Wednesday, May 24, 2023

MODERN LOVE CHENNAI (2023) -மாடர்ன் லவ் சென்னை - தமிழ் - வெப்சீரிஸ் விமர்சனம் -பாகம் 1 ( லவ் ஆந்தாலஜி )@ அமேசான் பிரைம்

 

நியூயார்க்  டைம்ஸ்  இதழில்  வாராவாரம் வாசகர்களின்  காதல்  கதைகள்  கட்டுரை  வடிவில்  இடம் பெற்றன. நம்ம  ஊரில்  தினமலர் வாரமலர் இது  உங்கள்  இடம் பகுதியில்  வாசகர்கள்  அவரவர்  அனுபவத்தை  அனுப்புவது  போல  அங்கே  அவரவர்  காதல்  அனுபவங்களை  கட்டுரை  வடிவில்  அனுப்பினாரக்ள். அது  வாசகர்கள்  மத்தியில்  பெருத்த  வரவேற்பைப்பெற்றது. மாடர்ன்  லவ்  என்ற  தலைப்பில்  அந்த  தொடர்  கட்டுரைகள்  இடம்  பெற்றன.


அமேசான்  [பிரைம்  அந்த  கட்டுரைகளை  ஆங்கிலத்தில்  குறும்படங்களாக எடுத்து ஹிட்  ஆக்கியது. பின்  இந்தியாவிலும் உள்ளே  வந்தது 

முன்னணி  இயக்குநர்களான  பாரதிராஜா , பாலாஜி  சக்திவேல் , ராஜூ  முருகன், கிருஷ்ண்குமார் ராஜ்குமார் ,  அக்சய்  சுந்தர் , தியாகராஜன்  குமாரராஜா  போன்ற  ஆறு  இயக்குநர்கள்  இயக்கத்தில்  ஆறு  தனித்தனிக்கதைகளாக  தலா  ஒரு  மணி  நேரம்  ஓடக்கூடிய  ஆந்தாலஜி  வெப்சீரிஸ்  இது 

 எற்கன்வே  மாடர்ன்  லவ்  மும்பை , மாடர்ன்  லவ்  ஹைதராபாத்  என  காதல்  கதைகள் வந்தது  போலவே  இப்போது  தமிழகக்கதைகள்  அணி  வகுத்து  நிற்கிறது ஆறு  கதைகளில்  பெரும்பாலான  ர்சிகர்கள்  ஏகோபித்த  வரவேற்பைப்பெற்ற  ஆறாவது  கதையை  முதலில்  பார்ப்போம்
எபிசோடு 6  - நினைவோ  ஒரு  பறவை - தியாகராஜன்  குமாரராஜா


2011 ஆம்  ஆண்டு  தன்  முதல்  படமான  ஆரண்ய  காண்டம்   மூலம்  கமர்ஷியல்  ஹிட் , விமர்சன  ரீதியான  பாராட்டுக்கள் ஆகியவற்றை  ஒருங்கே  பெற்ற தியாகராஜன்  குமாரராஜா  தனது  அடுத்த  படமாக  சூப்பர்  டீல்கஸ்  சை  2019ல்  ரிலீஸ்  செய்தார் . இது  மெல்பர்ன்  திரைப்பட  விழாவில்  விருது  பெற்றது. இவரது  மாறுபட்ட  அணுகுமுறை  இளைஞர்களைக்கவர்வதாக  இருக்கிறது

spoiler ALERT 

நாயகன் - நாயகி  இருவரும்  கூடல்  முடிந்த  பின்  பிரேக்கப்  செய்து  கொள்கிறார்கள் . இனிமேல்  நாம்  இருவரும்  சந்தித்துக்கொள்ளவே  கூடாது  என்ற  ஜெண்டில்மேன்  அக்ரிமெண்ட்  உடன்  பிரிகிறார்கள் , என்ன  காரணத்துக்காகப்பிரிகிறார்கள்  என்பது  தெரியவில்லை 


 சில  நாட்கள்  கழித்து  நாயகன்  ஒரு  விபத்தில்  சிக்கி  கோமா  ஸ்டெஜ்க்குப்போய்ட்டான்  என  தகவல்  வருகிறது. டாக்டரின்  அட்வைஸ்படி  இனிமையான  நினைவுகளை  மீட்டெடுத்தால்  பழைய  நினைவுகள்  திரும்பலாம்  என்கிற படியால்  நாயகி  நாயகனை  சந்தித்து  பழைய  சின்ன  சின்ன  சம்பவங்களைக்கூறுகிறாள்


ஆனால்  பிரேக்கப்  ஆனதற்கான  காரணத்தை  மட்டும்  கூறவே  இல்லை . கோமா  ஸ்டேஜூக்குப்போயும்  உன்  நினைவு    எனக்கு  மறக்கவில்லை.  எனவே  நாம்  இணைந்தே  வாழ்வோம்  என  நாயகன்  கோரிக்கை  வைக்கிறான். அதற்கு  நாயகி  என்ன  பதில்  சொன்னாள்  என்பது  க்ளைமாக்ஸ்


 நாயகியாக வாமிகா  பிரமாதமாக  நடித்திருக்கிறார். சட்  சட்  என  மாறும்  முக  பாவனைகளில்  அவரது  க்ளைமாக்ஸ்  போர்சன்  ஃபெண்டாஸ்டிக்  ஆக்டிங்


 நாயகனாக புதுமுகம் பி பி  நடித்திருக்கிறார். வசனம்  பேசும்  முறை  அழகு , ஆனால்  இவரது முகம்  நம் மனதில்  பதிவதாக  இல்லை . அது  ஏனோ  தெரியவில்லை 


ஒளிப்பதிவு நீரவ் ஷா  கலக்கல்  ரகம் . ஒவ்வொரு  ஃபிரேமும்  கண்களில்  ஒத்திக்கொள்ளும்படி  இருக்கிறது 


இசை இளையராஜா.. பாடலும்  பிஜிஎம்மும்  கலக்கல்  ரகம் 


 இயக்குநரின்  டச்  படம்  முழுக்க  தெரிகிற்து  இரண்டே  கேரக்டர்களை  வைத்து  இவ்வளவு  சுவராஸ்யமாக  ஒரு  படம்  தர  முடியுமா? என  வியக்க  வைக்கிறார்சபாஷ்  டைரக்டர் 


1  சிகரெட்  பாக்சில்  கேன்சர்  குச்சி  என்ற  வாசகம்  இருப்பது 


2  பட்டுக்கோட்டை பிரபாகர்  தா  , மறுபடி  தா  என்னும்  இரு  நாவல்களில்  கதைக்கான  வர்ணனை  இல்லாமல்  வெறும் உரையாடல்களை  மட்டுமே  வைத்து  எழுதி  இருப்பார். அது  செம  ஹிட்  அடித்தது . அதே  பாணியில்  நாயகன் - நாயகி  இருவரது  கான்வர்சேஷன்  மட்டுமே  வைத்து  திரைக்கதையை நகர்த்திய  விதம் 


ரசித்த  வசனங்கள் 


1  எதுக்காக  பசங்க  பொண்ணுங்களைக்கவர  எதுனா  செஞ்சுட்டே  இருக்காங்க ?

 எல்லாம்  மயில்  டெக்னிக் தான். தன்  பெண்  துணையைக்கவர  ஆண்  மயில்  தோகை  விரித்து  அழகு  காட்டுதே  அது  மாதிரி  எதுனா  செஞ்சு  தன்னை  வெளிக்காட்டிக்கறாங்க . இல்லைன்னா  கடைசி  வரை  முரட்டு சிங்கிள்சாவெ  இருக்க  வேண்டியதுதான் 


2    இவ்ளோ   பேசறியே? எனக்காக  நீ  இதுவரை  என்ன  பண்ணி  இருக்கே?


 உன்னைத்தவிர  வேற  யாரையும்  ( காதல் ) பண்ணாம  இருக்கேன் 


3   நம்ம  முத்ல்  கூடல்  எப்படி  இருந்தது ?


 பூ  மழை  பொழிந்தது  போல . உனக்கு  எப்படி  இருந்தது ?


 ஒரு  நல்ல  உச்சகட்டம்  என்பது  தற்காலிகமான  ஷார்ட்  டைம்  மெமரி லாஸ்  என  எங்கேயோ  படிச்சிருக்கேன், அதை  அனுபவத்தில்  உணர்ந்தேன்


4   என்  கிட்டே  நீ  ரெண்டு  கேள்விகள்  கேள் , அதுக்கு  பதில்  தெரியலைன்னா  நான்  என்  வீட்டுக்குப்போகாம  உன்  கூட  இங்கேயே இருந்துடறேன்


 கை  இருக்கும், ஆனா  விரல்கள்  இருக்காது  , கழுத்து  இருக்கும்  ஆனா   தலை  இருக்காது  அது  என்ன ?


 சட்டை 


 கரெக்ட், நம்  நாட்டின்  பிரதமர்  பெயர்  என்ன?


-------


 என்ன? இது  கூடத்தெரியலையா?


 இல்லை , தெரியும், ,  ஆனா  சொல்ல  மாட்டேன், ஏன்னா  உன்  கூட இருக்க  முடிவு  பண்ணிட்டேன் 


5  நான்  குண்டானா   என்னை விட்டுப்போய்டுவியா?


 நீ  ஆல்ரெடி  குண்டாதானே  இருக்கே?  6   இப்போ  பெண்  குரலில்  பாடுனது யாரு ?


 நான் தான்


 பெண்  குரலில் பாடுனா  உன்  குரல்    சுருங்கிடும்’

 குரல்  மட்டும்  தானே?


7  இந்த   உலகத்துல  என்னைத்தவிர  எல்லாரும்  பெண்ணா  மாறீனாலும்  நான்  உன்னை  மட்டும்தான்  தேடி வருவேன்


8   யார்  நீ? என்னைப்பார்த்துட்டே  இருக்கே?


 அழகா  இருந்தே!

 அழகா  இருந்தா  பார்ப்பியா?


 ஆமா, நீயும் தான்  என்னைப்பார்த்துட்டே  இருந்தே!


 நீ  பொறுக்கி  மாதிரி  இருந்தே, அதான்  பார்த்தேன், எனக்கு  பொறுக்கிபையன்னா  பிடிக்கும் 


அப்றம்  ஏன்  வந்து  பேசல ?  

 ஒரு  பந்தா  தான்


9  நான்  ஒரு  ஆர்வக்கோளாறுன்னாவது  எனக்குத்தெரியும், ஆனா  உனக்கு  அது  கூடத்தெரியல 

‘ நம்ம  அப்பாவித்தனத்தை  தொலைக்காம  இருக்கும்  வரை தான்  நாம்  கலைஞர்கள் 


10   ஒரு  பொண்ணு  காதலில்  விழ  எவ்ளோ  டைம்  எடுக்கும்?


 அது  அவனோட  எண்ணங்களைப்பொறுத்து


11  நாம  ஏன்  பிரேக்கப்  பண்ணிக்கிட்டோம்னு  சொல்லு


 சொல்ல  மாட்டேன். குழந்தை  ஆசையாக்கேட்குதேனு  விஷத்தைக்கொடுக்க  முடியுமா?  இதுவும்   ஒரு  விஷம் தான் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ், திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


 1  நாயகி  படம்  முழுக்க  தம்  அல்லது  சரக்கு  அடிப்பது  மட்டும்  உறுத்துகிற்து/ மாடர்ன்  கேர்ள்  என்றால்   டீ டோட்டலர் ஆக  இருக்க  மாட்டார்களா? 


2   இவரது  முந்தைய  இரு  படங்களைப்போலவே  ஓப்பனிங்  சீன்   கூடல்  காட்சியாக  அமைத்தது , ப்டம்  முழுக்க  மெயின்  கேரக்டர்கள்  இரண்டும்   சரக்கு , தம்  அடிப்பது , கூடல்  பற்றியே  அதிகம்  பேசுவது 


3   வீட்டில்  நாயகன் , நாயகி  இருவர்  மட்டுமே  இருக்க  எதற்கு  இருவரும் போர்வையுடனே  சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் ? லுங்கி , நைட்டி  என  கேசுவல்  ஆக  சுற்ற  விட்டிருக்கலாம்அடல்ட்   கண்ட்டெண்ட்   வார்னிங்-  மொத்தமுள்ள  ஆறு  கதைகளில்  இதில்  மட்டும்  18+   காட்சி , வசனங்கள்  இருக்கின்றன சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -  காதலர்களுக்கு , யூத்களுக்கு  பிடிக்கும். ரேட்டிங்  3.75 / 5 

0 comments: