Wednesday, May 17, 2023

MRS CHATTERJEE VS NORVEY (2023) -ஹிந்தி - சினிமா விமர்சனம் ( கோர்ட் ரூம் டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்

   


2011 ல்  நிகழ்ந்த  ஒரு  உண்மை  சம்பவத்தை  திரைப்படமாக  எடுத்துள்ளனர் . சாக்ரிகா  பட்டாச்சார்யா  என்பவரின்  வாழ்வில்  நிகழ்ந்த  சம்பவம் 47  நாட்கள்  என்ற  படத்தில் வெளி நாட்டு  மாப்பிள்ளையைக்கல்யாணம்  செய்து  கொண்டு  போகும்  இந்தியப்பெண்  படும்  கஷ்டங்களை  சொன்ன படம். அது  போல இந்தப்படமும், ஆனால்  அதில்  நாயகன்  நாயகியை  ஏமாற்றுகிறான் , இதில்  வெளிநாட்டின்  சட்டதிட்ட்ங்கள் , சந்தர்ப்ப  சூழ்நிலை  ஆகியவை  வில்லன்கள்  ஆகின்றன. வெளிநாட்டு  மாப்பிள்ளை  மோகத்தில் இருக்கும்  பெணகள்  அவசியம்  காண  வேண்டிய  விழிப்புணர்வு  திரைப்பட்ம் இது    


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  ஒரு  பெங்காலி . அவருக்கு  நார்வே  யில்  ப்ணி  புரியும் நபருடன் பெற்றோரால்  நிச்சயிக்கப்பட்ட  திருமணம்  நடக்கிறது . இந்த  தம்பதிக்கு  2  குழந்தைகள் 

நம்  நாட்டு  சட்டதிட்டங்கள்  வேறு , நார்வே  நாட்டு சட்டதிட்டங்கள்  வேற

.அம்மா  தன்  குழந்தைக்கு  தன்  கரங்களால்  உணவு  ஊட்டுதல்  நம்  நாட்டில்  சரி  நார்வே  நாட்டில்  தவறு . இரவில் குழந்தைகள்  பெற்றோருடன்  தூங்குதல் நம்  நாட்டில்  சரி  நார்வே  நாட்டில்  தவறு .. குழந்தைகள்  அதீத  குறும்பு  செய்தால்  கண்டிப்பது , திட்டுவது   நம்  நாட்டில்  சரி  நார்வே  நாட்டில்  தவறு . 


இந்த  விஷயங்கள்  எல்லாம்  நாயகிக்குத்தெரிந்தாலும்  பெரிதாக  அலட்டிகொள்ளவில்லை . நார்வே  நாட்டு  சட்டப்படி  குழந்தைகள்  நலம்  காக்கும்  அமைப்பு   ஒன்று   இரு  பெண்களை  நாயகி  வீட்டுக்கு  அனுப்பி  அங்கேயே  தங்கி  சில  நாட்கள்  குழந்தைகள்  முறைப்படி  வளர்க்கப்படுகின்றனவா? என  கண்காணிக்கிறது


இறுதியில்  தரப்படும்  ரிப்போர்ட்படி  1   நாயகிக்கு  கணவன்  வீட்டில்  கூட  மாட  ஒத்தாசை  செய்வதில்லை  2  கணவன்  குடும்பத்தை  சரியாக  கவனிப்பதில்லை  3 குழந்தை  பராமரிப்பு  சரி  இல்லை . 


இதனால்  2  குழந்தைகளையும் அரசாங்கம்  அந்த  தம்பதியிடமிருந்து  பிரித்து  அழைத்துக்கொண்டு  போகிறது . நாயகி  சட்ட  ரீதியாக  இந்தப்பிரச்சனையை  எப்படி  எதிர்கொள்கிறாள்? இதனால் அவளுக்கு  ஏற்படும்  மன  உளைச்சல்கள்  என்ன? இந்தியா  போன்ற  ஏழை  நாடுகளின்  குழந்தைகளை அபகரித்து  வாரிசு  இல்லாத  கோடீஸ்வர  நார்வே  தம்பதியினருக்கு  விற்கப்படுதல்   போன்ற  பிரச்சனைகளை  எல்லாம்  நாயகி  எப்படி  எதிர்கொண்டு  வெற்றி  பெறுகிறாள்  என்பதே  கதை   


நாயகியாக  ராணி  முகர்ஜி   அந்த  கேரக்டராகவே  வாழ்ந்திருக்கிறார். அவர்  ஃபிரேமில்  வரும்  ஒவ்வொரு  காட்சியிலும்  மற்ற  அனைவரையும்  நடிப்பில்  ஓரம்  கட்டுகிறார். முழு  திரைப்படத்தையும்  இவரது  நடிப்பு  தான்  தாங்கிப்பிடிக்கிறது 


கணவனாக அனிர்பன்  பட்டாச்சார்யா. இவரது   கேரக்டர்  ஸ்கெட்ச்  கொஞ்சம்  குழப்பமானது . சில  நேரம்  மனைவியிட ம்  அன்புள்ளவர்  போலும், சில  சமயம்  என்ன  நடந்தாலும்  சரி  நம்  வேலைக்கோ  நாட்டுக்குடியுரிமைக்கோ  ஆபத்து  வராமல்  இருந்தால்  சரி  என்னும்  சுயநலத்துடனே  இருக்கிறார். க்ளைமாக்சில்  வில்லனாகவே  மாறுகிறார்


 நார்வே  நாட்டில்  நாயகிக்கு  ஆதரவாகவும், இந்தியாவில்   நாயகிக்கு  எதிராகவும்  வாதிடும்  வக்கீலாக  ஜிம் சர்ப்   பிரமாதமாக  நடித்திருக்கிறார். அவர்  உடல்  மொழி , முக  பாவனைகள்  எல்லாம்  அற்புதம் 


நீனா  குப்தா  கெஸ்ட்  ரோலில்  வருகிறார், ஒக்கே  ரகம் 


சமீர்  சஹிஜா , ராஹூல்  ஹேண்டா  இருவருடன்  இணைந்து  திரைக்க்தை  எழுதி  படத்தை  இயக்கி  இருப்பவர்          ஆஷிமா  சிப்பர் . பெண்களின்  நுட்பமான  உணர்வுகளை  கச்சிதமாக  வடிவமைத்து  இருக்கிறார். 


கோர்ட்  ரூம்  காட்சிகள்  அனல்  பறக்கின்றன மெலோடிராமா  வகையைச்சேர்ந்த  திரைக்கதை  என்றாலும்  விறுவிறுப்பாகவே  படம்  நகர்கிறது                                     

சபாஷ்  டைரக்டர்


1  நாயகி  தரப்பு  வக்கீல்  கொல்கத்தா  கோர்ட்டுக்கு  10  நிமிசம்  லேட்டாக  வரும்போது  கோபப்படும்  ஜட்ஜ்  இடம்  வக்கீல்   சொல்லும்  டயலாக்  செம . நான்  10  நிமிசம் லேட்டா  வந்ததையே  உங்களால  பொறுத்துக்க  முடியலையே? இந்த  கேசை  2  வருசமா  இழுத்துட்டு  இருக்கீங்களே? குழந்தைகளைப்பிரிந்து  அந்த  அம்மா  எவ்ளோ  ஸ்ட்ரெஸ்க்கு  ஆளாகி இருப்பாங்க  என  ஜட்ஜை  , மடக்கும்  காட்சி  அடிபொலி 


2  நாயகி  தன்  குழந்தைகளைத்தேடி  செல்லும் இடத்தில்  பொம்மை  ஒலி  எழுப்பி அதே  போல்  ஒலி  வரும்  திசையில்  நகர்வது  புத்திசாலித்தனமான  மூவ் 


3 புரொடக்சன்  டிசைன் , ஆர்ட்  டைரக்சன்  அற்புதம், குறிப்பாக  நார்வே  போலீஸ்  ஸ்டேஷன்  , கோர்ட்  செட்டப் எல்லாமே  கனகச்சிதம் 


4  அமித் த்ரிவேதியின்  பின்னணி  இசை  படத்தை  உயிர்ப்புடன்  எடுத்துச்செல்கிறது, ஆல்வ்ரின்  ஒளிப்பதிவு  அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1  நீங்க  அடிக்கடி  ரிலாக்ஸ்  ரிலாக்ஸ்  அப்படினு  சொல்லும்போதுதான்  எனக்கு  டென்சன்  ஏறுது 


2  கணவன்  , மனைவி  இருவருக்கு  இடையே  மத்தியஸ்தம்   பண்ண  வெளீயாள்  யாரையும்  விடக்கூடாது . தம்பதிகளே  உணரனும் 


3  வளர்ப்புப்பெற்றோர்  குழந்தைகளின்  நிஜ  பெற்றோரை  விட  அதிக  அக்கறை , அன்புடன்  கவனித்துக்கொள்வார்க்ளா? அதற்கு  நீங்கள்  உறுதி  அளிக்க  முடியுமா? 


4  நான்  நல்ல  அம்மாவா?  மோசமான  அம்மாவா? சொல்லத்தெரியலை , ஆனா  நான்  அம்மாதான், அம்மா  எப்போதும் அம்மாதான் 


5  இந்த  கோர்ட்  மட்டுமில்லை  எந்த  கோர்ட்டுக்குப்போக  நேர்ந்தாலும்  என்  குழந்தைகளை  பெற  சண்டை  போடுவேன் , எனக்கான  நீதி  கிடைக்கும்  வ்ரை  உலகைன்  எந்த  மூலையில்  இருந்தாலும்  போராடுவேன் 


6  குழந்தைகளுக்காக  அவர்களின்  உரிமைக்காகப்போராடுவதுதான்  அம்மாவுக்கு  சரியான  சாய்சாக  இருக்க  முடியும் ? 


7  அம்மாவுடன்  இருந்தால்  ,மட்டும்தான்  குழந்தைகளால்  சந்தோஷமாக  இருக்க  முடியும், வசதி  இருக்கு  இல்லை  அது பாய்ண்ட்  இல்லை 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  தாய்ப்பாலை  பாட்டிலில்  பிடித்து தருவது  வேஸ்ட், குழந்தைக்கு  நீங்க  தந்து  விடும் தாய்ப்பாலை  அவர்கள்  தருவ்தில்லை  என  வீடியோ  ஆதாரத்துடன்  நிரூபித்த  பின்னும்  நாயகி  ஏன்  தொடர்ந்து  தாய்ப்பால் பாட்டிலில்  எடுத்து  தந்து  கொண்டே  இருக்கிறாள் ?


2 குழந்தைகளை  அவர்கள்  டார்ச்ச்ர்  செய்வதை  அவர்கள்  அம்மாவுக்காக  அழுவதை  வீடியோ  எடுத்த  லேடி  அதை  நாயகியிடம்  காட்டுகிறார் . அப்போதே  அந்த  வீடியோ  க்ளிப்பை  நாயகி  தன்  ஃபோனுக்கோ  தன்  கணவன்  ஃபோனுக்கோ  தன்  வக்கீல்  ஃபோனுக்கோ  ஃபார்வார்டு  செய்திருந்தால்  அதை  எவிடென்சாக  ஆக்கி  இருக்கலாம். போலீஸ்  அந்த  வீடியோ  எவிடென்சை  அழித்து  விட்டார்கள்  என  கோர்ட்டில் லேடி  சொல்லும்போது  இவர்களிடம்  இருந்து ஆதாரம்  காட்டி  இருக்கலாம்  


3  என்  மனைவி  ஒரு  பைத்தியம், குழந்தைகளை  வளர்க்க  தகுதியற்றவர்  என  கணவர்  சொல்லும்  சாட்சி  எப்படி  செல்லுபடி  ஆகும் >  மனவியல்  நிபுணர்கள்  செக்  பண்ணி  தரும்  டிப்போர்ட் தானே  செல்லும் ? 


4   க்ளைமாக்ஸில்  நார்வே    தரப்பு  லாயரையே  சாட்சிக்கூண்டில்  ஏற்றும்  ஜட்ஜ்  நாயகி  தன்  தரப்பு  வாத்த்தை  உன்  வைக்க  எழும்போது  சாட்சிக்கூண்டில்  ஏறி  பதில்  சொல்லுமாறு  சொல்லவில்லை ,அவர்  இருந்த  இடத்தில்  இருந்தேதான்  பேசுகிறார்


5   க்ளைமாக்ஸ்  கோர்ட்  சீனில்  ஜட்ஜ்  என்  பிரைவேட்  சேம்ப்பர்ல  குழந்தைகளை  சந்திக்க  விரும்புகிறேன்னு  சொல்லிட்டுபோறார். அங்கே  குழந்தைகளை  அவர்  சந்திக்கும்போது  ஜட்ஜைக்கண்டுக்காம  அம்மா  விடம்  ஓடி  வருகின்றனர்  குழ்ந்தைகள், அதை  என் அ திர்ச்சியுடன்  ஜட்ஜ்  பார்க்கிறார்? முன்னே  பின்னே  பார்த்தே  இராத  ஜட்ஜை  அங்கிள்னு  ஓடி  வந்து  கட்டிக்கும்னு  எதிர்பார்த்தாரா? சும்மா  கை  தட்டல்  பெற  வைக்கப்ப்ட  சீன்  அது , அம்மாவைபார்த்ததும்  குழந்தைகள்  ஓடி  வ்ருவது  இயற்கை 


6  ஜட்ஜ் கோர்ட்டில்    தீர்ப்பு  சொன்னதும்  ஆடியன்ஸ் , வக்கீல்  எல்லோரும்  எழுந்து  நின்னு  கை  தட்டுவது  எல்லாம்  ஓவர்


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -    அனைத்துப்பெண்களும் காணவேண்டிய  படம் . லீகல்  டிராமா,  கோர்ட்  ரூம்  டிராமா  ரசிகர்கள்  பார்க்கலாம், ரேட்டிங் 3 / 5 




Mrs Chatterjee Vs Norway
Mrs Chatterjee Vs Norway film poster.jpg
Theatrical release poster
Directed byAshima Chibber
Written bySameer Satija
Ashima Chibber
Rahul Handa
Produced byMonisha Advani
Madhu Bhojwani
Nikkhil Advani
StarringRani Mukerji
Anirban Bhattacharya
Neena Gupta
Jim Sarbh
CinematographyAlvar Kõue
Edited byNamrata Rao
Music byAmit Trivedi
Production
companies
Distributed byZee Studios
Release date
  • 17 March 2023
Running time
144 minutes[1]
CountryIndia
LanguageHindi
Budgetest.30 crore[2]
Box officeest.36.53 crore[3][4]

0 comments: