Saturday, May 13, 2023

யாத்திசை (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஹிஸ்டாரிக்கல் ஆக்சன் டிராமா) @ அமேசான் பிரைம்

 


  பாகுபலி  2  பாகங்களாக  வெளிவந்து  அள்ளிக்குவித்த  வெற்றிதான் மணிரத்னத்தை  பொன்னியின்  செல்வன் படம்  எடுக்கத்தூண்டுகோலாக  அமைந்தது .இந்த  இரண்டுமே  பெரிய  பட்ஜெட்  படங்கள் , ஆனால்  மிகக்குறைந்த  முதலீடு, ஆனால் மிகத்தரமான  படம்   என்ற  ஃபார்முலாவில்  வெளிவந்திருக்கும்  யாத்திசை  தமிழ்  சினிமா  உலகில்  ஒரு  புது  முயற்சி , முற்றிலும்  புது  முகங்களை  வைத்து  தன்  மேக்கிங்கில்  மிரட்டி  இருக்கும்  இயக்குநர்  தரணி ராஜேந்திரனுக்கு  ஒரு  பூங்கொத்து. 2018 ஆம்  ஆண்டு  ரிலீஸ்  ஆன  ஞானசெருக்கு  என்னும்  படம்  தான்  இவரது  முதல்  படம் . திரை  அரங்குகளில்  வெளியாகும்  முன்பே  பல  திரைப்பட  விழாக்களில்  விருதுகளைக்குவித்தது  அவரது  முதல்  படம் ,  இந்த  இரண்டாவது  படமான  யாத்திசை  கமர்ஷியலாகவும்  ஹிட்  ஆகி   விமர்சன  ரீதியாகவும்  பாராட்டுக்களைப்பெற்று  வருகிறது 

ஏழாம்  நூற்றாண்டில்  நிகழும்  கதை  என்பதால் அந்தக்காலத்தமிழில்  வசனங்கள்  இருக்கும். ஒரு  தமிழ்ப்படத்துக்கு  தமிழிலேயே  சப் டைட்டில்  போட  வேண்டிய  நிலை  கொண்ட  படம். ஆனாலும் அந்தக்காலத்தமிழைக்கேட்பதில்  ஒரு  சுகம்  தான். 2023 ஏப்ரல்  21  அன்று  திரை  அரங்குகளில்  ரிலீஸ்  ஆன  இப்படம்  இன்று ( 12/5/2023)  அமேசான்  பிரைம்  ஓ டி டி    தளத்தில்  வெளியாகி  உள்ளது 


10  கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்  உருவான  இப்படம்  ரிலீஸ்  ஆன  10  நாட்களிலேயெ  20  கோடி வசூலைப்பெற்றுள்ளது . இது  போக  ஓடி டி உரிமம், டி வி ரைட்ஸ்  உரிமம்  லாபம்  தனி 


  ஸ்பாய்லர்  அலெர்ட்


சேர , சோழர்களை  வென்று  சோழ  நாட்டில்  பாண்டிய நாட்டுக்கொடியைப்பறக்க  விட்டு  ஆட்சி  செய்யும்  பாண்டிய  மன்னன்  ரணதீர   பாண்டியன்  எதிரிகளுக்கு  சிம்ம  சொப்பனமாக  விளங்கினான். சேரர்கள் , சோழர்கள்  போன்ற  பெரிய  தலைகளையே  வென்ற  பாண்டியனை  எய்னர்  என்னும்  ப்ழங்குடி  இனத்தினர்  தலைவன்  கொதி  என்பவன்  எதிர்க்கிறான்


1000  படை  வீரர்கள்  மட்டுமே  வைத்திருக்கும்  கொதி  தஞ்சைக்கோட்டையைக்கைப்பற்றுகிறான். வேறு  ஒரு  நாட்டுக்கு  படைகளுடன்  பாண்டியன்  ரணதீரன்  சென்றிருந்தபோது  இந்த  சம்பவம்  நிகழ்கிறது 


திரும்பி  வரும்  பாண்டியன்  ரனதீரன் பெரும்பள்ளிகள்  என்னும்  கூட்டத்திடம் உதவி  கேட்கிறான். இதுதான்  சாக்கு  என  அந்தக்கூட்டத்துப்பெண்ணை  மணம்  முடித்தால்  வரதட்சணை  போல்  படைகளை  அளிப்பதாக  அவர்கள் கூற  அதற்கு  பாண்டியன்  சம்மதிக்கிறான்


இறுதியில் பெரும்  உயிர்  இழப்பைத்தவிர்க்க  பாண்டியன்  ரணதீரன் , கொதி  இருவரும்  சோலோ  ஃபைட்  போடுகிறார்கள் . இருவரில்  யார்  வெற்றி பெற்றார்கள்  என்பது  க்ளைமாக்ஸ் . இதன் இரண்டாம்  பாகமும்  வர  உள்ளது


 கொதி  எனும்  வேடத்தில்  புதுமுக  நடிகர் சேயோன்  ஜிம்  பாடி  உதவியுடன்  கம்பீரமாக  நடித்திருக்கிறார். பதவி  ஆசை , அவரது  கண்களில்  கொப்புளிக்கிறது  , இடைவேளை  வரை  இவர்தான்  நாயகன்


இடைவேளைக்குப்பின்  தான்  பாண்டியன் ரணதீரன்  கேரக்டர்  வருகிறது இந்த  கேரக்டரில்  அறிமுக  நடிகர்  சக்தி  மித்திரன்  நடித்திருக்கிறார். உருவத்தில் , கம்பீரத்தில் , கெத்தில்  கொதி  கேரக்டரை  விட  ஒரு  மாற்று  குறைவாகவே  இவரது  கேரக்டர்  இருக்கிறது, ஆனாலும்  ஒரு  அரசனுக்குரிய  கம்பீரம்  க்ளைமாக்ஸ்  காட்சியில்  காட்டி  இருக்கிறார் 


தேவரடியார்களாக  ராஜலட்சுமி , வைதேகி  இருவரும்  அழகாக  வந்து  போகிறார்கள் , இவர்களுக்கான  ஆடை  வடிவமைப்பு ,  நகைகள்  அனைத்தும்  அருமை 


எய்ன்ர்  இன  பூசாரியாக  ஒரே  ஒரு  காட்சியில்  குரு  சோமசுந்தரம்  அசத்தி  இருக்கிறார்

பெரும்பள்ள  இன  மணப்பெண்ணாக  வரும்  அழகி  நல்ல  முக  லட்சணம் 


ஆர்ட்  டைரக்சன்  முக்கியப்பங்கு  வகிக்கிறது ரஞ்சித் குமார்  வெல்டன்  குமார் ,ஒளிப்பதிவாளர்  அகிலேஷ்  காத்த  முத்து  போர்க்களக்காட்சிகள்  , லாங்க்  ஷாட் , ஏரியல்  ஷாட்களில்  தன்  முத்திரையைப்பதிக்கிறார்


சக்கரவர்த்தியின்  பின்னணி  இசை  ஒரு  சரித்திரப்படத்தின்  பிஜிஎம்  எப்ப்டி  கெத்து  காட்ட  வேண்டும்  என  படிப்பிக்கிறது 


ஆக்சன்  சீக்வன்சை ஓம்  சிவப்பிரகாஷ்  நேர்த்தியாக  செய்து  இருக்கிறார். எடிட்டர்   மகேந்திரன்  கணேசன் கனகச்சிதமாக  2  மணி  நேரப்படமாக  தந்திருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்


1  செந்தமிழ்  வசனங்கள்  ஒரு  ஆச்சரிய  பிளஸ். அந்தக்காலத்தமிழை  அறியாதவர்களுக்கு  ஒரு  கோனார் நோட்ஸ்  பட  வசனங்கள் , அதே  போல்  ஏரியல்  ஷாட்  காட்சிகளில்  இயற்கை அழகைக்காட்டிய  விதம் 


2  போருக்கு  செல்லும்போது  அந்தக்கால  படைகள் களத்தில்  ஆடு , எருமை  , மனிதன்  என  பலி கொடுப்பது  வழக்கம், அதைக்காட்சிப்படுத்திய  விதம் 

3  நடன  தாரகைகளின்  ஆடை வடிவமைப்பு, அழகு , நடனம் 


4  பின்  பாதியில்  வரும் போர்க்களக்காட்சிகளில்  தீப்பந்தங்களுடன்  வுரும் வீரர்கள்  ஏரியல்  வ்யூ  ஷாட்டில் அழகாகதோன்றும்  காட்சி 


5  பாண்டியன் ரணதீரன்  போருக்கு  ஆதரவு  திரட்ட  ஒரு  திருமணம்  செய்ய  வேண்டிய  சூழலை  காட்டிய  விதம் 


6  கிளாமர்  காட்சிகள்  எடுக்க வாய்ப்பிருந்தும்  பெண்களை  கண்ணியமாகக்காட்டிய  விதம் 




  ரசித்த  வசனங்கள் 


1   ஆட்சிக்கு  அடிப்படை  அதிகாரம்  மட்டுமே


2  பெரும்  குடிகளுக்கு  இடையே  நிகழும் போர்  சிறு குடிகளை  அழித்து  விடும் 

3  காமமே  நம்  இளமைக்குக்காரணம் 

4     என்  பெற்றோரிடம்  நான்  கேட்ட  அதே  கேள்விகளை என்  பிள்ளைகள் என்னிடம்  கேட்க  விடக்கூடாது

5  அந்தணர்  என்கிறீர் ஆனால்  கையில்  காப்பு  கட்டி  உள்ளது , முறுக்கேறிய  தசைகள் , வீரத்தழும்புகள் .. எப்படி ?


 சேர  அந்தணர்கள்  பரசுராமர்  வழி  வந்தவர்கள் 


6  மூன்று  லட்சம்  படை  வீரர்கள்  கொண்ட  ஒரு  அரசை  1000 வீரர்கள்  கொண்ட  ஒரு  சிறு  படை  எதிர்க்கத்துணிந்தால்  அவனே  வீரன் , அந்த  வீரனுக்கு  வீர  சுவர்க்கத்தைப்பரிசளிப்போம் 


7  என்  இசையில்  உன்  அழிவு  தெரிகிறது 


 பெண்ணும் , இசையும்  ஆணின்  விருப்பங்கள் , அழிவுகளல்ல


8  ரணதீரன் ஒரு வீரன், ஒரு சில  நூறு  வீரர்களை எதிர்க்க  பல  ஆயிரம்  படை  வீரர்களுடன்  வருகிறான்


9    மதம்  கொண்ட  யானை  தானே  நிலை  சேரும் , அதுவரை  நாம்  காத்திருப்போம் 


10   நீ  உயர்ந்தவன் , உன்னோடு  இணைவதால்  நானும்  உயர்ந்தவன்  ஆகிறேன் 


11   என்    மகன்  ஒரு  நாள்  அரசனாகவே  பிறப்பான் 


12  ரணதீரன்  மட்டுமல்ல , எல்லா  மன்னர்களும்  அதிகாரத்துக்கு  பயந்தாங்க , இங்கே  அதிகாரம்  மட்டுமே  நிலையானது , அரசர்களோ , அரசுகளோ  நிலையானது  இல்லை 


13  அரசர்கள்  அவர்களது  அதிகாரத்தைத்தக்க  வைக்கவே  எல்லாப்போர்களையும்  நிகழ்த்தினார்கள் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பரத  நாட்டியம்  ஆடும்  மங்கைகள்  தொப்பை  போட்டு  இருக்கிறார்கள் , இடுப்புச்சதை  தனியாகத்தெரிகிறது . போர்  வீரர்களை தேர்வு  செய்யும்போது  பிரமாதமாக  ஜிம் பாடி  ஆட்களை  நியமித்தவர்கள்  நடன  தாரகைகள்  தேர்வில்  கோட்டை  விட்டு  விட்டார்கள் , அந்தக்கால  பெண்களில்  யோகா  செய்பவர்கள்  , பரத நாட்டியம்  கற்றவர்கள்  பாடி ஃபிட்டாக  இருக்கும் 


2   வெறும்  ஆயிரம்  ப்டை  வீரர்கள்  மட்டுமே  வைத்திருக்கும்  கொதியை  நாயகன் ஆக  பிரமோட்  செய்து  விட்டு  பாண்டியன் ரனதீரனை பில்டப் இல்லாமல்  காட்டிய  விதம், அதே  போல்  அவன்  கொதிக்கு  பயப்பது  போல்  காட்டியது  ஏனோ ?


3  போர்க்காட்சிகள்  நீளம்  அதிகம், கொடூரம்  கோரம்  குறைத்து  இருக்கலாம். கொற்றவை  பலி  காட்சிகள் , பாண்டிய  மன்னன் , மணப்பெண்  தரப்பு  பேச்சு  வார்த்தைக்காட்சிகள்  படத்தின்  வேகத்துக்கு  ஸ்பீடு  பிரேக்கர்ஸ் 


4   இரு  நாயகர்களுக்கு ம்  ஜோடி  உண்டு  ஆனால்  காதல்  காட்சிகள்  இல்லை , இது  பெரும்  குறை 


5 போர்க்களக்காட்சிகள்  பிரமாதம், ஆனால்  ஒரு  காட்சியில்  ஒருவன்    ஒருவனுடன் போரிட்டுக்கொண்டிருக்கும்போது  இன்னொருவன்  அவனை  பின்னால்  இருந்து  தாக்கிக்கொல்கிறான், இது  வீரனுக்கு  அழகில்லையே? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- 18 +  காட்சிகள் எதுவும்  இல்லை , ஆனால்  குழந்தைகள் , கர்ப்பிணிப்பெண்கள்  தவிர்க்க  வேண்டிய  வன்முறைக்காட்சிகள்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   சரித்திரப்பட  விரும்பிகள்   அவசியம்  காண  வேண்டிய  ஆக்சன்  டிராமா . ரேட்டிங்  3 / 5 



Yaathisai
Yaathisai poster.jpg
Theatrical release poster
Directed byDharani Rasendran
Written byDharani Rasendran
Produced byK. J.Ganesh
Starring
CinematographyAkilesh Kathamuthu
Edited byMahendran Ganesan
Music byChakravarthy
Production
companies
  • Venus Infotainment
  • Six Star Entertainment
Distributed by
Release date
  • 21 April 2023
Running time
121 minutes
CountryIndia
LanguageTamil
Budget7-10 Crores
Box office20 Crores

0 comments: