? பாம் வித்த பணத்தில் இருந்து

8 , டியர், நீ என்ன பண்றே?ங்கறது எனக்கு முக்கியம் இல்லை , ஆனா உன் கூட நான் இருப்பேன்

9 எனக்கும் உனக்கும் செட் ஆகுமா?னு தெரில , ஏன்னா நான் கனவுகளை துரத்துபவன்

10 பேங்க்கை கொள்ளை அடிச்சதா என் மேல குற்றம் சாட்றீங்க, ஆனா நான் நினைச்சா ஒரு பேங்க்கையே வாங்க முடியும் இருக்கலாம், ஆனா போலீசை வாங்க முடியாது

 

 அடாப்டட் வெர்சன்

 

11 உண்மைக்கு கொஞ்சம் பொறுமை அவசியம்

 

12 எல்லா மனுசங்களுக்கும் எம் ஆர் பி இருக்காது , என்னை மாதிரி ஆட்களை விலைக்கு வாங்க முடியாது

 

13 எருமை இருக்குனு கயிறு வாங்கலாம், ஆனா கயிறு இருக்குனு எருமையை வாங்க முடியாது

 

14 ஒவ்வொரு மனுசனும் அவனுக்குப்பிடிச்ச ஒருவிசயத்தை வாழ்க்கைல மறக்க முயற்சி பண்ணிட்டே இருப்பான், மறதி மட்டும் இல்லைன்னா மனுச வாழ்க்கை நரகம் தான்

 

15 உங்க அப்பா யாரைப்பார்த்தாலும் சாந்தி சாந்தினு கூப்பிடறாரே? சாந்தி என்பது உங்க அம்மாவா?

 

இல்லை , அவருக்கு ட்ரீட்மெண்ட் பார்த்த லேடி டாக்டர் ... நர்ஸ் , ஜாக்கிரதை எனக்கு சித்தி ஆகாம பார்த்துக்குங்க

 

 

16 அப்பா ஜெயிலில் இருந்தாலும் , புருசன் சி யு வில் இருந்தாலும் இந்தப்பொண்ணுங்க லிப்ஸ்டிக் இல்லாம வெளில வர மாட்டாங்க

 

17 சார் , என்னையவே சந்தேகப்படறீங்களா?

 

உன்னை எப்படா நம்பினேன் ?

 

18 ஆந்த ஃபேஸ் கனெக்ட் ஆகித்தான் இந்தக்கேஸ்லயே நான் கமிட் ஆனேன்

 

19 நீ டிஃபென்ஸ் லாயரா இருக்கலாம், ஆனா நான் ரொம்ப டிஃப்ரண்ட் லாயர்

 

20 ஒவ்வொரு கிரிமினலும் அவன் பண்ற கிரைம்ல அவன் சிக்னேச்சரை விட்டுட்டுப்போவான்

 

21 வரும்போது கதவைத்தட்டிட்டு வரனும்கற மேனர்ஸ் தெரியாதா?

 

ரொமான்ஸ் பண்றப்போ உள் கதவை தாழ் போட்டுக்கனும்

 

22 சட்டத்துல ஒவ்வொரு கேஸ்லயும் ஏதாவது ஒரு ட்விஸ்ட் இருக்கும்

 

 

23 ராவணன் கிட்டே சீதா ஒரு வருசம் இருந்தும் டச் பண்ணலைனு சொல்வாங்க ஆனா இந்த ராவணன் கிட்டே அப்படி எந்த எதிக்ஸ்சும் இல்லை

 

24 எனக்கு லா ( LAW) - எல்லா ஃப்ளா (FLAW) வும் தெரியும்

 

25 எவ்ளோ பெரிய கிரிமினல் ஆக இருந்தாலும் போலீசோட கண்ணைப்பார்க்கும்போது ஒரு பயம் இருக்கும், ஆனா இவன் கண்ல பயமே இல்லை

 

26 அவன் கிரிமினல் லாயர் இல்லை , லா படிச்ச கிரிமினல்

 

27 இன்ஃபர்,மேசன் ஈஸ் வெல்த் , பட் சம் இன்ஃபர்மேஷன் ஈஸ் இஞ்ஜூரியஸ் டூ ஹெல்த்

 

28 நான் யாரையாவது போட்டுத்தள்லனும்னு முடிவு பண்ணிட்டா அவன் மேல ஒரு கண்ணை எப்பவும் வெச்சிருப்பேன், அதே சமயம் என்னை யாராவது போட்டுத்தள்ள பிளான் பண்ணினா என் ரெண்டு கண்களும் அவன் மேல வெச்சிருப்பேன்

 

29 இந்த பூமில என்னைத்தடுக்கறதுக்கு யாராவது இருக்காங்கன்னா அது நாந்தான்

 

30 காட்டுக்குள்ளே புலியையும், தண்ணீர்க்குள் முதலையையும், கோர்ட்டுக்குள் என்னையும் சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்

 

31 ஆம் நாட் இன் டேஞ்சர் , ஆம் டேஞ்சர் ( நான் ஒண்ணும் அபாயத்தில் இல்லை , அந்த அபாயமே நான் தான் )

 

32 கொலை பண்றது ஒரு க்ரைம், அதுல மாட்டிக்காமதப்பிக்கறது ஒரு கலை , நான் ஒரு கலைஞன்




லாஜிக் மிஸ்டேக்ஸ்

 

ஒரிஜினல் வெர்சன்

1 வில்லனோட கிரிமினல் மூளை போடும் திட்டப்படி ஒரு ஆளின் முகம் போல மேக்கப் போட்டு போலியான அலிபி ஏற்படுத்துவது ஓக்கே , ஆனா குறிப்பிட்ட அந்த ஆள் அதே டைம்ல வேற ஏரியாவில் வேற ஒருவர் கூட இருந்ததை நிரூபிக்கும் வாய்ப்பு இருப்பதைக்கூடவா சிந்திக்க மாட்டான்? அவனை ஒரு இடத்தில் அடைச்சு வெச்சுட்டு அதை செஞ்சிருந்தா பக்கா பிளான்

2 ஓப்பனிங் சீனில் மகன் அப்பாவை அடிக்கும்போது அம்மா அதை தடுக்க முற்படவே இல்லை . அப்போ மகன் செயலை விரும்புகிறார் அம்மா என்பது போல் தோணுது. ஆனா பிறகு மகனை ஏற்றுக்கொள்ள மறுத்து தனியே அம்மா செல்வது எப்படி?

3 வில்லனான கிரிமினல் தனது கடைசிக்குற்றத்தைப்புரியும்போது சிசிடிவி கேமராவைப்பார்த்து நக்கலாக சிரிப்பது சந்தேகத்தை விளைவிக்காதா?

4 க்ளைமாக்சில் முக்கியமான சீனில் ஹீரோ வில்லனைப்பார்த்து கொஞ்சம் தண்ணி கிடைக்குமா? என கேட்கும்போது வில்லன் எழுந்து ரூமில் இருந்து வாட்டர் பாட்டில் கொண்டு வரும் கேப்பில் ஹீரோ வில்லனுக்கான மது கோப்பையில் விஷம் கலப்பது போல சீன். ஓக்கே., ஆனா வில்லனிடம் சம்பளம் வாங்கும் வேலையாள் போன்ற ஹீரோ தண்ணி கேட்கும்போது உள்ளே இருக்கு , போய் எடுத்துக்கோனு ஓனர் சொல்வாரா? ஓனரே எந்திரிச்சுப்போய் தண்ணி எடுத்துத்தருவாரா?

 

 அடாப்டட் வெர்சன்

 

1 ஹீரோ மாறு வேடம் போட்டு கொலை பண்ணும்போது கைல ஒரு காயம் ஆகிடுது . அதுக்கு பேண்டேஜ் கூடவா போட மாட்டார் , லூஸ் மாதிரி அப்படியே காயத்தை கண்டுக்காம விட்டதும் இல்லாம வெள்ளை ஃபுல் கை சட்டை போட்டு ரத்தம் லீக் ஆக விட்டுட்டு போலீஸ் கிட்டே மாட்டுவாரா?

 

2 கிரிமினல் ஆன ஹீரோ ஸ்ரீகாந்த் முகம் உள்ள மாஸ்க் போட்டுட்டு வ்ந்து ஹீரோயினை ரேப் பண்ண வர்றப்ப செக்யூரிட்டியைகூப்பிடுகிறார் ஹீரோயின் , பின் மாடி ஏறி ஒரு ரூம்க்கு போறார். ஃபைட் 5 நிமிசம் நடக்குது. பின் ஹீரோ மேலே ஏறி வரும் வரை ஹீரோயின் ரூம் கதவை தாழ் போடாம சும்மா சாத்தி மட்டும் வெச்சிருக்கார், அது ஏன்?

 

3 ஸ்ரீ காந்த் முக மாஸ்க் போட்டுட்டு ஹீரோ ஹீரோயினை ரேப் பண்ணினதுக்கு ஆதாரம் ஈசியா பிரேக் பண்ணலாமே? டி என் டெஸ்ட் , செமன் டெஸ்ட் எடுத்தா ஆள் மாறாட்டம் தெரியுமே?

 

4 ஹீரோ போலீஸ் ஆஃபீசரான ஜெயராம் கிட்டே தன்னிலை விளக்கம் அடிக்கடி கொடுக்கறார். அதை ஆடியோ ரெக்கார்ட் பண்ணாலே அது எவிடென்ஸ் ஆகி இருக்குமே? ஏன் செய்யல ?

 

 அடாப்டட் வெர்சன்

 

நாயகனோட அப்பா ஒரு சுகர் பேஷண்ட் .சர்க்கரை நோய்க்கான ஒரு புது மருந்தை மார்கெட்டுக்குக்கொண்டு வரும் மாஃபியா கும்பல் அந்த மருந்தில் சைடு எஃபக்ட் இருக்கு என்பதை மறைத்து சந்தைப்படுத்திடறாங்க. அந்த மருந்தை சாப்பிட்ட நாயகனோட அப்பா வித்தியாசமான வியாதியால் பாதிக்கப்படறார்

 

 

இந்த விபரம் எல்லாம் தெரிந்த டாக்டர் சாந்தி என்பவரை அடியாட்கள் இருவரை வைத்து ரேப் அண்ட் மர்டர் பண்ணிடறாஙக. இந்த மாஃபியா கும்பல்ல மினிஸ்டர் , போலீஸ் அஃபீசர் , டாக்டர் உட்பட 10 பேர் இருக்காங்க . இந்த பத்துப்பேரையும் நாயகன் வித்தியாசமான முறைல எப்படி பழி வாங்கினான் என்பதுதான் கதை

 

நாயகன் ஆக மாஸ் மகாராஜா ரவி தேஜா . ஸ்டைலிஷான அவரது உடல் மொழி டான்ஸ் , ஃபைட் என கை தட்டல் பெற வைக்கும் மசாலா ஆக்சன்.

 

அவரைப்பிடிக்க முயற்சிக்கும் போலீஸ் ஆஃபீசராக ஜெயராம். நாயகனுக்கு கோடியாக இதில் 3 பேர் . மேகா ஆகாஷ் தான் மெயின் ஜோடி . அழகிய முகம். பின் பாதியில் இவரை வில்லி ஆக்குவது ஓவர். ஃபரியா அப்துல்லா வக்கீலாக வந்து காமெடி பண்றார். அவர் காலேஜ் படிக்கும்போது ஹீரோ முன்னாள் லவ்வர் என்பதெல்லாம் ஒரிஜினல் வெர்சனில் இல்லாத புது போர்சன் . இன்னொரு லவ்வராக அனு இம்மானுவல் பார்வையே வித்தியாசம், ஆனால் அதிக வாய்ப்பில்லை

 

ஸ்ரீகாந்த் இதில் ஒரு வில்லன் ரோலில் வருகிறார், ஆள் இன்னும் செம ஸ்மார்ட் லுக்

மூன்று  பாடல்கள்  செம  ஹிட்  மூன்று  பேர்  இசை  அமைச்சிருக்காங்க . ரெண்டு  பேர்  ஒளிப்பதிவு  பண்ணி  இருக்காங்க . கலர் ஃபுல்லா  காட்சிகள்  இருக்கு   

 

 சி.பி . கமெண்ட் = ஒரிஜினல் வெர்சன் அச்சு பிச்சு காமெடி டிராக்கோ , டூயட் சீன்களோ வேகத்தடைகளாக இல்லாமல் ஒரு பெங்காலிப்படம் இவ்ளோ த்ரில்லிங்கா இருப்பது ஆச்சரியமா இருக்கு , அமேசான் பிரைமில் கிடைக்குது , டோண்ட் மிஸ் இட் . ரேட்டிங் 3.75 / 5




 

Vinci Da
Vinci Da (2019 flim poster).jpg
Film poster
Directed bySrijit Mukherji
Screenplay bySrijit Mukherji
Story byRudranil Ghosh
Srijit Mukherji
StarringRudranil Ghosh
Ritwik Chakraborty
Anirban Bhattacharya
Sohini Sarkar
Bharat Kaul
Gautam Moitra
CinematographySudipta Majumdar
Edited byPronoy Dasgupta
Music byIndradeep Dasgupta
Production
company
Release date
  • 12 April 2019
CountryIndia
LanguageBengali

  அடாப்டட் வெர்சன்

RAVANASURA (2023) வெர்சன்- ஒரிஜினலை விட தரத்தில் குறைந்தாலும் வழக்கமான ஆக்சன் மசாலாவாக பி சி செண்ட்டர் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் இருக்கிறது . ரேட்டிங் 2.75 /5


Ravanasura
Ravanasura film.jpg
Theatrical release poster
Directed bySudheer Varma
Written bySudheer Varma
Srikanth Vissa
Produced byAbhishek Nama
Ravi Teja
StarringRavi Teja
Jayaram
Sushanth
Anu Emmanuel
Megha Akash
Daksha Nagarkar
Pujita Ponnada
CinematographyVijay Kartik Kannan
G. K. Vishnu
Edited byNaveen Nooli
Music byHarshavardhan Rameshwar
Bheems Ceciroleo
Production
company
Release date
  • 7 April 2023
Running time
140 minutes[1]
CountryIndia
LanguageTelugu
Budget₹50 crore[2]
Box office₹21.15 crore[3]a





 

0 comments: